Posts

Showing posts from August, 2024

Part 1. பேராயர் மார் இவானியோஸ்

Image
அதிகாரம் 1 மறைந்த மாவீரன் நீதியை அலங்கரிக்கின்ற நியதிகளின் அலங்கார வளையத்திற்குள் மனித ஆளுமைகள் பல பிறந்து வளர்ந்து இறையடி சேர்கின்றன. இவ்வாறு தோன்றும் மனித குலத்தை இரண்டாகப் பிரிக்கலாம். 1. இறந்தவராய் வாழ்பவர்கள். 2. இறப்பினும் வாழ்பவர்கள். தனிப்பட்ட ஆளுமையும் வேறுபட்ட குணங்களும் மனிதர்களுக்கு இயல்பாகவே உள்ளன. ஒவ்வொரு மனிதனும் செய்கின்ற செயல்கள் அவனை உயர்த்தவும் தாழ்த்தவும் செய்கின்றன. தற்பெருமை மற்றும் பொறாமை போன்ற தவறான குணங்கள் மனிதனை கேட்டுக்கு கொண்டு செல்கின்றன. தனது சுயநலத்திற்காகவும் பெயருக்காகவும் புகழுக்காகவும் வாழ்பவர்களே முதல் இனத்தவர்கள். பிறருக்காக தன்னுயிரை சமர்ப்பித்து வாழ்ந்து இறந்தவர்களே இரண்டாவது இனத்தவர்கள். இதுவே இவ்விரு இனத்தவர்களிடையே காணப்படுகின்ற மிகப்பெரிய வேற்றுமை. விண்ணுலக நன்மையை எதிர் நோக்கி நல்வாழ்வு வாழ்பவர்கள் இவ்வுலகில் பலர் உள்ளனர். அவர்கள் இவ்வுலக வாழ்வில் பல்வேறு நன்மைகளை வாழ்ந்து காட்டவும் பறைசாற்றவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அரசியல், சமூகம், இலக்கியம் மற்றும் மதம் போன்றவற்றை தங்களது பன்முக ஆளுமைகளை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட...