Part 1. பேராயர் மார் இவானியோஸ்
அதிகாரம் 1
மறைந்த மாவீரன்
நீதியை அலங்கரிக்கின்ற நியதிகளின் அலங்கார
வளையத்திற்குள் மனித ஆளுமைகள் பல பிறந்து வளர்ந்து இறையடி சேர்கின்றன. இவ்வாறு
தோன்றும் மனித குலத்தை இரண்டாகப் பிரிக்கலாம். 1. இறந்தவராய் வாழ்பவர்கள். 2. இறப்பினும்
வாழ்பவர்கள். தனிப்பட்ட ஆளுமையும் வேறுபட்ட குணங்களும் மனிதர்களுக்கு இயல்பாகவே
உள்ளன. ஒவ்வொரு மனிதனும் செய்கின்ற செயல்கள் அவனை உயர்த்தவும் தாழ்த்தவும்
செய்கின்றன. தற்பெருமை மற்றும் பொறாமை போன்ற தவறான குணங்கள் மனிதனை கேட்டுக்கு கொண்டு
செல்கின்றன.
தனது சுயநலத்திற்காகவும் பெயருக்காகவும்
புகழுக்காகவும் வாழ்பவர்களே முதல் இனத்தவர்கள். பிறருக்காக தன்னுயிரை சமர்ப்பித்து
வாழ்ந்து இறந்தவர்களே இரண்டாவது இனத்தவர்கள். இதுவே இவ்விரு இனத்தவர்களிடையே
காணப்படுகின்ற மிகப்பெரிய வேற்றுமை.
விண்ணுலக நன்மையை எதிர் நோக்கி நல்வாழ்வு
வாழ்பவர்கள் இவ்வுலகில் பலர் உள்ளனர். அவர்கள் இவ்வுலக வாழ்வில் பல்வேறு நன்மைகளை வாழ்ந்து
காட்டவும் பறைசாற்றவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அரசியல், சமூகம்,
இலக்கியம் மற்றும் மதம் போன்றவற்றை தங்களது பன்முக ஆளுமைகளை குறிக்கோளாகக் கொண்டு
செயல்படுவது இவர்களது முக்கியப் பணி ஆகும்.
மனித குலத்தின் உள்ளார்ந்த மற்றும்
வெளிப்படையான ஒருங்கிணைந்த வளர்ச்சியே அவர்களது வாழ்க்கைக் குறிக்கோள் ஆகும்.
அதற்காகவே தன் சொந்த உயிரையும் பலியாக அர்ப்பணிக்க அவர்கள் ஒருபோதும் தயங்கியதில்லை.
நன்மைக்காக மட்டுமே தன்னலத்தை
தரிசிப்பவர்களும் அதனையே தங்கள் சொந்த செல்வமாக ஏற்றுக் கொள்பவர்களுமே முக்கியமான
மகான்கள். இவர்களே இறப்பினும் வாழ்வர். இவ்வுலகால் இவர்களை மறக்கவும் முடியாது மறுக்கவும்
முடியாது. அவர்களது பாதச் சுவடுகள் காலம் என்னும் இப்பூமியில் நிரந்தரமாக
நிலைத்திருக்கும்.
பெருங்கவிஞர் ஷேக்ஸ்பியர் மூன்று பிரிவுகளாக
மகான்களை வகுத்திருக்கின்றார். 1.Some are born great. சிலர் பிறப்பிலேயே
உயர்ந்தவர்களாகின்றனர். 2. Some acquire greatness. சிலர் தங்களது சொந்த
முயற்சியால் உயர்கின்றனர். 3. Some have greatness thrust upon them. சிலர்
மீது மகத்துவம் திணிக்கப்படுகிறது.
ஷேக்ஸ்பியரின் இக்கருத்துக்களை உலகம்
ஏற்றுக் கொள்கின்றனவா? இல்லையா? என்பதைப் பற்றிய பல்வேறு கருத்துக்கள் நிலவி
வருகின்றன. தனது செல்வத்தாலும் முன்னுரிமையாலும் குடும்ப மரபாலும் எவனும் மகான் ஆவது
இல்லை. பல்வேறு சூழல்கள் காரணமாக உருவாக்கப்படுகின்ற ஒருவரை மகான் என பலர் புகழ்த்தவும்
செய்வதனால் அவர் மகானாக மாறி விடுவதும் இல்லை. ஆனால் எளிமையும் மனப்பூர்வமான
உலகின் நன்மைக்காக பாடுபட்டு உழைக்க முயற்சிக்கின்ற ஒருவன் மட்டுமே உலகின் மகானாக
மாறுகின்றான்.
மகான் யார்? என்ற கேள்விக்கு பதிலாக ஒரே
வார்த்தையில் பின்வருமாறு பதில் வழங்க முடியும். மனித குலத்தின் நன்மையை மட்டுமே
இலட்சியமாக்கி, அதனை திடமான குறிக்கோளாகக் கொண்டு, வாழ்வின் பல்வேறு சூழல்களில்
நுழைந்து, அவற்றின் சவால்களை சந்தித்து அவற்றின் மூலம் வாழ்வில் நன்மதிப்புகளை பெற்றுக் கொள்பவனே
உண்மையான மகான் ஆவான்.
மறைந்த பேராயர் மார் இவானியோஸ் அவர்களைப்
பற்றி பல வேறுபட்ட கருத்துக்களை கொண்டவர்கள் பலர் உண்டு என்றாலும் பேராயர் அவர்கள்
ஒரு மகான் என்பதனை உண்மை நிலை விளக்கிக் கூறுகின்றன. இவ்வுண்மை நிலையை மறுத்துக்
கூறுவதற்கு எவராலும் முடிவதில்லை. ஏனென்றால் மகான்களுக்குத் தேவையான அனைத்து
குணங்களையும் தன்னுள்ளே ஒருங்கமைத்திருந்த வித்தியாசமான தனித்துவ ஆளுமைக்கு சொந்தக்காரராக
அவர் வாழ்ந்திருந்தார். அவரது பல்வேறு வாழ்க்கை அனுபவ நிகழ்வுகளையும் அவற்றின்
மூலம் நன்மைகளை பிரதிபலிக்கின்ற தரவுகளை ஒரே வார்த்தையால் கூறுவதற்கு முடிவதில்லை.
அவரது தனித்துவம் நிறைந்த பொது அறிவு,
திடநிச்சயம், நிலையான தைரியம் போன்றவை யாவரையும் வியப்பில் ஆழ்த்தும் என்பதில்
எந்தவித ஐயவும் இல்லை. ஒரு மன்னனின் ஆட்சியுடனும், ஒரு மாவீரனின்
வீரத்துடனும், யதீந்திரனின் சமநிலையுடனும், துறவியின் கருணையுடனும், தேவதையின் ஆளுமையுடனும் மார் இவானியோஸ் என்னும்
மகான் தொடர்ந்து பணியாற்றினார். பல்வேறு பதவிகளையும் பொறுப்புக்களையும் தன்
வாழ்வால் அலங்கரித்தார்; பல
நிறுவனங்கள் அவரால் நிறுவப்பட்டன; சவால்களுக்கு மத்தியிலும் துணிச்சலுடன்
போராடினார். இறுதியில் பெரும் வெற்றி பெற்றார். தான் எதிர்பார்த்த குறிக்கோளை
அடைந்தார். அதற்காக எப்போதும் இறைவனுக்கு நன்றியுடையவராகவே இருந்தார்.
பேரறிஞர்
"If I were the Pope, I would
have appointed you a Cardinal" (நான் திருத்தந்தையாக
இருந்திருந்தால்,
நான் உங்களை கர்தினாலாக நியமித்திருப்பேன்). கத்தோலிக்கத்
திருச்சபையோடு மறு ஒன்றிப்புக்குப் பின்னர் 1932 இல் உரோம் நகருக்கு திருத்தந்தையை
சந்திக்க சென்ற போது மார்
இவானியோஸ் அவர்களின் தனிப்பட்ட உரையால் கவரப்பட்ட கர்தினால் ஒருவர் மேற்கண்ட
வார்த்தைகளை கூறினார். "Thank
God you are not the Pope" (நீர் திருத்தந்தை
அல்லாததால் கடவுளுக்கு நன்றி) இதுவே மார் இவானியோஸ் அவர்கள் கர்தினாலுக்கு வழங்கிய
உடனடி பதில்.
இதுபோன்ற பல சூழல்களிலும் அவர் பல பெரிய மனிதர்களின்
பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
அறிவியல், கலை மற்றும் மொழி
ஆகியவைப் பற்றி அவர் கொண்டிருந்த புலமை அற்புதமானது. சிறுவயதிலிருந்தே அறிவைப்
பெறுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவர் பல மத, இலக்கிய மற்றும்
அறிவியல் புத்தகங்களைப் படித்தார். அரை நூற்றாண்டுக்கு முன்னர், சிறப்புடன்
எம். ஏ பட்டம் பெற்ற அபூர்வ கேரளத்தவர்களில் இவரும் ஒருவர். அறிவைப் பெறுவதற்கு எவரையும்
குருவாக ஏற்றுக் கொள்வதில் அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. தனக்குக் கிடைத்த
பொன்னான வாய்ப்புகளைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு அறிவைப் புகட்டியுள்ளார்.
ஆழ்ந்த மற்றும் மகத்தான பிரச்சினைகளை அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தில்
உள்ளவர்களிடம் மிகவும் எளிமையான முறையில் எளிதாக விவாதித்தது அவரது சிறப்புக்குரிய
செயல் ஆகும்.
சுறியானி மொழியில் புலமை பெற்றப்
பேராசிரியரான இவர் சுறியானி முனைவர்களுடன் விவாதம் செய்வதும் கால்பந்து விளையாடும்
மாணவர்களுடன் உரையாடி அதைப்பற்றிய விடயங்களை பேசி மகிழ்வதும் அவரது தனித்தன்மை.
கோபாலன் என்றோ பூபாலன் என்றோ உயிர் உள்ளவன் என்றோ விருந்தினர் என்றோ எந்தவித
வேறுபாடும் இல்லாமல் யாரோடும் பேசுவதற்கும் யாரையும் கவர்ந்திழுக்கவும் செய்கின்ற
குணம் அவருக்கு இருந்தது. ஞானத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்வதற்கும் அதனை
பகிர்ந்து வழங்குவதற்கும் எப்போதும் தயாராக இருந்தார். ஆங்கிலம், மலையாளம் மற்றும்
சுறியானி ஆகிய மொழிகளில் சிறப்பான புலமை பெற்றிருந்த அவர், பேரறிஞராகவே வாழ்ந்து
வந்தார்.
திருவிதாங்கூரின்
ஆட்சி அமைப்பின் அதிகார தலைமை பொறுப்பு பெற்றிருந்த சர் சி பி ராமசாமி ஐயர் கூட ஆயர் அவர்களை மிகவும் சிறந்த அரசியல்
சிந்தனையாளர் என பல இடங்களிலும் புகழ்ந்து பேசியுள்ளார். மகாத்மா காந்தி, நேரு
மற்றும் ராஜ கோபாலாச்சாரியார் முதலிய தலைவர்களைக் கூட சர் சி. பி. இந்த அளவுக்கு
மதிப்பு கொடுத்ததாக கூறப்படவில்லை. அந்த அளவுக்கு மிகப்பெரிய கம்பீரம் கொண்டிருந்த
சர் சி பி இராமசாமி ஐயர் ஆயர் அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசியது பற்றி பல
நபர்களும் கேட்டு வியந்துள்ளனர்.
பிரிட்டிஷ்
பார்லிமென்டில் ஆயர் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு தான் சர் சி பி அவர்களுக்கு ஆயரோடு
இருந்த இத்தகைய மிகப்பெரிய மதிப்பிற்கும் மரியாதைக்கும் காரணம். சார் சி பி ஐயரின்
பல்வேறு விதமான சூழ்ச்சிகளையும் அறிந்து அவற்றிற்கு எதிரான செயல்முறைகளை தந்திரங்களோடு
செயல்படுத்த ஆயர் அவர்கள் அறிந்திருந்தார். ஆயர் அவர்களது பன்முக சிறப்புத்
தன்மைகளைக் குறித்து பலர் மகிழவும் வியக்கவும் செய்திருந்தனர். இவ்வாறு பலர் ஆயரை மகிழ்வுடன்
ஏற்றுக்கொள்ளவும் பாராட்டவும் புகழவும் செய்திருந்தனர்.
சர் சி பி
அவர்களுடைய அறுபதாவது பிறந்த நாள் கொண்டாட்ட வேளையில் மிகப்பெரிய ஆடம்பர வரவேற்பு
தனது ஆயர் இல்லத்தில் வைத்து நிகழ்த்தவும் செய்திருந்தார். இக்கூட்டத்தின் போது
கத்தோலிக்க திருச்சபையைப் பற்றியும் அதனுடைய மேன்மையைப் பற்றியும் சர் சி பி
மிகவும் சிறந்த ஒரு உரையை நிகழ்த்தினார். அவ்வுரை பல மேற்கு நாடுகளில் வெளியிடவும்
வத்திக்கான் ரேடியோ வழியாக ஒலிபரப்பவும் செய்யப்பட்டது. அவ்வாறு சர் சி பி அகில
உலகத்தில் மிகவும் சிறப்பு பெற்றவராக மாறவும் செய்தார். அன்பு செய்பவருக்கு அரவணைப்பைக்
காட்டிட ஆயர் அவர்கள் ஒருபோதும் தயக்கம் காட்டவில்லை என்பதற்கு இந்நிகழ்வு மிகப்பெரிய
ஒரு எடுத்துக்காட்டாகும்.
ஐரோப்பா, அமெரிக்கா
மற்றும் ஆஸ்திரேலியா என்னும் கண்டங்களில் உள்ள நாடுகளில் பயணம் மேற்கொண்டு
அங்குள்ள பல அரசியல் தலைவர்களை சந்திக்கவும் பல அரசியல் விடயங்களைப் பற்றி
விவாதிக்கவும் அவ்வாறு மிகப்பெரிய பெயரையும் புகழையும் ஏற்றுக் கொள்ளவும் அவரால்
முடிந்தது. பிரிட்டன் பேரரசராகிய ஐந்தாம் ஜார்ஜ், அயர்லாந்தின் கிரீடம் பெறாத
அரசனாக டிவலரா, பெயர் பெற்ற கலைஞரான ஜி.கே செஸ்டர்ன், ஜெர்மனியின் புகழ்பெற்ற ஹின்றன்பர்க், கொலோனின்
இடை பிரபுவான கர்தினால் ஷால்ட், சுவிட்சர்லாந்து தலைவரான மோட்டோ, பெல்ஜியத்தின்
அரசரான ஆல்பர்ட், அமெரிக்காவின் தலைவராகிய ட்ரூமான், கனடாவின் கவர்னர் ஜெனரலான
அலெக்சாண்டர், கார்தினால் ஸ்பெல்மான் எனத்
துவங்கிய ஏராளமான மகான்மார்களை சந்தித்து அவர்களோடு பல அரசியல் கருத்துக்களைக்
குறித்து உரையாடியுள்ளார். கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு அமெரிக்கா குடியுரிமை
வழங்குவதற்கு ஆயர் அவர்களது செல்வாக்கால் முடிந்தது என்பது ஒரு உண்மை.
இந்த நாடுகளில்
சிறந்த அரசியல் தலைவர்களில் பலரும் விவாதங்களுக்கு உட்பட்ட அரசியல் பிரச்சனைகளைப்
பற்றி பேராயரோடு ஆலோசித்து அதனுடைய அறிவுரைகளை அவரிடம் கேட்டதும் உண்டு. அரசியல்
நிகழ்வுகளில் ஆயருக்கு இருந்த சிறந்த ஞானம் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
ஓய்வின்றி உழைப்பவர்
ஒரே நேரத்தில் பலவிதமான பணிகளை
நிர்வகிக்கும் அசாதாரணமான திறமையை ஒரு சில நபர்கள் மட்டுமே உலகில் கொண்டிருப்பர்.
நமது ஆயர் அவர்கள் இத்தகைய சில நபர்களில் ஒருவராய் இருந்தார் என்பதை ஐயமின்றி
நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் நான்கு பணிகள் வரை மனக்குழப்பமின்றி
செய்வதற்கு அவரால் முடிந்தது.
உணவு அருந்தும் வேளையில் செய்தித்தாள்
வாசிக்கவும், பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களோடு அன்பு உரையாடல் நிகழ்த்துவதும்,
தட்டச்சுச் செய்வதற்கான விடயங்களை செயலரோடு பகிர்ந்து கொள்வதும் ஆகிய பணிகளை ஒரே
நேரத்தில் அவர் செய்திருந்தார் என்பது ஆச்சரியப்பட வைத்தது.
தனது வாழ்நாளில் ஓய்வு என்ற நிலையை அவர்
அதிகமாக கொண்டு இருந்தாரா என்பது ஐயமே. ஆண்டுக்கு ஒரு முறையாவது குறைந்த கால
அளவில் ஓய்வுக்காக தனது நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று பல மருத்துவர்களும் உற்ற
தோழர்களும் அவரோடு கூறியிருந்தனர். பல நேரங்களிலும் அத்தகைய ஓய்வு எடுப்பதற்கு
அவர் தனது உடல் வலுவின்மையால் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கின்றார். எப்போதும்
செயல்பட்டுக் கொண்டே இருக்கின்ற ஆயர் அவர்களை எந்த ஒரு சந்திப்பாளரும் எளிதாக
சந்திக்க முடியவில்லை. இவ்வாறு ஓய்வின்றி கடின உழைப்பு செய்ததன் வழியாகத்தான்
மிகப்பெரிய காரியங்களையும் உலகளாவிய நிகழ்வுகளையும் அவரால் நிர்வகிப்பதற்கு
முடிந்தது.
அவ்வாறு இந்த உலகத்தின் வாழ்க்கைப்
போராட்டத்தில் முழு வெற்றியை சம்பாதிக்கவும் தந்தையாகிய கடவுளின் நம்பிக்கைக்குரிய
பணியாளர் என்னும் பதவியை அலங்கரிக்கவும் அப்பெருமேதையால் நித்திய பரிசை பெற்றுக்
கொள்வதற்குமான பேறு அவருக்கு ஏற்பட்டது.
மறுஒன்றிப்பின் காதலன்
“மரணத்திற்குப் பின்னர் நான் விண்ணகம்
சென்றடைந்த உடன் எனது அகத்தோலிக்க சகோதரர்களின் மறுஒன்றிப்புக்காக இறைவனின்
திருவடியில் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருப்பேன்”. சோர்வுற்று மரணப்படுக்கையில்
இருக்கின்ற போது தனது அருகில் இருந்த துணை ஆயர் மார் கிரிகோரியோஸ் அவர்களோடு
பேராயர் குறிப்பிட்ட வசனங்கள் தான் இவை.
மார்த்தோமா திருத்தூதரின் தலைமுறையினரும் பல
திருச்சபைகளிலாக சிதறி இருக்கின்றவருமான கேரளாவின் பல இலட்சக்கணக்கான கிறிஸ்தவ
சகோதரர்களை தாய்த் திருச்சபையான கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைக்க வேண்டும்
என்பதுதான் ஆயர் அவர்களுடைய முக்கிய குறிக்கோளாக இருந்தது.
அதனுடைய எளிய வழி திறந்து கிடைக்க
யாக்கோபாயா திருச்சபையின் உறுப்பினராக இருந்தபோதே அவர் முயற்சிகள் பலவும் செய்து
கொண்டே இருந்தார். தனது உடன் பணியாளர்களான ஆயர்களுக்கும் குருக்களுக்கும்
இதற்காகவே அவர் பல்வேறு ஊக்கத்தையும் வழங்கினார். அந்தியோக்கியா மற்றும் உரோம்
போன்ற இடங்களுக்கு பல கடிதப் போக்குவரத்துகளை நடத்தினார். தன்னை அன்பு செய்தவர்கள்
மற்றும் மரியாதை செய்தவர்களிடமும் தனது ஆன்மீகத் தலைவர்களிடமும் இறைமக்களிடமும் மறுஒன்றிப்பின்
சூழல் குறித்து நிரந்தரமாக பறைசாற்றி வந்தார்.
மலங்கரை சுறியானி திருவழிபாடு மற்றும் மலங்கரை
கத்தோலிக்க திருஆட்சியமைப்புக்கான அனுமதியும் உரோமையின் திருத்தூதுவ தலைமையகத்திலிருந்து
அவர் பெற்றுக் கொண்டார். பலவிதமான எதிர்ப்பலைகளின் மத்தியில் கடினமான திருப்பயணம்
மேற்கொண்டு 22 வருடங்கள் மறுஒன்றிப்பின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும்
அவர் இரவென்றும் பகலென்றும் பாராமல் உழைத்தார்.
கேரளாவின் பன்னிரண்டு இலட்சத்திற்கும்
மேற்பட்ட அகத்தோலிக்க சகோதரர்கள் கத்தோலிக்க திருச்சபைக்கு வந்து இணைய வேண்டும்
என்பதுதான் அவருடைய முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதற்காக தனது எல்லா
முயற்சிகளையும் ஜெபங்களையும் இறைவனிடம் சமர்ப்பித்தார். தன்னால் பல்லாயிரக்கணக்கான
அகத்தோலிக்க சகோதரர்களை கத்தோலிக்க திருச்சபை என்னும் தாய்க் குடும்பத்திற்குள்
வழிநடத்தும் பெரும் பேற்றையும் அவர் பெற்றுக் கொண்டார். நிரந்தரமான முயற்சி,
தியாகம் மற்றும் ஜெபம் போன்றவற்றின் பலனாக இறையாலயங்கள், மடங்கள், ஆசிரமங்கள்
மற்றும் கல்விக்கூடங்கள் பல நிறுவுவதற்கு அவரால் முடிந்தது.
இவ்வாறு மறுஒன்றிப்பு எனப்படும் குழந்தையை
22 ஆண்டுகள் தனது சொந்த முயற்சியால் தாலாட்டி சீராட்டி வளர்த்திய பின்னர் வரும்
தலைமுறையினருடைய கைகளில் ஒப்படைத்துக் கொண்டு திருப்தி உள்ளவராக காலத்தின் நிறைவில்
அவர் இறையடி சேர்ந்தார். அந்த குழந்தையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும்
இறைவனுடைய திருவடியில் அவர் என்றும் ஜெபித்துக் கொண்டே இருக்கிறார் என்று நாம்
நம்புகிறோம்.
கர்மயோகி
இறையருளால் எனது வாழ்க்கையில் இலட்சியங்கள்
அனைத்தையும் நான் பெற்றுக் கொண்டு விட்டேன். இன்னும் இரண்டு விருப்பங்கள் மட்டுமே
மீதம் உள்ளன. முதலாவதாக கட்டிடப் பணி நடந்து கொண்டிருக்கின்ற பேராலய தேவாலயத்தில்
திருப்பலி ஒப்புக்கொடுக்க வேண்டும். இரண்டாவதாக எனது கைகளால் ஒரு துணை ஆயரை அருட்பொழிவு
செய்ய வேண்டும். நோயில் பூசுதல் பெற்றுக் கொண்டு மரணப்படுக்கையில் கிடந்த அவருக்கு
பணிவிடை புரிந்து கொண்டிருந்த அருட்தந்தை கோசி ஓ ஐ சி அவர்களிடம் பேராயர் கூறிய
வசனங்கள் தான் இவை.
ஆயரின் அப்போதைய உடல் நிலையை அறிந்த யாவரும்
அவரது விருப்பம் நிறைவேறும் என்று நம்ப முடியவில்லை. இருப்பினும் அவரது வாழ்வில்
ஏராளமான விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுத்த எல்லாம் வல்ல இறைவன் அவரது வாழ்வின் இறுதி
வேளையில் இந்த விருப்பத்தையும் நிறைவேற்றி திருப்திப்படுத்துவார் என நம்பியிருந்தார்.
நோய்வாய்ப்பட்டிருந்த காரணத்தினால் ஆயர்ப் பணிகளை நிர்வகித்திட முடிவதில்லை என அவரோடிருந்தவர்கள்
அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
ஆனால் இரக்கம் நிறைந்தவராகிய இறைவனின்
அருளும் ஆயரின் திடமான மன வலிமையும் இணைந்து செயல்பட்டதன் விளைவாக அவரது உடல்
நிலையில் நல்ல முன்னேற்றம் காணவே, ஆடம்பர திருப்பலியை அவரால் நிறைவேற்ற முடிந்தது.
மூன்றரை மணி நேரம் நீண்ட ஆயர் அருட்பொழிவு நிகழ்வுகளையும் அவரால் நடத்த முடிந்தது.
அவ்வாறு கடைசி ஆசைகளையும் நிறைவேற்ற முடிந்ததனால் ஆயர் அவர்கள் மிகவும் மகிழ்வடைந்தார்.
எம். டி செமினாரியின் முதல்வர், செராம்பூர் கல்லூரியின்
பேராசிரியர், பெதனி ஆசிரமத்தின் தலைவர், மறு
ஒன்றிப்பின் காதலன் மற்றும் திருவனந்தபுரம் பேராயர் என்ற பட்டங்களை அலங்கரித்துக்
கொண்டிருந்த வேளைகளில் அவருடைய இலட்சியங்களை ஒவ்வொன்றாக இறைவன் நிறைவேற்றிக்
கொடுத்தார்.
திடமான மனவலிமை, விடா முயற்சி மற்றும்
இறைவனுடைய அருள் இவைதான் அவருடைய வாழ்வில் சாதிக்க முடிந்த விருப்பங்களால் வெற்றி
மகுடம் சூடிக்கொண்டு எல்லா விருப்பங்களையும் அடைய முடிந்தது.
45 ஆண்டுகளுக்கு முன்னர் கோட்டயம் எம்டி
செமினாரியில் முதல்வராக இருந்த நிலையில் அந்தக் கல்லூரியை முதல் தர கல்லூரியாக உயர்த்திட
அவர் கடினமாக உழைத்தார். அதன் பின்னணியில் தான் மார் இவானியோஸ் கல்லூரி ஒன்றை
உருவாக்கி அவரது பணிகளை வலுப்படுத்த முடிந்தது.
10 ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாகத்தான் பெதனி
ஆசிரமமும் துறவு சபையும் உருவாக்க முடிந்தது.
மலங்கரையில் சுறியானி திருவழிபாடும்
திருவனந்தபுரம் குருத்துவப் பயிற்சியகமும் திருத்தூதுவ பீடத்திலிருந்து அனுமதி
பெற்றிட பல ஆண்டுகாலம் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது.
20 ஆண்டுகளில் அவரது கடின உழைப்பாலான
செயல்களாலும் ஜெபத்தின் பலனாக மறு ஒன்றிப்பு நிகழ்வை வெற்றிகரமாக நிறைவேற்ற அவரால்
முடிந்தது.
எந்த ஒரு நிகழ்விலும் வெற்றியைக் கொண்ட
அசாதாரண பேறு பெற்றவர் தான் பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகை அவர்கள்.
கல்வியை செயல்படுத்தியவர்
1940ல்
பட்டம் என்னும் இடத்தில் துவங்கப்பட்ட ஆங்கில வழி உயர்நிலை பள்ளிக்கூடத்தின்
திறப்பு விழாவின் போது கல்வி அமைச்சர் திரு ஏ கோபால மேனோன் எம் ஏ, பி காம் நடத்திய
உரையின் ஒரு பகுதி இவ்வாறாக இருந்தது: “திருவிதாங்கூரின் கல்வி வரலாற்றில் வியக்கத்
தக்கதாக நடக்கும் ஒரு நிகழ்வு இன்று அரங்கேறுகிறது. துவக்க ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு
வரையுள்ள வகுப்புகள் ஒரே நாளில் துவங்குவதும், 700 க்கு மேல் மாணவர்களை மற்று
கல்வி நிலையங்களில் வரச் செய்து அவர்களுக்கு திறப்பு விழா நடத்துவதும் அசாதாரண
நிகழ்வாகும். இஃது மார் இவானியோஸ் ஆண்டகை அவர்களின் சேவை மனப்பான்மையும்,
கல்வியோடு கொண்டுள்ள விருப்பத்தையும், செயல் திறமையையும் எடுத்துக்காட்டுகின்றது.
சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை
பட்டம் பெற்றுக கொண்ட நமது ஆயர் கல்விக்கு நல்கிய முக்கியத்துவத்தால் சொந்த மக்களுக்கு
கல்வியைக் கொண்டுவர பெருமுயற்சி செய்து
கொண்டிருக்கிறார்.
கோட்டயம் எம்டி செமினாரி மற்றும் செராம்பூர்
கல்லூரியில் பணி செய்து கொண்டிருந்த காலத்தில் ஏராளமான மாணவ மாணவியர்களுக்கு பண
உதவி நல்கி அவர்களுக்கு ஊக்கம் அளித்து வந்தார். சென்னை, கல்கத்தா மற்றும் செராம்பூர்
போன்ற கல்வி நிலையங்களில் குருக்களும் குருக்கள் அல்லாதவர்களுமான மாணவர்களை அவர்
கேரளாவில் இருந்து கொண்டு சென்று அவருடைய கண்காணிப்பில் படிக்க வைத்து அவர்களை
கவனித்து வந்தார்.
கத்தோலிக்க மறுஒன்றிப்பிற்குப் பின்னரும்
துவக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் என ஏராளமான
கல்வி நிலையங்களை திருவிதாங்கூர் நாட்டின் பல பகுதிகளிலும் அவர் உருவாக்கி
இருந்தார். அவரது விடாமுயற்சி, கல்வியோடு கொண்ட விருப்பம் மற்றும் சேவை மனப்பான்மை
போன்றவை வாழும் நினைவுகளாக ஜொலிக்கின்றன. கேரள தலைநகரத்தில் அவரால் உருவாக்கப்பட்ட
மார் இவானியோஸ் கல்லூரி அவரது மற்று அனைத்து கல்வி நிலையங்களுக்கும் மகுடம் போன்று
எக்காலத்தும் சுடர் ஒளி வீசும் என்பதில் ஐயமில்லை.
சென்னைப் பல்கலைக்கழகமும், திருவிதாங்கூர்
பல்கலைக்கழகமும் கிழக்கு நாடுகளின் மொழிக் குழுமத்தின் தலைமைப் பொறுப்பை மரணம் வரையிலும்
அவரிடமே ஒப்படைத்திருந்தது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
பாவனசரிதன்
இறையடி சேர்ந்த பேராயர் மார் சேவேரியோஸ்
தனது உரையில் மார் இவானியோஸ் அவர்களைப் பற்றி இவ்வாறு சான்று பகிர்ந்தார்.
“செராம்பூர் கல்லூரியில் வைத்து எனது குருவின் உடலில் பிரம்பு கம்பால்அடித்து பல
காயங்களை அவர் பெற்றுக்கொள்ள என்னை அவர் கட்டாயப்படுத்தியிருந்தார். அன்று
திருத்தொண்டராக கல்வி பயின்று கொண்டிருந்த மாளிகையின் மேல் அறையில் என்னை அழைத்துச்
சென்றார். எனது கையில் பிரம்பை தந்து கொண்டு துணி இல்லாத தனது உடம்பில் தன்னை
அடிக்குமாறு அவர் கட்டாயப்படுத்தினார். இத்தகைய கடினமான பயமூட்டும் தண்டனைகளை
பலமுறை அவர் என்னிடமிருந்து நான் செய்ய வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தி
இருந்தார். அந்நிகழ்வை இன்றும் நினைக்கின்ற போது மெய்சிலிர்க்கும் நிலையாக
இப்போதும் எனது மனதில் உள்ளது. குருவின் கட்டளைக்கேற்ப அவருக்கு தண்டனை வழங்கிய
நான் நீதியின் முன்னிலையில் அகப்பட்டு வெட்கப்படாமல் இருக்க இறைவன் அருள்
புரிவாராக”.
சிறு பருவம் முதலே ஆழ்ந்த அடித்தளம் கொண்ட
இறை விசுவாசத்தில் வளர்ந்து வந்த நமது கதாநாயகன் மிகப்பெரிய பக்தனாகவே மரணத்திற்கு
பிந்தைய வாழ்வின் நிலையை அறிந்தே தற்போதைய வாழ்வு நிலையை கட்டுப்படுத்தி வாழ்ந்து
கொண்டிருந்தார். இறைமகத்துவத்தையும் ஆன்மாவின் மீட்பையும் மட்டுமே குறிக்கோளாகக்
கொண்டு செயல்களிலும் அவற்றை பிரதிபலிக்கச் செய்து வந்தார். ஆழமான ஆன்மீக வாழ்வு
வாழ்வதற்கும் அனைத்து சூழல்களையும் ஒன்றிணைத்து கத்தோலிக்க திருச்சபையில்
ஒன்றிணைந்த பின்னரும் வாழ்க்கையின் கட்டுப்பாடுகளில் அவர் பரிபூரண கவனம்
பதித்திருந்தார்.
தினமும் வேளை ஜெபங்கள், திருப்பலி, தியானம்,
இறை அன்னை பக்தி மாலைகள், பரிகார செயல்கள் மற்றும் நோன்பு கடைப்பிடித்தல்
இவையெல்லாம் அவர் மிகவும் ஆர்வத்தோடு கடைப்பிடிக்கும் நிகழ்வுகளாக அமைந்திருந்தன.
நடு இரவு நேரங்களிலும் ஆயரக சிற்றாலயத்தில்
நற்கணையின் முன்னிலையில் தனியாக அமர்ந்து தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள
இறைமக்களுக்காக தியான நிலையில் அமர்ந்து ஜெபிப்பதை ஆயரக பணியாளர்கள் பலமுறை
பார்த்ததுண்டு.
அவரது மரணத்திற்கு முன்னர் படுக்கையில்
இறைவன் தனக்காக நல்கிய குறைவான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தும் பெரும்பேற்றை
எனக்கு தந்திருக்கின்றார். இவ்வாறு மகிழ்வோடும் மன நிம்மதியோடும் இறைவனின்
திருக்கைகளில் தனது ஆன்மாவை சமர்ப்பிக்கவும் மிகப்பெரும் பேறான மரணத்தை பெற்றுக்
கொள்ளவும் அவரால் முடிந்தது.
சுய பரிசோதனை
வாழ்வில்
தாங்கள் கொண்ட அனுபவங்களை இறைவனிடம் சமர்ப்பிப்பதற்காக வேண்டிய மற்றும் தாங்கள்
செய்துள்ள சேவைகளையும் பற்றி அமைதியாக நினைவு கூர்ந்து அமைகின்ற ஒரு நிலை தான்
மரணத்திற்கு முந்தைய நோய்வாய்ப்பட்டு படுக்கையில்
அமையும் தருணம். இரக்கம் மிகுந்தவரும் அன்பு நிறைந்தவருமாகிய இறைவன் பலவீனனாகிய
தன்னை ஆயுதமாக்கி பல காரியங்களை தன்னால் செய்ய வைத்தார் என்பதை நினைவு கூர்ந்து பல
நேரங்களிலும் மகிழ்வின் வார்த்தைகளை பரிமாறி இருக்கின்றார். அவ்வாறு தனது தவறுகள் மற்றும்
குறைகள் போன்ற அனைத்தையும் குறித்து அவர் வருந்திய தருணங்களும் உண்டு.
மரணப்படுக்கையில் இருந்த போது தன்னைச்
சுற்றி நின்றிருந்த ஒரு சில நபர்களோடு அவர் இவ்வாறு கூறியிருந்தார்: “ஏராளமான
தவறுகளும் குற்றங்களும் நான் எனது வாழ்வில் செய்திருக்கின்றேன். ஆனால் இரக்கம்
மிகுந்தவராகிய அருள்மிகுந்த இறைவன் அவற்றையெல்லாம் மன்னித்துக் கொண்டார் என்ற
பரிபூரண நம்பிக்கையில் நான் ஆறுதல் அடைகிறேன். ஏனென்றால் நல்ல எண்ணத்தோடு மட்டுமே
நான் அவற்றை எல்லாம் செய்துள்ளேன்”.
“நீதிமான் இல்லை, ஒருவர் கூட இல்லை” என்ற
இறை வார்த்தையும் “எல்லாம் திகஞ்ஞொரு வஸ்து போலும் தண்டார் மகன் ஹந்த சமச்சதுண்டோ”
என்ற கவிதை வரிகளும் இந்த சூழலுக்கு ஏற்றதாக அமைந்துள்ளன. அனைவரையும் ஒன்றாக காணும்
சமத்துவம் என்னும் கொள்கையை முன்னிறுத்தி செயல்படும் மகான்மார்களுள் தடைகளையும்
பிழைகளையும் சந்திக்காத எந்தவொரு நபரையும்
இவ்வுலகத்தில் காண முடிவதில்லை. ஓடவும் நடக்கவும் துவங்கும் குழந்தைக்கு மட்டுமா
கீழே விழுவதற்கும் காயங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. மலடிகளுக்கு குழந்தைப்
பேறு இல்லா நிலையும் படுக்கையில் படுத்திருப்பவர்களுக்கு வீழ்ச்சியும் சாதாரணமான
நிகழ்வுகள் அன்றோ.
வீரர்களும் செயல் வீரர்களுமான பலருக்கும்
தோல்வி, ஏமாற்றம் மற்றும் வாழ்த்துக்களும் அனுபவிக்க வேண்டியது சாதாரணமான நிலை
ஆகும். ஆனால் வாழ்வில் துயரங்களோ தோல்விகளோ வருகின்ற போது செய்யத் துணிந்த செயல்களிலிருந்து
திரும்பி வாழ்வது மகான்மார்களுக்கு உகந்ததல்ல. ஆனால் வீழ்ச்சியும் குறைகளும்
வருகின்ற போது அவற்றை சீர்திருத்தி மீண்டும் அவற்றில் உட்படாமல் இருக்குமாறு
வாழ்வின் பயணத்தை தொடர்பவர்களுக்கு மட்டுமே கடைசிவரை குறிப்பிட்ட குறிக்கோளை
சென்றடைந்து வெற்றியின் மகுடம் சூடும் பெரும் பேற்றினை அவர்களால் கொண்டாட
முடியும்..
45 ஆண்டுகள் நீண்ட ஓய்வற்றப் பணிகளுக்கு மத்தியில்
ஒரு சில குறைகளையும் பேராயர் அவர்கள் சந்தித்திருக்கின்றார். இருப்பினும்
வாழ்க்கையின் குறிக்கோளிலிருந்து ஒருபோதும் அவர் தவறிச் சென்றதில்லை. வீரராகிய ஒரு
படைவீரரைப் போல அல்ல ஒரு படைத்தலைவனைப் போன்று தனது பிழைகளைத் திருத்தியும்
குறைகளை பரிகரித்தும் கடைசி நிமிடம் வரை வாழ்க்கையை வழிநடத்தியதன் பலனாகவே, “நான்
எனது ஓட்டத்தை ஓடி நம்பிக்கையை காத்துக் கொண்டேன். வெற்றியின் மகுடம் எனக்காக வைக்கப்பட்டுள்ளது”
என்று சமாதானத்தோடும் மகிழ்வோடும் கூறிக்கொண்டு வெற்றியின் வீரராக கால நிறைவில்
அவர் மறையவும் செய்தார்.
அதிகாரம் 2
பணிக்கர் குடும்ப வரலாறு
மத்திய திருவிதாங்கூர் நாட்டின்
மாவேலிக்கரையின் பணிக்கர் குடும்பத்தைச் சார்ந்தவராக நமது கதாநாயகன் இவ்வுலகில்
வந்து உருவானார். மிகவும் பழமையான இக்குடும்பத்தின் பழங்கால நபர்களின் வரலாறு
இவ்வதிகாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஷத்ரிய வம்சத்தினர்
மெட்ராஸ் மாகாணத்தில் வங்காள விரிகுடாவின்
கரையில் பெண்ணாறு மற்றும் வெள்ளாறுக்கும் மத்தியில் பழங்காலத்தில் சோழமண்டலம் என்ற
பெயரில் நிலப்பகுதி நிலைபெற்றிருந்தது. ஷத்ரிய வம்சத்தைச் சார்ந்த சத்திரியர்கள்
(சூத்திரர்கள்) துவக்கக் கால முதலே இப்பகுதிகளில் வசித்து வந்தனர். ஜோதிடம்,
வைத்தியம் முதலிய அறிவியல் மற்றும் ஆயுத வித்தைகளை பயன்படுத்தும் அசாதாரண திறமையை
பெற்றவர்களாக இக்குலத்தினர் வாழ்ந்திருந்தனர். இவர்கள் பல நாடுகளுக்கும் பயணங்கள்
மேற்கொண்டு அவ்விடத்து அரசர்களுக்கு போரில் உதவி புரியவும் அதற்குப் பரிசாக பணம்
மற்றும் பரிசுகளை வாங்கி தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.
கிறிஸ்து வருடம் 345 ல்
சேரமான் பெருமாள் என்ற பெயர் கொண்ட பாஸ்கர ரவி வர்மராஜா அரசரின் காலத்தில்
சிரியாவிலிருந்து கினாயித்தொம்மன் என்ற வணிகனும் சில குருக்களும் சில வணிகர்களும்
கப்பல் மூலமாக வாணிபம் செய்வதற்காக கொடுங்கல்லூர் என்னும் இடத்திற்கு வருகை
புரிந்தனர். இத்தகைய வாணிகம் செய்ய வந்த நபர்களின் சிறப்பை அறிந்த சேரமான்
பெருமாள் அவர்கள் தங்கி வாழ்ந்திட கட்டிடமும் நிலப்பகுதியும் தானமாக நல்கினார்.
அவர்களுக்கு ஏராளமான பதவிப்பரிசுகளை வழங்கவும் செய்தார்.
கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த கினாயித்தொம்மன்
மற்றும் அவரது குழுவினர் கொடுங்கல்லூர் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில்
கிறிஸ்துவின் நற்செய்தியை பறைசாற்றி ஏராளமான மற்று மதத்தினரை கிறிஸ்தவ மதத்திற்கு
கொண்டு வந்தனர்.
இக்காலகட்டத்தில் சோழ நாட்டிலிருந்து சில
சத்திரியர்கள் தரை வழியாக கொடுங்கல்லூருக்கு வந்தடைந்தனர். பாரம்பரிய மரபு பழக்க
வழக்கங்களை எவ்வித மாற்றமுமின்றி கடைபிடித்து வருகின்ற இவர்கள் அக்காலத்தில்
சோழமண்டத்தில் இருந்து புகழ் பெற்றவர்களாயிருந்த பல்லவர்களின் புத்த மத
ஆசாரங்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கேரளாவிற்கு வந்ததாக
அனுமானிக்கப்படுகிறது. ஆயுத வித்தைகளில் வல்லவர்களான இவர்களது ஆயுதப்பயிற்சியை
தனது படைவீரர்களுக்கும் கற்பிக்க சேரமான் பெருமாள் சத்திரியர்களை நியமித்தார்.
அரசர் மற்றும் மற்ற சிறப்புப்
பார்வையாளர்களும் வியக்கத்தகும் அளவுக்கு ஏராளமான வியத்தகு செயல்களை அவர்கள்
செய்து காட்டினர். அவற்றுள் சில பின்வருமாறு:
1. மிகப்பெரிய சிங்கம் ஒன்றை அடைத்திருக்கும் கூண்டு ஒன்றில் வாள் மற்றும்
கேடயத்தால் ஒருவன் நுழைந்து அச்சிங்கத்தோடு மல்யுத்தம் நடத்தி கடைசியில் அதனை
வெட்டிக் கொல்ல வேண்டும். இந்நிகழ்வு “புலியங்கம்” என்ற பெயரால்
அழைக்கப்பட்டிருந்தது.
2. சற்று அகலமான தாமரை இலை ஒன்றில் ஒருவன் நின்று கொண்டு சில சாகசச் செயல்களை
செய்ய வேண்டும். இந்நிகழ்வு “ஜலஸ்தலாங்கம்” என்ற பெயரால் அழைக்கப்பட்டிருந்தது.
3. ஒரு மரத்தில் ஊஞ்சல் போல தூங்கிக் கிடக்கும் மரத்தின் வள்ளி போன்ற கொம்பைப்
பிடித்து அதில் ஏறிக்குதித்து கட்டிடத்தின் மேல் பகுதி வழியாக முன் பகுதிக்கு எந்த
ஒரு விபத்தும் இல்லாமல் வந்தடைய வேண்டும்.
4. அரண்மனையின் பின்பகுதியில் உள்ள உயர்ந்த மதிற்சுவரின்
மீது வித்தைகளுக்கு ஏற்ப குதித்து ஏறி அரண்மனைக் கட்டிடத்தின் மேல் பகுதி வழியாக
அரண்மனையின் முன் வளாகத்தில் எந்த விதமான விபத்தும் ஏற்படாமல் வந்தடைய வேண்டும்.
இத்தகைய சாதனை நிகழ்வுகளான வித்தைகளை கண்டு
களித்த அரசரும் க்னாயித்தொம்மனும் கொடுங்கல்லூர் நகரில் அவர்கள் தங்கி வாழ்ந்திட
வேண்டும் எனப் பணித்தனர். தங்குமிடம் உணவு போன்ற வசதிகளும் கூடுதலாக பல
பதவிப்பெயர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அத்தகைய பதவிப்பெயர்களில் ஒன்று தான்
பணிக்கர் என்ற பதவிப் பெயர் ஆகும்.
கிறிஸ்தவ மதத்தவர்கள்
க்னாயித்தொம்மன் அவர்களுடைய தூண்டுதலினால்
வெகு சீக்கிரமாக மேற்குறிப்பிட்ட ஷத்திரியர் குடும்பத்தினர்கள் கிறிஸ்தவ மதத்தை
பின்பற்றத் தொடங்கினர். இவ்வாறு இங்குள்ள பல நபர்களை திருமணம் செய்து
கொடுங்கல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடும்பங்களாக தங்கி வசிக்கத்
துவங்கினர்.
இவர்கள் முக்கியமாக நான்கு குடும்பத்தவராக
பிரிந்து வாழத் துவங்கினர் என கூறப்படுகிறது.
1. வள்ளக்கடப் பணிக்கர்
2. காரக்குந்நத்து பணிக்கர்
3. கண்டமங்கலத்து பணிக்கர்
4. ஊரயம் காரக்குந்நத்து பணிக்கர்
இந்த நான்கு குடும்பத்தினரும் இணைந்து தான்
மிகவும் பழமையான கடமற்றம் ஆலயத்தை கட்டி எழுப்பியதாக கூறப்படுகிறது. நன்றிக்கடனாக
இத்தேவாலயத்திலிருந்து சில குறிப்பிட்ட உரிமைகளும் சலுகைகளும் இக்குடும்பத்தினர்
இப்போதும் பெற்றுக் கொள்வதாக உண்டு. அக்காலத்தில் அரசர் அவர்களிடம் களரி என்னும்
கலையை பயிற்றுவிக்க ஒப்படைத்திருந்தார். நல்ல திறமை கொண்ட இளையோர்களை கண்டறிந்து
போர்ப் பயிற்சிகள் வழங்கி அரசப் படைக்குத் இளைஞர்களை அனுப்பி வைத்து உதவுவது தான்
இவர்களுடைய முக்கியப் பணிகளாக செய்து கொண்டிருந்தனர். இவ்வாறு அவர்கள் செய்த நற்பணிகளுக்கு
நன்றியாக பல்வேறு பரிசுகளையும் அவர்கள் அரசரிடமிருந்து தொடர்ந்து பெற்றுக் கொண்டே
இருந்தனர்.
இவர்களுள் காரக்குன்னத்து பணிக்கர் என்ற
குடும்பத்தின் தங்குமிடம் மூவாற்றுப்புழையாக இருந்தது. 13 ஆம்
நூற்றாண்டின் மத்தியில் மூவாற்றுப்புழையிலிருந்து ஒரு பணிக்கர் அன்றைய
மாடத்தின்கூர் அரசரின் ஆட்சிக்கு உட்பட்ட மாவேலிக்கரைக்கு வந்தடைந்து
குடும்பத்தோடு தங்கத் துவங்கினார். இப்பணிக்கரின் ஆயுத வித்தைகளை அறிந்த அரசர்
தனது களரிப்பணிக்கராக நியமித்தார். இவ்வாறு மாடத்தின்கூர் அரண்மனைக்கு சொந்தமான
படையினருக்கு பயிற்சி வழங்கும் குருக்களாக மாறினார். சில ஆண்டுகளுக்குப் பின்னர்
அரசக் குடும்பத்திற்கு குழந்தைச் செல்வம்
கிடைக்காமல் இருந்ததனால் வேணாடு அரச வம்சத்திலிருந்து இரண்டு குழந்தைகளை
தத்தெடுத்து திருவிதாங்கூர் அரசக் குலத்தோடு உறவு ஏற்படுத்தினார். பின்னர்
மாடத்தின்கூர் அரசு திருவிதாங்கூருடன் இணையலாயிற்று. மாடத்தின்கூரின் அமைச்சரான
இடசேரி உண்ணித்தான்மார்க்கும் களரிப் பணிக்கர் என்ற நிலையில் மாவேலிக்கரை
பணிக்கர்களுக்கும் ஏற்கனவே அரசவையில் துவக்கம் முதலே வழங்கப்பட்டிருந்த அனைத்து
அதிகார உரிமைகளும் சலுகைகளும் தொடர்ந்து திருவிதாங்கூர் அரசர்களும் வழங்குவதாக
அறிவித்திருந்தனர்.
மல்லிட்டிப் பணிக்கர்
கொல்லம் ஆண்டு 895 ஆம்
ஆண்டில் போற்றிமார், எட்டு வீட்டில் பிள்ளைமார் மற்றும் மாடம்பிமார் என்பவர்கள்
திருவிதாங்கூர் அரசகுலத்திற்கு எதிராக பலவிதமான கலகங்களை செய்தனர்.
மார்த்தாண்டவர்மா யுவராஜாவும் அவரது
சகோதரியும் உயிரை காத்துக் கொள்வதற்காக வடபகுதி நோக்கி புறப்பட்டனர். எந்த ஒரு
ஆபத்துக்கும் உட்படாமல் மாவேலிக்கரையை அவர்கள் வந்தடைந்தனர். பின்னர் இராணி
கார்த்திகைப்பள்ளி கரிம்பாலா கோயிக்கல் என்னும் இடத்தில் தங்க வைக்கப்பட்டார்.
யுவராஜா அரசரோ கொஞ்சம் காலம் கூட மாவேலிக்கரையில் தங்கிட தீர்மானித்தாலும் அரச
எதிரிகளுக்குப் பயந்து அங்கிருந்து இடம் மாறி வேற்றிடத்திற்கு தங்கள் உற்றாருடன்
தங்கலானார். மாவேலிக்கரையில் தங்கியிருந்தபோது இடசேரில் முதலாளிமார்கள் மற்றும்
இட்டிப் பணிக்கர்களின் உபசரிப்பும் உதவியும் யுவராஜா அவருக்கு முழுவதுமாக
நல்கப்பட்டிருந்தது. இட்டிப்பணிக்கரின் நம்பிக்கையும் ஆயுதப் பயிற்சி முறைகளும்
மார்த்தாண்டவர்மா அரசருக்கு மிகப்பெரிய திருப்தியும் மதிப்பும்
உருவாக்கியிருந்தது. பிற்காலத்தில் அரசியல் எதிரிகளை எதிர்ப்பதற்கு முடியும் என்ற
எண்ண அலைகளோடு இட்டிப் பண்ணிக்கரை தனது அரண்மனையில் முக்கிய காவலருள் ஒருவராக
நியமிக்கவும் செய்தார்.
ஒரு நாள் யுவராஜாவும் அவரது உற்ற
காவலர்களும் நெடுந்தூர பயணம் செய்வதற்கு ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது
மலஞ்சரிவில் என்னும் இடத்தில் உள்ள கடமான் கூட்டத்தின் (மிளா) முன்னிலையில் சென்று
அகப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடமான் கூட்டம் முன் நோக்கி நகரவே உடனடியாக
எதிரிகளை அழிப்பதற்காக வந்த அவரது உற்ற காவலர்கள் பயத்தோடு ஓடி தங்களை காத்துக்
கொண்டனர். ஆனால் அசாதாரண தைரியசாலியான எட்டிப் பணிக்கர் பயந்திருந்த யுவராஜாவை
தைரியப்படுத்தி முன்னோக்கி நகர்ந்து சென்று தாக்க வந்த மிருகத்தை தனது வாளால்
வெட்டி வீழ்த்தித் தள்ளினார். அதனுடன் மற்று விலங்குகள் பிரிந்து ஓடவும்
யுவராஜாவும் குழுவினரும் தொடர்ந்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளவும் செய்தனர்.
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஆபத்து நிறைந்த
சூழலில் தனது அரசருக்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கடமான் எருமையின்
முன்னிலையில் தைரியத்தோடு போரிட்ட இட்டிப் பணிக்கர் “மல்லுக்கட்டி பணிக்கர்” என்ற
அதிகார பதவி பெயரால் அழைக்கபடுவார் என அரசர் அறிவித்தார். அன்று முதல் இன்று வரை
மல்லுக்கட்டி பணிக்கர் என்பதன் வேறு வடிவமான மல்லிட்டி பணிக்கர் என்ற அதிகாரப்
பெயர் அனைத்து கடிதப் போக்குவரத்துகளிலும் பயன்படுத்தத் துவங்கினர்.
மல்லிட்டி பணிக்கர் என்ற சொல் மல்லிட்ட
பணிக்கர் என்ற சொல்லிலிருந்து உருவானதாக கூறப்படுகிறது. இதற்கு இன்னொரு விளக்கமும்
கூறப்படுகிறது. மத் + இட்டி + பணிக்கர் என்பதன் மத் என்றால் “எனது” என்று பொருள்.
இட்டி என்றால் “விருப்பம்” என்பது பொருள். அதாவது அரசருக்கு மிகவும் விருப்பமான
பணிக்கர் என்பதுதான் அதனுடைய அர்த்தம். இவ்வாறு “எனது அன்புக்குரிய பணிக்கர்” என்ற
பதவிப் பெயரானது வழங்கப்பட்டதாக குடும்பத்தில் உள்ள மூதாதையர் ஒருவர்
நூலாசிரியரோடு அறிவித்துள்ளார்.
படைத்தலைவர்கள்
மல்லிட்டி பணிக்கர்களுக்கு நாயன்மார்கள்
மற்றும் நஸ்ராணிமார்கள் உள்பட மிகப்பெரிய
சீடர் குழுமம் இருந்தது. மார்த்தாண்ட வர்மா மகாராஜா திருப்பீடத்தில் ஆட்சி அமைத்த
தருணமும் அதன் பின்னரும் கொல்லத்திற்கு வடக்குப் பகுதியில் உள்ள அரசர்களோடு
நடத்திய அனைத்து முக்கியப் போர்களிலும் மல்லிட்டிப் பணிக்கர் சீடர் குழுமம்
அவருக்குத் துணையாக நின்றது. பழங்காலத்தில் நாயர் பணிக்கர்கள் மற்றும் நஸ்ராணி
பணிக்கர்களின் கட்டுப்பாட்டில் மிகப்பெரிய படை வீரர் குழுமமும் இருந்தது.
கச்சை கட்டுதல், போர்ப் பயிற்சி, ஆயுதப்
பயிற்சி, போர்க்காலத்தில் அரசரின் கட்டளைக்கு ஏற்ப படை வீரர்களை போர்க்களத்திற்கு
வழிநடத்துதல், எதிரிகளோடு போரிடுதல் மற்றும் சமாதானத்தை நிறுவுதல் என்பவை எல்லாம்
பணிக்கர்களின் அன்றைய முக்கியப் பணிகளாக இருந்தன. அரசர்களின் ஆடம்பர வருகையின்
போது அந்தப்புரத்தின் பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு மல்லிட்டிப் பணிக்கர்களிடம்
ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய கட்டுப்பாட்டில் ஆயுதப் பயிற்சியை
மேற்கொள்வதற்கு ஜாதி மதம் என பாராமல் அனைவரும் வந்து கலந்து கொண்டிருந்தனர்.
எழுத்துப் பள்ளிக்கூடங்களில் நாயன்மார்களான
ஆசான்மார்கள், நஸ்ராணிகளான ஆசான்மார்கள் மற்றும் ஈழவர்களான ஆசான்மார்களின்
கண்காணிப்பில் தம்புரான்கள், நம்பூதிரிகள், நாயன்மார்கள், நஸ்ராணிகள், ஈழவர்கள்
மற்றும் கணியான்மார்கள் என்ற பல குழுவினரைச் சார்ந்த நபர்கள் ஜாதி மதம் என்ற
வித்தியாசம் இல்லாமல் பள்ளிக்கூட கல்விகளை ஒருசேர அமர்ந்து பயிலவும்
செய்திருந்தனர். அதே விதத்தில் ஆயுதப் பயிற்சியையும் அனைவரும் ஒரு சேரக் கற்றனர்.
நஸ்ராணிகளும் ஆயுத வித்தைகளும்
சுறியானிக் கிறிஸ்தவர்களின் ஆயுத
வித்தைகளைப் பற்றி முனைவர்களான வரலாற்று எழுத்தாளர்களின் நூல்களில் பல விபரங்கள்
இணைக்கப்பட்டுள்ளன.
கொச்சி ஸ்டேட் மானுவல் என்பதன் ஆசிரியராகிய
ராஜஸ்ரீ சி அச்சுதமேனோன் அவர்கள் கேரள மரபில் ஆயுத வித்தைகள் நடத்துவதன்
பயிற்சிகளைப் பற்றி விவரிக்கும் பகுதியில் இவ்வாறு எழுதியுள்ளார்.
“மிகப்பெரிய பழமையான குடும்ப மரபை கொண்ட
கிறிஸ்தவர்கள் ஆயுதங்கள் ஏந்துவதற்கு உரிமை இருந்தது. அவர்கள் நாயன்மார்களோடு
ஒன்றாக சேர்ந்து போரிடவும் வெற்றி பெறவும் செய்திருந்தனர். அவர்களிடையே பல
ஆண்டுகளான பாரம்பரிய களரி பணிக்கன்மார்கள் இருந்தனர். ஆனால் கிறிஸ்தவர்களும்
நாயன்மார்களும் இத்தகைய விடயத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டனர். நாயர்ப்
பணிக்கர்களுக்கு கிறிஸ்தவர்களாகிய ஆயுதப் பயிற்சி மாணவர்களும் இருந்தனர். (கொச்சி
ஸ்டேட் மானுவல் பக்கம் 84)
மிகவும் பெயர் பெற்ற வரலாற்று ஆசிரியரான கே
பி பத்மநாபன் மேனோன் அவர்களும் இவ்வாறு கொச்சி அரச வரலாறு பற்றிய நூலில் இவ்வாறு
எழுதியுள்ளார். “காலத்தின் சூழலில் கொச்சியின் பேரரசர் போருக்காக நாயன்மார்களை
மட்டுமல்ல சிறியன் கிறிஸ்தவர்களையும் பயன்படுத்தியிருந்தார். சுறியானி
கிறிஸ்தவர்களுக்கு களரி மற்றும் பணிக்கன்மார்களுக்கு கச்சகட்டுதல் மற்றும் ஆயுதப்
பயிற்சிகளும் நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. (கொச்சி ராஜ்ய
சரித்திரம் முதல் பகுதி பக்கம் 85)
வரலாற்று ஆசிரியர் பத்மநாபன் மீண்டும்
எழுதுகிறார். கொச்சி அரசக் குடிமக்களுள் சுறியானிக் கிறிஸ்தவர்கள் முன்னிலையில்
நின்றனர் என கூறப்பட்டுள்ளது. நாயன்மார்களைப் போன்றே சுறியானிக் கிறிஸ்தவர்களும்
போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அவர்களை போர்த்துகீசியர்கள் மற்றும்
டச்சுக்காரர்கள் தங்களுடைய படையில் சேர்ப்பதற்கும் தயாராக இருந்தனர். அவர்களுள்
பலருக்கும் கப்பித்தான், அல்பரிஸ், ஒத்தனெந்தே, அராசு போன்ற பதவிப் பெயர்கள்
டச்சுக்காரர்கள் வழங்கியிருந்தனர். ஆனால் இவர்களுடைய சாதாரணமான குலத்தொழில் என்பது
பயிர்த்தொழிலும் வணிகமும் ஆகும். (கொச்சி ராஜ சரித்திரம் இரண்டாம் பாகம் பக்கம் 673)
பெயரும் புகழும் பெற்ற ஓவியரான கிப்பன்
போர்த்துகீசுக்காரர்கள் கேரளத்தில் வந்தடைவதற்கு முன்னரே சுறியானிக் கிறிஸ்தவர்களின் வாழ்வைப் பற்றிய நிலையை 1776 இல்
இவ்வாறு எழுதியுள்ளார்.
“ஆயுதப் பயிற்சிகளிலும் பல கலைகளிலும்
மிகப்பெரிய திறமை படைத்த சுறியானி் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தின் குடிமக்களை விட
திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுள் பயிர்த் தொழில் செய்பவர்கள்
தென்னைமர பயிர்த்தொழிலை செய்து வந்தனர். வணிகர்கள் நல்ல மிளகு வியாபாரம் நடத்தி
செல்வந்தர்களாகினர். படைவீரர்கள் நாயன்மார்களை விட முன்னிலையில் நின்றனர். கொச்சி
அரசரும் சாமுதிரிப்பாடும் பயத்தினாலோ உபகார நன்மைகளுக்கு நன்றிக்கடனாகவோ
அவர்களுடைய பாரம்பரிய பதவிப் பெயர்களை மதிப்பளித்து தொடர்ந்து வழங்கி வந்தனர். (History of the decline and
fall of the Roman empire, 1787 se பதிப்பு
page 836)
பிரான்சிஸ்
டே என்ற வரலாற்று ஆசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார். “சுறியானிக் கிறிஸ்தவர்கள்
மிகவும் விலைமதிப்பு பெற்றவர்களாக இருந்தனர். ஒரு சிற்றரசன் தனது எல்லைக்குள்
எத்தனை கிறிஸ்தவர்கள் வாழ்ந்திருந்தனரோ அந்த அளவுக்கு மற்று அரசர்கள் இந்த
சிற்றரசரைக் கண்டு பயந்திருந்தனர். இத்தகைய கிறிஸ்தவர்கள் நம்பிக்கைக்கரியவர்களாக
அரசனோடு இணைந்து செயல்பட்டனர். ஆண்கள் ஆயுதமேந்தி வெளிப்பகுதிகளில்
நடப்பவர்களாகவும் இருந்தனர். எட்டு வயது முதல் 25 வரை உள்ள இத்தகைய
ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொண்டவர்கள் மிகவும் திறமை பெற்றவர்களாகவே இருந்தனர். (Land of the perumals page 219)
புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஹவ்
பின்வருமாறு எழுதியிருக்கின்றார். “சுறியானிக்காரர்கள் இளம் வயது முதலே எண்ணெய்
அதிகமாக பயன்படுத்துபவர்களும் ஒவ்வொரு மூட்டுகளிலும் எண்ணெய் தேய்த்து திருமி
உள்ளதனால் அவர்கள் நல்ல உடல்வாகு கொண்டவர்களாகவும் வீரம் கொண்டவர்களாகவும்
காணப்பட்டார்கள். முற்காலங்களில் ஆயுதம் ஏந்துபவர்கள் அல்லாதவர்கள் நெடுந்தூரப்
பயணம் மேற்கொள்வது இல்லை. ஆயுதம் இல்லாத சிலர் துப்பாக்கி மற்றும் சிலர் இரும்பு
வளையங்களி்ல் தூக்கப்பட்டுள்ள அம்புகளை பயன்படுத்தி தான் நெடுந்தூர பயணம்
மேற்கொண்டார்கள். அம்பு பயன்படுத்துகின்ற போது இந்த வளையம் தனிப்பட்ட ஒலி
எழுப்புகின்றது. ஆனால் அவர்களுள் பலர் வலது கையில் உருவும் வாளும் இடது கையில்
கேடயமும் ஏந்தி இருந்தனர். எட்டு வயது முதலே இவர்கள் ஆயுதங்களை பயன்படுத்தவும்
பயிற்சிகளும் மேற்கொண்டு வந்தனர். இந்த அளவுக்கு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு
மிகவும் திறமை படைத்தவர்களாக காணப்பட்டனர். இத்தகைய தனித்திறமைகளால் இவர்கள்
மிகவும் பெயர் பெற்ற ஆரோக்கியமான பயிற்சி பெற்ற பெயரும் புகழும் பெற்ற
படைவீரர்களாக (Excellent Soldiers) இருந்திருந்தனர்.
இத்தகைய தனித்திறமைகளைக் கொண்டதனால்
முற்காலங்களில் அரசர்கள் இவர்களை அதிகமாக மதித்தனர் என்பதில் ஆச்சரியப்பட
வேண்டியதில்லை. ஒரு அரசரை அவரது நாட்டில் உள்ள சுறியானிக்காரர்களின்
எண்ணிக்கைக்கேற்ப மற்று நாட்டு அரசர்கள் மதிக்கவும் பயந்திடவும் செய்திருந்தனர்.
சுறியானிக்காரர்களின் நம்பிக்கையும் உண்மை நிலையும் அவர்களுடைய திறமையையும்
படைபலத்தையும் அரசவையில் இருந்தவர்கள் மதிக்கவும் போற்றிடவும் செய்திருந்தனர்.
ஆயுதம் ஏந்தியவர்களாக அவர்கள்
காணப்பட்டாலும் சாந்தமான குணம் கொண்டவர்களாக காணப்பட்டனர். தற்போது அவர்களுடைய
குணம் அவ்வாறே அமைந்திருக்கின்றது. அவர்களிடையே சண்டையும் கலகங்களும் குறைவாக
காணப்பட்டன. கொலை நிகழ்வுகள் மிகவும் அபூர்வமாகவே காணப்பட்டன. தேவாலயத்தில்
நுழைபவர்கள் ஆயுதங்கள் அனைத்தையும் வெளியே வைத்துவிட்டு ஆலயத்திற்குள் நுழைவது
வழக்கமாக இருந்தது. ஒருவேளை ஆலயமுற்றத்தைப் பார்க்கின்ற போது ஒரு ஆயுதப் பயிற்சிக்
கூடமே அங்கு அமைந்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். திருவழிபாடு
முடிந்தவுடன் ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதங்களை எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல்
எடுத்துக் கொண்டு சமாதானத்தோடு வீடுகளுக்கு திரும்பி செல்வர். (History of Christianity in India page 324 – 325)
மேற்குறிப்பிட்ட புகழ்பெற்ற வரலாற்று
அறிஞர்களின் கருத்துக்களின் அடிப்படையில் கேரளாவின் துவக்கக் காலத்தில் இருந்தே
கிறிஸ்தவர்கள் எத்தகைய உயர் பதவிகளோடு பெயரும் புகழும் பெற்றிருந்தனர் என்பதை நாம்
அறிந்து கொள்ளலாம். நஸ்ராணி பணிக்கர்கள் அனைவரும் முற்காலத்தில் திருவிதாங்கூரின்
வடக்கு எல்லையான இடவா என்னும் இடத்தில் வடக்குப் பகுதியில் உள்ள சிற்றரசர்களின்
படைத்தளங்களில் அங்கத்தினர்களாக இருந்து அவர்களுக்கு தேவையான ஆயுதப்
பயிற்சிகளையும் வழங்கி வந்தனர். அதற்கான பிரதிபலமாக பலவிதமான விலை உயர்ந்த
பொருட்களையும் பதவிகளையும் அரசரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
ஆனால் மாவேலிக்கரையில் உள்ள மல்லிட்டி
பணிக்கர்களுக்கு மட்டுமே இத்தகைய சிறப்புப் பதவிகளும் பரிசுகளும் தவிர
ஆலயங்களுக்குள் சம்பந்தமான உரிமைகளும் பொறுப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.
மாடத்திங்கூரின் களரிப் பணிக்கர் என்னும் நிலையில் கோட்டக்ககத்து
பிள்ளைமார்களுக்கு கச்சை கட்டவும் கண்டியூர் ஆலயங்களில் பள்ளிவேட்டைக்கும்,
திருவழிபாட்டுக்கும், இறைவனின் திருசந்தியில் திருப்பணி புரியவும்,
மாடத்தின்கூரில் ஆயுதப் பயிற்சிக் குரு என்ற நிலையில் முதல் திருவிழா முதல்
ஆறாட்டு வரை ஆலய வளாகத்தில் வாளேர், வடிதட, குந்தம் சாண்டல் போன்ற ஆயுத வித்தைக் காட்சி நடத்தவும் என்பவை
தான் அன்றைய முக்கிய பொறுப்புகள்.
கச்சை கட்டுதல் என்பதற்கு பிரதிபலனாக 66 பறை -
2 இடங்கழி நிலம் மாவேலிக்கரை ஆலயத்தின் எட்டாம் திருநாள் வரை எட்டு நாட்களுக்கு
தனிப்பட்ட விதமான பரிசுப் பொருட்களும் மல்லிட்டி பணிக்கர்களுக்கு
அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆலய வளாகத்தில் உள்ள ஆயுத வித்தைகளை பணிக்கர்கள்
தங்களுடைய சீடத்துவ தலைமுறையினரால் நடத்திக் கொண்டே இருந்தனர். ஆனால் பள்ளி வேட்டை
மற்றும் ஆறாட்டு என்ற இரண்டு நிலைகளிலும் இறைவனின் திருசன்னதியில் திருப்பணி
புரிவதற்காக ஆயுதப் பயிற்சி பெற்ற மல்லிட்டி பணிக்கர்கள் வேண்டும் என்ற கட்டாயமும்
இருந்திருந்தது.
ஆனக்கொட்டிலின் கிழக்குப் பகுதியில்
ஏறக்குறைய ஒன்றரை பர்லாங்கு அகலத்தில் ஆள்தரையில் இறைவனை திருக்காட்சி அருளும்
பொருட்டு நிறுத்துவர். பின்னர் மேற்கு நோக்கி பள்ளிவேட்டைக்காரர்கள்
இருபுறங்களிலும் அணியாக நிற்பர். உடனடியாக உரிமை கொண்டவரும் மாடத்தின்கூரின் மெய்க்காப்பாளர்களுள்
முதன்மையானவருமான மல்லிட்டிப் பணிக்கர் கட்டியும் கவணியும் எடுத்து பின்புறம்
துண்டுகளில் இரண்டையும் கீழ்நோக்கி கிடக்கக் கூடிய விதத்தில் புலியிறக்கரயன்
நேரியது தலையில் கட்டி இடது கையில் புலித்தோல் கேடயமும் வலது கையில் வாளுமாக
இறைவனின் திருசன்னிதியில் நாதஸ்வரம் மீட்டுபவர்களோடு இணைந்து மேற்குப் பகுதியில்
நிலைகொள்கின்றனர்.
அக்ரபாகத்தின் இருகூரின் அடிப்பகுதியில்
சிவப்பு நிறப் பட்டணிந்த ஓரிரு வேல்கள் (குந்தம்) ஏந்திய பணிக்கரின் சீடர் ஒருவர்
நிற்பார். பள்ளிவேட்டை துவங்கிய பின்னர் முதலாவது பெருங்குரல் கேட்டவுடன்
மல்லிட்டிப் பணிக்கர் வேலை வாங்கி வான் நோக்கி குதித்துச் சாடி வித்தைகளை
மேற்கொள்வார். ஓரிரு முறை வித்தைகளைச் செய்த பின்னர் வேலை சீடனிடம் திருப்பி
ஒப்படைத்த பின்னர் வாளும் கேடயமும் பெற்றுக் கொண்டு பள்ளிவேட்டை ஆனக்கொட்டிலின்
முன்பகுதி வரும் வரையிலும் வழிநடத்துகிறார். மீண்டும் அவ்விடத்தில் வேல் வித்தைகளைப்
பல முறை செய்து காட்டுகின்றார். பள்ளிவேட்டை நுழைவுவாயிலை அடைந்தவுடன் மல்லிட்டிப்
பணிக்கர் திரும்பி விடுகிறார். ஆறாட்டுநாளில் இவ்விதமே வேல்வித்தையும்
நடைபெறுகிறது.
பணிக்கர் குடும்பத்தின் இறுதி ஆயுத
வித்தைகளை காட்சிப்படுத்தியவர் நமது கதாநாயகனின் தந்தையான மல்லிட்டி தோமாப்
பணிக்கர் ஆவார். மல்லிட்டிப் பணிக்கர் குடும்பத்தின் தலைவராக இருந்த
தோமாப்பணிக்கர் 20 ஆண்டுகள் தனது ஐம்பதாவது வயது வரையிலும் இத்தகைய ஆயுத வித்தைகள்
நடத்தவும் ஆலயத்திலிருந்து உரிமைகளை பெற்றுக் கொள்ளவும் செய்திருந்தார்.
ஆனால் மாவேலிக்கரையை மையமாக்கி மறைப்பணிகள்
செய்த ஐரோப்பிய சிஎம்எஸ் மறைப்பணியாளர்கள் ஆலய முற்றத்தில் இப்படிப்பட்ட வித்தைகள்
நடத்துவது சிலை வழிபாட்டுக்கு சமம் என்றும் கிறிஸ்தவர்கள் அவற்றை செய்ய வேண்டாம்
என்று மறையுரைகள் நிகழ்த்தவும் கற்பிக்கவும் செய்ததனால் கொல்லம் ஆண்டு 1070 ஆம்
ஆண்டுடன் பணிக்கர் குடும்பத்தினர் ஆலயங்களோடு உள்ள இத்தகைய உறவை முறித்துக்
கொண்டனர்.
தேவாலய உரிமைகள்
திருவிதாங்கூர் அரசரிடமிருந்து மல்லிட்டிப்
பணிக்கர் குடும்பத்தினருக்கு ஆயுதப் பயிற்சி ஆயுத வித்தை போன்ற சேவைகளோடு
அனுமதித்து கொடுத்துள்ளவைகளைத் தவிர மாவேலிக்கரையில் புதியகாவு என்னும் இடத்தில்
உள்ள யாக்கோபாயா ஆலயத்திலிருந்தும் சில தனிப்பட்ட உரிமைகள் அவர்களுக்கும்
வழங்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட உரிமைகள் அந்தந்த காலத்து வயதுக்கு முதிர்ந்த
பணிக்கர்கள் தற்காலம் வரையிலும் அதனை கடைப்பிடித்து வந்ததாக அக்குடும்ப
மரபுகளிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய தெளிவுகள் பாதுகாக்கப்பட்டும்
வருகின்றன..
கிறிஸ்து வருடம் 1865 முதல்
1909 வரை கேரளாவின் யாக்கோபாய திருச்சபையை ஆண்டிருந்த புலிக்கோட்டில் மார்
திவன்னாசியோஸ் பேராயர் அவர்கள் 1903ல் மாவேலிக்கரை பங்கிற்கு அனுப்பிய ஒரு
திருமடல் இவ்வாறாக அமைந்திருந்தது.
“நமது மாவேலிக்கரை ஆலயத்தின்
பங்குத்தந்தையும் அவ்விடத்து அருள் தந்தையர்களும் ஆலயத்தின் நிர்வாகக் குழு
உறுப்பினர்களும் பொருளரும் இறைமக்களும் அறிவதற்கு அனைவருக்கும் ஆசீர்!
அன்புக்குரியவர்களே!
நமது பங்கில் மல்லிட்டிப் பணிக்கர்
குடும்பத்தினருக்கு இந்த ஆலயத்தில் வைத்து நடத்துகின்ற திருமணங்களின் போது இன்று
வரை நடக்கவும் நடந்து கொண்டே இருப்பதுமான இக்குடும்பத்தினர்களுக்கு, வெற்றிலைக்
கட்டும் பணமும் அரச குடும்பத்து நீட்டுதலுக்கு ஏற்ப வழங்குவது வழக்கமாகும். இதனை
நமக்கு முன்னால் வாழ்ந்த ஆயர்கள் அனுபவித்ததும் அங்கீகரித்ததும் ஆகும். ஆனால்
தற்போது சில குடும்பத்தினர் இத்தகைய உரிமையை எனக்கு எனக்கு எனச் சொல்லிக்கொண்டு
கிடைத்தவர்கள் பெற்றுக் கொண்டு வருகின்றனர்.
இக்குடும்பத்தில் வயது முதிர்ந்தவரான மேற்கு
வீட்டில் மல்லிட்டி தரியது தரியது பணிக்கர் அவர்கள் நம்மோடு இதனைப் பற்றிய
வருத்தம் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட மரபின் நீட்டல் பற்றிய வழக்கங்களின்
தெளிவுகள் நம்மை காண்பிக்கவும் செய்ததனால் இந்த பணிக்கர் குடும்பத்தினர்களுக்கு
உரிமையாக ஆலயத்திலிருந்து வழங்கப்படும் வெற்றிலைக்கட்டும் பணமும் மரபு முறைகளுக்கேற்ப
இந்த குடும்பத்தினர்களுக்கு அதன் காலத்து முதிர்ந்தவர்களுக்காக கொடுக்கப்படவும்
வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும்
உங்களோடு இருப்பதாக!
1903க்கு கொல்லம் 1078
மிதுனம்
27 ஆம் தேதி புதுப்பள்ளியிலிருந்து
மார் திவன்னாசியோஸ்
(கையொப்பம்)
பாரம்பரிய நினைவுச் சின்னங்கள்
மல்லிட்டிப் பணிக்கர்களுக்கு தழக்கரை
புதியகாவு தாவளங்களில் 64 நஸ்ராணி சீடர்களும், கோட்டைக்ககம் என்னுமிடத்தில் 130 நாயர் சீடர்களும் இருந்தனர். இவர்களுடைய இரண்டு களரிக்கூடங்கள் இன்று
பெயரளவில் மட்டுமே உள்ளது. இவற்றுள் ஒன்று புதியகாவு பத்திரகாளி ஆலயத்தின் வடக்கு
பகுதியில் திவ்யஸ்ரீ பீ.டி தாமஸ் கத்தனார் அவர்களுடைய மல்லிட்டிப் பணிக்கரின்
வீட்டின் மேற்குப் பகுதியில் உள்ள நிலத்தில் அமைந்திருந்தது.
இன்றும் அரசு எழுத்துமுறைகளில் இந்த
இடத்தின் பெயரை “களரிக்கல் பறம்பு” எனக் குறிப்பிடுகின்றனர். திருவிதாங்கூர்
படைகளின் தலைவனாக இருந்த டிலனாய் வலிய கப்பித்தான் பொறுப்பில் மல்லிட்டிப்
பணிக்கரது கண்காணிப்பில் பெரிய துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் போன்றவை ஒப்படைக்கப்பட்டு
களரிக்கல் பறம்பின் வடக்குப் பகுதியில் உள்ள நிலத்தில் பாதுகாக்கப்பட்டிருந்தது.
இதனை இன்றும் “வார்ப்புரை” என்பர்.
தங்களது மூதாதையர்கள் பயன்படுத்தியிருந்த
வாள், தோள்பட்டை மற்றும் வேல் போன்றவற்றை பணிக்கர் குடும்பத்தினர் இன்றும் மிகுந்த
கவனத்துடன் பாதுகாத்து வருகின்றனர்.
இத்தகைய முக்கியத்துவங்கள் கொண்ட புகழ்பெற்ற
மூதாதையர்களாலான மிகவும் பழமையான குடும்பத்தில் தான் நமது கதாநாயகன் பிறந்தார்
என்பது அவர் பெற்ற பெரும்பேறு ஆகும்.
அதிகாரம் 3
பிறப்பும் இளமைப் பருவமும்
மாவேலிக்கரையில் பழமை வாய்ந்த மற்றும்
புகழ்பெற்ற பணிக்கர் குடும்பத்தில் தோமா பணிக்கர் மற்றும் அன்னம்மா இவர்களுடைய
மகனாக கிறிஸ்து வருடம் 1882 ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி நமது கதாநாயகன் இப்பூவுலகில் வந்து
பிறந்தார். அவரது தாயாகிய திருமதி அன்னம்மா காயங்குளத்திற்கு அருகே உள்ள ஆலயத்தைச்
சார்ந்த அரீப்புறத்து என்னும் இடத்தில் மிகவும் பெயர் பெற்ற மத்தாயி ஆசானின்
மகளும் கல்வி அறிவில் சிறந்தவரும் இறைபக்தியில் மிகுந்த நபராக சிறந்து விளங்கினார்.
பல தலைமுறைகளாக தாய்க் குடும்பத்தில் ஆண்
சந்ததியினர் இல்லாத போது ஒரு ஆண் சந்ததிக்காக இறைவேண்டலில் நிலைத்திருந்த அன்னம்மா
இறைவனின் திருவடியில் கண்ணீர் சிந்தி இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டிருந்தார். புனித
இறையன்னையின் பரிந்துரை வேண்டியும் அவள் ஜெபித்து வந்தாள். தன் வயிற்றில் கருவாக
வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தையின் நலனுக்காகவும் இறையன்னையின் பரிந்துரை வேண்டி
இறைவனிடம் சமர்ப்பித்து ஜெபித்து வந்தார். இதன் பலனாக இறை அன்னையின் பிறப்புத்
திருநாள் அன்று நற்குழந்தை ஒன்று இவ்வுலகில் உதயமானது.
வாழ்நாள் முழுவதும் மரியாவின் பக்தராய்
வாழ்ந்த நமது கதாநாயகன் புனித இறை அன்னையின் பிறப்புத் திருநாளில் பிறந்ததும்,
திருத்தொண்டர் பட்டம் இறையன்னையின் புகழ்ச்சியின் திருநாளன்று பெற்றுக் கொண்டதும்,
குருத்துவ அருட்பொழிவு கன்னி மரியாவின் விண்ணேற்புத்திருநாளன்று பெற்றுக்
கொண்டதும் மற்றும் அவரது இறப்பு கர்மல மாதாவின் திருநாளின் முந்தைய இரவிலுமாக
நிகழ்ந்தது என்பதை சிறப்பான முறையில் நினைவு கூர்ந்தாக வேண்டும்.
(பல ஆர்த்தடோக்ஸ் கிழக்கு கத்தோலிக்க
திருச்சபைகள் அன்னையின் பிறப்புத் திருநாளை செப்டம்பர் 21ஆம்
தேதி கொண்டாடி வந்தனர். தற்போதைய ஜூலியன் நாள்காட்டியின் அடிப்படையில் செப்டம்பர் 8ஆம்
தேதி மரியாவின் பிறப்புத் திருநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால் கிரிகோரியன்
நாட்காட்டியின் அடிப்படையில் சில திருச்சபைகள் இப்போதும் செப்டம்பர் 21ஆம்
தேதி மரியன்னையின் பிறப்பு நாளாக கொண்டாடி வருகின்றன.)
தங்களது முதல் சந்ததியை ஒரு சில
தினங்களுக்குப் பின்னர் புதியகாவு என்னும் இடத்தில் உள்ள யாக்கோபாய தேவாலயத்திற்கு
பெற்றோர்கள் கொண்டு போய் அங்கு வைத்து குழந்தையின் தந்தையின் சகோதரரான பணிக்கர்
வீட்டில் தரியது ஸ்கரியா பணிக்கர் அவர்களால் திருமுழுக்கு வழங்கவும் தொடர்ந்து
உறுதிப் பூசுதல் என்னும் திருவடையாளமும் வழங்கப்பட்டது.
திருமுழுக்கு நேரத்தில் ஞானத்
தகப்பனாராவதற்கான பெரும்பேறு தோமா பணிக்கரின் மூத்த சகோதரனான மல்லிட்டிபறம்பில்
கீவர்கீஸ் பணிக்கர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. அவ்வாறாக தான் கிவர்கிஸ் என்ற
பெயர் அவருக்கு போட வேண்டிய சூழல் ஏற்பட்டது. கி வர்கீஸ் என்ற பெயரைக் கொண்டவர்கள்
ஏராளமானவர்கள் பணிக்கர் குடும்பத்தில் வாழ்ந்திருந்தனர்.
புனித கிவர்கீஸ் அவர்களோடு பக்தியும்
மதிப்பும் கேரளா கத்தோலிக்க மக்களுக்கும் யாக்கோபாயா திருச்சபை மக்களிடையிலும்
உண்டு என்பது மிகப்பெரிய ஒரு உண்மையாகும். கீவர்கீஸ், வர்க்கி, வக்கன் மற்றும்
ஜார்ஜ் என்ற பெயர்களாக யாக்கோபாயா திருச்சபையைச் சார்ந்த 25 சதவீத
ஆண்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். இவ்வாறு அழைக்கப்பட்ட புனிதரின் பெயரில்
ஏராளமான தேவாலயங்களும் பள்ளிக்கூடங்களும் மற்ற நிறுவனங்களும் கேரளாவில் நிறுவப்பட்டுள்ளன.
அப்புனிதரின் திருநாளை மிகவும் ஆடம்பரமாக கேரள மக்கள் அனைவரும் இணைந்து
தேவாலயங்களில் கொண்டாடி மகிழ்ந்து வந்தனர்.
புனித கீவர்க்கீஸ் போல எதிர்ப்பு சக்திகளை
வீரத்தோடும் தைரியத்தோடும் நேரிட்டு வெற்றி வாகை சூடுவதற்கும் பொது நன்மைக்காக
பலவிதமான காரியங்களை செயல்படுத்தவும் மரணம் வரையிலும் தன்னிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை செவ்வனே செய்வதற்கும் அவர் காட்டிய பொறுப்புணர்வு
பற்றி எண்ணும் போது திருமுழுக்கு நேரத்தில் கீவர்கிஸ் என்ற பெயர் அவருக்கு
வழங்கப்பட்டது எவ்வளவு பொருத்தமாக அமைந்துள்ளது என நம்ப வேண்டியிருக்கின்றது.
“கொச்சி கீவரீச்சன்” என்ற செல்லப் பெயரால் நமது கதாநாயகன் இளமை பருவத்தில்
அழைக்கப்பட்டிருந்தார்.
தோமா பணிக்கருக்கு சாக்கோ பணிக்கர்,
கீவர்கிஸ் பணிக்கர், தரியது ஸ்கரியா கத்தனார் மற்றும் யோஹன்னான் பணிக்கர் என
நான்கு சகோதரர்கள் இருந்தனர். இவர்களுள் தரியது ஸ்கரியா கத்தனார் பணிக்கர் தனது
இறுதி காலம் வரையிலும் திருமணம் செய்யாமலே வாழ்ந்து இறைபணி செய்த புகழ்பெற்ற
குருவானவர் ஆவார். மாவேலிக்கரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல
ஆலயங்களில் பங்குத்தந்தையாக அவர் பணி புரிந்திருந்தார். இறைபக்தி மிகுந்தவரும்
பங்கு நிர்வாகத்தில் திறமை வாய்ந்தவருமாகிய அவர் தனது 68 ஆவது
வயதில் 1911 ல் இறைசன்னதியை அடையவும் செய்தார். குருத்துவ பயிற்சியை பெற்றுக் கொள்ளவும்,
உயர் கல்வி போன்ற பயிற்சிகளில் கலந்து கொள்ளவும் திருமணம் செய்யாமல் துறவு வாழ்வு
வாழ்வதற்கும் தேவையான ஆக்கவும் ஊக்கவும் அறிவுரைகளும் உதவிகளும் நமது
கதாநாயகனுக்கு தரியது ஸ்கரியா கத்தனார் அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.
மரண வேளையில் நமது கதாநாயகன் அவருக்கு நோயில்பூசுதல் வழங்கவும் மரணப்படுக்கையில்
செய்ய வேண்டிய அனைத்து உதவிகளும் நமது கதாநாயகன் அவர்களால் செய்யப்பட்டது என்பது
மிகப்பெரிய ஒரு பேறாகக் கருதப்படுகிறது.
தோமா பண்ணிக்கரின் மூத்த சகோதரனாகிய
கீவர்கீஸ் பணிக்கரின் மகன் தரியது பணிக்கர் தான்
இப்போது பணிக்கர் குடும்பத்தின் முக்கியவானவராகும் முன்னவராகவும்
கருதப்பட்டார். பெதனி ஆசிரமத்தின் துவக்கக் காலத்திலும் அதன் முன்னேற்றத்திலும் பல
ஆண்டுகள் அவர் அரும் பாடுபட்டு செயல்பட்டு இருக்கின்றார். இவரது மகனே அருட்தந்தை
பாதர் பீ.டி தாமஸ் பணிக்கர் ஆவார். பணிக்கர் குடும்பத்திலிருந்து பழங்கால முதலே
குருக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்திருந்தனர் என்பது அவர்களுடைய குடும்ப
வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
காரிச்சால் அருட்தந்தை பி.டி பணிக்கர்,
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு கற்ற அருட்தந்தை சீடி
வர்கீஸ் பி ஏ போன்ற குருக்கள் இக்குடும்பத்தைச் சார்ந்த பெயர் பெற்ற முக்கிய
குருக்கள் ஆவர். இக்குடும்பத்தைச் சார்ந்த நான்கு நபர்கள் பல குருத்துவப்
பயிற்சியகங்களிலாக குருத்துவ பயிற்சியை மேற்கொண்டனர்.
தோமா பணிக்கருக்கு மூன்று மகன்களும் மூன்று
மகள்களும் இருந்தனர். மகன்களுள் ஒருவர் சிறு வயதிலேயே தனது ஒன்பதாவது வயதில்
இறையடி சேர்ந்தார். நமது கதாநாயகனின் வாழ்க்கைக் காலத்தில் நடந்த முக்கிய
நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு ஒரு நல்ல துணைவராக செயல்படவும் படை வீரரைப் போன்று
போராடவும் உடன் பணியாளரை போன்று உதவிடவும் செய்துள்ள இளைய சகோதரன் மத்தாயி
பணிக்கர் பின்னர் பெதனி ஆசிரமத்தின் துவக்கத்திலும் மறுஒன்றிப்பின் எல்லாவித
முன்னேற்றத்திலும் அவர் செய்த பணிகள் ஒருபோதும் மறக்க முடியாதவை ஆகும். இவருக்கு
இரண்டு ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
நமது கதாநாயகனின் மூத்த சகோதரியாகிய சோசம்மா
மாவேலிக்கரை கல்லும்புறத்து கொட்டாரத்தில் குஞ்சுமாக்காண்ட வைத்தியரின் மகன் தோமஸ்
என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது மகன் பெதனி ஆசிரமத்தின் அருட்தந்தை
எஃப்ரேம் ஓஐசி அவர்கள் ஆவார். அருட்தந்தை எஃப்ரேமின் சகோதரியின் மகன்
உரோமாபுரியில் குருத்துவப் பயிற்சி மேற்கொண்ட அருட்தந்தை தோமஸ் பணிக்கர் டிடி
ஆவார்.
கதாநாயகனின் இளைய சகோதரியான குஞ்சம்மாவை
மேப்ரால் கணியாந்தற தாமசு வர்க்கி (காவல் உதவி ஆய்வாளர்) திருமணம் செய்து
கொண்டார். அவரது மரணத்திற்குப் பிறகு புளிக்குந்தில் சாத்தம்பரம்பில் ஈப்பன்
(வழக்கறிஞர்) குஞ்ஞம்மாவை திருமணம் செய்து கொண்டார். அவரும் ஒரு சில காலத்திற்குப்
பின்னர் இறையடி சேரவே குஞ்ஞம்மா தனது சொந்த வீட்டிலேயே வாழ்ந்து வந்தார்.
தாங்கள் பெற்ற அன்பு கூர்ந்த சந்ததியை
அன்போடு வளர்த்திட பெற்றோர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டிருந்தனர். குழந்தையாக
இருந்த சூழலில் நடந்த ஒரு நிகழ்வு கதாநாயகனின் வரலாற்றில் உண்டான பல விபத்துக்கள்
நிறைந்த காட்சிகளையும் அவையிலிருந்து இறைவனின் அருளால் காப்பாற்றப்பட்ட
நிலைகளையும் நம்மை இறைத்திட்டம் பற்றி
நினைவு கூரச் செய்கிறது.
குழந்தைக்கு நான்கு வயது பூர்த்தியாகவில்லை.
ஒரு நாள் பணிக்கர் வீட்டில் மாட்டு வண்டிக்காரன் குழந்தையை எடுத்துக்கொண்டு
வண்டியின் முன்பகுதியில் உள்ள கோல் மரத்தில் அமர வைத்து முன்னோக்கி நகர்த்தினார்.
காளைகள் இரண்டும் ஓடத் துவங்கவும் வண்டியின் சக்கரத்தின் நேர் முன் பகுதியில்
பயத்தினால் அமர்ந்திருந்த குழந்தை கீழே விழவும் செய்தது. ஏதோ இறை வல்லமையின்
காரணத்தினால் பயத்தினால் ஓடிக் கொண்டிருந்த காளைகள் உடனடி பிரேக் பிடித்ததை போன்று
அப்படியே நின்று விட்டன. காளைகளின் ஓட்டம் சீக்கிரமாக நிற்காமல் சென்றிருந்தால்
அந்த ஒரு காட்சி மிகவும் வேதனை மிகுந்ததாக அமைந்திருக்கலாம்.
எண்ணற்ற பேராபத்துக்கள் நிறைந்த
சூழல்களிலிருந்து எல்லாம் வல்ல இறைவன் அவரது அருள் வரத்தால் அடியோர்களாகிய நம்மை
பாதுகாக்கும் நிலைகளைக் குறித்து எண்ணும்போது மனம் அவரது அளவற்ற அன்பை உணர்ந்து
நன்றி கூர முனைகின்றது. உலக அளவிலேயே முக்கியமான நபராக மாற வேண்டிய அந்த நபர் -
கேரளத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் லட்சக்கணக்கான மக்களை ஆன்மீக
வழிநடத்துதலில் நிலை வாழ்வு கொடுப்பதற்காக போராட வேண்டிய மிகப்பெரிய செயல் தலைவன்
- சுறியானித் திருச்சபையை மிகவும் கடினமாக பாதித்திருந்த கட்டுகளை எல்லாம்
ஒவ்வொன்றாக அவிழ்த்தெறிந்து ஒன்றிப்பு மற்றும் சமாதானத்தின் வழிகளை தயாராக்குகின்ற
சமாதானத்தின் தூதனாகிய மனிதன் - மறுஒன்றிப்பு என்னும் குழந்தைக்கு பிறப்பு
நல்கவும் அத்தகைய தங்கக் குழந்தையை தாலாட்டி சீராட்டி வளர்க்கவும் இளமை
பருவத்திற்கு வழிநடத்த வேண்டிய பாசம் கொண்ட ஒரு தந்தை - பொதுநல சேவை என்னும்
எண்ணத்தோடு கேரளத்தின் பல இடங்களிலும் பல்வேறு நிறுவனங்களை உருவாக்க வேண்டிய நபர்
- இத்தகைய மிகப்பெரிய சாதனைகளை சாதிக்க வேண்டிய ஒரு பிஞ்சுக் குழந்தையை மாட்டு
வண்டியின் சக்கரங்களுக்குள் அகப்படுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அனுமதிப்பாரோ? எல்லாம்
அறிந்தவரான இறைவன் அதற்கு அனுமதி அளிப்பாரா? அவ்வாறு நிகழ்ந்திருந்தால்
மலங்கரை திருச்சபையின் வரலாற்றில் அதனுடைய நிலை தற்போது எத்தகைய ஒரு சூழலை
அடைந்திருக்கும். எல்லாம் அறிபவரான இறைவன் மட்டுமே அதனையும் அறிந்திருப்பார்.
“குழந்தை வளர்ந்தது. ஆன்மீகத்தில்
வலுப்பெற்றது. ஞானத்தில் நிறைந்திருந்தது. இறையருளும் அவருடைய மேல்
தங்கியிருந்தது” என்று நமது ஆண்டவரின் பாலபருவத்தை குறித்து நற்செய்தி நூலில்
அருளப்பட்ட இறை வார்த்தைகள் நமது கதாநாயகனிலும் ஏறக்குறைய அவ்வாறே நிறைவேறிக்
கொண்டிருந்தது எனக் கட்டாயமாக நம்மால் கூற முடியும்.
கொச்சு கீவரீச்சன் என்ற செல்லப் பெயரில்
அழைக்கப்பட்ட இளமைக் காலம் அது. மாவேலிக்கரையில் புதிய காவு ஆலயத்துக்கு
அருகாமையில் அமைந்திருந்த தாவீது ஆசானின் பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது வயதில் அவரை
பெற்றோர் துவக்கக் கல்விக்காக சேர்த்தனர். துவக்கக் கல்வி நிலையத்தில் அசாதாரணமான
திறமையும் ஆர்வமும் காட்டிய இக்குழந்தை பிற்காலத்தில் பெயரும் புகழும் பெற்ற
மகானாக மாறுவார் என தாவீது ஆசான் அன்றே முன்னுரைத்திருந்தார்.
ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு
கேரளாவின் திருவனந்தபுரம் முதல் வடக்கு பகுதி வரை நிலவியிருந்த கல்வி முறை பற்றி
குறிப்பிடுவது இத்தருணத்தில் முக்கியமானதாக அமையும். “கிராமீயம்” மற்றும்
“நாகரீகம்” எனக் கல்வி கற்பிக்கும் முறைகளை இரண்டு கிளைப் பகுதிகளாக அன்று
வகுத்திருந்தனர். கிராமீய முறைக் கல்வியை சாதாரணக் கல்வி முறை என்றும் கூடுதல்
சிறப்புக் கல்வி முறை எனவும் இரண்டாக பிரித்திருந்தனர். ஆசான்மார்களின்
கட்டுப்பாட்டில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளும் அவற்றுடன் கையெழுத்தும்
கணிதமும் கற்பித்தனர். பாடல்களையும் வாக்கியங்களையும் மனப்பாடமாக்கச் செய்தனர்.
அமரகோசம், சித்தரூபம் மற்றும் பாலபுரோபதனம், ஶ்ரீராமோதந்தம்
மற்றும் நீதிசாரம் போன்றவைகளையும் கற்றுக் கொடுத்து மனப்பாடம் செய்ய வைத்தனர்.
இஃதுடன் பொதுக்கல்வி நிலை நிறைவுபெறும். இரகுவம்சம், குமாரசம்பவம், கிரதார்ஜுனியம், மாகம், நைஷதம்
முதலிய சமஸ்கிருதக் கவிதைகள் கற்பிக்கப்பட்டன. சாகுந்தலம்
மற்றும் உத்தரராமசரிதம் போன்ற நாடகங்களையும் கற்றார். விவாதங்களில் கலந்து
கொள்வதும் கலைகளில் திறமை கொண்டிருப்பதும் உயர் கல்வியின் முக்கிய காரணிகளாக
அமைந்திருந்தன.
உயர் கல்விக்காக அக்காலத்தில் மாணவர்கள்
தங்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. எனவே, பெரும்பான்மையான மக்கள்
களரி எனப்படும் பொதுக் கல்வியைக் கற்று திருப்தி அடைந்தனர். நாகரீக கல்வி என்பது
ஆங்கில வழிக் கல்வியாகும். சற்று வசதி கொண்ட இளையோர்கள் கிராமப்புற இடைநிலைக்
கல்விக்குப் பிறகு ஆங்கிலம் கற்றிட ஊர்களிலிருந்து நகரங்களுக்கு அனுப்பினர். மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள்
திருவிதாங்கூரில் அதிகமாக காணப்பட்டது. கோட்டயம், ஆலப்புழா, மாவேலிக்கரை, கொல்லம், திருவனந்தபுரம்
மற்றும நாகர்கோவில் போன்ற நகரங்களில் பல ஆங்கில வழிப் பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு
வந்தன.
நமது கதாநாயகன் பன்னிரண்டாம் வயது வரை தனது
சொந்த வீட்டிலேயே தங்கி வாழ்ந்து கிராமிய முறையிலான கல்வி முறையை நிறைவு செய்தார்.
தாவீது ஆசானின் கட்டுப்பாட்டில் கையெழுத்து முதல் எழுத்துக்களை சேர்த்து
வாசிக்கும் நிலை வரையிலான கல்வி முறையை கற்றுத் தேர்ந்தார். நற்குணமும் மிகுந்த
திறமையும் கொண்டிருந்த நமது கதாநாயகன் கீவரீச்சன் களரி எனப்படும் கல்விக்கூடத்தின்
“சட்டம்பிள்ளை” என்று பொறுப்பை பெற்றிருந்தார். தற்போதைய மாணவத் தலைவர் என்பதற்கு
இணையாக அக்காலத்தில் சட்டங்களை கண்காணிப்பவன் என்ற முறையில் சட்டம் பிள்ளை என்ற
பொறுப்பு ஆசானால் வழங்கப்பட்டிருந்தது.
கல்விக்கூடத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளை
தூய்மையாக வைத்திருத்தல், மாணவர்கள் கல்விக்கூடத்திற்கு வருகின்ற போது
அவரவர்க்குரிய இடங்களில் அமரச் செய்தல், மாணவர்களுக்கு இடையே சின்னஞ்சிறு சண்டை
சச்சரவுகள் ஏற்படும்போது ஆசானிடம் அதைப் பற்றிய விபரத்தை அறிவித்தல், குற்றவாளிகளை
தண்டிப்பதற்காக பிரம்பு ஒன்றை வெட்டிக் கொண்டு வந்து ஆசான் தண்டனை கொடுப்பதற்காக
வசதியாக அவரது மேசை மேல் வைத்தல் போன்ற பணிகள் தான் சட்டம் பிள்ளை அவர்கள்
செய்வதற்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது. சட்டம் பிள்ளை என்ற பதவியில் தன்னிடம்
ஒப்படைக்கப்பட்ட பணிகளை முழுமனதோடும் பரிபூரண உள்ளத்தோடும் 100%
அப்பணியை செவ்வனே அவர் செய்து வந்தார்.
ஆனால் ஆசானோடு ஒருமுறை கருத்து வேறுபாடு
ஏற்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆசான் வெளிப்படையாக கதாசாயகனை மற்று மாணவர்களின்
முன்னிலையில் வைத்து கோபத்தால் திட்டினார். இதனால் ஆத்திரமும் கோபமும் அடைந்த
கீவரீச்சன் ஆசிரியரோடு இவ்வாறு கூறினார்:
“ஆசான் அவர்களே இந்த அளவுக்கு நீங்கள்
கோபப்பட வேண்டிய தேவையில்லை. நான் எனது வீட்டிற்கு செல்வதற்கு தயாராக இருக்கிறேன்.
தங்களது எழுதிய எழுத்துக்கள் அனைத்தையும் திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள். நான்
பயன்படுத்திய ஓலையை மட்டும் எனக்கு தந்தால் போதும்.” இவற்றை கூறிக்கொண்டு ஓலையும்
எடுத்து ஒரே ஓட்டமாக ஓடி தனது சொந்த வீட்டிற்குச் சென்றார்.
ஆசான் தனக்கு இஃது குழப்பமாகவே உருவாகும் என
எண்ணி தோமாப்பணிக்கரிடம் தான் குற்றம் அற்றவன் என்பதை அவர் விளக்கினார். உடனடியாக
தோமாப் பணிக்கர் கீவரீச்சனை அழைத்து விசாரித்தார். பாலன் இவ்வாறு பதிலளித்தார்.
“உண்மையாகவே அப்பா இந்த ஆசான் என்னோடு கோபப்பட்டார். அதனால் தான் நான் இவ்வாறு
கூறினேன். எழுத்துக்கள் அனைத்தும் ஆசான் தான் எழுதினார். ஓலை என்னுடையது. அதனால்
தான் நான் கூறினேன். எழுத்துக்களை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஓலையை நான்
எடுத்துச் செல்கிறேன்”. இதனைக் கேட்ட உடனடியாக இருவரும் உரத்த குரலில்
சிரிப்பலைகளை ஏற்படுத்தினர். பாலன் அவ்வாறு தண்டனையிலிருந்து விடுவிக்கப்படவும்
செய்தார்.
துறவு வாழ்வில் சிறு வயது முதலே நமது
கதாநாயகன் விருப்பம் கொண்டவராக இருந்தார் என்பதை சுட்டுகின்ற ஒரு நிகழ்வு அவரது
பாலபருவத்தில் நிகழ்ந்தது. அவரது வீட்டு முற்றத்தில் சேவல் ஒன்று பெண் கோழியின்
மேல் பகுதியில் மிதித்து நின்ற காட்சியை பாலன் ஒரு நிமிடம் அப்படியே பார்த்து இரசித்து
கொண்டிருந்தார். இதைக் கண்ட அவரது தந்தையின் சகோதரியின் மகள் பாலனோடு இவ்வாறு
கூறினாள், “குழந்தாய் இத்தகைய காட்சிகளை கண்டு மகிழ்பவர்கள் குருவானவராகவோ,
பலிபீடத்தில் நுழையவோ, விண்ணகத்தில் செல்வதற்கோ வாய்ப்பே இல்லை”. இதைக் கேட்ட
உடனடியாக தனது கண்களை தனது கைகளால் மறைத்தவாறு, “அய்யய்யோ அப்படி என்றால் நான் இது
காண மாட்டேன்” எனக் கூறி அவ்விடத்திலிருந்து வெகு சீக்கிரமாக ஓடிவிட்டார். ஒரு
குருவானவராக மாற வேண்டும். துறவு வாழ்வு வாழ வேண்டும் என சிறு பருவ முதலே நமது
கதாநாயகன் பெரிய விருப்பம் கொண்டிருந்தது இதன் வழியாக நம்மால் உணர்ந்து கொள்ள
முடியும்.
கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்பு
என்னும் எண்ணத்தை தனது பால பருவத்தில் அவரது மனதுக்குள் ஊட்டி வளர்த்தது தனது
சொந்த தாயாரே என நமது கதாநாயகன் பல முறைகளிலும் கூறி இருக்கின்றார். அதனுடைய
நிகழ்வு இவ்வாறாக அமைந்திருந்தது. ஒருமுறை தனது சகோதரி நோயினால் பாதிக்கப்பட்டு
படுக்கையில் இருந்தார். சிகிச்சை வழியாக சொல்லக்கூடிய அளவுக்கு உடல்நிலை
முன்னேற்றம் பெற்றுக்கொள்ள முடியவில்லை. நோயாளிக்காக ஜெபிப்பதற்காக தனது தாயார்
கீவரிச்சனை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த கத்தோலிக்க தேவாலயத்திற்கு சென்றார்.
அந்த ஆலயத்திற்குள் நுழைந்ததும் இறைவனின் உடன் இருப்பை உணரக்கூடிய அமைதியான சூழல்
அவர்களுக்கு தோன்றியது. முழந்தாள் படியிட்டு இறைவனின் முன்னிலையில் நோயாளிக்காக
மனம் உருகி வேண்டினர்.
அதன் பின்னர் தங்களது சொந்த வீட்டிற்கு
திரும்பிச் செல்கின்ற போது வழியில் தனது தாயார் மகனோடு இவ்வாறு கூறினார். “மகனே
உண்மையான ஆலயம் என்றால் இதுவே ஆகும். இந்த ஆலயத்தில் நாம் இணைய வேண்டும்”.
அக்குழந்தையின் மனதில் அன்று உருவாக்கப்பட்ட இந்த எண்ணக்கரு வளர்ந்து பெரியதாகி
மலர்ந்து கனிகளை வெளிப்படுத்திட ஏறக்குறைய 40 வருடங்கள் தேவைப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையைப் பற்றிய ஒரு சில
கருத்துக்கள் பல வருடங்களுக்கு முன்னரே மனதில் உருவெடுத்ததாக இருந்தாலும் அவை
வளர்ந்து பூரண நிலையை அடைந்த பின்னரே பல நபர்களையும் திருச்சபையின் இணைப்புக்காக
பாடுபட்டுள்ளார். கத்தோலிக்க மறுஒன்றிப்படைந்த பல மகான்மார்களின் அனுபவம் இத்தகைய
பேருண்மையை சாட்சியப்படுத்துகிறது.
சிறுவயதிலேயே இறைபக்தியிலும் ஜெபத்திலும்
அதிக விருப்பம் கொண்டவராக வாழ்ந்திருந்ததனால் யாவருடைய அன்பிற்கும்
அரவணைப்புக்கும் பாலன் ஏற்புடையவானார். ஆலயத்திற்கு செல்வதற்கும் ஜெபிப்பதற்கும்
திருப்பலியில் கலந்து கொள்வதற்கும் கீவரீச்சன் காண்பித்த ஆர்வம் அசாதாரணமான
ஒன்றாகவே காணப்பட்டது. சொந்த வீட்டிலிருந்து தினமும் காலையில்
பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் போதும் அங்கிருந்து திரும்பி வரும்போதும் புதியகாவு
ஆலயத்திற்குள் நுழைந்து கொஞ்ச நேரம் ஜெபிப்பது அவரது வழக்கமாக இருந்தது. உணவு
உட்கொள்வதற்கு முன்னும் பின்னும் சிலுவை வரைந்து ஜெபிப்பது சிறார்ப் பருவம் முதலே
கீவரீச்சன் பழக்கமாகக் கொண்டிருந்தார்.
கல்வி கற்கும் விடயத்தில் சிறார் பருவம்
முதலே அவருடைய திறமையைப் பற்றிய மதிப்பு அவரது ஆசிரியருக்கு இருந்தது. இதனை
வெளிப்படுத்துகின்ற நிகழ்வு ஒன்று அரங்கேறியது. வயது முதிர்ந்த காரணத்தினால்
தாவீது ஆசான் பணி ஓய்வு பெற்ற பின்னர் அவரது மகனான யோகன்னான் ஆசான் பள்ளிக்கூடத்தின்
ஆசிரியரானார். மது என்னும் தீய பழக்கத்திற்கு புதிய ஆசிரியர் அடிமையாகி இருந்தார்.
மது அருந்தாமல் கல்வி கற்பிப்பது என்பது கடினமான ஒன்றாக அவருக்கு இருந்தது. ஒரு
நாள் கணித பாடம் கற்பித்துக் கொண்டிருக்கின்ற போது மதுவினால் ஏற்பட்ட பாதிப்பு
மீண்டும் வலுவானது. உலகிலேயே எந்த ஒரு கணிதவியல் அறிஞர்களுக்கும் விடை நல்க
முடியாத ஒரு வினாவை ஆசான் மாணவர்களிடம் கேட்டார். “மூன்று பேர்களுக்கு ஒன்று;
ஆனால் மீதம் இல்லாமல் ஒருவருக்கு எத்தனை?” இதுதான் ஆசானின் இமாலயப் பிரச்சனை.
மாணவர்கள் என்ன பதில் நல்குவர். ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து விடையை கூறிட
ஆசான் கேட்கத் துவங்கினார். ஒவ்வொருவருக்கும் மௌனம் மட்டுமே பதிலாக வழங்க
முடிந்தது. கடைசியாக கீவரீச்சனோடு கேள்வி கேட்கப்பட்டது. எல்லாவற்றிலும் திறமை
வாய்ந்த கீவரீச்சன் இந்த கேள்விக்கு பதில் அளிப்பான் என ஆசான் நம்பி இருந்தார்.
ஆனால் என்ன செய்ய முடியும்.
“மூன்று பேர்களுக்கு ஒன்று; ஆனால் மீதம்
இல்லாமல் ஒருவருக்கு எத்தனை?” ம் ம் ம்.
விடை கூறுங்கள். ஆசானின் அடுக்கடுக்கான ம் -களுக்கு முன்னால் மௌனத்தோடு
நிற்பதற்கு மட்டுமே கீவரீச்சனால் இயன்றது. மற்றவர்கள் விடை கூற இயலாது என்பது
ஆசானுக்கு தெரிந்த உண்மையே. ஆனால் வகுப்பிலேயே அறிவாளியான கீவரீச்சனால் விடையளிக்க
முடியாமல் இருந்தது ஆசானால் ஏற்றுக் கொள்வதற்கு சற்று கடினமாகவே இருந்தது.
கோபத்தால் நடுக்கம் கொண்ட ஆசான் வெளியே
சென்று ஒரு பெரிய கல் ஒன்றை எடுத்து வந்தார். உனக்கும் விடையளிக்க முடியாதோ!
தெரியாதோ! குனிந்து நிற்கவும்! ஆசானின் கட்டளைக்கு ஏற்ப கீவரீச்சன் உடனடியாக
குனிந்தார். குனிந்து நின்றவரின் முதுகில் ஏறக்குறைய 10 நிமிட
நேரங்கள் கல்லை வைத்துக்கொண்டு நிற்க வைத்தார்.
மதுவின் போதை குறைந்த போது தான் செய்த
கடினச் செயலை குறித்து ஆசான் அதிகமாக வருந்தினார். ஆனால் தகவலறைந்த தோமாப்பணிக்கர்
மறுநாள் பள்ளிக்கூடத்திற்கு வந்து ஆசானுக்கு எதிராக கலகம் ஏற்படுத்தத் தயாரானார்.
நல்ல உடல்வாகுடன் ஆயுத வித்தைகளை செய்திருந்த தோமாப்பணிக்கரின் முன்னிலையில் ஆசான்
பயத்தினால் நடுங்கியவாறு மன்னிப்பு வேண்டி நின்றார்.
ஜெபத்தின் மீது
நம்பிக்கை மற்றும் குருவானவர்களோடு உள்ள மதிப்பு இவை நமது கதாநாயகனில் சிறு பருவம்
முதலே மிகுந்ததாக காணப்பட்டிருந்தது என்பதனை கீழ்க்காணப்படும் நிகழ்விலிருந்து
நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஒரு முறை காய்ச்சலால் கீவரீச்சன் படுக்கையில்
இருந்தார். பருமலை மார் கிரிகோரியோஸ் ஆயர் பக்கத்து தேவாலயத்தில் தங்கி இருந்தார்.
இவ்விடயத்தை கேட்டறிந்த பாலன் நோய்வாய் படுக்கையில் படுத்தவாறு தனது தந்தையாரோடு
இவ்வாறு கூறினார். “அப்பா என்னை ஆலயத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். பருமலை ஆயர்
எனது தலையில் கைவைத்து ஜெபிக்க வேண்டும். அப்படியானால் எனது நோய் முழுவதும்
சரியாகிவிடும்”. பாலனின் கட்டாயப்படுத்துதலால் தோமாப் பணிக்கர் தனது மகனையும்
தூக்கி ஆலயத்திற்குச் சென்று தனது மகன் கூறியவாறே ஆயர் அவர்களையும் சந்தித்தார்.
ஆயர் அவரது தலையில் கை வைத்து ஜெபிக்கவும் செய்தார். உடனடியாக நோய்
அவரை விட்டு நீங்கியது.
கிராமிய முறை கல்வி
முழுமை அடைந்த உடன் பாலனை ஆங்கில கல்வி கற்க வேண்டிய தேவை இல்லை. அவன் தன்னைப்
போன்றே விவசாயியாக இருக்க வேண்டும் என்பதே தோமாப்பணிக்கரின் கருத்தும்
விருப்பமுமாக இருந்தது. ஆனால் கல்வியில் புத்திசாலியான தாயாரின் கருத்துப்படி
மேற்படிப்புக்காக அனுப்பி மகனை ஒரு குருவானவராக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக தாயார் தனது
கணவரின் சகோதரன் ஸ்கரியா கத்தனாரை சந்தித்து விவரத்தை அறிவிக்கவும், அவர் அதனை
சாத்தியமாக்கிடவும் வழிகள் பல செய்தார். தனது சகோதரனுக்கு இத்தகைய காரியங்களை
சொல்லிக் கொடுத்து அதன் பலனாக தோமாப் பணிக்கர் பாலனை மேற்படிப்பிற்காக அனுப்ப
சம்மதமும் விருப்பமும் தெரிவித்தார்.
பள்ளிக்கூடக்
கல்விக்குப் பின்னர் பாலனை வீட்டிற்கு அருகே உள்ள சி எம் எஸ் திருச்சபை
நிர்வாகத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆங்கில வழி கல்விக் கூடத்தில் சேர்த்தனர். ஒரு சில
மாதங்களுக்குப் பின்னர் பருமலை மார் கிரிகோரியோஸ் ஆயர் அவர்கள் மாவேலிக்கரை
ஆலயத்திற்கு வந்தபோது பாலனைப் பற்றிய செய்திகளை கேட்டு அறிந்தார். பிரிவினை
சபைகளின் பள்ளிக்கூடத்தில் பாலன் கற்க துவங்கி உள்ளார் என அறிந்த ஆயர் ஸ்கரியா
கத்தனாரை அழைத்து பின்வருமாறு கட்டளையிட்டார். “நமது குழந்தைகளை ஒருபோதும் பிரிவினை
திருச்சபை நிர்வாகத்தின் கீழ்
நடத்தப்படும் கல்வி நிலையங்களில் அனுப்பி கற்பிக்க வேண்டாம் அது ஒரு போதும்
சரியாவதில்லை. காரணம் குழந்தைகளின் இளம் இதயத்திலிருந்து திருத்தூதுவ நம்பிக்கையை
இழப்பதற்கும் அவ்வாறு பிரிவினை சபைகளின் நம்பிக்கை அவர்களுடைய இதயத்தில்
வளர்வதற்கும் அது வாய்ப்பாக அமையும். எனவே உடனடியாக அங்கிருந்து சான்றிதழை கேட்டு
வாங்கி அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்து கற்பிக்க வேண்டும்.
ஆயரின் கட்டளைப்படி
மாவேலிக்கரை கோட்டைக்ககம் என்னும் இடத்தில் அமைந்திருந்த அரசு ஆங்கில வழி
பள்ளிக்கூடத்தில் பாலனை சேர்த்தனர். நான்காம் நிலை வரையுள்ள வகுப்புகளை இப்பள்ளிக்
கூட்டத்தில் அவர் கற்றுக் கொண்டார். தினந்தோறும் ஒரு மைல் தூரம் உள்ள
இப்பள்ளிக்கூடத்திற்கு நடந்தே பாலன் சென்று வந்தார். அனைத்து விடயங்களிலும்
திறமையான குணத்தில் நாகரீகமான மற்று மாணவர்களை வியக்கத்தக்க வகையில் இருப்பதனால்
பள்ளிக்கூடத்தின் அனைத்து ஆசிரியர்களும் பாலனுக்கு மிகவும் நெருக்கமானவராக
மாறினர். ஒவ்வொரு வகுப்பிலும் முதல்வனாக வெற்றி பெற்ற கதாநாயகன் ஐந்தாவது ஆண்டு
மிகப் பெரும் வெற்றிக் கோப்பையை வென்றார்.
குழந்தையின்
வருங்கால நிகழ்வைப் பற்றிய சிந்தனைகள் பெற்றோர்களின் மனதில் எண்ண அலைகளாய் வீசிக்
கொண்டிருந்தன. திறமைசாலியான பாலனை வருங்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளராக மாறுவார்
என்ற நம்பிக்கையில் இருந்த ஆசிரியர்கள் பெற்றோர்களோடு உயர்கல்வி கற்பிப்பதற்காக
அவர்களை கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தனர். அன்று உயர்நிலை பள்ளிக்கூடம் கோட்டயம்
பகுதியில் மட்டுமே அமைந்திருந்தது. 12 வயது மட்டுமே பருவமான பாலனை கோட்டயம் எனும்
தொலைதூரத்திற்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்கினர். வாகனப் போக்குவரத்துக்கள்
அக்காலத்தில் இல்லாமல் இருந்த சூழல். மாவேலிக்கரையிலிருந்து கோட்டயத்திற்கு 30
மைல் தூரம் படகு வழிப் போக்குவரத்து மட்டுமே அமைந்திருந்தது. அதுமட்டுமல்ல
கோட்டயத்தில் தங்கி வாழவும் சரியான வசதிகள் இல்லாமல் இருந்தது. இத்தகைய சூழலில்
பெற்றோர்கள் வருந்தி இருந்த சூழலில் எல்லாம் வல்ல இறைவன் அதற்கான வழியை எவ்வாறு
திறந்து வழங்கினார் என்பதை அடுத்த அதிகாரத்தில் காண்போம்.
அதிகாரம் 4
மேற்படிப்பும் முதுகலைப் பட்டமும்
மாவேலிக்கரையில் கோட்டைக்ககம் அரசு
பள்ளிக்கூடத்தில் கல்வி கற்று அனைவரும் வியக்கத்தக்க விதத்தில் நான்காம் நிலையில்
வெற்றி பெற்ற பாலனை மேற்படிப்பிற்காக கோட்டயத்திற்கு அனுப்ப வேண்டிய எண்ணத்தில்
பெற்றோர்கள் ஆலோசனைகள் நடத்திய ஒரு நிகழ்வு நமது கதாநாயகனின் முன்னோக்கிய வாழ்க்கை
நிலையைப் பற்றி சிந்திப்பதற்கான சூழலை உருவாக்கியது. 14 வயது மட்டுமே பருவம் கொண்ட பாலனில் அமைந்திருந்த
தைரியம், கீழ்ப்படிதல், குருக்களோடு உள்ள மதிப்பு மற்றும் பிறர் உதவி என்னும்
குணங்கள் தான் கதாநாயகனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது என ஐயமின்றி
நம்மால் கூற முடியும். “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என இந்நிகழ்வு
எடுத்துக்காட்டுகிறது.
கிறிஸ்து வருடம் 1865 முதல் 1909 வரை உள்ள 44 வருடங்களில் மலங்கரையில் யாக்கோபாயா திருச்சபையின்
ஆட்சி முறையை நிர்வகித்து வந்த புலிக்கோட்டில்
மார் திவன்னாசியோஸ் ஆயர் அவர்கள் ஏதோ ஒரு தேவைக்காக மாவேலிக்கரை புதியகாவு
ஆலயத்திற்கு வந்து தங்கலானார். ஏறக்குறைய மாலை நேரத்திற்குப் பின்னர் இரவு
நேரமாகியிருந்தது. ஆயரை காண்பதற்கும் சந்திப்பதற்கும் பேசுவதற்கும் பங்கு மக்கள்
ஏராளமானவர்கள் அங்கு வந்திருந்தனர். இருள் நிறைந்த அச்சூழலில் பலமான புயல் காற்று
வீசிக்கொண்டிருந்தது. அடை மழை பொழிந்தவாறு காணப்பட்டது. இச்சூழலில் அங்கு திரண்டிருந்தவர்களோடு
ஆயர் இவ்வாறு கேட்கலானார். “இவ்விடத்திலிருந்து வழுவாடி என்னும் இடத்திற்கு எத்தனை
மைல் தொலைவு உண்டு?”. “ஒரு மைல் தூரம் வரலாம்” என ஒருவர் பதிலளித்தார். உடனடியாக
ஆயர் இவ்வாறு கேட்டார். நமது வீட்டினால் திருத்தொண்டரை சந்திக்க வேண்டிய
அத்தியாவசியத் தேவை உள்ளது. யாராவது வழுவாடி வரை சென்று அவரை அழைத்து வர முடியுமா
எனக் கேட்டார். சற்று நேரத்திற்கு அனைவரும் மௌனமாக நின்றிருந்தனர். நல்ல உடல்
நிலையில் இருந்த அதிகமானவர்கள் அங்கு கூடியிருந்தனர். வலுவான இளையோர்கள் பலர்
அங்கு உடன் இருந்தனர். ஆனால் யாருமே அந்த நேரத்தில் வழுவாடி வரை சென்று வருவதற்கான
தைரியம் காட்டவில்லை. எவருமே தங்களுடைய நாவிலிருந்து சம்மதத்திற்கான ஒலியை
வெளியிடவில்லை.
அப்போது யாவரையும்
வியக்க வைத்த முறையில் ஒரு சிறு பாலன் அனைத்து நபர்களையும் அகற்றி நிறுத்தி விட்டு
முன்னோக்கி வந்து ஆயரின் கைகளை முத்தம் செய்தவாறு “நான் செல்லத் தயார்” என
மகிழ்வோடு கூறினான். அப்போது அவர்கள் பின்வரும் உரையாடலை நிகழ்த்தினர்.
ஆயர் : குழந்தை யார் ?
பாலன் : நான் பணிக்கர் வீட்டில்
தோமாப்பணிக்கரின் மகன் ஆவேன்.
ஆயர்: ஆஹா நமது ஸ்கரியாக் கத்தனாரின்
தம்பியின் மகன்தானே. நன்று. உனது பெயர் என்ன?
பாலன் : பி.டி. ஜார்ஜ்
ஆயர் : நீ எந்த வகுப்பில்
கற்கின்றாய் ?
பாலன்: நான்காம் நிலையை வெற்றி
பெற்று விட்டேன்.
ஆயர் : மிகவும் நன்று. நீ
திறமைசாலியே ஆவாய். விளக்கு ஏந்தியவாறு வீட்டினால் திருத்தொண்டரை அழைத்து வர
உன்னால் முடியுமா?
பாலன் : நான் தயார் ?
ஆயரின் கட்டளையைக் கேட்டவுடன் ஒரு
குடையும் விளக்கும் பிடித்தவாறு அக்கூரிருளில் ஒரு மைல் தூரமுள்ள வழுவாடி என்னும்
இடத்திற்கு சென்று ஆயர் கூறிய வீட்டினால் திருத்தொண்டரை அழைத்து வந்தார்.
இந்நிகழ்வால்
மனதிருப்தி அடைந்த ஆயர் ஜார்ஜை தனிப்பட்ட விதத்தில் ஆசீர்வதித்தார். திறமைசாலியும்
தைரியமுள்ளவருமான பாலனை திருச்சபையின் திருப்பணிகளுக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என
அன்றே தீர்மானித்து விட்டார். மறுநாள் ஸ்கரியா கத்தனாரையும் தோமாப் பணிக்கரையும்
குருக்கள் தங்கும் இல்லத்தில் வரவழைத்து ஜார்ஜை திருச்சபையின் திருப்பணிகளுக்காக
அனுப்ப வேண்டும் எனவும் கோட்டயத்திற்கு அழைத்துச் சென்று நாங்கள் அவனை கற்க
வைக்கலாம் எனவும் கூறினார். இருவரும் மகிழ்வால் சம்மதம் தெரிவித்தனர்.
அவ்வாறு உயர் கல்வியை
துவங்க ஸ்கரியா கத்தனார் பாலனை கோட்டயத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு
புலிக்கோட்டில் மார் திவன்னாசியோஸ் ஆயர்
அவர்களிடம் பாலனை சமர்ப்பித்தார். ஜார்ஜ் பழைய குருத்துவ பயிற்சியகத்தில்
தங்கிடவும் அங்கிருந்து இரண்டு மைல் தூரம் உள்ள எம்.டி செமினாரி
உயர்நிலைப்பள்ளியில் கற்கவும் எல்லாவிதமான சூழல்களையும் ஆயர் அவர்கள் உருவாக்கி
வழங்கினார். அவ்வாறு 1897 இல் கோட்டயம் உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாவது நிலையில்
சேர்ந்து தனது கல்வியை துவங்கினார்.
புலிக்கோட்டில் மார் திவன்னாசியோஸ் ஆயர் அவர்களின்
ஆலோசனைக்கேற்ப பிடி ஜார்ஜ் என்ற பெயரை மாற்றம் செய்து கிவர்கீஸ் என்ற
திருமுழுக்குப் பெயரை ஏற்றுக் கொள்ளவும் பின்னர் கிவர்கீஸ் என்ற பெயராலேயே அவர்
அழைக்கப்படவும் செய்தார். பழைய செமினாரியில் ஹாஸ்டலில் தங்கியிருந்து தினமும்
இரண்டு மைல் தூரம் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கூடத்திற்கு சென்று பாலன் படித்து
வந்தார்.
அன்றைய எம்டி செமினாரி
உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக திரு கே சி மாமன் மாப்பிள்ளை பி ஏ
என்பவர்கள் பணியாற்றி வந்தார். அரசியல், சமூக, கலை மற்றும் பொருளாதார முறைகளில்
கேரளா கிறிஸ்தவர்களுக்கான முன்னேற்றம் பற்றிய பரப்புரைகள் பலவற்றை நடத்திக்கொண்டிருந்த
ஒரு முக்கிய செயல்வீரர்தான் ஸ்ரீமான் திரு மாமன் மாப்பிள்ளை என்பவர். எம்டி
செமினேரி உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் நிலையில் கற்க ஆரம்பித்த நமது கதாநாயகன்
கோட்டயம் சென்றடைந்த முதல் நாளன்று இருவரும் நெருங்கி பழகத் துவங்கினர். ஒரு
குருவும் சீடனும் என்ற நிலையில் துவங்கிய இந்த உறவு மரணம் வரையிலும் நீண்டு
நின்றது என அவர்கள் இருவருடைய வாழ்க்கை வரலாறுகளும் தெரிவிக்கின்றன.
திருத்தொண்டர், குருவானவர், முதல்வர், ஆசிரமத் தலைவர் மற்றும் ஆயர் என்ற
பொறுப்புகளில் கதாநாயகன் அலங்கரித்த போதெல்லாம் இரண்டு நபர்களும் ஒருவருக்கொருவர்
ஒன்றிப்போடும் ஒத்துழைப்போடும் நம்பிக்கையோடும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
கேரளாவின்
அகத்தோலிக்க சுறியானி சமுதாயத்தின் எல்லா விதமான வளர்ச்சிக்கும் பல நாட்கள்
அவர்கள் ஒன்றாக ஆலோசனைகள் நடத்தவும் கட்டுரைகள் எழுதவும் அதற்கான திட்டங்கள்
வகுக்கவும் விடயங்களை செயல்படுத்தவும் செய்திருக்கிறார்கள். ஆனால் கதாநாயகனின்
கத்தோலிக்க மறுஒன்றிப்போடு அவர்கள் இருவருடைய கருத்துக்களும் செயல் திட்டங்களும்
இரு வழிகளில் இருந்தபோதும் ஒருவருக்கொருவர் இருந்த அன்பு உறவு அணு அளவிலும்
மாறவில்லை.
மரணத்தின் தூதன்
அழைப்பு விடுத்து நோய்வாய்ப் படுக்கையில் இருந்த பேராயரை இவ்வுலகத்தில் வைத்து
ஒருமுறையாவது காண்பதற்குரிய விருப்பத்தால் வயது முதிர்ந்த திரு. மாம்மன்
மாப்பிள்ளை அவர்கள் சோர்வையும் பொருட்படுத்தாது கோட்டயத்திலிருந்து
திருவனந்தபுரத்திற்கு நெடுந்தூர பயணம் மேற்கொண்டு வந்ததும் படுக்கையில் இருந்த
ஆயர் அவர்களை சந்தித்ததும் கடந்த கால நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக எண்ணி இருவரும்
அழுது நினைவு கூர்ந்ததும் அன்பு உறவின் வலிமை மிகுந்த நிலையை எடுத்துக்காட்டுகிறது.
பேராயரும் திரு. மாமன் மாப்பிள்ளையும் என்ற அதிகாரத்தில் இதைப் பற்றிய கூடுதல்
விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தலைமை ஆசிரியரான
திரு மாமன் மாப்பிள்ளை அவர்களுடைய அன்புக்கு ஏற்புடைய சீடர்களுள் முக்கியமான
ஒருவராக பீ டீ கீவர்கீஸ் செயல்பட்டிருந்தார். ஏனென்றால் குணத்திலும் கல்வியிலும்
முதன்மை இடத்தை கி வர்கீஸ் பெற்றிருந்தார். பாடங்களை அன்றைய தினமே கற்பதிலும்
அசாதாரணமான திறமையை நமது கதாநாயகன் கொண்டிருந்தார். தங்கியிருந்த விடுதியில் அவரோடு உடன் பயின்ற மாணவர்கள்
தூங்கச் சென்ற பின்னரும் கிவர்கீஸ் தனியாக கற்பதில் நிலைத்திருந்தார். தூக்க
மயக்கத்தின் தாக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக தனது புத்தகத்தை கையில் ஏந்தி
பெஞ்சின் மேல் ஏறி நின்று தொங்கவிடப்பட்டிருந்த விளக்கின் ஒளியில் வாசித்துக்
கொண்டிருப்பது அவரது வழக்கமாக இருந்தது. இதனால் அவரால் அனைத்து பாடங்களுக்கும்
முதன்மை இடத்தை பெறுவதற்கும் அதிகமான மதிப்பெண்களை வாங்குவதற்கும் நமது
கதாநாயகனால் இயன்றது.
சொந்தமான
வாதங்களால் எதிரிகளை தோற்கடிக்கும் அசாதாரணமான திறமையை மாணவர் பருவம் முதலே அவர்
கொண்டிருந்தார். இதனை நிரூபிக்கும் ஒரு நிகழ்வு எம் டி செமினாரியில் கற்றுக்
கொண்டிருந்த போது நடந்தது. நமது கதாநாயகனோடு 25 மாணவர்கள் விடுதியில் தங்கி
இருந்தனர். ஒவ்வொரு நாளும் மாலையில் ஆற்றங்கரை ஓரத்தில் குளிப்பதற்கு வரிசையாக
இவர்கள் சென்று வந்தனர். செல்லும் வழியோரத்தில் ஒரு சிறிய பாறை ஒன்று இருந்தது.
ஒரு நாள் தனது உடன் பயிலும் மாணவர்களோடு செல்லும்போது பாறையின் பக்கத்தில் வந்த
வேளையில் அதன் மீது ஒரு சிலுவை வரைந்த பின்னர் கதாநாயகன் அவர்களோடு இவ்வாறு
கூறினார்.
இவ்வழியே
குளிக்கும் இடத்திற்கு செல்பவர்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம் உண்டு. அதாவது இந்த
பாறையின் முன்னிலையில் அனைவரும் தலைகுனிந்து அதன் மீது முத்தம் செய்ய வேண்டும்.
அப்படி என்றால் குளிக்கும்போது எந்தவிதமான விபத்தும் ஏற்படாமல் நம்மால் திரும்பி
வந்துவிட முடியும். கி வர்க்கீசின் இத்தகைய கருத்தை கேட்ட மற்று மாணவர்கள்
சிரிக்கவும் ஏளனப்படுத்தவும் செய்தனர். நமது கதாநாயகன் பின் வாங்கவில்லை.
குளிக்கும்போதும் குளித்த பின்னரும் இதைப் பற்றிய காரியங்களைப் பற்றி விவாதித்துக்
கொண்டே இருந்தார். தனது கருத்துக்கு ஏற்ற வாதங்களை அவர் வெளிப்படுத்திக் கொண்டே
இருந்தார். கடைசியில் அவரோடு வந்த மாணவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டனர்.
அவ்வாறு அவர்கள் பாறையின் முன்னிலையில் குனிந்து அதன் மேல் முத்தமிட்டனர்.
திரும்பி வந்த போதும் பாறையின் முன்னிலையில் தலை குனிந்து அதனை முத்தமிட்டனர். அவ்வாறு
பாலன் திருப்தியடைவும் செய்தார். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பாறையான திருத்தூதர் பேதுருவை தலை வணங்கவும் பல
ஆயிரக்கணக்கான மக்களை தலைவணங்கச் செய்திருக்கும் பாலன் இவன் தானோ! என்று யார்
நினைத்தது? யாராவது
நினைத்துப் பார்த்தார்களா?
கல்வியறிவு போன்று
அவரது நன்னடத்தையிலும் பாலன் மற்று மாணவர்களை வியக்க வைத்திருந்தார். தினமும்
ஜெபங்களை பக்தியோடு வழிநடத்துதல் ஞாயிற்றுக்கிழமை சிற்றாலயத்தில் திருப்பலிக்கு
உதவி புரிதல், திருப்பலி நடைபெறும் இடமும் அதன் பொருள்களும் தூய்மையாக
வைத்திருத்தல் இவற்றையெல்லாம் அவர் மிகவும் பொறுப்புணர்வோடு செய்திருந்தார்.
இவ்வாறு உயர்நிலைப் பள்ளியின் முதல்வராக இருந்த வட்டச்சேரில் ஆசிரியர் பாலனிடம் தனிப்பட்ட விதத்தில்அதிக
அன்பு காட்டி வந்தார். நமது கதாநாயகனின் வீரத்தையும் திறமையும் பற்றி
புலிக்கோட்டில் ஆயர் அவர்கள் வட்டச்சேரில் ஆசிரியரிடம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதனால்தான் வட்டச்சேரில் ஆசிரியர் அவர்கள். விடுதியில் உள்ள சிற்றாலயத்தை
கவனிக்கும் (சாக்கிறிஸ்டியன்) பொறுப்பை வழங்கி சிறப்பித்திருந்தார். கீவர்கீஸ்
இப்பணிகளை மிகவும் விருப்பத்தோடு செய்திருந்தார்.
மெட்ரிகுலேஷன்
கல்வியில் மிகப்பெரிய வெற்றியை நமது கதாநாயகன் பெற்றுக் கொண்டார். திருச்சபையின்
திருப்பணிகளுக்காக கீவர்கீசை அழைக்க வேண்டும் என தீர்மானித்திருந்த புலிக்கோட்டில்
ஆயர் அதனை செயல்படுத்திட முன் வந்தார். உடனடியாக பணிக்கர் வீட்டில் கீவர்கீஸ்
அவர்களுக்கு திருத்தொண்டர் பட்டம் வழங்கிட தடைகள் ஏதேனும் உண்டா என வினவிக்கொண்டு
மாவேலிக்கரை பங்கிற்கும் தோமாப் பணிக்கருக்கும், ஸ்கரியா கத்தனாருக்கும் வட்டச்சேரில்
மல்பானோடு ஆலோசித்த பின்னர் கடிதங்கள் அனுப்பினார்.
ஆயரின் இந்த
தீர்மானத்திற்கு நாங்கள் முழு சம்மதம் தெரிவிக்கிறோம் என தோமாப் பணிக்கரும்,
ஸ்கரியா கத்தனாரும் பதில் கடிதம் எழுதினர். மாவேலிக்கரை யாக்கோபாயா பங்கில்
பங்குத் தந்தையின் வழிநடத்துதலில் பங்கின் செயற்குழு கூட்டம் கூட்ட்டப்பட்டது. அக்கூட்டத்தில்
தோமா பணிக்கர் மற்றும் அன்னம்மா இவர்களுடைய மகன் கீவர்கிஸ் அவர்களுக்கு
திருத்தொண்டர் பட்டம் வழங்கிட எந்த ஒரு தடையும் எங்களுக்கு இல்லை என சம்மதித்தனர்.
பங்கின் கடிதத்தை ஆயருக்கு அனுப்பவும் செய்தனர்.
தனக்கு
திருத்தொண்டர்ப் பட்டம் வழங்குவதாக அறிந்த கதாநாயகன் இறைவிருப்பம் நிறைவேறிட தன்னை
சமர்ப்பித்து இறைவேண்டலில் ஈடுபட்டார். அவ்வாறாக 1074 தனு 26 ஆம் நாளில்
புத்தன்காவு ஆலயத்தில் பல குருவானவர்கள் உறவினர்கள் புடைசூழ நமது கதாநாயகனுக்கு
திருத்தொண்டர் பட்டம் வழங்கப்பட்டது. வாழ்நாள் முழுவதும் இறைத்தொண்டிற்காக
குருத்துவ வாழ்வில் நுழைய முடிந்ததை மிகப்பெரிய பேறாகவே நமது கதாநாயகன்
நம்பியிருந்தார்.
புலிக்கோட்டில் ஆயரின் அறிவுரையால் கோட்டயம் சி எம் எஸ் கல்லூரியில் இணைந்து
திருத்தொண்டர் உயர்கல்வி கற்கத் துவங்கினார். திருத்தொண்டர் தங்குவதற்கு
வட்டச்சேரில் ஆசிரியர் தங்கியிருந்த அறைக்கு அருகாமையில் இருந்த அறையை
திருத்தொண்டருக்கு வழங்கினார்கள். அந்த அறையில் தங்கி படித்துக் கொண்டிருக்கின்ற
போது நிகழ்ந்த ஒரு நிகழ்வு நமது கதாநாயகனின் ஒருமுகப்படுத்துதல் (concentration) தன்மையை கொண்டிருந்ததை சாட்சியப்படுத்துகிறது.
ஒரு நாள் இரவு மணி
பத்து தாண்டியது. திருத்தொண்டர் தனது அறையில் அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக்
கொண்டிருந்தார். அதற்கு அடுத்த அறையிலிருந்து வட்டச்சேரில் ஆசிரியர்
திருத்தொண்டரிடம் ஏதோ கூறுவதற்காக செம்மாசா என அழைத்தார். அவர் கேட்கவில்லை.
மீண்டும் மீண்டும் உரத்த குரலில் அழைத்தார். எனினும் அவர் கேட்டதாக இல்லை.
விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததால் அவர் தூங்கவில்லை என ஆசிரியர்
அறிந்திருந்தார். உடனடியாக மல்பான் வராந்தாவுக்கு வந்து மீண்டும் அவரை உரத்த
குரலில் அழைத்தார். அவர் மீண்டும் கேட்டதாக இல்லை. மீண்டும் அவரது அறைக்கு முன்
பகுதியில் வந்து நின்று அவரை அழைத்தார். எந்தவித பதிலும் இல்லை. வாசிப்பில் தனிக்
கவனம் செலுத்திக் கொண்டிருந்த அவரைக் கண்டு மல்பான் தனது அறைக்கு திரும்பிச்
சென்றார்.
மறுநாள் காலையில்
திருத்தொண்டரை கண்டபோது மல்பான் இவ்வாறு கூறினார். “இந்த அளவுக்கு மிகுந்த
கவனத்தோடு ஒருமுகப்படுத்துதலில் கற்கின்ற ஒருவரை நான் எனது வாழ்வில் கண்டதில்லை”.
இதைப் போன்ற ஒருமுகப்படுத்துதல் நிலையில் அனுபவங்கள் பல நிகழ்ந்துள்ளன.
பட்டம் ஆயரகத்தில்
பேராயராக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் வேறொரு சம்பவம் நிகழ்ந்தது.
ஆயரகத்தின் இரண்டு நிலை கட்டிடத்தின் தரைத்தளத்தில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள
அறையில் நமது கதாநாயகன் அமர்ந்துள்ளார். மாலை நேரத்தில் அடைமழை பொழிய ஆரம்பித்தது.
பலத்த காற்று வீசிக் கொண்டிருந்தது. ஆயரகத்தின் மேல் பகுதியில் கூரையில்
அமைக்கப்பட்டிருந்த ஓடுகள் பல கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து விழத் தொடங்கின.
மழைநீர் கட்டிடத்தின் உட்பகுதிக்கு ஒழுகிக் கொண்டிருந்தது. ஆயரகப் பணியாளர்கள்
கலக்கமடைந்தனர். கட்டிடம் இடிந்து விழ வாய்ப்பு உள்ளதே என பயந்து அலறினர்.
பேராயரோடு விபரத்தை அறிவிக்க ஒரு சிலர் அவரது அறையை நோக்கி ஓடிச் சென்றனர்.
அற்புதம்! வெளியே நடந்த எந்த ஒரு நிகழ்வையும் பேராயர் அவர்கள் அறியவில்லை.
இருக்கையில் அமர்ந்து கொண்டு முன் பகுதியில் திறந்து வைத்திருக்கும் எபிரேய மொழி பயிற்சி
புத்தகத்தை அவர் ஒருமுகத்தன்மையோடு கவனமாக வாசித்துப் படித்துக் கொண்டிருந்தார்.
நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக வந்தவர்கள் கூறும் போது தான் அவரும் தெரிய வருகிறார்.
இவ்வாறு நமது கதாநாயகனின் ஒருமுகத்தன்மையை எடுத்துக்காட்டுவதற்கான நிகழ்வுகள்
அவரது வாழ்க்கை வரலாற்றில் நிகழ்ந்ததுண்டு.
புத்தகங்களும்
செய்தித்தாள்களும் வாசித்துக் கொண்டிருக்கின்ற போதும் பல காரியங்களைப் பற்றி
சிந்தித்து படுக்கையில் கண் திறந்து படுக்கும் போதும் பலரும் அவருக்கு அருகே
நிற்கின்ற போது அவர்கள் வந்துள்ளனர் என அடையாளமாக இருமல் செய்து கொண்டு பல தடவை
அவரை அறிவித்த தருணங்கள் பல. இருப்பினும் அவர் இவர்கள் வந்ததை உணராமல் இருந்ததனால்
அவரை தொல்லைப்படுத்த வேண்டாம் என்று பல சூழல்களிலும் அவர்கள் வெளியேறியுள்ளனர்.
மகான்மார்கள் பெற்றிருந்த மிகப்பெரிய குணன் தான் ஒருமுகப்படுத்தல் நிலை.
கோட்டையம் சி எம்
எஸ் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் கற்று எஃப் ஏ தேர்வில் வெற்றி பெற்ற திருத்தொண்டரை
சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இளங்கலை படிப்பிற்காக வட்டச்சேரில் ஆசிரியர்
அவர்களின் பரிந்துரையோடு புலிக்கோட்டு ஆயர் தீர்மானித்தார். சென்னையில் நானூறு
ஏக்கர் நிலத்தில் பல இரண்டு நிலை கட்டிடங்களோடும் பொருட்களோடும் ஃப்ரீ சர்ச் ஆஃப்
ஸ்கோர்ட்லேண்ட் என்ற பிரிவினை சபையினரின் தலைவர்களால் உருவாக்கப்பட்டது தான்
கிறிஸ்தவ கல்லூரி. மலையாளத்தவர்களான மாணவர்கள் பலர் இக்கல்லூரிக்குச் சென்று
பட்டங்கள் சம்பாதிப்பது வழக்கமாக இருந்தது. நமது கதாநாயகன் அங்கே கல்வியை
ஆரம்பிக்கத் துவங்கும் முன்னே சுறியானிக்காரர்களான ஈ ஜே ஜான், எம்.எ சாக்கோ, கே சி
மாமன் மாப்பிள்ளை என்பவர்கள் இக்கல்லூரியிலிருந்து பட்டங்களை ஏற்கனவே
வென்றுள்ளனர்.
கல்லுப்பாறை
என்னும் இடத்தைச் சார்ந்த பழமை வாய்ந்த மாரேட்டு குடும்பத்தின் ஒரு உறுப்பினரான மீ
ஏ பீலிப்போஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றுக்கொள்ள கற்றுக் கொண்டிருந்தார்.
புலிக்கோட்டு ஆயரின் அறிவுரையின்படி அவரது செயலராக இருந்த இடவழிக்கல் மீ இ எம்
பிலிப், மீ ஏ பிலிப்போஸ் அவர்களுக்கு சென்னைக்கு கடிதம் அனுப்பினார். பி.டி
கிவர்கீஸ் திருத்தொண்டர் அவர்கள் எப் ஏ தேர்வு வெற்றி பெற்றதாகவும் இளங்கலை பட்டம்
பெற்றுக்கொள்ள கிறிஸ்தவக் கல்லூரிக்கு வருவதாகவும் கல்லூரியில் நுழையவும் தங்கவும்
திருத்தொண்டருக்கு தேவையான வசதிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என கடிதத்தில்
எழுதப்பட்டிருந்தது. இதற்கு விருப்பம் கொண்ட மீ ஏ பிலிப்போஸ் ஏற்கனவே
கூறப்பட்டிருந்த நாளில் இரயில் நிலையத்திற்குச் சென்று திருத்தொண்டர் அவர்களை
வரவேற்கவும் கல்லூரியில் கற்பதற்கான இடத்தை வாங்கிக் கொடுக்கவும் செய்தார். “Society
for the propagation of the gospel” என்ற
அருட்தந்தையர்களுக்குச் சொந்தமான சல்லிவன்ஸ் கார்டன் என்ற விடுதியில் தங்கி
கற்கவும் எல்லா உதவிகளையும் அவர் செய்திருந்தார்.
இளங்கலை
பட்டத்திற்கு முக்கியப் பாடமாக இந்திய வரலாறும் கணிதவியலையும் தேர்ந்தெடுத்தார்.
பல மாதங்கள் சல்லிவன்ஸ் கார்டனில் தங்கியிருந்து திருத்தொண்டர் தனது படிப்பை
நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் ஒவ்வொரு நாளும் நான்கு மைல் தூரம் சென்று கல்வி
கற்பது சற்று கடினமாக இருந்ததனால் கல்லூரிக்கு அருகிலேயே ஒய் எம் சி ஏ விடுதிக்கு
மாற்றப்பட்டார்.
அன்று
இக்கல்லூரியின் முதல்வராக முனைவர் மில்லன் என்பவர் பணியாற்றி இருந்தார்.
அவருக்குப் பின்னர் முனைவர் ஸ்கின்னர் முதல்வராக பதவி வகித்தார். கல்வியிலும்
திறமை வாய்ந்த நடத்தையில் எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த கிவர்கிஸ்
திருத்தொண்டர் அவர்களை முதல்வர்களும் பேராசிரியர்களும் நன்மதிப்பும் அன்பும்
காட்டி இருந்தனர் என்பதை அறிந்து வியக்க வேண்டிய தேவை இல்லை அன்றோ! கல்லூரியில்
கற்றுக் கொண்டிருந்த சுறியானிக்காரர்களுக்கெல்லாம் தலைவராக நமது கதாநாயகன் அவர்களை
வழிநடத்தினார். கேரள கிறிஸ்தவ சமுதாயத்தின் மிக முக்கிய நபர்களாக பெயரும் புகழோடும் ஒளி வீசிய ஜார்ஜ்
ஜோசப், கே கே சாக்கோ, கே கே தாமஸ் சீரன் வர்கீஸ், கே சி மாத்யூ, கே வி சாக்கோ
மற்றும் சி ஜி வர்கீஸ் இடிச்சாண்டி என்பவர்கள் திருத்தொண்டர் அவர்களோடு உடன்
பயின்றவர்கள் ஆவர்.
சென்னை கிறிஸ்தவக்
கல்லூரியில் கற்ற மாணவர்கள் இங்கிலாந்து வரலாறு, அரசியலமைப்பின் வளர்ச்சி, அரசியல்
விடுதலைக்காக ஆங்கில நாட்டவர்கள் செய்த போராட்டங்கள் அவர்களுடைய வெற்றி போன்ற
விடயங்களைப் பற்றிக் கற்றிருந்தனர். கிறிஸ்தவ திருச்சபைகளின் ஆட்சி அமைப்பிலும்
மக்களாட்சி முறை தான் எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என்ற விதத்தில் அவர்கள்
கற்பித்து வந்தனர். பிரிவினை திருச்சபைகளில் அவற்றை செயல்படுத்தியிருந்தனர்.
இருந்தாலும் திருத்தூதுவ திருச்சபைகளில் ஒருபோதும் அவை ஏற்றுக் கொள்ளப்பட்ட
வரலாற்று உண்மையாக இல்லை. மட்டுமல்ல திருச்சபையில் ஆட்சி முறையை அதன்
மேன்மைக்கேற்ற விதத்தில் கடைப்பிடிக்க மக்களாட்சி முறை கிறிஸ்தவ திருச்சபையில்
ஒருபோதும் ஏற்கப்பட வேண்டியது அல்ல. தங்களது தாய்த் திருச்சபையிலும் மக்களாட்சி
முறை ஏற்படுத்த வேண்டும், குருத்துவ ஆட்சி முறையிலிருந்து விடுதலை பெற வேண்டும்
என்பன போன்ற சிந்தனைகளை இந்த கல்லூரி மாணவர்களிடையே இவர்கள் வளர்த்திருந்தனர்.
பிரிவினைச்
சபையினரின் நிறுவனங்களில் நமது மாணவர்களை அனுப்பி கற்க வைக்க வேண்டாம் என
கத்தோலிக்க ஆட்சியாளர்கள் துவக்க காலங்களில் அறிவித்தது இதுவே இரகசியமான காரணம் என
பல அனுபவங்கள் தெரிவிக்கின்றன. அருட்பொழிவு என்பதன் மேன்மையையும் அதிகாரத்தைப்
பற்றிய மதிப்பு குறைக்கவும், குருத்துவ அதிகாரிகளுக்கு எதிராக செயல்படவும் பல்வேறு
சிந்தனைகளையும் படிப்பினைகளையும் அறிவுரைகளையும் பிரிவினை சபை சார்ந்த கல்வி
நிலையங்களில் வழங்கப்பட்டது. இத்தகைய சிந்தனைகளால் சுறியானிக்காரர்களாகிய
மலையாளத்தவர்கள் வழி தவறிச் செல்லாமல் இருக்க நமது திருத்தண்டார் சரியான
வழிகாட்டுதலை அவர்களுக்கு வழங்கி வந்தார். பிரிவினை சபையினரின் தேவாலயத்திலும்
கூட்டங்களிலும் திருத்தொண்டர் ஆர்வம் காட்டவில்லை. அவ்வாறு யாக்கோபாயா திருச்சபை
உறுப்பினர்களான உடன் பயின்ற மாணவர்களை நம்பிக்கையிலும் பக்தியிலும் வளர்த்துவதற்கு
அவர்களுக்குத் தேவையான மறையுரைகளும் கருத்து பரிமாற்றங்களும் திருத்தொண்டர் அன்றே
வழங்கியிருந்தார்.
இரு ஆண்டுகள் ஒய்
எம் சி ஏ யில் தங்கியிருந்து திருத்தொண்டர் இளங்கலை பட்டத்தை வென்றார். அதன்
பின்னர் புலிக்கோட்டில் ஆயரின் தனிப்பட்ட அறிவுரைக்கு இணங்கி முதுகலைப்
பட்டத்தையும் அவர் பெற்றுக் கொள்ள கற்கத் துவங்கினார். ஒய் எம் சி ஏ விடுதியில்
தங்குவதற்கு உடல்நிலை சரியாக ஒத்துப் போகாத காரணத்தினால் புதுப்பேட்டை என்னும்
இடத்தில் வாடகை கட்டிடம் அன்றில் மீ ஏ பிலிப்போஸ் அவர்களோடு இணைந்து தங்கி
இருந்தார்.
முதுகலை பட்டம்
பெற்றுக்கொள்ள சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வரங்கம் எழுதத் தேவையான புத்தகங்கள் கல்லூரி
நூலகத்தில் இல்லாமல் இருந்ததனால் புதுப்பேட்டையில் அமைந்திருந்த கன்னிமரா
நூலகத்திலிருந்து புத்தகங்களை வாங்கி கற்றுக் கொண்டிருந்தார். “Were the Syrian Christians nestorians?” சிறியன் கிறிஸ்தவர்கள் நெஸ்தோரியன்களா? என்ற முக்கிய
கருத்தை மையமாகக் கொண்டு ஆய்வரங்கத்தை அவர் தயாராக்கினார். புதுப்பேட்டையில்
தங்கியிருந்து கன்னிமரா பொது நூலகத்திலிருந்து பழங்கால வரலாற்று நூல்களை வாசித்து
ஏறக்குறைய ஒரு ஆண்டு காலம் ஆய்வரங்கத் தொகுப்பை திருத்தொண்டர் பூரணமாக்கினார்.
பழங்கால சான்றுகளை பரிசோதித்தும் வரலாற்று நூல்களை வாசித்துக் கற்றும் மிகவும்
கவனத்தோடு இந்த ஆய்வரங்கத் தொகுப்பை அவர் தயாராக்கினார்.
ஆங்கில மொழியில்
எழுதி அச்சிட்ட ஆய்வரங்கத் தொகுப்பானது மலையாளத்தவர்கள் வாசிக்கும் பொருட்டு சீ பி
தரகன் என்பவரால் மொழிபெயர்ப்பு செய்து சுறியானித் திருச்சபையின் எழுத்தாளர்
சங்கத்தின் மூலம் 1907 இல் வெளியிட்டனர். முனைவர் ஹவ், நீல், கோஸ்மாஸ், பாட்சர்,
அசமானி, வைட் ஹவுஸ், ராய், பார் எபிராயா என்பவர்களது வரலாற்று நூல்களை கதாநாயகன்
மிகவும் கவனமாக வாசித்து அறிந்த பின்னர் தான் இத்தொகுப்பை வெளியிட்டார். பதினாறாம்
நூற்றாண்டுக்கு முன்பு கேரளாவில் சுறியானிக் கிறிஸ்தவர்கள் நெஸ்டோரியன்
திருச்சபையின் உறுப்பினர்களாக இருந்தனர் என்ற சில வரலாற்று நூலாசிரியர்களின்
வாதத்தை எதிர்த்த ஆய்வுத்தொகுப்பாகத் தான் கதாநாயகன் இத்தொகுப்பை
வெளியிட்டுள்ளார்.
50 ஆண்டுகளுக்கு
முன்பு திருத்தொண்டராக வாழ்ந்த காலத்தில் எழுதி வெளியிட்ட இத்தொகுப்பின்
முன்னுரையில் உள்ள சில பகுதிகள் பின்வருமாறு சேர்த்துக் கொள்கிறேன்.
கேரளா சுறியானி
கிறிஸ்தவ திருச்சபையின் பழங்கால வரலாற்றை அறிந்திடத் தேவையான வரலாற்றுத் தெளிவுகள்
எதுவும் இல்லை. எனவே சுறியானி திருச்சபை வரலாற்று உருவாக்கத்தில் முயன்ற பல
ஐரோப்பியர்களும் குறிப்பிட்ட திருச்சபையின் பழங்கால நிலையைப் பற்றிய பல
கருத்துக்களும் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இத்தகைய ஐரோப்பிய
நூலாசிரியர்களின் நூல்களில் காணப்படும் கருத்துக்கள் பலவும் வரலாற்று தெளிவுகளில்
கூறப்பட்டவையா? இல்லை. நிறுவப்பட்டவையா? எனவும் எந்த அளவுக்கு அஃது நிலைத்தன்மை
கொண்டது எனவும் விவாதத்துக்குட்பட்டு ஆய்வு செய்ய வேண்டிய கல்வி அறிவு படைத்த
சுறியானிக்காரர்கள் இருந்தால் நன்றாக அமைந்திருக்கும் என பல முறைகளிலும்
எண்ணியிருக்கிறேன்.
திருத்தூதர் தோமா
கேரளாவிற்கு வரவில்லை எனவும் கேரள திருச்சபை ஆறாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது
எனவும் ஐரோப்பிய வரலாற்று நூலாசிரியர்களில் பலர் குறிப்பிட்டுள்ளனர். இத்தகவல்
எந்த அளவுக்கு உண்மைற்றது என்ற கருத்தை திரு பிலிபோஸ் எம் ஏ பி எல் அவர்கள் எழுதிய
உரையில் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
இவ்வரலாற்று
ஆசிரியர்களின் இன்னொரு வாதம், சுறியானித் திருச்சபை பழங்காலத்திலிருந்து 16ஆம்
நூற்றாண்டு வரையிலும் நெஸ்டோரிய நம்பிக்கையை ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது ஆகும்.
இஃது பலவிதமான வரலாற்றுத் தெளிவுகளிலிருந்து கிடைக்கின்ற அனுமானம் என்றும் அதைப்
பற்றிய ஆய்வு நடத்துவதுமே இத்தொகுப்பின் குறிக்கோள் ஆகும்.
“சுறியானிக்காரர்கள்
நெஸ்தோறியன்களா?” என்ற கருத்தை மையமாகக் கொண்டு இத்தொகுப்பை உருவாக்க கே சி மாமன்
மாப்பிள்ளை அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினார். இ எம் பிலிப்போஸ் அவர்கள்
ஆங்கிலத்தில் எழுதவும் தற்போது கையெழுத்து நிலையில் இருக்கின்ற சுறியானி திருச்சபை
வரலாறு என்ற நூலும் நான் வாசிக்கத் தரவும் தேவைக்கேற்ற வரலாற்றுத் தெளிவுகளை
கண்டுபிடிக்கவும் உதவி செய்யவும் செய்த விவரத்தை நான் நன்றியோடு
வெளிப்படுத்துகின்றேன்.
21 10 1907
பி. டி கிவர்கீஸ் செம்மாச்சன்
பருமலை செமினாரி
...................................................................................................
ஆங்கிலத்தில்
வெளியிடப்பட்டிருந்த மூல நூலைப் பற்றி யாக்கோபாயா திருச்சபையின் “சுறியானி
நற்செய்தியாளர்” என்ற மாத இதழில் சேர்க்கப்பட்ட கருத்தின் ஒரு பகுதியை
இணைக்கின்றேன்.
நூலாசிரியரான
திருத்தொண்டரைப் பற்றி எந்த அளவுக்கு மதிப்பு சமுதாயத்தினர் அக்காலத்தில்
கொண்டிருந்தனர் என்பதை இக்கருத்திலிருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
“சுறியானிக்காரர்கள் நெஸ்தோறியன்களா?”
அருட்திரு
பி.டி கீவர்கீஸ் செம்மாச்சன் எம் ஏ அவர்கள் எழுதிய ஆங்கில உரை
போர்த்துக்கீஸ்காரர்கள்
இந்தியாவில் நுழைந்த பதினாறாம் நூற்றாண்டு வரையிலும் மலங்கரை சுறியானித்
திருச்சபையினர் நெஸ்தோரியன் திருச்சபையினராக இருந்தனர் என்று பல வரலாற்று
நூலாசிரியர்கள் வெளிப்படுத்தி இருந்ததனை உண்மையற்ற நிலையாக திருத்தொண்டர் அவர்கள்
தன் நூலில் தெளிவாக எழுதியுள்ளார். நெஸ்டோரியர்களும், உரோமையர்களும்
யாக்கோபாயாக்காரர்களும் இடையே உள்ள நம்பிக்கை வேறுபாட்டை வெளிப்படுத்துகின்ற முதல்
நிலை மட்டுமே இது.
சுறியானித்
திருச்சபை நெஸ்தோரியன் திருச்சபையே எனக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும்
நூலாசிரியர்களின் நூல்களின் பல பகுதிகளை விளக்கி திருத்தொண்டர் அவர்கள்
கூறியிருப்பது நினைவு கூரத்தக்கதாகும். திருத்தொண்டர் அவர்கள் சுறியானித்
திருச்சபையின் விரும்புகின்ற விதத்தில் கருத்துக்களை வெளியிடுவது மிகவும்
மகிழ்ச்சியை உருவாக்குகின்ற ஒன்றாக அமைந்துள்ளது என்பதை எண்ணி வியக்கின்றோம். இந்த
அளவுக்கு கருத்துருக்கள் நிறைந்த நூலை சி.பி பவ்லோஸ் தரகன் மலையாள மொழியில்
மொழிபெயர்த்து தரவும் அதை அச்சிட்டு வெளியிடவும் செய்ததாக நாங்கள் அறிகின்றோம்.
திரு. தரகன் அவர்களுடைய முயற்சியில் அவரை உதவிட மலங்கரை திருச்சபை ஆர்வம்
கொண்டுள்ளது என எங்களது பலமான நம்பிக்கையை இவ்விடத்தில் வெளியிடுகின்றோம். இவ்வித
நூலை உருவாக்குவதற்கு எல்லா திறமைகளையும் கொண்டிருக்கும் திருத்தொண்டர் அவர்கள்
இன்னும் பல விதமான நூல்களை எழுதுவதற்கு வல்லமை பெற்றிட எல்லாம் வல்ல இறைவனோடு
வேண்டுகிறோம்.
இந்த நூலின் மலையாள
மொழிபெயர்ப்பில் முன்னுரையாக மொழிபெயர்ப்பாளரான சிபி தரகன் இவ்வாறு எழுதியுள்ளார்.
திருத்தொண்டர்
அவர்கள் எழுதிய ஆங்கில உரையை வாசிக்கவும் அந்த நாள் முதலே அதனை மலையாள மொழியில்
மொழிபெயர்ப்பை வாசிக்க வேண்டும் என வாய்ப்பைக் காத்திருந்தேன். ஆனால் யாரும்
அதற்காக முயற்சிக்காமல் இருந்ததனால் சுறியானி சமுதாயத்தின் பழங்கால வரலாற்றைப்
பற்றி இதுவரை பலரும் கொண்டிருந்த தப்பெண்ணத்தை கண்டிக்கவும் சுறியானி
சமுதாயத்திற்கு விருப்பமான பல முக்கிய விடயங்களை நவீன மக்கள் சிந்திக்கக் கூடிய
விதத்தில் விளக்கியுள்ள இந்த நூல் நமது சமுதாயத்தை சார்ந்தவர்கள் யாவருக்கும்
முக்கியமானதாக வேண்டும் என விரும்பி ஆங்கிலத்திலிருந்து மலையாள மொழிக்கு
மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளேன்.
இந்த நூலை
இவ்விதத்திலாவது பிரபலப்படுத்த என்னை பலவிதத்தில் உதவிய கே எம் தரகன் மற்றும்
கொச்சீப்ப தரகன் என்ற மகான்மார்களோடு நன்றி கூற விழைகிறேன். இதனை முழுவதுமாக
மொழிபெயர்த்து வெளியிட அனுமதிக்கவும் மொழிபெயர்ப்பை முழுவதும் வாசித்து சரி
பார்க்கவும் செய்த பீ.டி கீவர்கீஸ் திருத்தொண்டர் எம் ஏ அவர்களோடும் எனது அளவற்ற
நன்மையை இதயபூர்வமாக அறிவிக்கின்றேன்.
28. 10. 1907
சிபி தரகன்
பழைய செமினாரி
கோட்டயம்
...............................................................................
மலையாள மொழியில்
வெளியிட்டிருந்த இந்நூலைப் பற்றி சுறியானி நற்செய்தியாளர் என்னும் மாத இதழில்
மீண்டும் இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டிருந்தது.
சுறியானி கிறிஸ்தவர்கள்
நெஸ்தோரியன்களாக இருந்தனரா?
கேரளா சுறியானி
அருள்தந்தையர்களுள் முதலாவதாக எம் ஏ முதுகலை பட்டம் பெற்றுக்கொண்ட திருத்தொண்டர்
ஆங்கிலத்தில் எழுதிய உரையிலிருந்து திரு. சி பி தரகன் மொழிபெயர்ப்பு செய்ததும்
அதனுடைய கருத்துக்களை பரிமாறுவதற்காக அனுப்பி தந்த நூலையும் பெற்றுக் கொண்டோம்.
திருத்தொண்டர் அவர்களுடைய ஆங்கில நூலைப் பற்றி நாங்கள் முன்பு ஒருமுறை
கருத்துக்களை வெளியிட்டிருந்தோம்.
திருத்தொண்டர்
அவர்களுடைய பல நாள் முயற்சியின் பலனாக வெளியிடப்பட்ட இந்த நூல் மலையாள மொழியில்
மொழிபெயர்ப்பு செய்து ஆங்கிலம் அறியாதவர்களான சுறியானிக்காரர்களும் இதனை
ஆர்வத்தோடு காத்திருந்து வாசித்து பல விதத்திலும் புரிந்து கொண்டுள்ளனர். திரு.
தரகன் அவர்களோடு இணைந்து பணியாற்றிய ஒருவர் மொழிபெயர்ப்பு பற்றி இவ்வாறு கூறினார்.
திருத்தொண்டர் அவர்களைப் பற்றிய கேரள சுறியானிக் கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த
மதிப்பும் மரியாதையும் தான் மொழிபெயர்ப்பு செய்வதற்கான உந்துதலை ஏற்படுத்தியது.
மட்டுமல்ல நூலின் மொழிநடையும் மிகவும் அழகாக வகுக்கப்பட்டுள்ளது. சுறியானி
மலையாளம் எனப் பெயர் பெற்ற நிலையில் தனிப்பட்ட சுறியானி சமூகத்திலிருந்து
வெளியிடப்பட்ட மிகவும் குறைவான நூல்களில் ஒன்றே இது ஆகும்.
சுறியானி
சமுதாயத்தின் பழங்கால வரலாற்றைப் பற்றி பிறர் கூறியுள்ள கருத்துக்களை கேட்டு மனம்
நொந்து போன சமுதாயத்தின் பழங்கால வரலாறு என்ன என அறிய விரும்பியிருந்த யாவரும்
இந்நூலை வாங்கி வாசிக்க முன்வருவர் என நாங்கள் பூரணமாக நம்புகிறோம்.
அதிகாரம் 5
திருத்தொண்டரின் உரை
எந்த ஒரு கருத்தைப் பற்றியும் தெளிவாக
விளக்கமாக உரை நிகழ்த்துவதற்கான அசாதாரணமான திறமையை கொண்டவர் தான் நமது கதாநாயகன்.
உரையாற்றுபவர் கொண்டிருக்க வேண்டிய அனைத்து விடயங்களைப் பற்றிய அறிவும்
மொழிப்புலமையும் கருத்துக்களை வெளிப்படுத்தும் திறமையும் அனைத்தையும் ஒன்றிணையக்
கொண்டிருந்தவர் தான் நம் பேராயர் அவர்கள். திருத்தொண்டர், அருள்தந்தை மற்றும் ஆயர்
என்ற நிலைகளில் கேரளாவின் நான்கு பகுதிகளிலும் பயணம் செய்து பல்வேறு உரைகளை
நிகழ்த்தியுள்ளார். கத்தோலிக்க திருச்சபையை பின்பற்றிய பின்னரும் இந்தியாவில்
மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா ஆஸ்திரேலியா கண்டங்களில் பயணங்கள் மேற்கொண்டு
தேவாலயங்கள், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் கருத்தரங்குகள் என பல
ஆயிரக்கணக்கான உரைகளை அவர் நிகழ்த்தியுள்ளார். ஆங்கில மொழியில் அவர் ஆற்றிய உரைகள்
அனைத்தும் மேற்கு உலக மகான்மார்களால் புகழப்பட்டவையாக உள்ளன.
நமது கதாநாயகன் நிகழ்த்திய உரைகளை அவ்வாறே
கேட்டு அச்சடித்து வெளியிட முடிந்த அளவுக்கு தெளிவாகவும் சரியான மொழிப்
புலமையோடுள்ள வார்த்தைகளையும் சொற்களையும் பயன்படுத்திய அவருடைய நாவின் தன்மை
அனைவரையும் வியக்க வைத்ததாக அமைந்திருந்தன. எவ்வளவு மணி நேரம் வேண்டுமென்றாலும்
உரையை நிகழ்த்தினாலும் கேட்பவர்கள் எந்த விதமான சலசலப்பும் ஏற்படாமல் அச்சூழலுக்கு
ஏற்ற முறையில் அறிவியல் மற்றும் நகைச்சுவை உணர்வோடு உரையாற்ற அவர் மிகப்பெரிய
திறமையை கொண்டிருந்தார். அவரது உரைகளை கேட்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பல
இடங்களில் இருந்தும் வந்து கூடுவது வழக்கமாக இருந்தது. திருத்தொண்டராக பணியாற்றிய
காலத்தில் பல இடங்களுக்கு பயணம் செய்து அருளடையாளங்களைப் பற்றிய உரைகள்
நிகழ்த்தவும் செய்திருந்தார். அவ்வாறு “அருளடையாளத் திருத்தொண்டர்” என்ற பெயரால்
கதாநாயகன் அழைக்கப்படவும் செய்துள்ளார்.
45 ஆண்டுகளுக்கு முன்னர் திருவல்லாவில் நடைபெற்ற யாக்கோபாயா சுறியானி திருச்சபை
மக்களின் ஆண்டுக் கூடுகையில் திருத்தொண்டர் செய்த உரை அக்காலத்தில் யாக்கோபாயா
திருச்சபையினரால் நடத்தப்பட்டிருந்த “சுறியானி நற்செய்தியாளன்” என்னும் மாத இதழில்
வெளியிட்டிருந்தனர். இறைவன், படைக்கப்பட்ட பொருள்கள், மதம், மனித அவதாரம்,
திருச்சபை, அருளடையாளங்கள் என்பவை பற்றிய விடயங்களை மையமாகக் கொண்டு அறிவியல்
பூர்வமாக இவ்வுரையை அவர் தயாரித்திருந்தார். திருத்தொண்டராக இருந்தபோது தான் எந்த
அளவுக்கு அனைத்து விடயங்களைப் பற்றிய அறிவு கொண்டு இருந்தார் என்ற அறிவுப் புலமையை
நம்மால் அந்த உரையிலிருந்து உணர்ந்து கொள்வதற்கு முடியும்.
இறைவனும் மனிதனும்
மெய்யியல் அறிஞர்களால் எந்த விதத்திலும்
வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளவை தான் இறைவன் ஆன்மா மற்றும் உலகம் என்ற
பேருண்மைகள். இறைவனும் ஆன்மாவும் உலகவும் நிலை கொள்பவையாகும். இவை உலகில் மட்டும்
நிலைத்திருப்பவை அல்ல. திருவெளிப்பாடுகளை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் சிறப்பு
எண்ணங்களாலும் பழக்கங்களாலும் இந்த நிலை உண்மைகளை ஒருவிதம் திடப்படுத்த எளிமையானது
என நீதிபூர்வமாக கேட்பவர்களுக்கு எதிர்ப்பலைகள் ஏற்படுத்தாமல் இருப்பவையுமாகும்.
இவை மூன்றும் நிலைத்திருக்கும் உண்மைகளாகும். இவற்றுக்கிடையே தொடர்புகள் உண்டா?
எனவும், தொடர்பு உண்டெனில் எவ்வாறு? எனவும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இறைவன் ஒருவரே. அவரிடமிருந்து ஆன்மாவும்
உலகமும் உருவாயின என்பதற்கே வாய்ப்புள்ளது. காண்பவை காணப்படாதவையான அனைத்து உலகப்
படைப்புகளும் இறைவனின் மன வலிமையின் செயல்களின் பலன் ஆகும். எல்லாமே
இறைவனிடமிருந்து உருவாகி ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டவாறு உள்ளன. (யோவான் 1: 3)
அனைத்து வகையான அறிஞர்களும் ஏற்றுக்கொண்ட
ஒரு தத்துவம் தான் பரிணாம வாதம் (Evolution) என்னும் தத்துவம். அதாவது சுற்றிலும் உள்ள எல்லா வசதிகளும் சக்திகளும்
சார்ந்தவாறே ஒரு பொருள் அல்லது உயிரின் அமைப்பும் வடிவமும் படைப்பும் இருக்கின்றன.
அவை, நலமடைகின்றபோது இவையும் நலமடைகின்றன. இதுவே பரிணாம வாதம் எனப்படுகிறது. இந்த
கொள்கையை எல்லா அறிவியலிலும் பயன்படுத்த முடியும் என நவீன அறிவியல் அறிஞர்கள்
கூறுகின்றார்கள். “இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத்
தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்.” (உரோமையர் 8 : 22). இவ்விறைவார்த்தைப்
பகுதியில் குறிப்பிடப்படுவதைப் போன்று ஆன்மீக மற்றும் உடல் சார்ந்த எல்லா
படைப்புகளும் இறைவனோடு ஒன்றிணைவதே பெரும் பேறு எனவும் அவை நிறைவேறிட வேண்டிய
தயாரிப்புதான் எப்போதும் பிரபஞ்சத்தில் நடந்து கொண்டே இருக்கின்ற மாற்றங்கள் என
குறிப்பிடப்படுகிறது.
மூன்றுவித படைப்புகள்
ஆனால் படைப்பை நமக்கு மூன்றாக பிரிக்கலாம்.
முதலாவதாக ஆன்மாக்களாக காணப்படாத படைப்புகள். எடுத்துக்காட்டாக, வானதூதர்கள். உடல்
சார்ந்த காரியங்களில் மட்டும் எப்போதும் தங்களது எண்ணத்தைக் கொண்டிருக்கும் ஆன்மீக
நிகழ்வுகளில் கவனம் கொடுக்காமல் இறை ஒன்றிப்பிற்கு முயன்று விடாமல் இருக்கின்ற
இத்தகையோர் ஆன்மாக்கள் இல்லாதவர்கள் என கருதப்படுவர். இப்படிப்பட்டவர்களின்
கருத்துக்களை நாம் கவனிக்க வேண்டிய தேவையில்லை. இரண்டாவதாக காணப்படுகின்ற
திடப்பொருள்கள். உயிரற்ற திடப்பொருள்கள் மனசாட்சி இல்லாத உயிர்கள். உடல் அளவில்
யாதொன்றும் இல்லாதவர்கள் எனக் கூறப்படுகின்ற அறிவியல் அறிஞர்களின் கருத்தையும்
இங்கு கவனிக்க வேண்டியதில்லை. மூன்றாவதாக காணப்படாத ஆன்மாவும் காணப்படுகின்ற
உடலும் உள்ளவர்கள். அனைத்து படைப்புகளின் முக்கியத்துவத்தையும் வகித்திருக்கும்
மனிதன். பரிணாம வாதம் என்னும் அறிவியல் தத்துவத்திற்கேற்ப இறைவன் வழங்கிய
மதங்களின் உன்னத உண்மைகளை நாம் ஏற்றுக் கொண்டால் மனிதன் படைப்பின் இறுதி விளை
பொருள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதன் அனைத்து படைப்புகளுக்கும்
பிரதிநிதியாக உள்ளான். எனவே மனிதனை இறைவனோடு ஒன்றிணைக்க அவனும் அவன் வழியாக அனைத்து
படைப்புகளும் இறைவனோடு ஒன்றிணைய வேண்டும்.
இறைவனால் நிறுவப்பட்ட மதம்
இறைவனோடு இணைந்திருக்க ஆர்வம் கொண்டுள்ள
மனிதனின் தன்மை இயல்பானதே. சாதாரணமாக, அறிவியலாளர்களுக்கு கூட அவர்கள் மூளையை
சார்ந்து இருக்காத நேரங்களில் “இறைவனே” என்ற ஒரு அழைப்புச் சொல்லை பயன்படுத்துவது
இயல்பாக உள்ளது. நாகரிகம் பெரிதாக வளராத ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா
நாடுகளின் பழங்குடியினர்களுக்கு கூட இத்தகைய இறைவனோடு உள்ள ஈர்ப்பு சக்தி உண்டு.
பிறப்பால் பார்வையற்றவர்கள் பிறப்பதை போன்று பிறப்பால் இறை விசுவாசம் இல்லாத
நாத்திகர்களும் உண்டு. நாம் இயல்பாகவே இறைவனோடு ஈர்ப்புக் கொண்டிருக்கின்றோம்.
இத்தகைய செயலின் மறுவடிவமே மதம், அல்லது மார்க்கம் அல்லது தர்மம் என்று நம்மால்
கூற முடியும்.
பக்தி கொண்டிருக்கிறோம் என்றால் மனிதனும்
இறைவனுமாக உள்ள உறவில் மனிதன் இறைவனோடும் இறைவன் மனிதனோடும்
ஒன்றித்திருக்கிறார்கள் என்பதே அர்த்தம். மதத்தின் இலட்சியமும் அதன் பரிணாமமும்
மனிதன் இறைவனோடும் இறைவன் மனிதரோடும் சேர்ந்திருப்பது தான் என பல மதங்களும் எடுத்துக்
கூறுகின்றன. கடவுள் நம்பிக்கை இல்லாத நிஸ்டேக் என்ற மதத்தை அறிவியலாளர்கள் சொல்ல
முடியாது. இறைவனின் தனிப்பட்ட வழிநடத்துதல் இல்லாமல் மனிதர்களுக்கு இயல்பாகவே
இறைவன் வழங்கிய வலிமையைப் பயன்படுத்தியும் இறைவனோடு இணைய மனிதன் செய்த முயற்சியின்
பலனே இயல்பான மதங்கள் என அழைக்கப்படும் இந்து மதம், முகமது மதம், புத்த மதம்
மற்றும் கன்பூசிய மதம் முதலான மதங்கள்.
இவையன்றி இறை ஒன்றிப்பிற்கு தனிப்பட்ட
மார்க்கங்களாக இறைவனே வெளிப்படுத்திய வரலாற்று நிகழ்வுகள் இணைக்கப்படுகின்ற
இறைவனின் உடனிருப்புள்ள மதங்கள் உண்டு. ஆபிரகாம் முதலிய முற்பிதாக்களின் மதம்.
மோசே வழியாக யூதர்கள் பெற்றுக் கொண்ட மதம். இறைமகனாகிய மெசியா நிறுவிய கிறிஸ்து
மதம். இவைகளை இறைவன் நிறுவிய மதங்கள் என்ற பெயரால் அழைக்கலாம். தானாகவே தோன்றிய
மதங்களில் உள்ள நிலைகள் இறைவன் நிறுவிய மதங்களில் உண்டு என்றாலும் இறைவனே நிறுவிய
மதங்கள் எனக் கூறுவது தனிப்பட்ட பொருள் கொண்டதாகும்.
மனித அவதாரத்தின் ரகசியம்
நாம் இறைவனோடு ஒன்றிணைய வேண்டும் என்பது
இயல்பானது. இஃது இறைவனே நமக்கு வழங்கிய கொடையாக இருப்பதனால் இறைவனே அதற்கான
வழிமுறைகளை உருவாக்கித் தர வேண்டும். இறைவன் மனிதனிலும் மனிதன் இறைவனிலும்
ஒன்றிணையும்போது மனிதன் இறைவனாதல் வேண்டும். ஆனால் மனிதன் பலவித பிணைப்புக்களால்
பாவம் கொண்டவனானதால் இறைவனாக மாறுதல் சாத்தியமற்றது. ஆனால் இறைவனோடு உள்ள ஈர்ப்பு
மனிதனிடம் இயல்பாகவே அமையுமாறு இறைவன் வழங்கியுள்ளார். மனித நிலையை கணக்கிற்கொண்டு
மனித அவதாரம் செய்த இறைவனே அவரோடு இணைந்திட பாதைகள் உருவாக்கி மேற்குறிப்பிட்ட
ஈர்ப்பு சக்தியை மெய்ப்படுத்த முடியும்.
படைப்பு அனைத்தும் இறைவனில் இணைய வேண்டும்
என்பதும் அவ்வாறு இணைவதற்காக எல்லா படைப்பும் உறவில் நிலைத்திருக்கின்றன எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்மாக்களோ உடல்களோ மட்டுமல்ல. ஆனால் காணப்படும் மற்றும்
காணப்படாதவைகளான எல்லா படைப்புகளின்
முக்கியத்துவம் பெற்ற ஆன்மாவும் உடலும் கொண்ட மனிதன் என்ற நிலையும்
முன்கூட்டியே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து படைப்புகளுடையவும்
முக்கியத்துவம் பெற்றிருக்கும் ஆன்மாவும் உடலும் கொண்ட மனிதனை இறைவனில் ஒன்றிணையச்
செய்வதற்காக இறைவன் அவதாரம் செய்யும் போது ஆன்மாவாகவோ உடலாகவோ அவதாரம் செய்வதாக
இருந்தால் அவதாரத்தின் குறிக்கோளை அடைய முடிவதில்லை என அறிய முடிகிறது. ஆன்மாவும்
உடலுமான மனிதனை இறைவனில் ஒன்றிணைக்க இறைவன் ஆன்மாவும் உடலுமான மனிதனாகவே அவதாரம்
செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகின்றது. இந்த அவதாரம் தான் இயேசு மெசியா. அவர்
உண்மையாக இறைவனாகவே உள்ளார். ஆன்மாவும் உடலும் கொண்ட மனிதனாகவே மாற்றமடைகின்றார்.
இவ்வாறு இயேசு பரிபூரண மனிதனும் பரிபூரண இறைவனுமாக மாறுகின்றார். அனைத்து
படைப்புக்களும் இறைவனில் ஒன்றிணைவதற்கு ஒரு மார்க்கமாக இறை மகனாகிய “வார்த்தை”
(யோவான் 1 : 16 – 18) தன்னையே ஒரு உடலிலும் ஆன்மாவிலும் ஒதுக்கி வைத்துள்ளது
என்பது தான் மனித அவதாரத்தின் மறைபொருள். இதுதான் கிறிஸ்தவ மதத்தின் மிக
முக்கியமான தத்துவம்.
மெசியா இறைவன் தான் என்ற உண்மையின் மீது
கிறிஸ்து மதத்தின் வலிமை முழுவதும் அடங்கி இருக்கின்றது. மெசியா கடவுள் இல்லை
என்றால் அதாவது இறைவன் மெசியாவாக மனித அவதாரம் செய்யவில்லை என்றால் கிறிஸ்து
மதத்தின் துவக்கமும், வியக்கத்தக்க போதனைகளும், உலகம் முழுவதும் மாற்றத்தை
உருவாக்கிய பண்பும், கிறிஸ்தவத்தின் ஆழ்ந்த நன்னடத்தையும் வெறுமையாக மாற வேண்டிய
சூழல் ஏற்பட்டிருக்கும். காரணம் இவை அனைத்தும் மெசியாவின் இறைமையை மட்டுமே
சார்ந்து இருக்கிறது. மெசியா இறைவன் இல்லை என்றால் இவற்றின் அடித்தளம் பின்னர்
வேறு என்ன எனக் கூற முடியாது. மெசியா இறைவன் என்ற உண்மைதான் கிறிஸ்தவ மதத்தின்
அடிப்படை தத்துவம்.
புனித யோவான் திருத்தூதர் பின்வருமாறு
குறிப்பிடுகிறார். “தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு
கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது; வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால்
உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.
.......... வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.
அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர்
தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.” அருளும்
ஒளியும் அருளும் உண்மையும் இயேசு மெசியாவால் உருவாயின. இறைவனை ஒருவரும்
கண்டதில்லை. தந்தையின் மடியில் அமர்ந்திருக்கும் ஒரே மகனாக அவரை
காட்சிப்படுத்துகிறார். (யோவான் 1 : 1-18)
நானே வழியும் உண்மையும் வாழ்வும் ஆகின்றேன்.
(யோவான் 1 : 1 -6) என மெசியா அருளிய வார்த்தைகள் மேற்குறிப்பட்டதனை
மெய்ப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. இறைவனின் மனித அவதாரம் வழியாக அதாவது மனித அவதார
நபராக இயேசு மெசியா வழியாக நாம் இறைவனோடு இணைய முடியும் எனக் கூறினால் அதனுடைய
அர்த்தம், நாம் மெசியாவின் இறைமைக்குள் நுழைவதற்கு இறைவன் தீர்மானித்திருக்கின்ற
ஒரே வழி தான் மெசியாவின் மனிதத்துவம் அல்லாமல் வேறு ஏதேனும் வழி உண்டோ!
இறைமையும் மனிதமும்
மெசியாவின் மனிதம் வழியாக இல்லாமல் இறைவனோடு
ஒன்றிணைய நம்மால் முடியுமானால் மனித அவதாரத்தின் தேவை என்ன?
மனிதத்தை இறைவன் ஏற்றுக் கொண்டதன் பலன் என்ன? நாம் இறைக்கொடையாக பெற்றுள்ள
இறைவனோடு கொண்ட ஈர்ப்பு நிலை மெய்ப்படுவதற்கு நம்மை இறைவனோடு இணைத்திட இறைவன் மனித
அவதாரம் செய்ததால் பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு பெத்லகேமில் புனித கன்னி
மரியாவின் மகனாக பிறந்தார். வளர்ந்தார். சிலுவையில் இறந்து உயிர்த்தெழுந்த இயேசு
மெசியாவாகவே அவ்வாறே இருக்க முடியும். “மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரே
பரிந்துரையாளர் உண்டு. அவர்தான் இயேசு மெசியா”, என திருத்தூதர் பவுல்
மொழிந்திருக்கின்றார்.
இறைவனை மனிதனோடும் மனிதனை இறைவனோடும்
ஒன்றிணையச் செய்ய இறைவன் உருவாக்கியுள்ள மார்க்கமே இறைவனின் மனித அவதாரம்.
இதனால்தான் நாம் ஒவ்வொருவரும் இறைமையில் இணைந்துள்ளோம். அனைத்து மனிதர்களுக்கும்
இறைமையில் இணைந்திட ஒரு மார்க்கமாக இறைவனின் மனித அவதாரம் உண்டு என்பதே ஆகும்.
மெசியாவை ஏற்றுக் கொள்பவர்களுக்கு தான் இறைமையில் சேர்ந்திட முடியும் என இறைவன்
தீர்மானித்திருக்கின்றார். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரே பரிந்துரையாளராக
இறைவன் குறிப்பிட்டு இருப்பது மனிதத்தை ஏற்றுக் கொண்ட இறைவன் ஆவார். அதாவது
மனிதருக்கு இறை ஒன்றிப்பில் இறைமையோடு இணைய வழி மெசியாவின் மனிதம் மட்டுமே ஆகும்.
அதனால் தான் மனிதனாகும் இயேசு மெசியா ஒரே பரிந்துரையாளர் என அழைக்கப்படுகிறார்.
மெசியா பரிபூரண இறைவனும் பரிபூரண மனிதனும்
ஆகின்றார். நாம் இறைவனோடு ஒன்றிணைந்திருக்க இறைவன் வழங்கியுள்ள மார்க்கமே
மெசியாவின் மனிதம். மெசியா பரிபூரண மனிதனாக இருப்பதன் அர்த்தம் என்னவென்றால்
பாவத்தினால் ஆன்மா மற்றும் உடலால் ஆதாமும் மனித குலமும் பெற்றுக் கொண்ட தவறுகளை
இறைவனுக்கு ஏற்புடையது அல்ல எனப்படுகிறது. ஆதாம் முதல் இன்று வரை உள்ள
மூதாதையர்களோடும் நமது பாவம் வழியாக நமது ஆன்மாவிலும் உடலிலும் நாம் பெற்றுக்
கொண்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்திட பாவமற்ற ஒரு ஆதாம் தேவைப்படுகிறார். முதலாம்
ஆதாமுக்கும் நாமக்கும் இடையேயான நடத்தை முறையிலான இரண்டாம் ஆதாமுக்கும் நமக்கும்
அருள் மூலமாக உறவு உண்டாக்கி நாம் பரிகாரம் செய்திட இரண்டாவது ஆதாமாக - பரிபூரண
மனிதனாக- வார்த்தை மனித அவதாரம் செய்தது.
ஆன்மாவும் உடலும் கொண்ட பாவிகளாகிய நம்மை
இறைமையில் இணைத்திட இறைவன் உருவாக்கியுள்ள மார்க்கம் தான் ஆன்மாவும் உடலும் இணைந்த
பாவமற்ற மெசியா ஆவார். எனவே இறைவனில் ஒன்றிணைய நாம் செய்ய வேண்டியது நமது
ஆன்மாவையும் உடலையும் மெசியாவின் ஆன்மாவிலும் உடலிலும் இணைக்க வேண்டும். இவ்வாறு
நாம் செய்கின்ற போது நமது இறை ஐக்கியம் இறைத் திட்டம் போல அமையும். மெசியாவின்
ஆன்மாவையும் மெசியாவின் உடலையும் நமது ஆன்மாவிலும் நமது உடலிலும் நாம்
ஏற்றுக்கொள்கின்ற போது மெசியாவின் ஆன்மாவோடும் உடலோடும் இணைந்திருக்கின்ற
மெசியாவின் இறைமையும் நம்மில் இணைந்து கொள்கிறது.
இவ்விதத்தில் உள்ள இறை ஐக்கியம்
இவ்வுலகத்தில் உள்ளது போன்ற மனதளவிலான இறை
உணர்வை விட மெய்ப்படுத்துகின்ற ஒரு நிலையாக மாறிவிடுகின்றது. நாம் முழுவதும்
இறைவனின் சொத்து எனவும் இறைவனால் இணைந்து நிற்க வேண்டும் என்ற உணர்வும் இவ்வித
இறைஒன்றிப்பு மூலம் நாம் உணர்ந்து கொள்கிறோம். அனுபவங்களால் உருவாகின்ற உணர்வு
மனதளவிலான உணர்வை விட அதிகமாக நம்மை இறைபக்தியில் நிலைநிறுத்த உதவுகின்றது.
இறைஒன்றிப்பு என்பதன் வழியாக மெசியாவின்
மனித அவதாரம் எனக் கூறுவதை அலங்கார உருவிலோ அல்லது தப்பெண்ணத்தோடு அதனைக்
காணுதலாகாது. மெசியாவின் மனிதம் இறை ஒன்றிப்பிற்குள்ள மார்க்கம் என்று சொல்வது
உண்மையானது ஆகும். அது மனதளவில் மட்டுமல்ல. மனிதன் மெசியாவின் மனிதத்துவத்திலும்
இணைய வேண்டும். அவ்வாறு அவன் இறைமையில் இணையவும் செய்கின்றான்.
இறைஒன்றிப்பு ஆன்மாவின் நிலையில் மட்டுமே
இருக்க வேண்டும் எனில் மெசியா ஆன்மாவாக மட்டும் அவதாரம் செய்தால் போதுமானதாக
இருந்தது. ஆனால் மெசியா பாவம் தவிர அனைத்திலும் நம்மைப் போன்று ஆன்மாவும் உடலும்
உள்ளவராகவும் மனித அவதாரம் செய்திருக்கின்றார். மெசியா இறைவனே என நம்புகின்றபோது
இறைவனில் நம்மை இணைத்திட அவரே உருவாக்கித் தந்துள்ள மார்க்கமே மெசியாவின் மனித
அவதாரம் என நம்புகின்ற போது இறைஒன்றிப்பு மெசியா வழியாக அதாவது மெசியாவின் மனிதம்
வழியாகவே ஆக வேண்டும் என சம்மதித்தே ஆக வேண்டும்.
உடலும் ஆன்மாவும்
இறை ஒன்றிப்பிற்காக இறைவன் உருவாக்கிய
மார்க்கமே மெசியாவின் ஆன்மாவும் உடலும் என நாம் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் நமது
ஆன்மாவால் மட்டும் அல்லது உடலால் மட்டுமே இறைஒன்றிப்பை ஏற்படுத்தலாம் என பலரும்
சிந்தித்திருக்கலாம். உண்மை நிலை என்ன என நாம் ஆராய்வோம்.
ஆன்மாக்களாகவோ உடல்களாகவோ ஆன அனைத்து
படைப்புகளுடையவும் குறிக்கோள் இறைவனில் ஒன்றிணைவது என்பதாகும். அனைத்து
படைப்புகளுடையவும் முக்கியத்துவம் பெற்றிருப்பதும் படைப்பின் மேன்மையை
பெற்றிருப்பதுமான மனிதன் இறைவனில்
சென்றடைய வேண்டிய ஒரே மார்க்கமாக இறைவன் மெசியாவாக மனித அவதாரம் செய்துள்ளார் என
நாம் அறிந்து கொண்டோம். மனிதனின் ஆன்மா மட்டுமே அல்லது உடல் மட்டுமே
இறைஒன்றிப்படைகின்ற நிலையில் மனிதன் முழுவதுமாக இறைஒன்றிப்பை அடைவதில்லை.
ஏனென்றால் ஒரு பகுதியாக மட்டுமே இறைஒன்றிப்பில் அவன் அனைத்து படைப்புகளுடையவும்
பிரதிநிதியாகின்றான் என்பது நிலைப்படுத்தவும் இல்லை.
கடவுளும் ஆன்மாவும் உலகமும் இறைவனிலிருந்து
தோன்றுபவையும் அவை இறைவனில் இணைந்திட உறவு கொண்டிருக்கிறது என நாம் அறிந்துள்ளோம்.
அனைத்து படைப்புகளையும் இறைவனில் ஒன்றிணையச் செய்ய வேண்டும் என்பதற்காக படைப்பின்
முக்கியத்துவம் பெற்றுள்ள மனிதனை தனிப்பட்ட விதத்தில் இறைவனில் ஒன்றிப்படையச்
செய்யவே இறைவன் மனித அவதாரம் பெற்றுக் கொண்டார். எனவே, மனிதன் முழுவதும் அவனது
ஆன்மாவோடும் உடலோடும் இறைவனில் இணைய வேண்டியது அவசியமாகும்.
உயிர்த்தெழுந்த உடல்
உயிர்ப்பில் நம்பிக்கையும் இத்தகைய
எண்ணங்களை பலப்படுத்துகின்றது. இயேசு மெசியாவின் திருஉடல் திருபாடுகளும் மரணமும்
அடைந்த பின்னர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது எனவும் அவரது உடல் ஆன்மீகமான
நிலைகளைப் பெற்றுக்கொண்டு மூன்றாம் நாள் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்ற
வரலாற்று நிகழ்வுகளை நாம் அறிகின்றோம்.
ரஷ்யா ஜப்பான் போர் மற்றும் விக்டோரியா
அரசியின் மரணம் முதலியவை எந்த அளவுக்கு உண்மையான வரலாற்று நிகழ்வுகளோ அவ்வாறே
உண்மையான வரலாற்று நிகழ்வாக மெசியாவின்
உயிர்த்தெழுதலும் அமைந்திருக்கின்றது. ஒரு நிகழ்வின் உண்மை நிலை என்ன என அறிவியல்
பூர்வமாக நிர்ணயிக்க எந்தெந்த விதங்களில் சாட்சிகள் தேவையோ அந்த தெளிவுகள்
அனைத்தும் சாட்சியப் படுத்துகின்ற வரலாற்று நிகழ்வு உண்டு. மெசியா உண்மையாகவே
உயிர்த்தெழுந்ததனால் நாமும் உயிர்த்தெழுவோம் என்றும் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர்
வாழ்வு நிலை எவ்வாறு இருக்கும் எனவும் நம்மால் மெய்ப்படுத்திக் கொள்ள முடியும்.
மட்டுமல்ல, அனைத்து படைப்புகளும் இறைவனில் ஒன்றிணைய உறவு கொண்டிருக்கின்றது என்ற
கொள்கைக்கு இஃது கீழ்பட்டிருக்கின்றது.
அனைத்து வகையான அறிவியல்களிலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் பரிணாம வாதம் இதற்கேற்ப மனிதனும், பரிணாமம் வழியாக
பரிணாமப்பட்டு இப்போது உள்ளதை விடவும் உன்னதமான ஒரு நிலையை அடைய வேண்டியது
தேவையானதாகும். இத்தகைய உன்னத நிலையை உயிர்த்தெழுதலால் அடைந்து கொள்கிறோம் என்று
மெசியாவின் உயிர்ப்பிலிருந்தும் இறையியல் தத்துவங்களிலிருந்தும் நாம் அறிந்து
கொள்கிறோம்.
மெசியாவின் பூத உடலை கல்லறையில் தேடியபோது
அங்கே காணாதிருந்ததனால் அவர் உயிர்த்தெழுந்தார் என வானதூதர்கள்
சாட்சியப்படுத்திடவே இறைவனின் உடல் உயிர்த்தெழுந்தது என உறுதிப்படுத்தப்பட்டது.
அவ்வாறே, நமது உடலும் உயிர்த்தெழும் என ஆசை கொள்வதற்கு இது அடிப்படைக் காரணியாக
அமைந்துள்ளது.
எனவே நாம் உயிர்த்தெழுவது ஆன்மாவாலும்
மட்டுமல்ல உடலாலும் மட்டுமல்ல. நாம் முழுவதுமாக நமது ஆன்மாவோடும் உடலோடும்
உயிர்த்தெழுந்து இறைவனில் ஒன்றிப்படையும் மேன்மை நிலையை அடைகின்றோம். அதற்கான
நெறிமுறைகளை மனிதாவதாரம் செய்துள்ள மெசியாவிடமிருந்து இந்த வாழ்நாளிலேயே நாம்
பெற்றுக் கொள்கிறோம். இவ்வுலகிலும் உயிர்ப்புக்குப் பின்னைய நிலையிலும் மீட்பின்
வழியாக மெசியாவே உள்ளார். “நானே வழியும் உண்மையும் உயிரும் ஆகின்றேன்”.
நமது ஆன்மாவும் உடலும் இவ்வுலகிலும்
உயிர்ப்புக்குப் பின்னரும் இறைவனோடு ஒன்றிணைய இறைவனே உருவாக்கித் தந்த மார்க்கமே
நமது மெசியாவின் மனித அவதாரமாகும். நமது ஆன்மாவும் உடலும் அதாவது நாம் முழுவதுமாக
இவ்வாழ்நாளிலும் மரணத்திற்குப் பின்னரும் உயிர்ப்புக்குப் பின்னரும் மட்டுமல்ல
எப்போதும் இறைவனில் இணைந்து நிற்பதற்காக நாம் செய்ய வேண்டியது இறைவனும் மனிதனுமான
மெசியாவின் ஆன்மாவோடும் உடலோடும் இணைந்து இருக்க வேண்டும் என்பதாகும். நமது உடல்
மட்டுமாகவோ ஆன்மா மட்டுமாகவோ இணைந்தால் போதாது.
கிறிஸ்து மதம் மனதளவிலோ அல்லது உடல் அளவிலோ
மட்டும் அல்ல. கிறிஸ்து மதம் மனிதனை முழுவதுமாக இணைத்துள்ளது. எனவே மதம் மனதளவில்
மட்டுமே எனக் கூறுகின்ற கிறிஸ்தவ சமுதாயங்கள் இக்கொள்கைக்கு எதிராக நிற்பதனால்
கிறிஸ்தவ மதத்தின் மையக்கருத்தான மனித அவதாரம் என்னும் பேருண்மையை இழிவுபடுத்த
முயல்கின்றனர். இத்தகையோரும் பழங்காலத் திருச்சபையினரும் இடையே உள்ள வேறுபாடு
இறைவனும் மனிதனும் ஆன மெசியாவை ஏற்றுக் கொள்வது எப்படிப்பட்டது என்ற முறையில்
ஆகும். முக்கியத்துவமே இல்லாத பல கருத்து வேறுபாடுகளை குறித்து கவனிக்க
வேண்டியதில்லை. ஆனால் மெசியா இறைவனும் மனிதனுமே என்ற பேருண்மையை இழிவு
படுத்துகின்ற விடயங்களை நாம் கொண்டு செல்கின்றோம் என்றால், அது கிறிஸ்தவ
தத்துவத்திற்கு இணைந்ததாக அமையாது.
உடலும் அருளடையாளங்களும்
மெசியாவின்
மனிதம் என்ன எனவும், மெசியாவின் மனிதத்தோடு நாம் இணைந்திருப்பதும் இணைந்திருக்க
வேண்டியதும் எவ்வாறு எனப் பார்ப்போம்.
மெசியாவின் மரணத்திற்குப் பின்னர் இறைவன்
உயிர்ப்பின் மேன்மையான உடலோடு விண்ணேற்றம் அடைந்தார். உலகின் இறுதி வரையிலும்
(அதாவது இறைமை மட்டுமல்ல மெசியா முழுவதுமாக) நான் உங்களோடு என்ற கட்டளைக்கு ஏற்ப
இறைவன் உயிர்த்தெழுந்த உடலோடு நம்மில் வாழ்கிறார். தனது உடலை திருச்சபையாக
இவ்வுலகில் இணைத்திருக்கிறார்.
இவ்வாறு மெசியாவின் உடல் திருச்சபை என்றும்
வெளிப்படையாகவே கற்பிக்கப்பட்டுள்ளது. நான் மெசியாவோடு இணைந்திருப்பது அவரது
உடலாகிய கிறிஸ்தவத் திருச்சபையில் நிலை நிற்பதால் மட்டுமே. மெசியாவை பரிபூரணமாக
அனுபவித்து அறிந்து மெசியாவில் வளரவும் அவரது வெளிப்பாடான கிறிஸ்துவின்
திருச்சபையில் நிலைத்து நின்று ஒரு உண்மைக் கிறிஸ்தவனாக வாழவும் செய்பவன் ஒரு
கிறிஸ்து பக்தனாக மாறுகிறான்.
கருத்துக்களிலோ அனுமானங்களிலோ மெசியாவை நாம்
நம்மோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது போதாது. ஆன்மீக முறையிலோ உடலளவிலோ மட்டுமே
உள்ளதல்ல கிறிஸ்தவ மதம். நாம் ஆன்மாவாலும் உடலாலும் வாழும் முறையில் நமது
ஆன்மாவிலும் உடலிலும் மெசியாவின் ஆன்மாவையும் உடலையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஆன்மாவும் உடலுமான விதத்தில், காணப்படுகின்ற மற்றும் காணப்படாத மெசியாவை
நமக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மெசியாவே நம்மிடம் அதற்கான வழிமுறைகளை
எடுத்துக் கூறியுள்ளார். அவற்றை மறை பொருள் அல்லது அருளடையாளங்கள் என நாம்
அழைக்கிறோம்.
அருளடையாளங்கள் பல உள்ளன. அவை சாதாரணமாக ஏழு
என வகுக்கப்பட்டுள்ளது. மெசியா வழியாகவே மீட்பு என்பதனால் நமது உடலாலும்
ஆன்மாவாலும் காணப்படுகின்ற மற்றும் காணப்படாத மெசியாவை ஏற்றுக் கொள்வது
சாத்தியமானதாகும். எடுத்துக்காட்டாக நற்கருணையைப் பற்றி சிந்திக்கலாம். மெசியாவின்
உடலோடும் ஆன்மாவோடும் நமது ஆன்மாவும் உடலும் ஒன்றிணைவதாக மெசியாவே
ஏற்படுத்தியதுதான் நற்கருணை. இது ஆன்மீக முறையில் மட்டுமல்ல. அப்பத்தையும்
இரசத்தையும் ஆசீர்வதித்து “இது என் உடல் என்றும் இது என் இரத்தம்” என
எடுத்துரைத்தும் “நான் வரும்வரை இதனைச் செய்யுங்கள்” எனக் கட்டளையிடவும் “எனது
உடலை உண்ணவும் எனது இரத்தத்தை அருந்தவும் செய்பவர்கள் என்னிலும் நான் அவனிலும்
வசிப்பேன்” என அறிவுரை கூறவும் செய்துள்ளார்.
நாம் மெசியாவோடு இணைந்திட காணப்படுகின்ற மற்றும்
காணப்படாத விடயங்களை இணைக்கின்ற அருளடையாளமாகின்ற தூய நற்கருணை வழியாக நாம்
மெசியாவை சுவைத்தறிகின்றோம், என இறைவனே கட்டளையிட்டு வழங்கியவற்றை நம்மால்
உணர்ந்து கொள்ள முடிகின்றது. தேவ நற்கருணை மற்றும் அருளடையாளங்களின் வலிமை மெசியா
இறைவனும் அவ்வாறே மனிதனும் என்ற உண்மையை சார்ந்து இருக்கின்றது.
மெசியா இறைவன் இல்லை என்றால் அனைத்து அருள்
அடையாளங்களும் அர்த்தமற்றதாக மாறுகின்றன. மெசியா இறைவன் இல்லை என்றால் திருத்தூதுவ
மரபு, தூய நற்கருணை, மற்றும் திருமுழுக்கு முதலிய அருளடையாளங்களில் நம்பி
அவற்றிற்குப் பணிந்து கடைபிடிப்பது பயனற்றதாகும். மெசியா மெய்யாகவே மனிதனே
இல்லையென்றால் அருளடையாளங்களும் வெறுமையானதே.
எனவே உண்மையான கிறிஸ்து மதம் திருத்தூதுவ
திருச்சபையின் நம்பிக்கைச் சார்ந்த சடங்குகள் அனைத்தும் மெசியாவின் இறைமையையும்
மனிதத்துவத்தையும் சார்ந்தே இருக்கின்றன. இவ்வுண்மைகளை நாம் புரிந்து கொண்ட
பின்னரும் அருளடையாளங்களையும் திருச்சபையையும் கைவிட்டு விடுபவர்கள் மெசியாவையே
இழக்கச் செய்கின்றனர். இவற்றை நாம் உணரவும் உண்மையான நம்பிக்கையோடும் சரியான
அனுதாபத்தோடும் மெசியாவை ஏற்றுக் கொண்டு இறைவனில் நிலை நிற்க வேண்டியதும் ஆகும்.
இவ்வாறு செய்வதாக இருந்தால் நம்மால் திருச்சபை உறுப்பினர்களுக்கும்
சமுதாயத்திற்கும் மற்ற சமுதாயங்களுக்கும் கூடுதலான மேன்மையை உருவாக்குகின்றது.
அதிகாரம் 6
எம்.டி செமினாரியின் முதல்வர்
மிகவும் தலை சிறந்த முறையில் எம் ஏ முதுகலை
பட்டத்தை வென்று தன் சொந்த ஊர் திரும்பிய பி டி கீவர்கிஸ் திருத்தொண்டர்
அவர்களுக்கு எந்த பணிப்பொறுப்பினை வழங்கலாம் என மார் திவன்னாசியோஸ் ஆயரும்
வட்டச்சேரில் மல்பானும் முன்னரே தீர்மானித்திருந்தனர். யாக்கோபாயா திருச்சபைக்கு
சொந்தமான ஆங்கில வழி உயர்நிலை பள்ளிக்கூடம் எம்.டி செமினரி என்ற பெயரில்
கோட்டயத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இவ்வுயர் நிலைப் பள்ளிக்கூடத்தின்
முதல்வராக பி டி கீவர்கிஸ் அவர்களை நியமிக்க வேண்டும் என்ற வட்டச்சேரில் மல்பானின்
விருப்பத்தை புலிக்கோட்டில் ஆயரும் அதனை சம்மதித்திருந்தார். யாக்கோபாயா
திருச்சபையின் பல முக்கியமான திருச்சபை சார்ந்த பல நூல்களை எழுதிய நூலாசிரியரான
இறந்த இடவழிக்கல் திரு. இ. எம் பிலிப் அவர்கள் அன்று எம்.டி செமினரியின் மானேஜர்
அல்லது முதல்வராக பணியாற்றியிருந்தார். முதல்வர் என்னும் தனது பணிப்பொறுப்பினை
நிறைவு செய்த பின்னர் பி டி கீவர்கிஸிடம் இப்பணிகளை ஒப்படைத்ததை பற்றி “மலங்கரை
திருச்சபையின் இரகசிய பேழை” என்ற நூலில் மிஸ்டர் இ. எம் பிலிப் இவ்வாறு
எழுதியுள்ளார்:
“1902 ல் நிரணம்
பங்கின் ஆயர் கிரிகோரியோஸ் அவர்கள் இறையடி சேர்ந்த பின்னர் அருட்தந்தை கி வர்கீஸ்
(அதாவது ஆயர் வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ்) தனது பணியிலிருந்து இடமாற்றம்
பெற்றுக் கொண்ட பின்னர் பள்ளிக்கூடம் சார்ந்த அனைத்து பணம் சார்ந்த காரியங்களையும்
என்னிடம் ஒப்படைத்தார். மாணவர்களிடமிருந்து வசூலிக்கின்ற பணங்கள் மற்றும் அரசு
வழங்கும் தொகை தவிர வேறு தொகை எதுவும் எனது சொந்தப் பொறுப்பில் வைத்திருக்கவில்லை.
இரண்டு விதங்களில் கிடைக்கும் வருமானம் பள்ளிக்கூடத்தின் ஊதியம் வழங்கும்
செலவுக்குப் போதுமானதாக இல்லை என்ற விவரம் அனைவரும் அறிந்திருந்த காரணத்தினால்
யாருமே என்னைப் பற்றி அவதூறுக் கருத்துக்களை கூறுவதில்லை என நம்பியதனால் பலவிதமான
மாற்றுக் கருத்துகளோடு தான் இப்பணிப்பொறுப்பினை நான் ஏற்றுக் கொண்டேன்.
அன்று அருட்தந்தை பீ.டி கிவர்கீஸ் எம் ஏ
அவர்கள் முதல்வராக நியமிக்கப்பட்ட 1908 ஜனவரி வரை
பள்ளிக்கூட நிர்வாகம் சார்ந்த அனைத்து பொறுப்புகளையும் நான் வகித்திருந்தேன்.
மேற்குறிப்பிட்டபடி அரசு உதவி மற்றும் கல்விக் கட்டணம் போன்றவற்றால்
பள்ளிக்கூடத்தை வழிநடத்துவது வருணிக்க முடியாத அளவுக்கு கடினமானதாக இருந்தது.
பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் திரு எம். ஏ மாப்பிள்ளை அவர்கள் தொடக்கத்தில்
எனக்கு உறுதுணையாக செயல்பட்டார். ஆசிரியர்களும் நட்புறவில் நிலைத்திருந்தனர்.
ஊதியம் பெறுவதில் அவர்கள் எத்தகைய முணுமுணுப்பும் அதிருப்தியும் எனக்கு எதிராக
காட்டவில்லை. இது சம்பந்தமாக எந்தவொரு அவப்பெயரையும் நான் சம்பாதிக்கவில்லை.
திரு வர்கீஸ் மாப்பிள்ளை அவர்கள் தனது
பணிச்சுமையை தவிர்க்கும் வாய்ப்புக்களைத் தேடிக்கொண்டிருந்தார். அவ்வாறே நானும்
இப்பணிச்சுமைகளைத் தவிர்க்க நானும் வழி தேடிக்கொண்டிருந்த சூழலில் தான் அருட்தந்தை
பிடி கீவர்கீஸ் எம் ஏ அவர்கள் முதல்வராக பதவிப் பொறுப்பை வகிக்க முன்வந்தார்.
செயலர் என்ற முறையில் பணப்பொறுப்பை என்னிடமே வைத்துக் கொள்வதாக இருந்தாலும்
அருட்தந்தை அவர்கள் பணப்பொறுப்பினையும் கல்வி நிறுவனத்தின் முன்னோக்கிய
வளர்ச்சிக்கு தானே ஏற்றுக்கொள்வது நல்லது என்ற நிலைக்கு அவர் தயாராக இருந்ததனாலும் அவரிடமே அப்பணிப்பொறுப்பினையும்
நான் ஒப்படைத்தேன். இதுவே எனது பணிச்சுமையை தவிர்க்கும் தக்க தருணமாக கருதினேன்.
அவரும் மனமுவந்து அப்பணிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். இவ்வாறு எம்.டி
செமினாரியின் மொத்த பணிப்பறுப்புக்களையும் அருட்தந்தை பி.டி கீவர்கீஸ் அவர்களுடைய
பொறுப்பில் ஒப்படைத்துக் கொண்டு நானும் பணியிடமாற்றம் பெற்றுக் கொண்டு
நிம்மதியடைந்தேன். (மலங்கரை திருச்சபையின் இரகசிய பேழை - பக்கம் 96 - 97 வரை)
மத்திய திருவிதாங்கூரில் கிறிஸ்தவர்களின்
ஒரு முக்கியமான மையமாக கோட்டயம் நகரின் மத்தியில் எம்டி செமினரி உயர் நிலை
பள்ளிக்கூடமும் மற்று கட்டிடங்களும் மனோரம கட்டிடங்களும் இடம் பெற்றிருக்கும்
வுட்லேன்ட் எஸ்டேட் (அதாவது 16 ஏக்கர் நிலப்பரப்பு)
பற்றியே ஒரு நீண்ட வரலாறு உண்டு. யாக்கோபாயா திருச்சபையின் ஆயரான புலிக்கோட்டில்
மார் திவன்னாசியோசும் கேரளா கத்தோலிக்க திருச்சபையின் ஒரு முக்கிய அருள்தந்தையான
நிதியிரிக்கல் மாணிக்கத்தனார் என்பவருமாக இணைந்து “நஸ்ராணி ஜாதி ஐக்கியம்” என்ற சங்கத்தின்
பெயரில் பலவிதமான நிறுவனங்களுக்கு அடித்தளமிட வேண்டும் என்ற தேவைக்காக இந்த நிலம்
வாங்கப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையுடன் யாக்கோபாயர்களை
மீண்டும் ஒன்றிணைப்பதே இந்த இயக்கத்தின் மறைமுகமான நோக்கமாக இருந்தது.
இப்பகுதியில் நிறுவனங்கள் பல நிறுவப்பட்ட சூழல்கள் மற்றும் அவை சார்ந்த
செயல்பாடுகள் மற்றும் இறுதியில் அவற்றின் சோகமான தோல்வி ஆகியவற்றை நகைப்பூட்டும்
முறையில் விவரிக்கிறார் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான ஸ்ரீமான் ஐ. சி சாக்கோ
அவர்கள். 24 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மற்றும்
திரு.எம்.எம். வர்க்கியின் தலைமையில் வெளியான "தாசன்" நாளிதழில்
எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
"எந்த வகையிலும் வளர்ச்சியடையக்கூடிய
நோக்கங்களைக் கொண்டுள்ள மேற்குறிப்பிட்ட கலப்பு (கத்தோலிக்க மற்றும் அகத்தோலிக்க)
குழுக்களிலிருந்து கத்தோலிக்கர்கள் தங்களை விலக்கிக் கொள்ளும் நிகழ்வு நடந்தே ஆக
வேண்டும். கத்தோலிக்கர்கள் அந்த குழுக்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட
முயற்சிகள் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்காக அவர்கள் செய்த செலவுகள் அவர்களுக்கு
நேர்மறை பலனளிக்காமல் அவர்களுக்கு எதிரான சக்தியாக உருமாறியது. எந்த இழப்பு அல்லது
துன்பத்தைத் தாங்கினாலும் கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கை காப்பாற்றப்பட
வேண்டும் என்ற உறுதியான சபதம் செய்தவர்களாகவே கத்தோலிக்கர்கள் செயல்படுவர். எனவே, கத்தோலிக்கர்கள் நம்பிக்கை துரோகத்திற்கு இட்டுச் செல்லும்
குழுக்களிலிருந்து விலகிடவும், சில சமயங்களில் கடுமையான
எதிர்ப்புகளையும் தெரிவிக்க வேண்டியதாயிற்று. இவ்வாறு பின்வாங்கியதால்
கத்தோலிக்கர்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புக்கு கோட்டயத்தில் உள்ள மார்
திவான்னாசியோஸ் அவர்களது நிறுவனம் முக்கிய எடுத்துக்காட்டாகும். தற்போதைய
வட்டிப்பணம் வழக்கின் போது கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைய முயற்சிகள்
மேற்கொண்டது போல பழைய செமினரி வழக்கு இழுபறியிலிருந்தபோதும் ஒன்றிணையும்
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
யாக்கோபாயர்களின் இத்தகைய அனுபவங்களை
மையப்படுத்தி, ஜாதிஸ்றேயஸ் ஆர்வத்தோடு செயல்பட்டுக்
கொண்டிருந்த நிதியிரிக்கல் மாணியச்சன் மற்றும் மார் திவான்னாசியோஸ் போன்ற யாக்கோபாயர்களோடு பழைய கூற்றினர்களுக்கும் (பழைய கூற்றினராக
மாறத் தயாராக இருப்பதாகக் கருதப்பட்டவர்கள்) மற்றும் புதிய கூற்றினர்களுக்கும்
பொது நிறுவனமாக மனோரமா மற்றும் எம்.டி.பள்ளிக்கூடம் அமைந்துள்ள நிலத்தை
வாங்கினார்கள். அப்போது பழைய கூற்றினர் வராப்புழா பேராயரின் நிர்வாகத்தின் கீழ்
இருந்தனர். பழைய கூற்றினர் கத்தோலிக்கராக மாறுவதற்கு காரணமான இந்த இயக்கத்தை வராப்புழா
பேராயர் ஆதரித்து வந்தார். பல கத்தோலிக்க தேவாலயங்கள் நன்கொடை கட்டணத்துடன் இந்த
இயக்கத்திற்கு நிதியளித்தன.
இத்தகவல் உரோம் நகருக்கு வந்தபோது, கத்தோலிக்கர்கள் மற்றும் அகத்தோலிக்கர்களைக் கொண்ட இத்தகைய
இயக்கம் கத்தோலிக்கர்களுக்கு இறுதியில் தீங்கு விளைவிக்கலாம் என்று அதன்
அதிகாரிகள் வராப்புழா பேராயரோடு தெரிவித்தனர். முதலில் பேராயர் ஒப்புதல்
வழங்கியிருந்தாலும் மேற்குறிப்பிட்ட கலப்பு இயக்கங்களுக்கு உரோமையிலிருந்து
இவைக்கு எதிராக எந்த சட்டத்தையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. உரோமையிலிருந்து
எதிர்மறையான கருத்தைப் பெற்ற பிறகு, இந்த
இயக்கத்திற்கான அனுதாப அலைகள் கத்தோலிக்கர்களிடையே வலுப்பெற்றது. ஆனால்
மாணியச்சனின் இதயத்தில் அது மந்தமான நிலையை உருவாக்கி இருந்தது. சாதிப்
பெருமிதம்தான் அவரது செயல்களின் முதல் நோக்கமாக இருந்தது. இச்சூழலில் தான் பழைய
கூற்றினரின் திருச்சபை அதிகாரியாக லவீஞ்ஞு ஆயர் நியமிக்கப்பட்டார். இந்த
அறிவிப்பின் மூலம் யாக்கோபாயர்கள் கத்தோலிக்கர்களாக மாறுவார்கள் எனவும் சிறியன்
சமூகம்முழுவதும் ஒன்றிணையும் என மாணியச்சன் நம்பியிருந்தார். இவ்வாறு மாணியச்சன்
கோட்டயம் மாணி தோமஸின் பண்ணை வீட்டிலும் அவரது ஆதரவாளர்களும் செயலரும் மனோரம
கட்டிடத்திலும் தங்கத் துவங்கினர்.
கோட்டயத்தில் தங்கியிருந்து கத்தோலிக்கர்கள்
மற்றும் யாக்கோபாயர்களுக்கு பொதுவாக ஒரு உயர்நிலை பள்ளிக்கூடம் மற்றும் குருத்துவ
பயிற்சியகமும் நிறுவ வேண்டும் என அவர் நோக்கம் கொண்டிருந்தார். இப்போது பழைய செமினரி
வழக்கு யாக்கோபாயர்களுக்கு சாதகமாக முடிவடைந்திருந்தது. கத்தோலிக்கர்களுடன்
ஒன்றிப்புத் தேவையில்லை என்று யாக்கோபாயர்களும் உணரத் தொடங்கினர். இத்தகைய
காலகட்டத்தில் தான் இலவீஞ்ஞு ஆயர் பொதுக் கல்வி நிறுவனம் துவங்க பேரார்வம்
கொண்டிருந்தார்.
நம்பிக்கையை உருவாக்கி வலுப்படுத்துவதற்காக
உயர்நிலைப் பள்ளி மற்றும் செமினரியில் நியமிக்கப்படும் ஆசிரியர்களைத்
தேர்ந்தெடுக்கும் அதிகாரம் தமக்கே இருக்க வேண்டும் என்று ஆயர் இலவீஞ்ஞு கேட்டுக்
கொண்டார்.
பழைய செமினரி வழக்கில் வெற்றி பெற்றதால்
கத்தோலிக்க திருச்சபைக்கு திரும்பும் முயற்சிகளை கைவிட்ட யாக்கோபாய தலைவர்கள்
லவீஞ்ஞு ஆயரின் வேண்டுகோளுக்கு உடன்படவில்லை. மேலும் பொது நிறுவனங்களில்
நியமனங்கள் இரு குழுக்களாலும் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.
சட்டப்படி இந்த வாதம் சரியானது. ஆனால் நம்பிக்கையை உடைக்காமல் காப்பாற்ற வேண்டிய
கத்தோலிக்க ஆயரின் நிலையை பாருங்கள்! மதச்சார்பற்றத் தன்மை என்ற குடையின் கீழ்
உள்ள தங்கள் உரிமையைப் பயன்படுத்தி மதவெறி ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம்
கத்தோலிக்க இளைஞர்களின் நம்பிக்கையைக் கெடுக்க யாக்கோபாயர்கள் எண்ணம்
கொண்டிருப்பதைக் கண்டு அவர் அமைதியாக இருக்க முடியுமோ!
"ஸ்தாதும் நியோக்தார் நஹிசக்யமக்ரே
விநாஸ்ய ரக்ஷ்யம் ஸ்வயமக்ஷபதேந"
இது ரகுவம்சம் 2வது சம்சர்கம் 56வது
ஸ்லோகம். “தான் காப்பாற்ற வேண்டிய பொருளை அழித்துவிட்டு, தனக்குப் பொருள் கொடுத்தவரின் அருகில் சென்று நிற்பது கடினம்” என்பதுவே
இந்த ஸ்லோகத்தின் பொருள்.
ஆயர் மிகவும் வருந்தி அழுதார். கத்தோலிக்க
திருச்சபையோடு இணைவதற்குத் தேவையான செயல்களுக்கு உதவியாக பொது நிறுவனத்தில்
கத்தோலிக்க நம்பிக்கை கற்பிக்க வேண்டும் என உபதேசம் வழங்கிட கத்தோலிக்கர்கள்
தேவையே என வாதிட்டனர். யாக்கோபாயர்கள் அதற்கு முன்னரே ஒப்புக்கொண்டோமா? என ஏதேனும் தெளிவுகளை கேட்டு வாதிட்டனர். இருவரும் சரியானவையே
கூறினார்கள். ஆனால் இம்முயற்சி முன்னோக்கி நகர முடியாமல் இருந்தது.
இந்த வாக்குவாதங்களின் போது மனோரமா
கட்டிடமும் நிலமும் கத்தோலிக்கர்களிடமே இருந்தது. சட்டத்தில் ஒன்பது புள்ளிகள்
உள்ளன. யாக்கோபாயர்கள் சொத்துக்களை கைப்பற்றத் திட்டமிட்டுள்ளனர். கோட்டயத்தில்
கத்தோலிக்கச் செல்வாக்கு அதிகம் இல்லாத அக்காலத்தில் அங்கு ஆதிக்கம் செலுத்திய யாக்கோபாயர்களால்
எளிதாக முடிந்தது. ஆனால் சுலபமான வழியைத் தேடினார்கள். பொது நிறுவனமான மனோரமா
கட்டிடத்தில் கத்தோலிக்க பாதிரியார்களும் தங்கலாம். சரியானதே. ஆனால் யாக்கோபாய
பாதிரியார்கள் திருமணமானவர்கள். மனைவிகள் தங்கள் கணவருடன் வாழ வேண்டும் என்று
திருத்தூதர் பவுல் அறிவுறுத்தியிருந்தார். இதுவும் உண்மை என்பதால், கத்தோலிக்க பாதிரியார்களுடன் சேர்ந்து வாழ வரும் யாக்கோபாய
பாதிரியார்களின் மனைவியும் உடன் இருப்பார். ஆனால் துறவற சபதம் எடுத்த கத்தோலிக்க
பாதிரியார்கள் ஒரு பெண்ணுடன் வாழ முடியாது என்பதும் உண்மைதான் - அது யாக்கோபாயா
பாதிரியாரின் மனைவியாக இருந்தாலும் சரி. இந்த "சரியானவைகள்" அனைத்தும்
தவறாக மாறிவிட்டன.
ஒரு நாள் காலையில் யாக்கோபாயர்கள்
சொத்துக்களை கையகப்படுத்தத் தொடங்குவார்கள் என்று இலவீஞ்ஞு ஆயருக்கு முந்தைய நாள்
இரவு தெரிவிக்கப்பட்டது. மனோரம கட்டிடத்தில் வாழ்ந்த கத்தோலிக்கப் பாதிரியார்கள்
அன்றிரவே தங்கள் உடைமைகளுடன் தேவாலயத்திற்குப் புறப்பட வேண்டும் என்று அவர்
கட்டளையிட்டார். இவ்வாறு யாக்கோபாயர்கள் மற்றும் கத்தோலிக்கர்களுடனான இணைந்த
பொதுவான பணிகள் முடிவுக்கு வந்தன. இவ்விவரங்களை இலவீஞ்ஞு ஆயருக்கு அப்போது
செயலாளராக இருந்த, மனோரமா கட்டிடத்திலிருந்து தப்பி ஓடியவரும்
பின்னர் ஆயரான மார் லூயிஸ்
அவர்களிடமிருந்து இவற்றை கேட்டறிந்து கொண்டார். "மலையாள
மனோரமா”வுக்கும் இந்த விஷயங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.
தன் வாழ்வின் உயரிய இலட்சியங்களில் ஒன்றாக
இருந்த இந்த கலப்பு இயக்கம் இவ்வாறு நலிவுற்றுப் போனதால் மாணியச்சனுக்கு மிகுந்த
ஏமாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். பொது நிறுவனங்களில் கத்தோலிக்கர்களின் உரிமைகளை
எண்ணிக்கையில் காட்டிட ஆர்வம் காட்டினார். “இம்முயற்சிக்காக தாம் செலவிட்ட நேரம்
மதிப்பற்றதாகி விட்டது. நம் சகோதரர்களான யாக்கோபாயர்களிடமே இச்சொத்து
அமைந்திருக்கட்டும்” என இலவீஞ்ஞு ஆயர் மாணியச்சனைக் கேட்டுக்கொண்டதாக ஆயர் மார்
லூயிஸ் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்கர்களையும் கத்தோலிக்க
ரல்லாதவர்களையும் ஒன்றிணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலன் இதுதான். இன்றைய
கத்தோலிக்கர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையட்டும். ஏறக்குறைய இரண்டாயிரம்
ஆண்டுகளாக உலகம் முழுவதையும் கண்காணித்து வரும் கத்தோலிக்க திருச்சபை, விதிகளை உருவாக்கும் போது இத்தகைய இன்னும் பல பாடங்களை மனதில் கொள்ள
வேண்டும். (தாசன் பத்திரம் 7 ஜனவரி 1933. Ex. 5 "ஒரு
பெயரின் குறைபாடு" திரு. ஐ.சி. சாக்கோ.)
அமெரிக்கக் கத்தோலிக்கரான திரு.டாராவால்
எழுதப்பட்ட திராதாரவின் வாசகம், வரலாற்று மாணவர்களுக்குச்
சுவாரஸ்யமாக இருக்கும் என்று எண்ணி இங்கே சேர்க்கப்பட்டுள்ளது: “1064 துலாம் மாதம்
24ஆம் தேதி, நஸ்ராணி சாதி ஐக்கிய சங்கத்தை நிறுவியவர்களான:
கோட்டயம் மாண்டவத்தும் வாதுக்கல் ஏற்றுமானூர் கோவிந்தபுரம் பகுதியில் சுறியானி செமினரியில் தங்கி ஆலய நிர்வாகம்
மேற்கொண்ட மேதகு பேராயர் டயனோஷியஸ் அவர்களுக்கும், ஏற்றுமானூர் மண்டபத்தும் வாதுக்கல் ஏற்றுமானூர்
பகுதியில் உள்ள குறவிலங்காட்டு நிலப்பகுதியில் குறவிலங்காடு ஆலயத்தில் தங்கி
இருக்கும் 47 வயதான அருள்தந்தை இம்மானுவேல் ஆபிரகாம் நிதியிரி அவர்களுக்கும்
ஆலப்புழை வணிக முகவரும் தற்போது ஐரோப்பாவில் வாழும் நபராகிய திரு ஹ்யூக்ரா போர்ட்
அவர்களுடைய நியமிதம் பெற்ற முக்தியார் எனப்படும் காரியத்தலைவனாகிய ஆலப்புழா
கடப்புரத்து புத்தன் பங்களாவில் தங்கும் அமெரிக்காவில் வணிகம் புரியும் 62 வயதான
திரு ஜேம்ஸ் டாரா அவர்கள் எழுதி கொடுத்த ஒப்பந்தப் பத்திரமே இது.
டி. கிராஃபோர்ட் அவர்களுக்குச் சொந்தமான
கீழ்க் குறிப்பிடும் அனைத்து பொருட்கள், கட்டிடங்கள்,
மரங்கள், முதலியன 3541 பிரித்தானிய ரூபாய் 4
பைசாவுக்கு வணக்கத்திற்குரிய ஆயர் மார் டயோனீசியஸ் மற்றும் வணக்கத்திற்குரிய தந்தை
இம்மானுவேல் நிதியிரி ஆகியோருக்காக 24 மார்ச் 1886 அன்று அதிகாரத்தின் மூலம் நான்
சொத்தை முழுமையாக காலி செய்தேன். இச்சொத்துக்களுக்கு விலையாக 24 மார்ச் 1886 ரூ
500, நவம்பர் 4 ஆம் தேதி ரூ 557 டிசம்பர் 11 ரூ 340, 1887 மார்ச் 2
ஆம் தேதி ரூ 2144 . 4 பைசா மொத்தமாக ரூ 3541 பை 4. கொடுக்கப்பட்டது. எனவே இச்சொத்துக்களை
வரி கட்டி அவகாசப்படுத்த சம்மதிக்கிறேன். (நிதியறிக்கல் மாணிக்கத்தானாரின்
வாழ்க்கை வரலாறு பக்கம் 204)
எம்.ஏ முதுகலைப் பட்டம் வென்று சொந்த
மண்ணுக்குத் திரும்பிய திருத்தொண்டரை எம்.டி.செமினரி உயர்நிலைப் பள்ளியின் அதிபராக
புலிக்கோட்டில் மார் திவன்னாசியோஸ் மற்றும் வட்டச்சேரில் மல்பான் ஆகியோர் நியமிக்க
முடிவு செய்தனர். ஒரு மாத காலத்துக்கு காலியாக இருந்த பணியிடத்தில் தலைமை
ஆசிரியராக திருத்தொண்டர் நியமிக்கப்பட்டார். இது குறித்து யாக்கோபாயா திருச்சபையால்
வெளியிடப்பட்ட "சுறியானி சுவிசேஷகன்" என்ற இதழில் எழுதப்பட்ட செய்தி
பின்வருமாறு:
“செமினாரி தலைமை ஆசிரியர் கே.சி.மாம்மன்
மாப்பிள பி.ஏ. அவர்கள் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் சென்றிருருந்த நிலையில், நமது கீவருகிஸ் செம்மாச்சன் எம்.ஏ., ஒரு மாதம் பணி
செய்துவிட்டு, இம்மாதம் 15ம் தேதி பருமலை வந்தடைந்துள்ளார்.
அவரது கற்பித்தல் முறை மற்றும் குழந்தைகளை கையாளும் விதம் மிகவும் திருப்திகரமாக
இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அவரைப் பற்றிய அனைத்து விஷயங்களிலும்
பொதுமக்களின் கருத்தை விரும்புகிறார்”.
உயர்நிலைப் பாடசாலையின் அதிபராக கீவர்கீஸ்
செம்மாச்சன் நியமிக்கப்பட்ட போது திரு.கே.சி.மாம்மன்மாப்பிள்ளை தலைமை ஆசிரியராக
பணிப் பொறுப்பிலிருந்தார். இது குறித்து திரு.மாம்மன் மாப்பிள்ளை அவர்கள் மலையாள
மனோரமா இதழில் “எனது ஆசிரிய வாழ்க்கையின் சோக முடிவு” என்ற தலைப்பில் தொடர்ச்சியாக
வெளிவந்து கொண்டிருந்த அவரது வாழ்க்கை நினைவுக் குறிப்புகளிலிருந்து ஒரு பகுதி
இணைக்கப் படுகிறது.
“பள்ளி மேலாளராகவும், முதல்வராகவும் வட்டச்சேரியில் மால்பானச்சன் பதவி வகித்திருந்தாலும்,
பொது விழாக்களிலும், பொது விஷயங்களிலும்
பார்வையாளர்களின் கண்களில் மிளிரும் தனிப்பட்ட ஆளுமையை நான் கொண்டிருந்தேன்.
இதனால் சிலருக்கு பொறாமையையும் வெறுப்புத்தன்மையையும் ஏற்படுத்தினாலும், அது இயற்கையானது என்று மட்டுமே எண்ணியிருந்தேன். துவக்கக் காலங்களில்
ஆசிரியராக பணியாற்றியபோது நான் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் உணர்ந்தேன். நாளடைவில்
பல்வேறு சூழல்கள் காரணமாக இப்பணிகளை செவ்வனே செய்வதில் கொண்டிருந்த ஆர்வத்தை
குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் ஆசிரியப் பணியை வெறுக்கும்
நிலைக்கும் நான் தள்ளப்பட்டேன். நான் தலைமை ஆசிரியராக பொறுப்பைக் கொண்டிருந்தது
மல்பான் அருட்தந்தை அவர்கள் விரும்பவில்லை என பல்வேறு சூழல்கள் வழியாக புரிந்து
கொண்டேன்.
ஒரு வேளை என்னை விடவும் தாழ்மையோடு
செயல்படுகின்ற ஒரு தலைமை ஆசிரியர் இப்பணிகளை செய்து இருந்தால் மல்பான் அவர்களுடைய
கீழில் பணிவுடன் நடந்திருப்பார் என மல்பான் எண்ணி இருக்கலாம்.
இவ்வாறு நிலைமை மெல்ல மெல்ல சாதகமற்ற
கட்டத்தை நோக்கி தவழும் போது மாவேலிக்கரையை சேர்ந்த P.T.கீவருகீஸ் செம்மாச்சன் என்ற மாணவன் MD மேல்நிலைப்பள்ளியில்
நான்காம் பருவத்தில் கற்றிட இணைந்தான். இவர் திறமையானவராகவும் புத்திசாலியாகவும்
இருந்தார், இதனால் மல்பான் அவர்களது தனிப் பாசத்தைப்
பெற்றார். மால்பானச்சன் இந்த செம்மாச்சனின் படிப்பில் சிறப்புக் கவனம்
செலுத்தினார், அதேபோல் செம்மாச்சனும் மால்பானச்சன் மீது
அளவுக்கதிகமான மதிப்பும் நம்பிக்கையும் வளர்த்துக் கொண்டார். இருவருக்கும் இடையே
ஒரு தந்தை மகன் என்ற உறவுப் பாசம் உருவானது. வருங்கால திருச்சபைப் பணிகளுக்காக
மால்பானச்சனுடன் ஒத்துப்போகும் மிகவும் தகுதியான இளைஞனைக் கண்டுபிடித்ததால்,
சமூகத்தின் செலவில் செம்மாச்சனின் அனைத்து கல்விச் செலவுகளையும்
மல்பானச்சன் இலவசமாக வழங்கினார். செம்மாச்சன் மெட்ரிக்குலேஷன் வகுப்பு வரை
திருச்சபை செலவில் எம்.டி.யில் கற்றார். அங்கிருந்து மெட்ரிக்குலேஷன் தேர்வில்
தேர்ச்சி பெற்று, கோட்டயம் சி.எம்.எஸ் கல்லூரிக்கு
அனுப்பப்பட்டார். அங்கிருந்து எஃப். ஏ தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, உயர் கல்விக்காக சென்னை கிறிஸ்தவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டார்.
அங்கிருந்து பி.ஏ. மற்றும் எம்.ஏ. எனப்படும் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை
வென்றார். அப்போது, எம்.டி.
உயர்நிலைப் பள்ளியில் என்னை விடவும் உயர் பதவியில் அமர்த்தப்படுவதற்கு மல்பானச்சன்
தயார் செய்தவர் பி.டி. கீவர்கீஸ் செம்மசான் என்பது அப்போதே தெளிவாகத் தெரிந்தது.
தலைமையாசிரியர் பதவியிலிருந்து நான் எப்போது விலகுவேன் அல்லது எப்போது என்னை
மாற்றுவது என்பது மட்டுமே அவர்களது காத்திருப்பாக இருந்தது. மல்பானச்சனின் பண
உதவியால் M.A. பட்டதாரியான செம்மாச்சனை சமூகத்தில்
அவரை முக்கியப் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற ஆர்வம் மல்பனச்சனுக்கு வளர்ந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் நடத்திய உரையாடலில் மல்பானச்சன் தனது எண்ணத்தை
வெளிப்படுத்தினார்.
“கண்டத்தில்காரர்களுக்கு பணிக்கர்
செம்மாச்சனோடு (கீவர்கீஸ் செம்மாச்சன்) சண்டையா?
“மல்பானச்சனின் அன்பான பூனை
சாக்குப்பையிலிருந்து வெளியே குதிக்க காத்திருப்பது” போன்ற ஒரு வினா. இந்த
வினாவில் உள்ள முரண்பாட்டை நான் உண்மையில் புரிந்துகொண்டேன். மாம்மன் மாப்பிள்ளை
என்ற ஒருமைப்பெயரின் கூர்மையைக் குறைக்கும் வகையில், அறிவாளியான
மல்பானச்சன் "கண்டத்தில்காரர்கள்" என்ற பன்மைச் சொல்லை பயன்படுத்தியதாக
எனக்கு உடனடியாகப் புரியவில்லை. மல்பானச்சனின் ஆழ்மன சிந்தனையை இன்னும்
அப்பட்டமாகவும் தெளிவாகவும் வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில், “கண்டத்தில்காரர்கள் குடும்பத்தில் யாருக்காவது செம்மசானுடன் சண்டையா?”
என்று குடும்பத்தில் உள்ள முக்கியமான ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி
மல்பானச்சனிடம் கேட்டேன். "இல்லை, இல்லை" என்பது
மல்பானச்சனிடமிருந்து பதில் வந்தது. “அப்படியானால் கண்டத்தில்காரர்கள்
குடும்பத்தார் செம்மசானிடம் தகராறு செய்கின்றனரே என்று மல்பானச்சன் கேட்டதற்கு
என்ன அர்த்தம்” என்று தட்டிக் கேட்டேன்.
மல்பானச்சனின் இராஜதந்திரமான, உறுதியான மற்றும் துல்லியமற்ற இந்த சதுரங்கப்போர், அக்காலச்
சூழலில் எவ்வளவு மதிப்பிற்குரியதாகவும், இதயத்தை
உலுக்குவதாகவும் இருந்தது என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
நல்ல நம்பிக்கைகள் நிறைந்த இளமையில் மேன்மையான குடும்பப் பயணத்தின் பொறுப்பைச்
சுமந்துகொண்டு பயணிக்கும் போது, திடீரென்று ஒரே உந்துதலால் தண்ணீரில் தள்ளி விடப்பட்டதைப் போன்ற வெறுப்பை
உணர்ந்தேன். வாழ்வின் துவக்கப் பாதையில் நான் எங்கு செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? திடீரென்று எந்த எண்ணவும்
வரவில்லை.
கொலைக்காரனைப் போல முகத்தில் அறைந்தது
தன்னபிமானத்தின் இன்னொரு புறம். நான் முழுவதுமாக மூழ்கிவிட்டேன். நான்கு
பேருக்குத் தெரியாமல் இந்த அவமானத்தைத் துடைக்க என்ன வழி! திருவல்லா எம்.ஜி.எம்
மேல்நிலைப் பள்ளியின் முதல்வராக கீவர்கீஸ் செம்மாசனை நியமிக்கலாமே என்றும்
பரிந்துரை செய்தேன். இல்லை, செம்மஷனே எம்.டி. உயர்நிலைப் பள்ளியில்
நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், என்னை சமுதாயக் குழுவின்
செயலாளராக நியமித்தால் நல்லது என வேண்டுதலாக கேட்டுக் கொண்டேன். எனக்கு ஏற்பட்ட
இக்கட்டான சூழ்நிலையில் புலிக்கோட்டு ஆயரின் உதவியை நாடினேன். அவர் இயல்பிலேயே
இரக்கமுள்ளவராகவும், மற்றவர்களின் துயரங்களை
உணரக்கூடியவராகவும் இருந்தார். ஆனால் சுயாதீனமான தனித்துவமும் கருத்தும் பொதுவாக
அவரது நிர்வாகத் திறனில் இல்லை. எனது அவல நிலையைக் கண்டு ஆயர் மனம் நெகிழ்ந்தார்.
பழைய செமினாரிக்குச் சென்று அனைத்துத் தகவல்களையும் ஆயரிடம் கூறினேன். எல்லாவற்றையும்
கவனமாகக் கேட்டுவிட்டு, “சரி, தீர்மானத்தை
நாளை கூறலாம்” என்று என்னை சமாதானப்படுத்தினார். மல்பானச்சனிடம் கேட்பதுதான் அந்த
கூற்றின் பொருள்.
மல்பானச்சனைக் கலந்தாலோசிக்காமல் அல்லது
மல்பானச்சனின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய புலிக்கோட்டில் ஆயர்
திறமையின்றி இருந்தார். ஆயரின் தீர்மானத்தை கேட்டறிந்திட மறுநாள் சுமார் பத்து
மணியளவில் பழைய செமினரிக்குச் சென்றேன். ஆயர் அவர்களோ, ஏற்கனவே பருமலைக்குச் சென்றுவிட்டார் என்பதை அறிந்தேன். நான் மிகவும்
ஏமாற்றமடைந்தேன். வட்டச்சேரில் ஆயர் எனது பிரச்சனைகளைப் பற்றி மல்பானச்சனிடம்
ஆலோசித்தபோது, மல்பானச்சன் எதற்கும் அசையாமல்
தன் சொந்தக் கருத்தில் உறுதியாக இருந்தார். பின்னர் ஒருமுறை ஆயரை சந்தித்த போது
அந்த விரும்பத்தகாத செய்தியை நேரடியாகச் சொல்லத் தயங்கியதால், பருமலைக்குப் புறப்பட்டுச் சென்றதாக கூறினார்.
இறுதியில் ஒரு நாள் நான் பயந்த நிகழ்வு
நடந்தது. எம்.டி. மேல்நிலைப் பள்ளியின் முதல்வராக பி.டி.கீவர்கீஸ்
நியமிக்கப்பட்டார். பள்ளிக்கூடம் தொடர்பான பல முக்கிய அதிகாரங்கள் அவரது
பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. நான் ஒரு பெயரளவிலான தலைமை ஆசிரியர் மட்டுமே
என்பதும் தெரிய வந்தது. ஒரு மூலையில் ஒதுக்கப்பட்ட நான். இந்த அவமானத்தின் சுமையை
அமைதியாகவும் அமைதியாகவும் சுமப்பேன் என்று மல்பானச்சன் எண்ணியிருக்க முடியாது.
பெருமித உணர்வும் குடும்ப பலமும் கொண்ட நான்
இளைஞனாக இருந்ததால், எனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் சமூகத்
தலைவர்களான வர்கீஸ் மப்பிள்ளை, ஈபன் வக்கீல், ஜான் வக்கீல் போன்ற சமூகத் தலைவர்களால் ஒரு கிளர்ச்சியும் சலசலப்பும்
இல்லாமல் நான் பின்வாங்க மாட்டேன் என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இந்த
இருட்டடிப்பு பற்றி யாரிடமும் பேசக்கூட என் மனம் என்னை அனுமதிக்கவில்லை. அதனால்
நான் அதனை கடின இதயத்துடன் தாங்கிக் கொண்டேன். ஆனால் தனிமைப்படுத்தப்பட்டவனாகவும்
அமைதியாகவும் இருந்தேன். அதைக் கண்டு மல்பானச்சன் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்.
பல சூழ்நிலைகளால் என் பெருமைகளுக்கு கிடைத்த அடியை நான் அமைதியாக பொறுத்துக்
கொண்டாலும், அதன் கடுமையான வலியை நீண்ட காலமாக உமித்தீ புகையாய்
எரிவது போன்று என்னுள் எரிந்து கொண்டேயிருந்தது.
மல்பானச்சனின் அன்புத் தந்தை பி.டி. Geevarghese, MA, பட்டம்
வென்று அதிபர் பதவியை பெற்றுள்ளார். அறிவாளியும், மல்பானச்சனிடம்
மிகுந்த பக்தி கொண்டவருமான பி.டி
கீவர்கீஸை, மல்பானச்சன் யாக்கோபாயா சிறியன் திருச்சபையின்
எதிர்கால நம்பிக்கையின் அடையாளமாக கனவு கண்டிருந்தார். (மனோரமா வார இதழ் தொகுதி
1.எண்.25 பக்கம் - 17)
எம்.டி. செமினாரியின் அதிபராக
பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நமது கதாநாயகன் தனது அன்றாட நிகழ்வுகளுக்கு
சிறப்புத் திட்டத்தை தயாரித்து, அதனை இடையூறு இல்லாமல்
பராமரிப்பதில் முனைப்புடன் இருந்தார். அந்த நேரத்தில், அவர்
ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கி, மீதமுள்ள
இருபது மணிநேரத்தை பணிகளுக்காக செலவிடுவாராம்.
தனது தந்தையின் சகோதரி மகளின் மகனும், திறமையோடு பணிகள் செய்வதில் வல்லவருமான திரு.கிளிலேத்து சாக்கோவை
மாவேலிக்கரையிலிருந்து கோட்டயத்திற்கு பணி புரிய அழைத்தார். திரு.சாக்கோ
அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு, அவரது
அறிவுறுத்தலின்படி MD செமினாரியின் பல்வேறு பணிகளைச் செய்ய
"மேலாளர்" பதவியும் வழங்கப்பட்டது. மேலாளருக்கு தினமும் காலையில் வரும்
அழைப்புகளுக்கு பதிலளிக்கும் பணியும் வழங்கப்பட்டது. இரவு எப்பொழுது தூங்கச்
சென்றாலும், நான்கு மணி நேரத் தூக்கத்திற்குப் பின்னர் தன்னை
தூக்கத்திலிருந்து எழுப்புமாறு அறிவுறுத்தியிருந்தார். அவ்வாறு, ஒரு நொடியில் தூக்கத்தை துவங்கவும், அழைத்தவுடன்
விழித்தெழும் பழக்கத்தையும் கதாநாயகன் வளர்த்திக்கொண்டார்.
கத்தோலிக்க துறவியான தாமஸ் அகாம்பஸ் எழுதிய
"Imitation of Christ" (கிறிஸ்துவை
பிரதிபலித்தல்) என்ற ஆன்மீக புத்தகத்தை காலையில் எழுந்தவுடன் பதினைந்து
நிமிடங்களுக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது. தொடர்ந்து, சிரியன்
மொழியிலான வேளைச் செபங்கள் மற்றும் தனிச்செபங்களை நிகழ்த்துவார். மற்று பணிகளை
செய்திட உடனே துவங்குவார்: இதுவே நமது கதாநாயகனின் தினசரி வழக்கம்.
ஒவ்வொரு வகுப்பிலும் வெவ்வேறு பாடங்களை
முதல்வர் கற்பிப்பார். முதல்வரின் வகுப்புகள் மாணவர்களுக்கு விருப்பமுடையனவாகவும், தகவல்களை வெளிக்கொணர்வதாகவும் அமைந்திருந்தது. அவர் கற்பிக்க வேண்டிய
வகுப்பறையில் முன்னரே தனது நாற்காலியை வைக்க வேண்டும் என்று பணியாளருக்கு
அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதனால், மாணவர்கள் அந்த
நாற்காலியை முதல்வர் வருகையின் அடையாளமாகக் கருதி, "முதல்வர்
நாற்காலி' என்று அழைத்தனர். நான்கைந்து ஆண்டுகளாக, கற்பிக்கும் நாட்களில் ஒவ்வொரு வகுப்பிலும் நாற்காலி சுற்றிக்
கொண்டிருந்தது.
திறமையான மற்றும் நல்ல நடத்தை கொண்ட
மாணவர்களை ஊக்குவிப்பதில் முதல்வர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவ்வாறே
குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் கடுமையாகத் தண்டிப்பதிலும் கொஞ்சமும் தயங்கவில்லை.
ஒருமுறை, ஏதோ ஒரு கடுமையான குற்றத்தின் காரணமாக,
ஒரு செம்மாச்சனை உள்ளங்கையில் பலமுறை பிரம்பால் அடித்தார். இதனால்
ஆத்திரமடைந்த செம்மாச்சன், முதல்வருக்கு எதிராக கிரிமினல்
வழக்கு தொடர கோட்டயத்தில் உள்ள சில வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தினார். இதனை
அறிந்த மாணவனின் தந்தை பாடசாலைக்கு வந்து தனது மகனைக் கண்டித்ததால், வழக்கிற்கான முயற்சியும் கைவிடப்பட்டது. கல்வி நிலையத்தில் ஒழுக்கத்தைப்
பேணுவதிலும் குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிப்பதிலும் அதிபர் அதிக கவனம் செலுத்தி
வந்தார்.
திருத்தொண்டரான நமது கதாநாயகன்
எம்.டி.செமினாரியின் அதிபராக பதவியேற்ற போது, அவரைப் பாராட்டி பரிசு வழங்கும் மாபெரும் கூட்டம் நிரணம்
ஆலயத்தில் வைத்து நடைபெற்றது. இது குறித்து மலையாள மனோரமாவில் வந்த ஒரு செய்தி
கீழே உள்ளது;-
“தொடர்ந்து, அருட்பணியாளர்களுள்
முதுகலைப் பட்டம் வென்ற கீவர்கீஸ் செம்மாச்சன் அவர்களை பள்ளத்து மாத்யூ அவர்கள்
வாழ்த்திப் பேசினார். மேலும் நிரணம் ஆலயத்தின் சார்பாக
தங்கக் கடிகாரமும் பரிசாக வழங்கப்பட்டது. செம்மாச்சனும் பதிலுரையில்
பரிசுக்காகவும், வாழ்த்துக்களுக்காகவும் நன்றி
தெரிவித்தார்”. (மலையாள மனோரமா-ஜூலை 29, 1908)
கதாநாயகன் எம்.டி செமினாரியின் முதல்வரான
மூன்று மாதங்களுக்குப் பிறகு வட்டச்சேரில் கீவர்கிஸ் ரம்பானும், பவுலோஸ் இரம்பானும் ஆயராக அருட்பொழிவு செய்யப்படுவதற்காக அந்தியோக்கியா
சென்றனர். அப்துல்லா மறைமுதுவரால் மார் திவான்னாசியோஸ், மார்
கூரிலோசு என்ற பெயரில் ஆயர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இருவரும் கோட்டயம்
திரும்பினர். அவர்களுக்கான வாழ்த்துக் கூட்டங்களை வழிடத்தியர்களுள் நமது கதாநாயகன்
முக்கியமானவராகத் திகழ்ந்தார்.
வட்டச்சேரில் மார் திவன்னாசியோசு ஆயர்
அவர்கள் கீவருகிஸ் செம்மாச்சனை தாமதமின்றி குருவாக அபிஷேகம் செய்யும்படி
புலிகோட்டில் ஆயரிடம் கூற அவரும் சம்மதம்
தெரிவித்தார். அவ்வாறே, 1908 ஆகஸ்ட் 15 ஆம் தேதி, பருமலை செமினாரியில் வைத்து புலிக்கோட்டு மார் திவான்னாசியோஸ், மார் ஒஸ்தாத்தியோசு பாவா மற்றும் பல அருட்தந்தையர்கள் மற்றும் இறைமக்கள்
முன்னிலையில், வட்டச்சேரில் மார் திவன்னாசியோசு பி. டி.
கீவர்கீசை குருவானவராக அருட்பொழிவு செய்தார். எம்.டி. செமினாரியில் உதவியாளராக
பணியாற்றிய ஜான்மாஸ்டரின் மகன் எம்.ஜே., மைக்கேல் செம்மாச்சனும்
குருவானவராக அருட்பொழிவு செய்யப்பட்டனர். நமது கதாநாயகன் எம். ஏ அச்சன் என்ற
பெயரால் அனைவராலும் அழைக்கப்பட்டார்.
எம்.டி. செமினாரியின் முதல்வர் எம். ஏ
அச்சன் குருவானவராக அருட்பொழிவு செய்யப்பட்டதை முன்னிட்டு, கோட்டயத்தில் யாக்கோபாயா சபைகளின் மாபெரும் வாழ்த்துக் கூட்டம்
நடைபெற்றது. இதனைக் குறித்து மலையாள மனோரமாவில் வெளியான செய்தி பின்வருமாறு.-
“இந்நிகழ்வில், சுறியானிக் குருக்களில் முதன்முறையாக எம்.ஏ. தேர்வில் வெற்றி பெற்ற
அருட்தந்தை பி.டி.கிவர்கீஸ் எம்.ஏ. அவர்களுக்கு, சமுதாய
உறுப்பினர்கள் மற்றும் ஆயர் மார் இவானியோசு அவர்களால் தங்கப் பதக்கத்தை வழங்கி
சிறப்பித்தனர். அவரும் நன்றியுரையுடன் அப்பரிசினை ஏற்றுக்கொண்டார்."
(மலையாளமனோரமா - ஆகஸ்ட் 11, 1909)
MD செமினாரியை நிர்வகித்தல் மற்றும்
வகுப்புகளில் கற்பித்தல் தவிர, கதாநாயகன் இந்த
சந்தர்ப்பத்தில் சமுதாயம் தொடர்பான பல செயல்பாடுகளிலும் ஆர்வத்தோடு தன்னை
ஈடுபடுத்திக் கொண்டார். மறைமுதுவர் அப்துல்லாவின் வருகை, சொத்துக்களுக்கான
மற்றும் அதிகாரத்திற்கான இழுபறி, மார் திவான்னாசியோசின்
பதவிக்கு தடை, அடுத்தடுத்த புரட்சிகள், மறைமுதுவர் அப்தேது மிசிகாவின் வருகை, திருஆட்சி
அமைப்பு நிறுவுதல் ஆகிய நிகழ்வுகளால்
கேரளாவில் யாக்கோபாயா திருச்சபையை இரண்டாக பிளவுபட்டது போன்ற நிகழ்வுகள்
இந்த காலத்தில் தான் நடைபெற்றது. இப்பிரச்சனைகளுக்கு மத்தியில் நம் கதாநாயகன்
மிகவும் முக்கியமானவராக செயல்பட்டு வந்தார். பின்வரும் அதிகாரங்களில் விரிவாக இவை
பற்றி விவாதிக்கப்படும்.
எம்.டி.செமினாரியின் அதிபராக பொறுப்பேற்ற
பின்னர் தனது சொந்த பயன்பாட்டிற்காக நான்கு சக்கர குதிரை வண்டியை (ஃபிடன்வண்டி)
வாங்கி அதனில் கோட்டயம் நகரத்தில் பயணம் செய்தார். பள்ளி விடுமுறை நாட்களில்
ஆலயங்களுக்குச் சென்று பல்வேறு ஆன்மிகத் தலைப்புகளில் சொற்பொழிவுகளை ஆற்றி
வந்தார். தும்பமண் புத்தன்வீட்டில் யாக்கோபு கத்தனார் மற்றும் கோழஞ்சேரில்
தேவர்வேலில் மத்தாயி கத்தனார் ஆகியோரை
உடன் அழைத்துச் செல்வது வழக்கம். கதாநாயகனின் உரைகளை மாவேலிக்கரை கல்லரக்கல்
ஈப்பன் உபதேசி மற்றும் தாவீதாசனின் மகன் சாமுவேல் உபதேசி ஆகியோர் எளிமையாக்கி
விளக்கிக் கூறி வந்தனர்.
எம்.டி. செமினாரியை முதல் தரமான கல்லூரியாக
மாற்ற வேண்டும் என்ற கதாநாயகனின் நோக்கத்தை நிஜமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருமணமாகாத பட்டதாரியான குருக்கள் ஒவ்வொரு வகுப்பிலும் கற்பிக்கும் வகையில்
வசதிகளை ஏற்படுத்துவதே அவரது இலட்சியமாக இருந்தது. இதற்காகவே கல்கத்தா, செராம்பூர் போன்ற கல்லூரிகளுக்கும் பல செம்மாச்சன்கள் உயர்கல்விக்காக
அனுப்பப்பட்டு அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது. இதற்காக அனுப்பப்பட்ட
நால்வர் எம்.ஏ. முதுகலைப் பட்டத்தை வென்றனர். ஆனால் அவர்களுள் மூவர் திருமணம்
செய்துகொண்டனர். ஒருவர் இறந்துவிட்டார். இதன் விளைவாக, கதாநாயகனின்
இலட்சியம் நிறைவேறாமல் போனது மட்டுமல்ல, MD செமினாரி இன்றும்
வெறும் உயர்நிலைப் பள்ளியாகவே உள்ளது.
சுமார் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், திரு. இ.எம்.பிலிப்போஸ் தலைமையில், கோட்டயத்திலிருந்து
வெளிவரும் "இடவகப் பத்திரிக்கை" இதழில், எம்.டி.செமினாரி
பற்றிய செய்தி பின்வருமாறு:-
"மார் திவன்னாசியோசு ஆயர் செமினாரியை
இரண்டாம் தரக் கல்லூரியாக தரமுயர்த்த அதன் நிர்வாகிகளுடன் பல ஆலோசனைகள்
நடத்தினார்."
பின்னர் கேரளாவில் பல கல்லூரிகள்
தொடங்கப்பட்டாலும், எம்.டி செமினாரியை கல்லூரியாக உயர்த்தும்
எண்ணம் இந்நாள் வரை முடியாததன் உண்மையான காரணம் என்ன என்று அதன் நிர்வாகிகள்
ஆலோசிக்க வேண்டும். 45 ஆண்டுகளாக முடிவடையாத, இன்னும் பல
ஆண்டுகள் தொடரக்கூடிய சமூக வழக்கினால் செமினாரி மற்றும் அதன் வளாகமும் இன்னும்
முன்னேற்றமின்றி நிற்பதற்கான காரணத்தை இந்த அதிகாரத்தின் முதல் பகுதி
தெளிவுபடுத்துகிறது.
இந்நிறுவனம் துவங்கப்பட்டதன் உண்மையான
நோக்கத்திலிருந்து தடம் மாறி கத்தோலிக்கர்களின் உரிமைகளை வஞ்சித்து அபகரித்து அதன்
சொத்துக்களும் கட்டிடங்களும் ஆக்கிரமித்து கையகப்படுத்தப்பட்டது. உட்லண்ட்
எஸ்டேட்டின் தரையில் விழுந்த கேரள கத்தோலிக்க சமூகத்தில் ஒளிரும் நட்சத்திரமாக
ஜொலித்த நிதியிரிக்கல் மாணிக்கத்தானாரின் கண்ணீர்த் துளிகள் எத்தனை!
அதிகாரம் 7
யாக்கோபாயா திருச்சபையின் இரு மறைமுதுவர்கள்
மார் அப்தேது மிஷிகா மற்றும் மார் அப்துல்லா
ஆகிய மறைமுதுவர்கள் “யாக்கோபாயா திருச்சபையின் தலைவராக இருப்பவர் நான் மட்டுமே” என
ஒருவருக்கொருவர் வாதாடிக் கொண்டே இருந்தனர். கேரளாவின் யாக்கோபாயா திருச்சபை
இரண்டாக பிளவுறக் காரணமாக இருந்த இவ்விரு மறைமுதுவர்களின் கேரளா வருகை, அவர்களது செயல்கள், பிரிவினைகளும் போராட்டங்களும்
மற்றும் இத்தகைய நிகழ்வுகளோடு நமது கதாநாயகனுக்கு இருந்த தொடர்பு போன்றவை இந்த
அதிகாரத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக இவ்விரு மறைமுதுவர்களின்
வாழ்க்கைப் பின்னணி மற்றும் சூழல்களை யாவரும் அறிந்திருத்தல் நன்றாக அமையும். 1932 ல் நமது கதாநாயகன் சிரியாவிலிருந்து இங்கு வந்த இவர்களைப் பற்றிய
விடயங்களைப் பெற்றுக்கொண்டு தனது கோப்புகளில் சேகரித்து வைத்திருந்தார். அவை
இவ்வதிகாரத்தில் இணைத்துக் கொள்ளப்படுகிறது.
45 ஆண்டுகளாக யாக்கோபாய மற்றும் ஆர்த்தடோக்ஸ்
திருச்சபைகளில் நிலவியிருந்த மிகப்பெரிய பிரச்சனைகளுக்கும் போராட்டங்களுக்கும்
அடிப்படைக் காரணம் என்னவென்றால் மேற்குறிப்பிட்ட இரண்டு மறைமுதுவர்களில் யார்
உண்மையானவர் என்ற வினாவுக்கு விடை தேடுதலுக்கான போராட்டங்கள் ஆகும்.
இவர்களைப் பற்றிய உண்மை விபரங்களை சேகரிக்க
நமது கதாநாயகன் கத்தோலிக்க மறுஒன்றிப்புக்குப் பின்னர் ஆயர் பென்சிகர் அவர்களுடைய
பரிந்துரையில் சிரியாவில் உள்ள புகழ்பெற்ற வரலாற்று அறிஞரான ஒரு கத்தோலிக்க
குருவானவரிடம் பல்வேறு வினாத் தொகுப்புகளை அனுப்பி விவரங்களை சேகரித்தார். அவர்
சிரியாவின் கத்தோலிக்க மறைமுதுவரின் ஆயரகத்திலும் யாக்கோபாயா மறைமுதுவரின்
ஆயரகத்திலும் இவர்களைப் பற்றிய விபரங்களை சேகரித்து நமது கதாநாயகனுக்கு திருப்பி
அனுப்பினார்.
ஒரு சில வினாக்களுக்கு கிடைக்கப்பட்டுள்ள
விடைகள் எதிர்மறையாக காணப்பட்டாலும் கத்தோலிக்க ஆயரகத்திலிருந்து கிடைக்கப் பெற்ற
விவரங்கள் அப்தேது மிசிஹா மறைமுதுவருக்கு சார்பாகவும் மற்றும் யாக்கோபாயா ஆயரகம்
மார் அப்துல்லா மறைமுதுவருக்கு சார்பாகவும் விடயங்கள் அமைந்துள்ளன. இவ்வினா விடைத்
தொகுப்புகள் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு தேவையற்ற ஒரு சிலவற்றை அகற்றி
மீதமுள்ளவை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க ஆயரகத்திலிருந்து
கிடைக்கப் பெற்ற விபரங்கள்
வினா 1
மறைமுதுவர் அப்தேது மிசிகா எந்த ஆண்டு
யாரால் மறைமுதுவராக அருட்பொழிவு செய்யப்பட்டார்?
விடை: இரண்டாம் இக்னேஷியஸ் அப்தேது மிசிகா 1895 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி டயரல் சஃப்ரான்
என்னுமிடத்தில் வைத்து ஏழு ஆயர்களால் மறைமுதுவராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
துருக்கி சுல்தான் “ஹிர்மான்” எனப்படும்
அங்கீகார ஆணையும் அவருக்கு
வழங்கியிருந்தார்.
வினா 2
அவரது பொறுப்பிலிருந்து இவர் தடை
செய்யப்பட்டாரா? அப்படியாயின், ஏன்?
எதற்காக? எந்த ஆண்டு? அவரை
தடை செய்தது யார்? இல்லையெனில் அவரே தனது பதவியை ராஜினாமா
செய்தாரா?
விடை: அப்தேது மிசிகா தனது பொறுப்பிலிருந்து
விடுவிக்கப்படவோ அல்லது தானாக ராஜினாமா செய்யவோ இல்லை. ஆயர் அப்துல்லா சட்டஃப் ஒரு
சில ஆயர்களோடும் மர்தீன் என்னுமிடத்தில் தங்கி வாழ்ந்திருந்த ஒரு சில
இறைமக்களோடும் மறைவான உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தினர். அதன்படி 1896 இல் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்திருந்த இந்த ஆயர்
கத்தோலிக்க நம்பிக்கையை விட்டொழிந்து ஒரு சில ஆயர்களின் துணையோடு 1906 ஆகஸ்ட் 15ஆம் தேதி மறைமுதுவராக (கடத்தல்)
அருட்பொழிவு செய்யப்பட்டார்.
அப்தேது மிசிகா மறைமுதுவர் உடனடியாக மலை
உச்சியில் துர் அப்தீன் என்னுமிடத்திற்கு தனது ஆட்சி மையத்தை மாற்றி
அமைத்திருந்தார். கிறிஸ்து வருடம் 1364 முதல் 1496 வரை மற்றும் 1700 முதல் 1817
வரை தனது முன்னோர்கள் எந்த அரியணையில் அமர்ந்து திருச்சபையை நிர்வாகம் செய்தனரோ
அந்த மலைப்பகுதியில் அமைந்துள்ள அரியணையில் உண்மையான மறைமுதுவராக அவர் ஏற்றுக்
கொள்ளப்படவும் செய்திருந்தார்.
இவ்வாறு மூசல், பாக்தாத், பஸ்ரா மற்றும் மலபார் என்னும் இடங்களுக்கு
பயணம் மேற்கொள்ளும் வரை (1906 முதல் 1912 வரை) துர் அப்தீன் என்னும் இடத்தில் உண்மையான மறைமுதுவராக
அங்கீகரிக்கப்பட்டிருந்தார்.
1911 மார்ச் மாதத்தில் மேற்குறிப்பிட்ட
இடங்களிலிருந்து அவர் நாடு திரும்பினார். தொடர்ந்து பெய்ரூட் என்னும் இடத்தில்
வைத்து 1913 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி நம்பிக்கை
அறிக்கையை ஏற்றுக்கொண்டு கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைந்தார். 1914 மே மாதம் 16ஆம் தேதி மர்தீன் என்னுமிடத்தில்
சிரியன் கத்தோலிக்கர்களின் விருந்தினராக அவர் தங்கி இருந்தார்.
இச்சூழலில் யாக்கோபாயா திருச்சபையின் ஒரு
சில துறவிகளும், இறை மக்களும், அரசு
அதிகாரிகளும் இணைந்து மறைமுதுவராக நாங்கள் இவரை ஏற்றுக்கொள்ள தயார் என ஆயர் ஜார்ஜ்
வழியாக கடிதங்கள் அனுப்பி இருந்தனர். இதனை பேருண்மையாக நம்பிய அப்தேது மிசிகா
மறைமுதுவர் டயர் சஃப்ரான் நோக்கி பயணம் புறப்பட்டார். அவ்விடத்தில் ஆலய மணிகள்
முழங்க பாடல்கள் பாட ஆடம்பர வரவேற்பு அவருக்கு வழங்கப்பட்டது. 1914 அவ்விடத்தில் அவர் இறையடி சேர்ந்தார்.
வினா 3
அப்தேது மிசிஹாவுக்குப் பதிலாக உண்மையான
மறைமுதுவராக அனைத்து குருக்களாலும் மக்களாலும் அப்துல்லா மறைமுதுவர்
ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாரா?
விடை : இல்லை. துர்அப்தீன் மக்கள் பலரும்
ஐந்து அல்லது ஆறு ஆயர்களும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த ஆயர்களின் கூட்டத்தில்
எருசலேம், ஹோம்ஸ், ஹாமா,
துர் அப்தீன் மற்றும் அசேக் போன்ற பங்குகளின் ஆயர்கள் உட்படுவர்.
வினா 4
அப்தேது மிசிகா மறைமுதுவரும் அப்துல்லா
மறைமுதுவரும் எந்த ஆண்டு எவ்விடத்தில் வைத்து இறையடி சேர்ந்தனர்?
விடை: 1914 அக்டோபர்
மாதத்தில் டயர் சாப்ரான் எனும் இடத்தில் வைத்து அப்தேது மிசிஹாவும், 1916 இல் எருசலேமில் வைத்து அப்துல்லா மறைமுதுவரும்
இறையடி சேர்ந்தனர்.
வினா 5
அப்தேது மிசிகா மறைமுதுவரின் மரணத்திற்கு
பின்னர் தானா தற்போதைய மறைமுதுவராக
எலியாஸ் ஆயர் தேர்ந்தெடுக்கப்படவும் அரியணை ஏற்றம் மற்றும் பணிப் பொறுப்பை ஏற்றுக்
கொள்ளவும் செய்தார்?
விடை: அப்தேது மிசிகா மற்றும் அப்துல்லா
மறைமுதுவர்களின் மரணத்திற்குப் பின்னர் 1917 பிப்ரவரி 12ஆம் தேதி ஆயர் எலியாஸ் மறைமுதுவராக தேர்ந்தெடுக்கப்படவும் அரியணையில்
அமர்த்தப்படவும் செய்தார். (1932 ஆம் ஆண்டு மஞ்ஞனிக்கர -
ஓமலூர் என்னும் இடத்தில் வைத்து இதய நோய் காரணமாக மரணம் அடைந்ததாக
குறிப்பிடப்பட்டுள்ளது)
வினா 6
மறைமுதுவரின் அதிகாரப்பூர்வமான வாழிடம் எது? மறைமுதுவரின் சாதாரணமான வாழிடம்
எங்கே உள்ளது?
விடை: துருக்கி மர்தீன் என்னும் இடத்து டயர்
சஃப்ரான் என்பதுதான் மறைமுதுவரின் அதிகாரப்பூர்வமான வாழிடம். ஆனால் சிரியாவில்
உள்ள எருசலேமில் தான் மறைமுதுவர் தற்போது தங்கியிருக்கின்றார். இரண்டு ஆண்டுகளாக
அவர் முசல் என்னும் இடத்தில் வாழ்ந்திருந்தார். இதுவரையிலும் நிரந்தரமான ஒரு
இருப்பிடம் நிர்ணயிக்கப்படவில்லை.
வினா 7
ஆசியா மைனரில் (சின்ன ஆசியா) யாக்கோபாயா
திருச்சபையினரான இறைமக்கள் மற்றும் ஆயர்கள் எத்தனை பேர்?
விடை: டயர் பக்கீர், ஹோம்ஸ், முசல், ஆலப்போ மற்றும்
மெசபட்டோமியா என்னும் இடங்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் யாக்கோபாயா திருச்சபையினர்
உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்காக பத்து ஆயர்கள் உள்ளனர்.
மேற்குறிப்பிட்ட
விடயங்கள் சிரியா மற்றும் முசல் ஆகிய இடங்களில் சரியான விசாரணை மேற்கொண்ட பின்னர்
எழுதி உருவாக்கிய அறிக்கை ஆகும். ஆனால் யாக்கோபாயா மறைமுதுவரின் ஆயரகத்தில்
பாதுகாக்கப்பட்டிருந்த பழைய கோப்புக்களிலிருருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விவரங்கள்
சேர்க்கப்படுகின்றன.
யாக்கோபாயா திருச்சபையிலிருந்து
பெற்றுக் கொண்ட விபரங்கள்
வினா 1
அப்தேது மிசிஹா மறைமுதுவர் எந்த ஆண்டு
யாரால் மறைமுதுவராக அருட்பொழிவு செய்யப்பட்டார்?
விடை: மூன்றாம் பேதுரு மறைமுதுவரின்
மரணத்திற்குப் பின்னர் டயர் சப்ஃரானின் ஆயர்கள் மற்றும் பேராயர்கள் இணைந்து
பேராயர் அப்துல்லாவை மறைமுதுவராக தேர்ந்தெடுத்தனர். முற்கால வழக்கத்திற்கு ஏற்ப
சுல்தானிடம் இருந்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ள தேர்தல் விவரங்கள் அடங்கிய கடிதம்
குஸ்தந்தினோஸ் போலீஸ் என்ற இடத்திற்கு அனுப்பினர். ஆனால் அனைத்து ஆயர்களும்
அக்கடிதத்தில் கையொப்பமிடாமல் இருந்ததனால் அந்த கடிதத்தை அரசர் திருப்பி
அனுப்பினார்.
இச்சூழலில் டமாஸ்கஸ் ஆயரான அப்தேது மிசிஹாவை
ஆயர்கள் மறைமுதுவராக தேர்ந்தெடுக்கவும் ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் அவரை
மறைமுதுவராக அருட்பொழிவு செய்யவும் செய்தனர்.
1895 ஜூன் நான்காம் தேதி 7 ஆயர்கள் மற்றும் இரண்டு பேராயர்களின் உடன் இருப்பில் ஆமாத் - டயர் பக்கர்
என்னுமிடத்துப் பேராயரான மர்தீனின் ஜார்ஜியஸ் சிரில் மறைமுதுவரின் தலையில் கைகளை
வைத்து அவரை அருட்பொழிவு செய்தார்.
முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல்லா
பேராயரோ வெறுப்பு காரணமாக அருட்பொழிவு திருச்சடங்குகளில் கலந்து கொள்ளவில்லை. அவர்
மர்தீன் என்னும் இடத்தில் தங்கி வாழவும் ஓராண்டுக்குப் பின்னர் கத்தோலிக்க
திருச்சபையில் இணையவும் செய்தார். அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால்
அர்மேனியர்களுக்கும் சுல்த்தான்மார்களுக்கும் இடையேயான போராட்டத்தில் (1896 இல் நடந்த அர்மேனியர்களின் கூட்டக் கொலை) சுல்த்தானை கொலை செய்ய
அப்தேதுமிசிஹா அர்மேனியர்களுக்கு துணை நின்றதாக கூறப்படுகிறது.
வினா 2
அப்தேது மிசிஹா மறைமுதுவராக பதவியிலிருந்து
வெளியேற்றப்பட்டாரா? எந்த ஆண்டு? என்ன
காரணம்? எவ்வாறு? எவரால்? அவர் ராஜினாமா செய்தாரெனில் எந்த மாதத்தில்?
விடை: அப்தேது மிசிகா மறைமுதுவர் 1900 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி சுல்தானை
சந்திப்பதற்காக கான்ஸ்டான்டிநோப்பிள் செல்லவும் அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கி
வாழவும் செய்தார். சுல்தானை சந்திக்க நிச்சயிக்கப்பட்ட முந்தின நாள் மறைமுதுவர்
அளவுக்கதிகமாக மது அருந்தவும் தேவாலயத்திற்கு அருகில் உள்ள முக்கிய அறையில் சுய
நினைவின்றி வீழ்ந்த கிடக்கவும் செய்தார். மதுபோதையில் நடு இரவில் ஏதோ தேவைக்காக
எழும்பி நடந்தபோது ஜன்னல் வழியாக கீழே விழவும் கை மற்றும் கால்களில் மட்டுமல்ல
உடலின் பல இடங்களில் காயங்கள் ஏற்படவும் செய்தது. மறுநாள் சுல்தான் விவரங்களை
அறிந்த பின்னர் அவரை சந்திப்பதற்கான அனுமதியையும் ரத்து செய்தார்.
அதன் பின்னர் மறைமுதுவர் அமாது என்னும்
இடத்திற்கு திரும்பிச் சென்றார். கான்ஸ்டான்டிநோப்பிளில் அவரது பங்குத்தந்தையான
பவுலோஸ் ஆயர் இவருக்கு எதிராக பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். அமாதுக்கு
திரும்பிச் சென்ற ஒரு சில நாட்களுக்குள் அனைத்து ஆயர்களும் அவருக்கு எதிரணியாக
திரண்டனர். இவ்வாறு அவரை அவரது பதவியிலிருந்து ஒழிக்கவும் கடித போக்குவரத்துகளை
நடத்தினார். இவரை மறைமுதுவராக தேர்ந்தெடுத்த தேர்தல் இறையருளால் நடைபெற்றது அல்ல.
திருச்சபை சட்டங்களுக்கு எதிரானதாகவும் ஊழல் நிறைந்ததாகவும் என பல காரணங்களை
எதிரணியினர் அடுக்கி வைத்தனர். மேற்குறிப்பிட்ட காரணங்களால் அப்தேது மிசிகா
மறைமுதுவரை அப்பபதவியிலிருந்து மாற்றி புதிய மறைமுதுவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என
சுல்தான் அப்துல் ஹமீது ஆயர்களுக்கு ஆணையிட்டார்.
அதன்படி 1904
ஜனவரி 25ஆம் தேதி டயர் சப்ஃரான் என்னும் இடத்தில் வைத்து
ஆயர் மன்றம் கூடவும் அப்தேது மிசிகா மறைமுதுவரை அவரது பொறுப்பிலிருந்து நீக்கவும்
செய்தனர். மோசல் ஆயரான மோண்சிஞ்ஞோர் அலக்கு பகனானை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கவும்
செய்தனர்.
இதிலிருந்து அப்தேது மிசிகா மறைமுதுவர்
ராஜினாமா செய்யவில்லை என்பது தெளிவாகிறது. இச்சூழலிலும் நானே உண்மையான மறைமுதுவர்
என அவர் அப்போதும் விவாதித்துக் கொண்டே இருந்தார்.
வினா 3
அப்தேது மிசிகா மறைமுதுவருக்கு பதிலாக
அப்துல்லா மறைமுதுவரை அனைவரும் இச்சூழலில்
ஏற்றுக்கொண்டனரா? இதன் உண்மையான அர்த்தம் என்ன?
விடை: அப்தேது மிசிஹா அரியணையிலிருந்து
வெளியேற்றப்பட்டு ஓராண்டுக்குப் பின்னர் மறைமுதுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட
அப்துல்லா மறைமுதுவர் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து திரும்பி யாக்கோபாயா
திருச்சபைக்கு வந்தடைந்தார். 1906 ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்கள் அவரை மறைமுதுவராக அருட்பொழிவு செய்தனர். அப்போது
அருள்பொழிவு திருச்சடங்கில் தலையில் கைவைப்பு நடத்தியவர் மோண்சிஞ்ஞோர் தனிஷ்
தகனான் ஆவார். அப்துல்லா மறைமுதுவர் அறிவாளியும் நீதிமானும் சிறந்த நிர்வாகியுமாக
விளங்கினார். தொடர்ந்து தனது இறைமக்களோடும் அனைத்து ஆயர்களோடும் நல்லுறவை ஏற்படுத்திக்
கொண்டார். 1908ல் ஐந்து ஆயர்களை அவர் அருட்பொழிவு செய்தார்.
அவர்களுள் ஒருவராகிய சாலீபா கவர்ஜியாவை ஒஸ்தாத்தியோஸ் என்னும் பெயரால் மலபார்
பகுதிக்கு அனுப்பினார்.
மறைமுதுவர் எருசலேமில் தங்கி இருந்தபோது
ஆயர்களாக அருட்பொழிவு செய்யப்படுவதற்காக மலபாரிலிருந்து இரண்டு திருமணமாகாத
அருள்தந்தையர்கள் வந்திருந்தனர். அவர்களுள் ஒருவரை திவன்னாசியோஸ் என்ற பெயரிலும்
மற்றவரை கூரிலோஸ் என்ற பெயரிலும் ஆயராக அருட்பொழிவு செய்தார். இவர்களைத் தொடர்ந்து
ஏராளமான மக்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மறைமுதுவருக்கும் எருசலேமில் புனித
மாற்கு ஆசிரமத்திற்கும் வழங்க பலவிதமான பரிசுகளையும் பணங்களையும் கொண்டு
வந்திருந்தனர்.
1908ல் மறைமுதுவர் குஸ்தந்தினோஸ்
போலீசுக்குச் செல்லவும் சுல்தான் அவரை பெரும் மதிப்பளித்து வரவேற்கவும் செய்தார்.
இச்சூழலில் தொடர்ந்து இலண்டன் நகருக்குச் செல்லவும் அங்கு நன்கொடைகள் வசூலிக்கவும்
செய்தார். அதை தொடர்ந்து அவர் இந்தியாவுக்குச் சென்றார். அங்கு அவர் பல்வேறு
விதமான குழப்பங்களை உருவாக்கக் காரணமானார். அங்கு தற்போது அவரால் அருட்பொழிவு
செய்யப்பட்ட கீவர்கீஸ் ஆயர் அவருக்கு எதிராக போராடவும் மக்கள் இரண்டு குழுக்களாக
பிரிந்து விடவும் செய்தனர். மறைமுதுவர் ஆயர் அவர்களை தடை செய்யவும் மேலும் இரண்டு
ஆயர்களையும் அருள்பொழிவு செய்யவும் செய்தார். இத்துடன் மலபாரில் குழப்பங்கள் பல
பெருகிக் கொண்டே வந்தன. பின்னர் மறைமுதுவர் இந்தியாவிலிருந்து திரும்பி
எருசலேமுக்கு சென்றடைந்தார்.
மலங்கரை சுறியானிக்காரர்களுள்
மறைமுதுவருக்கு எதிராக போராடியவர்கள், மறைமுதுவர்
என்ற பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட
அப்தேது மிசிஹாவை மலங்கரைக்கு அழைத்தனர். அத்துடன் அவரது பயணச் செலவுக்காக 100 சவரன் தங்கத்தையும் உடன் அனுப்பி வைத்தனர்.
1912 ல் அப்தேது மிசிஹா மலங்கரைக்கு
புறப்பட்டார். மலபாரில் வந்தடைந்த உடன் அப்துல்லா மறைமுதுவரால் தடை
செய்யப்பட்டிருந்த கீவர்கீஸ் ஆயரின் உடன் தோழர்கள் அவரை ஏற்றுக் கொண்டனர். இவ்வாறு
புதிய குழப்பங்கள் மீண்டும் வலுவடைந்தன.
மலங்கரையின் மப்ஃரியான் என்னும் பெயரோடு ஒரு
நிர்வாகியை அப்தேதுமிசிஹா அருட்பொழிவு செய்தார். பலவிதமான மனக்குழப்பங்கள்
மீண்டும் உருவாகும் என்பதனால் அவர் அங்கிருந்து பயணம் புறப்பட்டு திரும்பினார்.
இந்தியாவிலிருந்து திரும்பவும் எருசலேமுக்கு வந்தடையவும் கத்தோலிக்க திருச்சபையோடு
ஒன்றிணைய தீர்மானிக்கவும் செய்தார். அதற்காக அவர் பய்ரூட்டு என்னும் இடத்திற்கு
சென்று ரஹ்மானி மறைமுதுவரை சந்தித்து கத்தோலிக்க திருச்சபையில் இணையவும் செய்தார்.
மலங்கரையின் மப்ஃரியான் என்ற பதவியில்
அருட்பொழிவு செய்யப்பட்ட மறைமுதுவர் இந்தியாவிலிருந்து வெளியேறிய ஒரு சில
நாட்களுக்குள் மரணமடைந்தார்.
அப்தேதுமிசிஹா மீண்டும் யாக்கோபாயா
திருச்சபைக்கு திரும்பிச் செல்லவும் மர்தீன் என்னும் இடத்திற்கு சென்று டயர்
எல்சஃப்ரான் என்னும் இடத்தில் தங்கி வாழவும் செய்தார்.
வினா 4
அப்தேது மிசிஹா மற்றும் அப்துல்லா ஆகியோர்
எந்த இடத்தில் வைத்து இறையடி சேர்ந்தனர்?
விடை: மறைமுதுவர் அப்தேது மிசிஹா 1915 செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி டயரல் சப்ஃரானில்
வைத்து இறையடி சேர்ந்தார். தனது மூதாதையரான பேதுரு மறைமுதுவரின் கல்லறைக்கு
அருகில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
அப்துல்லா மறைமுதுவர் 1915 டிசம்பர் 9ஆம் தேதி எருசலேமில் வைத்து இறந்து புனித
மாற்கு ஆசிரமத்தில் அடக்கம் செய்யப்படவும் செய்தார்.
வினா 5
அப்தேது மிசிஹாவின் மரணத்திற்கு பின்னர்
அல்லது முன்னரோ தற்போதைய மறைமுதுவர் அருள்பொழிவு செய்யப்படவும் அரியணை ஏற்றம்
நடத்தவும் செய்யப்பட்டார்?
விடை: இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்
தான். 1915 ல்
அப்தேது மிசிஹா மரணம் அடையவும் 1917 பிப்ரவரி 12ஆம் தேதி மார் எலியாஸ் மறைமுதுவர் அரியணை ஏற்றம் செய்யவும் செய்தார்.
வினா 6
ஆசியா மைனரின் யாக்கோபாயர்களின் எண்ணிக்கை
எத்தனை? அவர்களுக்கு எத்தனை ஆயர்கள் உள்ளனர்?
சாதாரணமாக அவர்களது மறைமுதுவர் எங்கே தங்கி வாழ்கிறார்?
விடை : அப்தேது மிசிஹாவின் முன்னவரான
மூன்றாம் பேதுரு அவர்களின் சராசரி கணக்கின்படி யாக்கோபாயா திருச்சபையினர் 2,37,880 ஆவர். ஆனால் இஃது உண்மையற்ற எண்ணிக்கையாக கருதப்படுகிறது. இதுவரையிலும்
யாக்கோபாயா திருச்சபையினரின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை. எருசலேமில் யாக்கோபாயர்கள் 40 ஆயிரம் அல்லது 50 ஆயிரத்திற்கும் உள்பட்ட எண்ணிக்கையில் காணப்படுபவர் என கருதப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட இந்த எண்ணிக்கை இருந்தாலும் ஒருவேளை
அவர்களுடைய எண்ணிக்கை குறைந்து கொண்டே சென்றதனால் ஏறக்குறைய 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே காணப்படலாம் எனவும் நூலாசிரியரால்
அனுமானிக்கப்படுகிறது. துருக்கிகளின் மத வன்முறைகளுக்குப் பின்னர் யாக்கோபாயர்களின்
ஆயர்களின் எண்ணிக்கை ஆசியாவில் 9 அல்லது 10 ஆக அமைந்திருந்தது. இந்தியாவில் நான்கு அல்லது ஆறு என்ற எண்ணிக்கையாக
இருந்தது.
உலகப்போர்களுக்கு முன்னால் மறைமுதுவரின்
அமைவிடம் டயரல் சப்ஃரானில் அமைந்திருந்தது. தனது இறைமக்களோடு நல்லுறவு
ஏற்படுத்துவதற்கு வசதியாக தற்போதைய மறைமுதுவர் வாழிடத்தை இவ்விடத்திலிருந்து
மாற்றினார். ஒரு சில நாள்கள் அவர் எருசலேமிலும் பின்னர் மூசலிலும் தங்கி வாழ்ந்திருந்தார்.
மூசலில் தங்கி வாழ அதிகமாக விரும்பி இருந்ததனால் அவர் அங்கே தங்குவதற்காக
விருப்பத்துடன் தனது அரியணையை அங்கே நிறுவியதாகவும் ஊகிக்கப்படுகிறது.
தனது நிர்வாகத்தில் ஆட்சியில் உள்ளவர்களும்
தீவிர நம்பிக்கை கொண்ட அதிகமான யாக்கோபாயர்கள் மூசலில் வாழ்ந்திருந்தனர் என்பதுவே
இதன் காரணம்.
(சிரியாவிலிருந்து Rev. Fr. Innocent
O.C., 28.1.1932-ல் அனுப்பிய கடிதம்)
அப்துல்லா மற்றும் அப்தேது மிசிஹா
மறைமுதுவர்களை பற்றிய அறிவை வாசகர்கள் இதிலிருந்து அதிகமாக அறிந்து
கொண்டிருக்கலாம்.
அப்துல்லா மறைமுதுவர் ஆயராக பணிபுரிகின்ற
போது கத்தோலிக்க திருஅவையோடு ஒன்றிப்படைந்து 10 ஆண்டுகள் 1896 முதல் 1906 வரையிலும் ஹோம்ஸ் மறைமாவட்டத்தின்
கத்தோலிக்க ஆயராக திருச்சபையை நிர்வாகம் செய்து வந்தார். யாக்கோபாய திருச்சபையின்
மறைமுதுவராக பதவி ஏற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டும் கத்தோலிக்க
திருச்சபையிலிருந்து விலகி யாக்கோபாயா திருச்சபைக்கு வந்தடைந்தார் என்ற உண்மையை
அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர்.
ஆனால் அப்தேது மிசிஹா மறைமுதுவரோ கத்தோலிக்க
திருச்சபையோடு மறுஒன்றிப்படையவில்லை. இக்கருத்து கத்தோலிக்கர்கள் தவறாக உருவாக்கிய
கட்டுக் கதையே என்று ஒரு சிலர் புனைக் கதைகளை உருவாக்கியுள்ளனர். மேற்குறிப்பிட்ட
கடிதத்தில் இருந்து இம்மறைமுதுவரின் கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்த ஒன்றிப்பு
தெளிவாக எடுத்துக் கூறப்படுகிறது. இதைப் பற்றிய ஒரு சில தெளிவுகளையும் இணைத்துக்
கொள்ள விரும்புகிறேன்.
கிறிஸ்து வருடம் 1913 மே மாதம் மூன்றாம் தேதி அப்தேது மிசிகா மறைமுதுவர் பெய்ரூட்டில் வைத்து
கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைந்தார். இந்த மறுஒன்றிப்பு செய்தி அடங்கிய
விபரங்களை சிரியாவின் கோர் எப்பிஸ்கோப்பா ஒருவர் “மிஷன்ஸ் காத்தலிக்ஸ்” என்ற மாத
இதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். திருச்சிராப்பள்ளியிலிருந்து வெளிவந்த “தி
மார்னிங் ஸ்டார்” என்ற மாத இதழின் 1913 செப்டம்பர் மாத
இலக்கத்தில் இந்த கட்டுரையானது வெளிப்படுத்தப்பட்டு இருந்தது. அதனுடைய
மொழிபெயர்ப்பை பின்வருமாறு குறிப்பிடுகிறேன்.
யாக்கோபாயா ஆயர்களின்
கத்தோலிக்க மறுஒன்றிப்பு
(1) (Rev. R.P. Thomas Halabbia, Syria)
1912 டிசம்பர் பத்தாம் நாளில்
அந்தியோக்கியாவின் சுறியானி கத்தோலிக்க மறைமுதுவரான மோண்சிஞ்ஞோர் இக்னேஷியஸ்
எப்ஃரேம் ரஹ்மானின் பெய்ரூட்டு ஆயரகத்தில் வைத்து எருசலேமின் யாக்கோபாய பேராயரான
மோண்சிஞ்ஞோர் எலியாஸ் ஹல்லூலி, அப்பாமெயாவின் யாக்கோபாய
பேராயரான மோண்சிஞ்ஞோர் ஆபிரகாம் டேவிட் ஆகியோர் மறுஒன்றிப்படைந்தனர். அவர்களோடு
யாக்கோபாயா திருச்சபையின் ஒரு குருவானவரும் மறுஒன்றிப்படைந்தார்.
கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைப்பதற்கான
தங்களது திட நம்பிக்கையை மேற்குறிப்பிட்ட பேராயர்கள் மறைமுதுவரை தெரிவித்தனர்.
கத்தோலிக்க மறைமுதுவரான மோண்சிஞ்ஞோர் ரஹ்மானி அவர்களை அன்போடு வரவேற்று தங்களோடு
தங்குவதற்கும் சிரியா நாட்டவரான அருட்தந்தை சல்ஹானி எஸ் ஜே அவர்களுடைய
கட்டுப்பாட்டில் ஆன்மீக பயிற்சி மேற்கொள்ள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும்
செய்தார்.
பதினொன்று நாட்கள் கடந்த பின்னர் டிசம்பர் 21ஆம் தேதி பல குருக்களின் முன்னிலையில் திருத்தந்தை எட்டாம் அர்பனின்
வழிமுறைகளுக்கேற்ப நம்பிக்கை அறிக்கை நடத்தி கத்தோலிக்க திருச்சபைக்கு ஏற்றுக்
கொள்ளவும் செய்தனர். அவ்வாறு அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த இறைமக்கள் முழுவதும்
அல்லது ஒரு சிலரையாவது கத்தோலிக்க ஒன்றிப்பிற்குக் கொண்டுவர அவர்கள் முயற்சி செய்ய
வேண்டும் என்று மறையுரையில் அறிவுறுத்தப்பட்டது.
யாக்கோபாய திருச்சபையில் மிகப்பெரிய
விவாதங்கள் உருவாகின. அவ்வாறு உரோமாபுரியை நோக்கிய பல ஒன்றிப்புக்களும் நடக்க
காரணமாயின. ஒன்றிப்படைந்த இரண்டு ஆயர்களையும் கத்தோலிக்க இறையியல் மற்றும்
நெறிமுறை விதிகள் கற்பித்த பின்னர் மோண்சிஞ்ஞோர் எலியாஸ் ஹல்லூலியை மறைமுதுவரின்
பங்குத்தந்தையாக எருசலேமுக்கு மோண்சிஞ்ஞோர் ரஹ்மானி நியமித்தார்.
புனித நகரத்தில் அவர்கள் வந்தடைந்ததன்
மறுநாள் கிழக்கத்திய முறையில் வேடமணிந்திருந்த யாக்கோபாயர்களின் மறைமுதுவரான
மோண்சிஞ்ஞோர் இக்னேஷியஸ் அப்தேது மிசிஹா அவரை சந்திப்பதற்காக வந்தடைந்தார்.
சுறியானி தப்பறைகளின் தலைவராகிய அவர் மலபார் சந்திப்பிற்குப் பின்னர் தற்போது தான்
திரும்பி வந்திருந்தார். அங்கு அவர் பல மாதங்கள் தங்கி இருக்கவும் மூன்று ஆயர்களை
அருட்பொழிவு செய்யவும் செய்திருந்தார். கத்தோலிக்க மத நம்பி்கைகளை
செயல்படுத்துவதில் முனைப்புடன் பணியாற்றிய தன் உடன் பணியாளர் அவர்களை குற்றம்
சுமத்துவதற்குப் பதில் அவரை ஊக்கப்படுத்தியிருந்தார்.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் மோண்சிஞ்ஞோர்
எலியாஸ் ஹல்லூலி அப்தேது மிசிஹாவின் மறைமுகத்தன்மையை உணர்ந்து கொள்ள முடிந்தது.
சுறியானி கத்தோலிக்கர்களின் ஒரு கூட்டத்தில் தான் கத்தோலிக்க திருச்சபையோடு
மறுஒன்றிப்பு அடைவதற்கும் திருத்தந்தையின் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளவும்
கிழக்கு நாடுகளில் பிரஞ்சு அரசின் கண்காணிப்பில் தங்கி வாழவும் தயாரானதாக
வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டார்.
ஒரு சில நாட்களுக்குப் பின்னர் எருசலேமின்
இலத்தீன் மறைமுதுவரான மோண்சிஞ்ஞோர் F. கமேசியை சந்திக்கவும் தனது விருப்பத்தை அவர் அறிவிக்கவும்
இவ்விவரத்தை திருத்தந்தையோடு தெரிவிக்கும்படியும் வேண்டினார். உடனடியாக பெய்ரூட்டு
மோண்சிஞ்ஞோர் ரஹ்மானி அவர்களுக்கு உரோமன் கத்தோலிக்க மறுஒன்றிப்புக்கான தனது
சுதந்திர தன்மையையும் தனது இதய பூர்வமான விருப்பம் பற்றியும் செய்தி
அனுப்பப்பட்டது.
மோண்சிஞ்ஞோர் ரஹ்மானி மறைமுதுவர்
பெய்ரூட்டுக்கு யாக்கோபாயா மறைமுதுவரை
அழைக்கவும் மனப்பூர்வமாக அவரை ஏற்றுக் கொள்ளவும் செய்தார். இறையியல் சார்ந்த
அறிவுரைகளை ஆர்வத்தோடு வழங்கவும் செய்தார். மேய் மாதம் மூன்றாம் தேதி மோண்சிஞ்ஞோர்
இக்னேஷியஸ் அப்தேது மிசிஹா நம்பிக்கை உறுதிமொழி நடத்தி அதிகாரப்பூர்வமாக
கத்தோலிக்க திருச்சபையின் மடியில் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
மோண்சிஞ்ஞோர் இக்னேஷியஸ் அப்தேது மிசிஹாவின்
நம்பிக்கைக்குரிய சிரியா, மெசப்பட்டோமியா, கர்திஸ்தான்
மற்றும் மலபார் போன்ற நாடுகளின் யாக்கோபாயர்களிடையே இத்தகைய மறுஒன்றிப்பு நல்ல
பலனை உருவாக்கியதாக எந்த விதமான ஐயமும் இல்லை. சில யாக்கோபாய குருக்கள் அவருக்கு
வாழ்த்துக் கடிதங்களையும் அனுப்பினர். ஒரு சிலர் தங்களது பேராயரை பின்பற்றி
தாங்கள் வாழும் சமீபத்தில் உள்ள ஆயர் அல்லது மறைப்பணியாளர்களின் முன்னிலையில்
தங்களுடைய இறைமக்களோடு இணைந்து கூட்டமாக நம்பிக்கை அறிக்கையை வெளிப்படுத்தி
கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய எண்ணுவதாக கடிதம் எழுதியுள்ளனர்.
மகிழ்வான இந்நிகழ்வு முடிந்து ஏறக்குறைய ஒரு
சில வாரங்களுக்குப் பின்னர் ரஹ்மானி மறைமுதுவர் உரோம் நகருக்கு புறப்பட்டார்.
கத்தோலிக்க திருச்சபையில் மறுஒன்றிப்படைந்த மோண்சிஞ்ஞோர் இக்னேஷியஸ் அப்தேது
மிசிஹாவின் நம்பிக்கை அறிக்கைப் படிவமும்
திருச்சபையின் தலைவரோடு உள்ள கீழ்படிதலும் அடங்கிய கடிதத்தையும் அவருடன் கொண்டு
சென்றார்.
மோண்சிஞ்ஞோர் இக்னேஷியஸ் அப்தேது மிசிஹா
தனது சொந்த கையால் எழுதிய கடிதமும், அதன் இத்தாலி
மொழிபெயர்ப்போடு மோண்சிஞ்ஞோர் ரஹ்மானி ஜூன் 11ஆம் தேதி
திருத்தந்தையிடம் ஒப்படைத்தார். மகிழ்வான இந்த செய்தியை அறிந்த திருத்தந்தை யாக்கோபாயரின்
மனமாற்றத்திற்கான மோண்சிஞ்ஞோர் ரஹ்மானின் செயல்களை பாராட்டவும் மேலும் இத்தகைய
பணிகளை தொடர்வதற்கான ஊக்கமும் வழங்கினார். அத்துடன் மறுஒன்றிப்படைந்த
மறைமுதுவரையும் இரண்டு ஆயர்களையும் அவரை பின்தொடர்ந்தவர்களையும் ஆசீர்வதிக்குமாறு
அவரை தனிப்பட்ட முறையில் நியமித்தார்.
இவ்வாறு மறுஒன்றிப்படைந்த யாக்கோபாயர்களுக்காக
தேவாலயங்கள் கட்டுவதற்கும், அவர்களது குழந்தைகளை கற்பிப்பதற்கு
கல்விக்கூடங்களை நிறுவவும், அவர்களிடையே பணிபுரியும்
மறைப்பணியாளர்களுக்கு உதவுவதற்குமாக நன்கொடைகள் வழங்குவோர்க்கு திருத்தந்தையின்
ஆசீர்வாதம் நல்குவதற்கான அதிகாரமும் மோண்சிஞ்ஞோர் ரஹ்மானி மறைமுதுவருக்கு
திருத்தந்தை வழங்கினார்.
(The
morning star 1913 September to October page 42)
(2) 1914 கற்கடகம்
பதினேழாம் தேதி அப்தேது மிசிஹா குர்க்கும ஆசிரமத்திலிருந்து வட்டச்சேரில் மார்
திவன்னாசியோஸ் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்திலும் இந்த விபரங்களை
குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தின் ஒரு சில பகுதிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
“.................. உரோமை திருச்சபையின்
மறைமுதுவரிடம் நான் அடைக்கலம் அடைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.”
“ ................... அங்கிருந்து
பெய்ரூட்டுக்குச் சென்று அவருடன் பெரிய திருநாள் வரையிலும் சில தினங்கள் அவரிடம்
தங்கி வாழ்ந்தேன். ....................... ஒரு சில தினங்களுக்கு பின்னர் மர்தீன்
என்னும் இடத்திற்குச் சென்றேன். தொடர்ந்து அங்கு அவருடன் தங்கி வாழ்ந்தேன்.”
தான் கத்தோலிக்க திருச்சபையில்
ஒன்றிப்படைந்த விவரம் தெளிவாக எடுத்துக் கூறப்படவில்லை எனினும் மேற்குறிப்பிட்ட
வசனங்களிலிருந்து அவர் கத்தோலிக்கத் திருச்சபையை ஏற்றுக் கொண்ட உண்மை நிலையை
புரிந்து கொள்ள முடியும்.
(3) யாக்கோபாயா திருச்சபையின் “மலங்கரை
சிறியன் கிறிஸ்டியன் லீக்” என்பதன் முன்னிலையில் “கத்தோலிக்க நிறுவனத்தின் உண்மை
நிலை” என்னும் பெயரில் வெளியிடப்பட்டிருந்த நூலில் இதனுடைய உண்மை நிலை பற்றி
தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆர்த்தடோக்ஸ் திருச்சபையின் மார் திமோத்தியோஸ்
பேராயர் அப்தேது மிசிஹா மறைமுதுவரை புகழ்ந்தவாறு, மலையாள மனோரமா என்னும் செய்தித் தாளில்
எழுதியுள்ள கட்டுரைக்கு பதிலுரையாக அந்நூலில் எழுதப்பட்டுள்ள ஒரு பகுதி இத்துடன்
இணைக்கப்படுகிறது.
நமது ஆயர் தனது கட்டுரையில் கூறியது:
அப்தேது மிசிஹா மறைமுதுவர் கேரளாவிலிருந்து தன் அரியணைக்குத் திரும்பிச்
சென்றதாகவும், அவரை குர்க்கும ஆசிரமத்தில் மரியாதைகளுடன்
அவரை ஏற்றுக் கொள்ளவும், மரணமடைந்த போது அங்கேயே அடக்கம்
செய்யவும் இவையெல்லாம் இறைவனின் வழிநடத்துதலாக கருத வேண்டும் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சில முக்கிய நிகழ்வுகள் அவர் மனப்பூர்வமாக கைவிட்டு
விட்டார்.
அப்தேது மிசிஹா மறைமுதுவர் கேரளாவிலிருந்து
பெய்ரூட் சென்றடைந்து உரோமை திருச்சபையோடு இணையவும் செய்தார். அங்கே வைத்து
அவருடைய வாத நோய் அதிகமாகவும் ரோமையர்கள் அவரை மர்தீன் பகுதியில் உள்ள ஒரு
ஆலயத்திற்கும் அங்குள்ள ஆலயத்தினர் அவருடைய உறவினர்களுடைய பக்கத்திலும்
அனுப்பினர். உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க எருசலேமில் தங்கியிருந்த அப்துல்லா
மறைமுதுவரின் அனுமதியோடு குர்க்கும் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டார். தொடர்ந்து
உடல்நிலை மிகவும் வலுவிழந்து இறந்து குர்க்கும் ஆசிரமத்தில் ஆசிரமவாசிகளை அடக்கம்
செய்கின்ற இடத்தில் (சாதாரணமாக மறைமுதுவர்களை அடக்கம் செய்யும் இடத்திற்கு
கீழ்த்தளத்தில்) அவரை கல்லறை அடக்கம் செய்யவும் செய்தனர். இந்நிகழ்வுகளும்
இறைவனின் வழிநடத்தல் ஆகும். அப்தேது மிசிஹாவின் உரோமை மத ஏற்றுக்கொள்ளுதல் பற்றி சம்மதம் செய்து கொண்டும் மனப்பூர்வமாக
மனோரம கட்டுரையில் இந்நிகழ்வினை விட்டு விடவும் செய்தார். அல்லாமல் அதுவும் இறைவழி
நடத்துதல் ஆக நினைத்துக் கொண்டு அல்ல.
(காதோலிக்க அரியணையின் உண்மை நிலை பக்கம் 8 முதல் 9 வரை)
அப்துல்லா மறைமுதுவரும் அப்தேது
மறைமுதுவரும் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்தவர்கள் என்ற வரலாற்று
நிகழ்வுகள் உண்மையானவை என வாசகர்களால் அறிந்து கொள்ள முடிகிறது.
அதிகாரம் 8.
அப்துல்லா மறைமுதுவரின் வருகையும் மார்
திவன்னாசியோஸ் தடையும்
அந்தியோக்கிய யாக்கோபாயா மறைமுதுவரான
அப்துல்லா பாவா மலங்கரை சந்திப்பிற்காக கேரளாவுக்கு வருகை தந்த போது நமது
கதாநாயகன் எம் ஏ அச்சன் என்ற பெயரில் எம் டி செமினாரியின் முதல்வராக பணியாற்றி
வந்தார். இங்கிலாந்து பயணத்தைத் தொடர்ந்து கேரளா நோக்கித் தான் வர விரும்புகிறேன்.
குறிப்பிட்ட நாளில் கப்பல் மூலமாக மும்பை வந்தடைவேன் எனவும் என்னை வரவேற்பதற்காக
அங்கே வந்தடைய வேண்டும் எனவும் மார் திவன்னாசியோஸ் ஆயர் அவர்களுக்கு மறைமுதுவர்
ஏற்கனவே தந்திச் செய்தி அனுப்பி இருந்தார்.
மார் திவன்னாசியோஸ் ஆயர் உடனடியாக எம் ஏ
அச்சனை வரவழைத்து மறைமுதுவர் மும்பையில் வரும்போது அவரை வரவேற்க மார்
திவன்னாசியோஸ் ஆயர்,
அருள்தந்தை பி டி கீவர்கீஸ், கோனாட்டு மல்பான், தாமிரபள்ளி
ஆப்ரகாம் கத்தனார், இ எம் பிலிப் மற்றும் கே சி மாமன்
மாப்பிள்ளை போன்ற பிரதிநிதிகளை மும்பைக்கு அனுப்ப தீர்மானித்தனர். மார்
திவன்னாசியோஸ் அவர்களின் கட்டாயத்தினால் அவரது கட்டளைக்கு ஏற்ப நமது கதாநாயகன்
அதற்கு சம்மதிக்கவும் செய்தார். குறிப்பிட்ட நாளில் அனைவரும் மும்பைக்கு சென்றடையவும்
மறைமுதுவரை வரவேற்று உபசரிக்கவும் செய்தனர்.
மறைமுதுவரின் செயலாளர்
மலங்கரையிலிருந்து மறைமுதுவரை வரவேற்கச்
சென்றிருந்த குழுமத்தில் அருள்தந்தை கி வர்கீஸ் சுறியானி மொழி அறிந்தவராகவும்
ஆங்கிலத்தில் சரளமாக பேசுபவராகவும் கல்வி நிறுவனத்தின் முதல்வராகவும்
பணியாற்றியதனால் மறைமுதுவர் அவரோடு தனிப்பட்ட நட்பு வைத்திருந்தார். மறைமுதுவர்
சார்ந்த அனைத்து காரியங்களையும் நமது கதாநாயகனும் சீரோடும் சிறப்போடும் செய்ததனால்
மிகுந்த திருப்தியோடு மறைமுதுவர் காணப்பட்டார். மறைமுதுவரின் செயலராகவே அவர்
பணியாற்றி வந்தார். மறை முதுவர் அவர்கள் ஆங்கிலத்தில் பெற்றுக் கொண்ட அனைத்து
கடிதங்களையும் சுறியானி மொழியில் மொழிபெயர்ப்புச் செய்து நமது கதாநாயகன் வழங்கி
வந்தார்.
மலங்கரையின் தற்போதைய நிலை பற்றியும், முக்கிய நபர்களைப் பற்றியும் மும்பையில் வைத்து நமது கதாநாயகனோடு
மறைமுதுவர் அனைத்தையும் கேட்டு அறிந்து கொண்டார். அப்போது ஒரு முறை ரகசியமாக
இவ்வாறு அவரோடு கேட்டார்.
“நானும் மார் திவன்னாசியோஸ் ஆயரும்
ஒருவருக்கொருவர் சண்டை போட வேண்டிய சூழல் வந்தால் நீங்கள் என்னைச் சார்ந்து
நிற்பீர்களா?
திடீரென்று கேட்கப்பட்ட வினாவால் விடையளிக்க
முடியாமல் திணறிக் கொண்டிருந்த எம்ஏ அச்சனோடு மறைமுதுவர் மீண்டும் விடையளிக்குமாறு
வற்புறுத்தினார். “ஏன் விடை கூறாமல் இருக்கின்றீர்கள்? பதிலளிக்கலாமே? உடனடியாக எம் ஏ அச்சன் பின்வருமாறு பதிலளித்தார்.
“மார் திவன்னானாசியோஸ் எனது குரு ஆவார்.
உண்மைக்கு எதிராக அவர் செயல்பட்டால் நான் அவரோடு இணைந்திருக்க மாட்டேன்.
உண்மையெனில் நான் அவரோடு இணைந்திருப்பேன்.”
மறைமுதுவரின் வினாவிலிருந்து இரண்டு முக்கிய
காரியங்களை எம் ஏ அச்சன் புரிந்து கொண்டார். முதலாவதாக, மலங்கரையில் மறைமுதுவர் மார் திவன்னாஸியோஸ் ஆயரோடு திருச்சபையின் சொத்து
அதிகாரத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்வார். ஆயர் அதற்கு சம்மதிக்காமல்
இருவரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். மறைமுதுவர் மார்
திவன்னாஸியோஸ் ஆயரை திருச்சபையிலிருந்து விலக்கி தடை உத்தரவு வழங்கவும் செய்வார்.
இரண்டாவதாக, இத்தகைய சூழலில், மிகவும்
திறமை வாய்ந்தவரான எம் ஏ அச்சன் தனக்கு சார்பாக செயல்படுகின்ற போது தனது திட்டங்கள்
அனைத்தும் நிறைவேற்றி வெற்றி பெறச் செய்ய பேருதவியாக அமையும் என அவர்
நம்பியிருந்தார்.
குறைந்த கால நட்பில் அவரது திறமையைப் பற்றி
மறைமுதுவர் ஆழ அறிந்து கொண்டார். தான் விரும்பிய பதிலை எம்.ஏ அச்சன் வழங்காததனால்
அவரது முகம் வாடிப் போனதை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. மும்பையிலிருந்து
பயணம் மேற்கொண்டு வருகின்ற போது மறைமுதுவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எம்
ஏ அச்சன் செய்து கொண்டிருந்தார்.
1805 துலாம் மூன்றாம் தேதி கோட்டயம் பழைய செமினாரியில்
தங்கத் துவங்கினார். மார் திவன்னாஸியோஸ் ஆயரோ மறைமுதுவரின் அறைக்கு அருகே உள்ள
மற்றொரு அறையிலும் தங்கியிருந்தார்.
சொத்துக்களைக் கைப்பற்ற போட்டி
1653 ஆண்டில் நடைபெற்ற வளைந்த சிலுவை
சபதத்திற்குப் பின்னர் மலங்கரை திருச்சபையில் யாக்கோபாயா திருச்சபை நுழைந்தது. 1665 ல் மார் கிரிகோரியோஸ் மறைமுதுவர் தான் அதற்கான காரணியாக
விளங்கினார் என மலங்கரை திருச்சபை வரலாறு தெளிவாக்குகின்றது. அதற்கு முன்னர் அந்தியோக்கியாவின் மறைமுதுவருக்கு ஆன்மீகம்
அல்லது உலகம் சார்ந்த சொத்துக்களின் மீது எந்தவிதமான அதிகாரமும் இல்லாமல்
இருந்தது.
வளைந்த சிலுவை சபதத்தைத் தொடர்ந்து புதிய
கூற்றினர் என ஒரு பிரிவினர் உருவாகவும் அவர்கள் யாக்கோபாயா நம்பிக்கையை ஏற்றுக்
கொண்டு அந்தியோக்கிய மறைமுதுவரின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர்.
திருச்சபையை ஆண்டு வந்த சில ஆயர்கள் ஒரு சில
தனிப்பட்ட காரியங்களுக்காக சில வேளைகளில் மறைமுதுவரின் சொத்து அதிகாரத்திற்கு
சம்மதிக்கவும் செய்தனர். ஆனால் அவர்கள் முழுமையாக சொத்து அதிகாரத்தை
மறைமுதுவருக்குத் தரத் தயாராகவில்லை என்ற மனநிலையையும் கொண்டிருந்தனர்.
அப்துல்லா மறைமுதுவர் கேரளாவில் யாக்கோபாயா
திருச்சபையின் மொத்த சொத்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான நோக்கத்தோடு தான்
வந்திருந்தார். அவர் வந்த ஒரு சில நாள்களிலேயே தனது எண்ணத்தை வெளிப்படையாக
அறிவிக்கவும் செய்தார்.
யாக்கோபாயா ஆயர்கள் அனைவரும் ஒப்பந்தப்
பத்திரத்தில் கையெழுத்திட்டு சொத்து அதிகாரத்தை மறைமுதுவரிடம் ஒப்படைக்குமாறு அவர்
ஆணையை பிறப்பித்திருந்தார். அவ்வாறு ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திடாத நபர்களை
ஆயர் பதவிலிருந்து விலக்கி விடுவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். மறைமுதுவரின்
ஆணைக்கு இணங்கி மார் அத்தனாசியோஸ், மார்
சேவேரியோஸ், மற்றும் மார் கூறிலோஸ் ஆகிய ஆயர்கள் ஒப்பந்தப்
பத்திரத்தில் கையெழுத்திடவும் அதனை மறைமுதுவரிடம்
ஒப்படைக்கவும் செய்தனர்.
ஆனால் அறிவாளியான ஆயர் வட்டச்சேரில் மார்
திவன்னாசியோஸ் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. திருச்சபை சார்ந்த அனைத்து
காரியங்களையும் சட்ட திட்டங்களையும் அறிந்திருந்த நமது கதாநாயகன் தான் ஆயர்
அவர்களுக்கு இதற்கான ஆலோசனை வழங்கியிருந்தார். அதற்கான மூன்று முக்கிய காரணிகள்
உள்ளன.
1.
அந்தியோக்கிய மறைமுதுவரின்
சொத்து அதிகாரம் மலங்கரை திருச்சபையின் மரபுக்கு எதிரானது. இந்நாள் வரையிலும்
கேரளாவில் யாகோபாயா திருச்சபை ஆட்சி செய்து கொண்டிருந்த எந்த ஒரு ஆயருக்கும்
இத்தகைய ஒப்பந்தப் பத்திரம் நல்கவில்லை.
2.
சொத்து அதிகாரம் மறைமுதுவருக்கு
வழங்குகின்ற போது நமது திருச்சபையின் அனைத்து வருமானங்களையும் வெளிநாடுகளுக்கு
கொண்டு செல்லவும் நமது திருச்சபை பல நிலைகளிலும் ஆன்மீக முறையிலும் மழுங்கிப் போகும் சூழலும் ஏற்படும்.
3.
சொத்து அதிகார ஒப்பந்தப்
பத்திரம் மறைமுதுவருக்கு நல்கலாம் என சம்மதித்துக் கொண்டால் வருங்காலத்தில்
குருக்களின் ஆட்சி முறை சிக்கலை உருவாக்கும். மறைமுதுவருக்கு விருப்பமுள்ளவர்களை
மட்டுமே ஆயர் நிலைக்கு உயர்த்த முடியும் என்பது மட்டுமல்ல. நிர்வாகம் தொடர்பாக மறைமுதுவருக்கும்
ஆயர்களுக்கும் இடையே சண்டை ஏற்படவும் இறுதியில் திருச்சபையின் ஆட்சி முறையை
குழப்பங்கள் நிறைந்த சூழலுக்கு சென்றடையும்.
இந்த மூன்று காரணங்களால் தான் எம் ஏ அச்சன்
ஆயர் அவர்களுக்கு இத்தகைய ஆலோசனைகளை வழங்கியிருந்தார். இந்த காரணிகளைப் பற்றிச்
சிந்திப்பதற்கு காரணியாக இன்னொரு
நிகழ்வும் நடந்தது.
அதிகாரம் மறைமுதுவருக்கா? ஆயர் மாமன்றத்திற்கா?
எம். டி செமினேரியின் உயர்நிலைப் பள்ளியில்
நமது கதாநாயகன் ஆன்மாவின் மீட்பு பற்றி கற்பித்துக் கொண்டிருக்கின்ற போது
அருளடையாளங்களைப் பற்றியும் குருத்துவ அருள்பொழிவு பற்றியும் விவாதிக்க வேண்டிய
சூழல் உருவானது. திறமை வாய்ந்த மாணவர் கேட்ட கேள்வி, ஆயர்களை
அருள்பொழிவு செய்வதற்கு யாருக்கு அதிகாரம் உள்ளது?
யாக்கோபாயா திருச்சபையில் ஆயர்களை
அருள்பொழிவு செய்யவும் தடை செய்யவும் அதிகாரம் தனக்கே உண்டு என மறைமுதுவர்
வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, நமது எம் ஏ அச்சன் அத்தகைய
அதிகாரம் மறைமுதுவருக்கு இல்லை என பதிலளிக்க எம் டி செமினாரியின் முதல்வரான நமது
கதாநாயகனுக்கு எவ்வாறு தைரியம் வந்தது?
தான் கூறிய பதில் வெகு சீக்கிரமாக
மறைமுதுவரின் செவிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அதன் மூலம் நமது கதாநாயகன்
விசாரணைக்கு உட்படுவார் என்றும் அவர் அறிந்திருந்தார். எனினும் உண்மையை மறைத்து
வைத்து மாணவருக்கு பதில் வழங்கி மறைமுதுவருக்கு அன்புக்குரியவராக மாற அவர்
தயாராகவில்லை.
மறைமுதுவர் தனக்கு எதிராக தடையாணை
பிறப்பித்தாலும் உண்மையை வெளிப்படுத்துவேன் என்ற திடநிச்சயத்தால் மாணவர்களுக்கு
அவர் இவ்வாறு பதில் வழங்கினார். “ஆயர்களை அருள்பொழிவு செய்வதற்கான அதிகாரம் ஆயர்
மாமன்றத்திற்கு உரியது ஆகும். இரண்டு அல்லது மூன்று ஆயர்கள் இணைந்து ஒரு ஆயரை
அருள்பொழிவு செய்ய முடியும். நிசேயா திருச்சங்கம் இவ்வாறு
தீர்மானித்திருக்கின்றது. மலங்கரையைச் சார்ந்த மூன்று ஆயர்கள் ஒன்றிணைந்தே
அல்வாரிஸ் என்ற ஆயரை அருள்பொழிவு செய்தனர்.
இத்தகைய விவரங்கள் உடனடியாக மறைமுதுவரின்
அறிவுக்கு சென்றடைந்தது. மறுநாளே நமது கதாநாயகன் மறைமுதுவரை சந்திக்க வேண்டும் என
ஆணை பிறப்பிக்கப்பட்டது. தான் அறிந்து கொண்ட உண்மையை யாரிடமும் வெளிப்படையாக
கூறுவதற்கான திடமனத்தோடும் தண்டனை கிடைப்பதாக இருந்தால் அவற்றை சகித்துக்
கொள்வதற்கான பரிபூரண மனத்தோடும் மறைமுதுவரின் முன்னிலையில் நமது கதாநாயகன் ஒரு
குற்றவாளியைப் போன்று நின்றார்.
மறைமுதுவர் கோபத்துடன் அவரோடு இவ்வாறு
கேட்டார். மறைமுதுவர்களுக்கு மட்டுமல்ல உயர் பேராயர்களுக்கும் பேராயர்களுக்கும்
மூறோன் அருள்பொழிவு செய்யலாம் எனவும் ஆயர்களை அருள்பொழிவு செய்யலாம் எனவும்
நீங்கள் பள்ளிக்கூடத்தில் கற்பித்ததாக கேட்டது உண்மையா?
தைரியத்தோடு இவ்வாறு அவர் பதிலளித்தார்.
மூறோனைப் பற்றி நான் அவர்களோடு பேசவில்லை. ஆயர்களின் அருள்பொழிவு பற்றி மட்டுமே
நான் பேசினேன்.
மறைமுதுவர் : சரி! அப்படியாயின் தாங்கள்
அப்படி கற்பிக்க வேண்டிய காரணம் என்ன?
முதல்வர்: திருச்சபை சட்டநூலில் அவ்வாறு
குறிப்பிடப்பட்டிருக்கின்றது. திருச்சபை சட்ட திட்டங்களுக்கு எதிராக நான் எதுவும்
கற்பிக்கவில்லை.
திருச்சபை சட்டங்களை ஆதாரமாக்கி தைரியத்தோடு
பதிலளித்த நமது கதாநாயகனுக்கு பதில் மொழி வழங்க முடியாத மறைமுதுவர் அவரது
பக்கத்தில் நின்றிருந்த கோனாட்டு மல்பானிடம் இவ்வாறு கூறினார். “இவரது வழி
அகன்றது. இவர் ஒரு ஞான சமுத்திரம் ஆவார்.”
அப்போது அவுகீன் இரம்பான் மறைமுதுவரோடு
ஆயரின் அதிகாரத்திற்கு எதிராக எதுவும் கூறப்படவில்லையே! எனக் கூறினார். உடனடியாக
மறைமுதுவர் நான் உங்களை மன்னித்திருக்கின்றேன்! ஆசீர்வதிக்கின்றேன்! முழங்கால்
படியிடவும்! என ஆணையிட்டார்.
தான் எந்த விதமான தவறும் செய்யவில்லை
எனினும் அவரது ஆசீர்வாதம் தேவை எனக் கூறியதனால் அவரது முன்னிலையில் முழந்தாழ்
படியிட்டு ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார்.
மறைமுதுவரின் விருப்பப்படி அனைத்து
ஆயர்களும் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டு வழங்கிய பின்னரும் மார்
திவன்னாசியோஸ் பேராயர் தனது திடநிச்சயத்தில் அணுவளவும் மாற்றமின்றி
நிலைத்திருந்தார். எம் ஏ அச்சனும் சமுதாயத்தின் ஒரு சில பிரமாணிகளும் பேராயர்
அவர்களோடு உறுதுணையாக நின்று ஊக்கமூட்டி வந்தனர். எப்படியாவது பேராயரை தன்
வயப்படுத்த வேண்டும் என மறைமுதுவரும் அவரது துணையாளர்களும் திட்டமிட்டனர். ஆனால்
அவர்களுடைய முயற்சிகள் எல்லாம் பலனற்றுப் போயின. இறுதியில் கோபத்துடன் மறைமுதுவர்
பேராயரோடு இவ்வாறு கூறினார். “இதனுடைய பலனை நீங்கள் அனுபவிக்கப் போகிறீர்கள்.
எருசலேமின் மார் இவானியோசின் கதை நீங்கள் அறிந்தது தானே” எனக் கூறினார்.
சமுதாயத்தின் சொத்துக்கள் அனைத்தையும்
கைவசப்படுத்த வேண்டும் என மறைமுதுவரும் அவரது துணையாளர்களும் மீண்டும் முயற்சிகள்
மேற்கொண்டனர். முதலாவதாக பழைய செமினாரியை கைப்பற்ற முயற்சித்தனர். அதற்காக
மறைமுதுவரோடு இணைந்து ஆயர்கள் அனைவரும் தங்குவதற்காக பழைய செமினாரியில்
வந்தடைந்தனர். மறைமுதுவரும் ஆயர்களான ஒஸ்தாத்தியோஸ், கூறிலோஸ்,
அத்தனாசியோஸ், யோவாக்கீம் ரம்பான், அவுகேன் ரம்பான், சீமைக்காரர்களாகிய இரண்டு
ரம்பான்மார்கள் மற்றும் கோனாட்டு மல்பான் ஆகியோர் தனித்தனி அறைகளில்
தங்கத்துவங்கினர்.
மார் திவன்னாசியோஸ் ஆயரும், மட்டக்கல் மல்பான் மற்றும் சில திருத்தொண்டர்களும் தங்கி இருந்த அறைகள்
தவிர அனைத்து அறைகளும் மறைமுதுவரின் துணையாளர்களின் கைகளில் அகப்பட்டு விட்டது.
அச்சக முதல்வரை தங்கள் பால் ஈர்த்து அச்சக அறையின் திறவுகோலையும் தங்களிடம்
வைத்துக் கொண்டனர். தொடர்ந்து செமினாரியைக் கைப்பற்றுவற்கான வழக்குகள் ஆரம்பித்தன.
இந்த வழக்குகள் முடிவுக்கு வர வேண்டுமென்றால் மார் திவன்னாசியோஸ் ஆயரை தடை செய்ய
வேண்டும் என மறைமுதுவர் தீர்மானித்தார். அவ்வாறு 1911 இடவம் 28ஆம் தேதி அன்று வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ் அவர்களுக்கு எதிராக தடை
ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இருவரும் அருகருகே தங்கியிருந்த போது தபால்
மூலமாக பதிவு செய்யப்பட்ட தடையாணை மார் திவன்னாசியோஸ் ஆயருக்கு மறைமுதுவரால் அனுப்பப்பட்டது.
இழிவான தடையானை
“நமது திருச்சபை வரலாற்றில் இழிவான தடையாணை”
என்ற தலைப்பில் திரு கே சி மாம்மன் மாப்பிள்ளை என்பவர் தனது வாழ்வின் நினைவுகளை
பற்றி குறிப்பிட்டப் பகுதியில் கீழ்க் குறிப்பிடும் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் முகாமிட்டிருந்த எதிரணியினரான
இரு படைகளைப் போல - மறைமுதுவரும் அவருடைய துணையாளர்களும் ஆயரும் அவருடைய
துணையாளர்களும் - இரண்டு கூட்டத்தினரும் பழைய செமினாரியில் தான் வாழ்ந்து வந்தனர்.
இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து உணவு உண்ணவும் ஒரே ஆலயத்தில் தினமும்
வேளைச்செபங்களில் பங்கெடுத்து வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுடைய இதயங்களும்
செயல்களும் ஒன்றுக்கொன்று விடுபட்டு நிற்கின்ற துருவங்களை போல அகன்று
போய்க்கொண்டிருந்தது.
அப்போதுதான் மறைமுதுவரின் தடையாணையை பதிவு
தபால் மூலமாக தனது அறைக்கு அருகில் தங்கி இருந்த ஆயர் பெற்றுக் கொள்ளவும்
செய்தார். இச்செய்தி காட்டுத் தீ போல நகரம் எங்கும் பரவியது. அன்று நாங்கள் - மனோரமா பகுதியில் உள்ளவர்கள் - இச்செய்தியை
அறிந்த உடனடியாக அருள்தந்தை பி.டி. வர்கீஸ், மே ஏ
ஃபிலிப்போஸ் எம் ஏ பி எல் மற்றும் கே. வி சாக்கோ பி ஏ, பி
எல் டி போன்றவர்கள் பழைய செமினாரிக்கு வந்தடைந்தோம். (இவர்களுள் மூவர் பின்னர்
கத்தோலிக்கத் திருச்சபையோடு ஒன்றிப்படைந்தனர்)
அன்று குறைந்த தூரம் கூட என்னால் நடக்க
மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும் உடனடியாக செய்தி அறிந்தவுடன் பழைய செமினாரியை
நோக்கி நடந்து சென்றேன். சுங்கம் பாலம் முதல் மேற்கு நோக்கிய வழி முழுவதும் சேறும்
சகதியும் நிறைந்ததாக காணப்பட்டது. இருப்பினும் இவற்றையெல்லாம் தாண்டி ஆயர்
அவர்களது பக்கத்தில் வந்தடைந்தேன்.
அங்கு நமது சமுதாயத்தின் வருங்கால நிலையை
எண்ணியும் மறைமுதுவரின் தடையாணையை பெற்று வெந்துருகும் இதயத்தோடு இருந்தாலும்
தைரியத்தோடு அவர் காணப்பட்டார். தொடர்ந்து என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும்
என்பதைப் பற்றி அவர்களோடு ஆலோசனை நடத்தினோம். அப்போது நான் இவ்வாறு கூறினேன்.
“இவ்வாறு எந்தவிதமான அடிப்படைக் கொள்கையும் இல்லாமல் பொய்யான காரணங்களுக்காக
மலங்கரை திருச்சபையை தடை செய்து பிரித்து அழிக்கும் குருத்துவ அதிகாரம் கொண்ட
அந்தியோக்கிய திருச்சபை தொடர்பு இன்னும் நிலை நிற்கின்ற போது நானும் எனது
தலைமுறையினரும் இத்திருச்சபையில் அங்கத்தினர்களாக இருக்க விரும்பவில்லை.”
ஆயர்குழுவினர் அன்று இரவு பழைய செமினாரியில்
ஒன்றாக கூடி ஆலோசனை நிகழ்த்தினர். மறைமுதுவரின் தடையாணையை ஏற்றுக் கொள்ள மறுத்து
வெளிப்படையாக போராட்டம் நடத்துவதற்கு அன்று இரவு தீர்மானிக்கப்பட்டது. சுருங்கக்
கூறின் ஒரு சண்டை உருவாக்க வேண்டும் என்ற ஒரு நிலைதான் அன்றைய தீர்மானமாக
இருந்தது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. அன்று
ஞாயிறு திருவழிபாட்டு முடிந்ததும் தடையாணையை பாவா குழுவினர் வாசிக்க வேண்டும் என
சி. ஜே குரியன் போன்ற பாவா குழுவினரின் முக்கிய பிரமாணிகளின் தீர்மானமாக இருந்தது.
இரு குழுவினரும் அதிகமாக ஆலயத்திற்கு வந்து கூடினர். சண்டை நிகழும் என இரு
குழுவினரும் அறிந்திருந்தனர். ஆயர்குழுவினர் என்ன சூழல் வந்தாலும் அதனை
சந்திப்போம் என்ற தைரியத்தோடு வெளிப்படையாக நின்ற வண்ணம் காட்சி அளித்தனர்.
வெடிப்பதற்கு தயாராகும் எரிமலையைப் போன்ற
ஒரு சூழல் அங்கு ஏற்பட்டது. அன்று ஆயர் ஆலயத்திற்குள் வரவில்லை. பழைய செமினாரியில்
அமர்ந்திருந்தார். ஆலயத்தில் திருவழிபாடுகள் ஆரம்பித்தன. கோனாட்டு மல்பான் போன்ற
பாவா குழுவினரின் பிரமாணிகள் தூயகத்துள் நின்றதனால் வெளியே நின்றிருந்த இறைமக்கள்
எந்த அளவுக்கு கோபத்தோடு நின்றனர் என்பதை முதலில் அவர்களால் புரிந்து கொள்ள
முடியவில்லை. ஆனால் மக்களோடு நின்றிருந்த சி ஜே குரியன் மக்களின் கோப நிலையை
மக்கள் கூட்டத்திலிருந்து அறிந்த உடன் ஒரு காகிதத் துண்டு ஒன்றில் மக்கள்
கோபத்தோடு காணப்படுகின்றனர் என எழுதி துயகத்துள் கோனாட்டு மல்பானிடம்
ஒப்படைத்தார். அவரோ அதனை வாசித்து உடனடியாக கிழித்தெறிந்தார்.
அங்கே அமர்ந்திருந்த அருள்தந்தை பிடி
கீவர்கீஸ் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டார். மல்பான்
கிழித்தெறிந்த துண்டு பிரசுரங்களை அப்படியே எடுத்து வைத்திருந்தார். பின்னர் அதனை
சேர்த்து வாசித்தபோது தடையாணை இப்போது வாசிக்க வேண்டாம் என்ற குறிப்பு
எழுதப்பட்டிருந்தது. அக்குறிப்பை பல நாட்களும் நமது அருட்தந்தை பி.டி வர்கீஸ்
அவர்கள் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
(மலையாள மனோரமா வார இதழ் 1956 அக்டோபர் ஆறு பக்கம் 32 முதல் 33 வரை)
அந்தியோக்கிய
யாக்கோபாயா மறைமுதுவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் செயல்களையும் அறிந்தவர்கள்
யாரும் அப்துல்லா மறைமுதுவரின் இத்தகைய கீழ்த்தரமான செயலை கண்டு வியப்புறுவதில்லை.
யாக்கோபாயா மறைமுதுவர்கள் ஒவ்வொருவரும் ஏகாதிபத்தியம், சுய விருப்பம் மற்றும் கட்சி மனப்பான்மை போன்றவற்றை அவர்களது
உடன்பிறப்புக்களாக அவர்களுடைய செயல்களில் காணப்பட்டன. 13 ஆம் நூற்றாண்டில் ஒரு
கோடிக்கும் மேலாக இறைமக்களை கொண்டிருந்த யாக்கோபாயா திருச்சபை தற்போது 20,000 க்கும் குறைவாக மாறக் காரணம் மறைமுதுவர்களின் இத்தகைய கீழ்த்தரமான
செயல்களே ஆகும்.
கேரளாவுக்கு எப்போதெல்லாம் மறைமுதுவர்கள்
வருகை புரிந்தனரோ அப்போதெல்லாம் ஒரு புதிய திருச்சபை பிரிவு உருவானதாக மலங்கரை
திருச்சபை வரலாறு எடுத்துக் கூறுகின்றது.
1665ல் வந்த மார் கிரிகோரியோஸ் மறைமுதுவர்
16 நூற்றாண்டுகளாக உரோமையில் திருத்தந்தையின் திருஆட்சியின் கீழே இருந்த கேரளா
கிறிஸ்தவ மக்களிடையே பிரிவினைகளின் விதைகளை விதைக்கச் செய்து அவர்களை யாக்கோபாயர்களாக
மாற்றினார்.
1751ல் அந்தியோக்கியாவிலிருந்து வந்த மார்
கிரிகோரியோஸ் காட்டுமங்காட்டு ரம்பான் என்பவரை மார் கூரிலோஸ் என்ற பெயரில் ஆயராக
அருள்பொழிவு செய்யவும் அதன் மூலம் “தொழியூர் அல்லது அஞ்ஞூர் திருச்சபை” என்ற ஒரு
புதிய திருச்சபை சமூகம் உருவாகவும் காரணமானார்.
1875 ல் மலங்கரையின் மார் அத்தனாசியோஸ் ஆயரை
தடை செய்ததன் மூலம் மறுமலர்ச்சிக் குழுவினர் என்ற பெயரில் “மார் தோமா திருச்சபை”
உருவானது.
1910 இல் இங்கு வந்த அப்துல்லா மறைமுதுவர்
வட்டச்சேரில் ஆயரை தடை செய்யவும் அவ்வாறு ஆயர் குழுவினர் அல்லது “ஆர்த்தடோக்ஸ்
திருச்சபை” என்ற பிரிவினை உருவாகவும் காரணமானார்.
1932 ல் வந்த எலியாஸ் மறைமுதுவர் நீண்ட
காலம் தங்கியிருக்க முடியாமல் மரணம் அடைந்ததனால் இன்னும் ஒரு புதிய பிரிவினை
உருவாகவில்லை.
பாபா குழுவும் ஆயர் குழுவும்
தடையாணைக்குப் பிறகு பாவா குழு (மறைமுதுவர்
- பாவா எனவும் அழைக்கப்பட்டார்) எனவும் ஆயர் குழு எனவும் பிரிவினை உருவானதன்
காரணமாக திருச்சபைக்கு உள்ளே மிகப்பெரிய சண்டை ஏற்படும் சூழல் உருவானது. ஆயர்
வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ் அவர்களுக்கு எல்லாவிதமான ஆலோசனைகளையும் வழங்கி
அவரது வலங்கையாக செயல்பட்ட எம் ஏ அச்சன் அவர்களது உயிரை அழிப்பதற்காக திட்டங்கள்
திரை மறைவுக்குள் நடந்து கொண்டிருந்தன.
திருச்சபை சமூகத்தைச் சார்ந்த பலவிதமான
ஆவணங்களையும் விலை உயர்ந்த பொருட்களையும் பழைய செமினாரிலிருந்து நமது கதாநாயகன்
எம் டி செமினாரியில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார். இத்தகைய ஆவணங்களை
அவரிடமிருந்து பறித்தெடுப்பதற்கு பல்வேறு விதமான முயற்சிகள் நடைபெற்றன.
மார் திவன்னாசியோஸ் அவர்களுக்கு பாதுகாவலராக
திருவல்லாவிலிருந்து ஆனப்பாப்பி என்ற ஒரு நபரை அழைத்து வந்து பழைய செமினாரியில்
தங்க வைத்திருந்தனர். எதிரணியினர் ஆனப்பாப்பியை இரவு நேரத்தில் கொலை செய்தனர்.
பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவரது தலை 13 பகுதிகளாக சிதறியதாக கூறப்பட்டது. இத்தகைய வருந்தத்தக்க செயல்களை நினைவு
கூர்ந்து நமது கதாநாயகன் கிரி தீபம் என்ன நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்.
மலங்கரை சுறியானி சமுதாயத்தின் சண்டைகள்
வளர்ந்து பின்னர் பழைய செமினாரி வளாகத்தில் இரத்தம் சிந்தும் அளவுக்கு
மாறிவிட்டது. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வெறுப்பு காரணமாக ஒரு மனிதனை கொலை செய்ய
வேண்டிய நிலை ஏற்பட்டது. சுறியானி கிறிஸ்தவர்களின் இறை பயம் இல்லாத ஒரு நிலை, இறை அன்பு இல்லாத ஒரு நிலையைத் தான் இத்தகைய நிரபராதியான ஆனப்பாப்பி என்ற
நபரை துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த நிகழ்வுக்கு தள்ளியது. இருப்பினும் எவருமே இந்த நிலையை எண்ணி
மனஸ்தாபம் கொள்ளவில்லை. (குன்றத்து விளக்கு பக்கம் 23 24)
சீர்திருத்தப் பாறையில் இரகசிய ஆலோசனைக்
கூட்டங்கள்
எம் டி செமினாரி கட்டிடத்திற்கும் மார்
எலியா சிற்றாலயத்திற்கும் இடையே தென்பகுதியில் ஏறக்குறைய இரண்டு அடி உயரத்தில் ஒரு
அகன்ற பாறை அமைந்திருந்தது. அதனை “சீர்திருத்தப் பாறை” (பரிஷ்காரப்பாற) என்பர்.
பாவா குழுவினருக்கும் ஆயர் குழுவினருக்கும்
இடையேயான போட்டிகள் துவங்கியவுடன் நாள்தோறும் மாலையில் 5:00 மணி முதல் இரவு 9 மணி வரை இப்பாறையின்
மீது அமர்ந்து ஆயர் குழுவில் உள்ள பிரமாணிகளும் அங்கமர்ந்து பல விஷயங்களைப்
பற்றியும் விவாதங்கள் நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது.
திரு கே சி மாமன் மாப்பிள்ளை பிஏ, பி பி ஜோன் பிஏ, கே சி மாத்தியூ பி ஏ பி எல்,
ஏ பிலிப்போஸ் எம் ஏ பி எல், கே வி சாக்கோ பி ஏ
எல் டி, கே எம் மாத்துள்ளு மாப்பிள்ளை ஆகியோர் ஆயர்
குழுவினரின் முக்கிய பிரமாணிகளாவர்.
மறைமுதுவருக்கு எதிரான செயல் திட்டங்களை
உருவாக்குதல். கட்டுரைகள் மற்றும் நூல்களை உருவாக்குதல். எதிர்ப்புக் கூட்டங்களை
நடத்துதல். ஆயர் குழுவினரை வலுப்படுத்துதல் போன்றவை பற்றிய ஆலோசனைகள் இந்த
பாறையின் மீது வைத்து தான் தினந்தோறும் நடந்து கொண்டிருந்தது. முற்றிலும்
இரகசியமாகவே இவை நடத்தப்பட்டன. இக்குழுவில் ஆலோசிக்கப்பட்ட மற்றும்
தீர்மானிக்கப்பட்ட காரியங்கள் ஒவ்வொன்றும் பழைய செமினாரியில் தங்கியிருந்த மார்
திவன்னாசியோஸ் ஆயர் அவர்களை அடுத்த தினத்திலேயே தெரிவிக்கவும் செய்திருந்தனர்.
எம் ஏ அச்சனின் திருச்சபை சட்டங்கள் பற்றிய
அறிவும், மீ கே சி மாம்மன் மாப்பிள்ளை அவர்களுடைய
எழுத்துக் கலையும் மீ ஏ ஃபிலிப்போஸ்-ன் சட்ட ஞானமும், மே கே
வி சாக்கோ, மாத்துள்ளு மாப்பிள்ளை மற்றும் கே சி மாத்தியூ
ஆகியோருடைய செயல் திறமைகளும் இணைந்த பலனாக ஆயர் குழுவினரின் கூட்டத்தை சார்ந்த
மக்களின் எண்ணிக்கை அனுதினம் கூடிக் கொண்டே வந்தது.
“சுறியானி திருச்சபை சம்ரக்ஷகன்” என்ற மாத
இதழில் “மறைமுதுவர் என்ன செய்தார்” என்ற தொடர் கட்டுரையானது மறைமுதுவரின்
ஆட்சியோடும் செயல்களோடும் இறைமக்களுக்கு அவரோடு உள்ள வெறுப்பையும் உருவாக்க
காரணியாக அமைந்தன.
யாக்கோபாயா திருச்சபையின் நன்மையை மட்டுமே
இலட்சியமாக்கி தனது வாழ்வை ஒரு பொருட்டாக கருதி செயல்பட்ட காரணத்தால், தான் அனுபவித்த ஒரு சில அனுபவங்களை நகைச்சுவை கலந்த முறையில் “குன்றத்து
விளக்கு” என்ற தனது நூலில் குறிப்பிட்டு எழுதி வைத்துள்ளார்.
எனது உயிர் தராசில் ஆடிக் கொண்டிருந்தது
ஒரு நாள் இரவு எம்டி செமினாரிக்கு சொந்தமான
கட்டிடத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய அறை ஒன்றில் நான் தூங்கிக்
கொண்டிருந்தேன். முன்பு ஒரு முறை எனது அறையிலிருந்து பெட்டி திருட்டுப் போனது.
அதன் பின்னர் நான் ஏதேனும் ஒரு நபரை எனது அறையில் பாதுகாப்பிற்காக தூங்க வைப்பது
வழக்கமாக இருந்தது. அன்று எனது அறையில் திருத்தொண்டர் சேப்பாட்டு பிலிப்போஸ்
என்பவர் என்னோடு தங்கி இருந்தார்.
நிறுவனத்தில் உள்ள அனைவரும் தூக்கத்தில்
ஆழ்ந்திருந்தனர். இலைகளின் அசைவு கூட கேட்பதில்லை. பரிபூரணமான அமைதி. திருடர்கள்
அடைக்கப்பட்டு இருந்த நுழைவு வாயிலின் கொளுத்தைக் கம்பியால் எடுத்து மாற்றி உள்ளே
நுழைந்தனர்.
இருவரும் கண் விழித்தால் வெட்டலாம் என
தங்களது செய்கை மூலம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இவர்களோடு கூட
வந்திருந்த மற்றவர்கள் அறையிலிருந்த பெட்டிகள் ஒவ்வொன்றாக அறையிலிருந்து வெளியே
தூக்கிச் சென்றனர்.
எப்படியோ பாதுகாப்புக்காக இருந்த
திருத்தொண்டர் அவர்கள் விழித்து எழுந்த போது இரண்டு நபர்கள் கத்தியோடு அவர்களது
முன்னிலையில் நிற்கின்றனர். மற்றவர்கள் ஒவ்வொரு பொருளாக அறையிலிருந்து வெளியே
கொண்டு வைத்துக் கொண்டிருந்தனர். பயத்தினால் அவரது திறந்த கண்கள் உடனடியாக அடைந்து
போயின. எங்களது நிலை மரணமே என அவர் முடிவெடுத்து விட்டார். நடு இரவு இப்படி ஒரு
காட்சி கண்டால் பயப்படாமலா இருப்பார்கள்! அப்படியே பயத்தில் அவர் மயங்கிப்போனார்.
பின்னர் எழும்பவே முடியவில்லை.உரத்த குரலில் அலறி
கூக்குரலிட அவரால் முடியவில்லை. மரணத்தின் வாயிலை மிதித்து விட்டோம் என்று அவரும்
தீர்மானித்து விட்டார்.
தேவையான பொருட்களையும் எடுத்துக் கொண்டு
திருடர்கள் வெளியேறினர். அனைவரும் வெளியேறியவுடன் திருத்தொண்டர் அவர்கள் அதுவரை
பயத்தினால் பார்த்துக் கொண்டிருந்தவர் எழும்பி எம்.ஏ அச்சனோடு நடந்த நிகழ்வுகளை
பயத்துடன் எடுத்துக் கூறினார்.
பக்கத்து அறையில் தங்கி இருந்த மானேஜரை
அழைப்பதற்காக முயன்றார். வெளியேறுவதற்கான எந்தவிதமான நுழைவு வாயில்களையும் திறக்க
முடியவில்லை. அறைகளிலிருந்து வெளியேறுவதற்கான அனைத்து வாசல்களையும் அடைத்த பின்னர்
தான் திருடர்கள் உள்ளே நுழைந்தனர் என்பது புரிந்து விட்டது. திருத்தொண்டராக தங்கி
இருந்த அருள்தந்தை வாழக்குழியில் யோசேப் அவற்றையெல்லாம் திறந்த பின்னர் மட்டுமே
எங்களால் வெளியேறுவதற்கு முடிந்தது.
பெட்டியை எடுத்து ஒருவன் ஓடிக்கொண்டிருந்த
போது “பிடியுங்கடா அவனை” என நான் உரக்கக் கத்தினேன். எனது கூக்குரலைக் கேட்டவுடன்
அவர்களும் சுறியானிப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டியை கீழே போட்டுவிட்டு
ஓட்டம் பிடித்தனர்.
தங்களது கையிலிருந்த ஒரு பெட்டியை அவர்கள்
தூக்கிக்கொண்டு வெளியேறி எம் டி செமினாரியின் சாலை வழியாக வெளியே ஓடினர். “திருடன்
திருடன்” என அலறியவாறு மேனேஜரும் அவர்களுடைய பின்னால் ஓடினார். மானேஜர் ஒரு திருடனை பிடித்து விட்டார். திருடனோ
பயத்துடன் நின்ற மானேஜரையும் தூக்கிக்கொண்டு ஆலய வளாகத்திற்கு ஓடிச் சென்றான்.
திருடன் எப்படியோ தப்பி ஓடிவிட்டான். மானேஜரும் எப்படியோ திரும்பி வந்து விட்டார்.
இம்முறையும் திருடர்களுக்கு எந்தவிதமான
நன்மையும் ஏற்படவில்லை. புத்தகப் பெட்டிகள் அனைத்தும் திரும்பக் கிடைத்தன. அவர்கள்
எடுத்துச் சென்ற பெட்டியில் முக்கியமான பொருள்கள் எதுவும் இல்லாமல் இருந்தது.
அதிகம் பயனில்லாத ஒரு பெட்டியாக வைக்கப்பட்டிருந்தது.
எந்தவித இழப்பும் ஏற்படவில்லை என்றாலும்
அந்த நிகழ்வு பல நேரங்களிலும் எனது மனதை அலட்டிக் கொண்டே இருந்தது. எதற்காகவோ சில
நாட்கள் கூட இவ்வுலகில் வாழ்வதற்கு இறைவன் தந்த ஒரு இரவு என நான் உணர்ந்து
கொண்டேன். (கிரிதீபம் பக்கம் 14 முதல் 17 வரை)
இந்த நிகழ்வில் கதாநாயகர்களான சேப்பாட்டு
பிலிப்போஸ் திருத்தொண்டரும், வாழக்குழியில் ஜோசப்
திருத்தொண்டரும், கிளியிலேத்து சாக்கோ மானேஜரும் பின்னர்
கத்தோலிக்கத் திருச்சபையோடு ஒன்றிணைந்தனர்.
பொருட்களை திருடிய திருடர்களுள் ஒருவன்
“நல்ல திருடன்” என்பதைப் போன்று அவனும் கத்தோலிக்கத் திருச்சபையோடு ஒன்றிணைந்தான்.
கையிலிருந்த கோலை தட்டிப் பறித்தனர்
1087 மீனம் 17 வெள்ளிக்கிழமை ஒரு குதிரை
வண்டியில் பழைய செமினாரி நோக்கி சென்று கொண்டிருந்தேன். சிறிய மடத்தின் முப்பச்சன்
என்பவரும் உடன் இருந்தார். நமது திருச்சபை சார்ந்த காரியங்களை அறிந்து கொள்ள எம்டி
செமினாரிக்கு வருவதாகக் கூறினார். நாங்கள் இணைந்து பயணம் மேற்கொண்டோம். இருவருமாக செமினாரியை
அடைந்தோம்.
ஆயர் மேற்குப் பகுதியில் உள்ள வடக்கு
அறையில் தங்கியிருந்தார். நாங்கள் இருவரும் ஆயர் அவர்களோடு பல்வேறு விதமான
காரியங்களை பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ரவுடி ஒருவன் கத்தியை தன்னுடைய கையில்
வைத்துக்கொண்டு செமினாரியின் வடக்குப் பகுதியில் நடந்து கொண்டு இருப்பதை நாங்கள்
கண்டோம்.
ஏதோ அசம்பாவித சம்பவம் நடக்கப் போவதாக
நாங்கள் உணர்ந்து கொண்டோம். நாங்கள் இருவரும் அவ்விடத்திலிருந்து சற்று
நேரத்திற்குப் பின்னர் வெளியேறினோம். சுங்கக்கடவு என்னும் இடத்தை நாங்கள்
வந்தடைந்தவுடன் மாலை நேரம் ஆகிவிட்டது. ஓடிக்கொண்டிருந்த குதிரை வண்டி நின்று விட்டது.
சில ரவுடிகள் வண்டியை சுற்றி நின்று கொண்டு குதிரையை போக விடாமல் தடுத்தனர்.
வண்டிக்காரனோடு வண்டியை ஓட்டிச் செல்ல
உரக்கக் கூறியபோதும் அவரால் வண்டியை ஓட்டிச் செல்ல முடியாத சூழல். குதிரையாலும்
முன்னோக்கி நகர முடியவில்லை. ரவுடிகள் எங்களை சூழ்ந்து நின்றார்கள்.
“இவ்வழியாக செல்லக்கூடிய எங்களை தடுத்து
நிறுத்த உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது. எங்களை விட்டு விடுங்கள்! நீங்கள்
இவ்வாறு செய்வது மரியாதையற்ற செயல்”
இதைக் கேட்டவுடன் அவர்கள் எங்களை பார்த்து
கேலி செய்தனர். கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கமால்தீன் என்பவர்
அக்கூட்டத்தில் இருந்தார்.
“ஏன் எங்கள் வண்டியை தடுக்கிறீர்கள்?”
“வண்டியிலிருந்து நீங்கள் கீழே இறங்குங்கள்”
“எதற்காக?”
“நீங்கள் உங்கள் உடையை அவிழ்க்க வேண்டும்!”
“என்ன? நான் அதற்கு
தயாராக இல்லை”
ஒருவன் எங்களுடைய கையிலிருந்த கோலை
வலுக்கட்டாயமாக பிடுங்கி எடுக்க முயன்றான். சற்று தாமதத்திற்குப் பின்னர் அவர்கள்
கோலை வைத்துக் கொள்ளட்டும் என அதனை விட்டு விட்டோம். ரவுடிகளும் கோலை பெற்றுக்
கொண்டவுடன், “நீங்கள் வீடு திரும்பலாம்” எனக் கூறினர்.
அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் நாங்களும் தொடர்ந்து எங்களுடைய பயணத்தை
மேற்கொண்டோம்.
அன்று அக்கோலை விட்டுக் கொடுக்காமல்
இருந்திருந்தால் வேறு ஏதேனும் நிலை நிகழ்ந்திருக்கலாம். அந்த ரவுடிகளோடு எந்த
விதமான விரோதங்களும் எங்களுக்கோ அல்லது என்னுடைய குடும்பத்தினருக்கோ இல்லை. ஆனால்
இத்தகைய அச்சுறுத்தல்களை பல நேரங்களிலும் திருச்சபைக்காக என்னுடைய சமூகத்திற்காக
நான் சந்திக்க வேண்டிய சூழல் இருந்து கொண்டே இருந்தது. (கிரிதீபம் பக்கம் 19 முதல்
23 வரை)
திருத்தூதர் மார்த்தோமாவால் நிறுவப்பட்டதும்
அப்போஸ்தலிக்கமும் கத்தோலிக்கமும் உண்மை நம்பிக்கையை விளக்குவதாக நாம் பெருமை
கொண்டிருக்கும் மலங்கரை திருச்சபையின் அடித்தளத்தில் படிந்திருந்த இத்தகைய கறைகளை
அனுபவித்திட மேற்கூறப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறின.
அதிகாரம் 9
அப்தேதுமிசிகாவின் வருகையும் திரு ஆட்சி
அமைப்பு நிறுவுதலும்
யாக்கோபாயா திருச்சபையின் அதிகாரப்பூர்வமான
மறைமுதுவர் அப்தேது மிசிஹாவா? அப்துல்லாவா? என்ற பிரச்சனைக்குரிய விவாதங்கள்
கடந்த பல ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர்களிடையே கேள்விச் சின்னமாக நின்று
கொண்டிருக்கிறது. அப்துல்லா தான் உண்மையான மறைமுதுவர் என ஒரு கூட்டத்தினர்
கூறுகின்ற போது மற்றொரு கூட்டத்தினர் அப்தேது மிசிஹா தான் உண்மை மறைமுதுவர் என
எடுத்து கூறுகின்றனர். ஆயர் வட்டச்சேரில் மார் திவன்னாசியோசை தடை செய்வதற்கு
முன்பு வரை கேரளத்து யாக்கோபாயர்கள் அப்துல்லாவைத் தான் உண்மையான மறைமுதுவராக
ஏற்றுக் கொண்டிருந்தனர்.
அப்தேது மிசிகா தான் மறைமுதுவராக
இருந்திருந்தால் ஏன் புலிக்கோட்டு மார் திவன்னாசியோசும் முக்கிய தலைவர்களும்
வட்டச்சேரில் கீவர்கீஸ் ரம்பானையும் பவுலோஸ் ரம்பானையும் ஆயர் அருள்பொழிவு
செய்யும் சிபாரிசு கடிதத்தோடு அப்துல்லா மறைமுதுவரிடம் ஏன் அனுப்பினர்? அவர்கள் இருவரும் ஏன் அப்தேது மிசிஹா மறைமுதுவரிடம் ஏன் செல்லவில்லை?
அப்துல்லா மலங்கரைக்கு வந்த போது அவர் அங்கீகரிக்கப்பட்ட
மறைமுதுவராக இல்லையென்றால் ஏன் அவருக்கு ஆடம்பர வரவேற்பு வழங்கப்பட்டது? இவ்வாறு பல்வேறு விதமான கேள்விக்கணைகளை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும்.
அப்துல்லா மறைமுதுவர் வட்டச்சேரில் மார்
திவன்னாசியோஸ் ஆயரை தடை செய்த போது
மிகப்பெரிய வேதனையால் அவரது மனம் நொந்துபோனது. இருப்பினும் மனம் சஞ்சலப்படாமல்
தைரியத்தோடு காணப்பட்டார். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை அவருடைய மனதில் ஓடிக்
கொண்டிருந்தது.
யாக்கோபாயா திருச்சபையின் ஆயராக தன்னால்
தொடர முடியுமா? ஒரு புதிய குழுவை ஆரம்பித்தால் எத்தனை
நபர்கள் தனக்கு சார்பாக நிற்பார்கள்? சமுதாயத்தின்
சொத்துக்கள் அனைத்தும் என்னவாகும்? எதிர்காலத்தில்
எப்படிப்பட்ட வழக்குகளும் சண்டை சச்சரவுகளும் உருவாகும்? மறைமுதுவரிடம்
சொத்து அதிகாரம் முழுவதையும் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுப்பது ஆன்ம
சோதனைக்கு உட்பட்டதா? இத்தகைய கேள்விகள் ஒவ்வொன்றும் ஆயர்
அவர்களை அலட்டிக் கொண்டிருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன்னால் மத உபதேசக்
கருத்துக்கள் என்ற நூலில் மறைமுதுவரின் அதிகாரத்தைப் பற்றியும் தடையாணை வழியாக
அதிகாரத்தை இழக்கின்ற நிலை பற்றியும் இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
“திருச்சபையின் அருள்பொழிவுகளில் மேலான
அதிகாரம் அந்தியோக்கிய திருஆட்சி அமைப்பில் வாழும் மோறான் மார் இக்னாத்தியோஸ்
மறைமுதுவர் அவர்களுக்கு உரியதாகும். பிரச்சனைகளுக்கு உரியவராக காணப்படுபவரை தடை
செய்வதும் தடை செய்த பின் அவர்கள் எந்த ஒரு அருளடையாளங்களை நடத்த முடியாதவர்கள்
ஆவதும்; இறை மக்களோடு எந்தவித கூட்டமைப்பில் இருக்க
முடியாததும் ஆகும்.” (மத உபதேச கருத்துக்கள் பக்கம் 22 – 23)
இவ்வாறு செய்வதறியாத திகைத்து நின்ற ஆயரை
தைரியப்படுத்தி தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய வழிமுறைகளை நல்கி வழிநடத்தியவர்
நமது கதாநாயகன் ஆவார். திருச்சபை சட்டத்திற்கு ஏற்ப அப்தேதுமிஷிகா தான் உண்மை
மறைமுதுவர் எனவும் அந்தியோக்கிய மறைமுதுவரின் ஆட்சியிலிருந்து மலங்கரை யாக்கோபாய
திருச்சபையை விடுவிக்கப்படுவதற்கும் ஒரே வழி திரு ஆட்சி அமைப்பு உருவாக்குதல் என
வரலாற்று ஆசிரியரான எம்.எ அச்சன் உணர்ந்திருந்தார். அதற்காக அப்தேது மிசிகாவை
மலங்கரைக்கு கொண்டு வரவும் அவராலேயே உயர் பேராய திருஆட்சி அமைப்பு நிறுவவும் நமது
கதாநாயகன் கருத்துக் கூற அதற்கான முயற்சிகளும் மறைமுகமாக ஆரம்பிக்கப்பட்டன.
மார் திவன்னாசியோஸ் அவர்களுக்கு தடையாணை
வழங்கிய செய்திகளை உடனடியாக எம்.எ அச்சன் அந்தியோக்கியாவின் அப்தேது மிஷிகா
மறைமுதுவருக்கு தந்திச் செய்தி அனுப்பி அறிவித்திருந்தார். அவரது மனநிலையை அறிந்து
கொள்வதற்காக தான் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக தந்தி செய்தியாக
பதில் கிடைத்தது.
“மார் திவன்னாசியோஸ் ஆயரும் குழுவினரும்
ஆசீர்வதிக்கப்பட்டவர்களே! அப்துல்லா மறைமுதுவர் தடை செய்த ஆணை உண்மையற்றது.
சட்டத்திற்கு புறம்பானது.” இச்செய்தியை கேட்டறிந்த ஆயர் மார் திவன்னாசியோஸ்
ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
தொடர்ந்து அங்கு நடைபெற்ற அனைத்து
நிகழ்வுகளையும் விளக்கமாக எழுதி அப்தேது மிசிஹா அவர்களுக்கு தெரிவித்தார்.
அத்துடன் மறைமுதுவரும் உடனடியாக கேரளாவுக்கு வருகை தர வேண்டும் என்றும் திரு ஆட்சி
அமைப்பு இங்கே உருவாக்க வேண்டும் எனவும் கோரிக்கையை வைத்திருந்தார். மறைமுதுவரின்
செய்தி எதிரணியினரின் கைகளுக்குள் அகப்பட வாய்ப்பு உள்ளது என உணர்ந்த எம் ஏ அச்சன்
மாவேலிக்கரை ஈப்பன் உபதேசி என்பவருக்கு பதில் வழங்குமாறு அவரது முகவரியை
மறைமுதுவர் அவர்களுக்கு வழங்கியிருந்தார்.
அதற்கும் பதில் மொழி கிடைத்தது. ஈப்பன்
உபதேசி அவர்கள் ரகசியமாக அன்று இரவே நமது கதாநாயகனின் கையில் அதனை ஒப்படைத்தார்.
அதனுள் தான் மலங்கரைக்கு வருவதாகவும் திரு ஆட்சி அமைப்பு உருவாக்கத் தயாராக
இருப்பதாகவும், ஆனால்
அதற்கான பயணச் செலவு முன்னரே நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும்
எழுதப்பட்டிருந்தது. ஆயர் மார் திவன்னாசியோஸ் அவர்களின் அனுமதியின் படி 100 பவுன்
பயணச் செலவுக்காக அப்தேது மிசிஹா அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மலங்கரைக்கு வருவதாக அறிந்த அப்துல்லா
மறைமுதுவர் ஒருபோதும் அவரை மலங்கரைக்கு அனுப்ப வேண்டாம் என தனது இஸ்லாமிய
அன்பர்களிடம் தகவல் வழங்கினார். அதை முன்னிட்டு மிதியாத் என்னும் இடத்தைச் சார்ந்த
ஒரு சில இஸ்லாமிய பிரமாணிகள், “நீங்கள் எவ்விடவும் செல்ல வேண்டாம். எங்களோடே தங்கி இருக்க வேண்டும்” எனக்
கேட்டுக்கொண்டனர்.
அப்தேது மிசிஹா : நீங்கள் கூறுவதை கேட்டு
நான் நடந்தால் நியாயம் உருவாகுமா?
இஸ்லாமியர் : இல்லை.
அப்தேது மிசிஹா : நான் மலங்கரைக்குச்
செல்லலாம் என உறுதி அளித்து விட்டேன். இனி போகாமல் இருப்பது நன்றாகுமா?
இஸ்லாமியர் : இல்லை.
அப்தேது மிசிஹா : பயணச் செலவுக்காக நான்
கேட்டத் தொகையை விட கூடுதலாக அவர்கள் இதோ எனக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்கள் அனுப்பி வைத்த பயணச்செலவுக்கான
பவுனை அவர் எடுத்துக் காட்டவும் செய்கின்றார். அப்படியாயின் உங்கள் விருப்பம் போல
நிகழட்டும் என இஸ்லாமிய அன்பர்கள் திரும்பிச் சென்றனர்.
துருக்கி அரசிடமிருந்து கடவுச்சீட்டு
பெற்றுக்கொண்டு இரண்டு ரம்பான்மார்களுடன் இணைந்து மிதியாத்திலிருந்து
இந்தியாவுக்கு மறைமுதுவர் அப்தேது மிஷிகா
பயணம் புறப்பட்டார். கப்பல் மூலமாக கராச்சியை அடைந்து அங்கிருந்து இரயில் வழியாக
மும்பை வந்தடைந்தார். மும்பையில் வந்தடையும் நாளைப் பற்றி முன்கூட்டியே மார்
திவன்னாசியோஸ் ஆயர் அவர்களுக்கு தந்திச் செய்தி அனுப்பப்பட்டிருந்தது. எம் ஏ
அச்சன் அவரை வரவேற்று மும்பையிலிருந்து கொச்சிக்கு ரயில் மூலமாக பாதுகாப்பாக
அழைத்து வந்தார். கொச்சியில் அவரை வரவேற்ற ஆயர் மார் திவன்னாசியோஸ் கோட்டயத்திற்கு
அவரை அழைத்துச் செல்வதற்கான தயாரிப்புகளைத் தொடங்கினார்.
ஆனால் அவர் கோட்டயத்திற்கு வருவதாக
இருந்தால் அவரை தடை செய்ய வேண்டும் என மி சி ஜே குரியன் மாவட்ட
நீதிமன்றத்திலிருந்து தடை ஆணையை பெற்றிருந்தார். எனவே அவர் கோட்டயம் நோக்கி வராமல்
பருமலை என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கே திருஆட்சி அமைப்பு பற்றிய செயல் திட்டங்கள்
ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கெல்லாம் நமது கதாநாயகனே
முன்னிலையில் நின்று அனைத்தையும் செயல்படுத்தி வந்தார்.
கேரளா யாக்கோபாயா திருச்சபையில் சுமுகமான
நிலை ஏற்படுவதற்கு திருஆட்சி அமைப்பு நிறுவுதல் மட்டுமே ஒரே தீர்வு என அப்தேது
மிஷிகா மறைமுதுவர் அவர்களுக்கு அனுப்பிய கடிதங்களில் இருந்து தெளிவாக உள்ளது.
அதற்காகத்தான் மறைமுதுவரும் கேரளாவிற்கு வந்தார். கோட்டயத்தை சென்றடையும் போது
மீண்டும் கலவரங்கள் வெடிக்க வாய்ப்பு இருப்பதனால் கொச்சியிலிருந்து பருமலை நோக்கி
சென்ற போது முதலில் உயர் பேராயர் (காதோலிக்கோஸ்) ஒருவரை அருள்பொழிவு செய்ய
வேண்டும் எனக் கூறினார். முறிமற்றத்து மார் இவானியோஸ் அவர்களை நிரணம் ஆலயத்தில் வைத்து உயர் பேராயராக
அருள்பொழிவு செய்ய அனைவரும் திட்டமிட்டனர். இச்செய்தி சுற்றுமடல் வாயிலாகவும்
செய்தித்தாள் வழியாகவும் விளம்பரப்படுத்தினர். உயர் பேராயரை அருட்பொழிவு
செய்வதற்கும் திருஆட்சியமைப்பை நிறுவுவதற்கும் மறைமுதுவரும் முழு சம்மதத்தோடு
காணப்பட்டார்.
நிச்சயிக்கப்பட்ட நாளும் வந்தது.
மறைமுதுவரும் ரம்பான்மார்களும் ஆயர்களும் குருக்களும் முந்தின நாளே நிரணம்
ஆலயத்திற்கு வந்தடைந்தனர். மலங்கரையில் முதன் முதலாக நடைபெறுகின்ற உயர்பேராயர்
அருள்பொழிவை தரிசிக்க அவருக்கு சார்பாகவும் எதிரணியாகவும் என்ற ஆயிரக்கணக்கான
மக்கள் நிரணம் ஆலயத்திற்கு வந்தடைந்தனர்.
ஆனால் அதற்கு முந்தைய நாள் இரவு
மறைமுதுவரும் ரம்பான்மார்களும் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சூழல்
முற்றிலும் மாற்றமடைந்தது. உயர் பேராயரை அருள்பொழிவு செய்யும் நிகழ்வுக்கு இரண்டு
ரம்பான்மார்களும் எதிராக கருத்துக்களை முன் வைத்தனர். மீண்டும் அருள்பொழிவு
செய்வதாக இருந்தால் நீங்கள் பெரும் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும் என அவரை
எச்சரித்தனர். இத்தகைய சூழலில் உயர் பேராயரை அருள்பொழிவு செய்யாமலேயே
அவ்விடத்திலிருந்து தப்பி ஓடுவதற்கு மறைமுதுவர் ஆலோசித்தார். இந்த தகவல்களை மார்
திவன்னாசியோஸ் ஆயரையும் தெரியப்படுத்தினார். உயர் பேராயரை அருள்பொழிவு செய்யும்
நிகழ்வு தோல்வியடைந்ததை அறிந்த ஆயர் குழுவைச் சார்ந்தவர்கள் வருந்தவும், பாவா குழுவைச் சார்ந்தவர்கள்
வெற்றி முழக்கம் ஒலிக்கவும் செய்தனர்.
நமது கதாநாயகனோ மாவேலிக்கரைக்குச் சென்ற
பின்னர் ஞாயிறன்று அதிகாலையில் நிரணம் வந்தடைந்தார். மார் திவன்னாசியோஸ் அவர்கள்
நடந்த நிகழ்வுகளை வருத்தத்துடன் எம் ஏ அச்சனிடம் தெரியப்படுத்தினார். இந்த
நிகழ்வுகளை எல்லாம் திட்டமிட்டு செயல்படுத்துவதற்கு முன்னிரையில் நின்று செயல்பட்ட
நமது கதாநாயகன் இத்தகைய ஏமாற்றப்பட்ட நிகழ்வால் தன் வாழ்வில் என்றும் இல்லாத முறையில் மிகவும்
மிகவும் வருத்தம் கொண்டார்.
என்னை நம்பி திட்டங்களுக்கெல்லாம் உடன்
செயல்பட்ட மார் திவன்னாசியோஸ் ஆயரின் முகத்தில் நான் இனி எவ்வாறு நோக்குவேன்? சார்பாகவும் எதிராகவும்
நிற்பவர்களுடைய முன்னிலையில் எவ்வாறு நான் தலை நிமிர்ந்து நடக்க முடியும்? கோட்டயம் மாநகரில் எவ்வாறு நான்
நடமாட முடியும்? இத்தகைய
வருந்தத்தக்கக் கருத்துக்கள் ஒவ்வொன்றும் நமது கதாநாயகனின் மனதில் ஒவ்வொன்றாக
வந்து நின்றன.
இருப்பினும் தைரியத்தோடு மறைமுதுவரின்
அறைக்குச் சென்று அவரை சந்திப்பதற்காக கதவைத் தட்டினார். அப்போது சிந்தனையில்
ஆழ்ந்திருந்த மறைமுதுவரைத் தான் நமது கதாநாயகன் கண்டார். அவரது கைகளை முத்தம்
செய்த பின்னர் நம் கதாநாயகன் மறைமுதுவரோடு பின்வருமாறு கூறினார்.
நாங்கள் கேட்பது என்ன? இதை விடவும் மிகப்பெரிய இழிநிலை
வர முடியாது! வருவதற்கில்லை! உங்களுடைய ஆணைகளை எவ்வாறு நாங்கள் நம்ப முடியும்!
உங்களது பெயரில் எங்களுக்கு அன்பும் பக்தியும் வருமா?
உயர் பேராய திருஆட்சி அமைப்பு உருவாக்க
வேண்டும் என்று நாங்கள் உங்களோடு வேண்டியது இன்று அல்ல, முதல் முறையாக உங்களுக்கு
அனுப்பிய கடிதத்திலேயே நான் அதைக் கேட்டிருந்தேனே. தொடர்ந்து இதைப் பற்றிய
காரியங்களையே கடிதப் போக்குவரத்துகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. தாங்கள் அனுப்பிய
அனைத்து கடிதங்களிலும் அவற்றை செய்து தருவதாகவே நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்களே.
இங்கு வந்த பின்னரும் நானும் ஆயரும் இதைத்தானே உங்களோடு கேட்டிருந்தோம்.
இதுவரையிலும் எதிர்க் கருத்துக்களை கூறாமல் சரியான முகூர்த்த நேரத்தில் நீங்கள்
இவ்வாறு கூறுவது என்னவென்று எனக்குப் புரியவில்லை.
மறைமுதுவர்: அன்புக்குரிய எனது மகனே நான்
என்ன செய்ய முடியும்? உயர் பேராயர் திரு ஆட்சி அமைப்பு நிறுவுவதற்கு எனக்கு எந்த விதமான மாற்றுக்
கருத்தும் இல்லை. என்னைத் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
எம் ஏ அச்சன்: அப்படியானால் நாம்
ஆலயத்திற்கு செல்வோம்!
மறைமுதுவர்: நான் முழுவதும் கூறி
முடிக்கவில்லை. என்னோடு வந்த என் நாட்டவர்களுக்கு இந்த திருஆட்சி அமைப்பு நிகழ்வு
திருப்திப்படவில்லை. அவர்களுடைய கருத்துக்களையும் நான் மதித்தாக வேண்டுமே.
எம் ஏ அச்சன்: அவர்களுக்கு விருப்பமோ!
விருப்பம் இல்லையோ! என்னவானாலும் எங்களுடைய கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றித் தர
வேண்டும்.
மறைமுதுவர்: எனக்கு எந்த ஒரு மாற்றுக்
கருத்தும் இல்லை. நான் சற்றுத் தெளிவாக கூறிக் கொள்கின்றேன். என்னோடு வந்த இரண்டு
ரம்பான்மார்களும் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அது தெளிவாக
வெளிப்படுகிறது. அவர்களது கருத்துக்கு எதிராக நான் செயல்பட்டால் எனது நாடு
திரும்பும் போது கப்பலிலிருந்து என்னை கடலில் மூழ்கடித்துக் கொல்வர் என நேற்று
இரவு என்னை எச்சரித்திருக்கின்றனர். எப்படிப்பட்ட பெரிய ஆபத்து நமக்கு வருகிறது என
எனது மகன் சிந்திப்பாயோ!
எம் ஏ அச்சன்: இந்த ரம்பான்மார்களையா
நீங்கள் பயப்படுகிறீர்கள்! அதற்குத் தேவையே இல்லையே. அவர்கள் நினைப்பதால் எதுவும்
நடக்க முடியாது!
மறைமுதுவர்: நீங்கள் இவ்வாறு கூறுவதனால்
எனக்கு எவ்வாறு தைரியம் உண்டாகும். நான் எனது சொந்த நாட்டைச் சென்றடையும் வரை
உங்களால் என்னோடு வர முடியுமா? நான் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்
எம் ஏ அச்சன்: மும்பை வரை கட்டாயமாக நான்
உங்களோடு வருவேன். அங்கிருந்து கப்பலில் உங்களை வழியனுப்பிய பின்னர் மட்டுமே நான்
திரும்பி வருவேன். அங்கிருந்து மீண்டும் நான் உங்களோடு வரவேண்டும் என்று
கட்டாயப்படுத்தினால் நான் வரத் தயாராக இருக்கிறேன். உங்களது நாடு வரை நான்
உங்களோடு வருவேன். போதுமா?
மறைமுதுவர்: அவர்களைப் பற்றிய இன்னொரு
செயலும் எனக்கு ஐயம் உளவாக்குகிறது. சொல்லும்போது எல்லாவற்றையும் சொல்ல வேண்டும்
அல்லவா. எனது கையில் நான் வைத்திருக்கும் பணத்தை கொள்ளையடித்துச் செல்வதற்கு
அவர்கள் தயாரானால் முதுமை அடைந்துள்ள என்னால் என்ன செய்ய முடியும்?
எம் ஏ அச்சன்: எல்லாம் புரிந்து விட்டது.
நீங்கள் எதைப் பற்றியும் பயப்பட வேண்டாம். வெளிநாட்டிலிருந்து வெகு தூரம் பயணம்
செய்து திட்டமிட்ட நிகழ்வை நடத்திட முடியாமல் நீங்கள் திரும்பிச் செல்வதாக
இருந்தால் உங்களுக்கும் மலங்கரை திருச்சபைக்கும் மிகப்பெரிய இழப்பாக மாறிவிடும்.
ஒருபோதும் நீங்கள் கூறிய வாக்குறுதியை தவற விடுதல் கூடாது. ஆயிரக்கணக்கான
இறைமக்கள் வந்திருக்கின்றார்கள். ஆலயத்தை நோக்கிச் செல்வோம்
மறைமுதுவர்: ஆம் தயார்!
அவ்வாறு 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம்
தேதி ஞாயிறன்று நிரணம் ஆலயத்தில் வைத்து மார் திவன்னாசியோஸ் மற்றும் மார் கிரிகோரியோஸ் ஆயர்களின் சம்மத்த்துடன்
கண்டநாட்டு மார் இவானியோஸ் அவர்களை
மலங்கரையின் முதல் உயர் பேயாயராக, அல்லது காதோலிக்கோஸாக அப்தேது மிசிஹா மறைமுதுவர் அருள்பொழிவு செய்தார்.
அவ்வாறு திருஆட்சி அமைப்பு நிறுவியதன் ஆணையையும் மறைமுதுவர் கையெழுத்திட்டு
ஒப்படைத்தார். இவற்றுக்கெல்லாம் உறுதுணையாக நின்றவர் எம் ஏ அச்சன் ஆவார்.
ஆணையில் உள்ள ஒரு சிலவற்றை
குறிப்பிடப்படுகிறது.
முழுமையானவரும் துவக்கமும் முடிவும்
இல்லாதவரும் என்றும் நிலைத்திருப்பவருமான எல்லாம் வல்ல இறைவனின் பெயரால்
என்றென்றும் புகழுண்டாகட்டும்.
வலுவற்றவனாகிய அப்தேதுமிசிகா மூன்றாம்
இக்னாத்தியோஸ் மறைமுதுவரிடமிருந்து:
இறைவனின் அருளாசீர்களை ஒரு முறை கூட
உங்களுக்கு வழங்கிக் கொண்டு உங்களுடைய உண்மை அன்போடு இணைந்து ஒன்றைக் கூட நான்
அறிய விரும்புகின்றேன். அதாவது மிதியாத்தில் உங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்
கொண்டது முதல் மலபாரில் வாழும் ஆன்மீக மக்களாகிய உங்களிடையே அப்துல்லா மறைமுதுவர்
உருவாக்கிய குழப்ப நிலை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இறைவனுடைய
விருப்பத்தாலும் இறைவனுடைய அருளால் உங்களுடைய வேண்டுகோளுக்கு ஏற்ப மலபாருக்கு
வருவதற்கு நான் பயணம் புறப்பட்டு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் அமைதியாக
உங்களிடையே வந்தடைந்தேன். ஆயர் மார் திவன்னாசியோஸ் மற்றும் அவருடன் இணைந்து
நின்றவர்களுடைய ஒவ்வொரு நிலைகளையும் சோதித்து அறிந்த முறையில் பருமலை செமினாரியில்
வைத்து மன்றம் ஒன்று அழைத்து கூட்டப்பட்டது. கூட்டத்தில் வைத்து உங்களுடைய
தேவைகளையும் அப்துல்லா மறைமுதுவர் திருச்சபை சட்டங்களுக்கு எதிராக செய்த
செயல்களையும் நான் கேட்டு அறிந்தேன். மலபாரின் இறைமக்களிடையே உருவாகிய கலகங்களும்
கொலையும் எனது இதயத்தை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
வருத்தமான இதயத்தோடு நமது ஆண்டவர் இயேசு
மெசியாவிடம் வேண்டுதல் செய்த போது உங்களுடைய வேண்டுதல்களும் கோரிக்கைகளும்
நிவர்த்தி செய்வது நல்லது என தூய ஆவியார் வழியாக உணர்த்தப்பட்டது. அவ்வாறு
இறைவனுடைய அருளால் உங்களுடைய ஆயர் ஒருவரை பவுலோஸ் பசேலியோஸ் என்ற பெயரில் ஒரு
மஃப்றியான் அதாவது காதோலிக்கோஸாகவும் (உயர் பேராயர்) மார் கிவர்கீஸ் கிரிகோரியோஸ், மார் யோவாக்கீம் இவானியோஸ், மார் கிரிகோரியோஸ் ஃபீலக்ஸீனோஸ் என மூன்று
ஆயர்களையும் அருள்பொழிவு செய்தேன். ஒரு உயர் பேராயரை அருள்பொழிவு
செய்யாமலிருந்தால் மலபார் திருச்சபை பல காரணங்களாலும் தூய்மை நிலையிலிருந்து மாறி
நிற்க வேண்டிய சூழல் ஏற்படும் என நான் அறிந்து கொண்டேன். இப்போது நமது ஆண்டவரின்
அருளால் அன்பிலும் தூய்மையிலும் அந்தியோக்கிய திருச்சபையோடு அன்பு உறவில்
நிலைத்திருக்கிறது என நான் அறிந்து கொள்கின்றேன். நமது இதயத்தில் மகிழ்ச்சி
நிறைந்துள்ளது.
அன்பான இறைமக்களே அமைதியோடு வாழுங்கள். நான்
திரும்பிச் சென்று விடுகிறேன். நான் திரும்பிச் சென்றாலும் உங்களை ஒருபோதும் மறக்க
மாட்டேன் என்ற மனத்திடனோடு வாழுங்கள்.
உங்களது மேய்ப்பர்களான காதோலிக்கோசும்
ஆயர்களும் உங்களுடைய அனைத்துத் தேவைகளையும் நிவர்த்தி செய்வார் என நம்புகிறேன்.
ஆயர்களின் உதவியோடு காதலிக்கோஸ் நமது மறைத் தந்தையர்களின் திருச்சபை சட்ட
திட்டங்களுக்கு ஏற்ப உங்களுக்காக ஆயர்களை அருள்பொழிவு செய்யவும் தூய மூறோன்
அருள்பொழிவு செய்யவும் செய்வார். காதோலிக்கோஸ் தனது மரண நிலையை அடையும் போது அவரது
வழிமரபினராக ஒருவரை தேர்ந்தெடுத்து அருள்பொழிவு செய்ய உங்களுடைய ஆயர்களுக்கு
அதிகாரமும் உரிமையும் உண்டு. இந்த அதிகாரத்திலிருந்து அவர்களை மாற்றிட யாராலும்
முடியாது. ஆனால் அனைத்தையும் விவேகத்தோடும் சரியான முறையிலும் மலங்கரையின்
பேராயராக உள்ள திவன்னாசியோஸ் அவர்களுடைய தலைமையில் செயல்படும் அவையின் ஆலோசனைப்
படியும் செயல்பட வேண்டும்.
இந்த அறிவுரைகளை இறைவனுடைய அருளால்
உங்களுக்கு நல்குகின்றேன். காதோலிக்கோஸ் அவர்களுக்கும் பாறையாகிய திருத்தூதர்
பேதுருவின் மேல் கட்டப்பட்டிருக்கும் உண்மை நம்பிக்கையிலிருந்து நீங்கள் வழி
தவறிச் செல்ல வேண்டாம். உங்களுடைய உண்மை அன்போடு நான் ஆணையிடுவது என்னவென்றால்
உங்களுடைய தவறானச் செயல்களின் மூலம் அந்தியோக்கிய திருத்தூதுவ அரியணையோடுள்ள அன்பு
உறவிலிருந்து நீங்கள் விடுபட்டு போகக்கூடாது. மறைத்தந்தையர்களைப் போல கீழ்ப்படிதல்
உள்ளவர்கள் என நான் அறிந்து கொண்டேன். உங்களுக்கு அறிவுரையாக நான் கூறியது போதும்
என கருதுகிறேன். குறைந்த வார்த்தைகளில் அதிகம் உங்களால் அறிந்து கொள்ள முடியும்
“எனது ஆண்டவரால் அருள் வரம் பெற்றவர்களே, வாருங்கள்! உலகம் துவக்கம்
முதல் உங்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ள விண்ணரசை உரிமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்”
என்னும் மகிழ்வான செய்தியைக் கேட்க உங்களுக்கும் உங்கள் இறந்தோர்களுக்கும் அருள்
உண்டாகட்டும்.
புனித இறையன்னை மரியாவும் அனைத்து
புனிதர்கள் திருத்தூதர்கள் இந்தியாவில் பாதுகாவலரான மார் திருத்தூதர் தோமாவின்
வேண்டுதல்களால் ஆமீன்.
பருமலை செமினாரியிலிருந்து
1913 கும்பம் 8
மலங்கரையில் திருஆட்சி அமைப்பு உருவாக்கிட
நமது கதாநாயகன் மிகுந்த தியாகத்தின் பங்கு வகித்திருந்தார் என்பதை நம்மால்
உணர்ந்து கொள்ள முடிகிறது. ஒரு செயலை செய்யத் துணிந்தால் அதை செய்து முடிக்கும்
வரை ஓய்வின்றி பணியாற்றிய திறமையும் நமது கதாநாயகனுக்கு இருந்தது.
திரு ஆட்சி அமைப்பு உருவாக்கிய பின்னர்
ஓராண்டு காலம் அப்தேது மிஷிகா மறைமுதுவரும் ரம்பான்மார்களும் பல பங்குகளையும்
சந்தித்தனர். பலரிடமிருந்தும் அவர்கள் நல்ல ஒரு தொகையை நன்கொடையாக பெற்றுக்
கொண்டனர். பின்னர் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் சென்றனர். நமது கதாநாயகன்
மும்பை வரை மறைமுதுவரோடு இணைந்து பயணித்தார்.
மறைமுதுவரும் ரம்பான்மார்களும் இணைந்து
பயணித்தால் அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதை அறிந்து உணர்ந்திருந்த
நமது கதாநாயகன் மறைமுதுவரை பாதுகாப்பாக அனுப்புவதற்கு மற்றொரு வழியை
கண்டடைந்தார். மறைமுதுவரை பி அன்ட் ஓ
மெயில் என்ற கப்பலில் அனுப்பவும் ரம்பான்மார்களை மற்றொரு கப்பலில் அனுப்பவும்
நிச்சயித்து ரம்பான்மார்களோடு நமது கதாநாயகன் இவ்வாறு கூறினார்.
“இங்கிருந்து பலவிதமான கப்பல்கள்
செல்கின்றன. அதில் முக்கியமானது பி அன்ட் ஓ மெயில் என்ற கம்பெனியின் கப்பலாகும்.
அதில் வசதிகள் அதிகமாக இருப்பதனால் பயணச் செலவும் அதிகமாக இருக்கிறது. பயணச் செலவு
குறைந்த கப்பல்கள் அதிகமாக உள்ளன. சற்று நாட்கள் தாமதித்து அந்த கப்பல்கள்
வந்தடையும். அவற்றுக்கு வேறு எந்த விதமான குறைகளும் இல்லை. நீங்கள் பி அன்ட் ஓ
மெயில் என்ற கப்பலில் செல்ல விரும்புகிறீர்களா? இல்லை பயணச் செலவு குறைந்ததில்
போதுமா? மறைமுதுவர்
பயணச் செலவு மிகுந்த வசதியான கப்பலில் செல்லட்டும் என்ற தீர்மானத்தில் உங்கள் கருத்து
என்ன?”
ரம்பான்மார்கள் இவ்வாறு கூறினர்.
“மறைமுதுவர் பயணச் செலவு மிகுந்த வசதியான கப்பலில் செல்லட்டும். நாங்கள் பயணச்
செலவு குறைந்த கப்பலில் சென்றால் போதுமானது.”
மிகப்பெரிய ஒரு பாரம் தலையிலிருந்து
நீக்கப்பட்டது போல ஒரு ஆறுதல் நமது கதாநாயகனுக்கு உருவானது. அனைத்தையும்
மறைமுதுவரோடு நமது கதாநாயகன் தெரியப்படுத்தினார்.
இப்போது நான் உங்களோடு கப்பலில் வர வேண்டுமா?
இல்லை மகனே நான் திருப்தியாக உள்ளேன்!
அவ்வாறு வெவ்வேறு கப்பல்களிலாக மறைமுதுவரும்
ரம்பான்மார்களும் பயணம் மேற்கொண்டனர்.
அப்தேது மிசிஹாவை இங்கு அழைத்து வரவும்
திருஆட்சி அமைப்பு நிறுவிய பின்னர் அவரை பத்திரமாக திருப்பி அனுப்பியதும் நமது
கதாநாயகன் எந்த அளவுக்கு கடினமான உழைப்பை செய்திருந்தார் என்பது தெளிவாகின்றது.
இதன் படியாக யாக்கோபாய திருச்சபையில் அமைதி உருவாகும் என்ற நம்பிக்கை அவருக்கு
இருந்தது.
அப்துல்லா மறைமுதுவரோடுள்ள உறவைத்
தவிர்க்கவும் திரு ஆட்சி அமைப்பை அங்கீகரிக்கவும் கேரளாவின் யாக்கோபாயர்களான பாவா
குழுவினரை சம்மதிக்க வைக்க நமது கதாநாயகன் மேலும் முயற்சிகள் பல மேற்கொண்டார்.
ஆனால் இறைவனுடைய திட்டத்திற்காக அனைத்தும் கையளிக்கப்பட்டது.
அதிகாரம் 10
செராம்பூர் கல்லூரி பேராசிரியர்
அமெரிக்க நாட்டைச் சார்ந்த ஒரு
புரோட்டஸ்டன்ட் மறைப்பணியாளரான டாக்டர் ஜான் ஆர் மோட் அவர்களது தலைமையில்
கல்கத்தாவுக்கு அருகே செராம்பூர் என்னும் இடத்தில் வைத்து இந்திய கிறிஸ்தவ
மாணவர்களுக்கான மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. மாணவர்களின் ஆன்மீக நிலையைப் பற்றி
ஆய்ந்தறிவதற்கும் இந்தியாவில் நற்செய்திப் பணியை எந்த அளவுக்கு நிர்வகிக்க
முடியும் என்பதை பற்றிய வழிகளை கண்டறிவதற்குமாகவே இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் உள்ள பல கத்தோலிக்கரல்லாத திருச்சபை
தலைவர்களுக்கு டாக்டர் மோட் அழைப்பிதழ்களை அனுப்பினார். அதன்படியாக எம் ஏ அச்சனும்
மார் திவன்னாசியோஸ் ஆயரும் இணைந்து செராம்பூருக்குச் செல்லவும் ஒரு வாரம் நீண்ட
மாநாட்டில் கலந்து கொள்ளவும் செய்தனர்.
மேற்கு நாடுகளிலிருந்தும் கிழக்கு
நாடுகளிலிருந்தும் வந்திருந்த அறிஞர்களோடு பழகிட நமது கதாநாயகனுக்கு வாய்ப்பு
கிடைத்தது. செராம்பூர் கல்லூரியின் முதல்வரும் அதன் நிறுவுதலுக்கும்
வளர்ச்சிக்கும் முயற்சிகள் பல மேற்கொண்டிருந்த முனைவர் ஹவ்வல்ஸ் அவர்களோடு பழகவும்
வாய்ப்பு ஏற்பட்டது. எம் ஏ அச்சனின் திறமையும் அறிவும் பேச்சுத்திறமையும் முனைவர்
ஹவ்வல்ஸுக்கு மிகவும் விருப்பமானது. எப்படியாவது இக்கல்லூரியின் பேராசிரியராக எம்
ஏ அச்சனை நியமிக்க வேண்டும் என அவர் விரும்பினார். ஒருமுறை உணவு உட்கொள்ளும்போது
முனைவர் ஹவ்வல்ஸ் எம்ஏ அச்சனோடு இவ்வாறு கேட்டார். “உங்களது சொந்த நாட்டை விட்டு
இக்கல்லூரியில் பேராசிரியராக வர முடியுமா? அப்படியாயின்
இக்கல்லூரிக்கு மிகப்பெரிய லாபமாக மாறும்.”
எம்டி செமினாரியின் முதல்வர் என்பதை விட
பன்னிரு மடங்கு பதவியும் ஊதியவும் கிடைக்கின்ற மிகப்பெரிய வாய்ப்பு என எம் எ
அச்சன் அறிந்திருந்தார். மேலும் கேரளாவிலிருந்து பல நபர்களை செராம்பூருக்கு
அழைத்து வந்து அவர்களை கல்வி மேதைகளாக்க முடியும் எனவும் அவர் அறிந்திருந்தார்.
ஆனால் முனைவர் ஹவல்ஸ் அவர்களுடைய கேள்விக்கு சார்பாகவோ எதிராகவோ பதிலளிக்காமல்
இருந்தார். இதற்கு தான் பதிலளிக்க முடியாது எனது ஆயர் மார் திவன்னாசியோஸ்
அவர்களிடம் கேட்கவும் என அவரை சுட்டிக்காட்டினார். உடனடியாக அவரும் வேண்டுதல்
சமர்ப்பித்தார். ஆனால் அதனை நிறைவேற்றுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இருப்பினும்
சற்று தாமதத்துடன் பதிலளிக்கிறேன் எனக் கூறினார்.
செராம்பூரிலிருந்து கேரளா வந்தடைந்த பின்னர்
முனைவர் ஹவ்வல்ஸ் அவர்களுடைய பல கடிதங்களும் பெற்றுக் கொண்டார். எப்படியாவது ஆயர்
அவர்களை சம்மதிக்க வைத்து எந்த தடைகள் இருந்தாலும் அவற்றை நீக்கி செராம்பூருக்கு
வந்தடைய வேண்டும் என கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார். என்ன செய்வதென்று
அறியாமல் கருத்துக் குழப்பம் ஏற்பட்டது. செராம்பூர் செல்வதற்கு மூன்று காரியங்கள்
தடையாக இருப்பதாக அவர் உணர்ந்து கொண்டார்.
1.
மார் திவன்னாசியோஸ் அவரிடம்
இருந்து பிரிந்து செல்வதற்கான தயக்கம்.
2.
யாக்கோபாயா திருச்சபையின்
கடினமான இச்சூழலில் சமுதாயத்தில் அமைதியும் முன்னேற்றமும் ஏற்படுத்துவதற்கான
விருப்பம்.
3.
எம்டி செமினாரியை தரம்
உயர்த்துவதற்கான விருப்பம்.
தனது குருவும் தனக்கு ஊக்கம் வழங்கியவருமான
மார் திவன்னாசியோஸ் அவர்களிடமிருந்து சில காலமாவது பிரிந்து நிற்பது என்பது
கதாநாயகனுக்கு வருத்தம் விளைவித்தது. ஒவ்வொரு நிமிடமும் யாக்கோபாயத் திருச்சபையில்
பல்வேறு விதமான கலகங்கள் உருவாகிக்கொண்டிருந்த சூழல். மார் திவன்னாசியோஸ் ஆயரின்
உயிரை பறிப்பதற்காக முயற்சிகள் மேற்கொண்ட சூழல். இச்சூழல்களெல்லாம் நடைபெற்றபோது
தேவையான ஆலோசனைகள் வழங்கி பேராயரை ஆறுதல் படுத்தி செயல்படுத்துவதற்கு முன்னணியில்
நிற்பதற்குப் பதில் பேராசிரியராக பணியாற்ற தொலைதூரம் செல்வதற்கான அழைப்பு என்பது வருத்தத்தை
உருவாக்குவதே ஆகும்.
இத்தகைய சூழலில் தனது அடைக்கலமாக இருந்த எம்
ஏ அச்சனை அகற்றி விடுதல் என்பது மார் திவன்னாசியோஸ் அவர்களுக்கும் கடினமாக
இருந்தது.
இரண்டாவதாக யாக்கோபாய திருச்சபையில்
எப்படியாவது அமைதி சூழல் கொண்டு வர வேண்டும் என அவர் ஆர்வம் கொண்டிருந்தார்.
வழக்கும் போட்டிகளும் பொறாமையும் பெருகிக்கொண்டிருந்த சூழலில் தனது சொந்த
திருச்சபையின் மீட்புக்காக செயல்படாமல் பணியிட மாற்றம் பெற்றுச் செல்வது நன்றாக
அமையாது என்ற எண்ணமும் கதாநாயகனுக்கு இருந்தது.
எம். டி செமினாரியின் முதல்வரான நிமிடம்
முதல் அதனுடைய வளர்ச்சிக்காக விரும்பி செயல்பட்டார் நமது கதாநாயகன். அந்த
செமினாரியை ஒரு கல்லூரியாக தரம் உயர்த்துவதற்கு அவர் செயல் திட்டங்கள் பல
வகுத்திருந்தார். இக்கல்லூரியின் பேராசிரியராக நியமிப்பதற்காகவே திருத்தொண்டர்கள்
ஜான் மற்றும் கோசி ஆகியோரை திருச்சிராப்பள்ளி எஸ்பிஜி கல்லூரிக்கும் அனுப்பினர்.
அத்துடன் எம்டி செமினேரியோடு சேர்த்து எல்லாவிதமான வசதிகளும் உள்பட்ட குருத்துவ
பயிற்சியகம் நிறுவதற்கும் திட்டமிட்டிருந்தார். செராம்பூர் செல்வதாக இருந்தால்
இவ்வாறு ஆரம்பித்த அனைத்து முயற்சிகளும் பலனற்றுப் போகும் என அவருடைய எண்ணமும்
அவரை சிந்திக்க வைத்தது.
இச்சூழலில் தனது மனதில் உருவான சிந்தனைகளை
கிரிதீபம் என்னும் நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்.
“செராம்பூர் கல்லூரிக்கு செல்வதா? இல்லையா? என மிகப் பெரிய மனக்குழப்பத்தில் நான்
இருந்தேன். எப்போதும் எனது மனதில் இந்த சிந்தனை அலட்டிக் கொண்டே இருந்தது. பல
நாட்களாக ஏதேனும் ஒரு தீர்மானத்தை முடிவெடுப்பதற்கு என்னால் முடியாத சூழலில் நான்
இருந்தேன். இக்குழப்பமான சிந்தனையால் சரியான தூக்கம் இல்லாமல் உடல் வருந்தியது.
ஒவ்வொரு முறை தூங்கி எழும்புகின்ற போதும் செராம்பூர் கல்லூரியும் முனைவர் ஹவ்வல்ஸ்
அவர்களுடைய முகமே காட்சியாகத் தெரிந்தது. மறு பகுதியில் எம்டி செமினாரியும் மார்
திவன்னாசியோஸ் ஆயரும் காட்சி அளித்தனர்.
விடியற்காலையில் விழித்தெழுந்தவுடன் இத்தகைய
சிந்தனைகள் எனது மன அலைகளில் ஓடிக்கொண்டிருந்தன. அதிகாலையிலேயே சிற்றாலயத்திற்குள்
அமர்ந்திருந்து ஜெபிப்பதற்கும் தியானிப்பதற்கும் செல்வேன். பலமுறை 4 மணிக்கு
முன்னதாகவே தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த நாட்களும் உள்ளன. அன்றைய
காலகட்டத்தில் சிற்றாலயத்தில் ஜெபத்திற்கும் தியானத்திற்கும் செல்கின்ற போது
செராம்பூர் பயணத்தை பற்றியச் சிந்தனை தான் எனது மனதில் அலை வீசிக் கொண்டிருந்தது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் கடந்து செல்லச் செல்ல செராம்பூர் கல்லூரி எனது மனதிற்குள்
நீங்காத எண்ண அலையை கொண்டிருந்தது. பின்னர் என்னை விட்டுப் பிரியாத ஒன்றாக
செராம்பூர் கல்லூரியின் சிந்தனைகள் எனது வாழ்வில் அடித்தளமிட்டன.
என்னவானாலும் இறை விருப்பத்திற்கு
கீழ்ப்படுவதே என முடிவெடுத்து விட்டேன். முனைவர் ஹவ்வல்ஸ் அவர்களிடமிருந்து
தொடர்ந்து கடிதங்கள் வந்தவாறு இருந்தன. மீண்டும் எம் டி செமினாரியையும் எனது
சமுதாயத்தையும் விட்டுச் செல்ல முடியுமா? என்ற எண்ணமும்
வருத்தத்தை விளைவித்தன. இக்குழப்பமான சூழலைப் பற்றி பேராயர் மார் திவன்னாசியோஸ்
அவர்களிடம் எடுத்துக் கூற தைரியத்தோடு வந்தேன். முனைவர் ஹவல்ஸ் தனக்கு கடிதங்கள்
அனுப்பி வருவதாக பேராயர் அவர்களிடம் எடுத்துக் கூறினேன். பல்வேறு கேள்விகளைக்
கேட்டு இறுதியில் “அப்படியே ஆகட்டும்! மகிழ்வுடன் நான் அனுமதிக்கிறேன்! என
ஆணையிட்டார். (கிரிதீபம் பக்கம் 41 – 42) அவ்வாறு பேராயர் மார் திவன்னாசியோஸ்
அவர்களுடைய ஆசிகளோடு நமது கதாநாயகன் செராம்பூர் செல்வதற்கு தீர்மானித்தார்.
செராம்பூர் கல்லூரியில் பேராசிரியராக பணி
செய்வதனால் பல நன்மைகள் தனது சமுதாயத்திற்கு செய்ய முடியும் என்ற திடநம்பிக்கை
நமது கதாநாயகன் கொண்டிருந்தார். திறமை வாய்ந்த பல கேரள இளைஞர்களை செராம்பூர்
கல்லூரியில் நுழையச் செய்து நல்ல கல்வியை பெற்றுக் கொள்வதற்கு முடியும். அதற்காக
தான் வாங்கி இருந்த மாத ஊதியத்தில் ஒரு பகுதியை பிறருடைய கல்வி உதவிக்காக
பயன்படுத்தி வந்தார். மேலும் கல்லூரி நிர்வாகத்தோடு பேசி அவர்களுக்கும் சலுகை
முறையில் கல்வியை வழங்கி உதவுவதற்கும் தீவிரமாக செயல்பட்டார்.
ஆங்கில மொழிக்கு தனிப்பட்ட பயிற்சி
வழங்குவது மட்டுமல்ல இறையியல் கருத்துக்களை கற்பிக்கின்ற மற்றும் ஊக்கமூட்டுகின்ற
ஒரு பாப்டிஸ்ட் திருச்சபையின் நிறுவனமாக இக்கல்லூரி செயல்பட்டிருந்தது. பிரிவினை
சபையைச் சார்ந்த நிறுவனமாக இருந்தாலும் யாக்கோபாய திருச்சபையின் திருவழிபாட்டில்
கலந்து கொண்டு ஜெபிப்பதற்கு தனிப்பட்ட வசதிகள் செய்து தரப்படும் என்று முன்னரே
முனைவர் ஹவ்வல்ஸ் கூறியிருந்தார்.
பேராயரிடமிருந்து அனுமதி பெற்றவுடன் எம்டி செமினாரியின்
முதல்வர் பதவியை ராஜினாமா செய்து செராம்பூர் நோக்கிப் பயணமானார். எம்டி செமினாரியிலிருந்து
மெட்ரிக்குலேஷன் தேர்ச்சி பெற்ற திறமை வாய்ந்த கே ஏ யாக்கோபு திருத்தொண்டரையும்
(மார் தியோஃபிலஸ்) தன்னுடன் செராம்பூருக்கு அழைத்துச் சென்றார். செராம்பூர்
கல்லூரிக் கட்டிடத்தின் இரண்டாம் நிலையில் தங்கத் துவங்கினார். எம் ஏ அச்சனின்
நல்ல குணமும் பேச்சுத்திறமையும் கற்பிக்கும் திறமையும் பழகும் விதமும் மூலம்
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நெருக்கமானவராக மாறினார் என்பதில் ஐயமில்லை.
செராம்பூர் கல்லூரியில் பணியாற்றிய போதும்
அவரது மனம் எப்போதும் தனது சொந்த சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றியே
நிலைத்திருந்தது. தொடர்ந்து கேரளாவிற்கு பல கடிதங்கள் எழுதி அனுப்பியதன் வழியாக பல
திருத்தொண்டர்களும் பொதுநிலையினருமாக இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் செராம்பூர்
கல்லூரிக்கு வந்தடைந்தனர். அவர்களை கல்லூரியில் ஏற்றுக்கொண்டு அவர்களுக்குத்
தேவையான எல்லாவிதமான உதவிகளையும் எம் ஏ அச்சன் செய்து வந்தார். தனது ஊதியத்துடன்
கூடுதலாக அவர் பெற்றிருந்த ஒவ்வொரு தொகையையும் இப்படிப்பட்ட இளைஞர்களின் கல்வி
வளர்ச்சிக்காக அவர் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இதனைப் பற்றி கிரிதீபம் என்னும்
நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்.
“வரவு செலவு கணக்கைப் பற்றி நான்
சிந்திக்கின்ற போது, அன்று ஆண்டவர் நீரூற்றைப் போன்று வளமையான
ஒரு நிலையை எனக்குத் தந்திருந்தார் என்பது அற்புதமானதே. ஊதியமாக நல்ல ஒரு தொகை
எனக்காக கிடைத்துக் கொண்டிருந்தது. தேர்வு காலங்களில் விடைத்தாளை மதிப்பீடு
செய்வதற்காக நல்ல தொகை கிடைத்துக் கொண்டிருந்தது. முனைவர் ஹவ்வல்ஸ் அவர்களுடைய
சிபாரிசு மூலம் திரு லீச்சுமான் அவர்களிடமிருந்து திருத்தொண்டர்களின் கல்விக்காக
நல்லதொரு தொகை கிடைத்துக் கொண்டிருந்தது. ஏறக்குறைய 10,000
ரூபாயில் குறையாத பணம் தனக்கு கிடைத்துக் கொண்டே இருந்தது. இவை வழியாக எம்டி செமினாரி
மற்றும் பல்வேறு சமூகப் பணிகளுக்காக அவற்றை செலவிட்டு கொண்டிருந்தார். ஒருமுறை
பேராயர் அவர்கள் நான் பெற்றுக் கொள்ளும் வரவு செலவு கணக்குகளை கேட்டபோது வட்டிப்
பணத்தை விட கூடுதலான தொகை வருடம் தோறும் உங்களிடம் கிடைக்கிறதே என அன்பு
அதிகாரத்தால் அவரை பாராட்டவும் செய்தார்.
செராம்பூரில் தங்கியிருந்த
திருத்தொண்டர்களும் அருள்சகோதரர்களும் ஆங்கில மொழியை கூடுதலாக கற்றறியவும்
இறையியலைக் கூடுதலாக கற்கவும் செய்து கொண்டிருந்தனர். இத்தகைய இளையோர்களின்
எண்ணிக்கை அதிகமாகவே நமது கதாநாயகனால் அதற்குரிய செலவை தாங்கிக் கொள்ள முடியாத
சூழல் ஏற்பட்டதுண்டு. இத்தகைய சூழலில் கல்லூரி நிர்வாகத்திடமிருந்து கடனாக தனது
ஊதிய தொகையைப் பெற்று விடுமுறை நாட்களில் கற்பிக்கும் ஊதிய தொகையை வைத்து அதனை ஈடு
செய்து வந்தார். செராம்பூரில் மட்டுமல்ல அலகாபாத், கல்கத்தா
மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களிலும் கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கடன்
வாங்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டது. தனது வருமானத்தை விட அதிகமாக செலவு
செய்ததாக என்னுடைய உற்ற தோழர்கள் அறிந்திருந்தனர்.” (கிரிதீபம் பக்கம் 45 முதல் 46
வரை)
மாணவர்கள் தங்கி வாழ்வதற்காக தயார்
செய்யப்பட்ட வாடகை கட்டிடத்தில் சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. தியானம், வேளைச்செபங்கள், மறையுரைகள் மற்றும் திருப்பலிகள்
நடத்துவதற்கும் அதனை பயன்படுத்தி வந்தனர். கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த யாக்கோபாய
மாணவர்களுக்கு பிரிவினைவாத சிந்தனைகள் நுழையாத விதத்தில் தனிப்பட்ட கவனத்தை நமது
கதாநாயகன் அவர்களுக்கு எடுத்துக் கூறி வந்தார். அதனைப் பற்றி பின்வருமாறு தனது
நூலில் எழுதியுள்ளார்.
அன்று செராம்பூரில் தங்கியிருந்த
திருத்தொண்டர்களும் அருள்சகோதரர்களும் மலங்கரை திருச்சபை அன்னையின் அன்புக்குரிய
தலைமுறையினராக மற்றும் சமுதாயத்தின் உண்மைப் பணியாளர்களும் காப்பாளர்களுமாக
இருக்குமாறு அன்று என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் நான் திட்டமிட்டு
செயல்படுத்திக் கொண்டிருந்தேன். (கிரிதீபம் பக்கம் 47)
ஆங்கில மொழி கற்பிப்பதைப் போன்று சுறியானி
மொழியைக் கற்பிப்பதற்கும் நமது கதாநாயகன் தனிக்கவனம் செலுத்தி வந்தார். யாக்கோபாய
திருச்சபையின் திருவழிபாடும், இறை மறை பொருள்கள், விளக்க உரைகள் மற்றும் வரலாறு போன்றவை சுறியானி மொழியில்
அமைந்திருந்ததனால் அவற்றை அறிந்து உணர்வதற்கு குருவானவர்கள் சுறியானி மொழி
அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என நமது கதாநாயகன் உணர்ந்திருந்தார்.
மேலும் ஆங்கில மொழியைப் போன்று சுறியானி
மொழியை அறிந்திராவிட்டால் வருங்காலத்தில் திருச்சபை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க
வேண்டி வரும் என பேராயர் வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ் அடிக்கடி நமது
கதாநாயகனோடு கூறியுள்ளார். அவ்வாறு கல்லூரியில் சுறியானி மொழியை விருப்ப பாட
மொழியாக கற்றுக் கொள்வதற்கு நமது கதாநாயகன் முயற்சிகள் மேற்கொண்டார். அதற்காக
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வைஸ் சான்சிலராக இருந்த திரு ஆர்டோஷ் மூக்கர்ஜியோடு
கடிதப் போக்குவரத்து நடத்தினார். இறுதியில் சுறியானி மொழி விருப்ப பாடமாக
அங்கீகரிக்கப்பட்டது.
கல்கத்தா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து சென்னை
பல்கலைக்கழகத்திலும் சுறியானி மொழி விருப்பப் பாடமாக அங்கீகரிக்கப்பட்டது. நமது கதாநாயகன் சென்னை பல்கலைக்கழகத்தில்
சுறியானி மொழி உள்பட மற்று மொழிகளான “கிழக்கு நாடுகளின் மொழி அமைப்பின்” தலைவராக
பல ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.
சுறியானி மொழியை விருப்பப் பாடமாகக் கொண்டு
இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்ற ஏராளமான
நபர்கள் உள்ளனர். நமது கதாநாயகனின் தூண்டுதலால் உதவிகள் பெற்றுக் கொண்டும்
செராம்பூர் கல்லூரி போன்ற பல கல்வி நிறுவனங்களில் கற்று பல நபர்கள் திருச்சபையின்
புகழுக்காக பணியாற்றியுள்ளனர். இத்தகையோருள் ஆறு நபர்கள் தலைமைக் குருத்துவ
திருநிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுடைய பெயர்கள் பின்வருமாறு
சேர்க்கப்படுகின்றன.
1.
ஆயர் மார் சேவேரியோஸ், 2. மார் தியோஃபிலோஸ், 3. மார் ஒஸ்தாத்தியோஸ், 4. மார்
இவானியோஸ், 5. மார் தேவதோசியோஸ், மற்றும்
6. மார் ஃபீலக்ஸ்சீனோஸ்.
மேலும் பின்வரும் குருக்களும் கல்லூரிகளில்
கற்று உயர் படிப்பை சம்பாதித்தனர். 1. தச்சேரில் வர்கீஸ், 2. புலித்திட்டா ஆப்ரஹாம், 3. சந்தனப்பள்ளி டேவிட்,
4. டி வி ஜான், 5. டி ஜி கோசி, 6. எம் ஐ டானியல் கொற்றம்பள்ளி, 7. வி ஐ கோசி
சூரநாடு, 8. வி டி தோமஸ், 9. பிடி
தோமஸ் பணிக்கர், 10. காட்டுமங்ஙாட்டு ஜான், 11. எம் சி கீவர்கீஸ், 12. என் ஜி குரியன் மற்றும்
13. சிறிய மடம் ஸ்கரியா. இவர்களுள் காட்டுமங்காட்டு ஜான் மற்றும் தச்சேரில்
கீவர்கீஸ் ஆகியோர் குருவானவராக அருள்பொழிவு செய்யப்படுவதற்கு முன்னரே இறைவனடி
சேர்ந்தனர்.
சுறியானி மொழி, கிறிஸ்தவ திருச்சபை வரலாறு மற்றும் அரசியல் பொருளாதார விஞ்ஞானம் போன்றவை
பற்றிய பாடங்களை நமது கதாநாயகன் கல்லூரியில் கற்பித்து வந்தார். கத்தோலிக்க
திருச்சபையோடு இணைந்த சிந்தனையை தூண்ட வைத்த ஒரு சில அனுபவங்கள் அவருக்கு
கல்லூரியில் நடந்தன. திருச்சபை வரலாறு பற்றி கற்பிக்க கல்லூரியின்
பேராசிரியர்களுக்கு பூரண சுதந்திரம் இருந்தது. எந்த நூலை மையமாக்கி காரியங்களை
கற்பிக்க வேண்டும் என்று பேராசிரியர்களே தீர்மானிக்கலாம். அங்கு கல்லூரியில்
ஏராளமான பிரிவினை சபைகளின் திருச்சபை வரலாற்று நூல்கள் இருந்தாலும் டாக்டர்
அட்ரியன் புரோட்டஸ்க் என்று கத்தோலிக்க வரலாற்று ஆசிரியர் எழுதிய “The
greater eastern Church, the lesser eastern churches” என்ற நூலை
மையமாக வைத்து தனது பாடங்களை கற்பித்து வந்தார். பல கத்தோலிக்கரல்லாத
திருச்சபைகளிடையே திருவழிபாடு மற்றும் நம்பிக்கை வித்தியாசங்களும் கத்தோலிக்க
திருச்சபையும் கத்தோலிக்கரல்லாத திருச்சபைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களும்
மேற்குறிப்பிட்ட நூல்கள் வழியாக மாணவர்களுக்குத் தெளிவாக அவரால் எடுத்தியம்ப
முடிந்தது.
ஒரு நாள் திருச்சபை வரலாறு வகுப்பில் ஒரு
யாக்கோபாயா திருத்தொண்டர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார். இயேசு கிறிஸ்துவால்
நிறுவப்பட்ட திருச்சபை எது? யாக்கோபாய திருச்சபையா? ரோமன் கத்தோலிக்க திருச்சபையா? ஒரு பிரிவினை சபை
சார்ந்த கல்லூரியில் பேராசிரியரும் யாக்கோபாய திருச்சபையின் முக்கியமான
குருவானவருமான நமது கதாநாயகன் உடனடியாக பதில் வழங்க முடியாத கேள்வியாக
அமைந்திருந்தது. கல்லூரி மாணவர்களிடையே வகுப்பில் நீண்ட நேரம் விவாதப் பொருளாக
இந்த கேள்வி காணப்பட்டது. இறுதியில் பேராசிரியர் கீழேக் குறிப்பிடும் விதத்தில்
மாணவர்களுக்கு விடை வழங்கினார். “உண்மை கிறிஸ்துவின் திருச்சபை ஒன்று மட்டுமே
உள்ளது என திருவிவிலியத்திலும் திருச்சபை வரலாற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த உண்மை திருச்சபை யாக்கோபாயா திருச்சபை எனக் கூறுவதற்கு முடிவதில்லை.
ஆனால் அது உரோமன் கத்தோலிக்க திருச்சபையா என விடையளிப்பதற்கு நாம் இன்னும் அதிகமாக
கற்க வேண்டி உள்ளது.”
சுறியானிக்காரர்களான பெண்களுக்கும்
மேற்படிப்பு வழங்க வேண்டும். நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் அவர்களது சேவை
கிடைக்கக் கூடிய விதத்தில் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கும் வாய்ப்புகள் பற்றி
கதாநாயகன் ஆலோசித்தார். அதற்காக ஆங்கிலிக்கன் திருச்சபையின் ஐரோப்பிய அருள்கன்னியர்களால்
நிர்வகிக்கப்பட்ட கல்கத்தா மறைமாவட்ட கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய
அருட்சகோதரி மேரி விக்டோரியா அவரைச் சென்று காணவும் மேற்குறிப்பிட்ட காரியத்தைப்
பற்றி விளக்கமான கோரிக்கை வைக்கவும் செய்தார். அவர் மேற்குறிப்பிட்ட கல்லூரியில்
பெண்களுக்கு கற்க அனுமதி வழங்கலாம் எனவும் தனிப்பட்ட முறையில் அவர்களை கவனித்துக்
கொள்ளலாம் எனவும் சம்மதித்தார். மேலும் பாரிசோல் என்னுமிடத்தில் அருள்கன்னியர்
மடத்தில் துறவுப் பயிற்சியோடு இணைந்து ஆங்கில மொழிப் பயிற்சியும் நடப்பதாக அறிந்த
கதாநாயகன் அவ்விடத்திற்கு சென்று மதர் ஈடித்து அவர்களை சந்தித்து
சுறியானிக்கார்ர்களான பெண்கள் இந்நிறுவனத்தில் கல்வி கற்க அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அவ்வாறு சுறியானிக்காரர்களான
பல மாணவியர்களின் மேற்படிப்புக்கு அவர் காரணமானார்.
மேற்படிப்பும் கலாச்சாரமும் பயிற்சியும்
பெற்றுக்கொண்ட பெண்களால் கேரளா பெண்மணிகளிடையே கல்விப் பணிக்கு மிகவும் உதவிடும்
என்ற நம்பிக்கை நமது கதாநாயகனுக்கு அதிகமாக இருந்தது. மனோரமா நாளிதழின் நிறுவனரும்
சமூகத்தின் பிரமாணியும் மொழி அறிஞருமான திரு. கண்டத்தில் வர்கீஸ் மாப்பிள்ளை
அவர்களுடைய முயற்சியால் திருவல்லா அருகே திருமூல என்னுமிடத்தில் கட்டப்பட்ட
கட்டிடத்தை நாட்டிற்கும் சமூகத்திற்கும் பலன் உளவாக்கும் விதத்தில்
பயன்படுத்துவதற்கு முன்னரே அவர் இறைவனடி சேர்ந்தார். நிறுவனரின் எண்ணப்படி இந்த
கட்டிடத்தை பெண்களுக்கான உயர் நிலை பள்ளிக்கூடமாக மாற்றுவதற்கு நமது கதாநாயகன்
ஆலோசனை வழங்கினார். இதற்காகத்தான் கேரளாவிலிருந்து சுறியானிப் பெண்களை
கல்கத்தாவுக்கு அனுப்பி மறை மாவட்ட கல்லூரியிலும் பாரிசோலின் கன்னியர் மடத்திலும்
கற்றிட அனுமதி பெற்று அவர்களுக்கு வழங்கியிருந்தார். அடிக்கடி மேற்குறிப்பிட்ட
நிறுவனங்களை சந்தித்து மாணவியர்களின் நலன் விசாரிக்கவும் நம்பிக்கைப் பயிற்சிகள்
வழங்கவும் ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கவும் செய்து வந்தார்.
செராம்பூரிலிருந்து விடுமுறைக்காக
திருத்தொண்டர்களோடு இணைந்து அவர் விடுமுறைக்கு சொந்த நாட்டிற்கு வருவது வழக்கமாக
இருந்தது. அத்தகைய சந்தர்ப்பங்களில் பேராயர் வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ்
அவர்களை சந்திக்கவும் திருச்சபை சார்ந்த காரியங்களை பற்றி ஆலோசிக்கவும், பல பங்குகளில் சென்று மறையுரைகள் நிகழ்த்தவும் தனது சமூகத்தின்
வளர்ச்சிக்காக முடிந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார்.
தனது சொந்த சமூகத்தை வளர்த்த வேண்டும் என்ற
விருப்பத்துடன் இணைந்து நற்செய்திப் பணி சார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற
எண்ணமும் அவர் கொண்டிருந்தார். கேரளா மற்றும் மாநிலங்களில் உள்ள கிறிஸ்தவர்கள்
அல்லாத நபர்களிடம் நற்செய்திப் பணியாற்றிட தயாராக நிற்கின்ற ஒரு சமூகத்தை உருவாக்க
வேண்டும் என்ற கருத்தை நமது கதாநாயகன் முன் வைத்தார். தென்னிந்தியாவிலும் வட
இந்தியாவிலும் பல இடங்களிலும் பயணங்கள் மேற்கொண்ட போது கத்தோலிக்கர்களும் பிரிவினை
சபை சார்ந்த ஆயிரக்கணக்கான மறைப்பணியாளர்கள் இறைபணி செய்து அதற்கான பலனை பெற்றுக்
கொண்ட உண்மைகள் அவருடைய மனதில் உருவானது. பழமை வாய்ந்த மலங்கரை யாக்கோபாய
திருச்சபையிலிருந்து ஒரு மறைப்பணியாளர் கூட திருக்கொச்சி என்னும் மாகாணத்திற்கு
வெளியே மறைப் பணிக்காக சென்றதில்லை என்ற உண்மையை நமது கதாநாயகன் வருத்தத்துடன்
வெளிப்படுத்தினார். அதற்காக ஒரு மறைப்பணி சமூகத்தை உருவாக்க வேண்டும் என
தீர்மானித்து அதற்கான செயல் திட்டங்களை செராம்பூரிலிருந்து அவர் துவங்கினார்.
தன்னோடு இணைந்து கல்வி கற்றுக் கொண்டிருந்த கேரளா மாணவர்களுக்கிடையே இதற்கான பல
கருத்துக்களை அவர் விதைத்திருந்தார். நற்செய்திப் பணியாற்றிடும் எண்ணத்திற்காக
பங்குத்தந்தையர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என நமது கதாநாயகன் ஒரு கட்டுரை
ஒன்றை பங்குத்தந்தையர்களுக்காக “கதாபுருஷன் சுறியானி சுவிசேஷகன்” என்ற மாத இதழ்
வழியாக எழுதியிருந்தார்.
பங்குத்தந்தையர்களும் நற்செய்திப் பணியும்
(அருள் தந்தை பி டி கி வர்கீஸ் எம் ஏ)
கிறிஸ்தவ திருச்சபை உறுப்பினர்களின் ஆன்மீக
வாழ்வும் நற்செய்திப் பணியும் இணைந்த தொடர்பு மிகவும் நெருக்கமானது. நற்செய்திப்
பணி பற்றிய ஒரு திருச்சபையின் ஆக்கமும் ஊக்கமும் திருச்சபையின் பக்தியையும்
இறையன்பையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இறைவனோடு கொண்ட அன்பு குறைந்து போகவும்
உலகில் பாவத்தின் வலிமை கூடி வரவும் இதயபூர்வமான வேதனை தோன்றாமல் இருக்கவும்
செய்யக்கூடிய காலம் கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் போது அது ஆன்மீகத்தின் இழப்பே
ஆகும். கிறிஸ்தவ திருச்சபைக்கும் இது இழப்பே ஆகும்.
திருச்சபையில் பக்தி குறையவும்
திருச்சபையின் உறுப்பினர்கள் தங்களோடும் பிறரோடும் கிறிஸ்தவ மீட்பு பற்றிய
செய்தியை பறைசாற்றாமலும் பறைசாற்ற விருப்பம் இல்லாமலும் இருக்கும் காலம் திருச்சபை
மந்தமான நிலைக்கு தள்ளப்படுகிறது.
ஆன்மீகத்தில் ஆர்வம் இல்லாமல் தூங்கிக்
கொண்டிருக்கும் ஒரு திருச்சபையில் பக்தியைக் கூட்டவும் அதற்காக திருச்சபை
உறுப்பினர்களுக்கு தங்களது பொறுப்புக்களை உணரும் வண்ணம் அதனை புரிய வைக்கவும்
செய்வது ஆன்மீக தலைவர்களின் முக்கிய கடமை ஆகும். மற்ற ஜாதிகளையும் சமுதாயங்களையும்
மெசியாவின் அரசிற்கு நெருங்கி கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கும் போது
திருச்சபைக்கு தினமும் ஆன்மீக ஒளி கூடி வருவதற்கே வாய்ப்பு உள்ளது. இறை பக்தியால்
நற்செய்திப் பணியாற்றுகின்ற ஒரு திருச்சபை நற்செய்திப் பணி வழியாக ஆழ்ந்த பக்தி
கொண்டதாக மாறிவிடுகின்றது.
தற்போது உலகின் நான்கு திசைகளிலும்
நற்செய்தி பணியாற்றுவதற்கு அனைத்து திருச்சபையினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஜப்பான், சீனா மற்றும் மத்திய ஆசிய நாடுகள்
போன்றவற்றில் ரஷ்யன் திருச்சபையினர் மிகவும் ஆர்வத்தோடு நற்செய்திப் பணி செய்து
வருகின்றனர். உலகின் எப்பகுதியிலும் உரோமையர்கள் வியக்கத்தக்க விதத்தில்
நற்செய்திப் பணியை செய்து வருவது மறைத்து வைக்க முடியாத ஒன்றாக உள்ளது. அவ்வாறே
பல்வேறு விதமான பிரிவினை கொண்ட சீர்திருத்த திருச்சபையினர் ஆர்வத்தோடும்
சுறுசுறுப்போடும் நற்செய்திப் பணியை செய்து வருகின்றனர். இவ்வாறு ஒவ்வொருவரும்
அவரவர் நிறைவேற்ற வேண்டிய நிலையில் செயல்படும்போது நாம் மட்டும் அந்த பொறுப்பினை
செய்திட ஆர்வம் கொள்ளாததன் காரணம் என்ன? நமது திருச்சபை
தலைவர்களுக்கு இப்பணிகளை செய்திட ஆர்வம் உண்டா? திருச்சபையின்
உறுப்பினர்களுக்கு ஆர்வம் இல்லாத போது ஒவ்வொரு பங்கின் பங்குத்தந்தையர்களும் இதனை
செயல்படுத்த முயல்தல் வேண்டும். வாழும் தூய ஆவியானவரின் செயல் திருச்சபையினரிடையே
பலமுடன் செயல்பட பங்குத்தந்தையர்கள் உற்சாகத்தோடு அம்முயற்சியை செயல்படுத்த முன்
வர வேண்டும். உண்மையான இறை பக்தி கொண்ட பங்குத்தந்தையர்களுக்கு தங்கள் பங்கை
இவ்வாறு பக்தியுள்ளவர்களாக மாற்ற முடியும். ஆண்டவரின் அன்புக்காக தனது வாழ்நாளைக்
கூட இறைவனின் பெயரால் பலியாக ஒப்புக்கொடுக்கத் தயாரான மக்கள் ஏராளமானவர்கள்
உள்ளனர். (சுறியானி சுவிசேஷகன் 1085 மேடம்
இதழ்)
தியாகத்தோடும் உண்மையான இறை அன்பிலும் இறை
பக்தியிலும் நிறைந்த தன்னலமற்ற உள்ளத்தோடு மட்டுமே நற்செய்திப் பணியாற்றிட
முடியும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை. சட்டங்களால் மேதைகளாக வாழ்பவர்கள்
அல்லாமல் சொந்த விருப்பத்தாலும் நற்செய்திப் பணி நடத்துகின்ற போது அது வெற்றிகரமாக
அமையும் என்ற பேருண்மையை நமது கதாநாயகன் அறிந்திருந்தார். பிரிவினைத்
திருச்சபைகளில் உபதேசிமார்கள், நற்செய்தி பணியாளர்கள்
என்றும் பாஸ்டர்கள் என்றும் பல பெயர்களில் எந்தவிதமான கட்டுக்கோப்பும் இல்லாமல்
தங்களது சுய விருப்பத்திற்கு ஏற்ப நற்செய்தி பணியாற்றுவதற்கு முற்படும் போது பல்வேறு விதமான கடின சூழல்கள் நிலவுகின்றன
என்பது பேருண்மையே ஆகும். ஆனால் கத்தோலிக்க திருச்சபையோ பல்வேறு துறவு சமூகங்களை
உருவாக்கி நற்செய்திப் பணி ஆற்றுவதற்கு உலகெங்கும் சென்று மிகப்பெரிய பலனை
அனுபவித்து வருகிறது. இத்தகைய செயல்திட்டங்கனை சரியாக புரிந்து கொண்ட காரணத்தினால்
நற்செய்திப் பணிக்காக ஒரு துறவு சபையை உருவாக்க வேண்டும் என்ற திட நிச்சயத்தில்
நமது கதாநாயகன் இருந்தார். அதற்காகவே பதனி ஆசிரமம் பிற்காலத்தில் நிறுவப்பட்டது.
செராம்பூர் கல்லூரியில் ஆறு ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த நமது
கதாநாயகன் தனது பணியினை ராஜினாமா செய்து ஒரு துறவு சபை துவங்குவதற்காகவே தனது
சொந்த திருச்சபைக்கு திரும்பி வந்தார்.
அதிகாரம் 11
பெதனி ஆசிரமம் நிறுவுதல்
பெரியோர்களின் வாழ்வு நிலைகளை மதிப்பீடு
செய்யும்போது மதிப்பீட்டாளர்களுக்கு தெளிவாகின்ற மிகப்பெரிய பேருண்மை ஒன்று
உள்ளது. அவர்களுடைய கருத்துக்களுக்கும் நோக்கங்களுக்கும் செயல் திட்டங்களுக்கும்
எல்லை நிர்ணயிக்கவோ அவற்றை கட்டுப்படுத்தவோ எவராலும் முடியாத ஒன்றாகும். ஏதேனும்
ஒரு காரியத்தை இலட்சியமாக்கி செயல்படுத்திட புறப்படுவதற்கு முன்னால் அவர்கள்
அதனைப் பற்றி ஆழமாக சிந்திப்பர். அவற்றை செயல்படுத்துவதற்கான சரியான மார்க்கத்தை
கண்டுபிடிப்பார்கள். அதனை செயல்படுத்துவதற்கு முடிந்த அளவுக்கு முயற்சிப்பார்கள்.
அதிகமாக அதைப்பற்றி எண்ணுகின்ற போது தான் சரியான மார்க்கத்தை அவர்களால் உய்த்துணர
முடியும். அத்தகைய மார்க்கங்களை செயல்படுத்துவது தான் அவர்களுடைய குறிக்கோளாக
இருக்கும். குறிக்கோளை சென்றடையும் வரை அவர்கள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே
இருப்பர். சவால்களை தைரியத்தோடு சந்திப்பர். இறுதியில் எதிர்பார்த்தவை
செயல்படுத்தப்பட்டன என நிம்மதி பெருமூச்சும் விடுவர்.
சமுதாய முன்னேற்றத்திற்கான முயற்சிகள்
பேராயர் மார் இவானியோஸ் அவர்களுடைய
வரலாற்றில் துவக்கம் முதல் இறுதி வரை தெளிவாக காணக் கிடைக்கின்ற பேருண்மை
இதுவேயாகும். முதுகலை பட்டம் பெற்றுக்கொண்டு கேரளாவிற்கு திரும்பி வந்து எம். டி செமினாரியின்
முதல்வரான பிறகு அவரது சிந்தனைகள் கேரளாவில் உள்ள யாக்கோபாய திருச்சபையையும்
கிறிஸ்தவ சமுதாயத்தையும் தரம் உயர்த்தச் செய்வதற்கான புதிய மார்க்கங்களை
கண்டுபிடிக்க வேண்டும் என்பதாக இருந்தது. அந்தியோக்கிய யாக்கோபாய மறைமுதுவரின்
ஆட்சியின் கீழே கேரளாவின் யாக்கோபாய திருச்சபை நிலைநிற்கும் காலம் வரையிலும் எந்த
விதமான முன்னேற்றமும் இந்த திருச்சபையால் செய்ய முடியாது என அவர் சரியாக
உணர்ந்திருந்தார். தன்னால் அந்தியோக்கிய மறைமுதுவரின் கையிலிருந்து இந்த
திருச்சபையை மீட்டுக் கொள்ள வேண்டும் எனவும் உயர் பேராய திருஆட்சியமைப்பு நிறுவ
வேண்டும் எனவும் அதனுள் கேரள யாக்கோபாய திருச்சபையைக் கொண்டு வர அவர் முன்னிரையில்
நின்று செயல்பட்டார். வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ் அவர்களோடு இணைந்து தனது
உயிரை போலும் கவனிக்காமல் தைரியத்தோடு பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு எதிர்
அணியினரின் பலமான செயல்களுக்கு எதிராக நின்று பரிபூரண வெற்றியை பெற்றுக் கொள்ள
நமது கதாநாயகனால் முடிந்தது.
தனது சொந்த சமுதாயத்தைச் சார்ந்த
இளையோர்களுக்கு மேற்படிப்பு வழங்குவதற்கும் சமுதாயத்தை முன்னேற்றுவதற்குமான ஒரே
மார்க்கம் அறிந்ததன் காரணத்தினால் தான் எம்டி செமினாரி உயர்நிலைப் பள்ளியை முதல்
தரமாக உயர்த்துவதற்கான முயற்சிகள் அவர் நடத்தினார். அதற்காகத்தான் செராம்பூர்
கல்லூரியில் ஊதியத்தை பெற்றுக் கொண்டதும் கேரளாவிலிருந்து பல இளைஞர்களை
செராம்பூருக்கு அழைத்துச் சென்று அங்கு கல்லூரியில் கற்பதற்கு அனுமதியை வாங்கி
கொடுக்கவும் அவர்கள் கற்பதற்கான அனைத்து உதவிகள் செய்யவும் செய்தார். மேதைகளும்
திறமை வாய்ந்தவர்களுமான குருக்களால் சமுதாய முன்னேற்றம் கொண்டு வர முடியும் என்ற
எதிர்பார்ப்போடு தான் ஒரு குருத்துவ கல்லூரி ஒன்று எம்டி செமினாரிக்கு
பக்கத்திலேயே நிறுவ வேண்டும் என அவர் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினார். அந்த
நோக்கத்திற்காகவே பல திருத்தொண்டர்களை செராம்பூர் கல்லூரியில் கற்க வைத்து
பயிற்சியும் நல்கினார். மேற்படிப்புக் கற்றவர்கள் சமுதாயத்தின் பெண்களின்
முன்னேற்றத்திற்காக உதவ வேண்டும் என்பதற்காகவே கல்கத்தா மற்றும் பாரிசோல் என்னும்
கல்லூரிகளில் பல இளம் பெண்களை அனுப்பிக் கற்பதற்கு அவர் முயற்சிகள் பல
மேற்கொண்டிருந்தார்.
இவற்றுடன் இணைந்து கேரளாவிலும் இந்தியாவின்
மற்றுப் பகுதிகளிலும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கான திறமையும்
தியாகவும் வாய்ந்த பல மறைப்பணியாளர்களை உருவாக்க வேண்டும் என்ற மனத்திடனுடன்
அதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். எந்தவிதமான தொடர்பும் இல்லாத
நற்செய்திப் பணிகளை விட அதற்கென்று திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மிஷனரி சமூகம்
வழியாக பல பலன்களை பெற்றுக் கொள்ள முடியும் என்ற சிந்தனை அவருக்கு இருந்தது.
அத்தகைய சிந்தனை ஒரு துறவு சபையை உருவாக்குவதற்கு வழிவகுத்தது. அவ்வாறு பெதனி
சன்னியாச ஆசிரமம் மற்றும் கன்னியர் மடமும் துவங்கிட இறைவனின் கரங்களில் அவர்
ஆயுதமாக மாறினார்.
ஆனால் தனது சொந்த சமூகத்தை முன்னேற்றுவதற்கு
இவற்றால் மட்டும் செயல்படுத்த முடிவதில்லை எனவும் தனது நீண்ட கால அனுபவத்தின்
வழியாக அவர் புரிந்து கொண்ட நிலை என்னவென்றால் கத்தோலிக்க திருச்சபையோடு
மறுஒன்றிப்படைவதே ஆகும். அந்தியோக்கிய மறைமுதுவர் அல்லது மலங்கரையின் பேராயர்
அல்லது உயர் பேராயர் ஆகியோரின் அதிகாரத்தின் கீழ் நிலைநிற்பதனால் எந்த விதமான சமூக
முன்னேற்றமும் உருவாவதில்லை எனவும் தலைமை மறைமுதுவரான உரோமை திருத்தந்தையின்
திருஆட்சியின் கீழ் சென்றடைந்தால் மட்டுமே அமைதியும் நிம்மதியும் உருவாகும் என்ற
எண்ணம் அவருக்கு உருவானது. அவற்றுக்கான எண்ணங்களும் ஜெபங்களும் முயற்சிகளும்
இறுதியில் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைவதற்கு அவரைத் தூண்டியது. மறுஒன்றிப்பு
இயக்கத்தின் வெற்றிக்காக செயல்பட தனது சொந்த சகோதரர்களாகிய பல இலட்சம் மக்களுக்கு
அதற்கான தூண்டுதல்களையும் வழங்கினார். அவர்களது மறுஒன்றிப்பு முன்னேற்றத்திற்காக
மரணம் வரையிலும் அவர் தொடர்ந்து செயல்பட்டார்.
துறவு சபைக்கான ஆசிரமம் ஒன்று நிறுவ
வேண்டும் என்ற நீங்காத எண்ணம் நமது கதாநாயகனின் மனதில் நிலைத்திருந்தது. அது
செராம்பூர் கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றிய போது துவங்கியது. நற்செய்தி
ஆர்வம் கொண்ட துறவு சபை மூலம் தனது சொந்த மக்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை
கொண்டு வர முடியும் என்ற நோக்கத்தோடு அவரது முயற்சிகள் பலவும் அதற்காக
செயல்படுமாறு தூண்டப்பட்டார். ஆசிரமம்
நிறுவுதல் என்ற உன்னத முயற்சிக்கு இறைவனின் தூண்டுதல் பற்றிய தனது அனுபவத்தை
கிரிதீபம் என்னும் தனது நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“பல மாதங்கள் ஆலோசனைகள் என்ற நிலை தொடர்ந்து
கொண்டிருந்தது. இறைவனின் திருமுன்னிலையில் களிமண் போல குழைத்து வைக்கப்பட்டிருந்த
எனது இதயத்தில் நடைமுறைக்கு வரும் எண்ணங்களும் செயல் திட்டங்களும் உருவாகத்
துவங்கவில்லையே என நான் எண்ணினேன். கட்டாயமாக இறைவன் இவற்றை துவங்குவதற்கான ஒரு
வடிவத்தைத் தருவார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. தற்போது இதனை துவங்கியே ஆக
வேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் அலை வீசத் துவங்கியது. இதற்காக பல சவால்களையும்
நான் சந்திக்க வேண்டி வந்தது. உடல் சார்ந்ததும் மனதளவிலுமான பல விதமான துயரங்களை அந்த
நேரத்தில் நான் புரிந்து கொள்ள வேண்டி இருந்தது.
இறைவனுக்காக பணி செய்வதை விட இறைவனின் அருளை
சம்பாதிப்பது உன்னதமானது என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. மனிதனின் வாழ்க்கை
குறிக்கோள்கள் பலவிதங்களில் அமைந்திருக்கும். மகிழ்வை அனுபவிக்க பலரும் முயற்சி
செய்வது உண்டு. மற்றும் சிலர் நல்ல உடல் நிலையை பெற்றுக்கொள்ள ஏங்கிக்
கொண்டிருப்பர். தற்புகழ்ச்சிக்காக முயற்சிகளை மேற்கொள்பவரும் பலர். சிலர்
பணத்திற்காக தங்களது வாழ்வையே சமர்ப்பித்து கொண்டிருப்பர். ஒவ்வொரு காலத்திலும்
அத்தியாவசிய தேவைக்காக அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் பலர். எந்த ஒரு மனிதனும்
ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு கொண்டே
இருக்கின்றான்.
கிறிஸ்தவ வாழ்வு வாழ்பவர்களுக்கு உலகோடு
கொண்ட தொடர்பை துண்டித்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் அவர்கள் சம்பாதித்துக்
கொண்ட அவரால் நிறைவேற்றப்பட்ட இறைப் பணிகளை செய்ய முடியும் என்ற நிலையில் இறைவனின்
அருளைப் பெற்றுக் கொள்வதற்காக தங்களது வாழ்நாளையும் அவர்கள் பயன்படுத்தி
வருகின்றனர். இறைவனின் அருளை சம்பாதித்தலை விட வேறு எந்த விதமான பெரிய சொத்தும்
இல்லை என்பது கிறிஸ்தவ வாழ்வில் முக்கியமானதாகும்.
நம்பிக்கையால் மனிதன் இறைவனோடு
தொடர்புள்ளவராக மாற வேண்டும். இறைவனின் அடைக்கலத்தில் சரணடைய வேண்டும். இறையன்பு
அல்லாமல் வேறு எதுவும் அவரோடு இருக்கக் கூடாது. இத்தகைய மனநிலை ஒருவருக்கு
ஏற்படுகிறது என்றால் எந்த தியாகத்தையும் அவனால் சந்திக்க முடியும். தியாகத்தை
சகித்துக் கொள்ளாமல் எந்த விதமான இறை அணுகுமுறையும் நம்மால் பெற்றுக் கொள்ள
முடியாது. இறைவனோடு இணைந்து நிற்க விரும்புபவன் அனைத்திலும் இயேசு மெசியாவை
பின்பற்றியே ஆக வேண்டும். உலகப் பார்வையில் ஒருவன் அறிவில்லாதவனும் மனநிலை
பாதித்தவனுமாக மாறும்போது தான் ஒரு துறவி பரமானந்தத்தை அனுபவித்துக் கொள்கின்றான்.
கோகுல்த்தா மலை மேல் காணப்படும் சுய
தியாகத்தின் மாதிரியே அவனது உள்ளத்தில் பிரதிபலிக்கப்பட வேண்டும். தனது சொந்த
குடும்பத்தை அல்ல; சொந்த நாட்டை மட்டுமல்ல; உலகை முழுவதுமாக அவன் விட்டு விடத் தயாராக வேண்டும். அவன் அவனைக் கூட
தியாகமாக சமர்ப்பிக்க வேண்டும். உலகிற்காக இறப்பதும் சுயமாக தியாகத்தை ஏற்றுக்
கொள்வதும் ஒன்றே ஆகும். கிறிஸ்துவின் திருத்தூதர்கள் சுயமாக தியாகத்தை ஏற்றுக்
கொண்டவர்கள் ஆவர். “அனைத்தையும் விட்டுவிட்டு நாங்கள் உங்களைப் பின்தொடர்ந்து
வந்திருக்கின்றோம்” என கூறக்கூடிய விதத்தில் மனவலிமையும் இறையருளும் பெற்றுக்
கொண்டவர்கள் தான் இறைவனை சம்பாதித்தவர்கள். அவர்கள் தான் உண்மையான
மறைப்பணியாளர்களாக முடியும். அவர்களால்தான் உலகில் இயேசு மெசியாவை அறிவிக்க
முடிந்துள்ளது. துறவை ஏற்றுக்கொள்கின்ற ஒருவரால் மட்டுமே இவற்றை நடைமுறைப்படுத்த
முடியும். தியாகம் என்ற நிலையை உண்மை நிலைக்கு கொண்டு வர அவரால் மட்டுமே முடியும்.
ஒரு துறவிக்கு பொருள், மதிப்பு மற்றும் புகழ் என்ற சொற்கள்
ஏழ்மை, அவமானம் மற்றும் புகழின்மை என்பவையாக இருக்கும்.
“தாய் தந்தையர் உலகுறவும் குலப்புகழும் மனை
மாண்பும்
யாவையும் துறந்து இயேசுவுக்காய் சாவை
விழைந்தவராம்”
இவ்வாறு இயேசுவுக்காக இறக்கவும் வாழவும்
தயாராக இருப்பவர்களுக்கு மட்டுமே தியாகமும் ஏழ்மையும் அணிகலன்களாக மாறுகின்றன.
தாமாகவே தங்களை இறைவனுக்காக சமர்ப்பித்துள்ள துறவிகளின் சபை தேவை எனவும், இறைவனின் திருவிருப்பம் அதுவே எனவும், எனவே அதை
வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் எனவும் அதற்காக தனது வாழ்வை சமர்ப்பிக்க
வேண்டும் எனவும் இறையருளை உணர்ந்து நிச்சயித்துக் கொண்டேன். பல நாட்கள், பல மாதங்கள், பலவிதமான சிந்தனைகள், ஆலோசனைகள், ஜெபங்கள் மற்றும் திருப்பலிகள்
போன்றவற்றால் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்ட இத்தகைய பெருஞ்செல்வத்தை மதிக்கவும்
அதனை நிறைவேற்றுவதற்கும் நிர்வகிப்பதற்கான ஞானமும் தேட த் துவங்கினேன்.”
(கிரிதீபம் பக்கம் 55-52)
துவக்க முயற்சிகள்
ஆசிரமத்தைத் துவங்குவதற்கான முயற்சிகளை நமது
கதாநாயகன் முதல் நிலையில் மேற்கொண்டு கொண்டிருந்தார். சன்னியாச விரதங்கள், சட்டங்கள் மற்றும் நிர்வாக முறை போன்றவை ஆசிரம நிறுவுதலுக்குத் தேவை
எனவும் அதைப் பற்றிய அனுபவமும் ஞானமும் சம்பாதிப்பதற்கான தீவிர முயற்சியில்
ஈடுபட்டார். அதற்காக கத்தோலிக்கர்களின் மற்றும் கத்தோலிக்கரல்லாதவர்களின் பல துறவு
சபையின் ஆசிரமங்களை சந்திக்கவும் அதன் தலைவர்களிடமிருந்து பல கருத்துக்களைக்
கேட்டு அறிந்திடவும் செய்தார். துறவு சபை சார்ந்த விவரங்கள் அடங்கிய பல
புத்தகங்களை வாங்கி வாசிக்கவும் செய்தார். இவற்றுள் பல புத்தகங்களும் கத்தோலிக்க
துறவு சபைகளைச் சார்ந்தவையாக இருந்தன.
மகாகவி இரவீந்திர நாத தாகூர் “விஸ்வபாரதி”
என்ற பெயரில் துவங்கிய ஆசிரமத்தில் பல தடவை சென்று மகாகவியை சந்தித்து அவரோடு பல
உரையாடல்களை நிகழ்த்தினார். இந்திய விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த மகாத்மா
காந்தி நிறுவிய சபர்மதி ஆசிரமத்திலும் கதாநாயகன் செல்லவும் அவற்றின் நுணுக்கங்களை
கண்டறிந்து புரிந்து கொள்ளவும் செய்தார். புதிய சன்னியாச துறவு சபையைத்
துவங்குவதற்கு இவையெல்லாம் மிகவும் உதவியாக அமைந்திருந்தன.
கேரளாவின் ஒரு பகுதியில் ஒரு சந்நியாச
ஆசிரமம் நிறுவ வேண்டும் எனவும் அவ்வாறு மலங்கரை திருச்சபையை மேன்மைப்படுத்த
வேண்டிய தனது விருப்பத்தை கடிதங்கள் மூலமாக தனது குருவான வட்டச்சேரில் மார்
திவன்னாசியோஸ் ஆயரை மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமாணிகளை கதாநாயகன் அடிக்கடி
தெரிவித்துக் கொண்டு இருந்தார். இந்த முயற்சி நிறைவேற்றப்படுவதாக இருந்தால் இது
சமுதாயத்தின் மிகப்பெரிய நன்மையை கொண்டு வரும் எனவும் அதற்கான உதவிகள் தாங்கள்
செய்வதற்கு தயாராக இருக்கின்றோம் எனவும் பல சமூகப் பிரமாணிகளின் பதில் கடிதங்கள்
செராம்பூருக்கு வந்த வண்ணம் இருந்தன. ஆயர் வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ்
அவர்களும் மகிழ்வுடன் இந்த கோரிக்கைகளை ஆசீர்வதிக்கவும் அதற்கான அனுமதிகளை
வழங்கவும் செய்தார்.
செராம்பூரில் வைத்து தனது ஆசிரமத்தைத்
துவங்குவதற்கான அடிப்படைகளைத் திட்டமிட்டார். தன்னுடன் தங்கியிருந்த
திருத்தொண்டர்களும் துறவற வாழ்வை அனுசரிக்கச் செய்தார். எளிமையான ஒரு சில
விரதங்களை மட்டுமே அக்காலத்தில் நிறைவேற்ற வேண்டியிருந்தது. சரியான நேரத்தில்
வேளைச் ஜெபங்கள், தியானம், ஆத்ம சோதனை
மற்றும் மௌனம் போன்றவை சட்டதிட்டங்களின் முதல் பயிற்சிக் காரணிகளாக அமைந்திருந்தன.
இவ்வாறு செரம்பூரில் உருவாகிய குழந்தை ஒரு வருட காலமாக பாதுகாப்புடன் கருவறைக்குள்
வளர்ந்து கொண்டே இருந்தது.
ஆசிரமத்துக்கான இடம் கண்டறிதல்
கேரளாவில் எவ்விடத்தில் ஆசிரமம் நிறுவ
வேண்டும் என்ற எண்ணத்தில் ஆழ்ந்தவாறு ஆள் நடமாட்டமில்லாத செயற்கை ஒலிகள்
கேட்கப்படாத இடத்தை தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தார். இடம் வாங்கி கட்டிடங்கள்
கட்டி ஆசிரமவாசிகளின் அன்றாட வாழ்வு நிலைகளை செயல்படுத்துதல் என்பதும் அதற்கான
செலவுத் தொகையும் எங்கிருந்து அவர் பெற்றுக் கொள்ள முடியும் என நமது கதாநாயகன்
சிந்தித்து கொண்டே இருந்தார். இருப்பினும் அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொள்வார்
என்ற நம்பிக்கை அவரது மனதிற்கு வலிமை நல்கியது.
ஆசிரமம் நிறுவுதல் பற்றி தனது நெருங்கிய
மற்றும் உற்றத் தோழனாகிய ஒரு கிறிஸ்தவ தலைவரும் செல்வந்தருமான வழக்குரைஞர்
இலஞ்ஞிக்கல் மீ ஈ ஜெ ஜோண் என்பவருக்கு கடிதம் அனுப்பினார். சமுதாய அன்பரான அவருடைய
உற்சாகத்திற்குரிய பதில் நமது கதாநாயகனுக்கு கிடைத்தது. செங்கன்னூர் தாலுகாவில்
வடசேரிக்கரை அருகே பெருநாடு எனும் இடத்தில் தனக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன.
அதிலிருந்து 100 ஏக்கர் இடம் ஆசிரமத்திற்காக வழங்கத்
தயாராக இருப்பதாக அவர் பதில் அனுப்பினார். அதில் மகிழ்வடைந்த நமது கதாநாயகன்
உடனடியாக தன் சொந்த நாட்டிற்கு வரவும் அந்த இடத்தை வந்து பார்வையிடவும் செய்வேன்
எனப் பதில் மொழியாக கடிதம் அனுப்பினார்.
ஒரு சில மாதங்களுக்குப் பின்னர்
விடுமுறையின் போது வழக்குரைஞர் இலஞ்ஞிக்கல் மீ ஈ ஜெ ஜோண் அன்பளிப்பாக தருவதாக
வாக்குறுதி அளித்திருந்த இடத்தை நேரடியாகக் காண்பதற்காக புத்தன்காவில் மீ கே ஜி
செறியான் மற்றும் இறாந்நியின் மி ஐ எம் இடிக்குள போன்றவர்களோடு இணைந்து பெருநாடு
என்னும் மலைப்பகுதிக்குச் சென்று அவ்விடம் முழுவதும் நடந்து கண்டு திருப்தி
அடைந்தார். ஆசிரமத்திற்குத் தகுந்த இடம் இதுவே என அனைவரும் கருத்துக்களைப்
பரிமாறினர். வழக்குரைஞரின் கருத்துப்படி நூறு ஏக்கர் நிலத்தோடு சேர்ந்துள்ள
அரசுக்கு சொந்தமான நிலப்பகுதியையும் சேர்த்து பத்திரப்பதிவு செய்வது நன்று என்ற மி
கே ஜி செறியான் அவர்களது கருத்துப்படி அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மீ
கே சி மாம்மன் மாப்பிள்ளை மற்றும் கே கே லூக்காஸ் என்பவர்களின் உதவியோடு அதற்கான
கோரிக்கையும் அரசுக்கு வைக்கப்பட்டது. அவ்வாறு 300 ஏக்கர் நிலம் ஏக்கருக்கு 5
ரூபாய் மதிப்பில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பத்திரப்பதிவு செய்வதற்கான 2000
ரூபாய் தொகை தன்னிடம் இல்லாத காரணத்தினால் தனது சகோதரனாகிய மத்தாய் பணிக்கர்
வழியாக தனது தந்தையிடமிருந்து 2000 ரூபாய் கடனாக பெற்றுக் கொண்டார்.
பம்பா நதி மற்றும் கக்காட்டாறு இணையும்
இடத்திலிருந்து சற்று கிழக்கில் உயரமான இடம் தான் “முண்டன்மலை” என்ற பெயரால்
அழைக்கப்பட்டிருந்தது. படைத்தவராகிய கடவுளின் வியக்கத் தகுந்த மகிமையை
எடுத்துக்காட்டும் இயற்கை அழகைக் கண் குளிர கண்டு அனுபவிக்க முடிந்த நல்ல ஒரு
இடம். 50 ஆண்டுகளாக மனிதன் வாழிடத்திற்கு தகுந்த இடம் அல்லாததாக இருந்தது.
வனவிலங்குகளின் உறைவிடமாக அமைந்திருந்தது. தேயிலை, இரப்பர்
மற்றும் நல்ல மிளகு போன்றவை பயிர் செய்யத் தகுந்த மண்வளம் மிகுந்த பகுதியாக
இருந்தது. கேரளாவின் புகழ்பெற்ற பெருமண், ளாஹா, குருங்காலி மற்றும் சிற்றார் கார்மேல் போன்ற பல பெரிய தோட்டங்கள்
இப்பகுதியில் அமைந்திருந்தன. சபரிமலை திருப்பயணிகள் இம்மலையின் கீழ்ப்பகுதி வழியாக
தரிசனம் நடத்துவதற்கு சென்று கொண்டிருந்தனர்.
இவ்விடத்திற்கு அருகே ஒரு சில ஏக்கர்
நிலங்கள் தங்கள் பெயரிலும் பத்திரப்பதிவு செய்து தர வேண்டும் என்ற நோக்குடன்
கதாநாயகனின் சகோதரனாகிய மத்தாய் பணிக்கர் மற்றும் கிளிலேத்து சாக்கோ போன்றவர்கள்
செராம்பூருக்கு கடிதம் அனுப்பினர். அதற்கு பதில்மொழி எழுதிய கதாநாயகனின் பதில்
இவ்வாறாக அமைந்திருந்தது. “உங்களுள் எவருக்கும் ஒரு சென்ட் நிலம் கூட அப்பகுதியில்
இருப்பது நல்லதல்ல. அந்தப் பகுதி முழுவதுமாக ஆசிரமத்திற்கு என்ற பெயரில்
பத்திரப்பதிவு செய்யப்படும். ஒருவன் இறைப் பணிக்காக புறப்பட்டால் அவருடைய வீட்டுக்
காரியங்களை இறைவன் பார்த்துக் கொள்வார்.”
பெயருக்கான காரணங்கள்
ஆசிரமத்திற்கான இடம் அமைந்த பின்னர் அதற்கான
பெயரிடுதல் பற்றி ஆழமாக அவர் சிந்திக்கத் துவங்கினார். ஆசிரமத்தின் உள்ளார்ந்த
கருத்துக்களை பிரதிபலிப்பதும் அதன் நோக்கங்களை வெளிப்படுத்துவதுமான இறைவனோடு
தொடர்பு கொண்ட ஒரு பெயரை வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இத்தகைய
எண்ணத்தோடு முதல் முறையாக விவிலிய அகராதியை திறந்து பார்த்தபோது முதன் முதலில்
அவர் கண்டு கொண்ட பெயர் “பதானி” என்பதாகும். இறைவிருப்பப்படியாக ஆசிரமத்திற்கு
உகந்த பெயர் இதுவே என கதாநாயகன் தீர்மானித்தார். பதானியின் இலாசர் மற்றும்
சகோதரிகள் இவர்களைப் பற்றி சிந்தித்தபோது இந்த பெயர் உரிய பெயராக உணர்ந்து
கொண்டார். அவ்வாறு “பதானி” என்ற பெயர் ஆசிரமத்திற்கு நல்கவும் செய்தார். பின்னர்
நாளடைவில் “பெதனி” எனப் பெயர் மாற்றம் பெற்றது.
ஆசிரமத்தவர்கள் சார்ந்த துறவு சபைக்கு
எந்தப் பெயர் வழங்கலாம் என்ற சிந்தனையில் நமது கதாநாயகன் ஆழ்ந்தார். மெசியாவை
அனைத்திலும் பின்பற்றவும் கடைபிடிக்கவும் செய்வதற்காக நிறுவப்பட்ட சமூகத்திற்கு
“கிறிஸ்துவை பின்பற்றும் சமூகம்” (Order of the imitation of
Christ) என்ற பெயர் நல்கிடவும் தீர்மானித்தார்.
முண்டன் மலையின் காட்டுப்பகுதியை வெட்டி
சீர் செய்திடவும் கட்டிடங்கள் கட்டவும் வழி மற்றும் மதில் சுவர்கள் உருவாக்கவும்
மரங்களை நட்டு வளர்த்தவும் துவக்கச் செலவுகள் என்பவற்றுக்காக நல்ல ஒரு தொகை
தேவைப்பட்டது. ஏறக்குறைய 7000 ரூபாய் தேவைப்படும் என கணக்கிடப்பட்டது. எவ்வாறு
இந்த பணத்தைப் பெற்றுக் கொள்வது? என்று வருந்திக்
கொண்டிருந்த நமது கதாநாயகனுக்கு இறைவன் மிகப்பெரிய அருளை வழங்கினார். செராம்பூரில்
வைத்து நண்பரான அமெரிக்காவைச் சார்ந்த மறைப்பணியாளரான ஜே எச் ஹவுலர் என்பவரிடம்
இச்செய்தியை தெரிவித்த போது அவர்கள் இணைந்து கல்கத்தாவில் தங்கியிருந்த சர்
டானியல் ஹாமில்ட்டன் என்பவரை சந்திக்கச் சென்றனர். ஆசிரமம் நிறுவுதல் அதனுடைய
தொடர் செயல்பாடுகள் அதனுடைய செயல் திட்டங்கள் போன்றவை பற்றி விவரித்த போது எந்த
அளவு தொகை வேண்டுமென்றாலும் ஆசிரமத் தேவைக்காக கடனாக வழங்குவதற்குத் தான் தயார்
என்று மகிழ்வுடன் ஜே எச் ஹவுலரிடம் அவரே
தெரிவித்தார். அவ்வாறு சில ஏக்கர் நிலத்தை அடகு வைத்து ஹாமில்டன் அவரிடம் இருந்து
7000 ரூபாய் கடனாகப் பெற்றுக் கொண்டார்.
பெதனி மலையில் துவக்கக் காலப் பணிகளை
செய்வதற்காக நிரணத்தைச் சார்ந்த முட்டய்க்கல் அலக்சியோஸ் திருத்தொண்டர் (பின்னர்
மார் தேவோதஸியோஸ்), சூரநாட்டைச் சார்ந்த உம்மன் வாத்தியார்
(பின்னர் யாக்கோபாயா திருச்சபையில் பஸ்கீப்பா இரம்பான்), மத்தாயி
பணிக்கர் (கதாநாயகனின் சகோதரர்) மற்றும் கிளீலேத்து சாக்கோ (மானேஜர்) ஆகியோரிடம்
பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இவர்களுடைய தீவிர முயற்சிகளின் பலனாக புலி மற்றும்
யானை போன்ற வன விலங்குகளின் கோட்டையாக இருந்த வனப்பகுதியை சீரமைத்து அங்கு கிடைத்த
முளைக்கம்பு மற்றும் மரக்கொம்புகளை பயன்படுத்தி ஆசிரமம் மற்றும் சிற்றாலயத்திற்கான
கட்டிடங்களை நிறுவுவதற்காக பயன்படுத்தினர். புற்களாலும் மண்ணாலும்
உருவாக்கப்பட்டச் சுவரை உருவாக்கி ஒரு சில
மாதங்களுக்குள் தங்கும் இல்லமாக மாற்றி அமைத்தனர்.
சட்டங்களும் சீருடையும்
பெதனி மெசியாவை பின்பற்றும் துறவு சபையின்
சட்டங்கள் மற்றும் துறவியர்களின் சீருடை போன்றவை எப்படி இருக்க வேண்டும் என
கதாநாயகன் சிந்தனை மேற்கொண்டார். அதற்காக பல துறவு சபைகளின் வழிமுறைகளை வாங்கி
வாசிக்கத் துவங்கினார். கேரளா கர்மலீத்தா துறவு சபையின் சட்ட வழிமுறைகளை அறிந்திட
ஒரு நாள் கோட்டயத்திலிருந்து மே ஏ பிலிப்போஸ் மற்றும் கே வி சாக்கோ போன்றவர்களோடு
இணைந்து மாந்தானம் என்னும் இடத்தில் அமைந்திருந்த ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கே
மாகாணத் தலைவர் அப்போது அங்கே இல்லாமல் இருந்தார். ஆசிரமத்தின் பொருளரான
கட்டகயத்தில் அலெக்சாண்டர் அருள்தந்தை (கொச்சு சாண்டியச்சன்) அவர்களை சந்தித்து ஆசிரமத்தின் காரியங்களை கேட்டு அறிந்து கொண்டனர். ஆசிரம
நிறுவுதலைப் பற்றி அறிந்த போது “எந்த பெயரை நீங்கள் ஆசிரமத்திற்கு வழங்க
விரும்புகிறீர்கள்” என அலெக்சாண்டர் அருள்தந்தை அவர்கள் கேட்டார். “பெத்தானியா” என
விரும்புகிறேன் என கதாநாயகன் பதிலளித்தார். தொலைநோக்கு சிந்தனை கொண்டிருந்த
கொச்சுச்சாண்டியச்சன் இவ்வாறு கூறினார், “பெத்தானியா,
அது எங்களுக்கு மிக அருகில் அல்லவா!” கார்மேல் மலைக்கு அருகில் தான்
பெதனி மலையும் அருகில் அமைந்திருந்ததனால் இரு துறவு சபைகளும் நெருங்கிய தோழமை
கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். மாகாணத் தலைவர் இல்லாத காரணத்தினால் சட்ட
வழிமுறைகளை பெற்றுக் கொள்ள முடியாமல் திரும்பி சென்றனர். ஒரு வாரத்திற்குப்
பின்னர் அருள்தந்தை ஸ்தேபானோஸ் அவர்கள் சட்ட நூலும் ஏந்தி கோட்டயத்திற்கு வந்து
நமது கதாநாயகனை ஒப்படைத்தார். இவ்வாறு பல சன்னியாச துறவு சபைகளின் சட்டங்களை
ஆய்ந்து அறிந்து புனித பஸேலியோசின் துறவு சபையின் சட்டங்கள் அடங்கிய சட்ட
வழிகாட்டுதலை பெதானி ஆசிரமத்திற்காக நமது கதாநாயகன் ஏற்றுக்கொண்டார்.
துறவியர்களின் சீருடை எதுவாக அமைய வேண்டும்
அதனுடைய நிறம் எதுவாக அமைய வேண்டும் என கதாநாயகன் சிந்திக்கத் துவங்கினார்.
கத்தோலிக்க திருச்சபையில் பல்வேறு விதமான துறவு சபைகள் அவரவருக்கு ஏற்ற நிறத்திலான
சீருடைகளை கொண்டுள்ளனர். ஒவ்வொரு துறவியரும் எந்த சபையை சார்ந்தவர்கள் என அறிந்திட
இந்த சீருடை பயன் பட்டது. இந்தியாவின் துறவு சபைகளை பின்பற்றி காவி நிறத்தில் உள்ள
அங்கியும் இடைக்கச்சையும் பெதனி துறவியர்களுக்கு இருக்க வேண்டும் என அவர்
நிச்சயித்தார். இந்தியாவின் மற்று மதத்தவர்களிடையே நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு
கிறிஸ்தவ துறவியர்கள் இந்தியாவின் சுதேசிகள் என்ற எண்ணம் உருவாகவும் அவ்வாறு
அவர்களுடைய மனமாற்றத்தை எளிதாக்கவும் இத்தகைய சீருடை நன்று என்ற எண்ணம் அவர்
கொண்டிருந்தார். இதனைப் பற்றி செராம்பூரிலிருந்து வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ்
அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி இங்கு சேர்க்கப்படுகிறது.
மதிப்புக்குரிய ஆயர் அவர்களே!
மற்று இனத்தவர்களிடையே இறைப்பணிக்கு
புறப்படும் துறவியர்களுக்காக அவர்களுக்குத் தேவையான பணிகளும் தயாரிப்புகளும்
துவங்க வேண்டும் என விரும்புகின்ற எனக்கும் மட்டய்க்கல் திருத்தொண்டருக்கும்
அதற்கேற்ற ஏதேனும் சீருடை வழங்கியருள வேண்டுகிறேன். பெதானியில் துறவியாக ஒருவரை
நியமிக்கும்போது அதற்கான ஒரு சீருடையும் வழங்குவது பல நன்மைகளையும் உருவாக்கும்.
இந்த காரணத்திற்காக தனிப்பட்ட முறையில் வேறுபடுத்தப்பட்டவர்கள் என்ற எண்ணம்
எங்களில் எங்களுடைய காண்போர்களிடமும் நிலை நிற்க இந்த சீருடை பயன்படும்.
இந்தியாவில் அனைத்து இடத்திற்கும் இணங்கிய சீருடை தான் தேவை. நமது நாட்டோடு இணைந்த
சீருடையாக இருக்க வேண்டும். வெளிநாட்டவர்களுடைய சீருடை என யாரும் குறை கூறாத
வண்ணம் இருக்க வேண்டும். மிகவும் செலவு குறைந்ததாக இருக்க வேண்டும். இரண்டு
அங்கிகளை நீங்கள் கொண்டிருக்க வேண்டாம் என மறைப்பணிக்காக செல்வோரிடம் ஆண்டவர்
அளித்த கட்டளைக்கு ஏற்ப இந்தியாவின் எப்பகுதியிலும் இறைப் பணிக்காக செல்லத் தயாராக
வேண்டும். மறைப்பணியாளர்களின் சீருடை என இந்து புத்த மற்றும் இஸ்லாமிய மதத்தவர்கள்
அறிந்து கொள்வதாக அமைதல் வேண்டும். தற்போது இந்தியாவில் கிறிஸ்தவ சபைகளில் துறவு
சபைகளில் பயன்பாட்டில் இல்லாததாக இருக்க வேண்டும். இந்த சீருடையைக் காண்கின்ற போது
பிறருக்கு வெறுப்பு ஏற்படாமல் நமது வார்த்தைகளை நம்மோடு அருகில் அமர்ந்து கேட்கத்
தூண்டுவதாக அமைய வேண்டும். இத்தகைய விதத்தில் சீருடை அமைந்திருந்தால் நன்று.
பல நாட்களாக நாங்கள் தேடவும் ஆலோசிக்கவும்
செய்ததன் வழி ஒரு சீருடை எங்களுக்கு நன்றாக தோன்றுகிறது. நமது குருக்கள்
பயன்படுத்துகின்ற கருப்பு அங்கியைப்போன்று வெள்ளைத்துணியால் தைத்து அதனை காவி
நிறச் சாயம் பூசியவாறு அமைய வேண்டும். அதே நிறத்திலான இடைக்கச்சையும் வேண்டும்.
இது கட்டாயப்படுத்துதல் இல்லை. இந்தியாவின் சூழலுக்கேற்ற சீருடையாக மேதகு ஆயர்
அவர்கள் உணர்கின்ற போது ஐந்து அல்லது ஆறு மாதத்திற்குள் உங்கள் தீர்மானத்தை
கூறினால் போதும். திருவிதாங்கூர் கொச்சி ஆகிய இரண்டு அரசுகளை விடவும் பல மடங்கு
பரப்பளவு கொண்ட நாடுகளில் மறைப்பணி செய்ய நாமே பொறுப்புடையவர்கள் என உலகம் அறியும்
வண்ணம் நமது மக்களுக்கும் அத்தகைய உணர்வு தோன்ற வேண்டும்.
ஆயர் அவர்களை தெரிவிக்குமாறு எழுதிக்
கொள்வது:
அருட்தந்தை பிடி கீவர்கீஸ்
சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மையமான
பகுதிகளில் நற்செய்தி பணியாற்றிய ஐரோப்பிய மறைப்பணியாளரான அருள்தந்தை டி நோபிலி
பெஸ்கி அணிந்திருந்த சீருடை இத்தகைய விதத்திலாக இருந்தது. சேலம் எனும் இடத்தில்
நிறுவப்பட்ட சீலுவகிரி துறவியர்கள் ஏற்றுக்கொண்டதும் காவி நிறத்தில் உள்ள சீருடை
ஆகும்.
ஆசிரம துவக்கமும் துறவு சமர்ப்பித்தலும்
ஆசிரமம் துவங்குவதற்கான அனைத்து
காரியங்களையும் முழுமையாக்கிய பின்னர் செராம்பூர் கல்லூரியின் பேராசிரியர் பணியை
ராஜினாமா செய்து விட்டு தனது சொந்த நாட்டுக்கு வர நமது கதாநாயகன் தீர்மானித்தார்.
கல்லூரி நிர்வாகத்தினர் அவரை இரண்டு ஆண்டுகள் அங்கு தங்கி வகுப்புகள் நடத்துமாறு
கோரிக்கை வைத்தனர். ஆனால் நமது கதாநாயகனோ வாத நோய் செராம்பூர் பகுதியில் காலநிலை
காரணமாக சற்று அதிகமானதாலும் தனது வீட்டிற்கு வந்து ஆயுர்வேத சிகிச்சை
நடத்துவதற்காகவும் தான் ராஜினாமா செய்வதற்கும் நான் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன்
எனப் பதிலளித்தார். சொந்த நாட்டிற்கு திரும்பி வந்த பின்னர் பல மாதங்கள் கோட்டயம்
மற்றும் மாவேலிக்கரை ஆகிய இடங்களில் தங்கி ஆயுர்வேத சிகிச்சையால் வாத நோயிலிருந்து
விடுதலை பெற்றார். இதற்குள் பெதனி ஆசிரமம் நிறுவுவதற்கான எல்லா வசதிகளும் பெதனி
மலையில் முழுமை அடைந்தது.
முதன்முதலாக துறவு சபையில் இணைந்த பத்து
நபர்களின் பெயர்கள் பின்வருமாறு:
1.
அருட்தந்தை பி டி கீவர்கீஸ்
(மார் இவானியோஸ்)
2.
திருத்தொண்டர் யாக்கோபு (மார்
தியோபிலோஸ்)
3.
அருட்தந்தை அலக்சியோஸ் (நிரணம்)
(மார் தேவோதோசியோஸ்)
4.
திருத்தொண்டர் கோசி (சூரநாடு) (Rev. சாமுவேல் TOCD)
5.
கீவர்கீஸ் (செங்ஙன்னூர்) (அருட்தந்தை கீவர்கீஸ் OIC)
6.
யாக்கோபு (மாவேலிக்கரை) (அருட்தந்தை பர்சலீபா OIC)
7.
உம்மன் (சூரநாடு) (இரம்பான் பஸ்கீப்பா)
8.
ஆபிரஹாம் (கல்லுப்பாற) (அருட்தந்தை ஆபிரஹாம் OIC)
9.
இசஹாக் (மாவேலிக்கரை) (அருட்தந்தை இசஹாக்)
10.
வர்கீஸ் (புளிக்கீழ்) (அருட்தந்தை வர்கீஸ்)
ஆறு மாத கால ஆன்மீகப் பயிற்சிக்குப் பின்னர்
முதல் துறவியர்களான அருள்தந்தை பி. டி கீவர்கீஸ், அருள்தந்தை
அலக்சியோஸ் மற்றும் திருத்தொண்டர் யாக்கோபு ஆகியோர் சன்னியாச விரதத்தை அறிக்கையிட
தீர்மானித்தனர். 1920 ஆம் ஆண்டு பெந்தக்கோஸ்தி திருநாளன்று முதல் துறவியர்களின்
முதல் துறவு உறுதிமொழி நிகழ்வு நடத்தப்பட்டது. ஆசிரமச் சிற்றாலயத்தில் வைத்து நமது
கதாநாயகன் திருப்பலி ஒப்புக்கொடுத்தார். குக்குலியோன் அல்லது புகழ்ச்சி பாடல்
நேரத்தில் திருச்சடங்குகள் நடத்தவும் தொடர்ந்து துறவியரோடு துறவு
வார்த்தைப்பாட்டின் கவுரவத்தை பற்றி சிறு மறையுரை நடத்தவும் செய்தார். அந்த
மறைவுரையின் ஒரு சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரு துறவியை நேர்ச்சை மாட்டோடு
ஒப்புமைப்படுத்தலாம். நேர்ச்சை மாடு 4 தலங்களை சந்திக்கின்றன. முதலாவதாக நேர்ச்சை
மாட்டை கூட்டத்திலிருந்து பிரித்து விடுகின்றனர். இரண்டாவதாக அதனை தேவாலயத்தின்
வெளியே கட்டிவிடுகின்றனர். மூன்றாவதாக பலி செலுத்துகின்ற நாளில் அதனுடைய கழுத்து
வெட்டப்பட்டு தோல் உரிக்கப்பட்டு பல துண்டுகளாக முறிக்கப்படவும் அதிலிருந்து
தேவையற்றவை மாற்றி இரத்தம் ஒரு தனிப்பட்ட பாத்திரத்தில் வைத்து அதனுடைய
இறைச்சியும் இரத்தமும் தேவாலயத்தின் யாக பீடத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
நான்காவதாக குருவானவர் இறைச்சிகளை யாக பீடத்தின் மேல் வைத்து பூஜை செய்யவும் அதன்
மேல் இரத்தத்தை ஊற்றவும் செய்கிறார். யூதர்களின் பல பலிகளில் மிகவும் மேன்மை
வாய்ந்தது சர்வாங்க ஹோம யாகம் ஆகும். சாதாரணமாக பலிப்பொருளின் ஒரு பகுதியை மட்டுமே
பலிபீடத்தில் வைத்து பூஜை செய்வர். ஆனால் சர்வாங்க ஹோம யாகம் என்பது அவ்வாறு அல்ல.
அனைத்தும் இறைவனுடைய முன்னிலையில் பூஜை செய்யப்படுகிறது. அதுவே சன்னியாசம்.
நேர்ச்சை மாட்டுக்கு இணையான துறவி தானாகவே
குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு விடுகிறார். தானாகவே இறைவனின் இல்லமாகிய
ஆசிரமத்திற்கு வந்தடைகிறார். அங்கு அவர் பலி நாளை எதிர்பார்த்து நாள்தோறும் தனது
குறைகளை கண்ணீரில் கழுகி வருகிறார். பலி நாளன்று துறவி தேவாலயத்தின் முன்னிலையில்
வைத்து கண்டந் துண்டமாக வெட்டப்பட வேண்டும். அவரது கழுத்தை அவரையே வெட்டி
விடுகிறார். வெட்டுவதற்கான வெட்டுகத்தி என்பது அவர் எடுத்துக் கொள்கின்ற விரதங்களே
ஆகும். இவ்வாறு குருவானவரிடம் அவர் ஒப்படைக்கப்படுகிறார். குருவானவர் அவரை
சமர்ப்பித்து இறைவனுடைய பெயரால் ஏற்றுக் கொள்ளவும் செய்கிறார்.
துறவியின் தோல் உரிக்கப்பட வேண்டும். அவரது உடல்
பல துண்டுகளாக வெட்டப்பட வேண்டும். அதனுள் தீயவை மாற்றப்பட வேண்டும். விரதங்களை
ஒப்புவிப்பதன் படியாக மட்டும் ஒருவர் பரிபூரண துறவியாக மாற முடியாது. அவர்
பலிபீடத்தின் மீது பலியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவர் மெசியாவோடு பலிபீடத்தில்
இருக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் இந்த பலி சமர்ப்பிக்கப்படுகிறது.” (கிரி
தீபம் பக்கம் 129 முதல் 130 வரை)
மறையுரைக்குப் பின்னர் கதாநாயகனும்
மற்றவர்களும் மௌன ஜெபங்கள் நடத்தவும் பின்னர் பலிபீடத்தின் முன்னிலையில் முழந்தாழ்
படியிட்டு விரதங்களை அறிக்கையிட்டு உறுதிமொழி செய்தனர். இவ்வாறு நீண்டகால முயற்சி, ஜெபம் மற்றும் தியாகம் போன்றவற்றின் பலனாக பெருநாடு என்னும் பகுதியில்
உள்ள முண்டன் மலையில் பெதனி ஆசிரமம் துவங்குவதற்கான பெரும் வாய்ப்பை கதாநாயகன்
பெற்றுக் கொண்டார்.
அதிகாரம் 12
பெதனியின் செயல்பாடுகள்
ஆயிரக்கணக்கான துறவு சபைகளும் ஆசிரமங்களும்
உலகின் நான்கு பகுதிகளிலும் நிறுவி மனித குலத்திற்குத் தேவையான முன்னேற்றத்திற்காக
கத்தோலிக்க திருச்சபை என்றும் செயல்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும்
தொழிற்சாலைகள் முதலியவை வழியாக திருச்சபையில் துறவியர்கள் தொடர்ந்து
நிர்வகித்து வரும் சேவைகளுக்கு உலகில் உள்ள அனைத்து மகான்களும் புகழ் வார்த்தைகளை
கூறிடவும் செய்கிறார்கள். தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறி சொந்த உயிருக்காக
தன்னையே பலியாக ஒப்புக் கொடுக்க முழு விருப்பத்தோடு அனைத்தையும் துறந்தவர்களாய்
தியாகிகளாக அனைத்து படைப்புகளையும் அன்பு செய்தும் அவர்களுக்கு சேவை செய்தும்
வாழ்வை முன்னோக்கி செல்கின்ற தியாக வீரர்களின் செயல்பாடுகளை புகழாதவர்கள் யாரேனும்
இன்று உண்டு என்றால் அவை அறிவின்மையோ அல்லது பொறாமையாகவோ இருக்கலாம் அதனுடைய
காரணங்கள். உலக ஆதாயம் விரும்பாது அல்லது மதிப்பையும் விரும்பாது மனித சேவைகளை
நிர்வகித்துக் கொண்டிருப்பதாக இருப்பதால் அவர்கள், “உனது
சகோதரனை உன்னைப்போல அன்பு கூர்வாயாக” என்ற இறைக் கட்டளைக்கு ஏற்ப கீழ்ப்படிந்து
செயல்படுவதும் நிர்வகிப்பதுமாகும். மனிதனுக்கு உடல் மட்டுமல்ல அவனுக்கு ஆன்மாவும்
உண்டு எனவும் மரணத்திற்கு பின்னர் ஆன்மா அதன் படைப்பாளரால் நிலையான மீட்புக்காக
அல்லது நிலையான தண்டனைக்காக விதிக்கப்படும்போது நம்பிக்கை மூலம் மனித ஆன்மாவின்
தூய்மைப்படுத்துதலுக்காகவும் அவன் முயல்வது உண்டு.
கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுமல்ல சில
கத்தோலிக்கரல்லாத திருச்சபைகளிலும் பல துறவு சபைகள் உண்டு என்றாலும் அவை விரலால்
எண்ணக் கூடிய விதத்தில் மிகக் குறைவாகவே உள்ளன. துறவு சபைகள் தழைத்து வளர்வதற்கான
சத்து நிறைந்த மண் கத்தோலிக்க திருச்சபையில் இருப்பதைப் போன்று மற்ற
திருச்சபைகளில் இல்லை என்பதே அதனுடைய பதில் மொழி. பல கத்தோலிக்கரல்லாத
திருச்சபைகளிலும் துவங்கப்பட்ட துறவு சபைகள் நாளடைவில் அழிவடைந்து போகவோ அல்லது
கத்தோலிக்க திருச்சபையோடு இணையவோ செய்த வரலாறு தான் உள்ளது. பெதனி துறவு சபையின்
அனுபவமும் இந்த வரலாற்று நிகழ்வைப் போன்று தொடர்ந்து நடைபெறுகிறது என்பதை நாம்
அறிந்து கொள்ள முடிகிறது.
பெதனி ஆசிரம நிறுவுதலையும் அதன் வழியாக
கதாநாயகன் நிர்வகித்த பல சேவைகளையும் பாராட்டி ஆர்த்தடோக்சு திருச்சபையின்
கோட்டயத்திலிருந்து வெளியிடப்படும் “சர்ச் வீக்லி” என்ற வார இதழில் அதன் ஆசிரியர்
“மறைந்த மார் இவானியோஸ்” என்ற கட்டுரையில் கதாநாயகனின் மரணத்திற்குப் பிறகு எழுதிய
உரை இத்துடன் சேர்க்கப்படுகிறது.
“எம் ஏ அச்சன் கல்கத்தாவில்
தங்கியிருந்தபோது இந்திய அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்கள் அவரது
மனதில் ஒளிரத் துவங்கின. இந்திய அரசியல் தலத்தில் மகாத்மா காந்தி எனப்படும் மகா
ஜோதிஷ் தோன்றினார். உலகப் புகழ்பெற்ற பல கவிஞர்களின் கூட்டத்தில் மகாகவி தாகூர்
பெரும் புகழ் சம்பாதித்துக் கொண்டிருந்த காலம். மகாத்மா காந்தி சபர்மதி ஆசிரமம்
மற்றும் மகாகவி விஸ்வ பாரதி எனப்படும் சாந்தி நிகேதனமும் துவங்கினர். இதனுடைய
கருத்துக்களால் சூழப்பட்ட எம் ஏ அச்சன் வசதி மிகுந்த பேராசிரியர் பதவியையும்
விட்டுவிட்டு இந்திய கலாச்சாரத்துக்கு இணையான காவி உடை அணிந்து தனது சமுதாயத்தின்
மத்தியில் பெதனி ஆசிரமமும் பெதனி துறவு சபையும் துவங்கினார். இந்தியன் நேஷனல்
காங்கிரஸும் மற்றும் பல தலைவர்களும் வெளிப்படுத்திய நமது கலாச்சாரத்துக்கு உகந்த
விதத்தில் துவங்கி வளர்ந்து வந்த இந்த துறவு சபை நமது கலாச்சாரத்துக்கு உகந்ததாக
உள்ளது என பலரும் கண்டுணர்ந்து கொண்டனர்.
இந்தியாவின் கிறிஸ்தவ நிலை தாமதித்ததாயினும்
வசிஷ்டன் மற்றும் விசுவாமித்திரன் போன்ற முனிவர்களை அறிந்திருந்த இந்திய
நாட்டவர்களுக்கு மிகவும் பழக்கமான தியாகச் சேவையே இதனில் தோன்றியது. குறிப்பாக
மார் இவானியோஸின் வரலாற்றில் பெதனி ஆசிரம காலம் ஒரு அத்தியாயமாகவே அமைந்திருந்தது. அவர் பக்தி வாழ்வுக்கு
முக்கியத்துவம் நல்கிய பல இளையோர்கள் இறைமையும் சேவை மனப்பான்மையும் கொண்ட வாழ்வு
முறையில் நிலைத்து நின்றவர்கள் பலர் உள்ளனர். தியானத்திற்காகவும் ஜெபத்திற்காகவும்
சேவைகளுக்காகவும் ஆயர் அவர்கள் அன்று பழங்கால முனிவர்களைப் போன்று செயல்பட்டார்.
அன்று நடைபெற்ற பல கூட்டங்களிலும் மாணவ கூடுகைகளிலும் தியானக் கூடுகைகளிலும் அவரது
உடனிருப்பும் உரையும் இறைமக்களுக்கு தைரியமும் ஆர்வமும் நம்பிக்கையும்
உருவாக்கியது.
சமுதாயத்தில் நிலவிய கட்சி வழக்குகளும்
கூக்குரல்களும் இரண்டாவது நிலைக்கு சென்றதாக உணரத் தூண்டியது. ஆயிரக்கணக்கான
பணத்தை அவர் நன்கொடையாக பெற்றுக் கொண்டார். குடும்ப வாழ்வில் திருவழிபாட்டுக்கும்
நற்கருணை அனுபவத்திற்கும் முக்கியத்துவம் வழங்க வழிகாட்டினார். சமுதாயம்
முன்னேற்றப் பாதையில் வளர்ந்து கொண்டிருப்பதாக பலரும் உணரத் துவங்கினர். பெதனி
ஆலயங்களும் பள்ளிக்கூடங்களும் நிறுவப்பட்டன. வழக்குகளின் நிலை எதுவாக இருந்தாலும்
உயர் பேராயர் கட்சியினருக்கு திருவழிபாட்டு சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என
கேட்டு தீவிர உள்ளத்தோடு செயல்பட்டார். “பெதனியின் தந்தை” என ஆசிரமத்தவர்களும்
பிறரும் அன்று அவரை அழைத்தனர். இரம்பான் நிலைக்கு அவர் உயர்த்தப்பட்ட போது “ஆபோ
வர்கீஸ்” என அழைக்கப்பட்டார்.
ஆனால் இந்த மகானின் வாழ்க்கை முறை ஏதோ
முறையில் சமுதாயத்திற்கு இழப்பு ஏற்பட்டது. மார் இவானியோஸ் என்ற பெயரில் ஆயராக
அவர் அருள்பொழிவு செய்யப்பட்டபோது அவரிடமிருந்து எண்ணற்ற செயல்களை சமுதாயத்தினர்
எதிர்பார்த்தனர். நிரணம் என்னும் இடத்தில் வைத்து ஆயர் அருட்பொழிவு திருச்சடங்கு
வேளையில் மகா பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் ஆயர் பின்வருமாறு விளக்கி இருந்தார்.
“முனிவர்கள் இரண்டு நிலைகளில் உள்ளனர்.
முதல் குழுவினர் பெரிய கட்டிடங்களில் ராஜத்துவ வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொண்டு
ஆட்சி நிர்வகிக்கும் பங்குகளின் ஆயர்கள் ஆவர். அவர்களே ராஜ முனிவர்கள். ஆனால்
என்னைப் போன்ற ஆசிரமவாசிகளான முனிவர்களோ வனவாசம் ஏற்றுக் கொண்டு குடிசைகளில்
வாழவும், மரத்தாலான செங்கோல் மற்றும் மரத்தாலான
சிலுவையை அணியவும் செய்தமையால் வியப்புக்குரியதாக காண வேண்டிய தேவையில்லை. இவ்வாறு
மார் இவானியோஸ் காவி உடை அணிந்து நடந்து வந்தார்.
இவ்வாறு ஒரு நவீன அதிகாரத்தை படைத்த ஆயரின்
வாக்குறுதி இவ்வாறு நிறைவேற்றப்பட்டது என அவரது வரலாறு நிரூபிக்கின்றது. ஆயரின்
செயல் திட்டங்களும் திறமையும் தியான வாழ்வில் வாழ்வதற்கு மட்டுமாக அவரை
ஒதுக்கிவிடவில்லை. சுறியானி சமுதாய வழக்குப் போரில் அவர் முக்கிய பங்கு வகித்துக்
கொண்டு உயர் பேராயர் திருஆட்சி அமைப்பை பெற்றுக் கொண்ட பெருமையோடு சமுதாய
முன்னேற்றத்திற்காக அவர் முன்னோக்கி சென்று கொண்டிருந்தார். பெருங்கடலைப் போல
விரிந்து பரந்த உரோமை சமுதாயத்தின் உறுப்பினர் ஆவதே தனக்கும் சமுதாயத்திற்கும்
மேன்மைக்கும் உள்ள மார்க்கம் என அவர் சிந்திக்கத் துவங்கினார். அதற்காக மறைமுகமாக
பல கடிதப் போக்குவரத்துகள் நடத்தினார். சுறியானி திருச்சபைக்கு ஒரு தனிப்பட்ட
திருவழிபாட்டு முறையையும் அவர் சம்பாதித்துக் கொண்டார். தனது சமுதாயம் அவரோடு கூட
பின் தொடர்ந்து வரும் என்ற முன் விதி அவருக்கு இருந்தது. மற்று ஆயர்களை கண்டு
கொள்ளாமல் அவர் முன்னோக்கி குதித்தார். ஆர்த்தடோக்ஸ் சமுதாயத்திற்கு இது
மிகப்பெரிய பேரிடியாக அமைந்தது. (சர்ச் வீக்லி வால்யூம் 7 எண் 29)
பிறரன்புச் செயல்கள் பலவற்றை நிர்வகிக்க
வேண்டும் என்ற எண்ணத்தோடு பெதனி துறவு சபையை நமது கதாநாயகன் ஆரம்பித்தார். மலங்கரை
மற்றும் சுறியானிக் கிறிஸ்தவர்களிடையே மட்டுமல்ல, கிறிஸ்தவரல்லாதவர்களின்
மத்தியிலும் பெதனியின் செயல்களை வழிநடத்த வாய்ப்பும் அதன் வழியாக பல நன்மைகளும்
கொண்டு வருவதற்குமான விருப்பமே பெதனி நிறுவுதலாக இருந்தது. அவற்றை
செயல்படுத்துவதற்கு பல வழிகளை அவர் ஒவ்வொன்றாகக் கண்டறிந்தார்.
1.
துறவுப் பயிற்சி
இறை மகிமைக்காகவும் ஆன்மாக்களின்
மீட்புக்காகவும் செயல்பட இறை அழைத்தலும் நல்ல மனமும் கொண்ட ஆண்களையும் பெண்களையும்
துறவு சபைக்கு ஏற்றுக் கொள்ள பல பயிற்சிகள் வழங்குவதற்கு பெதனியை நிறுவுகின்ற போது
நமது கதாநாயகன் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். பல ஆண்டுகள் நமது கதாநாயகன் அதற்கு
முயற்சி மேற்கொண்டிருந்தார். துறவிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஏழ்மை, கீழ்ப்படிதல் மற்றும் பிரம்மச்சரியம் போன்ற விரதங்களை கடைப்பிடிக்கத்
தயாராக ஏறக்குறைய 20 ஆண் துறவிகளையும் முப்பது பெண்
துறவிகளையும் பெதனியின் துவக்கக் காலத்தில் உருவாக்க முடிந்தது.
2.
மூன்றாம் வரிசை சபை (Third Order)
திருமணத்தால் குடும்ப வாழ்வு
வாழ்பவர்களுக்காகவும் கத்தோலிக்க திருச்சபையில் உள்ளதைப் போன்று “மூன்றாம் வரிசை
சபையின்” ஆசிரமம் நிறுவுவதற்கும் நமது கதாநாயகன் முயற்சிகள் மேற்கொள்ளவும் அதற்காக
பலரை ஆசிரமத்தில் உறுப்பினர்களாக்கவும் முடிந்தது. ஆயர் அருள்பொழிவுக்குப் பின்னர்
நமது கதாநாயகன் கூறிய உரை ஒன்று தற்போது இப்போது சேர்க்கப்படுகிறது.
“குடும்ப வாழ்வு வாழ்பவர்களுக்கும் கிறிஸ்தவ
வாழ்வை வழிநடத்துவதற்கு பயன்படும் விதத்தில் குடும்ப வாழ்க்கை வாழும் மக்களுக்காக
ஒரு மூன்றாம் வரிசை சபை கூட நிறுவ விரும்புகின்றோம். அதனுடைய துவக்க கால
முயற்சிகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன. உண்மையான இறை பக்தியில் குடும்ப
வாழ்வு வாழ விரும்புபவர்களுக்கு மூன்றாம் வரிசை சபையில் சேர்ந்து கொள்ளலாம்.
அவர்கள் துறவியர்களின் விரதங்களை கடைபிடிக்க வேண்டிய தேவையில்லை. புனிதமான குடும்ப
வாழ்வு நடத்த வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். அவர்கள் சொந்த ஊரையோ
சொத்துக்களையோ வீட்டையோ விட்டுவிட வேண்டிய தேவை இல்லை. ஆசிரமத்திற்கு சொந்தமான
இடங்களில் வந்து தங்க வேண்டிய தேவையும் இல்லை. ஆசிரமங்களில் அவர்கள் வந்து
தங்குவதற்கு அனுமதிப்பதும் இல்லை. கத்தோலிக்க திருச்சபையில் உள்ளதைப் போன்று
அவர்களுடைய குடும்பத்திலேயே குடும்ப வாழ்வு வாழ்ந்து இயேசு மெசியாவைப் போல் உண்மை
அன்பை பரிபூரணமாக வாழ்ந்து காட்டுவதற்கான பொறுப்புணர்வு தான் மூன்றாம் வரிசை
ஆசிரமத்தவர்களுக்கு உள்ளது.
இதற்கு உதவும் விதத்தில் சட்ட வழிமுறைகள்
பெதனி ஆசிரமத்தின் தலைவர் வழங்குவார். குடும்ப வாழ்வு வாழ்பவர்களுக்கிடையே
மூன்றாம் வரிசை அங்கத்தினர்கள் ஆவதற்கு பணிகளை துரிதப்படுத்துவோம் என நீங்கள்
சிந்திக்க வேண்டாம். இத்தகைய வாழ்வு முறையை எங்களால் காண்பித்து தர முடியும் என்ற
நோக்கம் மட்டுமே உள்ளது. இறை விருப்பத்திற்கு ஏற்ப விதத்தில் இந்தக் கொள்கை
கிறிஸ்தவர்களுக்கிடையே ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் வழியாக நற்செய்தி
பணியாற்றுவதற்கான பலன் உருவாகும் என நம்புகிறோம்.
பெதனியின் மூன்றாம் வரிசை சபையில்
அங்கத்தினர்களாக பலர் சேர்க்கப்படவும் ஆன்மீக வாழ்வு வாழவும் அவர்களுக்குத்
தேவையான பயிற்சிகள் வழங்கவும் ஆசிரமத் தலைவராக நமது கதாநாயகன் தொடர்ந்து முயற்சி
செய்து கொண்டிருந்தார்.
3.
மறையுரைகள்
கேரளாவின் பல இடங்களுக்கு பயணம் செய்து
கிறிஸ்தவம் சார்ந்த கருத்துக்களைப் பற்றி பல மறையுரைகளை நடத்தி கிறிஸ்தவர்களிடையே
ஆன்மீக உணர்வு ஏற்படுவதற்கும் கிறிஸ்தவ தத்துவங்களை கிறிஸ்தவரல்லாதவர்களை
கற்பிப்பதற்கு பெதனி நிறுவனரும் அதன் உறுப்பினர்களும் தீவிர முயற்சிகள்
மேற்கொண்டிருந்தனர். பெதனி ஆசிரம தலைவரின் பேரறிவால் ஆன்மீக ஒளி வீசுவதாக விளங்கிய
உரைகள் கேட்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கூடியிருந்தனர். சீர்திருத்த
திருச்சபைகளின் மறுமலர்ச்சி சிந்தனைகள் யாக்கோபாய திருச்சபை தலத்தில் நுழையாத
வண்ணம் மரபு நம்பிக்கையில் தனது திருச்சபை உறுப்பினர்களை நிலைப்படுத்த நமது
கதாநாயகன் தீவிரவாக முனைந்தார். அருளடையாளங்களின் மேன்மை, அதன் தேவை மற்றும் அவை வழியாக பெற்றுக் கொள்ளும் ஆன்மீக வாழ்வு போன்றவற்றை
மையமாகக் கொண்ட உரைகளை தொடர் மறையுறைகளாக அவர் நிகழ்த்தி வந்தார். மறையுரைகள்
நிகழ்த்துவதற்கும் அன்பளிப்புகள் பெற்றுக் கொள்வதற்குமாக பயணம் செய்வதற்கு கோவேறு
கழுதை ஒன்றை தனக்கு சொந்தமாக வாங்கி பயன்படுத்தியிருந்தார். வருடம் தோறும் புனித
வாரத்தில் நமது கதாநாயகன் நடத்தி வந்த மறையுரைகள் இறைமக்களிடையே ஆன்மீக உணர்வை
முதல் தரமாக உயர்த்தியது.
பத்தனம்திட்டையில் மாக்காம் குந்நு
என்னுமிடத்தில் ஒவ்வொரு வருடமும் நடத்துகின்ற கன்வென்ஷன் கூட்டத்தில் தொடர்ந்து
பத்து வருட காலங்கள் நமது கதாநாயகன் மறையுரைகள் நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
ஆசிரமத் தலைவரின் கட்டளைக்கு ஏற்ப பெதனி குருக்களும் திருத்தொண்டர்களும் பல
பங்குகளிலும் சென்று ஆன்மீக உரைகளை தேவைக்கேற்ப நிகழ்த்திக் கொண்டு இருந்தனர்.
4.
வெளியீடுகள்
வெளியீடுகள் வழியாக உளவாகும் நன்மைகளை
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த யாவரும் அறிந்து உணர்ந்துள்ளனர். அரசியல், சமூகம், அறிவியல் மற்றும் மதம் சார்ந்த செய்தித்தாள்,
மாத இதழ்களில், நூல்களிலும் மக்கள் மனங்களில்
உளவாக்குகின்ற மாற்றங்களை நவீன உலகம் எந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது என்று நவீன
உலகம் சாட்சியப்படுத்துகின்றது. இந்த உண்மையை சரியாக உணர்ந்த பெதனி ஆசிரமத்
தலைவரும் வெளியீடுகள் வழியாக ஆன்மீக உரைகள் வெளிப்படுத்த வேண்டும் என திட்டமிட்டு
“பெதனி பிரஸ்” என்ற பெயரில் திருவல்லாவில் ஒரு அச்சக நிலையத்தை உருவாக்கினார். இதன்
வழியாக பல வெளியீடுகள் வெளியிடப்பட்டு வந்தன.
ஆசிரமத் தலைவரின் பொறுப்பில் “பெதனி மாசிக”
என்ற பெயரில் மாத இதழ் ஒன்று ஆன்மீக காரியங்களை பற்றியும் கட்டுரைகளையும்
வெளிப்படுத்துகின்ற தொடர் கட்டுரைகளாக வந்து கொண்டிருந்தன. இந்த இதழின்
ஆசிரியராகவும் தலைவர்களாகவும் புலிக்கோட்டு யௌசேப் திருத்தொண்டர் (பின்னர் கத்தோலிக்க
திருச்சபையோடு இணைந்த ஜோசப் ரம்பான்), அருட்தந்தை
மாத்தியூஸ் பாறேட்டும் (பின்னர் ஆர்த்தோடக்ஸ் திருச்சபையின் மாத்தியூஸ் மார்
இவானியோஸ் ஆயர்) ஆகியோர் பணியாற்றினர்.
மேலும் ஆன்மீக நூல்களோடு இணைந்து
வேளைச்செபங்கள் மற்றும் மறைக்கல்வி நூல்கள் போன்றவையும் இந்த அச்சு
நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டு வந்தன. இவ்வாறு வெளியிடப்பட்ட நூல்கள்: 1.
திருப்பலி தியானம், 2. வாழ்வின் பிரகாசம் (3 பகுதிகள்),
3. ஆன்ம பிரகாசம், 4. பிரதி தினபிரகாசம்,
5. வினா விடைகள், 6. மறைக்கல்வி நூல்கள்,
7. திருவழிபாட்டு உதவி நூல், 8. பாவ மன்னிப்பு
(நான்கு பகுதிகள்), 9. மார்க்க பிரகாசிகா, 10. உண்மை வேத கதைகள், 11. வேளைச் செபங்கள், 12. திருப்பலி முறை, 13. மெசியா அனுகரணம்.
5.
திருவழிபாட்டு ஒழுங்கு
யாக்கோபாயா ஆர்த்தடோக்ஸ் திருச்சபைகளின்
ஆலயங்களில் திருவழிபாட்டு ஆன்மீக நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கருத்தோடு
அதற்கு மேலும் அழகூட்டுவதற்காக பெதனியின் நிறுவனர் தன்னால் முடிந்த அளவுக்கு
முயற்சிகள் மேற்கொண்டார். திருவழிபாட்டில் ஒரே முறையை கொண்டு வரவும் பாடல்களை
சீரும் சிறப்போடும் பாடுவதற்கும் தேவாலயத்தை திருவழிபாட்டுக்கு பயன்படும்
விதத்தில் வடிவமைத்தல் தவக்கால ஜெபங்கள் சரியாக நடத்துதல் போன்றவற்றைப் பற்றிய
ஆர்வத்தை உருவாக்குவதற்கு பல செயல் திட்டங்களை பெதனி நிர்வாகம் செயல்படுத்த
திட்டமிட்டது. முற்காலத்தை விட யாக்கோபாயா திருச்சபையிலும் ஆர்த்தோடக்ஸ்
திருச்சபையிலும் உள்ள ஆலயங்களில் திருவழிபாட்டு முறைகளில் கொண்டுவரப்பட்ட ஒரே முறை
பெதனியின் செயல்பாடாக அமைந்தது என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
புனித வார ஜெபங்களும் மற்றும்
திருச்சடங்குகளும் பக்தியுடன் நடத்துவதற்கு பெதனி ஆசிரமத் தலைவரும் துறவியர்களும்
தீவிர முயற்சிகள் மேற்கொண்டார்கள். வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்
புனித வாரத்தில் பெதனிக்குச் சென்று ஒரு வாரம் தங்கி ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து
கொள்வதற்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. மறையுரைகள், வேனைச்செபங்கள், முழந்தாழ்படியிட்டு கும்பிடுதல்,
உபவாசம் போன்றவற்றை செயல்படுத்தவும் ஒப்புரவு நற்கருணை அனுபவம்
வழியாக ஆன்மிக நிலையை மேம்படுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. பெதனி
ஆசிரமம் மக்களால் இக்காலத்தில் சூழ்ந்து நிற்கும் நிலையும் இக்காலத்தில்
உருவாகியிருந்தது. கதாநாயகனின் அறிவு மற்றும் ஆழமான கருத்துக்கள் அடங்கிய புனித
வார மறையுரைகள் போன்றவற்றைக் கேட்டு ஆன்மீக நிலையில் மேன்மையடைந்த கிறிஸ்தவர்கள்
ஆயிரக்கணக்கானவர்கள் ஆவர்.
6.
தேவாலயங்கள் நிறுவுதல்
அந்தியோக்கிய யாக்கோபாய மறைமுதுவர் அல்லது
மலங்கரை பேராயரின் நிர்வாகத்தின் கீழே உள்படாமல் சுதந்திரமான நிலையில் பெதனி
செயல்பட்டு வந்தது. ஆசிரமத் தலைவரான நமது கதாநாயகன் ஆயர் நிலை பெற்றுக் கொண்ட
பின்னர் பெதனி மூலமாக பல இடங்களிலும் ஆலயங்கள் நிறுவப்பட்டு மக்களின் ஆன்மீக
உணர்வுக்காக என்றென்றும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இவ்வாறு பதினைந்து இடங்களில்
ஆலயங்கள் நிறுவப்படவும் 12 இடங்களில் ஆலயங்கள் நிறுவதற்காக இடம் வாங்கப்படவும்
செய்யப்பட்டது. பெதனியால் ஒரு தேவாலயம் தங்கள் பகுதியில் உருவாவதன் வழியாக
உளவாகும் நன்மைகளைப் பற்றிய அறிவு மக்கள் உணர்ந்திருந்தனர். ஒவ்வொரு தேவாலயமும்
கூடக்கூட அவற்றை சந்தித்து ஆன்மீக அறிவை மக்களுக்கு நல்கிட பெதனி ஆசிரமத் தலைவர்
அதிக ஆர்வம் காட்டியிருந்தார்.
துறவிகளோடு இணைந்து கத்தோலிக்க
திருச்சபையோடு மறுஒன்றிப்படைய கதாநாயகன் தீர்மானித்தார் என அறிந்தபோது மட்டுமே
மேற்குறிப்பிட்ட முறையில் ஆலயங்கள் நிறுவ வேண்டாம் என்ற ஆணையை ஆயர் வட்டச்சேரில்
மார் திவன்னாசியோஸ் அவர்கள் மற்று ஆயர்களுக்கும் பெதனி ஆசிரமத் தலைவர்களுக்கும்
அனுப்பினார்.
7.
பிறரன்புப் பணி நிறுவனங்கள்
பெதனிக்கு சொந்தமாக மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் போன்றவற்றை நிறுவி
பிறரன்புப் பணிகளை நடத்துவதற்கு நமது ஆசிரமத் தலைவர் ஆர்வம் கொண்டிருந்தார்.
அதற்கான பொருளாதார சூழல் மந்தமாக இருந்ததனால் அவற்றை நிறுவுவதற்கு அவரால்
இயலவில்லை. ஆதரவற்றோர் இல்லம் மட்டுமே அவரால் துவங்க முடிந்தது. ஆதரவற்றோர்
இல்லமும் ஆசிரமத் தலைவரின் விருப்பத்திற்கேற்றபடி நடத்துவதற்கு அன்றைய பல சூழல்கள்
அவரோடு கைகோர்த்துப் போகவில்லை.
8.
பிற இனத்தவரிடையே
தற்செய்திப்பணிகள்
மற்று இனத்தவர்களிடையே நற்செய்திப் பணி
நடத்துவதற்கும் அவர்களை கிறிஸ்தவர்களாக்கிடவும் ஆசிரமத் தலைவர் பல முயற்சிகளை
மேற்கொண்டார். திருமூலபுரம், வெண்ணிக்குளம், தும்பமண், வடசேரிக்கரா மற்றும் பெருநாடு ஆகிய
இடங்களில் இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அருட்தந்தை அலக்ஸியோஸ்
அவர்களிடம் அதற்கான பணிகள் ஒப்படைக்கவும் செயல்படுத்தவும் செய்யப்பட்டது.
9.
கல்விப் பணிகள்
பெதனி ஆசிரமத்தவரான துறவியர்கள் கல்வி
மையமான செயல்களை அதிகமாக செய்யவில்லை என்றாலும் மூன்றாம் வரிசை சபை துறவியர்கள்
இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். திருவல்லாவின் திருமூலபுரத்திற்கு அருகே
அமைந்திருந்த பாலிகாமடம் என்ற சிறார் இல்லம் நமது கதாநாயகனின் முயற்சியால்
உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
சிறார் இல்லத்திற்காக பெதனி
அருள்கன்னியர்கள் தீவிர முனைப்புடன் செயல்பட்டிருந்தனர். இந்த சிறார் இல்லத்தின்
நிர்வாகத்திற்காகவும் கற்பித்தலுக்குமாக மிஸ் ஹோம்ஸ் மற்றும் மிஸ் ப்ரூக்ஸ்மித்
அவர்களை உதவி செய்வதற்கு அழைப்பு விடுத்து வரவேற்று உபசரித்தவர் நமது கதாநாயகன்
ஆவார். இவர்களுள் மிஸ் ஹோம்ஸ் முப்பது ஆண்டுகள் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு
பல்கலைக்கழகத்தில் கல்விப் பணி செய்த மாமேதை ஆவார். பெதனியின் துறவிகள்
மாணவியர்களின் மன மாற்றத்திற்கும் கற்பிப்பதற்கும் தனிக்கவனம் செலுத்தியிருந்தனர்.
கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்த பின்னர் மட்டுமே இந்த பள்ளிக்கூடத்தின்
கல்விப் பணியை பெதனி அருள்கன்னியர்கள் விட்டுவிட்டனர். இருப்பினும் மாணவியர்களின்
விடுதியை பல காலங்கள் அருள்கன்னியர்கள் பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்தனர்.
சாம்பவர் மற்றும் சேரமர் முதலியவர்களின்
குழந்தைகளுக்காக திருமூலா என்னும் இடத்தில் மலையாள வழி துவக்க கல்விக்கூடம் ஒன்றை
பெதனியின் அருட்கன்னியர்கள் துவங்கவும்
நற்சேவைகளால் அதனை வழிநடத்தவும் செய்து வந்தனர். கல்விப் பணிகளை செய்வதற்கு
கத்தோலிக்க மறுஒன்றிப்புக்கு பின்னர் பெதனி அருட்கன்னியர்களுக்கு ஏராளமான
வாய்ப்புகள் அமைந்தன.
1920 முதல் 1930 வரை 10 ஆண்டுகள் பெதனி
அருள்கன்னியர்களும் துறவியர்களும் நிர்வகித்து வந்த பிறரன்புப் பணிகளையும் அனைத்து
இனத்தவரிடமிருந்து பெற்றுக் கொண்ட நன்மைகளையும் எல்லாம் வல்ல இறைவன்
ஆசீர்வாதங்களால் நல்கியதை நன்றி கூறி ஆசிரமத் தலைவரான நமது கதாநாயகன் கிரி தீபம்
எனும் நூலில் கடைசிப் பகுதியில் இவ்வாறு எழுதியுள்ளார்.
“உண்மையே உருவான இறைவனின் அன்பு மேலும்
உலகில் பரப்பப்பட வேண்டும் என்பதே பெதனி ஆசிரமத்தின் விருப்பமாக இருந்தது.
பிறரன்புப் பணிகள் வழியாக தொடர்ந்து இதனை செய்ய வேண்டும் என நோக்கம்
கொண்டிருந்தது. மெதுவாகவும் அமைதியாகவும் செய்ய வேண்டிய பல பணிகளை செய்தவாறே இருந்தனர்.
அவ்வாறு செய்யப்பட்டவை அனைத்தும் ஆன்மீகத் தந்தையர்களின் ஆசீர்வாதத்தாலும்
இறைவனின் அருளாலும் நடந்தேறியவையே ஆகும். மலங்கரை சுறியானி சமுதாயத்திற்கும்
நான்கு திசைகளிலும் வாழும் அனைத்து அன்பர்களுக்கும் அவை நன்மை பகர்வையாக மாறின.
ஆசிரமத்தவர்களின் தியாகம் நிறைந்த ஒத்துழைப்பு முழுமையாக அமைந்திருந்தது.
பெதனி ஆசிரமத்தின் நிறுவனர் என்ற நிலையில்
எந்த விதமான புகழ்ச்சிக்கும் நான் மட்டும் தகுதி உடையவன் அல்ல. எந்தவிதமான
ஊக்கமூட்டுதலுக்கும் நான் தகுதி உடையவன் அல்ல. ஒரே ஒரு காரியத்தை மட்டும் நான்
அறிந்து கொண்டேன். பெதனி ஆசிரமம் வழியாக இறைவனின் அருளும் அன்பும் எனக்கு கூடுதலாக
காண முடிந்தது. பெதனி ஆசிரமத்தவர்களின் அனுபவங்களும் இதுவாகவே அமைந்திருந்தது.
எதுவும் இல்லாமல் இருந்த எளியவர்களாக வாழ்ந்து வந்த ஆசிரமத்தவர்களால் எதுவும்
செய்ய முடியாதன்றோ!
அனைத்திற்கும் அடிப்படை இறைவனின் அருள்
ஆகும். அவரே துவங்கினார். அவரே வழிநடத்தினார். நாம் எதுவும் செய்யவில்லை. செய்ய
வைத்ததும் இல்லை. பத்து ஆண்டுகளில் பெதனிக்கு கிடைத்த உற்சாக அருள் வரங்கள்
மிகவும் மேன்மையானதே ஆகும்.
துறவு சார்ந்த ஒதுக்கப்பட்ட வாழ்வை
அடிப்படையாகக் கொண்டு பெதனி ஆசிரம நிறுவுதலுக்காக நான் புறப்பட்டேன். இன்று
காணப்படும் அனைத்து இலைகளும் கிளைகளும் உருவாகும் என்று நான் நினைத்துக் கூட
பார்க்கவில்லை. விரும்பவும் இல்லை. பெதனி ஆசிரமம் தனது முழங்காலை மண்டியிட வைத்தது
ஆண்டவர் இயேசுவின் முன்னிலையில் ஆகும். தண்ணீரை நிறமும் மணமும் சுவையும் மிகுந்த
திராட்சை இரசமாக மாற்றிய இறைவன் காணப்படுகின்ற அனைத்து மாற்றங்களையும் உருவாக்கி
இருக்கலாம். அவரது அருள் மட்டுமே அதற்கு தேவையாக இருந்தது. எதிர்பாராமல் பெதனிக்கு
ஏற்பட்ட பலப்பல முன்னேற்றங்களை நான் எண்ணிப் பார்க்கிறேன். விரும்பாமலும் கோரிக்கை
வைக்காமலும் அதனுடைய முன்னேற்றத்திற்காக இறைவன் செய்த உதவிகள் அனைவராலும் கண்டு
உணர முடியும்.
பெதனி ஆசிரமத்திலிருந்து ஆயர்கள் உருவாக
வேண்டும் என நான் விரும்பவில்லை. பெதனிக்கு சொந்தமாக ஆலயங்கள் உருவாக வேண்டும்
என்று நான் ஆசைப்பட்டதும் இல்லை. தூய ஆவியானவர் ஆயர்கள் வழியாக பெதனிக்கு ஆயர்களை
அருள்பொழிவு செய்தார். இறைவனே அவர்களால் பல இடங்களிலும் சில ஆலயங்களை உருவாக்க
வைத்தார்.
துறவு சார்ந்த உறுதிமொழிகளை எடுத்துக்கொண்ட
ஆண் பெண்களை ஆசிரமத்தவர்களாக உருவாக்கியதும் இறைவனே ஆவார். திறக்கப்பட்டிருந்த
ஆசிரமத்திற்கு ஆண் பெண் வேறுபாடின்றி அனைவரும் நுழைவதற்கு முடிந்தது என்றால்
அதுவும் இறைவனின் அருளாலேயே ஆகும். பெதனியின் எதிர்காலத்தைப் பற்றி நாம் எதுவும்
பயத்துடன் எண்ண வேண்டிய தேவையில்லை. எதற்காகவும் நான் பயப்படவும் இல்லை. (கிரி
தீபம் பக்கம் 145 முதல் 147 வரை)
இவ்வாறு பெதனி வழியாக செய்யப்பட்ட பல
செயல்களால் கேரளாவின் யாக்கோபாயா மற்றும் ஆர்த்தடோக்ஸ் திருச்சபைகளில் ஆன்மீக
உணர்ச்சி உருவாயின என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் கத்தோலிக்க
திருச்சபையோடு ஒன்றிணைந்த பின்னர் மட்டுமே பல முக்கிய பிறரன்புச் செயல்களுக்கு
வாய்ப்பு கிடைத்தது எனலாம்.
பெதனியின் வெற்றிக்கு முக்கிய காரணம்
ஆசிரமத் தலைவரான நமது கதாநாயகனின் அசாதாரணமாக இறைவனில் நம்பிக்கை வைத்ததும் சமூக
சேவைக்கான ஆர்வமும் இரவு பகலின்றி எடுத்துக்கொண்ட தீவிர முயற்சியும் ஆகும்.
அதிகாரம் 13
ஆயர் அருட்பொழிவுக்கு பின்னர் நமது
கதாநாயகனின் உரையும் மறைமுதுவரின் தடை ஆணையும்
பெதனி ஆசிரமமும் கன்னியர் மடமும் உருவாக்கி
1920 முதல் 1925 வரை 5 ஆண்டுகளான சூழலில் அதன் தலைவரை ஆயராக அருள்பொழிவு செய்ய
வேண்டும் என பேராயர் வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ் மற்றும் ஆயர்களும் ஆலோசனை
செய்து தீர்மானித்தனர். அதற்கு துவக்கமாக திருவல்லாவில் திருமூலபுரம் ஆலயத்தில்
வைத்து 1925 மகர மாதம் 15 ஆம் தேதி அருட்தந்தை கி வர்கீஸ் இரம்பானாக அருள்பொழிவு
செய்யப்பட்டார். நிரணம் ஆலயத்தின் ஆயராக இருந்த மார் கிரிகோரியோஸ் இந்த
அருள்பொழிவு செயலை நிர்வகித்திருந்தார். இதனைப் பற்றிய “பெதனி மாசிகா” என்ற இதழில்
வெளிப்படுத்தப்பட்டிருந்த செய்தி கீழே இணைக்கப்படுகிறது.
அனுவாயக்காரர்கள் என்ற துறவு சபையின்
இந்தியாவின் முதல் உறுப்பினராகவே ஆயர் அருள்தந்தை கிவர்கிஸ் அவர்களை அருள்பொழிவு
செய்தார். சுறியானி திருப்பலி முறையில் காணப்படுவதும் துறவியர்களை அருட்பொழிவு
செய்வதற்கும் பயன்படுத்துகின்ற இந்த திருச்சடங்கு முறை ஏறக்குறைய மூன்று மணி நேரம்
நீண்ட திருச்சடங்கு ஆகும். அனுவாயகாரர்களாகிய பெதனி ஆசிரமத்தவர்களுக்கு
அனுமதித்துள்ள காவி நிறத்தில் தலையில் அணிகின்ற மஸ்னப்ஸாயும், அங்கியும் புறஅங்கியும் ஆகும். பெதனி ஆசிரமத்தவர்களை இரம்பான்மார்கள்
எனவும் அழைக்கலாம் என ஆயர் அவர்கள் வெளிப்படுத்தினார். இந்தியத் தாயின் இறைமையை
எடுத்துக்காட்டும் ஒரு நிறுவனமாக பெதனி ஆசிரமம் நிலைக்கட்டும். அதற்கு இறைவன்
உதவட்டும் என ஆயர் வாழ்த்தினார். (பெதனி மாசிகா, 1925 மெய் இலக்கம்)
காதோலிக்கோஸ் அருள் பொழிவும் ஆயரின்
அருள்பொழிவும்
இரம்பான் நிலைக்கு அருள்பொழிவு செய்யப்பட்டு
மூன்று மாதங்கள் முடிந்தது. 1925 மெய் 1ஆம் தேதி நிரணம் ஆலயத்தில் வைத்து பெனிதனையின் கீவர்கீஸ் இரம்பானை ஆயராக
அருள்பொழிவு செய்வதற்காக மற்று ஆயர்களோடு கலந்தாலோசித்த பின்னர் வட்டச்சேரில் மார்
திவன்னாசியோஸ் தீர்மானித்தார். அதன் முந்தைய நாளில் ஏப்ரல் 30ஆம் தேதி அதே ஆலயத்தில் வைத்து இரண்டாவது காதலிக்கோசை (உயர் பேராயர்)
அருள்பொழிவு செய்வதற்கு சமுதாய பிரமாணிகள் தயாரிப்புகளை மேற்கொள்ள அதற்கு
அனுமதியும் வழங்கப்பட்டது.
அப்தேது மிஷிகா மறைமுதுவரால் முதல்
காதோலிக்கோசாக அருள்பொழிவு செய்யப்பட்ட கண்டநாடு மார் இவானியோஸ் 1913 ல் மரணமடைந்த பின்னர் 12 ஆண்டுகள் அடுத்த உயர்
பேராயரை அருள்பொழிவு செய்ய ஆயர் குழுவினர் தைரியம் காட்டவில்லை. இரு குழுவினரும்
தங்களுக்கு இடையே நடைபெற்று வந்த வட்டி பணத்திற்கான வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு
எதிராக வந்து விடுமோ என்ற பயமும் மறைமுதுவரோடு நடந்து கொண்டிருந்த ஆலோசனைகள் பல
தோல்வியடையும் என்ற நம்பிக்கையும் தான் அடுத்த உயர்பேராயரின் அருள்பொழிவுக்குக்
காலம் தாழ்த்தியது. வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ் மற்றும் அவரது துணையாளர்களும்
அந்தியோக்கியாவுக்கு சென்று மறைமுதுவரை நேரடியாக சந்தித்து ஆலோசனைகள் நடத்தினாலும்
அவை தோல்வியில் முடிவுற்றன. அவர் இந்தியாவிற்கு திரும்பியவுடன் புதிய
உயர்பேராயரை அருள்பொழிவு செய்வதற்கான
ஆலோசனைகளை நடத்தவும் செய்தனர். அவ்வாறு கோட்டயம் பங்கைச் சார்ந்த மார்
ஃபிலெக்ஸ்சீனோசை (வாகத்தானம்) இரண்டாவது
உயர் பேராயராக அருள்பொழிவு செய்ய அனைவரும் தீர்மானித்தனர்.
அவ்வாறு 1925
ஏப்ரல் 30ஆம் தேதி வியாழக்கிழமை திருத்தூதர் தோமாவால்
உருவாக்கப்பட்ட நிரணம் ஆலயத்தில் வைத்து இரண்டாவது உயர் பேராயர் அருள்பொழிவு
செய்யப்பட்டார். அதன் மறுநாள் மெய் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கீவர்கீஸ் இரம்பான்
மார் இவானியோஸ் என்ற பெயரில் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார். புதிய உயர்
பேராயரான மார் பசேலியோஸ், கண்டநாடு பங்கின் யோவாக்கிம் மார்
இவானியோஸ், நிரணம் பங்கின் மார் கிரிகோரியோஸ் ஆயர்
(மூன்றாவது உயர் பேராயர்) ஆகியோர் இணைந்து அருள்பொழிவு திருச்சடங்குகளை
வழிநடத்தினர்.
கேரளாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த
ஏராளமான குருக்களும் ஆயிரக்கணக்கான இறைமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நோயினால் படுக்கையில் இருந்த யோவாக்கிம் மார் இவானியோஸ் ஆயர் அற்புதமாக எழும்பி
பலிபீடத்திற்கு வருகை தரவும் அருள்பொழிவு செய்யப்பட்டவரின் தலையில் “கைகளை
வைக்கவும்”, “செங்கோலை பிடிக்கவும்” போன்ற கர்மங்களில்
கலந்து கொள்ளவும் செய்தது மட்டுமல்ல ஆலயத்திலிருந்த அனைத்து மக்களையும் மூன்று
தடவை சிலுவையால் உயர்த்தி ஆசீர்வதிக்கவும் செய்தார்.
நிரணத்திலிருந்து மூன்று மைல் தொலைவு
மட்டுமே உள்ள பருமலை செமினாரியில் வாழ்ந்திருந்த வட்டச்சேரில் மார்
திவன்னாசியோஸ் உயர் பேராயரின் அருள்பொழிவு
மற்றும் ஆயர் அருள்பொழிவு நிகழ்வுகளில் கலந்து கொள்ளாததன் காரணம் என்ன?
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வட்டிப்
பணம் சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்ற போது
அந்தியோக்கிய மறைமுதுவரின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்பவனே தான் என நீதிமன்றத்தில்
கூறியிருந்தார். மார் திவன்னாசியோஸ் மறைமுதுவரின் ஆலோசனைகளுக்கு எதிராக உயர்
பேராயரை அருள்பொழிவு செய்யவும் மறைமுதுவரின் அனுமதியின்றி ஆயர் அருள்பொழிவு
நிகழ்வுகளில் கலந்து கொள்கின்ற போது வழக்குகளின் தீர்ப்பு தனது கட்சியினருக்கு
எதிராக அமையும் என்ற கருத்தை அறிந்திருந்ததனால் அவர் இந்த நிகழ்வுகளில் கலந்து
கொள்ளவில்லை. மட்டுமல்ல இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டாம் என
வழக்குரைஞர்களும் முன்னரே அவர்களோடு அறிவுரை கூறியிருந்தனர்.
ஆனால் தனது சொந்த தகப்பனாரைப் போல கருதி
இருந்த மார் திவன்னாசியோஸ் தனது ஆயர் அருள்பொழிவு திருச்சடங்குகளில் கலந்து
கொள்ளாதது மார் இவானியோஸ் அவர்களுக்கு வருத்தம் உருவாக்கியிருந்தது. மார்
திவன்னாசியோஸ் அவர்களும் தன்னுடைய சொந்த மகனைப் போல கருதியிருந்த சூழலில் இந்நிகழ்வுகளில்
கலந்து கொள்ள முடியாததை எண்ணி அவரும் அதிகமாக வருந்தினார்.
குறிப்பிடத்தக்க பேருரை
ஆயர் அருள்பொழிவுக்குப் பின்னர் ஆலய
வளாகத்தில் வைத்து தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் உயர்
பேராயரையும் புது ஆயர் மார் இவானியோஸ் அவர்களையும் பாராட்டுகின்ற பெரிய கூட்டம்
ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல வாழ்த்துரைகளைத் தொடர்ந்து மிகவும் ஆழமான
கருத்துக்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க ஒரு பேருரையை நமது கதாநாயகன்
நிகழ்த்தினார். பெதனி ஆசிரமத்தின் கொள்கைகள், சுறியானி
கிறிஸ்தவர்களின் தர்மங்கள், கிறிஸ்தவ மறுஒன்றிப்புக்கான தேவை
மற்றும் உயர்பேராயரின் பொறுப்புக்கள்
பற்றி தனது உரையில் குறிப்பாக வெளிப்படுத்தியிருந்தார். “பெதனி மாசிகா” என்ற மாத
இதழில் 40 பக்கங்கள் கொண்ட மிகப் பெரிய நீண்ட உரையாக அமைந்ததனை சுருக்கமாக இங்கே
குறிப்பிடப்பட்டுள்ளது.
“பெருமதிப்பிற்குரிய உயர் பேராயர் அவர்களே!
ஆயர்களே! குருக்களே! அவையில் அமைந்திருக்கும் அனைவருமே!
1
எனக்கு எட்டு அல்லது பத்து வயது பருவம்
கொண்ட காலத்தில் துறவு வாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசை எனது மனதில் துவங்கியது.
அன்று முதல் தூய ஆவியின் அருளால் இந்த நிலைக்கு உயர்வதற்கு பல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனது வாழ்வின்
குறிக்கோளாக இதயத்தின் ஆழத்தில் துறவு வாழ்வு வழியாக முழுமையை சம்பாதிப்பதற்கான
வழியாக இவை அமைந்தன. சமுதாய சம்பந்தமான தற்காலத்தில் உருவாகியுள்ள பிரிவினைகளும்
பிரச்சனைகளும் தொடர்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் மேற்குறிப்பிட்ட துறவு
வாழ்வு எனது உள் மனதில் உருவாகி என்னைப் பற்றி ஈர்த்துக் கொண்டிருந்தது.
இந்த விருப்பத்தை வளர்த்துவதற்கும்
செயல்படுத்துவதற்கும் கோட்டயம் எம்டி செமினாரிலிருந்து செராம்பூர் சென்று தங்கி
வாழ்ந்த போது நல்ல சூழல் ஏற்பட்டது. அங்கு என்னைப் போன்று ஒரு சில இளையோர்கள்
துறவு வாழ்வு வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள் என்ற எண்ணம் மலரவும் நாங்கள்
இணைந்து ஒரு துறவு ஆசிரமம் உருவாக்குவது எங்களது ஆன்மீக வாழ்வுக்கு உகந்ததாக
அமையும் என்ற எண்ணமும் எங்களுடைய மனதில் தோன்றியது. இவ்வாறுதான் பெதனி ஆசிரமம்
துவங்குவதற்கான அடிப்படை ஏற்பட்டது.
இறைவனின் அவதாரமான உலகின் குருவுமான இயேசு
மெசியாவை பரிபூரணமாக அன்பு செய்யவும் பின்பற்றவும் செய்த ஒரு புனிதரை எங்களுடைய
பாதுகாவலராக (Patron Saint) நியமிக்க வேண்டும் என பத்து ஆண்டுகளாக நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். புனித
திருத்தூதரான யோவான் அவர்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். அவர் நமது ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள்
இளையவரும் ஆண்டவரின் தனிப்பட்ட அன்பை இறுதி வரையிலும் வாழ்ந்து காட்டியவருமாவார்.
அது மட்டுமல்ல அவரது அனைத்து அறிவுரைகளுடையவும் மையம் என்பது “அன்பு செய்யுங்கள்”
என்பதாக இருந்தது. இஃது அவர் எழுதிய திருமுகங்களில் வெளிப்படையாக உள்ளது.
பெதனியின் பாதுகாவலரான திருத்தூதர் யோவானின் பெயரை எனக்கு இந்த ஆயர் அருள்
பொழிவின்போது வழங்கியுள்ளனர்.
பழமையான சுறியானி திருச்சபையில் ஆயர்
நிலைக்கு அழைக்கப்படும் நபர் அதிகாரம் பெறும் போது மிகவும் புகழ்பெற்ற மறைத்
தந்தையர்களின் பெயர்களை ஏற்றுக் கொள்வது வழக்கமாக இருந்தது. இந்த வழக்கத்திற்கு
ஏற்ப நான் அன்பின் தூதராகிய திருத்தூதர் யோவானின் பெயரை ஏற்றுக் கொண்டுள்ளேன்.
எனினும் இந்தப் பெயரை எனது வாழ்வில் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு திருத்தூதரின்
பரிந்துரையால் இறை மக்களாகிய உங்களுடைய ஜெப உதவியாலும் இறைவனின் அருளை நான்
பெற்றுக் கொள்ளும் தேவை உள்ளது. எனவே ஆயர்களின் ஆசீரையும் உங்கள் ஜெபத்தையும் நான்
மீண்டும் வேண்டிக் கொள்கிறேன்.
2
நமது சமுதாயத்தின் எதிர்கால நிலை என்ன? உயர் பேராயரின் அருள்பொழிவு அரங்கேறி விட்டது. நாம் அந்தியோக்கிய
திருச்சபையோடுள்ள உறவை முறித்து புதிய சமுதாயமாக மாறுவோமா என்ற கேள்விகளை
தொகுப்பவர்கள் இக்கூட்டத்திலேயே உண்டு. நாம் உயர் பேராயரைத் தான் மறுக்கின்றோம்.
அவர் மறைமுதுவருக்கு கீழாக உள்ள ஒரு தலைவரே ஆவார். “நானே சரியான மறைமுதுவர்.
நான்தான்” என வாதிட்டு வரும் ஒன்றுக்கு மேற்பட்ட மறைமுதுவர்கள் ஒரே ஆட்சிப்
பொறுப்பில் அமர்வதால் போட்டியும் பிரச்சனைகளும் உண்டாகும் சூழல் வரலாம். அப்படி
ஒரு சூழல் ஏற்படுகின்ற போது அவர்களுள் முதலாவதாக மறைமுதுவராக அதிகாரத்தை பெற்றுக்
கொண்டவர் திருச்சபை சட்டப்படி அவரே மறைமுதுவராவார். மற்றவர் எதிர் மறைமுதுவர் (Anti Patriarch) எனப்படுவார். உரோமை திருச்சபையிலும்
திருத்தந்தையர்களையும் எதிர்த்திருத்தந்தையர்களையும் இம்முறைப்படியே
அழைத்துள்ளனர்.
திருச்சபை வரலாறும் திருச்சபைச் சட்டங்களும்
இவ்வாறு அமைந்துள்ளன. ஒரே நம்பிக்கையில் திருச்சபையில் அனைத்து உறுப்பினர்களும்
நிலைத்து நிற்கவும் ஒரே ஆட்சி அமைப்பான மறைமுதுவரின் திருஆட்சி அமைப்பாக திருச்சபை
முழுவதும் ஏற்றுக்கொள்கின்ற காலம் வரையிலும் மறைமுதுவரோ எதிர் மறை முதுவரோ எத்தனை நபர்கள்
அமர்ந்திருந்தாலும் திருச்சபை ஒன்றே ஆகும். தற்காலிகமாக பிரச்சனைகள் திருச்சபையில்
உருவாயினவென்றாலும் திருச்சபை பலதாக பிரிந்து விடவில்லை. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட
மறைமுதுவர் ஆட்சி அமைப்புகள் நிறுவப்படுகின்ற போது ஒவ்வொரு திருஆட்சி அமைப்பையும்
ஏற்றுக் கொள்கின்ற ஆயர்களும் இறைமக்களும் ஒவ்வொரு தனித் திருச்சபைகளாக மாறுகின்றன.
மலங்கரையில் மறைமுதுவரின் திருஆட்சி அமைப்பு இதுவரை நிறுவப்படவில்லை. உயர்
பேராயரின் திருஆட்சி அமைப்பு மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. உயர் பேராயரை அருட்பொழிவு
செய்ததனால் அந்தியோக்கிய ஆட்சி அமைப்பிலிருந்து நாம் வேறுபட்டு விட்டோம் என
அமையாது. இதைப்பற்றிய வேறொரு கருத்தைக் கூட நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அப்தேது மிசிகா மறைமுதுவர் மர்தீன்
என்னுமிடத்தில் அந்தியோக்கிய மறைமுதுவராக துருக்கி அரசின் அங்கீகாரத்தோடு
திருஆட்சியை நிர்வகித்து வந்தார். அத்தகைய சூழலில் துருக்கி அரசனின்
நன்மதிப்புக்கு எதிராக அவர் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக அப்தேது மிசிகாவின்
ஹெர்மான் எனப்படும் அரசு அங்கீகாரத்தை திரும்ப பெற்றுக் கொண்டது. எனவே துருக்கி
நாட்டில் திருச்சபையின் ஆட்சி அமைப்பை மறைமுதுவர் நிர்வகித்திட முடியாமல் போனது.
நமது ஆண்டவராகிய இயேசு மெசியாவை அக்காலத்து அரசு சிலுவையில் அறைந்த பின்னரும்
அவரது மீட்புப் பணிக்கு எந்த விதமான குறையும் ஏற்படவில்லை. அவ்வாறு துருக்கி
அரசனின் இத்தகைய செயலால் அப்தேது மிசிஹா மறைமுதுவரின் திருச்சபை சம்பந்தமான
அதிகாரத்திற்கு எந்த விதமான தடையும் இல்லை. தடை உண்டாகப் போவதுமில்லை. துருக்கி
நாட்டில் மறைமுதுவர்களுக்கு இருந்த சிவில் அதிகாரங்கள் அவரிடமிருந்து
பிடுங்கப்பட்டது. துருக்கி அரசனின் எதிர்ப்பு காரணமாக அந்த நாட்டில் மறைமுதுவர்
தனது பணிகளை செய்ய முடியாத சூழல் அமைந்திருந்தது. ஆனால் அந்த தடை இல்லாத இடங்கள்
எங்கோ அங்கே அவரது அதிகாரத்தை பயன்படுத்தலாம். மலங்கரை துருக்கி அரசனின்
எல்லைக்குப் புறம்பானது. 1912 ஆம் ஆண்டு அப்தேது மிசிஹா நமது நாட்டிற்கு வரவும்
அவரது அதிகாரத்தை பயன்படுத்தி உயர் பேராயத் திருஆட்சி அமைப்பு நிறுவவும் செய்தார்.
அவரை மலங்கரைக்கு அழைத்ததும் உயர் பேராயத்
திருஆட்சி அமைப்பு நிறுவவும் செய்த முயற்சிக்குக் காரணம் நானே என தற்போது எனது
நண்பர் ஒருவர் அறிவித்தாரன்றோ. அப்தேது மிஷிகா மறைமுதுவரை இங்கு அழைத்தது நான்
எனக் கூறுவது சரியல்ல. நானும் முயற்சி செய்தேன் என்பதுவே உண்மை. அவர் அரசுக்கு
எதிரான நிலைக்கு தள்ளப்படுவதற்கு முன்னரே மலங்கரையில் ஒரு உயர் பேராயரை
அருள்பொழிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மலங்கரை திருச்சபை ஒட்டுமொத்தமாக
அவரிடம் சமர்ப்பித்தது. இந்தக் கோரிக்கைகள் அன்றைய ஸ்லீபா திருத்தொண்டர் (மார்
ஒஸ்தாத்தியோஸ்) மற்றும் அன்றைய மலங்கரை மல்பான் வழியாகவும் கோரிக்கைகள் பல சென்ற
வண்ணம் இருந்தன. இறையடி சேர்ந்த மார் ஜோசப் திவன்னாசியோஸ் ஆயர் அவர்களை உயர்
பேராயராக நியமிக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக இருந்தது. உயர் பேராயரின்
அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றாலும் அவரது மதிப்பு (Dignity) கொடுக்கப்பட வேண்டும் என்பதாக
இருந்தது கோரிக்கை. அதுவே கோரிக்கையின் சுருக்கம்.
தொடர்ந்து நானும் மறைமுதுவரும் கடிதப்
போக்குவரத்து ஆரம்பித்தோம். அவர் எழுதிய கடிதங்களில் பரிபூரண அதிகாரத்தோடு
கிழக்குதிருச்சபைகளின் உயர் பேராயர்
திருஆட்சியமைப்பு மலங்கரையில் நியமித்துத் தருமாறு நாங்களும் மறைமுதுவரோடு
வேண்டுதல் வைத்தோம். திருச்சபை வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள உயர்
பேராயருக்குரிய உரிமைகளும் நியமங்களும் அவரை நினைவுபடுத்துவதற்கும் நாங்கள்
அனுப்பிய கடிதங்களில் முயற்சி செய்தோம்.
மலங்கரையும் அந்தியோக்கியாவும் இடையே அன்பு
உறவில் நிலைத்திருக்க வேண்டும் எனவும் அதற்காக மலங்கரையில் பூரண அதிகாரம் கொண்ட
உயர் பேராயர் திருஆட்சியமைப்பு நிறுவப்படுவது தேவையே எனவும் அப்தேது மிஷிகா
மறைமுதுவர் முழுமையாக ஒப்புக்கொண்டார். நமது நாட்டிற்கு வந்து கிழக்கு
திருச்சபையின் உயர் பேராயர் திருஆட்சி அமைப்பு நிறுவவும் செய்யலாம் என
வாக்குறுதியும் வழங்கினார். அதன் பிறகு அவர் துருக்கியிலிருந்து புறப்பட்டார்.
அப்போது ஆயர் நிலைக்கு தேர்ந்தெடுக்கவும் அவர்களை அருள்பொழிவு செய்ய வேண்டும்
எனவும் நமது நாட்டினர் கோரிக்கைகள் வைத்தனர். அப்போது அவர் கூறியது இதுவே. “நான்
உங்களுக்காக உயர் பேராயரை அருட்பொழிவு செய்வதற்காகவே வந்திருக்கின்றேன். முதலில்
அது நடக்கட்டும்.” இவ்வாறு அவர் பல தடவை கூறியிருந்தார்.
அவர் இங்கு வந்த பின்னர் நம்மோடு
மகிழ்வோடும் மனத் தாழ்மையோடும் திரும்பிச் செல்ல வேறு வழியில்லாமல் இருந்ததனால்
அவர் உயர் பேராயரை அருள்பொழிவு செய்து தந்தார் என யாரும் கருத வேண்டாம். உண்மை
அவ்வாறல்ல. வெளிநாட்டிலிருந்து புறப்பட்டு வருவதற்கு முன்னர் மலங்கரையில் உயர்
பேராயர் திருஆட்சி அமைப்பு உருவாக்கித் தருவேன் என அக்கருத்தில் அவர்
நிலைத்திருந்தார். முதல் உயர் பேராயர் மரணம் அடையும்போது நமது ஆயர்கள் அவரது வழி
மரபினரான ஒருவரை உயர் பேராயராக நியமிக்கவும் திருஆட்சி அமைப்பு என்றென்றும்
நிலைக்கச் செய்யவும் அவர் கட்டளையிட்டு இருந்தார். இந்த உரிமையை யாருக்கும் தடை
செய்ய அதிகாரமும் உரிமையும் இல்லை என அவர் நிரணம் ஆலயத்தில் வைத்து நடந்த
திருச்சடங்குகளில் அதை வெளிப்படுத்தவும் மீண்டும் நமது நாட்டிலிருந்து திரும்பிச்
செல்வதற்கு முன்னால் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டு முத்திரை பதித்து நமது
ஆயர்களை ஒப்படைக்கவும் செய்திருந்தார்.
3
மறைமுதுவரைப் பற்றிய சில கருத்துக்களைக் கூட
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தற்போது உயர்பேராயரையும் இந்தியாவின் கிழக்கு
திருச்சபையான நமது ஆயர் மன்றத்தையும் மறைமுதுவர் ஏற்றுக்கொள்வார் என நாம்
எதிர்பார்க்கின்றோம். அவர் நம்மை ஏற்றுக் கொள்ளும் அந்த நிமிடத்திலிருந்து
மறைமுதுவரின் அனைத்து மதிப்புகளை ஏற்றுக் கொள்ளவும் அவருக்கு மரியாதை வழங்கவும்
நமது உயர் பேராயரும் ஆயர் மாமன்றமும் தயாராக உள்ளது என நான் நம்புகிறேன். இந்த
விவரத்தை மறைமுதுவரை தெரிவிக்கவும் மறைமுதுவரின் திருஆட்சி அமைப்போடு அன்பு
உறவிலும் ஐக்கியத்திலும் இணைந்து நிற்க அனைத்து முயற்சிகளை வழிநடத்தவும் செய்வது
உயர் பேராயரின் முக்கியப் பணியாக உள்ளது என நான் கருதுகிறேன். உயர் பேராயர்
அவர்கள் இது தொடர்பான அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன். உண்மைத்
திருச்சபையின் கொள்கைகளுக்கு மாற்றம் வராமல் தாழ்மை கொள்ள வேண்டி வந்தாலும் அது
இறைவனின் முன்னில் அருள் வரவும் நம்முடைய திருச்சபையின் ஐக்கியத்தை
திடப்படுத்துவதுமாக மாற உன்னத மார்க்கமாகவே இதனைக் கூற முடியும்.
திருச்சபை வரலாறும் திருச்சபை சட்டங்களும்
தொடர்பான காரியங்களை மறைமுதுவருக்கு நாம் கற்பிக்க வேண்டிய தேவையில்லை. எனினும்
இக்கருத்துக்கள் அவரை நினைவுபடுத்துவது தேவையானதாகும். அதற்காக மறைமுதுவரின்
திருஆட்சி அமைப்பையும் உயர் பேராயர் திருஆட்சி அமைப்பையும் தொடர்புள்ள வரலாறு
மற்றும் திருச்சபை சட்டங்களை ஒருங்கிணைத்து அந்தியோக்கிய ஆட்சி பீடத்தோடு அன்பு
உறவில் நிலை நிற்கவும் நாம் தயாராக இருக்கிறோம் என உயர்பேராயர் உடனடியாக
மறைமுதுவருக்கு எழுதி அனுப்ப வேண்டும்.
மலங்கரையின் மார் திவன்னாசியோஸ் பேராயர்
மறைமுதுவரை சந்திக்க மர்தீன் என்னும் இடத்தில் தங்கி இருந்தபோது மறைமுதுவரிடம்
அந்நாட்டவர்கள் அவருடைய அதிகாரத்திற்கு எதிராக ஒரு வார்த்தை கூட
வெளிப்படுத்தவில்லை என எனக்குத் தெரியும். மலங்கரை கிழக்கு திருச்சபையின் உயர் பேராய
ஆட்சியமைப்பு நிறுவப்பட்டதாக மறைமுதுவர் குறிப்பிட்டுள்ள ஒப்பந்த பத்திரத்தை
கேவலப்படுத்தும் நோக்குடன் மற்றொரு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இங்கு
உயர் பேராயரை அருள்பொழிவு செய்யக்கூடாது என்ற ஒப்பந்தத்தை ஆயர்கள் மறைமுதுவருக்கு
எழுதி வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யும்போது இந்த ஆயர்களின் பதவி எந்தவிதமான
மாற்றுக் கருத்துகளுக்கும் முற்படாமல் அவரை ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் மார்
திவன்னாசியோஸ் பேராயர் மறைமுதுவரிடம் சம்மதித்துக் கூறியுள்ளாராம்.
அமைதியின் தூதுவனாக வெளிநாட்டிலிருந்து
இங்கு அனுப்பப்பட்ட மார் யூலியோஸ் ஆயர் அவர்களிடம் மறைமுதுவர் மலங்கரை
திருச்சபைக்காக கொடுத்தனுப்பிய ஆணையில் மலங்கரையின் அனைத்து தரப்பினரையும் அனைத்து
ஆயர்களையும் அனைத்து மக்களையும் இணைத்து ஆசீர்வதிக்கின்ற வார்த்தைகள் மட்டுமே
அடங்கியுள்ளன. புதிய உயர் பேராய திருச்சபையின் நிறுவுதலை மறுத்துரைக்கும் எந்த
விதமான வார்த்தைகளும் மறைமுதுவருக்கு கிடைக்கத்தக்க வண்ணம் அந்த ஆணையில்
எழுதப்படவில்லை. ஒப்பந்தத்தைப் பற்றி அமைதியின் தூதுவராகிய தனிப்பட்ட முறையில்
அவரோடு மார் ஒஸ்தாத்தியோஸ் அவர்களோடு தனிப்பட்ட ஆணையில் கூறப்பட்டிருக்கலாம் என
அனுமானிக்கப்பட வேண்டி இருக்கிறது.
பேராயர் மார் திவன்னாசியோஸ்
வெளிநாட்டுக்குச் சென்று திரும்பி வரும்போது அவரை வரவேற்க நானும் அருள்தந்தை
பாறேட்டும் மும்பைக்கு சென்றிருந்தோம். மும்பையில் வைத்து நாங்கள் பெரிய ஆயரையும், மார் யூலியோஸ் ஆயரையும், திருவனந்தபுரம் பங்குத்
தந்தையையும், செறிய
மடத்தில் ஸ்கரியா அருள்தந்தையையும் இணைந்து வரவேற்கிறோம். நாங்கள் ஒன்றாக சொந்த
ஊருக்கு கிளம்பி வரும் வழியில் அரக்கோணம் இரயில் நிலையத்தில் வைத்து மார் யூலியோஸ்
ஆயர் மறைமுதுவரின் ஆணையை எடுத்து பெரிய ஆயரிடம் காண்பித்தார். பெரிய ஆயர் அந்த
கட்டளையை எழுதப்பட்டிருந்த காகிதத்தின் ஒரு பகுதியை பிடிக்கவும் அவ்வூர் ஆயர்
மற்றொரு பகுதியை பிடிக்கவும் சிறிய மடத்தில் சுறியானி மொழியில் எழுதப்பட்டிருந்த
கட்டளையை சற்று உரத்த குரலில் வாசித்தார். அந்த நேரத்தில் நான் அறையின்
வெளிப்பகுதியில் ஒரு கட்டிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். இந்தக் கட்டளையை
நான் காணவோ வாசித்துக் கேட்கவோ செய்யவில்லை. வாசித்து முடிந்த நிமிடத்தில்
செறியமடத்தில் ஸ்கரியா அருள்தந்தை அவர்கள் எனக்கு அருகில் வந்து இந்த மாதம் இந்த
தேதி இந்த எண்ணில் எழுதப்பட்டதாகவும் அதில் எழுதப்பட்டவை என்னென்ன விஷயங்கள்
எனவும் என்னைத் தெரிவித்தார்.
நான்கைந்து நிமிடங்கள் தாண்டிய பின்னர்
பெரிய ஆயர் வராந்தாவுக்கு வரவும் ஆணையின்
கருத்துக்களைப் பற்றி என்னோடு கூறவும் செய்தார். இப்போது கிழக்கு உயர்
பேராய திருஆட்சியமைப்புக்கு உயர்த்தப்பட்ட இந்த ஆயரின் முதல் முக்கியமான பணி
என்னவென்றால் அந்தியோக்கிய மறைமுதுவரோடு அமைதி ஏற்படவும் திருச்சபையின் மரபு
சட்டதிட்டங்கள் மற்றும் திருச்சபை தத்துவங்களுக்கு ஏற்ற முறையில் அந்தியோக்கிய
உறவு நிலைநிற்கச் செய்ய வேண்டும் என நான் கூறியிருந்தேன் அல்லவா. முக்கியமான
வேறொரு விடயமும் உண்டு.
கேரளாவின் சுறியானி கிறிஸ்தவர்கள் அனைவரும்
பழங்காலத்தில் ஒரே திருச்சபையாக இருந்ததைப் போன்று மறுஒன்றிப்பு வழியாக “ஒரே
திருச்சபையும் ஒரே ஆயரும்” என்ற முறையில் செயல்படுவதற்கும் ஒன்றாக இணைந்து
இருப்பதற்கும் உயர்பேராயர் தனிக் கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தில்
இறைமக்களே, உங்களுக்கும்
மிகப்பெரிய பொறுப்பு உண்டு. சமுதாய சடங்குகள், அரசியல் பொறுப்புக்கள், மரபு வரலாறு, பேசும் மொழி மற்றும் குருத்துவ
மொழி போன்ற கருத்துக்களில் கேரள சுறியானி இனத்தவர்கள் அனைவருக்கும் ஒற்றுமை உண்டு.
அவர்கள் உண்மையில் ஒரு சமுதாயமே. மதம் சார்ந்த விஷயங்களில் மட்டும் பிரிவினையும்
அரங்கேறி இருக்கிறது. மதம் சம்பந்தமான கருத்துக்களில் அனைத்து சுறியானி
கிறிஸ்தவர்களும் ஒன்றுக்கொன்று இணைந்திட ஆயர்களும் அவர்களோடு இணைந்து நீங்களும்
மனப்பூர்வமாக முயற்சி செய்ய வேண்டும்.
சில காலங்களாக அப்துல்லா மறைமுதுவர்
மலங்கரைக்கு வந்த நாள் முதல் மலங்கரை சுறியானி கிறிஸ்தவர்கள் இரண்டு குழுக்களாக
பிரிவடைந்துள்ளனர். அவர் மலங்கரை திருச்சபையின் வரலாறு மற்றும் மரபு போன்றவற்றை
மதிக்காமல் துருக்கி நாட்டில் எவ்வாறு அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தாரோ அதேப்
போன்றே திருச்சபைச் சட்டத்திற்கு எதிரான விதத்தில் கட்டாய நிர்வாகத்தை
திருச்சபையில் புகுத்திட விரும்பினார். அந்தியோக்கிய மறைமுதுவர் எவருக்கும் இதுவரை கிடைக்காத அவருக்கு
தேவைப்படாத மலங்கரை திருச்சபையின் சொத்து அதிகாரத்தை அவர் தனக்கு கிடைக்க வேண்டும்
என மலங்கரை ஆயர்களுக்கு ஒப்பந்தப் பத்திரம் கையெழுத்திட்டுத் தர வேண்டும் என
மறைமுதுவர் கேட்டுக்கொண்டார். அன்று மலங்கரை திருச்சபை தனி நிர்வாகத்தில்
செயல்படும் ஒரு பேராயரை கொண்ட திருச்சபை சமூகமாகும். ஒரு பேராயரின் திருச்சபை
சமூகத்தில் மறைமுதுவருக்கு சொத்து அதிகாரம் இல்லை. இரஷ்யாவின் திருச்சபை, கிரேக்க திருச்சபை, பல்கேரிய திருச்சபை, செர்பியா திருச்சபை, ருமேனியா திருச்சபை மற்றும்
குப்ரோசின் திருச்சபை போன்றவர்கள் ஏறக்குறைய 15 கோடி மக்கள் தொகை கொண்ட கிரேக்கத்
திருச்சபைகள் அனைத்தும் குஸ்தந்தினோஸ் போலீஸ் என்னும் இடத்து மறைமுதுவரையே
மதத்தலைவராக ஏற்றுக் கொள்கின்றனர். இந்த திருச்சபைகளில் எங்கும் முக்கிய
மறைமுதுவருக்கு சொத்து அதிகாரம் இல்லை. அந்தந்த இடத்தில் உள்ள மாமன்றம் இத்தகைய
காரியங்களில் அதிகாரத்தை கொண்டுள்ளது. அவை தனி ஆட்சி உரிமையோடு (Autonomy) நிர்வாகம் செய்து
வருகின்றன.
மறைமுதுவரின் சொத்து அதிகாரத்தை
ஒப்புக்கொண்டு மலங்கரை ஆயர்கள் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டு பதிவு
செய்து வழங்கவில்லை என்றால் அவர்களை தடை செய்வதாகவும் அப்துல்லா மறைமுதுவர்
தீர்மானித்தார். ஆனால் தடை செய்வதற்கான உண்மையான காரணத்தை அந்த ஆணைகளில் குறிப்பிடாமல்
தேவையற்ற மற்றக் காரணங்களை சுட்டிக்காட்டி தடை ஆணைகளை அவர் வழங்கினார். ஒரு ஆன்மீக
தந்தையானவர் இவ்வாறு செய்வதை எண்ணி நாம் வருந்த வேண்டி இருக்கிறது. தடையாணையில்
குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் அடிப்படை உரிமைக்கு எதிரானவை என அவருக்கும் அவருடைய
துணையாளர்களுக்கும் தெரிந்திருக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
சமுதாயம் தொடர்பாக இந்த விடயத்தில்
பிரச்சனைகளின் காலகட்டத்தில் மலங்கரையின் பேராயர் அவர்களோடு இணைந்து நின்று எனக்கு
முடிந்த அளவு மலங்கரை திருச்சபையில் ஐஸ்வரியம் கொண்டுவர முயற்சித்தேன். ஆனால்
இவ்வாறு எடுத்துக்கொண்ட முயற்சிகள் திருச்சபைக்கு உளவான ஐஸ்வர்யத்தை விட கூடுதலாக
நமது நாட்டின் கிறிஸ்தவர்களுக்கும் தேவைப்படுகின்ற மக்களுக்கும் உண்மை இறை பக்தியே
என நான் உணர்ந்து கொண்டேன். அதனால் அதனை பல மடங்கு பெருக்கிட பல முயற்சிகள்
மேற்கொண்டேன். அதுவே எனது முக்கிய பணி என நான் தீர்மானித்துக் கொண்டேன். துறவு
வாழ்வில் எனக்கு இளமை பருவம் முதலில் ஆர்வமும் சாய்வும் இறைவனின் அருளால் எனக்கு
இருந்ததனால் சமுதாய ஆசிரமங்களை விட்டுவிட்டு பெதனி ஆசிரமம் வழியாக இறைவனோடு
இணைந்து இருப்பதற்கான வழிகளைக் காண இறைவன் எனக்கு அருளினார்.
5
சமுதாய குழப்பங்களை பற்றி சற்று விரிவாக
எடுத்துரைக்க விரும்புகின்றேன். மறைமுகருக்கு சொத்து அதிகாரம் ஒப்பந்த பத்திரத்தை
கையெழுத்திட்டு வழங்காததால் மலங்கரையின் பேராயரை அப்துல்லா மறைமுதுவர் தடை
செய்தாரன்றோ! ஆனால் யாருக்காவது ஒரு குருத்துவ தண்டனை வழங்குவதற்கு முன்னால் செய்ய
வேண்டியவற்றை நடவடிக்கைகள் செய்யப்படவில்லை. அதுவும் ஒரு ஆயர் என்றால் ஆயர்
மாமன்றத்தின் முன்னிலையில் திருச்சபைச் சட்டத்திற்கு எதிரான நிலை குறித்து அவர்
விசிரிக்கப்பட வேண்டும். எதுவுமே இல்லாமல் திருச்சபை சட்டங்களுக்கு எதிராக அவற்றை
மதிக்காது அப்துல்லா மறைமுதுவர் இத்தருணத்தில் செயல்பட்டிருந்தார். அத்தகைய தடை
திருச்சபை சட்டத்திற்கு சரியானது அல்லாமல் இருந்ததனால் அதனை நாம் ஏற்றுக் கொள்ள
வேண்டாம் என ஒரு குழுவினர் வாதிக்கின்றனர். தடையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என ஒரு
குழுவினர் எதிராக நிற்கின்றனர். இவ்வாறு மலங்கரை திருச்சபை இரண்டு குழுக்களாக
மாறியது.
இத்தகைய சூழலில் தான் அப்தேது மிசிஹா
மறைமுதுவர் கேரளாவுக்கு வருகை புரியவும் உயர் பேராயர் திருஆட்சி அமைப்பு நிறுவவும்
செய்தார். இந்த சூழலில் மற்றொரு குழுவினர் மலங்கரை திருச்சபையில் இருந்தனர்.
இவர்கள் தற்காலிக குழுவினர் ஆவர். அவர்கள் உயர் பேராயரை நிறுவுவதன் வழி இரு
குழுவினரும் அதனை ஆதரிக்கும் போது இணைந்து வருவதற்கும் அவ்வாறு மலங்கரைக்கு உயர்
பேராயர் திருஆட்சி அமைப்பு அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என
நம்பினர்.
மலங்கரையில் உயர்பேராயர் திருஆட்சியமைப்பு
நிறுவப்பட்டது மறைமுதுவரின் அதிகாரத்திற்கு எதிரானது அல்ல. இஃது மறைமுதுவருக்கு
கீழே உள்ள ஒரு பொறுப்பு ஆகும். தற்போதைய கருத்து வேறுபாடுகள் தற்காலிகமானவை.
தற்போதைய அந்தியோக்கிய மறைமுதுவரோடு அமைதியான ஒரு சூழல் நிலவுவதற்கான இறைவன் அருள்
தர வேண்டி நாம் பிரார்த்தனை செய்வோம். திருச்சபைச் சட்டத்திற்கு உட்பட்ட
மறைமுதுவர் அப்தேது மிசிஹா என நம்புகின்றவர்கள் கிழக்குத் திருஅவையின் உயர்
பேராயர் திருஆட்சியமைப்பை ஏற்றுக் கொள்ளவும் அங்கீகரிக்கவும் செய்கின்றனர்.
அப்தேது மிசிஹாவை மறுக்காமல் அப்துல்லா
மறைமுதுவருக்கு மரியாதை செலுத்தவும் வேண்டும்.
நம் பேராயரின் தடை திருச்சபைச் சட்டத்திற்கு
எதிரானது, ஆனாலும்
அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவராக அப்துல்லா மறைமுதுவரோடு இணைந்த
மக்கள் தங்களது சொத்து அதிகாரத்தை அவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற
மனம் கொண்டவர்களல்ல என நான் நம்புகிறேன். அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை. இந்த
விடயத்தில் நாமும் அவர்களும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என்பது
மட்டுமல்ல மலங்கரையில் உயர்பேராயர் திருஆட்சியமைப்பு நிறுவப்பட வேண்டும் என்ற
விருப்பமும் அவர்களுக்கு உண்டு.
அப்தேது மிஸிஹா திருச்சபை சட்டத்திற்கு
உகந்த மறைமுதுவரே எனவும் அவரை யாருமே தடை செய்யவில்லை எனவும் மத சம்பந்தமான
குற்றத்தைத் தவிர வேறொரு குற்றமும் மறைமுதுவருக்கு எதிராக இல்லை எனவும் அவரை தடை
செய்ய வேண்டியது இல்லை எனவும் அந்த குழுவைச் சார்ந்தவர்கள் அறிந்து கொண்டுள்ளனர்.
மலங்கரைக்கு ஒரு உயர்பேராயரை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு உண்டு.
இந்த கருத்தில் இரண்டு குழுவினருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. எனவே மலங்கரையின்
இரண்டு குழுக்களும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட எந்தவொரு தடையும் இல்லை எனக்
கருதுகிறேன். பேராயரின் தடையாணையை ஏற்றுக் கொள்ளவும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுமான
இரண்டு குழுவினர் மலங்கரையில் உள்ளனர். உயர் பேராய திருஆட்சி அமைப்பை
ஏற்றுக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் செய்கின்ற வேறு இரண்டு குழுக்களும்
மலங்கரையில் உள்ளனர். இதுவே தான் தற்போதைய நிலை.
இறை மக்களே! இந்த விடயங்களில் நம்மோடு
கருத்து வேறுபாடு உள்ள சகோதரர்களோடு அன்புடன் பாசத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்
என்பதுவே, நமது
முக்கிய முயற்சியாக அமைய வேண்டும். துருக்கி அரசில் ஆயர்கள் ஏற்றுக்கொண்ட புதிய
மறைமுதுவரோடு அன்பு உறவில் செயல்பட மலங்கரையின் ஆயர்கள் இணைந்து உருவாக்கிய உயர்
பேராயர் தனது முதற்பணியாக செயல்படத் துவங்கட்டும். அத்துடன் நீங்கள் இரண்டாவது
முயற்சியை செயல்படுத்தவும் முயற்சிக்க வேண்டும். மலங்கரையில் தற்போது உள்ள இரு
குழுக்களும் ஒன்றுக்கொன்று இணைந்து உயர் பேராய திருஆட்சியமைப்பை அங்கீகரிக்கவும்
ஏற்றுக்கொள்ளவும் செய்ய நாம் தயாராக வேண்டும். அதற்காக முயற்சிக்கவும் வேண்டும்.
நம்முடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள நமது சகோதரர்கள் நமது முகத்தில் உமிழும் போது
நாம் அவருக்கு முத்தம் கொடுத்தல் வேண்டும். அவர்கள் நம்மை சபிக்கும் போது
அவர்களோடு இறைவன் மன்னிப்பு வழங்க நமக்கு ஜெபிக்கவும் அவரை ஆசீர்வதிக்கவும்
வேண்டுவோம்.
உயர் பேராய திருஆட்சி அமைப்பு நிறுவுவதனால்
இந்திய நாட்டில் நாம் சாதிக்க வேண்டிய மற்றொரு காரியம் உண்டு. உயர் பேராயரையும்
என்னையும் வாழ்த்துவதற்காக இங்கு கூடியிருக்கும் உங்களோடு அதனை மீண்டும் கூற
விழைகிறேன். நமது இந்தியத் திருநாட்டில் ஏறக்குறைய 19 நூற்றாண்டுகளுக்கு முன்னரே
கிறிஸ்தவ மதம் நிறுவப்பட்டதாக நாம் பெருமை கொள்கின்றோம். பல ஆண்டுகளாக நமது
கிறிஸ்தவம் நற்செய்திப் பணியாற்ற முனையவில்லை. நம்மைச் சார்ந்து வாழும் மற்று
இனத்தவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும்.
பழமையான கிறிஸ்தவ திருச்சபையின்
அப்போஸ்தலிக்கம் காதோலிக்கம் போன்ற அடிப்படைத் தத்துவங்களுக்கு எந்த விதமான
மறுப்பும் ஏற்படாமல் கிறிஸ்து மதத்தை இந்தியாவில் பரப்பிட நாம் முயற்சிக்க
வேண்டும். நம்மால் அதனை செய்யவும் முடியும் என்பதும் ஆகும். இந்த விஷயத்தில் தைரியத்தோடு
முன்னோக்கி செயல்படவும் இந்தியாவில் நற்செய்தி பணிகளுக்கு உள்ள முக்கிய
முயற்சிகளும் நாம் செய்து கொள்ளவும் கிழக்குத் திருஅவையின் உயர் பேராயர் திருஆட்சி
அமைப்பு நமது இந்திய நாட்டிற்கு ஒரு ஆசீர்வாதமாக அமைந்துள்ளது.
6
இறுதியாக பெதனி ஆசிரமத்தை பற்றி ஓரிரு
வார்த்தைகளை உங்களோடு பகிர்ந்து கொண்டு என் உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
கிறிஸ்தவ திருச்சபையை மனித உடலோடு உவமைப்டுத்தும் போது துறவு சபையை மனித உடலின் இதயத்தோடு
உருவகப்படுத்தலாம். இதயத்தால் ஒரு மனித உடலுக்கு எந்த அளவுக்கு
நன்மை உருவாகின்றதோ அதைப்போன்று இறைபக்தி கொண்ட துறவு சபைகளின் பலன் கிறிஸ்தவ
திருச்சபைக்கு உளவாகின்றது என இறையியலாளர்கள் கருத்துக் கூறுகின்றனர். பெதனி ஒரு
துறவு சபை ஆகும். பெதனி ஆயரின் திருச்சபை சமூகம் மிகவும் சிறிய திருச்சபை சமூகமே
ஆகும். ஆனால் பெதனையின் கொள்கை பரந்தது.
நம்மிடையே மிகவும் முக்கியமான குறையாக நான் உணர்வது இறைபக்தி இல்லாத நிலையே ஆகும்.
மற்றும் திருச்சபைகளையும் மற்று சமுதாயங்களையும் நாம் குறை கூற வேண்டாம். நமது
குறைகளை நாமே கண்டுபிடித்தாக வேண்டும்.
நமது சமுதாயத்தின் வாழ்வு மற்றும்
வாழ்க்கைக் குறிக்கோள் எல்லாம் வல்ல இறைவனை அன்பு செய்யவும் நம்மை சுற்றிய
சமுதாயங்கள் மற்றும் மக்களை இறை இயேசுவை முன்னிட்டு சேவை புரியவும் உதவி புரியவும்
வேண்டும் என்பதாகும். கடந்த காலத்தில் நமது சமூகம் ஏற்றுக் கொண்ட கொள்கைகளை
தவிர்த்து தூய்மையும் அன்பும் தியாகமும் நிறைந்த கொள்கைகளை நமது சமுதாயமும்
அனைத்து கிறிஸ்தவ சமுதாயங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நமது திருச்சபையையும் மற்ற திருச்சபைகளையும்
நமது ஆண்டவரின் கவர்ச்சிகரமான நற்செய்தியை நோக்கி இழுக்க இறைவனின் எல்லையற்ற
அருளால் பெதனி ஆசிரமத்தவர்களை நான் கற்பிக்கவும் செயல்படுத்தவும் இறைபக்தியில்
குறை கொண்டவர் என்றாலும் நமது ஆண்டவராகிய இயேசு மெசியாவின் பரிபூரணமாக அன்பு
செய்யவும் வேண்டும் என்ற விருப்பம் இறைவன் எங்களுக்கு தந்துள்ளார். இந்த
விருப்பத்தை நிறைவேற்ற இறைவனின் தூய ஆவியார் எங்களை ஆசீர்வதிக்கவோ உதவவோ செய்யாத
சூழலில் பெதனி ஆசிரமத்தால் உருவாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்ற நன்மை
உண்டாவதில்லை என எங்களுக்குத் தெரியும். எங்களது சொந்த நன்மையிலோ பக்தியிலோ
நாங்கள் சரணாகதி அடையவில்லை. உண்மைக் கடவுளை சார்ந்து இருப்பவர்களுக்குத் தேவையான
அருளை இரக்கம் நிறைந்த இறைவன் நிச்சயமாக தந்தருள்வார் என நாங்கள் நம்புகின்றோம்.
தகுதியற்ற எங்களை மிகவும் மதிப்புக்குரிய
துறவு வாழ்வுக்கு அழைத்த இறைவன் நாங்கள் விரும்பாத அருளை அவரது அருள்
நிறைவிலிருந்து எங்களுக்குத் தந்தருள நாங்கள் விரும்புவது மட்டுமல்ல எங்கள் வழியாக
எங்கள் சமுதாயத்திற்கும் நமது நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சமுதாயங்களையும்
நமது நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் ஆசீர்வதிக்க வேண்டும் என நாங்கள்
நம்புகின்றோம். இறைவனின் அருள் ஒரு நாளும் குறைந்து போவது அல்ல.
பெதனியின் தலைவராகிய ஆசிரமத்தந்தையை மிகவும்
பரிசுத்தமான ஆயர் நிலைக்கு அழைக்கப்படவும் பெதனியின் ஆயராக அருள்பொழிவு
செய்யப்படவும் இங்கே அமர்ந்திருக்கும் ஆயர்களுக்கு விருப்பம் உளவானதனால் எங்களுடைய
நன்றியையும் இந்த நேரத்தில் உரித்தாக்கிக் கொள்கின்றோம்.
கடந்த இரவில் தும்பமண் மற்றும் கண்டநாடு
போன்ற திருச்சபை சமூகத்தினரின் ஆயரான மார் இவானியோஸ் அவர்கள் தீவிர நோயினால்
படுக்கையில் ஆழ்ந்திருந்தார். இன்றைய ஆயர் அருள்பொழிவு நிகழ்வுகளில் அவர் தகுந்த
ஒத்துழைப்பு வழங்கினார் என்பது மட்டுமல்ல. திருச்சடங்கின் இறுதியில் பலிபீடத்தின்
முன்னிலையில் மூன்று முறை சிலுவை உயர்த்தி நாம் அனைவரையும் ஆசீர்வதிக்கவும்
செய்தார். அற்புதமான இந்த சூழல் இறைவனின் அளவற்ற அருளாலும் வலுவற்ற நமது
ஜெபங்களாலும் முடிந்தது என நன்றியோடு நான் நம்புகிறேன்.
முதலாம் பசேலியோசை கேசரியாவின் ஆயராக
அருள்பொழிவு செய்வதற்கு இரண்டு ஆயர்கள் மட்டுமே உடனிருந்தனர். அந்த நேரத்தில்
படுக்கையிலிருந்த மார் எவுசேபியோஸ் நலம் பெற்று ஆயர் அருள்பொழிவு
திருச்சடங்குகளில் கலந்து கொண்டு மூன்று ஆயர்கள் இணைந்து அந்த திருச்சடங்கை
நடத்தியதாகவும் திருச்சபை வரலாறு சாட்சியப்படுத்துகின்றது. இறைவன்
மேன்மைப்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் நாங்கள் பெதனி ஆசிரமத்தை
நோக்கிப் புறப்பட்டோம்.
எங்களிடம் குறைகள் அதிகமாக உண்டு என்றாலும்
அவற்றை நிவர்த்தி செய்து இறைவன் ஆசீர்வதித்தார்.
வலுவற்ற எங்களை இறைவனின் திருக்கையால் இறைவனின் திருப்பெயருக்கு உதவும்
விதத்தில் ஆயுதங்களாக பயன்படுத்த இதுவரை இறை விருப்பம் வெளிப்படுத்தியுள்ளார்.
கருணைக்கடலாகிய இறைவன் மேலும் பெதனியை அருள்கூர்ந்து ஆசீர்வதிக்கவும் இறைவனுடைய
அளவற்ற மேன்மையால் நமது நாட்டில் உள்ள அனைத்து ஜன சமுதாயங்களுக்கும் ஆன்மீக
மறுமலர்ச்சிக்கும் உதவிட இறைவன் அருள்வாராக என ஆயர்களுடையவும் இறைமக்களுடையவும்
ஜெபத்தை வேண்டிக் கொண்டும் வாழ்த்துக்கள் கூறிய உங்கள் அனைவருக்கும் நன்றி
கூறிக்கொண்டும் எனது உரையை நிறைவு செய்கிறேன். (பெதனி இதழ் 1925 ஜூன் இலக்கம், பக்கம் 195-235)
மறைமுதுவரின் ஆணை
அப்துல்லா மறைமுதுவர் சொத்து அதிகார ஆசைக்கு
எதிராக செயல்பட்ட வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ் அவர்களையும் அவருக்கு ஆதரவாக
ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கவும் உயர் பேராயர் திருஆட்சி அமைப்பு மலங்கரையில் நிறுவுவதற்கும் எம் ஏ
அச்சன் செய்த செயல்கள் அப்துல்லா மறைமுதுவரின் வழிமரபினரான ஏலியாசு மறைமுதுவர்
அறிந்திருந்தார். இரண்டாவது உயர் பேராயராக ஒருவரை அருள்பொழிவு செய்ததாகவும் எம் ஏ
அச்சனை ஆயராக அருள்பொழிவு செய்ததாகவும் ஆயர் அருள்பொழிவுக்குப் பின்னர்
அந்தியோக்கிய திருஆட்சி அதிகாரம் பற்றிய மிகப்பெரிய பேருரை ஒன்று நிகழ்த்தியதாகவும்
கொண்ட அறிக்கையை மார் யூலியோஸ் மற்றும் ஆயர்கள் இணைந்து அந்தியோக்கியாவுக்கு
கடிதம் அனுப்பினர். இந்த அறிக்கையை வாசித்த உடனடியாக கோபமடைந்த மறைமுதுவர் உயர்
பேராயரையும் எம்.ஏ அச்சனையும் கேவலமான சொற்களால் சபித்த ஒரு தடை ஆணை பங்குகளில்
வாசிக்க வேண்டும் என அனுப்பினார். யாக்கோபாய மறைமுதுவர்களின் மனநிலையை சரியாக
உணர்ந்து கொள்ளத் தூண்டும் ஒரு ஆணை தான் இது என உணர்ந்து கொள்ள முடியும்.
எல்லாம் வல்லவராக உள்ளியல்பில் பரிபூரணராக
இருக்கின்ற
தொடக்க முடிவற்ற ஆண்டவரின் திருநாமத்தில்
மூன்றாவது ஏலியாஸ் ஆன
அந்தியோக்கியாவின் திருத்தூதர் அரியணையில்
மார் இக்னாத்தியோஸ் மறைமுதுவர்
எண் 402
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஸ்லீபா
ஒஸ்தாத்தேவோஸ் ஆயருக்கும், பவுலோஸ் அத்தனாசியோஸ் ஆயருக்கும், கீவர்கீஸ் சேவேரியோஸ் ஆயருக்கும், எலியாஸ் யூலியோஸ் ஆயருக்கும்
இணைத்து எழுதுகிறேன். இறைவனாகிய ஆண்டவரின் அருள் உங்களோடும், உங்களோடு இணைந்து இருப்போர்
மேலும் வாழட்டும். அது இறைஅன்னையாகிய மரியாவின் வேண்டுதல்களால் ஆமென்.
உங்களுடைய அன்புக்கு சமாதானத்தை நான்
முதன்மையாக வழங்குகிறேன்.
கிறிஸ்து ஆண்டு 1925 மிதுனம் 21ஆம் தேதி
நீங்கள் அனுப்பிய கடிதத்தை நான் பெற்றுக் கொண்டேன்.
ஆயரே அல்லாத வாகானத்துக்காரன் கீவர்கீஸ்
இரம்பானை தடை செய்யப்பட்டவரும் சபிக்கப்பட்டவருமான அவனது குழுவைச் சார்ந்தவர்கள்
தற்போது உயர் பேராயர் என அழைத்ததாகவும் இறந்தவராகிய எனது முன்காமியான அப்துல்லாஹ்
மறைமுதுவரால் தனிப்பட்ட முறையில் சபிக்கப்பட்டிருந்த கி வர்கீஸ் எம் ஏ அச்சனை
அவரது குழுவினர் ஆயர் என அழைத்ததாகவும் அதிலிருந்து நான் புரிந்து கொண்டேன்.
தடை செய்யப்பட்ட அப்தேதுமிசிகா சிவப்பு நிற
சீருடை அணிவித்த மூவரும் தடை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். ஏனென்றால் ஒருவனுக்கு
ஏதேனும் விதத்தில் அதிகாரத்தை வழங்கிட அப்தேது மிஸிஹாவுக்கு புனிதமான
திருச்சபையில் அதிகாரம் இல்லை. அவனது செயல்களும் கட்டளைகளும் உண்மைக்கு
புறம்பானவை. சட்டத்துக்கு எதிரானது.
இறந்த ஒருவருடமிருந்து எந்த ஒரு அதிகாரமும்
ஒருவரால் பெற்றுக்கொள்ள முடியாதது போன்றே அரியணையிலிருந்து வெளியேற்றப்பட்ட
இறப்புக்கு இணையான மறைமுதுவர் அப்தேது மிஸிஹாவிடமிருந்து எந்த ஒரு அதிகாரத்தையும்
எவரும் பெற்றுக்கொள்ள முடியாது. தடை செய்யப்பட்ட கீவர்கீசையும் அப்தேது மிஸிஹாவை
அங்கீகரித்தவர்களும் திருச்சபையின் உடலிலிருந்து வேறுபட்டு பிரிக்கப்பட்டவர்கள் என
நான் முன்னரே குறிப்பிட்டிருக்கின்றேன். அதை இப்போதும் நினைவுபடுத்துகின்றேன்.
அவர்கள் நமது நம்பிக்கைக்கு எதிரானவர்கள் ஆவார்கள். இதனைக் குறித்து கிறிஸ்து
வருடம் 1924 சிங்கம் 12-ம் தேதி ஒரு பொது மடல் ஒன்று உங்களுக்கு அனுப்பி
இருந்தேன்.
வீணாக பதவியைப் பெற்றுக் கொண்ட
வாகானத்துக்காரனுக்கும் எம் ஏ காரனுக்கும் அவர்களுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.
தூய ஆவியின் அருள் வரங்களும் அவர்களுக்கு இல்லை என்பது மட்டுமல்ல அவர்களுக்கு நமது
திருச்சபையில் எந்த ஒரு உரிமையும் இல்லை. இக்கருத்தினை நீங்கள் சரிவர
உணர்ந்துள்ளீர்கள் என நான் நம்புகிறேன். தொடர்ந்து நான் உங்களுடைய அன்போடு கூறிக்
கொள்வது என்னவென்றால், கீவர்கீசும் அவனைச் சார்ந்தவர்களும் சாத்தானின் தூண்டுதல்களால்
செயல்படுகின்றார்கள். அந்தியோக்கிய
அரியணைக்கு எதிராக நின்று மறைமுதுவரின் அதிகாரத்தை கேவலப்படுத்துகின்றார்கள்.
தங்களது சொந்த விருப்பத்தோடு நடக்கவும் கேரளாவின் உயர் பேராயர் திருஆட்சி அமைப்பை
நிலைப்படுத்தவும் விரும்பவும் செய்கின்றனர்.
மோசேக்கு எதிராக செயல்பட்டவரையும்
டயானீசையும் யன்னபாரிசையும் நினைவில் கொள்ளுங்கள். சாபத்தின் இத்தகைய செயல்களை
செய்பவர்கள் அப்படிப்பட்டவர்களே ஆவார்கள். என்றென்றும் உன்னிலிருந்து பலன் தராமல்
போகட்டும் என நமது ஆண்டவர் அத்தி மரத்தை சபித்த உடன் அது உலர்ந்து போனது என்பதை
நினைவில் கொள்ளுங்கள். இறைவனின் அருளால் அவர்கள் என்றென்றும் உலர்ந்து போவார்கள்.
அவர்களிடமிருந்து எந்த ஒரு பலனும் உருவாவதில்லை. அவர்கள் புனிதமான திருச்சபையின்
மடியில் திரும்பி வரக்கூடிய விதத்தில் இறைவன் அனுதாபத்தின் ஆன்மாவை அவர்களுக்கு
வழங்கவில்லை.
அவர்களுடைய பாவங்களால் நீங்கள்
தூய்மையற்றவர்களாக மாறாமல் இருக்க அவர்களிடமிருந்து விலகி நில்லுங்கள்.
கயவர்களுக்கு அமைதி இல்லை என இறைவாக்கினர்கள் கூறியதைப் போன்று நீங்கள் அவர்களோடு
சமாதானம் செய்ய வேண்டாம். இஸ்ரயேலின் இறைவன் எல்லா விதமான கேடுகளிலிருந்தும் உங்களைப்
பாதுகாத்து உங்களுக்கு உதவுவாராக.
இவ்விவரங்களை பொதுவாக வெளியிட வேண்டும்.
கீழ்ப்படிதல் உள்ளவர்கள் மீது இறைவனுடைய அருளும் ஆசீரும் நிலைத்திருப்பதாக. ஆமீன்.
(கிறிஸ்து வருடம் 1925, சிங்கம் 28, அரியணை ஆசிரமத்திலிருந்து)
இம்மடல் அந்தியோக்கிய திருத்துவது
அரியணையில் வாழும் மூன்றாவது எலியாஸ் என்னும் மோரான் மோர் இக்னாத்தியோஸ்
மறைமுதுவர் அனுப்பிய மடலின் மொழிபெயர்ப்பு ஆகும்.
கையொப்பம்
ஸ்லீபா மார் ஒஸ்தாத்தேவோஸ் ஆயர்
எலியாஸ் மார் யூலியோஸ் ஆயர்
பவுலோஸ் மார் அத்தனாசியோஸ் ஆயர்
கீவர்கீஸ் மார் சேவேரியோஸ் ஆயர்
உண்மையான முறையில் அருள்பொழிவு பெற்றுக்
கொண்ட உயர் பேராயரையும் ஆர்த்தடோக்ஸ் திருச்சபையின் மற்று ஆயர்களையும்
எப்படிப்பட்ட கேவலமான வார்த்தைகளால் யாக்கோபாய மறைமுதுவர் தனது மடலில்
பழித்துரைத்துள்ளார் என நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் கத்தோலிக்க திருச்சபையின்
தலைவரும் திருத்தூதர் பேதுருவின் வழிமரபினரான உரோமை திருத்தந்தை அதாவது யாக்கோபாயா
திருச்சபையின் சட்டங்களுக்கு ஏற்ப தலைமை மறைமுதுவர், ஆர்த்தோடக்ஸ் திருச்சபையின்
குருத்துவத்தை அங்கீகரித்துக் கொண்டு ஆயர்களை எவ்வளவு மதிப்போடு
குறிப்பிட்டுள்ளார் என மற்று அதிகாரங்களில் நம்மால் அறிந்து கொள்ள முடியும். நமது
கதாநாயகன் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைவதற்கான ஆலோசனைகள் நடத்திய
சூழலில் இதுவும் முக்கிய காரணமாகவே இருந்தது.
அதிகாரம் 14
நகைப்பூட்டும் நிகழ்வுகள்
பேராயர் மார் இவானியோஸ் அவர்களின் வாழ்க்கை
வரலாற்று நூலின் பல நிகழ்வுகளால் மெய்மறந்திருக்கும் வாசகர்களுக்கு சற்று
நகைப்பூட்டும் சம்பவங்களை வழங்குவது அத்தியாவசிய தேவையாகவே உணர முடிகிறது. அதற்காக
மார் இவானியோஸ் அவர்களுடைய வாழ்க்கையோடு தொடர்பு கொண்ட சில நகைச்சுவை அனுபவங்கள்
இவ்விடத்தில் சேர்க்கப்படுகின்றன.
நமது கதாநாயகனின் பேரறிவு, ஒருமுகப்படுத்தும் தன்மை, தொலைநோக்குப் பார்வை, சமாதானம் விரும்புதல் போன்ற
பண்புகளை எடுத்துக் கூறுபவைகளாக பின்வரும் நிகழ்வுகள் அமைந்துள்ளன.
எம் ஏ அச்சன் என்ற செல்லப் பெயரால் கோட்டயம்
எம்டி செமினாரி உயர்நிலை பள்ளிக்கூடத்தின் முதல்வராக நமது கதாநாயகன் சேவை புரிந்த
காலத்தில் நடைபெற்ற இரண்டு அனுபவங்கள் முதலாவதாக சேர்க்கப்படுகின்றன.
கிரி தீபம் என்னும் நூலில் சுயசரிதையாக
குறிப்பிடப்பட்ட நிகழ்வுகள் அவ்வாறே இங்கும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.
1.
ஆம் எனக் கூறியிருந்தால்
சரியான மனத்திடன் இல்லாத காரணத்தினால்
சாதாரண மக்களால் வேறு விதத்தில் நடக்க வேண்டியிருந்த இரண்டு நிகழ்வுகள் இங்கு
இணைக்கப்பட்டுள்ளன. அத்தகைய சூழலில் ஆதரவு தேடி வந்தவர்களோடு ஆம் என்ற ஒரு
வார்த்தை சொல்லியிருந்தால் கிடைக்க வேண்டிய தற்காலிக வெற்றியைப் பற்றியும் அவற்றை
தவறவிட்டு மாற்றி விடுவதற்கு முழு பொறுப்பாக செயல்பட்டவர் நாமே அல்ல. இறைவனே என, நம் பேராயர் எடுத்துக்கூறினார்.
மார் திவன்னாசியோஸ் பேராயரை தடை செய்த ஆணையை
பழைய செமினாரி சிற்றாலயத்தில் வாசிப்பதற்காக 1086 இடவம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
திட்டமிடப்பட்டது. கடிதத்தை வாசிப்போம் என்றும் வாசிக்க விட மாட்டோம் என்றும்
விவாதித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம் மக்கள் சிற்றாலயத்தை சுற்றி கூடி இருந்தனர்.
என்ன நடைபெறும் என இறைமக்களின் ஆச்சரியப்படும் வியப்புடன் காத்து நின்ற சூழல்.
கடிதத்தை வாசித்தால் சண்டை சச்சரவுகள் மற்றும் வன்முறை கட்டாயம் ஏற்படும். ஒரு
பகுதியில் ஆலோசனை கூட்டம். இன்னொரு பகுதியில் வாக்குவாதங்கள். இன்னொரு பகுதியில்
தேவையற்ற உரையாடல்கள். மொத்தமாக கலகம் நிகழ்வது போன்ற ஒரு சூழல்.
இச்சூழலில் மறைமுதுவர் தனக்குச் சார்பாக
நின்ற ஆயர்கள் மற்றும் அருள்தந்தையர்களோடு இணைந்து ஆலயத்திற்குள் நுழைந்து
பலிபீடத்திற்குச் சென்றார். திருப்பலி துவங்கியது. இந்த நேரத்தில் நான் எம்டி செமினாரியிலிருந்து
பழைய செமினாரிக்கு வந்தடைந்தேன். என்னோடு வந்தவர்களும் ஆலயத்திற்குள் நுழைந்து
விட்டார்கள். அனைவரும் நடைபெற வேண்டிய நிகழ்வுகளை எதிர்பார்த்துக் காத்து
நின்றனர். திருப்பலி ஒருபுறம். கலங்கிய மனங்கள் இன்னொரு புறம்.
எனது சீடரான ஒரு திருத்தொண்டார் ஒருவர்
பலிபீடத்திற்கு ஓடோடி வந்து வடபகுதியில் என்னை அழைத்துக் கொண்டு இரகசியமாக இவ்வாறு
என்னிடம் கூறினார்.
“ஆலயத்திற்கு வருகின்ற சூழலில் மறைமுதுவரின்
அறையை மூடிவிட அவர்களால் முடியவில்லை. பணப்பை போன்ற அவரது அனைத்துப் பொருட்களும்
அங்கே உள்ளன. அனைவரும் ஆலயத்திற்குள் அமர்ந்திருக்கின்றனர். ஒரு நிமிடத்தில் நான்
அவற்றை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளலாமா?”
“வேண்டாம்”
“இல்லையென்றால் நான் அவற்றை அப்படியே
ஆற்றுக்குள் வீசுவேன்.”
மிகப்பெரிய பேச்சாளராக புகழ்பெற்ற அவரது
சீடன் பிற்காலத்தில் பங்குத்தந்தையாக பணியாற்றிக் கொண்டிருந்ததனால் அவரது பெயரை
வெளிப்படுத்தவில்லை.
2. பையில் தடை ஆணை
இஃது அரக்கோணம் இரயில் நிலையத்தில் வைத்து
நடந்தது. பேராயர் மார் திவன்னாசியஸ் ஆயர் மார் யூலியோஸ், மற்றும் சில குருக்களும் நானும்
இணைந்து மும்பையிலிருந்து புறப்பட்டு அரக்கோணம் ரயில்வே நிலையத்திற்கு
வந்தடைந்தோம்.
பேராயர் மார் திவன்னாசியஸ்
வேண்டுகோளுக்கிணங்க ஆயர் மார் யூலியோஸ் அவர்கள் மறைமுதுவரிடமிருந்து தடை நீக்க
ஆணையை பெற்றுக்கொண்டார். அனைவரும் கேட்க
அதனை வாசித்த பின்னர் தனது அங்கியின்
பையில் வைத்திருந்தார். தொடர்ந்து குளிப்பதற்காக குளியலறைக்குள் நுழைந்தார்.
அப்போது கொல்லம் குளத்தை சார்ந்த ஒரு
பணியாளர் வாறு என்பவர் ஓடோடி மிகப்பெரிய ஒரு ரகசியத்தோடு வந்தடைந்தார்.
“என்ன?”
“ஆயர் மார் யூலியோஸ் குளிப்பதற்காக
சென்றபோது அறையில் அங்கியை தொங்க விட்டுள்ளார். தடை நீக்க ஆணை அங்கியின் பையில்
உள்ளது. நான் அந்த தடை நீக்க ஆணையை எடுத்து வரட்டுமா?”
“தேவையற்றச் செயலை செய்யாதே!”
மேற்குறிப்பிட்ட இரண்டு சூழல்களிலும் நான்
“ஆம்” எனக் கூறியிருந்தால் பிரச்சனைகள் வேறு சில சூழல்களில் பரிணமித்திருக்கலாம்.
அவ்வாறு நிகழ்ந்திருந்தால் பிரச்சனைகளுக்கான தீர்வுகளில் எந்தவொரு முன்னேற்றமும்
நிகழ்ந்திருக்காது.
3.
1910 ல் நடந்த ரகசிய ஆலோசனை
நமது கதாநாயகன் கத்தோலிக்க திருச்சபையோடு
ஒன்றிணைந்த போது அவரையும் மறுஒன்றிப்பு இயக்கத்தையும் கண்டித்து “மலங்கரை சுறியானி
திருச்சபையின் பாதுகாப்பு சங்கம்” என்ற பெயரில் திருவல்லாவிலிருந்து வெளியான
“றீத்து இயக்கத்தின் இரகசியங்கள்” என்ற நூலில் சேர்க்கப்பட்டுள்ள கதை கீழே
சேர்க்கப்படுகிறது.
நான்கு மணிக்கு பள்ளிக்கூடத்தில் மணி
ஒலித்தது. மாணவர்கள் உடனடியாக வெளியேறி வீடுகளுக்கு செல்வதற்குத் தயாராகினர்.
ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக வைத்திருந்த பிரம்புகளை மாற்றி
வைத்து மாலை நேர நடைப் பயிற்சிக்குச் செல்ல தயாராயினர். கால்பந்தாட்டம், பேட்மின்டன், டென்னிஸ் போன்ற
விளையாட்டுகளுக்காக நேரம் ஒதுக்குகின்ற ஆசிரியர் பெருமக்களும் நிர்வாக
அதிகாரிகளும் பலர்.
இவ்வாறு கோட்டயம் நகரமே பரபரப்பாக இயங்கிக்
கொண்டிருந்த சூழல். ஓரிரு நபர்கள் மறைவாக ஓர் இடத்தில் ஆலோசனை நடத்திக்
கொண்டிருந்தனர். ஒருவேளை ஓய்வெடுப்பதற்காக இவ்வாறு அவர்கள்
அமர்ந்திருப்பார்களோ! அவர்களுடைய
முகபாவனையையும் அவர்கள் பேசுகின்ற நிலையையும் காண்பவர்கள் இவர்கள் அமைதியாக
இருப்பவர்களைப் போன்று தோன்றவில்லை. ஏதோ மிகப்பெரிய ஆலோசனையை நடத்துபவர்களாகவே
அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியும். ஆம். அவ்வாறே ஆகும்.
ஆலோசனைக் கூட்டத்தில் தலைவராக
அமர்ந்திருப்பவர் “முதல்வர் தந்தை” என அறியப்படுகின்ற அருள்தந்தை பி. டி கீவர்கீஸ்
எம் ஏ அவர்களே ஆவார். மற்றும் இவருடைய உறவினரான திரு கே வி சாக்கோ மற்றும் அரசு
வழக்கறிஞரான பின்னர் நீதிபதியுமான திரு ஏ பிலிப்போஸ் ஆகியோர் ஆவர். அடிக்கடி
நடத்தப்பட்டிருந்த இத்தகைய இரகசிய ஆலோசனைகள் முக்கியமான காரியங்களைப் பற்றி
விவாதிப்பவையாக அமைந்திருந்தன.
இதனைக் கண்ட பள்ளிக்கூடத்தின் பணியாளர்
ஒருவர் பழைய செமினாரியில் மார் திவன்னாசியோஸ் அவர்களைக் காண வேண்டிய சூழல்
ஏற்பட்டபோது இப்படிப்பட்ட இரகசிய ஆலோசனைகளைப் பற்றி அவர் எடுத்துரைத்தார். இதனைப்
பற்றி பேராயர் அவர்கள் எடுத்துரைத்த சம்பவத்தை காண்போம்.
பணியாள் : ஆயர் அவர்களே நமது திருச்சபையில்
ஒரு சில பெரியோர்களுக்கு உரோமைத் திருச்சபையோடு இணைந்திட விருப்பமாம்.
பேராயர்: இவ்விடயத்தை உன்னோடு யார் கூறியது?
பணியாள் : நான் மீ. பிலிப்போஸ் வழக்கறிஞரின்
வீட்டில் தங்கியிருந்தபோது முதல்வர் அருள் தந்தை அவர்களும் வக்கீலும் திரு சாக்கோ
மாஸ்டரும் இணைந்து இத்தகைய விடயங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தனர்.
பேராயர்: நீ எப்போது கேட்டாய்?
பணியாள்: நான் இவற்றை பல தடவை
கேட்டிருக்கின்றேன். நேற்றைய தினமும் கேட்டேன்.
பேராயர்: நீ உனது வேலையை கவனித்துக் கொள்!
உடனடியாக பணியாள் அவ்விடத்திலிருந்து ஓடி
மறைந்து விட்டார்.
(“றீத்து இயக்கத்தின் இரகசியங்கள்” பக்கம் 18 முதல் 19 வரை)
4. பெதனியில் இறை பராமரிப்பு
கிரிதீபம் நூலில் எழுதப்பட்டிருந்த பெதனி
ஆசிரமத்தில் வைத்து நடந்த இரண்டு நிகழ்வுகளை சேர்க்கப்படுகிறது.
காலை உணவு முடிந்து மதியத்திற்கு சற்று
முன்னால் பணியாளர் வந்து மூன்று நாழி அரிசி மட்டுமே உள்ளது. மதிய உணவுக்கு என்ன
சமைக்க வேண்டும் எனக் கேட்டார். ஓரிருமுறை உணவருந்தாமல் இருந்த பல்வேறு
அனுபவங்களைக் கொண்டிருந்த நமது கதாநாயகன் அவ்வளவு அரிசியை அனாதை குழந்தைங்களுக்கு
சமைத்து வழங்கவும் நமக்கு மரச்சீனிக் கிழக்கு சமைத்து சாப்பிடலாம் என்று
கூறியவுடன் அவரும் உடனடியாக மரவள்ளி கிழங்கும் இல்லை. அதுவும் முடிந்து விட்டது.
என்றார்.
அப்படியென்றால், நாம் பட்டினி கிடக்கலாம். அதுவும்
“இறைவனின் அருளே என்று நினைத்தால் போதும்” என கதாநாயகன் கூறினார். ஆசிரமவாசிகள்
திரும்பிச் சென்று மதிய செபத்திற்காக அனைவரும் சிற்றாலயத்திற்கு வந்தனர். 12 30 மணிக்கு ஒரு முதியவர் சமையல்
அறைக்கு ஒரு பெரிய சுமையோடு வந்தார். “இது என்ன” எனக் கேட்டபோது அது வெள்ளை அப்பம்
என்று அவர் பதில் கூற, மதிய உணவை அனைவரும் சரியான நேரத்தில் உணவகத்தில் அமர்ந்து திருப்தியோடு
பசிக்கு உண்டு மகிழ்ந்தனர். மாலையானதும் இன்னொரு நபர் அரிசியோடு வந்திருக்கிறார்.
இவ்வாறு அன்று அவர்கள் பட்டினி கிடக்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை.
5. அனாதை சிறுவனின் இறையியல்
ஒரு நாள் ஆசிரமத்தவர்கள் மதியத்திற்குப்
பிறகு அருவிக்கு குளிப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். வழியில் ஒரு அனாதை சிறுவனை
சந்தித்தனர். அவனும் அருவியிலிருந்து குளித்த பின்னர் திரும்பி வந்து
கொண்டிருந்தான்.
குழந்தாய் அருவியில் யாரேனும்
குளிக்கின்றனரா? எனக்
குரு அவனோடு கேட்டார். சில நிமிடங்கள் மௌனமாக நின்ற பின்னர், “யாருமே இல்லை! ஒருவர் உண்டு!
இருவர் உண்டு! மூன்று பேர் உண்டு! அனைவரும் உண்டு! இல்லை என்றால் யாருமில்லை! எனச்
சிறுவன் பதில் வழங்கிச் சென்றான். ஆச்சரியப்பட்ட ஆசிரமத்தவர்கள் குழந்தையின்
எண்ணத்தில் உருவான அந்தக் கருத்துக்கள் எதனை குறிப்பிடுவதாக பின்னர் புரிந்து
கொண்டனர்.
முந்தைய நாள் திருத்துவத்தைப் பற்றி நமது
கதாநாயகன் ஆசிரமத்தவர்களைக் கற்பித்திருந்த போது அந்த சிறுவன் வராந்தாவில்
அமர்ந்திருந்து அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான். யாரும் இல்லாத இடத்தில் இறைவன்
உண்டு எனவும், இறைவன்
ஒருவர் அல்ல எனவும், தந்தை, மகன், தூய ஆவி அவர்கள் அடங்கி
இருக்கிறார் எனவும், ஆண்டவர் உள்ள இடத்தில் வானதூதர்களும் புனிதர்களும் உண்டு எனவும், தான் கற்பித்த இறையியலைத் தான்
புரிந்து கொண்ட விதத்தில் அவன் எடுத்துரைத்தான். தான் கற்றுக் கொண்டதை
ஆசிரமத்தவர்களின் முன்னிலையில் அவன் எடுத்துக் கூறினான்.
6. உண்ணா விரதம்
நமது கதாநாயகனின் சமாதானமான நிலையும் தைரிய
மனமும் வெளிப்படுத்துகின்ற ஒரு நிகழ்வு திருவல்லாவில் வைத்து நடந்தது. சமுதாய
வழக்கில் ஆர்த்தடோக்ஸ் திருச்சபை தோல்வி அடைந்த சூழ்நிலை. மார்த்தோமா
கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமாக திருவல்லாவிலிருந்து வெளியிடப்பட்டிருந்த நவபாரதி
என்னும் செய்தித்தாளில், தோல்வியடைந்தவர்களைக் கேலி செய்த கட்டுரைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன.
மார்த்தோமா திருச்சபையின் பெருமேதையான மி கே என் டானியல் அவர்களது கட்டுரை
ஆர்த்தடோக்ஸ் திருச்சபையினரை கோபப்படவும் வெறுப்பு உருவாக்குவதுமாக அமைந்தது.
திருவல்லாவில் ஆர்த்தோடக்ஸ் தலைவர்கள்
ஆலோசனைக் கூட்டங்கள் துவங்கினர். இறுதியில் தங்களுக்கென்று வார இதழ் ஒன்றை
துவங்குவதற்கு தீர்மானித்தனர். நவபாரதி என்பதற்கு போட்டியாக வீரபாரதி என்ற புதிய
வார இதழைத் துவங்கினர். மி கே என் டானியல் மற்றும் மார்தோமா திருச்சபையை எதிர்த்த
கட்டுரைகளும் செய்திகளும் தாங்கிய ஓரிரு இதழ்கள் வெளியிடப்பட்டன. இரு
திருச்சபையினரும் ஒன்றுக்கொன்று கோபத்தீயில் திளைத்திருந்தனர். இரு திருச்சபையின்
அதிகாரிகளும் வீரபாரதியின் வெளியீட்டை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆனால் எந்த விதமான பலனும் உருவாகவில்லை.
மூன்றாம் இதழ் வெளியிடுவதற்கான அனைத்து
கோப்புகளும் தயார் நிலையில் இருந்தன. என்ன செய்வதென்று அறியாது அனைவரும் வருத்திக்
கொண்டிருந்தனர். இச்சூழலில் தான் பெதனி ஆசிரமத்தின் தலைவராகிய அருள்தந்தை பி டி
வர்கீஸ் எம் ஏ திருவல்லாவுக்குச் சென்றார். வீரபாரதியின் பொறுப்பாளர்களைக் கண்டு
இந்த வார இதழை வெளியிட வேண்டாம் என வேண்டிக் கொண்டார். ஆனால் அவர்களோ அதற்கு
சம்மதிக்காமல், பல்லுக்குப்
பல், கண்ணுக்குக்
கண் என்ற நியதிக்கு ஏற்ப செயல்பட்டனர். அருட்தந்தை கீவர்கீஸ் தோல்வியுற்றவராக
வருந்தினார். ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என அவர் தீர்மானித்து
விட்டார். திருவல்லாவில் எம் ஜி எம் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தின் இரண்டாவது
நிலையில் வராந்தாவில் உள்ள ஒரு பெஞ்சில் அவர் படுத்திருந்தார்.
“வீரபாரதி என்னும் வார இதழை வெளியிட
மாட்டோம்” என அதனுடைய பொறுப்பாளர்கள் சபதம் செய்ய வேண்டும். அதுவரையிலும் நான்
எதுவும் உண்ணமாட்டேன். தண்ணீர் கூட அருந்த மாட்டேன். இந்த இடத்தில் படுத்து இறக்க
வேண்டி வந்தால் இறப்பதற்கு தயாராக இருக்கிறேன் “ என்றார். உடனடியாக காட்டுத்தீ
போன்று இச்செய்தி திருவல்லா நகரம் எங்கும் பரவியது. எம் ஏ அச்சன் உண்ணாவிரதம்
இருக்கிறார். சமுதாயத்தின் எதிர்காலம் அவரில் நிலைத்திருக்கிறது. அவர் இறந்தால்
மிகப்பெரிய நஷ்டம். இறக்காமலிருக்க வேண்டுமென்றால் வீரபாரதி நிறுத்தப்பட வேண்டும்.
இரு திருச்சபையின் தலைவர்களும் வீரபாரதி
பொறுப்பாளர்களை சந்திக்கத் துவங்கினர். தயவுசெய்து எம் ஏ அச்சன் அவர்களின் உயிரை
நீங்கள் மீட்க வேண்டும். வீரபாரதி இதழை நிறுத்த வேண்டும். இவ்வாறு சமுதாயத்தின்
பூசல்கள் முடிவடைய வேண்டும். வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எம் ஏ அச்சனும்
உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொண்டார். அவ்வாறு வீர பாரதி என்ற வார இதழ்
என்றைக்குமாய் மறைந்து போனது.
7. பாறை நிலம் வரை ஆனது
எந்த ஒரு கருத்தை மையமாகக் கொண்டும் பல மணி
நேரங்கள் பல நாட்கள் சொற்பொழிவு ஆற்றுவதற்கான அறிவும் நமது கதாநாயகனுக்கு
இருந்தது. கருத்துக்களை வெளிப்படுத்தும் திறமை, தூய்மையான மொழி மற்றும்
உரையாற்றும் திறமை இவையெல்லாம் ஒன்றாக அவருடைய மறையுறைகளில் நிலைத்திருந்தது.
அவருடைய மறையுரையைக் கேட்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக வந்து சேர்வது
வழக்கமாக இருந்தது.
நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடியவாறு
மறையுரைகள் நிகழ்த்துகின்ற போது மக்கள் மனதில் அவை கவர்ச்சிக்குரியதாக தென்பட்டன.
எவ்வளவு நேரம் உரையாற்றினாலும் தொடர்ந்து கேட்பதற்கான ஆர்வம் பார்வையாளர்களிடையே
கூடிக் கொண்டிருந்தது. ஆலயங்களிலும் பெரிய கூட்டங்களிலும் மேதைகளின்
கூட்டங்களிலும் ஆயிரக்கணக்கான உரைகளை அவர் நடத்தி இருக்கிறார். ஒரே கருத்தைப்
பற்றி பல நாட்கள் உரையாற்றுவதற்கான தனிப்பட்ட திறமை அவர் கொண்டிருந்தார்.
ஒரு நாள் திருவல்லா அருகே கவியூர் என்னும்
ஆர்த்தடோக்ஸ் தேவாலயத்தில் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதைப்பவரின்
உவமை பற்றிய 30
நாட்கள் தொடர் மறையுரை நிகழ்த்துவதற்கு அவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
மறையுரைகள் ஆரம்பித்தன. ஒவ்வொரு நாளும் மாலை இரண்டு மணி நேரங்கள் உரைகள்
நிகழ்த்தப்பட்டன. 20 நாட்கள் ஆகின. அப்போது இறைமக்களுள் ஒருவன் கேட்டான். எம். ஏ அச்சனின் மறையுரை
எதுவரை ஆனது. அப்போது அவன் பதிலாகக் கூறினான். “பாறைப்பகுதி வரை ஆனது”. அதாவது
மறையுரை பாதி வரை ஆனது என்பது அதனுடைய அர்த்தம்.
8. முதன்மைத் திருச்சபையில் அழகிய
திருவழிபாடு
மறுஒன்றிப்பு நிகழ்வுக்கு கருவாக
அமைந்திருந்த ஒரு நிகழ்வு சேர்க்கப்படுகிறது.
நமது கதாநாயகன் யாக்கோபாய திருச்சபையில்
பெதனி ஆயராக பணியாற்றிய போது கல்லுப்பாற யாகோபாய ஆலயத்தில் ஏதோ ஒரு பணிக்காக
தங்கியிருந்தார். அயிரூர் என்னும் இடத்தைச் சார்ந்த யாக்கோபாய திருச்சபையிலிருந்து
கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்த பேருரையாளரும் இறையியல் வல்லுனரான வில்லோத்
மிஸ்டர் நைனான் வர்கீஸ் (போத்தச்சன்) என்பவர் ஆயர் அவர்களை சந்திக்க ஆலயத்திற்கு
வந்திருந்தார். இருவரும் 20 ஆண்டுகளாக
நட்பு கொண்டிருந்தனர். வட்டிப் பண வழக்கில் இருவரும் சாட்சிகளாக
விசாரிக்கப்பட்டுள்ளனர்.
தனது உண்மைத் தேடலின் பலனாக யாக்கோபாய
திருச்சபையிலிருந்து கத்தோலிக்க திருச்சபையில் சேர்ந்த பின்னர் ஆயர் அவர்களை
சந்தித்து ஒரு சில காரியங்களை சொல்வதற்காக அவர் வந்திருந்தார்.
ஆயர்: போத்தச்சன்! நீங்கள் இப்போது
எங்கிருந்து வருகிறீர்கள்?
போத்தச்சன் : நான் அயிரூர் என்னும்
இடத்திலிருந்து வருகிறேன்
ஆயர்: வந்ததன் நோக்கம் என்ன?
போத்தச்சன் : ஆயரை நேரடியாகக் கண்டு சில
செய்திகளை அறிவிக்க வந்துள்ளேன்.
ஆயர் : நன்று. தற்போது நான் வேலை செய்து
கொண்டிருக்கிறேன். போத்தச்சன் பக்கத்து அறையில் தங்கி ஓய்வு எடுக்கவும். அங்குள்ள
திருத்தொண்டரோடு பேசி அமரவும்.
போத்தச்சன் : அப்படியே ஆகட்டும்.
எந்த இடத்தில் ஆனாலும் யாராக இருந்தாலும்
அவர்களோடு கத்தோலிக்க திருச்சபை சம்பந்தமான கருத்துக்களைக் கூறுவதை தனது வழக்கமாக
போத்தச்சன் கொண்டிருந்தார். அவ்வாறு பக்கத்து அறையில் இருந்த யாக்கோபாயா
திருத்தொண்டரோடு விவாதமும் ஆரம்பமானது.
போத்தச்சன் : திருத்தொண்டர் அவர்களே, நிசேயா நம்பிக்கை அறிக்கையில்
கூறப்பட்டிருக்கும் நான்கு கொள்கைகளும் அடங்கிய திருச்சபை தான் யாக்கோபாய
திருச்சபை என உங்களால் தெளிவுபடுத்த முடியுமா?
திருத்தொண்டர் : இல்லை. அது உரோமை திருச்சபை
என்ற நம்பிக்கையை கொண்டதனால் தானே, நீங்கள் அந்த திருச்சபைக்கு குதித்துச் சென்றீர்கள். ஏராளமான
மூடநம்பிக்கைகளும் தேவையற்ற சடங்குகளும் நிறைந்துள்ள உரோமைத் திருச்சபையா
காதோலிக்கமும் அப்போஸ்தலிக்கவுமான ஒரே திருச்சபை?
போத்தச்சன் : திருத்தொண்டர் அவர்களே, உங்களுக்கு என்ன தெரியும்? கத்தோலிக்க திருச்சபை
மூடநம்பிக்கையை கற்பிக்கின்றதா? எந்தெந்த தேவையற்ற சடங்குகள் அவை ஏற்றுக் கொண்டுள்ளன?
திருத்தொண்டர்: அனைவருக்கும் அது தெரிந்தது
அன்றோ. உத்தரிக்கிற ஸ்தலம், தூய ஆவியின் வருகை, இறைய அன்னையின் அமல உற்பவம் இவையெல்லாம் மூடநம்பிக்கைகள் அல்லவா? மாத வணக்கம், உத்தரியம், தண்டவிமோஜனம் இவை எல்லாம்
தேவையற்ற சடங்குகள் அல்லவா?
போத்தச்சன்: திருத்தொண்டர் அவர்களே!
யாகோபாயா திருச்சபையின் நம்பிக்கை பற்றி நீங்கள் கற்றது உண்டா. உத்தரிக்கிற ஸ்தலம்
என்பது மூடநம்பிக்கை என ஒரு யாக்கோபாயக்காரனுக்கு கூற முடியுமா? நீங்கள் இறந்தவர்களுக்காக
ஜெபிப்பது, இறந்து
விண்ணகத்திற்கு சென்ற ஆன்மாக்களுக்கா? இல்லை நரகத்திற்கு சென்ற ஆன்மாக்களுக்காகவா?
திருத்தொண்டர் விடை கூற முடியாதவாறு
அமர்ந்திருந்தார். போத்தச்சனின் வார்த்தைகளின் குரலின் ஒலி உயரத் துவங்கியது.
போத்தச்சன் : மூடநம்பிக்கை என்றும் தேவையற்ற
சடங்குகள் எனவும் நீங்கள் அப்படி கூறினால் போதுமா? எனது கேள்விகளுக்கு விடை கூற வேண்டும்.
எங்கு சென்ற ஆன்மாக்களுக்காக நீங்கள் ஜெபிக்கிறீர்கள்?
விடை கூற முடியாமல் திருத்தொண்டர் வியர்வை
கொட்டியது. விண்ணகத்திற்கு சென்ற ஆன்மாக்களுக்காக என்று கூறவும் முடியாது.
நரகத்தில் போன ஆன்மாக்களுக்கு கூறவும் முடியாது. தூய்மைப்படுத்தும் நிலையான
உத்தரிக்கிற ஸ்தலம் என்ற ஒன்று உண்டு என்பதை சம்மதித்தே ஆக வேண்டும். திருத்தொண்டரும்
போத்தச்சனும் இடையே உரத்த குரலில் நடக்கின்ற விவாதத்தை அடுத்த அறையிலிருந்து
கேட்டுக் கொண்டிருந்த ஆயர் அவர்கள் வராந்தாவுக்கு வந்தார். பதில் கூற முடியாமல்
வியர்வை கொட்டிக் கொண்டிருந்த திருத்தொண்டருக்கு அது ஒரு ஆறுதலாக அமைந்தது. தனது
ஆயர் தன்னைச் சார்ந்து நிற்பாரல்லவா! ஆனால் திருத்தொண்டரின் நம்பிக்கைக்கு எதிராக
ஆயர் அவர்கள் இவ்வாறு கூறினார். “திருத்தொண்டரே! போத்தச்சனோடு விவாதிக்க வேண்டாம்.
கத்தோலிக்க திருச்சபை முதல் தரமான திருச்சபை ஆகும்.”
திருத்தொண்டருக்கு பாத்திரத்திலிருந்து
அடுப்பில் விழுந்த அனுபவமாக இருந்தது. முகம் வருத்தத்துடன் காணப்பட்டது. தன்னைக்
காப்பாற்ற வந்த ஆயர் அவர்களும் இவ்வாறன்றோ பேசினார். என்ன செய்யலாம்!
திருத்தொண்டரின் முகம் வாடியது என உணர்ந்து கொண்ட ஆயர் அவரை ஆறுதல் படுத்துமாறு
இவ்வாறு கூறினார். “ஆனால் நமது திருவழிபாடு மிகவும் அழகானது.” திருத்தொண்டரின்
முகத்தில் புஞ்சிரி மலர்ந்தது. அவ்வார்த்தைகள் மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தன.
போத்தச்சன் உடனடியாக இவ்வாறு கூறினார்.
“ஆயர் அவர்களே, இவை
இரண்டும் ஒன்றுக்கொன்று இணைந்தாலோ? முதன்மையான திருச்சபையில் அழகிய திருவழிபாடு அங்கீகரிக்கப்பட்டாலோ?
மலங்கரை திருச்சபை கத்தோலிக்க திருச்சபையோடு
மறுஒன்றிப்படைவதற்கு தீர்மானிக்க நமது கதாநாயகனுக்கு இந்த சம்பவமும் ஒரு காரணியாக
அமைந்தது.
அதிகாரம் 15.
கேரளாவின் பழைய கூற்றினர் மற்றும் புதிய
கூற்றினர்
மார் இவானியோஸின் வாழ்க்கை வரலாற்றில்
முக்கியமானது மற்றும் மக்களின் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்த அவரைப் பின்தொடர்ந்த
பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளித்த ஒரு தலத்திற்குள் இன்னும்
நுழையவிருக்கின்றோம்.
கேரளாவின் யாக்கோபாயர்கள் உட்பட பல இலட்சம்
கத்தோலிக்கரல்லாதவர்களின் மேன்மைக்கு கத்தோலிக்க திருச்சபையுடன் ஒன்றிணைவது
அவசியமே என்ற நம்பிக்கையின் காரணமாக, அந்த
நோக்கத்திற்காக கதாநாயகன் மேற்கொண்ட வீர முயற்சிகள் ஏராளம் ஏராளம். இத்தகைய சில
நிகழ்வுகள் பின்வரும் அதிகாரங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கான
பின்னணியாக, கேரளாவில் உள்ள பழைய கூற்றினரும் புதிய
கூற்றினரும் மேற்கொண்ட கத்தோலிக்க மறுஒன்றிப்பு முயற்சிகள் மற்றும் அவற்றின்
தோல்விக்கான காரணங்களைப் பற்றிய அறிவை வாசகர்களுக்கு வழங்குவதும் அவசியம்.
மலங்கரை திருச்சபையை நிறுவுதல்
கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களில்
ஒருவரான மார்த்தோமா என்பவரால் மலங்கரை திருச்சபை நிறுவப்பட்டது என பல வரலாற்று
ஆசிரியர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எந்த உண்மையையும் மறுப்பவர்கள் எப்போதும்
எங்கும் இருப்பார்கள். அந்தச் சூழ்நிலைக்கு மார் தோமா திருத்தூதர் கேரளாவுக்கு
வந்ததையும், இங்கு தேவாலயங்கள் நிறுவப்பட்டதையும்
தெளிவாக மறுப்பவர்கள், சந்தேகத்துடன் பார்ப்பவர்கள்
இருப்பதில் ஆச்சரியமில்லை.
உண்மையை மறுப்பவர்களை மூன்று வகைகளாகப்
பிரிக்கலாம். முதல் குழுவினர் “வாதிட வேண்டும்” என்ற நோக்கில் உண்மையை
மறுப்பவர்கள். இரண்டாவது குழுவினர்
“அறிந்தும் எதிர்மறையாக செயல்படுபவர்கள்”, மூன்றாவது
குழுவினர், ஒன்றனைக் குறித்த “போதிய அறிவின்றி
மறுப்பவர்கள்". திருத்தூதர் தோமாவின் இந்திய வருகையை எதிர்ப்பவர்களுள் இந்த
மூன்று பிரிவினரும் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.
மூதாதையர்களின் சாட்சியங்கள், மரபு நம்பிக்கைகள், பழங்கால ஆவணங்கள் மற்றும்
வரலாற்றாசிரியர்களின் அறிக்கைகள் அனைத்தும் இந்தியாவில் திருத்தூதர் தோமாவின்
வருகையை தெளிவாக நிரூபிக்கின்றன. இந்தியாவிற்கு வந்த திருத்தூதர் தோமா
கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதித்து, வல்லசெயல்கள்
பலவற்றைச் செய்து, பலரை
கிறிஸ்தவர்களாக மாற்றினார் என்பது வரலாற்று உண்மையே. திருத்தூதர் கேரளாவின்
பல்வேறு பகுதிகளிலாக ஏழு தேவாலயங்களை நிறுவினார், இவற்றின்
ஆன்மீக நிர்வாகத்திற்காக பாதிரியார்களை நியமித்தார். இவ்வாறு மலங்கரையில் அகில உலக
திருச்சபையின் கிளை ஒன்றை நிறுவினார். தொடர்ந்து மயிலாப்பூரை அடைந்து நற்செய்தியை
போதித்த போது எதிரிகளின் ஈட்டியால் குத்தப்பட்டு பலியாகி மறைசாட்சியானார்.
ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளாக நம் நாட்டு
பாதிரியார்களின் நிர்வாக முறைமையின் கீழ் செயல்பட்ட கேரளாவின் கிறிஸ்தவ திருச்சபை, சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்த க்னாயித்தொம்மன் மற்றும் அவரது
சீடர்களின் வருகையால் புத்துயிர் பெற்றது. மலங்கரை திருச்சபையை அரசியல், ஆன்மீக, சமூக மற்றும் நிதி நிலையில் மேம்படுத்துதல்
என்ற குறிக்கோளுடன் க்னாயித்தொம்மன் செயல்பட்டார். இதன் விளைவாக, பல சிறியன் கிறிஸ்தவர்களும் அரசர்களிடமிருந்து பல்வேறு பதவிப் பெயர்களான
பல செப்பேடுகளைப் பெற்றுக்கொண்டனர். பல்வேறு நிலைகளில் தழைத்தோங்கியிருந்த கேரளாவின்
கிறிஸ்தவ திருச்சபை, பாபேலின் மறைமுதுவர்களுக்கும் அவர்கள்
வழியாக உரோமையின் திருத்தந்தையின் தலைமையில் பதினாறு நூற்றாண்டுகளாக ஒரே
திருச்சபையாக இருந்தது.
மறுக்க முடியாத உண்மை
இந்தக் காலகட்டத்திற்கு அப்பால் உலக
வரலாற்றை உன்னிப்பாக ஆராய்ந்தவர்களால் முழுவதும் வெளிப்படும் ஒரு உண்மையை உணர
முடிகின்றது. அது நாடாக இருந்தாலும், சமூகமாக
இருந்தாலும், மதமாக இருந்தாலும், இவ்வுண்மை
பேரொளியாக ஒளிர்கிறது. அதிகார விரும்பிகளால் ஏற்படுகின்ற வெறுப்புக்கள், அதனால் உருவாகிய கீழ்ப்படியாமை, அதன் விளைவாக
கலகங்களும் மற்றும் அதன் விளைவாக ஏற்படுகின்ற அழிவுகளும் ஆகும். மேலதிகாரிகளைப்
போலவே கீழ்நிலை அதிகாரிகளும் இதற்குக் காரணமாகி விடுகிறார்கள். திமிர்பிடித்த
அதிகாரிகள் உடன்பணியாளர்களை கைக்கூலிகளாக சுய இலாபச் செயல்களில் ஈடுபடுத்தும்போது,
பாதிக்கப்பட்டவர்கள் கலகங்கள்
செய்வதும் அதனால் வன்முறை ஏற்படுவதும் இயல்பானதே.
சுயநலம், பொறாமை போன்ற
தீமைகளால் மயங்கிக் கிடக்கும் அதிகாரிகள், உடன்பணியாளர்களை
இழிவாகப் பேசி, அவர்களை வெறுக்கும் செயல்களில்
ஈடுபடுகின்றனர். இதனால் நாடு, சமூகம், மதம்
ஆகியவற்றில் பிரச்சனைகளும் அழிவுகளும் ஏற்படுகின்றன. இரு தரப்பினரும் தங்கள்
கடமைகளைப் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் அன்புடனும்,
பொதுநலனுக்காக மரியாதையுடனும் பணியாற்றும் போது தான் அமைதியும்
செழுமையும் அடைய முடியும். ஆட்சியாளர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையே
போட்டியும் மோதலும் ஈடுசெய்ய முடியாத பல பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதற்கு உலக
வரலாற்று நிகழ்வுகளே சாட்சி.
கடந்த 2000 ஆண்டுகளில் கிறிஸ்தவத்தின்
வரலாற்றைக் கவனமாகப் படிக்கும் எவரும் மேற்கூறிய உண்மையை நிச்சயமாக
ஒப்புக்கொள்வார்கள். உலக மீட்பராம்
கிறிஸ்து உலகில் திருச்சபையை நிறுவி, அதிகாரிகளை
நியமித்து மேலும் உலக முடிவு வரை அவர்களோடே திருச்சபையை ஆட்சி செய்வதாகவும்
உறுதியளித்தார்.
"உங்கள் வார்த்தைகளுக்குப் பணிபவன்
எனக்கே பணிகிறான். உங்களை மறுப்பவன் என்னையும் மறுக்கிறான்" என மொழிந்து
அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிதல் தேவையானதாக எடுத்துரைத்தார். உங்களுள்
முதல்வர் பணியாளராகவும், ஊழியராகவும் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டு அதிகாரிகளின் கடமையை
அறிவுறுத்தினார்,
உலக முடிவு வரை மக்களுக்கு அவர் போதித்த
நம்பிக்கை உண்மைகளை கற்பிக்க ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் வழங்கினார். அவ்வாறே
தப்பறைகளிலிருந்து விலகிடவும் ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் வழங்கினார். அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியத் தயக்கம் மற்றும்
உண்மை நம்பிக்கையை ஏற்கத் தயங்குவது போன்றவை திருச்சபையின் பேராபத்திற்கு
வழிவகுத்தது. அத்தகையோர் திருச்சபையை புறக்கணிக்கவும்
செய்தனர். இத்தகையோர் உண்மை திருச்சபையிலிருந்து விலகி புதிய இயக்கங்களை
உருவாக்கவும் உண்மை திருச்சபைக்கு எதிரான செயல்களில் வலுவோடு செயல்படவும்
துவங்கினர். நான்காம் நூற்றாண்டில் உருவான "அரியோசியர்கள்" முதல்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் "பழைய கத்தோலிக்கர்கள்" வரையிலும், இலட்சக்கணக்கானோர் திருச்சபையிலிருந்து விலகி புதிய அமைப்புகளை உருவாக்கி,
உண்மை திருச்சபைக்கு எதிராக தீவிரமாக பணியாற்றினர். புதிய
அமைப்புகளைப் பற்றி பிரச்சாரம் செய்ய கடுமையாக உழைத்தனர். ஆனால் இத்தகைய பல
அமைப்புகளும் வரலாற்றில் பெயர்களை மட்டும் விட்டுவிட்டு உலக அவையிலிருந்து
மறைந்துவிட்டன. செஞ்சிய சில இயக்கங்கள் சுக்கு நூறாக உடைந்து ஒவ்வொரு நாளும் சீரழிவை நோக்கி நகர்கின்றன. ஆனால்
மறுபுறம், கிறிஸ்துவின் திருச்சபை, நாள்தோறும்
செழித்து வளர்ந்து உலகம் முழுவதும் அதன் வெற்றியைப் பரப்பி வருகிறது.
மலங்கரை திருச்சபையில் புரட்சி
மார்ட்டின் லூதர், நாக்ஸ், விக்ளிஃப் மற்றும் எட்டாம் ஹென்றி ஆகியோர்
பதினாறாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ திருச்சபையில் பெரும் புரட்சியை
ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் ஆவர். பல்வேறு காரணங்களால்
திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட இவர்கள், தாய்த்
திருச்சபையை அழிக்க முற்படவும், தங்களால் புதிதாக
உருவாக்கப்பட்ட அமைப்புகளை வளர்க்கவும் அயராது உழைத்தனர். கத்தோலிக்க திருச்சபை
இத்தகைய தாக்கங்களால் குறிப்பிடத்தக்க
எந்தவொரு இழப்பையும் சந்திக்கவில்லை. ஆனால் புரட்சித் தலைவர்களின்
அமைப்புகளுக்குள்ளேயும் புரட்சிகள் உருவான நிலையில் மன நிம்மதியின்றியே இறந்தனர் என்று அவர்களது
வாழ்க்கை வரலாறுகள் கூறுகின்றன.
இந்த 20 ஆம் நூற்றாண்டில் இத்தகைய பிரிவினை
சபைகளை எல்லையற்ற சுதந்திர எண்ணமும், அதிகாரத்தோடு கொண்ட வெறுப்பு மற்றும் நம்பிக்கைக்கு எதிரான படிப்பினைகள்
போன்றவைகளால் பிரிவினை திருச்சபைகள் ஆயிரத்திற்கும் மேலான பிரிவுகளாக
நொறுங்கிப்போன பரிதாபகரமான காட்சியைக் காண்கிறோம்.
16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், கேரளாவின் கிறிஸ்தவ திருச்சபையிலும்
துரதிருஷ்டவசமாக புரட்சி எண்ணங்கள் உருவாயின. உரோமை திருத்தந்தையின் தலைமையில் 1600 ஆண்டுகளாக ஒரே திருச்சபையாக
இருந்த கேரள கிறிஸ்தவர்களிடையே புரட்சியின் நச்சு விதைகளை விதைத்தது யார் என்ற
கேள்விக்கு வரலாற்று ஆசிரியர்களால் சரியானப் பதில்களை கூற முடிவதில்லை.
கத்தோலிக்க மதத்தைப் பரப்பும்
நோக்கத்திற்காக இந்தியா வந்தடைந்த இயேசு சபையைச் சேர்ந்த போர்த்துகீசிய மிஷனரிகள்
தான் இந்த பிளவுக்குக் காரணம் என சுறியானிக்காரர்களும், போர்த்துகீசிய சிந்தனைகளுக்கு
அடிபணிந்ததனால் ஏற்பட்ட வன்முறைகளுமே பிளவுக்குக் காரணம் என போர்த்துகீசியர்களும்
கடுமையாக வாதாடுகின்றனர். இருப்பினும், இரண்டு குழுவினரும்
யாரேனும் குற்றமற்றவர்கள் என்று தங்கள் கைகளை கழுவலாம் என்று வரலாற்று
அறிஞர்களாலும் கூற முடியவில்லை. அறியாமை,
கவனக்குறைவு மற்றும் பதவி ஆசை போன்ற குற்றங்களை போர்த்துகீசிய மிஷனரிகள் மீது சுமத்துவதில்
தவறில்லை என்பதற்கு அன்றைய வரலாற்று நிகழ்வுகள் சாட்சிகளாக உள்ளன.
1 அறியாமை
கல்தேய சிறியன் திருவழிபாடு மற்றும்
அவர்களின் பழக்கவழக்கங்கள் பற்றி போர்த்துகீசியர்களுக்கு இருந்த அறியாமையால், இங்குள்ள கிறிஸ்தவர்கள் நெஸ்தோரியர்கள் என்ற தவறான எண்ணத்தை
கொண்டிருந்தனர். "இறகைக் கண்டதும் ஆமையே” என்று முடிவு செய்த முட்டாள் போல
இங்குள்ள கிறிஸ்தவர்களின் சில பழக்கவழக்கங்களைக் கண்டதும் அனைத்து
கிறிஸ்தவர்களையும் நெஸ்தோரியர்கள் என்று நம்புவதில் போர்த்துகீசிய மிஷனரிகள் முழு
அறியாமையைக் காட்டினர். .
2. கவனக்குறைவு
இங்குள்ள கிறிஸ்தவர்கள் நெஸ்தோரியர்களாக
இருந்தாலும், அவர்களுடன் அன்புடன் பழகி அவர்களது
மனமாற்றத்திற்காக உழைத்திருக்க வேண்டும். மாறாக நிதி நிலையும் அரச செல்வாக்கும்
தங்களுக்கு சாதகமாக உள்ளது என்ற பெருமிதத்தால் இங்குள்ள கிறிஸ்தவர்களின்
பெருமையைக் கூட புண்படுத்தும் வகையிலும், சுறியானிக்காரர்களிடையே
பகையைத் தூண்டும் வகையிலும் செயல்பட்டனர்.
3. பதவி ஆசை
போர்ச்சுகீசிய மிஷனரிகள் கேரள கிறிஸ்தவர்களை
நிர்வாகம் செய்யும் நோக்கத்துடன் அன்றைய சுறியானி ஆயர்களை பலவாறு துன்புறுத்தி, அவர்களை விரட்டியடிக்க அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை
முன்வைத்தனர். இறுதியில் அவர்களுக்கு ஆட்சிப் பொறுப்பு கிடைத்த பின்னரும் நீண்ட
ஆண்டுகள் ஆட்சியமைக்க கடவுள் அவர்களை அனுமதிக்கவில்லை.
கத்தோலிக்க திருச்சபையும் அதனில் அங்கம்
வகித்த போர்த்துகீசிய மிஷனரிமார்களும் ஒரு திருவழிபாட்டைச் சார்ந்தவர்களை மற்றொரு
திருவழிபாட்டுக்கு மாற்றுவதைக் குற்றமாகக் கருதியவர்களே. கத்தோலிக்கர்களான சிறியன்
திருவழிபாட்டு சமூகத்தினரை இலத்தீன் திருவழிபாட்டு சமூகமாக மாற்ற மேற்கொண்ட
முயற்சிகளை நியாயப்படுத்தவே முடியவில்லை. அவ்வாறே சுறியானி ஆயர்களின்
ஆட்சிமுறையிலிருந்து மாற்றி போர்த்துகீசிய ஆயர்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வரவும்
அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் நிறைவேறியுள்ளன. "தலைமுறை இருக்கும் வரை இந்த
பவுலிஸ்தியர்களுக்கு அடிபணிய மாட்டோம்" என்று வளைந்த சிலுவையில் கட்டிய
கயிற்றில் பிடித்துக் கொண்டு உறுமொழி மேற்கொண்ட சுறியானி ஆயர்களின் செயல்களையும்
நியாயப்படுத்தக்கூடாத செயல்களாக வரலாற்றில் காண்கிறோம்.
1. விரைவான கோபம்
சுறியானி ஆயரான அஹத்தல்லா
போர்த்துகீசியர்களால் கடலில் மூழ்கடிக்கப்பட்டார் என்ற வதந்தியே வளைந்த சிலுவை
சபதத்திற்கான உடனடி காரணம் ஆகும். வதந்தியின் உண்மை நிலை பற்றி ஆராயாமல் உணர்ச்சி
வசப்பட்டு வளைந்த சிலுவை சபதம் மேற்கொள்ளத் துணிந்தனர். ஆனால் இது மக்களிடையே
புரட்சியை ஏற்படுத்த சில அறிவாளிகளால் புனையப்பட்ட செய்தி ஆகும். ஆனால் ஆயர்
அஹத்தல்லா முதலில் கோவாவுக்கும் பின்னர் போர்த்துகலுக்கும் அனுப்பப்பட்டார் என
வரலாறு நிரூபிக்கிறது.
2 சட்ட மீறல்
இரண்டாவதாக, சுறியானி
ஆயர்கள் அஹதல்லாஹ் பிஷப் அவர்களால் எழுதப்பட்டதாக இட்டித்தொம்மன் கத்தனார் போலியாக
எழுதிய கடிதத்தை தவறாக நம்பினர்.
பன்னிரண்டு பாதிரியார்கள் ஒரு ஆயர் அருட்பொழிவு வழங்க திருத்தந்தையீல் கூட
அனுமதிக்க முடியாது. பன்னிரெண்டு இல்லை, பன்னிரெண்டு லட்சம்
பாதிரியார்கள் இருந்தாலும், ஒரு பிஷப்பை அரியணையில் அமர்த்த
முடியாது என்றும், ஒரு ஆயர் மட்டுமே மற்றொரு ஆயரை
அருட்பொழிவு செய்ய முடியும் என்றும் கிறிஸ்தவ திருச்சபை விதிகள் கூறுகின்றன. ஆயர்
அஹத்தள்ளா இந்த நிலைமைக்கு அப்படி ஒரு அனுமதி கொடுக்கமாட்டார், அப்படி அனுமதி வழங்கினாலும், அதை
நடைமுறைப்படுத்துவது சரியல்ல என்று நினைக்கும் பொறுமை கூட இல்லாமல், பன்னிரண்டு பாதிரியார்களும், ஒரு ஆயரை அருட்பொழிவு
செய்ததை எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியாது.
3. யாக்கோபாயர்களின் வருகை
முந்நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அதன் பேரழிவு விளைவுகளை சரிசெய்ய முடியாமல் சுறியானிக்காரர்களுள் சிலர்
மற்றுமொரு ஆபத்தில் குதித்தனர், அந்தியோக்கியாவிலிருந்து
இங்கு வந்த யாக்கோபாயா திருச்சபையை ஏற்கத் தயாரானதும் யாக்கோபாயா மறைமுதுவர்
கிரிகோரியோஸின் ஆட்சிக்கு தங்களைச் சமர்ப்பித்ததுதான் இந்தத் தவறு.
அவர்கள் "எலியை தோற்கடிக்க இல்லத்தைத்
கொளுத்த" தயாராக இருந்தனர், பதினாறு நூற்றாண்டுகளாக
உரோமையின் திருத்தந்தையின் ஆட்சியின் கீழ் கத்தோலிக்கர்களாக இருந்த கேரள
சுறியானிக்காரர்கள், யாக்கோபாயா பிரிவினில் விழுந்து,
அந்தியோக்கிய யாக்கோபாயா மறைமுதுவரின் ஆட்சிக்கு அடிமையானார்கள்.
குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் தங்கள்
திடீர் உணர்ச்சிகளால் பல தவறுகளை செய்யலாம். ஆனால், தவறு
செய்வதை விட, தவறு என்று உணர்ந்தாலும் அதில் உறுதியாக இருக்க
முயல்வதுதான் மிகக் கடுமையான குற்றம் என்பது சட்ட நிபுணர்களின் கருத்து. குடும்பத்
தகராறில் கிணற்றில் குதித்தவனை விட, ஆபத்திலிருந்து
வெளியேறும் வசதியாக கிணற்றில் இருந்து
தப்புவதற்கு முயற்சிக்காமல் தற்கொலை செய்து கொள்வதுதான் தண்டனைக்குரியதாகக்
கருதப்படுகிறது.
ஏறக்குறைய இதைப் போலவே, இலத்தீன் திருவழிபாட்டையும் அவர்களது
ஆட்சிக்கு உட்டுவதை எதிர்த்து வளைந்த சிலுவை சபதம் நிறைவேற்றியதையும் பன்னிரண்டு பாதிரியார்கள் ஒரு ஆயரை அருட்பொழிவு
செய்த்தையும்,
யாக்கோயா மறைமுதுவரின் ஆட்சியின் கீழ் சென்றதையும் அறியாமையால் நிகந்தது என
எண்ணலாம். யாக்கோபாயா திருச்சபை தப்பறைகளின் திருச்சபை என்பதையும், அந்தியோக்கிய யாக்கோபாயா மறைமுதுவர் உண்மையான கிறிஸ்தவத் திருச்சபைத்
தலைவர் அல்ல என்பதையும் உணர்ந்த பிறகும், மீண்டும்
கத்தோலிக்கத் திருச்சபையோடு ஒன்றிணையாது உறுதியாக இருக்க முயற்சிப்பது பயங்கரமான
குற்றம் என்பதில் சந்தேகமில்லை. இவ்வுண்மையை புரிந்து கொண்டதன் விளைவாக, வளைந்த சிலுவை சபதம் செய்தவர்களும், சட்ட விரோதமாக
ஆயர் பதவிக்கு ஒத்துழைத்தவர்களும், யாக்கோபாயா மறைமுதுவரின்
ஆட்சிக்கு அடிபணிந்தவர்களும் பல முறையாக மீண்டும் கத்தோலிக்க திருச்சபையோடு
ஒன்றிணைந்தனர்.
புதிய பழக்கவழக்கங்கள், புதிய நிர்வாகம், புதிய தேவாலயம் ஆகியவற்றை
ஏற்றுக்கொண்டவர்கள் "புதிய கூற்றினர்" என்றும், பழைய
ஆட்சியில் இருந்தவர்கள் "பழைய கூற்றினர்" என்றும் அழைக்கப்பட்டனர்
என்பது வரலாற்று உண்மை. திருத்தந்தையின் உயர் அதிகாரத்தின் கீழ் கத்தோலிக்க
திருச்சபையில் உறுதியாக நின்றவர்கள் "பழைய கூற்றினர்" என்ற பெயர்
பெற்றதிலிருந்து கேரளாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபை பழமையானது என்று புரிந்து
கொள்ளலாம். ஆனால் இந்த வரலாற்று உண்மையை மறைக்கவும், மறுக்கவும்,
சில வரலாற்றாசிரியர்கள் இந்த சொற்றொடரை மாற்று முறையில் விளக்க
முயற்சிக்கின்றனர். ஆனால், வரலாற்றுச் சான்றுகளின்
முன்னிலையில் அவர்களது கோட்பாடுகள்
முன்னிலை பெறவில்லை.
அதிகாரம் 16
புதிய கூற்றினரும் ஒன்றிப்பு முயற்சிகளும்
ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறிய
உவமைகளில் மிகவும் முக்கியமான உவமை காணாமல் போன மகன் திரும்பி வரும் ஊதாரி மகனின்
உவமை ஆகும். சீக்கிரமாக தனது மனதில் உருவான எண்ணங்களால் இளைய மகன் தனது சொந்த
வீட்டையும் உறவினர்களையும் விட்டுவிட்டு தொலைதூரத்திற்கு பயணம் புறப்பட்டான். தனது
கையில் இருந்த தொகை அனைத்தும் முடிந்த பின்னர் உணவு உண்ண வழி இன்றி அவன்
அலைகின்றான். அவனுக்கு அப்போது தான் அறிவு உருவாகின்றது. தனது சொந்த தந்தையின்
வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற முடிவு. இக்காலம் அனைத்தும் தனது
மகனின் திரும்ப வருதலுக்காக வருத்தத்தோடு ஜெபிக்கவும் நம்பிக்கையோடு
காத்திருக்கவும் செய்த அந்த தந்தை மகனின் வருகையைக் கண்டவுடன் மகிழ்ந்தார்.
அவ்வாறு அந்த குடும்பம் முழு அமைதியும் ஆனந்தமும் பெற்றுக்கொள்கின்றது.
கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஒவ்வொரு
காலத்திலும் ஒவ்வொரு காரணங்களால் பிரிந்து போன ஒவ்வொருவரையும் திரும்பி வருமாறு
அல்லது மறுஒன்றிப்புக்காக ஊதாரி மைந்தனைப் போன்று கத்தோலிக்க திருச்சபை
என்றென்றும் காத்திருக்கிறது. அதற்காக திருச்சபையின் நிறுவனராகிய ஆண்டவர்
ஜெபிக்கவும் எல்லா விதமான முயற்சிகளை நடத்தவும் நம்மை ஊக்குவிக்கவும் செய்து கொண்டிருக்கிறார். அதன் பலனாக தனது
சொந்த தாய் திருச்சபையில் தனி நபராகவும் கூட்டமாகவும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து
இணைந்தனர். இப்போதும் ஒவ்வொரு நாளும் பல நபர்கள் கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து
கொண்டிருக்கின்றார்கள்.
ஊதாரி மைந்தனைப் போல தந்தையின் இல்லத்தில்
இருந்து பிரிந்து சென்றவர்களாக புதிய திருச்சபைகளை உருவாக்கியவர்களின் தோல்வியும்
இழப்பும் நரகத்தின் வாயில்களை வலுவிழக்கச் செய்யாததும் பாறை மேல் அடித்தளம்
அமையப்பெற்றதுமான சொந்த திருச்சபைக்கு திரும்பிச் செல்லவும் அவர்களுக்கு
ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஊட்டியது.
போர்த்துக்கீசிய மறைப்பணியாளர்களின் தவறான
செயல்களால் வளைந்த சிலுவை சபதம் நடத்தப்படவும் அவ்வாறு பிரிவுற்ற யாக்கோபாய
திருச்சபையின் புதிய கூற்றினராகிய ஆயர்கள் கத்தோலிக்கத் திருச்சபையோடு
ஒன்றிப்படைவதற்கு முயற்சிகள் பல மேற்கொண்டதாக வரலாறு தெளிவாக்குகின்றது. வளைந்த
சிலுவை சபதம் செய்து கொண்ட 114 பேர்களில் 84 நபர்களும் சில வருடங்களுக்குள் கத்தோலிக்க திருச்சபையோடு
ஒன்றிப்படைந்தனர். நான்கு காரணங்களை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1.
உலகில் கிறிஸ்து நிறுவிய உண்மை
திருச்சபை கத்தோலிக்க திருச்சபையே ஆகும். திருச்சபையின் உறுப்பினர்களாக வாழ
வேண்டியது ஆன்ம மீட்புக்கு அத்தியாவசியமானதாகும்.
2.
புனித பேதுருவின் உண்மையான
வழிமரபினர்கள் உரோமையின் திருத்தந்தையர்கள் ஆவர். கிறிஸ்துவை பின்பற்ற
விரும்புவர்கள் அவரது பிரதிநிதியாகிய உரோமை திருத்தந்தையின் திருஆட்சியின் கீழ்
வந்தாக வேண்டும்.
3.
எந்த ஒரு திருவழிபாட்டை
கடைபிடிக்கும் ஆயராக இருந்தாலும் அவர் திருத்தந்தையின் நேரடியான ஆணையின்படி அல்லது
திருத்தந்தையின் ஒன்றிப்பில் உள்ள மறைமுதுவரின் ஆணைப்படியே திருச்சபையை நிர்வாகம்
செய்ய வேண்டும். அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பது மிக மிக தேவையானதாகும்.
4.
வளைந்த சிலுவை சபதம் நடத்தியதன்
மிக முக்கியமான காரணம் போர்த்துக்கீசு மறைப்பணியாளர்களோடு உள்ள வெறுப்பாக
இருந்தாலும், அதனால் கத்தோலிக்க திருச்சபையை கைவிட்டதும்
திருதூதுவ அருள்பொ ழிவு இல்லாத ஆயரை ஏற்றுக் கொண்டதும் இறுதியில் பிரிவினை
திருச்சபையோடு சேர்ந்ததும் மிகப்பெரிய பாவமாகும்.
இந்த கருத்துக்கள் தான் அனைவரையும்
கத்தோலிக்க திருச்சபை அன்னையின் அருகில் செல்ல வழிநடத்தியது. எனினும் ஒரு
குழுவினர் கட்டாய மனத்தோடு தாங்கள் வாழும் நிலையே நன்று எனக் கூறி அதை
தெளிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டு கொண்டே இருந்தனர்.
கேரளாவின் கிறிஸ்தவ திருச்சபையில் உருவான
இந்த பிரிவினை பற்றிய சூழலை அறிந்த உடன் உரோமையின் திருத்தந்தை கர்மலித்தா அருள்
தந்தை ஜோசப் செபஸ்டியானி என்பவரை கேரளாவுக்கு அனுப்பினார். இயேசு சபை குருக்களால்
தான் பிரிவினை உருவானது என எண்ணியவாறு மற்றொரு துறவு சபையில் உள்ள நிர்வாகிகளை
அனுப்புவதற்காகவே கர்மலித்தா அருள் தந்தையை அனுப்பி அதன் அறிக்கையை
சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார். அருட்தந்தை ஜோசப் செபஸ்தியானி அவர்களுடைய
தீவிர முயற்சியால் தோமா தலைமை திருத்தொண்டர் அருள்பொழிவு பெறாத ஆயர் எனவும் அவர்
திருத்தந்தையின் அதிகாரத்திற்கு உள்பட்டவர் அல்ல எனவும் அறிந்து கொண்ட 84 ஆலய இறைமக்கள் பேராயர் கார்சியா முன்னிலையில் கத்தோலிக்க திருச்சபையோடு
ஒன்றிணைந்தனர். ஏறக்குறைய 30 ஆலயங்கள் மட்டுமே தோமா தலைமை
திருத்தொண்டரின் அதிகாரத்தின் கீழ் நிலை நின்றது.
1658 ஆம் ஆண்டு நடைபெற்ற வளைந்த சிலுவை
சபதத்திற்கு பின்னர் புதிய கூற்றினர் குழுவிலிருந்து ஒரு பகுதியினர் யாக்கோபாயா
திருச்சபையாக இருந்த 12 வருடங்களில் ஒன்றுக்கொன்று பல
நிகழ்வுகள் நடந்தன. அவை: ஆலங்காட்டு என்னும் ஆலயத்தில் வைத்து மிகப் பெரிய கூட்டம்
நடைபெற்றது, 12 குருக்கள் இணைந்து ஒரு
ஆயரை அருள்பொழிவு செய்தனர், இத்தாலியிலிருந்து வந்த
அருள்தந்தை ஜோசப் செபஸ்தியானி அவர்களுடைய வருகை, தோமா தலைமை
திருத்தொண்டர் குழுவினரின் தோல்வி, கடவில் சாண்டிக் கத்தனார்
என்பவரை ஆயராக அருள்பொழிவு போன்ற நிகழ்வுகள்.
இவ்வாறு 114
ஆலயங்களுள் 84 ஆலயத்தை சார்ந்தவர்கள் உண்மை திருச்சபையை
அறிந்து கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைந்தனர். இவர்கள் மறுஒன்றிப்படைய
காரணமான ஐந்து கருத்துக்கள் தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றன.
1.
ஆயர் அருள்பொழிவு போலியானது
வளைந்த சிலுவை சபதம் செய்தவர்களும்
ஆலங்காட்டு பெருங்கூட்டத்தில் வைத்து நடந்த ஆயர் அருள்பொழிவிலும் கலந்து கொண்ட
பலர் தோமா தலைமைத் திருத்தொண்டரின் அருள்பொழிவு நிலை பற்றி ஐயம் கொண்டனர். 12 குருக்கள் இணைந்து அவரது தலையில் கை வைத்தலின் மூலம் பெற்றுக்கொண்ட ஆயர்
அருள்பொழிவு உண்மைக்கு புறம்பானது எனவும், தோமா தலைமைத்
திருத்தொண்டர் “சிவப்பு நிற வேடம் அணிந்தவர்” மட்டுமே என்ற உண்மையை கடவில்
சாண்டிக்கத்தனார் மற்றும் பள்ளிவீட்டில் சாண்டி கத்தனார் ஆகியோர் உணர்ந்து
கொண்டனர். இவ்வாறு அகத்தள்ளா என்பவருடைய கடதமாக இட்டித்தொம்மன் கத்தனார்
உருவாக்கிய கடிதம் தவறானதும் போலியானதும் என அவர்கள் விளம்பரப்படுத்தினர். அவ்வாறு
வளைந்த சிலுவை சபதத்திற்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குள் 25 ஆலயத்தைச் சார்ந்தவர்கள் தோமா தலைமை திருத்தொண்டரின்
கட்டுப்பாட்டிலிருந்து விலகி கார்சியா பேராயரின் தலைமையின் கீழ் வந்து இணைந்து
கொண்டனர்.
2.
ஜோசப் செபஸ்டியானி அவர்களுடைய செயல்கள்
மலங்கரையில் நடந்த கேவலமான நிகழ்வுகளை
உரோமையில் அறிவித்த போது கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர்
தனது பிரதிநிதியாக ஜோசப் செபஸ்டியானி என்ற இத்தாலியன் கர்மலீத்தா துறவு சபையைச்
சார்ந்த அருள்தந்தையை மலங்கரைக்கு அனுப்பினார். அவர் பக்தி மிகுந்வரும் அறிவும்
நிர்வாகத் திறமை கொண்டவராக இருந்ததாலும் திருத்தந்தையின் கையிலிருந்து
கடிதங்களையும் அதிகார ஆவணங்களையும் அவர் தன்னுடன் கொண்டு வந்ததனால் அவரோடு இணைந்து
செயல்படுவதற்கு கேரளாவை சார்ந்த பல குருக்கள் இருந்ததனால் உண்மை நிலையை அறிந்து
தலைமைத் திருத்தொண்டரின் குழுவைச் சார்ந்த பல ஆலயங்கள் அவருடைய
கட்டுப்பாட்டிலிருந்து விலகினர். ஜோசப் செபஸ்டியானி அவர்களால் பல இடங்களில் பெரும்
கூட்டங்கள் நடத்தி உண்மை நிலையை மக்களிடம் பறைசாற்றிட முடிந்தது. இவற்றின் பலனாக
பலர் பிரிவினையிலிருந்து விலகி கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்தனர்.
3.
சில விபத்துக்கள்
தலைமைத் திருத்தொண்டரின் குழுவைச் சார்ந்த
சில முக்கியமானவர்கள் ஒரு சில விபத்துகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆலங்காட்டு ஊரைச் சார்ந்த தலைமைத் திருத்தொண்டரின் குழுவின் தலைவரான ஒருவர்
தரையில் விழவும் மரணம் அடையவும் செய்தார். வராப்புழை ஊரைச் சார்ந்த முக்கியமான ஒரு
நபரின் வீடு தீக்கிரையானது. தலைமைத் திருத்தொண்டரின் குழுவில் வலுவோடு
செயல்பட்டுக் கொண்டிருந்த இரண்டு ஆலயங்கள் சாலக்குடி மற்றும் குறுப்பம்படி போன்றவை
தரைமட்டமாயின. பரவூர் என்னும் இடத்தில் தலைமைத் திருத்தொண்டரின் குழுவைச்
சார்ந்தவரின் கடைகளும் வீடுகளும் தீயால் அழிந்தன. தலைமைத் திருத்தொண்டருக்கு
வலுவோடு உடன் இருந்த கண்ட நாடு பங்கின் கிறிஸ்தவர்களும் நாயன்மார்களும் இடையே
உருவான உள்நாட்டு பிரச்சனைகள் வழியாக கிறிஸ்தவர்கள் பல இழப்புகளை சந்தித்தனர்.
உண்மையான அதிகாரிகளை வெறுத்து ஒதுக்கவும்
ஆயர் வேடம் அணிந்தவரை ஏற்றுக் கொள்ளவும் செய்ததனால் இறைவன் அவர்களுக்கு தண்டனையாக
இந்நிலையை வழங்கினார் என பலர் ஐயம் கொண்டு தலைமைத் திருத்தொண்டரின் குழுவிலிருந்து
விலகினர். தலைமை திருத்தொண்டரின் வலங்கையாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு நஸ்ராணி
பிரபு தனது மரண நேரத்தில் தனது பாவங்களை அறிக்கையிட்டு கார்சியா பேராயரின் கீழ்
வந்து இணைந்து அருட்தந்தையிடமிருந்து நோயில் பூசுதலை பெற்றுக் கொள்ளவும் அனைவரும்
பேராயர் கார்சியா அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறி மரணமடைந்தார். இந்த
நிகழ்வும் புதிய குழுவினரை வலுவிழக்கச் செய்ய
காரணமாக அமைந்தது.
4.
அரசின் செல்வாக்கு
போர்த்துக்கீஸ் ஆளுநர் இந்த பிரிவினையை
முடிவுக்குக் கொண்டுவர தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கொச்சி அரசரோடு கேட்டுக்
கொண்டார். அதன்படி தனக்கு கீழே பணிபுரியும் அதிகாரிகள் தலைமைத் திருத்தொண்டரின்
குழுவினரை கட்டுப்படுத்த முடிந்த அளவுக்கு முயற்சிகள் மேற்கொண்டனர். தலைமைத்
திருத்தொண்டரும் இட்டுத்தொம்மன் கொத்தனாரும் கைது செய்யப்படவும், தலைமைத் திருத்தொண்டரின் குருத்துவ அடையாளங்களும், நூல்களும்,
கடிதங்களும் கைப்பற்றவும் அவரது கீழே உள்ள சில ஆலயங்களின்
சொத்துக்களை கைப்பற்றி அரசு அதிகாரிகள் ஆளும் கட்சியினரை வலுவிழக்கச் செய்தனர்.
மேலும் கத்தோலிக்கர்களுக்கு பலவித உதவிகளை வழங்கவும் செய்தனர். தலைமைத்
திருத்தொண்டரின் குழுவைச் சார்ந்தவர்கள் கத்தோலிக்க திருச்சபையோடு
ஒன்றிப்படைவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
5.
சாண்டி ஆயரின் முயற்சிகள்
திருத்தந்தையின் ஆணைப்படி குறவிலங்காடு
பள்ளி வீட்டில் சண்டிக்கத்தனார் என்பவரை அலெக்சாண்டர் என்ற பெயரால் ஜோசப்
செபஸ்டியானி ஆயராக அருள்பொழிவு செய்தார். சொந்த இடத்தைச் சார்ந்தவரும்
சுறியானிக்காரருமாகிய இந்த ஆயர் பிரிந்து நின்ற தனது சொந்த இனத்தவரான தலைமைத் திருத்தொண்டர்
குழுவினரை கத்தோலிக்க திருச்சபைக்கு திருப்பி அழைத்து வர மீண்டும் மீண்டும்
முயன்றார். அவ்வாறு மிகவும் சுருங்கிய காலத்தில் 29 ஆலயத்தினர்
அவரது அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்து கொண்டனர்.
யாக்கோபாயா ஆயரான மார் கிரிகோரியோஸ்
மலங்கரைக்கு வந்து தலைமைத் திருத்தொண்டர் குழுவினரை யாக்கோபாயா திருச்சபையோடு
இணைத்தது வரையுள்ள 12 ஆண்டுகளில் (1655
முதல் 1667 வரை) வளைந்த சிலுவை சபதம் வழியாக பிரிந்திருந்த 114 ஆலயங்களுள் 84 ஆலயங்களும் கத்தோலிக்க திருச்சபையோடு
மறுஒன்றிப்படைந்தது. மீதமிருந்த 30 ஆலயங்கள் மட்டுமே
யாக்கோபாயா திருச்சபையோடு உறவு கொண்டது.
முதலாம் மார் தோமா
கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளுக்கு
கீழ்ப்படியாமல் வாழ்வது பெரும் பேற்றுக்கு எதிரானதும் தடையானதும் என்ற எண்ணம்
முதலாம் மார் தோமா முதல் அவருடைய உடன் பயணித்தவர்களும் கொண்டு கத்தோலிக்க
திருச்சபையோடு ஒன்றிணைவதற்கான முயற்சிகளை நடத்திக் கொண்டிருந்தனர். இடப்பள்ளி
என்னுமிடத்தில் வைத்து நடைபெற்ற புதிய கூற்றினரின் பொதுக்கூட்டத்தில்
தீர்மானித்ததன் படி கத்தோலிக்க மறுஒன்றிப்புக்கு தாங்கள் விரும்புவதாகவு
அறிவித்தனர். ஆனால் இரண்டு கோரிக்கைகளை செபஸ்டியானி ஆயரிடம் முன்வைத்தனர்.
முதலாவதாக தோமா தலைமைத் திருத்தொண்டரை ஆயராக அபிஷேகம் செய்ய வேண்டும். இரண்டாவதாக, அவருக்கு மொத்த திருஆட்சி அதிகாரத்தை வழங்கவும் செய்ய வேண்டும்.
செபஸ்டியானி ஆயர் அவர்களது இரண்டு
கோரிக்கைகளையும் மறுத்துவிட்டார். தலைமைத் திருத்தொண்டர் தானாகவே பெற்றுக் கொண்ட
ஆயர் அருள் பொழிவை அவர் வெளிப்படையாகவே விட்டுவிடட்டும் என ஆயர் செபஸ்டியானி பதில்
வழங்கினார். இரண்டாவது கோரிக்கைக்கு அவருடைய பதில் தலைமை திருத்தொண்டருக்கு ஆட்சி
அதிகாரம் வழங்குவது உரோமை திருத்தந்தையின் அனுமதியோடு மட்டுமே நடக்க முடியும்.
இவ்வாறு அவர் மனப்பூர்வமாக இந்த
பிரச்சனைக்கு முடிவு ஏற்படுத்தாமல் பின்வாங்கினார். அன்று இந்த கத்தோலிக்க
ஒன்றிப்பு நடந்திருந்தால் முதலாம் மார்த்தோமாமா மார் கிரிகோரியோஸ் யாகோபாயா ஆயரை
கேரளாவுக்கு வருகை தர அழைத்திருக்கமாட்டார்கள். கத்தோலிக்க திருச்சபையில் பிரிந்து
நின்ற கூட்டத்தினர் அனைவரும் இணைந்து ஒரு குழுவாகவே செயல்பட்டிருப்பர்.
நான்காம் மாத்தோமா
கத்தோலிக்க ஆயர்களிடமிருந்து கைவைப்பு
வழியாக அருள்பொழிவோ திருத்தந்தையிடமிருந்து ஆட்சி அதிகாரமோ கிடைப்பதில்லை என
உணர்ந்து கொண்ட இரண்டாம் மார் தோமாவும் மூன்றாம் மார் தோமா ஆயர்களும் கத்தோலிக்க
திருச்சபையோடு மறுஒன்றிப்படைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. ஆனால் 1688 முதல் 1728 வரை மலங்கரையில் திருஆட்சி
நடத்தியிருந்த நான்காம் மார் தோமா அதற்காக முடிந்த அளவுக்கு முயற்சிகள்
மேற்கொண்டதாக வரலாற்று தெரிவுகள் உள்ளன. தனது கட்டுப்பாட்டில் உள்ள 29 ஆலயங்களும் 12 குருக்களும் கையொப்பமிட்டு ஒரு
கோரிக்கையை 1704 டிசம்பர் நான்காம் தேதி திருத்தந்தைக்கு
அனுப்பினார். அஞ்சலூஸ் பிரான்சிஸ் ஆயர் மற்றும் கர்மலித்தா அருள்தந்தை அகஸ்டின்
மூலமாக இந்த கோரிக்கை உரோமையை சென்றடைந்தது. ஐந்து விடயங்கள் அதில் முக்கியமாக
குறிப்பிடப்பட்டிருந்தன.
1. புதிய கூற்றினர் கத்தோலிக்க திருச்சபையை விட்டு விடுவதற்கு உருவான காரணம்
என்னவென்றால் போர்த்துகீஸ்காரர்களான இயேசு சபையினர் காரணமாக உருவான
கட்டாயப்படுத்துதல்களே ஆகும்.
2. கர்மலித்தா குருக்களை கேரளாவுக்கு அனுப்பிய திருத்தந்தைக்கு நன்றி
அறிவிக்கப்பட்டது.
3. சுறியானி திருவழிபாட்டு முறையில் மலங்கரை முழுவதும் வழிபடுவதற்கும்
கடைபிடிப்பதற்கும் திருத்தந்தை அனுமதி நல்க வேண்டும்.
4. வராப்புழை ஆயரான ஆஞ்சலூஸ் பிரான்சிஸ் அவர்களோடு இணைந்து மலங்கரையின்
கத்தோலிக்கர்களை திருஆட்சி புரிவதற்கான அதிகார பத்திரத்தை அனுப்பித் தர வேண்டும்.
5. திருப்பலியில் புளிப்பான அப்பவும் புளிப்பற்ற அப்பவும் பயன்படுத்துவதற்கான
அனுமதி நல்க வேண்டும்.
(Paulinus “India Orientalis”
Page: 107)
இத்தகைய கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்குகின்ற
போது மலங்கரையின் பிரிவினை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக எழுதப்பட்டது.
நான்காம் மார் தோமா அனுப்பிய இந்த கோரிக்கைகளுக்கு எதிராகவோ சார்பாகவோ எந்த ஒரு
பதில் மொழியும் உரோமையிலிருந்து அனுப்பவில்லை. இதனால் கோபமுற்ற நான்காம் மார் தோமா
யாக்கோபாயா திருச்சபையோடுள்ள உறவில் நிலைப்பதற்கான கவனத்தை பதித்திருந்தார்.
ஐந்தாம் மார் தோமா
1728 முதல் 1765 வரை
கேரளாவின் யாக்கோபாய திருச்சபையை நிர்வகித்து வந்த ஐந்தாம் மார் தோமாவும்
கத்தோலிக்க மறுஒன்றிப்பிற்கு தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சிகள் மேற்கொண்டார்.
அவரையும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள குருக்களையும் இறைமக்களையும் கத்தோலிக்க
திருச்சபையோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை 1748ல்
திருத்தந்தை அவர்களுக்கு அனுப்பினர். அதன் இறுதி பகுதி இவ்வாறாக அமைந்திருந்தது.
“திருப்பலி முறையில் விவரிக்கப்படும்
திருத்தூதர்களின் தலைவரான பேதுருவின் பெயரால் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
அது என்னவென்றால் கிரேக்கர்களுக்கு அனுமதித்ததைப் போன்று புளிப்பான அப்பம்
பயன்படுத்துவதற்கான சுதந்திரம் எங்களுக்குத் தர வேண்டும். எங்கள் கோரிக்கையை
நீங்கள் ஏற்றுக்கொள்கின்ற போது உடனடியாக உங்கள் திருஆட்சிக்குக் கீழ்ப்படிதல்
உள்ளவராக மாறுவோம். கர்மலித்தா துறவு சபையினர் எங்களுக்கு உதவவும் போர்த்துக்கீசிய
ஆயரை பணியிட மாற்றம் செய்யவும் அருள் கூர வேண்டும். எங்களுக்காக இதனை நிவர்த்தி
செய்ய வேண்டுகிறேன்.
வாழும் இறைவனின் அருளும் துணையும் எங்களோடு
இருக்கட்டும். ஆமீன்.
1848 ஆம் ஆண்டு
புனித மரியா ஆலயத்திலிருந்து
இந்தியாவின் தலைவன் ஐந்தாம் மார் தோமா
ஐந்தாம் மார் தோமாவின் கோரிக்கை மனு
வராப்புழை விகாரி அப்போஸ்தலிக்காவின் பரிந்துரைப்படி கர்மலித்தா அருள்தந்தை
போனிஃபாஸ் அவர்கள் வழியாக உரோமுக்கு கொடுத்தனுப்பப்பட்டது. புரபகந்தா
திருச்சங்கத்தின் செயலர் இந்த கோரிக்கைக்கு பதில் வராப்புழை விகாரி அப்போஸ்தலிக்காவுக்கு
அனுப்பினார். 1757 செப்டம்பர் மூன்றாம் தேதி உரோமாவில்
உருவாக்கப்பட்ட தீர்மானம் இக்கடிதத்தில் தெளிவாக விளக்கப்பட்டது. ஐந்தாம் மார்
தோமாவின் குறிக்கோளைப் பற்றிய சந்தேகமே இந்த தீர்மானத்தில் அதிகமாக காணப்படுகிறது.
“சரியான கைவைப்பு பெறாமல் ஐந்தாம் மார் தோமா
திருப்பலி ஒப்புக் கொடுக்கவும் குருத்துவ அருள்பொழிவுகள் நடத்தவும் செய்துள்ளார்.
உரோமாபுரி நம்பவில்லை என அவர் கூறுகின்ற கருத்துக்கள் பொய்யானது. அவரும் அவரது
துணையாளர்களும் மறுஒன்றிப்படைவர் என்ற நம்பிக்கை இல்லை. அவரது கோரிக்கைகள்
நடிப்புகள் மட்டுமே. எனவே இதனைப்பற்றி ஆலோசிக்க வேண்டியதில்லை.” இவை போன்ற
தீர்மானங்கள் தான் ப்ரொபோகாந்தா திருச் சங்கத்தின் தீர்மானமாக அமைந்திருந்தது.
இத்தகைய கருத்து வேறுபாடுகளும் தப்பெண்ணங்களும் உரோமையின் அதிகாரிகளுக்கு உருவாகக்
காரணம் என்னவென்றால் அன்று கேரளாவில் திருச்சபையை நிர்வகித்து வந்த இலத்தீன்
ஆயர்கள் அனுப்பிய கடிதங்களே ஆகும் எனக் கருதப்படுகிறது.
ஐந்தாம் மார்த்தோமாவின் கோரிக்கையில்
கத்தோலிக்க திருச்சபையிலிருந்து அவர் விலகிச் சென்றதனாலோ திருச்சபை சட்டங்களுக்கு
எதிரான ஆயர் அருள் பொழிவு பெற்றதைக் குறித்தோ எந்தவிதமான மனஸ்தாபம் கொள்ளாமலும்
போர்த்துகீசுகாரர்களை நாட்டில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும்
உரோமாவின் அதிகாரிகள் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கு துணை நிற்கவில்லை.
அதுமட்டுமல்ல உதயம் பேரூர் மாமன்றத்தில்
வைத்து திருப்பலியில் புளிப்பற்ற அப்பம் நாங்கள் பயன்படுத்தலாம் என கேரளாவின்
அனைத்து கிறிஸ்தவர்களும் ஒப்பந்தம் செய்துள்ளதாக உரோமை புரிந்து கொண்டுள்ளது. எனவே வராப்புழை ஆயர் ஐந்தாம் மார் தோமாவின்
மனமாற்றத்தை குறிக்கோளாகக் கொண்டு கிறிஸ்தவ அன்போடு செயல்படுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு
ஏதேனும் அதிகாரம் வழங்குவதாகவோ, அவரை அருள்பொழிவு
செய்வதாகவோ, அவர் அருள்பொழிவு செய்தவரை மீண்டும் அருள்பொழிவு
செய்வதாகவோ நம்பிக்கையூட்டும் உறுதுமொழிகள் வழங்கவோ வேண்டாம் எனவும் வராப்புழை
ஆயருக்கு பதில் அனுப்பப்பட்டது. (Annaleeta OCD 1938 P 32,33)
உரோமாவின் தீர்மானத்தை நம்பி
எதிர்பார்த்திருந்த ஐந்தாம் மார் தோமா மேற்குறிப்பிட்ட தீர்மானங்கள் அடங்கிய
கடிதத்தால் அனைத்து முயற்சிகளிலிருந்தும் திரும்பிச் செல்வதற்கு வழிவகுத்தது.
அவ்வாறு அவரது மறுஒன்றிப்பு முயற்சியும் தோல்வி
அடைந்தது.
அதிகாரம் 17
ஆறாம் மார்த்தோமாவின் ஐந்து மறுஒன்றிப்பு
முயற்சிகள்
கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய
கேரளாவில் யாக்கோபாய ஆயர்கள் நடத்திய
முயற்சிகளில் மிகவும் முக்கியமானவர் ஆறாம் மார் தோமா ஆவார். ஐந்தாம் மார் தோமா
தனது மரண நேரத்தில் தனது உறவினரான ஆறாம் மார்தோமாவுக்கு கைவைப்பு வழியாக ஆயராக
அருள்பொழிவு செய்தார். இவர் 1865 முதல் 188 வரை 43 ஆண்டுகள் முதலாம் மார்
திவன்னாசியோஸ் என பெயர் மாற்றம் செய்து யாக்கோபாய திருச்சபையை திருஆட்சி செய்து
வந்தார். வெளிநாட்டு ஆயர்களான மார் கிரிகோரியோஸ் மற்றும் மார் இவானியோஸ்
என்பவர்களிடமிருந்து 1872ல் நிரணம் ஆலயத்தில் வைத்து உண்மையான ஆயர் அருள்பொழிவு
பெற்றது வரை ஏழு ஆண்டுகள் சரியான அருள்பொழிவு பெறாத ஆயராக அவர் திருஆட்சி நடத்திக்
கொண்டிருந்தார்.
கண்ட நாடு ஆலயத்தில் வைத்து இவரை சந்தித்த
ஆங்கில நற்செய்தி பணியாளர் முனைவர் புக்கனான் இவ்வாறு அவரைப் பற்றி
குறிப்பிட்டுள்ளார். “அவர் நான்முக ஆளுமைகளை கொண்டவரும் மதிப்புக்குரியவரும் இறை
பக்தனும் திருச்சடங்குகளில் அதிக விருப்பமுடையவரும் ஆவார். நான் இதுவரைக் கண்ட
அவரது அருள்பணியாளர்கள் அனைவரையும் ஒரு போல வழிநடத்தும் அறிவு அவர்
பெற்றிருந்தார்.” (Christian researchers in Asia, page
127 )
கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்பு வழியாக
தனது ஆளுகைக்கு உட்பட்ட இறை மக்களையும் ஐந்து முறை தொடர்ந்து மறுஒன்றிப்பு
முயற்சிகளை செயல்படுத்த முயன்றார். பழைய கூற்றினரை ஆண்டு வந்த வெளிநாட்டு இலத்தீன்
ஆயர்களின் வெறுப்புச் செயல்கள் வழியாக உரோமையிலிருந்து சரியான ஒத்துழைப்பும்
அனுமதியும் கிடைக்காத போது தோல்வியால் மீண்டும் ஒதுங்கி விடாமல் மறுஒன்றிப்புக்கான
முயற்சிகளை அவர் துவங்கினார்.
1.
ஆயர் அருள்பொழிவுக்கு முன்னரே
உரோமாவுக்கு அனுப்பிய கோரிக்கை
1772ல் நிரணம் என்னும் இடத்தில் வைத்து
ஆயராக அருள்பொழிவு செய்யப்படுவதற்கு முன்னரே ஆறாம் மார் தோமா கத்தோலிக்கத்
திருச்சபையோடு மறுஒன்றிப்படைய விரும்புவதாகவும் அவரை கத்தோலிக்க திருச்சபையில்
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வராப்புழை ஆயர் வழியாக உரோமாவுக்கு
அனுப்பினார். இதனைப் பற்றி உரோமாவில் கர்தினால் திருச்சங்கம் ஆலோசனை நடத்தி
வராப்புழை ஆயருக்கு 1771 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி அறிவுரை போல ஒரு பதில்
கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில் மார் தோமாவுக்கு “ப்ரோட்டோ நோட்டரி”
என்ற பதவியும் அவர் சார்ந்து இருந்த மக்கள் மேல் ஆன்மீக அதிகாரம் தவிர்த்து சொத்து
அதிகாரங்களை மட்டும் கொடுத்து ஆறுதல் படுத்த நிச்சயித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
(The Travancore state manual volume 2 page 209)
ஆறாம் மார் தோமாவுக்கு உண்மையான அருள்
பொழிவு இல்லை என அவர் அறிந்திருந்ததனால் மேற்குறிப்பிட்ட பதவி வழங்குவதாக
அறிவிக்கப்பட்டது. வெளிப்படையாக மக்கள் மத்தியில் உண்மையான அருள் பொழிவு பெறாத
ஆயராக இருப்பது நல்லதன்று என அறிந்து “ப்ரோட்டோ நோட்டரி“என்ற பதவியை ஏற்றுக்கொள்ள
அவர் சம்மதிக்கவில்லை. அவ்வாறு ஆன்மீக அதிகாரம் இல்லாத சொத்து அதிகாரம் தோல்வியைத்
தழுவும் எனவும் அறிந்திருந்தார்.
இவ்வாறு அவர் செய்த முயற்சிகளில் பலவும்
இதயபூர்வமாக அவர் விரும்பி இருந்தார் என தொடர்ந்து அவர் அனுப்பிய கோரிக்கைகள்
தெளிவாகின்றன.
2. ஆயர் அருட்பொழிவுக்குப் பின்னர்
நடத்தப்பட்ட மறுஒன்றிப்பு முயற்சி
1772 ஆம் ஆண்டு மலங்கரைக்கு வந்த மார்
கிரிகோரியோஸ் மற்றும் மார் இவானியோஸ் ஆகிய இரண்டு யாக்கோபாய ஆயர்கள் நிரணம்
ஆலயத்தில் வைத்து அருள்பொழிவு வழங்கிய பின்னர் ஆறாம் மார்த்தோமா கத்தோலிக்க
திருச்சபையோடு ஒன்றிப்படைய உரோமாபுரிக்கு மீண்டும் கோரிக்கையை அனுப்பினார்.
உரோமாவிலிருந்து இவை பற்றி விசாரணை மேற்கொண்டு மார் தோமாவின் நம்பிக்கையை
சந்தேகப்படும் முறையில் பதில் கடிதம் அனுப்பினர். “மார் தோமா வாய் பிளர்ந்த
ஒட்டகத்திற்கு இணையானவரும் அவரது நோக்கத்தைப் பற்றி சந்தேகம் உள்ளது” என
கொடுங்கல்லூர் ஆயருக்கு அவர்கள் கடிதம் எழுதினர்.
உரோமாவிலிருந்து வழங்கப்பட்ட பதவியும்
சொத்து அதிகாரமும் வேண்டாம் என வைத்து ஆயர் அருள் பொழிவுக்காக யாக்கோபாய ஆயர்களின்
உதவியை நாடிய எண்ணத்தால் அவருடைய நோக்கத்தின் நம்பகத்தன்மையை ஐயம் கொண்டதில்
எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. ஆயருக்கு இணையான அதிகாரம் இல்லாமல் கத்தோலிக்க
திருச்சபையில் இணைவதை விட உண்மை அருள்பொழிவை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர்
எண்ணினார். ஆயர் அருள்பொழிவு பெற்றுக் கொண்ட பின்னர் கத்தோலிக்க
மறுஒன்றிப்புக்காக ரோமாபுரிக்கு மீண்டும்
கடிதம் அனுப்பினார். இதற்கு வராப்புழ விகாரி அப்போஸ்தலிக்காவுக்கு உரோமாவிலிருந்து
பதில் கிடைத்தது.
மார்த்தோமாவின் நிலையைப் பற்றி மீண்டும்
ஆலோசிக்கவும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள இறைமக்கள் மீது ஆன்மீக அதிகாரம் தவிர
சொத்து அதிகாரத்தை அவருக்கு வழங்கவும் அவரது வாழ்வாதாரத்திற்காக ஆண்டுதோறும் நூறு
ஸ்கூதி நாணயம் (Scudi) அவருக்கு பரிசாக வழங்குவதாகவும்
அதிகாரப்படுத்தியே இம்முறை பதில் அனுப்ப்பட்டது. மார் தோமாவைப் பற்றி
உரோமாபுரியில் உள்ள தப்பெண்ணங்கள் மாறவில்லை என்பதுதான் பதில் கடிதத்திலிருந்து
தெளிவாகின்றது. அன்று கேரள திருச்சபையை நிர்வகித்து வந்த வெளிநாட்டு மறைபணியாளர்களின்
கருத்துக்களோடும் விருப்பத்தோடும் இணைந்து உரோமை இத்தகைய ஆணைகளை வெளியிட்டதாகவும்
கருதப்படுகிறது. உரோமாவிலிருந்து அனுப்பப்பட்ட பதில்கள் மார் தோமாவை
திருப்திப்படுத்தவோ கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படையவோ தூண்டுதலாக
அமையவில்லை. வெளிநாட்டு மறைபணியாளர்கள் வழியாக முயற்சி செய்ததனால் தான் தோல்வியை தழுவியதாக
மார்தோமா புரிந்து கொண்டார். எனவே நமது நாட்டைச் சார்ந்த நபரோடு ரோமாபுரிக்கு
மறுஒன்றிப்பைப் பற்றி முயற்சி செய்திட கடிதப் போக்குவரத்து நடத்துவதாக
நிச்சயித்தார்.
2.
கரியாற்றில் மல்பான் மூலமாக
நடத்திய முயற்சி
ஆலக்காட்டு என்னும் ஊரைச் சார்ந்த உரோமாவின்
புறப்பகாந்தா கல்லூரியில் மேற்படிப்பு கற்றுக் கொண்ட கரியாற்றில் ஜோசப்
மல்பானுக்கு கத்தோலிக்க திருச்சபையோடு மறுவண்டிப்படைவதற்காக தான் விரும்புவதாகவும்
அதைப் பற்றிய ஆலோசனை நடத்துவதற்கு தாங்கள் வரவேண்டும் என ஒரு கடிதத்தை ஆறாம் மார்
தோமா அனுப்பினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கி கரியாற்றில் மல்பான் நிரணத்திற்கு
வரவும் அவரை மார்தோமாவும் வரவேற்கவும் செய்தார். இருவரும் இணைந்து தங்களுடைய
உரையாடல்களை நிகழ்த்தினர். கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைவதற்கான ஆர்வம்
பல மடங்கு வளர்ந்ததாகவும் அதற்கான அனுமதியை உரோமை திருஆட்சிப் பீடத்திலிருந்து
தான் நேரடியாக வாங்குவற்தாக ரோமாவுக்கு வருவதாகவும் எடுத்தியம்பினார். அதற்கேற்ப
கரியாற்றில் மல்பான் பாறேமாக்கல் தோமாக்கத்தனார் அவர்களோடு இணைந்து 1778ல் உரோமாவை
நோக்கி புறப்பட்டார். அவர் சென்றபோது அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்திய ஒரு
கோரிக்கையும் உரோமாவுக்கு சமர்ப்பிப்பதற்காக எடுத்துச் சென்றார். அதனுடைய
விபரங்கள் கீழே குறிப்பிடப்படுகின்றன.
“உலகில் உள்ள அனைத்து ஆலயங்களின் அன்னை
எனப்படும் புனிதமான உரோமை ஆலயத்தின் தலைவனாக மெசியாவின் பிரதிநிதியாய் அமைந்துள்ள
எங்களது மறைமுதுவரும் தந்தையுமான திருத்தந்தை ஆறாம் பயஸ் அவர்கள் அறிந்து கொள்ள
எழுதுவதாவது:
பேராயர் மார் திவன்னாசியஸ் ஆகிய நான்
முன்னர் கேரளாவின் மார் தோமா ஆயர் என்ற பெயரில் அறியப்பட்டிருந்தேன். புனிதமான
உரோமை ஆலய நம்பிக்கைக்கு வெளியே கிழக்கு கல்தாய சுறியானி திருச்சபை மற்றும்
யாக்கோபாயா திருச்சபையினரின் நம்பிக்கையில் நிலைத்திருந்தேன். முன்னர் நான்
கைக்கொண்டிருந்த சிறிய மற்றும் பெரிய குருத்துவப் பட்டங்களும் ஆயர் அருள்பொழிவும்
போலியானவை என அறிந்து கொண்ட நான் யாக்கோபாயா பேராயரின் அருளால் ஆயராக மீண்டும்
அருள்பொழிவு பெற்றுக் கொண்டேன்.
இறைவனின் அருளால் புனித உரோமை ஆலயத்தின்
ஒன்றிப்பில் வருவதற்காக விரும்பி கொடுங்கல்லூர் மற்றும் கொச்சி ஆயர்களின்
முன்னிலையில் எனது விருப்பத்தை நான் வெளிப்படுத்தினேன். என்னோடு எனது ஆளுகைக்கு
உட்பட்ட ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட இறைமக்களும் குருவானவர்களும் இணைந்து
ஒன்றிப்படைவர் எனக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அந்தக் கோரிக்கையானது
நிராகரிக்கப்பட்டு விட்டது. மட்டுமல்ல ஆயராக
அருள்பணி செய்து கொண்டிருக்கக் கூடிய நான் சாதாரணமான பொதுநிலையினராக
மாறிவிட வேண்டும் எனவும் அவர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். தூய திருச்சபையோடு ஒன்றிப்படைவதற்கு
திருஆட்சி பீடத்திலிருந்து புறப்பட்ட ஆயர்கள் இவ்வாறு கூறியதை எண்ணி நான்
துயருற்றேன். குறிப்பாக மேற்குறிப்பிட்ட ஆயர்கள் மற்றும் குருவானவர்களால்
கேரளாவின் இறை மக்களுக்கு மிகப்பெரிய தரக்குறைவு ஏற்படவும் செய்தது. ஏனென்றால் ஒரு
ஆயர் கட்டவும் மற்ற ஆயர் அவிழ்க்கவும் செய்கின்றார். ஒரு ஆயர் அழிப்பதனை மற்றொரு
ஆயர் கட்டுகின்றார். அவர்களது இத்தகைய நிலையை இறைவனே அறிந்துள்ளார்.
இத்தகைய நிலையை திருத்தந்தை அவர்களுக்கு
நேரடியாக அறிவிக்க குரியாற்றில் யவ்சேப் மல்பான் மற்றும் பாறேமாக்கல் தோமாக்
கத்தனார் ஆகியோரை உரோமைக்கு அனுப்புகிறோம். ஏழைகளான நாங்கள் யாசித்தும் பலரிடம்
நன்கொடைகள் கேட்டும் செலவுக்காக வசூல் செய்து இவர்களை அனுப்புகிறோம்.
இவ்வாறு மார் திவன்னாசியோஸ் பேராயராகிய நான்
உண்மையாகவே உங்களோடு வேண்டுவது என்னவென்றால் நாங்கள் அனுப்புகின்ற இந்த
அருள்பணியாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவும் எங்களது குறைகளை நீக்கி எனது
ஆட்சியின் கீழ் உள்ள மக்களை புனிதமான உரோமை திருச்சபையின் ஒன்றிப்பில் இணைக்கவும்
வேண்டுகிறேன். சுறியானி மொழி அறிந்த நான்கு ஆயர்களை இவர்களோடு அனுப்பவும்
வேண்டுகிறேன். இறை மக்களின் மீட்புக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் ஒரு தலைவரை
கட்டளையிட்டு அனுப்பவும் வேண்டுகிறேன். மேலும் நாங்கள் அனுபவித்த துயரம்
நிகழ்வுகளை நாங்கள் அனுப்புகின்ற குருக்கள் உங்களை தெரிவிப்பார்கள்.
இந்த அருள் பணியாளர்கள் சமர்ப்பிக்கும்
கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ஆயரில்லா ஆடுகளாக இருக்கும் எங்களை வலுப்படுத்த எங்கள்
கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மன்றாடுகிறேன். நன்மையை தேடி புறப்பட்ட எங்களுக்கு
இறையருள் கிடைப்பதற்கு எங்களுடைய வேண்டுகோளை சமர்ப்பிக்கின்றோம்.
(1778 மீனம் பத்தாம் தேதி எழுதப்பட்டது)
மி. மெக்கன்சியின் Christianity
in Travancore என்ற நூலிலும் மீ.தி.கே வேலுப்பிள்ளை தயாரித்த the
Travancore state manual என்ற நூலின் இரண்டாவது பதிப்பிலும் இந்த
கோரிக்கையின் முழு ஆங்கில மொழிபெயர்ப்பு எழுதப்பட்டுள்ளது.
பலவிதமான சவால்களை சந்தித்து
சென்னையிலிருந்து கப்பல் வழியாக ஆப்பிரிக்க கண்ட நாடுகள் அனைத்தையும் சுற்றி பத்து
மாதங்கள் பயணம் செய்து போர்த்துக்கல்லுக்கு அவர்கள் சென்றடைந்தனர். போர்த்துகல்
பேரரசியின் கையில் கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர். மேலும் 1780 ஜனவரி மூன்றாம்
தேதி அவர்கள் உரோமாபுரிக்கு சென்று ஆறாம் பயஸ் திருத்தந்தையை சந்தித்து தங்களுடைய
குறிக்கோளை அறிவிக்கவும் கோரிக்கையை சமர்ப்பிக்கவும் செய்தனர்.
இந்த காரியத்தை பற்றி விசாரணை நடத்தவும்
காலதாமதம் ஆகாமல் உடனடியாக தீர்மானத்தை அறிவித்துக் கொள்ளலாம் எனவும் திருத்தந்தை
அவர்கள் பதில் வழங்கவும் செய்தார். அதன்படியாக ரோமாவிலிருந்து விசாரணை
நடத்தப்பட்டது. மூன்று விடயங்களை பற்றி உரோமாவில் இருந்து விசாரணை நடத்தப்பட்டது.
1.
ஆறாம் மார் தோமாவுக்கு
உண்மையாகவே அருள்பொழிவு கிடைத்ததா? அவரை ஆயராக
அருள்பொழிவு செய்த மார் கிரிகோரியோஸ் உண்மையாகவே ஆயர் தானா?
2.
மார்த்தோமாவின் கோரிக்கை அவர் எழுதியது தானா?
3.
கோரிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ள காரியங்கள் ஒவ்வொன்றும் மனப்பூர்வமானதா? ஏதேனும் உள்நோக்க விருப்பம்
கொண்டதா?
இந்த மூன்று விடயங்களைப் பற்றி அறிக்கை
சமர்ப்பிக்குமாறு கோவா ஆயர் அவர்களுக்கு ரோமாவிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது.
கோவா ஆயர் 1782ல் கொச்சி ஆயரை ஒப்படைத்தார். அவர் வழங்கிய அறிக்கையை கோவா ஆயர்
போர்த்துக்கல்லுக்கு அனுப்பவும் செய்தார். மார்த்தோமாவுக்கு எதிரான பல
குற்றச்சாட்டுகள் அதில் உள்ளடங்கி உள்ளன என்றாலும், திருச்சபை
சட்ட அறிஞர்களின் பரிசோதனைகளுக்குப் பின்னர் மார்தோமாவை கத்தோலிக்க திருச்சபையில்
ஆயருக்கு இணையான அதிகாரத்தை வழங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும் என தீர்மானித்தனர்.
போர்த்துகீசிய அரசு மார் தோமாவுக்கு சார்பாக அறிக்கையை அனுப்பியதனால் கத்தோலிக்க
மறுஒன்றிப்புக்குத் தயாராக அனைத்து அதிகாரங்களையும் காரியாற்றில் ஆயர் அவர்களுக்கு
உரோமை திருஆட்சிப் பீடம் வழங்கவும் செய்தது. 1885ல் போர்த்துக்கல்லிலிருந்து அவர்
இந்தியாவுக்கு பயணமானார். 1786 மே ஒன்றாம் தேதி கோவாவை வந்தடைந்தார். ஆனால் அங்கு
தங்கியிருந்தபோது 1786 செப்டம்பர் 9ஆம் தேதி அவர் இறைவனடி சேர்ந்தார். எனவே
இம்முறையும் மறுஒன்றிப்பு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
4.
தச்சில் மாத்துத்தரகன் அவர்களது
தூண்டுதலால் நடத்தப்பட்ட முயற்சி
கரியாற்றில் ஆயர் கோவாவில் வைத்து
மரணமடையாமல் இருந்திருந்தால் அவர் மார் திவன்னாசியோஸ் அவர்களையும் இறைமக்ககளையும்
கத்தோலிக்க திருச்சபைக்கு ஏற்றுக்கொண்டு மறுவொன்றிப்படையச் செய்திருப்பார்.
எனினும் முயற்சியை கைவிடாது மீண்டும் மார் திவன்னாசியோஸ் அடுத்த முயற்சியை
மேற்கொண்டார். கத்தோலிக்க கேரளா கத்தோலிக்க திருச்சபையின் செல்வந்தரம் முக்கிய
தலைவருமான தச்சில் மாத்துத்தரகன் வழியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 1796
செப்டம்பர் 19ஆம் தேதி கொல்லத்தில் வைத்து கொச்சி மறைமாவட்ட ஆயர் தலைமையில் ஒரு
கூட்டம் கூட்டப்பட்டது ஆறாம் மார்தோமா பாறேமாக்கல் தோமாக்கத்தனார் ஆகியோர் அந்தக்
கூட்டத்தில் பங்கெடுக்கவும் மார்த்தோமாவின் மறுஒன்றிப்பைப் பற்றிய ஆலோசனைகள்
நடத்தவும் செய்தனர். 18 வருடங்களுக்கு முன்னர் 1778 ல் மார்தோமாவை ஆயராக
ஏற்றுக்கொள்ள திருத்தந்தை சம்மதித்திருந்தார் எனவும் அதற்கு ஏற்ப மார்தோமாவை
ஆயராகவே கத்தோலிக்க திருச்சபைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என சுறியானிக்காரர்கள்
கோரிக்கை வைத்தனர்.
மார்த்தோமாவை கத்தோலிக்க திருச்சபையில்
ஏற்றுக்கொள்ளும் போது அவர் பழைய கூற்றினரின் ஆயராகி விடுவாரோ என்ற பயம் வழியாக
இம்முறை கொச்சி ஆயர் மறுஒன்றிப்பின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். ஆட்சி
அதிகாரம் இல்லாத ஒரு ஆயராக தொடர மார் தோமா சம்மதிக்காததனால் தான் இதன் காரணம்.
இவ்வாறு நான்காவது மறுஒன்றிப்பு முயற்சியும் தோல்வியைத் தழுவியது.
5.
வெற்றியும் தோல்வியும் அடைந்த
இறுதி முயற்சி
புதிய கூற்றினரான சுறியானிக்காரர்களின்
கத்தோலிக்க மறுஒன்றிப்பு எப்படியாவது உண்மை நிலைக்கு கொண்டு வர வேண்டும் என
மீண்டும் 6 ஆம் மார் தோமா முயற்சிகள் மேற்கொண்டார். பழைய கூற்றினரின் தச்சில்
மாத்துதரகன் முன் நின்று முயற்சிகள் மேற்கொள்ளத் தயாரானார்.
உதயம் பேரூர் திருச்சங்கத்தின் தீர்மானங்களை
ஒப்புக் கொள்ளாததால் தான் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைவதற்கு கொச்சி ஆயர்
எதிர்க் கருத்தை காட்டுவதாக மார் தோமாவுக்கு ஐயம் ஏற்பட்டதனால் அன்றைய நியமங்கள்
அனைத்தையும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக படியோலை ஒன்றில் எழுதி கையெழுத்திட்டு
அனுப்பினார்.
“மார் திவன்னாசியோசும் அவருக்கு
கட்டுப்பாட்டில் உள்ள இறைமக்களும் திருத்தந்தையின் ஒன்றிப்பில் உள்ள கல்தேய
மறைமுதுவரால் நியமிக்கப்பட்ட ஆபிரகாம் ஆயரும், கொடுங்கல்லூர்
நிர்வாகியும், அவருக்கு கீழ் உள்ள இறைமக்களும், மறைமுதுவரின் பிரதிநிதியான உறுமிஸ் அருள்தந்தையும் இணைந்து இறையருளாலும்
புனித உரோமை திருச்சபையின் கட்டளையாலும் ஆலோசித்து தீர்மானிப்பதற்காக இந்த படி ஓலை
எழுதப்படுகிறது.
நமது முன்னோர்கள் புனித திருத்தந்தையை
கீழ்ப்படிந்து 1590 ஆண்டு வரையிலும் உரோமை திருச்சபையோடு ஒன்றிணைந்து கல்தாய
சுறியானிக்காரர்களின் திருவழிபாட்டை தொடர்ந்து வருகின்றபோது
சுறியானிக்காரர்களிடையே உரோமையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயர்கள் கேரளாவுக்கு வருகை
புரிந்தனர். மலங்கரையில் ஆயர் இல்லாத சூழலில் கோவாவின் மார் அலேசோஸ் ஆயர்
திருத்தந்தையின் ஆணையின் பொருட்டு மலங்கரைக்கு வந்து உதயம் பேரூர் மாமன்றத்தை
கூட்டினார். 1652 வரை நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தோம். சுறியானிக்காரர்களுள்
ஒரு ஆயர் கொச்சி அரண்மனையில் வாழ்ந்திருந்த ஒரு சில வெளிநாட்டவர்களை தங்கள்
பகுதியில் கொண்டு மலங்கரைக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டித்து அனைத்து பங்கு
இறைமக்களையும் மட்டாஞ்சேரி ஆலயத்திற்கு ஒன்று கூடச் செய்து உறுதிமொழியும்
செய்தனர். பின்னர் ஆலங்காட்டு ஆலயத்தில் வைத்து தோமா தலைமை திருத்தொண்டரை ஆயராக
அருள்பொழிவு செய்யவும் தொடர்ந்து பல்வேறு விவாதங்களுக்கு உட்பட்டு இரண்டு தலைமை
இடங்களில் இரண்டு முறைகளிலாக இவை நடந்து கொண்டிருந்தது.
முன்னோர்கள் திருத்தந்தைக்கு கீழ் படிந்து
உதயம் பேரூர் மாமன்றத்தில் தீர்மானித்ததன் படி திருப்பலி வேளைச் ஜெபங்கள் நோன்பு
மற்றும் திருவழிபாட்டு முறைகளை இரண்டு கூற்றினரும் ஒன்றாக கீழ்ப்படிந்து நடப்பதாக
சம்மதிக்கிறோம். திருத்தந்தையின் ஒன்றிப்பில் தற்போது யாக்கோபாயர்களின்
நம்பிக்கையும் திருவழிப்பாட்டும் முறையும் விட்டு ஒழிந்து உர்பானோஸ் என்னும்
எட்டாவது திருத்தந்தையின் காலத்தில் கிழக்கு திருச்சபையினருக்கு கட்டளையிட்ட
நம்பிக்கை உண்மைகளை கீழ்ப்படிந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டு திருத்தந்தையின்
கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு சம்மதித்துக் கொள்கிறோம்.
1799 இடவம் 20, ஆலப்புழா, மார் ஸ்லீபா ஆலயத்தில் வைத்து தந்தை மகன்
தூய ஆவியின் திருப்பெயரால் இரு கூற்றினரும் இணைந்த ஆலயத்தினர் உறுதிமொழியாக எழுதிய
ஒப்பந்த பத்திரம்.
(மார் தோமா நஸ்றாணிகளின் உண்மை நம்பிக்கை
பக்கம் 200)
இவ்வாறு ஆலப்புழை தத்தம் பள்ளி மார்
மிக்காயேல் ஆலயத்தில் வைத்து 1799 ஜூன் 22ஆம் தேதி மார்த்தோமாவும் அவரது
சார்பினரும் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்தனர். ஆறு மாதங்கள் அவர்
அங்கு தங்கியிருந்து திருப்பலி ஒப்புக் கொடுத்து வந்தார். ஆனால் மார் தோமாவுக்கு
ஆட்சி அதிகாரம் வழங்கலாம் என ஒப்புக்கொண்ட கொச்சி ஆயர் அதை செயல்படுத்தாதனால்
வெறுப்படைந்த மார்தோமா ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதன் படி இழப்பீடு செலுத்தி
வருத்தத்துடன் மீண்டும் புதிய கூற்றினரிடையே சென்றடைந்தார். அதன் பிறகு
புத்தன்காவில் 1808 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். இவ்வாறு பலமுறை முயற்சிகளுக்கு
வெற்றி கிடைத்த பின்னரும் ஏதோ துர்ப்பாக்கியத்தினால் அதுவும் தோல்வி அடைந்தது.
ஒரு சில சாட்சியங்கள்
ஆலப்புழா தத்தம்பள்ளியில் வைத்து ஆறாம்
மார்தோமா கத்தோலிக்க ஒன்றிப்பு பெற்றுக் கொண்ட பின்னர் அதனைப் பற்றி “மலங்கரையின்
புகழ் சீராக்கப்பட்ட சுறியானிக் கிறிஸ்தவர்களின் திருச்சபை வரலாறு” என்ற நூலில்
யாக்கோபாய திருச்சபையின் ஒரு வரலாற்று ஆசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார்.
“புதிய கூற்றினரான சூரியானைக்காரர்களை
உரோமையோடு இணைப்பதற்கு மாத்து தரகன் பல நாட்களாக முயற்சிகள் மேற்கொண்டார். அது
நடக்காமல் போகவே அரசு அதிகாரிகளின் உதவியுடன் ஆயர் அவர்களுக்கு ஆணை அனுப்பி
ஆலப்புழா தத்தம் பள்ளி என்னும் இடத்திற்கு வரவைத்து அங்கே தங்க வைத்தனர். அங்கே
சுறியானிக்காரர்களின் பிரமாணிகளான சில குருக்களையும் பொது நிலையினரையும் பத்திராவை
அகற்றி ஹம்மீரா வைத்து திருப்பலி ஒப்புக்கொடுக்க வைத்தனர். (பத்திரா என்பது புளிப்பு இல்லாத அப்பம்.
இலத்தீன் மற்றும் கல்தேய திருவழிபாட்டு திருப்பலிக்கு இவ்வகை அப்பம் பயன்படுத்தப்பட்டு
வந்தது. ஹம்மீரா என்பது புளிப்பு உள்ள அப்பம். அந்தியோக்கிய சுறியானிக்காரர்கள்
புளிப்புள்ள அப்பத்தை பயன்படுத்தி வந்தனர்.)
புதன் கிழமைகளில் கடைபிடித்து வந்த நோன்பு
நாட்களில் அவர்களை கட்டாயப்படுத்தி மாமிச உணவு உண்ண வைக்கவும் அன்று பூரண சம்மதம்
இல்லாமல் கட்டாயப்படுத்துதல் காரணமாக பெரிய விருந்து ஏற்பாடு செய்து உணவு உண்ண
வைத்தனர். ஆனால் மார் தோமா அவர்கள் மாத்து தரகனின் கட்டாயப்படுத்துதலின் காரணமாக
உரோமாவுக்கு கீழ்ப்படிதல் ஆகலாம் என மனம் கொண்டிருந்தார். மக்கள் விருப்பம் இன்றி
அவர் அவ்வாறு செய்திருக்கக்கூடாது.
தரகனின் கட்டாயப்படுத்துதல் என்னும்
காரணத்தை முன்னிறுத்தி ஹம்மீரா மாற்றி பத்திராவை வைத்து திருப்பலி நிறைவேற்றுங்கள்
என ஆலயத்தின் பலிபீடத்தில் நின்று கொண்டு துயரத்தோடு கூறிய போது, அன்று ஆலயத்தில் திருப்பலிக்கு பங்கெடுத்த சுறியானி கிறிஸ்தவர்களின்
பிரமுகர்களான கோட்டயத்தின் தாடிக்காரன் எடவழிச்சல் குஞ்சறியான், கிழக்கேத்தத்து கொச்சு பொத்தன், வெட்டிக்குந்நன்
வெங்கடத்த, ஆலக்கசந்திரயாசா கத்தனார் உட்பட ஒரு குழு நாங்கள்
இதோ செல்கிறோம் எனக் கூறி ஆலயத்திலிருந்து வெளியேறி படகு வழியாக நிரணத்துக்கு
சென்றடைந்தனர். அவ்வாறு அவர்கள் மற்றொரு ஆயரை அருள்பொழிவு செய்ய வேண்டும் எனவும்
அவர்கள் தீர்மானித்தனர்.
(சுறியானி கிறிஸ்தவர்களின் திருச்சபை வரலாறு
பக்கம் 143 முதல் 144 வரை)
மாத்து தரகனின் பொருளுதவி கிடைக்காத
காலத்தில் பேராயர் ஆலப்புழையிலிருந்து நிரணத்திற்கு வரவும் தத்தம் பள்ளியில்
வைத்து பத்திரா பயன்படுத்தி திருப்பலி ஒப்புக்கொடுத்ததை எண்ணி அனுதபித்து
யாக்கோபாயா திருச்சபையில் மீண்டும் வந்தடைந்து ஆட்சி தொடர்ந்தார் என இட்டுப்பு
ரைட்டர் பின்னர் குறிப்பிட்டுள்ளார். ஆயர் கத்தோலிக்க திருச்சபையை ஏற்றுக்
கொண்டார் என்ற உண்மையை இட்டுப்பு ரைட்டர்
தெளிவாக வெளிப்படுத்தி இருக்கின்றார்.
எனினும் யாக்கோபாய திருச்சபையில் ஏறக்குறைய
சில பிரமாணிகள் தத்தம் பள்ளியில் தங்களது பேராயரை இழந்த பின்னரே நிரணத்திற்கு
திரும்பி வந்தோம் எனவும் பத்திராவை பயன்படுத்தி திருப்பலி ஒப்புக் கொடுத்தார்
எனவும் சமுதாய பிரமாணிகள் நிரணம் என்னும் இடத்தில் ஒன்று கூடி பேராயரை
தேர்ந்தெடுப்பதற்கு ஆலோசிக்கவும் செய்தனர் எனவும் இட்டுப்பு ரைட்டர் எழுதிருப்பது
மார் திவன்னாசியோஸ் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்தார் என்ற உண்மையை
வெளிப்படுத்துவதே ஆகும்.
யாக்கோபாய திருச்சபையின் இன்னொரு வரலாற்று
ஆசிரியர் இடவழிக்கல் “மார்த்தோமா
திருத்தூதரின் இந்தியத் திருச்சபை” என்ற நூலில் மார் திவன்னாசியோஸ் கத்தோலிக்க
திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்த உண்மையை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இதற்குப்
பின்னர் மாத்துதரகன் தனது எண்ணத்தை மெய்ப்படுத்த காயங்குளம் என்னும் இடத்தில் ஒரு
கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். 15 நாட்களாக பல்வேறு விதமான விவாதங்கள்
நடைபெற்றாலும் எந்த விதமான தீர்மானமும் உருவாகவில்லை. இணைப்பிற்கு சமாதானமான எந்த
ஒரு வழியும் இல்லை என கண்டபோது தரகன் திருவிதாங்கூர் பேரரசரின் உதவிக்கு
வேண்டுகோள் வைத்தார். இந்த சூழலில் பணியிலிருந்து பிரித்து விடப்பட்ட ஒரு திவானின்
சொத்துக்களை அபகரித்ததாக அரசர் பேராயருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு அபராதம்
விதித்தார்.
நிரணம் மற்றும் செங்ஙன்னூர் ஆலயங்களும்
அவற்றின் சொத்துக்களும் பேராயரின் செங்கோல், சிலுவை,
திருப்பலிக்கு பயன்படுத்தும் பாத்திரங்கள் போன்ற சொத்துக்களை
பறிமுதல் செய்தனர். 5000 ரூபாய் வசூல் செய்தும் மேலும் 5000 ரூபாய் பேராயர்
மூலமாகவும், மற்று தொகையை மொத்தமாக ஆலயங்களில் இருந்து
நன்கொடைகளாகப் பெற்றும் அபராத்த்தொகையை கட்டி முடித்தனர்.
சுறியானி சமுதாயத்தினர் உரோமையை
ஏற்றுக்கொண்டு ஒப்பந்தப் பத்திரத்தில் கையொப்பமிடுகின்ற போது முழு அபராதத்தொகையும்
தள்ளுபடி செய்யலாம் என இத்தகைய சூழலில் தரகன் பேராயரை அறிவித்தார். ஆனால்
முன்னோர்களின் நம்பிக்கையை விற்பதை விட சொத்துக்களை இழப்பதே நல்லது என அவர்
தீர்மானித்திருந்தார்.
பலவிதமான தந்திர திட்டங்களும் பண இழப்பும்
ஏற்பட்டதை உணர்ந்தபோது தரகன் பேராயர் மெனசிஸ் அவர்களுடைய வழியை பின்பற்றத்
துவங்கினார். தரகன் ஆயுதங்கள் எழுதிய படை வீரர்களோடு வந்து பேராயரையும் சுறியானி
பிரமாணிகள் பலரையும் கைது செய்து ஆழப்புழாவுக்கு கொண்டு சென்றனர். அங்கு பல
நாட்கள் பட்டினி போட்ட பின்னர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட அவர்
கட்டாயப்படுத்தப்பட்டார். எட்டாம் அர்பன் திருத்தந்தை கிழக்கு திருச்சபையினருக்காக
அறிவித்திருந்த நம்பிக்கை கோட்பாடுகளையும் திருத்தந்தையின் ஆட்சி அதிகாரத்தையும்
உதயம்பேரூர் மாமன்றத்தில் தீர்மானிக்கப்பட்ட திருப்பலி வேளை ஜெபம் நோன்பு முதலிய
கர்மங்களையும் பேராயர் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவ்வாறு 1799 இடவம்
30ஆம் தேதி தத்தம் பள்ளி ஆலயத்தில் வைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
(மார்த்தோமா திருத்தூதரின் இந்திய திருச்சபை
பக்கம் 188 முதல் 190 வரை)
மார் திவன்னாசியோஸ் அவர்களது கத்தோலிக்க
ஒன்றிப்பு வரலாற்று நிகழ்வு என மி. பிலிப்போஸ் தனது நூலில் தெளிவாக எழுதியுள்ளார்.
மாத்து தரகன் அவரை கைது செய்ததாகவும் பட்டினி போட்டதாகவும் நம்பிக்கை உறுதிமொழி
எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டு கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணையச் செய்தார் என்ற
நிலை மார் திவன்னாசியோஸ் அவர்களது மறுஒன்றிப்பைப் பற்றி தப்பெண்ணம் கொள்ள வேண்டிய
சூழல் ஏற்படுகிறது. எனவே அதன் உண்மை நிலையை தெளிவாக்குகின்ற மற்றொரு நிகழ்வு
குறிப்பிடப்படுகிறது.
1.
மார் திவன்னாசியோஸ் பேராயர்
நான்கு முறை கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய முயற்சிகள் மேற்கொண்டதைப்
பற்றி நாம் அறிந்துள்ளோம். அதற்காக அவர் பல கடிதப் போக்குவரத்துகளை நடத்தினார்
என்றும் இறுதியாக திருத்தந்தைக்கு அவர் அனைத்து நிகழ்வுகளையும் தெளிவுப்படுத்தும்
நிகழ்வுகளை விளக்கி கடிதம் அனுப்பியதாகவும் நாம் அறிந்துள்ளோம். இவ்வாறு செயல்பட்ட
ஒரு நபரை கட்டாயப்படுத்தியோ கைது செய்தோ பட்டினிக்கு இடப்பட்டோ கத்தோலிக்க
திருச்சபையோடு இணைக்க வேண்டிய நிலை மாத்து தரகனுக்கும் யாருக்குமே இல்லை என்ற
உண்மை நிலையை நாம் அறிந்து கொள்ள முடியும்.
2.
புதிய கூற்றினரின் ஒரே ஆயரான
மார் திவன்னாசியோஸ் யாக்கோபாயர்களின் மையமான நிரணத்திலிருந்து கைது செய்து
ஆலப்புழைக்கு கொண்டு சென்றனர். அவரை பட்டினி போட்டனர். இவ்வாறு கத்தோலிக்க
திருச்சபையோடு இணைத்தனர் என மீ பிலிப்போஸ் தனது நூலில் எழுதியுள்ளார். தங்களது
பேராயரை கைது செய்யவும் நிரணத்திற்கு கொண்டு செல்லவும் செய்கின்ற போது யாக்கோபாய
மக்கள் மௌனமாக அதைக் காணவும் எதிர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தாமல் இருக்கவும்
செய்தார்கள் என்பதனை நம்ப முடியுமா. அப்படி பட்டினி கிடத்தப்பட்டார் என்றால்
அங்கிருந்து அவரை காப்பாற்றி தங்களுடைய ஆயரை தங்கள் இடத்திற்கு கொண்டு வருவதற்கு
ஏன் இறைமக்கள் துணியவில்லை? எங்கிருந்தோ வந்த அகத்தள்ளா ஆயரை
போர்த்துகீசியர்கள் கடலில் மூழ்கடித்து கொண்டதாக வதந்தி பரத்தியதையே நம்பி
ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் “தலைமுறையை உள்ள நாள்வரையிலும் பரங்கிக்காரர்களுக்கு
துணை நிற்க மாட்டோம்” என வளைந்த சிலுவை சபதம் செய்யவும் செய்த தலைமுறையினரை கொண்ட
நசராணி மக்கள் தனது ஆயரை கத்தோலிக்க திருச்சபையோடு இணைப்பதற்கு கைது செய்து
சித்திரவதை செய்ததும் பட்டினி கிடத்தும் செய்தனர் என கேட்டபோது மவுனமாக இருந்தனரோ?
இத்தகைய கேள்விகளுக்கு விடை மி, பிலிப்போஸ்
எழுதியவை உண்மையற்ற நிலை என்பதை அறிவிக்கின்றது.
3.
தங்களை ஆண்ட பேராயர்களுள் மிக
முக்கியமானவர்கள் என யாக்கோபாய வரலாற்று ஆசிரியர்கள் பலர் வெளிப்படுத்திய மார்
திவன்னாசியோஸ் அவர்கள் ஒரு சில காரியங்களுக்காக கைது செய்யப்பட்டதாகவோ பயந்தோ
பட்டினியால் துயரப்பட்டோ யாக்கோபாயத் திருச்சபையை மறுத்துரைத்தார் என்பதை நம்ப
முடியுமா? யாக்கோபாய திருச்சபை கிறிஸ்து நிறுவிய
திருச்சபை என அவர் திட மனம் கொண்டிருந்தார் என்றால் கத்தோலிக்க திருச்சபை
மூடநம்பிக்கைகளையும் தேவையற்ற சடங்குகளையும் கொண்டு நிறைந்ததா என்ற நம்பிக்கை
அவருக்கு இருந்திருந்தால் தனது சொந்த மனசாட்சியை பலியாக்க அவர் ஒருபோதும் முயன்றிருக்க
மாட்டார். ஆங்கில மறைபணியாளரான முனைவர் புக்கனான் குறிப்பிட்டதைப் போன்று,
“அவர் நான்முக ஆளுமைகளை கொண்டவரும் மதிப்புக்குரியவரும் இறை
பக்தனும் திருச்சடங்குகளில் அதிக விருப்பமுடையவரும் ஆவார். நான் இதுவரைக் கண்ட
அவரது அருள்பணியாளர்கள் அனைவரையும் ஒரு போல வழிநடத்தும் அறிவு அவர்
பெற்றிருந்தார்.” ஆறாம் பார்த்தோமா 43 ஆண்டுகள் பேராயராக மனசாட்சிக்கு எதிராக
செயல்பட்டார் என நம்மால் கூற முடியுமா?
எப்படியாயினும் மார் திவன்னாசியோஸ்
கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்பதற்கான
முயற்சிகள் மேற்கொண்டார் என்ற நிலைதான் இதில் தெளிவாக குறிப்பிடப்படுகிறது.
அதிகாரம் 18
நான்கு ஆயர்களின் மறுஒன்றிப்பு முயற்சிகள்
ஆறாம் மார் தோமாவின் மரணத்திற்குப் பின்னர்
யாக்கோபாய திருச்சபையின் தலைவரான நான்கு ஆயர்கள் கத்தோலிக்க திருச்சபையோடு
மறுஒன்றிப்படைய முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர். சேப்பாட்டு மார் திவன்னாசியோஸ், புலிக்கோட்டு மார் திவன்னாசியோஸ், கினானாய பங்கின்
மார் சேவேரியோஸ், கண்ட நாடு மார் இவானியோஸ் போன்றவர்கள்
நடத்திய மறுஒன்றிப்பு முயற்சிகள் வரலாற்றுத் தெளிவுகளாக காணக்கிடக்கின்றன.
இம்முயற்சிக்கு இவர்களைத் தூண்டியது ஒரே உண்மை திருச்சபையை பற்றிய நம்பிக்கையும்
தலைமை மறைமுதுவரான திருத்தந்தையை கீழ்ப்படிவதற்கு தாங்கள் தயார் என்ற தீர்மானமும்,
அந்தியோக்கிய யாக்கோபாய மறைமுதுவரின் தவறான செயல்பாடுகளோடுள்ள
வெறுப்பும் யாக்கோபாய திருச்சபையின் இழிவான நிலையும் எண்ணமுமே என வரலாறு
தெரிவிக்கின்றது. மேற்குறிப்பிட்ட பேராயர்கள் நடத்திய மறுஒன்றிப்பு முயற்சிகள்
ஒவ்வொன்றாக குறிப்பிடப்படுகிறது.
சேப்பாட்டு மார் திவன்னாசியோஸ் ஆயரின்
மறுஒன்றிப்பு முயற்சி
சேப்பாட்டு மார் திவன்னாசியோஸ் அவர்களது
முன்னோர்களாக யாக்கோபாயா திருச்சபையை திருஆட்சி புரிந்த புன்னத்ரா மார்
திவன்னாசியோஸ் மற்றும் புலிக்கோட்டில் மார் திவன்னாசியோஸ் ஆகியோர் குறைந்த காலம்
மட்டுமே திருஆட்சி செய்ததனாலும் பிரிவினை மறைப்பணியாளர்களுடன் நல்லுறவு
கொண்டிருந்ததாலும் கத்தோலிக்க மறுஒன்றிப்போடு எந்த விதமான முயற்சிக்கும் அவர்கள்
தயாராகவில்லை. ஆனால் 1825 முதல் 1855 வரை
உள்ள 30 ஆண்டுகள் யாக்கோபாயா திருச்சபையை நிர்வகித்து வந்த
சேப்பாட்டு மார் திவன்னாசியோஸ் கத்தோலிக்க மறுஒன்றிப்பு நடைபெறுவதற்காக வராப்பழை
பேராயரோடு கடிதப் போக்குவரத்து நடத்தியிருந்தார். இம்முயற்சிக்கு இரண்டு காரணிகள்
அமைந்திருந்தன. 1. அந்தியோக்கிய யாக்கோபாய மறைமுதுவரின் தவறான செயல்களும்
பொறுத்துக் கொள்ள முடியாத இழிசெயல்களால் ஏற்பட்ட வெறுப்புமே முதல் காரணம். 2.
இரண்டாவதாக பிரிவினை திருச்சபையைச் சார்ந்த மறைப்பணியாளர்கள் பல முறைகளில் யாக்கோபாய
திருச்சபை உறுப்பினர்களுக்கு இடையே மறுமலர்ச்சிக் கருத்துக்களை புகுத்தி எதிர்
அலையை உருவாக்கி இருந்தனர்.
இவ்வாறு யாக்கோபாயா திருச்சபைக்கு உள்ளே
ஊடுருவிய மறுமலர்ச்சி சிந்தனைகளின் பின் விளைவுகளால் சேப்பாட்டு மார்
திவன்னாசியோஸ் அவர்கள் மிகப்பெரிய கேட்டிற்கு உட்படுத்தப்பட்டார். இவ்வாறு இரண்டு
பகுதிகளிலும் ஏற்பட்ட துன்புறுத்தல்கள் மத்தியில் கத்தோலிக்க திருச்சபையோடு
இணைந்து அமைதியோடு தானும் தனது இறைமக்களும் வாழ்ந்து கொள்ளலாம் என்ற எண்ணமே ஆகும்.
ஆனால் கடந்த அனைத்து மறுஒன்றிப்பு முயற்சிகளையும் பனனற்றதாக மாற்றிய நிலையில்
சேப்பாட்டு மார் திவன்னாசியோஸ் அவர்களை ஒரு ஆயராக ஏற்றுக் கொள்ள முடியாது என
வரப்புழை ஆயர் கூறியதை முன்னிட்டு அவரும் மறுஒன்றிப்பு முயற்சியிலிருந்து
விலகினார்.
புலிக்கோட்டு மார் திவன்னாசியோஸ் ஆயரின்
மறுஒன்றிப்பு முயற்சி
வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ்
ஆயருக்குஅவர்களுக்கு முன்னர் 43 ஆண்டுகள் 1865 முதல் 1909 வரை யாக்கோபாய திருச்சபையை வழிநடத்தி
வந்த புலிக்கோட்டு மார் திவன்னாசியோஸ்
அவர்கள் நடத்திய மறுஒன்றிப்பு முயற்சிகள் அவரது தொலைநோக்குப் பார்வையையும் அறிவுக்
கூர்மையையும் எடுத்துக்காட்டுகிறது.
பழைய கூற்றினரும் புதிய கூற்றினரும் இடையே
வெளிப்படையான ஐக்கியம் உருவான பின்னர் புதிய கூற்றினரை கத்தோலிக்க திருச்சபையில்
சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுவே அவரது குறிக்கோள். இதற்காக அவரோடு இணைந்து
செயல்பட்ட குருக்களுள் முன்னவராக செயல்பட்டவர் குறவிலங்காட்டு நிதியிரிக்கல்
மாணிக்கத்தனார் ஆவார். அவர் மார் திவன்னாசியோஸ் அவர்களோடு அன்பு உறவில் ஏற்படவும்
அவரது உதவியோடு பழைய கூற்றினரான சுறியானிக்காரர்களின் ஒத்துழைப்போடும் இரு
கூட்டத்தினரையும் ஒன்றித்து பல இயக்கங்களை உருவாக்கினர். அவற்றுள் ஒரு சிலவற்றை
காண்போம்.
1.
நஸ்ராணி இன ஐக்கிய சங்கம்
மறுஒன்றிப்பின் முதல் சுவடாக நஸ்ராணி இன
ஐக்கிய சங்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை உருவாக்கினர். பழைய கூற்றினரும் புதிய
கூற்றினருமான சுறியானிக்காரர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு
இஃது துவங்கப்பட்டது. இச்சங்கத்தின் சட்ட வழிமுறைகள் ஒரு சில இங்கு
இணைக்கப்படுகிறது.
மார்த்தோமா நஸ்ராணிகள் எனப் பெயர் பெற்றுள்ள
கேரளாவின் சுறியானிக்காரர்கள் பழைய கூற்றினரெனவும் புதிய கூற்றினர் எனவும்
இரண்டாகப் பிரிந்து வலுவிழந்த குழுக்களாக
உள்ளனர். மட்டுமல்ல, கல்வி, கலாச்சாரம்,
அரசு வேலை வாய்ப்புகள் முதலிய சமூக உயர் பதவிகளை குறைந்த
எண்ணிக்கையில் கொண்டவர்களாகவே உள்ளனர். எனவே இந்த தாழ்நிலையை உயர்த்துவதற்கு
நஸ்ராணி இன ஐக்கிய சங்கம் என்ற பெயரில் ஒரு இயக்கம் நிறுவப்பட வேண்டும் என்றும் பல
ஆண்டுகளாக எண்ணவும் தங்கள் கருத்துக்களை அன்பர்களோடும் சொந்த இனப் பிரமாணிகளோடும்
ஆலோசித்து அவர்களுடைய எண்ண அலைகளுக்கும் விவாதங்களுக்கும் உள்படுத்தி ஆலோசித்து
அவர்களின் கருத்துரையைக் கேட்டு பின்வரும் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்
முதல் சட்டம் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
அந்தியோக்கிய சுறியானிக்காரர்கள் உரோமை
சுறியானிக்காரர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். மார் தோமா நஸ்ராணி சமூகத்தின்
பிரதிநிதியாகவும் இறை மக்களின் இனம் சார்ந்த சமூக தொடர்பு கொண்ட நிலைகளை வழிநடத்த
பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள கேரளாவின் இன ஐக்கிய சங்கம் என்ற பெயரோடு
சுறியானிக்காரர்களின் மத்தியில் ஒரு இயக்கம் ஏற்படுத்த வேண்டும்.
(நிதியிரிக்கல் மாணிக்கத்தனார் பக்கம் 200)
இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக சேர
மறுமலர்ச்சி குழு அதாவது மார் தோமா திருச்சபையில் உட்பட்டவர்களும்
சுறியானிக்காரர்களான சிஎம்எஸ் காரர்களும் முன் வரமாட்டார்கள் என
தீர்மானித்திருந்ததனால் மார் திவன்னாசியோஸ் அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள
யாகோபியர்களையும் பழைய சுறியானிக்காரர்களை மட்டுமே அதனுள் சேர்ப்பதற்கு
திட்டமிடப்பட்டது.
2.
தனி இடம்
இந்த அமைப்பின் அலுவலகம் திறப்பதற்கும்
கூட்டங்கள் கூடுவதற்கும் நிறுவனங்களை நிறுவவும் ஒரு தனி இடம் தேவைப்படுகிறது.
கிறிஸ்தவர்களின் முக்கிய மையமான கோட்டயம் நகரில் இதற்காக ஒரு தனி இடம் வாங்குவது
சற்று கடினமாயினும் வாங்க முடிந்தது. ஆலப்புழா வணிகரான யூக்கா போர்ட் என்னும்
துரைக்குச் சொந்தமான உட்லாண்ட் எஸ்டேட்டும் பங்களாவும் அவரது முக்தியாரான ஜேம்ஸ்
தாரா என்ற அமெரிக்கன் கத்தோலிக்கரிடமிருந்து மார் திவன்னாசியோஸ் மற்றும்
மாணிக்கத்தனாரும் 3541 ரூபாய்க்கு விலைக்கு எழுதி வாங்கினார்.
3.
ஒருங்கிணைந்த மகா கல்வி நிலையம்
இரு குழுவினரும் இணைந்து கோட்டயத்தில் ஒரு
கல்லூரியை நிறுவவும் அத்துடன் இணைந்த பள்ளிக்கூடங்கள் மற்றும் பிறரன்புப் பணி
நிறுவனங்கள் நிறுவவும் தீர்மானித்தனர். இதற்காக அதனுடைய சட்ட வழிமுறை நூலில் 8, 9,
10 பிரிவுகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
8: சங்கத்திற்கு சொந்தமான இடத்தில்
அமைந்துள்ள கட்டிடங்களில் ஒரு முக்கிய கல்வி நிலையமும் உருவாக்க வேண்டியதும் அது
அனைத்து இனத்தாருக்கும் மதத்தினருக்கும் கற்க சுதந்திரம் உள்ளதும் ஆகும்.
9: கல்வி நிலையத்தின் முதல்வரும் இரண்டு
துணை ஆசிரியர்களும் எனில் பிரிந்த திருச்சபையினர் இறை நம்பிக்கையற்றவர் இறைவனை
அறியாதோர் போன்ற மத குழுக்களைச் சாராத பிரித்தானியர்கள் அமைந்தால் நன்று.
பொதுநிலையினரை விட அதிகாரத் தன்மையோடு கற்பிக்க குறைந்த ஊதியத்தில் நமது இனத்தில்
உள்ள சகோதர சங்கங்களையோ அருள் சகோதரிகளையோ கிடைத்தால் அது சங்கத்திற்கு மிகுந்த
பலன் உருவாகும் என்பதை அவருடைய நிர்வாகிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
10: இந்த கல்வி நிலையத்தில் மும்பை மற்றும்
கல்கத்தாவின் புனித சேவியர் கல்லூரியிலும் மங்கலாபுரத்தின் புனித லூயிஸ்
கல்லூரியிலும் திருச்சிராப்பள்ளியின் புனித ஜோசப் கல்லூரியிலும் கற்பிக்கும்
முறைப்படி பல்கலைக்கழகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட வகுப்புகளை நடத்தவும் தேர்வுகள்
நடத்தவும் செய்ய வேண்டும். கல்வியைப் பற்றிய முறைகளிலும் நம்பிக்கைக்கும்
நன்னடத்தைக்கும் தலைமை ஆசிரியருக்கு முழுப் பொறுப்பு உள்ளதாகவும் இன்னொருவர்
தலையிட முடியாது.
(நிதியிரிக்கல் மாணிக்கத்தனார் பக்கம் 201)
4.
வெளியீடுகள்
இன ஐக்கியத்தின் சார்பில் இரு குழுவினரும்
இணைந்து வெளியீடு ஒன்றை வெளியிட தீர்மானித்துக் கொண்டனர். இதைப் பற்றி திரு வி சி
ஜார்ஜ் பி ஏ எல் டி நிதியிரிக்கல் மாணிக்கத்தனரின் வாழ்க்கை வரலாறு என்ற நூலில்
பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய கூற்றினரும் பழைய கூற்றினரும் இணைந்து
துவங்கிய நசராணி இன ஐக்கிய சங்கத்தின் உடைமையாக மாந்தானம் என்னும் இடத்திலிருந்து
வெளியிடப்பட்ட நசராணி தீபிகா தான் பல்வேறு பரிவர்த்தனங்களுக்கு உட்பட்டு விகத
நசராணி எனப் பெயர் பெற்று கோட்டயத்தின் தீபிகா எனவும் அழைக்கப்பட்டது. அதனுடைய
முக்கிய பொறுப்பு மார்சிலினோஸ் ஆயரின் வழிகாட்டுதலின்படி நமது கதாநாயகன்
ஏற்றுக்கொண்டார். மாணியச்சன் சமுதாய முன்னேற்றத்திற்காக வாங்கிய உட்லாண்ட்
எஸ்டேட்டிலிருந்து உருவான மனோரமா நிறுத்தப்பட்ட பின்னர் தீபிகா கோட்டயத்தில்
இருந்து வெளியீடு துவங்கியது. மனோரமாவின் மறு அவதாரமே தீபிகா என்பதும் ஆகும்.
(பக்கம் 206-207)
5.
பிறரன்புப் பணி நிறுவனங்கள்
நஸ்ராணி சமூகத்தின் பலவிதமான
முன்னேற்றத்திற்காக பல பிறரன்புப் பணி நிறுவனங்கள் இன ஐக்கிய சங்கத்தின்
கட்டுப்பாட்டில் நிறுவ வேண்டும் என அதனுடைய பொறுப்பாளர்கள் தீர்மானித்தனர். கல்வி
நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், தொழிற்சாலைகள், விவசாய சாலைகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் போன்றவற்றை நிறுவுவதற்கு 22 முதல்
28 வரை உள்ள பிரிவுகளில் சட்டதிட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் அவற்றை அவர்களால்
நடத்த முடியாமல் போனது. புதிய கூற்றினர் மற்றும் பழைய கூற்றினர் பிரிவினைகளுக்கு
இடையே ஒன்றிப்பு ஏற்படுத்துமாறு உருவாக்கப்பட்ட இந்த திட்டங்களை
செயல்முறைப்படுத்தும் நிலைக்கு கொண்டு வர முடியவில்லை.
திருத்தூதுவ பிரதிநிதியோடு சந்திப்பு
மாணிக்கத்தனாரின் தூண்டுதலுக்கு ஏற்ப உதக
மண்டலத்திற்குச் சென்று திருத்தூதுவ அதிகாரியாகிய மோன்சிஞ்சோர் அயோத்தி அவர்களை
சந்திப்பதற்கு மார் திவன்னாசியோஸ் தீர்மானித்தார். இதற்காக மாணிக்கத்தனார் எழுதிய
கடிதத்திற்கு 1888 ஜனவரி 14ஆம் தேதி
உதகமண்டலத்திலிருந்து மோன்சிஞ்சோர் அயோத்தி அனுப்பிய பதில் கடிதத்தின் ஒரு பகுதி
இவ்வாறாக அமைந்திருந்தது.
“கேரளாவுக்கு வருகை தரும் போது கட்டாயமாக
மார் திவன்னாசியோஸ் அவர்களை சந்திக்க நான் விரும்புகிறேன். நீங்கள்
குறிப்பிடுவதைப் போன்று அவர் என்னை சந்திக்க காத்திருக்கின்றார் அல்லவா. அந்த
சந்திப்பு கட்டாயமாக எனக்கு மகிழ்வைத் தரும். தூய அன்னையாகிய திருச்சபையின் மடியில்
யாக்கோபாயர்கள் வருவதற்கு விரும்புகின்ற நிலை எவ்வளவு மகிழ்வை வெளிப்படுத்தும்.
இதற்கான அனைத்து அதிகாரங்களும் தூய ஆட்சிப் பீடத்திலிருந்து எனக்கும் உள்ளது
என்பதை நீங்களும் அறிந்திருக்கின்றீர்கள் அல்லவா!”
மாணிக்கத்தனாரின் கடிதத்திற்கு மீண்டும் 1888 ஏப்ரல் நான்காம் தேதி அனுப்பிய ஒரு கடிதத்தில் திருத்தூதுவ அதிகாரி
இவ்வாறு எழுதியுள்ளார்.
“மார் திவன்னாசியோஸ்
அவர்கள் உதகமண்டலத்தில் எனது இல்லத்தில் எப்போது வருவாரோ அப்போது நான் அவரை
வரவேற்பதில் மகிழ்கிறேன். அவரோடு இணைந்து நீங்களும் உதக மண்டலத்திற்கு வருகை
தரவும். இங்குள்ள வசதிகளுக்கு ஏற்ப அவர் இங்கு தங்கவும் முடியும். மார்
திவன்னாசியோஸ் அவர்களுக்கு நல்லதொரு இடம் தங்குவதற்கு வழங்குவதற்காகவே நான்
இவ்வாறு கூறுகிறேன்.”
மேற்குறிப்பிட்ட கடிதத்தில் மார்
திவன்னாசியோஸ் மற்றும் மாணிக்கத்தனார் இணைந்து உதகமண்டலத்திற்கு சென்று
திருத்தூதுவ அதிகாரியை சந்தித்தது பற்றி மாணிக்கத்தனர் வாழ்க்கை வரலாற்று நூலில்
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“மார் திவன்னாசியோஸ் அவர்களை தனது சொந்த
இல்லத்திற்கு வரவேற்பதும் அவரை நல்ல முறையில் உபசரித்து தங்க வைப்பதற்கான சகல
வசதிகளை ஏற்படுத்துவதும் சாதாரணமான ஒரு நிலையே ஆகும். திருத்தூதுவ அதிகாரியை
அறிவித்ததற்கு ஏற்ப அவர் அழைப்பை வழங்கியுள்ளார். அவரது அழைப்புக்கு ஏற்ப மார்
திவன்னாசியோஸ் உதகமண்டலம் சென்றடைந்தார். இப்பயணத்தின்
போது நமது வரலாற்று நாயகனும் ஆயர் அவர்களோடு உடன் துணையாக இருந்தார். திருத்துவது
அதிகாரியின் வரவேற்பை பெற்றுக் கொண்டு ஒரு சில தினங்கள் அவர்கள் அங்கே தங்கினர்.
திருத்தந்தையின் பிரதிநிதியும் கேரளா நஸ்ராணி யாக்கோபாயா திருச்சபையின் தலைவரும்
இணைந்த அன்பு சந்திப்பு அங்கே நடந்தது. மார் திவன்னாசியோஸ் அவர்களுக்கு ஆங்கிலப்
புலமை இயலாமல் இருந்ததால் மாணிக்கத்தனார் இரு மொழி பேசுபவராக திருத்தூதுவ அதிகாரி
கூறியவற்றை மொழிபெயர்த்து வழங்கினார். தூய ஆட்சி பீடத்தை அன்று அலங்கரித்த 13ஆம் லியோ திருத்தந்தை அவர்களிடம் நான் ஆதரவும் மதிப்பும்
வழங்குகிறேன் அவர் வெளியிட்டிருந்தார். இதனை திருத்தூதுவ அதிகாரி அயோத்தி தெளிவாக
புரிந்து கொண்டார். இதனை குறிப்பிட்ட அறிக்கையை வெகு வேகமாக திருத்தந்தை
அவர்களுக்கு அனுப்புவேன் என வாக்குறுதி வழங்கியதை முன்னிட்டு உதகமண்டலத்திலிருந்து
அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.”
(மாணிக்கத்தனார் பக்கம் 214)
தான் திருத்தூதுவ அதிகாரியோடு வாக்குறுதி
வழங்கியதன் படி திருத்தந்தைக்கு செய்தியை மார் திவன்னாசியோஸ் அனுப்பவும்
மாணிக்கத்தனாரின் ஆலோசனைகளின் படி மறுஒன்றிப்புக்கான முயற்சிகள் தொடர்ந்து
நடத்தவும் செய்யப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் மார் திவன்னாசியோஸ் மற்றும்
புதிய கூற்றினரின் மறுஒன்றிப்பு சாத்தியமாகாமல் போனது.
ஆனால் கண்டநாட்டிலிருந்து 1890 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி மாணிக்கத்தனார்
அனுப்பிய கடிதத்தில் யாக்கோபாயர்களின் மறுவொன்றிப்புக்கு சாத்தியமாகாத இரண்டு
காரணிகளை அவர் குறிப்பிட்டுள்ளார். அவை பின்வருமாறு:
“யாக்கோபாயர்களோடு நடத்தப்பட்ட பல
உரையாடல்களிலிருந்து மறுஒன்றிப்புக்கு சவாலாக அமைந்திருந்த இரண்டு காரணிகளை நான்
குறிப்பிடுகிறேன்.
முதலாவதாக உதயம் பேரூர்
திருச்சங்கத்திற்குப் பின்னர் 50 ஆண்டுகளுக்கு தொடர்ந்து சொந்த இனத்திலும் சொந்த
திருவழிபாட்டு முறையிலும் உள்ள ஆயர்களை ஏற்றுக் கொள்ள அனுப்பப்பட்ட கோரிக்கைகள்
நிறைவேறாமல் கத்தோலிக்க திருச்சபைக்கு திரும்பிச் செல்லுதல். தங்கள் முன்னோர் செய்த
தவற்றை எடுத்துச் சொல்வதற்கு இணையாதல். போன்றவற்றை கேவலமாக கருதினார்.
இரண்டாவதாக, கொச்சியில்
வைத்து நடைபெற்ற வளைந்த சிலுவை சபதத்தில் தங்களது முன்னோர் ஒரு இலத்தீன் ஆயரை
ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என சபதம் செய்தனர். தற்போது
சுறியானிக்காரர்களாகிய நாங்கள் இலத்தீன் இலவீஞ்ஞு ஆயருக்கு கீழ்ப்படிவதா? தங்களது இந்த உறுதிமொழியை கடைப்பிடிக்காத போது மனசாட்சிக்கு எதிரான
செயலாக்க் கருதினர். மட்டுமல்ல மற்று சமுதாயத்தில் மற்று திருவழிபாட்டில் உள்ள
ஆயர்கள் மற்றும் குருக்கள் இறை மக்களை ஆளுதல் என்பது உலக வரலாற்றில்
ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.”
(மாணிக்கத்தனார் பக்கம் 308)
எதுவாயினும் புலிக்கோட்டு மார்
திவன்னாசியோஸ் பேராயர் நடத்திய மறுஒன்றிப்பு முயற்சிகளும் ஏதோ காரணங்களால்
பலனடையாமல் போனது.
கண்ட நாடு மார் இவானியோஸ் மேற்கொண்ட
மறுஒன்றிப்பு முயற்சி
ஆர்த்தடோக்ஸ் திருச்சபையின் பேராயராக இருந்த
கண்டநாட்டு யோவாக்கீம் மார் இவானியோஸ் கத்தோலிக்க திருச்சபையோடு
மறுஒன்றிடிப்புக்கு முயற்சிகள் மேற்கொள்ளவும் ஆனால் தோல்வி அடைந்ததும் இதயம் நொந்த
மொழியில் விவரித்ததை அவர் தனது உறவினரும் யாகோபாய திருச்சபையின் முக்கிய
மறையுரையாளருமான கண்ட நாட்டு காரோட்டு சைமன் டி கோர் எப்பிஸ்கோப்பா அவர்களிடம்
தெரிவித்தார். இஃது “சத்திய சபா காகளம் விசேஷால்” இதழில் “ஏமாற்றப்பட்ட கொடுமை”
என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிடப்பட்டது.
“அப்துல்லா மறைமுதுவரிடமிருந்து நான்
திருத்தொண்டராக அருள்பொழிவு செய்யப்பட்டேன். அன்று எனது தந்தையின் சகோதரரான கண்ட
நாட்டு யோவாக்கீம் மார் இவானியோஸ் ஆயரோடு நான் தங்கியிருந்தேன். அவர் மிகவும்
புனிதமான மனிதனாக வாழ்ந்து வந்தார். கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கை உண்மைகளை
பல நேரங்களிலும் எடுத்துரைப்பதைக் கேட்டிருக்கிறேன்.
சுறியானி மொழியில் புலமை பெற்றிருந்த ஆயர் யாக்கோபாயர்கள்
கைகூப்பி வணங்கும் “ஹூதாயா கானோன்” எனப்படும் திருச்சபை சட்ட நூலில் “றீஸ்
பாத்றியர்க்கீஸ்” (தலைமை மறைமுதுவர்) பற்றிய பகுதியே அன்று முதன்மையான விவாதப்
பொருளாக இருந்தது. ஆயர் அவர்கள் தனது சொந்த கையால் அப்பகுதியை மலையாள மொழியில்
மொழிபெயர்ப்பு செய்து தனது கையொப்பமும் முத்திரையும் வைத்துள்ள ஒரு நூல் எனது
கையில் உண்டு. உரோமை மறைமுதுவரின் “றீசோ உறாபோ” (தலைவனும் வழிகாட்டியும்) என்ற
அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதன் தேவையைப் பற்றி ஆயர் அவர்கள் எடுத்துரைத்துக்
கொண்டிருந்தார்.
இரண்டாவதாக யாக்கோபாயரின் திருவழிபாட்டு
முறைகளிலிருந்து திருத்தூதர் பேதுருவின் முதன்மை அதிகாரம் மற்றும் உரோமை திருஆட்சி
அரியணை போன்ற கருத்துக்களைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்து வந்தார். ஆயரின் இத்தகைய
கருத்துக்கள் பிரபலமானதை முன்னிட்டு 1098ல் அன்று கண்ட நாட்டு கத்தோலிக்க ஆலயத்தின்
பங்குத்தந்தையான தோட்டுங்கல் அருட்தந்தை அவர்களோடு இணைந்து மறுஒன்றிப்புக்கான
ஆலோசனைகளை மேற்கொண்டார்.
அன்றைய இந்தியாவின் திருத்தூதுவ அதிகாரியின்
செயலராக பணியாற்றியவர் கண்டநாட்டைச் சார்ந்த எர்ணாகுளம் உயர்மறை மாவட்டத்தின்
அருள் தந்தையுமான பைனுங்கல் ஜோசப் பி எச் டி ஆவார். அவர்களை அழைத்து எர்ணாகுளம்
உயர்மறை மாவட்ட பேராயர் மார் அகஸ்டின் கண்டத்தில் அவர்களோடு ஆலோசனைகள் நடத்தவும்
செய்தார். அவ்வாறு மறுஒன்றிப்பு முயற்சிகளுக்குத் தடையாக இருந்தவற்றை சீர்
செய்தார். எர்ணாகுளம் ஆயரகத்திற்கு வந்து உறுதிமொழி எடுப்பதற்கான நாளும் நேரமும்
நிச்சயித்தனர்.
நமது ஆயர் அவர்களோடு இச்சூழலில்
பின்வாங்குவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு முயற்சிகள் மேற்கொண்டேன். அவரது
கருத்துக்களுக்கு எதிராக பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன். அவரது உண்மை
நிலைக்குள் என்னால் மீண்டும் எதிர் கருத்து கொண்டிருக்க முடியவில்லை. நேர்வழி அல்ல
மறைமுகமாக அவருடைய முயற்சிக்கு தோல்வி உருவாக்க நான் முயற்சி மேற்கொண்டேன். அன்றைய
திருத்தொண்டரான முக்காஞ்சேரில் பத்ரோஸ் ரம்பானை வரவழைத்து எனது கருத்துக்களை
அவரோடு எடுத்துக் கூறினேன்.
எர்ணாகுளம் ஆயரகத்திலிருந்து அவரை அழைத்துச்
செல்வதற்கான வாகனம் மறுநாள் அதிகாலையில் அங்கு வந்து சேரும் என
நிச்சயிக்கப்பட்டிருந்தது. காரில் செல்வதாக இருந்தால் மக்களின் எதிர்ப்பலைகளை
சந்திக்க வேண்டி இருக்கும். எனவே அதற்கு முந்தைய நாளே படகு வழியாக எர்ணாகுளத்திற்கு
செல்வது மிகவும் அமைதியான சூழலை ஏற்படுத்தும் என ஆயரிடம் எடுத்துக் கூறினேன். எனது
கருத்துக்களை நம்பவும் சம்மதிக்கவும் செய்தார்.
உடனடியாக ஒரு படகு ஒன்றை நாங்கள் ஏற்பாடு
செய்தோம். அன்று மாலை இரவு உணவுக்குப் பின்னர் அனைத்து தேவையான பொருட்களோடு
நாங்கள் படகு பயணம் புறப்பட்டோம். பருமலை செமினேரி நோக்கி படகை செலுத்துவதற்கு
படகோட்டியோடு ஆயர் அவர்கள் இரகசியமாக கூறியிருந்தார். வழக்கத்திற்கு மாறாக ஆயர்
அவர்கள் பயணத்தின் போது நன்றாக தூங்கினார்.
அதிகாலை மூன்று மணி நேரத்தில் காலை
மன்றாட்டுக்காக ஆயர் அவர்கள் என்னை தூக்கத்திலிருந்து விழித்தெழச் செய்தார். முகம்
கழுவி ஆற்றங்கரையோரம் பார்த்தபோது இது “வைக்கம் அருகே உள்ள செம்மனாக்கிரி என்னும்
இடம் அல்லவா! எர்ணாகுளம் செல்ல வேண்டிய நாம் ஏன் தெற்கு நோக்கி செல்கிறோம்? எனக் கேட்டேன்.
உடனடியாக மிகுந்த வலிமையோடும்
கட்டாயப்படுத்தலோடும் எர்ணாகுளம் செல்வதற்கான தடைகள் பல எடுத்துக் கூறி பருமலை
செமினேரி நோக்கி செல்கிறோம் எனக் கூறினார். ஆயர் அவர்கள் அழுகை கொண்டார். அழுத
முகத்தோடு உங்களது விருப்பம் போல நடக்கட்டும் எனக் கூறி வருந்தினார். அன்று முதல்
ஆயர் மனதளவிலும் உடலளவிலும் நோயாளியாக மாறினார். மூன்று ஆண்டுகள் பருமலை செமினாரியில்
அவர் தங்கி வாழ்ந்தார். இக்காலத்தில் தான் அன்றைய ஆயர் மாமன்றத்தின் தலைவராக
இருந்து நிரணம் ஆலயத்தில் திருவனந்தபுரம் பேராயர் மார் இவானியோஸ் அவர்களுக்கு ஆயர்
அருள்பொழிவு வழங்கினார். தனது பெயரையே மார் இவானியோஸ் என அவர் ஏற்றுக் கொண்டதில்
அவருக்கு தனி விருப்பமும் கொண்டிருந்தார். அசாதாரணமான அன்பும் மதிப்பும் கொண்ட
அரவணைப்பு நமது ஆயரின் மனதில் காணக்கிடந்தது. எருசலேம் பயணத்தின் போது அவர்
பெற்றுக் கொண்ட பல புனித பொருள்களையும் பருமலை செமினாரிக்கு ஒப்படைத்தார்.
ஆன்மீகத்தில் பெரும் பேற்றை பெற்றுக் கொண்டு திருச்சபை மறுஒன்றிப்புக்கு
முக்கியமான நிலை வேண்டும் என நம்பியிருந்தார்.
அன்று ஆயர் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை
நான் சொல்லாமல் இருந்திருந்தால் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைந்து இன்று நான்
கேட்க வேண்டிய பல பழிச்சொற்களுக்கும் இடமில்லாமல் போயிருக்கும். அந்த புனிதமான
ஆன்மாவின் மனதை தடுத்ததன் சிலுவைகளை இன்று நான் சுமக்கின்றேன். அன்று ஆயர்
மறுஒன்றிப்படைந்திருந்தால் இன்று மிகப் பெரும் வலிமை பெற்றதாக மாறி
இருந்திருக்கும்.
ஆயரின் தந்தையின் சகோதரன் இறந்த சைமன் மார்
டயனோசியஸ் பேராயர் ஆவார். அவரும் மறுஒன்றிப்பிற்கு மிகவும் விரும்பிய நபராக
செயல்பட்டிருந்தார் என அவருடைய குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார்.
யாக்கோபியா ஆயர்கள் பலர் மறுஒன்றிப்பு
முயற்சிகளை விரும்பி செயல்படுத்த முனைந்துள்ளனர். இறைவனின் அருள் வரமின்றி அவற்றை
செயல்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டன. இருப்பினும் யோவாக்கீம் மார் இவானியோஸ் ஆயரின்
ஒன்றிப்பு முயற்சி யாக்கோபாய சகோதரர்களுக்கு மிக முக்கியமான சிந்தனையாக அமையும் என
முடிக்கின்றேன்.”
(சத்திய சபா காகளம் விசேஷால்பிரதி பக்கம் 54
முதல் 56 வரை)
கினானாய பேராயரின் மறுஒன்றிப்பு முயற்சி
1909ல் கேரளாவுக்கு வருகை புரிந்த அப்துல்லா
மறைமுதுவரிடமிருந்து அருள்பொழிவு பெற்ற கேரளாவில் கினானாயா சமுதாயத்திற்கு உட்பட்ட
யாக்கோபாய பேராயர் தான் மார் சேவியரியோஸ் ஆவார். அவர் 1921 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம்
தேதி கோட்டயம் வலியபள்ளி என்னும் இடத்தில் வைத்து கோட்டயம் மறைமாவட்டத்தின் ஆயராக
பணியாற்றிய சூளப்பரம்பில் மார் அலெக்சாண்டர் ஆயரோடு இணைந்து மறுஒன்றிப்புக்கான
ஆலோசனைகள் நடத்தினார். பின்னர் சூளப்பரம்பில் ஆயர் ராந்நி என்னுமிடத்திலுள்ள
மறைப்பணித்தலத்தை சந்தித்தபோது கத்தோலிக்கர்களும் யாக்கோபாயர்களும் இணைந்த
அக்கூட்டத்தில் மறுஒன்றிப்பு ஆலோசனைகளைப் பற்றி இவ்வாறு கூறினார்.
“நாம் 345 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு
புலம்பெயர்த்தவர்கள் ஆவோம். நாம் பல்வேறு பிரச்சனைகளால் இரண்டாக பிளவுற்று
இருக்கிறோம். நான் பதவியேற்று ஏழு ஆண்டுகளாக தற்போது மார் சேவேரியோஸ் ஆயரை
சந்திக்க நேர்ந்தது. நாங்கள் இரு சமுதாயத்தினரின் ஒன்றிப்பைப் பற்றி உரையாடிக்
கொண்டிருந்தோம்.
தற்போது நாங்கள் என்றும் நீங்கள் என்றும்
நான் கூற வேண்டி உள்ளது. இனி வருகின்ற ஒரு காலத்தில் நாம் என மட்டுமே கூற
வேண்டும். அதனுடைய சூழல் உருவாகும் என நம்புகிறேன். நானும் மார் சேவேரியோஸ் ஆயரும்
இணைந்து ராந்நியின் யாக்கோபாயா ஆலயமான வலிய பள்ளி என்னும் இடத்தில் உங்களை
ஆசீர்வதிக்க இறைவன் சூழல்களை ஏற்படுத்துவார் என நான் நம்புகிறேன்.”
1921 ஆகஸ்ட் 10ஆம் தேதி க்னானாய
யாகோபியர்களுள் 13 அருள்தந்தையர்களும் சில திருத்தொண்டர்களும் பொதுநிலையினரும்
சூளப்பறம்பில் ஆயரை சந்தித்து மறுஒன்றிப்பைப் பற்றிய உரையாடல் நிகழ்த்தினர்.
நம்பிக்கையோடு இந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டும் கத்தோலிக்க நம்பிக்கையாளர்கள் யாக்கோபாயர்
சகோதரர்களின் மறுஒன்றிப்புக்காக தனிப்பட்ட ஜெபங்கள் நடத்த வேண்டும் என அறிவுரை
கூறியும் கோட்டயம் மறை மாவட்டத்தின் ஆலயங்களுக்கு 1921 நவம்பர் 27ஆம் தேதி
அனுப்பிய வெளிப்படையான திருமடலில் யாக்கோபாயர்கள் நடத்திய மறுஒன்றிப்பு முயற்சி
ஆலோசனையைப் பற்றி சோளப்பரம்பில் ஆயர் இவ்வாறு கூறியுள்ளார்;
“இந்த இணைப்பைப் பற்றி அவர்களுடைய அருள்
தந்தையர்களும் இறைமக்களும் மட்டுமல்ல அவர்களுடைய தலைமைக்குருவையும் எடுத்துக் கூறி
நாங்கள் கூடுகைகளை நடத்தி, பல சந்திப்புகளின் வழியாக இத்தகைய எண்ண அலைகள் வேகம் கொண்டன. இதற்கு எதிர்
கருத்துக்கள் எங்கும் காணப்படவில்லை. பல இடங்களிலும் பலரும் உண்மை நம்பிக்கையை
ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளனர். ஒரு அருள் தந்தையும் திருத்தொண்டரும் உண்மை
திருச்சபையில் ஏற்கனவே வந்தடைந்து விட்டனர்.
நாம எதிர்பார்த்ததைப் போன்று மார் சேவறியோஸ்
பேராயரின் மறுஒன்றிப்பு ஆலோசனைகள் செயல் திட்டத்திற்கு வரவில்லை. ஆயர் சில
காலங்கள் கூட வாழ்ந்திருந்தால் கத்தோலிக்க திருச்சபையில் மறுஒன்றிப்புக்கான செயல்
திட்டம் நிறைவேறி இருக்கும்.
அதிகாரம் 19
கத்தோலிக்க திருச்சபையில் திருவழிபாட்டு
முறைகளும் திருப்பலியும்
திருப்பீடத்திலிருந்து புதிய
திருவழிபாட்டுக்கான அனுமதி பெற்ற பின்னர் தான் நம் கதாநாயகன் கத்தோலிக்க
திருச்சபையோடு ஒன்றிப்படைந்தார். உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்கான
விருப்பமும், மலங்கரை அகத்தோலிக்கர்களின் ஒன்றிப்படைவதன்
ஆர்வமும், கதாநாயகனின் கடிதங்களின் எழுத்துத் திறமையும்
மொழிப்பலமையும் தான் அத்தகைய அனுமதியை வழங்குவதற்கு திருத்தந்தையைத் தூண்டியது.
இதைப் பற்றிய விவரங்கள் பின்வரும் அதிகாரங்களில் உள்ளன. ஆனால் அதற்கு முன்,
கத்தோலிக்க திருச்சபையில் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு
திருவழிபாடுகள் மற்றும் திருப்பலி முறைகள் பற்றிய விரிவான அறிவைப் பெறுவது
வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த அதிகாரத்தில்
அத்தகைய சில விடயங்களை விளக்க விரும்புகிறேன்.
“றீத்து” என்பதன் பொருள்
எந்தவொரு மதத்தின் வழிபாட்டுச்
சடங்குகளையும் குறிக்கும் வகையில் இலத்தீன் மொழியில் உருவான “றீத்துஸ்” என்ற சொல், ஆங்கிலத்தில் “ரைட்” என்ற சொல்லாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
"செய்முறை" என்ற அர்த்தம் கொண்ட “ரீதி” என்ற மலையாள வார்த்தையின்
தோற்றம் பற்றி மொழியியலாளர்கள் ஆராய்தல் வேண்டும். இது மத அமைப்பின் செயல்கள்,
பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகளை குறிக்கும் ஒரு வார்த்தையாகும்.
கிறித்தவ அருளடையாளங்களில் மிக முக்கியமான திருப்பலியின் வழிபாட்டுச்சடங்குகளை
குடுப்பிடவும் றீத்து என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட
குழுவினரால் வரையறுக்கப்பட்டுள்ள வழபாட்டுச் சடங்குகளை குறிப்பிடும் சொல் தான்
றீத்து என அர்த்தம் கொள்கின்றது.
றீத்து என்ற சொல்லுக்கு சடங்குகளின்
வரையறையில் திருச்சபை சட்டங்களும் அடங்கும். நோன்பு மற்றும் உண்ணாவிரதத்தை
கடைப்பிடிக்கும் சட்டங்கள் திருச்சபை சட்டங்களுள் உள்ளன. தேவாலயம், தேவாலய பொருட்கள், ஆடைகள், நாட்காட்டிகள்,
பாடல் நூல்கள், அனைத்தும் றீத்து என்
சொல்லுக்குள் அங்குகின்றன. திருப்பலி சமர்ப்பித்தல், அருடையாளங்கள்
நடத்துதல், திருப்பலிக்கான ஆடைகளை அணிதல் போன்ற வழிபாட்டுகளை
செய்யும் முறைகளையும் றீத்து என்ற சொல்லால் பயன்படுத்தலாம்.
கத்தோலிக்க திருச்சபையில் ஆரம்பம் முதல்
ஒவ்வொரு நாடு, மொழி, இன
வேறுபாடுகளுக்கேற்ப பல்வேறு திருவழிபாட்டு முறைகள் உருவாகியுள்ளன. கத்தோலிக்கர்கள்
நம்பிக்கை உண்மைகள் மற்றும் வழிபாட்டு் செயல்கள்
தொடர்பாக பரிபூரண ஒற்றுமையைக் கோரினாலும், வழிபாட்டுச்
செயல்கள் மற்றும் சடங்குகள் தொடர்பாக அந்தந்த நாடு, மொழி மற்றும் இனம் சார்ந்த பழக்கவழக்கங்களை பாதுகாக்கும் சுதந்திரத்தையும்
அவர்கள் அனுமதிக்கிறார்கள். எனவே, கால, இடம், இனம் மற்றும் மொழி வேறுபாடுகள் இன்றி
மனிதர்களின் அனைத்து மனித குலத்தின் பழக்க வழ்கங்களையும மதித்து, உலகம் முழுவதும் பரவியுள்ள ஆன்மீக அமைப்பு தான் கத்தோலிக்க திருச்சபை
என்பது ஆகும்.
அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள அல்லது
மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தாய் மொழிகளைப் பயன்படுத்தி, திருத்தூதர்கள் வழிபாட்டு முறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தி, அவற்றைத் தொடரவும் செய்து வருகின்றனர். இவ்வாறு, கத்தோலிக்க
திருச்சபை பழங்கால திருவழிபாட்டு முறைகளைப் பாதுகாப்பதிலும், செழுமைப்படுத்துவதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக காலங்காலமாக
திருச்சபையின் வரலாற்று நிகழ்வுகள் கூறுகின்றன.
இன்று கத்தோலிக்க திருச்சபையில் பன்னிரண்டு
மொழிகளில் 20 (தற்போது24) திருவழிபாட்டு முறைகள் உள்ளன. இந்த திருவழிபாட்டு
முறைகள் ஒற்றுமையில் வேற்றுமையையும் வேற்றுமையில் ஒற்றுமையையும்
வெளிப்படுத்துகின்றன. கத்தோலிக்க திருச்சபை பல்வேறு நிறங்கள், வாசனைகள் மற்றும் வடிவங்கள் கொண்ட அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு
பூந்தோட்டம் போன்றது ஆகும். கத்தோலிக்க திருச்சபையில் உலகெங்கிலும் உள்ள ஐம்பது
கோடி மக்கள் சகோதர சகோதரிகளாக ஒன்றுகூடி, ஒரே இறையாண்மையின்
கீழ் ஒரே நம்பிக்கையைக் கடைப்பிடித்து, வெவ்வேறு மொழிகளில்
மற்றும் வெவ்வேறு முறைகளில் சடங்குகள் மற்றும் திருவழிபாடுகளை நடத்தும் அழகான
காட்சியைக் காண்கிறோம்.
தற்போதுள்ள இருபது (தற்போது 24)
திருவழிபாட்டு முறைகளை "மேற்கு" மற்றும் "கிழக்கு" என இரண்டு
வகைகளாகப் பிரிக்கலாம்: ஒவ்வொரு திருவழிபாட்டு முறையின் சுருக்கமான விளக்கப்
பகுதியைக் காணலாம்:-
மேற்கு திருவழிபாட்டு முறைகள்
இந்த தொகுப்பில் மூன்று திருவழிபாட்டு
முறைகள் உள்ளன.
1. இலத்தீன் திருவழிபாட்டு முறை: இது உலகம்
முழுவதும் பிரபலமானது. மேற்கு நாடுகளில் உள்ள கத்தோலிக்கர்களில் பெரும்பாலானோர்
இலத்தீன் திருவழிபாட்டு முறையை பின்பற்றுகின்றனர்.
2. மொசராபிக்கு திருவழிபாட்டு முறை:
ஸ்பெயின் நாட்டில் உள்ள சுமார் ஒன்றரை கோடி கத்தோலிக்கர்கள் இந்த திருவழிபாட்டு
முறையைச் சார்ந்தவர்கள் ஆவர்.
3. அம்புரோசியன் திருவழிபாட்டு முறை:
இத்தாலியில், இந்த திருவழிபாட்டு முறை மிலானில் மட்டுமே
உள்ளது. சுமார் ஐம்பது இலட்சம் கத்தோலிக்கர்கள் இந்த திருவழிபாட்டு முறையைச்
சார்ந்தவர்கள் ஆவர். மலங்கரை சிறியன்
திருவழிபாட்டு முறைக்கு அனுமதி வங்கிய திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் இந்த
திருவழிபாட்டு முறையைச் சார்ந்தவர் ஆவர். இம்மூன்று இனங்களின் பொதுவான மொழி
லத்தீன். (தற்போது இவை மூன்றும் ஒரே இலத்தீன் திருவழிபாட்டு முறை எனப்படுகிறது.)
கிழக்கு திருவழிபாட்டு முறைகள்
கிழக்கு நாடுகளில் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட திருவழிபாட்டு முறைகள் உள்ளன. இவற்றை
ஐந்து திருவழிபாட்டுக் குடும்பங்களாக வகுக்கலாம். (தற்போதைய பெயரகளும்
எண்ணிக்கையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன)
1. அலெக்ஸாண்டிரியன்
|
திருவழிபாடு |
இடம் |
எண்ணிக்கை |
|
காப்டிக் (எகிப்திய) |
எகிப்து |
66,000 |
|
எத்தியோப்பியன் (அபிசீனியன்) |
அப்சினியா |
55,000 |
2. அந்தியோக்கியன் (மேற்கு)
|
திருவழிபாடு |
இடம் |
எண்ணிக்கை |
|
அந்தியோக்கியன் சிரியன் |
அந்தியோக்கியா, அமெரிக்கா |
65000 |
|
மாறனைட் |
|
550000 |
|
மலங்கரை |
இந்தியா |
100000 |
3. அந்தியோக்கியன் (கிழக்கு)
|
திருவழிபாடு |
இடம் |
எண்ணிக்கை |
|
கல்தேயா |
அந்தியோக்கியா |
150000 |
|
சீறோ மலபார் |
இந்தியா |
1200000 |
.4. அர்மேனியன்
|
திருவழிபாடு |
இடம் |
எண்ணிக்கை |
|
அர்மேனியன் |
அர்மேனியா, அமேரிக்கா |
200000 |
5. பைசண்டைன்
|
திருவழிபாடு |
இடம் |
எண்ணிக்கை |
|
பல்கேரியன் |
பல்கேரியா |
12,000 |
|
தூய கிரேக்கம் |
கிரீஸ் |
6000 |
|
ஹங்கேரிய (செர்பியன்) |
ஹங்கேரி |
260,000 |
|
இற்றாலோ கிரீக் |
தெற்கு இத்தாலி, சிசிலி, அமெரிக்கா |
100000 |
|
மல்க்கைட் |
மல்க்கைட், அமெரிக்கா |
310,000 |
|
ரோமானியன் |
ருமேனியா, அமெரிக்கா |
2,800,000 |
|
ரஷ்யன் |
போலந்து, ரஷ்யா,
அமெரிக்கா மற்றும் கிழக்கு நாடுகள் |
40000 |
|
ருத்தேனியன். |
போலந்து, செக்கோஸ்லோவாக்கியா,
ருமேனியா, ஹங்கேரி, தெற்கு
மற்றும் வட அமெரிக்கா |
9,400,000 |
|
யூகோஸ்லாவியன் (ஜார்ஜியன்) |
யூகோஸ்லாவியா |
65,000 |
கத்தோலிக்க திருச்சபை பன்னிரண்டு
மொழிகளுக்கும் மேலாக இருபதுக்கும் மேற்பட்ட திருவழிபாட்டு முறைகளை
உள்ளடக்கியுள்ளது. அவை 1. இலத்தீன், 2. கிரேக்கம்,
3. காப்டிக், 4. எத்தியோப்பியன், 5. மேற்கு சிரியாக், 6. கிழக்கு சிரியாக், 7. ஆர்மீனியன், 8. ஜார்ஜியன், 9.
அரபு, 10. செக்கோஸ்லோவாக்கியன், 11.
ருமேனியன், 12. மக்யார். மற்றும் சில. இவற்றில், இலத்தீன், காப்டிக், கிரேக்கம்
மற்றும் மேற்கத்திய சிரியாக் ஆகியவை இறந்த மொழிகள் மற்றும் மீதமுள்ளவை வாழும்
மொழிகள் ஆகும்.
திருப்பலி முறைகள்
தக்ஸா என்பது கிறிஸ்தவ திருச்சபையில்
அருளடையாளங்களில் முக்கியத்துவம் பெற்ற திருப்பலி திருவழிபாட்டை நிறைவேற்றும் போது
பயன்படுத்தப்படும் பிரார்த்தனைகள் மற்றும் சடங்கு நடைமுறைகளைக் கொண்ட
புத்தகமாகும். இன்று கத்தோலிக்க திருச்சபையிலும் அகத்தோலிக்க திருச்சபையிலும்
பல்வேறு திருப்பலி முறைகள் உள்ளன. இவற்றின் நீண்ட கால ஆய்வுகளின் பலனாக, இன்று இருக்கும் அனைத்து தக்ஸாக்களின் தோற்றம் நான்கு வகையான
தக்ஸாக்களிலிருந்து வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவை ஒவ்வொன்றின்
சுருக்கமான விளக்கம் கீழே:
1. அந்தியோக்கியன் தக்ஸா
தக்ஸாவில் மிகவும் பழமையானது கிழக்கு
நாடுகளில் பிரபலமாக இருந்த யாக்கோபின் தக்ஸா என்று அழைக்கப்படுவது ஆகும். இரண்டாம்
நூற்றாண்டிற்குப் பிறகு ஒரு முறையான வடிவத்தில் உருவான தக்ஸா திருத்தூதர் யாக்கோபு
உருவாக்கியதாக கூறப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில் அந்தியோக்கியாவில் இந்த தக்ஸா
அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டது. இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் ஆங்காங்கே
பயன்படுத்தப்பட்ட இத்தக்ஸா கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என்றும் அதன்
மொழிபெயர்ப்பே சிறியன் மொழியில் உள்ளது என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். கிரேக்க
மொழி தக்ஸாவை கிரேக்க நாட்டிலும் மற்றும்
ஜெருசலேமில் உள்ள கிரேக்கர்கள் ஆண்டுக்கு ஒரு முறை பயன்படுத்துகின்றனர். கிழக்கு
கிறிஸ்தவர்களிடையே இப்போது நடைமுறையில் உள்ள அனைத்து வழிபாட்டு முறைகளும்
அந்தியோக்கியன் தக்ஸாவை அடிப்படையாகக் கொண்டவை. யாக்கோபின் தக்ஸாவிலிருந்து உருவான
ஐம்பத்து நான்கு திருப்பலி முறைகள் யாக்கோபாயா தேவாலயத்தில் உள்ளன.
கான்ஸ்டான்டினோப்பிளின் கிரேக்கர்கள் பயன்படுத்திய மார் இவானியோஸின் தக்ஸா, ஆர்மேனிய திருச்சபையினரின் தக்ஸா, நெஸ்தோரியர்களின்
தக்ஸா, யாக்கோபாயர்களின் பல தக்ஸாக்கள், அந்தியோக்கியன் கத்தோலிக்கர்கள் மற்றும் மலங்கரை கத்தோலிக்கர்களால்
பயன்படுத்தும் தக்ஸாக்கள் ஆகியவை அனைத்தும் மார் யாக்கோபின் தக்ஸாவை அடிப்படையாகக்
கொண்டது.
2 அலெக்ஸாண்டிரியன் தக்ஸா
இது எகிப்து மற்றும் அலெக்சாண்டிரியா போன்ற
நாடுகளில் பயன்படுத்தப்படும் மற்றும் மார்க்குவின் தக்ஸா என்று அழைக்கப்படும்
தக்ஸா ஆகும். ஐந்தாம் நூற்றாண்டில் உருவானதாக கூறப்படுகிறது. நற்செய்தியாளரான
மாற்குவின் அறிவுரைப்படி இத்தக்ஸா உருவானது என்றும் கூறப்படுகிறது. கிரேக்கம், காப்டிக் மற்றும் அப்சினியன் வழிபாட்டு முறைகள் அனைத்தும் இந்த வரிசையிலிருந்து
தோன்றியதாக கருதப்படுகிறது.
3. ரோமன் தக்ஸா
இது இத்தாலி, சிசிலி
மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் தக்ஸா ஆகும், இது திருத்தூதர் பேதுருவின் தக்ஸா என்று அழைக்கப்படுகிறது. ஆறாம்
நூற்றாண்டில் திருத்தந்தை கிரகோரியின் கீழ் முறைப்படுத்தப்பட்டது. 5ஆம்
நூற்றாண்டில் திருத்தந்தை கலாசியஸ் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த கையெழுத்துப் பிரதி
ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது திருத்தூதர் பேதுருவால்
உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.
பல்வேறு தக்ஸாக்களை ஆய்வு செய்த பால்மர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:-
“திருத்தந்தை கிரிகோரி காலத்தில் பயன்படுத்தப்பட்ட உரோமன் தக்ஸாவின் வரிசையும்
பொருளும் இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது என நம்பிட பல காரணங்கள் உள்ளன.”
4. கள்ளிக்கன் தக்ஸா
திருத்தூதர் யோவானால் உருவாக்கப்பட்டு
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் செயல்படுத்தப்பட்டது. பால்மர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்:- “திருத்தூதர் யோவானால் இத்தக்ஸா உருவாக்கப்பட்டது. தனது
சீடரான பாலிக்கார்ப்பிடமிருந்து ஐரேனியஸ் அதை எடுத்து கவுல் என்னுமிடத்தில்
நடைமுறைப்படுத்தப்பட்டது.
இன்று கிறிஸ்தவ உலகில் புழக்கத்தில் உள்ள
பல்வேறு தக்ஸாக்களின் தோற்றம் மேற்குறிப்பட்ட நான்கு தக்ஸாக்களிலிருந்து வந்ததாக
அறிஞர்கள் நம்புகின்றனர். இந்த நான்கு தக்ஸாக்களும் வெவ்வேறு தக்ஸாவா? அல்லது இந்த நான்கு புத்தகங்கள் நான்கு பேரால் எழுதப்பட்டதா? கிறிஸ்துவின் சீடர்களான யாக்கோபு, மாற்கு, பேதுரு மற்றும் யோவான் உருவாக்கிய தக்ஸாக்களா? அல்லது
அவர்களின் பெயர்களால் புனையப்பட்டதா? இவை பற்றிய பல
கருத்துக்கள் கூறப்படுகின்றன. உண்மை எதுவாக இருந்தாலும், அறிஞர்கள்
மற்றும் ஆய்வாளர்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்ற சில உண்மைகள் இவற்றுள் உள்ளன.
1.
திருத்தூதர்களால் நிறுவப்பட்டது
திருப்பலி முறைகள் தோற்றம் கொண்ட இடம் ஒன்றே
என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும்
விண்ணேற்றத்திற்கும் இடைப்பட்ட நாற்பது நாட்களில் இயேசு தனது திருத்தூதர்களுக்கு
எவ்வாறு திருப்பலி ஓப்புக்கொடுக்க வேண்டும் என கற்பித்திருந்ததாக நம்பப்படுகிறது.
கிறிஸ்து கற்பித்ததன்படி சீடர்கள் மற்றும் அவர்களின் வழிமரபினர் தங்களது நினைவில்
தோன்றிய செபங்களைச் சொல்லி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. நான்காம்
நூற்றாண்டில் தான் ஒவ்வொன்றும் முறையாகப் வேவ்வேறு விதங்களில் பதிவு செய்யப்பட்டன.
2. வேறுபாடுகள்
நான்காம் நூற்றாண்டில் பல திருப்பலி முறைகள்
பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் வழிபாட்டு முறைகள் மற்றும்
சடங்குகளில் பல வேற்றுமைகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கு மற்றும் கிழக்கு
திருவழிபாட்டு முறைகளில் பல சேர்த்தல், நீக்குதல் மற்றும்
மாற்றங்களைக் கொண்டுள்ளன. உரோமன் தக்ஸாவில் பதினாறாம் நூற்றாண்டிலும் இத்தகைய
மாற்றங்கள் செய்யப்பட்டன. 16 ஆம் நூற்றாண்டில் திரிதெந்து திருச்சங்கத்தில் வைத்து
தற்போதைய நிலை கொண்டுவரப்பட்டது. திருத்தந்தை ஐந்தாம் பயஸ் 1570 இல் வெளியிட்ட 'குவாம்ப்ரீமும்' என்ற திருத்தூதுவ மடலில் உரோமைக்
கிறிஸ்தவர்கள் அனைவரும் வித்தியாசத்தை ஏற்படுத்தாமல் ஒரே வடிவிலான திருப்பலி முறை
பயன்படுத்தப்படவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
3. கருத்துருவில் ஒற்றுமை
அறிஞர்களால் ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்ட
மற்றொரு உண்மை என்னவென்றால், கருத்துருவில் அனைத்து
திருப்பலி முறைகளும் ஒன்னுக்கொன்று
ஒத்துப்போகின்றன. திருப்பலியில் அப்பமும் திராட்சை இரசமும் இறைவனின் திருவுடல்
திருஇரத்தத்தமாக உருமாறும் எனவும் இது ஒரு தியாகப்பலியே எனவும் புனிதர்களோடு பரிந்துரை வேண்டல், இறந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் போன்றவை அனைத்து திருப்பலி முறைகளிலும்
பொதுவானது. 16 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பாவில்
சீர்திருத்தவாதிகள் பழைய தக்ஸாவின் பல பகுதிகளையும் நீக்கினர். சமீப காலங்களில்
கேரளாவின் மார்தோமா திருச்சபையினரும் மலங்கரை தக்ஸாவிலிருந்து பல செபங்களையும்
நீக்கியுள்ளனர்.
அதிகாரம் 20
மறுஒன்றிப்பு ஆலோசனைகளும் தன் வரலாறும்
மலங்கரை ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் உயர்
பேராயர் மற்றும் ஆயர் மார் இவானியோஸ் உள்பட பல ஆயர்களும் இணைந்து கத்தோலிக்க
மறுஒன்றிப்பு முயற்சிகள் நடத்தினர். அதன்படி நடந்த ஆலோசனைகள் அந்தியோக்கியாவிலும்
தொடர்ந்து ரோமாவுக்கும் அனுப்பப்பட்ட கடிதங்கள் அவைக்கு கிடைத்த பதில்கள் மற்றும்
ஆயர்களின் பின் வாங்குதல்கள், நமது கதாநாயகன் கத்தோலிக்க
திருச்சபையில் இணைதல் போன்ற பல நிகழ்வுகள் இந்த அதிகாரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முன்னர் கத்தோலிக்க திருச்சபையோடு இணைவதற்கான ஈர்ப்பு இருந்தாலும்
மறுஒன்றிப்புக்கு முயற்சிக்க நமது கதாநாயகனுக்கு ஈர்ப்பு நல்கிய சில
கருத்துக்களும் இந்த அதிகாரத்தில் சேர்க்கப்படுகிறது.
மறுவண்டிப்பு பற்றிய எண்ணம் நமது ஆயரின்
மனதில் எப்போது முதல் துவங்கியது என்ற கேள்விக்கு சரியான பதில் கூறுவது
சாத்தியமில்லை. கத்தோலிக்கரல்லாத சபைகளிலிருந்து கத்தோலிக்க திருச்சபையோடு
இணைந்துள்ள அனைத்து நிகழ்வுகளும் உண்மைத் தேடலின் பல்வேறு படிநிலைகளைத் தாண்டியே
மறுஒன்றிப்பு இறுதியில் நடந்திருக்கிறது என வரலாறு தெரிவிக்கிறது. மார் இவானியோஸ்
ஆயரின் செயல்களும் இதிலிருந்து வேறுபட்டதல்ல என நமது மறுஒன்றிப்பின் வரலாறு
தெளிவாக்குகிறது.
யாக்கோபாய திருச்சபையின் பல கட்சிப்
போர்களிலும் பல்வேறு விதமான அதிகாரத்திற்கான போட்டிகளிலும் உள்பட்டு அவை மட்டுமே
முக்கிய பகுதிகளாக மாறியதனால் திருச்சபையின் அடிப்படையில் நிலைத்திருக்கும்
தவறுகளை காணவும் அறியவும் (கிரிதீபம் பக்கம் 1) உள்ள பெரும் பேறு கத்தோலிக்க
மறுஒன்றிப்புக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அவரால் முடிந்தது. கோட்டயம் எம்டி செமினாரியின்
முதல்வராக பணியாற்றிய போதும் செராம்பூர் கல்லூரியின் பேராசிரியராக
பணியாற்றியபோதும் கத்தோலிக்க திருச்சபை தொடர்பான பல நூல்களை வாசிக்கவும்
குருக்களும் பொதுநலையினரும் என பல கத்தோலிக்க முனைவர்களோடு இணைந்து திருச்சபை
தொடர்பான உரையாடல்கள் நடத்தவும் பல கத்தோலிக்க நிறுவனங்களை சந்திக்கவும் நமது ஆயர்
அவர்கள் வாய்ப்பு பெற்றிருந்தார். கத்தோலிக்க திருச்சபையின் ஆட்சி நிர்வாகம், நம்பிக்கை கொள்கைகள், உலகின் நான்கு பகுதிகளிலும்
திருச்சபை நிர்வகிக்கும் பிறரன்புப் பணிகள் போன்றவற்றைப் பற்றிய மதிப்பு நமது
கதாநாயகனுக்கு எப்போதும் இருந்தது.
யாக்கோபாயா திருச்சபையின் வெளிப்படையான
மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சியை இலட்சியமாக்கி துறவு சமூகமும் ஆசிரமமும்
நிறுவுவதற்குரிய எண்ணம் நமது ஆயரால் செரம்பூர் கல்லூரியில் பேராசிரியராக
பணியாற்றிய போது உருவானது. கத்தோலிக்க துறவு சபைகள் உலகமெங்கும் செய்து வரும் பணிகளை
கண்டும் கேட்டும் அறிந்தும் பலனாக இத்தகைய துறவு சபையை நிறுவுவதற்கு ஆயர் அவர்கள்
முன் வந்தார். பெதனி கிறிஸ்துவை பின்பற்றும் சபையினரின் சட்டதிட்டங்களையும்
செயல்பாட்டு முறைகளையும் ஆன்மீக நிகழ்வுகளையும் கத்தோலிக்க திருச்சபையின் துறவு
சபைகளின் பல சட்ட திட்டங்களிலிருந்து ஏற்றுக் கொண்டு உருவாக்கப்பட்டவை ஆகும்.
இதற்காக கர்மலித்தா துறவு சபையின் குருக்களின் ஒத்துழைப்பு அவருக்கு பேருதவியாக
இருந்தது. இதனால்தான் பல எண்ணங்களை மேற்கொண்டு கத்தோலிக்கரல்லாத பெதனி ஆசிரமத்தின்
மற்றும் துறவு சபையின் நிறுவும் காலத்திலேயே இவை அனைத்தும் இறுதியில் “உரோமை
திருச்சபையோடு சென்று இணையத்தான் செய்யும்” என அவர் உரைத்திருந்தார். இவ்வாறு அவர்
உரைத்தது நிறைவேற்றப்பட்டது என்ற உண்மை நிலை பின்னால் நடந்த நிகழ்வுகளால்
தெளிவாக்கப்படுகிறது.
கத்தோலிக்க திருச்சபையோடு அதிக மதிப்பும்
மரியாதையும் கொண்டிருந்த சூழலில் தான் அவர் ஆயராக அருள்பொழிவு செய்யப்படுவதற்காக
தேர்ந்தெடுக்கப்பட்டார். யாக்கோபாய திருச்சபையில் ஆயர் அருள்பொழிவு பெறுவதற்கு
முன்னர் கால்சிடோன் திருச்சங்கத்தின் கொள்கைகளையும் திருத்தந்தை லியோ அவர்களையும்
சபிக்கின்ற வார்த்தைகள் எடுத்துக் கூறவும் அதில் கையொப்பமிடமும் செய்ய வேண்டிய
வழிமுறைக்கு நமது ஆயர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார். கால்சிதோன்
திருச்சங்கத்தையும் திருத்தந்தை லியோ அவர்களையும் சபித்திட நான் தயாராக இல்லை
எனவும், அதன் பின்னரே ஆயராக அருள் பொழிவு
செய்யப்படுவேன் எனில் ஆயர் என்னும் நிலையே எனக்குத் தேவை இல்லை என அவர்
தெரிவித்தார். அவரது இத்தகைய கட்டாயமான வார்த்தைகளின் சூழலில் அன்றைய உயர்
பேராரும் ஆயர்களும் இறுதியில் சாபச் சொற்கள் சொல்லாமலேயே கையொப்பமிடாமலும் மார்
இவானியோஸ் என்ற பெயரால் நமது கதாநாயகனை ஆயராக அருள்பொழிவு செய்யவும் செய்தார்.
ஆயர் அவர்களுக்கு கத்தோலிக்க திருச்சபையோடு இருந்த மதிப்பும் மரியாதையும் தான் இது
தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.
கிறிஸ்தவ மறுஒன்றிப்பைப் பற்றிய உரை
ஆயர் அருள்பொழிவுக்குப் பின்னர் நிரணத்தில்
வைத்து நடைபெற்ற வாழ்த்து பொதுக்கூட்டத்தில் ஆயர் அவர்கள் நிகழ்த்திய உரையில்
கிறிஸ்தவ திருச்சபையின் மறுஒன்றிப்பை மையமாகக் கொண்டு ஒரு சில காரியங்களை அவர்
எடுத்தியம்பினார். அதன் ஒரு சில பகுதிகள் மட்டுமே சேர்க்கப்படுகிறது.
“கேரளாவின் சுறியானி கிறிஸ்தவர்கள் அனைவரும்
பழங்காலத்தில் ஒரே திருச்சபையாகவே ஒன்றிப்பில் அமைந்திருந்தனர். “ஒரே
திருச்சபையும் ஒரே ஆயரும்” என்ற கொள்கைக்கு ஏற்றபடி கேரள சுறியானிக்கார்ர்களை
உண்மை நிலைக்கு கொண்டு வர உயர்பேராயர் முயலவேண்டும்.
இந்த விடயத்தில் இறைமக்களே உங்களுக்கு
மிகப்பெரிய பொறுப்பு உண்டு. சமூக சடங்குகள், அரசியல்
பொறுப்புக்கள், பழங்கால வரலாறு, பேச்சுமொழி
மற்றும் குருத்துவ மொழி முதலிய கருத்துக்கள் தொடர்பாக கேரள சுறியானிக்காரர்கள்
அனைவருக்கும் இணைப்பு உண்டு. அவர்கள் உண்மையில் ஒரு சமுதாயத்தினரே. மதம் சார்ந்த
விஷயங்களில் மட்டும் பிரிவினை நடந்திருக்கிறது. மதம் சார்ந்த விஷயங்களில் அனைத்து
சுறியானிக் கிறிஸ்தவர்களும் இணைந்து பணியாற்றும் விதத்தில் ஆயர்களும் அவரோடு
இணைந்து நீங்களும் மனப்பூர்வமாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
கட்சிப் போர்களில் ஈடுபட்டிருப்பவர்கள்
ஏராளமான நியாயவாதங்களை எடுத்துக் கூறலாம் என எனக்குத் தெரியும். ஆனால் அவ்வாறு
உள்ள நிலைகளில் பொறுமையும், அமைதியும், இறைநம்பிக்கையும்
நம்முள் மேன்மேலும் உருவாகிட நாம் அனைவரும் ஜெபிக்க வேண்டும். அது இறைவனின்
மேன்மைக்கும் உங்களது வளர்ச்சிக்கும் காரணமாக அமையட்டும். இத்தலைமுறையில் மலங்கரை
சுறியானி சமுதாயம் இரண்டாக பிளந்து போக நாம் சம்மதித்தலாகாது. இப்பிளவை தடை
செய்யவும் ஒன்றுக்கொன்று அன்பு கூரவும் கிறிஸ்தவமாக என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள
வேண்டுமோ அவற்றையெல்லாம் நாம் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு நாம் பொறுமையும்
தியாகவும் செய்கின்றோமோ அந்த அளவுக்கு நாம் அவற்றை செயல்படுத்த வேண்டும். இப்போது
நம்மிடையே உள்ள இந்த பிளவு அகன்றிட நாமும் உயர் பேராயரும் இணைந்து முயற்சிக்க
வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டு
சீமைக்காரர்கள் செய்த தவறான பணிகளால் நம்மிடமிருந்து பிளவுற்ற மார்த்தோமா
சமுதாயத்தினர் ஒன்றிணைய நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சீமைக்காரர்களின்
இத்தகைய இழிவான செயல்களுக்கு துணையாக துணை நின்றவர்களும் நம்மிடையே உள்ளனர். நம்மிடமிருந்து
பிரிந்து சென்று ஒன்றிப்பின் பெரும் பேற்றை இழந்தனர். அவர்கள் அதனை இழந்தது போன்று
அவர்களை பிரித்துவிட்ட நாமும் அத்தகைய ஒன்றிப்பின் பெரும் பேற்றை இழந்துள்ளோம்
எனக் கூறுகிறேன். இஃது இறைவனுடைய முன்னிலையில் தவறானது என நான் நம்புகிறேன்.
அவர்களுள் குறைகள் பல இருந்தாலும்
அவர்களுக்கு எதிராக நாம் செயல்பட்ட அன்பற்ற நிலை மூலம் நாம் கிறிஸ்தவத்துக்கு
எதிரானவர்களாக மாறியது மட்டுமல்ல அவர்கள் சார்பாக நாம் கைக்கொண்ட பல
கருத்துக்களும் அறிவுரைகளும் அடிப்படையற்றதும் உண்மையற்றதுமாக அமைந்தன என நாம்
நினைவு கூரல் வேண்டும். திருத்தூதுவ மற்றும் கத்தோலிக்க அடிப்படைத்
தத்துவங்களிலிருந்து விலகிச்செல்லத் தூண்டிய கத்தோலிக்க திருச்சபையின் தத்துவங்களை
நாம் கிறிஸ்தவ வாழ்வில் முழுமை அடையுமாறு இறைவன் உலகிற்கு ஒப்படைத்துள்ள பேருண்மை
என்பதனை நாம் நம் வாழ்வில் வாழ்ந்து காட்டி அவர்களுக்குக் காண்பிக்க நம்மால் இயல
வேண்டும்.
மலங்கரை திருச்சபையில் உருவான பிளவை சீர்
செய்யவும் கத்தோலிக்க திருச்சபையின் அடிப்படையில் மார்த்தோமா திருச்சபையை
ஒன்றிப்படையவும் செய்வதன் வழியாக நாம் திருப்தியடைதலாகாது. சுறியானிக்
கிறிஸ்தவர்களில் பலர் உரோமை கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து நிற்கின்றனர். அவர்கள்
நமது எலும்பிலிருந்து எலும்பும் சதையிலிருந்து சதையும் ஆகின்றனர்.
பழைய கூற்றினர் என அழைக்கப்படும் ஒரு
மிகப்பெரிய மக்கள் சமுதாயமும் புதிய கூற்றினர் என அழைக்கப்படும்
சுறியானிக்காரர்களும் இடையே ஒன்றிப்பு உருவாக வேண்டும் என்பது தேவையானதே ஆகும்.
அரசியல் மற்றும் சமுதாய நிலைகளைப் பற்றிய சிந்தனைகளோடு மட்டுமே செயல்பட்டு வரும் முக்கிய
சமூகப்பிரமாணிகளும் சுறியானி சமுதாயத்தினர் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை
கொண்டுள்ளனர். சமுதாயம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்களை இலட்சியமாக்கி
அறிவிப்பது மட்டுமல்ல. உலக மீட்பராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து
கீழ்க்குறிப்பிட்டவாறு இறைவனோடு மன்றாடிய நிலையை நாம் அறிந்திருக்கின்றோம்.
“தந்தையே நானும் நீயும் ஒன்றாய் இருப்பது போல இவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!”
இந்த மன்றாட்டு மண்ணுலகில் நமது தலைமுறையிலும் இறை நம்பிக்கையோடும் எளிமையோடும்
உயர் பேராயர் மற்றும் நாம் அனைவரும் இணைந்து முயல்கின்ற போது அதைவிட மிகப்பெரிய
பெரும்பேறு இனி உருவாக முடியாது.
பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையில்
பிரபலமடைந்த ஒரு சக்தி எனப்படுவது பிரிவினைகளால் பலவித கிளைகளாக பிரித்து நலிந்து
போகச் செய்யும் சக்தியாக அது
மாறியிருக்கின்றது. கேவலமான இந்த நலிவுறும் சக்திக்கு கிறிஸ்தவர்கள் அடிமைப்பட்டு
வாழ்வது இந்த உலகத்திலேயே இழிவுக்குரிய செயலாகும். தற்போது கிறிஸ்தவ திருச்சபைத்
தலைவர்களின் மனங்களில் உளவாகும் விருப்பம் கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றிப்பு
எவ்வளவு சீக்கிரமாக நடைபெற முடியுமோ அது நிறைவேற வேண்டும் என்பதாகும். உரோமன்
கத்தோலிக்க திருச்சபையும் மற்ற திருச்சபையினரும் ஆங்கிலேய திருச்சபையினரும்
மற்றும் சிறிய திருச்சபைகள் ஒரு சில கருத்து வேறுபாடுகளைப் பற்றி விவாதங்கள்
நடத்தி பலவற்றை தியாக உணர்வோடு விட்டுக் கொடுத்தும் மறுஒன்றிப்புக்காக முயற்சிகள்
மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் பல இடங்களிலும் பிரபலமடைந்து விடும் வரும்
மறுஒன்றிப்பு முயற்சிகள் கேரளாவிலும் வலுப்பெற்று வளர வேண்டிய முயற்சிகளை நமது
உயர் பேராயர் செய்வார் என நம்புகிறேன். நமது திருச்சபையிலும் நம்மோடு இணைந்து
வாழும் திருச்சபைகளிலும் உள்ள திருச்சபை அதிகாரிகள் அன்போடும் ஒற்றுமையோடும்
இதற்கான ஆலோசனைகள் நடத்துகின்ற வாய்ப்புகள் ஏற்படுவதாக இருந்தால் அதுவே மிகப்பெரிய
பெரும்பேறாக அமையும் என நாம் அறிந்து கொள்ள வேண்டும். (பெதனி இதழ் 1925 ஜூன்)
கத்தோலிக்க திருச்சபையோடு
மறுஒன்றிப்படைவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நமது கதாநாயகன் நிகழ்த்திய
இவ்வுரையில் மறுஒன்றிப்பைப் பற்றிய அவரது விருப்பம் எவ்வளவு அமைந்திருந்தது எனத்
தெளிவாகின்றது.
ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டப் பின்னர்
அந்தியோக்கியாவின் சுறியானி கத்தோலிக்க மறைமுதுவரான ரஹ்மானி அவர்களோடு
மறுஒன்றிப்பு தொடர்பான கடிதப் போக்குவரத்துகளை அவர் நடத்தியிருந்தார். அன்றைய உயர்
பேராயர்கள் இத்தகைய கடிதப் போக்குவரத்து நடத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளும்
தூண்டுதல்களும் வழங்கியிருந்தனர் எனவும் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய
அவர்கள் விரும்பியிருந்தனர் எனவும் இந்த கடிதங்கள் தெளிவாக்குகின்றன. நமது ஆயரின்
மரணத்திற்கு முன்னர் எழுதிய “தன் வரலாற்று” (சுயசரிதை நூலில்) இத்தகைய கடிதங்கள்
மற்றும் மறுஒன்றிப்பு ஆலோசனைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளார். அவை
தொடர்ந்து இணைக்கப்படுகின்றன.
தன்வரலாறு
“பழைய செமினாரி மற்றும் பருமலை செமினாரி
போன்றவை தனது கட்டுப்பாட்டில் உள்ளது என அறிந்து கொண்டவுடன் வட்டச்சேரில் பேராயர்
அமைதி திட்டங்களோடு ஆலோசனைகள் நடத்த யாக்கோபாய மறைமுதுவரை சந்திக்க மர்தீன்
என்னும் இடத்திற்குச் சென்றார். அவருடன் திருவனந்தபுரம் ஆலயப் பங்குத்தந்தையான
ஆபிரகாம் கத்தனார் மற்றும் சிறிய மடத்தில் ஸ்கரியா கத்தனார் உடன் சென்றனர்.
இப்பயணத்தின் போது அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை திரும்பி வந்தபோது மும்பையில் வைத்து
அவர் என்னோடு எடுத்துக் கூறினார்.
மர்தீன் பயணத்தின் போது பாக்தாதில் வைத்து
திருத்தந்தையின் ஒன்றிப்பில் உள்ள சுறியானி மறைமுதுவரான ரஹ்மானி அவர்களது
கட்டுப்பாட்டில் உள்ள பேராயரை நம் பேராயர் மார் திவன்னாசியோஸ் சந்தித்ததாகவும்
தெரிவித்தார். யாக்கோபாயத் திருச்சபையுடன் நல்லுறவு ஏற்படுத்த இயலாத நிலையில்
கத்தோலிக்கத் திருச்சபையோடு இணைவதற்கான துவக்கமாக பாக்தாத் பேராயரை அறிமுகம்
செய்து கொள்வதற்காக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும் இந்த சந்திப்பு வேளையில்
கத்தோலிக்க மறுஒன்றிப்பைப் பற்றி எதுவுமே பேசவில்லை எனவும் தேவைப்பட்டால் திரும்பி
வரும்போது அதைப் பற்றி பேசலாம் என திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
திரும்பி வந்தபோது மீண்டும் பாக்தாத்தில் உள்ள பேராயரை நம் பேராயர் சந்தித்தார்.
அப்போது யாக்கோபாயா மறைமுதுவரின் பிரதிநிதியான ஆயர் யூலியோஸ் பேராயரோடு உடன்
இருந்ததனால் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைவது பற்றிய எந்த விதமான
உரையாடல்களும் அங்கு நடைபெறவில்லை. மும்பையிலிருந்து எர்ணாகுளத்திற்கு
தொடர்வண்டியில் பயணம் செய்தபோது இக்காரியங்களை பற்றி அவர் எடுத்துக் கூறினார்.
சில நாட்களுக்குப் பின்னர் ரஹ்மானி
மறைமுதுவரின் கடிதம் பருமலையில் பேராயர் மார் திவன்னாசியோஸ் அவர்களுக்கு
கிடைத்தது. இக்கடிதத்தின் கருத்துக்களைப் பற்றி ஆலோசனை மேற்கொள்வதாக பருமலை செமினாரிக்கு
என்னை அழைத்து இக்கடிதத்தை ஒப்படைத்தார். வாசித்து பதில் கடிதம் எழுத வேண்டும் என
அவர் என்னோடு கேட்டுக் கொண்டார். கடிதம் இவ்வாறாக அமைந்திருந்தது.
“மார் திவன்னாசியோஸ் அவர்களுக்கு ஆண்டவரின்
சமாதானம்! நீங்கள் எங்கள் நாட்டிற்கு வரவும் எனது உடன்பணியாளரான பாக்தாத் பேராயரை
சந்திக்கவும் செய்ததாக அறிந்ததில் நான் மகிழ்கிறேன். ஆனால் நீங்கள் எனது
ஆயரகத்திற்கு வந்து என்னை சந்திக்க இயலாததை எண்ணி வருந்துகிறேன். நீங்கள் என்னை
சந்தித்திருந்தால் நான் கூற வேண்டியிருந்ததை இக்கடிதம் வழியாக உங்களை
தெரிவிக்கின்றேன். மலங்கரையில் உள்ள உங்களது திருச்சபை அந்தியோக்கிய திருச்சபையின்
நம்பிக்கை மற்றும் திருப்பலி முறைகளை காத்து வருகின்றீர்கள் அல்லவா. உலகம்
முழுவதும் ஒரே ஆயனும் ஆட்டு மந்தையும் என ஆண்டவர் அருளியவாறு நீங்களும் மலங்கரை
திருச்சபை முழுவதும் நம்மோடு ஒன்றிணைய வேண்டும். நாங்கள் திருத்தந்தையோடு
ஒன்றிப்பில் வாழ்ந்து வருகிறோம். நீங்களும் ஒன்றிப்படைகின்ற போது அந்தியோக்கிய
திருச்சபையின் பழங்கால சட்ட திட்டங்களும் திருவழிபாட்டு முறைகளும் நீங்கள்
கடைபிடிக்க மேலும் உங்களுக்கு அனுமதி கிடைக்கும். உங்களது திருச்சபையைச் சார்ந்த
ஒருவர் உயர் பேராயராகவும் பேராயராகவும் ஆயர்களாகவும் தலைமுறை தலைமுறையாக
கிடைக்கும் என உறுதி கூறுகிறேன். இதைப் பற்றி நீங்கள் சிந்தித்து மகிழ்வுடன் பதில்
கடிதம் அனுப்ப அனுப்புவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.”
இக்கடிதத்தின் பதில் மொழி அனுப்புவதற்கு
பேராயர் நமது கதாநாயகனை ஒப்படைத்த பின்னர் இவ்வாறு கூறினார்;
“இணைவதற்கு எனக்கு சம்மதமே. ஆனால், சகோதரர்களாகிய ஆயர்களோடும் குருக்களோடும் பொதுநிலையினரோடும்
பிரமாணிகளோடும் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் மட்டுமே இறுதி தீர்மானத்தை எழுத
முடியும். “இணைவதற்கு சம்மதம்” என பேராயர் கூறியவுடன் “அவ்வாறு எழுதலாமா?” என நான் கேட்டேன். அவர் “அவ்வாறு எழுதலாம்” எனக் கூறிய பின்னர் இரண்டாவது
கருத்தை அவர் வெளியிட்டார். நான் தயாரித்த பதில் கடிதத்தை ஒரு சில மாற்றங்களுக்கு
உட்படுத்தி தனது உறவினரான விஏ வர்கீஸ் பி ஏ அவர்களால் பதிவு செய்து தபால் வழியாக
கடிதத்தை அனுப்பினார்.
நான் ஆயர் அருள்பொழிவு பெற்று ஒரு சில
தினங்களுக்குப் பின்னர் வீர ராகவ ஐயங்கார் உயர்நீதிமன்ற விதி பிரபலமான காலத்தில்
மார் திவன்னாசியோஸ் பருமலை செமினாரிக்கு உயர் பேராயரையும் மார் கிரகோஇயோஸ்
பேராயரையும் என்னையும் அழைத்து எதிர்கால நிலைகளைப் பற்றி மூன்று பேரும் ஆலோசித்து
தீர்மானம் எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். ரஹ்மானி
மறைமுதுவரின் கடிதத்தை எங்கள் மூவரையும் அவர் காண்பித்துப் பேசினார். நாங்கள்
மாமன்றத்தை கூடுமாறு அழைப்பு விடுத்தோம்.
அதன் தலைவராக உயர் பேராயரும் நான் அதன் செயலாளராகவும் செயல்பட்டேன். மாமன்றத்தின்
விவாப்த பொருள் உரோமை கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைதல் ஆகும்.
அந்தியோக்கிய திருச்சபையின் சட்ட
திட்டங்களும் நடைமுறைகளும் அங்கீகரிக்கவும் மலங்கரைக்கு சொந்தமான ஒரு ஆயரை தலைமுறை
தலைமுறையாக கிடைக்கவும் செய்கின்ற விதத்தில் உரோமை கத்தோலிக்க திருச்சபையோடு
இணைவதற்கான கடிதப் போக்குவரத்துகளை நடத்துவதற்கு அந்த மாமன்றம் என்னை ஒப்படைத்தது.
இதன்படி ரஹ்மானி மறைமுதுவருடன் நான் கடிதப் போக்குவரத்துத் துவங்கினேன்.
அவரிடமிருந்து பதில் கடிதமும் அவர்கள் பயன்படுத்துகின்ற திருவழிபாட்டு திருப்பலி
நூலின் அச்சிடப்பட்ட ஒரு பிரதியும் நான் பெற்றுக் கொண்டேன்.
மார் கிரிகோரிகோஸ் பேராயர் திருவல்லா
பாலியக்கரை பெதனி ஆலயத்திற்கு என்னை அழைக்கவும் அன்று இரவே அதற்கு அருகில் உள்ள
அச்சகத்தில் வைத்து ரஹ்மானி மறைமுதுவர் அனுப்பிய திருப்பலி நூலை முழுவதுமாக ஆய்வு
செய்தோம். இஃது யாக்கோபாயா திருச்சபை பயன்படுத்துகின்ற திருப்பலி நூலைப் போன்றதே
ஆகும். இதனை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளலாம் என பேராயர் மார் கிரிகோரியோஸ்
அவர்கள் தெரிவித்தார்.
கிறிஸ்து வருடம் 12ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்து கொண்டிருந்த திவன்னாசியோஸ் பர்ஸ்லீபி என்ற பேராயர் உருவாக்கியதும்
யாக்கோபாயா திருப்பலி நூலில் இடம் பெற்றிருந்ததுமான “ஹோக்கானோ சாரீரோயிஸ்” எனத்
துவங்குகின்ற அப்பம் பிட்குதல் திருச்சடங்கின் ஜெபத்திற்குப் பதில் அவரது
பிறப்பதற்கு முன்னரே அந்தியோக்கிய திருச்சபையில் பயன்படுத்தி வந்த ஜெபம் தான் இந்த
திருப்பலி நூலில் இருந்தது என்பது மட்டுமே ஆகும். “தந்தை மகன் தூய ஆவியின்
திருப்பெயரால் இந்த அப்பத்தை நான் பிட்கின்றேன்” என்ற வார்த்தை தான் அந்த
திருப்பலி நூலில் இருந்தது. இதனை மார் கிரிகோரியோஸ் பேராயர் ஏற்றுக்கொள்ளலாம் என
முன்மொழிந்தார். ரஹ்மானி மறைமுதுவரின் கடிதம் அவர் வாசிக்கவும் உயர் பேராயரோடு
ஆலோசித்து பதில் கடிதம் அனுப்புவதற்காக என்னை ஒப்படைக்கவும் செய்தனர்.
பின்னர் மி கே வி சாக்கோ மற்றும் அருட்தந்தை
மாத்தியூஸ் பாரேட்டு ஆகியோரை அழைத்துக் கொண்டு வாகானம் என்னும் இடத்திற்குச்
சென்று உயர் பேராயரை சந்தித்தோம். ரஹ்மானி மறைமுதுவர் அவர்களது பதில் கடிதத்தையும்
அவரைக் காண்பித்தோம். அதற்கு எப்படிப்பட்ட பதில் அனுப்ப வேண்டும் என ஆலோசித்தோம்.
பதில் கடிதமாக தனது சொந்த கையால் எழுதப்பட்ட கடிதத்தை உருவாக்கினோம். பின்னர்
திருவல்லா திருமூலபுரம் ஆசிரமத்திற்கு சென்று மார் திவன்னாசியோஸ் பேராயர் அவர்களது
உறவினராகிய மூலமண்ணில் தோமஸ் அருள்தந்தையின் கையெழுத்தால் அழகாக அதனை எழுதி ரஹ்மானி
மறைமுதுவருக்கு அனுப்பினோம். அதற்குப் பதிலாக ரஹ்மானி மறைமுதுவரிடமிருந்து எந்த
விதமான பதிலும் கிடைக்கவில்லை. அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு காலதாமதம் உருவாக்கியதாக
இருக்கலாம்.
சில காலங்களுக்குப் பின்னர் இலஞ்ஞிக்கல் மீ
இ ஜே ஜான் வழக்குரைஞர் அவரது மனைவியுடன்
திருவல்லா பாலியக்கர பெதனி ஆலயத்தில் என்னை சந்திக்க வந்தனர். அப்போது ரஹ்மானி
மறைமுதுவரின் சுறியானிக் கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை நான் அவரிடம்
காண்பித்தேன். அதை வாசித்த பின்னர் மி ஜான் என்னோடு கூறியது, “திருத்தந்தையின் நேரடியான ஒன்றிணைப்பிற்கு ஊக்கப்படுத்த வேண்டும்” எனக்
கூறினார்.
தொடர்ந்து கொச்சி அரசின் காவல் அதிகாரியான
பட்டாளம் கமாண்டரான பி எம் ஏ சாக்கோவின் மகனின் திருமணம் நடத்துவதற்கு எனக்கு
அழைப்பு விடுத்ததன் பொருட்டு திருச்சூருக்கு நான் சென்றேன். குன்னங்குளம் என்னும்
இடத்திற்கு அருகில் இருந்த ஒரு ஆலயத்தில் வைத்து திருமணம் நடந்தது.
திருச்சூரிலிருந்து அந்த ஆலயத்திற்கு காரில் செல்லும் வழியே கத்தோலிக்க
திருச்சபையோடு மறுஒன்றிப்படையும் நிகழ்வைப் பற்றி மீ சாக்கோ அவர்களோடு பேசினேன்.
அவர் கூறியது இவ்வாறாக அமைந்திருந்தது;
“நீங்கள் இந்த கருத்தைப் பற்றி
ஆலோசிப்பதற்கு முன்னரே நான் இதுகுறித்து முயன்று கொண்டிருந்தேன். நமது உயர்
பேராயரையும் அனைத்து ஆயர்களையும் திருத்தந்தை ஏற்றுக் கொள்ளவும் நமது திருவழிபாடு
அங்கீகரிக்கவும் செய்யப்படுவதற்காக தற்போது கல்கத்தாவில் தங்கி வாழும் அருள் தந்தை
கில் எஸ்ஜே என்ற கத்தோலிக்க அருள் தந்தை வழியாக நான் கடிதம் அனுப்பி வருகின்றேன்.
ஆயர் அவர்கள் நேரடியாக முயல்வதனால் சீக்கிரமாக அது நிறைவேறும் என நான்
நம்புகிறேன்.” (தன் வரலாறு முதல் பகுதி)
ஆர்த்தடோக்ஸ் திருச்சபை உறுப்பினர்களான
பலரும் இந்த பேருண்மையை வெளிப்படையாக மறுத்துரைக்க விருப்பம் காட்டி வருகின்றனர்.
கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்பின் ஆலோசனைகள் மேற்கொண்டது மார் இவானியோஸ்
தன்னந்தனியாக செயல்பட்டிருந்தார் என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
மேற்குறிப்பிட்ட தன்வரலாறு நூலில்
கத்தோலிக்க மறுஒன்றிப்பு ஆலோசனை பற்றி மற்றும் ஆயர்களுக்கு இருந்த பங்கேற்பு
எவ்வளவு தெளிவாக இருக்கிறது என நமது கதாநாயகன் எடுத்துரைத்தார்.
தன் வரலாற்று நூலில் எழுதப்பட்டுள்ள மூன்று
விடயங்களை ஆர்த்தடோக்ஸ் திருச்சபையினர் மறுத்துரைக்கின்றனர்.
1. மரணமடைந்த உயர் பேராயர் மற்றும் அன்றைய
பேராயர் மார் கிரிகோரியோஸ் ஆகியோருடைய ஆலோசனைகளோடும் அனுமதியோடும் இணைந்து ரஹ்மானி
மறைமுதுவரோடு கடிதப் போக்குவரத்து நடத்தப்பட்டது.
2. வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ் பேராயர்
வெளிப்படையான அனுமதி நல்கவில்லை எனவும் மௌன சம்மதம் மட்டுமே வழங்கியிருந்தார்
எனவும் குறிப்பிடப்படுகிறது
3. ரஹ்மானி மறைமுதுவருக்கு அனுப்பப்பட்ட
கடிதத்தை கையெழுத்தாக எழுதியவர் வாகத்தானம் உயர் பேராயர் ஆவார்.
இன்றைய ஆர்த்தடோக்ஸ் திருச்சபை
உறுப்பினர்களில் பலரும் எதிர்க்கின்ற இந்த மூன்று காரியங்களின் உண்மை நிலையை
எடுத்துரைக்க முடியும்.
மரணமடைந்த வாகத்தானம் உயர் பேராயரும்
முன்னால் மார் கிரிகோரியோஸ் பேராயராக இருந்தவர் அப்போதைய பணி உயர்வு பெற்ற
உயர்பேராயரும் இருவரும் நமது கதாநாயகனோடு ஒருமித்து மறுஒன்றிப்பு ஆலோசனைகளை நடத்தி
வந்ததை நாம் அறிந்து கொண்டோம். இவ்வாறு தற்போதைய உயர் பேராயர் குண்டற
என்னுமிடத்திலிருந்து பெதனிக்கு அனுப்பிய கடிதத்தின் உண்மை நிலை இதனை
தெளிவாக்குகின்றது. மார் இவானியோஸ் ஆயர் இதனை பத்திரமாக பாதுகாத்து
வைத்திருந்தார். அதன் உள்ளடக்கம் மொழிபெயர்ப்பில் சேர்க்கப்படுகிறது.
எண்
மலபாரின் ஆர்த்தடோக்ஸ் சிறியன் திருச்சபை
மலங்கரையின் புகழ் சீராக்கப்பட்ட சுறியானி
திருச்சபை
இந்தியாவின் பெதனியின் மார் இவானியோஸ் ஆயர்
அவர்களுக்கு ஜெப ஆசீர்வாதங்கள் எப்போதும் நிலைத்திருக்கட்டும்!
நீங்கள் அனுப்பிய பொருள் கிடைத்தது. 17ஆம்
தேதி புதிய பள்ளி என்னும் இடத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்தோம். பெரிய ஆலயத்தின்
கட்டிடப் பணிகள் நடக்குமா என்பது ஐயமே. மிகப்பெரிய தொகை அதற்காக செலவிட வேண்டி
உள்ளது. இறைவனின் விருப்பம் போல் நடக்கட்டும். பழமையான திருச்சபையோடு இணைப்பு
வேண்டும் என்ற உயர்பேராயரின் மடலையும் கண்டேன். அதுவே நன்று என்பது எனது கருத்து.
நீங்கள் அனைவரும் எதனை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதற்கு நானும் சம்மதித்துக்
கொள்கிறேன். தாங்கள் கூறிய தொகையை சற்று அதிகமாக தருவதாக இருந்தால் நன்றாக
அமையும்.
இவன்
1926, 1102 சிங்ஙம்
15
குண்டறா ஆயரகத்திலிருந்து
மார் கிரிகோரியோஸ் பேராயர்
பழைய திருச்சபையோடு ஒன்றிப்பு வேண்டும் என
வாகத்தானம் உயர் பேராயரின் திருமடலில் குறிப்பிட்டதுவே எனது கருத்து எனவும்
தற்போதைய உயர் பேராயர் தெளிவுபடுத்தியுள்ளார். நமது கதாநாயகன் வாகத்தானம் உயர்
பேராயருக்கு அனுப்பிய கடிதத்தில் பழமையான திருச்சபையோடு இணைப்பைப் பற்றி எழுதியது
இவ்வாறாக இருந்தது;
“இந்த பொருளை வேறு எவரும் காண வேண்டாம் என்ற
கட்டாயம் எனக்கு உண்டு. மேதகு ஆயர் அவர்கள் இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து எண்ணிய
பின்னர் பரிகார மார்க்கம் கண்டடைய இவை துணையாகும். ஒரு சில வழிகள் எனது மனதில்
உதித்தவையாகும். நமது அடிப்படை நம்பிக்கைக்கும் புனிதமான சடங்குகளுக்கும் எவ்வித
கேடும் உருவாகாமல் பழமையான திருச்சபையோடு இணைவது நன்று தானா? உங்களது கருத்து என்ன? என நான் முன்னர் எழுதி
அனுப்பி இருந்தேன் அல்லவா? இதற்கு பதில் அனுப்ப வேண்டும்
என்பது இல்லை. இதைப் பற்றி பல விதங்களிலும் சிந்திக்க வேண்டும் என்பதே ஆகும். நீங்களும்
சின்ன ஆயரும் நானும் இணைந்து இறைவனின் அருளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட கருத்துக்களை
மட்டுமே நமது பேராயர் அவர்களிடம்
தெரிவிக்க வேண்டும். இப்போது இதனைப் பற்றி நீங்கள் எதுவுமே எவரோடும் நாம் கூற
வேண்டாம். குறிப்பாக ஆயராகிய உங்களுடைய நாவிலிருந்து இதைப் பற்றிய எத்தகைய
சொல்லும் வெளியே வர வேண்டாம்.
மார் இவானியோஸ்
கையொப்பம்
பழைய திருச்சபையோடு ஒன்றிணைய வேண்டிய தேவை
உண்டு என்பதைப் பற்றிய சரியான எண்ணம் ஆர்த்தடோக்ஸ் திருச்சபையின் ஆயர்களுக்கு
இருந்தன என்பதுதான் மேற்குறிப்பிட்ட கடிதங்கள் தெளிவு படுத்துகின்றன. அந்த பழைய
திருச்சபை எதுவாக இருக்க வேண்டும் என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். தாங்கள்
ஒவ்வொரு திருச்சபையின் ஆயர்களாக இருந்தபோது அந்த திருச்சபை மற்றும் அதன்
உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை இலட்சியமாக்கி செயல்படுகின்றனர். இந்த
சூழலில் அவ்வாறு நிறைவடைந்த ஒரு திருச்சபையோடு மட்டுமே ஒன்றிணைய வேண்டும் என
அவர்கள் விரும்பியதில் எந்த விதமான ஐயமும் இல்லை. யவுனாயா, யாக்கோபாயா, அரமேனியன், நெஸ்தோரியன்
மற்றும் இகுப்தாயா முதலான பழைய திருச்சபைகளுக்கு எந்த விதமான வளர்ச்சியும் இல்லை
எனவும் அவை நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே இருக்கின்றன என வரலாறு
தெளிவாக்குகின்றது. எனவே அனைத்து நிலைகளிலும் மேன்மை பெற்றுக் கொண்ட உலகனைத்தும்
உள்ள கத்தோலிக்க திருச்சபையோடு உள்ள ஒன்றிப்பை ஆயர்கள் மிகத் தெளிவாக எடுத்துக்
கூறியுள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களும் கடிதப் போக்குவரத்துகளும்
இந்த நிலையை மீண்டும் தெளிவுபடுத்துகின்றன.
பெரு மதிப்புக்குரிய புலிக்கோட்டு ஜோசப்
ரம்பானும் சேப்பாட்டு பிலிப்போஸ் ரம்பானும் இணைந்து தங்களது கத்தோலிக்க
ஒன்றிப்பிற்கு முன்னர் வெளியிட்ட “மலங்கரை திருச்சபையின் குழல் கண்ணாடி” என்ற
நூலில் பருமலை என்னும் இடத்தில் வைத்து நடைபெற்ற அனைத்து ஆயர்களும் இணைந்த
மாமன்றத்தில் இத்தகைய நிலையைப் பற்றி தீர்மானம் செய்யவும் செய்தனர் என
எழுதியுள்ளனர்.
அதற்கு பதில் மொழியாக ஆர்த்தடோக்ஸ்
திருச்சபை உறுப்பினரான திரு பி ஜே மாத்தியூ கோட்டயத்திலிருந்து வெளியிட்ட
“மலங்கரையின் பூதக்கண்ணாடி” என்ற நூலில் வெளியிட்ட பகுதி இத்துடன்
இணைக்கப்படுகிறது. இந்த விடயத்தை குறித்து ஆர்த்தடோக்ஸ் ஆயர்களோடும் கேட்டறிந்த
பின்னரே அவர்கள் இந்த நூலை வெளியிட்டுள்ளனர். அவை பின்வருமாறு;
அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டம் என்று
கூடியபோது இறுதியில் மார் இவானியோஸ் அவர்கள் திருச்சபையின் எதிர்கால நலனைப் பற்றி
ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என கட்டாயப்படுத்தியதன் மூலம் உயர் பேராயரும்
சின்ன ஆயரும் மார் இவானியோசும் இணைந்து ஆலோசனை நடத்தினர். மார்
திவன்னாசியோஸ்பேராயர் அவர்களும் அங்கு இருந்தாலும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில்
கலந்து கொள்ளவில்லை. “ஆயர் மாமன்றத்தின் அதிகாரத்தை மறுக்காத விடயங்களை ஆலோசித்து
தீர்மானித்துக் கொள்ளுங்கள்” எனக் கூறியவாறு அவர் அறையிலிருந்து வெளியேறினார்.
ஆனால் அங்கு நடைபெற்ற நிகழ்வு என்ன என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். பேராயர்
வெளியேறிய சரியான தருணத்தை பயன்படுத்திக்கொண்டு மார் இவானியோஸ் மிகப் பெரிய உரை
ஒன்று நிகழ்த்தினார். உயர் பேராயருக்கும் சின்ன ஆயருக்கும் அவரோடு வாதிடுவதற்கோ
அவரை விடவும் சரளமாக பேசுவதற்கோ சரியான திறமை இல்லாததால் இருவரும் அவருடைய கருத்தை
எதிர்ப்பதற்கு முடியாமல் வாயடைத்து நின்றனர். ஆனால் ஆலோசித்து தீர்மானித்தது இதுவே
என மார் திவன்னாசியோஸ் பேராயரை அறிவிக்க வேண்டாம் என தனிப்பட்ட முறையில்
நிச்சயித்தனர்.
இவர்கள் அல்லது ஆலோசனைக் கூட்டத்திற்கு
பின்னர், “ஏதேனும் தீர்மானித்தீர்களா?” என பேராயர் அவர்களோடு கேட்டார். “தீர்மானித்தோம்” என பதில் மொழி நல்கி
மார் இவானியோஸ் வேகமாக நடந்து சென்றார். மார் இவானியோஸ் அந்த நேரத்தில் நாங்கள்
எந்தெந்த காரியங்களை தீர்மானித்தோம் என்று உயர் பேராயரோடு அறிவித்திருக்க வேண்டும்
அல்லவா. (பூதக்கண்ணாடி பக்கம் 74 முதல் 75 வரை)
மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து வட்டச்சேரில்
மார் திவன்னாசியோஸ் பேராயரைத் தவிர மற்ற ஆயர்களோடு இணைந்து சம்மதம் பெற்ற பின்னர்
மட்டுமே மார் இவானியோஸ் ரஹ்மானி மறைமுதுவரோடு கடிதப் போக்குவரத்து நடத்த
துவங்கினார் என்பது தெளிவாகின்றது. மார் இவானியோஸ் அவர்களுடைய தூண்டுதலும்
கட்டாயப்படுத்துதலும் இருந்தது என்பது உண்மையே எனவும் நம்மால் அறிந்து கொள்ள
முடிகிறது. இருப்பினும் மற்று ஆயர்களின் ஆலோசனைகளோடும் சம்மதத்தோடும் தான் அவர்
கடிதப் போக்குவரத்து நடத்தினார் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
2. வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ்
பேராயரின் மௌன அனுமதி இதற்கு இருந்தது என்பது தெளிவாகின்றது. நீதிமன்றத்தில்
வழக்குகள் நடந்து கொண்டிருந்தபோது மலங்கரை யாக்கோபாயா திருச்சபையின் பேராயர் நானே
என அவர் கூறிக் கொண்டிருந்த சூழலில் - அந்தியோக்கிய யாக்கோபாய மறைமுதுவரின் ஆன்மீக
அதிகாரத்திற்கு தான் கட்டுப்பட்டவன் என நீதிமன்றத்தில் கூறி இருந்த காலத்தில் -
உரோமையின் தலைமை மறைமுதுவரின் ஒன்றிப்பில் உள்ள
அந்தியோக்கிய கத்தோலிக்க மறைமுதுவரோடு மறுஒன்றிப்புக்கான கடிதப்
போக்குவரத்து வெளிப்படையாக நடத்தும் போது வழக்கில் தான் பின்னடைவு அடையக் கூடும்
என அறிவாளியான உயர் பேராயர் மார் திவன்னாசியோஸ் அறிந்திருந்தார். எனவே தான் “ஆயர்
மாமன்றத்தின் அதிகாரத்தை மறுக்காத விடயங்களை ஆலோசித்து தீர்மானித்துக்
கொள்ளுங்கள்” என பருமலை செமினாரியில் நடந்த கூட்டத்தில் மற்று ஆயர்களோடு
எடுத்துக்கூறவும் ஆலோசனைக் கூட்டம் துவங்குவதற்கு முன்னரே அறையிலிருந்து
வெளியேறவும் செய்தார். ஆயர்கள் ஆலோசித்து தீர்மானித்த விவரத்தை மார்
திவன்னாசியோஸ் பேராயரை அறிவிக்க வேண்டாம் என
தீர்மானித்திருந்ததால் ஏதேனும் “தீர்மானித்தீர்களா?” என்று
அவரது கேள்விக்கு “தீர்மானித்தோம்” என்ற பதில் மொழி மட்டுமே வழங்கியதில் மார்
இவானியோஸ் ஆயரை குற்றம் சுமத்துவதற்கு முடியாது. நீதிமன்ற வழக்கின் சூழலில்
எதிர்கால தலத்தை தயாரிக்கவே மார் திவன்னாசியோஸ் மௌன அனுமதி வழங்கியிருந்தார்
என்பதிலும் ஐயமில்லை.
3. அந்தியோக்கியாவின் ரஹ்மானி
மறைமுதுவருக்கு அனுப்புவதற்காக காலமடைந்த வாகானத்து உயர் பேயராயர் தனது சொந்த
கையால் எழுதிய கடித்த்தை மார் இவானியோஸ் ஆயர் அதனை பத்திரமாக வைத்துள்ளார்
என்பதும் உண்மை ஆகும். அப்படிப்பட்ட ஒரு கடிதத்தை அவர் எழுதவில்லை என வாதிக்கின்றவரும், எழுதப்பட்டுள்ளதா? என ஐயம் கொள்பவர்களும் அறிந்து
கொள்வதற்காக 30 ஆண்டுகள் வரை ஆயர் அதனை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார். அந்த
கடிதத்தின் ஒரு படிவம் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தைப் பற்றி
ரம்பான்மார்கள் குழல் கண்ணாடியில் எடுத்துரைத்ததற்கு பதிலாக பூதக்கண்ணாடியில்
எழுதப்பட்ட ஒரு பகுதி இங்கு சேர்க்கப்படுகிறது. உயர் பேராயர் இவ்வாறான ஒரு
கடிதத்தை தனது சொந்த கையால் எழுதி இருந்தார் என பூதக்கண்ணாடியின் எழுத்தாளர்
தெளிவாக சம்மதித்துள்ளார். அதன் பகுதி இவ்வாறு;
“அப்ரேம் ரஹ்மானி மறைமுதுவரின் பெயருக்கு
அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட கடிதத்தின் அசல் உயர் பேராயர் தனது கையால்
எழுதப்பட்டதாக மார் இவானியோஸ் அவர்களின் கையில் இருப்பதாக குழல் கண்ணாடி
கூறுகிறது. இவர்கள் இருவருமாக இணைந்திருந்த நேரத்தில்தான் மார் இவானியோஸ் இந்த
கடிதம் எழுதுவதற்கு அவரை உற்சாகப்படுத்தினார். மார் இவானியோஸ் அவர்களின் எழுத்து
வடிவம் நல்லதல்ல என அனைவரும் அறிந்ததே. பின்னர் அதனை திருப்பி எழுத வேண்டும் என
எண்ணம் இருந்தபோது கட்டாயமாக உயர் பேராயர் தனது கையால் எழுத வேண்டும் என
கட்டாயப்படுத்திய போது உயர் பேராயர் வஞ்சனை எதுவும் புரிந்து கொள்ளாமல் அவ்வாறே
கடிதத்தை எழுதினார். ஆனால் தனது கையால் எழுதப்பட்ட கடிதத்தை அனுப்பக் கூடாது என
உயர் பேராயர் தனிப்பட்ட முறையில் ஆணையிட்டு இருந்தார். எனவே அதனில் அவர்
கையொப்பமிடவில்லை. வேறு யாரேனும் கையால் அதனை எழுதலாம் என மார் இவானியோஸ் கூறிய
போது, “அது என்ன செய்தாலும் பரவாயில்லை. எனது கையால் எழுதப்பட்ட
கடிதத்தை அனுப்ப வேண்டாம்” என்பதே எனது கட்டாயம் என உயர்பேராயர் கூறியிருந்தார்.
(பூதக்கண்ணாடி பக்கம் 78)
மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து கடிதத்தை
மறைந்த உயர் பேராயர் தனது சொந்த கையால் எழுதியுள்ளார் என்பது தெளிவானது. ஆனால்
மார் இவானியோஸ் கட்டாயப்படுத்தியதனால் அந்த கடிதம் தனது சொந்த கையால் உயர் பேராயர்
எழுதினார் எனவும் அவர் கையொப்பமிடவில்லை எனவும் கூறுகின்ற வாதங்களுக்கு பின்னால்
அதன் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவே பூதக்கண்ணாடியின் எழுத்தாளர்
முயற்சித்துள்ளார்.
கத்தோலிக்க மறுஒன்றிப்புக்கு தனக்கு சம்மதம்
இல்லையெனில் தனது மனசாட்சிக்கு எதிரானதாக அவர் கருதியிருந்தால் மார் இவானியோஸ்
எந்த அளவுக்கு கட்டாயப்படுத்தியிருந்தாலும் உயர் பேராயர் அவ்வாறு எழுதுவதற்கு
ஒருபோதும் தயாராக இருந்திருக்க மாட்டார். மார் இவானியோசைப் போலவே உயர் பேராயரின்
எழுத்து வடிவம் மோசமானது ஆகும். எனவே அதனை அப்படியே அனுப்புவதற்காக அல்ல, இரண்டு பேரும் எண்ணியிருந்தது. இதைத்தான் எழுதப்பட்ட காகிதத் துண்டுகள்
எடுத்துக்காட்டுகின்றன. இந்த கடிதம் மூலமண்ணில் அருள்தந்தை அவர்களால் நல்ல
முறையில் கடிதமாக எழுதி அனுப்பியதாக கதாநாயகனின் தன் வரலாற்று நூலிலிருந்து
தெளிவாகின்றது.
ரஹ்மானி மறைமுதுவரோடு கடிதப் போக்குவரத்து
நடத்துவதற்கான பொறுப்பு மார் இவானியோஸ் அவர்களை மற்ற ஆயர்கள் ஒப்படைத்ததனால் தான்
உயர் பேராகும் தான் எழுதிய கடிதத்தில் கையொப்பமிடாமல் பிரதிநிதி என்ற முறையில்
மார் இவானியோஸ் அவர்கள் கையொப்பமிட்டார்.
எப்படியாயினும் ஆர்த்தடோக்ஸ் திருச்சபையின்
ஆயர்களின் அறிவோடும் ஆலோசனைகளோடும் தூண்டுதலோடும் சம்மதத்தோடும் மட்டுமே
கத்தோலிக்க மறுஒன்றிப்புக்கான கடிதப் போக்குவரத்து நடத்தத் துவங்கியதாக நம்மால்
உணர்ந்து கொள்ள முடியும்.
அதிகாரம் 21
ரஹ்மானி மறைமுதுவரோடு நடத்தப்பட்ட கடிதப் போக்குவரத்துகள்
கத்தோலிக்க மறுஒன்றிப்பு முயற்சிகளைச் செய்வதற்காக
ஆர்த்தோடக்ஸ் திருச்சபையின் ஆயர் மன்றம் நமது கதாநாயகனை பொறுப்பு ஒப்படைத்திருந்தது.
அவர் அனுப்பிய சுறியானி மொழியிலான கடிதங்கள் இந்த அதிகாரத்தில் இணைக்கப்படுகின்றன.
அதற்கு முன்னால் அந்தியோக்கிய சுறியானி கத்தோலிக்க நம்பிக்கையாளர்களைப் பற்றி ஒரு
சிலவற்றை முன்னுரையாக காண்போம்.
அந்தியோக்கியாவில் மறுஒன்றிப்பு
அந்தியோக்கிய யாக்கோபாயா திருச்சபையில் இக்னாத்தீசு
கியார்வே மறைமுதுவர் 18 ஆம்
நூற்றாண்டின் இறுதியில் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைந்தார். அவர்களுக்காக
திருஆட்சி அமைப்பும் அவர்கள் பயன்படுத்தி வந்த திருவழிபாடும் உரோமை அரியணையிலிருந்து
அனுமதித்து வழங்கவும் “அந்தியோக்கியாவின் மறைமுதுவர்” என்ற பெயரால் அவரை மறைமுதுவராக
அருட்பொழிவு செய்யவும் செய்தனர்.
அந்தியோக்கியாவின் மறைமுதுவர் என்ற பெயரில்
ஆறு மறைமுதுவர்கள் திருச்சபையை நிர்வாகம் செய்கின்றனர். இவர்களுள் நால்வர்: இலத்தீன்,
சுறியானி, மாறோனீத்தா, மெல்கைற்று ஆகியோர் திருத்தந்தையின் ஒன்றிப்பில் உள்ள
கத்தோலிக்க மறைமுதுவர்கள் ஆவர். மற்றவர்கள் இருவரும் யாக்கோபாய ஆர்த்தடோக்ஸ்
கத்தோலிக்கரல்லாத மறைமுதுவர்களாவர்.
மேற்குறிப்பிட்ட மறுஒன்றிப்பைத் தொடர்ந்து
அந்தியோக்கியாவில் யாக்கோபாயா திருச்சபையின் பல ஆயர்களும் குருக்களும் இறைமக்களும்
கத்தோலிக்கத் திருச்சபையோடு ஒன்றிப்படைந்ததன் மூலம் அன்று துவங்கிய மறுஒன்றிப்பு
இயக்கம் வலுப்பெற்று வளர்ந்து கொண்டிருக்கிறது. யாக்கோபாயர்கள் பயன்படுத்தி வந்த
திருவழிபாட்டின் பல தவறுகளை திருத்தம் செய்து அந்தியோக்கிய சுறியானி
கத்தோலிக்கர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். திருப்பலி மற்றும் அருளடையாளங்கள்
ஜெபங்கள் போன்றவை சுறியானி மொழியிலும் மக்கள் புரிந்து கொள்ள அரபு மொழியிலும் இந்த
திருவழிபாடு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தியோக்கியாவின் சுறியானி கத்தோலிக்க
ஆயர்களும் குருக்களும் யாக்கோபாயா முறையிலிருந்து எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல்
ஒரே விதமான வேடம் அணிந்திருந்தனர். மறைமுதுவர் தனது அரியணையை பெய்ரூட்டு என்னும்
இடத்தில் நிறுவியிருந்தார்.
இந்த திருஅரியணையில் நிர்வாகம் செய்து வந்த
இக்னாத்தியோஸ் மறைமுதுவரை திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் அவர்கள் கிழக்கு சுறியானிக்காரர்களோடு
உள்ள அன்பின் காரணமாக கர்தினால் நிலைக்கு அவரை உயர்த்தினார். கர்தினால் கப்ரியேல்
தப்புனி என்ற பெயரால் அவர் அழைக்கப்பட்டார். அவரது கட்டுப்பாட்டில் எட்டு
ஆயர்களும் 164 க்கு மேற்பட்ட குருக்களும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறைமக்களும் பல
நிறுவனங்களும் தற்போது உள்ளன. யாக்கோபாய திருச்சபையிலிருந்து ஏராளமான மக்கள்
இத்திருச்சபையோடு ஒன்றிணைந்துள்ளனர்.
கர்தினால் கப்ரியேல் தப்புனிக்கு முன்னர்
திருஆட்சி புரிந்தவர் ரஹ்மானி மறைமுதுவராவார். இவர் பல மொழிப் புலமை
கொண்டிருந்தவர். கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், சுறியானி, அரபு மற்றும் பிரஞ்சு
முதலிய மொழிகளில் சரளமாக பேசும் அறிவு பெற்றிருந்தார். அறிவியல் சார்ந்த பல
நூல்களை அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
கேரளாவின் ஆர்த்தடோக்ஸ் திருச்சபை ஆயர்கள்
கத்தோலிக்க ஒன்றிப்புக்காக ஆலோசனைகளும் முயற்சிகளும் நடத்தி வந்த போது
அந்தியோக்கிய ஆட்சியில் அமர்ந்திருந்தவர் ரஹ்மானி மறைமுதுவராவார். அவர்
வழியாகத்தான் மறுஒன்றிப்புக்கான கடிதப் போக்குவரத்துகள் நடத்திட ஆர்த்தோடக்ஸ்
ஆயர்கள் நமது கதாநாயகனை ஒப்படைத்தனர். இக்கடிதங்கள் ஒவ்வொன்றாக
சேர்க்கப்படுகின்றன.
செயலருக்கு அனுப்பிய கடிதம்
ரஹ்மானி மறைமுதுவர் அவர்களுக்கு எழுதப்பட்ட
முதல் கடிதத்தை நமது கதாநாயகன் நேரடியாக அனுப்பாமல் தனது செயலரான அருள்தந்தை
யாக்கோபு (பின்னர் மார் தியோஃபிலோஸ் ஆயர்) வழியாக அனுப்பியிருந்தார். அந்த
கடிதத்திற்கு விளக்கமான பதிலுரை ரஹ்மானி மறைமுதுவர் சுறியானி மொழியில் அனுப்பியதன்
மொழிபெயர்ப்பு சேர்க்கப்படுகிறது.
பெதனியின் இவானியோஸ் ஆயர் அவர்களது செயலரும்
நமது அன்புக்குரிய யாக்கோபு அருள்தந்தைக்கு திருத்தூதுவ ஆசீர்களும் சமாதானமும்!
ஆண்டவரில் அன்புக்குரியவர்களே!
கடந்த ஆண்டு ஜூலை 17ஆம்
தேதியின் மகிழ்வான செய்தி அடங்கிய கடிதம் - நமது செயலரின் பெயருக்கு மகிழ்வுடன்
அனுப்பப்பட்ட கட்டுரை - ஆனந்தத்தோடும் மகிழ்வோடும் அதனை நான் வாசித்தேன். அதன்
உள்ளடக்கத்தை நான் பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளவும் செய்தேன். உங்கள் மேலும் மலபாரின்
அனைத்து ஆசீர்வதிக்கப்பட்ட பங்குகளின் மேலும் இறைவனின் அருள் ஏராளமாக
கிடைக்கட்டும் என நான் வேண்டுகிறேன். நீங்கள் யாவரும் சமாதானத்தோடு வாழவும் சகல
வஞ்சனைகளிலிருந்தும் தவறுகளிலிருந்தும் மீட்கப்படுவதற்கும் எல்லாவிதமான செயல்களால்
ஒளிர்வதற்கும் வேண்டிய இறையருளுக்காக நாங்கள் தனிப்பட்ட விதத்தில் வேண்டுகின்றோம்.
ஒன்றிப்பின் ஆன்மீக சலனங்கள் உங்களுடைய
இதயங்களில் உருவாக்கிய இறைவனின் அருளுக்காக நாங்கள் அவருக்கு புகழும் போற்றுதலும்
சமர்ப்பிக்கின்றோம். மேற்கு நாடுகளில் சில மாதங்கள் சந்திப்புகள் நடத்த வேண்டிய
சூழல் ஏற்பட்டதால் பதில் எழுத சற்று தாமதமானது. இந்த மாதத்தில் தான் பெய்ரூட்டில் அமைந்திருக்கும்
அரியணைக்கு நான் வந்தடைந்தேன்.
உரோமையின் திருத்தந்தையை முக்கியத் தலைவராக
கொண்டிருக்கும் பூவுலகின் அனைத்து பகுதிகளிலும் விரிந்து பரந்துள்ள கத்தோலிக்க
திருச்சபையோடு ஒன்றிணைய இந்தியாவின் ஆயர்களுக்கும் குருக்களுக்கும் சுறியானிக்காரர்களாகிய
மக்களும் ஆர்வம் கொண்டதனை எண்ணி ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள் என்ற உண்மை மிகவும்
மகிழ வைத்துள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன். உன்னதராகிய மார் பசேலியோஸ் கீவர்கீஸ் உயர் பேராயரும் மலங்கரையின் மார் திவன்னாசியஸ்
ஆயரும் பெதனியின் ஆயரான மார் இவானியோஸ் அவர்களும் நலம் என நான் நம்புகிறேன்.
திருப்பாடலின் ஆசிரியரான தாவீதோடு அனைத்து தந்தையர்களோடும் இணைந்து அவர்கள்
கூறியதைப் போன்று நானும் கூறுகிறேன். “சகோதரர்கள் ஒருமித்து வாழ்வது எவ்வளவு
நல்லதும் அழகானதுமானது.”
சிரியாவின் அந்தியோக்கிய திருச்சபையின் பழமை
வாய்ந்த திருவழிபாட்டை மிகவும் சிறந்த ஆர்வத்தோடு நாங்கள் காத்து வருகிறோம். அதன் அனைத்து
திருச்சடங்குகளையும் கண்மணி போல நாங்கள் பாதுகாத்து வருகிறோம். அதிலிருந்து எந்த
ஒரு நிலையும் மாற்றம் செய்யவும் வேறுபடுத்தவும் நாங்கள் விரும்புவதில்லை.
கிழக்கிலும் மேற்கிலும் இதை விடவும் பழமையான ஆழமான வேறு திருவழிபாடு இல்லை.
திருத்தூதர்களின் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வருவதே சுறியானி மொழி. மேன்மை
மிகுந்த இந்த திருவழிபாட்டை மலபாரில் உள்ள கல்தேய திருவழிபாட்டைப் போன்று
வேறுபடுத்தவோ கூடுதலாக சேர்க்கவோ மேற்கத்திய இலத்தீன் திருவழிபாட்டைப் போல மாற்றவோ
சம்மதிக்க மாட்டோம். நீங்கள் கண்டு வாசித்த புத்தகங்களைத் தான் நாங்கள் அச்சிட்டுள்ளோம்.
இவ்வாறு நாங்கள் வெளிப்படுத்திய ஆர்வத்தை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திட முடியும்.
திருப்பலி முறை, மற்று திருவழிபாட்டு திருச்சடங்குகள், வேளைச் ஜெபங்கள், அடக்கத்
திருச்சடங்குகள் மற்றும் அருள்பொழிவு திருச்சடங்குகள் போன்றவற்றின் பழமையை
பாதுகாத்து வரும் நிலையில் நாம் பல சவால்களையும் சந்தித்து தியாகத்தோடு செயல்படுகிறோம்
என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் அனைவரும் ஒன்றிப்படையும் போது உங்களிடமிருந்துள்ள
அருள் தந்தையர்களும் ஆயர்களுக்கும் துறவிகளும் உங்களை வழிநடத்த இயலும் என்பதை நான்
அன்புடன் அறிவித்துக் கொள்கிறேன்.
எங்களோடு ஒன்றிப்படைவதன் வழியாக உங்களுடைய ஆலயங்களும் துறவு இல்லங்களும் நீங்கள்
இழந்து விடுவீர்கள் என எழுதியதைப் பற்றி நான் உண்மையிலும் உண்மையாக உங்களை பின்வருமாறு
அறிவிக்கின்றேன். “இந்தியாவின் தலைமைக் குருக்களாகிய சகோதரர்கள் மற்றும்
குருக்களோடும் இறைமக்களோடும் இணைந்த பின்னர் வலுவுடன் உரோமாவின் திருத்தந்தை
வழியாக இலண்டனில் வாழும் அதிகாரிகளை சந்தித்து அவர்களது பரிந்துரையால் உங்களுடைய
ஆலயங்களையும் ஆசிரமங்களையும் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
உங்களது மறுஒன்றிப்படையும் குருக்கள் மற்றும் குருத்துவ பயிற்சி மாணவர்களின்
தேவைகளை நிறைவேற்றுவதற்கும் இறைவனில் சரணடைந்து முயற்சிகள் மேற்கொள்ள முடியும்.
துறவிகளின் வளர்ச்சிக்கும் இந்தியாவின் இறைமக்களுக்கு திருப்பணி புரியும்
குருக்களின் பாதுகாப்பிற்குமாக பொறுப்பேற்றுக் கொள்வேன் எனவும் இறைவனின் முன்னிலையில்
நான் வாக்குறுதி வழங்குகிறேன். நம் ஆண்டவர் அருளியதைப் போன்று அவர்கள் உலகின்
ஒளியும் பூமியின் உப்புமாக உள்ளார்கள். ஆகையால் அவர்கள் மற்றவர்களை கற்பித்து ஒளிர
வைக்கும் விதத்தில் அவர்கள் உண்மையான அறிவுரைகளில் கல்வியிலும் ஒளிர்ந்திட
வேண்டும் என்பது மிகத் தேவையாகும். அவர்கள் நம் தலைவராகிய மெசியாவின் இறை மக்களோடு
இணைந்து அவரது உருவிலும் மாதிரியிலும் மிக உன்னதமான விடயங்களில் மலர்ந்திட பொறுப்புள்ளவராக
வேண்டும்.
நம் ஆண்டவர் தனது அருளின் இறக்கைகளின் கீழே
உங்களை காத்துக் கொள்ளவும், அனைத்து தீமைகளிலிருந்து காத்துக் கொள்ளவும், அனைத்து
உறவுகளாலும் உங்களை மேன்மை படுத்தவும், திருச்சபை மற்றும் இறைக் கட்டளைகளை
நிறைவேற்றவும் உங்களுக்கும் உங்களது அனைத்து இறை மக்களுக்கும் ஆசீர்கள் ஏராளமாக
பெற்றுக்கொள்ள வேண்டும் என மன்றாடுகிறேன்.
இந்தியாவின் சுறியானிக்காரர்களாகிய
ஆர்வமிகுந்த மக்களிடையே ஒன்றிப்பும் ஒத்துழைப்பும் ஏற்படும் என நான் நம்புகிறேன்.
உங்கள் அனைவருக்கும் திருத்தூதுவ ஆசீர் வழங்குகிறேன்.
இதன் பதிலை எதிர்பார்க்கிறேன். நம் ஆண்டவரில்
நலமுடன் வாழவும்.
ரஹ்மானி மறைமுதுவர், 1926
அக்டோபர் 12, பய்ரூத் மறைமுதுவரின் ஆயரகம்
மார் இவானியோஸ் அனுப்பிய பதில்
கடிதம்
தனது செயலாளருக்கு கிடைத்த மேற்குறிப்பிட்ட
கடிதத்தின் பதிலை மார் இவானியோஸ் நேரடியாக ரஹ்மானி மறைமுதுவருக்கு அனுப்பி
வைத்தார். அதன் மொழிபெயர்ப்பு தொடர்கிறது.
“ஆயர்களின் ஆயரும் தலைவர்களின் தலைவரும்
சிரியா மற்றும் கிழக்கு நாடுகளின் கத்தோலிக்கர்களான சுறியானி இனத்தவர்கள் மேல்
அதிகாரம் கொண்டுள்ள மேன்மை மிகு அந்தியோக்கியாவின் திருத்தூதுவ அரியணையில் திருஆட்சி
புரியும் “இரண்டாம் அப்ரேம்” எனப்படும் ஆபூன், மோறான் மோர் இக்னாத்தியோஸ் ரஹ்மானி
மறைமுதுவருக்கு,”
ஆண்டவரின் பெயரால் இறைவனின் உன்னத
குருத்துவத்தின் பதவியை காத்து வரும் உங்களது ஆசீர் மிகுந்த கரங்களால் ஆசீர் பெற்ற
பின்னர் அறிவிப்பதாவது:
“உங்களது அன்பை வெளிப்படுத்தி 1926
அக்டோபர் 12ஆம் தேதி மறைமுதுவர் எனது செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தை பெற்றுக் கொண்டோம்.
நீங்கள் குறிப்பிட்ட அனைத்து விடயங்களுக்காகவும் நான் இறைவனைப் புகழ்கிறேன்.
கத்தோலிக்க திருச்சபையோடு இணைப்பிற்குமான வழி திறந்து கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
அந்தியோக்கியா திருவழிபாட்டின் பழமை
குலையாமல் காத்து வருவதை எண்ணி மகிழ்கிறோம். அந்தியோக்கியன் திருவழிபாட்டுச்
சடங்குகள் இந்தியாவில் உள்ள எங்களது ஆயர்களின் மாமன்றம் சரிவர அதன் உண்மை
நிலைக்கேற்ப நிலை நிறுத்துவோம் என நாங்கள் கூறிக் கொள்கிறோம். இதனைப் பற்றி
பின்னர் நான் உங்களை தெரியப்படுத்துகிறேன்.
கிழக்கு திருத்தூதுவ அரியணையில் ஆட்சி
புரியும் மோறான் மார் பெசலியோஸ் உயர் பேராயரும் அவரோடு இணைந்துள்ள ஆயர்களும்
உங்களது நலனை தனிப்பட்ட முறையில் விசாரித்துள்ளனர்.
இந்த கடிதமும் நான் அனுப்புகின்ற மற்று
கடிதங்களும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் எனவும் வெளிப்படுத்துதல் ஆகாது எனவும்
வேண்டுகிறேன். உங்களது ஜெபங்களிலும் திருப்பலிகளிலும் எங்களை நினைவுகூர்ந்து மன்றாடுமாறு
வேண்டி இக்கடிதத்தை அனுப்புகிறேன்.
இதற்கான பதில் கடிதத்தை தபால் மூலம் பதிவு
செய்து அனுப்புமாறு வேண்டுகிறேன்.
உங்கள் வலது கையால் என்னை
ஆசீர்வதிக்குமாறும் வேண்டுகிறேன்.
பாறெக்மோர், அல் சுப்க்கோனோ
உங்களது நம்பிக்கைக்குரிய திருப்பணியாளர்
பெதனியின் எளியவராகிய ஆயர் மார் இவானியோஸ்
இந்தியாவின் திருவல்லாவில் உள்ள பெதனியிலிருந்து
1927, அக்டோபர் 30.
மறைமுதுவரின் பதில்
அயோக்கியாவின் மறைமுதுவர் மார் இவானியோஸ் அவர்களுக்கு
நேரடியாக அனுப்பிய கடிதத்திற்கு ஓராண்டுக்குப் பின்னர் தான் மறைமுதுவர் பதில்
அனுப்பினார். இவ்வாறு தாமதித்ததன் காரணம் என்னவென்றால் மார் இவானியோஸ் நேரடியாக உரோமில்
திருத்தந்தையோடு ஒன்றிணைவதற்கான குறிப்பாணைகள் அனுப்பிய விவரத்தை மறைமுதுவர்
அறிந்ததாக இருக்கலாம். அந்தியோக்கியாவின் யாக்கோபாய திருச்சபையையும், அதன் உயர்
அதிகாரிகளையும், அவர்களுடைய அருள்பொழிவின் உண்மை நிலை பற்றியும் திருவழிபாடு
பற்றியும் உள்ள உண்மை நிலையை அறிவிப்பதற்காக உரோமையிலிருந்து ரஹ்மானி மறைமுதுவர்
பெயரில் தான் விசாரணைக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். இக்காரணத்தால்
தான் மறைமுதுவர் ஓராண்டுக்குப் பின்னர் மார் இவானியோஸ் அவர்களுக்கு பதில்
அனுப்பினார்.
அதன் மொழிபெயர்ப்பு இவ்வாறு:
“எல்லாம் வல்லவரும் முழுமையானவரும் தொடக்க
முடிவற்றவருமான இறைவனின் திருநாமத்தில்,
அந்தியோக்கியா மற்றும் கிழக்கின் திருத்தூதுவ
அரியணையின் பலவீனராகிய இரண்டாம் அப்ரேம் எனப்படும் இக்னாத்தியோஸ் ரஹ்மானி
மறைமுதுவர் .
சீயோன் மாளிகையில் வைத்து திருத்தூதர்கள்
மீது பொழியப்பட்ட ஆசீர் இந்தியாவின் பெதனியின் மார் இவானியோஸ் ஆயர் மேல் வந்து
தங்குவதாக!
ஆண்டவரின் அன்பு சகோதரனுக்கு சமாதானம்!
கடந்த ஆண்டு 1927 அக்டோபர் 30ஆம் தேதி
எழுதிய உங்களது கடிதங்களை வாசித்த போது ஆயர்களின் ஆயராகிய நமது ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவுக்கு ஏராளமான புகழ்களும் போற்றுதல்களும் தினம் தோறும் சமர்ப்பித்து
வந்தேன். உங்கள் கடிதம் மூலம் உங்களது அறிவையும் உங்களது நலம் விசாரித்தலையும்
அறிந்து மிகவும் மகிழ்கிறேன். கத்தோலிக்க திருச்சபையோடும் அந்தியோக்கிய திருத்தூதுவ
அரியணையோடும் ஒன்றிணையும் நல்ல முடிவுகளை எண்ணி மிகவும் மகிழ்கிறேன். எல்லாம் வல்ல
இறைவனை புகழ்கிறேன். திருப்பாடலாசிரியர் தாவீது இவ்வாறு புகழ்ந்து கூறுகிறார்: “ஆண்டவரே
உமது மேன்மையை உணர்ந்தவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். உமது பெயரால் அவர்கள்
மகிழவும் உமது நீதியை அவர்கள் மேன்மைப்படுத்தவும் செய்வர்.”
உங்களது மதிப்புக்குரிய செயலாளர் பெயருக்கு
நான் அனுப்பிய கடிதத்தை நீங்கள் ஆர்வத்துடன் விரும்பியுள்ளீர் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்
அல்லவா? எனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நான் மீண்டும் இவற்றைப் பற்றி உங்களோடு
கூறுகிறேன். மறுஒன்றிப்பைப் பற்றிய தூய்மையான வழி உங்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
உரோமை திருச்சபையோடு நாமும் ஐக்கியம், அன்பு, மற்றும் உறவின் வாயில் உங்களது முன்னால் திறக்கப்பட்டுள்ளது. இதனால்
அகில உலக கத்தோலிக்க திருச்சபையின்
மக்களாவதற்கான பெரும் பேற்றை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள்.
திருத்தூதர்களுள் முதல்வனாகிய திருத்தூதர்
பேதுருவின் அரியணையில் வழிமரபினரான திருத்தந்தையே இத்திருச்சபையின் தலைவர்.
நற்செய்தியின் மறையுரைகளால் எங்கே வைத்து மதம் மாறியவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற
பெயரைப் பெற்றுக் கொண்டார்களோ அவ்விடத்தின் பெருமை பெற்ற உறுப்பினர்களாக நீங்கள்
அங்கீகரிக்கப்படுவீர்கள். நமது ஆண்டவரும் அவரது திருத்தூதர்களும் பேசிய சுறியானி
மொழியில் நிறுவப்பட்ட திருத்தூதுவ அடித்தளம் கொண்ட அதன் முறைகளையும் சட்டங்களையும்
கண்ணின் கண்மணி போல நாங்கள் பாதுகாத்து வருகிறோம். நம்பிக்கையாளர்களின் பொதுவான
பயன்பாட்டிற்கு உள்ள நூல்களை முறைப்படுத்தி நல்கவும் அதில் எந்தவிதமான கலப்படம்
இல்லாமல் பாதுகாக்கவும் கவனம் செலுத்த வேண்டும். திருத்தூதர்களும் அந்தியோக்கிய
திருச்சபையில் வளர்ந்த தந்தையர்களும் மல்பான்மார்களும் நிறுவிய இம்முறையைத் தான்
நாம் முன்னரே அறிந்திருக்கின்றோம். இக்காரனத்தால் தான் நீங்கள் எங்களோடு இணைய
வேண்டும் என்று விரும்புகின்றீர்கள். வேறு எந்த விதமான உள்நோக்கத்தாலும் இல்லை
என்பதை நான் எடுத்துக் கூறுகிறேன். ஒரு திருப்பலி நூலையும் இப்போது அச்சிடப்பட்டு
வரும் அருள்பொழிவு நூலையும் இத்துடன் நான் அனுப்புகின்றேன். மீதமுள்ள திருச்சபைச்
சார்ந்த நூல்கள் ஆயரின் பெயருக்கு தொடர்ந்து பின்னர் அனுப்பி தர முயற்சிகள்
மேற்கொள்ளலாம்.
இது மட்டுமல்லாமல் மீண்டும் நான் எடுத்துக்
கூறுகிறேன். எங்களோடு ஒன்றிக்கின்ற ஆயர்களுக்கு அவர்கள் ஆட்சி செய்யும் அதிகார
நிலையில் உள்ள அதிகாரமும் பதவியும் தொடர்ந்து கொள்ள முடியும். அந்தந்த காலங்களில்
இந்தியாவுக்காக வழங்கப்படும் ஆயர்களின் ஆன்மீக அதிகாரம் காத்துக் கொள்ளப்படும்.
இந்தியாவிலிருந்தே மறைமாவட்ட நிர்வாகத்திற்காக ஆயர்கள் தேர்ந்தெடுக்கப்படவும்
வேண்டும்.
மேன்மையானவரும் அன்புக்குரியவருமான மார் பசேலியோஸ்
உயர் பேராயருக்கும் அவரது வழிமரபினரான இந்தியாவிலிருந்து உங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும்
அவர்களது அனைத்து தலைமைக்குருக்களுக்கும் குருக்களுக்கும் இறைமக்களுக்கு மேல்
அதிகாரத்தை தொடர்வார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான உரோமையின்
திருத்தந்தையையும் அந்தியோக்கிய மறைமுதுவரையும் திருச்சபையின் சட்ட திட்டங்களையும்
அவர்கள் பின்பற்றட்டும். “ஒரே தொழுவமும் ஒரே ஆயனும்” என்ற ஆண்டவர் இயேசு மெசியாவின்
வார்த்தை இதனால் நிறைவேறும். நமது வலிமை முழுவதையும் ஒன்றிப்பிற்காக
விநியோகிக்கப்படுவதற்கு இறைவனின் முன்னிலையில் நமது பொறுப்புணர்வையும் நாம் உணர்ந்திடல்
வேண்டும். ஆயர்களும் இறைமக்களும் ஆன்மீக முறையில் அவரது பதவி நிலைகளை தொடர்ந்து
கொள்வதற்கும் அதன் நன்மை மற்றும் மேன்மைகளை உயர்ந்த நிலையில் பெற்றுக் கொள்ளவும்
செய்ய பெரும் விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும்.
மான் நீரோடையை தேடிச்
செல்வது போல ஒன்றிப்பின் செயல்கள் வழியாக நமது ஆன்மா இறைவனை நாட விரும்புகின்றது.
இந்தியாவில் உள்ள மற்று ஆயர்களிடமிருந்தும் விவரமான கடிதங்களை நான்
எதிர்பார்க்கிறேன். உரோமை கத்தோலிக்க திருச்சபையோடும் எங்களோடும் உள்ள ஒன்றிப்பை
தீர்மானிக்கின்ற போது பொதுவான உங்களுடைய தீர்மானங்களையும் நீங்கள் தெரிவிக்க
வேண்டும். அப்படிப்பட்ட கடிதத்தை நாங்கள் பெற்றுக் கொண்ட பின்னர் மறுஒன்றிப்புக்காக
நாங்கள் நேரடியாக உங்களுக்கு உதவுவோம். உங்களது மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற
போது உங்களுடைய கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படும். உங்களது உயர் பேராயர் மார்
பசேலியோஸ் அவர்களும் இத்தகைய கடிதம் ஒன்றை எனக்கு அனுப்புவது நன்று.
உங்களது எண்ணங்களுக்கும்
தீர்மானங்களுக்கும் ஏற்ப ஒன்றிப்பின் செயல்களை முழுமை அடையச் செய்வதற்கு நாங்கள் இரகசியமாக
நடத்துகின்ற கடிதப் போக்குவரத்துகளில் ஒரு வார்த்தை கூட திருத்தந்தையைத் தவிர வேறு
எவருக்கும் இதைப் பற்றிய செய்தியை நாங்கள் அறிவிப்பதில்லை என நம்ப வேண்டும்.
தேவைக்கேற்ப சுறியானி
மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை வாய்ந்த இரண்டு அல்லது மூன்று குருக்களை அல்லது
ஆயரை அந்தியோக்கியாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்புவதற்கு நான் தயாராக உள்ளேன்.
நான் எழுதிய கடிதங்களின் உள்ளடக்கத்தைப் பற்றி நேரடியாக உங்களோடு உரையாடல்
நிகழ்ச்சி வழியாக எங்களுடைய நிலையை உங்களோடு அவர்கள் தெரிவிக்கத் தயாராக உள்ளனர்.
ஆண்டவராகிய இறைவன் அவரது
அருள்கரங்களை நீட்டவும் இச்செயலை புகழுக்குரிய விதத்தில் பரிணமிக்கச் செய்வதற்கு அவரோடு
நாம் வேண்டுதல் செய்வோம். இறை அருள் வரங்கள் உங்கள் மேல் பொழியப்படுவதற்கும் விண்ணக
மண்ணக ஆசீர்வாதங்கள் உங்களுடைய அனைத்து இறைமக்களும் பெருமடங்காக பெற்றுக் கொள்வதற்காக
நான் வேண்டுகிறேன். அவரது அருள் வழங்கும் கண்களால் அனைத்து ஆபத்துகளிலிருந்தும்
துயரங்களிலிருந்தும் உங்களை அவர் காத்துக் கொள்ளட்டும்.
அனைத்து
நற்செயல்களிலும் நாங்கள் உங்களோடு இருப்போம். ஆண்டவருக்குள் நீங்கள் நலமாக
வாழவும்.
1929 ஜனவரி ஐந்தாம்
தேதி
பெய்ரூட் சுறியானி
மறைமுதுவர்
அந்தியோக்கியா மற்றும் கிழக்கின் திருத்தூதுவ அரியணையின் பலவீனனாகிய இரண்டாம் இக்னாத்தியோஸ்
அப்ரேம் ரஹ்மானி மறைமுதுவர்
ஆயர் மார்
இவானியோஸ் அனுப்பிய பதில்
ஆயர் மார் இவானியோசுக்கு
ரஹ்மானி மறைமுதுவர் அனுப்பிய விளக்கமான கடிதத்திற்கு ஆயர் மார் இவானியோஸ் அனுப்பிய
பதில் கடிதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“பெரியவரும் முன்னவரும்
பேறுடையவருமான அந்தியோக்கிய திருத்தூதுவ அரியணையில் திருஆட்சி புரியும் மோறான் மார்
இக்னாத்தியோஸ் மறைமுதுவருக்கு உங்களை
காத்துக் கொள்கின்றவரும் உங்களது குருத்துவத்தின் புகழ்ச்சியை எடுத்துரைப்பவருமான
ஆண்டவரின் பெயரில் வாழ்த்துக்கள்!
உங்களது தூய்மையான
திருக்கரங்களை முத்தம் செய்த பின்னர் உங்களது உன்னத குருத்துவ அதிகாரத்தை நாங்கள்
அறிவிக்கின்றதாவது: இவ்வருடம் ஜனவரி 15ஆம் தேதி நீங்கள் அனுப்பிய கடிதத்தை நாங்கள்
பெற்றுக் கொண்டோம். மோறான் மோர் பசேலியோஸ் உயர் பேராயர் மற்றும் மார் கிரிகோரியோஸ்
பேராயர் அவர்களையும் இக்கடிதத்தை நான் காண்பித்தேன். அவர் என்னோடு எழுதுவதற்கு
தெரிவித்த நிலையை நான் பதிலாக இப்போது அனுப்புகிறேன்.
கடந்த வாரத்தில்
ஆங்கிலத்தில் ஒரு கடிதத்தை நான் அனுப்பி இருந்தேன். அக்கடிதத்தில் அனைத்து
விடயங்களைப்
பற்றியும் நீங்கள் அறிந்து கொண்டீர்கள் என நம்புகிறேன். ஆங்கிலப் புலமை பெற்ற
அருள்தந்தையர்கள் உங்களிடையே பணியாற்றுகிறார் என்பதை உங்களது கடிதத்திலிருந்து
அறிந்து கொண்டேன். ஆங்கில மொழியில் எழுதுவது சற்று எளிதாக அமைவதால் ஆங்கில
மொழியிலேயே கடிதத்தை தொடர்ந்து எழுதுகிறேன். நீங்கள் எங்களுக்கு சுறியானி அல்லது
ஆங்கில மொழியில் எழுதினாலும் நாங்கள் அதனை சரியாக புரிந்து கொள்வோம். இங்குள்ள
அனைத்து ஆயர்களும் ஒன்றிப்பின் நிலை பற்றி ஆலோசித்து வருகிறார்கள். தனிப்பட்ட
முறையில் இறைவனோடு ஜெபிக்குமாறு வேண்டுகிறேன்.
உங்களது அரியணையின்
கீழுள்ள பங்குகள் எவ்வாறு உள்ளன என அறிய விரும்புகிறேன். எத்தனை பேராயர்களும் குருக்களும்
இறைமக்களும் கல்வி நிறுவனங்களும் குருக்கள் மற்றும் குருமாணவர்களின் தேவைகளை
எவ்வாறு நிர்வகிக்க முடியும் என்பதைப் பற்றிய அறிய விரும்புகிறேன். இத்தகைய
கேள்விகளை நான் எழுதுவதனால் நீங்கள் தவறாக எதுவும் கருதுவதில்லை என நம்புகிறேன்.
உயர் பேராயர் மார்
பசேலியோஸ் அவர்களும் மார் கிரிகோரியோஸ் பேராயரும் வலுவற்றவனாகிய நானும் நீங்கள்
அனுப்பிய திருப்பலி நூலை ஆராய்ந்தோம். நாங்கள் பயன்படுத்துகின்ற திருப்பலி நூலோடு
ஒப்பிடும்போது பெரிய வேறுபாடுகள் எதனையும் எங்களால் கண்டு கொள்ள முடியவில்லை.
நீங்கள் பயன்படுத்துகின்ற மற்ற திருவழிபாட்டு நூல்களையும் காண விரும்புகிறேன்.
குருக்களின் திருவழிபாட்டுக்குத் தேவையான மற்றும் நூல்களும் குருத்துவ உதவி நூலும்
பெங்கீசா நூலும் ஆயர்கள் பயன்படுத்த வேண்டிய நூல்களையும் திருச்சபை சட்ட நூலும்
அனுப்பித் தருமாறு வேண்டுதல் விடுக்கிறேன்.
உயர் பேராயர் மோறான்
மார் பசேலியோஸ் அவர்களும் பேராயர் மார் கிரிகோரியோஸ் அவர்களும் உங்களது நலம்
விசாரித்ததாக கூறியுள்ளனர். உங்களது ஆசீரை தனிப்பட்ட முறையில் கேட்டுக்
கொண்டதாகவும் கூறியுள்ளனர். உரோமை கத்தோலிக்க திருச்சபையோடும் உங்களது அரியணையோடும்
திருச்சபையின் ஒன்றிப்பைப் பற்றி கூடுதலாகவும் தனிப்பட்ட முறையில் மீண்டும்
எழுதுவதற்கு முடியும் என நான் இறைவனில் நம்புகிறேன்.
பாறெக்மோர் அல்
சுபுக்கோனோ
உங்களது
பணியாளராகிய பெதனியின் வலுவற்ற மார் இவானியோஸ் ஆயர்
பெதனி ஆயரகத்திலிருந்து
1929 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி
மறைமுதுவரின்
பதில்
ரஹ்மானி மறைமுதுவருக்கு
நமது கதாநாயகன் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைத்தது. சுறியானி மொழியில்
எழுதப்பட்டிருந்ததன் மொழிபெயர்ப்பு பின்வருமாறு இணைக்கப்படுகிறது.
அந்தியோக்கியாவின்
மோறான் மோர் இக்னாத்தியோசு இரண்டாம் அப்றேம் ரஹ்மானி மறைமுதுவர்,
சீயோன் மாளிகையில்
வைத்து திருத்தூதர்கள் மேல் வந்து இறங்கிய தூய ஆவியின் ஆசீர்கள் பெதனியின் ஆயராகிய
மார் இவானியோஸ் அவர்கள் மேல் தங்கி வாழட்டும். இறைவனின் அருள் வரங்கள் எல்லாவித
ஆபத்துக்களிலிருந்தும் உங்களை காத்துக்கொள்ளட்டும்.
இவ்வருடம் ஜூலை 27
ஆம் தேதி பாசத்தோடு நீங்கள் அனுப்பிய கடிதமும் ஆங்கில கடிதமும் நான் பெற்றுக்
கொண்டேன். நீங்கள் நலமாக உள்ளதில் இறைவனைப் புகழ்கிறேன். எங்களுக்காக நீங்கள் வேண்டுதல் புரிவது எண்ணி
இறைவனுக்கு நன்றி செலுத்தி மகிழ்கிறேன். உங்களுக்காகவும் உங்களது பங்குகளுக்காகவும்
நாங்கள் வேண்டுகிறோம். இறைவனின் திருவிருப்பப்படி நமது எதிர்பார்ப்பை நிவர்த்தி
செய்யவும் மலங்கரையின் சுறியானிக்காரர்களாகிய மக்கள் எங்களோடும் கத்தோலிக்கத்
திருச்சபையோடும் இணைந்து மறுஒன்றிப்படைகின்ற மகிழ்வான தினத்தை காணும் பேற்றை எனது
கண்கள் காணும் என இறைவனில் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
நாங்கள் உங்களுக்கு
அனுப்பிய கடிதத்தை மார் பசேலியோஸ் உயர் பேராயரையும் மார் கிரிகோரியோஸ் பேராயரையும்
காண்பித்ததாகவும் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டதாகவும் நீங்கள் எழுதியதை எண்ணி
இதயத்தில் மகிழ்கிறேன். ஆங்கிலத்திலும் சுறியானி மொழியிலும் நீங்கள் எழுதுவதால்
எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இரு மொழிகளையும் நான் கையாள முடியும். ஆனால்
நான் உங்களுக்கு அனுப்புகின்ற கடிதத்தை சுறியானி மொழியிலே அனுப்ப விழைகிறேன்.
இந்தியாவின்
அனைத்து ஆயர்களும் ஒன்றிப்படைவதற்காக ஜெபிக்கவும் ஒன்றிப்பை காத்துக் கொள்ளவும்
செய்ய முடியும் என உங்களது கடிதத்தில் நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள். “இதோ
சகோதரர்கள் ஒருமித்து வாழ்வது எத்துணை நல்லதும் அழகானதும்” என கூறத்தக்க விதத்தில்
அச்செயலை உடனடியாக காலதாமதமின்றி காண்பதற்கான அருள் இறைவன் தருவதற்காக
மன்றாடுகிறேன்.
சிரியாவின்
அந்தியோக்கிய திருஅரியணையின் கீழே பேராயர்கள் மற்றும் ஆயர்களின் ஆட்சி நிலைகளை
குறிப்பிடுகின்றேன்.
மூசல், ஹலப்,
தர்சூக், பாக்தாத், ஹமத், ஹெமாஆ மெஸ்றம், இலபனோன் மற்றும் பஸ்னஹறீன் போன்ற ஆட்சி
நிலைகளில் நான் நியமிக்கும் ஆயர்கள் இறைமக்களை வழிநடத்தி வருகிறார்கள்.
அந்தியோக்கிய
அரியணையின் கீழே வாழும் சுறியானி கத்தோலிக்கர்கள் முசல், ஹலப், மர்தீனின் தென்
பகுதி, ஃபூனோக்கி, மிஸ்றேன், அலெக்சாண்ட்ரியா,
எருசலேம், பெத்லகேம் மற்றும் யோபா போன்ற இடங்களில் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
குருத்துவ பயிற்சியக
மாணவர்களுக்கு பயிற்சி வழங்க மூன்று குருத்துவப் பயிற்சியகங்கள் உள்ளன. அவற்றுள்
ஒன்று லெபனான் மலையிலும் இரண்டாவது எருசலேமிலும் மூன்றாவது மூசலிலும் உள்ளது.
புனித அப்ரேமின் பெயராலான உள்ள மூன்று ஆசிரமங்களும் நமக்கு உண்டு. முதலாவது லெபனோனிலும்
இரண்டாவது உரோமிலும் மூன்றாவது மெஸ்றேமிலும் ஆகும். மூசல் அருகே மார் பஹனாம்
மறைசாட்சியின் பெயரிலும் கித்தீமி் மார் யூலியோனா சோபா பெயரிலும், நாபேக்கா என்னும்
இடத்தில் மார் மோசே என்பவர்களுடைய பெயர்களிலும் ஆசிரமங்கள் அமைந்துள்ளன.
நகரங்களில் மட்டுமல்ல ஒவ்வொரு கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன.
கோர் எப்பிஸ்கோப்பா
மற்றும் குருக்களின் செலவுகள் ஆலயத்திலிருந்து கிடைக்கும் காணிக்கை மூலமோ அல்லது
என்னிடமிருந்தோ இறைமக்களிடமிருந்தோ பக்த இயக்கங்களின் மூலமோ கிடைக்கின்ற
நன்கொடைகள் வழியாகவோ செய்யப்படுகிறது.
தேவாலயங்களில்
திருவழிபாட்டுக்காக பயன்படுத்துகின்ற நூல்களை அனுப்பி தரக் கேட்டிருந்தீர்களே.
அவற்றுள் சிலவற்றை நாங்கள் அனுப்பி தந்திருக்கிறோம். சாதாரண வேளைச்செபங்கள்,
திருப்பலி நூல், அருட்பொழிவு நூல்கள் போன்றவை உங்களுக்காக அனுப்பித் தந்துள்ளோம்.
இன்னும் அடக்கத் திருச்சடங்கு, பெங்கீசா, நற்செய்தி மற்றும் திருமுகங்கள் அடங்கிய
நூல், திருவிழாக்களின் திருச்சடங்குகள் மற்றும் திருச்சபை சட்டங்கள் போன்றவற்றை
தற்போது உங்களுக்காக அனுப்பி வைக்கிறோம்.
கத்தோலிக்க
திருச்சபையோடும் அந்தியோக்கியாவின் திருத்தூதுவ அரியணையோடும் உங்களது
திருச்சபையின் மறுஒன்றிப்பு தொடர்பான விவரங்களை நீங்கள் எங்களுக்கு எழுதுவதாக
தீர்மானித்ததனை எண்ணி மகிழவும் எங்களது ஆன்மா ஆரவாரிக்கவும் செய்கிறது. “இதுவே
ஆண்டவரின் நாள் நீங்கள் வந்து மகிழ்வீர்” என தாவீது திருப்பாடல் ஆசிரியரின்
வார்த்தைகள் நிறைவு பெறும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.
உங்கள் மேலும்
உங்களது அனைத்து இறைமக்கள் மேலும் அனைத்து ஆசீர்வாதங்களும் நல்கிட இறைவனை
மன்றாடுகிறேன். எல்லாவிதமான ஆபத்துக்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் இறைவன்
உங்களை காப்பாராக. அவர் உங்களை அனைத்து தண்டனைகளிலிருந்தும் விடுவித்து காத்துக்
கொள்வாராக. அன்பும் அமைதியும் உங்களையே ஆளட்டும்.
மார் பசேலியோஸ் உயர்
பேராயருக்கும் மார் கிரிகோரியோஸ் பேராயருக்கும் உங்களோடு இணைந்துள்ள அனைத்து குருக்களுக்கும்
ஆசிரமத்தவர்களுக்கும் நலம் என நம்புகிறேன்.
சிரியாவின்
அந்தியோக்கியாவின்
இக்னாத்தியோஸ்
இரண்டாம் அப்ரேம்
1929 அக்டோபர்
22ஆம் தேதி
பெய்ரூட்
.........................................................................
மேற்குறிப்பிட்ட
கடிதங்களிலிருந்து எந்த அளவுக்கு அன்பும் மரியாதையும் மதிப்பும்
கத்தோலிக்கரல்லாதவர்களின் மறுஒன்றிப்பு சார்பான விருப்பம் என்பதை அறிந்து
கொண்டோம். ரஹ்மானி மறைமுதுவர் வெளிப்படுத்திய நிலைகள் அனைத்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அந்தியோக்கிய மறைமுதுவரை விடவும் திருத்தந்தையோடு நேரடியாக மறுஒன்றிப்பு என்ற
எண்ணமே நன்று என உணர்ந்ததன் படி தொடர்ந்து கடிதப் போக்குவரத்துக்களை உரோமை
நகருக்கு நடத்தினர். அவ்விவரங்கள் பின்வரும் அதிகாரங்களில் இணைக்கப்படுகின்றன.
அதிகாரம் 22
ரோமாபுரிக்கு அனுப்பிய முதல் குறிப்பாணையும் பதிலும்
அந்தியோக்கியாவின்
கத்தோலிக்க மறைமுதுவரான ரஹ்மானி அவர்களோடு ஆர்த்தடோக்ஸ் திருச்சபையின் ஆயர்
மாமன்றத்தின் செயலரான மார் இவானியோஸ் அவர்கள் நடத்திய கடித போக்குவரத்து பற்றி
நாம் கண்டோம். உரோமை திருத்தந்தை நேரடியான திருஆட்சியின் கீழே மற்றுமொரு புதிய
திருவழிபாட்டிற்கும் ஒரு திருஆட்சி அமைப்புக்கும் அனுமதி வாங்கிய பின்னர் மட்டுமே
கத்தோலிக்க மறுஒன்றிப்பு சாத்தியமாகும் என்ற நம்பிக்கை இருந்ததனால் தான் ரஹ்மானி
மறைமுதுவரோடு கடிதப் போக்குவரத்துகள் நமது கதாநாயகன் நடத்தியிருந்தார்.
அதுமட்டுமல்ல மேற்குறிப்பட்ட மறைமுதுரின் நற்கருத்தை பெற்றுக் கொண்டால் மட்டுமே
அந்தியோக்கிய திருவழிபாட்டை பெற்றுக் கொள்ள முடியும் என்ற எண்ணமும் இருந்ததாக
அனுமானிக்கப்படுகிறது.
கத்தோலிக்க மறைமுதுவரோடுள்ள கடிதப்
போக்குவரத்துகள் நடக்கும் சூழலில் ஆர்த்தடோக்ஸ் திருச்சபையின் மிக முக்கியமான
பிரமாணி இலஞ்ஞிக்கல் ஜான் பி. ஏ. பி. எல் அவர்களை நமது கதாநாயகன் சந்திக்கவும்
இந்த விவரத்தை அவரோடு அறிவிக்கவும் செய்தார். அவரது பதில் இவ்வாறாக இருந்தது:
“ஆயர் அவர்களே அந்தியோக்கியக்காரராகிய ஒரு
மறைமுதுவரை விட்டு விட்ட பின்னர் மற்றொரு அந்தியோக்கியன் மறைமுதுவரை ஏற்றுக்
கொள்வது அறிவு சார்ந்தது அல்ல.”
எனது கருத்தை நான் கூறிக் கொள்கிறேன்.
“மேற்குத் திருச்சபையின் சட்டங்களையும் நமது திருச்சபையின் திருவழிபாட்டு
முறைகளையும் இணைத்து திருத்தந்தையின் நேரடியான ஆட்சியின் கீழ் கத்தோலிக்க
திருச்சபையோடு மறுஒன்றிப்படைய முயற்சிக்க வேண்டும். மேற்குத் திருச்சபையின் ஆட்சியாளர்கள்
சிறந்தவர்களும் தலைசிறந்தவர்களுமாவர். துருக்கிக்காரர்களின் கலாச்சாரத்தை நாம்
அனுபவித்தோம் அல்லவா. எனவே திருத்தந்தையோடு நேரடியாக கடிதப் போக்குவரத்துகளை நடத்த
வேண்டும்.” ஆர்த்தடோக்ஸ் திருச்சபையிலும் யாக்கோபாய திருச்சபையிலும் பல முக்கிய
பிரமாணிகள் இக்கருத்தை பற்றி நமது கதாநாயகன் பேசியபோது மீ ஜெ ஜான் அவர்களுடைய
கருத்தோடு ஒத்த கருத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.
இத்தருணத்தில் மறுஒன்றிப்புக்கு இரண்டு
ஆண்டுகளுக்கு முன்னர் 1928ல் கத்தோலிக்க திருச்சபையோடு இணையும் வாய்ப்பைப் பெற்றவரும் அன்று ஒரு அருள்
தந்தையுமாக இருந்த எழுத்தாசிரியர் ஒரு சில இளைஞர்களோடு இணைந்து எர்ணாகுளம் உயர்
மறைமாவட்டத்தின் பேராயர் மார் அகஸ்டின் கண்டத்தில் அவர்களை ஆயரகத்திற்கு சென்று
சந்தித்தார். பல விடயங்களைப் பற்றி அவர் பேசிய பின்னர் “பெதனியின் நிலை எவ்வாறு
இருக்கிறது?” என ஆயர் வினவினார். பதில் இவ்வாறாக இருந்தது. “பெதனியின் ஆயரும்
உடனடியாக கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்திட தீர்மானித்துள்ளார். ஆனால் அந்தியோக்கியா
ரஹ்மானி மறைமுதுவரின் கீழ் என கூறப்படுகிறது.”
இந்த விடையைக் கேட்ட உடனடியாக ஆயர் அவர்கள்
எழும்பி மேசையின் மேல் கையால் ஓங்கி அடித்துக் கொண்டு உரத்த குரலில் இவ்வாறு
கூறினார். “கூடாது. ஒரு போதும் கூடாது. எந்தவித முன்னேற்றமும் உருவாவதில்லை. பெதனி
உரோமை திருத்தந்தையின் நேரடியாக ஆட்சியின் கீழ் வரவேண்டும். அப்படி என்றால்
மட்டுமே முன்னேற்றம் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.”
தொலைநோக்குப் பார்வை கொண்டவரும் பல
அனுபவங்களின் சொந்தக்காரருமான ஆயர் அவர்கள் கூறியதன் அர்த்தம் என்னவென்று எங்களால்
உணர்ந்து கொள்ள முடிந்தது. கேரளாவின் மறுஒன்றிப்பு இயக்கத்திற்கு கடந்த 25 ஆண்டுகளில்
நடந்த அனைத்து படிநிலைகளின் வளர்ச்சியில் உரோமை திருத்தந்தையோடு நேரடி ஆட்சியின்
கீழ் வரவேண்டும்.
காலாச்சேரி ஆயரின் கருத்து
மேற்குறிப்பிட்ட பல காரணங்களால்
உரோமாபுரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கு நமது கதாநாயகன் தீர்மானித்து விட்டார்.
ஆனால் மேற்குறிப்பிட்ட விண்ணப்பங்கள் நேரடியாக திருத்தந்தைக்கு அனுப்பலாமா?
இல்லையா? இந்தியாவின் திருத்தூதுவ அதிகாரி வழியாக அனுப்பத்தான் முடியுமா? என்ற
வழிமுறையைப் பற்றி நம் கதாநாயகனுக்கு ஐயம் ஏற்பட்டது. அதற்காக சங்கனாச்சேரி
மறைமாவட்ட ஆயர் மார் ஜேம்ஸ் காலாச்சேரி ஆயரை இரகசியமாக கண்டு விவரங்களை கேட்டு
அறிந்து கொண்டார்.
இரவு ஏறக்குறைய 10
மணிக்குப் பிறகு சங்கனாச்சேரி ஆயரகத்திற்கு வந்து காவலரைப் பார்த்து ஆயர் இங்கு
உண்டா? எனக் கேட்டார். காவலர்: “உண்டு ஆனால் தூங்கச் சென்றார் எனக் கருதுகிறேன்” என்றார். “பரவாயில்லை. ஆயரின் அறை எது?
நீங்களும் என்னோடு வரவும்!”
காவலரும் உடன் சென்று “இதுதான் அறை” எனக்
காண்பித்தார். அப்போது அறையிலிருந்து “யார் அது” என ஒலி கேட்டது. உடனடியாக ”நான்
பெதனியின் ஆயர் மார் இவானியோஸ்” என பதில் வழங்க ஆயர் அவர்களும் வாசலை திறந்து அவரை
வரவேற்று இருவரும் நலம் விசாரித்து உரையாடல்களை துவங்கினர். பின்னர், “நாங்கள்
கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படையும் முயற்சிகள் மேற்கொள்ளும் விவரத்தை
நீங்கள் அறிந்தீர்கள் அல்லவா! அந்தியோக்கியாவின் ரஹ்மானி மறைமுதுவரோடு
மறுஒன்றிப்படைவதற்கு நாங்கள் கடிதப் போக்குவரத்துகள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் பல நபர்களும் நேரடியாக திருத்தந்தையோடு கடிதப் போக்குவரத்துகள் நடத்த
வேண்டும் எனவும் நேரடியாக திருத்தந்தையின் ஆட்சியின் கீழ் வர வேண்டும் என்ற
கருத்தை கூறியதனால் நானும் அதனை நல்லதாக கருதி திருத்தந்தைக்கு கடிதங்கள்
அனுப்புவதற்கு நினைக்கிறேன். இந்த விண்ணப்பங்களை நான் நேரடியாக திருத்தந்தைக்கு
அனுப்பலாமா? இல்லை, இந்தியாவின் திருத்தூதுவ அதிகாரி வழியாகத்தான் அனுப்ப
முடியுமா? இதைப் பற்றிய உங்களுடைய கருத்தை அறிந்து கொள்ளத்தான் நான் இந்த இரவிலேயே
உங்களை வந்து சந்திக்கிறேன்.
காலாச்சேரில்: திருத்தந்தையின் கீழ்
நேரடியான மறுஒன்றிப்பு தான் மிகவும் நல்லது என்பதுதான் எனது கருத்து. கத்தோலிக்க
ஆயர்களான எங்களுக்கு திருத்தூதுவ அதிகாரி வழியாக மட்டுமே முக்கியமான கடிதங்களை
அனுப்ப முடியும். ஆனால் நீங்கள் யாக்கோபாயா ஆயர். அதனால் உங்களுக்கு நேரடியாக
உரோமாவுக்கு கடிதங்களை அனுப்பலாம்.
இதைப் பற்றி ஒரு சில நேரம் இருவரும்
உரையாடல் நடத்திய பின்னர் மீண்டும் திருவல்லாவுக்கு தனது பயணத்தைத்
துவங்கினார்.
சில நாட்களுக்குப் பின்னர் கோட்டயம்
மறைமாவட்டத்தின் ஆயர் அலெக்சாண்டர் சோளப்பரம்பில் ஓர் இரவு திருவல்லாவின் திருமூலபுரத்திற்கு
வந்து நமது கதாநாயகனை சந்திக்கவும் மறுஒன்றிப்பு பற்றிய தேவையான ஆலோசனைகளும்
வழிமுறைகளும் வழங்கினார். இவற்றை கேட்டறிந்தவாறு உரோமாபுரிக்கு நேரடியாக எல்லா
விவரங்களையும் குறிப்பிட்டு குறிப்பாணை ஒன்றை அனுப்புவதற்கு மார் இவானியோஸ்
தீர்மானித்தார். இதைப் பற்றி தனது சுயசரிதை நூலில் கதாநாயகன் எழுதியுள்ள பகுதி
பின்வருமாறு;
“அதற்கேற்ப உரோமாபுரிக்கு நான் கோரிக்கை மனு
ஒன்று எழுதி அனுப்பினேன். உரோமையில் மேற்படிப்பு முடித்து முதுமையின் காரணமாக தனது
சொந்த ஊரான மாவேலிக்கரையில் ஓய்வு எடுத்து வந்த அருள் தந்தை ரபேரா மூலமாக முதல்
கடிதம் அனுப்பப்பட்டது. கடிதத்தின் உள்ளடக்கம் இவ்வாறாக அமைந்திருந்தது.
மார்த்தோமா திருத்தூதரால் நிறுவப்பட்ட
இந்தியாவின் கிறிஸ்தவ திருச்சபையில் உட்பட்டவர்களும் உள்ளடங்கியவர்களும் கேரளா
மக்களுமான ஒரு கூட்டம் இறைமக்களும் அவர்களுடைய குருக்களும் தலைமைக் குருக்களும்
இணைந்து கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய விரும்புகிறோம். அவர்கள்
அந்தியோக்கிய திருவழிபாட்டு முறை திருச்சடங்குகளை கடைபிடித்து வருகிறார்கள்.
தற்போது அவர்கள் உயர் பேராயர் ஆட்சியின் கீழே உள்ளனர். உயர் பேராயரும் அவரோடு
இணைந்துள்ள ஆயர்களும் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றி்படைய விரும்பும் போது
ஏற்றுக் கொள்வீர்களா? அவர்களுடைய திருத்தூதுவ கைவைப்பு மற்றும் அருளடையாளங்களின்
உண்மை நிலையை அங்கீகரிப்பீர்களா? அந்தியோக்கிய திருச்சபையின் சட்டங்களையும்
நாங்கள் கடைபிடித்து வரும் வழக்கங்களையும் ஏற்றுக் கொள்வீர்களா? கத்தோலிக்க
திருச்சபையிலிருந்து பிளவுற்று நிற்கும் கிழக்குத் திருஅவைகளை ஏற்றுக் கொள்ளவும்
அவர்களுடைய பழமை வாய்ந்த சடங்குகளை நிலைநிறுத்தவும் திருஆட்சிப் பீடம் பல
முறைகளிலும் ஏற்றுக்கொள்ளும் என பல திருத்தந்தையர்களும் அறிவித்திருப்பதனை நாங்கள்
அறிந்திருக்கின்றோம். திருஆட்சிப் பீடத்தில் எங்களோடு உள்ள நிலை எது? என அறிவதற்கு
இந்த கடிதத்தை அனுப்புகிறேன்.
இந்த கடிதத்தை எழுதி கையொப்பமிடாமலும் பெயர்
எழுதாமலும் நான் அருள்தந்தை ரபேரா அவரை ஒப்படைத்தேன்.
அருள் தந்தை ரபேரா அவர்களை உரோமையில்
கல்லூரியில் கற்பித்த பேராசிரியர் ஒருவரான கர்தினால் வழியாக இந்த கடிதத்திற்கு
பதில் மொழி தரலாம் என அவர் என்னோடு கூறினார். பெயர் எழுதாமல் அனுப்பப்பட்ட இந்த
கடிதத்திற்கு உரோமையிலிருந்தும் பெயர் எழுதாமலேயே பதில் கடிதம் வந்தது. அந்த
கடிதத்தில் நான் அனுப்பிய கேள்விகளுக்கு பதிலும் உண்டாயின.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேரளாவின்
ஆர்த்தடோக்ஸ் திருச்சபையின் ஆயர்களுக்கு “திருத்தூதுவ கை வைத்தல்” கிடைத்ததுண்டா
எனவும் கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக் கொள்கின்ற நம்பிக்கைக்கும் நன்னடத்தை
நெறிமுறைகளுக்கும் எதிராக ஏதேனும் நம்பிக்கையோ அறிவுரைகளோ கேரளா யாக்கோபாயர்களுக்கு
உண்டா எனவும் கேள்விகள் அடங்கியிருந்தன.
வினாக்களுக்கு மறுமொழியாக பெயர் எழுதி பதில்
கடிதத்தை அனுப்பினேன். யாக்கோபாய திருச்சபையின் ஆயர்களுக்கு மரபின்படி திருத்தூதுவ
கை வைத்தல் உண்டு எனவும் யாக்கோபியா திருச்சபையின் மறைமுதுவரான அப்தேது மிஷிகா
மறைமுதுவர் கேரளாவுக்கு 1912 ஆம் ஆண்டு வரவும் ஒரு உயர் பேராயரை அருள் பொழிவு செய்யவும் செய்தார். அவரை
பேராயராக அருள் பொழிவு செய்தவர் 1876 ல் கேரளாவை சந்தித்த பத்ரோஸ் என்ற
மறைமுதுவர் ஆவார். தற்போதைய ஆயர்கள் யாக்கோபியை மறைமுதுவரிடமிருந்தும் நேரடியாக
உயர் பேராயரிடமிருந்தும் ஆயர் அருள்பொழிவை பெற்றுக் கொண்டுள்ளனர். எனவே தற்போது
ஆர்த்தடோக்ஸ் திருச்சபையில் உள்ள அனைத்து ஆயர்களும் சரியான திருத்தூதுவ கை வைத்தல்
பெற்றுக் கொண்டவர்கள் ஆவர்.
கேரளாவின் ஆர்த்தடோக்ஸ் திருச்சபையில்
கத்தோலிக்க நம்பிக்கைக்கும் நன்னடத்தை நெறிமுறைகளுக்கும் எதிராக எதுவும் இல்லை
எனவும் பதில் அனுப்பினேன். மேற்குறிப்பிட்ட கடிதங்கள் 1926லும் 1927
அனுப்பப்பட்டன. உரோமையிலிருந்து அதற்கு 1930 ஆகஸ்ட் மாதத்தில் பதில் மொழி
வந்தது. இதற்கிடையே சிரியாவில் திருத்தந்தையின் திருத்தூதுவ அதிகாரி வழியாக
ரோமிலிருந்து கேரளாவின் ஆர்த்தடோக்ஸ் திருச்சபையின் ஆயர் அருள்பொழிவின் உண்மை நிலை
பற்றி ஆராய்ந்து கொள்ளவும் செய்தனர்.
குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும் சரி என
உணர்ந்த பின்னர் 1932 இல் பதினொன்றாம் பயஸ் திருத்தந்தையை சந்தித்தபோது கிழக்கு திருஅவைகளின்
திருச்சங்க செயலர்களுள் ஒருவர் இவற்றைக் குறித்து
என்னோடு எடுத்துக்கூறவும் சிரியாவின் திருத்தூதுவ அதிகாரி வழங்கிய
அறிக்கையின் ஒரு நகல் ஒன்றையும் என்னிடம் வழங்கினார்.
ரோமாபுரிக்கு அனுப்பிய முதல் குறிப்பாணை
தற்போது சேர்க்கப்படுகிறது;
விருப்ப மனு
கேரள யாக்கோபாய திருச்சபையும் கத்தோலிக்க
திருச்சபையும் இணைகின்ற ஒன்றிப்பின் கோரிக்கைகள்:
1.
பழமையான திருவழிபாடும்
திருச்சடங்குகளையும் பாதுகாத்தல்
2.
மறுஒன்றிப்படையும் ஆயர்களுக்கு
அம்மக்கள் மேலான திருஆட்சி அதிகாரம்
அறிக்கை
1910 ஆம் ஆண்டுக்குப் பின்னர்
தென்னிந்தியாவின் யாக்கோபாய திருச்சபை இரண்டாக பிளவுற்றது. அவர்களுள் ஒரு
குழுவினர் மர்தீன் என்னும் இடத்தில் ஆட்சி மையம் கொண்டுள்ள அந்தியோக்கிய
யாக்கோபாயா மறைமுதுவரின் திரு ஆட்சியின் கீழ் தற்போதும் நிலைத்திருக்கின்றனர்.
மற்றொரு குழுவினரோ திருவிதாங்கூரின் கோட்டயம் என்னும் இடத்தில் தங்கி வாழும்
கிழக்கின் உயர் பேராயரின் அதிகாரத்தில் நிலைத்திருக்கின்றனர்.
1912ல் கேரளாவை சந்தித்த அப்தேது மிசிஹா
மறைமுதுவர் உயர் பேராய அரியணை நிறுவவும் செய்தார். இஃது மெசொப்பொத்தேமியாவில்
டைகிரீசு என்னும் இடத்தில் பழமையாக அமைந்திருந்த கிழக்கு உயர் பேராய அரியணையின்
மறு அவதாரமே ஆகும். அந்தியோக்கிய மறைமுதுவரிடமிருந்து சுதந்திரமான ஒரு ஆட்சி
அரியணையே இது. உயர் பேராய அரியணையின் எல்லையில் மறைமுதுவருக்கு கீழான ஆட்சி
அதிகாரத்தை நிர்வகிப்பதும் உயர் பேராயரும் அவருக்கு கீழ் ஆயர்களும் இணைந்து கொண்ட
ஆயர் மாமன்றமே ஆகும்.
இந்த உயர் பேராய அரியணையின் கீழே ஆயர்கள்
உரோமை திருச்சபையோடு மறுஒன்றிப்படைய விரும்புகின்றார்கள். உயர் பேராய அரியணையின்
கீழே உள்ள ஆயர் மாமன்றம் அதற்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு உயர்மறைமாவட்டத்தில்
பேராயர்களை மற்றும் ஆயர்களை அருள்பொழிவு செய்யவும் மறைமுதுவருக்கு கீழான
பொறுப்புக்களை நிர்வகிக்கவும் அதிகாரங்களை செயல்படுத்தவும் செய்து வருகின்றது.
இந்த ஆயர் மாமன்றம் மறைமாவட்டத்திற்கு உள்ளே ஆன்மீக மற்றும் திருச்சபை சார்ந்த
அனைத்து நிகழ்வுகளிலும் நிர்வாகம் செய்தும் தண்டனை வழங்கும் அனைத்து உரிமைகளை
செயல்படுத்தும் உரிமையைக் கொண்டுள்ளது.
இந்த உயர் பேராயர் அரியணையின் மாமன்றம்
கேட்டுக் கொள்வது என்னவென்றால்: கத்தோலிக்க திருச்சபையோடு இணைவதற்கு நாங்கள்
தயாராகும்போது பின்ருவனவற்றை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்:
1.
பழமையான எங்களது
திருவழிபாட்டும் திருச்சடங்குகளை பாதுகாத்துக் கொள்ளவும்
2.
எங்களது மாமன்றத்திற்கும் அதன்
ஆயர்களுக்கும் மறுஒன்றிப்படைகின்ற அனைத்து யாக்கோபாயா சுறியானிக்காரர்களுக்கு மேலே
அதிகாரம் நல்கவும்
3.
ஆண்டவரின் திருத்தூதர்களுள்
முதன்மையான பேதுருவின் தலைமைத்துவத்தை பின் தொடர்ந்து உரோமாபுரி அதிகாரத்திற்கு
அடிபணிந்திடவும்
பெய்ரூட்டில் உள்ள சுறியானி கத்தோலிக்க
மறைமுதுவரின் அதிகாரத்திற்கு உள்பட்டிருக்க எங்கள் ஆயர் மாமன்றம் விரும்பவில்லை.
காரணம் இந்த ஆயர்மன்றம் தென்னிந்தியாவில் உயர் பேராய அரியணையில் அதாவது
மறைமுதுவருக்கு அடுத்த உயர் பேராய ஆட்சி அதிகாரத்தை செயல்படுத்தி வருகிறது.
உயர் மறைமாவட்டத்தில் ஏழு ஆயரகங்கள் உள்ளன.
எட்டாவது மறைமாவட்டம் அண்மையில் இணைக்கப்பட்டுள்ளது. அரியணையில் அமர்ந்துள்ள ஆயர்
மாமன்றத்தின் உறுப்பினர்களான மூன்று ஆயர்களின் ஆட்சியின் கீழே இந்த எட்டு
மறைமாவட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆயர்களின் மற்றும் அவர்களின்
கட்டுப்பாட்டில் உள்ள மறைமாவட்டங்களின் பெயர்கள் கீழே இணைக்கப்படுகிறது.
1.
மேதகு ஆயர் ரோமன் மார்
பஸேலியோஸ்
· கிழக்கின் உயர் பேராயர்
· கோட்டயம், கண்டனாடு, அங்கமாலி போன்ற இடங்களின் மறை மாவட்ட ஆயர்
· வாழிடம்: வாகத்தானம், கோட்டயம், திருவிதாங்கூர்
2.
மேதகு ஆயர் மார் கிரிகோரியோஸ்
· நிரணம், கொல்லம், கொச்சி, தும்பமண் போன்ற மறைமாவட்டங்களின் பேராயர்
· வாழிடம்: குண்டறா, கொல்லத்திற்கு அருகே திருவிதாங்கூர்
3.
மேதகு ஆயர் மார் இவானியோஸ்
· பெதனியின் ஆயர்
· வாழிடம்: திருவல்லா, திருவிதாங்கூர்
பெதனி ஆயரின் ஆளுகைக்கு உள்ளே இரண்டு துறவு
சபைகள் உள்ளன. ஒன்று ஆண் துறவு சபையும் மற்றொன்று பெண்களுக்கு உரியது ஆகும்.
பெண்கள் கல்விப் பணியை செய்து வருகின்றனர். அவர்களது பொறுப்பில் ஆதரவற்றோர் இல்லம்
ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இதனைக் குறித்து உரோமை திருச்சபையின்
தீர்மானித்தை கேட்டு அறிந்த பின்னர் ஆயர் மாமன்றத்தின் மறுஒன்றிப்பைப் பற்றி இறுதி
தீர்மானத்தை அறிவிக்கவுள்ளோம். மறுஒன்றிப்பை செயல்படுத்துவதற்கு உரோமையின்
பதிலை அறிந்த பிறகு இந்த மாமன்றம்
கத்தோலிக்க திருச்சபையோடு உறவில்
நுழைவதற்கு சம்மதிக்கவில்லை என்றால் குறைந்தபட்சம் அதில் ஒரு ஆயராகிய
நான் திருத்தந்தையின் அதிகாரத்திற்குள்
வந்தடையவும் என்னோடு சில கத்தோலிக்க திருச்சபையினரும் விரும்புகின்றோம்.
அப்படியாயின் அவர்களுடைய திருவழிபாடும் கடைபிடிக்கும் ஆச்சாரங்களும் அவ்வாறே
தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த ஆயருக்கு அனைத்து யாக்கோபாயர்களின்
மேல் திரு ஆட்சி அதிகாரம் கொடுக்க வேண்டும் என்றும் திருத்தந்தையோடு
வேண்டுகின்றேன். மெசொப்பொத்தோமியாவிலும் சிறியாவிலும் உள்ள சுறியானிக்
கத்தோலிக்கர்களின் மறைமுதுவரின் உயர்மறைமாவட்டத்தில் பயன்படுத்தி வருகின்ற
திருவழிபாட்டைத் தான் நாங்களும் பயன்படுத்தி வருகின்றோம்.
தென்னிந்தியாவில் உள்ள சுறியானிக்
கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 9 லட்சம் ஆகும். அவர்களுள் பாதி பேர்கள்
பல்வேறு சூழல்களில் கல்தேய சுறியானி திருவழிபாட்டை பயன்படுத்தி தொடர்ந்து உரோமை
ஒன்றிப்பில் உள்ளனர். மீதமுள்ள பாதியில் ஏறக்குறைய மூன்று லட்சம் பேர்கள் யாக்கோபாயர்களும்
ஒன்றேகால் லட்சம் பேர்கள் மார்த்தோமா கிறிஸ்தவர்களும் ஆவர். மார்த்தோமா
கிறிஸ்தவர்கள் பிரிவினை திருச்சபையினரின் சிந்தனைகளோடு யாக்கோபாயர்களின்
திருவழிபாட்டை பயன்படுத்தி வருகின்றனர். திருச்சபையின் மரபுப்படியான நம்பிக்கையையே
யாக்கோபாயர்கள் நம்பி வருகின்றனர். இறைமகனும் நமது மீட்பருமாகிய இயேசு கிறிஸ்து
என்ற ஒரே ஆளில் பரிபூரண இறைமையும் பரிபூரண மனிதத்துவமும் இணைந்திருக்கிறது என்று
நம்புகின்றோம். எனவே “எவத்திக்கூஸின் வழி மரபினர்கள்” அல்ல.
உரோமை அரியணை இந்த
கோரிக்கையை அனுமதித்து தருகின்ற போது நான்கு லட்சம் கத்தோலிக்கரல்லாத சுறியானிக்காரர்களின்
பழமையான அவர்களுடைய திருவழிபாட்டையும் சடங்குகளையும் தொடர்ந்து பயன்படுத்தியும்
சொந்த ஆயர்களின் மற்றும் குருக்களின் ஆளுகையின் கீழ் கத்தோலிக்க சபை திருச்சபையின்
ஒன்றிப்பில் வந்தடைய மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
உரோமையிலிருந்து பதில் மொழி
1926 நவம்பர் மாதத்தில் மேற்குறிப்பிட்ட
சாதாரணமான குறிப்பாணை ஒன்றை அருட்தந்தை ரபேரா வழியாக நமது கதாநாயகன் ரோமாபுரிக்கு
அனுப்பினார். கிழக்கு திருச்சபை உறுப்பினர்களான கத்தோலிக்கரல்லாத ஆயர்களையும்
குருக்களையும் இறைமக்களையும் கத்தோலிக்க திருச்சபையில் இணைப்பதற்கு உரோமாவின்
மனநிலையை அறிந்திட வேண்டியே மேற்குறிப்பிட்ட குறிப்பாணை அனுப்பப்பட்டது.
இவ்விடயத்தில் விளக்கங்கள் கேட்டவாறு உரோமாவிலிருந்து அனுப்பிய சாதாரண
அதிகாரப்பூர்வமற்ற பதில் மொழி இப்போது சேர்க்கப்படுகிறது.
“புனித பேதுருவின் வழிமரபினரும் பூவுலகில்
கிறிஸ்துவின் பங்காளியுமான உரோமை திருச்சபையின் அதிகாரத்தின் கீழே கத்தோலிக்க
திருச்சபையோடு மறுஒன்றிப்படைவதற்கான உங்களுடைய விருப்பத்தை உயர் பேராய ஆயர்
மாமன்றம் வெளிப்படுத்தியதை தூய ஆவியின் அருளால் நடந்தது என கருதுகிறோம். மரபு
வழியான உங்களது அன்பும் அனைத்து கிறிஸ்தவர்களையும் பற்றிய உங்களுடைய ஆர்வமும்
ஆயனைப் போன்ற இறைமக்களோடுள்ள உறவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
.”ஒரே தொழுவமும் ஒரே ஆயனுமாக அமைய வேண்டும்
என்ற திருத்தந்தையின் விருப்பம் அவரது நிர்வாகப் பொறுப்பேற்ற நாள் முதலே தெளிவாக
உள்ளது. இத்தொழுவத்தில் அடைக்கலம் தேட வேண்டியவர்களாக அனைவரோடும் பரிதாப பூர்வம்
கத்தோலிக்க உலகத்திற்கு அனுப்பிய தனது திருத்தூதுவ மடலில் இவ்வாறு அவர்
குறிப்பிட்டுள்ளார். “என்றும் நிலைத்திருக்கும் ஆண்டவரின் பிரதிநிதியாக செயல்படும்
ஒருவன் இறைவனின் தூய இதயத்தில் நிலைத்திருந்த இவ்விடயத்தை எண்ணாமல் இருக்க
சாத்தியமில்லை. சுருக்கமாகவும் அன்பு
நிறைந்த தந்தைக்குரிய பாசத்தோடு அவர்களை நான் கொண்டு வருவேன் என்ற அதே வார்த்தையை
மீண்டும் எடுத்துக் கூற இயலும். “அவர்கள் எனது குரலைக் கேட்கவும், ஒரே தொழுவமும்
ஒரே ஆயனுமாக மாறுவர்” என்ற கிறிஸ்துவின் போதனையை நினைவு கூர்கின்ற போது பெரும்
மகிழ்ச்சியை அனுபவிக்க முடிகிறது.”
மறைசாட்சியாகிய புனித யோசேபாத் மரணமடைந்ததன்
மூன்றாம் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் பின்னணியில் பிரிந்து நிற்கின்ற அனைத்து
சகோதரர்களையும் கத்தோலிக்க திருச்சபையின் ஒன்றிப்பில் கொண்டு வர வேண்டும் என்ற
தனது விருப்பத்தையும் தற்போதைய திருத்தந்தையும் தெளிவாக்குகின்றார். இதனை
செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றால் திருச்சபையின் உண்மை உயிர் நிலை
பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அத்தியாவசியமானதாகும். கிழக்குத்
திருஅவைகளின் கிறிஸ்தவர்களின் வரலாற்றையும் திருச்சடங்குகளையும் பெரும் பொறுப்போடு
கற்று அறிந்து கொள்ளவும் இலத்தீன் திருவழிபாட்டின் கத்தோலிக்கர்களை வலியுறுத்தி
வேண்டியுள்ளேன். ஏதேனும் காரணத்தால் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றவர்களை
மறுஒன்றிப்பு என்னும் நிலைக்கு வழிநடத்தவும் வேண்டும். இவ்வாறு அனைவரும் சமமாக
உரிமை கொள்கின்ற பேரின்பத்திற்குள் நுழைய தகுதி பெறுகிறோம். இரு கூட்டத்தினரும்
ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் ஜெபத்தின் வலிமையும் மூலம் இதனை பெற்றுக் கொள்வர்
என்ற நம்பிக்கை கீழ்க்குறிப்பிடும் சொற்களால் தெளிவாகின்றது.
“எம்மொழி பேசினாலும் எவ்வினத்தை சார்ந்து
இருந்தாலும் உரோமை கத்தோலிக்க திருச்சபை எப்போதும் அவர்களை காத்துக் கொள்ளவும்
எக்காலமும் அவர்களை பரிபாலிக்கவும் ஆணையிடுகின்ற நிலையில் ஒவ்வொரு திருவழிபாட்டை
சார்ந்தவர்களும் அவரவர் உரிமைகளை அனுபவித்துக் கொள்ளட்டும். பலவகை ஆடைகளால் அரசி
அலங்கரிக்கப்படுவது போல பலவித திருவழிபாட்டுக்களால் அழகிய ஆடைகளால் திருச்சபை
அலங்கரிக்கப்படுகிறது.”
இந்த வார்த்தைகளிலிருந்து உரோமை திருஆட்சிப்
பீடம் தங்களது திருவழிபாட்டை தொடர்வதற்கு ஆர்வம் கொண்டிருந்த நிலையை எவ்வளவு
மதிப்போடு ஏற்றுக் கொண்டது என மலங்கரையின் உயர் பேராய மாமன்றத்திற்கு உட்பட்ட
ஆயர்கள் உணர்ந்து கொள்ள முடியும். பிளவுற்று பிரிந்து நின்ற கிறிஸ்தவ சகோதரர்களின்
மறுஒன்றிப்புக்காக உரோமையின் திருத்தந்தையர்கள் எப்போதும் அவர்களது திருவழிபாட்டை
பாதுகாத்திட அனுமதியும் அங்கீகாரமும் வழங்கி ஏற்றுக் கொண்டிருந்தனர். கத்தோலிக்க
நம்பிக்கைக்கு எதிரானதும் ஆன்மாக்களின் அழிவுக்குரியதாகவோ திருச்சபையின் மேன்மையை பாதிக்கும்
விதத்திலோ எதுவுமே இல்லை என ஆய்வு செய்து அறிந்து கொண்ட பின்னர் மட்டுமே அதற்கான
அனுமதியை வழங்கி இருந்தார்கள். 1942 மே 24ஆம் தேதி 14 ஆம் பெனிடிக்ட் திருத்தந்தை
அவர்கள் வெளியிட்ட “எட்சி பாஸ்டொராலிஸ்” என்ற திருத்தூதுவ மடலின் வார்த்தைகள்
இத்தருணத்தில் பொருத்தமாக அமைந்துள்ளன.
கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கைக்கு
முரண்படாத, ஆன்மாக்களின் மீட்புக்கு தடையாகாத அல்லது திருச்சபையின் புகழுக்கு கேடு
விளைவிக்காத சடங்குகளை ஏற்று, அனுமதி வழங்க உரோமை திருத்தந்தையர்கள்
அவற்றை
கவனமாக ஆலோசித்த பிறகு, தங்கள் அனுமதியை வழங்குவர்.
Allatae Nobis (ஜூலை 26-1755) என்ற திருத்தூதுவ மடலில் மேற்கூறிய
திருத்தந்தையின் வார்த்தைகளை மீண்டும் திரும்பத் திரும்ப எடுத்தியம்புகிறார்.
இத்திருத்தூதுவ மடலில் எட்டாம் கிளமெண்ட் திருத்தந்தையின் ஆட்சிக் காலத்தில்
நடைபெற்ற ருத்தேனியர்களின் மறுஒன்றிப்பின் போது ருத்தேனியன் ஆயர்களின் கோரிக்கைகளை
அவர் தனிப்பட்ட விதத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார். மறுஒன்றிப்புக்காக அவர்கள்
சமர்ப்பித்த கோரிக்கையில் ஒரு சில கருத்துக்கள் இணைக்கப்படுகிறது.
“திருவழிபாடுகளிலும் திருச்சடங்குகளிலும்
குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லாமல் கிழக்குத் திருஅவைகளின் மரபின்படி
இறையாராதனையும் புனித அருளடையாளங்களையும் நிறைவேற்றவும் ஒரே நம்பிக்கையில்
அனைவரும் நிலைநிற்கும் காலத்தில் நடைமுறையிலிருந்த திருவழிபாட்டு முறைகளை
கடைபிடிக்கவும் செய்வதற்கான அனுமதியை நாங்கள் வேண்டுகிறோம்.”
Romanae Pontifice என்ற திருத்தூதுவ மடலில்
(ஜனவரி 6-1862) மேற்குறிப்பிட்ட விடயங்களை சற்று விளக்கமான முறையில்
எடுத்துரைத்துள்ளது. கிழக்குத் திருஅவைகளின் கண்காணிப்புக்காக தனிப்பட்ட
திருச்சங்கம் ஒன்றையும் அவர் நியமித்தார். மேற்குறிப்பிட்ட மடலில் அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார். கிழக்குத்
திருஅவையினரை இலத்தீன் திருவழிபாட்டோடு இணைப்பதற்கு நமது மூதாதையர்கள் ஒருபோதும்
முயற்சி மேற்கொள்ளவில்லை. கிழக்குத் திருஅவையினரின் பழமை வாய்ந்த நம்பிக்கைகளையும்
சடங்குகளையும் அழிக்கவோ மாற்றி அமைக்கவோ
வேறுபடுத்தவோ செய்த போது அந்த நிலைக்கான விருப்பமின்மையை நாங்கள் தெளிவான மொழியில்
விளக்கமாக வெளிப்படுத்தி இருக்கின்றோம். ஆனால் அதே நேரத்தில் கத்தோலிக்க
நம்பிக்கைக்கு எதிரானதும் ஆன்ம மீட்புக்கு கேடு விளைவிப்பதும் திருச்சபையின் உண்மை
நிலையை அழிவுக்குரியதாக்குவதுமான ஏதேனும் விடயங்கள் அவற்றில் இணையாதிருப்பதற்காக
நாங்கள் வழிமுறைகளை வெளிப்படுத்தி உள்ளோம்.
அதிகாரம் 23
ரோமாபுரிக்கு இரண்டாம் குறி்ப்பாணை
உரோமாபுரிக்கு அனுப்பப்பட்ட சாதாரண (Unofficial) குறி்ப்பாணை ஏற்றுக்கொள்ளப்பட்டு சாதாரணமாகவே உரோமாபுரியிலிருந்து பதில்
அனுப்பப்பட்டது. அத்துடன் மலங்கரை யாக்கோபாயா திருச்சபை பற்றிய ஆறு வினாக்கள் திருத்தூதுவ பிரதிநிதி வழியாக நமது
கதாநாயகனுக்கு அனுப்பிக் கொடுத்தனர்.
1.
யாக்கோபாயா திருச்சபையும்
அந்தியோக்கிய திருவழிபாடும் மலங்கரையில் நுழைந்தது எப்போது? யாக்கோபாய
திருச்சபையில் தற்போது நிலவிவரும் குழப்பங்கள் என்னென்ன?
2.
கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய
விரும்புகின்ற குழுவினரில் எத்தனை மக்களும் தேவாலயங்களும் உள்ளன?
3.
மேற்குறிப்பிட்ட குழுவிலிருந்து
எத்தனை ஆலயங்களும் எத்தனை மக்களும் உடனடியாக கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைவர்?
4.
அப்துல்லா மறைமுதுவரும்
அப்தேதுமிஷிகா மறைமுதுவரும் மலங்கரையில் எத்தனை ஆயர்களை அருள்பொழிவு செய்துள்ளனர்?
அவர்கள் யாவர்?
5.
கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய
அவர்களுள் யார் யார் எங்கே வைத்து தீர்மானித்துக் கொண்டனர்?
6.
அப்துல்லா மற்றும் அப்தேது மிசிகா
என்ற மறைமுதுவர்களுள் உண்மையான (சட்டப்படியான) மறைமுதுவர் யார்?
உரோமையிலிருந்து அனுப்பப்பட்ட
மேற்குறிப்பிட்ட வினாக்களுக்கு பதில் மற்றும் முதல் குறிப்பாணையின் விளக்கவுரையும்
அடங்க 1927 ஜனவரி மாதத்தில் நமது கதாநாயகன் திருத்தூதுவ அதிகாரி வழியாக உரோமாவுக்கு
அனுப்பினார்.
இத்துடன் அனுப்புகின்ற குறிப்பாணையினுள்
தாங்கள் கேட்டுக்கொண்ட வினாக்களுக்கு பதிலுரைகள் அடங்கியுள்ளன.
1 மற்றும் 6 வினாக்களுக்கான பதிலுரை: எண்- 1 முதல் 7 வரை அடங்கியுள்ளன.
2 ஆம் வினாவுக்கான பதிலுரை: எண்- 9 மற்றும் 10
3 ஆம் வினாவுக்கான பதிலுரை: எண்- 9 மற்றும் 10
4 ஆம் வினாவுக்கான பதிலுரை: எண்- 6 மற்றும் 8
5 ஆம் வினாவுக்கான பதிலுரை: எண்- 7
இரண்டாம் குறிப்பாணை
உரோமாபுரிக்கு சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாம்
குறிப்பாணை பின்வருமாறு:
1 கிறிஸ்து வருடம் 1599 முதல் 1665 வரை கேரளாவிலிருந்த சுறியானிக்காரர்கள்
திருத்தந்தை அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்தனர். ஆனால் அவர்களுள் ஒரு குழுவினர் 1665இல்
உரோமை ஒன்றிப்பிலிருந்து விலகி அந்தியோக்கிய மறைமுதுவரின் அதிகாரத்தை சுயமாகவே
ஏற்றுக் கொண்டனர். இவ்வாறு தொடர்ந்து அந்தியோக்கியன் திருவழிபாடு கேரளாவில்
நுழைந்தது. 1875ல் யாக்கோபாயா மறைமுதுவர் முதலாவதாக கேரளாவை சந்தித்தபோது அன்றைய
மலங்கரையின் பேராயரான யோசேப் மார் திவன்னாசியோஸ் ஆயருக்கு துணை ஆயர்களாக ஆறு பேரை
அருள்பொழிவு செய்தார்.
மூன்றாம் பேதுரு என்னும் பெயர் கொண்டிருந்த
இம்மறைமுதுவரின் வழிமரபினராக அப்தேதுமிஷிகா மறைமுதுவராக யாக்கோபாய திருச்சபையை திருஆட்சி
செய்து வந்தார். துருக்கி மற்றும் மலங்கரையிலும் வாழ்ந்த யாக்கோபாய சுறியானிக்காரர்களை
பல ஆண்டுகளாக அவர் நிர்வாகம் செய்து கொண்டிருந்தார். ஆனால் 1906 ஆம் ஆண்டு
துருக்கியில் சில ஆயர்களின் செயல்களின் வழியாக அரசு அதிகாரிகள் அவருக்கு இருந்த
அரசாங்கப் பொறுப்பை ரத்து செய்தனர். தொடர்ந்து அவர் பதவி இறக்கம் செய்யப்பட்டதனால்
அப்துல்லா சட்டஃப் மறைமுதுவராக பதவியேற்றுக்கொண்டார்.
2 அப்துல்லாவின் பதவி ஏற்பு பற்றி ஆட்ரியன்
ஃபுரோட்டஸ்க் என்ற வரலாற்று ஆசிரியர் (lesser eastern churches) என்ற
வரலாற்று நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“மறுஒன்றிப்படைந்த சுறியானி ஆயராக ஹோம்ஸ்
என்னும் இடத்தில் உள்ள சுறியானி கத்தோலிக்க மறைமாவட்டத்தை ஒன்பது ஆண்டுகள் அவர்
நிர்வாகம் செய்து வந்தார். யாக்கோபாயத் திருச்சபையில் மறைமுதுவர் அரியணை காலியாகும்போது
அவரை மறைமுதுவராக்கலாம் என உறுதிமொழி வழங்கியதனால் 1905ல் யாக்கோபாயா திருச்சபைக்கு
மீண்டும் திரும்பி வந்தார். டேயர்பர்க்கர்
என்ற யாக்கோபாயா மறைமாவட்டத்தில் ஆயராக ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். 1906ல்
மறைமுதுவராக செயல்பட்டிருந்த இக்னாத்தியோஸ் தனது பதவியை இழந்தார். இச்சூழலில் தான்
மலங்கரைக்கு வந்தடைந்தார்.
அப்துல்லா சட்டஃப் 350 பவன் லஞ்சமாக பெற்று தவறான
மார்க்கத்தில் மறைமுதுவராக பதவி ஏற்படைந்தார். எருசலேமில் வாழ்ந்திருந்த யாக்கோபாய
ஆயர்களிடமிருந்து இப்பணத்தை கடனாக வாங்கி இருந்தார். ஏறக்குறைய 500 பவன் செலவாக்கிய
பின்னர் மட்டுமே தான் அவரால் மறைமுதுவராக பதவி ஏற்க முடிந்தது. 1906 ஆகஸ்ட் 15ஆம்
தேதி அவர் தனது பதவியை இழந்தார்.”
3 ஆனால் அப்தேது மிசிஹா தனது பதவி
பறிக்கப்பட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. தானே நியாயமாகவும் திருச்சபை
சட்டங்களுக்கு ஏற்ப உண்மை மறைமுதுவர் என்ற உரிமை வாதத்தை வெளிப்படுத்தவும்
அப்துல்லா சட்டஃப் வஞ்சகத்தன்மையால் எனது பதவியை அபகரித்து விட்டார் எனவும்
வெளிப்படுத்தினார்.
4 யாக்கோபாயா திருச்சபையின்
திருச்சட்டங்களுக்கு ஏற்ப உண்மையான மறைமுதுவர் அப்பேது மிசிஹா ஆவார். அப்துல்லா
சட்டஃப் எதிர் மறைமுதுவராவார். முனைவர் ஆட்ரியன் ஃபுரோட்டஸ்க் எழுதியதைப் போன்று “பார்
எப்ராயா” என்பதை இணைத்து தயாரித்த திருச்சபை சட்டங்களைத் தான் அம்மக்கள் ஏற்றுக்
கொண்டிருந்தனர். 1898ல் பாரிஸ் எனும் இடத்தில் இந்த திருச்சபை சட்ட நூல் சுறியானி
மொழியில் வெளியிடப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக யாக்கோபாயா திருச்சபை ஏற்றுக்கொண்டு
பயன்படுத்தியிருந்த திருச்சட்டம் நூல் தான் இது. இரண்டு மறைமுதுவர்களின் நிலை
பற்றி இந்த திருச்சட்ட நூலில் சரியாக உணர்ந்து கொள்ள முடியும். கீழ்க்குறிப்பிடும்
பகுதி எதிர் மறைமுதுவரின் சட்டத்திற்குப் புறம்பான நிலை பற்றி எடுத்துரைக்கிறது.
நம்பிக்கையில் மாறுபடாமல் அதிகாரத்தை தவறாக
பயன்படுத்தியும் அல்லது பேராசை காரணமாகவோ பிரிவினை ஏற்படும் விதத்தில் இரண்டு
மறைமுதுவர்கள் அல்லது இரண்டு ஆயர்கள் ஒரே அரியணையில் அருள்பொழிவு செய்யப்படுகின்ற
போது முதல் நபர் ஆட்சி புரியவும் மற்றவர் அமைதியோடு இருக்கவும் செய்ய வேண்டும்.
ஏனென்றால் உரோமை அரியணையில் அசேனியூஸ் என்பவர் ஆட்சி நிர்வாகத்தில் நுழையாமல்
அதற்கு முன்னர் அருள்பொழிவு செய்யப்பட்ட ருமாசஸ் என்பவரிடம் ஆட்சியை வழிநடத்துவதற்கு
அனுமதித்திருந்தார் என “எக்லேசியாஸ்ட்டக்கி” என்ற நூலில் சாக்ரட்டீஸ்
கூறியுள்ளார். இறையியல் வல்லுநரான புனித கிரிகொரிக்கு பின்னர்
கான்ஸ்டான்டிநோபிலில் அருள்பொழிவு செய்யப்பட்ட “மார்ஷா மோஸ் சினிக்கு” என்பவரது
நிலை 150 ஆவது திருச்சட்டத்தின் படி தலைகீழாக மாறியது. பேரரசர் ஜஸ்டின் தியடோஷியஸ்
என்பவரை நாடு கடத்திய போது தலைமைத் திருத்தொண்டர் கயானா அலெக்சாந்த்ரியாவில் அருள்
பொழிவு செய்யப்பட்டார். எனினும் சின்ன ஆசியாவில் ஜான் என்ற பெயரில் தியோடோசியஸ்
அரியணையில் அமர்ந்திருந்தார். (பார்எபிராயா நேமோ கான்ன் அதிகாரம் 7)
5. அப்தேது மிசிஹா மறைமுதுவர் உரிமையோடும்
அதிகாரத்தோடும் நானே உண்மையான மறைமுதுவர் எனவும் அப்துல்லா சட்டஃப் சட்டத்திற்கு
எதிராக ஆட்சியை கைப்பற்றியவர் எனவும் மலங்கரைக்கு கடிதப் போக்குவரத்து நடத்தி
வந்தார். 1909ல் அப்துல்லா சட்டஃப் மலங்கரைக்கு வரவும் மலங்கரையின் திருச்சபை சொத்துக்கள்
மேல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக்கொள்ள
முயற்சி செய்தார். மலக்கரை திருச்சபை அந்தியோக்கியத் திருச்சபையின் சொத்து
அதிகாரத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டோம் என நிலைத்திருந்ததனால் மலங்கரை ஆயர்களும்
பேராயரான மார் திவன்னாசியோசும் அப்துல்லா மறைமுதுவரின் முயற்சிக்கு எதிராக
நின்றனர். எனவே மலங்கரையின் பேராயரை அப்துல்லா சட்டஃப் தடை செய்தார். ஆனால்
அப்துல்லா சட்டஃபிற்கு மலங்கரையில் எந்தவிதமான அதிகாரமும் இல்லை எனவும் மார் திவன்னாசியோஸ்
பேராயரை தடை செய்த ஆணை திருச்சபை சட்டங்களுக்கு எதிரானது எனவும் உண்மைக்கு
புறம்பானது எனவும் மறைமுதுவரான அப்தேது மிசிஹா துருக்கியிலிருந்து
வெளிப்படுத்தினார். 1912 ல் அப்தேது மிசிஹா மலங்கரைக்கு வந்தார். திருச்சபை சட்டத்திற்கு ஏற்ப மறைமுதுவராக
இருந்த அவரை மார் திவன்னாசியோஸ் ஏற்றுக்கொள்ளவும் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி மலங்கரை
யாக்கோபாயா திருச்சபைக்கு ஏற்படுத்தியிருந்த தடையை அகற்றவும் செய்தார். (Lesser Eastern churches - page 373)
1876-ல் மறைமுதுவர் மூன்றாம் பத்றோஸ் அவர்களால் அருள்பொழிவு செய்யப்பட்ட கண்டநாட்டு
ஆயர் பவுலோஸ் மார் இவானியோயோஸ் அவர்களை அப்பேதுமிசிகா மறைமுதுவர் உயர்பேராயராக
அருள்பொழிவு செய்தார். முனைவர் ஆட்ரியன் ஃபுரோட்டஸ்க் எழுதியுள்ளவை அனைத்தும் உண்மையானதாகும்.
இந்த உயர் பேராயர் அந்தியோக்கியன் சுறியானி யாக்கோபாய திருச்சபையிலிருந்து
முற்றிலும் சுதந்திர நிலையில் இருப்பார். தனது சுய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி
அவர் ஆயர்களை அருள்பொழிவு செய்யலாம். அவரது மரணத்திற்குப் பின்னர் ஆயர் மாமன்றம்
கூடி அவரது வழிமரபினரை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு சுதந்திரமான ஒரு யாக்கோபாய
திருச்சபையை அப்தேது மிசிஹா மறைமுதுவர் மனங்கரையில் நிறுவினார். உயர் பேராயரின்
இணை ஆயர்களாக மூன்று புதிய ஆயர்களையும் அப்தேது மிஸிஹா அருள்பொழிவு செய்தார்.
6 அவர் அருள்பொழிவு செய்த ஆயர்கள்
பின்வருமாறு: 1. மார் இவானியோஸ் யோவாக்கிம் 2. மார் கீவர்கீஸ் ஃபீலக்சீனோஸ்
மற்றும் 3. மார் கிரிகோரியோஸ் கீவர்கீஸ். இவர்களுள் மார் கீவர்கீஸ் ஃபீலக்சீனோஸ் இரண்டாவது
உயர் பேராயராக மார் பஸேலியோஸ் என்ற பெயரில் அருள்பொழிவு செய்யப்பட்டார். தொடர்ந்து
இம்மூன்று ஆயர்களும் இணைந்து பெதனியின் ஆயராக மார் இவானியோஸ் அவர்களை அருள்பொழிவு செய்தனர்.
மார் இவானியோஸ் யோவாக்கிம் மரணமடைந்தார். மார் கீவர்கீஸ் திவன்னாசியோஸ் உயர்
பேராயர் மற்றும் பெதனி ஆயரின் அருள்பொழிவு சடங்குகளில் மனப்பூர்வமாக கலந்து
கொள்ளவில்லை. ஆனால் அவர் உயர் பேராய திருஅரியணைக்குத் தேவையான ஒத்துழைப்பை அக்குழுவிலுள்ளவர்களுக்கு
வழங்கி வந்தார்.
7 1926 நவம்பர் முதலாம் தேதி
திருவல்லாவுக்கு அருகே பருமலை என்னும் இடத்தில் வைத்து நடந்த ஆயர்களின் மன்றத்தில்
1. மோறான் மார் பசேலியோஸ் உயர் பேராயர் 2. மார் கிரிகோரியோஸ் பேராயர் (குண்டற)
மற்றும் 3. பெதனியின் ஆயரான மார் இவானியோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்மன்றத்தில்
வைத்து கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்புக்காக உரோமை அதிகாரிகளோடு கடிதப்
போக்குவரத்து நடத்துவதற்காக பெதனியின் ஆயர் அவர்களிடம் பொறுப்பு
ஒப்படைக்கப்பட்டது. கடிதப் போக்குவரத்துகளும் மற்ற விவரங்களும் மிகவும் இரகசியத்
தன்மையோடு பாதுகாக்க வேண்டும் எனவும் மற்றும் விவரங்களை உடனடியாக தெரிவிக்க
வேண்டாம் எனவும் அவர்கள் தீர்மானித்தனர். மார் திவன்னாசியோஸ் புதிய குழுவினரை
உருவாக்கவில்லை எனிலும் வழக்குகள் தொடர்புடைய காரியங்களில் ஈடுபட்டிருந்தார்.
8 அப்துல்லா மறைமுதுவர் மலங்கரையில் யாக்கோபாயர்களின்
உயர் பேராயர் குழுவினருக்காக இரண்டு ஆயர்களை அருள்பொழிவு செய்தார். 1. மார் அர்த்தனாசியோஸ்
(ஆலுவா) 2. மார் சேவேரியோஸ் (கோட்டயம் வாழிடமும் – தென்பகுதிக்காக)
மீண்டும் எருசலேமில் வைத்து மறைமுதுவர் உயர்
பேராயர் குழுவினருக்காக யாக்கோபாயா திருச்சபையின் இரண்டு ஆயர்களை அருள்பொழிவு செய்தார்.
அவர்கள: 1. மார் தின்னாசியோஸ் மிக்காயேல் மற்றும் 2. மார் தியஸ்கோரஸ் தோமஸ்
ஆகியோர் ஆவர். மார் சேவேரியோஸ் ஆயரின் துணை ஆயராக மார் தியஸ்கோரஸ் தோமஸ்
அருள்பொழிவு செய்யப்பட்டார். மறைமுதுவரின் பிரதிநிதியாக மலங்கரையில் வாழ்ந்து வந்த
துருக்கி நாட்டவரான மார் ஒஸ்தாத்தியோஸ் அவர்களது பெயர் இப்பட்டியலில்
சேர்க்கப்படவில்லை. மேலும் புதிய நான்கு ஆயர்களைக் கூட யாக்கோபாயா திருச்சபைக்கு
அருள்பொழிவு செய்வதற்காக தீர்மானித்தனர்.
9 உயர் பேராயர் குழுவினரின் எண்ணிக்கை
ஏறக்குறைய ஒரு 1,50, 000 ஆகும். ஆயர் குழுவினரின் எண்ணிக்கை ஏறக்குறைய 2, 00, 000
ஆகும். Lesser Eastern churches என்ற நூலின்படி இக்குழுவினருக்கு ஏறக்குறைய 300 தேவாலயங்கள் உள்ளன. இவற்றுள்
நூறு ஆலயங்கள் ஆயர்க்குழு உருவான பின்னர் புதிதாக நிறுவப்பட்டவை ஆகும். இந்த
ஆலயங்களுக்குள் உயர் பேராயக் குழுவினருக்கு எந்தவிதமான அதிகாரமும் உரிமையும்
இல்லை. மற்றும் இரு குழுவினருக்கும் இணைந்த ஆலயங்கள் யாருக்கு சொந்தமாகும்
என்பதில் எந்த விதமான கருத்துகளையும் கூற முடியாத சூழல் உள்ளது. திருவிதாங்கூர்
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகவும் சுமூகமான ஒரு நிலை ஏற்படுவதற்கும்
திருச்சபை மக்கள் காத்திருக்கின்றார்கள்.
10 இத்தகைய சூழலில் எத்தனை ஆலயங்களும்
இறைமக்களும் துவக்கத்தில் மறுஒன்றிப்படைவர் என நிச்சயமாக யாருக்குமே கூற
முடிவதில்லை. முக்கிய குறிப்பாணையில் கோரிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டவை அனுமதிக்கப்படுகின்ற
போது முடிந்த அளவுக்கு அதிகமான ஆலயங்களும் இறைமக்களும் மறுஒன்றிப்படைவதற்கான
முயற்சிகளை துரிதப்படுத்தவும் செயல்படுத்தவும் முடியும் என நம்புகின்றேன். ஆனால்
இதற்கு மீண்டும் நேரம் தேவைப்படும். பாரம்பரியமான தப்பெண்ணங்களும்,
அறிவின்மையோடும் மற்றும் சுய அதிகார ஆர்வத்தோடும் நாங்கள் தீவிரமாக போராட வேண்டிய
சூழல்கள் பல ஏற்படும். ஆனால் மறுஒன்றிப்பை துரிதப்படுத்துவதற்குத் தேவையான
நம்பிக்கைச் சார்ந்த விடயங்களில் தேவையான நற்பலன் உளவாகும் என்பதில் எந்த விதமான
ஐயமும் இல்லை. பிளவுற்ற திருச்சபையை மறுஒன்றிப்பு வழியாக வெற்றி மகுடம்
சூட்டுவதற்கு முதல் நிரையிலேயே முன் வருகின்ற கிறிஸ்தவ தேவாலயங்களின் எண்ணிக்கையும்
பற்றி நாம் அதிக நம்பிக்கை கொள்ளலாம். கிறிஸ்தவ உலகின் மறுஒன்றிப்பு இறைத்திட்டம்
நிறைவேறுவதாக இருந்தால் அது வெற்றி மகுடம் சூடவே செய்யும்.
சுறியானி கத்தோலிக்க மறைமுதுவரான இக்னேஷியஸ்
அப்ரேம் ரஹ்மானி அவர்களின் கட்டுப்பாட்டில் கத்தோலிக்க திருச்சபை பயன்படுத்தி
வருகின்ற அந்தியோக்கிய திருவழிபாடு மறுஒன்றிப்படைகின்ற இங்கு வாழும் யாக்கோபாயர்களுக்கும்
அனுமதிக்கப்படவும் மறுஒன்றிப்படையும் ஆயர்களை அவர்களுக்கு தற்போதுள்ள அதிகாரத்தில்
தொடரவும் அனுமதிக்கின்ற போது நிச்சயமாக யாக்கோபாய திருச்சபையிலிருந்தும் மார்த்தோமா
திருச்சபையிலிருந்தும் மறுஒன்றிப்புக்குந் தயாராக மிகப்பெரிய மக்கள் கூட்டம் வரும்
என நம்பிக்கை கொள்ளலாம். தூய ஆவியின் அருளால் ஒவ்வொரு நாளும் மறுஒன்றிப்பு வலுவடையவும்
அவ்வாறு யாக்கோபாயா திருச்சபை உறுப்பினர்களும் மார்த்தோமா திருச்சபை
உறுப்பினர்களும் மறுஒன்றிப்பில் நுழைவதற்கு முடியும். அவ்வாறு, “தந்தையே நானும்
நீரும் ஒன்றாய் இருப்பது போல இவர்களும் ஒன்றித்திருப்பார்களாக” என்ற நம் ஆண்டவரின்
இறுதி ஜெபம் இவ்வுலகிலேயே செயல்நிலையை அடையும்.
11 இப்படிப்பட்ட குறிப்பாணையை அனுப்புவதற்கு
தீர்மானிக்கப்பட்டக் காரணங்களை பற்றிய ஒரு சில விபரங்களை கூட இணைத்துக் கொள்வோம்.
மூன்று காரணிகள் இதற்கு தூண்டுதலாக அமைந்திருந்தன.
1.
கிறிஸ்தவர்கள் யாவரும் ஒன்றாக
வேண்டும் என்ற நமது ஆண்டவரின் எண்ணம் செயல்பாட்டு நிலைக்கு வருகின்றபோது உலக மீட்பரின்
மேன்மை மேன்மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இதற்கு முக்கிய காரணியாக
அமைந்துள்ளது. நம் ஆண்டவருக்காக பணிபுரிய மனப்பூர்வமாக விரும்புகின்ற யாவருடையவும்
இதயத்தை பிளவுறச் செய்வதே நவீன கிறிஸ்தவ உலகின் நிலை என்பது தெளிவாக உள்ளது.
2.
கத்தோலிக்க திருச்சபையும்
மேற்கு மறைமுதுவர் அரியணையும் ஒன்றே என இதுவரையிலும் கருதவில்லை. மலங்கரையில் யாக்கோபாயர்களைப்
போன்று கிழக்குத் திருஅவையில் அமைந்திருந்த தப்பறைகளை அகற்றச் செய்யவும் எங்களால்
முடிந்த அளவுக்கு செயல்பட முடியும்.
3.
கிழக்கு திருஅவைகளோடு உரோமை
திருஆட்சி அமைப்பு கொண்டிருந்த மனநிலை ஆறுதல் கொள்ளக் கூடியதாக இருந்தது. “கேத்தலிக்
என்சைக்ளோபீடியா” என்னும் நூலில் சேர்த்துள்ள அதே கொள்கைகளை ஏற்றுக் கொண்டு
தற்போது இணைக்கின்றோம்.
ஃப்ளோரன்ஸ் மாமன்றத்தை கிழக்குத்
திருஅவையினர் ஒருபோதும் மறந்துவிடவில்லை. மறுஒன்றிப்புக்குத் தேவையானவை எவை என
அம்மாமன்றம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது. நம்பிக்கை சார்ந்த பிரச்சனைகளுக்கு
திருப்திகரமான விடை நல்கவும் அனுமதிக்க முடிந்தவற்றை அனுமதித்து கொடுக்கவும் உள்ள
மனநிலையை பிளாரன்ஸ் மாமன்றம் வழியாக உரோமை திருஆட்சி அமைப்பு
வெளிப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு தலத்திருச்சபையும் அதன் திருச்சடங்குகளில்
நிலைத்திருந்து அதன் முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும். மேற்கு திருச்சபையினரால்
ஏற்றுக் கொள்ளப்படாத பல விடயங்களும் கிழக்கு அவையினர் ஏற்றுக்கொள்வதாக அமையலாம்.
அத்தகைய சடங்குகளுக்காக போரிட வேண்டிய தேவையே இல்லை. ஃப்ளோரன்ஸ் மாமன்றத்தில்
வைத்து பழைய சடங்குகளை வேறுபடுத்துவதற்கான எந்த ஒரு முயற்சியும் நடக்கவில்லை.
ஒவ்வொரு திருச்சபையும் அதன் திருவழிபாட்டையும் திருச்சட்டங்களையும் உரோமையின்
தலைமைத்துவத்தை மறுத்துரைக்காத விதத்தில் செயல்பட வேண்டும். உரோமையின் தலைமைத்துவ அதிகாரத்தைப்
பற்றி அதன் கோட்பாடுகளில் குறிப்பிட்ட வார்த்தை இவ்வாறு சேர்க்கப்படுகிறது: மற்று
மறைமுதுவர்களின் அதிகாரங்களுக்கும் உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில்
திருத்தந்தை உலகில் இறைவனின் திருச்சபையை திருஆட்சி செய்யவும் வழிநடத்தவும்
செய்கின்றார்.
கிழக்குத்
திருஅவையில் குருக்களுக்கு திருமண வாழ்வு ஏற்றுக் கொள்ளவும், புளிப்பான அப்பத்தை
பயன்படுத்தவும், நம்பிக்கை அறிக்கையில் மகனிடமிருந்தும் (ஃபீலியோக்) என்ற சொற்களை
சொல்லாமல் இருப்பதற்கும், உருவங்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கும் மட்டுமல்ல இலத்தீன்
திருவழிபாட்டோடு தொடர்புடைய அனைத்தையும் விட்டுவிடுவதற்கு முழுசுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
இதுவே உரோமைத் திருச்சபையின் மனநிலையாக இருந்தது. தப்பறைகளால் வெட்டி மாற்றப்பட்ட
பழமை வாய்ந்த திருச்சபைகளை ஒருபோதும் மறுத்துரைக்கவில்லை என பல திருத்தந்தையர்கள்
கோட்பாடுகள் மற்றும் திருத்தூவது மடல்கள் வழியாக எடுத்துக் கூறியுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட கோட்பாடுகளில் குறிப்பிட்டவை அனைத்தும் ஒரே மனநிலையை கொண்டதாகும்.
திருத்தந்தை
ஒன்பதாம் பயஸ் அவர்கள் “இன்சுப்ரேமா பேத்தரி” என்னும் மடல் வழியாக (திருமுழுக்குத்
திருநாள் 1848) ஓரியல்புக் கொள்கையாளர்களுக்கும் பின்வரும் கருத்தை
எடுத்துரைத்துள்ளார். “நாங்கள் மேன்மையோடு மதிப்பளிக்கின்ற உங்களது திருவழிபாட்டு
முறைகளை எவ்வித வேறுபாடும் இன்றி பயன்படுத்த அனுமதிக்கின்றோம். தப்பறைக்
கருத்துக்களால் பிரிந்த திருச்சபைகளிலிருந்து கத்தோலிக்க திருச்சபையோடு
ஒன்றிணையும் குருக்களுக்கு முன்னரே வழங்கப்பட்டிருந்த பதவியும் அதிகாரமும்
தொடர்வதற்கும் அனுமதிக்கின்றோம்.”
1894 ஜூன் 20ஆம்
தேதி 13-ஆம் லியோ திருத்தந்தை வெளிப்படுத்திய “ப்றக்லாரா கிராத்துலசியோனிஸ்” என்ற
திருத்தூதுவ மடல் வழியாக கிழக்கு திருச்சபைகளை கத்தோலிக்க திருச்சபையோடு உள்ள
ஒன்றிப்பில் அன்போடு அழைக்கிறது. கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்குத்
திருஅவைகளின் நம்பிக்கைகளுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் இல்லாததனை எடுத்துக் கூறி
பெருமிதத்துடன் தங்கள் திருச்சடங்குகளை அவ்வாறே காத்துக் கொள்ளலாம் எனவும்
எடுத்துக்கூறியுள்ளது. (Vol V P.P 238-239)
மேற்குறிப்பிட்ட இரண்டாம் குறிப்பாணையைப்
பற்றித் தேவையான விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் இறுதியான பதில் மொழியை தொடர்ந்து உரோமாபுரி
வழங்கியது.
அதிகாரம் 24
திருத்தூதுவ அதிகாரிக்கு அனுப்பிய கடிதங்களும் பதில்களும்
மலங்கரை சுறியானி திருவழிபாட்டுக்கும்
திருஆட்சி அமைப்புக்கும் உரோமையிலிருந்து அனுமதி கிடைப்பதற்கு பரிந்துரை செய்ய
வேண்டும் எனவும் அதற்காக உதவ வேண்டியும் கோரிக்கைகளை வைத்து பல கடிதங்களை நமது
கதாநாயகன் அக்காலத்தில் பல நபர்களுக்கும் அனுப்பி இருந்தார். அன்று பெங்களூருவில்
தங்கியிருந்த திருத்தந்தையின் பிரதிநிதி எட்வார்டு மூனி, கொல்லம் ஆயரான முனைவர்
அலோசியஸ் பென்சிகர் மற்றும் மாவேலிக்கரையைச் சார்ந்த அருள்தந்தை ரபேரா ஆகியோருக்கு
அனுப்பப்பட்ட கடிதங்கள் முக்கியமானவை ஆகும். இவை அனைத்தையும் இந்நூலில் சேர்ப்பது
இயலாத காரணத்தினால் திருத்தூதுவ அதிகாரிக்கு அனுப்பப்பட்ட கடிதங்களும் பதில்களும்
மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.
திருத்தூதுவ அதிகாரிக்கு அனுப்பிய முதல் கடிதம்
முதல் குறிப்பாணை 1926 ஆம்
ஆண்டு நவம்பர் மாதத்திலும் இரண்டாவது குறிப்பாணை 1927 ஜனவரி மாதத்திலும்
அனுப்பப்பட்டது. இவை அருட்தந்தை ரபேரா வழியாக ரோமாபுரியில் சமர்ப்பித்தவை ஆகும்.
குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை விவாதங்கள் மற்றும்
கலந்துரையாடல்கள் நடத்துவதற்கும் விசாரணை மேற்கொள்வதற்கும் திருவழிபாடு மற்றும்
திருஆட்சி அமைப்புக்கு அனுமதி நல்கவும் இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. “உரோமாபுரி
மெதுவாகவே இயங்கும்” என்பது சாதாரணமான கருத்து ஆகும். அனுப்பப்பட்ட
குறிப்பாணைகளுக்கு பதில் கிடைக்காத காரணத்தினால் மார் இவானியோஸ் அவர்கள் 1928 ஜூலை
மாதத்தில் திருத்தூதுவ அதிகாரிக்கு நேரடியாக ஒரு கடிதத்தை அனுப்பினார். அக்கடிதம்
பின்வருமாறு.
திருவல்லா
1 .7 .1928
மேதகு ஆயர் அவர்கள் அறிந்து கொள்வதற்காக,
ஆயர் அவர்களின் பதிலை எதிர்பார்த்து
இக்கடிதத்தை நான் அனுப்புகிறேன். மலங்கரையின் யாக்கோபாய சுறியானி திருவழிபாட்டை
அங்கீகாரம் செய்வதைக் குறித்து ரோமாபுரிக்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வமான
கடிதத்திற்கு பதில் அருள்தந்தை ரபேரா மூலமாக அனுப்பப்பட்டது என நான் நம்புகிறேன்.
அந்தியோக்கியாவின் சுறியானி மறைமுதுவரும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதன்
மொழிபெயர்ப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.
சுறியானி கத்தோலிக்க மறைமுதுவரோடு மலங்கரை யாக்கோபாயர்களின்
ஒன்றிப்புத் தொடர்பாக மலங்கரையின் பேராயரான மார் திவன்னாசியோஸ் அவர்களுக்கு 1925 ஆம்
ஆண்டில் மறைமுதுவர் கடிதம் எழுதியதாக நான் உங்களை அறிவிக்கின்றேன். அக்கடிதத்திற்கு
மார் திவன்னாசியோஸ் எந்த ஒரு பதிலும் அனுப்பவில்லை. மறுஒன்றிப்பின் நிலைகளை ஆய்வு
செய்த பின்னர் தனது செயலாளர் வழியாக மறைமுதுவரின் செயலாளருக்கு 1926 இல்
கடிதம் அனுப்பினார். பல மாதங்களுக்கு பின்னரும் அக்கடிதத்திற்கு எந்தவித பதிலும்
கிடைக்கவில்லை.
உங்களிடம் சமர்ப்பித்த முதல் குறிப்பாணையில்
குறிப்பிட்டிருந்த நிலைகளைப் பற்றிய தனிப்பட்ட மறுஒன்றிப்பு முயற்சிகளைப் பற்றிய
ஆலோசனைக் கூட்டம் மலங்கரை யாக்கோபாய ஆயரக மாமன்றத்தில் வைத்து நடத்தப்பட்டு
அதற்கான தொடர் பணிகளுக்காக என்னிடம் பொறுப்பு ஒப்படைத்தனர். 1927 ஜனவரி
மாதத்தில் என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து வினாக்களுக்கும் பதிலுரையாக இரண்டாவது குறிப்பாணையை
சமர்ப்பித்தேன். அதன் பின்னர் தான் எனது செயலரின் கடிதத்திற்கு பதில் கிடைத்தது.
கடிதத்தில் நன்றி அறிவித்தவாறு நான் அனுப்பிய கடிதத்தில் பல மாதங்களாக பதில் மொழி
கிடைக்காததால் உரோமை நகரோடு நேரடியாக கடிதப் போக்குவரத்து நடத்தத் துவங்கினேன்
எனவும் எங்களது மறுஒன்றிப்பு முயற்சிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பும் தரவேண்டும்
எனவும் நான் வேண்டிக் கொள்கிறேன்.
மறைமுதுவர் சுறியானி மொழியில் அனுப்பிய
பதில் கடிதத்தின் மொழிபெயர்ப்பைத் தான் நான் உங்களுக்கு அனுப்புகிறேன். மறைமுதுவருக்கு
நன்றி அறிவித்து நான் உடனடியாக அவருக்கும் கடிதம் அனுப்பவுள்ளேன்.
உரோமாபுரியோடு நேரடியாக கடிதப் போக்குவரத்து
நடத்துவதற்கு உங்கள் வழியாக கடிதப் போக்குவரத்து நடத்துவதற்கு நான் விரும்புவதாக
நான் அறிவித்துக் கொள்கிறேன்.
மறைமுதுவர் குறிப்பிட்டுள்ள விதங்களிலான மறுஒன்றிப்பா?
அல்லது உரோமாவோடு இணைந்த மறுஒன்றிப்பா? இறையாட்சி அறிவிப்புக்கு எது நன்றாக
அமையும் என்பதன் கருத்தை அறிந்திட நான் விரும்புகிறேன். அருட்தந்தை இரபேரா வழியாக
உங்களுக்கு அனுப்பியதாக நான் நம்புகின்ற எனது கடிதத்தின் தொடர்ச்சியாக கீழ்க்
குறிப்பிடும் விபரங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
1.
மறைமுதுவரிடம் உயர்மறை
மாவட்டத்தில் பயன்படுத்தி வரும் திருப்பலி நூலையும் மற்ற திருவழிபாட்டு நூல்களையும்
நாம் பயன்படுத்துவதற்காக அனுப்பித்
தருமாறு கேட்கலாமா? மேற்குறிப்பிட்ட நூல்களை ஆய்வு செய்த பின்னர் அவற்றுள்
வேறுபாடுகள் உண்டு எனக் கண்டால் உங்களை நான் தெரிவித்துக் கொள்வேன்.
2.
உயர் பேராயர் அதிகாரத்தை
குறைக்கச் செய்யாமல் திருத்தந்தையின் அதிகாரத்திற்கு உள்பட்டு ஆயர் மாமன்றத்தின் முழு
சுதந்திரத்தோடு உயர் பேராயர் நிலையை அங்கீகரிக்க வேண்டுகிறேன்.
மேற்குறிப்பிட்டவற்றைக் குறித்த அனைத்து
கடிதங்களும் இரகசியமாக பதிவு தபால் வழியாக அனுப்பித் தர வேண்டும் என
கேட்டுக்கொள்கிறேன். தூய ஆவியார் இறைத்திட்டம் நிறைவேறுமாறு நமது அறிவை ஒளிரச்
செய்யவும் நெறிப்படுத்தவும் செய்வாராக என வேண்டிக்கொண்டு ஆண்டவரில் உங்களது
நம்பிக்கையாளர்
மார் இவானியோஸ்
பெதனி ஆயர்
இரண்டாவது கடிதம்
திருத்துதுவ அதிகாரிக்கு மேற்குறிப்பிட்ட
கடிதம் அனுப்பிய பின்னர் திருத்தந்தையை சந்திப்பதற்காக அவர் உரோமாவுக்கு பயணம்
செய்வதாக நமது கதாநாயகன் அறிந்து கொண்டார். உடனடியாக அவருக்கு அனைத்து
விவரங்களையும் உள்ளடக்கிய மற்றொரு கடிதத்தை ரோமாபுரிக்கு நமது கதாநாயகன்
அனுப்பினார். திருத்தூதுவ அரியணைக்கும் கிழக்கு திருஅவை திருச்சங்க
அலுவலகத்திற்கும் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கி சீக்கிரமாக ஒன்றிப்பு
முயற்சிகளை துரிதப்படுத்த இரண்டாவது கடிதத்தை அனுப்பினார். அது பின்வருமாறு:
திருவல்ல
21/7/1928
மதிப்புக்குரிய ஆயர் அவர்களே
1928 ஜூலை முதலாம் தேதி நான் அனுப்பிய கடிதத்தை ஆயர் அவர்கள் பெற்றுக் கொண்டீர்கள்
என நம்புகிறேன். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் மட்டுமே நீங்கள் ஐரோப்பாவுக்கு
கப்பல் பயணம் மேற்கொண்டீர்கள் என தெரிந்து கொண்டேன். இச்செய்தி பலவாறு என்னை
நிராசைப்படுத்தியது. பலம் இழக்க செய்தது. ஏனென்றால் பெங்களூருவில் நீங்கள்
வருகின்ற போது நான் நேரடியாக உங்களை சந்திக்கலாம் என எண்ணியிருந்தேன்.
உரோமாபுரியிலிருந்து சீக்கிரமாக
இந்தியாவுக்கு திரும்பி வருவீர்கள் என நான் நம்புகிறேன். நீங்கள் இப்போது
ரோமாபுரியில் உள்ளதால் ஒன்றிப்பு பற்றிய செயல்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு
வேண்டுகிறேன். நாங்கள் உங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் திருத்தூதுவ அரியணையோடு சமர்ப்பிக்க
வேண்டிய வேண்டுகோள் அனைத்தும் சரியான முறையில் எழுதப்பட்டுள்ளன என கருதுகிறேன்.
நானும் தியோஃபிலோஸ் ஆயரும் பல்வேறு விதமான
சித்திரவதைகளுக்கு உட்பட்டுள்ளோம். ஆனால் இவை எதுவும் எங்களுடைய
தீர்மானத்திலிருந்து அணுவளவு போலும் விலகி நிற்கச் செய்யாது. ஒன்றிணைய வேண்டிய
வழிமுறைகளை சீக்கிரமாக ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகிறேன். திருத்தூதுவ அரியணையோடு ஒன்றிப்படைவதும்
திருத்தந்தைக்கு கீழ்ப்படிவதும் எங்களுடைய குருவானவர்களுக்கு கடினமானது அல்ல என
நான் கருதுகிறேன். வரலாற்றில் பிளவுகளின் காரணிகள் தப்பறைகளோடு தொடர்புடையவை அல்ல.
திருத்தூதர் பேதுருவின் முதன்மை அதிகாரம்
பற்றியச் சொற்கள் எங்களது செப நூல்களிலும் உள்ளன. “மீனவரான திருத்தூதர் பேதுருவின்
வலை ஆன்மாக்களை மரணத்திலிருந்து உயிர்ப்புக்குக் கொண்டு வருகிறது. திருச்சபை
நிறுவப்பட்டிருக்கும் பாறையும் அவரே ஆவார். விண்ணகத்தின் திறவுகோலை அவரே கொண்டுள்ளார். அவரே
திருத்தூதர்களின் தலைவரும் நம்பிக்கை சார்ந்தவற்றுள் ஆயர்களின் ஆசிரியரும்
ஆகின்றார்.”
மட்டுமல்ல கீழ்குரப்பிடப்படும் நிகழ்வும்
எங்களது ஜெப நூல்களில் உள்ளன. “மோசே பழைய ஏற்பாட்டின் மற்றும் சீமோன் புதிய
ஏற்பாட்டின் தலைவர்களுமாகின்றனர். அவர்களிடையே மிகப்பெரிய ஒன்றிப்பு உண்டு. இறைவன்
அவர்களுள் வாழ்கின்றார். கட்டளைகள் எழுதப்பட்டப் பலகையை மோசே கொண்டு வந்தார்.
இறையரசின் திறவுகோலை திருத்தூதர் பேதுரு பெற்றுக் கொண்டார். உடன்படிக்கை பேழையை
மோசே நிறுவினார். திருச்சபையை திருத்தூதர் பேதுரு கட்டி எழுப்பினார். பழைய
ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் இறைவா உமக்கு புகழ் உண்டாகட்டும். அவர்களது
மன்றாட்டு எங்களுக்கு உதவியாக அமையட்டும்.”
உரோமையின் ஆயர்கள் திருத்தூதர் பேதுருவின்
வழிமரபினர்கள் ஆவர்; திருத்தூதர் பேதுரு உரோமையில் வைத்து இறந்தார்; தலைகீழாக
சிலுவையில் அறையப்பட்டார்; என்ற செய்தி எங்களுடைய திருச்சபை நூல்களில் பல
இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
உரோமையின் ஆயர்கள் கிழக்கு நாடுகளின்
மறைமுதுவரும் ஆவார். உலகின் நான்கு பகுதிகளிலாக நான்கு மறைமுதுவர்கள் இருக்க
வேண்டும். அவர்களில் தலைவரும் முதன்மையானவரும் உரோமையின் மறைமுதுவராக இருக்க
வேண்டும் இவ்வாறு தான் எங்களது திருச்சபைச் சட்டம் கற்பிக்கின்றது.
எங்களைப் பின்தொடர குறிப்பிடத்தக்க
எண்ணிக்கை கொண்ட மக்கள் தங்களது சம்மதத்தை பல விதங்களில் வெளியிட்டுள்ளனர். பல
குருக்களும் ஒன்றிணைவதற்கான தங்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
குருக்களின் பொறுப்பில் உள்ள மக்களை ஒன்றிப்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு சற்று
காலதாமதத்தையும் அவர்கள் கோரிக்கையாக வைத்துள்ளனர். ஏறக்குறைய நூறு குருக்கள் ஒன்றிப்படைய
தயாராக உள்ளனர் என்பது தான் எங்களுடைய நம்பிக்கை.
திருச்சபைக்கு வரவேண்டும் என விரும்புகின்ற
குருக்களையும் மக்களையும் ஏற்றுக் கொள்ளவும் உதவுவதற்கும் வழிநடத்துவதற்கும்
தேவையான அமைப்புகளை நானும் மார் தியோஃபிலோஸ் ஆயரும் உருவாக்கியுள்ளோம். ஆயர்கள் குருக்கள்
மற்றும் இறைமக்கள் உள்படுகின்ற பல மன்றங்கள் உருவாக்கப்பட்டன.
அந்தியோக்கியாவின் சுறியானி மறைமுதுவரின்
மறைமாவட்டத்தில் பயன்படுத்துகின்ற சுறியானி திருப்பலி நூலின் திருத்தப்பட்ட
பதிப்பை அச்சடிக்க விரும்புகிறோம். நாங்கள் தற்போது பயன்படுத்துகின்ற திருப்பலி
நூலில் ஒரே ஒரு வேறுபாடு மட்டுமே காணப்படுகிறது. “தந்தை மகன் தூய ஆவியின்
திருப்பெயரால் இந்த விண்ணக அப்பத்தை நாங்கள் பிட்கின்றோம்” என்ற பகுதி அதனில்
இணைக்கப்பட்டுள்ளது, என்ற வித்தியாசம் மட்டுமே காணப்படுகிறது. திருமுழுக்கு
மற்றும் திருமண அருளடையாளங்களுக்கான நூலையும் அச்சடிப்பதற்கு திட்டமிடுகின்றோம்.மற்று
அருளடையாள நூல்களில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. எனவே அருளடையாளம் சார்ந்த
நூல்களை பயன்படுத்துவதில் எந்த விதமான குழப்பங்களும் ஏற்படுவதில்லை.
நான் உங்களோடு எழுதியிருந்ததைப் போன்று தற்போதைய
ஐந்து ஆலயங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இறைமக்கள் இல்லை. அதன் பிறகு
நிறுவப்பட்டவை அனைத்தும் மறைபணித்தளங்கள் மட்டுமே ஆகும். அருகே அமைந்துள்ள ஆலய
இறைமக்கள் அடிக்கடி வந்து திருப்பலியில் கலந்து கொள்ளவும் ஆன்மீக அறிவுரைகளை
பெற்றுக் கொள்ளவும் செய்கின்றனர். நாளடைவில் அவர்களும் நமது ஆலயத்தில்
உறுப்பினர்களாக இணைவர் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பல விதங்களில் திருச்சபையை
கட்டி எழுப்புவதற்கு நாங்கள் முயன்று கொண்டிருக்கின்றோம்.
தற்போது கட்டிடப் பணிகள் முடிந்ததும் பணிகள்
நடக்கின்றதுமான 40 ஆலயங்கள் உள்ளன. இவ்விடங்களில் தேவைக்கேற்ப இறைமக்களும்
உள்ளனர். ஒன்றிப்படைகின்ற குருக்களோடு இணைந்து இறைமக்களும் வந்தடைகின்றனர்.
இறைமக்கள் அதிகமாக வருவதனால் எந்தவிதமான சிரமங்களும் ஏற்படுவதில்லை. ஆனால் சில
இடங்களில் சிற்றாலயங்கள் நிறுவ வேண்டிய அத்தியாவசியத் தேவை உள்ளது. பங்குகள்
உருவாக்கப்பட்ட பின்னர் பங்கிலிருந்தே இறைமக்கள் அதன் பங்குத் தந்தையர்களுக்கு பொருளாதார
தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய விதத்தில் சிந்திக்கின்றோம்.
துவக்கக்காலத்தில் எங்களது குருவானவர்களை
பாதுகாத்திட மற்று மறைமாவட்டங்களிலிருந்து திருப்பலிக் கருத்துக்களை எங்களுக்காக
அனுப்பி தரவேண்டிய வழிமுறைகளை செய்வீர்கள் என நம்புகின்றேன். எங்களது குருக்களும்
இறைமக்களும் சிலர் கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்த போது சீறோ மலபார்
திருவழிபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல்களும் ஏற்பட்டதுண்டு. அவர்கள்
விரும்பினால் அந்தியோக்கிய திருவழிபாட்டு முறையை கடைபிடிப்பதற்கு அனுமதி வழங்க
வேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம்.
இறைமக்கள் பயன்படுத்துகின்ற மலையாள
மொழியிலான செப நூல்களை சகனாச்சேரி ஆயருக்கு அனுப்பி வைத்துள்ளோம். அவற்றில் இரண்டு
தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டி திருத்தம் செய்து மொத்தத்தில் கத்தோலிக்க
நம்பிக்கைக்கு எதிரான வேறு எதுவும் காணப்படவில்லை என ஆயர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தவறு என்று குறிப்பிடப்பட்ட பகுதிகள் யாக்கோபாய திருச்சபையின் மறைத்தந்தையர்களின்
பெயர்கள் ஆகும். நீங்கள் கூறுகின்றபடி சங்கனாசேரி ஆயர் இந்நூல்கள் சரியானவை என்ற ஒப்பந்தப்
பத்திரத்தை தருவதற்குத் தயாராக உள்ளார்.
திருத்தந்தை அனுமதித்தவுடன் நீங்கள்
திரும்பி வந்த உடனடியாக திருத்தந்தையின் பிரதிநிதி என்ற நிலையில் என்னை கத்தோலிக்க
திருச்சபையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தியோஃபிலோஸ் ஆயரை ஏற்றுக்கொள்ள
அதிகாரம் நல்க வேண்டும் எனவும் மலங்கரையின் ஆர்த்தடோக்ஸ் சிறியன் திருவழிபாட்டை
பாதுகாத்துக் கொள்கின்ற மற்றும் திருச்சபையின் நிறுவனங்களுக்குள்ள அதிகாரம் எங்கள்
இருவருக்கும் தர வேண்டும் எனவும் நாங்கள் நம்பிக்கை கொள்ளலாமே! திருச்சபையின்
வளர்ச்சிக்கு வேண்டிய முயற்சிகள் மெதுவாக தேவைக்கேற்ப முன்னேற்றம் அடையும்
என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
மறுவண்டிப்படைகின்ற குருக்களின் ஆன்மீக
முன்னேற்றத்திற்கு தியானங்கள் நடத்தவும் மற்றுவித உதவிகள் செய்வதற்கும் மற்று
மறைமாவட்டங்களில் இரண்டு அல்லது மூன்று குருக்களின் உதவிகளை வேண்டுவதற்கும் நான்
திட்டமிட்டுள்ளேன். இதனைப் பற்றிய மற்று பல விடயங்களைக் குறித்தும் இந்தியாவில்
வைத்து உங்களை சந்திக்கின்ற போது நான் நேரடியாக பேசுகிறேன்.
எங்களது இப்போதைய குருக்களுள் பலரும்
திருமணம் ஆனவர்களே என்பது நீங்கள் அறிந்ததே. மறுமணம் செய்த பின்னரும் அருள்பணிகள்
செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டவர்களும் உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களுடைய எண்ணிக்கை ஏறக்குறைய 24 ஆகும். சாதாரணமாக மறுமணம் செய்த
குருவானவர்களுக்கு திருப்பணிகள் செய்வதற்கு அனுமதி இல்லை என்றாலும் ஒரு சில
வேறுபாடுகள் இவற்றுள் உருவாக்கப்பட்டுள்ளன. சூழலுக்கு ஏற்ப அவர்கள் திருப்பணிகள்
செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களும் தங்களது பங்கு மக்களோடு இணைந்து
கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைய விரும்புகின்றார்கள். அவர்களையும் நாங்கள்
ஏற்றுக் கொள்ளலாமா?
எனது அதிகாரத்திற்குட்பட்ட மெசியாவை
பின்பற்றும் சகோதர துறவு சபை மற்றும் சகோதரிகள் துறவு சபை இரண்டு சந்நியாச துறவு
சபைகளும் புனித பஸேலியோசின் திருச்சட்டங்களை மையமாக கொண்டுள்ளன. அவர்களுக்குரிய
சட்ட அமைப்பு உருவாக்கப்பட்டபோது திருத்தந்தை வெளியிட்ட துறவு சபை சார்ந்த
சட்டங்களை பயன்படுத்தியுள்ளேன்.
ஆயர் அவர்களுக்கு அனுப்புகின்ற
இக்கடிதத்திலும் முன்னர் அனுப்பிய கடிதங்களிலும் எனது மனதை முழுவதுமாக
வேண்டுதல்களோடு உங்களுடைய முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளேன். ஏதேனும் தவறுகள்
உண்டு என்றால் அதனை சுட்டிக்காட்டவும் அதனை திருத்தவும் நான் தயாராக இருக்கிறேன்.
வேண்டுதல்கள் உடனடியாக நடைபெறுவதாக இருந்தால் நான் என்றென்றும் நன்றி உள்ளவனாக
இருப்பேன்.
பேராயர்களையும் ஆயர்களையும் இறைமக்களையும்
கத்தோலிக்க திருச்சபைக்கு ஏற்றுக் கொள்வதற்கு நடைபெறுகின்ற செயல்களும் அவர்கள்
செய்ய வேண்டிய நம்பிக்கை உறுதிமொழியும் அடங்கிய சுறியானி நூல் ஒன்று கொல்லம் ஆயர் அந்தியோக்கிய மறைமுதுவரிடமிருந்து
பெற்றுக் கொண்டுள்ளார். அவர் அதனை என்னிடம் ஒப்படைத்துள்ளார். நானும் தியோஃபிலோஸ்
ஆயரும் அதனை வாசித்து புரிந்து கொண்டோம்.
ஆயர் நீங்கள் உரோமில் இருப்பதனால் திருத்தந்தையிடம்
எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.
உங்களது நம்பிக்கைக்குரிய
மார் இவானியோஸ்
................................................................................
திருத்துவது அதிகாரி அனுப்பிய
பதில் கடிதம்
உரோமாபுரிக்கு அனுப்பிய கடிதத்தை
திருத்துவதுவ அதிகாரியால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் இந்தியாவுக்கு
வந்தடைந்த பின்னர் உரோமாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கடிதம் அவருடைய கையில்
அவர் பெற்றுக் கொண்டார். உடனடியாக நமது கதாநாயகனுக்கு திருத்தூதுவ அதிகாரி பதில்
கடிதத்தையும் அனுப்பினார். அக்கடிதம் இவ்வாறு சேர்க்கப்படுகிறது:
பெங்களூர்
அக்டோபர் 23, 1928
மேதகு ஆயர் அவர்களே,
கடந்த ஜூலை 21ஆம் தேதி நீங்கள் அனுப்பிய
கடிதத்தை நான் வெளிநாட்டு பயணத்தை முடித்து திருப்பி வந்த பின்னர் இந்தியாவில்
பெற்றுக் கொண்டேன். எந்தவிதமான தடைகளும் இல்லாமல் அது உங்கள் கடிதத்தை பெற்றுக்
கொண்டேன் என்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்.
கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள
அனைத்தையும் கவனமுடன் வாசித்து அதை ஏற்றுக் கொள்வதாக உங்களிடம் உறுதி கூறுகிறேன்.
ஆனால் இதனை ரோமாபுரிக்கு அனுப்பி அங்கிருந்து அனுமதி பெற வேண்டி இருப்பதனால் சற்று
காலதாமதம் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடிதத்தில் குறிப்பிட்டவாறு நீங்கள்
தேவைப்படுகின்ற திருவழிபாட்டு நூல்களை அந்தியோக்கிய மறைமுதுவரிடமிருந்து கேட்டு
வாங்கி தருவதாக கொல்லம் ஆயர் என்னிடம் தெரிவித்துள்ளார்.
ஒரே தொழுவமும் ஒரே ஆயனுமாக உள்ள நமது
ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றிப்பு முயற்சிகளைத் துவங்க தூய ஆவியின் உதவிக்காக
வேண்டுதலுடன்
உங்களது நம்பிக்கைக்குரிய
எட்வர்டு மூனி
திருத்தூதுவ அதிகாரி
.....................................................................................
மேற்குறிப்பிட்ட கடிதத்தைப் பெற்றுக்கொண்ட
ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் உரோமையிலிருந்து திருத்தூதுவ அதிகாரி வழியாக நமது
கதாநாயகன் கடிதம் ஒன்றை பெற்றுக் கொண்டார். அதற்கு பதிலாக 1929 செப்டம்பர் 17ஆம்
தேதி திருத்தூதுவ அதிகாரிக்கு நமது கதாநாயகன் ஒரு கடிதம் அனுப்பினார்.
அக்கடிதத்தில் ஒரு சில ஆர்த்தடோக்ஸ் ஆயர்கள் தங்களுடைய தீர்மானத்திலிருந்து
பின்வாங்கியதாகவும் தானும் மார் தியோஃபிலோஸ் ஆயரும் தீர்மானத்தில்
நிலைத்திருப்பதாக திருத்தூதுவ அதிகாரிக்கு பதில் அனுப்பினார். அதன் திருத்தூதுவ
அதிகாரியின் பதில் கடிதம் பின்வருமாறு:
பெங்களூர் அக்டோபர் 11 1929
மேதகு ஆயர் அவர்களே!
செப்டம்பர் 17ஆம் தேதி நீங்கள் அனுப்பிய
கடிதத்தை பெற்றுக் கொண்டேன் என்பதை நன்றியோடு அறிவித்துக் கொள்கிறேன். நீங்களும் மார் தியோஃபிலோஸ் ஆயரும் கொண்ட
தீர்மானம் வழியாக மலங்கரையில் இறையருள் நிறைவாக அமையட்டும் என செபிக்கவும்
வாழ்த்தவும் செய்கிறேன்.
திருத்தூதுவ அரியணையின் கவனத்திற்கு கொண்டு
செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்வதாக நீங்கள் எழுதிய விடயங்களை அனுப்புவதற்கு தற்போது
சரியான சூழல் இல்லை. ஏனென்றால் 1926 நவம்பரில் உரோமாவுக்கு குறிப்பாணை அனுப்பிய
போது எந்தெந்த ஆயர்கள் இணைந்து அதனை சமர்ப்பித்தார்களோ அதைப் பற்றிய பதில்
கிடைக்காமல் தற்போதைய கடிதத்தை அனுப்புவது நன்றாக அமையாது. சற்று குழப்பமான
கருத்துக் குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதனால் சற்று தாமதித்து
உங்களுடைய இப்போது குறிப்பிட்ட விடயங்களை தெரியப்படுத்த விழைகிறேன்.
நீங்கள் ஒருபோதும் என்னை தவறாக புரிந்து
கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு தான் நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி திருத்துவதுவ அரியணையிலிருந்து பெற்றுக்கொண்ட அறிக்கையை ஒன்றிப்புடன்
தொடர்புடைய அனைத்து ஆயர்களிடமும் அறிவிக்கவும் அதைப் பற்றிய அவர்களுடைய பதில்
மொழியை தெரிவிக்கவும் வேண்டியுள்ளார்கள். ஆன்மீகமான முறையில் மிக முக்கியமானதாக
கருதப்படுகின்ற இவ்விடயத்தை பற்றி சிந்திக்கின்றவும் வேண்டும். மிக முக்கியத்துவம்
வாய்ந்த அவ்வாணையில் கையெழுத்திடப்பட்டதைப் பற்றி தவறான கருத்துகளோ தப்பெண்ணங்களோ
பின்னர் உருவாக வேண்டாம் எனவும் நாம் சிந்திக்க வேண்டும்.
நம்மைக் குறித்த இறைவனின் புனிதமான
குறிக்கோளை நிரூபிப்பதற்கு தூய ஆவியார் நமது ஆண்டவரின் திருச்சபையில் உறுதி
செய்யப்பட்டுள்ள ஒன்றிப்பையும் வலிமையும் ஆன்மா நம்மையெல்லாம் நாமனைவருக்கும்
உதவட்டும் என வேண்டிக்கொண்டு
மதிப்புடன் கிறிஸ்துவில் நம்பிக்கைக்குரிய
எட்வேடு மூனி
திருத்தூதுவ அதிகாரி
...........................................................
மார் இவானியோஸ் அனுப்பிய கடிதம்
திருத்தூதரக அதிகாரியின் மேற்குறிப்பிட்ட
கடிதத்திற்கு மார் இவானியோஸ் உடனடியாக பதில் அனுப்பினார். உயர் பேராய திரு ஆட்சி அமைப்பை
உரோமிலிருந்து அங்கீகரிக்கச் செய்வதற்கு திருத்தூதுவ அதிகாரி முயற்சி மேற்கொள்ள
வேண்டும் என அக்கடிதத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைப்
போன்ற பதில் திருத்தூதுவ அதிகாரியிடமிருந்து கிடைக்கவில்லை. அதன் பொருட்டு
மீண்டும் ஆயர் மார் இவானியோஸ் மீண்டும் ஒரு கடிதத்தை திருத்தூதுவ அதிகாரிக்கு
அனுப்பினார். அக்கடிதம் பின்வருமாறு:
திருவல்லா
மே 24, 1930
பெதனி பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகையிடமிருந்து
மேதகு திருத்தூதுவ அதிகாரி அவர்களே,
1930 பிப்ரவரி 7ஆம் தேதி நீங்கள் அனுப்பிய கடிதத்தில் நான் அனுப்பி இருந்த வேண்டுகோள் கிழக்கு
திருஅவைகளின் திருச்சங்கத்தில் ஆலோசனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும்
அங்கிருந்து பதில் கிடைத்த உடனடியாக தெரிவிப்பதாகவும் சம்மதித்திருக்கின்றீர்கள்.
உயர் பேராயர் திருஆட்சிப் பீடத்தை அங்கீகரிக்கச் செய்வதற்கான நிறைய காலதாமதம்
ஏற்படுவதாக ஐயம் கொள்கிறேன். உயர் பேராயரின் அங்கீகாரம் தொடர்பாக 1929 செப்டம்பர் 17ஆம்
தேதி நான் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த காரியங்களுக்கு ஏறக்குறைய
இணையாக உள்ள பதிலை எனக்கு தூய திருத்துவது அரியணையிலிருந்து கிடைத்தது. அதன் படி
உயர் பேராயர் தைரியத்தோடு வெளியேறி மறுஒன்றிப்பு இயக்கத்தை வழிநடத்துவார் என்பது
இயலாத காரியம்.
உயர் பேராயரும் மற்று ஆயர்களும் இணைந்து
எனக்கும் மார் தியோஃபிலோஸ் ஆயருக்கும் எதிராக பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை
அடுக்கி வருகின்றனர். இசசூழலில் ஒன்றிப்பு பற்றிய அறிவிப்பை உடனடியாக
அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது தான் எங்களுக்கு நல்லது எனக் கருதுகின்றோம். மற்றும்
எதிர்காலத்தில் மற்ற ஆயர்களும் கத்தோலிக்க திருச்சபையோடு கட்டாயமாக ஒன்றிணைவர் என
நான் நம்புகிறேன். எனவே 1929 செப்டம்பர் 17ஆம் தேதி அன்று அனுப்பிய கடிதத்தில் நான் தேவைப்பட்ட காரியங்களுக்கு
மறுபடியும் பதில் சீக்கிரமாக தரவேண்டும் என மனப்பூர்வமாக உங்களை கட்டாயப்படுத்துகிறேன்.
கடந்த வாரத்தில் 12
குருக்கள் ஒன்றிப்படைவதற்கான விருப்பத்தை என்னோடு தெரிவித்தனர். துவக்கத்தில்
என்னோடு வெளியேறியவர்கள் சிலரேயாயினும் எதிர்காலத்தில் ஏராளமானவர்கள்
திருச்சபையோடு ஒன்றிணைவர் என நான் நம்புகிறேன். ஒன்றிப்படையை தீர்மானித்த
குருக்களை பாதுகாக்கவும் அவர்களை தொடர்கின்ற இறைமக்களையும் ஆலயங்களையும்
சிற்றாலயங்களையும் நிறுவுகின்ற விதத்திலும் பல்வேறு காரியங்களை திட்டமிட்டு
வருகிறேன்.
தற்போதைய எங்களுடைய திருவழிபாடு என்றென்றும்
தொடரவும் தொடர்ந்து பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும் எனவும் சுறியானிக்காரர்களின்
திருச்சட்டங்களை மாற்றி அமைக்க வலியுறுத்துவதில்லை எனவும் மறுஒன்றிப்படைகின்ற சுறியானிக்கார்ர்களுக்கு
காலாகாலம் இந்நாட்டு ஆயர்களையே கிடைக்கும் எனவும் திருத்தூதுவ அரியணை உறுதி
செய்வதாக இருந்தால் ஒன்றிப்பு முயற்சிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கடந்த
வாரத்தில் என்னை சந்தித்த குருக்கள் தங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
மட்டுமல்ல இறைமக்கள் தற்போது மனப்பாடமாக செபிக்க
பயன்படுத்துகின்ற ஜெபமுறைகளும் வழிபாட்டுமுறைகளும் பாதுகாப்பதற்கான தேவையைப்
பற்றியும் அவர்கள் எடுத்துக் கூறினர். கத்தோலிக்க நம்பிக்கைக்கு எதிரான எதுவும்
அவற்றுள் இல்லையெனில், மீண்டும் அவற்றை மாற்றி அமைக்கவோ திருத்துவதற்கோ திருத்தூதுவ
அரியணை கட்டாயப்படுத்துவதில்லை என நாம் அவர்களுக்கு புரிய வைத்துக் கொண்டேன்.
கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கைக்கு எதிரான எதுவும் அவற்றுள் இல்லை என உறிதிப்படுத்த
சங்கனாச்சேரி ஆயரும் நானும் வாசித்து பரிசோதித்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்
என தீர்மானித்துள்ளேன்.
நான் உங்களை நேரடியாக வந்து சந்திக்க
வாய்ப்பு வருங்காலத்தில் கிடைப்பதாக இருந்தால் நான் அதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
1929 செப்டம்பர் 17 அன்றைய எனது கடிதத்தில் எழுதப்பட்டவாறு, உயர் பேராயர் திருஆட்சி அமைப்பு தவிர
மீதமுள்ளவைப் பற்றி திருத்தூதுவ அரியணை சட்டங்களுக்கு உள்பட்டு ஒன்றிப்படைவதற்கு முந்தின
நாள் சுறியானி மக்களோடு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என நானும் மார்
தியோஃபிலோஸ் ஆயரும் நம்புகின்றோம்.
மிகவும் மதிப்போடும் மரியாதையோடும் முடிவு
செய்கிறேன்.
நமது ஆண்டவரில் எளியவரான
மார் இவானியோஸ்
……………………………………………………………………………….
மேற்குறிப்பிட்ட கடிதத்திற்கும் திருத்தூதுவ
அதிகாரி பதில் வழங்கினார். ஒன்றிப்படைவதற்கு முதலில் மனம் கொண்டிருந்த உயர் பேராயரும்
தற்போது தனது திட மனதிலிருந்து விலகியதால் தற்போது உயர் பேராயர் திருஆட்சி அமைப்பு
நிறுவுவதைப் பற்றி ஆலோசிக்க வேண்டிய தேவை இல்லை என இக்கடிதத்தில்
எழுதப்பட்டிருந்தது.
இந்த கடிதங்கள் மற்றும் அவற்றின் வேண்டுகோள்
மூலமாக பல மாதகால விசாரணைகள் மற்றும் ஆலோசனைகளைத் தொடர்ந்து உரோமாவிலிருந்து
அனுப்பிய இறுதி பதில் 1930 ஆகஸ்ட் 30 ஆம் தேதி கிடைக்கப்பெற்றது. மலங்கரை சுறியானி திருவழிபாட்டிற்கு அனுமதியும்
மறுஒன்றிப்புக்கு அனுமதியும் அடங்கிய அந்த அங்கீகார ஆணை வெற்றி மகுடம் சூடிய மறுஒன்றிப்பு
முயற்சி என்னும் அதிகாரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
அதிகாரம் 25
மார் இவானியோசும் வட்டச்சேரில் மார் திவன்னாசியோசும்
பேரறிவு மிகுந்த பன்முக ஆளுமையோடு, பல திறமைகள்
ஒன்றிணைந்த அசாதாரண ஆளுமையைக் கொண்டவராக இருந்தவர் தான் பேராயர் வட்டச்சேரில் மார்
திவன்னாசியோஸ். 1909 முதல் 1934 வரை 25 ஆண்டுகள் ஆர்த்தோடக்ஸ் திருச்சபையின் பேராயராக திரு ஆட்சி பொறுப்பை
நிர்வகித்த அவர் மரணம் வரையிலும் வாழ்க்கையோடு பல்வேறு விதமான போராட்டங்களில்
போராடி வெற்றி கண்டார். கேரளாவின் புதிய கூற்றினரான மக்கள் இதுவரையிலும்
கொண்டிருந்த சிறந்த நிர்வாகியாகவே இவர் திகழ்ந்தார். சிறந்த நிர்வாகிகளுக்கு
தேவையான தந்திரம், வீரம் மற்றும் பொறுமை போன்ற குணங்களை அவர் தனது வாழ்வில் கொண்டு
வாழ்ந்திருந்தார். நமது கதாநாயகன் வாழ்வில் கொண்டுள்ள பல நற்குணங்களும்
இப்பேராயரின் வாழ்விலிருந்து கற்றுக் கொண்டவை என இருவருடைய வாழ்க்கை வரலாற்றுப்
பாடங்களை கற்றுத் தெளிவடைகின்ற போது நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. தனது
வழிமரபினராக பொறுப்பு ஒப்படைக்க நமது கதாநாயகனை பல்வேறு விதங்களில் தயாரித்து
வந்தார் என்பதும் உண்மையானது. ஆனால், “மனித மனம் ஒன்றை எண்ணவும், இறைவன் இன்னொன்றை
நடத்தவும் செய்வான்.”
ஏறக்குறைய 25 ஆண்டுகள் இவர்கள்
இருவரும் பல்வேறு கருத்து பரிமாற்றங்களும் எண்ண அலைகளையும் ஒரே முறையில் கொண்டு
செயல்பட்டு வந்தனர். ஆனால் இறுதியில் ஒரு சில விடயங்களில் அவர்களுடைய கருத்து
வேறுபாடுகளின் காரணமாக பிரிந்து விட வேண்டிய சூழல் ஏற்பட்டது. குறிப்பாக மூன்று
விடயங்களில் அவர்கள் பிரிந்து விட்டனர்.
1. மறைமுதுவரின் அதிகாரம்
கேரளாவின் புதிய கூற்றினர் அந்தியோக்கிய மறைமுதுவருக்கு
ஆன்மீகம் அல்லது பொருள் சார்ந்த அதிகாரத்திற்கு கீழ்படிகின்ற போது புதிய கூற்றினர்
மக்களின் திருஅவைக்கு எந்தவிதமான முன்னேற்றமும் உருவாகாது என்ற கருத்தை மார் இவானியோஸ்
கொண்டிருந்தார். இதை வெளிப்படுத்துகின்ற பல கடிதங்களை நாம் கண்டோம். ஆனால் மறைமுதுவரின்
ஆன்மீக அதிகாரத்திற்கு நாம் சம்மதித்து ஒத்துழைப்பு வழங்கலாம் என்ற கருத்தை
பேராயர் கொண்டிருந்தார். பேராயரோடு எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தாலும்
இந்த கருத்தோடு மார் இவானியோஸ் அவர்கள் ஒருபோதும் ஒத்துப்போகவில்லை.
2 பெதனியின் தனித்துவ நிலை
யாக்கோபியா மறைமுதுவரும் மலங்கரையின் பேராயரும்
உயர் பேராயரும் எந்த விதமான அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் செலுத்த முடியாத
விதத்தில் தனித்துவ நிலையில் தான் நமது கதாநாயகன் பெதனி துறவு சபையை துவங்கி
வழிநடத்திக் கொண்டிருந்தார். கத்தோலிக்க மறுஒன்றிப்புக்கான விடாமுயற்சிகள்
மேற்கொண்டு இறுதி நிலையை அடைந்தபோது பெதனியின் நிறுவனங்கள் அனைத்தும் கத்தோலிக்க
திருச்சபையோடு இணைந்து விடுமோ என்ற பயம் பேராயரை அச்சுறுத்தியது. எனவே பெதனியை
தனது அதிகார வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு மலங்கரையின் பேராயர் முயற்சிகள்
மேற்கொண்டார். மார் இவானியோஸ் அவர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் தனித்துவ
நிலையிலேயே செயல்படும் நிலையை தொடர்ந்தார். இதன் கருத்துக்களை அவர் அனுப்பிய
கடிதங்கள் வழியாகவும் அறிந்து கொள்ள முடியும்.
3. கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்பு
யாக்கோபாய மறைமுதுவரோடு இணைந்து செயலாற்ற
இயலாத சூழலில் சமுதாயத்தின் சொத்துக்களை இழக்காத நிலையில் தன்னோடு பணியாற்றும்
குருக்களும் இறைமக்களும் விரும்புகின்ற சூழலில் திருத்தந்தையோடு ஒன்றிணைந்து
கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படையலாம் என்பதுதான் பேராயரின் விருப்பமும்
கருத்துமாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் இழக்க வேண்டிய சூழல் வந்தாலும்
யாரிடமிருந்துள்ள எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருந்தாலும் உரோமை திருத்தந்தையின்
திருஆட்சியின் கீழே கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்தால் மட்டுமே மலங்கரை
திருச்சபைக்கு முன்னேற்றத்தை கொண்டு வர முடியும் என்பது மார் இவானியோஸ் ஆண்டகையின்
கருத்தாக அமைந்திருந்தது. மற்று ஆயர்களின் ஆலோசனைகளோடு அந்தியோக்கியாவின் ரஹ்மானி
மறைமுதுவருக்கும் உரோமை அரியணைக்கும் மார் இவானியோஸ் நடத்தி வந்த கடிதப்
போக்குவரத்துக்களின் விடயங்களைக் குறித்து பேராயரும் அறிந்த வண்ணம் இருந்தார்.
ஆனால் யாக்கோபாய மறைமுதுவரின் ஆன்மீக அதிகாரத்தை தான் அங்கீகரிப்பதாக நீதிமன்றங்களில்
எடுத்துரைத்த நிலையில் மற்றொரு மறைமுதுவரோடு ஒன்றிணைவதற்கு கடிதப் போக்குவரத்து
நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு தன்மீது வராத விதத்தில் தந்திரத்தோடு அவர்
செயல்பட்ட பல தருணங்களையும் நாம் மேற்குறிப்பிட்ட அதிகாரங்களில் இருந்து அறிந்து
கொண்டோம்.
கேரளாவின் யாக்கோபாய திருச்சபையில்
சமாதானமான நிலை உருவாகுவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட இரண்டு மாபெரும் தலைவர்களின்
அன்பு உறவும் இணைந்து செய்த செயல்களும் இறுதியில் வெவ்வேறு துருவங்களை நோக்கிச்
சென்றன.
முதல் அறிமுகமும் அன்பு உறவும்
மார் திவன்னாசியோஸ் அன்றைய கீவர்கீஸ்
மல்பான் பழைய செமினாரியில் குருத்துவ மாணவர்களை சுறியானி மொழி கற்பித்த காலத்தில்
மாவேலிக்கரையிலிருந்து பி டி கிவர்கீஸ் என்ற பெயரைக் கொண்ட பாலன் உயர்நிலைப்
பள்ளியில் கற்பதற்காக கோட்டயம் வந்தடைந்தார். எம் டி செமினாரி விடுதியில் தங்கியிருந்து
ஐந்தாம் நிலை மற்றும் மெட்ரிகுலேஷன் என்ற நிலைகளில் கற்றுக் கொண்டிருந்த கீவர்கீஸ்
சக மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் நல்லுறவில் நிலைத்திருந்து பெரும் புகழையும்
பாராட்டுக்களையும் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை பெற்றுக் கொண்டார். அனைவருக்கும்
நெருக்கமானவராக அவர் வாழ்ந்து வந்தார். மற்று மாணவர்களை ஒப்பீடு செய்யும்போது
கல்வி அறிவிலும் நற்குணத்திலும் முதன்மையிடத்தை பெற்றுக் கொண்டிருந்த இப்பாலனை
புலிக்கோட்டு மார் திவன்னாசியோஸ் ஆயரும் வட்டச்சேரில் கீவர்கீஸ் மல்பானும்
தனிப்பட்டக் கவனத்தை செலுத்தி வந்தனர் என்பதை எண்ணி வியக்க வேண்டியதில்லை.
மெட்ரிகுலேஷன் தேர்வில் நல்ல தரத்தில் வெற்றி பெற்ற கீவர்கீசுக்கு திருத்தொண்டராக
அருள்பொழிவு வழங்கவும் தொடர்ந்து அவரை கோட்டயம் சிஎம்எஸ் கல்லூரியிலும் பின்னர்
சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் மேற்படிப்புக்கு அனுப்பவும் அதற்குத் தேவையான
செலவில் ஒரு பகுதியை சமுதாய வகையிலிருந்து வழங்கிட புலிக்கோட்டு ஆயருக்கு கருத்துரை
வழங்கியவர் வட்டச் சேரில் மல்பான் ஆவார்.
மேன்மையான முறையில் எம் ஏ முதுகலை பட்டத்தை
வென்று 1907-ல் சென்னையிலிருந்து திரும்பி வந்த பி டி கீவர்கீஸ் திருத்தொண்டரை எம்
டி செமினாரியின் முதல்வராக புலிக்கோட்டு ஆயர் நியமன ஆணை வழங்கியது வட்டச்சேரில்
மல்பானின் பரிந்துரையால் ஆகும். அதற்கு
அடுத்த ஆண்டு வட்டச்சேரில் மல்பான் எருசலேமுக்குச் சென்று அத்யோக்கிய மறைமுதுவரான
அப்துல்லாவிடமிருந்து மார் திவன்னாசியோஸ் என்ற பெயரில் ஆயராக அருள்பொழிவு
செய்யப்பட்டு திரும்பி வந்தார். தொடர்ந்து வெகு சீக்கிரமாக 1909ல் கீவர்கீஸ்
திருத்தொண்டர் குருத்துவ அருள்பொழிவை பெற்றுக் கொண்டார். அவ்வாறு அவர் எம் ஏ
அச்சன் எனவும் அழைக்கப்பட்டார்.
அக்காலத்தில் கேரளாவுக்கு வருகை தந்த
அப்துல்லா மறைமுதுவரும் வட்டச்சேரில் மார் திவன்னாசியோசும் திருச்சபையின் பொருள்
அதிகாரத்தை மையமாகக் கொண்ட போட்டி வலுவாக ஆரம்பமானது. இச்சூழலில் வட்டச்சேரில் ஆயருக்கு
வலங்கையாக நின்று தனது உயிரையும் பொருட்படுத்தாது செயல்பட்டுக் கொண்டிருந்த
முக்கிய நபர்களுள் முன்னவர் தான் எம் ஏ அச்சன்,
எம் டி செமினாரியின் முதல்வர் என்னும் பதவியிலிருந்து
பணி ஓய்வு பெற்ற பின்னர் செரம்பூர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய போதும்,
பெதனி ஆசிரமத்தை நிறுவிய போதும் மார் இவானியோஸ் ஆயர் பெதனியின் ஆயர் என்ற நிலைகளை
அலங்கரித்த போதும் வட்டச்சேரில் ஆயரின் அனுமதியின்றி மார் இவானியோஸ் ஆயரும், மார் இவானியோஸ்
ஆயரோடு கலந்தாலோசிக்காமல் வட்டச்சேரில் ஆயரும் எந்தவித காரியமும் செயல்படுத்தியது
இல்லை என்பது பேருண்மையாகும். அந்த அளவுக்கு இருவரும் அன்பும் மதிப்பும்
நம்பிக்கையும் ஒருவருக்கொருவர் கொண்டு வாழ்ந்து வந்தனர்.
கீழ் குறிப்பிடும் வார்த்தைகள் இச்சூழலை
தெளிவாக விளக்குகின்றன. வட்டச்சேரில் ஆயரைப் பற்றி நமது கதாநாயகன் கிரிதீபத்தில்
இவ்வாறு எழுதியுள்ளார்;
மார் திவான்னாசியோஸ் பேராயரைப் பற்றி என்னை
விடவும் அதிகமாக பழகி அறிந்தவர்கள் யாருமே இல்லை என்பது தான் எனது நம்பிக்கை. விரிந்து
பரந்த அவரது இதயத்தையும் தியாக மனப்பான்மையையும் நான் அதிகமாக அவரிடமிருந்து கண்டு
அனுபவிக்க முடிந்தது. எதனையும் தியாகத்தோடு ஏற்றுக் கொள்ள இயன்ற மனவலிமையும் எதைக்
கண்டாலும் கேட்டாலும் கலங்கிடாத கண்களையும் காதுகளையும் இறைவன் அவருக்கு
வழங்கியுள்ளார். கம்பீரமான ஆயரின் இன்னொரு மறுபகுதியையும் நான் அதிகமாக
அறிந்துள்ளேன்.
கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைந்த
பின்னர் உயர் பேராயருக்கு மார் இவானியோஸ் ஆயர் அனுப்பிய கடிதத்தில் மார் திவன்னாசியோஸ்
ஆயரோடுள்ள உறவு பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்.
“ஒரு தீர்மானத்தை எடுக்க முயல்கிறோம்
என்றால், அதற்கு முன்னின்று செயல்பட வேண்டியது பேராயரே ஆவார். அவர் எனது ஆன்மீக
தந்தையும் குருவுமே ஆவார். களங்கமற்ற அன்போடும் நம்பிக்கையோடும் எனது பாலர் பருவம்
முதல் இன்று வரை பேராயர் அவர்களை நான் அன்பு செய்து வந்தேன். ஆயரும் நானும்
விவாதங்களுக்கு உட்பட்டு பெதனி ஆலயங்களும் அதற்குரிய சொத்துக்களும் எனது
அதிகாரத்தில் கைப்பற்றவோ காத்துக் கொள்ளவோ எனக்கு எந்த ஒரு தேவையும் இல்லை.”
செராம்பூர் கல்லூரி பேராசிரியராக இருந்தபோது
1917-ல் மார் திவன்னாசியோஸ் மார் இவானியோசுக்கு அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு
எழுதப்பட்டுள்ளது.
“என்னிடம் நம்பிக்கைகுரியவரும் உண்மையான அன்பைக்
காட்டுபவராக உண்டு என்றால், அது நீரே! என நான் அறியாதவன் அல்ல!
திரு பிலிப்போஸ் நீதிபதி அவர்களுக்கு
அனுப்பிய கடிதத்தில் மார் இவானியோஸ் அவர்களைப் பற்றி மார் திவன்னாசியோஸ் எழுதிய
பகுதி குறிப்பிடத்தக்கது.
“இவ்வுலகில் நமது பெதனி ஆயரைப் போல நான்
யாரையும் அன்பு செய்யவும் நம்பவும் இல்லை. நமது உயர் பேராயரை விடவும் என்னை
விடவும் நான் அவரை நம்பவும் அன்பு செய்யவும் செய்திருந்தேன்.”
இவ்வாறு முப்பது ஆண்டுகள் 1900 முதல் 1930
வரை தந்தையாகவும் குருவாகவும் ஏற்றுக் கொண்டிருந்த வட்டச்சேரில் ஆயரிடமிருந்து
கத்தோலிக்க ஒன்றிப்பு வாயிலாக மரணம் வரையிலும் பிரிந்திருத்தல் என்பதும், “சொந்த மகன் மேன்மையான அன்பனாகவம்” என கருதியிருந்த
மார் இவானியோஸ் ஆயரிடமிருந்து என்றென்றும் அகன்றே இருக்க வேண்டும் என்பது வட்டச்சேரில்
ஆயருக்கும் மிகவும் வருத்தம் விளைவிப்பதும் துயர அனுபவத்தை ஏற்படுவதுமாக இருக்கும்
என்பதை நாம் அனுமானிக்க முடிகிறது. இருப்பினும் நமது கதாநாயகன் இறைவனின் அன்பை
முன்னிட்டு மனசாட்சிக்கு தகுந்தவாறு அந்த நிலையை ஏற்றுக் கொள்ளவும் செய்தார்.
இரண்டு கடிதங்கள்
கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைய மார்
இவானியோஸ் கொண்டிருந்த மனத்திடனை அறிந்து கொண்டு மார் திவன்னாசியோஸ் பேராயர்
அவர்கள் முடிந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டார். நேரடியாக கடிதங்கள்
அனுப்பியும், அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சமுதாயப் பிரமாணிகள் வழியாக
முயற்சிகள் மேற்கொள்ளவும், உரையாடல்கள் நிகழ்த்தவும், தடையாணைகள் மூலமும் பயமுறுத்தினார்.
எனினும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் மார் இவானியோஸ் தான் தீர்மானித்த
கருத்தில் அணுவளவும் விலகிடாமல் நிலைத்திருந்தார் என்பதை பின்வரும் கடிதத்தில்
அறிந்து கொள்ள முடிகிறது.
கதாநாயகனின் கத்தோலிக்க ஒன்றிப்பு என்ற
குறிக்கோளை உணர்ந்த மார் திவன்னாசியோஸ்
அனுப்பிய ஒரு கடிதத்திற்கு வழங்கிய பதில் மொழி பின்வருமாறு இணைக்கப்படுகிறது.
வடசேரிக்கரை
“திருவனந்தபுரத்திலிருந்து அனுப்பிய கடிதத்தை
பெற்றுக் கொண்டேன். நமது உற்றத் தோழர்களான பரிமலையிலிருந்து கே வி சாக்கோ அவர்களிடமிருந்தும்
திருவனந்தபுரத்திலிருந்து நீதிபதி பிலிப்போஸ் மூலமாகவும் எனது கருத்துச்செறிவுகளை
நீங்கள் அறிந்ததைப் பற்றி உங்களது ஆணையில் கண்டுணர்ந்து கொண்டேன். ஒரு சில
காரியங்களை நீங்கள் என்னிடமிருந்து கேட்டுணராமல் தோழர்களிடமிருந்து அறிந்து
கொண்டதாக ஒரு சில வார்த்தைகளை நான் கண்டுகொண்டேன். அவர்களை விடவும் கூடுதலாக எனது
கருத்துச்செறிவுகள் அனைத்தையும் உங்களிடம் மட்டுமே நான் பரிமாறிக் கொண்டுள்ளேன்.
குறிப்பாக மறைமுதுவர் உடனடியாக கேரளாவுக்கு வருகை தருவதற்கு முன்னர் இங்கிலாந்து
நாட்டிற்குச் செல்வதாக செய்தித்தாள்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலுவாவ்விலிருந்து
திரு ஏ எம் வர்க்கி அவர்களுடைய கடிதத்தை பெற்றுக் கொண்டேன். அதனில் மறைமுதுவரோடு ஒன்றிணைய
வேண்டாம். சமுதாயத்தின் இப்போதைய நிலையில் தப்பிப்பதற்கு இதுவே ஒரே வழி என
எழுதப்பட்டுள்ளது. நமது தோமஸ் திருத்தொண்டர் இரகசியமாக ஒருவரோடு கூறியதும் இதுவே
ஆகும். திருத்தொண்டார் இங்கிலாந்துக்கு செல்லவில்லை எனவும் எலியாசு மறைமுதுவரைக்
காண மூசல் என்னும் இடத்திற்கு செல்வதாக திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது. ஏ எம் வர்க்கி
திருத்தொண்டரும் இதைப் பற்றிய பல ஆலோசனைகள் நடக்கிறதா என அறியவில்லை.
மார் இவானியோஸ்
மேற்குறிப்பிட்ட கடிதத்திற்கு உடனடியாக
பதில் மொழி வழங்கினார். அதற்கு மார் இவானியோஸ் அவர்கள் வழங்கிய பதில் மொழி
சேர்க்கப்படுகிறது.
வடசேரிக்கரை
மார் திவன்னாசியோஸ் பேராயர் அறிவதற்கு,
துலாம் இருபதாம் தேதி அனுப்பிய கடிதம்
கிடைத்தது. கடந்த திருச்சிலுவைத் திருநாளன்று திருப்பலிக்குப் பின்னர் உங்களது
அறையில் வந்து பல காரியங்களை பகிர்ந்து கொண்டேன். அப்துல்லா பாபா மற்றும் எதிரிகள்
மூலமாக தாங்கள் அனுபவித்த துயரங்களை நானும் உங்களோடு அமர்ந்து அறிந்து கொண்டேன்.
அவை மீண்டும் நிகழாமல் இருக்க விழைகிறேன். கடந்த வாரம் பருமலை திருவிழாவுக்கு நான்
வருவதற்கு சாத்தியம் இல்லாமல் இருந்தது ஜலதோஷம் மட்டுமல்ல. உயர் பேராயரும் மற்று அனைவரும்
அமரும் இடத்தில் ஒருவருக்கொருவர் கருத்து ஒன்றிப்பு இல்லாமல் பேச வேண்டிய சூழல்
ஏற்படுமோ என்ற பயமே ஆகும். அனைத்து கலகங்களும் மாறி சமுதாயத்திற்கு நன்மை
உருவாகும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். யாருக்கெல்லாம் ஆயர்ப் பட்டம் வழங்க
வேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்கிறீர்களோ, அதற்கு நான் எந்த விதமான மாற்றுக்
கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.
மார் இவானியோஸ்
...............................................................................................
திரு வர்கீஸ் அவர்கள் வழியாக அனுப்பிய
கடிதம்
தொடர்ந்து வட்டச்சேரில் வர்கீஸ் அவர்கள்
வழியாக மார் திவன்னாசியோஸ் அவர்களுக்கு
நமது கதாநாயகன் ஒரு கடிதத்தை கொடுத்து அனுப்பினார்.
பெதனியின் சுயாட்சி நிலை காத்துக்கொள்ள
வேண்டியதன் தேவையைப் பற்றியும் கத்தோலிக்க ஒன்றிப்பு குறித்து உயர்பேராயரும்
மற்றும் ஆயர்களும் பருமலையில் வைத்து நடத்திய ஆலோசனைகளை விளக்கியும் தொடர்ந்து
நடத்தப்பட்ட கடிதப் போக்குவரத்துகளை எடுத்துக் கூறியும் இக்கடிதம்
விளக்கப்பட்டுள்ளது. மார் இவானியோஸ் கத்தோலிக்க ஒன்றிப்பு அடைவதற்கு பத்து
மாதங்களுக்கு முன்னரே இந்த கடிதத்தை எழுதி உள்ளார் என்பதை தனிப்பட்ட முறையில்
நினைவு கூரவும்.
வடசேரிக்கரை
நமது அன்புக்குரிய கீ வர்கீஸ் அவர்களுக்கு
ஆசீர்!
நான் அனுப்புகின்ற இக்கடிதத்தை ஆயர்
அவர்களுக்கு வாசித்துக் காட்ட வேண்டும்.
“மேற்குறிப்பிட்ட பெதனி ஆயர் யார் என்பதற்கு
விடை கிடைக்கவில்லை. பிணங்க வேண்டிய சூழல் ஏற்படும்.” என ஆயர் திருவனந்தபுரத்தில்
வைத்து ஜான் வக்கீல் மற்றும் பிலிப்போஸ் நீதிபதி அவர்களிடம் கூறியதாகவும்
இதைப்பற்றி கிரிதீபத்தில் எழுதப்பட்ட காரியத்தை எடுத்துரைத்ததாகவும் இங்கே
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவும் மதிக்கவும்
கடைபிடிக்கவும் எனக்கு எந்தவொரு தடையும் இல்லை என்பதனை நீங்களே நன்றாக
அறிந்திருக்கின்றீர். உயர் பேராயரும் மறைமுதுவரும் இடையேயும் ஆயர் மன்றம் மற்றும்
மறைமுதுவரிடையேயும் ஏதேனும் தொடர்பு உண்டோ எனவும் உண்டெனில் என்ன எனவும்
தெளிவுபடுத்தப்பட்ட வில்லை. ஏதேனும் விதத்தில் யாக்கோபாய மறைமுதுவரின் அதிகாரத்தை
ஏற்றுக் கொள்கின்ற போது, அடுத்த மறைமுதுவர்
வரும்போது என்னை தடை செய்வதாகவும் பெதனிக்கு உரிய சொத்துக்கள் மறைமுதுவருக்கு
கிடைப்பதற்காக வழக்கு மேற்கொள்வதாகவும் பிலிப்போஸ் நீதிபதி என்னோடு கூறியதாகவும், பெதனி
மறைமுதுவரின் அதிகாரத்திலிருந்து தனிப்பட்டது என நான் விடையளித்ததும் செய்த விபரம்
முன்னரே உங்களிடம் தெரிவித்துள்ளேன்.
என்னென்ன சவால்கள் ஏற்பட்டாலும் மறைமுதுவரின்
அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளவோ கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள அனுபவங்களிலிருந்து
இன்னும் இந்நிலையிலிருந்து விலகிச் செல்லவோ நான் விரும்பவில்லை. இவ்வாறு பெதனி மறைமுதுவரிடமிரு்து
பரிபூரணமாக தனித்துவ நிலையில் நிற்பதனால் ஆயரையோ உயர் பேராயரையோக் குறித்து தடை
ஏற்படுத்தவும் அதனால் உங்களது வழக்குகளுக்கு ஏதேனும் கேடு விளைவிக்குமோ என
எண்ணுகின்ற போது பெதனியோடு தொடர்பில்லாத நிலையில் ஏதேனும் ஆணைகளை வெளிப்படுத்த
எனக்கு சம்மதமே. பெதனி கலகங்களுக்குள் உட்படாமல் இருப்பதற்கும் வெளிநாட்டவர்களால்
ஏற்படும் தொல்லைகளிலிருந்து விலகி நிற்கவும் நான் விரும்புகிறேன்.
ஆயரின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாத நிலை
அல்லவா இது என முதலில் உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இதன் உண்மை நிலை
மேற்குறிப்பிட்டதே ஆகும். எந்தவொரு அதிகாரத்திற்கும் உள்படாமல் தனிமையாக இருக்க
வேண்டும் என எனக்கு விருப்பவுமில்லை. ஆனால் ஏதேனும் விதத்தில் மறைமுதுவரின்
அதிகாரத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதற்கு நான் தயாராகவும் இல்லை. எனது இத்தகைய
நிலையால் ஆயரை ஒரு சாராராக கருதி வழக்கிற்கு உள்படுத்தும் எந்த விதமான தீச்செயல்களுக்கும்
நான் விரும்பவுமில்லை.
கிரிதீபம் நூலின் கடைசி அதிகாரத்தை
அச்சிடுவதற்கு முன்னால் ஜான் வக்கீல் திருமூலபுரத்திற்கு வந்திருந்தார்.
அந்தியோக்கியாவின் அதிகாரத்தை பெதனி ஏற்றுக் கொள்வதில்லை. என ஒரு சூழலில் நான்
அவரோடு தெரிவித்து விட்டேன். நானும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் அவரது
பதில் மொழியாக அமைந்திருந்தது.
தற்போதைய ஆயர்க் குழுவினர் ஒரு
காலகட்டத்தில் மறைமுதுவருக்கு கீழ்ப்படியவோ, தனித்திருச்சபையாக உருமாற்றம் பெறவோ
அல்லது ஏதேனும் திருச்சபையோடு இணையவோ உள்ள நிலைகள் மட்டுமே உள்ளன. இதனைக் குறித்து 1101 துலாம் மாதத்தில் பருமலையில் திருவிழாவிற்காக வந்து கூடிய
போது இறையடி சேர்ந்த உயர் பேராயரும் தற்போதைய உயர் பேராயரும் இணைந்து உரையாடிக்
கொண்டிருந்தோம்.
அப்போது சமூகம் சார்ந்த பல விடயங்களைக்
குறித்து ஆலோசித்தோம். நமது நம்பிக்கையை எந்தவித வேறுபாடும் இல்லாமல்
காத்துக்கொள்ளவும், நமது இறைமக்களை நமது
ஆயர்களும் குருக்களும் திருஆட்சி புரியவும் நமது சமுதாய மேன்மைக்கு கேடு வராத
விதத்திலும் உரோமை கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்புக்கு சாத்தியமாகுமா, என
மறைமுகமாக கடிதப் போக்குவரத்து நடத்தி அறிந்து கொள்ளுமாறு என்னை ஒப்படைத்தனர்.
இந்த ஆலோசனைகள்
மறைமுகமாக காக்கப்பட
வேண்டும். பேராயரை உடனடியாக அதனை தெரிவிக்க வேண்டாம் எனவும் நாங்கள்
தீர்மானித்தோம். அன்றைய தீர்மானத்தின் படியாக சமுதாயம் ஒன்றாக இணைவதற்கு தகுந்த
முறையில் மட்டுமே கடிதப் போக்குவரத்து நடத்தப்பட்டுள்ளது. இதைக் குறித்த கடிதங்கள்
பலவற்றையும் தற்போதைய உயர்பேராயரை காண்பித்துள்ளேன். “அனைத்தையும் அறிந்து கொள்வது
நன்றே” என அவர் இதைப் பற்றி கூறவும் செய்துள்ளார். இறையடி சேர்ந்த உயர் பேராயரின் விருப்பத்திற்கு
இணங்க பேராயரையும் இச்செய்திகளை நான் தெரிவிக்கவும் செய்துள்ளேன். அவரோ இதைப்
பற்றிய எதிர்க் கருத்துக்களைக் கூறியதாக இறையடி சேர்ந்த உயர் பேராயரிடமும்
தற்போதைய உயர் பேராயரிடமும் எடுத்துரைத்துள்ளேன்.
ஒரு சில
தினங்களுக்கு முன்னர் பேராயர் திருவனந்தபுரத்தில் இருந்தபோது பருமலையில் வைத்து உயர்
பேராயரும் கே வி சாக்கோ அவர்களும் இணைந்து நடத்திய உரையாடலில் உள்ள வார்த்தைகளை அவ்வாறே
இணைக்கின்றேன்.
Baba assures that
he is prepared to promote reunion with Rome provided he is not asked to
anathematize any of the father's or abjure any part of the faith he holds. - நமது தந்தையர்களை சபிக்காமலும் நாம் கடைபிடிக்கும்
நம்பிக்கைகளை மறுத்துரைக்காமலும் உரோமாவுடன் மறுஒன்றிப்பு என்பதனை உயர் பேராயர்
ஊக்குவித்துள்ளார்.
உயர்பேராயரின்
எண்ணம் இதுவாகவே அமைந்திருந்தது. கிறிஸ்தவர்களிடையே போட்டி மனப்பான்மையை
முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் திருச்சபைகளுக்கிடையே ஒன்றிப்பு ஏற்பட
வேண்டும் எனவும் இறைவன் விரும்புகிறார் என நான் ஆழமாக நம்புகிறேன். அதற்கு எதிராக
ஆயர் அவர்கள் எதையும் ஆணையிட வேண்டாம் என நான் விரும்புகிறேன்.
இன்னொரு
விடயத்தையும் நான் உங்கள் முன்பாக அறிவித்துக் கொள்கின்றேன். பருமலையில் வைத்து
நடத்தப்பட்ட உரையாடல் தொடர்பானதே இது. திருச்சபையின் அடிப்படை என்பது “நம்பிக்கையே”
எனவும் “பேதுரு அல்ல” எனவும் தாங்கள் கூறியதைப் போன்று எனக்குத் தோன்றுகிறது. நான்
இரண்டுமே சரியானது எனப் பதில் அளிக்க விரும்புகிறேன். உண்மையில் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவே திருச்சபையின் அடிப்படை. ஆண்டவரின் இறைமையிலும் மனிதத்திலும் உள்ள
நம்பிக்கையே திருச்சபையின் அடிப்படை ஆகும். இந்த நம்பிக்கையை எடுத்துரைத்த பேதுரு
திருச்சபையின் அடிப்படை ஆகிறார். இறைவாக்கினர்களும் திருத்தூதர்களும்
மறைசாட்சிகளும் திருச்சபையின் அடிப்படையானவர்களே ஆவார். இவ்வாறு பல விதத்தில் நமது
சுறியானி திருவழிபாட்டுச் செபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் எதனையும்
நான் மறுத்துரைக்கவில்லை.
யாக்கோபாயா மறைமுதுவரின்
கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெறாமல் மலங்கரை சுறியானிக் கிறிஸ்தவர்களுக்கு
ஐஸ்வரியம் ஏற்படுவது இல்லை என்ற மனத்திடன் எனக்கு உண்டு. தற்காலத்திற்கு
கிடைக்கக்கூடிய ஆறுதல் போதுமானது அல்ல. ஆயராகிய நீங்களும் இதே கருத்தை
கொண்டிருக்கிறீர்கள் என நான் நம்புகிறேன். பெதனி இத்தகைய கலகங்களுக்குள் உள்படாமல்
நிற்பதே நல்லது என நீங்களே பல நேரங்களிலும் கற்பித்திருக்கின்றீர். ஏதேனும்
விதத்தில் யாக்கோபாயா மறைமுதுவர் அல்லது அவரது பிரதிநிதிகளாக யார் வந்தாலும்
ஆபத்தும் வெறுப்பும் மட்டுமே உருவாகும் என பல தலைமுறைகளின் அனுபவத்தின் வழியாக
சாட்சியப்படுத்தப்படுகிறது. உங்களது அனுபவங்களும் இதற்கு சாட்சிகளாக அமைந்துள்ளன.
பெதனியின் தனித்துவ
நிலையை கடைப்பிடித்தே ஆக வேண்டும் என என்னைக் கட்டாயப்படுத்துகின்ற வேறு சில
காரணிகளையும் உங்களது முன்பாக மறைமுகமாகவும் நேரடியாகவும் அறிவித்துள்ளேன்.
இவ்வாறு இருக்க,
பிணங்க வேண்டிய சூழல் வரும் என ஆயர் அவர்கள் ஜோன் வக்கீல் மற்றும் பிலிபோஸ்
நீதிபதியோடு கூறியது அறிந்து வருந்துகிறேன்.
இவண்
மார் இவானியோஸ்
................................................................................................
பதில் கடிதம்
வட்டச்சேரில் திரு வர்கீஸ்
வழியாக நமது கதாநாயகன் மார் திவன்னாசியோஸ் ஆயருக்கு அனுப்பிய கடிதத்திற்கு
பதிலுரையாக மார் திவன்னாசியோஸ் கூறியவை அனைத்தையும் கோர்த்திணக்கி திரு வர்கீஸ்
நமது கதாநாயகனுக்கு அனுப்பிய கடிதம் சேர்க்கப்படுகிறது.
எம் டி செமினேரி 5.
4. 105
ஆயர் அவர்கள்
அறிந்து கொள்ள,
கடந்த வாரத்தில்
நான் அனுப்பிய கடிதத்தை பெற்றுக் கொண்டீர்கள் எனக் கருதுகிறேன். பேராயரை
வாசித்துக் காட்ட நீங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தை பெற்றுக் கொண்டேன். நேற்று
மாலையில் நான் குருத்துவப்பயிற்சியகத்திற்குச் சென்றேன். ஆயர் அவர்களே அதனை நேரடியாக வாசித்து
அனைத்தையும் புரிந்து கொண்டார். ஒரு சில சந்தேகங்களை கொண்ட வினாக்களை என்னோடு
கேட்டு அறிந்து கொண்டார். என்னை வேதனைப்படுத்தும் கருத்துக்களுக்கு சமாதானம்
கிடைப்பதாக நான் இவற்றில் எதுவும் காணவில்லை என்ற அர்த்தத்தைக் கொண்ட நிலையை தான்
ஆயர் அவர்கள் என்னோடு தெரிவித்தார். எனக்கு மதிப்பு வழங்கவும் ஆதரிக்கவும் எனது
அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவும் செய்வேன் என எழுதியதை பற்றி எனக்கு எந்த விதமான
ஐயமும் இல்லை. ஆனால் இனி அது அல்ல, எனக்குத் தேவையானது. எனது அதிகாரத்தை ஏற்றுக்
கொள்வது ஒரு மகன் தனது தந்தையை கீழ்ப்படிவது போலவா? இல்லை! சீடன் தனது குருவை
கீழ்ப்படிவது போலவா? ஆயர் மன்றத்திற்கு கீழ்ப்படிவதற்கு அவர் தயாராக வேண்டும்.
எனக்கு கீழ்ப்படிதல் உள்ளவராக இருப்பது தனி நபர் சார்ந்தது.
மறைமுதுவர் ஆயரை
தடை செய்த முறையில் மறைமுதுவரோடுள்ள உறவில் இன்னும் ஆயர்கள் நுழைய வேண்டும் என
எனக்கு கருத்து இல்லை. அப்தேது மிஸிகா மறைமுதுவர் என்ற முறையில் உருவாக்கப்பட்ட
உயர் பேராயர் திருஆட்சியமைப்பு உண்மையானது. அப்போது ஒரு உயர் பேராயரின் திருச்சபைச்
சார்ந்த அதிகாரங்களை மதிக்காமல் இருப்பது ஒரு மறைமுதுவருக்கும் சாத்தியமில்லை.
அப்தேது மிசிகாவின்
மறைமுதுவர் பதவி நீதிமன்றத்திலிருந்து மறுக்கப்படுகின்ற போது உயர் பேராராயரும்
தற்போதைய அனைத்து ஆயர்களும் இணைந்து உருவாக்கிய அனைத்து வளர்ச்சி நிலைகளையும் பாவா
குழுவினருக்கு பெற்றுக் கொள்ள சாத்தியமில்லை என்பதுதான் எனது பதில் மொழி.
இந்த விடயத்தைப்
பற்றி நடத்தப்பட்ட ஆலோசனைகளும் கடிதப் பரிமாற்றங்களும் நீங்களும் உயர் பேராயரும் இரகசியமாக
நடத்தவும் நமது பேராயரை வஞ்சிக்கவும் செய்துள்ளீர்கள். மறுஒன்றிப்பு எனக்
கூறுவதில் அர்த்தமில்லை. தனிப்பட்ட திருவழிபாடு என அனுமதி வாங்கி உரோமை
திருச்சபையோடு இணைதல் என்பதுவே இதன் பொருள். பேராயரோடு இணைந்து நின்று
திருவழிபாட்டிற்கு அனுமதி வாங்குவதற்கு செய்த முயற்சிகளால் பேராயர் அவர்கள்
வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு தான் கூறப்பட்டது.
அனைத்து
காரியங்களுக்கும் நானும் நான் அறிந்த விதத்தில் ஒவ்வொரு சமாதான வார்த்தைகளை
பேசவும் செய்தேன். நேற்று உயர்பேராயரும் செமினாரிக்கு
வந்திருந்தார். அவர்கள் உரையாடிய போது உங்களைப் பற்றியும் அவர்கள் உரையாடினர்.
உங்களது கடிதத்தைப் பற்றி நான் உயர் பேராயரோடு எதுவும் கூறவில்லை. பேராயர் ஏதேனும்
அவரோடு பேசினாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. “ஆயர்களை சபிக்காமலும்
நம்பிக்கை வேறுபாடு இல்லாமலும் உரோமை திருச்சபையோடு ஒன்றிப்பு சாத்தியமாகும்
என்றால் நல்லதே” என நானும் கருத்து கூறியுள்ளேன். ஆனால் இந்த கருத்துக்களை அனுமதித்து
ஒரு ஒன்றிப்பு சாத்தியமாகும் என்ற நம்பிக்கையோடு தான் நான் இவற்றைக் கூறியுள்ளேன்
என உயர் பேராயரும் ஒரு உரையாடலின்போது என்னோடு கூறியிருந்தார்.
பல சூழல்களையும்
ஆராய்ந்த பின்னர் நீங்கள் உடனடியாக இங்கு வரவேண்டும் என நான் விரும்புகிறேன்.
நானும் பேராயரும் இணைந்து பேசிய போது ஒரு கருத்தை தெளிவுபடுத்திக் கொண்டேன். “பெதனி
ஆயர் நிலை பெறாத பிரச்சனைகளை நிலை செய்வதாக எண்ணி செயல்பட்டுள்ளார். எனக்கு
கீழ்ப்படிந்து செயல்பட அவர் தயாராக இருந்தால் இப்பிரச்சனைகளிலிருந்து எல்லாம்
விடுதலை பெறுவதற்கு நான் அதற்கான வழிகளை காண்பித்து அருள்வேன்” என அவர் கூறினார்.
பருமலைக்கு வராமலிருருந்தது
பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. விஸரோவின் வருகைக்கு வருவாரா என சந்தேகம் உள்ளது
என பேராயர் கூறினார். உயர் பேராயர் இன்று வாகத்தானம் வழியாக பருமலைக்கு
செல்கிறார்.
பெதனி ஆயர் உரோமாவுக்கு
செல்வதாக ஆலோசிக்கிறார் என்ற கருத்து பல சமுதாயப் பிரமாணிகளுடைய வாயிலும் பலவாறாக
பேசப்பட்டு வந்தது.
நானும் உரோமை
திருச்சபையில் சேர்வதா? என்று உயர் பேராயர் நேற்று என்னோடு கேட்டார்.
பலவற்றையும்
நேரடியாக கலந்துரையாடலாம் என விரும்புகிறேன். நீங்கள் திருவல்லா அல்லது கோட்டயம்
வருவதாக இருந்தால் உங்களை சந்தித்துக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.
பெதனி ஒரு
துயரப்பாதையில் கடந்து செல்கின்ற போது அதனை எண்ணி மனம் வருந்துகிறது. பெதனி உருவானதன்
உண்மை நிலைக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் வராமல் முடிந்த அளவுக்கு இணைந்து
செல்வதற்கான வாய்ப்பு உருவாக்க ஆயர் அவர்கள் ஒரு வழியை எடுத்துக் கூற வேண்டும்.
உங்களது ஆன்மீக
மகன் வி ஏ வர்கீஸ்
....................................................................
மீண்டும் ஒரு
கடிதம்
மேற்குறிப்பிட்ட
கடிதத்தை தொடர்ந்து இரண்டாவது நாள் திரு வர்கீஸ் மார் திவன்னாசியோஸ் அவர்களை
சந்தித்தபோது அவர் கூறிய விபரங்களை சேர்த்து கதாநாயகனுக்கு மீண்டும் அனுப்பிய
கடிதம் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒருவருக்கொருவர் இணைந்து
உரையாடல் நிகழ்த்தவும் நமது கதாநாயகனின் மனத்திடனினிலிருந்து பின்வாங்கவும் எந்த
அளவுக்கு பேராயர் விரும்பினார் என்பது இக்கடிதம் தெளிவாகின்றது.
எம்டி செமினாரி
7.4.105
ஆயர் அவர்கள்
அறிந்து கொள்ள,
நேற்றைய தினமும்
நான் செமினாரிக்கு சென்றிருந்தேன். நான் அங்கு சென்ற போது சின்ன ஆயரோடு பேராயர் பல
விடயங்களை பேசிக் கொண்டிருந்தார். சற்று இலகுவான உரையாடலாக அமைந்திருந்தது.
இருப்பினும் சற்று மனக்கலக்கமும் உரையாடலில் இருந்ததாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
பின்னர் அருள்தந்தை முட்டக்கல் அவர்களும் எங்களோடு இணைந்தார். ஆயிரோடு நாங்கள்
பேசினோம். எங்கள் மூவருக்கும் ஒரே கருத்து உருவானது. அது நீங்கள் உடனடியாக நம்
பேராயரை உடனடியாக வந்து காண வேண்டும் என்பதாகும். நான் வடசேரிக்கரை வந்து ஆயரை
அழைத்து வர வேண்டும் என முட்டக்கல் அச்சன் என்னோடு கூறினார். இந்த விபரத்தை உங்களை
நான் தெரிவித்துக் கொள்ளலாம் எனவும் நான் கூறி வெளியேறினோம்.
பின்னர் ஒருநாள் கடிதத்தில்
நீங்கள் பேராயரை சந்திப்பதற்காக விரும்புவதை கடிதத்தில் எழுதி அனுப்பினீர்களா என
கேட்டுக்கொண்டார். நான் அனுப்பினேன் என பதில் கூறினேன். சற்று தாமதித்தாயினும்
வருவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறினேன். ஆயரின் முகம் சற்று மலர்ந்தது. நான் நேற்று
அனுப்பிய கடிதத்தை நீங்கள் பெற்றுக் கொண்டீர் என நம்புகிறேன்.
ஒருமுறை பேராயர்
இவ்வாறு கூறினார். “நான் என்ன செய்ய வேண்டும். அவர் ஒருமுறை என்னைக் கண்டு
பேசினால் போதுமாக இருந்தது. திருவல்லா வருவதாக இருந்தால் நானே அங்கு சென்று அவரோடு
பேசலாம். வடசேரிக்கரை வரை செல்வதற்கு சற்று சிரமம் எனக்கு உள்ளது.” நீங்கள்
மனப்பூர்வமாக விலகி நிற்கிறீர்கள் எனத் தான் அவர்கள் சிந்திக்கிறார்கள். இதனை
தவறாக விளக்குவதற்கும் பலர் துணிகிறார்கள்.
நீங்கள் சற்றும்
தாமதியாமல் உடனடியாக பேராயரை கோட்டயத்திற்கு வந்து சந்திக்குமாறு உங்களை கேட்டுக்
கொள்கின்றேன். நீங்கள் ஆயர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு என்றால் அதைப் பற்றி
தெளிவாகப் பேசி உரையாடுவது நன்று. நேரடியாக உரையாடும் போது பல தப்பெண்ணங்களும்
மாறும் என நம்புகிறேன். எனவே நீங்கள் உடனடியாக வரவேண்டும் என்ற வேண்டுகோளாக இதனை
சமர்ப்பிக்கின்றேன்.
உங்களது ஆன்மீக
மகன்
வி ஏ வர்கீஸ்
.......................................................................................
நேரடியாக அனுப்பிய
கடிதம்
இவ்வாறு பல
கடிதங்கள் மார் திவன்னாசியோஸ் அவர்கள் அனுப்ப வைத்தாலும் சொந்த தகப்பனாரைப் போல
மதிக்கவும் அன்பும் செய்திருந்த பேராயரை நேரடியாகக் கண்டு எதிர்க் கருத்துக்களை
பேசுவதற்கு தான் விரும்பவில்லை. பருமலை அல்லது திருவல்லா அல்லது கோட்டயம் வந்து
பேராயரை சந்தித்து கருத்து வேறுபாடுகளை நீக்க வேண்டும் என உயர்பேராயரும் நமது
கதாநாயகனுக்கு கடிதங்கள் எழுதியிருந்தார். ஆனால் நமது கதாநாயகன் இவ்வாறு நேரடியாக
உரையாடுவதற்கான வாய்ப்புகள் பலவற்றையும் தட்டிக் கழித்து வந்தார். ஆனால் இறுதியில்
பேராயர் திருவல்லாவின் திருமூல என்னுமிடத்தில் மார் இவானியோஸ் ஆயரை நேரடியாகக்
கண்டு உரையாடல் நடத்தினார். இந்த உரையாடல்கள் நடந்த நிகழ்வுகளை விளக்கிய கடிதம்
மீண்டும் இணைக்கப்படுகிறது.
கத்தோலிக்க
திருச்சபையோடு மறுஒன்றிப்படைவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னர் பேராயருக்கு மார்
இவானியோஸ் அனுப்பிய கடிதம் இணைக்கப்படுகிறது. எந்த அளவுக்கு மன கசப்புகள் நமது
கதாநாயகனுக்கு ஏற்பட்டிருந்தது என்பதை இதிலிருந்து நம்மால் உணர்ந்து கொள்ள
முடியும்.
பெதனி வடசேரிக்கரை
மூன்று மகரம் 105
அனுப்பிய கடிதம்
கிடைத்தது. மலங்கரை சுறியானி சமுதாயத்தின் தற்போதைய நிலையும் எதிர்காலத்தில்
வரவிருக்கின்ற ஆபத்துக்களையும் நினைக்கின்ற போது எனது இதயம் துடிக்கின்றது. இந்த
சூழலில் சமுதாயத்தை முன்னேற்றுவதற்கான வழியை முன்மொழிய வேண்டிய பொறுப்பு பேராயருக்கு
உண்டு. தற்போதைய வாழ்க்கை நிலையை நான் விட்டுவிடத் தயாராக இல்லை. இது இறைத்திட்டத்திற்கு
உகந்தது எனவும் பொது நன்மைக்கு உரியது எனவும் நான் நம்புகிறேன்.
என்னோடு
கேட்டுக்கொண்ட காரியத்தை நான் சம்மதிப்பதாக இருந்தால் பேராயர் அவர்கள் யாக்கோபாய
மறைமுதுவரின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதாகவே வந்து கூடும். எனது விருப்பம் இவற்றிலிருந்தெல்லாம்
விலகி நிற்க வேண்டும் என்பதாகும்.
கடந்த மூன்று
மாதங்களாக பேராயர் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செய்து வரும் பல அறிவிப்புகளின்
வழியாக பல விதமான நிந்தனைகளுக்கும் வெறுப்புகளுக்கும் சாப்பிடுவதற்கு கூட
அன்பளிப்புகள் வழங்காமல் இருப்பதற்காக நீங்கள் செய்த காரியங்களும் நிகழ்ந்ததுண்டு.
இதை விடவும் கூடுதலான கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் எனது வாழ்க்கைக் குறிக்கோளை விட்டு
விடுவதற்கோ எனது மனத்திடனை மாற்றி விடவும் நான் தயாராக இல்லை, என இந்த நேரத்தில்
அறிவித்துக் கொள்கிறேன்.
மா இவானியோஸ்
............................................................................................
இறுதி சந்திப்பு
பெதனியை விட்டு
வெளியேறி மறுஒன்றிப்பின் பிள்ளைத் தொட்டிலான திருமூலபுரம் என்னுமிடத்தில் மார்
இவானியோஸ் தங்கியிருந்தபோது இறுதியாக அவரை நேரடியாக சந்திக்க பேராயர்
வந்தடைந்தார். இச்சூழலில் அவர்கள் நடத்திய உரையாடல்களும் அன்பான மற்றும் மதிப்பு
வெளிப்படுத்தல்களும் இறுதியில் விடை பெறுதலும் இணைத்து அன்று வெண்ணிக்குளம்
என்னும் வீட்டில் வாழ்ந்து வந்த பெதனி ஆசிரமத்தவர்களுக்கு கதாநாயகன் ஒரு கடிதத்தை
கொடுத்து அனுப்பினார். 30 ஆண்டுகள் ஒரே நூலில் கோர்க்கப்பட்ட மலர்களைப் போல
இணைந்து செயல்பட்ட இரண்டு இதயங்கள் மீண்டும் ஒரு விதத்திலும் இணைந்திட முடியாத
விதத்தில் பிரிந்து செல்கின்ற சூழல் தான் இக்கடிதத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
பெதனி
சொத்துக்களின் எதிர்காலத்தைப் பற்றி திரு ஜான் அவர்களோடு ஆலோசிப்பதற்காக மார் இவானியோஸ்
திருவனந்தபுரத்திற்கு சென்று பின்னர் திருவல்லா வந்தடைந்த போது தான் இந்த நிகழ்வு
நடந்தது. அதைப்பற்றி நமது கதாநாயகன் எழுதிய கடிதத்தில் இறுதியாக இவ்வாறு
சேர்க்கப்பட்டுள்ளது.
“அதன் பின்னர்
திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு திருமலையில் வந்தடைந்த போது பேராயர் அங்கு
வந்திருந்தார். நமது ஆண்டவரின் திருப்பாதத்தில் ஒரு சிறிய காயமேனும் மாற்றிட என்னை
பயன்படுத்துவதாக இருந்தால் என்னை ஆயிரம் துண்டுகளாக நறுக்கி என்னையே மருந்தாக
பயன்படுத்தலாம் என எனக்கு தோன்றியது. இத்தகைய எண்ணத்தோடு நான் சிற்றாலயத்திலிருந்து
பேராயரை சந்திக்க சென்றேன்.
உங்களை
தீர்ப்பிடுவதற்காக கொண்டு செல்லுகின்ற போது என்ன பேச வேண்டும் என நீங்கள் ஆலோசிக்க
வேண்டாம், என்ற இறை வார்த்தைகளுக்கு ஏற்ப நான் எதுவுமே முன்னரே தீர்மானிக்கவில்லை.
சொல்ல வேண்டிய அனைத்தையும் இறைவன் சொல்ல வைத்தார். நான் சென்றவுடன் பேராயரின்
பாதங்களை முத்தம் செய்து சற்று விலகி முழங்கால் படியிட்டு அமர்ந்து தொழுதவாறு எனது
வருத்தங்களையும் வேண்டுகோளையும் சமர்ப்பித்தேன்.
நான் உங்களை
ஏதேனும் விதத்தில் வருத்தப்பட வைத்திருந்தால் இறைவனின் முன்னிலையில் எனக்கு
மன்னிப்பருள வேண்டுகிறேன். என்னை ஆசீர்வதிக்கவும் வேண்டுகிறேன். நான் இறைவனின்
கட்டளைகளை கடைபிடிக்க வேண்டுமா? மனிதர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமா?
இதற்கான பதிலைக்
கூறாமல் நான் நாற்காலியில் அமர்ந்தே பேசுவேன் என கட்டாயமானது. வினாக்களின் விடைகளை
தொடர்ந்து நான் இவ்வாறு கூறினேன்.
“ஆயிரம் அவர்கள்
இறைவனுக்காக அல்ல. மனித விருப்பத்திற்காக நிற்பதாக எனக்குத் தோற்றமளிக்கிறது. அதை
விட்டு விட வேண்டும்.”
பேராயர்: நான் எனது பொறுப்புணர்வை
செயல்படுத்த வேண்டுமே?
நான்: இறைவன் ஒப்படைத்த
பொறுப்புகளா? இல்லை, மனிதர்கள் ஒப்படைத்த பொறுப்புகளா?
பேராயர்: எனது மக்களை ரோமாவுக்கு
அழைத்து செல்வீர்களோ?
நான்: எனது மக்கள் என்று நீங்கள்
கூற வேண்டாம். இறைவனின் மக்களே ஆவர்.
பேராயர்: நீங்கள் ரோமாவுக்கு
செல்கிறீர்களோ?
நான்: நான் ரோமாவுக்கு செல்ல
தீர்மானிக்கவில்லை. ஆனால் திருத்தந்தையும் மறைமுதுவரும் பேராயரும் நாம் அனைவரும்
இணைந்து இறைவனின் ஒரே திருச்சபையாக மாற வேண்டும். இங்கு காணப்படும் வழக்குகளும்
பிரிவினைகளும் இறைமயமானது அல்ல.
பேராயர்: பெதனியிலிருந்து
வெளியேறியது ஏன்?
நான்: கழகத்தின் பொதுக்குழுவிற்கு
ஆலயப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய ஆணையை திருவல்லாவின் கொச்சுமாமச்சன்
அவர்களுக்கு அனுப்பியதாக கேட்டு அறிந்தேன். அது சரியா?
பேராயர்: ஆம் அவருக்கே அனுப்பினேன்.
நான்: திருவல்லா பெதனி ஆலயத்திற்கு
பங்கு மக்கள் இல்லை. கொச்சுமாமச்சன் பங்கைச் சார்ந்தவரும் அல்ல. பங்கில் இணைவதற்கு
படிவத்தை சமர்ப்பித்த மூன்று நபர்களையும் சேர்க்கவும் இல்லை. அவ்வாறு இருக்க
கொச்சுமாமச்சனை கையொப்பமிட வைத்து அனுப்பிய அதிகாரப் பத்திரம் ஒரு போலியானதாகும்.
பெதனி ஆலயங்களை கழகத்திற்குக் கீழே கொண்டு வரவும் பெதனி ஆலயங்களை கைப்பற்றவும்
இத்தகைய ஒரு முயற்சியை மேற்கொண்டதாக எனக்குத் தோன்றியது. நீங்கள் எனது தந்தை
ஆவீர். நீங்களும் நானும் நேர் மற்றும் எதிரணியராக நின்று பெதனியின் சொத்துக்களை
அபகரிக்க எனக்கு எந்த வித தேவையையும் இல்லை. இதனைப் பற்றி நான் ஆலோசித்தேன். பெதனியை
விட்டு வெளியேற வேண்டும் என்று வியாழக்கிழமை திருப்பலி நேரத்தில் நான்
தீர்மானித்து விட்டேன். தீர்மானத்தின் படியே நான் பெதனியை விட்டு வெளியேறினேன்.
பேராயர்: தற்போது நீங்கள் அனைவரும்
எங்கு தங்கி வாழ்கிறீர்கள்.
நான்: வெண்ணிக்குளம் என்னும்
இடத்தில் ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறோம். திருவல்லாவின் ஆயரகமும் ஆலயமும்
உங்களுக்கேத் தரவேண்டும் என பல நேரங்களிலும் நான் எண்ணி இருக்கின்றேன். அதனை
ஏற்றுக் கொள்ளவும் நான் வேண்டுகிறேன். மற்று ஆலயங்களுக்கு இடங்களை தானமாக
தந்தவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என நான் விரும்புகிறேன். பெதனியின் எந்த விதமான
சொத்துக்களும் உரோமையர்களுக்கு கொடுப்பதற்கு எனக்குத் தேவையில்லை. நான் மீண்டும்
இவ்வாறு கூறினேன்.
புலிக்கொட்டு ஆயர்
புலிக்கோட்டு ஜோசப் ரம்பான் அவர்களுக்கு 13 வயது நடக்கும் காலத்தில் ஆர்த்தாற்று
என்னும் இடத்தில் வைத்து திருத்தொண்டர்ப் பட்டம் வழங்கி அன்றே கோட்டயம் பழைய செமினாரியில்
வந்தடையச் செய்தார். எம்டி செமினாரியில் என்னை ஆளனுப்பி அழைத்து திருத்தொண்டரை
எனது கையில் ஒப்படைத்து “இவன் நமது பிள்ளை” என ஒப்படைத்தார். உடனடியாக நான் பேராயரின்
கரங்களை முத்தம் செய்தேன். திருத்தொண்டரின் கரங்களைப் பற்றிக் கொண்டேன். அப்படியிருக்க
இந்த இரம்பானை என்னிடமிருந்து விட்டுவிட வேண்டும் என உயர் பேராயர் எனது பெயருக்கு
எழுதி அனுப்பியது எவ்வளவு வருத்தத்தை விளைவிக்கிறது.
பேராயர்: அதைக் குறித்து நான் இரகசியமாக
பேசலாம்.
நான் : உயர் பேராயருக்கான
அன்பளிப்புகளை வசூல் செய்ய வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்ததனால் நான் அவருக்கு
எதிராக செயல்படுவதாக கூறியதாக அறிந்தேன். நான் அவருக்கு எதிராக ஏதேனும் செய்தேனா?
பேராயர்: உயர் பேராயர் அவ்வாறு
கூறியிருந்தால் அது பொய்யானது. உயர் பேராயர் அன்பளிப்புகள் அவரிடம் மட்டுமே இருக்க
வேண்டும். பொருளரிடம் அதை ஒப்படைக்க வேண்டாம் என மட்டுமே அவரோடு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் : “உங்களது பாதங்களை முத்தம்
செய்து ஆலயத்திற்கு சென்று ஜெபித்த பின் தூங்குவதற்கு விரும்புகிறேன்” எனக் கூறி
நான் எழும்பி அவரது பாதங்களை முத்தம் செய்தேன்.
பேராயர்: நான் உங்களது பாதங்களையே
முத்தம் செய்ய வேண்டும், என பேராயர் கட்டிலில் இருந்து எழும்புவதற்கு முனைந்தார்.
நான் அப்போதே அறையிலிருந்து
வெளியேறினேன்.
“பருமலைக்கு
வருவீரா” எனக் கேட்டார்.
பேராயரை சந்திக்க
நான் வரலாம். தற்போது நான் வரவில்லை. கடிதங்கள் வழியை நாம் கருத்துக்களை பரிமாறிக்
கொள்ளலாம். இவ்வாறு கூறி நான் சிற்றாலயத்திற்கு சென்று செபித்தேன்.
காலையில் பேராயர்
எழும்பி பயணம் புறப்படுவதற்கு முன்னால் சித்தாலயத்திற்கு வந்தார். நாங்கள்
மீண்டும் உரையாடினோம். ஒருவருக்கொருவர் முத்தமிட்டு பிரிந்தோம். மீண்டும் அவர்
வெளியேறிய போது மீண்டும் அவரை கட்டி அணைத்து முத்தமிட்டு தூயகத்திற்குச் சென்றேன்.
பேராயரும் இரம்பாச்சனோடு பேசி பருமலைக்கு திரும்பிச் சென்றார். இவ்வாறு இந்த
சந்திப்பு இறை விருப்பம் போல நடந்தது.
அவரது சொந்த
விருப்பத்தால் தான் எனக்கு ஆயர் அருட்பொழிவு வழங்கியதாகவும் எந்த விதமான வஞ்சனையும் நான்
செய்யவில்லை எனவும் அவர் எடுத்துக் கூறினார். அப்போது கலேக்காட்டில்
அருள்தந்தையும் குஞ்ஞேனா வழக்குரைஞரும் உடன் இருந்தனர்.
மார் இவானியோஸ்
..................................................................
கத்தோலிக்க
திருச்சபையோடு ஒன்றிப்படைவதற்கான திட நிச்சயதத்தில் இருந்து எந்த விதமான மாற்றுக்
கருத்தும் இல்லாமல் தொடர்ந்து தனது குறிக்கோளை இலட்சியமாக்கிச் செல்வதாக தனது
அசாதாரண தைரியத்தை எடுத்துக் காட்டிய ஒரு நிகழ்வாக இது அமைந்திருந்தது. இவ்வாறு
தனக்காகவும் தனது நற்செய்தியையும் பரப்புவதற்காக பல்வேறு விதமான துயரங்களையும்
தியாகங்களையும் அனுபவித்தவர்களுக்கு கிறிஸ்து நாதன் அருளிய வாக்குறுதி நமது
கதாநாயகனில் தெளிவாக அமைந்தது என்ற சரித்திர நிகழ்வுகள் தெளிவிக்கின்றன.
அதிகாரம் 26
பெதனியில் கூடுகையும் ஆசிரமத்தலைவரின் உரையும்
கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைவதற்கு
தீர்மானித்ததன் படி பெதனி ஆசிரமம் அமைந்திருந்த இடத்தையும் சொத்துக்களையும் பற்றிய
எதிர்கால நிலை பற்றிய சிந்தனையில் மார் இவானியோஸ் மூழ்கினார். மூன்று கருத்துக்கள்
அவருடைய மனதில் உருவாகின.
1.
ஒன்றிப்புக்குப் பின்னரும்
பெதனி மலையிலேயே வாழ்ந்திருந்து ஆசிரம தர்மங்களை அனுசரித்தும் முன்னர் நடத்திய
விதத்திலேயே பிறரன்புப் பணிகளை தொடர்ந்து செய்தும் வாழ்க்கையை முன்னோக்கி
நடத்துதல்.
2.
பெதனி ஆசிரமமும் அதைச் சார்ந்த
நிலத்தையும் சொத்துக்களையும் ஆர்த்தடோக்ஸ் திருச்சபையின் மேலதிகாரிகளான உயர் பேராயருக்கும்
மனங்கரையின் பேராயருக்கும் எழுதி வழங்கவும் பின்னர் அவ்விடத்திலிருந்து வெளியேறி
வேறு ஏதேனும் ஓரிடத்தில் தங்கி வாழவும் செய்து பின்னர் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைதல்.
3.
பெதனைக்குச் சொந்தமான
சொத்துக்களை ஒரு புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி அந்த ஆட்சி அமைப்புக்கு உட்படுத்தி
எல்லாவற்றையும் விட்டு விட்டு வெளியேறி கத்தோலிக்க திருச்சபையோடு இணைதல்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம்
இம்மூன்று மார்க்கங்களுள் மிகவும் இணக்கமான
ஒன்றாக இறுதியான மார்க்கம் ஆகும். இந்த மார்க்கத்தை கடைப்பிடிப்பதாக இருந்தால்
எந்த விதமான கலகங்களும் குழப்பங்களும் பிரச்சனைகளும் உருவாக வாய்ப்பு ஏற்படாது என
நிச்சயித்துக் கொண்டார்.
ஆனால் பெதனி சொத்துக்களை விட்டு விடாமல்
ஆசிரமத்தவர்களோடு இணைந்து கத்தோலிக்க ஒன்றிப்புக்குப் பின்னர் அவ்விடத்தில்
தங்குவதாக இருந்தால் பலவிதமான குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஒன்றிப்புக்குப்
பின்னர் அங்கு தங்குவதாக இருந்தால், கத்தோலிக்கர்கள் ஆசிரமத்தில் தங்க வேண்டாம்,
உடனடியாக வெளியேற வேண்டும் என ஒரு பிரிவினரும் ஆசிரமத் தலைவர் ஆசிரமத்திலேயே
தங்குவதற்கு உரிமை உண்டு என இன்னொரு பிரிவினரும் வாதிடவும் பிரச்சனைகள்
உருவாக்கவும் வாய்ப்புகள் உண்டு. அப்படியாயின் மேலும் பல ஆனப்பாப்பிமார்களின் நிணம்
முண்டன் மலையில் பாய்ந்தோட வேண்டிய சூழல் ஏற்படும். மட்டுமல்ல ஆர்த்தடோக்ஸ்
திருச்சபையின் சொத்து தான் பெதனி. எனவே கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்களுக்கு
மற்றும் ஆசிரமத்தவர்களும் அவ்விடத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற கருத்து
சிந்தனை மேலோங்கி நிற்கின்ற போது மீண்டும் கலகங்கள் உருவாக வாய்ப்பு உண்டு. எனவே
எந்த விதமான குழப்பமான சூழல்களுக்கும் முற்படாமல் பெதனி மலையிலிருந்து வெளியேறுவதே
நல்லது என நமது கதாநாயகன் தீர்மானித்துக் கொண்டார்.
இரண்டாவது மார்க்கமே நல்லது என பல நபர்களும்
தங்கள் கருத்துக்களை அன்றே எடுத்துக் கூறினர். ஆனால் அது வழியாகவும் பல விதமான
குழப்பங்கள் உருவாகும் என கதாநாயகன் அறிந்திருந்தார். உயர் பேராயர் அல்லது மலங்கரையின்
பேராயர் பெயருக்கு சொத்துக்களை எழுதிக் கொடுப்பதாக இருந்தால் வேறு பல
பிரச்சினைகளுக்கும் அவை காரணிகளாகும். தனிப்பட்ட நிலையில் பெதனியை உருவாக்கி வழிநடத்துவதற்கு
அன்பளிப்பு வழங்கிய பலர் ஒரு தனிப்பட்ட நபருக்கோ திருச்சபைக்கோ அதை எழுதி
வழங்குவதற்கு சம்மதிக்கவும் மாட்டார்கள். அவ்வாறு செய்வதற்கும் பெதனி ஆசிரமத்
தலைவருக்கு அனுமதியும் இல்லை. உரிமையும் இல்லை. அவ்வாறு செய்வதாக இருந்தால்
உடனடியாக மீண்டும் நீதிமன்ற வழக்குகளுக்கு பின்னால் கதாநாயகனையும் இணைத்து செல்ல
வேண்டிய சூழல் ஏற்படும். சமுதாயம் சார்ந்த வழக்குகளில் மறைமுதுவருக்கு சாதகமாகவே
தீர்ப்புகள் வரும் எனவும் அதன் வழியாக பெதனி சொத்துக்கள் அந்தியோக்கிய யாக்கோபாய
மறைமுதுவரின் ஆட்சியின் கீழ் சென்றடையும் எனவும் அத்துடன் பெதனியின் செயல்பாடுகள்
நலிவுறும் எனவும் இறுதியில் அழிந்து போகும் எனவும் கதாநாயகன் அறிந்திருந்தார்.
எனவே ஒரு தனிநபருக்கோ திருச்சபைக்கோ அதனை விட்டுக் கொடுப்பதற்கும் அவர் முன்
வரவில்லை.
மூன்று மார்க்கங்களில் இறுதியான மார்க்கம்
ஒரு புதிய டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து பெதனி மலையிலிருந்து வெளியேறி வேறு ஏதேனும்
இடத்தில் தங்கியிருந்து கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைதல் என அவர்
நிச்சயித்தார். அதனுடைய துவக்க நிலை என்ற விதத்தில் பெதனிக்காக அன்பளிப்பு வழங்கியுள்ள
வழங்கிய நபர்களின் கூட்டத்தை பெதனி மலையில் வைத்து நடத்துவதற்கு தீர்மானித்து கீழ்க்
குறிப்பிடும் அழைப்பிதழை அனுப்பினார்.
பெதனியின் மார் இவானியோஸ் பேராயரிடமிருந்து
இரக்கம் மிகுந்தவராகிய இறைவனின் அருளால்
பெதனி என்ற பெயரால் ஒரு தர்ம நிறுவனம் துவங்கி நடத்தப்பட்டு வருகிறது. இதன்
பிறரன்புப் பணிகளுக்காக பலவிடங்களிலும் யாசித்து பல நபர்களிடமிருந்தும்
தோழர்களிடமிருந்தும் பல அன்பளிப்புகள் வாங்கவும் 100 ரூபாய்க்கும் குறைவான
அன்பளிப்புகளை மூலதனமாக சேர்ப்பது இல்லை எனவும் அவற்றை அன்றாட செலவுகளுக்காக
பயன்படுத்துவதாகவும் அன்பளிப்பு பெறும் காலத்தில் இத்தகைய விளம்பரங்களை
வெளிப்படுத்தியதும் அதற்கேற்ப பல இன மக்களிடமிருந்தும் நல்ல இதயம் கொண்ட
பலரிடமிருந்தும் பல உதவிகளைப் பெற்றுக் கொண்டோம். இவ்வாறு பெற்றுக் கொண்ட
அன்பளிப்புகளால் எந்த விதமான இலாபமும் இல்லாமல் கடனிலேயே இந்நிறுவனம்
நிறைந்திருக்கிறது.
பெதனியின் துவக்க கால வரலாறு அனைத்தையும்
இணைத்து கிரிதீபம் முதலாம் பாகம் என்ற நூல் அச்சடிக்கப்பட்டது. இப்பணிக்காகவும்
அன்பளிப்பு வழங்கிய நல் மனம் கொண்டவர்கள் பலர் உள்ளனர். அதிலிருந்து கிடைத்த
வருமானத்தின்படி நற்பணிகளுக்காக செலவிட்டு பயன்படுத்தி வருகின்றோம். தற்போது இதனை
ஒரு டிரஸ்ட் அமைப்பின் கீழ் கொண்டு வந்து நிர்வாக அமைப்பாக உருவாக்கி
ஒப்படைப்பதற்கு நான் திட்டமிட்டுள்ளேன். இதற்காக மூலதனத்திற்காக அன்பளிப்பு செய்த
அனைத்து நல்ல உள்ளங்களையும் இக்கூட்டத்திற்கு உங்களை அழைக்கின்றேன்.
இந்த ஆலோசனைக் கூட்டம் பெதனியின் மையமான இறாந்நி
பகுதியில் பெரிநாடுமுறியில் பெதனி ஆசிரமத்தோடு இணைந்த விருந்தினர் அறையில் வைத்து
வருகிற கும்பம் மாதம் ஒன்பதாம் தேதி வியாழன் பகல் 3 மணிக்கு நடைபெறுகின்றது. இக்கூட்டத்திற்கு
உங்கள் யாவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.
மூலதனத்திற்கு அன்பளிப்பு வழங்கியவர்கள்
மட்டுமே இக்கூட்டத்திற்கு அனுமதிக்கப்படுவர். இந்நிறுவனம் பற்றிய அனைத்து
கணக்குகளும் இக்கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படும்.
இறைவனாகிய ஆண்டவரின் அருளும்
ஆசீர்வாதங்களும் உங்கள் அனைவரோடும் நிறைவாக இருப்பதாக! தூய கன்னி மரியா மற்றும்
அனைத்து புனிதர்களின் பரிந்துரைகளால், ஆமேன்.
பெதனி ஆசிரமம் வடசேரிக்கரை
9 6 1105, மார் இவானியோஸ்
......................................................................
மேற்குறிப்பிட்ட
அழைப்பிதழின்படி வடசேரிக்கரை
பெருநாட்டில் உள்ள பதனி ஆசிரமத்தின் விருந்தினர் அறையில் வைத்து 1105 கும்பம் மாதம் ஒன்பதாம் தேதி பகல்
3
மணிக்கு பெதனியின் பேராயர் மார் இவானியோஸ் அவர்களுடைய தலைமையில் கூடுகை
நடைபெற்றது. பெதனியின் ஆயர் தியோபிலோஸ் அவர்களும் மற்ற ஆசிரமத்தவர்களும்
மூலதனத்திற்காக அன்பளிப்பு வழங்கிய பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பத்திரிகை செய்தி வழியாகவும் நேரடியாகவும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.
கூடுகை துவங்கியதும் பேராயர் மார் இவானியோஸ் தலைமை உரை வழங்கினார்.
தலைமையுரை
அன்புக்குரியவர்களே,
செரம்பூர்
கல்லூரியில் பேராசிரியராக இருந்தபோது தான் பெதனி ஆசிரமம் நிறுவ வேண்டும் என
ஆலோசிக்கவும் தீர்மானிக்கவும் செய்யப்பட்டது. இது இறைவனின் திருவிருப்பத்தின்
படியாக நடைபெற்ற ஒரு செயல் என நான் நம்புகிறேன். எம் டி செமினாரியன் முதல்வராக
பணியை ராஜினாமா செய்து இவ்விடத்திலிருந்து செராம்பூருக்கு சென்றது இத்தகைய
எண்ணத்தோடு இல்லை. மலங்கரை திருச்சபையின் பன்முக ஒருங்கிணைந்த வளர்ச்சியை மற்றும்
அருள் பணியாளர்களின் கல்வி உயர்வை இலட்சியமாக்கியே ஆகும். இப்போது என்னோடு
அமர்ந்திருக்கும் மதிப்புக்குரிய சகோதர ஆயர் அன்று என்னோடு செராம்பூர்
வந்திருந்தார். அன்று கேரளாவிலிருந்து ஏராளமான மக்களை செராம்பூருக்கு வரவழைத்து
கற்க வைத்திருந்தேன். இன்று போல அன்றும் நானே அதற்கான வரவு செலவு கணக்குகளை
பாதுகாத்து வந்தேன். ஊதியமாக கிடைத்த பணத்தை குருத்துவப் பயிற்சியக மாணவர்களுக்காக
என்னோடு தங்கியிருந்த திருத்தொண்டர்களின் வளர்ச்சிக்காக ஒப்படைத்தேன். பெருமைக்காக
நான் கூறுவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். பல திருத்தொண்டர்களும் மேற்படிப்பு கற்று
பட்டம் வென்றபோது நான் மிகவும் மகிழ்டைந்தேன். அவர்களை எவ்வாறு பயன்படுத்த
முடியும் மற்றும் பயன்படுத்த வேண்டும் என நான் சிந்தனையில் ஆழ்ந்தேன். நம் ஊரில்
பல கல்வி நிலையங்களை துவங்கி வழிநடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.
நற்செய்திப் பணிக்காக அனைவரும் இணைந்து நற்செய்தி பணியாளராக வெளியேற வேண்டும் என்ற
எண்ணம் எனக்குத் தோன்றியது. பின்னர் அத்தகைய ஆலோசனைகளும் ஜெபங்களும் இவ்வுலகில்
உள்ள அனைத்தையும் விட்டு ஒழிந்து இறைவனையே செல்வமாகக் கருதுகின்ற துறவு சபைக்கு
எனது வாழ்வை இட்டுச் சென்றது.
இறைவனை
மகத்துவப்படுத்தவும் பிறருக்கு நன்மை செய்யவும் இதுவே ஒரு மேன்மையான மார்க்கம்
என்னும் எண்ணம் என் மனதில் உதித்தது. அதற்காகவே நான் குருத்துவ பயிற்சியக
மாணவர்களின் மனதில் இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் இப்பணிக்காக வர வேண்டும் என நான்
வழிகாட்டியாக இருக்க தீர்மானித்தேன். இவ்வாறு செராம்பூரிலிருந்து நாங்கள்
படைவீரர்களாக ஒருமித்து வாழ ஆரம்பித்தோம். எங்கே எவ்வாறு சென்று வாழ்வோம் என
நாங்கள் ஆலோசித்தோம். பஞ்சாப் மாநிலத்தில் ஓரிடத்தில் கூட்டாக சென்று தங்கி
வாழ்ந்து பிறருக்கு நற்செய்தி அறிவிப்புப் பணிகளைச் செய்தும் பிறரன்புப் பணிகளை
செய்தும் வாழலாம் என ஆலோசித்தோம். ஆனால் இக்கருத்தை திரு ஜான் வக்கீல் அவர்களிடம்
கடிதம் மூலமாக தெரிவித்திருந்தேன். அவர் பஞ்சாப் செல்ல வேண்டாம் என தனது கருத்தை
தெரிவித்திருந்தார். வெளிமாநிலங்களுக்கு செல்வதை விட நமது நாட்டிலேயே நமது ஊரிலேயே
ஏதேனும் தனிமையான இடத்தை கண்டுபிடித்து அங்கு உங்களுடைய வாழ்க்கை நிலையை வாழ்ந்து
காட்டுவதே நல்லது என்று அவர் கருத்துக் கூறினார். அதற்காக தனக்கு சொந்தமான
இடத்தையும் அவர் நமக்காக காட்டித் தந்தார். அப்படியே ஆகட்டும் என நானும் பதில்
மொழி வழங்கி பெருநாட்டில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தை வந்து பார்த்து அதனோடு
இணைந்த மற்ற பகுதிகளையும் வாங்கவும் தீர்மானித்தோம். இதற்காக பணம் சேகரிப்பதும்
சவாலாக அமைந்திருந்தது. வெளிநாட்டவர்களிடம் ஐரோப்பியர்களிடம் கேட்பது அந்த
அளவுக்கு நல்லதல்ல என எண்ணியிருந்தேன். இறுதியில் எனது தந்தையிடமிருந்து கடனாக
பணத்தைப் பெற்றுக் கொண்டு எனது விருப்பத்தை நிறைவேற்றினேன். தற்போது நீங்கள்
காண்கின்ற பெதனி ஆசிரமமும் அதனோடு சேர்ந்த கட்டிடங்களும் இருக்கின்ற இந்த பெதனிகிரி
மேற்குறிப்பிட்ட முறையில் நமக்கு கிடைத்ததாகும். அதன் பின்னர் உங்களைப் போன்ற
அன்பர்களிடமிருந்து பணமாகவும் இடமாகவும் மேலும் பல அன்பளிப்புகள் நமக்கு கிடைத்தன.
நான் செராம்பூருக்கு
சென்ற போது அப்துல்லா மறைமுதுவரின் வருகையால் பல்வேறு விதமான நீதிமன்ற வழக்கில்
மலங்கரை சபை அகப்பட்டு தயங்கியிருந்த நேரத்திலாகும் என நீங்கள் நினைவு கூர
வேண்டும். எவ்விடத்திலும் கலகங்களும் குழப்பங்களும் பிரச்சனைகளும் மட்டுமே
காணப்பட்டன. கடந்த பல தலைமுறைகளாக மலங்கரை சுறியானி சபை நீதிமன்ற வழக்குகளிலும்
பிரச்சினைகளிலும் மூழ்கியிருந்ததும் இந்நிலை மேம்பட எதிர்காலத்தில் எளிதாக அமையாது
எனவும் எனக்குத் தோன்றியது. எனவே சமுதாயம் சார்ந்த எந்தவிதமான நீதிமன்ற
வழக்குகளிலும் பிரச்சனைகளிலும் உள்படாதவாறு அவற்றின் பலன்களில் ஈடுபடாதவாறு ஒரு
ஆசிரமத்தை நிறுவ வேண்டும். அதற்கு பெதனி என்ற பெயரை வைக்க வேண்டும் என
செராம்பூரில் வைத்து 14 ஆண்டுகளுக்கு முன்னே நான் நிச்சயித்துக் கொண்டேன். இவ்வாறு
பெதனி தனித்துவ நிலையாக இருந்ததனால் பலர் என்னைப் பின்தொடர்ந்து ஆசிரமத்தவர்களாக
இணைந்து ஒருமித்து நின்றனர்.
பெருநாட்டு
மலைப்பகுதியில் உள்ள பல ஏக்கர் நிலத்தை வாங்குவதனால் மட்டும் பெதனி சபை
நிறுவுவதற்கு முடியாது. அங்குள்ள நிலத்தை சீரமைத்து தேவையான கட்டிடப் பணிகள் செய்ய
வேண்டியது அத்தியாவசியத் தேவையாக இருந்தது. அன்றாட உணவு உட்கொள்வதற்குத் தேவையான
பயிர்த்தொழில் செய்வதற்கும் பணம் தேவைப்பட்டது. எனது கையில் இருந்த பணம் போதுமானதாக
இல்லை. எனவே கல்கத்தாவில் உள்ள ஐரோப்பிய நண்பரிடமிருந்து குறைந்த வட்டிக்கு 7000 ரூபாயை கடனாக பெற்றுக்கொண்டேன்.
அப்போதே இதைக் குறித்து திரு ஜான் வக்கீல் அவர்களிடம் நான் அறிவித்திருந்தேன்.
திரு ஜான் வக்கீல் அவர்கள் வழங்கிய நூறு ஏக்கர் நிலத்தின் பத்திரத்தை பிணையாக
வைப்பதற்கு அவர் என்னோடு கூறியிருந்தார். இருப்பினும் ஒரு நபர் தானமாக தந்த
பத்திரத்தை பிணையாக வைப்பதை விட எனது தந்தையின் பணத்திலிருந்து வாங்கின இடத்தின்
பத்திரத்தை பிணையாக வைத்துக் கொண்டேன். அக்கடன் தொகை இன்றும் அவ்வாறே உள்ளது.
மீண்டும் பல கடன் சுமைகள் வந்து இணைந்தன. (கடனாக வழங்கிய ஐரோப்பிய நண்பரான திரு
ஹேமில்டன் என்பவரை யாக்கோபாய ஆசிரமத் தலைவரான மார் தேவோதோசியோஸ் இங்கிலாந்துக்கு
சென்று அவரை நேரடியாக சந்தித்து பேசியதன் வழியாக அக்கடனை அவர் தள்ளுபடி செய்ததாக
கூறப்படுகிறது.)
தேவையான
கட்டிடங்கள் உருவாக்கிய பின்னர் ஆசிரமத்தை நிறுவுவதற்கு நாங்கள் தயாரானோம்.
ஆசிரமத்தவர்களின் அன்றாட வாழ்வுக்காக பல மார்க்கங்களையும் கண்டடைய வேண்டிய சூழல்
ஏற்பட்டது. மட்டுமல்ல, அனாதை இல்லம் மருத்துவமனை வேளாண்மை முதலிய செலவினங்களால்
அவரது கையிலிருந்த தொகை முழுவதும் முடிவுற்றது. அப்போதுதான் நான் அன்பளிப்பு பண
வசூல் பெற்றுக் கொள்வதற்காக புறப்பட்டேன். பல இடங்களிலும் பயணம் மேற்கொண்டு ஜாதி
மத இனம் வேறுபாடு இல்லாமல் பல அன்பர்களிடமிருந்தும் அன்பளிப்பு பெற்று உருவாக்கிய இன்றைய
பெதனியின் வளர்ச்சி என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நான் உங்களிடமிருந்து
ஏதேனும் தொகையை பெற்றுக் கொண்டேன் என்றால் அது பெதனிக்காகவே என்பதை நீங்கள்
அறிவீர்கள். இவ்வாறு உருவாக்கப்பட்ட சொத்துக்களும் கட்டிடங்களும் நிறுவனங்களும்
எல்லாமே பெதனி ஆசிரமத்தவர்களுக்கு சொந்தமாகும் எனது குடும்பத்தினருக்கு இல்லை என்ற
முறையில் ஒரு விருப்ப ஓலையை எழுதி பதிவு செய்து வைத்துள்ளேன்.
அதன் பின்னர்
மட்டுமே பிறரிடமிருந்து பணம் அன்பளிப்பாக பெறுவதற்கு நான் புறப்பட்டேன். இத்தகைய
நிலையைப் பற்றி நான் இதுவரையிலும் யாரோடும் எடுத்துக் கூறவே இல்லை. பல இடங்களிலும்
சென்று அன்பளிப்புக்காக நான் ஓடி நடந்தேன். இறைவன் எனக்காக நல்கிய
நல்லியல்புகளுக்கும் நல்லவர்களாகிய உங்களுடைய தோழமை மூலம் கிடைத்த ஊக்கத்திற்கும்
நான் இப்போது நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
மலங்கரை சுறியானிக்காரர்கள்,
உரோமன் கத்தோலிக்கர்கள், ஆங்கிலேயர்கள், மார்த்தோமாக்கார்கள், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள்
என பலர் பெதனியின் மூலதனத்திற்காகவும் அன்றாடச் செலவுகளுக்காகவும் பல விதங்களில்
அன்பளிப்புகள் வழங்கி ஊக்குவித்தனர். இம்முறையில் நான் பெற்றுக் கொண்ட பணத்தொகை
எவ்வளவு எனவும் அவை எதற்காக செலவாக்கப்பட்டுள்ளன என்பதனையும் மீதி தொகை எவ்வளவு எனவும்
உங்களுடைய முன்னிலையில் வைக்கப்பட்டுள்ள கணக்கு புத்தகத்தில் பார்த்து அறிந்து
கொள்ளலாம். ஒவ்வொரு வருட வரவு செலவுகளை தனிப்பட்ட முறையில் கோர்த்திணக்கியவாறு பின்னர்
வாசிக்கலாம். கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட அன்பளிப்பு வசூல் சில
ஆண்டுகளாக அன்பளிப்புக்காக வழிநடக்கவில்லை என்பது நீங்கள் அறிந்ததே. எனினும்
இறைவன் பெதனியின் அன்றாட நிலைகளை எந்தவிதமான குறைகளும் இல்லாமல் வழிநடத்தி
வருகின்றார்.
பெதனி என்பது ஒரு
தனித்துவம் வாய்ந்த நிறுவனமாகும். இதன் வழிநடத்துதலுக்கு ஆரின் தேவை ஏற்பட்டபோது
என்னை ஆயராக அருள்பொழிவு செய்தனர். அன்று வட்டிப்பண வழக்கில் தோல்வியடைந்த
காலமாகும். மலங்கரை யாக்கோபாய திருச்சபையின் அமைப்பு சார்ந்த விடயங்களில்
ஆட்சியமைப்பு சார்ந்த விடயங்களில் உள்படாத விதத்தில் அந்தியோக்கிய தலைமையோ மற்றோ
அதனை ஏற்றுக் கொள்கின்ற போது சல்மோசோ உடன்படிக்கையை எழுதாமலும் மலங்கரை யாக்கோபாயா
சங்கத்தின் பொதுமக்களின் தேர்ந்தெடுப்பு வழியாக உள்ள திருச்சபை சட்டங்களுக்கு
கட்டுப்படாமலும் நாம் பெதனியின் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டேன். பின்னர்
தொடர்ந்து பெதனியின் பேராயராகவும் நியமிக்கப்பட்டேன். அப்போது பெதனி ஆசிரமத்தவரான
யாக்கோபு இரம்பான் பெதனியின் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார். இவை அனைத்தும்
இறைவனின் தனித்துவ திருவிருப்பத்தால் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.
பெதனியின்
மூலதனத்திற்காக 100 ரூபாய் அல்லது
அதற்கு மேற்பட்டத் தொகையை அன்பளிப்பாக வழங்கியுள்ள யாவரையும் இவ்விடத்தில் காண
முடிந்ததில் எனக்கும் ஆயருக்கும் ஆசிரமத்தவர்களுக்கும் மகிழ்ச்சி உண்டு.
பலரிடமிருந்தும் பணம் வசூல் செய்து பெதனியின் நிறுவனக் கருத்துக்காக மட்டுமே அன்றி
வேறெந்த நிறுவனத்திற்கும் தனியாகவோ ஆசிரமத்தவர்களோடு இணைந்தோ செலவு செய்யவில்லை எனவும்
அப்படியாயின் அது பெதனிக்காக அன்பளிப்பு வழங்கியவரை வஞ்சிப்பதாகும் எனவும் பல
விதங்களில் கருத்துக்கள் வெளியாவது நான் கேட்டு துயருற்றேன். இவ்விடயத்தைப் பற்றி
உண்மையாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும் என நான் முன்னரே தீர்மானித்துக்
கொண்டேன்.
நீங்கள் எனக்கு
வழங்கியுள்ள அன்பளிப்புகள் இதன் வழியாக சம்பாதித்துக் கொண்ட அனைத்து சொத்துக்கள்
உங்களுடைய விருப்பம்போல விநியோகிப்பதற்கு இப்போது இதோ உங்களுடைய முன்னிலையில்
வைக்கப்பட்டுள்ளது. பெதனிக்கு தேவையான விதத்தில் இந்த சொத்துக்களை பயன்படுத்த
உறுப்பினர்களை ஆட்சி அமைப்பினராக நியமிக்கவும் எண்ணுகிறேன். உங்களுடைய கருத்தையும் நான் ஏற்றுக் கொள்ள
வேண்டும் என நான் விரும்புகிறேன். இதனைப் பொறுத்தவரையில் உங்களுடைய கருத்து எதுவோ
அதற்கேற்ற முறையில் நிர்வாகத்தை முன்னோக்கி கொண்டு செல்லலாம் என நான் கருதுகிறேன்.
இந்த சொத்துக்கள் எனது பெயரில் சம்பாதிக்கப்பட்டவையாக இருந்தாலும் உங்களுடைய
விருப்பத்தின்படி யாருக்கேனும் ஒப்பந்தமாக பதிவு செய்து வழங்க வேண்டுமாயின்
அதற்கும் நான் தயாராக உள்ளேன். எந்த விதமான பத்திரத்தை தயாரிக்கலாம். கையொப்பமிடுவதற்கு
நான் தயாராக உள்ளேன்.
பண மசூல் செய்த
நிலையை நான் நிறுத்திய பின்னரும் பெதனியின் அன்றாடச் செலவு ஆறு மாத காலமாக
சுமுகமாக நடந்து செல்கிறது. பிடியரி அன்பளிப்பாலும் மற்றவிதமான காணிக்கைகளினாலும்
இத்தகைய செலவுகளை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இத்தகைய அன்பளிப்புகளால்
ஒரு சில குறைவுகள் ஏற்படும் போது ஆசிரமத்தவர்கள் ஓரிரு முறை உணவு உட்கொள்ளாமல்
இருந்த தருணங்களும் ஏற்பட்டதுண்டு. இருப்பினும் இவை எதுவும் ஆசிரமத்தவர்களின்
நல்மனதை பாதித்ததாக இல்லை.
பெதனி எத்தகைய
வாழ்க்கைக் குறிக்கோளை இலட்சியமாக கொண்டுள்ளதோ அதனில் இறுதி வரையிலும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாமல்
எந்த விதமான குறைவும் ஏற்படாமல் நிலைத்து நிற்க பெதனியின் சொத்துக்களைப்
பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உங்கள் யாவரையும் ஆலோசித்து செயல்பட வேண்டும் என
நான் இவ்விடத்தில் தனிப்பட்ட விதத்தில் சொல்ல வேண்டிய தேவையில்லை. உங்களுடைய சொந்த
புத்திக்கேற்ப உங்களுடைய கருத்துத் திட்டங்களை முன்மொழியலாம்.
தலைமை உரைக்குப்
பின்னர் அறிக்கையும் வரவுசெலவு கணக்குகளும் வாசித்த பின்னர் கீழ்க்குறிப்பிடும் கருத்துக்கள்
முன்மொழியப்பட்டு அனைவராலும் தீர்மானிக்கப்பட்டன.
1.
இறைவனை
ஒரே அடைக்கலமாக கொண்டு பெதனி மற்றும் அதனோடு இணைந்த நிறுவனங்களையும் உருவாக்கிய மார்
இவானியோஸ் அவர்களை இறைவன் ஆசீர்வதித்ததற்காக அனைவரும் இறைவனுக்கு நன்றி கூறினர்.
வாசிக்கப்பட்ட அறிக்கை மற்றும் வரவு செலவு கணக்குகளையும் இந்தக் கூட்டம்
அங்கீகரிக்கவும் செய்தது.
2.
தனித்துவ
நிறுவனமான பெதனியின் நிறுவனரும் தலைவரும் என்ற நிலையில் மார் இவானியோஸ் பேராயரை
அன்பளிப்பு வழங்கியவர்களின் கூட்டம் கூட்டப்பட்டதற்காக அனைவரும் நன்றியோடு நினைவு
கூர்ந்தனர்.
3.
பெதனியின்
“தர்ம நிதியின்” பாதுகாப்பிற்காக பொருளாளர்களையும் நிர்வாக அமைப்பு உருவாக்குவது
பற்றியும் கூறப்பட்ட கருத்து கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
4.
நிர்வாக
அமைப்புக்காக வடசேரிக்கரையைச் சார்ந்த ஐ எம் இடிக்குளா, நிரணத்தைச் சார்ந்த பிகே
கொச்சும்மன் மற்றும் திருவல்லாவைச் சார்ந்த புன்னூஸ் வர்கீஸ் ஆகிய மூவரையும்
பொருளாளராகவும் பெதனி ஆசிரமத்தவர்களாக 13 நபர்களை நிர்வாக குழு உறுப்பினர்களாகவும்
நியமிக்க வேண்டும் என பெதனியின் தலைவரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
மறு ஒன்றிப்பின் தேவை
பெதனியின் தனித்துவ
நிலை பற்றி மொழியப்பட்ட உரைக்குப் பின்னர் உலகளாவிய கிறிஸ்தவ திருச்சபை, கேரளாவில்
கிறிஸ்தவ திருச்சபை, யாக்கோபாய திருச்சபை, கத்தோலிக்க மறுஒன்றிப்பின் தேவை மற்றும்
கத்தோலிக்க மறுஒன்றிப்பிற்கான ஆலோசனைகள் போன்ற விடயங்களை ஒருங்கிணைத்து மேலும் ஒரு
உரையை நிகழ்த்தினார். மறுஒன்றிப்புக்காக தன்னைத் தூண்டிய காரணிகள் என்ன என்பதைப்
பற்றி ஒவ்வொன்றாக அவர் எடுத்துரைத்தார்.
இறுதியாக நான்
உங்களோடு கூற வேண்டியது மறுஒன்றிப்பைப் பற்றி இக்காலகட்டத்தில் என்னைத் தூண்டி
கொண்டிருக்கின்ற நிலையைப் பற்றி ஆகும். உலகின் ஒரே தலைவராகிய ஆண்டவர் இயேசு
கிறிஸ்து மனிதரின் மீட்புக்காக உலகில் ஒரே திருச்சபையை நிறுவினார். அது பல கால
சூழ்நிலைகளுக்கு உட்பட்டு மேன்மேலும் செழித்து தழைத்து வளர்ந்தது. 451 ஆம் ஆண்டில்
அனைத்து கிறிஸ்தவ ஆயர்கள் இணைந்து நடத்திய கால்செதோன் திருச்சங்கத்தில் வைத்து
கிறித்துவ திருச்சபையில் பிளவு ஏற்படக் காரணமானது. சிறுபான்மையினரான சிலருடைய
கருத்துக்களின் அடிப்படையில் இப்பரிவினை ஏற்பட்டது என அனைத்து வரலாற்று
ஆசிரியர்களும் இப்போதும் கூறுவர். தொடர்ந்து பல காலகட்டங்களில் திருச்சபை மீண்டும்
சின்னாபின்னமாக பிளவுற்றது. இவ்வாறு உருவான திருச்சபைக்குப் பெயர் தான் யாக்கோபாய
திருச்சபை. இத்தகைய சூழ்நிலை தான் கேரள கத்தோலிக்க திருச்சபைக்கும் ஏற்பட்டுள்ளது
என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவின்
சீடர்களுள் ஒருவரான திருத்தூதர் தோமாவின் திருப்பாதம் பதிந்தவாறு கேரளாவில்
கிறிஸ்தவ மதம் உருவானது. 17 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஒரே குடும்பத்தில்
கிறிஸ்தவர்களாக உறுப்பினர்கள் என்ற முறையில் ஒரே ஓர் இனமாக பலத்துடன் இருந்தனர்.
அப்படி வாழ்ந்த சூழலில் ஒரு காரணத்தைச் சுட்டிக்காட்டி ஒரு வதந்தியை அடிப்படையாகக்
கொண்டு ஒரே குடும்ப உறவிலிருந்து ஒரு சிலர் பிரிந்து சென்றனர். மதத்தின் பெயரால்
இத்தகைய பிரிவினை ஏற்படவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிரிந்து
சென்றவர்கள் புதிய கூற்றினர் என்றும் பழைய கூற்றினர் என்றும் அழைக்கப்படலாயினர்.
பழைய கூற்றினரின் தலைவராக திருத்தந்தையே உள்ளார். நிரந்தரமான ஒரு தலைவர் இல்லாத
சூழலில் புதிய கூற்றினர் மிகவும் வருந்தினர். இவ்வாறு கோரிக்கைகளுக்கு இணங்கி
யாக்கோபாயா திருச்சபைத் தலைவரான மறைமுதுவர் வருகை புரிந்து கேரளாவில் யாக்கோபாயா
திருச்சபையை உருவாக்கினார்.
கேரளாவில் புதிய
கூற்றினரின் வரலாற்றை பரிசோதிக்கின்ற போது பல்வேறு விதமான சித்திரவதைகளும்
போராட்டங்களும் கேரளா திருச்சபை வரலாற்றில் பரிணமித்து வளர்ந்தன. துவக்கத்தில் ஒரு சிலர்
பிரிந்து தொழியூர் சபை அல்லது அஞ்ஞூர் சபை என ஒரு குழுவினர் உருவாயினர். பின்னர்
சிலர் ஆங்கிலேய திருச்சபையின் உறுப்பினர்களாயினர். தொடர்ந்து ஒரு குழுவினர் மார்த்தோமா
திருச்சபையினர் என்ற பெயரால் பிரிந்து சென்றனர். ஏறக்குறைய 50 ஆண்டுகளாக ஏற்பட்ட
பிரிவினைகளால் தான் தற்போதைய யாக்கோபாயா திருச்சபை கேரளாவில் இருந்து வருகிறது. மீண்டும்
ஆயர் குழுவினர் மற்றும் பாவா குழுவினர் எனவும் இரு குழுவினர் உருவாகி மிகப்பெரிய
போர்க்களமாக கேரள திருஅவையை மாறியுள்ளது.
ஆயர் குழுவினரை
சார்ந்திருந்த நாம் துவக்கத்தில் அதன் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும்
தேவைக்கேற்ப செயல்பட்டு சமுதாய முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வந்தேன். மீண்டும் கலகங்களும்
பிரச்சனைகளும் வலுப்பெறவே இவ்வூரை விட்டு செரம்பூரை நோக்கிப் புறப்பட்டேன். அங்கே
வைத்து யாக்கோபாயா திருச்சபையோடு தொடர்பில்லாத விதத்தில் துறவு சபையான பெதனியை
நிறுவுவதற்கு திட்டங்கள் பல மேற்கொண்டேன் என நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
குறிப்பிட்ட இடத்தை
சென்றடைய கற்களும் முட்களும் நிறைந்த பாதை வழியாக செல்லாமல் சீராக அமைக்கப்பட்ட
பாதை வழியான பயணத்தை விரும்பக்கூடிய விதத்தில் உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையே
சீரான பாதை எனவும் அதனோடு ஒன்றிப்படைய வேண்டும் எனவும் ஆலோசனைகளும் முயற்சிகளும்
மேற்கொண்டேன் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். கிறிஸ்து நமக்கு காண்பித்து தந்த
வாழ்க்கைக் குறிக்கோளை அடைய வேண்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது. அதற்காக
எதிராக அமைந்திருந்த யாவற்றையும் விலக்கி முன்னேறிச் சென்றேன். பல்வேறு விதமான பல
நபர்களின் தனிநபர்ச் சார்ந்த கருத்துக்களுக்கும் வெறுப்புகளுக்கும் உட்பட்டதாக
கிறிஸ்தவம் மாறி விட்டது. கிறிஸ்தவர்களாகிய ஒவ்வொருவரும் இதனை கண்டு உணர்ந்து
புரிந்து வாழ்ந்து வந்தனர். கிறிஸ்தவ மதத்தில் பிரிவினைகளும் குழுக்களும்
தேவையானதா என எண்ணத் துவங்கினர். பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் வழியாக ஒரே
கிறிஸ்து திருச்சபையிலிருந்து சிதறிய பல குழுமங்களை நம்மால் காண முடியும்.
கிறிஸ்துவின் உடலை
அகில உலக திருச்சபை என்பது நாம் அறிந்த உண்மையே. தாய்த் திருச்சபையிலிருந்து வெட்டப்படுகின்ற
எந்தவொரு கிளையும் உயிருடன் அமைவதில்லை. இந்த அடிப்படை தத்துவம் கிறிஸ்தவ
திருச்சபையைப் போன்று வேறு எங்கும் காணப்படவில்லை. பெயருக்காகவோ புகழுக்காகவோ
அறிவின்மை காரணமாகவோ அகில உலக திருச்சபையிலிருந்து மற்ற கிறிஸ்தவர்கள் விலகி
நிற்கின்றார்கள் எனவே நாம் அறிகின்றோம். இந்த விடயத்தில் கிறிஸ்தவ திருச்சபையின்
மற்று தலத்தையும் நாம் கணக்கிட வேண்டும். அதன் பலனாகவே மறுஒன்றிப்பைப் பற்றி நான்
ஆலோசிக்கத் துவங்கினேன். யாக்கோபாயத் திருச்சபையில் பிறந்து வளர்ந்தவர்களானாலும்
என்னைப் போன்று பலரும் இதே கருத்துச்செறிவோடு உள்ளனர் என்பதும் உண்மையே. காலமான இரண்டாவது
உயர் பேராயர் இக்கருத்துக்கு மிகவும் உறுதுணையாக ஆவலோடு காத்திருந்தார் என்பதும்
எனக்குத் தெரியும். தற்போதைய உயர்பேராயரும் அமைதி ஏற்படுவதற்கு இதுவே ஒரு வழி என
கருதுபவராக உள்ளார். நாங்கள் மூவரும் ஒன்றாக இணைந்து ஆலோசித்ததன் படியாக கடிதப்
போக்குவரத்துகளை கத்தோலிக்க திருச்சபையோடு இணைவதற்காக மேற்கொண்டேன்.
ஒன்றிணையும்
இம்முயற்சிகளுக்கு மலங்கரையின் பேராயரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற ஒரு
எண்ணத்தோடு இந்த முயற்சிகளுக்கு நாங்கள் புறப்பட்டோம். திருத்தந்தையின் முதன்மை
அதிகாரத்தை சம்மதிக்கவும் அகில உலக திருச்சபைக்கு உட்பட்ட தனித் திருச்சபையாக
நிலைநிற்கவும், நாம் கடைபிடிக்கும் திருவழிபாட்டை தொடர்ந்திடவும் அனுமதி பெற
விரும்பி எதிர்பார்க்கவும் செய்து வந்தோம். டிதப் போக்குவரத்துக்களை நானே எழுதி
வந்தாலும் ஒரு பிரதிநிதித்துவ முறையில் தான் அவற்றை எழுதி வந்தேன். பிரதிநிதித்துவ
முறையில் மூவருமாக இணைந்து நடத்திய ஆலோசனைகள் பலனாகவே பதில் கடிதங்களில்
எழுதப்பட்டுள்ளவை ஆதாரங்களாக காணப்படுகின்றன.
இதற்கு முன்னர் பல
யாக்கோபாயா திருச்சபையின் பல ஆயர்களும் மறுஒன்றிப்பு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்
என்பதும் உண்மையே. அவர்களுடைய பெயர்களை இங்கே குறிப்பிடுவதும் நினைவு கூரத்தக்கதே.
1909ல் காலமான புலிக்கோட்டு மார் யோசேப்பு திவன்னாசியோஸ், 30 ஆண்டுகளுக்கு முன்னர்
மலங்கரையின் பேராயராக இருந்த சேப்பாட்டு மார் திவன்னாசியோஸ், 1770 இல் மகானாகிய மார்
திவன்னாசியோஸ் என்னும் பெயரால் அழைக்கப்பட்ட ஆறாம் மார் தோமா மற்றும் அவரது
முன்னவரான ஐந்தாம் மார் தோமா மருத்துவமா என பலரும் ஒன்றிப்பு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
அவர்கள் மேற்கொண்ட பரிசுத்தமான முயற்சிகளின் தொடர்ச்சியாகவே எங்களுடைய ஆலோசனைகளும்
முயற்சிகளும் தொடர்கின்றன என நாங்கள் நம்புகிறோம்.
யாக்கோபாய
திருச்சபையும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை
நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். இரு திருச்சபைகளின் குருத்துவத் தலைமை
அதிகாரிகளின் உண்மை நிலையை அங்கீகரிக்கிறார்கள் எனவும் தங்களது மத வழிபாடுகளுக்கு
வேற்றுமை உண்டு எனவும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஐந்தாம் நூற்றாண்டில் யாக்கோபாயாக்காரர்கள்
திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற போது அவர்கள் தப்பறைகளை பறைசாற்றுபவர்களாக
இருந்தார்கள். அவ்வாறு கத்தோலிக்க ஒன்றிப்பிலிருந்து விலக வேண்டிய சூழல்
ஏற்பட்டது. ஆனால் தற்போது இச்சூழல் மாற்றமடைந்து யாகோபாயக்காரர்களும் ஆர்தோடோக்சுகாரர்களும்
கிரேக்கர்களும் அர்மேனியக்காரர்களும் ஒன்றாக கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்து ஒரே
தலைவரை ஏற்றுக் கொள்ளவும் ஒரே ஆட்டின் கூட்டமாகவும் அதன் ஒரே ஆயராகவும் என்ற இறை
வார்த்தைக்கு ஏற்ற முறையில் கிறிஸ்தவ உலகம் உருவாக வேண்டும் என விரும்பவும்
செய்கின்றோம். அது நிறைவேறவும் வேண்டும். எனவே சிரியா நாட்டு பெய்ரூட்டில்
வாழ்கின்ற மோறான் மோர் இக்னாத்தியோஸ் ரஹ்மானி மறைமுதுவரோடு நாங்கள் கடிதப்
போக்குவரத்துகள் நடத்தினோம். அவர் அந்தியோக்கியாவின் கத்தோலிக்க திருச்சபையின்
மறைமுதுவராக உள்ளார்.
மறுஒன்றிப்பைப்
பற்றிய ஒரு சில காரியங்களைக் கூட யாக்கோபாயர்களாகிய நீங்கள் மற்றும் நண்பர்கள்
அறிந்திருப்பது நன்று. யாக்கோபாயாகாரர்களின் திருச்சட்ட நூலில் கீழ்
குறிப்பிடக்கூடிய ஒரு வார்த்தை உண்டு. “உலகின் நான்கு பகுதிகளில் நான்கு
மறைமுதுவர்கள் அமைய வேண்டும். அவர்கள் அனைவருக்கும் தலைவரும் வழிகாட்டியுமாக உரோமையின்
மறைமுதுவர் அமைந்திருக்க வேண்டும். அலெக்சாண்ட்ரியாவின் மறைமுதுவவரும் குஷ்தந்தினோபோலீசின்
மறைமுதுவவரும் உரோமையின் மறைமுதுவரை அதாவது திருத்தந்தையை தங்களுடைய தலைவராக
அங்கீகரிக்கவும் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. யாக்கோபாயாகாரர்களின் ஜெபங்களை
ஆய்வு செய்தபோது உரோமையின் மறைமுதுவரான திருத்தந்தை திருத்தூதர் பேதுருவின்
வழிமரபினரே எனவும் அவர் உரோமாவல் வைத்து இறந்து மறைசாட்சியானார் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றும் பூமியின்
நான்கு பகுதிகளில் உள்ள இறைவனின் திருச்சபையை திருஆட்சி புரியும் அனைத்து
ஆயர்களுக்காகவும் யாக்கோபாய திருச்சபையில் திருப்பலியின் மத்தியில்
சொல்லப்படுகின்ற ஜெபத்தை குறிப்பிடுவதன் படி நான்கு மறைமுகர்களுக்கும் இடையே உள்ள
ஒன்றிப்பையும் இணைப்பையும் இது வெளிப்படுத்துகிறது.
மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து
உயர்பேராயரும் பெதனியின் பேராயரான நானும் கத்தோலிக்க மறுஒன்றிப்பு தொடர்பாக
ஆலோசிக்கவும் செயல்படவும் செய்தது யாக்கோபாயாகாரர்களின் எண்ணத்தில் உருவானது குற்றகரமானதாக
இருப்பதில்லை.
உரைக்குப் பின்னர்
ஜெபமும் ஆசீர்வாதமும் நடத்தப்பட்டதோடு கூட்டம் இனிதே முடிவுற்றது.
அதிகாரம் 27
வழிமுறைகள் சமர்ப்பணமும் தடையாணையும்
. மலங்கரையில் மட்டுமல்ல
இந்திய கிறிஸ்தவ திருச்சபையின் வருங்கால மறுமலர்ச்சியை இலட்சியமாக்கி பல்வேறு
பணிகளுக்கு வழிகாட்டியாக மார் இவானியோஸ் செயல்பட்டு வந்தார். அதற்காக நமது
கதாநாயகன் நிர்வகித்த பலவிதமான சேவைகள், எழுதிய பல கடிதங்கள் மற்றும் அவர்
நிகழ்த்திய உரைகள் போன்றவை இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.
பெதனியின் தனித்துவ நிலையை பரிந்துரைத்தவாறு
பெதனி ஆசிரமத்தவர்களின் ஆண் பெண் துறவறத்தார்கள் யாக்கோபாய திருச்சபையின்
உள்ளார்ந்த மற்றும் வெளிப்படையான வளர்ச்சியை அடைவதற்கு எதிர்பார்ப்புடன் இருந்தவர்
தான் நமது கதாநாயகன். ஆனால் தனது எதிர்பார்ப்பு தனது யாக்கோபாய திருச்சபையில்
பல்வேறு விதமான கலகங்களும் குழப்பங்களும் உருவாவதற்கும் கூடுவதற்கும் தனது
அனுபவத்திலிருந்து அவர் உணர்ந்து கொண்டார். இதனைப் பற்றி கிரிதீபத்தில் உள்ள பகுதி
சேர்க்கப்படுகிறது:
பெதனி ஆசிரமம் தொடர்பாக ஆலோசனைகளும் துவக்க
முயற்சிகளும் நடந்த காலத்தில் தான் திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வட்டிப்பண
வழக்கு ஆரம்பமாகிறது. திருச்சபை சட்டங்களுக்கு ஏற்ப வழக்கின் எதிர்க்கட்சியில்
நான் சாட்சியாக இருந்ததனால் பிரச்சனை பற்றி வரலாற்று மற்றும் சட்ட நூல்கள் பலவற்றை
வாசித்து பல கருத்துக்களை அறிந்து கொண்டேன். செராம்பூர் கல்லூரியில் பணியாற்றிய
துவக்கக் காலத்தில் இதுதான் எனது முக்கிய பணிகளுள் ஒன்றாக இருந்தது. இந்த சூழலில்
வழக்குகளுக்காக நீதிமன்றத்திற்குச் சென்றபோதும் செராம்பூரில் தங்கியிருந்த போதும்
மரங்கரை திருச்சபையின் எதிர்காலத்தைப்
பற்றிய ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டிய எண்ணம் உருவானது. மலங்கரை திருச்சபையின்
பிரிவினைகளைப் பற்றியே எண்ணியிருக்கக் கூடிய சூழலில் மிகுந்த வேதனைகளோடு நான்
கலக்கமடைந்தேன். கடல் அலை ஒன்றன்பின் ஒன்றாக வருவதைப் போன்று பல்வேறு விதமான
குழப்பங்களும் போராட்டங்களும் போர்களும் திருச்சபையில் அரங்கேறியதை நான்
கண்டுகொண்டேன். திருச்சபையின் சட்டங்கள் மூலம் வெறுக்கப்பட்டுள்ள நிலையை உணர்ந்து
கொண்டேன்.
துவக்கக் காலத்திலேயே கிறிஸ்துவ மதம்
இந்தியாவில் உருவாக்கப்பட்டதன் இறை
சார்ந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கும் மலங்கரை சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு
ஏற்புடைய ஐஸ்வர்யம் உருவாக்குவதும் எளிதாகுமா? என ஐயம் கொண்டேன். மலங்கரை
திருச்சபையின் வருந்தத் தக்க நிலையைக் கண்டு கலங்கினேன். அலைகள் இல்லாத போது
கடலில் நீந்தலாம் என்பது இயலாததைப் போன்று குழப்பங்கள் நீங்கிய பின் அமைதி
உருவாக்குவதற்கு இயலாது எனவும் எனக்குள் எண்ணம் தோன்றியது. சமுதாய
உறுப்பினர்களிடையே ஒருவருக்கு கேடு விளைவிக்கும் சூழல் ஏற்பட்டால் அது ஆலயத்திற்கு
கேடு. அப்படியாயின் அது சமுதாயத்திற்கும்
கேடு. இப்போது சமுதாயத்திற்கு தேவையானது உண்மையான இறை பக்தியும் கிறிஸ்தவம்
சார்ந்த தூய்மையான வாழ்வும் ஆகும். (கிரிதீபம் பக். 70, 71)
வழிமுறைகள் சமர்ப்பணம்
பெதனியின் தனித்துவ நிலையை கைவிடுவதற்கு
சாத்தியமில்லை என கதாநாயகன் ஆத்தடோக்ஸ் திருச்சபையின் தலைவரான உயர் பேராயரையும் மலங்கரையின்
பேராயரையும் கடிதங்கள் வழியாக பலமுறை அறிவித்திருந்தார். இறுதியாக இதற்கான மூன்று
மார்க்கங்களை அவர் முன் வைத்தார். அவற்றை எழுத்து மூலமாக திருச்சபையின்
அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதற்காக ஜான் வக்கீல் அவர்களிடம் திருவனந்தபுரத்தில்
வைத்து ஒப்படைக்கவும் செய்தார். அப்போது அருள்தந்தை காலேக்காட்டில், அருள்தந்தை புதுக்குழியில்,
அருள்தந்தை சிறக்காட்டு மற்றும் மி.ஜெ பிலிப் போஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றிய கீழே குறிப்பிடுகின்ற காரியங்கள் மிகவும்
தேவையானவை ஆகும்.
1
மறைமுதுவரோடு இணைந்து செல்வதற்கு கீழ்க்குறிப்பிடும்
வழிமுறைகள் முன்வைக்கப்பட்டன.
1.
பேராயரின் தடையானை
நீக்கப்பட்டதை வாசிக்க வேண்டும்
2.
பரிபூரண அதிகாரம் கொண்ட
இந்தியாவுக்கான உயர் பேராயரை பெற்றுக்கொள்ள வேண்டும்
3.
மலங்கறையில் மறை முதுவரின் பிரதிநிதி
ஒருவர் தேவையில்லை.
4.
உண்மையான திருச்சபை சட்டங்களாக
நிறுவப்பட வேண்டும்.
இதுவரை உள்ள நிலைகளால் மலங்கரை
திருச்சபையின் எதிர்காலத்திற்கான எதுவும் முன்னால் ஏற்படவில்லை. இவை முழுவதுமாக
கிடைப்பதற்கு முன்னர் பெதனியின் சுதந்திர நிலையை விட்டு விட முடியாது.
2
மறைமுதுவரிடமிருந்து பிரிந்து செல்வதற்கு
கீழ்க்குறிப்பிடுபவை தேவையாகும். பேராயர் மற்றும் உயர் பேராயருக்கு கீழ்க்
குறிப்பிடக்கூடியவற்றுள் ஏதேனும் விதத்தில் வருத்தம் ஏற்படுவதாக இருந்தால் இதை
குறிப்பிடுவதற்கு நான் சற்று தயங்குகிறேன். எனினும் சமுதாயத்தின் பொது நன்மையை
குறிக்கோளாகக் கொண்டு இதனை நான் கூற விழைகிறேன்.
1.
அனைத்து வழக்குகளும் முடிவுக்கு
கொண்டு வரவேண்டும்.
2.
யாக்கோபாயா குழுமத்தில் உள்ள
அனைத்தையும் விட்டு வெளியேற வேண்டும்.
3.
யாக்கோபாயா மறைமுதுவரோடு ஒரு
நாளும் தொடர்பு கொள்ள மாட்டோம் என உயர் பேராயரும் அனைத்து ஆயர்களும் சம்மதிக்க
வேண்டும். இது நிறைவேறும் வரை பெதனியின் தனித்துவ நிலையை கைவிட முடியாது.
3
சமுதாயத்தின் நன்மைக்குத் தேவையான ஏதேனும்
ஒரு இயக்கத்தை பேராயரின் காலத்தில் உருவாக்க வேண்டும். அவரது ஒத்துழைப்பு அதற்காக
அத்தியாவசியமானதாகும். தற்போதைய குழப்பமான நிலை தொடர்வதாக இருந்தால்
மேற்குறிப்பிட்ட திட்டங்கள் நிறைவேற முடியாமல் சமுதாயம் அழிவுறும். ஒரு போதும்
வளர்ச்சியும் நன்மையும் ஏற்படுவதில்லை.
தடையாணை
மி ஜே ஜோன் வழியாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த
வழிமுறைகள் அதற்கு அடுத்த நாளே ஆர்த்தடோக்ஸ் திருச்சபை மேலதிகாரிகளிடம்
ஒப்படைத்தார். இரண்டு நாட்களுக்கு பின்னர் குண்டறா என்னுமிடத்தில் வைத்து ஆர்த்தோடோக்ஸ்
ஆயர் மாமன்றம் கூடவும் அவர்களுடைய தீர்மானத்தின் படி பெதனிக்கு சொந்தமான ஆலயங்கள்
தொடர்ந்து உருவாக்கிடக் கூடாது என தடையாணையை ஆசிரமத் தலைவரான நமது கதாநாயகனுக்கு
அனுப்பி வைத்தனர். அத்தடை யானையின் படிவம் கீழ் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
நமது சகோதரர்களாகிய பெதனியின் கீவர்கிஸ் மார்
இவானியோஸ பேராயருக்கும் பெதனியின் யாக்கோபு மார் தியோஃபிலோஸ் ஆயருக்கும்
பெதனிக்குச் சொந்தமான புதிய ஆலயங்கள் பல
பகுதிகளிலும் உருவாக்குவதன் வழியாக இறைமக்களிடையே குறிப்பாக அருள்பணியாளர்களிடையே
கடினமான கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதைப்
பற்றி நாங்கள் ஆய்வு மேற்கொண்ட போது பங்குகளை பிரித்து புதிய பெதனி ஆலயங்கள்
உருவாக்குவது நாம் அனைவரும் இணைந்து ஆலோசித்து தீர்மானித்ததன் படி மட்டுமே
செயல்படுத்த வேண்டும் என எண்ணுகிறோம். அத்தகைய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும்
வரையிலும் புதிய பெதனி ஆலயங்கள் நிறுவுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என
கேட்டுக்கொள்கிறோம். ஆன்மீகம் சார்ந்த செயல்களை தற்போது உள்ள பங்கு தளங்கள் வழியாக
நீங்களும் செயல்படுத்தலாம் அல்லவா. இதற்கு விபரீதமாக நீங்கள் செயல்படுகின்ற போது
பங்கு மக்களிடம் இதைப் பற்றிய அறிவிப்பு வழங்குவதற்கு நாங்கள்
கட்டாயப்படுத்தப்படுவோம்.
1930 கொல்லம் 1105 கும்பம் மாதம் 18ஆம் தேதி
குண்டறா ஆயரகத்திலிருந்து
கிழக்கின் உயர் பேராயர் மோறான் மோர்
பசேலியோஸ்
மலங்கரையின் பேராயர் மார் திவன்னாசியோஸ்
கோட்டயம் ஆயர் மார் கிரிகோரியோஸ்
............................................................
குழல் கண்ணாடியின் பதிவு
அருள்திரு புலிக்கோட்டு ஜோசப் இரம்பான்
மற்றும் சேப்பாட்டு பிலிப்போஸ் ஆகியோர் எழுதிய மலங்கரை சபையின் குழல் கண்ணாடியில்
மேற்குறிப்பிட்ட தடையாணையைப் பற்றி நகைப்புடன் எழுதப்பட்டப் பகுதி சேர்த்துக்
கொள்ளப்படுகிறது.
குண்டறையில் வைத்து குறிப்பிடப்பட்ட ஒரு
வெள்ளிக்கிழமையில் ஆயர் மாமன்றம் நடத்தப்பட்டது. உயர் பேராயர் அவ்விடத்தில் வந்து
தங்கியிருந்தார். முகூர்த்த நேரத்தில் திருவனந்தபுரத்திலிருந்து ஜான் வக்கீல்
மற்றும் ஜே பிலிப்போஸ் வக்கீல் ஆகியோரும் ஒரு சில சமுதாயப்பிரமாணிகளும்
வந்தடைந்தனர். பெதனையின் பேராயர் ஜான் வக்கீல் அவர்களிடம் ஒப்படைத்த கோரிக்கையைப்
பற்றி ஏதேனும் ஆலோசனைகளும் தீர்மானங்களும் நடைபெற்றதா என இதுவரையும் யாரும்
அறிந்து கொள்ள முடியவில்லை. பெதனியின் ஆயருக்கு எதிராக உள்ள தடையாணையை
சரிப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் மட்டுமே நடைபெற்றது என எங்கள் நாங்கள்
அறிந்துள்ளோம். தடையாணை உருவாக்கப்பட்ட உடனடியாக ஆயர் மாமன்றமும் முடிவுற்றது.
இரகசிய கடிதம் என எழுதப்பட்டு பெதனியின்
ஆயருக்கு அனுப்புவதற்கு முன்னரே அவரது கையில் பெற்றுக் கொள்வதற்கு முன்னதாகவே
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் திருவல்லா மற்றும் நிரணம் போன்ற இடங்களில்
வெளிப்படையாக்கப்பட்டன. உடனடியாக அவ்விவரங்களை பழைய செமினாரியிலிருந்து
வெளியிடப்படுகின்ற மாத இதழில் வெளிப்படுத்தப்படவும் செய்யப்பட்டது. பெதனி ஆலயங்கள்
வழியாக மக்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதனால் மேலும் ஆலோசனைகளுக்கு உட்பட்டு
தீர்மானங்கள் அறிவிப்பது வரை பெதனி ஆலயங்கள் நிறுவுவதை நிறுத்த வேண்டும் என
மட்டுமே அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலங்கார வடிவில் உருவாக்கப்பட்ட
இக்கடிதத்தின் உள்ளார்ந்தக் கருத்துக்களை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்.
ஆலயத்தை நிறுவுதல் மற்றும் அருள்பொழிவு வழங்குதல்
இவை இரண்டும் ஆயர்களுக்குரிய தனிப்பட்ட அதிகாரங்களும் உரிமைகளும் ஆகும். அடுத்த அறிவிப்பு வரை திருப்பலி ஒப்புக்
கொடுத்தல் ஆகாது என குருவானவருவோடு கூறுவதும் ஆலயங்கள் நிறுவ வேண்டாம் என ஆயரோடு
கூறுவதும் ஒரே அர்த்தத்தை குறிக்கின்றன என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆலோசித்து தீர்மானிப்பது வரை என்ற சொல்லை விடவும் கூடுதலான ஒரு பதத்தை ஒருபோதும்
பயன்படுத்துவதற்கு முடியாது.
பெதனியின் செயல்பாடுகளால் அமைதியின்மை
ஏற்படுகிறது என குற்றம் சுமத்தப்பட்டது எந்த அளவுக்கு நியாயமானது என நாம் உணர்ந்து
கொள்ள வேண்டும். உண்மையாகவே பெதனி ஆலயங்களால் மலங்கரையில் அமைதியின்மை உருவானதா? இந்தக்
கருத்து ஒரு புதிய கருத்தாகவே ஆயர் மார் இவானியோசுக்கு தென்பட்டது. இஃது கடந்த சில
மாதங்கள் வரை உருவாகாத அமைதியின்மை வருங்காலத்தில் ஒருவேளை உருவாகலாம் என
அனுமானித்துக் கொண்ட சிந்தனையே ஆகும். தற்போது எந்த விதமான அமைதியின்மையும் பெதனியால்
ஏற்படவில்லை. அமைதியின்மை ஏற்படலாம் என முன்னரே தீர்மானித்து அதனை தடை செய்ததாக
இருக்குமோ? இல்லையெனில் என்ன காரணம்? உரோமாவுக்கு செல்வாரா இல்லையா என்ற
கேள்விக்கு ஒரு பதிலை தெளிவு படுத்தாத அவர்களுடைய மனதில் உருவாக்கப்பட்டுள்ள
அமைதியன்மையை பெதனியின் மீது சுமத்தப்பட்டதாக அனுமானிக்கலாமா?
அவர்களது மனதில் ஏற்பட்ட ஆதங்கமே இதன் உண்மைக்
காரணம் எனில் கடந்த 86ல் நடைபெற்ற நிகழ்வு இவ்வாணையோடு நினைவு படுத்துகிறது. மறைமுதுவர் நமது
பேராயரையை தடை செய்தார் அல்லவா. தடையாணை வழங்குவதற்கு முன்னர் மறைமுதுவர் எந்த ஒரு
அமைதிப் பேச்சுவார்த்தையும் பேராயரோடு நடத்தவில்லை. எனவே இந்த தடையாணை சரியானது
அல்ல என தீர்ப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு பெதனி ஆலயங்கள் நிறுவுதல் ஆகாது என
கூறப்பட்டது நீதியை மறுத்த செயல என வியந்து கொள்ள வேண்டிய சூழல். பெதனியின்
ஆயர்களோடு பேராயர் அல்லது உயர் பேராயரோ இதைப் பற்றி எந்த விதமான அமைதி பேச்சு
வார்த்தைக்கு அழைக்கவும் அமைதியின்மை பற்றி எந்த விதமான அறிவிப்பும் வழங்கவும்
இல்லை என்பது உண்மை. அப்துல்லா மறைமுதுவரின் ஆணையூப் போல ஆலயங்கள் நிறுவுதல் ஆகாது
என்பதன் உண்மைக் காரணம் என்ன என்பது பற்றி இங்கே குறிப்பிடப்படவில்லை.
பெதனி நிறுவனம் உண்மையாகவே தனித்துவ நிலை
சார்ந்தது என்பதன் பொருட்டு அந்த நிறுவனம் ஆலயங்கள் நிறுவுவதை ஒருபோதும் தடை செய்ய
முடியாது. எடுத்துக்காட்டாக அஞ்ஞூர் அல்லது தொழியூர் சபையினரை நாம் பார்க்கலாம்.
அவர்களும் மார்த்தோமா திருச்சபையோடு மிகுந்த ஒன்றிப்பில் இருந்தனர். அஞ்ஞூர்காரர்கள்
ஆலயம் நிறுவுதலாகாது என மார்த்தோமா திருச்சபையினர் எச்சரித்தது நியாயமானதா? இஃது
அஞ்ஞூர்காரர்களின் அஞ்ஞூர்காரர்களின்
சுதந்திர உணர்வால் நிகழ்ந்ததது என எண்ணுதல் வேண்டும்.
பெதனியின் சுதந்திர நிலையை குறிப்பிட்டு
இரண்டில் ஏதேனும் ஒரு பலனை உடனடியாக காண வேண்டும் என இவ்வாணைக்கு குறிக்கோளாகக்
கொண்டுள்ளது என அனுமானிக்கலாம். இனிமேலாக ஆலயங்கள் நிறுவுவதில்லை என பதில்
நல்கினால் அந்த பதில், அவை அந்தியோக்கியத் திருச்சபைக்கு சென்றடையும் என்பதல்லவா
அதனுடைய பலன். ஆலயங்கள் நிறுவுவோம் எனக் கூறினாலோ உயர் பேராயர் மற்றும் பேராயரின்
வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் தன்னந்தனியாக செயல்படுகிறார்கள் என இறைமக்கள் பெதனிக்காரர்களை
குற்றம் சுமத்துவார்கள்.
மேற்குறிப்பிட்ட தடையாணையைத் தயாரிப்பதற்கு
முன்னரும் பின்னரும் பெதனியின் ஆயர்களின் பணிகளின் மீது குற்றங்கள் என்னும் அம்பை
செலுத்துவதாக உயர் பேராயர் பல்வேறு முறைகளில் செயல்பட்டதாக அறிந்துள்ளோம். அதனால்
மட்டும் இத்தகைய ஒரு சூழல் உருவாகுவதற்கு வாய்ப்பில்லை. ஏதேனும் கஷ்டகாலமா இல்லை?
இறைவனின் சாபமா? தெரியாது! மலங்களை திருச்சபையை பல விதங்களில் உயர்த்துவதற்கு
முயற்சிகள் மேற்கொண்ட செயல்களுக்கு பிரதிபலனா? இல்லை, தண்டனையா? என்பதை மட்டுமே
அறிந்து கொள்ள முடிகிறது.
மலங்கரை திருச்சபையை வளர்த்துவதற்காக ஒப்பந்தம்
செய்ய முடியாது எனக்கூறிய பேராயருக்கு அப்துல்லா மறைமுதுவரிடமிருந்து கிடைத்த
பிரதிபலன் என்ன? அப்படிப்பட்ட பிரதிபலன் தான் இன்று பெதனி ஆயர்களுக்கு
வழங்கப்படுகிறதா? பேராயரை அந்தியோக்கியாவின் கொடூர நுகங்களோடு கட்டுவதற்கு
அப்துல்லா மறைமுதுவர் ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்தினார். மலங்கரை சபையை அந்தியோக்கிய
திருச்சபையிலிருந்து கழற்றி மாற்றிட முயற்சித்த பேராயருக்கு இப்போது என்ன
நிகழ்ந்தது? அந்தியோக்கியாகாரர்கள் மட்டும் மலங்கரை திருச்சபையில் போதுமா? பெதனியிலும்
தனித்துவ நிலையோடு அதன் நிலையை அனுபவிக்கவே செய்வோம்.
உயர் பேராயர் திருஆட்சி அமைப்பு
நிறுவுவதற்கு முன்னிரையில் நின்று செயல்பட்ட நபர் யார்? அவருக்கு அவவரியணை
ஏற்புடைய பிரதிபலனை நல்கவும் செய்தது. இத்தகைய நிகழ்வுகளால் மலங்கரை திருச்சபையின்
உண்மை நிலை எத்தகையது என இறைமக்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
மிகவும் மேன்மையான விதத்தில் கிறிஸ்தவ
முறையில் எந்தவிதமான தப்பெண்ணமும் இல்லாமல் மலங்கரை திருச்சபையை விடுதலை செய்திட
முயன்ற பெதனி ஆயர்கள் இப்போது தண்டனைக்குரியவர்கள். மலங்கரையின் முன்னேற்றத்தை
முன்னிட்டு பெதனியின் தனித்துவ நிலையைக் கைவிடாததனால் அவர்கள் திருச்சபை
விரோதிகள். இறைமக்கள் இதனைக் கண்டு வியப்படைய வேண்டிய தேவை இல்லை. முற்காலங்களில்
நிகழ்ந்தவை இன்னொரு விதத்தில் மீண்டும் செயல்முறைப்படுத்தப்படுகின்றன. இதைவிட என்ன
நிகழ்ந்தாலும் மலங்கரை திருச்சபையை உயர்த்துகின்ற பொறுப்புணர்விலிருந்து பெதனி
ஒருபோதும் பின்மாறுவது இல்லை. நாற்றிசைகளிலிருந்து தொல்லைகளும் சித்திரவதைகள்
வந்தாலும் பெதனையை ஆசிரமத்தவர்களின் பொறுப்புணர்வு விலகிப் போவதில்லை.
இந்த ஆணையை அனுப்பி ஒரு சில நாட்களுக்குப் பின்னர்
பேராயரும் பெதனியின் ஆயரும் இணைந்து திருவல்லாவின் திருமூலபுரம் என்னும் இடத்தில்
சந்தித்தனர். “உங்களோடு ஒருபோதும் இணையாத விதத்தில் நீங்கள் என்னை மாற்றி
விட்டீர்களே” எனப் பேராயரின் காலில் பெதனி ஆயர் வீழ்ந்தார். என்ன காரணத்தாலோ,
தெரியவில்லை, பேராயரும் உடனடியாக அவ்விடத்திலிருந்து விலகி நின்று பார்த்துக்
கொண்டிருந்தார். பேராயரோடு வந்திருந்த கே டி வர்கீஸ் இரம்பான் அவர்கள் பெதனி ஆயரின்
கரங்களைப் பற்றி எழும்பச் செய்தார். கால்களை பற்றிட அனுமதிக்கவில்லையென்றால்
கரங்களையாவது முத்தம் செய்திட அனுமதிக்கட்டும் என பெதனியின் ஆயர் முன்னோக்கிச்
சென்றார். எத்தனை கருத்து வேறுபாடுகளும் தப்பெண்ணங்களும் இருந்தாலும் ஆயர்கள்
தங்களுக்கு இடையே உள்ள உறவில் மாற்றம் ஏற்படுவதில்லை. எப்போதும் இணைந்திருப்பர்
என்பது தான் தெளிவாக உள்ளது. இத்தகைய முகூர்த்த தினம்த்தில் அவர்கள் ஒன்றிணைந்து
காணப்பட்டார்கள் அல்லவா. நன்று.
இறைவனின் திருவிருப்பம் நிறைவேறுவதைப் பற்றி
இருவரும் உரையாடல்களில் பேசினர். அப்போது உடனிருந்த கீவர்கீஸ் இரம்பான் பேராயரோடு “அவ்வாணையை
திரும்பப் பெற்றுக் கொள்ளலாமே?” எனக் கேட்டார். பெதனியின் ஆயர் தலைகுனிந்தவாறு
அழுது கொண்டிருந்தார்.
கேள்விக்கு விடையாக பேராயர் தனது சுட்டு
விரலால் தனது கழுத்தை சுற்றி செய்கையை காண்பித்துக் கொண்டிருந்தார். அதன் அர்த்தம்
என்னவென்றால் எனது தலையே போனாலும் நான் அதை திரும்பப் பெற்றுக் கொள்ள மாட்டேன்
என்பதாகும். இரண்டாவதாக மீண்டும் அதே கேள்வி ஒருமுறை கூட அந்த கேள்வி கேட்கப்பட்டது.
இப்போதும் முதலில் காட்டிய அதே செய்கையைத் தான் பேராயர் செய்தார். இதனை உணர்ந்து
கொண்ட பெதனியின் ஆயர், “தலையே போனாலும், ஆணையை திரும்பப் பெற்றுக்கொள்ள மாட்டேன்”
என்றல்லவா நீங்கள் செய்கையை காட்டியிருக்கிறீர்கள் என வருந்தினார்.
செயல்களின் முக்கியத்துவத்தை முன்னிட்டு
வயது முதிர்வின் காரணமாகவோ ஏதோ இவ்வாறு
நிகழ்ந்தது என உணர்ந்து கொள்ளலாம். பழைய செமினாரியில் வைத்து நடைபெற்ற ஆனப்பாப்பியின்
மரணம் மற்றும் கமாலுதீன் முதலிய குண்டர்களின் முன்னிலையில் தனது தலையை கழுத்தை
காண்பித்துக் கொடுத்த பெதனி ஆயரின் அன்றைய மனம் மனஸ்தாப நிலைக்குத் தள்ளியது.
இதுவும் இறைவனின் திருவிருப்பமாக இருக்கும் என அவரும் உணர்ந்து கொண்டார். பின்னர்
இருவரும் பிரியாவிடை கூறி பிரிந்து சென்றனர். (குழல் கண்ணாடி பக்கம் 71 முதல் 79
வரை)
.....................................
திரு இ ஜே ஜான்
அவர்களுக்கு அனுப்பிய கடிதம்
ஆலயங்கள் நிறுவுதலுக்குத் தடையானை கிடைத்தவுடன் அதைப் பற்றிய
தங்களது பதில் கருத்தை தெளிவுபடுத்தி ஈ ஜெ ஜான் அவர்களுக்கு மார் இவானியோஸ்
அனுப்பிய கடிதம் கீழே குறிப்பிடப்படுகிறது:
திருவல்லா
மார்ச் 1930
மதிப்புக்குரிய
சார் அவர்களே,
1930 மார்ச் 18 ஆம் தேதி நீங்கள் அனுப்பிய கடிதத்திற்கு நன்றி
தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனுப்பிய கடிதம் ஆயர் மார் தியோஃபிலோஸ் அவர்களையும்
சார்ந்ததால் அவரையும் நான் காண்பிக்கும் சுதந்திர நிலையை பயன்படுத்தினேன்.
இக்கடிதத்தை வெளிப்படுத்துவதன் வழியாக பலவிதமான நன்மை உருவாகும் என்பதுவே
எங்களுடைய கருத்து. எனது விளக்கங்களோடு இக்கடிதத்தை நான் வெளிப்படுத்துகிறேன்.
வாழ்நாள் முழுவதும் நாங்கள் பிறந்து வளர்ந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக
மனப்பூர்வமாக செயல்பட்டு வந்தோம் என்பது எங்களுடைய மனத்திடன் ஆகும்.
கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி புதன் நீங்கள்
திருவனந்தபுரத்தில் வைத்து என்னைச் சந்தித்த போது சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு
மிக முக்கியமானது எது என தெளிவடைந்த நிலைகளை எழுதி உங்களிடம் ஒப்படைத்தேன். அது
தொடர்பாக மார் தியோஃபிலோஸ் ஆயரின் கருத்தையும் ஆராய்ந்த பின்னர் தான் நான் அவ்வாறு
செய்திருந்தேன். உயர் பேராயரும், மார் திவன்னாசியோ் பேராயரும், மார் கிரிகோரியோஸ் ஆயரும் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி குண்டறா செமினாரியில் வைத்து
மாமன்றம் கூடியபோது சமுதாய முன்னேற்றத்திற்காக நான் சமர்ப்பித்தக் கருத்துக்களைப்
பற்றி அல்லது மற்ற மார்க்கங்களைப் பற்றி ஆலோசிப்பார்கள் எனவே நான்
எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் எங்களுக்கு எதிரான ஒரு
தடையாணையை அவர்கள் உருவாக்கி அனுப்பினர். மதிப்புக்குரிய ஆயர்களோடு நாங்கள்
அப்பத்தை வேண்டினோம். ஆனால் அவர்கள் கற்களை எங்களுக்கு தந்தனர்.
தடையாணையில்
கையொப்பமிட்டிருந்த ஆயர்களுக்கும் பெதனியின் ஆயர்களாகிய எங்குக்கும் ஒரே ஒரு
கருத்து வேற்றுமை மட்டுமே உள்ளது. அது கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைவது
என்பதாகும். ஆனால் அக்கருத்தைப் பற்றி எந்த ஒரு குறிப்பும் தடையாணையில்
எழுதப்படவில்லை. அல்லது மலங்கரை திருச்சபை சார்பாக நாங்களும் உட்பட்டருந்த
திருச்சபை சார்பாக என்னென்ன கருத்துக் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை
பற்றியும் அவர்கள் குறிப்பிடவும் இல்லை. குண்டறயில் வைத்து பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திற்கு
ஏறக்குறைய சில தினங்களுக்கு முன்னர் திருவல்லாவில் வைத்து ஆயர்கள் எங்களை
சந்தித்தபோதும் பெதனியின் ஆலயங்கள் நிறுவுவதன் வழியாக இறைமக்களுக்கும்
குருக்களுக்கும் ஏற்பட்ட அமைதியின்மையைப் பற்றி எந்த ஒரு குறிப்பும் கூறப்படவில்லை.
தற்போதைய தடையாணைக்குரிய ஒரே காரணமும் அதுவாக
இருந்தது.
இப்படிக்கு
தங்களது
நம்பிக்கைக்குரிய
பெதனியின் மார்
இவானியோஸ்
................................................
ரம்பான்மார்களுக்கும்
தடையாணை எச்சரிக்கை
இக்காலத்தில் பெதனியில்
வாழ்ந்து பிறந்த புலிக்கோட்டு ஜோசப் ரம்பான் மற்றும் சேப்பாட்டு பிலிப்போஸ்
ரம்பான் ஆகியோர் மார் இவானியோஸ் ஆயரின் கருத்தோடு இணைந்து ஒத்துப் போவதாக இருந்தனர்.
அவர்களும் கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிப்படைந்து விடுவர் என்ற பயத்தால் உயர்
பேராயர் அவர்களுக்கு கடிதங்கள் அனுப்பினார். அவற்றைக் குறிப்பிட்டு மார்
இவானியோசுக்கு அனுப்பப்பட்ட கடிதம் சேர்க்கப்படுகிறது:
The orthodox Syrian Church of the East, Kundara palace
His holiness Moron more Baselios
Geevarghese II
Catholicos of the East
முன்னர் நான் அனுப்பிய சமாதானக்
கடித்ததின் பதிலுரை இதுவரையிலும் கிடைக்கவில்லை. புலிக்கோட்டு ரம்பானுக்கும் சேப்பாட்டு
இரம்பானுக்கும் அருள்பொழிவு வழங்கியது நானே. அஃது எங்களது தேவைக்கு ஏற்ப என்பதை
நீங்கள் அறிவீர்கள். எதனிக்காக அல்ல.
புலிக்கோட்டு
ரம்பான் சில நாட்கள் பெதனையில் தங்கி கற்றிடக் கேட்டதன்படி நாங்கள் அதற்கு அனுமதி வழங்கினோம்.
ஆனால் தற்போது அவர் அங்கிருந்து திரும்பி வரவேண்டும் எனவும் கீழ்படியாமல்
இருந்தால் தடை செய்வோம் என்றும் நாம் அவரது பெயரில் கடிதம் அனுப்பியுள்ளேன்.
சேப்பாட்டு இரம்பான்
யாருடைய அனுமதியும் இல்லாமல் உங்களோடு வாழ்ந்து வருகிறார். அனுமதியின்றி ஒரு நபரை
உங்களது கட்டுப்பாட்டில் தங்க வைப்பது நல்லதல்ல. அவரும் திரும்பி வரவேண்டும்
எனவும் கீழ்படியாவிட்டால் தடை செய்யப்படுவார் என்றும் நான் அவரது பெயருக்கு
எழுதியுள்ளேன்.
எனவே இரண்டு இரம்பான்மார்களையும்
உங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஆசிரமத்திலோ நிறுவனங்களிலோ தங்க வைத்தல் ஆகாது என
அறிவித்துக் கொள்கின்றேன். வேறு செய்திகள் இல்லை
1930, 1105 கர்க்கடகம்
24
பத்தனம்திட்டா ஆயரகத்திலிருந்து
………………………………………………………
இக்கடிதத்திற்கு
நமது கதாநாயகன் உடனடியாக பதில் அனுப்பினார். அக்கடிதம் இணைக்கப்படுகிறது.
பெருமதிப்பிற்குரிய
மோறான் மார் பஸேலியோஸ் உயர் பேராயரை அறிவித்துக் கொள்வது:
புலிக்கோட்டில்
ஜோசப் இரம்பானும் சேப்பாட்டு பிலிப்போஸ் இரம்பானும் நான் தங்கியிருக்கும்
நிறுவனங்களில் தங்க வைத்தல் ஆகாது அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் எனக்
குறிப்பிட்ட கடிதத்தை நான் பெற்றுக் கொண்டேன். இரம்பான்மார்கள் சொந்த வீடுகளில்
தங்குவதற்கு அனுமதி இல்லை. ஆசிரமத்தவர்களுக்கு தங்கக்கூடிய விதத்திலான எந்த விதமான
நிலையும் பழைய செமினாரியில் இல்லை என்பதும் அவர்கள் தங்குவதற்கான சூழலும் அங்கே
இல்லை எனவும் அறிந்துள்ளேன்.
காலமான மலங்கரை பேராயர்களின் உறவினர்களான இந்த இரம்பான்மார்களை
பெதனியிலிருந்து வெளியேற்றுவதற்கு எந்த வித நிபந்தனையும் இல்லை. உங்களது ஆணையை
புறக்கணிப்பதற்காக நான் அவர்களோடு கூறவும் இல்லை. அவ்வாறு கூறவும் மாட்டேன். அவ்வாறிருக்க
பெதனியின் நிறுவனங்களிலிருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என என்னோடு தேவைப்படுவதால்
வருத்தமடைகிறேன். இந்த ரம்பான்மார்கள் இருவருடைய பெயர்களுக்கும் நீங்கள் கடிதத்தை
எழுதி நேரடியாக அவர்களை அழைத்துப் பேசியிருக்க வேண்டும்.
தடையாணை என்ற
ஆயுதம் இதுவரை பயன்படுத்தியதன் பலன்களை அனுபவித்து வருகின்ற ஒரு சமுதாயத்தில்
மீண்டும் இது பயன்படுத்தக்கூடிய விதத்தில் நீங்கள் ஆலோசனைகள் மேற்கொள்கிறீர்கள்
அல்லவா. அன்பும் கருணைமான ஆயுதங்கள் அல்லாமல் மனிதரை கவர்ந்திடும் நன்மை உள்ளவனாக
மாற்ற முடியாது எனவும் நான் உங்களை நினைவுபடுத்த வேண்டியத் தேவையில்லை.
இப்படிக்கு மார்
இவானியோஸ்
…………………………………
உயர் பேராயர்
தங்களை தடை செய்வதாக தீர்மானித்த விவரத்தை அறிந்த இரம்பான்மார்கள் மலங்கரை சபையின்
குழல் கண்ணாடி என்ற நூலில் இவ்வாறு சேர்த்துள்ளனர்.
“இதற்கிடையே பெதனிக்கார்ர்களையும்
அவர்களுடைய உடனிருந்தவர்களையும் துணையாளர்களையும் உடனடியாகத் தடை செய்யும் என்ற
செய்தி நாடு முழுவதும் முழங்கிக் கொண்டிருந்தது. எங்களையும் விட்டுவிடவில்லை என
அனுமானிக்க முடிந்தது. நாங்களும் அவற்றை எதிர்பார்த்து காத்திருந்தோம்.
திருச்சபைக்கு வெளியேயிருந்து கேட்டுக் கொண்ட வார்த்தைகளால் நாங்கள் அல்லலுற்றோம்.
ஒரு சில தினங்களுக்குள் ஏதோ நடைபெறும் என நாங்கள் அறிந்து கொண்டோம். யாக்கோபாய
திருச்சபையை இறைவன் தொட்டு அருள் புரிவதாக நாங்கள் அறிந்து கொண்டோம்.
மிகப் பெரும்
அலைகளால் புரட்டிப் போடப்பட்டிருந்த மலங்கரை யாக்கோபாயா சபை என்னும் பெருங்கடலில்
இதோ புலிக்கோடனும் சேப்பாட்டும் மூழ்கியுள்ளனர். என்னவாயினும் வரட்டும். இறந்து
போன மறைத் தந்தையர்களும், குறிப்பாக திருத்தூதர் தோமாவும் எங்களை கைவிட
மாட்டார்கள். அப்படி நடக்குமா எங்களது வாசகர்களே? (குழல் கண்ணாடி பக்கம் 258)
அதிகாரம் 28
மறுஒன்றிப்புக்கு முன்னர் அனுப்பப்பட்ட ஐந்து கடிதங்கள்
மார் இவானியோஸ் மற்றும் மார் தியோஃபிலோஸ்
ஆயர்களும் ஆசிரமத்தவர்களோடு இணைந்து கத்தோலிக்க திருச்சபையோடு இணைவதற்கு
தீர்மானித்தனர் என்ற செய்தி வெளியான போது அவர்களது அன்பர்கள் உறவினர்கள் ஒத்தக்
கருத்துடையவர்கள் ஆகியோர் பலர் சார்பாகவும் எதிராகவும் நமது கதாநாயகனுக்கு
கடிதங்கள் பல அனுப்பினர். அவற்றுக்கு சரியான விதத்தில் சரியான நேரத்தில்
பதில்களையும் நமது கதாநாயகன் எழுதி அனுப்பினார். கடிதங்கள் அனைத்தையும் இந்நூலில் சேர்ப்பதற்கு
இயலாத காரணத்தினால் ஐந்து கடிதங்கள் மட்டும் இவ்வதிகாரத்தில் இணைக்கப்படுகின்றன.
இவ்வதிகாரத்தில் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைடைவதற்கு தனக்கு துணை நின்ற முக்கிய
காரணங்கள் என்னென்ன என்பது இக்கடிதங்களில் விளக்கப்பட்டுள்ளன.
1.
மத்துள்ளா மாப்பிள்ளைக்கு
அனுப்பிய கடிதம்
மலையாள மனோரமாவின் நிறுவனரும் கண்டத்தில்
வர்கீஸ் மாப்பிள்ளையின் சகோதர மகனும் ஒரு சமுதாய ஆர்வலரும் பல ஆண்டுகள் மனோரமாவின்
மானேஜரும் உற்றத் தோழருமான மாத்துள்ள மாப்பிள்ளை அவருக்கு அனுப்பிய பதில் கடிதம்
இணைக்கப்படுகிறது.
வடசேரிக்கர, 4.4.105
My dear
mathulla mappillai
கடிதம் கிடைத்தது. வருங்காலத்தில் நம் சமுதாயத்திலிருந்து
விலகி வாழ்வதற்கு முடியுமா என எனக்கு தெரியவில்லை. உயர் பேராயர் திருஆட்சி அமைப்பு நிறுவனம் தொடர்பாகவும் வழக்குகள்
இல்லாமல் முன்னோக்கி செல்ல முடியுமா. இதைப்பற்றி நான் ஆலோசித்து வருகிறேன்.
வெளிநாட்டவர்களுக்கு முழுமையாக கீழ்படிகின்ற போது வழக்குகள் இறுதி நிலை அடையுமா?
ஆயினும் ஆன்மீக மேன்மை மற்றும் மன
சமாதானம் கிடைக்கும் என்பது கடினமானது. ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கலாம் என்றால்
அதனிலும் சமாதானமும் மகிழ்ச்சியும் உருவாகும் என்பது ஐயமே.
எனது நம்பிக்கையில் எந்த ஒரு வித்தியாசமும்
இல்லாமல் நமது மக்களை நமது ஆயர்களும் நமது குருக்களும் திருஆட்சி புரியக்கூடிய
நிலையில் சமுதாய உறுப்பினர்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்காக சமுதாயத்தின் பொது
மேன்மைக்காக எந்த விதமான குறையும் இல்லாமல் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய
முடியுமா என நான் சிந்திக்கவும் எனது அன்பர்கள் பலரோடு உரையாடவும் செய்துள்ளேன்.
இவற்றை மையமாகக் கொண்டு தான் மாத்துள்ளாச்சனும் இக்கடிதத்தை எழுதியுள்ளீர்கள்.
சமுதாயத்திற்கு பொதுவாக ஐஸ்வர்யம் உண்டாக பல
மார்க்கங்களை கண்டறிவது நமக்கு விருப்பம் உண்டு. மனிதர்கள் திருச்சபையின் பல்வேறு
விஷயங்களின் உண்மை நிலையை அறிந்து கொள்ளாமல் பலவற்றைத் திரித்துக் கூறுவதை நான்
கவனிப்பதில்லை. உங்கள் அனைவரையும் இரக்கமுள்ள இறைவன் ஆசீர்வதிக்க மன்றாடுகிறேன்.
நீங்கள் அனைவரும் நலமாக உள்ளீர்கள் என நம்புகிறேன்.
மார் இவானியோஸ்
…………………………..
2.
வர்க்கி வைத்தியன் அவர்களுக்கு அனுப்பிய கடிதம்
புதுப்பள்ளி என்னும் இடத்தைச் சார்ந்த
செம்பகச்சேரி எனப்படும் மகுடம் சூடிய வைத்தியசாலையின் நிறுவனரான ஒரு சமுதாய
பிரமாணி தான் திரு வர்க்கி வைத்தியன் அவர்கள். பெதனியின் துவக்கக் காலத்தில்
அவரும் அவரது சகோதரர்களும் பலவித நன்கொடைகள் வழங்கி நமது கதாநாயகனுக்கு உதவிகள்
ழங்கியுள்ளனர். அவரது கடிதத்திற்கு பதில் கடிதம் நமது கதாநாயகன் அனுப்பியது.
அன்புக்குரிய வர்க்கி வைத்தியன் அவர்களே,
இன்னும் வருங்காலத்தில் சமுதாயத்தி்
வழக்குகளிலிருந்து விட்டொழிந்து வாழ முடியும் என எனக்குத் தோன்றவில்லை. காதோலிக்க
நிறுவனம் தொடர்பாகவும் மலங்கரை ஆயர் அருள் பொழிவு தொடர்பாகவும் வருங்காலத்தில்
அதன் உண்மை நிலை எண்ணி வழக்குகள் இல்லாமல் இருக்க முடியுமா? வெளிநாட்டவர்களுக்கு முழுவதுமாக
அடிபணிகின்ற போது தற்காலம் வழக்குகளில் இருந்து விடுபடுவதாக இருந்தாலும் ஆன்மீக மற்றும்
உண்மையான சமாதானமும் கிடைக்கும் என்பது சந்தேகமே. ஒரு புதிய சமுதாயத்தை
உருவாக்குவது என்பதும் சந்தேகமடைய வைக்கிறது.
நமது நம்பிக்கைக்கு எந்த ஒரு வேறுபாடும்
இல்லாமல் நமது மக்களை நமது ஆயர்களும் குருக்களும் திருஆட்சி செய்யத்தக்க விதத்தில்
சமுதாய உறுப்பினர்களின் பெருமைக்கும் சமுதாயத்தின் பொதுவான மேன்மைக்கும் களங்கம்
வராமல் பழமையான ஏதேனும் ஒரு திருச்சபையோடு குறிப்பாக ரோமன் கத்தோலிக்க
திருச்சபையோடு ஒரு மறுஒன்றிப்பு சாத்தியமாகுமா என நான் சிந்திக்கவும் அன்பர்களாகிய
ஒரு சிலரோடு உரையாடவும் செய்தேன். இறைவனின் திருப்பெயரால் சமுதாயத்தின் பொது நன்மை
உருவாக்கக்கூடிய விதத்தில் அல்லாமல் வேறு எதுவும் நான் செய்திடவில்லை.
சமுதாயம் சம்பந்தமான இப்போது உள்ளதும் இனி
உருவாக இருப்பதுமான வழக்குகளில் பிரச்சனைக்கு உட்படாமல் நிற்பதற்கு விரும்புவதாக
பேராயரோடு உரையாடியுள்ளேன். இவற்றையெல்லாம் மையமாகக் கொண்டு கொண்ட கருத்துக்களை உங்களது
கடித்த்தில் உள்ளது என நான் எண்ணுகிறேன். சமுதாயத்திற்கு பொதுவாக ஐஸ்வரியம்
உருவாவதற்கு ஏதேனும் மார்க்கங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுவே எமது விருப்பம்.
மனிதர்கள் உண்மை நிலைக்குப் புறம்பாக ஏதேனும் எடுத்துக் கூறுவதை நான்
கவனிப்பதில்லை. சொந்த சகோதரர்களும் இறைமக்களும் நான் செய்தவற்றை தவறாக புரிந்து
கொண்டாலும் ஆண்டவரின் திருவிருப்பப்படியான எனது மனசாட்சிக்கு ஏற்புடைய
கருத்துக்களை விட்டு விடுவதற்கு நான் தயாராக இல்லை. திருச்சபையின் மறுஒன்றிப்புக்கு
நான் தயாராக இருக்கிறேன். அதுவே ஆண்டவரின் திருவிருப்பம் ஆகும்.
நான் கத்தோலிக்க திருச்சபையோடு இணையப்
போகிறேன் என்பதற்கு எதிராக தப்பண்ணங்களை பரப்பியவர்கள் எந்த எண்ணத்தோடு அப்படிப்பட்ட
கருத்துக்களை பறைசாற்றுகிறார்கள் என எனக்கு தெரியாது. உரோமையர்களின் பணமோ அதிகாரமோ
மதிப்போ எதுவும் நான் விரும்பவில்லை. நமது திருவழிப்பாட்டுகளையும்
நம்பிக்கைகளையும் அவர்கள் ஏற்றுக் கொள்கின்ற போது அவர்களிடையே போட்டி மனப்பான்மை
ஏற்படுவதற்கு சாத்தியமில்லை.
உலகில் எந்த ஒரு திருச்சபையோடும் இணையாமல்
எல்லாருக்குமே போட்டி மனதோடு வாழவேண்டும் என்பதுதான் இறை விருப்பமா? இவ்வாறு உள்ள
பல கருத்துக்களைக் கூறி கலகங்கள் உருவாகும் என நான் எண்ணுகிறேன். கலகங்கள்
அனைத்தும் தானாகவே அடங்கிவிடும். அதைப் பற்றி எண்ணுவதும் சரியல்ல. இக்கடிதத்தை
பிறருக்கு காண்பிக்கவும் வெளிப்படுத்தவும் அனுமதிக்கவில்லை.
நீங்கள் அனைவரும் இரக்கமுள்ள இறைவனால்
ஆசீர்வதிப்படுவதற்காக நான் மன்றாடுகிறேன். அங்கு உருவான கலகங்கள் அனைத்தும்
அடங்கிவிட்டன என நான் கருதுகிறேன். இப்போதும் அடங்கி விடவில்லை என உங்களது எழுத்து
மூலம் அறிந்து கொள்வதில் வருந்துகிறேன். அவை தானாகவே அடங்கிவிடும்.
வடசேரிக்கரை
19. 5. 5
மார் இவானியோஸ்
……………………………………………………….
3.
செல்வி ப்ரூக்ஸ்மித்து
அவர்களுக்கு அனுப்பிய கடிதம்
இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட்
பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை பட்டம் பெற்ற செல்வி ப்ரூக்ஸ்மித்து மற்றும்
திருமதி ஹோம்ஸ் ஆகிய இரண்டு நபர்களிடமும் திருவல்லாவில் திருமூலபுரம் என்னும்
இடத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் பொறுப்பை ஒப்படைப்பதற்காக நமது கதாநாயகன்
கடிதம் எழுதி அவர்களை வரவைத்தார். 40 ஆண்டுகள் தலைமை ஆசிரியையாக
பணியாற்றி வந்த செல்வி ப்ரூக்ஸ்மித்து அவர்களிடம் நமது கதாநாயகன் ஆங்கில மொழியில்
அனுப்பிய பதில் கடிதத்தின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:
Dear miss
Brooke Smith,
நீங்கள் அனுப்பிய கடிதத்திற்கு நன்றி
தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது கடிதம் கிடைத்த உடனடியாக அப்பள்ளிக்கூடத்தின்
பணியை தொடர்ந்திட அருள் சகோதரிகளின் கருத்து பற்றித் தெரிவிக்க வேண்டும் என
கேட்டுக் கொண்டேன். பள்ளிக்கூடத்தின் பணியைத் தொடர்ந்து செயலாற்றிட அவர்கள்
விரும்பவில்லை என அவர்களிடமிருந்து அறிந்து
கொண்டேன். உடனடியாக அவர்களை பணியிலிருந்து விலக்க வேண்டும் என நான்
அறிவிக்கின்றேன்.
உரோமை கத்தோலிக்க திருச்சபையோடு உடனடியாக
மறுஒன்றிப்படைவதற்குச் செல்வதாக நீங்கள் ஊகித்துக் கொள்ள வேண்டாம். இந்த விடயத்தைப்
பற்றி சுதந்திரமாக எண்ணவும் இது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
கத்தோலிக்க மறுஒன்றிப்பு என்ற பிரச்சனையைப் பற்றி சிந்திக்கவும் தொடங்கிய போது,
வகுப்புகளில் கற்பிக்க குறிப்பிட்ட விடயத்தை பற்றி நம்பிக்கையில் எந்த ஒரு
வித்தியாசமும் இல்லை என்றாலும் மறுஒன்றிப்பு பற்றிய எதையும் பேச வேண்டாம் என நான்
அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுதியுள்ளேன். அருள்சகோதரிகள் தங்களது கல்விப்
பணியில் மிகுந்த மனசாட்சியோடும் பணியாற்றினார்கள் என்பதே எனது நம்பிக்கை. அவர்களது
அனுமதியோடு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப உடனடியாக தங்களது பணியை விட்டு விலகிட
வேண்டும் என நான் அவர்களுக்கு எழுதவுள்ளேன்.
சுறியானித் திருச்சபையின் இன்றைய கேவலமான
நிலையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்கள் என்பதுவே எனது நம்பிக்கை. ஒரு
மாபெரும் சக்தியால் மட்டுமே இத்திருச்சபையை பாதுகாக்கவும் மீட்கவும் முடியும் என
நான் நம்புகிறேன். அந்த மாபெரும் சக்தியாக கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைவதை
நான் காண்கிறேன். மறுஒன்றிப்பின் வழியாக மட்டுமே கலகங்களிலிருந்தும் பிரச்சனைகளிலிருந்தும்
அமைதி காண முடியும். மறுஒன்றிப்பு வாயிலாகவே மதத்தையும் மனித வாழ்வையும் பற்றிய
விரிந்து பரந்த கொள்கையும் உலகெங்கும் விரிந்து பரந்துள்ள திருச்சபையின் உறுப்பினர்கள்
என்ற பெருமையும் ஆசீர்களும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
கடந்த 20 ஆண்டுகளாக சுறியானித்
திருச்சபையில் ஒரு பகுதியினர் அந்தியோக்கியாவின் யாக்கோபாய மறைமுதுவரோடு மட்டுமல்ல
உலகின் பழமையும் அப்போஸ்தலிக்கவுமான திருத்தூதுவ மரபு சார்ந்த அனைத்து திருஆட்சி அமைப்புகளிலிருந்தும்
பிரிந்து நிலை நின்றது. மார் திவன்னாசியோஸ் மர்தீன் என்னும் இடத்திற்குச் சென்று
நடத்திய ஒற்றுமை முயற்சிகள் அனைத்தும் தோல்வியை சந்தித்தன. உயர் பேராயரை
அருட்பொழிவு செய்த போது அவருக்கு உண்மையான அருட்பொழிவு பெற்றுக் கொள்ளவில்லை என்று
ஒரு ஆணை மற்றும் மறைமுதுவர் வெளிப்படுத்தினார். மறைமுதுவரின் குழுவைச் சார்ந்த
அனைத்து ஆயர்களும் இந்த ஆணையை மலையாள மொழியில் மொழிபெயர்த்து அனைத்து ஆலயங்களில்
வாசிக்கவும் செய்தனர். உயர் பேராயரிடமிருந்து அருட்பொழிவு பெற்றுக்கொண்ட குருக்களும்
திருத்தொண்டர்களும் மீண்டும் அருள்பொழிவு பெற்றுக்கொண்டால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்ள
முடியும் என்றனர்.
நமது திருவழிபாடும் பழக்கவழக்கங்களும்
ஏற்றுக்கொண்டு நமது குருக்களின் அருள்பொழிவின் உண்மை நிலையை ஏற்றுக் கொள்ளவும்
நமது இறைமக்களை அவர்கள் திருஆட்சி செய்யவும் சம்மதித்தால் மட்டுமே மறுஒன்றிப்புக்கு
நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் எனது நிலையை தெரிவித்துள்ளேன். திருத்தூதர் பேதுருவின்
வழிமரபினரான திருத்தந்தையின் முதன்மை அதிகாரத்தை ஏற்றுக் கொள்வோம் என்பதுதான் நமது
கருத்து. திருத்தூதர் பேதுரு உரோமாவில் வைத்து மறைசாட்சி மரணம் அடைந்தார் எனவும்
மறைமுதுவர்களின் தலைவர் உரோமாவின் திருத்தந்தையே என்ற உண்மை நமது திருச்சபைச் சட்டங்களிலும்
ஜெபங்களிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
யாக்கோபாயா மறைமுதுவரின் முதன்மை அதிகாரத்தை
ஏற்றுக் கொள்கிறேன் என ஒப்புக்கொண்ட வாக்குமூலங்களை தான் மார் திவன்னாசியோஸ்பேராயர்
நீதிமன்றங்களில் வெளிப்படுத்தியுள்ளார். நீதிமன்றங்களில் ஒரு மறைவதுவரின் முதன்மை
அதிகாரத்தை ஏற்றுக் கொள்கிறேன் என எடுத்துக் கூறியும் அதே நேரத்தில் மற்றொரு மறைமுதுவரின்
முதன்மை அதிகாரத்தையும் ஏற்றுக் கொள்கிறேன் என கடிதப் போக்குவரத்துகள் நடத்துவது
அவர் நம்பிக்கை துரோகம் செய்வதாக உணர்ந்து கொள்ள முடியும். எனவே இந்த சூழலில்
இப்படிப்பட்ட கடிதப் போக்குவரத்துகளை அவரிடம் தெரிவிக்க வேண்டாம் என ஆயர் மன்ற
உறுப்பினர்கள் தீர்மானித்தனர். காலமான உயர் பேராயர் என்னிடம் அந்த பொறுப்பை
ஒப்படைக்கவும் நான் அதனை செயல்படுத்தவும் செய்து வந்தேன்.
இவ்வாறு தான் ஒவ்வொரு செயல்களும்
நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதனைப் பற்றிய நீண்ட ஒரு கடிதத்தை நான் அனுப்பி
இருக்கிறேன். திருமதி ஹோம்ஸ் அவர்களுக்கும் இதைப் பற்றிய விபரங்களை எடுத்துக் கூற
நான் விரும்புகிறேன். இக்கடிதத்தை நீங்களே அவரிடம் வாசிக்கக் கொடுப்பதாக இருந்தால்
நான் மீண்டும் அவருக்கும் எழுதும் பணியிலிருந்து விடுபடுவேன். அவரை இவ்விடயங்களைப்
பற்றி தெரிவிக்காமல் இருந்தால் அவரும் வருந்துவார் என அறிந்து கொள்கிறேன்.
சன்னியாச சகோதர சகோதரிகளும் பரிபூரண
சுதந்திர நிலையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விடயத்தைப் பற்றி நான்
மனப்பூர்வமாக சிந்திக்கத் துவங்கிய போது எனது கொள்கையை ஏற்றுக் கொள்கின்ற சூழலில்
அவர்களுடைய உறுதிமொழிகளிலிருந்து விலகி நிற்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் நான்
கூறினேன். அவர்களும் பல காலமாக எண்ணிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய கருத்துரிமையை
தேர்ந்தெடுப்பதற்கான பரிபூரண சுதந்திரம் அவர்களுக்கும் உண்டு.
அருட்கன்னியர்களுக்கு உங்களது உதவி மிகப்
பெரிதாக அமைந்திருந்தது என்ற உண்மையை நான் இப்போது நினைவு கூர்கிறேன். இதயத்தோடு நெருக்கமான
உறவு அவர்களோடு இருந்து வந்தது.
நமது ஆண்டவரின் அன்பு நமது இதயங்களில்
வாழவும் நம்மிடையே உள்ள அன்பு உறவு அதிகமாக இதயபூர்வமாகவும் செயல்பாட்டு விதத்திலுமாகும்
என நான் பரிபூரணமாக நம்புகிறேன். காரணம் நாம் அனைவரும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே
ஆண்டவரில் நம்புகிறோம்.
அனைத்து வாழ்த்துக்களுடன்
மார் இவானியோஸ்
..................................................................
4.
பேராயர் மார் திவன்னாசியோசுக்கு
அனுப்பிய கடிதம்
பெருநாட்டின் பெதனி மலையிலிருந்து வெளியேற
தீர்மானிப்பதற்கான உடனடி காரணங்கள் என்னென்ன என்பதை நமது கதாநாயகன் மலங்கரையின்
பேராயரான வட்டச்சேரில் மார் திவன்னாசியஸ் அவர்களுக்கு அனுப்பிய கடிதம் பின்வருமாறு
இணைக்கப்படுகிறது.
மலங்களை யாக்கோபாயா சுறியானி சமுதாயத்தின்
தலைவரான மலங்கரையின் பேராயரின் முன்னிலையில் அறிவிப்பது;
அந்தியோக்கிய அரியணை அல்லது யாக்கோபாயா
சமுதாயத்தின் கூட்டங்களுக்க செயற்குழுகளுக்கோ பெதனி, பெதனியின் ஆலயங்கள் மற்றும் பெதனியின்
நிறுவனங்கள் மீது எந்த விதமான அதிகாரமும் இல்லை என நிலைப்படுத்திய தீர்மானத்தோடு
தான் நான் இவற்றை நிறுவியதும் வழிநடத்திச் செல்வதும் ஆகும். நான் ஆயராகவும்
பேராயராகவும் அருள்பொழிவு செய்யப்பட்டபோது யாக்கோபாயா மறைமுதுவரோ அல்லது
இயக்கத்தின் கூட்டங்களோ எந்த விதத்திலும் தலையீடு செலுத்தாத விதத்தில் அவை நடந்தன
என்பது நீங்கள் சரியாக அறிவீர்கள் அன்றோ. இதுவரையிலும் நடந்துள்ள சமுதாயம் சார்ந்த
கூட்டங்களுக்கும் செயற்குழு கூட்டங்களுக்கும் நானும் மார் தியோஃபிலோஸ் ஆயரும்
பங்கெடுக்கவில்லை என்பதும் பெதனி தனித்துவ நிலை சார்ந்ததனால் அக்கூட்டங்களில்
கலந்து கொள்வதில்லை எனவும் நான் உங்களோடும் உயர்பேராயரோடும் நேரடியாக கூறவும்,
1104 மிதுனத்தில் கூடிய நிர்வாக குழு கூட்டத்தில் இந்த விபரத்தை எனது தேவைக்கேற்ப
திரு ஜான் அவர்கள் முன்மொழியவும் அக்கூட்டத்திலிருந்து அதற்கு அடுத்த நாளே இவ்வாறு
எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது என என்னோடு தெரிவிக்கவும் செய்துள்ளனர். நான் பேராயரான
பிறகும் பழைய செமினாரியில் வைத்து பேராயராகிய நீங்கள் பெதனியின் தனித்துவ நிலையை
ஒருபோதும் கைவிட வேண்டாம் என என்னோடு ஆணையிட்டருளிய நிலையையும் நான்
நினைவுபடுத்துகிறேன்.
இவ்வாறிருக்க கொல்லம் 1106 சிங்கம் 19ஆம்
தேதி கோட்டயம் சுறியானி செமினாரியில் கூடுவதற்கு திட்டமிடப்பட்ட மலங்கரை யாக்கோபாய
சமுதாய பொதுக்கூட்டத்திற்கு பெதனை பள்ளிகளிலிருந்து பிரதிநிதிகளைத்
தேர்ந்தெடுக்கவும் அவ்விவரத்தை என்னையோ மார் தியோஃபிலோஸ் ஆயரையோ தெரிவிக்காமல் பெதனி
ஆலயங்களுக்கு நங்கள் நேரடியாக கடிதங்கள் அனுப்பியதாக நான் அறிந்து கொண்டேன். பேராயரின்
கடிதம் கிடைத்ததொன்றும் என்ன செய்ய வேண்டும் என்றும் எங்களுடைய பங்குத்தந்தையர்கள்
எங்களோடு கேட்கவும் பெதனி ஆலயங்கள் தனித்துவமாகையால் இந்தக் கூட்டத்திற்கு
பிரதிநிதிகளை அனுப்ப வேண்டாம் எனவும் அனுப்பக்கூடாது எனவும் நான் அவர்களைத்
தைரியப்படுத்தினேன். பெதனி ஆலயங்களின் பிரதிநிதிகளாக யாரையுமே இந்த கூட்டத்திற்கு
அனுப்பவும் இல்லை. பெதனி ஆலயங்களின் பிரதிநிதிகள் என்ற விதத்தில் இக்கூட்டத்திற்கு
வருகின்ற போது அது உரிமை இல்லாத செயலே எனவும் அது எந்த விதத்திலும் பெதனி ஆலயங்களையும்
பாதிப்பதில்லை என்ற விவரத்தையும் தாழ்மையுடன் அறிவித்துக் கொள்கிறேன்.
முன்னர் யாக்கோபாயா ஆலயமாக இருந்த புறமற்றம்
ஆலயம் தனது உரிமையாளர்களான 24 பேர் இணைந்து எனக்கு ஒப்பந்தம் செய்து தந்ததும்
அதற்கு ஏற்ப கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக எனது வழிநடத்துதலின் கீழே அது
செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக தனித்துவ நிலையில் துவங்கப்பட்ட மற்று ஏதேனும் பெதனி
ஆலயங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என குறிப்பிடுவதாக இருந்தால் புறமற்றம் ஆலயத்தை
நான் விட்டுவிடவும் உடனடியாக ஒப்பந்தம்
செய்து தந்த நபர்களை அதற்காக நான் தைரியப்படுத்துவதும் ஆகும்.
பேராயர் அவர்களுடைய சொந்த பணத்திலிருந்து
எனது பெயருக்காக நம்பிக்கையுடன் எழுதி வாங்கப்பட்ட மல்லப்பள்ளி பகுதியிலுள்ள
சொத்தை உடனடியாக யாருடைய பெயருக்கு கைமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்து வட்டச்சேரில்
கிவர்கீஸ் வழியாக தேவைப்பட்டதற்கு ஏற்ப கடந்த வாரம் வரை எந்தவிதமான பதிலும்
கிடைக்காததனால் அதற்கான பத்திரத்தை இப்போது அனுப்புகிறேன். இந்தச் சொத்தை
நம்பிக்கையுடன் எனது பெயரில் எழுதித் தருவதாக நீங்கள் விரும்புகிறீர்கள் என
திருப்பத்தூர் மருத்துவமனையில் வைத்து என்னோடு நீங்கள் கூறிய போது, “எப்போது
யாருக்கு அதனை எழுதி வழங்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களோ, அவ்வாறே
செய்தருள்வேன்” என நானும் உங்களோடு கூறியுள்ளதையும் நினைவுபடுத்துகிறேன். அதன் உரிமையாளர்களுக்கு
மீண்டும் அதனை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவை நமது டிரஸ்டில்
உள்படுத்தாமல் இருப்பதற்கும் மீதியுள்ள சொத்துக்களும் பெதனி ட்ரஸ்டுகளுக்கு எழுதித்
தந்ததும் ஆகும்.
கடந்த கற்கடகம் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
எம் ஜி எம் உயர்நிலைப் பள்ளியில் பயின்று கொண்டிருந்த ஒரு திருத்தொண்டர் திருவல்லா
பாலியேக்கரா பெதனி ஆலயத்தில் திருப்பலியில் கலந்து கொள்ள வரவும் தூயதிற்குள்
நுழைந்து திருப்பலிக்கு உதவி செய்வதற்கு தயாராக நின்றிருந்த நபரிடமிருந்து பங்கு
தந்தையின் சைகையையும் மறுத்து தூப கலசத்தை கட்டாயத்துடன் வாங்க முயற்சி செய்ததும்
என் ஜி எம் யின் ஒரு ஆசிரியர் திருத்தொண்டரை சமாதானப்படுத்தியதும் துப்தேன் அல்லது
பரிந்துரை மன்றாட்டுகள் வாசிக்கின்ற போது வலுக்கட்டாயமாக துயகத்துக்குள் சென்று முதலாம்
துப்தேனில் மார் தியோஃபிலோஸ் ஆயருக்குப் பதிலாக உங்களது பெயரை எடுத்துக் கூறவும் செய்தார்.
இந்த செயல் பெதனியின் ஆலயங்களைக் கைப்பற்றுவதற்கு முன்னோடியாக செய்யப்பட்ட முயற்சி
என அறிந்ததனால் மார் தியோஃபிலோஸ் ஆயர் திருவல்லா ஆலயத்தில் வந்தடையும் வரை அங்கு
திருப்பலி ஒப்புக் கொடுக்க வேண்டாம் எனவும் ஆலயத்தை மூடி திறவுகோலை பொருளாளரிடம்
ஒப்படைக்க வேண்டும் எனவும் பங்குத் தந்தைக்கு ஆயர் அவர்கள் கடிதம் அனுப்பியிருந்தார்.
திருவல்லாவில் நல்ல ஒரு கட்டிடம் உருவாக்க
வேண்டும் எனவும் அதற்காக நீங்கள் பண உதவி நீங்கள் செய்யலாம் என ஒப்புக்கொண்ட
போதும், “உங்களது பணம் எனக்குத் தேவையில்லை. அதை நான் பெற்றுக் கொண்டால் இது
சமுதாயத்தின் சொத்தாக மாறும். பின்னர் அதன் தொடர்பாக வழக்குகள் நடத்தவும் என்னால்
முடியாது. நானே பணத்தை வசூல் செய்து கட்டிடம் கட்டலாம்.” என உங்களோடு அனுமதி
கேட்டதும் அதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என நீங்கள் கூறவும் செய்ததை
நினைவுபடுத்துகிறேன்.
பணத்தொகை முழுவதுமாக என்னிடம ஒப்படைத்த போது
இது சமுதாயம் சார்ந்த பணம் அல்ல என்னுடைய சொந்த பணமே ஆகும். இது பெதனிக்குத்
தருவதாக இல்லை. உங்களுக்காக நான் தருகிறேன். இவ்வாறு என்னிடம் குறிப்பிட்டதையும் நான் நினைவுபடுத்துகிறேன்.
நீங்கள் தந்த தொகையை ஆயரகம் கட்டுவதற்காகப் பயன்படுத்தியுள்ளேன். அந்தக்
கட்டிடத்தில் தங்கி வாழ்வதற்கு நீங்கள் எதிர்பார்த்து இருந்ததனால் அந்த
கட்டிடத்தையும் உங்களுக்கு தங்குவதற்கு ஏற்ப அதனோடு சேர்ந்த ஆலயத்தின் கட்டிடவும்
உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பல நாட்களாக விரும்பி வருகிறேன். அதனை தாழ்மையோடு
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
என் வழியாக எந்தெந்த விதத்தில் மனவேதனை
உங்களுக்கு உருவாகியுள்ளது என்றால் அவற்றையெல்லாம் நம் ஆண்டவரின் பெயரில் என்னோடு
மன்னித்தருள உங்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
ஒவ்வொரு இடத்திலும் பெதனி ஆலயங்களுக்கு நிலம்
அன்பளிப்பாக வழங்கிய நபர்களை முழு சுதந்திரத் தன்மையோடு தந்ததாக இருந்தாலும்
அவற்றை வழங்குவதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம். எங்கள் வழியாக எந்த ஒரு
ஆலயத்திலும் இறைவழிபாடு அலங்கோலமாகாத விதத்தில் நாங்கள் விரும்புகிறோம். ஏதேனும்
ஓரிடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்குவதற்காக நாங்கள் எண்ணுகிறோம்.
உங்களது அன்பான பாசம் எப்போதும் நிறைவாக எங்களோடு இருக்க வேண்டுமென
கேட்டுக்கொள்கிறேன்.
பெதனி
வடசேரிக்கரை
2.1.
106
மார் இவானியோஸ் பேராயர்
............................................................................
5.
உயர் பேராயருக்கு அனுப்பிய
கடிதம்
பெதனி மலையிலிருந்து வெளியேறி வெண்ணிக்
குளத்திற்கு வந்து ஆசிரமத்தவர்களோடு இணைந்து தங்கி வாழ்ந்த போது மார் பசேலியோஸ் உயர்
பேராயருக்கு நமது கதாநாயகன் அனுப்பிய கடிதம் தான் இணைக்கப்படுகிறது. பெதனையிலிருந்து
வெளியேறுவதற்கு உருவான காரணங்களும் மறுஒன்றிப்புக்கான தேவையும் இக்கடிதத்தில்
தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேன்மை மிகு மோறான் மோர் பசேலியோஸ்
கிழக்கின் உயர் பேராயர் அவர்களை அறிவிப்பதாவது:
நானும் மார் தியோஃபிலோஸ் ஆயரும்
ஆசிரமத்தவர்களும் பெருநாட்டின் பெதனி மலையிலிருந்து வெளியேறி தற்போது வெண்ணிக்குளத்திற்கு
வந்து ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு செயல்படுவதற்கு எங்களைத் தூண்டிய
காரணிகளை உங்களோடும் தெரிவிக்க விரும்புகிறேன். நம்மிடையே இதுவரை ஏற்றுக் கொண்டு
வந்த திருச்சபை தத்துவங்களும், ஆட்சி அதிகாரப் போட்டி மனப்பான்மையும் வழக்குகளும் மேலும்
தொடர்வதாக இருந்தால் ஆன்மீக ஆன்மீக மறுமலர்ச்சி நமது சமுதாயத்திற்கு உருவாகாது
எனவும் இறைவனின் திருப்பெயர் முழுவதுமாக இழித்துரைக்கப்படும் என்ற நிலை எனக்குத்
தென்படுகிறது.
எனவே இறைவனின்
திருப்பெயர் மேன்மைப்படுத்தத்தக்க விதத்தில் ஒரு இயக்கத்தை உருவாக்க வேண்டும்
எனவும் பல முறைகளிலும் பல வாய்ப்புகளிலும் நான் உங்களோடு கோரிக்கை வைத்துள்ளேன். மலங்கரை
திருச்சபையின் அடிப்படை நம்பிக்கைகளுக்கு எந்த விதமான மாற்றமும் வராமல்
பிரிவினைகளும் போராட்டங்களும் போட்டி மனப்பான்மையும் வழியாக அடிக்கடி இறைவனின்
திரு உடல் காயப்படுத்தும் வேதனையை அனுபவிக்கின்ற காயங்களை குணப்படுத்துவதற்கும்
ஒரு திட்டத்தை ஏற்றுக் கொள்ளவும் உங்களது திருஆட்சியின் கீழே உள்ள இறைமக்களை
விண்ணக அரசிற்கு வழிநடத்த வேண்டியது நமது முக்கிய பொறுப்புணர்வு ஆகும் எனவும்
அதற்காக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது ஆயர்களாகிய இருவருமே முயல வேண்டும் என
உங்கள் இருவரும் முன்பாகவும் நான் முழங்கால் படியிட்டு வேண்டினேன். பாதங்களையும்
முத்தம் செய்தேன். இறைவனுடைய திருப்பெயரால் மீண்டும் நான் அதனை வேண்டுகிறேன்.
பெதனியின்
சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கு பேராயர் அவர்கள் பல்வேறு விதமான திட்டங்களை வகுத்து
செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை கண்டு வருந்துகிறேன். பெதனியும்
ஆலயங்களும் யாக்கோபாயா மறைமுதுவரின் கட்டுப்பாட்டுக்குள்ளோ மலங்கரை யாக்கோபாயா
சமுதாயத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளோ நிறுவப்பட்டது அல்ல. இதனை தனித்துவ நிறுவனமாக
எண்ணியே துவங்கவும் செயல்படுத்தவும் செய்து வருகிறேன். நான் பேராயராக அருட்பொழிவு
செய்யப்பட்ட பின்னரும் பழைய செமினாரியில் வைத்து பெதனியின் தனித்துவ நிலையைக்
கைவிட வேண்டாம் என என்னிடம் பேராயர் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.
தற்போது பழைய செமினாரியில்
வைத்துக் கூடுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ள மலங்கரை யாக்கோபாயா சமுதாயத்தின்
பொதுக்குழுவிற்கு யாக்கோபாயா பள்ளிகளிலிருந்து பிரதிநிதிகளை அழைத்தது போன்று பெதனி
ஆலயங்களில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று பேராயர் அவர்கள் கடிதம்
அனுப்பியிருக்கின்றார். இவ்விபரம் என்னையோ மார் தியோஃபிலோஸ் ஆயரையோ தெரிவிக்கவில்லை.
திருவல்லாவின் பாலியக்கரா பெதனி ஆலயத்திற்காக அனுப்பப்பட்ட ஆணை அவ்வாலயத்தின்
பங்குத்தந்தையின் பெயரில் அனுப்பவில்லை. திரு மாமன் வக்கீல் அவர்களுடைய முகவரிக்கு
அனுப்பப்பட்டுள்ளது. அவர் பெதனி ஆலயத்தின் உறுப்பினர் கூட இல்லை. அந்த ஆலயத்தில்
இறை மக்கள் யாருமே இல்லை. மூன்று நபர்கள் ஆலயத்தில் இணைவதற்கு தங்களது மனுக்களை
வழங்கி உள்ளனர். ஆனால் அவர்களை ஆலயத்தில் சேர்க்கவோ பங்குப் பதிவேட்டில்
அவர்களுடைய பெயர்களை இணைக்கவோ செய்யப்படவில்லை. வேண்டுகோள் வைக்கப்பட்டதனால்
அவர்களுடைய இன்றியமையாத ஆன்மீகக் காரியங்களை நடத்துவதற்கு வழிவகை
செய்யப்பட்டுள்ளது.
யாக்கோபாயா
பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு பேராயர் அனுப்பிய ஆணையால் பெதனி ஆலய பங்குகளின்
பெயரில் யாரேனும் கையொப்பமிட்டு அதனை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அது
போலியானதாகும் என தெரிவித்துக் கொள்கிறேன். தனித்துவ நிலை சார்ந்த எந்த ஒரு பெதனி
ஆலயத்திலிருந்தும் பிரதிநிதிகளை இந்தக் கூட்டத்திற்கு அனுப்புவதும் இல்லை.
பிரதிநிதியாக யாரேனும் அக்கூட்டத்திற்கு வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அவ்வாறு
செய்வதற்கு அனுமதியும் இல்லை. பேராயர் அவர்கள் இவ்வாறு செயல்படுவது பிரதிநிதிகளை
அழைப்பதன் வழியாக பெதனி ஆலயங்களை யாக்கோபாயா சமுதாயத்தின் கீழ் உள்பட்டது எனக்
காண்பிப்பதற்காக செய்கின்ற செயல்களே ஆகும். இவ்வாறு சாட்சியங்களையும்
கோப்புக்களையும் சரி செய்த பின்னர் பெதனி ஆலயங்களை நீதிமன்ற வழக்குகளின் வழியாக
யாக்கோபாய சமுதாயத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று முன்னின்று செயல்படுவது
பேராயரே ஆவார். நீங்கள் எனது தந்தையும் குருவுமே ஆவீர். எந்த ஒரு களங்கவும்
இல்லாமல் அன்போடும் நம்பிக்கையோடும் பாலபருவமுதல் இன்று வரை உங்களோடு இணைந்து
பணியாற்றியுள்ளேன்.
இன்னும் ஒரு சில
காரியங்களை ஆயர்களைத் தெரிவிக்க தொடர் கடிதங்களில் எழுதி அனுப்புவேன். யாக்கோபாய
சமுதாயத்தின் எதிர்காலம் இறைவனின் மேன்மையைப் போற்றுவதாக இருக்கக்கூடிய விதத்தில்
ஆலோசனைகளும் செயல்களும் ஆயர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தாழ்மையோடு
வேண்டுகிறேன். இதுவரையிலும் ஆயர்களை அன்போடும் மதிப்போடும் கண்டறிந்த நாங்கள்
தொடர்ந்து அந்த மதிப்பும் ஆதரவும் மரியாதையும் தொடர்ந்து செலுத்துவோம்.
கிழக்கு
திருச்சபைகளின் முக்கிய நம்பிக்கைகளுக்கு மாற்றம் ஏற்படாமல் கத்தோலிக்க
திருச்சபையோடு மறுஒன்றிப்படைய சாத்தியமாகுமா என ஆலோசிப்பதற்கு என்னை நீங்களும்
உயர் பேராயரும் இணைந்து பொறுப்பு ஒப்படைத்தீர்கள். அந்த ஆலோசனைகளும் சில
ஏற்றுக்கொள்ளவும் சிலவற்றை எதிர்க்கவும் செய்ததாக நான் அறிகின்றேன். இவைக் குறித்து
சில விடயங்களை பின்னர் நான் உங்களுக்கு அறிவித்துக் கொள்வேன்.
மார் இவானியோஸ் பேராயர்
வெண்ணிக்குளம் 6 . 1.
106
அதிகாரம் 29
பேராயரும் கே.சி மாமன் மாப்பிள்ளையும்
கேரளா கிறிஸ்தவ மக்களின் அரசியல் சமூக
இலக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு 40க்கும் மேற்பட்ட ஆண்டுகள் எழுத்துக்களாலும்
நாவாலும் செயல்களாலும் அயராது பாடுபட்டு உழைத்த மதிப்புக்குரிய ஒரு நபர்தான் மி கே
சி மாம்மன் மாப்பிள்ளை என்பவர். இவர் கோட்டயம் எம்டி செமினாரி மேல்நிலைப்
பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றிய போது தான் நமது கதாநாயகன் மாணவனாக கல்விக்
கூடத்தில் பள்ளிக்கூடப் படிப்பைத் துவங்கினார். குரு சீடர் என்ற நிலையில் உருவாகிய
உறவு மரணம் வரையிலும் நீண்டிருந்தது என அவரது வாழ்க்கை வரலாறு தெளிவாக்குகின்றது.
கேரளாவின் யாக்கோபாயா திருச்சபையின் பலவித வளர்ச்சிக்கும் இவ்விரு சமுதாய முன்னணி
நபர்கள் ஒன்றிணைந்து பல ஆண்டுகள் செயல்பட்டனர். ஆலோசனைகள் நடத்தினர். கட்டுரைகள்
எழுதினர். உரைகளை நிகழ்த்தினர். ஆனால் இறுதியில் இவர்களுடைய கொள்கைகளும்
கருத்துக்களும் ஒன்று கொண்டு இணைந்திராத விதத்தில் வேறுபட்டு நின்றன.
கருத்து வேறுபாடு
யாக்கோபாயா திருச்சபையில் நிலைத்திருந்து
ஆயர் கட்சி, பாவா கட்சி மற்றும் மார்தோமா திருச்சபையோடுள்ள இணைப்பிற்கு முயற்சிகள்
மேற்கொள்ளவும் கேரளாவின் புதிய கூற்றினரான சுறியானிக்காரர்கள் இணைந்து செயல்படவும்
வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர் தான் மி. மாம்மன் மாப்பிள்ளை. இதற்காக பல
கட்டுரைகளை மலையாள மனோரமாவில் எழுதவும் பல முயற்சிகளை மேற்கொள்ளவும் இணைப்பிற்காக
முயன்றவர்களை ஊக்குவிக்கவும் செய்திருந்தார். ஆனால் மார் இவானியோசின் கருத்து
என்பது மேற்குறிப்பிட்ட ஒன்றிப்பு நிகழ்வதாக இருந்தால் மட்டும் புதிய கூற்றினரின் வளர்ச்சி
மேன்மை அடையாது எனவும் அகில உலக திருச்சபையான கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்தால்
மட்டுமே நமது சமுதாயம் வளர்ச்சியடைய முடியும் என்ற கொள்கையை கொண்டிருந்தார்.
ஒரு குருவானவராக இருந்தபோதே நமது
கதாநாயகனின் இந்த கருத்து பற்றி திரு மாம்மன் மாப்பிள்ளை அவர்கள் தனது வரலாற்றுக்
குறிப்பில் எழுதியுள்ளார். 1923ல் வீரராகவ ஐயங்காரின் உயர் நீதிமன்ற தீர்ப்பு
மூலம் ஆயர்க்கட்சியினர் வட்டிப் பண வழக்கில் தோல்வி அடைந்தபோது தொடர் நடவடிக்கைகள் என்ன என ஆலோசித்து
தீர்மானித்திட அக்கட்சி பிரமாணிகளின் கூட்டம் ஒன்று கோட்டயத்தில் வைத்து
நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் நடந்த உரையாடல்களை பற்றிதிரு மாமன் மாப்பிள்ளை
இவ்வாறு எழுதியுள்ளார்.
“தனித்துவ நிலையில் அமைய வேண்டும் என்ற பல
மக்களின் கருத்தின்படி கோட்டயத்தில் வைத்து ஆயர் கட்சியினரின் ஒரு பொதுக்கூட்டம்
நடைபெற்றது. அதனில் அருட்தந்தை பி. டி. கீவர்கீசும், கொச்சியில் போலீஸ் சூப்பிரண்டாக
இருந்த பி எம் சாக்கோவும் வந்திருந்தனர். சமுதாயத்தின் நிலை பற்றி நானும்
அருள்தந்தை பிடி கீவர்கீசும் நீண்ட ஆலோசனைகளை நடத்தினோம். அப்போது நாம் கத்தோலிக்க
திருச்சபையில் இணைந்தால் என்ன என தனது கருத்தை அருள்தந்தை பி டி கீவர்கீஸ் முன்
வைத்தார். அன்றே அவருக்கு கத்தோலிக்க திருச்சபை நோக்கிய ஒரு சாய்வு இருந்தது.
அதற்கு மறுமொழியாக நான் “கத்தோலிக்க
திருச்சபையில் சேர்ந்தால் மட்டுமே விண்ணகம் அடைய முடியுமோ! இல்லையெனில் விண்ணக
இன்பம் பெற முடியாது என்பதில் நான் நம்பவில்லை” எனக் கூறினேன். மட்டுமல்ல நமது
சமுதாயத்தில் பல மக்களுக்கும் கத்தோலிக்க திருச்சபையோடு இணைவதற்கு உடன்பாடு இல்லை.
பிரமாணிகளாகிய நாம் மட்டும் கத்தோலிக்க திருச்சபையோடு இணைவதாக இருந்தால் நமது
சமுதாயத்தினர் ஆயனில்லா ஆடுகளைப் போல மாறிவிடுவர். நாம் அவர்களை அனாதைகளாக விடுவது
மிகப்பெரிய குற்றமாகும். எனவே சமுதாயத்தினரோடு இணைந்து ஒன்றாக கத்தோலிக்க
திருச்சபையில் இணைவதைப் பற்றிய ஆலோசனைகள் மேற்கொள்வதில் எனக்கு எந்தவிதமான
மாற்றுக் கருத்தும் இல்லை எனக் கூறினேன்.
அருட்தந்தை பி டி கீவர்கீஸ், “நம்மைப் போன்ற
தலைவர்கள் கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து அதனுடைய சாத்தியக் கூறுகளை
எடுத்துக்காட்டுவதன் வழி மீதமுள்ளவர்கள் நம்மைத் தொடர்வார்கள்.”
மாம்மன்: நான் அப்படி கருதவில்லை. நாம் அவ்வாறு
நினைப்பதும் எண்ணுவதும் தவறு. மட்டுமல்ல, நாம் கத்தோலிக்க திருச்சபையில் இணைய
வேண்டியது அத்தியாவசியத் தேவையாகவும் எனக்குத்
தெரியவில்லை. (தொடர் எண்ணங்களும் ஒன்றிப்பு முயற்சிகளும், மலையாள மனோரமா வார இதழ்,
Vol 11 எண் 45, பக்கம் 45)
முதல்வரும் தலைமை ஆசிரியரும்
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலிருந்து
முதுகலைப் பட்டம் பெற்றுக்கொண்ட பி டி கீவர்கீஸ் திருத்தொண்டரை ஆயர் புலிக்கோட்டு மார்
திவன்னாசியோஸ் அவர்கள் அன்றைய கி வர்கீஸ் மல்பான் அவர்களின் பரிந்துரைப்படி எம்டி செமினாரி
உயர்நிலைப் பள்ளிக்கூடத்தின் முதல்வராக நியமித்தார்.
பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியராக இருந்த
மாமன் மாப்பிள்ளையின் கீழே ஒரு ஆசிரியராக கிவர்கிஸ் திருத்தொண்டரை நியமிப்பதற்குப்
பதிலாகவும் திரு மாமன் மாப்பிள்ளையை மாற்றி அதற்குப் பதில் தலைமையாசிரியராக
திருத்தொண்டரை நியமிக்கவும் கொண்டிருந்த கருத்து நிலை காரணமாகத் தான் முதல்வராக
திருத்தொண்டரை நியமித்தனார். இக்கருத்துச் சூழலை உணர்ந்துகொண்ட கே சி மாமன்
மாப்பிள்ளை அவர்கள் உடனடியாக பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் பொறுப்பை ராஜினாமா
செய்து பத்திரிகை நிறுவனத்திலும், வங்கி பணிகளிலும் கவனம் செலுத்தத் துவங்கினார்.
அதன் பிறகு முதல்வர் என்ற நிலையில் திருத்தொண்டரின் செயல்களை விமர்சித்து சில
கடிதங்களை அவருக்கு அனுப்பவும் செய்தார். ஒரு சில மாதங்கள் இருவரும் இடையே கருத்துப்
போர்கள் நடைபெற்றன.
இதைப் பற்றி திரு மாமன் மாப்பிள்ளை அவர்கள்
தனது வாழ்க்கை குறிப்பு எழுதப்பட்ட பகுதி இவ்வாறு;
எதிர்பாராத எனது தியாக மனநிலை - கே சி மாமன்
மாப்பிள்ளை
“அருட்தந்தை பி டி கீவர்கீஸ் பி ஏ இளங்கலை
பட்டம் பெற்று முதுகலை பட்டம் பெற்றுக்கொள்ள கற்றுக் கொண்டிருந்த போதே அவருக்கு
கிடைக்கக் கூடிய பதவி நிலை என்ன என்பது பற்றி எனக்கு தெளிவாக அனுமானிக்க
முடிந்தது. ஜோதிட மொழியில் எனது பணித்தளத்தில் திருஷ்டி பதித்திருந்த ஒரு
கிரகமாகவே நான் அவரது வாழ்க்கை நிலையை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
அவ்வாறு நான் எதிர்பார்த்த கொடிய நாடகம் அரங்கேறியது. இரண்டு ஆண்டுகளாக நான்
இத்தகைய சூழலை எதிர்பார்த்து இருந்தேன். இத்தகைய ஒரு துயர நிகழ்வு எனக்கு
வருவதற்கு முன்னே நான் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என பல முறைகளிலும்
சிந்தித்திருந்தேன். ஆனால் அத்தகைய நிலை எப்படி வரும் என்பதை நான் எதிர்பார்த்து
காத்திருந்தேன். நான் எதிர்பார்த்ததைப் போன்று அருள்தந்தை பி டி கீவர்கீஸ் அவர்கள்
பள்ளிக்கூடத்தின் சர்வாதிகாரி போல முதல்வரின் இருக்கையில் அமரவும் செய்தார்.
நான் எங்கே செல்வது? மனைவியும் நான்கு குழந்தைகளும் அடங்கிய எனது
குடும்பத்தை வழிநடத்திக் செல்ல வேண்டும் என்ற சுமையும் என்னிடம் உள்ளது. எனது
இத்தகைய சூழலில் எந்த ஒரு வழியும் எனக்கு இல்லாமல் இருந்தது. தலைமையாசிரியர்
பொறுப்பை நான் எனது வாழ்வின் அனைத்துமாக நம்பி இருந்தேன். தூக்கிலிடப்படும்
வேளையில் கால் பகுதியில் உள்ள பலகையை தட்டி மாற்றி உடல் தொங்கி நின்றவாறு ஆடுகின்ற
ஒரு அனுபவம் தான் எனக்கு ஏற்பட்டது. ஜனவரி மாதத்தில் பள்ளிக்கூட படிப்பு
துவங்குவது வழக்கம். இத்தகைய ஏளனங்களுக்கு மத்தியிலும் நான்கு மாதங்கள் கோடை விடுமுறை
வரையிலும் இவற்றையெல்லாம் மனதில் ஒதுக்கி வைத்து அவ்விடத்தில் பதுங்கி பணி செய்து
வந்தேன். அதிகாரப்பூர்வமாக எனக்கு மேலாக நியமிக்கப்பட்ட முதல்வரோடு எந்த விதமான
கருத்து வேறுபாடுகள் மூலம் போராட்டங்களுக்கு உட்பட வேண்டாம் என மறைந்து செயல்பட்டிருந்தேன்.
(Manorama
weekly Vol 1 No 26 page
33)
எம் ஏ அச்சனின் தியாக மனநிலை
1909ல் கிவர்கிஸ் திருத்தொண்டர் குருத்துவ அருள்நிலைக்கு
உயர்த்தப்பட்ட அன்று முதல் எம். எ அச்சன் என்ற செல்லப் பெயரால் அவர் அழைக்கப்பட்டார்.
குருவானவரான பிறகு மாம்மன் மாப்பிள்ளையோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளவும்
இருவரும் நெருங்கிய தோழர்களாக ஒருமித்து செயல்படவும் செய்தனர்.
நமது கதாநாயகனின் திறந்த பரந்த மனநிலை
பற்றியும் தியாக மனநிலை பற்றியும் மன்னிக்கும் குணம் பற்றிய ஒரு நிகழ்வை வட்டச்சேரில்
வர்கீஸ் அவர்களோடு ஆயர் கூறியது இவ்வாறு. “வெறுக்க கூடிய விதத்தில் வார்த்தைகளை
பயன்படுத்தி மாம்மன் மாப்பிள்ளை அவர்கள் பல கடிதங்களை எனக்கு அனுப்பியிருந்தார்.
நான் திருத்தொண்டராக இருந்தபோது இக்கடிதங்கள் அனைத்தையும் பத்திரமாக பாதுகாத்தேன்.
குருவானவரான பிறகு கடிதங்கள் வைத்திருப்பது நல்லதல்ல என அவற்றை நான் அழித்து
விட்டேன். அவ்வாறு திரு மாம்மன் மாப்பிள்ளை அவர்களிடமிருந்த வெறுப்புகள் மாறவும் அவரோடு
நல்லுறவு ஏற்படுத்துவதற்கும் முடிந்தது.
பின்னர் எம் ஏ அச்சனும் மாம்மன் மாப்பிள்ளையும்
சமுதாயம் சார்ந்த அனைத்து காரியங்களையும் ஒருவருக்கொருவர் ஆலோசித்து செயல்பட்டு
வந்தனர். பத்திரிகை செயல்களிலும், அரசு சார்ந்த செயல்களிலும், வங்கிப் பணிகளிலும்,
நாட்டு மக்களுக்காக பல பணிகளும் செய்வதற்கு எனக்கு ஊன்றகோலாக இருந்தது முதல்வரோடு
இருந்த கருத்து வேறுபாடுகளும் தலைமை ஆசிரியர் என்ற பொறுப்பிலிருந்து ராஜினாமா
செய்ததும் என பலமுறை பலரோடு திரு மாம்மன் மாப்பிள்ளை அவர்கள் எடுத்துக்
கூறியுள்ளார்.
யாக்கோபாய திருச்சபையின் அசாதாரணமான சூழலில்
வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ் அவர்களுக்கு அனைத்து விடயங்களிலும் ஆலோசனைகளை
வழங்கியவர்கள் எம் ஏ எச்சன், திரு மாம்மன் மாப்பிள்ளை, திரு பிலிப்போஸ் எம் ஏ பி எல் மற்றும் கே வி
சாக்கோ பி எல் டி ஆகியோர்கள் ஆவர். இந்நால்வருள் திரு மாம்மன் மாப்பிள்ளையைத் தவிர
மூன்று நபர்களும் பின்னர் கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்து கொண்டனர்.
நடுநிலை
ஆயர் மார் இவானியோஸ் அவர்களை முக்கிய நபராகக்
கொண்டு ஆர்த்தடோக்ஸ் திருச்சபையின் மற்று ஆயர்கள் நடத்தி வந்த கத்தோலிக்க மறுஒன்றிப்பு
ஆலோசனைகள் திரு மாம்மன் மாப்பிள்ளை அவர்கள் அறிந்தவாறே அமைந்துள்ளன. திரு மாமன் மாப்பிள்ளை அவர்களுக்கு
அதற்கு எதிராகவோ சார்பாகவோ எழுதவோ செயல்படவோ முடியாத ஒரு சூழலாக இருந்தது.
ஆசிரமத்தவர்களோடு இணைந்து மார் இவானியோஸ்
பெதனி மலையிலிருந்து வெளியேறி வெண்ணிக்குளத்தில் வாழ்கிறார் என்றும் கத்தோலிக்க
திருச்சபையோடு மறுஒன்றிப்படைய தீர்மானித்தார் எனவும் அறிந்த திரு மாம்மன்
மாப்பிள்ளை அவர்கள் திருவல்லாவுக்கு சென்று ஆயரை சந்தித்தார். கத்தோலிக்க ஒன்றிப்பிற்கு
தனக்கு சார்பாக இருந்த பல காரணங்களும் நிகழ்வுகளும் மாம்மன் மாப்பிள்ளை அவர்களோடு
ஆயர் அப்போது எடுத்துரைத்தார்.
இதைப் பற்றி ஆயிரம் அவர்கள் தனது வாழ்க்கை
வரலாற்றுக் குறிப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்:
“ஒரு சில நாட்களுக்குப் பின்னர் திரு மாம்மன்
மாப்பிள்ளை அவர்கள் என்னைக் காண்பதற்காக திருமூலபுரம் ஆசிரமத்திற்கு வந்தார்.
கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைய தீர்மானித்திருந்த விவரம் அறிந்து பின்னர் தான்
அவர் என்னை காண்பதற்காக வந்தார். கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைவதற்கு என்னை
ஊக்குவித்த காரணங்களை நான் அவரோடு எடுத்துக் கூறிய போது பதில் மொழியாக அவர்
இவ்வாறு கூறியிருந்தார்.
“நீங்கள் குறிப்பிட்ட காரணங்களால்
கத்தோலிக்க திருச்சபையோடு இணைய தீர்மானித்தீர்கள் என்றால் அதற்கு எதிராக நான்
கூறுவதற்கு ஒன்றும் இல்லை. எனது நாசியில் சுவாசம் உள்ள காலம் வரையிலும் நானும்
மனோரமா இதழோ உங்களது முயற்சியை எதிர்க்கவும் மாட்டோம். ஆர்த்தடோக்ஸ் திருச்சபையில்
முக்கிய பிரமாணிகள் என்னை வந்து காணவும் அவர்களோடு எனது மனத்திடனைப் பற்றி
வெளிப்படுத்தவும் செய்திருந்தேன். (ஆத்மகதாகதனம்)
மனோரமாவின் முகவுரைகள்
கத்தோலிக்க திருச்சபையும் திருத்தூதுவ
அரியணையையும் பற்றி இந்த அளவுக்கு அறிவும் மதிப்பும் உள்ள மற்றொரு நபரை கேரள
அகத்தோலிக்க திருச்சபை தலைவர்களில் உருவாகவில்லை என எண்ணத்தக்க விதத்தில்
கட்டுரைகளையும் செய்திகளையும் திரு மாம்மன் மாப்பிள்ளை அவர்கள் அழகிய தனது
எழுத்துக்களால் பல முறைகளிலும் எடுத்துரைத்துள்ளார். எடுத்துக்காட்டாக மலையாள மனோரமாவில்
கத்தோலிக்க திருச்சபையின் மகத்துவத்தை பற்றி அவர் எழுதியிருந்த முகவுரையின் ஒரு
பகுதி இணைக்கப்படுகிறது.
உலகில் தற்போது உள்ள அல்லது இதற்கு முன்
உருவான மகா சக்திகளில் எதுவும் கத்தோலிக்க திருச்சபையின் மகிமையோடு ஒப்புமைப்படுத்தக்
கூடிய வித்த்தில் உருவாகவில்லை என்பது உண்மையாகும்.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற வரலாற்று
ஆசிரியரான மெக்காளி கத்தோலிக்க திருச்சபை பற்றி ஆங்கில மொழியில் எழுதப்பட்டவற்றை
பலரும் வாசித்து அறிந்திருக்கலாம். உரோமை திருச்சபையை நிறுவிய பின்னர் பல மகா
சக்திகள் உருவாகவும் நலிவுறவும் அழிவுறவும் செய்தன. எனினும் கத்தோலிக்க திருச்சபையின்
வலிமை இதுவரையிலும் கூடத் தான் செய்ததல்லாமல் குறையவே இல்லை. ஐரோப்பாவின் மேற்கு
நாடுகளில் உள்ள அனைவருமே உரோமை திருச்சபையின் உறுப்பினர்கள் ஆவர்.
ஆனால் உரோமை திருச்சபையின் அருள் தந்தை
லூதர் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முயற்சி செய்து சில காலங்களுக்குப் பின்னர் உரோமை
திருச்சபையிலிருந்து வழி தவறிச் சென்றனர். இருப்பினும் இக்னேஷியஸ் லயோலா மற்றும் பிரான்சிஸ்
சேவியர் போன்ற புனிதர்களின் வியப்புக்குரிய நல்வாழ்வு வழியாக இழந்து போனவை
அனைத்தும் லாபமாக திரும்ப பெறுவதற்கு முடிந்தது. (மலையாள மனோரமா 1909 ஆகஸ்ட் 28)
திருத்தந்தையின் திருத்தூதுவ அரியணை பற்றி
மனோரமாவில் திரு மாம்மன் மாப்பிள்ளை எழுதிய கட்டுரையின் பகுதி பின்வருமாறு:
கிறிஸ்து ஆண்டின் துவக்கம் முதலே கிறிஸ்தவ
மையமாக இருந்த உரோமை நகரில் துவக்க காலத்திலிருந்தே திருத்துவது அரியணை நிலைத்து
நிற்கிறது. பல அரசுகளும் பேரரசுகளும் உலகில் உதிக்கவும் மறைந்து போகவும் செய்தன.
அவற்றையெல்லாம் கண்டவாறு பெயரோடும் புகழோடும் நிலைத்து நிற்கின்ற கத்தோலிக்க
திருச்சபை என்றும் அதன் தலைமைப் பதவியோடு நிலைத்து நிற்கிறது.
பூவுலகம் பல இன அரசு முறைகளால் வேறுபட்டு
இருந்தாலும் நவீன காலத்தில் அனைத்து இனத்தவர்க்கும் பக்திக்கும் மதிப்பிற்கும் உரியதாக
கத்தோலிக்க திருச்சபை உள்ளது. கத்தோலிக்க திருச்சபை என்ற குழுமத்திற்குள்
அமைந்திருந்தாலும் அகில உலக திருச்சபையின் சமாதானத்திற்காகவும் உலக நன்மைக்காகவும்
எப்போதும் குரல் எழுப்புகின்ற நபராக திருத்தந்தை மட்டுமே இவ்வுலகில் உள்ளார்.
இங்கிலாந்துகாரர்களும் ஜெர்மன்கார்ர்களும், மேற்கு
நாட்டவர்களும், கிழக்கு நாட்டவர்களும் திருத்தந்தையை பக்தியோடு மதிப்பளித்து அவரது
நீதி அரியணையை நம்பி செயல்பட்டு வருகின்றனர். பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், இத்தாலி போன்ற உலகின் 40 நாடுகளின்
பிரதிநிதிகள் திருத்தந்தையின் தலைநகரில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நாடுகளிலும் மற்ற
நாடுகளிலும் திருத்தந்தையும் தனது பிரதிநிதிகளை அனுப்பியுள்ளார். (மலையாள மனோரமா
1929 ஜூன் 4)
மாமன் மாப்பிள்ளைக்கு அனுப்பிய கடிதம்
மார் இவானியோஸ் ஆயர் பெதனி மலையிலிருந்து
வெளியேறி திருவல்லாவின் திருமூலையில் தங்கியிருந்தபோது தனது அன்பரான திரு மாம்மன்
மாப்பிள்ளைக்கு அனுப்பிய ஒரு கடிதம் இங்கே சேர்க்கப்படுகிறது. கிறிஸ்தவ
திருச்சபைகளின் மறுஒன்றிப்பின் தேவையை இலட்சியமாகக் கொண்டு அதற்காக தன்னையே பலியாக
சமர்ப்பித்து தன்னுடைய பரிபூரண நிலையை வெளிப்படுத்தியும் கத்தோலிக்க
திருச்சபையோடும் திருத்தந்தையின் திருத்துவது அரியணையோடும் இணைந்து மட்டுமே
கேரளாவின் சுறியானித் திருச்சபைக்கு ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேம்படுத்த முடியும்
என்ற உண்மையை விளக்கியும் இக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதை நம்மால் உணர்ந்து
கொள்ள முடியும்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இக்கடிதத்தின்
மொழிபெயர்ப்பு சேர்க்கப்படுகிறது.
திருவல்லா 14 1 106
அன்புக்குரியவரே
கடந்த நாட்களில் நான் உங்களைக் குறித்து
அதிகமான நேரங்களில் நினைவு கூர்ந்தேன். எனது காலடிகள் ஒவ்வொன்றும் இறைவனே
வழிநடத்துகின்றார் என்ற பரிபூரண நம்பிக்கை எனக்கு உண்டு. நான் பிறந்து வளர்ந்த
சமுதாயத்தின் மறுமலர்ச்சியும் வளர்ச்சியும் மட்டுமே குறிக்கோளாக்கி இறைவனுடைய திருவுளப்படி
வழிநடத்தப்படுவதற்கு நான் விரும்புகிறேன். தன்னலம் சார்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வு கூட
எனது பகுதியிலிருந்து நடைபெறவில்லை என்பதையும் எடுத்துக் கூறுகின்றேன். அன்பான
கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையில் இன்றைய கிறிஸ்தவ உலகில் ஒன்றிப்பு மிகவும்
தேவையானது என நான் நம்புகிறேன். உரோமையைத் தவிர்த்து இத்தகைய ஒன்றிப்பு
சாத்தியமாகும் என்பது இல்லை. இதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது உரோமை கத்தோலிக்க
திருச்சபையே ஆகும். ஒன்றிப்பிற்காக என்னை முழுவதும் பலியாக சமர்ப்பிக்க வேண்டும்
என்று இறைவனின் ஆவியானவர் இக்காலங்களில் மிகவும் வலுவோடு என்னை வழி நடத்திக்
கொண்டிருக்கிறார். மகத்தான இத்தகைய வலிமைக்கு மட்டுமே சமுதாயத்தை மீட்கவும்
முடியும். இக்கொள்கையை பிறருக்கு எடுத்துக்காட்ட இறைவன் என்னை அழைப்பதாக நான்
பரிபூரணமாக நம்புகிறேன்.
பெதனி மலையிலிருந்து வெளியேறுவதற்கு ஏற்பட்ட
உடனடி காரணம் என்னவென்றால் மார் திவன்னாசியோஸ் பேராயர் தற்போது மேற்கொண்ட
நடவடிக்கைகளே ஆகும். அதைப்பற்றிய விவரங்களை உயர் பேராயருக்கும் மார் திவன்னாசியோஸ்
பேராயருக்கும் நான் விளக்கமாக எழுதியுள்ளேன். இத்தகைய விளக்கக் கடிதங்களுள் ஒன்றை
நான் உங்களுக்கும் அனுப்புகிறேன். யாக்கோபாய திருச்சபை இதுவரையிலும் கொண்ட
வழிகாட்டுதல்களும் வழிமுறைகளும் குழப்பங்களுக்கு காரணமாயின என்பதுதான் எனது
கருத்து.
கத்தோலிக்க ஒன்றிப்பு பற்றிய எனது கருத்தோடு
நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதும் எனக்கு தெரியும். ஆனாலும் வேறுபட்ட
கருத்துக்களோடு இணைந்திருந்து நட்புடன் முன்னோக்கி செயல்படுவோம் என்ற கொள்கையில்
நான் திருப்திப்படுகிறேன். “Let us agree to differ and still continue as
the best of friends.” கடந்த மாதங்களில் பல
தடவை நீங்கள் என்னை வந்து சந்தித்தது எனக்கு பல்வேறு விதங்களில் ஊக்கமளிப்பதாக
இருந்தது. பேருண்மையை உங்களோடு எடுத்துக் கூறிய போது எனது மனதில் கடினமாக
சித்திரவதை செய்து கொண்டிருந்த வேதனையைத் தணித்திட உங்களது சந்திப்பு காரணமானது.
அன்பு என்னும் பெருங்கடலுக்குள் குதிக்க
எல்லாம் வல்ல இறைவன் என்னை தூண்டுவதாக நான் நம்புகிறேன். உரோமாபுரியோடு
நடத்தப்பட்ட கடிதப் போக்குவரத்துகளில் தன்னலத்தோடு ஒரு வார்த்தை கூட நான்
எழுதவில்லை. இறைவனின் பெயரின் மேன்மைக்கும் யாக்கோபாயா சமுதாயத்தின்
வளர்ச்சிக்கும் மார் தோமா திருத்தூதரின் ஆன்மீக வழிமரபினரின் ஒன்றிப்பும் மட்டுமே
நான் குறிக்கோளாக கொண்டிருந்தேன். நமது வழிபாட்டு சடங்குகளும் திருவழிபாடுகளும்
அங்கீகரித்து பாதுகாக்கவும் நமது குருக்களின் மற்றும் ஆயர்களின் அருள் பொழிவுகளின்
உண்மை நிலையை ஏற்றுக் கொள்ளவும் செய்தால் மட்டுமே மறுஒன்றிப்புக்கு நாங்கள் தயாராவோம்
என்பதுவே எனது கருத்தாக இருந்தது. உரோமாவிலிருந்து அவற்றையெல்லாம் அவர்கள்
அங்கீகரித்தும் இருக்கிறார்கள். இவற்றைப் பற்றி விவரமாக வெளியிட வேண்டும் என நான்
திட்டமிட்டுள்ளேன்.
உரோமாபுரியோடு நடத்தப்பட்ட கடிதப்
போக்குவரத்துகளில் உயர் பேராயர் அரியணையும் தொடர்ந்து ஆயர் குழுவினரின்
ஒட்டுமொத்தமான ஒன்றிப்பையுமே நான் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். அவ்வாறு பழைய கூற்றினர்
மற்றும் புதிய கூற்றினரான சுறியானிக்காரர்களாகிய அனைவரிடமும் ஒன்றிப்புக்கான வழி
திறக்க வேண்டும் என நான் விரும்பினேன். சமுதாய முன்னேற்றத்திற்காக நான் இவ்வாறு
செயல்பட்டதன் வழியாக பல்வேறு விதமான சித்திரவதைகளுக்கு நான் உட்பட்டுள்ளேன்.
இத்தகைய சித்திரவதைகள் எனக்கு நன்மையே உளவாக்கியதனால் சித்திரவதைகளை செய்தவர்களோடு
நான் நன்றியுள்ளவனாக இருக்கின்றேன். கடந்த சனிக்கிழமை மார் திவன்னாசியோஸ் பேராயர்
திருவல்லாவில் வந்து என்னை சந்தித்தார். இறைவன் எனக்கு காட்டித் தந்த பேருண்மையை
நம்பி பின்தொடர இறைவனை அழைக்கிறார் என்ற பேருண்மையை அவரோடு நான் தெரிவிக்க வேண்டிய
சூழலும் எனக்கு உருவானது.
அன்புடன்
உங்களது நம்பிக்கைக்குரிய மார் இவானியோஸ்
இறுதி பிரியாவிடை
திருவனந்தபுரம் பட்டம் ஆயரகத்தில் நமது
கதாநாயகன் மரணப்படுக்கையில் படுத்திருக்கின்ற போது திரு மாம்மன் மாப்பிள்ளை
அவர்கள் முதுமையின் நிலையிலும் ஆயரை வந்து சந்திப்பதற்காக கோட்டயத்திலிருந்து
தலைநகருக்கு வந்தடைந்தார். கேரளா சுறியானி திருச்சபைகளின் வளர்ச்சிக்காக பல
ஆண்டுகள் அயராது பாடுபட்டு உழைத்த இரண்டு முக்கிய நபர்களுக்கிடையே இவ்வுலகில்
இறுதி பிரியாவிடை கூறுகின்ற காட்சியை கண்ணீரோடு ஆயிரகத்தின் பணியாளர்கள் கண்டனர்.
மரண தூதுவனின் வரவை வரவேற்று சோர்ந்து
படுத்திருந்த மார் இவானியோசை சந்தித்த வேளையில் மாம்மன் மாப்பிள்ளை அவர்கள் அவரை
கட்டியணைத்தார். ஆறுதல் கூறவும் பழைய கால நிகழ்வுகளை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்து
இருவரும் பேசி அழவும் செய்தனர். நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு பிரியாவிடை கூறி
திரு மாம்மன் மாப்பிள்ளை அவர்கள் கோட்டயம் நோக்கி செல்லவும் செய்தார்.
நமது கதாநாயகன் இறந்த பிறகு அவரது இறப்பின்
நினைவில் மலையாள மனோரமாவில் எழுதப்பட்ட முகவுரையில் எந்த அளவு மதிப்பும்
மரியாதையும் நமது கதாநாயகனிடம் திரு மாம்மன் மாப்பிள்ளை அவர்கள் கொண்டிருந்தார்
என்பது தெளிவாக உள்ளது. அப்பகுதி இதனுடன் இணைக்கப்படுகிறது:
காலமான ஆயர் மார் இவானியோஸ்
எம் ஏ அச்சன், எம் டி செமினாரி முதல்வர்,
செரம்பூர் கல்லூரி பேராசிரியர், பெதனி ஆசிரம நிறுவனர், ஆபோ கிவர்கீஸ், மார்
இவானியோஸ் மற்றும் பேராயர் மார் இவானியோஸ் எனப் பல பெயர்களிலும் நிலைகளிலும்
பெயரும் புகழும் பெற்ற ஆயர் மரணம் அடைந்த செய்தி துயரத்தை உருவாக்கியுள்ளது. கடந்த
அரை நூற்றாண்டுகளாக அவரை விலக்கி வைக்க முடியாத விதத்தில் அவர் உறுப்பினராக இருந்த
சமுதாயத்திலும் நிறுவனங்களிலும் இயக்கங்களிலும் அவர் முக்கியத்துவம்
கொண்டிருந்தார். அறிவு, ஞானம், செயல்படுத்துறன் மற்றும் பேச்சுத்திறன்
போன்றவற்றால் தலைமைப் பதவியை அலங்கரித்த தலைவர்களுக்கு தேவையான குணங்களை
முற்றிலுமாக கொண்டிருந்த குறைவான மகான்களுள் இவரும் ஒருவர்.
எத்தகைய முயற்சியைத் துவங்கினாலும் வெற்றியைக்
கொள்வேன் என்ற அடங்கா எண்ணம் ஏராளமாக அவருடைய வாழ்வில் ஏற்பட்டுள்ளன. மலங்கரை
சுறியானி சமுதாயத்தின் வட்டிப் பண வழக்கின் துவக்கக் காலம் முதலே முதன்மையானவராக
இருந்த வட்டச்சேரில் ஆயரின் வலது கரமாக செயல்பட்ட முக்கிய நபர்களில் மார்
இவானியோஸ் அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
கிறிஸ்தவ உலகில் மட்டுமல்ல மற்று மத
குழுக்களுடையவும் கருத்தையும் ஆதரவையும் ஏற்றுக்கொண்ட பெதனி இயக்கம் மிகப்பெரிய
சமுதாய மாற்றத்தை உருவாக்கியது. பல மணி நேரங்கள் அங்கியைப் போலும் அகற்றாமல் எம் ஏ
அச்சன் காவி நிற அங்கியும் மண்சட்டியுமாக மகாகவி தாகூரின் விஸ்வ பாரதி மற்றும் மகாத்மா
காந்தியின் சபர்மதி ஆசிரமத்தையும் பின்னணியாகக் கொண்டு ராந்நியில் பெதனி மலையில்
தனது நிலையான இடத்தை அமைத்த போது சமுதாய பக்தர்களுக்கு அது ஒரு திருத்தலமாக
அமைந்தது. என்ன வந்தாலும் பூதம் காக்கின்ற நிதி போலும் திரவியம் காத்திருந்த கஞ்சர்கள்
போலும் அதன் வாழ்க்கை முறையிலும் அகப்பட்டு தங்களது பணத்தை அன்பளிப்பு
செய்திருந்தனர்.
மலங்கரை சுறியானி சமுதாயத்தின் வருங்கால
பாதுகாப்பிற்காக உரோமை திருச்சபையோடு இணையாமல் முடியாது என அவர் தனது கருத்தை
வலியுறுத்திக் கொண்டிருந்தார். அவரது இக்கொல்கை அவர் சார்ந்திருந்த தாய்த்
திருச்சபைக்கு மிகவும் வேதனையை உருவாக்கியது. ஆனால் உரோமை திருச்சபையோடு இணைந்த
பின்னர் அசாதாரணமான அவருடைய திறமைகளை பயன்படுத்தி முதல் தர கல்லூரியும் பல உயர்நிலை
பள்ளிக்கூடங்களும் மற்றும் நிறுவனங்களும் வழிநடத்துவதற்கு அவரால் முடிந்தது.
மேற்கு நாடுகள் சந்திப்பின் போது யாவரையும் கவர்ந்திழுக்கும் விதத்தில் அவருடைய
சொல் திறனும் சொற்பொழிவுகளும் வழியாக ஏராளமான நன்கொடைகளை இந்நிறுவனங்களுக்காக
அவரால் பெற்றுக்கொள்ள முடிந்தது.
வரலாறு படைத்த அவருக்கு சார்பாக மற்றும்
எதிரான விமர்சனங்களுக்கு அவர் உள்பட்டார் என்பதை பார்த்து வியப்புற வேண்டியதில்லை.
சுறியானி அணி சமுதாயத்தில் அழியாத முத்திரை ஒன்றை அவர் பதித்திருக்கின்றார்.
கருத்துக்களில் வேறுபாடு கொண்டிருந்தவர்களோடும் அவரது திறமைகளைப் பற்றியும் வலுவான
அவரால் இயன்ற நிலைகளைப் பற்றியும் சம்மதித்துக் கொடுக்காமல் இல்லாத முறையில் ஒரு
மகானாக இருந்தார் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
திருத்தந்தையிடமிருந்து பலவிதமான
மதிப்புகளையும் தனிப்பட்ட திருச்சபை சார்ந்த பதவிகளையும் ஏற்றுக் கொள்ளத் தக்க
விதத்தில் நல்ல ஆளுமை கொண்டிருந்த ஒரு மகானின் மரணம் கேரள கிறிஸ்தவ உலகுக்கு
பொதுவாக கேரள கத்தோலிக்க திருச்சபைக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய நஷ்டமே
ஆகும். அத்தகைய ஆயர் அவர்களின் ஆன்மா நித்திய சாந்தி அடைவதற்கு வேண்டுகிறேன். (மலையாள
மனோரமா 1953 ஜூலை 17)
அதிகாரம் - 30
பெதனிமலைக்கு பிரியாவிடை
ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டவைகளாக
இருந்தாலும் வேறுபட்ட இரண்டு விடயங்களே மனத்திடனும் மனமாற்றமும். (Conviction is one thing but
conversion is another thing). கத்தோலிக்கத் திருஅவையின்
புனிதரான பெரும் பேச்சாளர் ஒருவர் இவ்வாறு தனது உரையில் கூறினார். “I can
convince many but I cannot convertt one”. என்னால்
பலருள் மனத்திடனை உருவாக்க முடியும். ஆனால் ஒருவனை மனமாற்ற என்னால் முடிவதில்லை.
கத்தோலிக்க திருச்சபையே கிறிஸ்து நிறுவிய
ஒரே உண்மை திருச்சபை எனவும், அதனில் உறுப்பினராக வேண்டியது எனது ஆன்மாவின்
மீட்புக்கு உறுதியான வேண்டுதலாக உள்ளது எனவும் மனத்திடன் கொண்டதால் கத்தோலிக்க
திருச்சபையோடு இணைந்தார் எனவும் கூற முடியாது.
உண்மையை கண்டறிய தேவையான அறிவும்
சிந்திக்கும் திறனும் ஒருவனில் மனத்திடனை உருவாக்கும் என்பது தெளிவு. ஆனால் இந்த
மனத்திடன் அதாவது இறையருளின் ஊற்றாகிய வல்லமை பெற்ற செயலாகத் தான் இறுதியாக
கத்தோலிக்க திருச்சபையோடு இணையும் நிலையை உருவாக்கியது.
கட்டாயப்படுத்தப்பட்ட கடிதங்கள்
கத்தோலிக்கத் திருச்சபையோடு ஒன்றிணைவதற்கான
செயலில் காலதாமதம் ஏற்படுத்துதல் ஆகாது. நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற
வேண்டுதல்களோடு ஏராளமான கடிதங்களை மார் இவானியோஸ் பெற்றுக் கொண்டார். இவ்வாறு
எழுதப்பட்ட இரண்டு கடிதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
1926ல் மறுஒன்றிப்பு நிகழ்வுக்கு முன்னால்
உண்மை கண்டறியும் நிலைக்கு துணை நின்ற பத்தனந்தட்டை மற்றும் அதைச் சுற்றிய
பகுதிகளில் கத்தோலிக்க மறைப்பணித் தளங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த அருட்தந்தை
கீவர்கீஸ் பீடிகயில் அவர்கள் பெதனிக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பி இருக்கின்றார்.
அருட்தந்தை கீவர்கீஸ் பீடிகயில் அவர்களது கடிதம்
Fr. Geevarghese
Peeddikayil Omalloor, Pathanamthita Po, Travancore
18.1.1930
My dear Lord,
பெதனிக்கு வந்து
ஆயர் அவர்களை நேரடியாக நான் கண்டு பேசியதில் மிகவும் மகிழ்கிறேன்.
திருச்சபை
சம்பந்தமான ஒரு சில விடயங்கள் எனது அறிவுக்கு தெரிந்தாலும் அவற்றுக்காக நான் இது
வரையிலும் துணிந்து முன்னேறவில்லை. ஆயர் அவர்கள் கத்தோலிக்க திருச்சபையோடு
ஒன்றிணையப் போவதான செய்திகள் இரண்டு ஆண்டு காலமாக பரவி வருகின்றன.
தற்போது
திருத்தூதுவப் பீடத்திலிருந்து அதற்கான அனுமதி பெற்று கடைபிடிக்க வேண்டிய
திருவழிபாட்டு முறையும் பெற்றுக் கொண்டதில் இன்புற்று துள்ளி மகிழ்கிறோம். ஆனால்
ஒரு பெரிய கூட்டத்தினர் தற்போது உண்மையை புரிந்து கொள்ளாமல் எதிர்வலை ஏற்படுத்திக்
கொண்டிருக்கின்றனர்.
அனைத்து
இடங்களிலும் பக்தியும் கீழ்ப்படிதலும் கொண்ட உண்மை யாக்கோபாயர்கள் பதனியோடு
இணைந்து நிற்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆயர் அவர்களோடு உமது பாதச்சுவடுகளை
பின்பற்றி நடப்பர் என்பது நிச்சயம்.
ஆயர் அவர்களின்
ஒன்றிணைவதற்கான காலதாமதத்தை பலரும் பொறுமை இன்றி காண்கின்றனர். ஆயர் அவர்கள்
அறிவிக்க வேண்டியவற்றை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
காலதாமதம் ஏற்படுவதனால் ஆயர் அவர்கள் உங்களுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக்
கூடிய நிலை ஏற்படுகிறது.
இப்போது
ஒவ்வொருவரும் உங்களையே அவர்கள் மிரட்டி வருகின்றார்கள். தங்களுக்கு துணை புரியும்
ஆயர்களையும் இவ்வாறு மிரட்டுவது வருத்தமான காரியம் என்பதை இந்த நேரத்தில்
தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனவே இனியும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல்
தைரியத்தோடு உதயசூரியனைப் போல மகிழ்வோடு வீரத் தலைமுறையாக அல்ல அவர்களுள் ஒரு
தலைவராக மாறி தாகத்தோடு காத்திருக்கும் எங்களுக்கு இறைஅருள் வழங்கிட
வேண்டுகிறேன்..
இங்கிலாந்து நாட்டில் கர்தினால் நியூ மான்
என்பவருடைய மனமாற்றத்தைப் போன்று இவ்விடத்து கத்தோலிக்கர்களும் ஆயர்களும்
கருதியுள்ளனர். கொல்லம் ஆயர் அவர்களும் அவ்வாறே கருதியுள்ளார்.
யாக்கோபாயர்களில் பலர் ஆயர் அவர்களுக்கு
எதிர்வலை வீசிக்கொண்டு இருந்தாலும் ஆயர் அவர்களுடைய காலத்திலேயே ஆயர் அவர்கள்
கூறியவை அவர்களுக்கு பெதனியும் புளிப்புச் சுவையூட்டும் புளிப்புமாவாக அமையும்.
உண்மைக்கு எதிராக நிற்க யாராலும் முடிவதில்லை.
பேதுருவின் தலைமைப் பொறுப்பும் மெசியாவின்
இறை மனித குணங்களும் பற்றிய யாக்கோபா திருச்சபையின் தப்பறைகளை சீக்கிரமாக
தெளிவிக்க வேண்டிய உண்மைகளாகும்.
ஆயர் அவர்கள் மறுஒன்றிப்படைந்தவுடன்
உடனடியாக பெதனிக்கு சொந்தமாக சத்திய தீபம் போன்ற ஒரு நாளிதழையும் சில நூல்களையும்
வெளியிட வேண்டும். ஆங்காங்கே கத்தோலிக்கக் கோட்பாட்டு விளக்க கருத்தரங்குகள் நடத்த
வேண்டும்.
முதலாவது கருத்தரங்கினை நான் தங்கி
இருக்கும் ஆலயத்திலேயே நடத்துமாறு வேண்டுகிறேன். அழகான ஆலயமும் அழகான ஆலய
முற்றமும், தங்கும் வசதி படைத்த கட்டிடமும் கொண்ட இவ்விடத்தில் ஆயர் அவர்கள்
மறுஒன்றிப்படைந்து வருகின்ற புண்ணிய நாளை நான் மிகவும் பேரார்வத்தோடு எதிர்பார்த்து
காத்திருக்கின்றேன்.
இவையெல்லாம் நடந்து உடனடியாக ஐரோப்பா
மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டுகிறேன். அத்துடன் பெற்றுக்
கொள்ள வேண்டிய அனைத்து ஆக்கமும் ஊக்கமும் உடனடியாக பெற்றுக் கொள்வீர்கள்.
ஆயர் அவர்கள் இன்னும் தாமதிப்பது ஆயரின்
சொந்த நிலைக்கும் செயல்களுக்கும் நல்லதல்ல என ஒரு முறை கூட வேண்டுகிறேன்.
தங்களது உடல் நலனுக்காக வேண்டுகிறேன்.
தங்களது எளிய தாசன்
அருட்தந்தை கீவர்கீஸ் பீடிகயில்
முனைவர் ஆயர் பென்சிகரின் கடிதம்
நமது கதாநாயகரின் மறுஒன்றிப்பு உடனடியாக
நடப்பதற்காக ஜெபங்களாலும் உபதேசங்களாலும் கடிதப் போக்குவரத்துக்களாலும் முயன்று
கொண்டிருந்த கொல்லம் ஆயர் முனைவர் பென்சிகர் அவர்கள் இறுதியாக மார் இவாணியோஸ் அவர்களுக்கு
அனுப்பிய கடிதம் பதனி மலையிலிருந்து உடனடியாக வெளியேறுவதற்கும் கத்தோலிக்க
திருச்சபையை இணைந்து செயல்பட தூண்டுவதற்கும் தூண்டுகோலாக இருந்தது.
கொஞ்சம் காலதாமதத்தோடு மற்று ஆர்த்தோடக்ஸ்
திருச்சபையின் குருக்களோடும் பொதுமக்களோடும் பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகளை
நடத்தி அதிகமான மக்களோடு கத்தோலிக்க திருச்சபையில் இணைவது நல்லது என மார் இவாணியோஸ்
அவர்கள் முனைவர் பென்சீகர் அவர்களுக்கு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தின் பதிலுரையாக
ஆயர் வெண்சிகர் அவர்கள் எழுதியுள்ளார்.
தங்கள் தலைவரோடு இணைந்து ஒரு கூட்டம் மக்கள்
ஓரிடத்திற்காக பயணம் மேற்கொள்கின்றபோது பயணத்தின் இடையே அனைவருமாக ஒரு பெரிய குழிக்குள்
விழுந்து விட நேர்கிறது. அக்கூட்டத்தின் தலைவருக்கு இந்த மக்களோடு கூறி அனைவரையும்
குழியிலிருந்து வெளியேறச் செய்வதற்கு வழி நடத்த ஆசைதான். ஆனால் குழியிலே
கிடக்கின்ற தலைவர் எப்படி தன்னையும் தன்னோடு வந்தவரையும் பாதுகாப்பாக மீட்க
முடியும்? ஆனால் தலைவர் எவ்வாறேனும் கரைக்கு வந்த பின்னர் அக்குழிக்கு கயிறு அல்லது ஏணி
அனுப்பி மற்று நபர்களையும் மீட்க முடியும்.
எனவே ஆயர் அவர்கள் உடனடியாக பெதனி
மலையிலிருந்து உறவுகளோடு இணைந்து வெளியேறி கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணையுமாறு
வேண்டுகிறேன். அதன் பின்னர் அகத்தோலிக்க திருச்சபையினரை கத்தோலிக்க திருச்சபைக்கு
கொண்டு வருவதற்கு ஆயர் அவர்களால் கட்டாயமாக முடியும் என நம்புகிறேன்
கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைவது
உறுதிப்படுத்திக் கொண்டும் வேகப்படுத்திக் கொண்டும் உள்ள ஒரு கடிதமாக மார்
இவானியோஸ் ஆண்டகைக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இரு அருட்பணியாளர்களின் மறுஒன்றிப்பு
பெதனி ஆசிரமத்தின் உறுப்பினர்களாக இருந்த
திருத்தொண்டர் ஒருவரும் குருவானவர் ஒருவரும் மனசாட்சியின் தூண்டுகோலால் கத்தோலிக்க
திருச்சபையை விரும்பி பின்பற்றிட துவங்கினர்.
துவக்க காலத்தில் ஆசிரமத்தின் உறுப்பினராக
இணைந்த சூரநாடு என்னுமிடத்தைச் சார்ந்த கோசி என்னும் பெயர் கொண்ட திருத்தொண்டர் மற்றும்
செங்கன்னூர் என்னுமிடத்தைச் சார்ந்த அருட்தந்தை
கி வர்கீஸ் ஆகியோர் கத்தோலிக்கத் திருச்சபையோடு இணயும் மிகப்பெரும் பேற்றினை
பெற்றுக் கொண்டனர்.
கோசி என்ற திருத்தொண்டர் ஆசிரமத் தலைவரின்
அனுமதியோடு அங்கிருந்து வெளியேறி கத்தோலிக்க திருச்சபையில் சேர்ந்து சாமுவேல்
என்னும் பெயரை பெற்றுக்கொண்டு கர்மலித்தா துறவு சபையின் ஒரு உறுப்பினராக தன்னை இணைத்துக்
கொண்டார்.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக பெதனி ஆசிரமத்தின்
பல்வேறு பொறுப்புகளால்அதனை நிர்வகித்து வந்த அருள்தந்தை கீவர்கீஸ் மனசாட்சியின்
தூண்டுதலால் பெதனி ஆசிரமத்தை விட்டு சங்கனாசேரி மறைமாவட்ட தலைமையகத்திற்கு சென்று 1929
செப்டம்பர் 25ஆம் தேதி ஆயர் முனைவர் காலாசேரி அவர்களுடைய முன்னிலையில் நம்பிக்கை அறிக்கையை
அவர் எடுத்துக் கூறி கத்தோலிக்கத் திருச்சபையின் உறுப்பினராக மாறினார்.
இவ்விருவரும் பெதனையாசிரமத்தில் இருந்து
வெளியேறி கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து கொள்வதற்கு ஆசிரமத் தலைவராகிய மார் இவானியோஸ்
அவர்கள் எந்த விதமான தடையாகவும் நிற்கவில்லை என்பது தெளிவு. “சற்று கால தாமதத்தோடு
இருங்கள்! நாம் அனைவரும் இணைந்து கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்து கொள்ளலாம்” என
அடிக்கடி உபதேசமாக அவர்களோடு கூறி இருந்தார்.
கத்தோலிக்க திருச்சபையோடு இணைய வேண்டும்
என்ற ஒரு பேரார்வத்தினால் அவர்கள் காலதாமதத்தை பார்த்துக் கொள்ளாமல் தாங்களாகவே
கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்து கொண்டார்கள்.
புனித குழந்தை தெரேசாவின் பரிந்துரை
பெதனியில் நடைபெற வேண்டிய இப்பொண்ணிய செயலான
மறுஒன்றிப்பு செயல் வடிவங்கள் முடிந்த அளவுக்கு சீக்கிரமாக நடக்கவிருப்பதை உலக
மக்கள் பலர், பல ஆயிரங்கள் தினம் தோறும் ஜெபித்துக் கொண்டே இருந்தார்கள்.
மறைப்பணிகளின் பாதுகாவலரான புனித குழந்தை தெரேசாவின் பரிந்துரை வேண்டி இறைவனிடம்
ஏராளமானவர்கள் ஜெபிக்கத் துவங்கினர்.
கத்தோலிக்க திருச்சபையை விரும்பி ஏற்றுக்
கொண்ட அருட்தந்தை கி வர்கீஸ் சங்கனாசேரி செத்திப்புழ ஆசிரமத்தின் ஒரு துறவியாக
வாழ்ந்திருந்த அருட்தந்தை மன்சிலினோஸ் டி ஓ சி டி வழியாக புனித குழந்தை தெரசாவின்
சகோதரியான மதர் ஆக்னஸ் அவர்களுக்கு மறுஒன்றிப்பு சிறப்புற செப உதவி வேண்டி ஒரு கடிதத்தை அனுப்பினார்.
பெதனி ஆசிரமத் தலைவர்களான ஆயர்களின் மறுஒன்றிப்புக்காக
தினந்தோறும் புனித குழந்தை தெரசாவின் பரிந்துரை வேண்டி ஜெபிக்க வேண்டும் என்று மதர்
ஆக்னஸ் அவர்களுக்கு பதில் கடிதம் அனுப்பி இருந்தார். மதர் ஆக்னஸ் மற்றும் அங்கு
வசித்து வந்த அருட்கன்னியர்களும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் நடத்தக்கூடிய நவநாள் ஜெபங்களை
இணைந்து வழிநடத்தினார்கள்.
தொடர்ந்து 1930 ஆகஸ்ட் மாதத்தில் அவர் எழுதிய
கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
“We
believe that our little Saint will obtain grace for those two Prelates to enter
the fold very soon”.
திருச்சபையின் தொழுவத்துக்குள் நுழைய
வேண்டிய ஆர்வத்தைக் கொண்டிருக்கும் இந்த இரண்டு தலைமை குருக்களுக்கும் நமது
குழந்தை தெரசா அதிவேகமாக இளறைவனிடமிருந்து அருள் வரங்களை வாங்கி அருள்வார் என
நாங்கள் விசுவசிக்கின்றோம்.
மதர் ஆக்னஸ் அவர்களும் குழுவினரும் நவநாள்
ஜெபங்களை செபிக்கத் துவங்கி ஒரு மாதம் முடிவடைவதற்கு முன்னாலேயே புனித குழந்தை
தெரசாவின் பரிந்துரை வழியாக பலனை அனுபவிக்கத் தொடங்கினோம் என்பது அற்புதமாகவே
ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
வளைந்த சிலுவை சபதம் மேற்கொண்ட கயிற்றை உடைத்த கண்ணீர்த்
துளிகள்
கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்த
பின்னர் மார் இவானியோஸ் ஆண்டகை அவர்களுக்கு கோதமங்கலத்தில் வைத்து கத்தோலிக்கர்கள்
ஆடம்பரமான மிகப்பெரிய வரவேற்பு நல்கினார். அன்று நடந்த வாழ்த்துரை கூட்டத்தில்
அப்பங்கின் பங்குத்தந்தை நடத்திய வரவேற்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
“1653 நமது ஆயர்களில் சிலர் மட்டாஞ்சேரி
வளைந்த சிலுவையில் கட்டிய கயிறு அறுக்கப்பட்டது இன்று தலைமை பீடத்தில்
அமர்ந்திருக்கும் மேதகு ஆயர் அவர்கள் ஆவார் என நான் மகிழ்வுடன் அறிக்கை
விடுகின்றேன்”.
இத்தகைய வாழ்த்துரையை கேட்டுக் கொண்டிருந்த மார்
இவானியோஸ் ஆண்டகை அவர்கள் தனது பதில் உரையில் இவ்வாறு கூறினார்.
“வளைந்த சிலுவையின் கயிற்றை உடைக்கச்
செய்தது தான் என்றே பங்குத்தந்தையின் வாழ்த்துரை கூறியதை கூறியிருந்தார். ஆனால்
அவர் தவறாக கூறியதாக நான் மன்னிப்பு கேட்கிறேன். வளைந்த சிலுவை சபத்தின் கயிற்றை
உடைத்தது நான் இல்லை. ஆனால் பல ஆயிரம் விசுவாசிகளின் கண்ணீர்த் துளிகள் தான். 1653 க்கு
பின்னர் கேரளா கிறிஸ்தவர்களிடையே ஏற்பட்ட பிளவு அதாவது பல தப்பறைகளுக்கு பரிகாரம்
உண்டாக்கவும் வளைந்த சிலுவை சபதத்தில் அகப்பட்ட புத்தன்கூர் மக்களை தாய்
திருச்சபையோடு கத்தோலிக்க திருச்சபையில் திருப்பி கொண்டு வர வேண்டி உலகத்தின்
நான்கு திசைகளிலும் தனிப்பட்ட முறையில் மலங்கரையில் உள்ள பல ஆயிரக்கணக்கான பக்த
கோடிகள் இறை சன்னதியில் மனமுருகி கண்ணீரோடு ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுடைய கண்ணீர்த் துளிகள் தான் வளைந்த சிலுவை சபதத்தின் கயிற்றின் மீது பல
ஆண்டுகளாக விழுந்து கொண்டிருந்தது. அதன்படியாக அக்கண்ணீரினால் பாதிப்படைந்த கயிறு
இறுதியில் 1930 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி தானாகவே அறுந்து போய்விட்டது.
ஆகையால் வளைந்த சிலுவை சபதத்தில் நாள் கட்டப்பட்ட கயிறு உடைக்கப்பட்டது நான்
என்பது அல்ல பல ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் துளிகள் தான்” என்பதை எடுத்துக்கூறினார்.
பெதனியின் மறுஒன்றிப்பும் கேரளத்தின் மறுஒன்றிப்பு
இயக்கமுமான புதுக்குழந்தை பல ஆயிரக்கணக்கான மக்களின் ஜெபத்தின் பலனாக பிறந்தது என மேதகு
ஆயர் அவர்கள் ஐயமின்றி தெளிவாக எடுத்துக் கூறினார்.
ஆசிரமத்திற்கு உள்ளே நடந்த எதிர்ப்பலை
இறையருளாலும் நமது கதாநாயகனின் இடைவிடாத
தீவிர முயற்சியாலும் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைவதற்கான சூழல் பலராலும்
ஏற்புடையதாகவே அமைந்திருந்தாலும் பதனி ஆசிரமத்தின் உள்ளறையில் உள்ள பலருடைய
எதிர்ப்பலை துவக்க காலம் முதலே இருந்தது.
ஆயர் அவர்களோடு வலங்கையாக துவக்க காலம்
முதல் பெதனியின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த
அருட்தந்தை அலக்ஸியோஸ் (பின்னர் ஆர்த்தோடக்ஸ் திருச்சபையின் மார் தேவோதோசியோஸ் ஆயர்)
பெதனி ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை வகித்திருந்தார். ஆசிரமவாசிகளான குருக்களும்
துறவிகளும் (சாதுக்கள் எனவும் அழைக்கப்படுவர்) அருட் கன்னியர்களும் மொத்தமாக
தன்னைத் தொடர்ந்து கத்தோலிக்கத் திருச்சபையோடு மறுஒன்றிப்படைவர் என்ற திட
நம்பிக்கை நமது கதாநாயகனுக்கு இருந்தது.
மறுஒன்றிப்பு பற்றிய ஆலோசனைகளும் கடிதப்
போக்குவரத்துக்களும் நடந்து கொண்டிருந்த சூழலில் தனக்கு சார்பாக பேசவும்
செயல்படவும் செய்திருந்ததனால் தனக்கெதிரான எதிர்ப்பலைகள் கொண்டவர்கள் ஆசிரமத்தில்
காணப்படவில்லை என ஆயர் அவர்கள் நம்பியிருந்தார்கள். கனவிலும் கூட தனக்கு எதிரான
எதிர்ப்பலை ஆசிரமத்திற்கு உள்ளே ஏற்படும் என்று அவர் எண்ணவில்லை.
பெதனி ஆசிரமத்தை வழிநடத்த பண உதவி பெற்றிட
வேண்டி சிங்கப்பூருக்கு அருட்தந்தை அலக்சியோஸ் ஆசிரமத் தலைவரால் அனுப்பப்பட்டார்.
எதிர்பாராத விதமாக எந்தவிதமான பண உதவியும் பெற்றுக்கொள்ள முடியாமல் ஒரு மாத
காலத்திற்கு மேலாக உடல்நிலை பாதித்ததனால் அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை
மேற்கொண்டு வந்தார். தன்னால் எந்த விதமான நன்கொடையும் வசூலிக்க முடியவில்லை
நோயினால் திரும்பி வந்தேன் என்று மார் இவானியோஸ் அவர்களுக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.
இவ்வாறு திரும்பி வந்த அவர் திருவல்லாவில் திருமூலம் என்னும் இடத்தில் மார்
இவானியோஸ் ஆண்டகையை சந்தித்தார்.
அப்போதும் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைகின்ற
விடயங்களைப் பற்றி பேசிய போது அதற்கு ஏற்ற கருத்துடைய சம்மதமே என்ற முறையில்
அருள்தந்தை அலெக்ஸ் அவர்களும் ஆயர் அவர்களோடு பதிலளித்திருந்தார். எந்தவிதமான
எதிர் கருத்துக்களும் அவர் பேசவில்லை.
நோயினால் பாதிக்கப்பட்டு பயணக் களைப்பு
இருப்பதனால் பெதனி ஆசிரமத்திற்கு சென்று ஒரு சில தினங்கள் ஓய்வெடுக்கவும் அன்புக் கட்டளையிட்டார். இவ்வாறு பெதனிக்கு
செல்வதற்கு முன்னால் தனது தந்தையின் சகோதரன் அருட்தந்தை அலெக்ஸ் அந்தரையோஸ்
மட்டக்கில் என்பவரை சந்திக்க கோட்டயம் பழைய குருத்துவ பயிற்சியகத்திற்கு சென்றார்.
அத்துடன் ஆயர் வட்டச்சேரில் அவர்களையும் அவர் சந்தித்தார்.
மறுஒன்றிப்பு முயற்சிகளுக்கு
எதிரிகளாயிருந்த இவ்விருவரும் அருட்தந்தை அலக்சியோஸ் அவர்களோடு மறுஒன்றிப்பு பற்றி
எதிராக பேசவும் ஒருபோதும் மறுஒன்றிப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கவோ அவருக்கு
சார்பாக பேசவோ அவரோடு கூட செயல்படவோ வேண்டாம் என அறிவுரையும் வழங்கினர்.
“எனது மகனே இந்த முதிர்ந்த வயதில் என்னை
விட்டுப் போகாதே!” என தனது தந்தையின் சகோதரர் கண்ணீரோடு கூறிய வார்த்தைகள் அருட்தந்தை
அலக்சியோஸ் அவர்களுடைய இதயத்தை தொட்டது. மட்டுமல்ல வட்டச்சேரில் ஆயர் அவர்கள்
மற்றும் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருடைய அறிவுரைகளும் வேண்டுதல்களும் ஆசிரமத்
தலைவரான மார் இவானியோஸ் அவர்களின் கட்டளைகளுக்கு எதிரான ஒரு மனநிலையை அருள்தந்தை
அலெக்ஸ் அவர்களுடைய உள்ளத்தில் ஏற்படுத்தியது.
இவ்வாறு எதிர்மறை நிலையோடு பெதனி
ஆசிரமத்திற்கு வந்தடைந்த அருட்தந்தை அலக்சியோஸ் ஆசிரமத் தலைவரின் கட்டளைக்கு ஏற்ப
ஓய்வெடுப்பதற்கு மாறாக மறுஒன்றிப்பு இயக்கத்தைப் பற்றிய முயற்சிகளுக்கு எதிரான
கருத்துக்களை பரப்பத் துவங்கினார்.
துறவிகள் யாரும் மார் இவானியோஸ் ஆண்டகையோடு
கத்தோலிக்க திருச்சபையில் இணைய வேண்டாம். சுறியானித் துறவியர்களை உரோமாத்
திருச்சபையோடு இணைக்கின்ற முயற்சிக்கு யாரும் முன் வர வேண்டாம் என பேசத்
துவங்கினார். தாய்த் திருச்சபையான யாக்கோபாயா திருச்சபையை விட்டுச் செல்வது
மிகப்பெரிய பாவம் என அருட்தந்தை அலக்சியோஸ் துறவிகளோடு கற்பிக்கத் துவங்கினார்.
இத்தகைய எதிர் கருத்துக்களை ஆசிரமத் துறவியர்கள் ஒரு சிலர் நம்பி ஏற்றுக்
கொள்ளவும் செய்தனர்.
இவ்வாறு ஆசிரமத்தில் உள்ள பலருடைய
உள்ளங்களிலும் தனது எதிர்ப்பலை கருத்துக்களை பரப்பியதை வரவேற்கப்பட்டதாக்க் கொண்டு
தொடர்ந்து ஆசிரமத்திற்கு வெளியே உள்ள பல ஆலயங்களிலும் தங்கி இருந்த குருக்களோடு கடிதம்
மூலமாக மறுஒன்றிப்புக்கு எதிரான கருத்துக்களை விளக்கமாக அனுப்பவும் செய்தார்.
புறமற்றம் என்னும் ஆலயத்தில் தங்கியிருந்த
அருட்தந்தை பர்ஸ்லிபா மற்றும் மங்கலம் ஆலயத்தில் தங்கியிருந்த அருட்தந்தை ஜோப்
ஆகியோருக்கு மறுஒன்றிப்பு முயற்சி ஒரு ஏமாற்று வேலை எனவும் ஒருபோதும் மார்
இவானியோஸின் கருத்துக்களோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டாம் எனவும் கடிதப்
போக்குவரத்து நடத்தினார். திருமூலம் என்னும் இடத்தில் தங்கி இருந்த ஆயர் மார்
இவானியோஸ் மேற்குறிப்பிட்ட குருக்களிடமிருந்து இத்தகைய வருத்தமூட்டும் செய்திகளை
அறிந்து கொண்டார்.
ஓய்வெடுப்பதற்காக ஆசிரமத்திற்கு
அனுப்பப்பட்ட அருட்தந்தை அலக்சியோஸ் இவ்வாறு தன்னுடைய கருத்துக்களுக்கு எதிராக
செயல்படுகிறார் என்பதை அறிந்து மிகவும் வருந்தினார். உடனடியாக மறுநாளே மார் தியோபிலோஸ் அவர்களோடு
இணைந்து பெதனி ஆசிரமத்திற்கு செல்ல வேண்டும் என தீர்மானித்தார்.
மார் இவானியோஸ் ஆண்டகை அவர்களும் மார்
தியோபிலோஸ் ஆண்டகை அவர்களும் பெதனி ஆசிரமத்தை வந்தடைந்ததுடன் அருட்தந்தை அலக்சியோஸ்
அவர்களின் வெளிப்படையான எதிர்ப்பலைகளின் வலிமை குறையத் துவங்கியது. வெளிப்படையான
எதிர்ப்பறை கருத்துக்களை பரப்புவதை நிறுத்தி இரகசியமாக ஒவ்வொரு தனி நபரோடும்
அறிவுரைகளை வழங்கி எதிர்ப்பலைகளை பரப்பிக் கொண்டிருந்தார்.
ஆனால் மார் இவானியோஸ் ஆண்டகை அவர்கள்
திருச்சபை சார்ந்த விடயங்களை பற்றிய பயிற்சிகள் நடத்தவும் ஆசிரம வாசிகளோடு
சந்தேகங்களை கேட்கச் செய்து அவற்றிற்கு உடனடியாக பதில்களை வழங்கியும் திருச்சபை
விடயங்களை கற்பித்து வந்தார். அருட்தந்தை அலெக்ஸ்யோசும் ஓரிரு துறவியரும் தவிர
மீதியனைவரும் இத்தகைய வகுப்புகளில் கலந்து கொண்டு இருந்தனர். ஏறக்குறைய ஒரு மாத
காலம் ஆசிரமவாசிகள் கத்தோலிக்க திருச்சபை விடயங்களை அறிந்து கொண்டு தனக்கேற்ற
கருத்து நிலைப்பாடு அடைந்து கொண்டனர் என ஆயர் அவர்கள் அறியத் துவங்கினார்.
அருட்தந்தை அலெக்ஸ்யூஸ் மற்றும் குழுவினர்
தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பலைகளை ரகசியமாக பரப்பிய வண்ணம் செயல்பட்டனர்.
இச்செயல் ஆசிரமத் தலைவருக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது என்றாலும்
எதிர்த்து நிற்கும் குழுவினரோடு அன்பு கலந்த நிலையால் உறவில் நிலைத்திருந்தார்.
தொடர்ந்தும் தங்களுடைய முயற்சிகள் இறைவிருப்பத்தின் படியாக வெற்றி பெற வேண்டி
இரண்டு ஆயர்களும் இறைவனின் திருசன்னதியில் ஜெபித்துக் கொண்டே இருந்தனர்.
அவ்வாறு பெதனி மலையிலிருந்து வெளியேற
வேண்டிய நாள் மற்றும் நேரம் போன்றவற்றை மதிப்புக்குரிய ஆயர்கள் தீர்மானித்து
விட்டனர். 1930 ஆகஸ்ட் 20ஆம் தேதி (1106 சிங்கம் 4) அன்று ஆசிரமத்தில் இருந்து
வெளியேறி படகு வழியாக பம்பா ஆற்றை கடந்து கோழஞ்சேரி என்னுமிடத்தை அடைந்து அவ்விடத்திலிருந்து
பேருந்து மூலமாக திருவல்லாவுக்கு வந்து வாடகைக் கட்டிடம் ஒன்றில் தங்கியிருந்து
பணிகள் செய்திட அவர்கள் தீர்மானித்து இருந்தனர். திருவல்லாவில் தங்குவதற்குள்ள
கட்டிடம் வாடகைக்காக பெற்றுக்கொள்ளவும் குறிப்பிட்ட நாளில் கோழஞ்சேரி என்னும்
இடத்திற்கு பேருந்து அனுப்புவதற்கும் கிளீலேத்து சாக்கோ என்ற நபரிடம் ஒப்படைத்து
திருவல்லாவுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தனர்.
ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி மாலை மன்றாட்டைத்
தொடர்ந்து சிற்றாலயத்தில் வைத்து ஆசிரமத் தலைவர் ஒரு சிறிய உரை ஒன்று நிகழ்த்தினார்.
அதனுடைய கடைசி பகுதி இவ்வாறாக இருந்தது. “இந்த பெதனி மலையிலிருந்து நாளை காலையில்
நாங்கள் வெளியேறுகின்றோம் என தீர்மானித்து விட்டோம் என்பதை உங்களிடம் அறிவித்துக்
கொள்கிறேன். எங்களோடு இவ்விடத்திலிருந்து வெளியேறி கத்தோலிக்கத் திருச்சபையோடு மறுஒன்றிப்படைய
விருப்பமுடைய நபர்கள் இரவு 12 மணிக்கு முன்னரே எங்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.
எங்களோடு இணைந்து வருவதற்கும் வராமல் இருப்பதற்கும் உங்களுக்கு பரிபூரண சுதந்திரம்
ஆசிரமத் தலைவராகிய நான் வழங்குகின்றேன். இரவு 12 மணி வரை நாங்கள் இச்சிற்றாலயத்தில்
அமர்ந்திருப்போம்.
இச்சூழலில் ஆசிரமவாசிகளான அருட்தந்தை அலக்சியோஸ்,
திருத்தொண்டர் அலெக்சாண்டர் மற்றும் 3 துறவியர்கள் தவிர மீதி அனைவரும் இரவு 11:30
மணிக்கு முன்பாக ஆசிரமத் தலைவரின் முன்னிலையில் வந்து நாங்கள் உங்களோடு பெதனி
மலையிலிருந்து வெளியேறி உங்களை பின்தொடரத் தயாராக இருக்கிறோம் என அறிவித்தனர்.
ஆனால் தன்னோடு பெதனி மலையிலிருந்து வெளியேறி கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைவேன்
என எதிர்பார்த்திருந்த திருத்தொண்டர் அலெக்சாண்டர் (பின்னர் அருட்தந்தை செராபியோன்)
இரவு 11.30 மணி ஆன பிறகும் காணாமல் இருந்ததனால் நமது கதாநாயகன் கூடுதலாக
வருந்தினார். மீண்டும் திருத்தொண்டார் அவர்களுடைய மனமாற்றத்திற்காக தொடர்ந்து
இறைவனோடு ஜெபித்துக் கொண்டிருந்தார். இறை விருப்பத்தால் 11.45 மணியளவில் இறைத்
திட்டத்திற்கு ஏற்றபடியாக திருத்தொண்டர் அலக்சாண்டர் அவர்கள் சிற்றாலயத்தில் வந்து
ஆயர் அவர்களுடைய முன்னிலையில் முழந்தாட்படியிட்டு தானும் பெதனி மலையிலிருந்து
வெளியேறி கத்தோலிக்க திருச்சபையில் மறுஒன்றிப்படைய தயாராக உள்ளேன் என அறிவித்தார்.
இவ்வாறு தான் எதிர்பார்த்த அனைவரும் தன்னோடு உள்ளனர் என்ற மனதிருப்தியோடு
இறைவனுக்கு நன்றி கூறினார்.
“பெதனி மலையே புஷ்பஸ்லோமோ”
பெதனி மலையிலிருந்து ஆசிரமத் தலைவரும் துறவியர்களும்
வெளியேறிய நிகழ்வினை அருட்தந்தை பர்சலிபா ஓ ஏ சி அவர்கள் “பெதனையிட சரித்திரத்தில்”
அதாவது “பெதனியின் வரலாற்றில்” என்ற
கையெழுத்துப் பிரதியின் ஒரு பகுதியில் வர்ணனைகளால் அவர் எழுதியுள்ளார்.
பெருநாட்டின் முண்டன் மலையில் அமைந்துள்ள
பெதனி ஆசிரமமும் கட்டிடங்களும் விட்டொழிந்து அதனை நிறுவியவரான மார் இவானியோஸ் ஆண்டகையும்
அவரது சீடர்களாகிய துறவியர்களும் அவ்விடத்து அருட்தந்தை அலெக்சியோஸ் மற்றும் ஆசிரமவாசிகளோடும்
பிரியாவிடை கூறுகின்ற நாள் வந்துவிட்டது.
துறவியர்களின் உபயோகத்திற்கான பொருட்களை
மட்டும் கைகளில் எடுத்தால் போதும். மீதி உள்ளவை எல்லாமே இங்கே இருக்கட்டும் என்ற ஆயரின்
கட்டளைக்கு ஏற்ப அனைவரும் அவரவருடைய பொருள்களை மட்டும் எடுத்து வெளியே வைப்பதற்கான
பணிகளை செய்கின்ற போது ஆசிரமத்துக்கு வெளியே ஆலயங்களில் தங்கி இருந்த
பங்குத்தந்தைகளான அருட்தந்தை பர்ஸ்கீப்பாயும் அருட்தந்தை பர்சலிபாயும்
அவ்விடத்திற்கு எதேச்சையாக வந்தடைந்தனர்.
அவர்களும் துறவியர்களோடு கூட இணைந்து
ஒவ்வொருவருடைய பொருள்களையும் வெளியேற்றினர். அனாதை பிள்ளைகளின் மிகவும் வயது
குறைந்தவர்களை மட்டுமே அழைத்துக் கொண்டு செல்வதற்கு தீர்மானித்தனர். பொருட்களை
படகில் கொண்டு செல்வதற்கு வசதியாக ஆற்றங்கரை ஓரத்திற்கு கொண்டு செல்ல வேலையாட்கள்
தயார் ஆயினர். ஆயர்களும் துறவியர்களும் ஆசிரமவாசிகளும் பிரியா விடை கூறுவதற்கான நேரம் பக்கத்தில் வந்தது. அதுவும் வந்து
விட்டது.
“நாம் அனைவரும் சிற்றாலயத்திற்கு செல்வோம்”
என்று ஆயர் அவர்கள் கட்டளையிட்டார். வருந்தும் இதயங்களோடு, அதனால் வெளியேறுகின்ற
கண்ணீர்த் துளிகள் ஒவ்வொருவருடைய கன்னங்களிலும் வழிந்தோட ஆயர் அவர்களின் காலடிகளைத்
தொடர்ந்து அனைவரும் சிற்றாலயத்திற்குள் நுழைந்தனர்.
இரவு பகலாக நற்கருணைப் பேழையில் பள்ளி
கொள்ளும் அன்புத் தலைவன் சன்னிதியில் தலை குப்புற வீழ்ந்து வணங்கி ஒவ்வொருவரும்
தங்களுடைய துயரத்தை கண்ணீரோடு இதயம் நொறுங்கிய ஜெபங்கள் வழியாக காணிக்கையாகினர்.
சற்று நேரத்திற்குப் பின்னால் துடிக்கின்ற இதயத்தோடும் விறைக்கின்ற உதடுகளோடும், “நாம்
அனைவரும் எழும்புவோம்” என ஆயர் கூறினார்.
“நாம் யாவரும் எதுவும் இல்லாதவராக இங்கே
வந்தோம்! இதோ இப்போது எதுவுமே இல்லாதவர்களாக வெளியேறுகின்றோம்! “ தொண்டையிலிருந்து
வெளியேறிய இத்தகைய வருந்தும் சொற்கள் அடங்கிய வார்த்தைகள் மிகப்பெரிய கூட்ட அழுகைக்கு
மீண்டும் காரணமாக்கியது.
துயரத்தால் இதயத்தில் அணையாக கட்டிப்
பாதுகாக்கப்பட்டிருந்த கண்ணீர்த்துளிகள் விழிகளின் துளைகள் வழியாக வெளியேறி ஒழுகத்
துவங்கியது. அந்த நேரத்துச் சூழலை எடுத்துரைப்பது மிகவும் கடினமே. கொஞ்ச நேரம்
அமைதியாக அனைவரும் துயரத்தை மனதில் ஒதுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தபோது “நாம்
அனைவரும் வெளியேறுவோம்” என ஆயர் அவர்கள் எடுத்துரைத்தார். இப்போதும் பலர்
துயரத்தால் தங்களது அழுகையின் குரலை வெளிக்காட்டினார். இந்நாள் வரை ஆன்மீக வலிமை
தந்திருந்த நற்கருணை நாதரை இன்னும் எங்களால் இங்கே காண முடியாது, தொடர்ந்து
கத்தோலிக்க ஆலயத்தில் நற்கருணையில் அவரை நாங்கள் காண்போம் என உறுதிமொழி எடுத்துக்
கொண்டு ஒருமுறை கூட அவரோடும் பிரியா விடை வாங்கி இரு கைகளை கூப்பியவாறு அனைவரும் வெளியேறினார்கள்.
அருட்தந்தை அலெக்சியோஸ் இவற்றையெல்லாம்
கண்டவாறு மனம் வருந்தி திருப்பி தனது அறைக்குள் சென்றார். இங்கு நடந்த
நிகழ்வுகளுக்கு எதிலுமே எதிர்ப்பு காட்டியதைப் போன்று செயல்பட்டிருந்தார். இருப்பினும்
பன்னிரு ஆண்டுகள் ஒரே இடத்தில் சகோதர உறவால் நிலைத்திருந்த சகோதரர்களின் பிரியா
விடை அவருடைய மனதிலும் அவருடைய இதயத்திலும் மிகுந்த வருத்தத்தை உருவாக்கி
துவங்கியது. மார் இவானியோஸ் ஆண்டகை அவர்களும் அவரது சீடர்களும்
சிற்றாலயத்திலிருந்து இறங்கி மனம் ததும்புகின்ற இதயத்தோடும் கண்ணீர் ஒழுகுகின்ற
கன்னங்களோடும் அருள்தந்தை அலக்சியோஸ் அவர்களோடு பிரியா விடை கூறுவதற்காக அவரது அறைக்குச்
சென்றனர்.
அவரது அறைக்குச் சென்றபோது அவரும்
மிகப்பெரிய பிரிவின் வேதனையை அனுபவிப்பதாக கட்டிலில் சோர்ந்து படுத்திருந்ததாக
அவரை கண்டனர். தன்னால் அனைவரும் இவ்வாறு பிரிந்து செல்கின்றனர் என அவர்
வருந்தினார். என்ன செய்வதென்று அறியாமல் அவ்விடத்திலேயே அனைவரும் திகைத்து
நின்றனர். இருப்பினும் மனவேதனையால் துடிக்கின்ற அவருக்கு பணிவிடை செய்வது தர்மம்
அல்லவோ. அவர் நம்மோடு வெறுப்பு காட்டினாலும் அவரோடு நாம் அன்பில் குறைவும்
வெறுப்பும் காட்டக்கூடாது என அனைவரும் அவருக்கு பணிவிடைகளை செய்யத் துவங்கினர்.
ஒரு சிலர் அவருடைய கால்களை அசைத்து
தேய்த்துக் கொடுக்கின்றனர். சிலர் கைகளை அசைத்து தேய்த்துக் கொடுக்கின்றனர். ஒரு
சிலர் விசிறியால் காற்று கிடைக்கச் செய்கின்றனர். சற்று கலக்கமான ஒரு சூழல். மன
வேதனையால் தான் அத்தகைய நிலை ஏற்பட்டது என அனைவருக்கும் தெரியும். சற்று
நேரத்திற்கு பின் அனைத்துமே சீரானது.
ஆயர் அவர்கள் அவரை அழைத்தார். உடனடியாக
கண்களை திறந்தார். அனைவரையும் ஒருமுறை தனது வருந்தும் கண்களால் உற்று நோக்கினார். ஆயர்
அவரது தலையில் கை வைத்து ஜெபித்தார். அசைய வலுவின்றி அப்படியே கட்டிலில்
படுக்கையில் இருந்தார். ஆயர் அவர்கள் தனது கைகளில் அணிந்திருந்த றிஸ்ட்
கைக்கடிகாரம் ஒன்றை அவிழ்த்து அருட்தந்தை அவர்களுக்கு வழங்கி “இதோ எனது கடைசி
பரிசு. நாங்கள் செல்கிறோம்”. இது மட்டுமே அவரால் கூறுவதற்கு முடிந்தது. வேறு
யாருக்கும் எந்த ஒரு வார்த்தையும் பேசுவதற்கு முடியவில்லை.
தற்காலிகமாக ஏற்பட்ட உடல்நிலை பாதித்த
சூழலில் அவரை தனியாக அங்கு அமர்த்தி விடுவது நல்லதல்ல. அது மனிதத்துவம் அல்ல என
சிந்திக்கின்றார். அருட்தந்தை அலெக்ஸ்சியோஸ் அவர்கள் அவரது உடல் சீராகும் நிலை
வரையிலும் அருள்தந்தை ஜோஸ்வா அவர்கள் அவரோடு கூட இருந்து கவனிக்க வேண்டும் என
அன்பு கட்டளையிட்டு ஒவ்வொருவரும் தங்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு மன
வருத்தத்தோடு மெதுவாக நடந்தே நுழைவு வாயிலை அடைகின்றனர்.
அனைவரும் தங்களுடைய பொருள்களை கீழே வைத்துக்
கொள்ளுங்கள் ஜெபித்து விட்டு செல்வோம் என்பதன் படியாக கீழே அனைவரும் தங்களுடைய
பொருட்களை வைத்தனர். ஆயர் அவர்கள் ஜெபித்தார். அனைவரும் பதிலுரை மன்றாட்டுக்களைச்
சொல்லினர்.
(பெதனியின் வரலாறு கையெழுத்துப் பிரதி
பக்கம் 109 முதல் 111 வரை)
வெண்ணிக்குளம் நோக்கிய பயணமும் வசித்தலும்
இவ்வாறு முண்டன் மலையிலிருந்து தங்களது
கைகளில் தங்களுக்கு சொந்தமான பொருள்களையும் சுமந்தவாறு கீழ்நோக்கி வரிசையாக
வெளியேறிய ஏறக்குறைய இருபது துறவியர்களின் இப்பயணம் ஒரு திருப்பயணம் மேற்கண்டதைப்
போன்ற அனுபவமாக இருந்தது. எகிப்திலிருந்து கானான் தேசத்திற்கு - பாலைவனத்தில்
இருந்து விளை நிலத்திற்கு - வன்முறைகளிலிருந்து சமாதானத்தின் துறைமுகத்திற்கு - யாக்கோபாயா
திருச்சபையிலிருந்து கத்தோலிக்க திருச்சபை நோக்கி – மார் இவானியோசின் தலைமையில்
புறப்பட்ட கிறிஸ்துவின் படைவீரர்களின் திருப்பயணமாக அமைந்திருந்தது அது.
ஆசிரமத்திலிருந்து வெளியேறி தெருவுக்கு வந்ததுதம்
கூட்டத்திலிருந்து துறவி ஒருவர் தலைவரிடம் சென்று கேட்டார். “தந்தையே நாம் எங்கே
செல்கிறோம்?” அப்போது மார் இவானியோஸ் அவர்கள் சாந்தமான குரலில் பதிலளித்தார், “மகனே
எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வார்”.
இவ்வாறு மெதுவாக நடைபயணம் மேற்கொண்ட திருப்பயணிகள்
மடத்துமூழி எனப்படும் ஆற்றுக்கடவில் வந்தடைந்தனர். அவ்விடத்தில் ஏற்கனவே தயாராக
வைத்திருந்த மூன்று சிறிய படகுகளில் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை எல்லாம்
வைத்துக்கொண்டு ஆயர்களும் துறவியர்களும் கிளம்பினர். வெண்ணிக்குளத்திலிருந்து
முந்தின நாள் பெதனிக்கு வந்திருந்த மேடையில் பாப்பி என்பவரும் சுருளுகுழியல் ஸ்கரியா
என்பவரும் ஆக மொத்தம் 25 நபர்கள் படகுகளில் பயணம் மேற்கொண்டார்கள். பாறைக்
கூட்டங்கள் நிறைந்த கக்காட்டாற்றில் கடினமான பயணம் செய்து படகு வடசேரிக்கரை
என்னும் இடத்தை சென்றடைந்தது.
ஆயரின் நெருங்கிய தோழராக இருந்த பனச்சிமூட்டில்
மி. மாணி என்பவர் அனைவரும் அமர்ந்து செல்வதற்கு வசதியான சற்று பெரிய படகு ஒன்றை
ஏற்பாடு செய்திருந்தார். அந்த படகில் அனைவரும் ஏறினர். இவ்வாறு பம்பா ஆற்றைக்
கடந்து கோழஞ்சேரி நோக்கி படகு புறப்பட்டது..
பயணத்திற்கிடையே ராந்நி என்னும் இடத்தை
அடைந்தபோது அருள்தந்தை பர்ஸ்கீப்பா பின்வரும் வேண்டுகோளை ஆயர் அவர்களிடம்
சமர்ப்பித்தார். “ஆயர் அவர்களே நாம் திருவல்லாவுக்கு சென்று தங்குவதாக இருந்தால்
பலவிதமான கடினமான சூழல்களை அனுபவிக்க வேண்டியது வரும். முதலாவதாக 22 பேருக்கு
தங்குவதற்கான இட வசதி கிளிலேத் மேனேஜர் வாடகைக்கு எடுத்த கட்டிடத்தில் இல்லை.
இரண்டாவதாக திருவல்லாவில் உள்ள கிறிஸ்தவர்கள் நமது மறுஒன்றிப்பு முயற்சிகளோடு
ஒத்துழைப்பவர்களும் அல்ல. அவர்களிடம் இருந்து நமக்கு ஒத்துழைப்புக்குப் பதிலாக
பாதிப்புகளே அதிகமாக வரும். மூன்றாவதாக உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே திருவல்லா செல்ல வேண்டும் என்ற முடிவு நல்லதல்ல என தெரிவிக்கின்றேன்.
ஆனால் வெண்ணிக்குளம் செல்வோம் என்றால் இத்தகைய கடின அனுபவங்கள் எதுவுமே நாம் நேரிட
வேண்டிய சூழல் உருவாகாது. நமக்கென ஒரு பள்ளிக்கூடமும் ஆலயமும் அங்கே உள்ளது.
அங்குள்ள கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவரல்லாதவர்களும் நம்மோடு ஒத்துழைப்புக்கு தயாராக
உள்ளவர்கள் மட்டுமே. அவர்கள் நமக்கு பலவிதமான உதவிகள் செய்வார்கள். எனவே வெண்ணிக்குளம்
நோக்கி சென்று தங்குவது நல்லது” என்றார்.
அருட்தந்தை பர்ஸ்கீப்பா என்பவர் கத்தோலிக்கத்
திருச்சபையோடு மறுஒன்றிப்படைய வேண்டும் என்ற திட நம்பிக்கையோடு தான் திருப்பயணிகளோடு
இணைந்து பெதனியிலிருந்து பயணம் புறப்பட்டார். ஆனால் அருள்தந்தை அலக்ஸியோஸ் மற்றும்
மறுஒன்றிப்புக்கு எதிராக செயல்பட்ட பலருடைய கட்டாயப்படுத்தலால் ஆர்த்தடோக்ஸ்
திருச்சபையில் தொடர்ந்தார். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஆர்த்தடோக்ஸ்
திருச்சபையிலிருந்து வெளியேறி யாகோபாய சபையில் சேர்ந்து ரம்பான் திருப்பட்டம்
பெற்றுக் கொள்ளவும் செய்தார்.
ஆயர்களும் துறவியர்களும்
அருட்தந்தை பர்ஸ்கீப்பா கூறிய கருத்துக்கள் நல்லது என அறிந்து கொள்ளவே கோழஞ்சேரிக்கு
செல்லும் வழியிலிருந்து படகை ராந்நி என்னும் இடத்திற்கு செல்லுமாறு பணித்தனர்.
இவ்வாறு ராந்நி என்னும் இடத்திலிருந்து மீண்டும் பேருந்து ஒன்றில் பயணித்து மாலையில்
வெண்ணிக்குளம் என்னும் இடத்துக்கு
சென்றடைந்தனர். தங்குவதற்கு தேவையான வசதிகள் பெரிதாக இல்லாமல் இருந்தாலும்
மேமலா என்னமிடத்தில் அமைந்திருந்த துவக்கப் பள்ளி ஒன்றி இரவு திருப்பயணக்
குழுவினர் தங்கினர்.
பெதனியின் ஆயர்களும்
துறவியர்களும் ஆசிரமத்திலிருந்து வெளியேறி மேமலா துவக்கப் பள்ளியில் வந்து தங்கி
உள்ளனர் என்ற செய்தி காட்டுத்தீப் போல வெண்ணிக்குளம் மற்றும் சுற்று வட்டார
பகுதிகளில் பரவியது. மறுநாள் அதிகாலையில் பல மதத்தைச் சார்ந்த மக்கள் திருப்பயணக்
குழுவின் தலைவரை சந்திக்கவும் அவர்களுக்குத் தேவையான உதவிகள் என்ன என கேட்டு
பெற்றுக் கொடுக்கவும் அவர்கள் தயாராகினார்.
சிறிய துவக்கப்
பள்ளியில் துறவிகள் அனைவருக்கும் தங்குவதற்கு போதுமான வசதி இல்லாமல் இருந்ததால்
அவ்விடத்தைச் சார்ந்த ஒரு முக்கிய நபர் ஒருவர் காஞ்ஞிரத்துமூட்டில் குட்டி தான்
தங்கி இருந்த கட்டிடத்தை திருப்பயணக் குழுவினருக்காக காலியாக்கி கொடுத்தார்.
அவ்வாறு மறுநாள் துறவியர்கள் தங்களுடைய தங்கும் இடத்தை அவருடைய வீட்டிற்கு
மாற்றினர். ஆசிரமத்தின் தலைவரோ திருமூலபுரத்திற்கு சென்று தங்கவும் அடிக்கடி வெண்ணிக்குளம்
வந்து ஆசிரம துறவியர்களின் விபரங்களை கேட்டு அறியவும் செய்து கொண்டிருந்தார்.
திரிசங்கு சொர்க்கத்தில்
அனுபவங்கள்
கத்தோலிக்க
திருச்சபையோடு மறுஒன்றிப்படைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு நமது கதாநாயகனும்
பெதனி ஆசிரமத்தின் துறவியர்களும் பெதனி மலையிலிருந்து வெண்ணிக்குளம் நோக்கி வந்து
தங்கத் துவங்கினர்.
கத்தோலிக்க
திருச்சபையோடு மறுஒன்றிப்படையவும் முடியவில்லை. பெதனி ஆசிரமத்தில் இருந்து
வெளியேறவும் செய்தோம். இவ்வாறு ஆயர்களும்
துறவியர்களும் ஏறக்குறைய ஒரு மாத காலம் “திரிசங்கு சொர்க்கம்” என்ற நிலையில் வெண்ணிக்குளத்தில்
தங்கி இருந்தனர். இக்காலத்தில் பலவிதமான சிரிப்பூட்டும் மற்றும் சங்கடமூட்டும் பல
அனுபவங்கள் அவர்களால் அனுபவித்து வாழ வேண்டிய சூழலும் ஏற்பட்டிருந்தது.
ஆர்த்தோடக்ஸ்
திருச்சபைச் சமூகத்தை சார்ந்த பலர் தங்களுடைய பங்குகளிலிருந்து பிடி அரிசி, டப்பி
பிரிவு மற்றும் காணிக்கை சேகரிப்பு போன்ற உதவிகளை பெதனியின் துறவியர்களுக்கு உதவி
செய்யுமாறு கொண்டு வந்திருந்தனர். ஆனால் இத்தகைய உதவிகளை தொடர்ந்து மக்கள் நல்க
வேண்டாம் என்று வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ் ஆயர் அவர்கள் அனைத்து
ஆலயங்களுக்கும் திருமடல் அனுப்பியதை முன்னிட்டு இத்தகைய மக்களின் உதவிகளும்
நிறுத்தலாகிவிட்டது.
கத்தோலிக்க
திருச்சபையில் இணையாமல் கத்தோலிக்க மக்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்ப்பதும்
சாத்தியமானது அல்ல. இத்தகைய சூழலில் ஆசிரமத் தலைவர் மிகவும் வேதனைப்பட்டார்.
ஒருநாள் துறவிகள் அனைவரையும் அழைத்து இவ்வாறு அவர்களோடு பேசினார். “மக்களே ஒரு
மிகப்பெரிய கொள்கையை இலட்சியமாக்கி வெளியேறிய நாம் பலவித தியாகங்களும் கடின
அனுபவங்களும் சந்திக்க வேண்டியதாக இருக்கின்றது. நாளை முதல் நாம் அனைவரும் பட்டினி
கிடப்போம் என்பதுதான் அத்தகைய அனுபவம். பங்குகளிலிருந்து நாம் பெற்றுக் கொண்ட பிடியரிசி
போன்ற உதவிகள் எதுவும் செய்ய வேண்டாம் என வட்டச் சேரில் ஆயர் அவர்கள் அவர்களுக்கு
வழிமுறை வழங்கி இருக்கின்றார்கள். ஆகையால் துறவியராகிய நீங்கள் அனைவரும் நம்மோடு
இணைந்து பட்டினி கிடப்போம் என நான் நம்புகிறேன்”.
ஆசிரமத் தலைவனின்
இத்தகைய அறிவுரைக்கு பதில் உரையாக துறவியர்கள் இவ்வாறு கூறினர். ஆயர் அவர்களே
பட்டினி கிடப்பது பற்றி தாங்கள் வருந்த வேண்டிய தேவையே இல்லை. நாங்கள் உங்களோடு இணைந்து
பட்டினி கிடக்கவும் தயாராக வந்தவர்களே. ஆண்களாகிய எங்களுக்கு பிச்சை எடுத்தாவது
ஏதேனும் பெற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் கன்னியர் மடத்தில்
தங்கி இருக்கும் அருட்சகோதரிகளுக்கு இத்தகைய ஒரு கடின சூழல் வராமல் இருப்பது
நல்லது. ஏதேனும் கிடைப்பதாக இருந்தால் அவர்களுக்கு நீவிர் கொடுக்க வேண்டும்.
அவர்கள் பெண்கள், எனவே மடத்திலிருந்து வெளியேறவும் அவர்களுக்கு சுதந்திரம் இல்லையே”
என்றனர். தன்னோடு தியாகங்களை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்த
துறவியர்களின் இத்தகைய மனநிலையைக் கண்டு ஆயர் அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்.
துறவியரோடு கூறிய
அதே வார்த்தைகளை ஆயர் அவர்கள் மறுநாள் திருமூலபுரம் மடத்தில் தங்கி இருந்த அருட்கன்னியர்களோடும்
கூறினார். அவர்களது மறுமொழி இவ்வாறாக அமைந்திருந்தது.
“தந்தையே ஏதேனும்
உதவிகள் கிடைப்பதாக இருந்தால் அருட்தந்தையர்களுக்கு நீங்கள் வழங்குங்கள். நாங்கள்
கன்னியர் மடத்திற்கு உள்ளே இருப்பவர்கள். பட்டினி கிடப்பதனால் எங்களுக்கு எந்த பிரச்சனையும்
இல்லை. ஆனால் அருட்தந்தையர்களோ வெளியே வந்து பணிகள் செய்ய வேண்டியவர்கள் ஆவர். பட்டினி
கிடப்பதாக இருந்தால் அவர்களுக்கு வேலை செய்ய முடியாத சூழல் வரும். எனவே அவர்களை
பட்டினிக்குப் போடாமல் இருக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுதல்” என்றனர்.
இரு கூட்டத்தினரும்
கூறிய பதிலுரையால் திருப்தியடைந்த ஆசிரமத் தலைவர், யாருக்காக நாம் இவற்றையெல்லாம்
பொறுத்துக் கொள்கிறோமோ, யாருக்காக நாம் வெளியேறினோமோ அந்த எல்லாம் வல்ல இறைவனிடம்
எல்லாவற்றையும் சமர்ப்பித்து ஜெபித்தார். தன்னால் ஒரு நாள் கூட யாரையும் பட்டினி
கிடக்க வேண்டிய சூழல் வருவதில்லை. இறையன்பு நிறைந்து இருக்கின்ற போது அவரில்
சார்ந்து இருக்கும் ஒருவரையும் ஒரு நாளும் அவர் கைவிடமாட்டார் என்பதற்கு
எடுத்துக்காட்டு இது.
மார் இவானியோஸ்
மற்றும் துறவியர்களும் வெண்ணிக்குளம் வந்து தங்குவதாகவும் உதவிகள் தேவைப்படுகிறது
எனவும் அறிந்த பெதனியின் பல்வேறு ஆதரவாளர்களுள் ஒருவரும் பிற்காலத்தில் கத்தோலிக்கத்
திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்த காலேக்காட்டில் தோமஸ் அருட்தந்தை அவர்களும் நமது ஆயர்
அவர்களை சந்தித்து இவ்வாறு கூறினார். “ஆயர் அவர்களே வட்டச்சேரில் ஆயரின் மிரட்டல்களால்
தாங்கள் வருத்தம் அடைய வேண்டாம். ஆசிரமத்திலோ மடத்திலோ அரிசியோ பொருள்களோ இல்லாத
சூழல் வருகின்ற போது ஒரு காளை வண்டியை எங்களது வீட்டிற்கு அனுப்பினால் போதும்.
தேவையானவை எல்லாம் நாங்கள் கொடுத்து அனுப்புவோம். அதுபோல பணம் தேவைப்படுகின்ற
சூழலில் தெரிவித்தால் போதும். எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் வங்கியிலிருந்து ஆயர்
அவர்களுக்குத் தருவதற்கு எங்களுக்கு எந்த விதமான தடையும் இல்லை. நீங்கள்
வருத்தப்பட வேண்டாம்”
இவ்வாறு கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்களல்லாத
நல்லுள்ளம் கொண்ட பல நபர்கள் நமது ஆயரின் நற்பணிகளுக்குத் தேவையான பண உதவிகளை
கொடுத்து வந்தனர். வெண்ணிக் குளத்திற்கு அருகே புல்லாடு எனப்படும் இடத்தைச்
சார்ந்த ஒரு பழமையான இந்து குடும்ப உறுப்பினரும் சமூக சேவை செய்பவருமான வரிக்கண்ணாமல
நாராயணன் வைத்தியன் பெதனி துறவியர்களின் துயர் நிலையை கண்டு வருந்தி அவருக்கு
சொந்தமான பணத்திலிருந்து நான்கரை ஏக்கர் நிலத்தை துறவியர்கள் தங்குவதற்காக வெண்ணிக்குளம்
பகுதியில் வாங்கி தானமாக வழங்கினார்.
இத்தகைய சூழலில் ஆயருக்கு பல்வேறு விதமான
நம்பிக்கையூட்டும் ஒத்துழைப்புக்களை தந்து கொண்டிருந்த பல நல் உள்ளங்களின்
பெயர்களை இவ்விடத்தில் இந்நூலில் குறிப்பிடுவது என்பது சாத்தியமானது அல்ல. புலிக்கோட்டு
ஜோசப் ரம்மான், சேப்பாற்று பிலிப்போஸ் ரம்பான், பிலிப்போஸ் எம் ஏ பி எல், கே வி
சாக்கோ பி ஏ எல் டி, மேளாம்பறம்பில் உம்மன், மேடையில் பாப்பி, துண்டியில் பிலிப், கிளிலேத்
சாக்கோ மற்றும் பனங்கோட்டத்து உம்மன் போன்றோர் பல்வேறு விதமான உதவிகளையும்
ஒத்துழைப்புகளையும் நல்கி வந்தனர். இவர்களுடைய நல்லெண்ணத்தை மறுஒன்றிப்பு நிகழ்வின்
வரலாற்று நாளிதழில் குறிப்பிடப்பட வேண்டும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
பெதனி மலையோடு பிரியாவிடை கூறி பயணம் மேற்கொண்டு ஒரு
மாத காலம் கடந்த பின்னர் தான் நமது கதாநாயகன் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய
நேர்ந்தது. அதைப் பற்றிய விவரங்களை அடுத்த அதிகாரத்தில் காண்போம்.
அதிகாரம் 31
நினைவில் நிற்கும் கத்தோலிக்க மறுஒன்றிப்பு
கேரளாவின் புதிய கூற்றினர் கத்தோலிக்க
திருச்சபையோடு ஒன்றிணைவதற்கான பல்வேறு முயற்சிகளைப் பற்றி முன்னரே நாம் கண்டோம்.
அவை எதுவுமே முழுமை நிலையை அடையவில்லை என்பதும் வரலாற்றில் தெளிவான பேருண்மைகளாக
உள்ளன. ஆறாம் மார் தோமா எனப்படும் பெரிய மார் திவன்னாசியோஸ் நடத்திய பல
முயற்சிகளுக்குப் பின்னர் மறுஒன்றிப்பு நடந்தாலும் இறுதியில் அதுவும் தோல்வியை
சந்தித்தது. தொடர்ந்து புதிய கூற்றினரின் இறைமக்களின் உண்மை தேடுதலின் பலனாக
கூட்டமாகவும் ஒரு சில தனிநபராகவும் பல்வேறு சூழல்களில் குருக்களும் பொதுநலையினரும்
கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைந்தனர்.
தனது சகோதரர்களாகிய கத்தோலிக்கரல்லாத
நபர்களை தாய்த் திருச்சபையோடு ஒன்றிணைக்க பழைய கூற்றினரும் அவர்களுடைய ஆயர்களும்
குருக்களும் பொதுநலையினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அவ்வாறு திருச்சூர்,
எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாசேரி மற்றும் கொல்லம் முதலிய மறைமாவட்ட எல்லைகளுக்கு
உட்பட்ட யாக்கோபாயர்கள், ஆர்த்தடோஸ்காரர்கள், நெஸ்தோரியர்கள், மார்த்தோமாக்காரர்கள்
மற்றும் சீர்திருத்த திருச்சபையினர் ஆகியோரை
கத்தோலிக்க திருச்சபை ஒன்றிப்பில் கொண்டுவர மேற்குறிப்பிட்ட மறைமாவட்டங்களின்
ஆயர்கள் செய்த முயற்சிகள் மறக்க முடியாதவையே. மார் அகஸ்டின் கண்டத்தில்,
அலெக்சாண்டர் சூளப்பரம்பில், ஜேம்ஸ் காலாச்சேரி, அலோசியஸ் பென்சிகர் மற்றும் பிரான்சிஸ்
வாழப்பள்ளி போன்ற ஆயர்கள் மற்றும் அவர்களுடைய வழிமரபினரும் மறுஒன்றிப்புக்காக
முயற்சிகள் பல மேற்கொண்டனர். சங்கனாசேரி மறைமாவட்ட நம்பிக்கை பயிற்சி இயக்குநரான
அருள்தந்தை டொமினிக் தோட்டோச்சேரி எம் ஏ எல் பி மற்றும் கொல்லம் மறைமாவட்ட
மறைப்பணி இயக்குனர் அருள்தந்தை லாரன்ஸ் பெரேரோ (இறையடி சேர்ந்த கோட்டார் மறை
மாவட்ட ஆயர்) ஆகியோர் மறுஒன்றிப்புக்காக கைக்கொண்ட முயற்சிகள் பொன்னெழுத்துக்களால்
வரலாற்றில் எழுதப்பட்டுள்ளன. இவர்களுடைய முயற்சிகளின் பலனாக கத்தோலிக்கரல்லாத
திருச்சபைகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுநிலையினர் 50க்கும் மேற்பட்ட குருக்கள்
கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைந்தனர். தனிநபர் மறுஒன்றிடிப்பை விட கூட்டமான மறுஒன்றிப்புகள்
மார் இவானியோஸ் அவர்களுடைய முயற்சியால் நடைபெற்றது என்பது பேருண்மையாக உள்ளது.
இதனைப் பற்றி நாம் ஈண்டு காண்போம்.
அந்தியோக்கிய திருவழிபாட்டுக்கு அனுமதி
கேரளாவின் யாக்கோபாய திருச்சபையிலிருந்து
கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைந்த குருக்களுக்கு அந்தியோக்கிய
திருவழிபாட்டிலேயே அருளடையாளங்களும் மற்று திருச்சடங்குகளும் நடத்துவதற்கான
அனுமதியை பழைய கூற்றினரான சுறியானி ஆயர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1921 உரோமாவிலிருந்து
அனுமதி கிடைக்கப்பெற்றது. பல்வேறு விதமான சூழல்கள் காரணமாக இத்தகைய அனுமதியை
ஆயர்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது.
யாக்கோபாய கினானாய சமுதாயத்தின்
மதிப்புக்குரிய ஒரு தலைவர் ஒரு நாள் கோட்டயம் வந்தடைந்தார். மார் அலெக்சாண்டர் சூளப்பறம்பில்
ஆயரை சந்திக்கவும் அந்தியோக்கிய திருவழிப்பாட்டுக்கான அனுமதியை உரோமிலிருந்து பெற்றுக்கொள்கின்ற
போது எங்களது ஆயர்களும் கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்திட நாங்கள்
தீர்மானித்திருப்பதாக அவரை அறிவித்தார். அன்று எர்ணாகுளம் வந்திருந்த திருத்தந்தை
அவர்களின் பிரதிநிதி ஆயர் சூளப்பரம்பில் அவர்களை சந்தித்து இவ்விடயத்தை அறிந்து
கொண்டார். அதன்படி 1920 நவம்பர் மாதத்தில் பழைய கூற்றினரான சுறியானி ஆயர்களின் ஒரு மன்றம்
திருத்தந்தை பிரதிநிதியின் தலைமையில் எர்ணாகுளத்தில் வைத்து நடத்தப்பட்டது.
மேற்குறிப்பிட்ட மன்றத்தின் தீர்மானத்தின்படி வேண்டுகோளை உரோமாபுரிக்கு
கோரிக்கையாக அனுப்பினர். இதனைப் பற்றி உரோமாவில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திய
பின்னர் மறுஒன்றிப்படைகின்ற யாக்கோபாயக் குருக்களும் அந்தியோக்கிய திருவழிபாட்டை ஏற்றுக்கொள்கின்ற
அனுமதியை 1921 ஜூலை 5ஆம் தேதி ஆயர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனுடைய ஆங்கில மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள்
பின்வருமாறு:
"The
Sacred Congregation after maturely examining the matter has come to the
determination to permit the Jacobite Priests who return to the Catholic Church
to conserve their own Rite provided nothing is found contrary to the integrity
of faith and does not result in any way superstitious. In accepting the said
Priests, the Most Rev. Ordinaries should make an accurate inquiry in order to
satisfy themselves that the Sacrament, especially Baptism and Sacred Ordination
have been validly administered to them. In any case, I recommend the greatest
prudence on such an argument that no regrettable inconvenience may come from
it.”
“உரோமையிலிருந்து திருச்சங்க அலுவலகம் விசாரணை மேற்கொண்ட பின்னர்,
யாக்கோபாய குருவானவர்கள் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைந்த பின்னர் கத்தோலிக்க
நம்பிக்கைக்கு முரணாக எதுவும் காணப்படாதவாறு மேலும் எந்தவிதமான
மூடநம்பிக்கைகளையும் செயல்படுத்தாத விதத்தில் தங்களது சொந்த திருவழிபாட்டை
பாதுகாக்க அனுமதிக்கும் தீர்மானத்தை வழங்கியது. பெருமதிப்பிற்குரிய ஆயர்கள்
மேற்குறிப்பிட்ட குருக்களை ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் நிர்வகிக்கும் திருமுழுக்கு
மற்றும் குருத்துவ அருட்பொழிவு போன்ற அருளடையாளங்களை சரிவர துல்லியமான முறையில்
ஆய்வு மேற்கொள்ளவும் வேண்டும். எந்த விதத்திலும் விவேகத்தோடு இக்காரியத்தில்
செயல்பட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.”
மேற்குறிப்பிட்ட அனுமதி படிவத்தின்படி யாக்கோபாய
திருச்சபையிலிருந்து மறுஒன்றிப்படைந்த குருக்களுக்கு அந்தியோக்கிய திருவழிபாட்டு
முறையில் திருச்சடங்குகளை நடத்துவதற்கான அனுமதி கேரளாவின் சுறியானி
மறைமாவட்டங்களில் குறிப்பாக கோட்டயம் மற்றும் சங்கனாசேரி மறைமாவட்டங்களின் ஆயர்கள்
வழங்கி இருந்ததாக நன்றியோடு நினைவு கூர வேண்டும்.
ஒன்றிப்புக்கான அங்கீகார படிவம்
கேரளாவின் ஆர்த்தடோக்ஸ் திருச்சபையில் ஆயர்களின்
செயலர் என்ற நிலையில் புதிய திருவழிபாட்டுக்கான அங்கீகாரம் பெற்றுக் கொள்ளவும்
திரு ஆட்சி நிறுவதலுக்கான அனுமதிக்காகவும் 1926 நவம்பர் மாதத்தில் மார் இவானியோஸ்
ஆயர் அவர்கள் உரோமாபுரிக்கு கோரிக்கை ஒன்றை அனுப்பி வைத்தார். தொடர்ந்து நான்கு
ஆண்டுகள் நடத்தப்பட்ட முயற்சிகளின் காரணமாகவும் தொடர் கடிதப் போக்குவரத்துகளின்
பலனாகவும் 1930 ஜூலை மாதத்தில் உரோமாபுரியில் கூட்டப்பட்ட கிழக்குத் திருஅவைகளின் திருச்சங்கம்
இறுதியில் மேற்கொண்ட முடிவுகளின்படி இந்தியாவின் திருத்தூதவ அதிகாரியாக இருந்த மோன்சிஞ்ஞோர்
எட்வார்டு மூனி ஆயருக்கு கடிதம் அனுப்ப்ப்பட்டது. அவர் அந்த கடிதத்தில் ஒரு சில
விளக்கங்களை இணைத்து கொல்லம் ஆயர் முனைவர் பென்சிகர் வழியாக மார் இவானியோஸ் அவர்களுக்கு
அனுப்பி வைத்தார். கேரளாவின் மறுஒன்றிப்பு இயக்கத்தின் “மாக்னாகார்ட்டா” அடிப்படை
படிவத்தின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:
Apostolic delegation Bangalore 28
August 1930, Number 2035 - 13
கடந்த ஜூலை மாதம் நான்காம் தேதி நடைபெற்ற
கிழக்கு திருஅவைகளின் மன்றத்தில் அனைத்து கர்தினால்மார்களின் ஆலோசனைகளோடு
ஆயற்குழுவைச் சார்ந்த மலங்கரையின் யாக்கோபாய ஆயர்கள் தனிப்பட்ட முறையில் ஆயர் இவானியோஸ்
மற்றும் அவரது இணை ஆயரான மார் தியோஃபிலோஸ் ஆகியோர் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைவதற்காக
அனுப்பப்பட்ட கோரிக்கையை மிகுந்த கவனத்தோடு விவாதங்களோடு ஆலோசித்துக் கொண்டோம்.
1926 நவம்பர் மாதத்தில் கோரிக்கை மனுவை
சமர்ப்பித்த ஆயர்க் குழுவை சார்ந்த ஐந்து ஆயர்களுள் ஒருவரும் நம்பிக்கைக்குரியவருமான
மார் இவானியோஸ் மற்றும் குறிப்பிட்ட கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டுள்ள மார் தியோஃபிலோஸ்
ஆகியோர் மனசாட்சி நிறைந்தவர்களும் மதிப்புக்குரியவர்களுமாக அறிந்து கொண்டதனால்
மேற்குறிப்பிட்ட ஆயர்களை ஏற்றுக் கொள்வதற்கு புனித திருச்சங்கத்தோடு நடத்திய
கடிதப் போக்குவரத்தின் காரணமாக அவர்களை ஏற்றுக் கொள்ள காலதாமதம் செய்ய வேண்டிய
தேவை இல்லை என அறிவித்துக் கொள்கிறேன். உடனடியாக இந்த தீர்மானத்தை அவர்களோடு
அறிவிக்குமாறும் வேண்டுகிறேன்.
மேற்குறிப்பிட்ட இரண்டு ஆயர்களின் கோரிக்கை மனுவில்
ஏற்றுக் கொண்ட தீர்மானங்கள் இணைக்கப்படுகிறது.
1.
அந்தியோக்கிய சுறியானி
திருவழிபாட்டை கல்தேய சுறியானி திருவழிபாட்டிலிருந்து உருவான சீறோ மலபார்
திருவழிபாட்டோடு கலந்து கொள்ளச் செய்யாமல் இருக்குமாறு சம்மதித்துக் கொள்கிறோம்.
2.
மேற்குறிப்பிட்ட ஆயர்களின்
திருமுழுக்கு, குருத்துவ மற்றும் ஆயர் அருள்பொழிவு போன்றவற்றின் உண்மை நிலை பற்றி
விசாரணை நடத்தி அவர்களை தங்களது பதவியிலும் அதிகாரத்திலும் – மார் இவானியோஸ்
அவர்களை பேராயர் என்ற தனிப்பட்ட பதயோடு பெதனியின் ஆயராகவும் மார் தியோஃபிலோஸ்
அவர்களை திருவல்லாவின் ஆயராகவும் அங்கீகரிப்பதாக சம்மதிக்கிறோம்.
3.
தற்போதைய உயர் பேராயர்
மறுவந்திப்படைய விருப்பம் தெரிவிக்காத காரணத்தினால் உயர் பேராய அரியணை பற்றியோ, உயர்
பேராய ஆட்சி நிர்வாகம் உருவாக்குதல் பற்றியோ தற்போது எண்ணுவது நல்லதல்ல. அவர் மறுஒன்றிப்படைகின்ற
போது அதற்கான வழிமுறைகள் வழங்கப்படும். பெதனியின் ஆயரும் திருவல்லாவின் ஆயரும்
அந்தியோக்கியாவின் மறைமுதுவரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் நேரடியாக
திருத்தந்தையின் ஆட்சி அதிகார நிர்வாகத்தின் கீழ் ஆவர்.
4.
திருப்பலி முறை, சட்டதிட்டங்கள்
மற்றும் அருள்பொழிவு திருச்சடங்கு நூல்கள் போன்றவற்றில் உள்படுத்தப்பட்டுள்ள
தப்பறைகள் மற்றும் தேவையற்ற சொற்களை நீக்கவும் நம்பிக்கை திருச்சங்கத்தால்
அங்கீகரிக்கப்பட்ட பின்னர் பயன்படுத்த வேண்டும்.
இந்த நூல்களை ஆய்வு செய்வதற்காக
மறுஒன்றிப்படைகின்ற இரண்டு ஆயர்களது எல்லைக்கு உட்பட்டிருந்த சுறியானி மொழியில்
முனைவரான சீறோ மலபார் திருவழிபாட்டு சங்கனாச்சேரி ஆயரையும், கொல்லம் ஆயர்
பென்சிகர் அவர்களையும் திருத்தூதுவ அதிகாரி நியமிக்க வேண்டும்.
5.
தூய ஆவியானவர் மகனாகிய
கடவுளிடமிருந்தும் புறப்படுகிறார் (Filioque) என்ற கருத்து பற்றிய நிலையை ஆயர்கள் மட்டுமல்ல
விசுவாசிகளும் 14 ஆம் பெனடிக்ட் திருத்தந்தையின் வழிகாட்டுதலைகளை கடைப்பிடிக்க
வேண்டும். (Constit. Etsi
Pastoralis I & Constit. Allatae Sunt. 30). இதைப் பற்றி தெளிவாக்கப்பட்டு இருந்ததனால் மேற்குறிப்பிட்ட யாக்கோபாயர்கள்
பயன்படுத்துகின்ற அந்தியோக்கிய திருவழிபாட்டு முறைகளில் “மகனிடமிருந்தும்” என்ற
வார்த்தை உள்ளதாலும் திருவழிபாட்டு முறைகளில் இந்த வார்த்தையையே பயன்படுத்தலாம்.
ஆனால் சாதாரண ஜெபங்களில் இப்போதைய வழக்கத்தை தொடரவும் வேண்டும்.
6.
புதிதாக
மறுஒன்றிப்படைகின்ற கத்தோலிக்கர்கள் “அந்தியோக்கிய திருவழிபாட்டு முறையினரான சீரோ
மலபார் கத்தோலிக்கர்கள்” எனவோ “சீரோ - அந்தியோக்கிய திருவழிபாட்டு முறையினரான மலபார் கத்தோலிக்கர்கள்”
எனவோ “மலபார் அந்தியோக்கியன்” எனவோ “சீரோ மலபார் திருச்சபை மக்கள்” எனவோ அழைக்கப்பட
வேண்டும். இவ்வாறு கல்தேய திருவழிபாடு பயன்படுத்துகின்ற மலபார்
கத்தோலிக்கர்களிடமிருந்து அவர்கள் வேறுபட்ட பெயரால் அழைக்கப்பட வேண்டும்.
மற்றவை
1.
மேற்குறிப்பிட்ட விதத்தில்
கத்தோலிக்க திருச்சபையோடு உள்ள ஒன்றிப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமான
நம்பகத்தன்மையை தூய அரியணையிலிருந்து நல்கியதாக இருந்தாலும் மிக முக்கியமாக அருளடையாளங்களைப்
பற்றிய திருஅவை சார்ந்த கருத்து உள்ளடக்கங்களை பாதுகாத்திடல் வேண்டும். திருத்தூதுவ
அதிகாரி சுயமாகவோ அல்லது வேறு யாரேனும் வழியாகவோ மறுஒன்றிப்படைந்த ஒரு குருவானவரின்
கை வைத்தல் அல்லது அருட்பொழிவு பற்றிய உண்மை நிலையை குறித்து சரியாக விசாரணை
மேற்கொள்ளல் வேண்டும். இதில் எந்த விதமான விதிவிலக்கும் கூடாது.
2.
1888 ஆம் ஆண்டு ஜூன் மாதம்
25ஆம் தேதி நம்பிக்கை திருச்சங்கிலிருந்து வழங்கப்பட்ட வழிமுறைகளை கடைபிடித்தல்
வேண்டும்.
3.
திருத்தூதுவ அதிகாரி நேரடியாகவோ
பென்சீகர் ஆயர் வழியாகவோ அல்லது மற்று ஏதேனும் ஆயர் முன்னிலையில் மறுஒன்றிப்படையும்
ஆயரை திருச்சபைச் சார்ந்த குற்றங்களிலிருந்து விடுவிக்கவும் மறுஒன்றிப்படைகின்ற
குருக்களையும் பொதுநிலையினரையும் தேவையான விதத்தில் நம்பிக்கை அறிக்கை செய்ய
வைக்கவும் வேண்டும்.
4.
குருக்களின் பிரம்மச்சாரிய
விரதத்தை முன்னிட்டு எதிர்காலத்தில் எந்த குருத்துவப் பயிற்சி மாணவரும் மணத் துறவு
வாழ்வை வாழ்வேன் என உறுதிமொழி நல்கிய பின்னர் மட்டுமே குருத்துவ அருள்பொழிவு வழங்க
வேண்டும். ஆனால் தற்போது மறுஒன்றிப்படைகின்ற குருக்களின் குடும்ப வாழ்வு நிலையை தொடரவும் அனுமதிக்க
வேண்டும். தற்போது மறுவண்டிப்படைகின்ற திருமணமான திருத்தொண்டர்களும் குருத்துவ
அருட்பொழிவை பெற்றுக் கொள்ளலாம்.
5.
தங்களது கட்டுப்பாட்டில் உள்ள
ஆலயங்களில் உரிமைகளையும் அதிகாரங்களையும் நிறைவேற்றி செயல்படுத்த இரண்டு ஆயர்களும்
முயற்சிக்க வேண்டும்.
6.
மறுஒன்றிப்புக்காக
விரும்புகின்ற இரண்டு ஆயர்களும் இரண்டு மறைமாவட்டங்களின் எல்லைகளை நிர்ணயித்து
அதிகார உரிமைகளை நிலை நிறுத்த வேண்டும்.
7.
குருத்துவ பயிற்சி நிறுவனத்தின்
தேவையைப் பற்றி பின்னர் ஆலோசிக்கப்படும்.
மேற்குறிப்பிட்டவற்றை நேரடியாகவோ ஒரு
பிரதிநிதி வழியாகவோ செயல்படுத்த திருத்தூதுவ அதிகாரிக்கு அதிகாரம்
வழங்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை வழங்கிய பின்னர் இரு ஆயர்களின் மறுஒன்றிப்புக்காக
கீழ்க்குறிப்பிடும் வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என திருச்சங்கத்தின் கர்தினால்
செயலர் அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
உரோமை அரியணை தேவைப்படுகின்ற ஒரு சில
சம்மதத்தின் நிலைகளைப் பற்றி இரண்டாவது பகுதியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே
திருத்தூதுவ அதிகாரிக்காக இந்த கோரிக்கைகள் அடங்கியுள்ள கருத்துக்களை ஆயர் மார் இவானியோஸ்
அவர்களை தெரிவிக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். திருத்தூதுவ அதிகாரி நல்கிய
வழிமுறைகள் தொடர்ந்து சேர்க்கப்படுகின்றன.
இரண்டு ஆயர்களின் மறைமாவட்ட எல்லை
நிர்ணயித்தல் தொடர்பாக எனக்கு வழங்கியவை வழிமுறைகள் மட்டுமே ஆகும். அவர்கள் ஒரு
சில காலங்களுக்கு இணைந்து செயல்படவும். பின்னர் இதன் முன்னேற்றத்தைக் கண்டு
அறிந்து உணர்ந்த பின்னர் தேவைக்கேற்ப பிரிவினை நடத்தவும் செய்யுமாறு கர்தினால்
தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
குருக்கள் மற்றும் திருத்தொண்டர்களின் மணத்துறவு
வாழ்வு பற்றிய நிலைகளை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஐந்து அருள்பொழிவுகள்
பெற்றவர்கள் தனிப்பட்ட முறையில் அவர்கள் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். திருத்தூதுவ
அதிகாரியின் வேண்டுகோளுக்கு ஏற்ப உரோமையின் கட்டளைக்கு ஏற்றபடி செயல்பட வேண்டும்.
யாக்கோபாயர்களின் திருவழிபாட்டு நூல்களை
சோதனை செய்வதற்கு காலாச்சேரி ஆயரை நீங்கள் சமீபிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
நானும் அவருக்கு நேரடியாக கடிதம் எழுதுகிறேன். ஆனால் அதற்கு முன்னர் மறுஒன்றிப்படைகின்ற
இரண்டு ஆயர்களும் அவர்களோடு இணைந்துள்ள குருக்களின் குருத்துவ அருள்பொழிவின் உண்மை
நிலை பற்றி விசாரணை நடத்த வேண்டும். இதற்காக திருத்தூதுவ அதிகாரி பின்வரும்
வழிமுறைகளை வழங்கியுள்ளார்.
இந்த ஆயர்களின் திருமுழுக்கு மற்றும்
குருத்துவ அருள்பொழிவு ஆயர் அருள்பொழிவு போன்றவற்றின் உண்மை நிலை பற்றி மோன். பென்சிகர்
மற்றும் மோன். காலாச்சேரி அவர்களுக்கு சரியான நிலை ஏற்பட்டால் இது குறித்த
விபரங்களை எனக்கோ ரோமை திருச்சங்கத்திற்கு நேரடியாகவோ தெரிவிக்காமலே மேற்கூறிய
தொடர் நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். இதற்கான சம்மதத்தை மார் இவானியோஸ்
அவர்களும் வழங்க வேண்டும்.
சுருக்கமாக கூறப்போனால் பொதுவாக நமது
அறிவுக்கு ஏற்ற முறையிலான பொது விசாரணை நடத்துவதே போதுமானது. இவ்வாறெல்லாம் செய்த
பின்னர் தேவையான விடுப்பு நல்குவதற்கான அதிகாரம் பெற்றுள்ள ஆயர் பென்சிகர்
மேற்குறிப்பிட்ட ஆயர்களின் நம்பிக்கை உறுதிமொழியை ஏற்றுக்கொள்ளலாம்.
சிஞ்ஞோர் வி பல்கர்
திருத்தூதுவ அதிகாரியின் செயலர்
உரோமையிலிருந்து திருத்தூதுவ அதிகாரியின்
வழியாக கிடைக்கப்பெற்ற அங்கீகாரப் பத்திரம் பெற்றவுடன் தனது கத்தோலிக்க
திருச்சபையோடு ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளை நமது கதாநாயகன் துரிதப்படுத்தினார்.
வெற்றி மகுடம் சூடிய மறுஒன்றிப்பு முயற்சி
கேரளாவின் புதிய கூற்றினரான மக்கள் தாய்
திருச்சபையான கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைவதற்கான முயற்சிகளை மூன்று
நூற்றாண்டுகளாக நடத்தி வந்த முயற்சிகள் வெற்றி மகுடம் சூடும் மகிழ்வான நிலைக்கு
வந்தடைவதை காணவிருக்கின்றோம்.
உலகத்தின் அனைத்து மகான்மார்களின்
புகழ்ச்சியை பெற்றுக் கொண்ட அழகான கத்தோலிக்க திருச்சபையோடு கேரள கத்தோலிக்கரல்லாத
சகோதரர்களை இணைக்கின்ற மறுஒன்றிப்பு என்னும் பாதையை உருவாக்கிய கதாநாயகன் தனது
சுயசரிதையில் இறுதிப் பகுதியில் இதைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்:
“வட்டிப்பண வழக்கில் தோல்வியுற்ற காலத்தில்
கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய சார்பாக இருந்த பலரும் வழக்கில் வெற்றி
அடைந்த பின்னர் தங்களது கருத்திலிருந்து விலகிக் கொண்டனர்.
1105 ஆம் ஆண்டு சுறியானிக் கணக்கில் கன்னி
மாதம் பதினான்காம் நாள் சிலுவைத் திருநாளன்று நாங்கள் பருமலை செமினாரியில் திருப்பலி
ஒப்புக்கொடுத்தோம். திருப்பலி முடிந்ததும் நானும் மார் திவன்னாசியோஸ் பேராயரும்
இணைந்து செமினாரி கட்டிடத்தின் இரண்டாவது நிலையில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள
அறைக்குச் செல்லவும் அங்கு திருச்சபையின் நிலைகள் பற்றியும் கத்தோலிக்க ஒன்றிப்பிற்கானத்
தேவையைப் பற்றியும் பேசினோம். அதற்காக அவர் முன்னிரையில் நின்று செயல்பட வேண்டும்
எனவும் மக்கள் அனைவரையும் இறைபக்திக்கு அடுத்த நிலைகளில் அவர்களை வழி நடத்துதல்
தேவை எனவும் அவர் எடுத்துக்கூறிய போது நானும் அவரோடு இணைந்து அனைத்து முயற்சிகளும்
செய்வேன் என கண்ணீரொழுகக் கூறினேன். என்னை அவரது பக்கத்தில் அமர்த்திக் கொண்டு
நான் அழுகையை நிறுத்தவும் மன அமைதியோடு அமரவும் என அவர் என்னை கேட்டுக் கொண்டார்.
பின்னர் செமினாரி கட்டிடத்தின் இரண்டாம்
நிலையில் வடக்கு பகுதியில் உள்ள அறையில் நாங்கள் இணைந்து உணவு உண்ண ஒன்று
கூடினோம். எனது கண்ணில் வடிந்த கண்ணீர் முன்னாள் வைத்திருந்த உணவோடு கலந்ததைக்
கண்டு எனது உறவினரான சாக்கோ மற்றும் அவரது உறவினரான தானியேலையும் அவர் அறைக்கு
வெளியே செல்லுமாறு கூறினார். நாங்கள் இருவரும் அறையில் எந்த ஒரு வார்த்தையும்
பேசாமல் அமர்ந்து காலை உணவு உண்டு எங்களுடைய அறைகளுக்கு சென்றோம். மதிய உணவு
தன்னந்தனியாக உட்கொண்டோம். மதியத்திற்குப் பின்னர் அவர் என்னை அழைக்கவும்
கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்பு பற்றி நாங்கள் உரையாடல் நிகழ்த்தவும்
செய்தோம். ஆர்த்தோடோக்ஸ் திருச்சபை எனப் பெயர் ஏற்றுக்கொண்ட யாக்கோபாய ஆயர்க்
குழுவில் உள்ள அனைத்து ஆயர்களும் குருக்களும் இறைமக்களும் கத்தோலிக்க
திருச்சபையில் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களது கருத்தாக இருந்தது.
கத்தோலிக்க ஒன்றிப்புக்கு அதிகமான மக்கள்
தயாராக இல்லை எனவும் ஆலயங்களையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு செல்ல மாட்டோம்
எனவும் அல்லது அதனை விட்டு விட்டால் சொத்துக்கள் அனைத்தும் எதிர் அணியினரான உயர்பேராயர்க்
குழுவினருக்கு சென்றடையும் எனவும் வட்டிப் பண வழக்கில் வெற்றி பெற்றச் சூழலில்
பழைய செமினாரி மற்றும் பருமலை செமினாரி போன்றவற்றை விட்டு விட்டு வெளியேற முடியாது
எனவும் அவர்களுக்கு விருப்பம் இல்லை எனவும் நான் உணர்ந்து கொண்டேன். “இறக்கும்போது
இவற்றையெல்லாம் விட்டுச் செல்ல வேண்டும் அல்லவா!” என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது.
இந்த பிரச்சனையைப் பற்றி மீண்டும் ஆலோசித்து என்னோடு கூறலாம் என அவர் சம்மதித்துக்
கொண்டார்.
சற்று நேரத்திற்குப் பின்னர் அவர்
திருவனந்தபுரம் சென்றடைந்து நாங்கள் நிகழ்த்திய உரையாடலையும் கருத்துக்களையும் இலஞ்ஞிக்கல்
ஜான் வக்கீலோடு எடுத்துக் கூறினார். அவரது வீட்டில் வைத்து “பெதனி ஆயர் உரோமாவுக்கு
செல்லத் துவங்குகின்றார்” என வருத்தத்துடன் கூறவும் அவரது வேண்டுகோளுக்கிணங்க ஜான்
வக்கீல் ஒரு கடிதம் ஒன்றை தயாரித்து எனக்கு அனுப்பினார். கடிதத்தில் கத்தோலிக்க
திருச்சபையோடு ஒன்றிப்படைவதற்கு அவருக்கு விருப்பம் இல்லை எனவும் நீங்கள்
செல்கின்ற போது பெதனி ஆலயங்கள் உரோமை திருச்சபையோடு இணைய வேண்டி இருப்பதனால்
இனிமேல் பெதனி ஆலயங்கள் நிறுவ வேண்டாம் எனவும் அவருடைய கருத்தை எழுதியிருந்தார்.
இதற்கான பதிலையை அவர் நேரடியாக பெற்றுக் கொள்ள வேண்டி அவரது உறவினரான மி.வி.ஏ. வர்கீஸ்
பி ஏ எல் டி அவர்கள் வழியாக நான் அனுப்பினேன்.
அவர் மூன்றாவது உயர்பேராயரான மார் பசேலியோசும்
செமினேரியில் ஒன்று கூடினர். என்னை உரோமை திருச்சபைக்கு விடாமலிருக்க நான் போகின்ற
போது எவ்வாறு அதனை நேரிட முடியும் என்பதைப் பற்றி அவர்கள் ஆலோசித்தனர். அப்போது உயர்
பேராயர் அன்று நான் தங்கி இருந்த திருவல்லா திருமூலபுரம் பெதனி ஆசிரமத்தில் என்னை
காண்பதற்காக வந்தடைந்தார். திருச்சபையின் எதிர்கால வளர்ச்சிக்கு கத்தோலிக்க
திருச்சபையோடு மறுஒன்றிப்பு மிகத் தேவையே என நானும் அவரோடு எடுத்துரைத்தேன்.
ஆயர்கள் சந்திக்கின்ற போது தழுவி முத்தமிட்டு அன்பைப் பரிமாறாமல் நாங்கள் சந்திக்கவும்
பிரிந்து செல்லவும் செய்தோம்.
மறு ஒன்றிப்படைகின்ற ஆயர்களை அவர்கள்
பணிபுரியும் நிறுவனங்களிலேயே ஆட்சி அதிகாரத்தோடு ஏற்றுக் கொள்ளலாம் எனவும் மலங்கரை
சுறியானி திருச்சபையின் அந்தியோக்கிய திருவழிபாட்டை அங்கீகரிக்கலாம் எனவும்
ஒப்புக்கொண்ட உரோமாவின் கர்தினால் திருச்சங்கத்தின் தீர்மானத்தை திருத்தந்தை
அங்கீகரித்ததாக கொல்லம் ஆயர் எனது பெயருக்கு கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை
நான் பெற்றுக் கொண்ட பின்னர் மார் பசேலியோஸ் உயர் பேராயரையும் மற்ற ஆயர்களையும்
சந்தித்தேன். உயர் பேராயர் மறுஒன்றிப்புக்கு நான் தயார் இல்லை என அறிவித்துக்
கொண்டார். பேராயர் வட்டச் செயலாளர் எதிரான கருத்தை தெரிவித்தார். பாம்பாடி
என்னுமிடத்திலுள்ள குரியாக்கோஸ் மார் கிரிகோரியாஸ் ஆயர் ஆர்த்தோடோக்ஸ் திருச்சபையிலிருந்து
மாறுகின்ற போது யாக்கோபாயா மறைவதுவரோடு இணைந்து கொள்ள சம்மதமே எனத் தெரிவித்தார்.
இவ்வாறு நான் பென்சிகர் ஆயரை சந்தித்தபோது என்னையும்
என்னோடு இணைந்து இருப்பவர்களையும் ஏற்றுக்கொள்வதற்கு திருத்தந்தையின் பிரதிநிதியாக
அவர் அதிகாரம் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். கிழக்குத் திருஅவையின் ஜூலியன்
நாள்காட்டி படி அன்னை மரியாவின் பிறந்தநாள் விழாவான செப்டம்பர் 21ஆம் தேதி
கத்தோலிக்க திருச்சபை உறுப்பினராக முதல் திருப்பலியை ஒப்புக் கொடுக்க நான்
விரும்புகிறேன் எனவும், அதற்கு முந்தைய நாள் மறுஒன்றிப்பாவதற்கு தயாராக உள்ளேன் எனவும்
தீர்மானத்தை தெரிவித்துக் கொண்டேன்.
கொல்லம் ஆயர் பென்சிகர் அவர்களை சந்தித்த
பின்னர் மாலையில் திருவல்லாவின் திருமூலபுரம் ஆசிரமத்திற்கு மாலை நேரத்தில்
வந்தடைந்தேன். அப்போது பேராயர் மார் திவன்னாசியோஸ் என்னை சந்திப்பதற்காக
வந்தடைந்தார். அங்கே மாலை உணவுக்குப் பின்னர் இரவில் தங்குவதற்காக திட்டமிட்டிருந்தார்.
நாங்கள் சந்தித்தபோது “உரோமாபுரியோடு இணைய தீர்மானித்து விட்டீர்களோ?” என
கேட்கவும், உரோமைத் திருச்சபையோடு நான் ஒன்றிப்படைய தீர்மானித்து விட்டேன்.
மறுவண்டிப்பு இயக்கத்திற்கு நீங்களும் தலைமை வகித்து முன்னோக்கி வர வேண்டும் என
நான் கேட்டுக் கொண்டேன். நீண்ட நேர உரையாடலுக்குப் பின்னர் கத்தோலிக்க
திருச்சபையோடு இணைய வேண்டும் என்ற எனது விருப்பத்தை எனது மனசாட்சிக்கு உகந்த ஒரு
செயலாக அவர் புரிந்து கொண்டார். நானும் அவரும் பிரிந்து செல்ல வேண்டும் என்ற ஒரு
எண்ணம் அவரது மனதையும் அலட்டிக் கொண்டிருந்தது. மறுநாள் காலையில் சிற்றாலயத்தில்
வைத்து திருப்பலி ஒப்புக் கொடுக்க வரவும் ஒருவருக்கொருவர் அன்பு முத்தம் பகிர்ந்து
பிரியாவிடை செய்யவும் செய்தார்.
1930 செப்டம்பர் 18ஆம் தேதி வியாழக்கிழமை
கொல்லம் ஆயரகம் நோக்கிச் செல்வதற்கு நானும் மார் தியோஃபிலோஸ் ஆயரும் பெதனி ஆசிரமத்தவர்களான
ஓமல்லூர் குழிமேப்புறத்து ஜான் அருள்தந்தையும் வெண்மணி செறியாலமூட்டில்
அலெக்சாண்டர் திருத்தொண்டரும் தயாராயினர். பயணம் புறப்படுவதற்கு முன்னர் மானேஜர்
கிளியிலேத்து சாக்கோ எனது அருகில் வந்து “ஆயர் அவர்கள் உரோமை திருச்சபையில் சேர
திட்டமிட்டு இருப்பதாக அறிந்து கொண்டேன். நீங்கள் என்னையும் சேர்த்துக் கொள்ள
வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் எங்கு சென்றாலும் நான் உங்களோடு கூட வருவேன்.
நரகத்திற்கு சென்றாலும் நான் உங்களோடு வருவேன். ஆனால் நீங்கள் நரகத்திற்கு செல்ல
மாட்டீர்கள் என எனக்குத் தெரியும்” என அவரோடு கூறி அவரது காரில் உடன்பயணித்தார். அவ்வாறு
அனைவரும் கொல்லம் ஆயரகத்திற்கு வந்தடைந்தோம். இரண்டு நாட்கள் அங்கே தங்கியிருந்து
தியானம் நடத்தினோம். அதன் பின்னர் செப்டம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை காலை 7:30
மணிக்கு நானும் என்னோடு வந்திருந்தவர்களும் கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்களாக
ஏற்றுக் கொள்ளப்பட்டோம்.
தொடர்ந்து கொல்லத்திலிருந்து கிளம்பி
மாவேலிக்கரை வந்தடைந்தோம். அங்கு எனது தகப்பனார் பணிக்கர் வீட்டில் தரியது தோமா
பணிக்கர், தாயான அன்னம்மா, சகோதரன் மத்தாயி பணிக்கர், மூத்த சகோதரி சோசம்மா தோமஸ்,
மத்தாய் பணிக்கரின் மகன் தோமஸ் அவரது மனைவி ஆச்சியம்மா ஆகியோரை கத்தோலிக்க
திருச்சபையோடு சேர்த்துக் கொண்டேன். பின்னர் திருவல்லாவின் திருமூலபுரத்திற்கு
வந்து கன்னியர் மடத்திலிருந்து அனைத்து அருள்கன்னியர்களையும் பணியாளர்களையும்
கத்தோலிக்க திருச்சபையோடு சேர்த்துக் கொண்டேன். (சுயசரிதையின் இறுதி பகுதி)
தொடர்ந்து நிகழ்ந்த ஒவ்வொரு வளர்ச்சி நிலைகளையும்
மறுஒன்றிப்பின் முன்னேற்றங்களையும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயராக இருந்து
நமது கதாநாயகன் நடத்திய செயல்களும் நூலின் இரண்டாவது பகுதியில் தெளிவாக
விளக்கப்பட்டுள்ளன. கதாநாயகனோடு இணைந்து மறுஒன்றிப்படைவதற்கு தயாரான முதல்
சந்ததியினராவதற்கு பெரும் பேற்றைப் பெற்றுக்கொண்ட நபர்களின் சுருங்கிய வாழ்க்கை
வரலாற்றை எதிர்கால தலைமுறையினருக்கு அடுத்த அதிகாரத்தில் எடுத்துக் காட்டுகிறேன்.
அதிகாரம் 32
மறுஒன்றிப்பின் சந்ததிகள்
மனித பார்வையில் தற்செயலாகவே என பல
நேரங்களிலும் கருதப்படும் நிகழ்வுகளில் எல்லாம் அறிந்தவரான இறைவனின் அருள் கரங்கள்
செயல்பட்டுள்ளன என உலக வரலாற்றிலிருந்தும் திருச்சபை வரலாற்றிலிருந்தும் பல்வேறு எடுத்துக்காட்டுகளை
எடுத்துக் கூற முடியும். கேரளாவின் மறுஒன்றிப்பு இயக்கமும் அதன் துவக்க வரலாறும்
மேற்குறிப்பிட்டதற்கு மிகவும் பொருத்தமான எடுத்துக்காட்டே ஆகும். கொல்லத்தில்
வைத்து கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய வேண்டியவர்கள் ஐந்து பேராக இருக்க
வேண்டும் என முன்னரே தீர்மானித்தது அல்ல. ஆயர்களான மார் இவானியோசும் மார்
தியோஃபிலோசும் கொல்லம் பென்சிகர் ஆயரின் முன்னிலையில் நம்பிக்கை உறுதிமொழி நடத்தி
கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர்கள் இருவரும் திருவல்லாவுக்கு
வந்த பின்னர் மற்றவர்களை கத்தோலிக்க திருச்சபையில் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும்
அவர்கள் நிச்சயித்திருந்தனர். ஆனால் இறைவனின் காணப்படாத ஆசீர் நிறைந்த அருள்கரங்களின்
செயல்கள் வழியாக நிலைகள் மாற்றமடைந்தன.
கொல்லம் நோக்கி புறப்படுவதற்கு முன்னரே
தீர்மானித்திருந்த நாளன்று (1930 செப்டம்பர் 18ஆம் தேதி) ஆசிரமத்தவர்களோடு வெண்ணிக்குளத்தில்
தங்கியிருந்த அருட்தந்தை ஜான் மற்றும் திருத்தொண்டர் அலெக்சாண்டர் ஆகியோர் ஏதோ
தேவைக்காக திருமூலபுரத்திற்கு வந்தடைந்தனர். மேதகு ஆயர்களை அழைத்துச் செல்வதற்காக
மேலாம்பறம்பில் மி. உம்மனின் வாகனமும் வந்தடைந்தது. காரினுள் நுழைவதற்கு சற்று
முன்னர் தான் கிளியிலேத்து மீ சாக்கோ ஆயர் அவர்களை சந்திக்க அவ்விடத்திற்கு
வந்தடைந்தார். இறைத் திட்டமென்றே நாம் இதனை கருத வேண்டும். “அருள் தந்தையும்
திருத்தொண்டரும் மேனேஜரும் வாகனத்திற்குள் ஏறிக்கொள்ளுங்கள். நாம் கொல்லம் நோக்கி
செல்வோம்” என்றார் மார் இவானியோஸ் ஆயர் அவர்கள்.
ஆயரின் கட்டளைகளுக்கிணங்க மறுஒன்றிப்பின் முதல்
சந்ததியினரான ஐந்து பேரும் இணைந்து கொல்லம் ஆயரகத்தில் சென்றடையவும், இரண்டு
நாட்கள் தங்கி இருந்து தியானம் செய்து செப்டம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை காலை 7:30
மணிக்கு கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படையவும் செய்தனர். அவ்வாறு கேரளாவின்
கத்தோலிக்கரல்லாத திருச்சபைகளிலிருந்து வருங்கால கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படையவேண்டிய
பேராயர்களும் ஆயர்களும் குருக்களும் திருத்தொண்டர்களும் பொதுநிலையினரும்
அவர்களுடைய பிரதிநிதிகள் என்ற முறையில் மறுஒன்றிப்படைய முடிந்தது. இவர்கள்
ஐவருடையவும் வாழ்க்கை வரலாற்றை வரும் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவது நன்றாக
அமையும் எனக் கருதுகிறேன்.
I.
பேராயர் மார் இவானியோஸ் OIC, M.A.D.D.LL.D
நினைவில் வாழும் மறுஒன்றிப்பின் தலைவரான
பேராயர் மார் இவானியோஸ் அவர்களது விளக்கமான வரலாறு இந்நூலில் எழுதப்பட்டிருப்பதனால்
சுருக்கமாக அவரைப் பற்றிய வரலாற்றுச்சுவடுகளை அவரது வாழ்வின் மிக மிக முக்கியமான
நிகழ்வுகளை மட்டுமே பட்டியலிட விரும்புகிறேன்.
1.
பிறப்பு - 21. 9. 1882
2.
திருமுழுக்கு - 4. 10. 1882
3.
துவக்க கல்வி - 1888 முதல் 1897
வரை
4.
எம்டி செமினாரியில் உயர் நிலை
பள்ளிக் கல்வி - 1897 முதல் 1899 வரை
5.
திருத்தொண்டராக அருள்பொழிவு
(புத்தன்காவு ஆலயத்தில் புலிக்கோட்டு மார் திவனாசியோஸ்) – 9. 1. 1900
6.
கோட்டயம் சி எம் எஸ் கல்லூரி - 1900
முதல் 1902 வரை
7.
சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் - 1903
முதல் 1907 வரை
8.
எம் ஏ முதுகலை பட்டம் - 1907
9.
குருத்துவ அருள்பொழிவு
வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ் அவர்களால் பருமலை செமினாரியில் வைத்து – 15. 9. 1908
10. எம்டி செமினாரியின் முதல்வர் - 1908 முதல் 1913 வரை
11.
அப்துல்லா மறைமுதுவரின் வருகை -
1911
12.
மார் திவன்னாசியோஸ் பேராயரை தடை
செய்தல் – 6. 6. 1911
13.
அப்தேது மிஸிஹா மறைமுதுவரின்
வருகை - 1912
14. உயர் பேராய திருஆட்சி அமைப்பு நிறுவுதல் – 15. 9. 1912
15.
செராம்பூர் கல்லூரியில்
பேராசிரியர் - 1913 முதல் 1919 வரை
16.
பெதனி ஆசிரமம் நிறுவுதல் – 23.
8. 1919
17.
இரம்பான் அருட்பொழிவு
திருமூலபுரம் ஆலயத்தில் மார் கிரிகோரியோஸ் (மூன்றாம் உயர் பேராயர்) – 28. 1. 1925
18.
ஆயராக அருள்பொழிவு நிரணம் ஆலயத்தில்
கண்டநாடு மார் இவானியோஸ், மார் ஃபீலக்சீனோஸ் - வாகத்தானம் (இரண்டாம் உயர்
பேராயர்), மார் கிரிகோரியோஸ் - குண்டற (மூன்றாம் உயர் பேராயர்)
19.
பேராயராக பதவியேற்பு – 13. 2. 1929
20. பெதனியை விட்டு வெளியேறியது – 20. 8. 1930
21.
கத்தோலிக்க மறுஒன்றிப்பு (கொல்லம்
ஆயரகம்) – 20. 9. 1930
22. ஐரோப்பிய சுற்றுப்பயணம் – 1932
23. தாய் மரணம் – 5. 4. 1932
24.
திருத்தந்தையை சந்தித்தது –
1932
25.
தாய்நாடு திரும்புதல் – 1933
26.
மலங்கரை திருஆட்சி அமைப்பு
நிறுவுதல் – 12. 3. 1933
27.
மார் சேவேரியோஸ் பேராயரின்
மறுஒன்றிப்பு – 29. 11. 1937
28. தந்தையின் மரணம் – 9.12.1938
29.
மார் தியஸ்கோரோஸ் ஆயரின்
மறுஒன்றிப்பு – 12.11.1939
30.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு
புறப்படல் – 26.5.1947
31.
அமெரிக்க சுற்றுப்பயணம் – 1947 –
1948
32.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் –
1948
33.
திருவனந்தபுரம் வந்தடைதல் –
24.6.1948
34.
மார் இவானியோஸ் கல்லூரி நிறுவுதல்
– 1949
35.
நோய் ஆரம்பம் – 4.6.1952
36.
நோயில்பூசுதல் (கந்தீலா) –
2.9.1952
37.
மரணம் – 15.7.1953
38. கல்லறை அடக்கம் (திருவனந்தபுரம் பட்டம் பேராலயத்தில்) – 17.7.1953
II.
ஆயர் மார் தியோஃபிலோஸ் OIC, DD
கோட்டயத்துக்கு
அருகே ஒளசா என்னுமிடத்தில் பழமையான கலப்புரக்கல் குடும்பத்தில் ஆபிரகாம் தரகன் மற்றும்
நாலாத்ரா குடும்பத்திற்கு உட்பட்ட அச்சாம்மா என்பவர்களுடைய மூத்த புதல்வனாக 1891
பிப்ரவரி 21ஆம் தேதி இவர் பிறந்தார். யாக்கோபு என்ற திருமுழுக்குப் பெயர் அவருக்கு
வழங்கப்பட்டிருந்தது. துவக்க கல்வி முடித்த பின்னர் கோட்டயம் எம்டி செமினேரியில்
தனது மெட்ரிகுலேஷன் படிப்பை படித்து தேர்வும் எழுதி வெற்றியை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து இந்த பள்ளிக்கூடத்தில் சில காலங்கள் ஆசிரியராக பணியாற்றவும் செய்தார்.
மத நம்பிக்கையிலும் ஆன்மீக வாழ்விலும் மிகப்பெரிய ஆர்வம் காட்டியிருந்ததனால் வட்டச்சேரில்
மார் திவன்னசியோஸ் ஒளசா பங்கு மக்களிடம் கேட்டதன் படி இவருக்கு திருத்தொண்டர்
பட்டம் வழங்கப்பட்டது.
அன்று செராம்பூர்
கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய அருட்தந்தை பி டி கி வர்கீஸ் திறமை வாய்ந்த
நல்ல நற்குணம் படைத்த யாக்கோபு திருத்தொண்டரை செராம்பூருக்கு அழைத்துச் சென்று ஓனேர்ஸ்
வகுப்பில் சேர்த்துக் கொண்டார். அங்கு அவர் கற்றுக் கொண்டிருந்த போது பெதனி
ஆசிரமம் தொடர்பான ஆலோசனைகள் பி டி கீவர்கீஸ் அவர்களோடு இணைந்து சிந்திக்கத்
துவங்கினார். பெதனி ஆசிரமம் பற்றிய அனைத்து சிந்தனைகளிலும் இவரும் உடன் இருந்தார்.
பெருநாட்டின் முண்டன் மலையில் ஆசிரமம் நிறுவுவதற்கும் துறவு சார்ந்த பயிற்சிக்குத்
தேவையான திட்டங்களை உருவாக்குவதற்கும் அவற்றை செயல்படுத்துவதற்கும் ஆசிரமத்
தலைவரின் வலங்கையாக இவர் செயல்பட்டு வந்தார். இதற்காக செராம்பூரிலிருந்து திரும்பி
வந்து பெதனி ஆசிரமத்தின் உறுப்பினராக சேர்ந்து அனைவருக்கும் எடுத்துக்காட்டான
விதத்தில் துறவு வாழ்வை வாழ்ந்து காட்டினார். 1924 ல் யாக்கோபு திருத்தொண்டர்
குருவானவராக அருள்பொழிவு செய்யப்பட்டார். ஜெப வாழ்விலும் இறைபக்தியிலும்
ஆசிரமத்தவர்களை வியப்புக்குரியவர்களாக்கி இருந்ததனால் “ஆசிரம குரு” என்ற
பொறுப்பில் இவர் நியமிக்கப்பட்டார். இவரது நற்குணம், நேரம் தவறாமை, முயற்சிகள்
மேற்கொள்தல், அமைதியான குணம் மற்றும் இறை பக்தி போன்றவற்றில் யாவருக்கும்
எடுத்துக்காட்டாக ஆசிரமத்தில் துறவு வாழ்வை வாழ்ந்து காட்டினார். மார் இவானியோஸ் பெதனி
எனப்படும் இயந்திரத்தின் படைப்பாளரும் வழிநடத்துபவருமானால் இந்த இயந்திரத்தை
முன்னோக்கி செயல்படுத்த தேவையான எரிபொருளான எண்ணெய் நல்கி இருந்தவர் அருள்தந்தை
யாக்கோபு அவர்கள் ஆவார் என ஐயமின்றி எடுத்துக் கூற முடியும்.
இவரது புண்ணிய
வாழ்வு எவரையும் வியக்கத்தக்க விதத்தில் செயல்பாட்டு திறமையோடு அமைந்திருந்ததை
பாராயர்கள் அறிந்து கொண்டதனால் 1929 இல் உயர் பேராயர் மார் பசேலியோஸ் இவரை மார் தியோஃபிலோஸ்
என்ற பெயரில் பெதனியின் ஆயராக அருள்பொழிவு செய்தனர். இச்சூழலில் தான் மார் இவானியோஸ் மற்றும்
ஆயர்களும் மறுஒன்றிப்பு பற்றிய சிந்தனைகளில் செயல்பட்டிருந்தனர். இவரும் மார்
இவானியோஸ் அவர்களுக்கு இச்சிந்தனைகளுக்கு ஆக்கவும் ஊக்கவும் வழங்கி வந்தார்.
இறுதியில் உரோமாவிலிருந்து பதில் மொழி கிடைத்தவுடன் மறுஒன்றிப்பிற்கு ஏற்கனவே
சம்மதித்திருந்த ஆயர்கள் விலகிய பின்னரும் மார் தியோஃபிலோஸ் தனது திட மனதில்
நிலைத்திருந்தார். அவ்வாறு 1930 செப்டம்பர் 20ஆம்
தேதி கொல்லத்தில் வைத்து மார் இவானியோஸ் அவர்களோடு இணைந்து கத்தோலிக்க
திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்தார்.
உரோமையிலிருந்து 1932 ஆம்
ஆண்டு திருவல்லா மறைமாவட்டத்தின் ஆயராக இவர் நியமிக்கப்பட்டார். 1938 ல்
திருத்தந்தையை சந்திப்பதற்காக உரோமை நகருக்குச் சென்று பதினொன்றாம் பயஸ்
திருத்தந்தையை சந்தித்து ஐரோப்பாவின் பல நாடுகளையும் சந்தித்தார். பின்னர் தனது
மறைமாவட்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மிகக்குறைந்த கால கட்டத்தில்
திருவல்லா மறைமாவட்டத்தில் பல ஆலயங்களும் பள்ளிக்கூடங்களும் ஆசிரமங்களும்
மடங்களும் பல நிறுவனங்களும் நிறுவுவதற்கும் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கரல்லாதவர்களை
கத்தோலிக்க திருச்சபையில் கொண்டு வருவதற்கும் இவரால் இயன்றது. ஆனால் மிகக் குறைந்த
காலகட்டத்திலேயே நோய் அவரைத் தாக்கவும் இறைவனுடைய திட்டத்திற்கு ஏற்ப பரிபூரணமாக
பணி ஓய்வு பெறவும் செய்தார். தொடர்ந்து ஓய்வு பெற்ற காலத்தில் மார் சேவேரியோஸ் அவர்களுடைய
ஆட்சிப் பொறுப்பில் மறைமாவட்டத்தின் வளர்ச்சியை கண்டு மகிழ்வடையவும் இறைவனுடைய
ஆசிர்வாதங்களை நிறைவாக பெற்றுக் கொள்ளவும் செய்தார்.
மறுஒன்றிப்பின்
முன்னேற்றத்திற்காக ஜெபங்களாலும் பல்வேறு தியாகச் செயல்களாலும் மரணம் வரையிலும் ஆயர்
அவர்கள் செயல்பட்டுக் கொண்டே இருந்தார். அவ்வாறு மறுஒன்றிப்பு என்னும் குழந்தையின்
வளர்ச்சியை கண்ட மகிழ்வோடும் அமைதியோடும் நம்பிக்கையோடும் 1956 ஜூன்
மாதம் 27ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு தனது 65 ஆவது
வயதில் இறைவனுடைய திருக்கரங்களில் தனது ஆன்மாவை ஒப்படைத்தார்.
கல்லறையில் அடக்கத்
திருச்சடங்குகள் பல்வேறு திருவழிப்பாட்டு முறைகளில் நடத்தப்பட்டன. பல ஆயர்கள் குருக்கள்
சகோதரர்கள் சகோதரிகள் பொதுநிலையினர் என பலருடைய உடன் இருப்பில் திருவனந்தபுரம்
பேராயர் மார்க் கிரிகோரியோஸ் மற்றும் திருவல்லா ஆயர் மார் அத்தனாசியோஸ் அவர்களுடையவும்
தலைமையில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. திருவல்லா தலைமைக் கோவிலில் தனிப்பட்ட
முறையில் தயாரிக்கப்பட்ட கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. கேரளாவின்
மறுஒன்றிப்பின் துவக்க வரலாற்றில் மார் இவானியோஸ் பேராயரோடு இணைந்து நினைவு கூர
வேண்டிய ஒரு பெயர்தான் மார் தியோஃபிலோஸ் என்பதை நாம் ஐயமின்றி எடுத்துக் கூற
முடியும்.
III.
அருள்
தந்தை ஜான் ஓஐசி
பத்தனம்திட்டைக்கு
அருகில் ஓமலூர் என்னும் இடத்தில் குழிமேப்புறத்து ஈப்பன் மற்றும் கொச்சீத்தா என்பவர்களுடைய மகனாக
கொல்லம் ஆண்டு 1078 மிதுனம் 23ஆம் தேதி இவர் பிறந்தார். துவக்க
கல்வியை தொடர்ந்து பத்தனம்திட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி கற்றார். 1919 ல்
மார் பசேலியோஸ் உயர் பேராயரிடமிருந்து திருத்தொண்டர் பட்டம் பெற்றுக்கொண்டு
கோட்டயம் எம்டி செமினாரியில் 3 ஆண்டுகள் கல்வி கற்றார். தொடர்ந்து தனது மூத்த
சகோதரனும் பின்னர் கத்தோலிக்க திருச்சபையில் இணைந்தவருமான பாலாவல் தங்கி வாழ்ந்த மீ
கே இ போல் அவரோடு தங்கி புனித தோமஸ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார்.
மேற்குறிப்பிட்ட
பள்ளிக்கூடத்தில் கற்கின்ற போது மறக்க முடியாத ஒரு சம்பவம் அரங்கேறியது. அன்று சங்கனாச்சேரி
மறைமாவட்ட ஆயராக இருந்த தாமஸ் குரியாளச்சேரி ஆலயம் சந்திப்பதற்காக பாலா
வந்திருந்தார். பாலா புனித தாமஸ் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆயரை சந்திக்கவும்
அவ்வேளையில் திருத்தொண்டரான மாணவர் ஜான் அவர்கள் ஒரு மறையுரை நிகழ்த்தவும்
செய்தார். உரை முடிந்ததும் ஆயர் ஜான் அவர்களை அருகே அழைத்து நீ எதிர்காலத்தில் ஒரு
கத்தோலிக்கனாக மாறுவாய் எனக் கூறினார். அன்று அவர் கூறிய வார்த்தை 10 ஆண்டுகளுக்கு
பின்னர் நிறைவேறியது.
உயர் நிலை பள்ளிக்
கல்வி முடிந்த பின்னர் கோட்டயம் சி எம் எஸ் கல்லூரியில் இணைந்து இடைநிலைக் கல்வியை
வெற்றிகரமாக முடித்தார். அதன் பின்னர் ஒரு துறவியாக வாழ வேண்டும் என இறைவன்
அழைப்பதாக உணர்ந்ததன் வழி கல்லூரிப் படிப்பிலிருந்து பின் வாங்கினார். 1927ல் பெதனி
துறவு சபையில் இணைந்தார். இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின்னர் 1929 முதல்
உறுதிமொழியை சமர்ப்பித்தார். அந்த ஆண்டு மார் இவானியோஸ் அவர்களிடமிருந்து
குருத்துவ அருள்பொழிவையும் பெற்றுக் கொண்டார். 1930ல் மார் இவானியோஸ் அவர்களை
தொடர்ந்து ஆசிரமத்தவர்களோடு இணைந்து பெதனியிலிருந்து வெளியேறி வெண்ணிக்குளத்திற்கு
வந்து தங்கத் துவங்கினார். செப்டம்பர் 20 ஆம் தேதி கொல்லம் சிற்றாலயத்தில் வைத்து
கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்தார்.
தொடர்ந்து ஓராண்டு
காலம் திருவனந்தபுரம் கர்மலித்தா துறவு சபை ஆசிரமத்தில் தங்கி கற்கவும்
பயிற்சியும் பெற்றார். பின்னர் பெதனி ஆசிரமத்தில் துறவிகளுக்கு பயிற்சி
வழங்குபவராகவும் மாகாணத் தலைவராகவும் பணியாற்றி துறவு சபையின் முன்னேற்றத்திற்கு
அரும் பாடுபட்டு உழைத்தார். திருவல்லா மறைமாவட்டத்திற்கு உட்பட்ட பல மறைப்பணித்தளங்களிலும்
இவர் பணியாற்றி கத்தோலிக்கரல்லாதவர்களை கத்தோலிக்க ஒன்றிப்பிற்கு அழைத்து வந்தார்.
திருவனந்தபுரம் ஆசிரமத்தில் இறுதியில் தங்கி இருந்து மறுஒன்றிப்புக்கான பணிகள்
செய்து வந்தார்.
IV.
திருத்தொண்டர்
அலெக்சாண்டர் ஓஐசி
மிகவும் பழமை
வாய்ந்த கிறிஸ்தவர்களின் மையமாக விளங்கிய வெண்மணி என்னும் இடத்தில் ஆற்றுப்புரத்து
வடக்கேதில் (செறியாலுமூட்டில்) ஈசோ சாராம்மா என்பவரது மகனாக கொல்லம் ஆண்டு 1078
மகரம் ஐந்தாம் தேதி இவ்வுலகில் அலக்சாண்டர் தோன்றினார். துவக்க கல்வியை
வெண்மணியிலும் கோடுகுழஞ்ஞி என்ற இடத்தில் உயர்நிலை பள்ளிக் கல்வியும், கோட்டயம்
எம்டி செமினியிலும், மாவேலிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் கற்றுக்கொண்டார்.
1927ல் வெண்மணி ஆலயத்தில் வைத்து வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ் ஆயரிடமிருந்து
திருத்தொண்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
துறவு வாழ்வு வாழ
வேண்டிய விருப்பத்தால் 1977-ல் பெதனி ஆசிரமத்தில் இணைந்து ஓராண்டு பயிற்சிகள்
நடத்தினார். தொடர்ந்து திருவல்லாவில் பெதனி அச்சகத்தின் பொறுப்பை இரண்டு ஆண்டு காலம்
செவ்வனே செய்து நிர்வகித்தார். 1930ல் மீண்டும் பெதனியில் பயிற்சிக்காக
சென்றடைந்தார். எனினும் அதிக காலம் தாமதியாமல் ஆசிரமத் தலைவரும் ஆசிரமத்தவர்களோடு
இணைந்து பெதனியிலிருந்து பயணமாகி கத்தோலிக்கத் திருச்சபையோடு இணைவதற்காக வெண்ணிக்குளத்திற்கு
வந்து தங்கினார். 1930ல் செப்டம்பர் 20ஆம் தேதி மார் இவானியோஸ் அவர்களோடு இணைந்து
கொல்லம் சிற்றாலயத்தில் வைத்து கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைந்தார். ஒன்றிப்புக்கு
பின்னர் இரண்டு ஆண்டுகள் துறவு பயிற்சி நடத்தவும் முதல் துறவு உறுதிமொழியை
சமர்ப்பித்த போது “செராஃபியோன்” என்ற பெயரை ஏற்றுக்கொள்ளவும் செய்தார்.
மறுஒன்றிப்புக்குப்
பின்னர் இரண்டு ஆண்டுகள் செத்திப்புழா கர்மலித்தா துறவு சபை ஆசிரமத்தில் தங்கி
இறையியலும் நன்னெறி இயலும் கற்றுக் கொண்டார். பின்னர் 1933 டிசம்பர் 23ஆம் தேதி
திருவனந்தபுரம் நாலாஞ்சிறை பெதனி ஆசிரம சிற்றாலயத்தில் வைத்து மார் இவானியோஸ்
பேராயரால் குருவானவராக அருள்பொழிவு செய்யப்பட்டார். திருவனந்தபுரம்
உயர்மறைமாவட்டத்தின் பொருளர், மலங்கரை கத்தோலிக்க கல்லூரிகளின் தாளாளர் போன்ற
பொறுப்புகளில் பல ஆண்டுகள் சேவை செய்து வந்தார். 1946 முதல் 1949 வரை
பெதனியாசிரமத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
பின்னர் தென்
திருவிதாங்கூரின் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களின் மத்தியில் மறைப்பணி செய்து வந்தார்
மார் இவானியோஸ் மற்றும் மார் கிரிகோரியோஸ் அவர்களுடைய ஆட்சி நிர்வாகத்தில் அறிவுரை
வழங்கும் குழுமத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி வந்தார். திருவனந்தபுரம்
உயர்மறைமாவட்டத்தில் ஆலயங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றின்
கட்டுமான பணிகளில் தேவையான வழிமுறைகளை நல்குதல் வரைபடங்களை தயாரித்தல் பணிகளை
கண்காணித்தல் போன்றவற்றை 25 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வந்தார். மார் இவானியோஸ் கல்லூரியின்
துவக்க காலப் பணிகளின் வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் இவர் செயல்பட்டார். அருட்தந்தை செராபின்
அவர்களுடைய பணிகளை திருவனந்தபுரம் உயர்மறை மாவட்டத்தால் மறக்க முடியாது என்பதில்
ஐயமில்லை.
V.
கிளியிலேத்து மிஸ்டர் கே ஜி சாக்கோ
காயங்குளம் கிளியிலேத்து கீவர்கீஸ் அவரது மகனாக 1888 ல்
இவர் பிறந்தார்.
மாவேலிக்கரை
பணிக்கர் வீட்டில் சாக்கோ பணிக்கரின் மகள் காண்டம்மா என்பவர் தான் இவரது தாயார்.
சிறு பருவத்திலேயே தனது தந்தையை இழந்ததனால் மாவேலிக்கரையில் உள்ள தனது அன்னையின்
வீட்டில் தங்கி வாழ்ந்தார். மார் இவானியோஸ் எம்டி செமினாரியின் முதல்வராக
பணியாற்றிய போது சாக்கோவையும் கோட்டயத்திற்கு அழைத்து வந்து பள்ளிக்கூடம், நிலம்
மற்றும் விடுதி போன்றவற்றை கண்காணிப்பதற்கான மானேஜர் என்னும் பொறுப்பு அவருக்கு
வழங்கப்பட்டது. அன்று முதல் எப்போதும் அவர் “மானேஜர்” என அழைக்கப்பட்டார்.
யாக்கோபாய திருச்சபையின் பிரிவினைப்
போரில் வட்டச்சேரில் ஆயருக்கு இவர் உதவியாக செயல்பட்டு வந்தார். மார் இவானியோஸ்
அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் நல்கியவர்களுள் ஒருவர் இவரே. செராம்பூர்
கல்லூரியில் பேராசிரியராக பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட மார் இவானியோஸ் கோட்டயம்
நகரை விட்டு எம்டி செமினாரியின் மானேஜராக மி. சாக்கோ தனது பணியைத் தொடர்ந்து
வந்தார். ஏறக்குறைய 10 ஆண்டுகள் இப்பணியை செவ்வனே செய்து வந்தார்.
பெதனி துறவு ஆசிரமம் துவங்குவதற்கான செயல்களில் மார் இவானியோஸ்
ஈடுபட்டபோது நிலம் கையகப்படுத்துதல் நிலத்தை சீராக்குதல் கட்டிடங்கள் உருவாக்குதல் போன்ற பணிகளை கண்காணிக்கும்
பொறுப்பு மீ சாக்கோ அவர்களிடம் இருந்தது. இப்பணிகளை மிகுந்த பொறுப்புணர்வோடு
செயல்படுத்தவும் அவர் செய்திருந்தார். திருமூலபுரம் ஆதரவற்றோர் விடுதியின்
பொறுப்பு ஏழு ஆண்டுகள் அவருடைய கையில் ஒப்படைக்கப்பட்டது. மார் இவானியோஸ்
அவர்களோடு இணைந்து கொல்லம் சிற்றாலயத்தில் 1930ல் கத்தோலிக்க திருச்சபையோடு
ஒன்றிணைந்தார். மறுஒன்றிப்பின் துவக்க போராட்ட காலத்தில் எதிர் அணியினரோடு போராடி
வெற்றி மகுடம் கூட மார் இவானியோஸ் அவர்களுக்கு இவர் பேருதவியாக செயல்பட்டார்.
திருவனந்தபுரம் உயர்மறை மாவட்டத்தில் அனைத்து பணிகளை
கண்காணிக்கும் முக்கிய பணியாளராக இவர் செயல்பட்டார். உயர்மறை மாவட்டத்தின் பணிகளை
கண்காணித்தல் நிலம் வாங்குதல் கட்டிடப் பணிகளை கண்காணித்தல் மறுஒன்றிப்புக்கான முயற்சிகளோடு
இணைந்து தேவையான செயல் திட்டங்களை தீட்டுதல் போன்றவற்றை 20 ஆண்டுகாலம் மார்
இவானியோஸ் அவர்களோடு இணைந்து செயல்பட்டார்.
மார் இவானியோஸ் கல்லூரியை துவங்கிய
பின்னர் விடுதியின் மேனேஜர் என்ற நிலையில் மீ சாக்கோ தனது பணிகளை செய்து வந்தார்.
இவரது குழந்தைகளுள் ஒருவர் பெதனி கன்னியர் மடத்தில் இணைந்து அருள்கன்னியராக பணியாற்றி வருகிறார்.
27 ஆண்டுகளுக்கு முன்னர் மறுஒன்றிப்புக்கு எதிராக
செயல்பட்டு வந்த கத்தோலிக்கர அல்லாத சகோதரர்களின் மனமும் அவர் கத்தோலிக்கர்களாக
மாறிய பின்னர் உள்ள மனநிலையையும் ஒப்பீடு செய்து இறைவனை புகழ்ந்து மகிழ்வோடு தனது வாழ்வை
வழிநடத்திக் கொண்டிருந்தார்.
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment