மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

 


மலங்கரை கத்தோலிக்க

மறைக்கல்வி

பதினொன்றாம் வகுப்பு

குறு வினா விடைகள்

 

2.2.2025

தனிச்சுற்று

நூல் விபரம்

நூலின் பெயர்   : மலங்கரை கத்தோலிக்க

                 மறைக்கல்வி பதினொன்றாம் வகுப்பு

                 குறு வினா விடைகள்

நூலின் வகை                : குறு வினா விடைகள்

நூலாசிரியர்                  : அருட்தந்தை மரிய ஜாண்

உரிமை                         : ஆசிரியருக்கே

வெளியிடுவோர்       : தனிச்சுற்று

முதற்பதிப்பு               : 2.2.2025

பிரதிகள்                        : 100

நூல் அளவு                   : A5

எழுத்துரு                      : Vijaya, 14 புள்ளி

அலைபேசி                 : (91) 944 355 9775

 மின்னஞ்சல்          : frmariajohn@gmail.com

                 

எனதுரை

வெற்றுக்கண்ணுக்கு புலப்படும் அறிவியலை ஆய்தலுக்கு உட்படுத்தி அறிந்து கொள்வதே கடினமானது. காண முடியாத, தொட முடியாத, சுவைக்க முடியாத மற்றும் இறைவனை மறைபொருளாக இருக்கும் நிலையில் அறிந்து கொள்ளுதல் என்பது இன்னும் கடினமான ஒன்றே.

மறைக்கல்வி கற்றல் இறைவனை ஆழமாக அறிய உதவும் ஒரு காரணியாகும். இறைவன் ஒரு மறைபொருள். இறைவனின் மறைபொருள் தன்மையை மறைக்கல்வி வழியாக மறைக்கல்வி மாணவர்கள் பயில முற்படும்போது சற்றுக் கடினமாக அமைவது இயல்பு. இத்தகையோர் எளிதில் இறைவனை அறிந்து கொள்ள மறைக்கல்வி நூலில் கொடுக்கப்பட்ட பாடவாரியாக அனைத்து குறு வினா விடைகளையும் பாடங்களிலிருந்து தொகுத்து வழங்கியுள்ளேன்.

மலங்கரை கத்தோலிக்க திருச்சபை என்னும் பெயராலான முகநூல் குழுமத்திலும் (Facebook), Arulan எனப்படும் கூகுள் பிளோகர்லும் (Google - Blogger) இக்குறு வினா விடைகளை பி டி எஃப்  (PDF) வடிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். தேவைப்படுபவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

நமது ஆண்டவரின் தேவாலய நுழைவுத் திருநாளான பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று வெளியிடப்படுகிறது.

இந்நூல் மறைக்கல்வி மாணவர்களுக்கும் திருச்சபை அன்பர்களுக்கும் மறைபொருளை அறிய மிகவும் துணைபுரியும் என நம்புகிறேன்

 

நன்றி

அருட்தந்தை மரிய ஜாண்

 

உள்ளடக்கம்

பாடங்கள்

பக்கம்

பாடம் : 1

மனிதனும் கடவுளும்

5

பாடம்: 2

இயேசு கிறிஸ்து : மனித மாண்பின் முழு நிறைவு

 

பாடம் :3

கடவுளைச் சொந்தமாக்குவதே கிறிஸ்தவ அருள்நெறி

 

பாடம் :4

மனிதன் கடவுளை இழத்தல் (தலையான பாவங்கள்)

 

பாடம் : 5

இறையனுபவமும் இறைநம்பிக்கையின்மையும்

 

பாடம் : 6

பொதுவுடைமைக் கொள்கை (Communism)

 

பாடம் : 7

போதைப் பொருட்களும் அவற்றின் விளைவுகளும்

 

பாடம் : 8  

எதிர்நோக்கில் வளர

 

பாடம்: 9

திருத்தூதர் பவுல் மிகச்சிறந்த வழிகாட்டி

 

பாடம் :10

நான் ஒரு கத்தோலிக்கன்

 

 

 

 

 

 

 

பாடம் : 1

மனிதனும் கடவுளும்

 

1.        சிந்தித்து கொண்டேயிருப்பது எந்த மனத்தின் சிறப்புத்திறனாகும்?

மனித மனத்தின்

2.        விலங்கினத்திற்கும் மனிதனுக்கும் இடையேயான வேறுபாடுகள் எவை என ஆராயும் போது யாரை எளிதாக அறிந்து கொள்ள இயலும்?

மனிதனை

3.        உயிர்வாழவும் அவற்றின் இனத்தை நிலைக்கச் செய்யவும் உதவும் செயல்களில் ஈடுபடுகின்ற உயிரிகள் எவை?

விலங்குகள்

4.        பசிக்கும் போது சொந்த குட்டிகளைக் கூட கொன்று உண்ணுகின்ற உயிரிகள் எவை?

விலங்குகள்

5.        விலங்குகளில் எந்த பாலினத்தைச் சேர்ந்தவை மற்றவைகளிடம் ஆதிக்கம் செலுத்துகின்றன?

ஆண் இனத்தை

6.        விலங்குகளின் நான்கு சாதாரணமான இயல்புகள் எவை?

உண்பது, உறங்குவது, தாக்குவது, இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது

7.        மனமறிந்து பிறருக்காகப் பொருட்களை உற்பத்தி செய்யவும், சேவைகள் புரியவும் செய்கின்ற உயிரினம் எது?

மனித இனம்

8.        பாலியல் உறவு இல்லாவிடினும் வாழ்க்கைத் துணையை அன்பு செய்யவும், பாலூட்டும் பருவம் கடந்துவிட்டாலும் பிள்ளைகளைப் பாதுகாத்து வளர்க்கவும் செய்கின்ற உயிரினம் எது?

மனித இனம்

9.        வாழ்க்கைத் துணையுடனும், பிள்ளைகளுடனும் ஒரு குடும்பமாக இறப்பு வரை ஒன்றுசேர்ந்து வாழ்வதற்கான இயல்புடையவன் யார்?

மனிதன்

10.   பகைவரையும் அன்பு செய்யும் மனத்திறன் பெற்ற உயிரினம் எது?

மனித இனம்.

11.   ஒரு சமூகமாக ஒழுங்கமைத்துக் கொள்ளும் திறன் பெற்ற உயிரினம் எது?

மனித இனம்.

12.   அனைத்துப் படைப்புகளிலும் அடங்கியிருக்கும் உண்மைகளைப் பகுத்தறிவோடு ஆராய்ந்தறிவதற்கான ஆற்றல் பெற்றவன் யார்?

மனிதன்

13.   அளவற்ற ஆசைகள் உடையவன் யார்?

மனிதன்

14.   மொழி வாயிலாகவும், வேறு பல முறைகளிலும் பயனுள்ள வகையில் கருத்து பரிமாற்றம் செய்வதற்கும் அதற்கான திறனை மேலும் வளப்படுத்திக் கொள்வதற்கும் திறமை பெற்றவன் யார்?

மனிதன்

15.   பண்பாடுகளை உருவாக்குபவன் யார்?

மனிதன்

16.   சுயமாகத் தீர்மானம் எடுப்பதற்கும் அதைச் செயல்படுத்துவதற்கும் திறன் பெற்ற உயிரினம் எது?

மனித இனம்.

17.   பிறர் வாழ்வுக்காகத் தன்னையே அர்ப்பணித்து உயிர்த்தியாகம் செய்வதற்கும் வேண்டிய மனத்திண்மை உடையவன் யார்?

மனிதன்

18.   எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளை நோக்கி வாழவும், ஆராதிக்கவும் செய்பவன் யார்?

மனிதன்

19.   விலங்கிலிருந்து மாறுபட்டதாக மனிதனில் காணப்படும் சிறப்பான இயல்புத் தன்மைகளின் மொத்த வடிவம் எனப்படுவது எது?

மனிதமாண்பு

20.   விலங்கின இயல்புகள் மட்டுமே உள்ள உயிரினம் எது?

 விலங்குகள்

21.   விலங்கின இயல்புகளும் மனிதப் பண்புகளும் உள்ள உயிரினம் எது?  

மனிதன்

22.   மனிதனின் மனித இயல்புக்கு அல்லது மனித மாண்புக்கு வெவ்வேறு மதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற சொற்கள் எவை?

தெய்வீகம், இறைச்சாயல், தெய்வீக உயிரணு, தெய்வீக ஜீவன் 

23.   மனிதத்துவமும், தெய்வீகமும் ஒன்றே என்ற கொள்கை கொண்ட மதங்கள் எவை?

யூத, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள்

24.   மனிதனின் மனிதமாண்பு என்பது தெய்வீகமானது என்ற கருத்து விவிலியத்தில் எந்த நூல் முதலே காணப்படுகிறது?

தொடக்க நூலின் முதல் அதிகாரம்

25.   கடவுளின் சாயலில் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான் என்ற அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ள நூல் எது?

விவிலியம்.

26.   "அப்பொழுது கடவுள், மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உருவாக்குவோம் என்றார்.... அவ்வாறு கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார். கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்விவிலியத்தில் எப்பகுதியில் காணப்படுகிறது?

தொடக்க நூல் 1: 26 – 27

27.   மனிதனில் கடவுளின் சாயல் உண்டு அல்லது கடவுளின் உயிருள்ள ஆவி உண்டு என்ற மனிதனைக் குறித்த அடிப்படை உண்மையை எடுத்தியம்புவது எது?

திருவிவிலியம்.

28.   வேதவல்லுநரான திரு. சங்கராச்சாரியார் “இறைத்தன்மையும், மனிதத்தன்மையும் ஒன்றே” (இறை ஆன்மாவும், மனித ஆன்மாவும் ஒன்றே”) என்றபொருளிலேயே பயன்படுத்துகின்ற வேத வாக்கியம் எது?

தத்துவமசி” (அது நீயே ஆகிறாய்)

29.   இறைத்தன்மையும், மனிதத்தன்மையும் குறித்த இந்து தத்துவக் கொள்கை, கிறிஸ்தவத் தத்துவ கொள்கை  இடையே காணப்படும் வேறுபாடு என்ன?

'ஒன்றே தான்' என்பதிலும் 'ஒன்று போலவே தான்' என்பதிலும்

30.   இராமாயணம் என்னும் காப்பியத்தில் (இதிகாசம்) வால்மீகி எந்த கதாபாத்திரம் வழியாக மனிதனை ஒரு மாறுபட்ட பார்வையில் சித்தரிக்கின்றார்?

அனுமன்

31.   "மனித மாண்பு என்பது மனிதனில் உறங்கிக் கிடக்கும் 'ஆன்மா'” என்றவர் யார்?

சாக்ரட்டீஸ்

32.   ஒரு தேங்காயின் உள்ளே இருக்கும் முளையில் முழு தென்னை மரமும் மறைந்திருப்பது போல மனிதனின் ஆன்மா எண்ணற்ற வாய்ப்புகளின் உறைவிடமே என்றவர்கள் யாவர்?

கிரேக்க தத்துவ அறிஞர்கள்

33.   கிரேக்க அறிஞர்களான சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் மனித மாண்பு பற்றிக்கூறியது என்ன?

மனித மாண்பின் உறைவிடம் கடவுளே தான்

34.   மனிதனிடம் உள்ள மனித மாண்பு கடவுள் தன்மையின் கூறுதான் என ஒத்துக் கொள்கின்ற மதங்கள் எவை?

அனைத்து மதங்களும் 

35.   மனிதன் தன்னிலுள்ள இறைத்தன்மையை இழந்தால் எதனை இழந்துவிடுவான்?

மனித மாண்பை

36.   மனித மாண்பை இழந்த மனிதன் எந்த இயல்பு உடையவனாக மாறிவிடுகிறான்?

விலங்கின இயல்பு

37.   மனித மாண்பினை வளர்ப்பது எது?

கடவுளோடுள்ள உறவு 

38.   கடவுளை ஆராதிக்காத மனித சமூகம் எதற்கிணையான சமூகமாக மாறிவிடுகிறது?

விலங்கிற்கு

39.   கடவுள் மனிதனை தமது சாயலில் நிலத்தின் மண்ணால் உருவாக்கி அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் (தொடக்க நூல் 2 : 7). இவ்வாறு மனிதன் கடவுளின் உயிர்மூச்சு (ஆன்மா) உடையவனும், இறைமாண்பு உடையவனுமாக உருவானான் எனக் கூறுவது எது?

திருவிவிலியம்

40.   கிறிஸ்தவ நம்பிக்கையில் மனிதன் என்பவன் யாருடைய ஆலயம் ஆகும்?

தூய ஆவி

41.   மனிதனிடம் உள்ள இறைச்சாயல் எனக் கூறுவது மனிதனிடமுள்ள யாருடைய பிரசன்னம் ஆகும்?

தூய ஆவியின்

42.   தந்தைக் கடவுள் மகனாகிய கடவுள் வழியாக மனிதனுக்கு அளித்துள்ள அருள்கொடையாக மனிதருள் குடிகொள்பவர் யார்?

தூய ஆவி

43.   தூயஆவி நம்மிடம் குடிகொண்டிருக்க வேண்டுமெனில் நாம் யாருடன் நிலைத்த உறவில் வாழ வேண்டும்?

 தந்தைக் கடவுளிடம்

44.   இறைஉறவிலிருந்து பிரிந்த பாவநிலையில் யாருடைய உடனிருப்பை மனிதன் இழந்துவிடுகிறான்?

தூய ஆவியின்

45.   ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து யாரோடுள்ள உறவை முறித்துக் கொண்டனர்?

கடவுளோடு

46.   "என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப்போவதில்லை; அவன் வெறும் சதை தானே" என்ற விவிலியப் பகுதி எது?

தொடக்க நூல் 6: 3

47.   யாரை இழந்த காயீன் தனது சகோதரனான ஆபேலின் கொலையாளியானான்?

தூய ஆவியை

48.   எந்த ஆற்றலை இழந்துவிட்ட சிம்சோன் பெலிஸ்தியரின் கைகளில் அகப்பட்டுக் கொண்டார்?

தெய்வீக ஆற்றலை

49.   தாவீது அரசர் பாவம் செய்தபின் கடவுளின் முன்னிலையில், யாரை தன்னிடமிருந்து எடுத்து விடாதேயும்" என்று இறைஞ்சி மன்றாடினார்?

தூய ஆவியை

50.   பாவம் செய்யும் போது யாரை இழந்துவிட நேரிடும் என்ற உணர்வால் தாவீது உருக்கமாக மன்றாடினார்?

தூய ஆவியை

51.   கடவுளின் ஆவியானவரின் உடனிருப்பை இழந்துவிடும் போது தெய்வீக இயல்புகளுக்கிணங்க வாழ்வதற்கான ஆற்றலையும் இழந்துவிடுபவன் யார்?

மனிதன்

52.   உண்ணுவது, உறங்குவது, தாக்குவது, பாலுறவு கொள்வது ஆகிய விலங்கின இயல்புகள் மனிதனில் அதிகமாக வலுவடைவது எப்போது?

மனிதன் கடவுளின் ஆவியானவரின் உடனிருப்பை இழக்கும் போது

53.   மனிதனில் தங்குகின்ற யார் உடலுடன் ஒன்று சேர்ந்திருக்கும் போது மனிதன் உண்மையான மனிதனாக மாறுகிறான்?

தூய ஆவியார்

54.   மனித உடலிலிருந்து யாருடைய பிரசன்னம் அகன்று போகுமானால் மனிதன் விலங்கின் தன்மைக்குத் தாழ்ந்துவிடவும் அவனது ஊனியல்புகள் தீமைக்கு இட்டுச் செல்லவும் செய்கின்றன?

தூய ஆவியின்

55.   மனிதனிடமுள்ள மனித மாண்பிற்குப் பொருந்தாத எத்தகைய இயல்புகள்  தீமையானவை ஆகும்?

விலங்கியல்புகள்

56.   யார் மனிதனிடம் குடியிருக்கும் போது மட்டுமே மனிதன் எதார்த்த மனிதனாக வாழ முடியும்?

தூய ஆவி

57.   யாருடைய அன்புறவை மனிதன் இழந்துவிடும் போது அதாவது தெய்வீகப் பண்புகளுக்கு ஏற்ப வாழ்வதற்கான அவனது ஆற்றலை இழந்துவிடும் போது மனித உறவுகள் தகர்ந்துவிடவும் சமூகம் சிதறுண்டு போகவும் செய்கிறது?

 தூய ஆவியின்

58.   தூய ஆவிக்கும் ஊனுடலுக்கும் இடையே நடைபெறும் போராட்டங்கள் குறித்து புனித பவுல் மிகவும் கவலை அடைந்து கூறியது என்ன? 

"நான்விரும்பும் நன்மையைச் செய்ய இயலாமல் விரும்பாத தீமையையே செய்கின்ற..... இரங்கத்தக்க மனிதன் நான்" (உரோமையர் 7:15 - 22).

59.   "தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்றமாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவதில்லை... தூய ஆவியின் துணையாய் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்." என்ற விவிலியப் பகுதி எங்குள்ளது?

கலாத்தியர் 5 : 16 - 17, 25

60.   மனிதனின் ஊனியல்புகளை அல்லது விலங்கின இயல்புகளைத் தூய்மைப்படுத்தி நன்மையின் பாதைக்கு அழைத்து செல்வது மனிதனின் தெய்வீகச் சாயல் அல்லது யாருடைய பிரசன்னமாகும்?

தூய ஆவியின்

61.   ஆன்மா மற்றும் ஊனுடல் இடையேயான போராட்டத்தில் யார் தோல்வியுறும் போது ஆடம்பர வாழ்வு (பணம்), பாலின உறவு (ஆண் - பெண்), அதிகாரம் (பதவி) ஆகியவை மனித வாழ்க்கையின் குறிக்கோளாக மாறிவிடுகின்றன?

ஆன்மா

62.   மனிதன் இறைவனோடுள்ள உறவைத் துண்டித்து விடுவதால் யாரை இழந்துவிடுவதற்கும், மனித மாண்பு மறைந்து போவதற்கும், சமூகம் பிளவுபட்டு போவதற்கும் காரணமாய் அமைகின்றது?

தூயஆவியை

63.   பண்பாடு (culture) என்னும் சொல்லை எத்தொழிலுடன்  தொடர்புபடுத்தினால் புரிந்து கொள்ள எளிதாக அமையும்?

பயிர்த் தொழில்

64.   மனிதனின் மனித மாண்பினை - இறைஉயிரை - வளர்த்துவதற்கு மனிதன் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்குப் பெயர் என்ன?

பண்பாடு

65.   பண்பாடு என்பதற்கு எத்தனை பகுதிகள் உள்ளன?

இரண்டு

66.   மனித மாண்பின் உறைவிடம் யார்?

இறைவன்

67.   மனிதனின் மனித மாண்பின் அனைத்து தலங்களையும் வளர்க்கவும், ஊக்கப்படுத்தவும் செய்கின்ற எல்லாச் செயல்பாடுகளுடையவும், ஒழுங்கமைப்புகளுடையவும் மொத்த வடிவம் என்பது என்ன?

பண்பாடு      

68.   மனிதனுக்குக் கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகள் யாவை?

மதமும் ஆலயமும்

69.   மனித மாண்பின் அடிப்படை யார்?

இறைவன்

70.   பண்பாட்டின் ஜீவத்தண்ணீர் என்பது என்ன?

இறைஆராதனை

71.   தவறான மனிதக் கற்பனைகளில் கட்டியெழுப்புகின்ற சமூகங்கள் எத்தகைய பண்பாடுகளாகும்?

அழிவின் பண்பாடுகள்

72.   கடவுளை மறுத்துவிட்டு கட்டியெழுப்புகின்ற எல்லாப் பண்பாடுகளும் தகர்ந்துவிடுமென எது நமக்கு நினைவூட்டுகின்றது?

வரலாறு

73.   கம்யூனிசம் எக்கொள்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டது?

நாத்திகம்

74.   ஒரு சமூகம் பண்பாட்டில் செழித்து வளர மிகவும் இன்றியமையாதது எது?  

மனித மாண்பு

75.   எதன் விளைவாக பிரபஞ்சமும், மனிதனும் தோற்றம் கொண்டன என்பது அனைத்து மதங்களுடையவும் அடிப்படைக் கோட்பாடு ஆகும்?

கடவுளின் விருப்பாற்றலின்

76.   பிரபஞ்சப் படைப்பிலும், மனிதப்படைப்பிலுமுள்ள கடவுளின் ஆற்றல் மிகுந்த ஈடுபாடு குறித்து விவிலியத்தின் எப்பகுதியில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது?

தொடக்க நூலின் முதல் இரண்டு அதிகாரங்களில்

77.   எந்த இறைவார்த்தையின் அடிப்படையிலான கொள்கையை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கு அறிவியலுக்குப் பல வேளைகளில் இயல்வதில்லை?

அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை” (யோவான் 1:3)

78.   பிரபஞ்சத் தோற்றம் குறித்த பேரதிர்வுக் கொள்கையின் பெயர் என்ன?

Big Bang Theory

79.   மனிதத் தோற்றம் குறித்த பரிணாமக் கொள்கையின் பெயர் என்ன?

Evolution Theory

80.   சாரல்ஸ் டார்வின் (1809 - 1882) எந்த  நூலில் பரிணாமத்தை (Evolution) ஒரு கொள்கையாக உருவாக்கினார்?

 'உயிரினங்களின் தோற்றம்' (Origin of Species)

81.   பழங்காலத்து நுண்ணுயிர்களிலிருந்து தான் தொடர்ச்சியான மாற்றங்களால் இன்றைய உயிரினங்களெல்லாம் உண்டாயின எனவும், இன்றைய பல இலட்சம் உயிரினங்கள் (Species) உண்டாவதற்குக் காரணம் இயல்பான நிலைத்தலே (Natural Selection) ஆகும் எனவும், "ஊக்கமுடையவை நிலைத்திருக்கும் (Survival of the fittest) எனவும் வலியுறுத்தும் கொள்கை எது?

பரிணாமக் கொள்கை

82.   பரிணாமக் கொள்கையின்படி உயிரின் எத்தனை ஆண்டைய மாற்றத்தின் வாயிலாகத் தான் மனிதன் தோன்றினான்?

கோடானு கோடி

83.   உயர்ந்த இனப் பாலூட்டிகளான மனித குரங்குகளிலிருந்து புத்தி கூர்மையும், சுதந்திரமும் உடைய மனிதன் உருவானான் என்பது யாருடைய கொள்கை?

டார்வின் கொள்கை

84.   மானிடத் தோற்றம் குறித்து மனிதன் எழுப்புகின்ற எல்லா வினாக்களுக்கும் முழுமையான விடையளிப்பதற்கு எதற்கு இயலாது?

அறிவியலுக்கு

85.   பரிணாமம் வாயிலாகத் தான் மனிதன் தோன்றினான் என்னும் விஞ்ஞான அனுமானத்தை எந்த மதம் கடவுளுடன் தொடர்புபடுத்தி விளக்குகின்றது?

கிறிஸ்தவ மதம்

86.   பிரபஞ்சத்தின் தோற்றமும், மானிடப் பிறவியும் யாருடைய விருப்பாற்றலின் பயனாக உருவாயின?

கடவுளின்

87.   பிரபஞ்சத்தின் தோற்றத்திற்குக் காரணமான பேரதிர்வுக்கு பின்னணியிலிருந்துத் தூண்டிச் செயலாற்றியவர் யார்?

கடவுள்

88.   மனித நிலைக்கு வளர்ச்சி மாற்றம் வந்தடையும் போது விலங்கினங்களுக்கு இல்லாத பல சிறப்புத் தன்மைகள் யாவை?

அறிவு, நினைவு, விவேகம், சிந்தனை. உணர்ச்சி, மனசாட்சி, கருத்துப் பரிமாற்றம், ஆளுமை, பேசும் திறமை, கடவுள் சிந்தனை, ஆடை அணிவதற்கான ஆவல், அறநெறி உணர்வு, அழகினை நுகரும் திறன், இறைவழிபாட்டுணர்வு, படைப்பாற்றல் சிந்தனை

89.   விலங்கிலிருந்து மனித இனத்திற்கான வளர்ச்சி மாற்றத்திலும் மறைந்திருந்து கடவுள் ஈடுபட்டுள்ளார் என்பது யாருடைய நம்பிக்கை?

திருச்சபையின்

90.   மனிதன், கடவுளின் சிறப்பான படைப்பே எனவும், அவன் கடவுளின் உருவிலும், சாயலிலும் படைக்கப்பட்டதனால் மனிதனிடம் விலங்கினங்களுக்கு இல்லாத தெய்வீகப் பண்புகள் இரண்டறக் கலந்து சேர்ந்திருக்கின்றன எனக் கற்பிக்கின்ற குழுமம் எது?

கிறிஸ்தவ திருச்சபை

91.   அறிவியல் அனுமானங்களை விஞ்ஞான முறையில் தெளிவுபடுத்துவது எந்நூலின்  குறிக்கோள் அல்ல?

விவிலியத்தின்

92.   கடவுளின் மறைவாயிருந்துச் செயல்படும் வலிமைமிகு ஆற்றல் பிரபஞ்ச, மானிடப் படைப்புகளில் ஈடுபட்டது எனக் கற்பிப்பதும், சான்று பகர்வதும் எந்நூலின் நோக்கம் ஆகும்?

விவிலியத்தின்

93.   மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகின்ற அடிப்படையான இறை இயல்புகள் மனிதனுக்கு யாரிடமிருந்து கிடைத்தது?  

கடவுளிடமிருந்து

94.   விண்வெளியை விரித்தவரும், மண்ணுலகை நிலைநாட்டியவரும், மனிதரின் ஆவியை அவர்களுள் தோற்றுவித்தவருமான ஆண்டவர் என புகழ்ந்துரைத்தவர் யார்?

செக்கரியா

95.   உண்மையில் எல்லாம் வல்லவரின் மூச்சே மனிதரில் இருக்கும். அந்த ஆவியே உய்த்துணர்வை அளிக்கின்றதுஎன்ற விவிலியப் பகுதி எது?

யோபு 32 :8

96.   மனிதனின் தோற்றமும் விலங்கிலிருந்து அவனை வேறுபடுத்துகின்ற அவனது சிறப்பியல்புகளும் யாரைத் தவிர்த்து மனிதனால் புரிந்து கொள்வதற்கு இயலாது?

கடவுளை

 

பாடம்: 2

இயேசு கிறிஸ்து :

மனித மாண்பின் முழு நிறைவு

 

1.        "வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்" என்ற விவிலியப் பகுதி எங்குள்ளது?

யோவான் 1:14

2.        இறைமகன் மனுவுருவாகி மனித வரலாற்றை எவ்வாறு இரண்டாகப் பிரித்தார்?

கிறிஸ்துவுக்கு முன்னர், கிறிஸ்துவுக்குப் பின்னர்

3.        தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது " என்ற விவிலியப் பகுதி எங்குள்ளது?

யோவான் 1: 1

4.        யார் மனுவுருவானதால் ஒரே நேரத்தில் அவர் கடவுளும், மனிதனும் ஆனார்?

வார்த்தையாகிய இறைமகன்

5.        கடவுள் யாருடைய ஊனுடலைப் பெற்றுக்கொண்டதன் வாயிலாக மனித இனத்திற்குப் புதுத்தோற்றமும், சில கடமைகளும் வந்துசேர்ந்தன?

மனிதனின்

6.        யார் வாயிலாக மனிதகுலம் புனிதப்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, மீட்கப்பட்டது?

இயேசுகிறிஸ்து

7.        எதன் வாயிலாக மனிதகுலம் விண்ணகத் தந்தையின் வலப்பக்கத்திற்கு உயர்த்தப்பட்டது?

இயேசுவின் விண்ணேற்றம்

8.        இயேசு கிறிஸ்துவுக்கும் மனித குலத்திற்கும் இடையேயான உறவு எப்போது துவங்கியது?

மனிதப் படைப்பு  

9.        தந்தையாகிய கடவுள் அனைத்தையும் படைப்பவரே என்பதும், மகனாகிய கடவுள் மீட்பவரே என்பதும், தூய ஆவியாகிய கடவுள் எல்லாவற்றையும் புனிதப்படுத்தி நிறைவு செய்பவரே என்பதும் எவ்வியலின்  புரிதலாகும்?

இறையியல்

10.   படைப்புச் செயலிலும், மீட்புச் செயலிலும், நிறைவு செய்யும் ஆற்றலிலும் தூய மூவொரு கடவுளின் ஒவ்வொரு நபரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதை எடுத்துக்கூறும் திருச்சபைகள் எவை?

கிழக்குத் திருச்சபைகள்

11.   ஆதியில் கடவுள்  எந்த வார்த்தையின் வாயிலாக பிரபஞ்சத்தையும், அதிலுள்ளவைகளையும் படைத்தார்?

"தோன்றுக"

12.   "அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை" என்ற விவிலியப் பகுதி எங்குள்ளது?

யோவான் 1:3

13.   "அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டனஎன்ற பவுலடியாரின் விவிலியப் பகுதி எங்குள்ளது?

கொலோசையர் 1: 16

14.   விசுவாசப் பிரமாணத்தில் படைப்பு பற்றி நாம் அறிக்கையிடுகின்ற வாக்கியம் என்ன?

"இவர் வழியாகவே எல்லாம் படைக்கப்பட்டன 

15.   மலங்கரை கத்தோலிக்க சபையின் ஆராதனை முறையின் செபங்களில் படைப்பு குறித்த சொற்கள் எவை?

இறைமகனாகிய இயேசு, தமது கரங்களாலேயே மனிதனை வனைந்து உருவாக்கினார்

16.   திருப்பாடுகளின் வாரத்தில் குறிப்பாகப் எந்நாளைய மன்றாட்டுகளில் மனிதப் படைப்பு குறித்த வெளிப்படுத்தல்கள் ஏராளம் உள்ளன?

பெரிய வெள்ளியின் மன்றாட்டுகளில்

17.   ஆண்டவரே உமது சுய உருவிலும் சாயலிலும், உமது திருக்கையால் எங்களை வனைந்து உண்டாக்கினீர். நாங்கள் அழிவினில் அமிழ்ந்த போது, நீர் உமது துன்பப்பாடுகளால் எங்களைக் காப்பாற்றினீர். உமது புனிதமான உடலுதிரங்களில் எங்களையும் நீர் பங்காளிகளாக்கினீர்" என்ற செபப் பகுதி எங்குள்ளது?

மகளிர் இறுதி சடங்கு முறை, இரண்டாம் திருச்சடங்கு, செதறா

18.   தந்தைக் கடவுள் யாரிடம் மீட்புத்திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஒப்படைத்தார்?

மகனாகிய கடவுளிடம்

19.   "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்" என்ற விவிலியப் பகுதி எங்குள்ளது?

தொ. நூல் 1:26

20.   தொடக்கத்தில் உருவமில்லாமலிருந்த மகனாகிய கடவுள் எந்த உருவத்தில் மனிதனை வனைந்து உண்டாக்கினார் என்பதை நம்மால் சிந்திக்க கடவுள் காலநிறைவில் மனிதனாகும் போது தாம் எடுக்கப் போகும் மனித உருவத்தை முன் கண்டு, அதே வடிவத்தை யாருக்கு வழங்கினார்?  

ஆதி மனிதனுக்கு

21.   மனுவுருவெடுக்கும் இயேசுவின் முகத்தோற்றமே ஆதி மனிதனுக்கும் கடவுள் அளித்தார் என்பது எந்த திருச்சபை தந்தையர்கள் அளிக்கும் விளக்கம்?

கிழக்குத் திருச்சபைத் தந்தையர்கள்

22.   மனிதனுக்கு அவனது உருவமும் சாயலும் கிடைக்கப்பெற்றதோ மனுவுருவான யாருடைய உருவிலிருந்தும் சாயலிலிருந்துமே ஆகும்?

இயேசுவின்

23.   இயேசுவோ தாம் தந்தைக் கடவுளின் சாயலே எனத் தெளிவுபடுத்திய விவிலியப்பகுதி எது?

"என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்" (யோவான் 14 : 8 - 9)

24.   "வழியும், உண்மையும், வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" என்ற விவிலியப் பகுதி எங்குள்ளது?

யோவான் 14:6

25.   தந்தையைக் காண்பதற்கும் கேட்பதற்குமான ஒரே வழி இயேசு தான் எனவும் தந்தையின் சாயலே தனக்குள்ளது எனவும் தெளிவுபடுத்தியவர் யார்?

இயேசு

26.   மனித குலம் யார் வாயிலாகத் தந்தையோடும், தூய ஆவியோடும் இணைந்துள்ளது?  

இயேசுவின்

27.   மனித குலத்தின் படைப்பாளர் என்ற நிலையில் மட்டுமன்றி, மீட்பர் என்ற நிலையிலும் மனிதர் யாருடன் கடமைப்பட்டிருக்கின்றனர்?

இயேசுவுடன்

28.   தந்தையின் விருப்பத்தின் படி மகன் மனிதனைப் படைத்து எங்கே குடியமர்த்தினார்?

இன்பவனத்தில்

29.   கடவுளின் விருப்பத்திற்கெதிராகச் செயல்பட்ட மனிதன் கடவுளின் அருளை அல்லது யாருடைய பிரசன்னத்தை இழந்து ஊனியல்பின் நிலைக்கு தள்ளப்பட்டான்?

தூய ஆவியின்

30.   பாவ இருளில் வாழ்ந்த மனிதனின் துன்ப நிலையைக் கண்டு, அம்மனிதனை தமது கையினால் உருவாக்கிய இறைமகனே மனிதனாகி, மனிதகுலத்தை மீட்பதற்கான திட்டத்தை வகுத்தார். இறைமகன் யார்?

இயேசு கிறிஸ்து

31.   மனிதனாகிய இயேசு தமது வாழ்க்கையின் வாயிலாக யாரை புனிதப்படுத்திக் கொண்டிருந்தார்?

மனிதகுலத்தை

32.   இயேசு மனித குலத்தை மீட்டு, இன்பவனத்தில் மனிதன் இழந்துபோன தூயஆவியை எந்த நாளில் திரும்ப வழங்கினார்?

பெந்தக்கோஸ்து நாளில்

33.   மனித குலத்தின் மீட்பர் என்ற நிலையிலும், படைப்பாளர் என்ற நிலையிலும் மனிதன் யாரோடு நெருங்கியத் தொடர்பு கொண்டுள்ளான்?

இயேசு கிறிஸ்துவோடு

34.   யாரைத் தொடர்புபடுத்தி மட்டுமே மனிதன் யார்? அவன் எதற்காகப் படைக்கப்பட்டான்? அவனது வாழ்வின் பொருள் என்ன? இவ்வுலக வாழ்க்கையின் குறிக்கோள் யாது? போன்ற வினாக்களுக்கு விடை காண முடியும்?

இயேசு கிறிஸ்துவோடு

35.   இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் அவரைப் பின்பற்றியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

நசரேயர்

36.   கேரளாவில் தொடக்க கால கிறிஸ்தவர்கள் எவ்வாறு அழைக்கப்ட்டனர்?

நசராணிகள்

37.   கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் முதன் முதலாக 'கிறிஸ்தவர்கள்' என்னும் பெயரில் எங்கே வைத்து அழைக்கப்பட்டனர்?

அந்தியோக்கியாவில்

38.   "இவ்வளவு குறுகிய காலத்துக்குள் என்னைக் கிறிஸ்தவனாக்கி விடலாம் என நம்புகிறீரா?" யார் யாரிடம் கூறியது?

அகிரிப்பா அரசர் பவுலை நோக்கி

39.   கிறிஸ்துவின் சீடர்களை "கிறிஸ்தவர்" என்னும் பெயரில் அழைத்தவர்கள் யாராக இருப்பதற்கே வாய்ப்புள்ளது?

பிற இனத்தவர்கள்

40.   கிறிஸ்தவர்கள் தங்களை எந்தெந்த பெயர்களில் அழைத்திருந்தனர்?

சகோதரர்’ (திருத்தூதர் பணிகள் 14 : 2, 15: 3), 'சீடர்கள்' (திருத்தூதர் பணிகள் 13:52), இறைமக்கள் (உரோமையர் 16: 15), ‘நம்பிக்கையுடையோர்' (திருத்தூதர் பணிகள் 10: 45), ‘புதிய நெறியைச் சார்ந்தவர்கள்' (திருத்தூதர் பணிகள் 9: 2), ‘இந்த நெறியைச் சார்ந்தவர்கள்' (திருத்தூதர் பணிகள் 19: 9)

41.   நாசரேத்து இயேசுவை, மெசியா அல்லது கிறிஸ்து எனவும், தந்தையின் ஒரே மகன் எனவும், வார்த்தையும் கடவுளும் எனவும் விசுவசித்து பின்தொடர்பவர்கள் யாவர்?

கிறிஸ்தவர்கள்

42.   "எனவே வாழ்வது நானல்ல; கிறிஸ்து என்னுள் வாழ்கிறார்" (கலாத்தியர் 2 : 20) என்றவர் யார்?

புனித பவுல்

43.   இயேசுவில் நம்பிக்கை வைத்து, அவரை அன்பு செய்வதன் வாயிலாக இயேசுவோடு இணைந்துவிடுவதே ஒவ்வொரு கிறிஸ்தவனுடையவும் அடிப்படை இயல்பாக இருக்க வேண்டும். இதனைப் பற்றி பவுலடியார் கூறியது என்ன?

"அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத் தான் நான் இவ்வாறு கருதுகிறேன்" (பிலிப்பியர் 3:8-9).

44.   கிறிஸ்துவை ஆழமாக அன்பு செய்து, அவரைப் பின் தொடர்ந்த புனித பவுல் ஆண்டவரின் அன்பைப் வலியுறுத்திக் கூறியது என்ன?

"கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடறா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? (உரோமையர் 8:25).

45.   "நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே" (பிலிப்பியர் 1:21) என்றவர் யார்?

புனித பவுல்

46.   ஒரு மனிதனின் கிறிஸ்தவ வாழ்வின் தொடக்கம் அவர் யாருடன் உறவு ஏற்படுத்திக் கொள்ளும் தருணம் முதலே ஆகும்?

இயேசு கிறிஸ்துவுடன்

47.   புகுமுக அருளடையாளங்களான திருமுழுக்கு. உறுதிபூசுதல், நற்கருணை ஆகியவை வழியாகவே ஒருவர் முதன் முதலாக இயேசுவோடும். தந்தைக்கடவுளோடும். இயேசு அனுப்பித் தந்த தூய ஆவியோடும் எத்தகைய ஏற்படுத்திக் கொள்கிறார்?

தெய்வீக உறவு

48.   எதன் வழியாக ஒருவர் தூய மூவோரிறைவனுடனும், இயேசுவின் மறையுடலான திருச்சபையுடனும் உறவில் ஏற்படுகிறார்?

அருளடையாளங்கள்

49.   ஆதித்திருச்சபையில் வளர்ச்சிப் பருவம் அடைந்தவர்கள் திருச்சபையில் இணைந்துகொள்ள விரும்பியபோது எதன் பிறகுதான் கிறிஸ்தவர்களானார்கள்?

இயேசுவை அறிந்து, விசுவசித்து, அறிக்கையிட்டு, மனமாற்றம் அடைந்து  திருமுழுக்கு பெற்ற பின்னர்

50.   கிறிஸ்தவ நம்பிக்கையை அவர்களது குழந்தைகளுக்குச் சிறுபருவத்திலேயே அளிக்கத் தீர்மானிப்பவர்கள் யாவர்?

பெற்றோர்

51.   குழந்தை எதனை கற்கத் தொடங்குவதுடன் கிறிஸ்தவ வாழ்க்கையைத் தெரிந்து வாழ ஆரம்பிக்கிறது?

மறைக்கல்வி

52.   ஒரு பிள்ளை கிறிஸ்தவ விசுவாசத்தைப் புரிந்து கொண்டு வளர முயற்சிக்கும் போது எதனை பகுத்தறியத் துவங்குகிறது?

தவறும் சரியும், நன்மையும் தீமையும்.

53.   உணர்வு பூர்வமான கிறிஸ்தவ வாழ்வைப் புரிந்து வாழ்வதன் அடுத்த நிலையாக எந்த அருளடையாளத்திற்காகப் பிள்ளைகளைத் திருச்சபை தயாரிக்கின்றது?

பாவ சங்கீர்த்தனம் (ஒப்புரவு)

54.   "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்என்ற விவிலியப் பகுதி எங்குள்ளது?

மாற்கு 1:15

55.   மனிதனில் விலங்கின இயல்புகள் உள்ளன எனவும், மனிதன் வரையறைகளுக்கு உட்பட்டவனாகையால் மனித மனம் தீமையின் திசைக்குச் சாய்ந்திருக்கிறது எனவும், கடவுளோடுள்ள உறவினால் மட்டுமே மனிதனிடமுள்ள விலங்கின இயல்பை உயர்பண்புடையதாக்கி மாற்றவும், நன்மையின் பாதைக்குத் திருப்பிவிடவும் மனிதனால் இயலும் எனவும் அறிந்தவர் யார்?

கடவுள்

56.   இயேசு கிறிஸ்துவோடு உறவு ஏற்படுத்திக் கொள்வதற்காக மனிதன் அவனது பாவத்தை எண்ணி, மனம் வருந்தி, தீமையிலிருந்து அகன்று, மனம் மாறி யாருடைய நற்செய்தியில் நம்பிக்கை கொள்ள வேண்டும்?

இயேசுவின்

57.   இயேசுவில் நம்பிக்கை வைத்து அவர் வாயிலாகக் கடவுளின் அதிகாரத்தை ஏற்று கடவுளோடு சேர்ந்துள்ள நிலை எந்த ஆட்சியின் அனுபவம் ஆகும்?

இறைஆட்சி

58.   கிறிஸ்துவோடும் கிறிஸ்துவின் வாயிலாகத் தந்தைக் கடவுளோடும் உள்ள எது தான் கிறிஸ்தவ வாழ்க்கை நிலைக்கு அடிப்படையான காரணி?

உள்ளார்ந்த ஒப்புரவு (இணக்கம்)

59.   பாவம் என்பது என்ன?

கடவுளிடமிருந்து அகன்று வாழ்வதும் அவரோடுள்ள எதிர்ப்பும், பகையும்

60.   பாவ விடுதலை என்பது என்ன?

கடவுளோடுள்ள நெருக்கமும் அன்பும், ஒப்புரவும்

61.   ஒருவருக்கு உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை நிலை கிடைப்பது எப்போது?

பாவத்தை வெறுத்து ஒதுக்கி, கடவுளிடம் வந்து, உறவு ஏற்படுத்திக் கொள்வது

62.   பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் போது தான் ஒருவன் யாராக மாற முடியும்?

கிறிஸ்தவனாக

63.   கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தூய்மையாக்கப்பட்டு எதனால் கிறிஸ்துவோடு அன்புறவில் ஒட்டிச் சேர்க்கப்படுகின்றனர்?

புகுமுக அருளடையாளங்கள்,

64.   கிறிஸ்தவ சகோதரா! உமது மாண்பு என்ன என்று தெரிந்து தெளிந்து கொள். நீர் இப்போது தெய்வீக இயல்பிலேயே பங்கேற்பதனால், பாவச்செயல்களில் வீழ்ந்து, முன்னிருந்த அவலநிலைக்குச் சென்றுவிடக்கூடாது. உமது தலையாக இருப்பது யார் என்பதும், யாருடைய உடலின் உறுப்பாக இருக்கிறீர் என்பதும் எப்போதும் நினைத்துக் கொள்வீர். இருளின் வல்லமையிலிருந்து நீர் விடுபட்டிருக்கிறீர் என்பதையும் இறையரசின் ஒளியினுக்கே நீர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறீர் என்பதையும் நினைத்துக் கொள்வீர்" என்றவர் யார்?

மாமேதை புனித லெயோ

65.   இறைவனோடு இணைந்து, பாவ விடுதலை பெற்ற மனநிலை உடையவர்களாக வளர வேண்டியது யாருடைய கடமையாகும்?

ஒவ்வொரு கிறிஸ்தவனுடையவும்

66.   ஒருவரின் இறைஅன்பு, எந்த அன்பு மூலமாக வெளிப்படுகிறது?

சகோதர அன்பு

67.   இறையன்பும், சகோதர அன்பும் எந்த வாழ்வின் இருபக்கங்கள் ஆகும்?

கிறிஸ்தவ வாழ்வு நிலையின்

68.   இறைவனோடுள்ள அன்பு யாரை அன்பு செய்வதன் வாயிலாக வளர்ச்சி அடையவும், செழிப்படையவும் செய்கிறது?

மனிதனை

69.   ''மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்தவையெல்லாம் எனக்கே செய்தீர்கள்" (மத்தேயு 25 : 40) என்றவர் யார்?

இயேசு

70.   கிறிஸ்தவ வாழ்வுநிலை வளர்ச்சி அடைவதும், தளர்ச்சி அடைவதும் எதனைப் பொறுத்தே அமைகிறது?

சகோதர அன்பு

71.   எதனால் கிறிஸ்துவோடு உறவு கொள்ளும் ஒருவர் கிறிஸ்துவோடு தொடர்புடைய எல்லா மனிதருடனும் அன்புறவிலாகிறார்?

திருமுழுக்கு

72.   கிறிஸ்துவின் மறையுடலாம் திருச்சபையில் யார் தலையாய் இருக்கிறார்?

கிறிஸ்து

73.   கிறிஸ்துவின் மறையுடலாம் திருச்சபையில் உறுப்புகளாய் இருப்பவர்கள் யாவர்?

கிறிஸ்தவர்கள்

74.   யார் ஒரு உடலின் உறுப்புகளைப் போன்று கிறிஸ்துவிலும், அவரது ஒரே ஆவியிலும், ஒரே உடலாய் ஒன்றிணைந்து மகிழ வேண்டியவர்களும், துன்புற வேண்டியவர்களும் ஒருவருக்கொருவர் துணையாயிருக்க வேண்டியவர்களும், நிறைவு செய்ய வேண்டியவர்களும் ஆவார்கள்?

கிறிஸ்தவர்கள்

75.   ஒருவரது இறை உறவு வெளிப்படுவது, சகோதர அன்பிலாகும். எனவே, சமூகத்தோடு உறவில்லாத எந்த விசுவாசம் பொருளற்றதாகும்?

கிறிஸ்தவ விசுவாசம்

76.   ஒருவர் உண்மையான கிறிஸ்தவனாக உருவெடுப்பது எப்படி?

பாவ நிலையிலிருந்து அகன்று, கிறிஸ்துவோடும், சகோதரரோடும் உள்ள அன்பில் வளர்ச்சி அடையும் போது  

77.   எத்தகைய நிறைவுக்கு எல்லாக் கிறிஸ்தவர்களும் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவிலிய வார்த்தை என்ன?

"உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல் நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்" (மத்தேயு 5 : 48)

78.   ஒரு கிறிஸ்தவர் யாரை இலக்காகக் கொண்டு வளரும் போது தனது ஆளுமையின் நிறைவில் கிறிஸ்துவின் சாயலை அடைகிறார்?

கிறிஸ்துவை

79.   "கிறிஸ்துவை இலக்காகக் கொண்டு வளர்பவர்கள் யாருடைய சாயலின் இயல்பைப் பெற்றுக் கொள்கிறார்கள்?

கிறிஸ்து சாயலின்

80.   கிறிஸ்துவை நோக்கி வளர, தவிர்க்க முடியாத வேதனை பற்றி புனித பவுல் கூறுவது என்ன?  

"என் பிள்ளைகளே, உங்களில் கிறிஸ்து உருவாகும் வரை உங்களுக்காக நான் மீண்டும் பேறுகால வேதனையுறுகிறேன்” (கலாத்தியர் 4 : 19)

81.   பழைய மனிதனுக்குரிய இயல்பைக் களைந்துவிட்டு, புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளும் போது நாம் யாருடைய  சாயலில் வளர முடியும்?

கிறிஸ்துவின்

82.   ஒருவர் கிறிஸ்து சாயலுக்கு வளர்ச்சி பெறுகிறார் எனக்கூறும் போது அவர் அருள்வாழ்வு சார்ந்த எந்தெந்த நற்பண்புகளில் வளர்கிறார்?

(Theological Virtues) நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு

83.   யாருடைய பிரசன்னத்தால் கிடைக்கும் அருள்கொடைகளின் வாயிலாக மேற்கூறிய தெய்வீகப் புண்ணியங்கள் தோன்றி வளர்கின்றன?

தூய ஆவியின்

84.   யாருடைய அருளால் நம்பிக்கையின் ஆழ்நிலைக்குள் நுழைய ஒருவருக்கு இயலும்?

தூய ஆவியின்

85.   யாரோடுள்ள நம்பிக்கையே அடிப்படையான தெய்வீக புண்ணியம் ஆகும்?

இயேசு கிறிஸ்துவிலுள்ள

86.   வாழ்க்கையின் இருள் சூழ்ந்த நிமிடங்களிலும், நம்பிக்கை தளர்ந்த நிலையிலும், துன்ப துயரங்களிலும் இயேசுவில் எதிர் நோக்கியிருக்கவும் அதில் வலுப்பெறவும் ஒரு கிறிஸ்தவனுக்கு இயலும் போது அவர் யாருடைய சாயலில் வளர்கிறார்?

கிறிஸ்து

87.   ஒரு கிறிஸ்தவனுக்கு இயேசுவுடனான தனிப்பட்ட உறவை வலுப்படுத்துவதற்குப் பேரார்வமும், ஆற்றலும் அளிப்பது இந்த எதிர்நோக்கு தான். கடவுள் வாக்குமாறாத நம்பிக்கைக்குரியவராதலால் எதிர்காலத்தைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்ற உணர்வை நமக்கு அளிப்பது எது?

இயேசுவை நோக்கிய எதிர்நோக்கு

88.   நம்பிக்கையும், எதிர்நோக்கும், எதன் பாதைகளாகும்?

நிறைவான அன்பின்

89.   இயேசுவிலுள்ள நம்பிக்கை அவரோடுள்ள எதன் தொடக்கமாகும்?

அன்பின்

90.   நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுள் நம் உள்ளங்களில் பொழிகின்ற அருள்கொடை என்பது எது?

அன்பு

91.   அன்பே உருவான கடவுளோடு ஒன்றிணைவதிலும் அந்தத் தெய்வீகச் சாயலில் வளர்வதிலும் எதன் மேன்மையை நாம் காண்கிறோம்?

கிறிஸ்தவ வாழ்வின்

92.   கடவுளோடும் பிறரோடும் ஒருவருக்குள்ள அன்பின் வளர்ச்சியை எதன் வளர்ச்சி என பொருள் கொள்கிறோம்?

கிறிஸ்துவின் சாயலுக்கான வளர்ச்சி

93.   யாரிடமுள்ள அன்பிற்காக ஒருவர் எந்தத் தியாகத்தைச் செய்வதற்கும், எல்லாவற்றையும் இழந்து விடுவதற்கும் துணிந்துவிடுவார்?

இயேசுவோடுள்ள

94.   புனித பவுல் கிறிஸ்துவின் அன்பினால் நிறைவுற்றவராய் கூறிய வார்த்தைகள் என்னென்ன?  

"என்னைப் பொறுத்த வரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை” (திருத்தூதர் பணிகள் 20 : 24), "கிறிஸ்துவின் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன், கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்" (பிலிப்பியர் 3:8-9).

95.   கிறிஸ்தவ அன்பு என்பது யார் நம்மீது காட்டிய அன்பின் தொடர்ச்சியேயாகும்?

கிறிஸ்து

96.   இயேசுவின் அன்பு கட்டளை யாது?

"நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் (யோவான் 15: 12)

97.   கிறிஸ்துவினால் அமையப்பெற்றதும், கிறிஸ்து இயல்பானதும், கிறிஸ்துவினால் தூண்டப்பட்டதுமான அன்பின் வாயிலாகக் கிறிஸ்துவைத் தன்னில் உருவாக்கிக் கொள்ளும் போது மட்டுமே கிறிஸ்தவனில், எத்தகைய  வாழ்வுநிலை உருவாக முடியும்?

கிறிஸ்தவ வாழ்வுநிலை

98.   கடவுளையும், மனிதனையும் முழுமையாக அன்பு செய்யவேண்டுமெனில் கிறிஸ்தவன் தன்னிடமுள்ள எந்த இயல்பினை இறைப் பிரசன்னத்தால் மேன்மைப்படுத்தி இறைஇயல்புக்குத் தக்கதாகத் தன்னை மாற்றிவிட வேண்டும்?

விலங்கின இயல்பினை

99.   யார் வாயிலாகக் கிறிஸ்தவர் ஒவ்வொருவரும் கடவுளின் மகனும் மகளுமாக உருவாகின்றனர்?

இயேசு கிறிஸ்து

100.                             "கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்" என்றவர் யார்?

புனித பவுல்

101.                             அனைத்துக் கிறிஸ்தவர்களும் யாருடைய ஆவியால் இயக்கப்பட வேண்டும்?  

கடவுளின் ஆவியால்

102.                             மனிதனிலுள்ள இறைச்சாயல் அல்லது தெய்வீகப் பிரசன்னம் என்பவர் யார்?

தூயஆவியார்

103.                             ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப வாழவேண்டியவர்கள் (உரோமையர் 8:4) யாவர்?

கிறிஸ்தவர்கள்.

104.                             மனிதனில் அடிப்படையான விலங்கின இயல்புகள் அமைந்துள்ளமையால் ஊனியல்பின் தூண்டுதலைக் கட்டுப்படுத்துவதற்காகத் தூய ஆவியின் துணையால் வலுவடைய வேண்டுமென புனித பவுல் கற்பிப்பது என்ன?

"கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல” (உரோமையர் 8 : 9)

105.                             "ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்கு கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால் சாகத்தான் போகிறீர்கள். ஆனால் தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்” (உரோமையர் 8: 12-13) என்றவர் யார்?

புனித பவுல்

106.                             "தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்றமாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது” (கலாத்தியர் 5 : 16 17) என்றவர் யார்?

புனித பவுல்

107.                             ஊனியல்பின் இச்சைகளுக்கேற்ப வாழ்பவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல எனவும், அவர்கள் பரத்தமை, கெட்டநடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லிசூனியம், பகைமை, சண்டைச் சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர் எனவும், இத்தகையோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை.” (கலாத்தியர் 5 : 19 - 21) என்றவர் யார்?

புனித பவுல்

108.                             தூய ஆவியினால் இயக்கப்படுகின்ற உண்மையான கிறிஸ்தவர்கள் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, துணிவு, தன்னடக்கம் ஆகிய தூய ஆவியின் கனிகளை விளைவிப்பார்கள். (கலாத்தியர் 5 : 22-23). என்றவர் யார்?

புனித பவுல்

109.                             தூய ஆவியின் கனிகளை விளைவிப்பவர்கள் யாவர்?

உண்மையான கிறிஸ்தவர்கள்

110.                             "இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்” (கலாத்தியர் 5 : 24 - 25) என்றவர் யார்?

புனித பவுல்

111.                             உண்மையான கிறிஸ்தவர் யாருடைய துணையால் வாழ்பவர்களே எனப் புனித பவுல் தெளிவுபடுத்துகின்றார்?

தூய ஆவியின்

112.                             உலகத்தின் ஒளியாகவும், நிலத்தின் உப்பாகவும், மனித சமூகத்தின் புளிப்புமாவாகவும் அமைபவர்கள் யாவர்?

கிறிஸ்தவர்கள்

113.                             மனித சமூகம் முழுவதையும் கிறிஸ்துவிடம் கொண்டுவர அழைக்கப்பட்டவர்கள் யாவர்?

 கிறிஸ்தவர்கள்

114.                             மனித சமூகத்தின் மீட்பு இயேசு வழியாக நிறைவேற யார் கிறிஸ்துவின் நறுமணமாகவும் சாட்சிகளாகவும் மாறவேண்டும்?

கிறிஸ்தவர்கள்

 

பாடம் :3

கடவுளைச் சொந்தமாக்குவதே

கிறிஸ்தவ அருள்நெறியின் அடிப்படை

 

1.        கடவுளைக் குறித்த அடிப்படையான பொருள் வரையறை என்ன?  

கடவுள் அன்பாய் இருக்கிறார்” (1 யோவான் 4 8)

2.        தூய ஆவியை இழந்துபோன மனிதனைக் கண்ட கடவுள் கூறியது என்ன?

"என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப்போவதில்லை. இனி அவன் வெறும் சதைதானே” (தொடக்கநூல் 6 3)

3.        தூய ஆவியை இழந்த மனிதனின் அவல நிலையைக் கண்டு கடவுள் மிகவும் வருந்தி இழந்த தூய ஆவியை மனிதனுக்கு மீண்டும் அளிக்க வேண்டுமென அவர் விரும்பிய திட்டம் என்ன?

மீட்புத் திட்டம்

4.        யார் வழியாகக் கடவுளைக் காண்பதற்கும், கேட்பதற்கும் தந்தையின் அன்பினை அனுபவிப்பதற்கும் மனித குலத்திற்கு இயன்றது?

இறைமகனாகிய இயேசு மெசியா

5.        மனிதன் இழந்த தூய ஆவியை மீண்டும் அவனுக்கு அளிப்பதற்காக அவனைப் புனிதப்படுத்திக் கொள்ளவும் அவனது பாவங்களுக்குப் பரிகாரம் செய்துகொள்ளவும் தாமாகவே ஆயத்தமானவர் யார்?

இயேசு கிறிஸ்து

6.        உலகின் பாவம் முழுவதையும் தாமே ஏற்றுக்கொண்டு உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியானவர் யார்?

இயேசு கிறிஸ்து

7.        உயிர்த்தெழுதலின் ஐம்பதாம் நாளில் பெந்தக்கோஸ்து தினத்தன்று மனிதகுலம் இழந்துபோன எதனை இயேசு மீண்டும் அளித்தார்?

தூய ஆவியை

8.        மலங்கரை கத்தோலிக்க சபையின் ஆராதனை முறையில், மனிதகுலம் இழந்துபோன தூய ஆவியை மீண்டும் பெற்றுக் கொண்டது பற்றி பெந்தக்கோஸ்து திருநாளின் மாலை மன்றாட்டு வேளையில் நாம் செபிப்பது என்ன?

"என் ஆவி தவறிழைத்த மனிதனில் தங்கப்போவதில்லை அவன் வெறும் சதைதானே என்னும் தந்தைக் கடவுளின் தீர்ப்பு இன்று பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவியை அளித்துக் கொண்டே திருத்தப்பட்டது இவ்வாறு மனிதன் இழந்துபோன தூய ஆவியை இயேசு மெசியா வாயிலாக மீண்டும் அளித்துக் கொண்டு, தந்தைக் கடவுள் மனித குலம் மீதுள்ள அளவு கடந்த அன்பினை நிறைவேற்றினார்.”

9.        இழந்த தூய ஆவி மனித குலத்திற்கு மீண்டும் அளிக்கப்பட்டதெனில் மனிதன் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் யாரை சொந்தமாக்கிட இயலும்?

தூய ஆவி

10.   ஒவ்வொருவரும் இயேசுவை அவர் இறைமகன் எனவும் மெசியா எனவும் மூவொரு கடவுளின் இரண்டாம் நபரே எனவும் நம்பிக்கை கொண்டு. அறிக்கையிட்டு, திருமுழுக்கு என்னும் அருளடையாளத்தை ஏற்பதன் வாயிலாக யாரை  சொந்தமாக்கிக் கொள்ள இயலும்?

தூய ஆவியை

11.   இயேசு யாரிடம் "ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது எனக் கூறினார்?

நிக்கதேம்

12.   மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். என்ற இறைவார்த்தைப்பகுதி எது?

யோவான் 3:5-6

13.   இயேசு வாக்களித்த தூய ஆவியைக் கொடையாக வழங்க எதனை நிறுவினார்?

திருச்சபையை

14.   திருமுழுக்கின் வாயிலாக ஒருவருக்குக் கிடைக்கப் பெறும் தெய்விக உயிர் எனப்படும்  அடிப்படையான ஆன்மீகச் செல்வம் எது?

தூய ஆவியின் பிரசன்னம்

15.   கிறிஸ்தவ ஆன்மீகத்தில் வளரவேண்டும் என்று கூறினால் யாருடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பது பொருள்?

தூயஆவியின்

16.   நாம் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் நம்மில் குடியிருக்கிறார் என்னும் மனிதனின் தூய ஆவியைக் குறித்த கருத்தை குறிப்பிட்டவர் யார்?

புனித பவுல்

17.   நாம் பாவத்தில் வீழ்ந்து போகும்போது நம்மிடமிருந்து தூய ஆவி அகன்று போய்விடுகிறது எனவும், மிகக் கவனமாயிராவிட்டால் தூய ஆவியின் அருள்கொடை முழுமையாக இழந்து போகக்கூடிய நிலை ஏற்படும் என்றவர் யார்?

புனித பவுல்

18.   தூய ஆவியை இழந்துவிடாமல் தூயஆவியில் முழுமையாக வளர்ச்சி அடைவதற்கும் தெய்வீக உயிரை நிறைவாகத் தேடிப் பெறுவதற்குமான வழியாக இயேசு நிறுவியது என்ன?  

திருச்சபை

19.   இயேசுவின் தொடர்ச்சி எனப்டுவது எது?

திருச்சபை

20.   இயேசுவின் மறைஉடல் எனப்டுவது எது?

திருச்சபை

21.   எதனோடு இணைந்து வாழ்வது தூய ஆவியில் தொடர்ந்து வளர்ச்சியடையும் உண்மை வழி ஆகும்?

திருச்சபையோடு

22.   நான் எதற்காகக் கிறிஸ்தவ விசுவாசியாயிருக்க வேண்டும்? நான் எதற்காகத் திருச்சபையின் உறுப்பினராயிருக்க வேண்டும்? நான் ஏன் கோவிலுக்குப் போக வேண்டும்? நான் எதற்காக மறைக்கல்வி கற்க வேண்டும்? நான் திருவிவிலியம் ஏன் வாசிக்க வேண்டும்? எதற்காக அறச்செயல்கள் செய்ய வேண்டும்? இதுபோன்ற வினாக்களுக்கு ஒரே ஒரு விடைதான் என்ன?

கடவுளை அடைவதற்காகவும், என்னிடமுள்ள தூய ஆவியாகிய செல்வத்தைப் பெருகச்செய்யவும்

23.   கடவுளைச் சொந்தமாக்கிக் கொள்வதற்காகத் திருச்சபை முன்வைக்கின்ற வெவ்வேறு திட்டங்களுடன் நான் ஒத்துழைக்காவிட்டால் என்னிடம் உள்ள தூய ஆவியின் பிரசன்னம் என்னிடமிருந்து அகன்றுவிடவும். நான் எந்த இயல்புக்கு இணையாகிவிட வாய்ப்பு ஏற்படும்?

விலங்கின இயல்புக்கு

24.   தூய ஆவியின் பிரசன்னம் இல்லாத வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகள் எவை?  

அராஜகத்தன்மை, அமைதியின்மை, மனக்குழப்பம்

25.   தூய ஆவியின் பிரசன்னம் வலுவடைந்திருந்தால் வலுவடைந்து நிற்கும் தெய்வீக நற்குணங்கள் எவை?

அன்பு, இரக்கம், பொறுமை, நீதி நேர்மை, அமைதி, மகிழ்ச்சி, பகிர்தல்

26.   தூய ஆவியின் பிரசன்னத்தால் புதுப்படைப்பாக மாற்றுரு பெறுவது குறித்து புனித பவுலடியார் கூறுவது என்ன?

"இதோ ஒரு மறைபொருளை உங்களுக்குச் சொல்கிறேன்; நாம் யாவரும் சாகமாட்டோம். ஆனால் மாற்றுரு பெறுவோம் 1கொரிந்தியர் 15 51).

27.   கடவுளோடு சேர்ந்திருப்பதும் கடவுள் உடனிருப்பதும் என்பது எத்தகைய அனுபவம் ஆகும்?

விண்ணக அனுபவம்

28.   கடவுள் உடன் இல்லாத நிலைக்குப் பெயர் என்ன?

நரகம்

29.   ஆதிக்கிறிஸ்தவர்கள் தூய ஆவியினால் நிறைந்தவர்களாயிருந்தனர். துன்பப் பாடுகளை ஏற்றுக் கொண்டபோதும், இரத்தசாட்சிகளான போதும் அவர்கள் தடுமாற்றம் அடையாமல் நிலைத்து நின்றது யாருடைய வல்லமையால் ஆகும்?

தூய ஆவியின்

30.   "மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேர்த்து வைக்க வேண்டாம். ஆனால் விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்" (மத்தேயு 6:19 20)

31.   "உங்கள் செல்வம் எங்குள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும் (மத்தேயு 6 21).

32.   இவ்வுலக வாழ்விலும். வரவிருக்கும் வாழ்விலும் ஒருவரை பேறுடையவராக்குவது எது?  

தூய ஆவியாகிய செல்வம்

33.   நல்லவர்களாக வாழ்வதற்காகவும் இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சியுடனும் பேறுபெற்றவருமாய் வாழ்வதற்காகவும் நமக்குக் தேவைப்படுபவை என்னென்ன?

கடவுள், திருச்சபை மற்றும் திருச்சபை வலியுறுத்துகின்ற ஆன்மீக முறைகள்

34.   மனுவுருவேற்ற இறைமகன் இயேசு தமது இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றிற்குப் பின்னர் மானிடரோடுள்ள அன்புறவினை உலக முடிவுவரை இடையறாது வளரச் செய்து கொண்டிருப்பது எதன் வாயிலாக ஆகும்?

மறைஉடலாகிய திருச்சபை

35.   உயிர்த்தெழுந்த இயேசு யார் வாயிலாகத் திருச்சபையில் இப்போதும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்?

தூய ஆவியார்

36.   திருச்சபையின் மிகவும் உறுதிவாய்ந்த அடித்தளங்கள் எவை?

உயிர்த்த இயேசு கிறிஸ்துவும் அவர் அனுப்பித் தந்த தூய ஆவியும்

37.   உயிர்த்தெழுந்த இயேசு தமது சீடர்களுக்கு அதாவது திருச்சபைக்கு வழங்கிய நற்செய்திப் பணிக்கான தூதுரை என்ன?

“நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16 : 15)

38.   பிரபஞ்சப் படைப்பில் தொடங்கி, மானிடப் படைப்பு வாயிலாகத் தொடர்ந்து இஸ்ரயேலின் வரலாறு வாயிலாக முன்னேற்றம் அடைந்து, இயேசு கிறிஸ்துவில் நிறைவு பெற்ற இறைஅன்பின் அல்லது இறைவெளிப்பாட்டின் வரலாறு எனப்படுவது எது?

நற்செய்தி

39.   திருச்சபைக்கு அடிப்படையான மறைத்தூதுப்பணி எது?

உலக முடிவு வரை இறைவெளிப்பாட்டின் நற்செய்தியைப் பறைசாற்றுவது

40.   நற்செய்தியைப் பறைசாற்றும் இறைத்தூதுப் பணிக்கான மூன்று செயல் தளங்கள் எவை?

1. நற்செய்தியை ஏற்றுக்கொள்ளல் (மத்தேயு 28: 19- 20). (யோவான் 17 3).

2. நற்செய்தியைக் கொண்டாடுதல் (அனுபவிக்க வேண்டும்) (லூக்கா 22 19)

3. நற்செய்தியை வாழ்வாக்குதல் (திருத்தூதர்பணிகள் 1: 8, லூக்கா 10:37).

41.   நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுதல், கற்பித்தல், பறைசாற்றுதல் ஆகியவற்றைத் திருச்சபை எவ்வாறு செய்கிறது?

மறைக்கல்வி மற்றும் நற்செய்தியை அறிவித்தல் வாயிலாக

42.   எதன் வாயிலாக திருச்சபை நற்செய்தியைக் கொண்டாடுகின்றது?

ஆராதனை, அருளடையாளங்கள்.

43.   திருச்சபை நற்செய்தியை எவ்வாறு வாழ்வாக்குகின்றது?

சான்று வாழ்க்கை, அறச்செயல்கள் மற்றும் சமூகச் செயல்பாடுகள்

44.   இயேசு தமது பணி வாழ்வின் போதே நிறைவேற்றிக் காட்டிய முப்பணிகள் யாவை?

இறைவாக்குரைக்கும் பணி, குருத்துவப்பணி, ஆட்சிபுரியும் பணி

45.   இயேசுவின் மறையுடலாகிய திருச்சபை செயல்படுத்த வேண்டிய முப்பணிகள் எவை?

கற்பித்தல், புனிதப்படுத்துதல், வழிநடத்துதல்

46.   திருச்சபையின் முப்பணிகளுடன் தொடர்புபடுத்தி இறைவனை அடைய திருச்சபை வழிகாட்டுகின்ற மூவகை ஆன்மீகச் செயல்முறைகள் எவை?

1. நற்செய்திப் போதனை

2. நற்செய்திக் கொண்டாட்டம்

3. நற்செய்தியை வாழ்வாக்குதல்

47.   இறைவார்த்தை என்பதன் மற்றுச் சொற்கள் என்ன?

இறைவனின் திருவாக்கு. இறைவனின் இனிய ஓசை, இறைவனின் திருஉள்ளம். இறைவனின் திருவிருப்பம்

48.   இறைவார்த்தை என்பதன் எபிரேயச் (Hebrew)சொற்கள் என்ன?

தாபார், அமர்

49.   இறைவார்த்தை என்பதன் கிரேக்கச் சொற்கள் என்ன?

லோகோஸ், றேமா

50.   திருவிவிலியம் இறைவார்த்தையை எவ்வாறு  பொருள் கொண்டுள்ளது?

பழைய ஏற்பாட்டில் திருச்சட்டங்கள் வாயிலாகவும். இறைவாக்கினர்கள் வாயிலாகவும் புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து வாயிலாகவும் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் திருவிருப்பம்

51.   இறைவார்த்தையை திருச்சபை எத்தனை விதங்களில் புரிந்து கொள்கின்றது?

ஏழு

52.   “தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.” என்ற விவிலியப்பகுதி எது?

யோவான் 1:1

53.   வெறுமையிலிருந்து படைக்கின்ற கடவுளின் படைப்பாற்றலுள்ள வார்த்தை என்பதன் விவிலியப்பகுதி எது?

தொடக்க நூல் 1:1-7

54.   ''முற்காலத்தில் பலமுறை பல வகைகளில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் கடவுள் பேசியுள்ளார்" என்பதன் விவிலியப்பகுதி எது?

எபிரேயர்1:1

55.   காலத்தின் நிறைவில் மனுவுருவேற்ற கடவுளின் வார்த்தை. "வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார்" என்பதன் விவிலியப்பகுதி எது?

யோவான் 1: 14

56.   இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் திருத்தூதர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் பறைசாற்றிய கடவுளின் வார்த்தை வாய்மொழியாகப் பறைசாற்றப்பட்ட காலம் எது?

கி.பி. 33 -க்கும் கி.பி 55 -க்கும் இடைப்பட்ட காலம்

57.   கடவுளின் வார்த்தையை இறைஏவுதலால் மானிட மொழியில் புதிய ஏற்பாட்டு நூல்களாக எழுதப்பட்டக் காலம் எது?

கி.பி. 55 -க்குப் பின்னர்

58.   எழுதப்பட்ட இறைவாக்குகளை எவ்வாறு அழைக்கிறோம்?

திருவிவிலியம் அல்லது பைபிள்

59.   எழுதப்படாத இறைவாக்குகளை எவ்வாறு அழைக்கிறோம்?

திருமரபுகள்

60.   கடவுள் மனிதனிடம் அன்பு செலுத்தியதன் வரலாறு எனப்படுவது எது?

இயேசு கிறிஸ்துவில் நிறைவடைந்த வெளிப்பாட்டின் வரலாறு.

61.   கடவுள் மனிதனோடு காட்டிய அன்பு வரலாற்றை இறைஏவுதலால் பல காலமாக பல நபர்கள் எழுதி வைத்ததன் தொகுப்புக்குப் பெயர் என்ன?  

திருவிவிலியம்

62.   கடவுளின் வெளிப்பாட்டினுடைய வரலாறு முழுமையும் மானிட மொழியில் எழுதப்பட்டனவா?

இல்லை

63.   எழுதப்படாத கடவுளின் வெளிப்பாட்டின் தூய மரபுகள் திருச்சபையில் எதனில் காணப்படுகின்றன?

விசுவாச வாழ்க்கையிலும் ஆராதனை முறையிலும் சான்று வாழ்க்கையிலும், வெவ்வேறு கொள்கைத் திரட்டுகள், தீர்மானத் தொகுப்புகள்

64.   இறைவாக்குகளை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு இன்றியமையாதவை எவை?

எழுதப்பட்ட இறைவார்த்தைகளான திருவிவிலியமும், எழுதப்படாத இறைவார்த்தைகளான திருமரபுகளும்

65.   இறைவாக்குகளைப் புரிந்து கொள்வதற்கும் வெளிப்பாட்டின் வரலாற்றைப் அறிந்து கொள்வதற்கும் நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள அடிப்படையான உறைவிடம் எனப்படுவது எது?

திருவிவிலியம்

66.   உயிர்த்தெழுந்த இயேசு இன்று திருச்சபையில் வாழ்கிறார் என்பதற்கான வெளிப்படையான இரண்டு அடையாளங்கள் எவை?

தூய நற்கருணையும் திருவிவிலியமும்

67.   மனிதனின் வாக்குகளுக்கு வல்லமை உண்டு எனில் கடவுளின் வாக்குகளின் ஆற்றல் எவ்வளவோ மிகுதியானது. என்பதைக் குறிப்பிடும் சொல் எது?

ஆதியில் தோன்றுக (தொடக்க நூல் அதிகாரம் 1) என்ற வாக்கின் வாயிலாக ஒன்றுமில்லாத நிலையிலிருந்து கடவுள் அனைத்தையும் படைத்தார்.

68.   இயேசு எதனை உச்சரித்தவாறு தனது பணிகளைச் செய்தார்?

இறைவாக்குகளை

69.   பாவத்தினின்றும் தீமையினின்றும் அகன்று வாழ்வதற்கு மனிதனுக்கு உறுதுணையாவது எது?  

இறைவாக்கு

70.   இறைவாக்கின் ஆற்றலைக் குறித்தும் அது மனிதனுள் உருவாக்கும் அசைவுகளைக் குறித்தும் புனித பவுல் கூறுவது என்ன?

"கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது. ஆற்றல் வாய்ந்தது. இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது. ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது. எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது. உள்ளத்தின் சிந்தனைகளையும், நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது (எபிரேயர் 4 : 12)

71.   இறைவார்த்தை நம்பிக்கையும் எதிர்நோக்கும், இருளில் வாழ்பவர்களுக்கு ஒளியும் ஆகின்றது என்றவர் யார்?

திருப்பாடலாசிரியர்

72.   கடவுளைத் தேடி அடைவதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது என்பது, எதன் அடிப்படையிலான ஆன்மீகம் ஆகும்?

திருவிவிலியத்தின் அடிப்படையிலான ஆன்மீகம்

73.   மனிதனின் அறிவிலும், மனத்திலும், சிந்தனைகளிலும், உணர்ச்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த இறைவார்த்தையால் இயலும்.  திருமுழுக்கின் வாயிலாக ஒவ்வொரு நபரும் பெற்றுக் கொண்ட தூய ஆவியின் பிரசன்னத்தை வலுப்படுத்துவதற்கான முதலாவது வழிகாட்டி எனப்படுவது எது?

திருவிவிலியம்

74.   கடவுளை அறிந்து கொள்வதற்கு மிகவும் தேவையானது எது?         

திருவிவிலியம்

75.   திருவிவிலியத்தைக் குறித்துள்ள அறியாமை கடவுளைக் குறித்துள்ள அறியாமையே என்றவர் யார்?

புனித ஜெறோம்

76.   "செபிக்கும் போது நாம் கடவுளோடு பேசுவோமெனில் விவிலியம் வாசிக்கும் போது கடவுள் நம்மோடு பேசுகிறார்” என்றவர் யார்?

புனித சிப்ரியான்

77.   தூய வாக்கு என்ற நிலையில் நாம் திருவிவிலியம் வாசிக்கும் போது அந்த நேரத்தில் அந்த இடத்தில் நம்மோடு தனிப்பட்ட முறையில் உறவாடுபவர் யார்?

கடவுள்

78.   நாம் கடவுளோடு உறவாடுவதற்கும் நாம் நம்மோடு உறவுகொள்வதற்கும் நம்மை அழைத்துச் செல்வது எது?

திருவிவிலியம்

79.   கடவுளோடு ஆழ்ந்த உறவு வைத்துக் கொள்வதற்கு மிகச் சிறந்த வழி நாள்தோறும் எதனை வாசிப்பதே ஆகும்?

திருவிவிலியம்

80.   திருவிவிலியம் வாசிக்கும் போது அந்த இறைவார்த்தையை உயிரூட்டமுள்ளதாக்குவது யாருடைய செயல் ஆகும்?

தூய ஆவியின்

81.   திருவிவிலியத்தின் ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு வசனமும் கடவுளின் உயிருள்ள வார்த்தையாக மாற்றுரு பெறுவது யாருடைய ஆற்றலினாகும்?

தூய ஆவியின்

82.   இருகரைகளாகிய நமக்கும், திருவிவிலியத்துக்கும் இடையேயுள்ள நீர்நிலை எனப்படுபவர் யார்?

தூய ஆவி

83.   இறைவார்த்தை என்ற நிலையில் விவிலியம் வாசிப்பதற்குத் நம்மை வலுப்படுத்துபவர் யார்?

தூய ஆவியார்

84.   இறைவார்த்தையின் தெய்வீகமான அர்த்தத்தை புரிந்து கொள்வதற்கு உதவுபவர் யார்?

தூய ஆவியார்

85.   நாம் வாசிக்கும் இறைவார்த்தைக்கு நாம் எவ்வாறு பதிலுரைக்க வேண்டுமென்பதை உணர்த்துபவர் யார்?

தூய ஆவியார்

86.   நாம் வாசிக்கும் இறைவார்த்தைக்கு என்ன பதில் அளிக்க வேண்டும். நமது வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கெல்லாம் நமது உள்ளேயிருந்து நமக்கு உதவுபவர் யார்?

 தூய ஆவியார்

87.   வெவ்வேறு காலகட்டங்களில் மடாலயங்களிலும், துறவியர் இல்லங்களிலும் இறைவார்த்தை வாசிப்பதை எவ்வாறு அழைத்தனர்?

திருவிவிலியத்தின் "தெய்வீகப் படிப்பு"

88.   தெய்வீகப் படிப்பின் நான்கு தலங்கள் எவை?

1. திருவிவிலியம் வாசித்தல்

2. வாசித்ததைத் தியானித்தல்

3. தியானித்ததை செபமாகச் சமர்ப்பித்தல்

4. ஆழ்மனத் தியானம்

89.   முதலாவதாக, திருவிவிலியம் வாசிப்பதற்கு எதனை தேர்ந்தெடுக்க வேண்டும்?

தகுந்த ஓர் இடத்தை

90.   'இறைமக்களுக்கு இறைவார்த்தையிலிருந்தும் நற்கருணையிலிருந்தும் ஊட்டம் அளிக்க வேண்டும்" எனக்கூறும் கொள்கைத் திரட்டு எது?

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் இறைவெளிப்பாடு என்னும் கொள்கைத் திரட்டு

91.   ஆன்மீக வளர்ச்சிக்கு எல்லா நாள்களும் அருந்துகின்ற ஆன்மீக உணவாக மாற்றப்பட வேண்டியது யாது?

இறைவார்த்தைகள்

92.   உலகெங்கும் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும் என்ற இயேசு கிறிஸ்துவின் கட்டளையின் இரண்டாவது தலம் என்பது என்ன?

நற்செய்திக் கொண்டாட்டம்

93.   பிரபஞ்சப் படைப்பில் தொடங்கி இயேசு கிறிஸ்துவில் நிறைவடைந்த வெளிப்பாட்டினை அடையாளங்கள் வாயிலாகவும், சின்னங்கள் (குறியீடுகள்) வாயிலாகவும் திருச்சடங்குகள் வாயிலாகவும் கொண்டாடவும் நினைவுபடுத்திக் கொள்ளவும் செய்வதை எவ்வாறு அழைக்கிறோம்?

ஆராதனைமுறை

94.   எதன் அடிப்படையிலான ஆன்மீகம் ஆராதனையை மையமாகக்கொண்ட ஆன்மீகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது?

திருவிவிலியம்

95.   ஆராதனை முறை அடிப்படையிலான ஆன்மீகத்தின் அடிப்படைக் கூறுகள் எவை?  

ஒவ்வொரு நாளுக்குமான ஏழு வேளைச்செபங்கள், வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் உள்ள சிறப்பு மன்றாட்டுகள், ஆராதனை ஆண்டின் ஏழு காலங்களும் அவற்றின் செபங்களும், கொண்டாட்டங்களும் இயேசு கிறிஸ்துவின் ஏழு திருநாள்கள், தூய மரியா, திருத்தூதர்கள், நிணச்சான்றினர். புனிதர்கள் ஆகியோரின் திருநாட்கள், ஏழு அருளடையாளங்கள், அருளடையாளக் கொண்டாட்டங்கள், மூன்று நோன்பு, எட்டு நோன்பு, பதிமூன்று நோன்பு, பதினைந்து நோன்பு. இருபத்து ஐந்து நோன்பு. ஐம்பது நோன்பு ஆகிய நோன்புகளின் பற்றுறுதி நிறைந்த திருச்சடங்குகளும், நோன்பு நாட்களில் விலக்கப்பட்டவை மற்றும் உபவாசமும், நோன்பு நாட்களின் சிறப்பு மன்றாட்டுகள்

96.   பிரபஞ்சப் படைப்பில் தொடங்கி, பழைய ஏற்பாடு வாயிலாகத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவில் நிறைவு பெற்ற வெளிப்பாட்டின் வரலாறு மானிட மொழிகளில் எழுதப்பட்டதன் பெயரென்ன?

திருவிவிலியம்

97.   இறை வெளிப்பாட்டின் வரலாற்றை அடையாளங்கள் வாயிலாகவும், குறியீடுகள் வாயிலாகவும், திருச்சடங்குகள் வாயிலாகவும் கொண்டாடுவதை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?  

ஆராதனைமுறை

98.   திருவிவிலியம் மற்றும் திருவழிபாட்டின்  பொருளடக்கமும், சிந்தனைக்குரிய கருத்துக்களும் யாரை முன்னிலைப்படுத்துகின்றன?

இறைவெளிப்பாட்டின் நிறைவான இயேசு கிறிஸ்துவை

99.   பிரிவினை சபைகள் ஆராதனைமுறையின் அடிப்படையிலான ஆன்மீகத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தியது என்ன?

விவிலிய அடிப்படையிலான ஆன்மீகம்

100.                             விவிலிய அடிப்படை ஆன்மீகம் மிகுந்த பொருள்நிறைவும், அனுபவநிறைவும் பெறவேண்டுமாயின் ஆராதனை முறையின் அடிப்படையிலான ஆன்மீகம் வாயிலாகவே தான் இயலும் எனக் கற்பிக்கும் திருச்சபை எது?

கத்தோலிக்கத் திருச்சபை

101.                             இறைமக்களுக்கு திருவிவிலியத்திலிருந்தும், தேவநற்கருணையிலிருந்தும் உயிரூட்டம் அளிக்கப்பட வேண்டும் எனக் கற்பிக்கும் திருச்சபை எது?

கத்தோலிக்கத் திருச்சபை

102.                             ஒவ்வொரு திருப்பலியிலும் நற்செய்திப் பீடத்திலிருந்து இறைவார்த்தையும், திருப்பலி பீடத்திலிருந்து இயேசு மெசியாவின் திரு உடலும், திருஇரத்தமும் இறைமக்களுக்கு எத்தகைய உணவாக வழங்கப்படுகின்றன?

ஆன்மீக உணவாக

103.                             கிறிஸ்து அனுபவம் என்ற இலட்சியத்தை எதிர்நோக்கியுள்ள இரண்டு தலங்கள் யாவை?

திருவிவிலிய அடிப்படையிலான அருள்நெறியும், ஆராதனை அடிப்படையிலான அருள்நெறியும்.

104.                             எம்மாவூருக்குச் சென்று கொண்டிருந்த சீடர்களின் அனுபவத்தில் காணப்படும் இரண்டு அருள்நெறிகள் யாவை?  

திருவிவிலிய அடிப்படையிலான அருள்நெறியும், ஆராதனை அடிப்படையிலான அருள்நெறியும்.

105.                             கிறிஸ்து அனுபவத்திற்கும், மீட்பின் அனுபவத்திற்கும் சென்றடைவதற்கான ஆன்மீகப் பாதையின் மூன்று தலங்கள் எவை?

திருவிவிலியம் அடிப்படையிலான ஆன்மீகமும், ஆராதனை மைய அருள் நெறி வாழ்வும், அருள்நெறி அதாவது பணிவிடை மைய அருள்நெறி சார்ந்த செயல்களும் (Diaconal Spiritulity)

106.                             வாழும் அருள்நெறிக்கான அறிவுரைகள் எனப்படுபவை எவை?

இயேசுவின் போதனைகள்

107.                             ஒரு மனிதனின் இறைஅனுபவத்தின் ஆழத்தை அளந்து பார்க்கும் அளவுகோல் என்பது என்ன?  

சகோதர அன்புடன் தொடர்புடைய செயல்பாடுகள்.

108.                             நற்செய்தியை அறிவிக்கும் போதும் ஆராதனைக் கொண்டாட்டத்தின் போதும் இறைப்பிரசன்னம் அனுபவிப்பது போல இயேசுவின் பெயரால் எளியோருக்குப் பணிவிடை செய்யும் போதும் எது உள்ளது என்னும் சிந்தனை நவீன காலகட்டத்தில் மிகவும் அழுத்தம் பெறுகின்றது?

இறைப்பிரசன்னம்

109.                             வாழ்கின்ற அருள் நெறி இறைஅனுபவத்திற்கு இட்டுச் செல்கின்ற ஏராளமான புனிதர்களுள் ஒருசில எடுத்துக்காட்டுகள்?

அன்னை தெரசா, தமியான் அடிகளார்

110.                             மலங்கரை கத்தோலிக்க மறைக்கல்வியின் குறிக்கோள் என்ன?

செயல் வடிவமானதும், மனிதனின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய அருள்நெறி

111.                             இறைவனை அடைவதற்கான அதாவது தூய ஆவியில் வளர்வதற்கான திருச்சபையின் மூன்று வழிமுறைகள் யாவை?

திருவிவிலியம் அடிப்படையிலான ஆன்மீகமும், ஆராதனை மைய அருள் நெறி வாழ்வும், பணிவிடைமைய அருள்நெறி செயல்கள் (Diaconal Spiritulity)

112.                             இறைவனை சொந்தமாக்கிக் கொள்வது இறைத்தொண்டு செய்வதை விட மேன்மையானதே என்றவர் யார்?

மார் இவானியோஸ்

 

 

 

 

பாடம் :4

மனிதன் கடவுளை இழத்தல்

(தலையான பாவங்கள்)

 

1.        கடவுள் மனிதனுக்கு அளித்த இறைச்சாயல் அல்லது தூய ஆவியின் பிரசன்னம் அவனை எந்த இனத்திலிருந்து வேறுபடுத்துகிறது?

விலங்கினத்திலிருந்து

2.        மனிதனிடம் தூய ஆவியின் பிரசன்னம் வலுவடைவதற்கேற்ப அவனிடம் வலுவடைந்து வருவது என்ன?

மனித மாண்பு

3.        ஒவ்வொரு மனிதனுடையவும் முதன்மையும் இறுதியுமான குறிக்கோள் என்ன?

மனிதத்தின் வரைவிலக்கணமான (definition) இயேசு கிறிஸ்துவை அடைதல்

4.        மனிதன் பாவம் செய்கின்றபோது கடவுளிடமிருந்து அகன்றும், இறையருளை இழந்தும், அதன் வாயிலாக யாரையும் இழந்து விடுகின்றான்?

தூய ஆவியை

5.        கடவுளின் அன்பை மறுப்பதும் கடவுளின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுவதும் என்ன?

பாவம்

6.        மனிதனை ஆட்படுத்துகின்ற பாவங்கள் அனைத்தும் எங்கிருந்து உருப்பெறுகின்றன?

அடிப்படைப் பாவங்களிலிருந்து

7.        எதனிலிருந்து விலகிச் செல்லும் போது மனிதன் பாவவாழ்வினில் வீழ்ந்துவிடுகிறான்?

இறைஅருளிலிருந்து

8.        கடவுளின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்ட மனிதன் படைப்பின் தொடக்க நிலையில் முழு சுதந்திரத்தோடு வாழ்ந்திருந்த போது அலகையின் தூண்டுதலுக்கு ஆளாகி தனது சுதந்திரத்தை அலகைக்குச் சமர்ப்பித்து இறைவிருப்பத்தை மறுதலித்த பாவத்திற்குப் பெயர் என்ன?

அடிப்படைப் பாவம் (ஜென்ம பாவம்)

9.        மனிதன் படைப்பின் தொடக்க நிலையில் அலகையின் தூண்டுதலுக்கு ஆளாகி ஏற்பட்ட தீமைகளை கிழக்கத்திய இறையியல் வல்லுநர்கள் எவ்வாறு அழைத்தனர்?  

அளவுக்கதிகமான சிற்றின்ப ஆசை (concupiscence)

10.   தலையான பாவங்கள் அல்லது மூல பாவங்கள் – எத்தனை?

7

11.   ஏழு பாவச் சிந்தனைகளை தலையான பாவங்களாக விளக்கியுள்ள  மேற்கத்திய திருச்சபைத் தந்தையர்கள் யாவர்?

ஜாண் காசியனும், கிரிகோரியும்

12.   எக்காலம் முதல் தலையான பாவங்கள் ஏழு என்ற கருத்து நிலவி வருகிறது?

கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு முதல்

13.   இந்த ஏழு பாவங்களும் தலையான பாவங்கள் எனவும் மூலபாவங்கள் எனவும் அழைக்கப்படுவதற்குக் காரணம் என்ன?

7 பாவங்களிலிருந்து பிற பாவங்களும், மற்று தீமைகளும்  உருவாகின்றன

14.   தலையான பாவங்கள் யாவை?

தற்பெருமை, பேராசை, பொறாமை, சீற்றம், காமவெறி, பெருந்தீனி விரும்பல். சோம்பல்

15.   தலையான பாவங்கள் மனிதனின் ஊனியல்புகளைத் தூண்டித் தூய ஆவியின் கனிகளை உயிரற்றதாக்கிவிடுகின்றன. என்ற இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

கலாத்தியர் 5: 19 – 21

16.   உள்ளத் தூய்மையைக் குறித்து இயேசு கற்பிக்கும் போது மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றவையெல்லாம் எங்கிருந்து வெளிவருபவையாகும் என்றார்?

உள்ளத்திலிருந்து

17.   மனிதரைத் தீட்டுப்படுத்துகின்ற தீய எண்ணங்களான தலையான பாவங்கள் எத்தகைய தீச்செயல்களைச் செய்யத் தூண்டுகின்றன?

கொலை, விபச்சாரம், பரத்தமை. களவு, பொய்சான்று, பழிப்புரை

18.   முறையற்ற வழிகளில் புகழும் மதிப்பும், மேன்மையும் அடைய வேண்டுமென்ற பேராசைக்குப் பெயர் என்ன?

தற்பெருமை

19.   அலகையின் மிகவும் முக்கியமான ஆயுதம் (கருவி) அகந்தையே எனக் குறிப்பிட்டவர் யார்?

கி. பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரிஜன்

20.   பிற பாவங்களுக்கெல்லாம் அடிப்படையானதும், உறைவிடமானதும், தாயானதுமான தற்பெருமையின் கேடுகள் பற்றி கூறியுள்ள இறையியல் வல்லுநரும், திருச்சபை தந்தையுமானவர் யார்?

புனித ஜாண் கிறிஸோஸ்டோம்

21.   பிறபாவங்களுக்கெல்லாம் அடிமையாகும் போது அவனிடமிருந்து வெளிப்படத் தொடங்குவது என்ன?

தற்பெருமை

22.   தற்பெருமையின் உன்னத நிலையில் ஒருவன் செய்யும் தவறு என்ன?

தெய்வ நிந்தனை செய்யவும் தயங்கமாட்டான், கடவுளுக்கு அளிக்க வேண்டிய போற்றுதலும், புகழ்ச்சியும் அளிக்காமல், செபவாழ்க்கையிலிருந்து அவன் பின்னோக்கிச் செல்வான், தன்னையே கடவுளின் நிலைக்கு உயர்த்திவிடுவான், பிறரோடு திடீரென சண்டையிடவும், பிறரை அவதூறாகப் பேசவும் செய்கிறான். உயரதிகாரிகளை எதிர்த்து விடவும், தனது சொந்தத் தவறுகளை மறுத்துவிடவும் செய்கிறான்.

23.   "பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்என்ற விவிலியப் பகுதி எங்குள்ளது?

1கொரிந்தியர் 1: 31

24.   தற்பெருமைக்கு எதிரான புண்ணியம் எது?

மனத்தாழ்ச்சி.

25.   பேராசைக்கு இழுத்துச் செல்கின்ற பாவங்கள் எவை?

சிற்றின்ப இச்சை, தற்பெருமை, நம்பிக்கையின்மை

26.   பேராசையை உருவாக்குவது எது?

பாதுகாப்பின்மைக் குறித்த மனக்கலக்கம்

27.   பேராசைக்கு மிகவும் முக்கியமான காரணம் எது?

இறைபராமரிப்பில் ஒருவருக்கு ஏற்படும் நம்பிக்கைக் குறைவு

28.   உலகச் செல்வங்களிலுள்ள மிதமிஞ்சிய ஆசை என்பது என்ன?

பேராசை

29.   ஒருவரின் உடல்சார்ந்ததும், ஆன்மீகம் சார்ந்ததுமான தேவைகளை நிறைவு செய்வதற்காகவும், ஆளுமைத் தன்மையின் அனைத்துவித வளர்ச்சிகளுக்காகவும், தம்மைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்க்கையை நிலைநிறுத்தவும் மிகத்தேவையானது எது?

செல்வம்

30.   ஒவ்வொரு தனிநபருக்கும் தனிப்பட்ட சொத்துரிமைக்கு உரிமை உண்டா?

உண்டு

31.   செல்வத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதற்கு ஒருவரைத் தூண்டுவது எது?

பேராசை

32.   பேராசை தனிப்பட்ட சொத்துரிமை கூறும் சமூக அக்கரையை மறுத்துவிடுகின்றது. என்ற ரேரும் நோவாரும் - 19 (தொழிலாளர் நலம் கருதி) என்ற திருமடல் யாருடையது?

திருத்தந்தை 13 - ஆம் சிங்கராயர்

33.   "நிலபுலன்களும் பிறஉடைமைகளும் உடையோர் அவற்றை விற்று அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்பப் பகிர்ந்தனர்” என்ற விவிலியப் பகுதி எங்குள்ளது?

திருத்தூதர் பணிகள் 2:45

34.   இயற்கையின் அழிவிற்கு காரணமான தலையான பாவம் எது?

மனிதரின் பேராசை

35.   தான தர்மம் செய்ய பயிற்சி பெறுவது பற்றி கொர்னேலியுவுக்கு ஆண்டவரின் தூதர் கூறுவது என்ன?

"உமது வேண்டல்களும், இரக்கச் செயல்களும் கடவுள் திருமுன் சென்றடைந்துள்ளன; அவற்றை அவர் நினைவில் கொண்டுள்ளார்” (திருத்தூதர் பணிகள் 10 : 4).

36.   பேராசைக்கு எதிரான புண்ணியம் எது?

தாராள மனப்பான்மை (தயாளகுணம்).

37.   பேராசையை நாம் எப்படி வெல்ல முடியும்?

கடவுள் நமக்களித்துள்ள செல்வம் என்னும் கொடையைத் தாராள மனத்துடன் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் போது

38.   பிறர்க்குரிய செல்வங்களைக் காணும் போது உண்டாகும் துக்கத்தையும், முறைகேடாகச் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையையும் வெளிக்காட்டுவது எது?

பொறாமை

39.   பொறாமை எண்ணற்ற பிற பாவங்களுக்குப் பிறப்பிடமாயிருக்கிறது என்றவர் யார்?  

மகானாகிய கிரிகோரி

40.   பொறாமையிலிருந்து உருவாகும் பிற பாவங்கள் யாவை?

பகை, அயலாரின் நற்பெயரைக் களங்கப்படுத்துதல், புறங்கூறுதல், பிறருடைய துன்பத்தில் மகிழ்தல், பிறருக்கு நன்மை ஏற்படும் போது அதைச் சொல்லி வருந்துதல்

41.   பிறரன்பு என்னும் புண்ணியத்திற்கு எதிரான பாவம் எது?

பொறாமை

42.   பொறாமைக்கு எதிரான புண்ணியம் எது?

அன்பு அல்லது இரக்கம்

43.   பொறாமைக் குணத்தோடு எவ்வாறு எதிர்த்து நிற்க இயலும்?

பிறருக்கு உதவிகள் செய்வதற்கான நாட்டம், பணிவு, இறைபராமரிப்பில் தன்னையே சமர்ப்பித்தல் போன்றவற்றில் பயிற்சி பெறுவதன் வாயிலாக

44.   அடிப்படைப் பாவமான சீற்றத்தின் ஆதாரம் என்பது என்ன?

பழிவாங்க வேண்டுமென்ற அடங்காத ஆவேசம்

45.   பிறரைக் கொலை செய்ய வேண்டுமென்றோ, தீவிரமாகக் காயப்படுத்த வேண்டுமென்றோ மனப்பூர்வமான தீர்மானத்திற்கு அழைத்துச் செல்கின்ற பாவம் எது?

கோபம்

46.   அன்புக்கு எதிரான மிகக் கடுமையான அத்துமீறல் எனப்படுவது எது?

சீற்றம்.

47.   மிதமாகச் சினம் கொள்வதற்கு உரிமையுண்டா?

உண்டு

48.   அறநெறி வேட்கையை வெளிப்படுத்துவதற்கு மிதமான அளவில் கோபம் கொள்ளலாமா?

ஆம்

49.   கோபம் கொள்வது எப்படி அமைய வேண்டும்?

தவறுகளைத் திருத்திக் கொள்வதற்காகவும், இழந்ததை மீட்டுக் கொள்வதற்காகவும்

50.   'சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்" (திருப்பாடல் 4:4) என்றவர் யார்?

திருப்பாடலாசிரியர்

51.   புனித பவுல் சினமுறுதல் பற்றி அறிவுறுத்துவது என்ன?

''சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்" (எபேசியர் 4: 26).

52.   சீற்றத்திற்கு எதிரான புண்ணியம் என்பது எது?

பொறுமை அல்லது தன்னடக்கம்

53.   பொறுமை என்னும் புண்ணியத்தில் பயிற்சி பெறுவதன் வாயிலாக எத்தீமையை வெல்ல முடியும்?

கோபத்தை

54.   பாலுணர்வின் நோக்கங்கள் எவை?

இனப்பெருக்கம், அன்பு செலுத்துதல்

55.   பாலுணர்வை ஊனியல்பான இன்பத்திற்காக மட்டுமே பயன்படுத்தும்போது உருவாகும் தீமை என்ன?  

காமவெறி அல்லது மோகம்

56.   பாலுணர்வுக்குத் தவறான விளக்கம் கற்பிக்கும் நவீனச் செய்தித் தொடர்புக் கருவிகள் எவை?

வலைத் தளம் (internet), அலைபேசிகள் (mobile phone), பிற தொலைத் தொடர்பு கருவிகள், ஒழுக்கக் கேடான படங்கள்,  விளம்பரங்கள்,

57.   காமவெறிக்கு எதிராக  நாம் தூய்மையோடு வாழ துணை புரிவது எது?

புனித மரியாவோடுள்ள பக்தி

58.   காமவெறிக்கு எதிரான புண்ணியம் எது?

தன்னடக்கம் அல்லது கட்டுப்பாடு

59.   நமது சிந்தனைகளிலும், ஈடுபாடுகளிலும் தன்னடக்கத்தைக் கடைபிடிக்கும் போது எத்தீமையை வெல்ல முடியும்?

காமவெறி

60.   உணவு வகைகளோடு அளவு கடந்த ஆசை கொள்ளும் தீமைக்குப் பெயர் என்ன?

போசனப் பிரியம் அல்லது பெரும் தீனி விரும்பல்

61.   வயிற்றுக்காக வாழ்பவர்களது பெயர் என்ன?

போசனப் பிரியர்கள்

62.   போசனப் பிரியர்கள் உணவுக்கு அடிமையாகாமல் எதற்காக மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்?

உபவாசத்திற்கும் (உண்ணா நோன்பு), பிறரோடு பகிர்தலுக்கும்

63.   நற்செயல்கள் செய்வதற்கான விருப்பமின்மையும், அலட்சியமும் என்பது எந்த பாவத்தின் உள்ளடக்கம் ஆகும்?

சோம்பல்

64.   சோம்பல் பலவகைத் தீங்கையும் கற்றுக் கொடுக்கிறது என்னும் விவிலியப் பகுதி எங்குள்ளது?

சீராக் 33 : 28

65.   "இன்னும் சிறிது நேரம் தூங்கு; இன்னும் சிறிது நேரம் உறங்கு; கையை முடக்கிக் கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திரு. அப்பொழுது வறுமை உன்மீது வழிப்பறிக் கள்வனைப் போலப் பாயும்; ஏழ்மை நிலை உன்னைப் போர் வீரனைப் போலத் தாக்கும்என்னும் விவிலியப் பகுதி எங்குள்ளது?

நீதிமொழிகள் 24: 33 – 34

66.   சோம்பலுக்கெதிரான புண்ணியம் எது?

உற்சாகம் (ஆர்வம்)

67.   உற்சாகத்தைப் பெருக்கி சோம்பல் என்ற பாவத்தை அகற்றிட நமக்கு உதவியாக அமைபவை என்ன?

கடமைகளை ஆர்வத்தோடும். கவனத்தோடும் செய்ய முயற்சித்தல்

68.   " ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே. ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும்என்னும் விவிலியப் பகுதி எங்குள்ளது?

உரோமையர் 8.6.

69.    ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று முரணாய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவதில்லைஎன்னும் விவிலியப் பகுதி எங்குள்ளது?

கலாத்தியர் 5 : 17.

 

பாடம் : 5

இறையனுபவமும் இறைநம்பிக்கையின்மையும்

 

1.        இறைநம்பிக்கை உள்ளவர் என்னும் கொள்கை கொண்டவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

ஆத்திகவாதி

2.        இறைநம்பிக்கை இல்லாதவர் என்னும் கொள்கை கொண்டவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

நாத்திகவாதி

3.        கடவுள் இல்லை என்று மறுத்துக் கூறுகின்ற நண்பர்கள் பலர் நம்மிடையே இருக்கலாம். நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் கத்தோலிக்க விசுவாசத்திலிருந்து மாறுபட்டுச் சிந்திக்கவும், நம்பிக்கை கொள்ளவும் செய்பவர்களோடு நட்புறவுடன் கலந்துரையாடுதல் நடத்த வேண்டுமென அறிவுறுத்தும் திருச்சங்கம் எது?

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் (இன்றைய உலகில் திருச்சபை எண் 22)

4.        இயற்கையிலும், மனிதனின் உள்ளத்திலும் அவைகளின் பின்னணியில் கட்புலனாகாத ஆற்றல் எதோ உண்டென்று அனுமானித்துக் கொண்டவன் யார்?

பழங்கால மனிதன்

5.        "தெய்வங்களோ மரணத்திற்குப் பின் வாழ்வோ இல்லை. அவற்றிற்கு அஞ்சாமல், இன்று வாழ்க்கை தருகின்ற இன்பங்களை அனுபவித்து உண்டு, குடித்து, பேரின்பம் கொண்டு. மகிழ்ச்சி அடைகஎன்ற கிரேக்கத் தத்துவ ஞானி யார்?  

எப்பிக்கோரஸ் (கி. மு. 270)

6.        பண்டைய பாரதத்தில் சார்வாகர்கள் போன்ற சிந்தனையாளர்கள் எவற்றை இல்லை என மறுத்து உலகப்பொருள்கள் மட்டுமே மெய்யானவை என நம்பினர்?

பரமாத்மா, ஜீவாத்மா

7.        உயிரினங்கள் அனைத்திற்கும் ஆன்மா உண்டு என்று கற்பித்த சமண மதத்தை நிறுவியவர் யார்?

மகாவீரர்

8.        மானிடத்தைத் துக்கக்கடலிலிருந்து மீட்டு அக்கரைக்கு அழைத்துச் செல்வது அறவழியே என்றவர் யார்?

புத்தர்

9.        நாத்திகவாதத்திற்கான இரண்டு முக்கிய காரணங்களைப் பற்றி எடுத்துரைத்தவர் யார்?

புனித தோமஸ் அக்குவினாஸ் (கி.பி. 1274)

10.   நாத்திகவாதத்திற்கான இரண்டு முக்கிய காரணங்கள் யாவை?

1 தீமையின் நிலைத்திருக்கும் தன்மை

2. உலக அறிவின் முன்னேற்றம்

11.   விஞ்ஞானத்தின் மாபெரும் வளர்ச்சியால் உருவான சிந்தனை என்ன?

பிரபஞ்ச நிகழ்வுகளை விளக்குவதற்கு 'கடவுள்' என்னும் மனத்தோற்றம் இனிமேல் தேவையில்லை. எடுத்துக்காட்டாக, உயிரின் தோற்றத்தைப் பரிணாமக் கொள்கை தெளிவாக விளக்குகின்றது. மனிதனின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்ற விஞ்ஞானத்தால் இயலும் விஞ்ஞானத்தை வளர்ச்சி அடையச் செய்வதன் மூலம் முதிர்ச்சி பெறுகின்றமனிதனுக்குக் கடவுள் தேவையில்லை".

12.   மனித மனம் மூன்று நிலைகளில் முதிர்ச்சி நிலை அடைகின்றது என விளக்கிய நாத்திகவாதியும் பிரஞ்சு தத்துவ ஞானியுமானவர் யார்?

அகஸ்ட் கோம்ப்ட் (கி.பி. 1857)

13.   மனித மனம் முதிர்ச்சி நிலை அடைகின்ற மூன்று நிலைகள் எவை?

1.மதம், 2. மெய்யியல் (philosophy), 3. விஞ்ஞானம்

14.   பண்டைக்கால மனிதர்கள் எவை சார்ந்தப் பிரச்சினைகளுக்குப் புராணக்கதைகள் வாயிலாகவும். தெய்வங்கள் வாயிலாக விளக்கங்களும், தீர்வுகளும் பெற்றுக் கொள்ள முயன்றனர்?

இயற்கை மற்றும் வாழ்க்கை

15.   மனிதனின் சிந்திக்கும் திறன் வளரவே புராணக்கதைகள் மற்றும் தெய்வங்கள் ஆகியவற்றின் கொள்கைகளை  விளக்கியது எது?

மெய்யியல்

16.   தத்துவக் கோட்பாட்டிலிருந்து உருவான சி்தனைகள் யாவை?

ஒரே கடவுள் நம்பிக்கையும் (theism). “அனைத்தும் இறைமயமே. ஒரே உண்மையின் வடிவங்களே” (pantheism)

17.   அறிவீனத்திலிருந்து உருவானதே கடவுள் நம்பிக்கை. என்பவர்கள் யாவர்?

நாத்திகர்கள்

18.   மதமும், தத்துவ சிந்தனைகளும், விஞ்ஞானமும் ஒன்று மற்றொன்றைத் தள்ளி ஒதுக்கிவிட்டு ஒன்றன் பின் ஒன்றாக வந்து சேருகின்ற வளர்ச்சி நிலைகள் அல்ல. என தெளிவுபடுத்துவது எது?

மனித வரலாறு

19.   மனத்தில் இன்றும் என்றும் சரிநிகராக நிலை கொண்டிருக்கும் மூன்று தலங்கள் எவை?

மதமும், தத்துவச் சிந்தளைகளும், விஞ்ஞானமும்.

20.   விஞ்ஞானமும் கடவுள் நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று முரணானவையா?

இல்லை. அவை ஒன்றுக்கொன்று ஒத்துப் போகக்கூடியதே.

21.   "மனிதன் தனது உள்ளம் சார்ந்தத் தேவைகளை முன் வைத்துச் சுயமான கற்பனையில் உருவமைத்துக் கொண்டவர் தான் கடவுள் என்பவர்" என்றவர் யார்?

ஃபோயர் பாக் (கி.பி. 1872)

22.   நிறைவானவரும் புனிதமானவரும் மற்றும் உண்மையானவருமாகிய கடவுள் நம்பிக்கை தவறானது எனவும் மனித முன்னேற்றத்திற்குத் தடையானது எனவும் கூறியவர் யார்?

ஃபோயர் பாக்

23.   சொந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மானிடமனம் உருவாக்கிய கற்பனை உலகத்தின் ஒரு பகுதி தான் கடவுளும், மதங்களும். சிறு பருவத்தில் மனிதன் அவனது தந்தையிடம் அடைக்கலம் அனுபவித்தான். வளர்ச்சிப் பருவம் அடையும் போது இந்த அடைக்கலம் தொடர்ந்து கிடைப்பதற்காக எல்லாம் வல்லவரும் நன்மை நிறைந்தவருமான கடவுள் என்னும் தந்தையை மனிதன் மனத்தில் நிறுத்திக் கொண்டான்”. என்ற உளவியலின் குல குரு யார்?

சிக்மண்ட் பிராயிட் (கி.பி. 1939)

24.   உளவியல் சார்பான அனுகுமுறையினால் எதார்த்த மனிதனைப் பகுத்தறிந்து கொள்ள முடியுமா?

இயலாது

25.   சமூக பொருளாதாரக் கூறுகளே மனிதனில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்றவர்கள் யாவர்?  

காரல் மார்க்ஸ், ஃபிரடிடசிக் ஏங்கல்ஸ்

26.   வரலாற்றில் சிறுபான்மையினரான முதலாளிகள் பெரும்பான்மையினரான தொழிலாளி வர்க்கத்தினரை அடக்கி ஒடுக்கி செல்வத்தைச் சுரண்டி அடிமைச் சங்கிலியில் கட்டிப் போடுவதற்கு உருவாக்கப்பட்ட மயக்கமருந்து தான் மதமும், கடவுளும். என்றவர்கள் யாவர்?  

காரல் மார்க்ஸ், ஃபிரடிடசிக் ஏங்கல்ஸ்

27.   ஆத்திகமும், மனித சுதந்திரமும் ஒரு போதும் இணைந்து போகாது என நாத்திகக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தவர்களில் முக்கியமான மேற்கத்திய தத்துவ வல்லுநர்கள் யாவர்?

நீச்சே, சார்த் (கி.பி. 1980)

28.   நீச்சேயின் முழக்கம் என்பது யாது?

"கடவுள் இறந்தார்; சூப்பர்மேன் நீண்ட நாள் வாழ்க"

29.   மனிதனின் சுதந்திரம் நிறைவும் உன்னதமுமானதே என்பதும் மனிதனின் சாராம்சத்தை (essence) அவனே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். என்றவர் யார்?

சார்த்

30.   மனித வாழ்க்கையின் அடிப்படை இயல்புகள் எல்லாம் அழிவுக்குரியவையும் வரையறைக்குட்பட்டவையுமாகும். என்றவர்கள் யாவர்?  

மெல்லோ போண்டி (கி.பி. 1961). பாட்டான்ட் றசல் (கி.பி. 1970)

31.   "மனித வாழ்வு துக்கம் நிறைந்ததும் மனித உயிர் நிலையற்றதுமாகும்" (சர்வம் துக்கம், அனித்தியம் அநாத்மம்) என்றவர் யார்?  

கௌதம புத்தர்

32.   மனிதன் தனது இடுக்கண் நிறைந்த நேரத்திலும் கடவுளிலோ மதத்திலோ அடைக்கலம் தேடாமல் சொந்த நிலையில் துன்பங்களையும் பொருளற்ற நிலையையும் மனவலிமையோடு ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். தோல்வியை ஒத்துக் கொண்டு எதிர்பார்ப்பில்லாமல் வாழ்வதற்கு மனிதன் பயிற்சி பெறவேண்டும். அவ்வாறு வாழ்பவனே துணிவுள்ளவன். கடவுள் என்ற மாயையில் அடைக்கலம் வைத்து எல்லாம் நன்மையாய் வந்துசேரும் என அமைதியடைபவர்கள் கோழைகளே. என்றவர்கள் யாவர்?  

நிலையாமைக் கொள்கையின் அடிப்படையிலான கடவுள் மறுப்புக் கொள்கையினர்

33.   மனித வாழ்க்கை அதனிலேயே பொருளற்றதெனத் தோன்றினும் வாழ்க்கையிலிருந்து ஒளிந்து ஓடவோ, தற்கொலைக்கு முயலவோ செய்யாமல் தார்மீக விழுமியங்களுக்காகத் துணிச்சலோடு போராட வேண்டும் என்றவர் யார்?

ஆல்பர்ட் கியாமு (கி.பி. 1960)

34.   கடவுளிடமும், பரலோக வாழ்விலும் விசுவாசம் வைப்பது தார்மிகப் பொறுப்புகளிலிருந்து ஒளிந்தோடுவதாகும் என்றவர் யார்?

ஆல்பர்ட் கியாமு (கி.பி. 1960)

35.   கடவுள் மறுப்புக்கொள்கையுடைய மனித நேயமுடையவர்களே தூயவர்கள் என்றவர் யார்?

ஆல்பர்ட் கியாமு (கி.பி. 1960)

36.   மனித மாண்புக்கு ஒளிகொடுக்க கடவுள் நம்பிக்கையால் மட்டுமே இயலும். கடவுள் விசுவாசத்தின் அடிப்படையிலான மனித நலச் சிந்தனை குறித்து வாயிற்படி என்ற நூலில் தெளிவுபடுத்திய திருத்தந்தை யார்?

இரண்டாம் யோவான் பவுல்

37.   சொல்லப்பட்ட கருத்து சரியோ தவறோ ஆவதெல்லாம் விஞ்ஞான முறையில் தெளிவுபடுத்துவதன் வாயிலாகவே அமைகின்றது என்றவர் யார்?

ஏ. அயர் (கி.பி. 1989)

38.   20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் "கடவுள் இறந்துவிட்டார்என அறிவித்து புதிய ஆன்மீக வாழ்க்கைக்காக அறைகூவல் விடுத்த மேற்கத்திய இறையியல் வல்லுநர்கள் யாவர்?

ஹாமில்டன், வான்பியூரன், டோண் குப்பிட்

39.   இன்றைய உலகில் மாந்தர் அனுபவிக்கும் தீமைகளும், துன்பங்களும் கடவுள் இல்லாத நிலையையே வெளிப்படுத்துகிறது எனவும் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? என்பது வெளிப்படையானதோர் வினாவாகவே எஞ்சி நிற்கிறது என்றவர் யார்?  

ஹாமில்டன்

40.   ஆத்திகத்தில் நம்பிக்கை கொள்ளாமலேயே மனிதனுக்குக் கிறிஸ்துவின் சீடனாயிருப்பதற்கும் நற்செய்தியில் வாழ்வதற்கும் இயலும் என்றவர் யார்?  

வான்பியூரன்

41.   கடவுள் நம்பிக்கையைத் தவிர்த்த மத வாழ்வும் ஆன்மீகமும் உண்டு. என்றவர் யார்?

டோண் குப்பிட்

42.   சிலர் தத்துவ ரீதியாகக் கடவுளை ஏற்றுக் கொண்டால் கூட வழக்கத்தில் அனுபவ ரீதியாக இறைநம்பிக்கைக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. பொருளாதார வளர்ச்சிக்கும். வாழ்க்கை இன்பங்களுக்கும், உலகியல் செயல்பாடுகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிப்பர். இதற்குப் பெயர் என்ன?

உலகியலாக்குதல் (secularization)

43.   இந்திய மதச்சார்பின்மையின் கருத்து என்ன?

“எல்லா மதக் கொள்கைகளையும் சமக் கண்ணோட்டத்தில்” (சர்வ தர்ம சமபாவன)

44.   புலன்களைக் கொண்டும் மனத்தினைக் கொண்டும் சாதிக்கத் தகுந்த அறிவினை இந்தியத் தத்துவ ஞானிகள் எவ்வாறு அழைக்கின்றனர்?

புலனறிவு

45.   உயர்வான புத்தியின் தலத்தில் தேடுதலுக்குப் பெயர் என்ன?

உய்த்துணரும் அறிவு (transcendental knowledge)

46.   புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவுக்குப் பெயர் என்ன?

(intuition) 'உள்ளுணர்வு`

47.   ஏராளமானோர் நாத்திகவாதிகளாகவே வாழ்பவதற்குக் கடவுள் ஏன் அனுமதிக்கிறார் என்பதற்கு விவிலியச்சான்று எது?

1திமொ 2 : 4

48.   சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன?

நரேந்திரன்

49.   "நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீகளா? என்ற வினாவுக்கு "நரேந்திரா. நான் உன்னைக் காண்பதை விட தெளிவுடன் கடவுளைக் காண்கிறேன்.” என்றவர் யார்?  

இராமகிருஷ்ண பரமகம்சர்

50.   மனிதரின் இறைநம்பிக்கைக்கு அடிப்படை என்பது எது?

அவர்களுடைய ஆன்மீக அனுபவம்

51.   புனித தோமஸ் அக்வினால் கடவுள் உண்டு என்பதை வெளிப்படுத்துவதற்காக எத்தனை காரணிகளைச் சுட்டிக்காட்டுகின்றார்?

ஐந்து

52.   “கடவுள் உண்டு என்பதற்கு புனித தோமஸ் அக்வினால் கூறும் முதல் காரணிக்குப் பெயர் என்ன?

சலனம் (motion)

53.   “கடவுள் உண்டு என்பதற்கு புனித தோமஸ் அக்வினால் கூறும் இரண்டாம் காரணி என்ன?

காரியக் காரண உறவு (Casuation)

54.   “கடவுள் உண்டு என்பதற்கு புனித தோமஸ் அக்வினால் கூறும் மூன்றாம் காரணி என்ன?

நிலையற்ற தன்மை என்ற பிரபஞ்ச உண்மை: பிரபஞ்சப் பொருள்களுக்கு அடிப்படையாக நிலைவாழ்வு உடையதும் இன்றியமையாததுமான (permanant and necessary) உண்மை இருக்க வேண்டும்

55.   “கடவுள் உண்டு என்பதற்கு புனித தோமஸ் அக்வினால் கூறும் நான்காம் காரணி என்ன?

பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற குணங்கள் பூரணத்துவத்தை (graded perfection) : அதாவது அனைத்து நற்குண நிறைவுடைய ஆற்றல் மிகுந்த ஓர் இறைசக்திக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.

56.   “கடவுள் உண்டு என்பதற்கு புனித தோமஸ் அக்வினால் கூறும் ஐந்தாம் காரணி என்ன?

பிரபஞ்சத்தின் வரிசை முறை மற்றும் ஒழுங்குமுறை (order and design)

57.   படைப்பிலிருந்து படைத்தத் தலைவரைக் கண்டடைவதற்கு நாம் நடத்தும் ஆய்வுகளுக்குரிய இரண்டு கட்டங்கள் யாவை?

முதலில், பிரபஞ்ச உண்மைகளின் வரம்புக்குட்பட்டதும், நிலையற்றதுமான இயல்புகளைக் குறித்துள்ள உணர்வு. இரண்டாவது, நிலையற்றதும். ஒன்றையொன்று சார்ந்திருப்பதுமான பிரபஞ்ச நிகழ்வுகளுக்கு இருந்தே ஆக அனைத்திற்கும் உறைவிடமும், ஊற்றுமாகவும் உள்ள ஓர் உண்மை வேண்டும் என்னும் உள்ளுணர்வு.

58.   உன்னதமான உண்மையின் நிறைவை பாரத முனிவர்கள் எவ்வாறு அழைத்தனர்?

பிரம்மம் மற்றும் துறவு

59.    உன்னதமான உண்மையின் நிறைவை அரிஸ்டாட்டில் எவ்வாறு அழைத்தார்?

அசைக்கப்படாத அசைக்கும் சக்தி (unmoved mover)

60.   உன்னதமான உண்மையின் நிறைவை அக்வினாஸ் எவ்வாறு அழைத்தார்?

சுயமாகவே இருக்கும் சத்து (self - subsisting essence)

61.   கடவுள் உண்டு என்பதற்குப் பிரபஞ்சத்தை ஆதாரமாகக் கொண்டு அளிக்கப்படும் சான்றுக்குப் பெயர் என்ன?

காரிய காரணக் கொள்கை (principle of causality)

62.   காரிய காரணக் கொள்கை (principle of causality) என்றால் என்ன?

சொந்தமாக அதாவது சுய இயல்பினால் நிலை கொள்ளாத பொருள்களெல்லாம் அவற்றின் உண்மை நிலையை சுயமாக நிலைகொள்ளும் மெய்மையிலிருந்து (absolute truth) பெற்றுக் கொண்டதேயாகும். பிரபஞ்சப் பொருள்கள் எதற்குமே அவற்றிலேயே நிலைத்தன்மை இல்லை. அவை அனைத்தும் தங்கள் நிலைத்தன்மையைக் கடவுளிடமிருந்தே பெற்றுக் கொள்கின்றன.

63.   மனம் ஒரு கருத்தை உள்ளுணர்வுடன் பகுத்தறிந்து முறைமைப்படுத்துவதற்கு முன்னரே அதைப் பற்றி தெளிவற்றதும் ஆனால் உறுதியானதுமான அறிவு மனத்தில் தென்படுவதற்குப் பெயர் என்ன?

'முன் உணர்வு'

64.   மனித அறிவின் அனைத்துத் தேடல்களின்  அடிப்படையும், அசைவாற்றலும் முன் உணர்வேயாகும். அதனைப் பகுத்தறிவு மற்றும் தியானம் மூலமாக உணர்வு நிலையுடன் வெளிப்படுத்துவது என்ன?

கடவுள் நம்பிக்கை

65.   மனித மனத்திலுள்ள உலகப்பற்றுக்கு அப்பாற்பட்ட அளவற்றதும் நிறைவானதுமான அழகு, பேரின்பம் போன்ற கருத்துகள் நமது அக அனுபவங்களின் பகுதியேயாகும். மனிதனின் வரையறைக்குட்பட்ட உள்ளத்தில் அத்தகைய எண்ணங்களை  தெய்வீகமான ஒளியூட்டுதல் (Divine illumination) என்றவர் யார்?

புனித அகுஸ்தினார்

66.   கடவுளே நீர் என்னை உமக்காக படைத்தீர். உம்மிடம் சேரும் வரை நான் கலக்கமுற்றவனாயிருக்கிறேன்" என்றவர் யார்?

புனித அகுஸ்தீனார்

67.   "இது தீயது; இதனைச் செய்யாதே”, ”இது நன்மையும் நேர்மையானதும் ஆகும். ஆகவே இதனைச் செய்கபோன்ற உள்ளொலியை கேட்காத மனிதரேயில்லை. இந்த ஓசை மனிதனை அவனது உள்ளத்தில் அறவழிக்குத் தூண்டிவிடுகின்றது. இதன் உறைவிடம் தனிநபரிடமிருந்தோ, சமூகத்தினரிடமிருந்தோ அல்ல. மனிதனுக்கு அப்பாற்பட்ட ஓர் அறம் சார்ந்த ஆற்றலுக்கு மட்டுமே மனிதனின் உள்ளிலிருந்து தூண்டி விடுவதற்கு இயலும். அவர் யார்?

கடவுள்

68.   கடவுள் இல்லை எனக் கருதுவதை விட பகுத்தறிவுக்கு மிகவும் பொருத்தமானது எதனை நம்புவதாகும்?

'கடவுள் உண்டு' என்ற நம்பிக்கை

 

பாடம் : 6

பொதுவுடைமைக் கொள்கை (Communism)

1.        மனிதனின் அறிவாற்றலினாலும், பகுத்தறிவினாலும் கடவுள் இருக்கிறார் என்பதை மறுத்துவிட்டு மனிதனிடமுள்ள இறைப் பிரசன்னத்தை இழந்துவிடும் கொள்கை எது?     

நாத்திகம்

2.        மனிதனில் உள்ள இறைபிரசன்னத்தை மறுத்தொதுக்கிவிட்டு மனிதன் வெறும் பொருள் மட்டும் தான் எனச் சிந்தித்து மனிதனிடமுள்ள இறைப் பிரசன்னத்தை இழந்துவிடுகின்ற கொள்கை எது?

கம்யூனிசம்

3.        20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை உலக வரலாற்றையே சற்று அதிகமாகக் கவர்ந்திழுக்கவும், உலக வரலாற்றில் பெரும்புயலை  வீசச் செய்த கொள்கை எது?

கம்யூனிசம்.

4.        கம்யூனிசம் என்னும் அயல் மொழிச்சொல்லின் அர்த்தங்கள் என்ன?

"பொது உடைமை நிலை", "எல்லோரும் எல்லோருக்குமாக"

5.        கம்யூனிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை உருவாக்கியவர்கள் யாவர்?  

காரல் மார்க்சும், பிரடரிக் ஏங்கல்சும்

6.        அடிமைத்தனம், அறியாமை, வறுமை ஆகியவற்றின் சங்கிலிக் கட்டுகளை உடைத்தெறிவதற்கான விடுதலைப் போராட்டம் ஒன்றின் எக்காள ஒலி எனப்படும்  காரல் மார்க்சும், ஏங்கல்சும் சேர்ந்து 1848 -ல் வெளியிட்ட நூல் எது?

கம்யூனிஸ்ட் மானிஃபெஸ்டோ

7.        பத்தாம் நூற்றாண்டின் மத்தியில் எத்தனை நாடுகளில் கம்யூனிசம் செல்வாக்குப் பெற்றிருந்தது?

சுமார் தொண்ணூறுக்கும் குறையாத

8.        கம்யூனிசம் கற்பனை செய்த ஒத்துவராத தவறான கொள்கை எது?

பூவுலக சொர்க்கம்

9.        16ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஐரோப்பாவின் எல்லா நாடுகளிலும் உருவெடுத்த மறுமலர்ச்சிச் சிந்தனைகள் எதற்கு வித்திட்டன?

தொழிற்புரட்சிக்கு

10.   காரல் மார்க்ஸ் எங்கே எப்போது பிறந்தார்?

1818-ல் ஜெர்மனியில் ட்ரியர் என்னுமிடத்தில்

11.   காரல் மார்க்சின் பெற்றோர்கள் எம்மதத்திலிருந்து புரட்டஸ்டன்ட் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்கள்?

யூத மதத்திலிருந்து

12.   காரல் மார்க்சின் காலத்தில் அவரை தாக்கம் செலுத்திய புரட்சி எது?

 பிரஞ்சுப் புரட்சி

13.   காரல் மார்க்சின் காலத்தில் அவரை தாக்கம் செலுத்திய சிந்தனைகள் யாருடையவை?

ரூசோ மற்றும் வால்டயர் ஆகியோரின் சமத்துவச் சிந்தனைகளும், சமூக பொருளாதாரப் பின்னணிகளும்

14.   காரல் மார்க்சைக் கவர்ந்த கிரேக்கத் தெய்வங்களுக்கு எதிராகப் குரலெழுப்பிய கிரேக்க இதிகாச ஆசிரியர் யார்?

புரமேத்தேவூஸ்

15.   காரல் மார்க்சிடம் தாக்கம் செலுத்திய கிரேக்கத் தத்துவ ஞானி யார்?

எப்பிக்கோரஸ்

16.   யார் வாயிலாகக் காரல் மார்க்சிடம் நாத்திகம் வேரூன்றியது?

எப்பிக்கோரஸ்

17.   பரிபூரண ஆன்மா (Absolute spirit) மட்டும் தான் உன்னதமான உண்மை, பரிபூரணமான ஆன்மா உயிருள்ளதும், இயக்கமூட்டும் ஆற்றலுமுடையதாகும் என்றவர் யார்?

ஹேகல்

18.   ஹேகலின் சிந்தனையில் பரிபூரண ஆன்மாவிற்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் மனிதனுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை எனவும் மனிதனின் "நிலைத்தன்மை (Existence) மறுக்கப்பட்டது எனவும் எதிர்த்தவர் யார்?

ஃபொயர் பாக்

19.   ஃபொயர் பாக்கின் கொள்கை என்ன?

"உன்னத உண்மை பரிபூரண ஆன்மா அல்ல, மாறாக, மனிதனே ஆவான். அதனால் அனைத்தினுடையவும் அடிப்படையான உண்மை மனிதன் என்பதும் மனிதனின் நிறைவுறாத ஆசைகளின் படைப்பு தான் கடவுள் என்பதும் மனிதனே அவனது கடவுள்"

20.   ஹேகலின் பரிபூரண ஆன்மாவிற்கு எதிராக ஃபொயர் பாக் கூறியுள்ளதை ஏற்றுக்கொண்டவர் யார்?

காரல் மார்க்ஸ்

21.   ஹேகலின் முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வும் ஃபொயர் பாக்கின் உலகியல் ஆய்வும் யாருடைய சிந்தனைகளின் அடிப்படைக் கருத்துகளாக அமைந்தன?

 காரல் மார்க்ஸ்

22.   வரலாற்றில் ஏற்படக்கூடிய எல்லா மாற்றங்களும் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு கொண்ட மக்களுக்கிடையே ஏற்படுகின்ற போராட்டத்திலிருந்தே உருவாகின்றன எனக் கூறியவர் யார்?

காரல் மார்க்ஸ்

23.   தொழிலாளிகளும், முதலாளிகளும் ஒருவருக்கொருவர் முரண்பட்ட இரண்டு சக்திகளே எனவும், அவர்களுக்கிடையேயான போராட்டம் மிகத் தேவையே எனவும், அப்போராட்டத்தின் விளைவாகத் தொழிலாளி, முதலாளி என்னும் வேறுபாட்டிலிருந்து சமத்துவ நிலையிலான ஓர் ஒழுங்கமைவு ஏற்படும் எனவும் விளக்கம் கூறியவர் யார்?  

காரல் மார்க்ஸ்

24.   கம்யூனிசத்தை முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட எப்பெயரால் அழைக்கின்றனர்?

இயற்பொருள் வாதம்

25.   யாருடைய தத்துவத் தாக்கத்தால் முரண்பாட்டுக் கொள்கையை காரல் மார்க்ஸ் பற்றிக் கொண்டார்?

ஹேகலின்

26.   ஹேகல் உயர்த்திக் காட்டிய எந்த ஆன்மீக உண்மையை முழுமையாகத் தகர்த்துவிட்டு அதனுள் மனிதனையும் பருப்பொருள் உண்மையையும் காரல் மார்க்ஸ் நிலைநிறுத்திக் கொண்டார்?

பரிபூரண ஆன்மா

27.   மார்க்சின் பொருளாதாரக் கோட்பாட்டின் மையப்புள்ளிகள் எவை?

மனிதனும், அவனுக்குப் பொதுசொத்தாகக் கிடைத்திருக்கும் இயற்கையும், மனிதனை இயற்கையுடன் ஒன்றிணைக்கின்ற தொழிலும், தொழிலின் விளைவான உற்பத்தியும்

28.   மார்க்ஸ் தனது எந்த நூலில், "உலக வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறு ஆகும்" எனக் கூறியுள்ளார்?

கம்யூனிஸ்ட் மானிஃபெஸ்டோ

29.   தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடனும் இயற்கையின் உதவியுடனும் உழைத்ததன் விளைவாக உற்பத்தியின் அடிப்படையில் மனித வரலாறு எந்தெந்த கட்டங்களைக் கடந்து செல்கிறது எனக் காரல் மார்க்ஸ் கருதுகிறார்?

பழங்கால கம்யூனிசம், அடிமை முறை, பிரபுத்துவ முறை (நிலமானிய முறை), முதலாளித்துவ ஆட்சி முறை, பொது உடைமை கோட்பாடு

30.   தனி உடைமை சொத்து தான் அடிப்படைப் பாவம் எனக் கூறியவர் யார்?

காரல் மார்க்ஸ்

31.   அனைத்துச் சமூகத் தீமைகளுடையவும் அடிப்படைக் காரணம் தனிநபர் சொத்து சம்பாதிப்பதன் விளைவு தான் எனக் கூறியவர் யார்?

காரல் மார்க்ஸ்

32.   காரல் மார்க்ஸ்-ன் “அனைவரும் அனைவருக்குமாக' என்னும் கருத்துக் கருத்தரித்துத் தாய்மையடைந்து  எந்தப் பெயரில் பிறவியெடுத்தது?

கம்யூனிசம்

33.   தனிநபர் சொத்துரிமையை வேருடன் அழித்துவிடுவதும், பொருளாதார சமத்துவம் உறுதிசெய்வதுமே எந்த கோட்பாட்டின் குறிக்கோள் ஆகும்?

கம்யூனிசம்

34.   முதலாளித்துவ முறையிலுள்ள சுரண்டும் வர்க்கமான எந்த முதலாளிகளைப் புரட்சியின் வாயிலாக நிலை குலைய வைத்திட காரல் மார்க்ஸ் எண்ணினார்?

பூர்ஷ்வா

35.   கம்யூனிசத்தின் முதல் திட்டம் எதுவாக அமைந்திருந்தது?

தனிநபர் சொத்துக்களைத் தேசத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது

36.   தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து புரட்சியின் வாயிலாக அதிகாரத்தைச் சொந்தமாக்கிக் கொள்ள புரட்சி வன்முறையிலும், இம்சை முறையிலும் நடைபெறுவதற்குக் கூட ஒத்துப் போகிறவர் யார்?

காரல் மார்க்ஸ்

37.   காரல் மார்க்சின் பார்வையில் கம்யூனிஸ்ட் சொர்க்கம் என்பது முதலாளி வர்க்கத்தினர் வீழ்ச்சியடைந்த உடனேயே உருவாவதில்லை. புரட்சிக்கும். கம்யூனிசத்திற்கும் இடையேயுள்ள இடைக்கால அமைப்புக்குப் பெயர் என்ன?  

சமதர்மக் கொள்கை (socialism)

38.   அதிகாரத்தைப் புரட்சி வாயிலாகத் தொழிலாளர்கள் கைப்பற்றுவதனை  காரல் மார்க்ஸ் எவ்வாறு அழைத்தார்?

தொழிலாளியின் ஜனநாயகம்

39.   கம்யூனிசம் என்னும் சொர்க்க நிலைக்கு முந்தைய நிலை என்ன?

தொழிலாளர் தலைமையில் இயங்கும் பொதுவுடைமை அரசாங்கம்.

40.   பொதுவுடைமை அரசுப் படிப்படியாக இல்லாமலாகி எந்த நிலை இயல்பாகவே உருவாகிவிடும்?

கம்யூனிஸ்ட் சொர்க்கநிலை

41.   காரல் மார்க்சின் கற்பனையில் உருவான பூவுலக சொர்க்கத்துக்குப் பெயர் என்ன?

கம்யூனிசம்

42.   கம்யூனிசத்தின் சிறப்பியல்புகள் யாவை?  

எல்லா உற்பத்திப் பொருள்களுடையவும் பொதுவான பகிர்ந்தளித்தல் முறை. 'அனைவர்க்கும் அவரவரது தேவைக்கேற்ப அவரது திறமைக்கேற்ப அனைவரிடமிருந்தும் என்னும் கொள்கை. சமூக ஒழுங்குமுறையில் ஒருவருமே பிறர்மீது ஆட்சி செலுத்துவதில்லை. தனிநபருடைய தனிப்பட்ட இலாபத்தைப் பார்க்காமல் பொது நன்மைக்கு உதவும் ஒன்றிணைந்த செயல்முறை.

43.   காரல் மார்க்ஸ் கருத்தில் கொண்ட கம்யூனிஸ்ட் சொர்க்கம் எனப்படுவது யாது?

அனைவரும் சமத்துவமாக வாழும் சிறப்பான சமூக அமைப்பு முறை.

44.   கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியும், தளர்ச்சியுமாக வரலாற்று நிகழ்வுகளில் மிகப்பெரும் நிகழ்வு எனப்படுவது எப்போது?

20-ஆம் நூற்றாண்டு

45.   கம்யூனிச சிந்தனைகளில் மூழ்கியிருந்த நாடுகள் எவை?

போலந்து, ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி, ருமேனியா. செக்கேஸ்லோவாக்கியா, பல்கேரியா, அல்பேனியா, சோவியத் ரஷ்யா, யூகோஸ்லாவியா

46.   கம்யூனிசம் தகர்ந்து விழும் நிலை ஏற்பட்டதன் காரணம் என்ன?

1. கம்யூனிசம் என்னும் அமைப்பு அதன் கொள்கையிலேயே குறைபாடுடையதும், தவறுகள் நிறைந்ததுமாகும்,

2. கம்யூனிச கோட்பாடு செயல்முறையில் பெரும் தோல்வியைத் தழுவிவிட்டது என வரலாறு சான்றளிக்கிறது.

47.   கற்பனைகள் சிலவற்றின் அடிப்படையில் மணலின் மேல் கட்டி எழுப்பிய கட்டிடம் போன்ற கம்யூனிச சொர்கக்கனவு கொண்டிருந்த குறைகளும், தவறுகளும் எவை?

வர்க்கப் போராட்டக் கோட்பாடு, நாத்திகச் சிந்தனை, குறிக்கோளை அடைய எந்த உபாயத்தையும் பின்பற்றலாம் என்னும் கண்ணோட்டம், மனிதச் சுதந்திரம் மறுத்தல், தனிநபருக்குச் சொத்துரிமை மறுத்தல், அனைவரும் சமத்துவம் அடைய வேண்டும் என்னும் எண்ணம்

48.   கடவுளின் அந்தஸ்தை மனிதனுக்கு அளித்துக் கொண்டு மனிதனே உன்னத உண்மையானவன் எனவும், இந்த உலகத்திற்கு அப்புறமாக வேறெதுவும் இல்லை எனவும், மனிதனிடம் தெய்வீகமென்றோ, ஆன்மீகமென்றோ எதுவுமே இல்லை எனவும், மனிதன் இயற்பொருள் மட்டுமே எனவும், மனிதனின் அனைத்துப் பிரச்சினைகளும் செல்வத்தை அடிப்படையாகக் கொண்டவையே எனவும் கூறியவர் யார்?

காரல் மார்க்ஸ் 

49.   சுமார் 70 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சியில் எந்தெந்த நாடுகளில் மனிதனின் அடிப்படைப் பிரச்சினைகள் எதற்குமே தீர்வு காணப்படவில்லை?

சோவியத் ரஷியாவிலும். பிற கம்யூனிச நாடுகளிலும்

50.   முரண்பாடுகளின் அடிப்படையிலான இயற்பொருள் வாதத்தினைக் கருத்தாகக் கொண்டு மார்க்ஸ் கம்யூனிசத்தை எவ்வாறு விளக்கினார்?

முதலாளியும், தொழிலாளியும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு சக்திகளே எனவும் அவர்களுக்கிடையேயான போராட்டத்திலிருந்து மூன்றாவது சக்தியாக உருவாகும் சமத்துவ நிலையே கம்யூனிசம்

51.   ரஷ்யாவில் எப்போது கம்யூனிஸ்ட் புரட்சி அரங்கேற்றப்பட்டது?

1917 - ல்.

52.   1917 முதல் 1978 வரையிலான ஆறு பத்தாண்டுகளுக்கிடையில் வெவ்வேறு நாடுகளிலுள்ள கம்யூனிஸ்ட் அரசுகள் துப்பாக்கி முனையிலும் பட்டினிக்கிரையாக்கியும் கொன்று குவித்த மக்களின் எண்ணிக்கை பதினைந்து கோடி என்று எந்த பிரஞ்சுப் பத்திரிக்கை 1979 -ல் செய்தி வெளியிட்டது?

பிகாறோ

53.   காரல் மார்க்சின் எந்தெந்த கருத்துக்கள்  ஏற்கத்தக்கதல்ல என உலகம் புரிந்து கொண்டது?

வரலாற்று இயற்பொருள் வாதமும், முரண்பாடுடைய இயற்பொருள் வாதமும், வர்க்கப் போராட்டமும்

54.   தனிநபர் சொத்துரிமையை ஒழித்துவிடுவதற்கு எந்த வழிமுறையையும் பின்பற்றலாம் என்றவர் யார்?

காரல் மார்க்ஸ்

55.   தனிநபர் சொத்து சம்பாதிப்பதே எல்லா விதமான சமூக தீமைகளுக்கும் காரணம் என்றவர் யார்?

காரல் மார்க்ஸ்

56.   மனிதன் தனிப்பட்ட சொத்தினை வெறுத்து ஒதுக்குவதற்கான அகத்தூண்டுதல் அளிக்கக் கூடிய ஆன்மீக மதிப்பீடுகளை யார் தனது கோட்பாடுகளில் மறந்து விட்டார்?

காரல் மார்க்ஸ்

57.   சமூகத்தின் பொது நன்மைக்கும், சுரண்டல் இல்லாத சமூக அமைப்பிற்கும் வேண்டிய தியாக உணர்வினை உருவாக்குவதற்குக் காரல் மார்க்ஸ் பயன்படுத்திய வழிமுறைகள் யாவை?

சாட்டையடி, துப்பாக்கிச்சூடு, மூளைச் சலவை முறை (brain washing) போன்ற துன்புறுத்துதல் முறைகளே.

58.   தனிநபர் சொத்தின் உரிமையாளரைத் தீர்த்துக்கட்டுவதற்கு அவரை எந்த முத்திரைப் பதித்துப் பலிக்கடா ஆக்கிக் கொண்டார் காரல் மார்க்ஸ்?

பூர்ஷ்வா

59.   காரல் மார்க்ஸ் தனது வாலிபப் பருவத்திலிருந்தே எத்தகைய சிந்தனையால் ஈர்க்கப்பட்டிருந்தார்?

நாத்திகச் சிந்தனை

60.   காரல் மார்க்சை ஈர்த்துக் கொண்ட சிந்தனை எது?

ஹேகலின் "பரிபூரண ஆன்மா மட்டும் தான் உன்னத உண்மை" என்னும் சிந்தனைக்கெதிரான “மனிதன் மட்டும் தான் உன்னத உண்மை" என்னும் ஃபொயர் பாகின் சிந்தனை

61.   கடவுளும் மதமும் முதலாளித்துவ நிலைப்பாடு உடையவர்களின் சொந்த படைப்புகளாகும். தொழிலாளியைச் சுரண்டுவதற்கு முதலாளியின் கையிலுள்ள கருவிகள் தான் மதமும், கடவுளும். மதம் இருக்கும் காலம் வரைச் சுரண்டும் அமைப்புகளுக்கெதிராகச் செயல்பட மனிதனுக்கு இயலாது. மதநம்பிக்கை உடையவர் சுய உணர்வும். எதிர்க்கும் வலுவும் இழந்தவர்களே ஆவார்கள். மதம் மனிதனின் சிந்திக்கும் திறனை அழித்துவிடுகிறது. அநீதிக்கு எதிராகப் போரிடுவதற்கான வல்லமையை மதம் வெளியேற்றிவிடுகிறது. என்றவர் யார்?

காரல் மார்க்ஸ்

62.   "துன்பங்களுக்கும், இடையூறுகளுக்கும் பலன் இல்லாமல் போகாது. அவற்றிற்கெல்லாம் பிரதிபலன் சொர்க்கத்தில் கிடைத்துவிடும். பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்பது எதன் அறிவுரை ஆகும்?

மதத்தின்

63.   அவ்வாறு எதிர்ப்பதற்கு இயலாமல் மதம் மனிதனை ஒரு வித மாயையான போதைக்கு இழுத்துச் செல்வதனாலேயே மனிதனை மயக்கி இழுக்கும் போதைப் பொருள் அல்லது அபின் தான் மதம் என்றவர் யார்?

காரல் மார்க்ஸ்

64.   "இவ்வுலக இன்பம் மறுக்கப்பட்ட மனிதனுக்கு சொர்க்கலோக இன்பம் அடையலாம் என்ற மாயையைக் கொடுத்து வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான அவனது வீரத்தை மதம் கெடுத்துவிடுகிறது என்றவர் யார்?

காரல் மார்க்ஸ்

65.   மார்க்சின் சங்கேத முழக்கம் என்பது எது?

"நான் எல்லா தெய்வங்களையும் வெறுக்கிறேன். சேவூஸ். கடவுள், பரிபூரண ஆன்மா இவர்கள் அனைவரும் மனிதனுக்கு தகுதியான அரியணையைப் பறித்துக் கொண்ட விகாரமான சிலை வடிவங்களாகும். அதனால் முதலில் அழிக்கப்பட வேண்டியவை வெளியே உள்ள ஆலயங்களையும், பூசாரிகளையும் அல்ல. மனிதனின் உள்ளத்தில் இருக்கும் ஆலயத்தையும், குருக்களையும் ஆகும். மனிதனை சார்ந்தது எதுவுமே எனக்கு மாறுபட்டதல்ல”.

66.   காரல் மார்க்சின் அடிப்படையான நோக்கம் எதுவாக அமைந்திருந்தது?

கடவுளையும், ஆலயத்தையும், குருக்களையும் மனித இதயங்களிலிருந்து ஒழித்துவிடுவது.

67.   கம்யூனிஸ்ட் தாக்குதலின் போது கிறிஸ்தவ மக்களுக்கு எதிர்நோக்கும், நிம்மதியும் அளித்தது எது?

மறைவிடங்களில் அவர்கள் ஒன்றுசேர்ந்து நடத்திக் கொண்டிருந்த செபங்கள்

68.   ரஷ்யாவில் கம்யூனிசம் தகர்ந்த போது மதத்தோடும் மதநம்பிக்கையாளர்களோடும் கம்யூனிஸ்டுகள் செய்து கொண்ட கொடுமைகளுக்காக மன்னிப்புக் கோரிய பிரதமர் யார்?

மிக்காயேல் கோர்ப்பச்சோவ்

69.   "மதத்தின் மதிப்பீடுகளுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம்." என்ற கம்யூனிச பிரதமர் யார்?

மிக்காயேல் கோர்ப்பச்சோவ்

70.    கம்யூனிசத்தின் வளர்ச்சியில் எந்த சிந்தனை தோல்வியடைந்தது?

"மதம் படிப்படியாகச் செத்துவிடும்

71.   கடவுளையும் மனிதனையும். ஆன்மாவையும் உடலையும். தனிநபரையும் சமூகத்தையும், ஆன்மீகத்தையும் பொருளுலகையும், விண்ணுலகையும் மண்ணுலகையும் கம்யூனிசம் பிளவுபடுத்தி வேறுபடுத்திய போது இவைகள் எல்லாவற்றையும் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைத்து நிலைநிறுத்த  முயன்றவை எவை?

மதங்கள்

72.   மனித வாழ்வின் நிறைவுக்கு உலகப் பொருட்கள் மட்டும் போதாது என உணர்ந்து கொள்ள மார்க்சுக்கு இயலவில்லை. இதனைக் குறித்து இயேசு கூறியது என்ன?

"மனிதன் உயிர் வாழ்வது அப்பத்தினால் மட்டுமல்ல (மத்தேயு 4:4)

73.   "நான் ஏன் நல்ல மனிதனாய் இருக்க வேண்டும்” என்பதற்கு மார்க்சுக்குப் பதிலில்லை என்றவர் யார்?

ஜெயப்பிரகாஷ் நாராயண்

74.   கம்யூனிசமும் உண்மையான கடவுள் விசுவாசமும் இணைந்து போக முடியுமா?

முடியாது.

75.   முதலாளிக்கும், துன்புறுத்துவோருக்கும் எதிராக ஆயுதம் தாங்குவதற்கு காரல் மார்க்சுக்கு தூண்டியது எது?

தொழிலாளிகள் மற்றும்  ஒடுக்கப்பட்டவர்களோடு ஏற்பட்ட பரிவு

76.   "குறிக்கோள் செயல்முறையை நியாயப்படுத்தும் என்பது சரியா?

இல்லை

77.   கம்யூனிசத்தின் தவறான போதனைகள் எவை?

சுரண்டலுக்கு ஆளானத் தொழிலாளியைச் சுரண்டலிலிருந்து விடுவித்து வர்க்கப்பாகுபாடற்ற கம்யூனிஸ்ட் சொர்க்கம் என்னும் குறிக்கோளை அடைவதற்கு எத்தகைய செயல்முறைகளையும் கையாளலாம் என்பதும் அதற்காகத் தாக்குதலோ, சிறைத்தண்டனையோ, கொலை செய்வதோ எதுவும் ஆகலாம் என்பதுமான கம்யூனிஸ்ட் அணுகுமுறை எத்தகைய தீமைகளை உருவாக்கியது? இலட்சக்கணக்கான மக்களுடைய கொலைக்கும், உரிமை மறுப்புக்கும், பலவிதத் துன்பங்களுக்கும் வழிவகுத்துள்ளது. தாக்குதலை ஒழிப்பதற்குத் தொடங்கப்பட்ட மார்க்சிசமே தாக்குதலையையும், அடக்குமுறையையும் கட்டவிழ்த்துவிட்டது. துன்புறுத்துவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற பெயரைச் சொல்லியே சித்திரவதை புரிந்தனர். அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகவே பிறரை அடிமைகளாக்கினர்.

78.   கம்யூனிசக் கோட்பாட்டின் படி தனிநபரை விட முக்கியத்துவம் சமூகத்திற்கே ஆகும். சமூகத்திற்காகத் தனிநபர் ஒருவர் தியாகம் அனுபவிப்பதற்கும், தேவையானால் உயிரைத் துறப்பதற்கும் கூட தயாராகவும் வேண்டும். இச்சிந்தனைக்கான கம்யூனிச எடுத்துக்காட்டுகள் யாவை?

மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், புனித கோல்பே

79.   கம்யூனிஸ்ட் நாடுகளில் மறுக்கப்பட்ட உரிமைகள் எவை?

மதச் சுதந்திரமும், தனிச் சுதந்திரமும் உட்பட்ட பல உரிமைகளும்.

80.   "சமத்துவ சொர்க்கம்” எனப்படும் மார்க்சின் அடிப்படைக் கருத்து என்ன?

வர்க்க வேறுபாடில்லாததும், சுரண்டலற்றதும், சமத்துவநிலை உள்ளதுமான சமூக வாழ்வு

81.   கம்யூனிச கோட்பாடு கருத்தியலிலும், செயல்முறையிலும் தவறானதே என்பதன் திருச்சபையின் கருத்துக்கான  வாதங்கள் எவை?

இயற்பொருள் வாதம், நாத்திக வாதம், வர்க்கப் போராட்டம். தனிநபர் சொத்துரிமை மறுப்பு, மனிதனின் தனிப்பட்ட உரிமைகளை மறுத்தல், குறிக்கோளை அடைய தவறான செயல்முறைகளை நியாயப்படுத்துதல்

82.   எழுபது ஆண்டுகள் பழக்கமுள்ள கம்யூனிஸ்ட் ஆட்சி தோல்வியைத் தழுவிய நாடுகள் எவை?

சோவியத் ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும்

83.   சுரண்டலுக்கும், தீமைக்கும் எதிரான போராட்டம் அல்லது புரட்சி தொடங்கப்பட வேண்டியது ஒவ்வொரு மனிதனுடையவும் உள்ளத்திலிருந்தேயாகும். என அறிவுறுத்திய இயேசுவின் கூற்று எது?

இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் (மாற்கு 1: 15)

84.   இறையாட்சியில் நிலவுகின்ற நற்செய்தி வலியுறுத்துகின்ற மதிப்பீடுகள் எவை?

அன்பு, நீதி, இரக்கம், உண்மை

85.   ஒருவர் எதன் வாயிலாகத் தீமையின், அநீதியின், சுரண்டலின் வழிமுறைகளை விட்டுவிட்டு, அவற்றிற்குப் பதிலாக அன்பின் நீதியின் உண்மையின் இரக்கத்தின் செயல்முறைகளைப் பின்பற்றி வாழ வேண்டும்?

மனம் வருந்துதலின்

86.   கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் உண்மையான புரட்சி எங்கு தான் நடைபெறவேண்டும்?

மனிதரின் உள்ளத்தில்

87.   சமூகம் செழித்தோங்க அழித்துவிட வேண்டியவை என்ன?

மனிதரின் உள்ளத்துத் தீமைகள்

88.   சுரண்டப்படும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் திருச்சபையின் கருத்து நிலை என்ன?

மக்களாட்சிக் கொள்கையின் அடிப்படையில் அரசு  சட்டங்கள் இயற்றவேண்டும்

89.   எந்த வழிமுறைகளையும் பயன்படுத்தி தீமையையும், தீமை செய்கின்ற நபர்களையும் அழித்துப் பூமியில் கம்யூனிச சொர்க்கம் நிறுவலாம் என்ற கம்யூனிச கோட்பாட்டினை திருச்சபை ஏற்றுக்கொள்கிறதா?

இல்லை

 

பாடம் :7

போதைப் பொருட்களும்

அவற்றின் விளைவுகளும்

 

1.        வாழ்க்கையின் உண்மை நிலைகளைக் கண்டுணர்ந்து அவற்றை எதிர்கொள்வதற்குத் துணிவில்லாதவர்கள் ஒளிந்து கொள்ளும் மறைவிடம் எனப்படுவது எது?

போதை.

2.        போதைப் பொருட்களை உபயோகிப்பதன் மூலம் ஒருவர் தன்னுடைய ஆளுமையையும், உடலையும் அழித்துத் தன்னிடமுள்ள எதனை இழந்துவிடுகின்றார்?

 இறைப்பிரசன்னத்தை

3.        மனிதனை மொத்தமாகவும், அவனது தெய்வீகச் செல்வத்தையும் அழித்து ஒழித்துவிடுவது எது?

போதைப் பொருட்கள்

4.        அன்றாட வாழ்க்கையில் மெய்யான மகிழ்ச்சியும், அமைதியும் தராத நொடியிடை நேரத்திற்கு மட்டும் ஆறுதலாய் அமைகின்ற எத்தகைய நாகரிகம் இன்று சமூகத்தின் சாபக்கேடாய் மாறியுள்ளது?

போதை நாகரிகம்

5.        நெருப்புச் சுடரின் சுகம் தேடி வரும் பூச்சிகளைப் போன்றவர்கள் யாவர்?

போதைப் பொருள்களுக்கு அடிமையாகின்றவர்கள்

6.        போதைப் பொருள்கள் எதனுடைய உறைவிடம் ஆகும்?

தீய பழக்கங்களின்

7.        ஒரு பொருள் மீது மிதமிஞ்சிய ஆசையும், அளவுகடந்த மோகமும் கொண்டிருப்பதை எவ்வாறு அழைக்கிறோம்?

வேட்கை (Addiction)

8.        ஒருவன் போதைக்கு முழுமையாக அடிமையாவது எப்படி?

தினமும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் ஒருவர் அதன் வேட்கையால் ஒவ்வொரு நாளும் அவற்றின் அளவைக் கூட்டுவதற்கும் தூண்டப்படுகிறார். போதிய அளவு போதையும், மனநிறைவும் அடைவதில்லை என்ற எண்ணம் தான் ஒவ்வொரு நாளும் அளவினைக் கூட்டுவதற்கு ஒருவரைத் தூண்டிவிடுகிறது. இதன் விளைவாக நாள்தோறும் ஒரு முறை மட்டும் போதைப் பொருள் பயன்படுத்தி வந்தவர்கள். பின்னர் இரண்டும் மூன்றும் மடங்காக அதிகப்படுத்திக் கொள்கின்றனர். அவர்களுக்குத் தீவிர ஆர்வம் போதைப் பொருள்களோடு ஏற்பட்டுவிடும். இறுதியில் அவர்கள் போதைக்கு முழுமையாக அடிமைகளாக மாறுகின்றனர்.

9.        மதுவகைகளை விட மிக விரைவில் மனிதனை அடிமைப்படுத்திவிடுவது எது?

மயக்க மருந்துகள்

10.   ஒருவர் போதைப் பொருள்களுக்கு முற்றிலுமாக அடிமைப்பட்டுவிட்டார் என்பதை எடுத்துக் காட்டும் நோய்கள் எவை?

மனக் குழப்பம், தலைவலி, நடுக்கம், வாந்தி, மனம் குமட்டுதல், இரத்த அழுத்தம், துரிதமாக மூச்சு விடுவது, சோர்வு, மனம் ஒருமுகப்படுத்த இயலாத நிலை, உறக்கமின்மை, உடம்புவலி

11.    பான்மசாலாவை எவ்வாறு பயன்படுத்துகின்றனர்?  

பைக்குள்ளிலிருந்து எடுத்து கையில் வைத்து நசுக்கி உதட்டினடியிலோ, நாக்கினடியிலோ வைக்கின்றனர். இதன் போதை உமிழ்நீர் வாயிலாக மிக விரைவில் உடலில் பரவுகின்றது. வாயில் புண் உண்டென்றால் இரத்தத்திலும் இதன் பகுதிகள் புகுந்து விரைவாகப் போதை ஏறிவிடுகிறது. அதிக நேரம் இதனை வாய்க்குள் வைத்திருந்தால் ஏற்படும் தீமை மிகுதியாகிவிடும்.

12.   பான்மசாலாவில் அடங்கியுள்ள நச்சுப் பொருள்கள் யாவை?

ஆர்செனிக், ஹைட்ரோ கார்பன்

13.   400 - க்கு அதிகமான பான்மசாலாக்களில் ஒரு சிலவற்றைக் கூறுக?

பான்பராக், துளசி, சம்ப்ளவைறி பாஸ்பாஸ். கணேஷ் எப்.ஐ.ஆர். சூப்பர்ஹிட்

14.   பான் மசாலாக்களில் அடங்கியுள்ள இரசாயனப் பொருள்கள் யாவை?

நிக்கல், காட்மியம், லெட், கஞ்சா எண்ணெயில் பொரித்த பாக்கு, தூக்க மாத்திரை பொடியாக்கியது, காசியர், டிடிற்றி. கண்ணாடித்தூள்

15.   பான் மசாலாக்களில் பயன்படுத்துவதன் மூலம் நாக்கில் கட்டிகள் வளரவும். வாய்க்குள் புற்றுநோய்க்கு முன்குறியாக எது தோன்றவும் செய்கின்றன?

வெண்மை நிறப்புள்ளிகள்

16.   பான்மசாலாக்கள் பயன்படுத்துபவர்களை எவ்வாறு அடையாளம் காண முடியும்?

உறக்கக் குறைவினால் உண்டாகும் சோர்வு, கறைபடிந்த பற்கள், குவிந்த கண்கள், துடிப்பு இழந்து போன கன்னங்கள், எப்பொழுதுமே மனக்கலக்கம், உதாசீனமாய் ஆடை உடுத்தும் முறை, அவ்வப்போது உமிழ்நீர் துப்புவது, திடீரென கோபம் வருவது

17.   மயக்க மருந்துகளுக்கு அடிமையானவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?

மனநலப் பிரச்சினைகளிலும், சாவுக்குரிய நோய்களிலும், தீய பண்புகளிலும், தற்கொலையிலும் நழுவி வீழ்ந்து போகின்றனர். மயக்க மருந்துகள் அளவுக்கதிகமாக உள்கொள்ளும் நபர்களின் வாழ்க்கை தனிமையிலும், கவலையிலும், மனப்போராட்டத்திலும் சென்று கொண்டிருக்கும்.

18.   மயக்க மருந்துக்கு அடிமையானவர்களுக்கு நிகழ்வதென்ன?

மனத்தடுமாற்றத்திற்கு உள்ளாகி மனநோயாளிகளாவதற்கும், பொருளாதாரப் பிரச்சினைகளில் அகப்பட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் சாத்தியக்கூறுகள் ஏராளமாகும்.

19.   மனிதனின் மனத்தையும் உடலையும் சிறுது சிறிதாக அழிக்கின்ற மயக்க மருந்துகளுக்கு அடிமையாவதற்கான காரணங்கள் என்ன?

பல தகர்ந்து போன குடும்பங்களும், உறவுகளும், தனிமைப்படுத்தப்பட்ட ஆடம்பர வாழ்க்கையும், குற்றவாளிகளோடும். அறநெறி தவறி வாழ்பவர்களோடுள்ள உறவும், அளவு கடந்த செல்வம் சேர்ப்பதும், தகவல் தொடர்புக் கருவிகளின் தாக்கமும் ஒருவரை மயக்க மருந்துகள் பயன்படுத்துவதற்கும், தொடர்ந்து அதனை ஒரு பழக்கமாக்கிக் கொள்வதற்கும் தூண்டுகின்றன.

20.   மயக்க மருந்துகள் யாவை?

அபினி (opium), மோர்பின், பிரவுண் சுகர், கோடின் கார்டினால், லூமானல், வாலியம், லாப்ரியம், கொக்கேயின், ஆம்பிற்றமார்ஸ், பெத்தடின், எல். எஸ். டி, கஞ்சா, மரிஜவானசரஸ், ஹாஷிஷ்

21.   மனித வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே போதைப் பொருள்கள் எப்பெயர்களில் அறியப்பட்டிருந்தன?

சோமபானம், சுரபானம்

22.   மனுஸ்மிருதி என்னும் நூலில் போதை பற்றிக் கூறுவது என்ன? போதையைத் தடைசெய்ய வேண்டும்

23.   புத்தமதத் துறவிகளின் பஞ்சச்சீலக் கொள்கைகளில் போதை பற்றிக் கூறுவது என்ன?

மது அருந்தக்கூடாது

24.   நான்காம் நூற்றாண்டில் சாணக்கியர் (கௌடில்யர்) இயற்றிய அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் போதை பற்றிக் கூறுவது என்ன?

மதுவகைகளின் உற்பத்திக்குக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

25.   1527ல் மொகலாயப் பேரரசரான பாபர் போதை பற்றிக் கூறுவது என்ன?

மதுபானங்களை வெறுத்து ஒதுக்கிவிடுவதாக உறுதி எடுத்துக்கொண்டார்.

26.   இந்தியாவில் வந்த ஐரோப்பியர்களை விட இந்தியர்கள் நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் மதுவைப் பயன்படுத்தாத அவர்களது வாழ்க்கைப் பழக்கம் தான் என தனது பயணக் குறிப்புகளில் குறித்துவைத்துள்ள இடைக்கால ஐரோப்பியப் பயணி யார்?

பிரயர்

27.   மது என்றால் என்ன?

மனிதனுக்குப் போதை மற்றும் போலி இன்பத்தை தரும் பானம்

28.   கண் இமைகளை அழகுபடுத்துவதற்கான ஆன்டிமணி சல்பைட்டிலிருந்து தயாரிக்கும் ஒரு வகைத் துகளை அராபிய மொழியில் எவ்வாறு அழைத்தனர்?

ஆல்கஹல்

29.   'ஆல்கஹால்' என்ற வார்த்தை எச்சொல்லிருந்து தோன்றியது?

ஆல்கஹல்

30.   மதுபானத்தின் வேதியல் கூட்டுப்பொருள்கள் யாவை?

கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன்

31.   மதுவின் இரசாயனப் பெயர் என்ன?

ஈதையில் ஆல்கஹால் (ethyl alcohol)

32.   பல்வேறு மது வகைகள் யாவை?

கள். திராட்சை ரசம் (wine), விஸ்கி, பிரான்டி, ஜின், றம். சாராயம்

33.   1956-ல் மதுபான வேட்கையை ஒரு நோயாக அறிவித்தது எது?

உலக சுகாதார அமைப்பு (WHO)

34.   உலக சுகாதார அமைப்பு (WHO) மதுபான வேட்கை பற்றிக் வரையறுப்பது என்ன?  

"மதுபானங்களில் அடைக்கலம் தேடுபவர்களுக்குக் குறிப்பிடத்தக்க உளவியல் பிரச்சனைகளும் உடல், உள்ளம் சார்ந்த ஆரோக்கியப் பிரச்சினைகளும் உருவாகின்றன. மனித உறவுகளையும். சமூகப் பொருளாதார கடமைகளையும் சரிவர நிறைவேற்ற முடிவதில்லை. இவர்களை மது நோயாளிகள் எனலாம். இவர்களுக்குத் தகுந்த சிகிட்சையளித்து குணப்படுத்த வேண்டும்".

35.   ஒருவர் எதற்காக மதுபானம் அருந்துகிறார் என்பதற்கு சமூகம் நமக்குத் தருகின்ற பலவிதமான காரணங்கள் எவை?

நண்பர்கள் மத்தியில் போலிப் பெருமையைக் காட்டிக் கொள்வதற்கும், போலித் தன்னம்பிக்கைக்காகவும். தாழ்வு மனப்பான்மை, குற்றப்பழி உணர்வு ஆகியவற்றை மறைப்பதற்கும், துக்கத்தை மறப்பதற்கும், பிறர் கவனத்தை ஈர்ப்பதற்கும், நண்பர்களை மகிழ்விப்பதற்கும், விருந்தளிப்பதற்கும், தவறான முறையில் சலுகைகளைப் பெறுவதற்கும் மது அருந்துதல் காரணமாக அமைகின்றன. மதுபானத்திற்கு ஒரு விலக்கு உள்ளதனால் சிலருக்கு அதனோடு தனிப்பட்ட ஆவல் ஏற்படவும், விலக்கினைக் கடந்து சென்று அதனைச் சுவைத்துப் பார்க்க முயற்சி மேற்கொள்ளவும், இறுதியில் அவர்கள் மதுபானப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடவும் செய்கின்றனர். மற்றுமொரு காரணம், பிறரைப் பின்பற்ற வேண்டுமென்ற மிதமிஞ்சிய ஆசையும், செய்தி மற்றும் ஒலி, ஒளி ஊடகங்களின் தாக்கமும் ஆகும் மதுபானங்களைக் குறிக்கும் விளம்பரங்களும், மதுவின் போதையில் திளைக்கும் கதாபாத்திரங்களும், போதையைப் போற்றிப் புகழ்கின்ற இலக்கியங்களும் மனித மனங்களை மதுபானத்திற்கே கொண்டு சென்றுவிடும். நண்பர்களின் செல்வாக்கும். சமூகத்தில் மதுபானத்திற்குக் கிடைக்கும் வரவேற்பும் மதுபானங்கள் சுலபமாகக் கிடைக்கும் வாய்ப்பும் மனிதனை மதுபானப் பழக்கத்திற்குக் கொண்டு செல்லும் கூறுகளேயாகும். மேலும், மனப்போராட்டங்கள், ஆளுமைத் தன்மையில் காணப்படும் குறைபாடுகள். தனிமைப்படும் நிலை, அன்பைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பற்றநிலை ஆகியவையெல்லாம் ஒருவேளை ஒருவனை மதுபானப் பழக்கத்திற்குக் கொண்டு சென்றுவிடலாம்.

36.   முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான், இறுதியில் மது மனிதனைக் குடிக்கிறது"

37.   மதுவின் விளைவுகள் யாவை?

உடம்பிலும், உள்ளத்திலும் நோய்க்கும் அமைதியின்மைக்கும் விதைகளை விதைக்கின்றது. அழிவிற்கானப் பாதைக்குச் செல்லும் பயணத்தில் மதுபானிகளின் உடம்பு நாளுக்கு நாள் நலிந்து போகும். நாக்கின் சுவையறிவதற்கான திறன் இழந்துவிடும். வயிற்றில் புண் உண்டாகும். கணையத்தில் வீக்கம் ஏற்படும். இரத்தத்தில் சிவப்பணுக்களின் குறைவு ஏற்பட்டு உடம்பு வெளிறிப் போய்விடும். வாய், தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை ஆகியவற்றில் புற்று நோய் ஏற்படும். உயர்ந்த இரத்த அழுத்தம் உண்டாகும். இதயம் நின்று போகும் நிலைமையும் (Heart attack) ஏற்பட்டுவிடும். நரம்புகளுக்குத் தளர்ச்சி, பாலுறவுக்கு வலிமையின்மை, உறக்கமின்மை ஆகியவை உண்டாகும். மேலும் மதுபானம் ஆஸ்துமா, காசநோய், இதய நோய், நீரிழிவு நோய் போன்ற மாறா நோய்களுக்கும் வழிவகுத்துவிடும். மிதமிஞ்சிய மதுபானம் மிகுந்த கெடுதி விளைவிப்பது கல்லீரல், மூளை, சிறுநீரகங்கள், இதயம் ஆகியவற்றையாகும். மது மன நோய்களுக்கும், சோர்வு மனப்பான்மைக்கும் காரணமாகின்றது. சந்தேக நோயும். நம்பிக்கையின்மையும் மதுபானத்தின் விளைவுகளாகும்.

38.   மது தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் உருவாக்கும் தீமைகள் எவை?  

குடும்பக்கலகம், மணமுறிவு, வறுமை, கடன்தொல்லை, மாறா நோய்கள், சாவுகள், வன்முறைகள், கொலைகள், தற்கொலைகள், திருட்டு, கொள்ளையடித்தல், கடத்திச் செல்லுதல், பாலியல் பலாத்காரம், சாலைவிபத்துகள், காவல்துறை மற்றும் நீதிமன்றவழக்குகள், மதுவுக்கு அடிமையானவர்கள் வாழ்க்கையையும், குடும்பத்தையும், சமூகத்தையும், அன்புறவுகளையும் தகர்த்து விடுகின்றனர். பொறுப்புகளையும், சட்டங்களையும், கடமைகளையும். நன்மைகளையும் மறந்துவிடுகின்றனர்.

39.   போதை மேலுள்ள வேட்கை என்பது உடல் உள்ளம் சார்பான ஒரு நோய் மட்டுமல்ல, மனித வாழ்க்கையின் அனைத்துத் தலங்களையும் பாதித்து விடுகின்ற குடும்பத் தொடர்பு கொண்ட நோய் ஆகும்?  

ஆன்மீக, சமூக நோய்

40.   மதுவேட்கை கொண்டவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள் எவை?

1. மது வேட்கை என்பது நோயின் அறிகுறியல்ல; வியாதியே தான்.

2.  மதுவைக் குடிக்கக் குடிக்க மதுவேட்கை அதிகப்படும்.

3. ஒருவன் மதுவேட்கைக்கு அடிமைப்பட்டால் நிரந்தரமாக அதற்கு அடிமையாகி விடுவான்.

4. மது ஒரு சாகடிக்கும் வியாதி. மதுகுடித்துக் கல்லீரல் பாதிக்கப்பட்டால் குணப்படுத்த இயலாது.

5. மது வேட்கை சிகிட்சை பெறவேண்டிய வியாதியாகும். சிகிட்சை வழியாக அதனைக் கட்டுப்படுத்தலாம். எனினும் மீண்டும் அதனைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது.

41.   அமைதியான கொலையாளி எனப்படுவது எது?

புகையிலை

42.   புகையிலைப் பொருள்கள் எரியும் போது உண்டாகும் புகையில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் எத்தனை இரசாயனப் பொருள்கள் உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன?

சுமார் நாலாயிரம்

43.   புகையிலைப் பொருள்களில் மிக முக்கியமான  இரசாயனப் பொருள்கள்  எவை?

நிக்கோட்டின், கார்பன் மோனாக்சைடு, டார்

44.   இந்நாள் வரை அறிமுகமான மிகவும் நஞ்சுடைய பொருள் எது?

நிக்கோட்டின்

45.   அறுபது மில்லிகிராம் நிக்கோட்டின் ஒன்றாகச் சாப்பிட்டால் மனுதனுக்கு நிகழ்வது என்ன?

இறந்துவிடுவார்

46.   இதயத்தின் மற்றும் உடம்பின் பிற பகுதிகளின் இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்யும் நச்சுப் பொருள் எது?

நிக்கோட்டின்

47.   நிக்கோட்டினால் ஏற்படும் பாதிப்புகள் எவை?

இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும். இதயத்துடிப்பை ஒழுங்கற்றதாக்கிவிடும், குமட்டல், வாந்தி, மூச்சுத்திணறல், ஜீரணக் குறைவு, குடல்புண் ஆகியவை உருவாகும்

48.   இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினில் கலந்து இரத்தத்திற்கு ஆக்சிஜனைச் சுமந்து செல்வதற்கான வலுவைக் குறைத்து விடும் புகையிலையில் கலந்திருக்கும் நச்சுப் பொருள் எது?  

கார்பன் மோனாக்சைடு

49.   மூச்சுக்குழாய், நுரையீரல் ஆகியவற்றில் சாவுக்கேதுவான வியாதிகளை ஏற்படுத்துகின்ற புகையிலையிலுள்ள நச்சுப்பொருள் எது?

டார்

50.   தூசிகளைச் சுவாசக்குழாய்களிலிருந்துத் துடைத்து மாற்றுகின்ற நார்ப் பகுதிகளை டார் வலுவிழக்கச் செய்வதனால் தூசிகளும் டாறும் இணைந்து எந்நோய் ஏற்படக்  காரணமாகிறது?

புற்று நோய்

51.   புகைபிடித்தல் உடம்பின் எல்லா உறுப்புகளுக்கும் தீங்கிழைத்துவிடுமெனினும் மிகக் கடுமையான பாதிப்பை எந்த உறுப்புக்கு ஏற்படுத்திவிடுகின்றது?

நுரையீரலுக்கு

52.   புகைப்பிடிப்பவர்களில் அதிகமாய்க் காணப்படுகின்ற புற்று நோய் எது?

நுரையீரல் புற்று நோய்

53.   புகை பிடிப்பவர்களுக்கு உருவாக வாய்ப்புள்ள நோய்கள் எவை?

மாரடைப்புக்கான சாத்தியக்கூறு மிகவும் கூடுதலாகும். புகைபிடிப்பதனால் உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள் ஆகியவற்றில் புண், புற்றுநோய் போன்றவை ஏற்படவும், ஆஸ்துமா, காசநோய், நீர்க்கெட்டு (நிமோனியா), மலட்டுத்தன்மை

54.   புகைபிடிப்பவர்கள் மூலமாகக் குற்றமற்றவர்களான மற்று புகைபிடிக்காதவர்களின் நுரையீரலில் சென்றுவிடுகிறது. இதனை எவ்வாறழைக்கின்றனர்?

பாசீவ் ஸ்மோக்கிங் (passive smoking)

55.   போதைப் பொருள்களின் பயன்பாடு மூலம் உடம்பைக் கெடுத்து விடுவதும், ஆன்மாவை மாசுப்படுத்துவதும் யாருக்கு எதிரான தீமையேயாகும்?

ஆன்மாவுக்கு

56.   போதைப் பொருள்களின் உபயோகம் எதற்கு இணையானதாகும்?

 தற்கொலைக்கு

57.   தற்கொலை செய்பவர் ஒரு நிமிடத்திற்குள் தனது உயிரை அழித்துவிடுகிறார். ஆனால் போதைப் பொருள்கள் உபயோகிப்பவர் தனது உயிரை அறிந்து கொண்டே எவ்வாறு அழித்துவிடுகிறார்?

சிறுகச் சிறுக

58.   "நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. ஆகவே மற்றவர்களைப்போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.  உறங்குபவர் இரவில்தான் உறங்குவர்; குடிவெறியர் இரவில்தான் குடிபோதையில் இருப்பர். ஆனால் பகலைச் சார்ந்த நாம் அறிவுத்தெளிவோடு இருப்போம். நம்பிக்கையையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புபெறுவோம் என்னும் எதிர்நோக்கைத் தலைச்சீராவாகவும் அணிந்துகொள்வோம்.” என்ற இறைவார்த்தை எங்குள்ளது?

1 தெசலோனிக்கர் 5:5 – 8

59.   "இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது. நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்என்ற இறைவார்த்தை எங்குள்ளது?

யோவான் 4 : 13 – 14

60.   "கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார். அப்பொழுது அவர் கொண்டிருந்த மனநிலையை நீங்களும் படைக்கலமாகப் பூண்டு கொள்ளுங்கள். ஊனுடலில் துன்புறுவோர் பாவத்தை விட்டுவிடுகின்றனர். அவர்கள் தங்கள் ஊனுடலில் வாழ்வின் எஞ்சிய காலமெல்லாம் மனிதருடைய தீயநாட்டங்களுக்கு இசையாமல் கடவுளின் திருவுளப்படி வாழ்கின்றார்கள். பிறஇனத்தினர் செய்ய விரும்புவதையெல்லாம் நீங்கள் கடந்த காலத்தில் செய்து வந்தது போதும். அப்பொழுது நீங்கள் காமவெறி. இச்சை, மதுமயக்கம், களியாட்டம், குடிவெறி, வெறுப்புக்குரிய சிலைவழிபாடு ஆகியவற்றில் காலத்தைக் கழித்தீர்கள். இப்போதோ நீங்கள் அவர்களோடு சேர்ந்து அத்தகைய தாறுமாறான வழிகளில் நடப்பதில்லை. இதை அவர்கள் கண்டு வியப்படைகிறார்கள். இதனால் உங்களைப் பழிக்கிறார்கள். ஆனால், உயிருள்ளோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பளிக்க ஆயத்தமாய் இருப்பவருக்கு அவர்கள் கணக்குக் கொடுப்பார்கள். இறந்தோர் ஊனுடலில் மனிதருக்குரிய தீர்ப்புப்பெறுவர். ஆவியில் கடவுளுக்குரிய வாழ்வு பெறுவர். இதற்காகவே இறந்தோருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.” என்ற இறைவார்த்தை எங்குள்ளது?

1 பேதுரு 4:1-6

61.   மதுவிலிருந்து தற்காலிக விடுதலை பெற்றவர்களை ஏற்றுக்கொள்ளவும், அங்கீகரிக்கவும் செய்துவரும் தோழமை அமைப்பு எது?

ஆல்கஹாலிக் அநாநிமஸ் (A.A)

62.   “ஆல்கஹாலிக் அநாநிமஸ்" (A.A) 1935 -ல் எங்கே நிறுவப்பட்டது?

அமெரிக்காவில்

63.   மதுவிற்கெதிராக நீதிமொழிகள் 23:21 ல் கூறுவதென்ன?

குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்.

64.   மதுவிற்கெதிராக நீதிமொழிகள் 23: 29-30 ல் கூறுவதென்ன?

மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்கள் துன்பக் கதறல், துயரக்கண்ணீர். ஓயாத சண்டை ஒழியாத புலம்பல், காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள், கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள் இவை அனைத்தையும் அனுபவிப்பர்.

65.   மதுவிற்கெதிராக நீதிமொழிகள் 23: 33 ல் கூறுவதென்ன?

மதுபானியின் கண்கள் என்னென்னவோ வகையான காட்சிகளைக் காணும்; அவனது உள்ளத்திலிருந்து தாறுமாறான சொற்கள் வெளிப்படும்.

66.   மதுவிற்கெதிராக நீதிமொழிகள் 20 : 1 ல் கூறுவதென்ன?

திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்; போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்.

67.   மதுவிற்கெதிராக சீராக் 19: 1 ல் கூறுவதென்ன?

குடிகாரனான தொழிலாளர்கள் செல்வந்தர்களாக முடியாது.

68.   மதுவிற்கெதிராக உரோமையர் 13 : 13 ல் கூறுவதென்ன?

பகலில் நடப்பது போல மதிப்போடு நடந்து கொள்வோமாக களியாட்டம். குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச் சச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக.

69.   மதுவிற்கெதிராக 1 கொரிந்தியர் 5:11 ல் கூறுவதென்ன?

உங்கள் நடுவில் 'சகோதரர்' அல்லது 'சகோதரி' என்னும் பெயரை வைத்துக் கொண்டு குடிவெறியராக இருப்பவர்களோடு எந்த உறவும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

70.   மதுவிற்கெதிராக தீத்து 1:7 ல் கூறுவதென்ன?

சபைக் கண்காணிப்பாளர்கள் கடவுள் பணியில் பொறுப்பாளர்களாய் இருப்பதால் குடிவெறி இவர்களிடம் இருக்கக்கூடாது.

71.   மதுவிற்கெதிராக லேவியர் 10:8-9 ல் கூறுவதென்ன?

ஆண்டவர் ஆரோனிடம் கூறியது : நீரும் உம்மோடு உம் புதல்வர்களும் சாகாதிருக்க வேண்டுமெனில், நீங்கள் சந்திப்புக் கூடாரத்திற்குள் நுழையும் போது திராட்சை இரசத்தையோ. மதுவையோ குடிக்க வேண்டாம். இது உங்கள் தலைமுறைதோறும் மாறாத நியமமாக விளங்கும்

72.   மதுவிற்கெதிராக எசாயா 5 : 22 ல் கூறுவதென்ன?

திராட்சை இரசம் குடிப்பதில் தீரர்களாகவும் மதுபானம் கலப்பதில் திறமைசாலிகளாகவும் இருப்பவர்களுக்கு ஐயோ கேடு!

73.   மதுவிற்கெதிராக லூக்கா 21:34 ல் கூறுவதென்ன?

உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்.

74.   மதுவிற்கெதிராக 1 கொரிந்தியர் 6:10 ல் கூறுவதென்ன?

திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும். (எபேசியர் 5:18) குடிவெறியர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை.

75.   மதுவிற்கெதிராக திருவெளிப்பாடு 18 : 3 ல் கூறுவதென்ன?

மதுவில் போதையும். காமவெறியும் அடங்கியுள்ளது.

76.   மதுவிற்கெதிராக மகாபாரதத்தில் கூறுவதென்ன?

மதுபானம் தற்கொலைக்கு இணையான பாவமாகும்.

77.   மதுபானம் அனைத்து பாவங்களுடையவும் திறவுகோல் ஆகும். மனிதனை மிருகமாக மாற்றிவிடும் சாவுக்குரிய பொருள்தான் மது. இவ்வாறு எந்நூல் கூறுகின்றது?

குரான்

78.   மதுவிலும் சூதாட்டத்திலும் பெரும் தீமைகள் உள்ளன. (2 : 219) இவ்வாறு எந்நூல் கூறுகின்றது?

குரான்

79.   மதுவும். சூதாட்டமும், சிலைவழிபாடும். குறிசொல்வதும் அலகைக்குரிய இழிவான செயல்களாகும். அதனால் நீங்கள் அவற்றை விட்டுவிட வேண்டும். ஏனெனில் இது உங்கள் வெற்றிக்காகவே கூறப்படுகிறது. (5:90) இவ்வாறு எந்நூல் கூறுகின்றது?

குரான்

80.   “நான் ஒரு மணிநேரம் இந்தியாவின் சர்வாதிகாரியானால் முதலில் செய்வது, இந்தியாவிலுள்ள மதுப்பானக் கடைகள் முழுவதையும் மூடிவிடுவது தான்” என்றவர் யார்?  

மகாத்மா காந்தி.

81.   “மதுவிலிருந்து கிடைக்கும் வரி (Tax) பாவத்தின் கூலியேயாகும்.” என்றவர் யார்?

மகாத்மா காந்தி.

82.   “மது நஞ்சாகும்; அதை உற்பத்தி செய்யக்கூடாது, குடிக்கக்கூடாது, பிறருக்குக் கொடுக்கக்கூடாது” என்றவர் யார்?

ஸ்ரீ  நாராயணகுரு.

83.   “மதுபானம் தெரிந்து கொண்டே செய்யும் தற்கொலையாகும்.” என்றவர் யார்?

கால் மெனிஞ்சர்.

84.   “மதுபானம் ஒவ்வொரு முறையும் தற்காலிகமாகத் தற்கொலை செய்வதற்குச் சமமாகும்”  என்றவர் யார்?

பெர்ட்ராண்ட் றசல்

85.   “மது ஒருவரை அதிகமாக மகிழ்ச்சியடையச் செய்யும். ஆனால், அது ஒரு போதும் அவரைப் பிறருக்கு ஏற்புடையவராக்காது”. என்றவர் யார்?

சாமுவேல் ஜாண்சன்.

86.   “மதுவில் ஒளிந்திருக்கும் துர்பூதமே. உனக்கு வேறு பெயர் எதுவும் இல்லாவிட்டால் நான் உன்னை பேய் என அழைப்பேன்.” என்றவர் யார்?

ஷேக்ஸ்பியர்

87.   “மதுபான கலாச்சாரத்தின் பின்விளைவே சாவு கலாச்சாரம்” என்றவர் யார்?

சுகுமார் அழிக்கோடு (மலையாள இலக்கியவாதி.

88.   'ரம்' அதன் நிலையில் நல்லது தான். ஆனால், நரகம் தான் அதன் இறுதியான விளைவு” என்றவர் யார்?

ஜாண் பில்லிங்ஸ்

89.   முகம்மது நபி கூறும் அல்லா சபிக்கின்ற பத்து பிரிவினர்கள் யாவர்?

1.        மது,

2.        மது அருந்துபவர்,

3.        மதுகுடிக்கத் தூண்டுபவர்,

4.        மதுவிற்பவர்,

5.        மதுவாங்குபவர்,

6.        மதுவை உற்பத்தி செய்பவரை,

7.        அதற்கு உதவி செய்பவர்கள்,

8.        மதுவைச் சுமந்து செல்பவர்கள்,

9.        யாருக்காகச் சுமந்து செல்கிறார்களோ அவர்களை,

10.   மதுவின் லாபத்தைச் சம்பாதிப்பவர்கள்

 

 

 

பாடம் : 8

எதிர்நோக்கில் வளர

 

1.        கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது எதற்கான வளர்ச்சிக்குக் கூடுதல் வாய்ப்புள்ள சூழ்நிலைகள் இக்காலத்தில் உள்ளன?

எதிர்நோக்கு

2.        மனிதச் சுதந்திரமும் மக்களாட்சியும் வலுவடைந்துள்ளன எனக்கூறிக்கொள்ளும் நேரத்தில் புதிய வடிவிலும் உருவிலும் உருமாற்றம் பெற்ற எதிர் தீமைகள் எவை?

அடிமைத்தனமும், சுரண்டுதலும், சுதந்திரமின்மையும்

3.        உலகநாடுகளின் ஐக்கியம் இன்று வலுவடைந்திருப்பினும் இன்றைய தீமைகள் என்னென்ன?

போர் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளும் பயமுறுத்தல்களும்

4.        மனிதனை எப்போதுமே முன்னோக்கிச் செல்ல தூண்டுவது எது?  

எதிர்நோக்கு

5.        வாழ்க்கைப்பயணத்தில் ஒருவருக்குச் சரியான வழியைக் காட்டி வாழத்தூண்டுவது எது?

எதிர்நோக்கு

6.        எதிர்நோக்கு பற்றி திருத்தந்தை 15-ம்பெனடிக்ட் கூறுவது என்ன?

ஒருவன் எதிர்பார்ப்புடன் காத்திருக்க இயலும் போதுதான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எனக்கூற முடியும். அப்போது தான் எதிர்நோக்கு எனப்படும் விளக்கு அவரது இதயத்தில் ஒளிர்கின்றது. ஒருவர் எதிர்பார்ப்பு மூலமாக தன்னைத் தானாகவே பகுத்தறிந்து கொள்கிறார். நமது அறநெறி சார்ந்ததும் ஆன்மீகம் சார்ந்ததுமான நிலையை புரிந்து கொள்வது நாம் எவ்வாறு எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம் என்பதைக் கருத்தில் கொண்டேயாகும்"

7.        நான் மிக அதிகமாக விரும்புகின்ற நம்பிக்கையானது எதிர்நோக்கு என்னும் புண்ணியமாகும்என்ற பிரஞ்சுக்கவிஞர் யார்?

சார்லஸ் பெகூய்

8.        எதிர்நோக்கு என்பது என்ன?

எதிர்காலத்தை வெளிப்படுத்துவது, ஒரு காத்திருப்பு

9.        எதிர்நோக்கின் குறிக்கோள் என்ன?

எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் நபர், கிடைப்பதற்கு வாய்ப்புள்ள பொருள், அமையவிருக்கும் நிலை

10.   எதிர்பார்ப்பு அல்லது எதிர்நோக்கு என்பது எதற்காக காத்திருப்பது ஆகும்?

நன்மைக்கு

11.   "ஆண்டவரே, எங்களை உமக்காகவே படைத்தீர்; உம்மிடம் வந்தடைவது வரை எங்கள் ஆன்மா கலக்கமுடையதாகவே இருக்கும்” என வேண்டியவர் யார்?

புனித அகுஸ்தீனார்

12.   எதிர்நோக்கின் இறுதிக் குறிக்கோள் என்ன?

கடவுளை அடைவது

13.   எதிர்நோக்கின் உறைவிடம் யார்?  

கடவுள்

14.   எதிர்நோக்கு என்பது  நன்மையே வடிவான யாருக்காக  காத்திருப்பதாகும்?  

கடவுளுக்காக

15.   நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய இறையியல் நற்பண்புகளின் தோற்றமும், குறிக்கோளும், கருத்தும் யார்?

மூவொரு கடவுள்

16.   "தெய்வீகப்புண்ணியங்கள் கிறிஸ்தவ அறநெறிச்செயல்களுக்கு அடிப்படையாகவும், சிறப்புப்பண்புகளாகவும் அமைகின்றன. தெய்வீகப்புண்ணியங்கள் அனைத்து அறநெறிகளுக்கும் உயிரூட்டுகின்றன. அவை இறைமக்களின் ஆன்மாவில் ஆண்டவராகவே ஏவப்பட்டவையாகும். அவர்கள் இறைமக்கள் என்ற நிலையில் பணியாற்றுவதற்கும், நிலைவாழ்வுக்கான தகுதிபெறும் பொருட்டும். கடவுள் இவ்வாறு செய்தார்" எனக்கூறும் நூல் எது?

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நூல், எண்: 1813

17.   "கிறிஸ்துவின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்தும் நம்முடைய வல்லமையில் சார்ந்து நிற்காமல் தூய ஆவியின் அருள் கொடைகளில் அடைக்கலம் தேடியும் நாம் அடையப்போகும் நற்பேறு என்னும் நிலையில் விண்ணக அருளுக்காகவும் நிலைவாழ்வுக்காகவும் நாம் ஆவல் கொண்டிருப்பது எந்தப் புண்ணியத்தாலோ, அதுவே எதிர் நோக்கு என்னும் தெய்வீகப்புண்ணியம்" எனக் கூறும் நூல் எது?

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நூல், எண்: 1817

18.   கடவுள் ஒவ்வொரு மனிதருடைய இதயத்திலும் வைத்திருக்கின்ற பேரின்பத்திற்கான ஆவலுக்கு எந்த புண்ணியம் பதில் தருகின்றது?

எதிர்நோக்கு

19.   மனிதரின் செயல்களைத் தூண்டிவிடுகின்ற எதிர்பார்ப்புகளை உள்வாங்கி அவர்களை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கின்றது எது?

எதிர்நோக்கு

20.   ஒருவரைத் தன்னலத்திலிருந்து விடுவித்து பேறுபெற்ற நிலைக்கு அழைத்துச் செல்வது எது?

எதிர்நோக்கின் தூண்டுதல்

21.   இஸ்ரயேல் மக்களின் எதிர்பார்ப்பிற்கு அடிப்படையாய் அமைந்தன எவை?

யாவே கடவுளின் வாக்குறுதிகள்

22.   அநேக தெய்வங்களை வணங்கியிருந்த மக்கள் கூட்டத்தினரிடையேயிருந்து ஆபிரகாமைக் கடவுள் அழைத்து கடவுள் தன்னை எவ்வாறு வெளிப்படுத்தினார்?

தாம் வாக்குறுதிகளின் ஆண்டவர் என்பதனை

23.   "உன் நாட்டிலிருந்தும், உன் இனத்தவரிடமிருந்தும், உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்; உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன்; உன்பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்......... உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசிபெறும்" என்றவர் யார்?

கடவுள் ஆபிரகாமிடம்

24.   ஆபிரகாமின் வழிமரபினருக்கு கடவுளின் வாக்குறுதி என்ன?

ஆபிரகாமின் வழித்தோன்றல்கள் மிகப்பெரும் மக்களினமாக உருவெடுக்கும் என்பதும், அவர்களுக்கு ஏராளமான நற்பேறுகள் வழங்கப்படும் என்பதும்.

25.   கடவுள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்பையும் எதிர்நோக்கையும் வழங்குவதால் கடவுளின் பெயர் என்ன?

நம்பிக்கைக்குரியவர்

26.   இஸ்ரயேல் மக்களின் வரலாற்றில் நெருக்கடி வேளைகளிலெல்லாம் அவர்களை முன்னோக்கி அழைத்துச் சென்றது எது?

யாவே கடவுளின் மீதுள்ள எதிர்நோக்கு

27.   கடவுள் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குறுதி யார் வாயிலாக நிறைவேறியது?

நாசரேத்து இயேசு என்னும் மெசியா வாயிலாக

28.   இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்வோர் அனைவரும் ஆபிரகாமின் வழித் தோன்றல்களே எனவும். அவர்கள் கடவுளின் ஆவியைப் பெற்றுக்கொண்டவர்களே எனவும், கடவுளின் மக்கள் எனவும் தெளிவுபடுத்தியவர் யார்?

புனித பவுலடியார்

29.   இறையாட்சி நிகழ்காலத்திலேயே நிறைவேறுகின்ற உண்மை என்றும், அதனுடைய நிறைவான உண்மைநிலையை இறப்புக்குப் பின் மட்டுமே அடையமுடியும் என்றும் அதுவரையிலும் நாம் எதிர்நோக்கிலேயே வாழவேண்டும் என்று கற்பித்தவர் யார்?

புனித பவுலடியார்

30.   கடவுளின் வாக்குறுதியும் மனிதனின் எதிர்நோக்கும் யாரிடம் நிறைவுபெற்றது?

இயேசுகிறிஸ்துவில்

31.   எதிர்நோக்கு நிறைந்த பயணம் மேற்கொள்ளும் இறைமக்கள் கூட்டத்திற்குப் பெயர் என்ன?

திருச்சபை

32.   தேனும், பாலும் பாய்ந்தோடுகின்ற உண்மையான கானான் தேசம் என்பது இயேசு கிறிஸ்து பறைசாற்றிய எதுவாகும்?

விண்ணக அரசு அல்லது இறையரசு

33.   மானிடரின் எதிர்நோக்கின் முதன்மையும் இறுதியுமான குறிக்கோள் என புதிய ஏற்பாடு நமக்குக் கற்பிக்கின்றது என்ன?

விண்ணக அரசு

34.   நம்பிக்கை, அன்பு ஆகிய இறையியல் நற்பண்புகளுடன் தொடர்பு கொண்டதனால், எதிர்நோக்குடன் வாழ முதலாவது வழி எது?

இறைநம்பிக்கையில் வளர்தல்

35.   இறைநம்பிக்கையில் வளர்ச்சி பெறுவதற்கான வழி எது?

கடவுளைக் குறித்த ஆழமான அறிவிலும் இறையனுபவத்திலும் வாழ்வது

36.   ஒரு நபரின் கடவுள் மீதுள்ள நம்பிக்கை கடவுளோடுள்ள தனிப்பட்ட எத்தகைய உறவாக. வளரவேண்டும்?

அன்புறவாக

37.   கடவுளோடுள்ள அன்புறவின் வாயிலாக நாம் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கை நம்மை எதற்கு அழைத்துச் செல்கின்றது?

எதிர் நோக்கு

38.   நம்பிக்கையும் எதிர்நோக்கும் எவ்வாறு வளர்கிறது?

இறையன்பாகவும் பிறரன்பாகவும்

39.   நான் எதிர்பார்க்கும் நலன் வருவது கடவுளிடமிருந்தே. உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே நான் சிறிதும் அசைவுறேன்" என்ற விவிலியப்பகுதி எது?

திருப்பாடல் 62: 5-6

40.   “ஆகவே எதை உண்போம்? எதைக்குடிப்போம்? எதை அணிவோம் எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர். உங்களுக்கு இவையாவும் தேவை என விண்ணகத்தந்தைக்குத் தெரியும், ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்”. என்ற இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

மத்தேயு 6 : 31 – 33

41.   "மனித அறிவினாலோ இயல்பாகவே நன்மையாக முடியும் என்ற நம்பிக்கையினாலோ அல்ல நான் ஓர் எதிர்நோக்கும் மனிதராயிருப்பதற்குக் காரணம். மாறாக, எனது ஆண்டவர் எனது வாழ்விலும், எனது திருச்சபையிலும், எனது உலகிலும் செயல்பாட்டில் மூழ்கியிருப்பதனாலேயேயாகும்" என்றவர் யார்?

கர்தினால் ஜோசப் சூனன்ஸ்

42.   திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை ஆகிய புகுமுக அருளடையாளங்கள் வாயிலாக ஒவ்வொருவரும் யாருடைய பிரசன்னத்தை அனுபவிக்கிறார்கள்?

தூயஆவியின்

43.   ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை, எதிர்நோக்கு. அன்பு இவற்றில் வளர இறைஅருளைக் கொடையாக அளிப்பவர் யார்?

தூயஆவியின் பிரசன்னம்

44.   எதிர் நோக்கில் வளர நாம் யாரில் வளர வேண்டும்?

தூய ஆவியில்

45.   ஒருவர் யாரால் வளர்ச்சி பெறும் போது அவரிடம் நம்பிக்கையும், எதிர்நோக்கும், அன்பும் வலுவடையும்?

தூயஆவியால்

46.   ஒருவர் பாவத்தினால் தூயஆவியை இழந்துவிடும் போது அஃதுடன் எவற்றை இழந்து விடுகிறார்?

நம்பிக்கை, எதிர்நோக்கு. அன்பு.

47.   பாவம் மூலமாக தூய ஆவியின் பிரசன்னத்தை இழந்துவிட்ட மனிதனுக்கு மீண்டும் தூய ஆவியைச் சம்பாதித்துக் கொள்ள இயேசு கற்பிக்கும் வழிமுறைகள் யாவை?  

ஒப்புரவு, மனமாற்றம்

48.   "இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்ற இறைவார்த்தைப் பகுதி எங்குள்ளது?

மாற்கு 1: 15

49.   நூறு ஆடுகள் இருக்கும் போது அவற்றுள் ஒன்று காணாமற்போனால் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலைவனத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைத் தேடிச் சென்று, அதைக் கண்டுபிடிக்கும் போது மகிழ்ச்சி அடையும் ஆயன், குறித்த இறைவார்த்தைப் பகுதி எங்குள்ளது?

லூக்கா 15 : 1 – 7

50.   பத்து வெள்ளி நாணயங்களுள் ஒன்று காணாமற்போன போது அதைத் தேடிக் கண்டுபிடித்து அண்டை வீட்டாரையும் அழைத்து மகிழ்வுறும் பெண், குறித்த இறைவார்த்தைப் பகுதி எங்குள்ளது?

லூக்கா 15 : 8 – 10

51.   ஒரு தந்தையின் இருபுதல்வர்களுள் இளையவர் வீடுவிட்டுத் தொலை நாட்டிற்குப் போய் வறுமையில் வாடித் துன்புற்றபின் தவற்றினை உணர்ந்து தன் தந்தையிடம் திரும்பி வரும் போது மிகவும் பரிவு கொண்டு மகிழ்ச்சியோடு மகனை அரவணைத்துக் கொள்ளும் தந்தை குறித்த என்ற இறைவார்த்தைப் பகுதி எங்குள்ளது?

லூக்கா 15:11-32

52.   பாவம் வழியாகக் கடவுளிடமிருந்து அகன்று, தூய ஆவியையும் எதிர் நோக்கையும் இழந்துபோன ஒருவர் பாவத்தைக் நினைத்து மனம் வருந்தவும் மனமாற்றத்தின் வாயிலாக தூய ஆவியை சம்பாதிக்கவும் எதிர்நோக்கில் வாழவும் இயலும் என்று கற்பிப்பது எது?

திருவிவிலியம்

53.   தூய ஆவியையும், இறைப்பிரசன்னத்தையும் இழந்து, விலங்கின இயல்பினராகி எவருமே அழிந்து போகும் நிலைக்கு ஆளாகக் கூடாது எனவும். அவ்வாறு எவராவது அந்நிலைக்கு ஆளானால் ஒப்புரவின் அருள் அடையாளமான பாவசங்கீர்த்தனம் வாயிலாகப் பாவங்களை அறிக்கையிட்டு கடவுளோடு ஒப்புரவாகி, தெய்வீக மனிதனாக வாழ்வதற்கு இயலும் எனவும் தெளிவாகக் கற்பிப்பது எது?

திருச்சபை

54.   எதிர்நோக்கு நம்மை அன்பு செய்து பாதுகாத்து வருகின்ற யாரிடம் அழைத்துச் செல்கின்றது?

கடவுளிடம்

55.   நாம் விரும்பும் மகிழ்ச்சியையும் நற்பேறுகளையும் தருவார் என்பதாக அல்ல. மாறாக, அன்பும், பாதுகாப்பும், பரிவும், வாழ்வும் நமக்கு நன்மை பயக்கும் அனைத்தையும் தந்து நம்மை எதிர்நோக்கில் வழிநடத்துகின்றவர் யார்?  

கடவுள்

56.   கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்என்ற விவிலியப்பகுதி எது?

உரோமையர் 8 : 28

57.   எதிர்பார்ப்புக்கு இழப்பு ஏற்படும் அளவுக்குக் கடும் சோதனை ஏற்படும் போது ஒரு தாயின் மடியில் பாதுகாப்பாயிருக்கும் குழந்தையைப் போன்று கடவுளின் திருமுன்னிலையில் அமர்ந்திருப்பதற்கு நமக்கு நம்பிக்கை தருவது தான் எதிர்நோக்கு. மக்களே எக்காலத்திலும் கடவுளையே நம்புங்கள், அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்; கடவுள் நமக்கு அடைக்கலம்என்ற விவிலியப்பகுதி எது?

திருப்பாடல்கள் 62:8

58.   யார் ஏமாற்றத்திற்குள்ளாக மாட்டார்கள்?

இறைநம்பிக்கையும், எதிர்நோக்கும் உள்ளவர்கள்

59.   சமூகத்தில் தீமையும், அநீதியும், அமைதியின்மையும், கொலையும், கொள்ளையும், பெண்களுக்கெதிரான தாக்குதலும் பெருகி வருவதன் காரணம் என்ன?

மதம் கூறும் நல்லொழுக்கங்களுக்கேற்ப மனிதன் வாழாமல் மனிதனிடமுள்ள தெய்வீகச் சாயலைத் தவறவிட்டு விலங்கினங்களைப் போன்று மிகவும் கீழ்த்தரமாக வாழ்வதனாலேயே ஆகும்.

60.   தோல்விகளை எதன் படிகளாகக் கண்டு எப்போதும் எதிர்நோக்கில் வாழ முயல்வோம்?

வெற்றிக்கான

61.   நமது முதன்மையும், இறுதியுமான எதிர்நோக்கு எது?

நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் ஆண்டவரிடத்தில் இறப்பிற்குப் பின் சென்றடைவது

 

பாடம்: 9

திருத்தூதர் பவுல் கிறிஸ்தவர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டி

 

1.        "இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் "(கலாத்தியர் 2:20) என்று மொழிந்தவர் யார்?

புனித பவுல்

2.        புனித பவுல் பிறந்து இரண்டாயிரம் ஆண்டு நிறைவடைந்ததன் புனித பவுலின் ஜூபிலி ஆண்டாக அகில உலகத் திருச்சபை எந்த ஆண்டு கொண்டாடியது?

2009-ஆம் ஆண்டு

3.        திருச்சபை வரலாற்றில் கடவுள் திருச்சபைக்குத் தந்த மிகப்பெரும் நன்கொடை எனப்படுபவர் யார்?

புனித பவுல்

4.        இயேசு கிறிஸ்து கடவுளும் மனிதனும் என்னும் நிலையில்  மறைபொருளாயிருக்கிறார் எனில் புனித பவுல் மனிதர் மற்றும் கிறிஸ்தவர் என்னும் நிலைகளில் எப்படிப்பட்டவர் ஆவார்?

மறைபொருள்

5.        பாலஸ்தீனா நாட்டிலிருந்து துருக்கி நாட்டிலுள்ள சிலிசியா மாநிலத்தின் தர்சு நகரில் குடிபெயர்ந்து வாழ்ந்த எந்த இனத்தவர் தான் பவுலின் தந்தை?

யூதர்

6.        சவுல் என்று அழைக்கப்பட்டிருந்த பவுல் கி.பி. 9-ஆம் ஆண்டில் துறைமுகப்பட்டினமான எந்த நகரில் பிறந்தார்?

தர்சு

7.        "நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்; இஸ்ரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன்; எபிரேயப்பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன் திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்தின் அடிப்படையிலான நீதிநெறியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாய் இருந்தேன்" பவுல் தன்னைக் குறித்துக் கூறிய இறைவார்த்தைப் பகுதி எது?

பிலிப் 3 : 5 – 6

8.        பவுல் தன்னை ஒரு யூதனாக கருதுவதில் பெருமிதம் கொள்ளும் இறைவார்த்தை எது?

"அவர்கள் எபிரேயரா? நானும் தான்; அவர்கள் இஸ்ரயேலரா? நானும் தான்" (2கொரிந்தியர் 11:22, திருத்தூதர்பணி.22 : 3, 23: 6)

9.        "மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூதநெறியில் சிறந்துவிளங்கினேன்" என பவுல் கூறிய விவிலியப் பகுதி எங்குள்ளது?

கலாத்தியர் 1: 14

10.   பவுல் தனது 12ஆம் வயதில் கல்வியில் எந்த பதவிக்கு உயர்த்தப்பட்டார்?

திருச்சட்டத்தின் புதல்வன்

11.   பவுல் எருசலேமில் உள்ள எந்த கல்வி நிலையத்தில் கல்வி கற்றார்?

ஹில்லல்

12.   எந்த புகழ்பெற்ற ஆசிரியரிடம் பவுல் ஏழாண்டுகாலம் யூதசட்டங்களும் பழைய ஏற்பாட்டு மரபுகளும் பயின்று உயர்கல்வி கற்றார்?

கமாலியேல்

13.   சிறுபருவத்திலேயே பவுல்  எப்படிப்பட்டவராகத் திகழ்ந்தார்?

யூத றபி' (இறையருள்பெற்றவர்)

14.   யூத சட்டங்களைப் படித்து அச்சட்டங்களுக்குக் கீழ்ப்படிகின்ற யார் என்ற நிலையில் யூதர்கள் பலருடைய அன்புக்கும் பரிவுக்கும் பாத்திரமானார்?

பரிசேயர்

15.   உலகின் அனைத்து யூதர்களின் அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கான பயிற்சியும், யூதமரபுக்கேற்ற ஒழுங்கமைக்கும் திறனும் பெற்றிருந்தவர் யார்?

புனித பவுல்

16.   எந்தவொரு றபியும், போதனைப் பணிக்கு பிரதிபலன் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி இல்லாதபோது கூடாரப்பணியில் ஈடுபட்டு பணம் சேர்த்து வாழ்ந்து வந்தவர் யார்?

பவுல்

17.   "உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, எங்கள் பிழைப்புக்காக இராப்பகலாய் வேலை செய்து கொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம்" எனப் பவுல் கூறிய விவிலியப்பகுதி எங்குள்ளது?  

1தெசலோனிக்கர் 2 :9

18.   எபிரேயரிடமிருந்துப் பிறந்த எபிரேயரும் பென்யமின் குலத்தவரும், உயர்கல்வி பெற்ற யூத றபியும், யூதரில் உயர்வு பெற்ற பரிசேயரில் ஒருவரும், அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட உரோமை குடியுரிமை பெற்றவரும், துறைமுக நகரமான தர்சுவில் பிறந்து வளர்ந்து, அயல் நாட்டினருடன் தொடர்பு கொண்டு, வெவ்வேறு மொழிகளில் நல்லறிவு பெற்றவருமானவர் யார்?

திருத்தூதர் பவுல்

19.   ஸ்தேவானை கல்லால் எறிந்து கொலை செய்ய பவுல் ஒத்துழைப்புத் தந்தது குறித்த விவிலியப் பகுதி எங்குள்ளது?

திருத்தூதர் பணி 8:1-3

20.   'சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்றது யார்?

ஆண்டவர்

21.   ஆண்டவரே நீர் யார்?" எனக்கேட்ட பவுலுக்கு ஆண்டவரின் பதிலுரை என்ன?

"நீ துன்புறுத்தும் இயேசு நானே.”

22.   மூன்று நாள்கள் பார்வையற்றவராயிருந்த பவுலின் தலையில் கைவைத்து பார்வை பெறச் செய்த கிறிஸ்து சீடர் யார்?

அனனியா

23.   "ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன். உண்மையில் என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைக் குறித்த அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன்" என்ற பவுலின் இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

பிலிப்பியர் 3: 6 – 9

24.   இயேசுவின் அழைப்பைப் பெற்ற பவுல் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு முதலில் எவ்வாறு தன்னைத் தயாரித்துக் கொண்டார்?

அவர் மூன்று ஆண்டு காலம் அரேபிய பாலைநிலத்தில் தியானம் மற்றும் செபவாழ்வு

25.   "அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. எனக்கு முன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன்" என்ற பவுலின் இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

கலாத்தியர்1: 16-18

26.   பவுலின் ஆசிரியர் யார்?

கமாலியேல்

27.   பவுல் எந்த துறைமுக நகரத்திலிருந்து வெவ்வேறு மொழிகளை கற்றிருந்தார்?

தர்சு

28.   கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களோடு வாதாடியதால் அவர்கள் அவரைக் கொன்று விட முயன்ற போது அவரோடு இருந்த சகோரர்கள் இதை அறிந்து அவரை எங்கே அழைத்துச் சென்றனர்?

செசரியாவுக்கும் பின்னர் தர்சு நகருக்கும்

29.   தனது தொடக்ககால திருத்தூதுப்பணியில் தோல்வியடைந்த பவுல் தனது சொந்த ஊருக்கே திரும்பிச் சென்று விட்டார். அவ்வூர் எது?

தர்சு

30.   பவுல் தனது கிறிஸ்து தரிசனத்திலும் மூன்றாண்டு கால தயாரிப்பிலும் அவரது தொடக்ககால திருத்தூதுப்பணி தோல்வியடைந்து விட்டது எனப்புரிந்து கொண்ட அவர் மீண்டும் தன்னைப் பண்படுத்திக்கொள்வதற்கும், ஜெபத் தவத்திற்குமாக மேலும் எத்தனை ஆண்டுகள் தனது வாழ்க்கையைச் சமர்ப்பித்துக்கொண்டார்?

பதினான்கு

31.   நீண்ட பதினான்கு ஆண்டுகாலத் தயாரிப்புக்குப் பின்னர் பவுல் எருசலேமுக்கு யாரை அழைத்துச் சென்றார்?

தீத்து மற்றும் பர்னபா

32.   “நான் ஆசியாவுக்கு வந்து சேர்ந்த நாள் முதல் இந்த நாள் வரை எவ்வாறு உங்களிடம் நடந்து கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். யூதர்களுடைய சூழ்ச்சிகளால் எனக்கு ஏற்பட்ட சோதனைகளின் போது மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன்" என்ற பவுலின் இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

திருத்தூதர் பணிகள் 20 : 18 - 19

33.   என்னைப் பொறுத்த வரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை. இறையருளைக் குறித்த நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம். என்ற பவுலின் இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

திருத்தூதர் பணிகள் 20 : 24

34.   "நான் முதன் முறையாக வழக்காடிய போது எவரும் என் பக்கமிருக்கவில்லை; எல்லாரும் என்னைவிட்டு அகன்றனர் ஆனால் ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்" என்ற பவுலின் இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

2திமொத்தேயு 4 : 16 – 17

35.   பவுல் தான் அனுபவிக்க நேர்ந்த துன்பத்துயரங்களின் பெரும் பட்டியலை எத்திருச்சபையினரிடம் விளக்கியுள்ளார்?

கொரிந்து

36.   யூதர்கள் பவுலை சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி வீதம் எத்தனை முறை அடித்தார்கள்?

ஐந்து

37.   பவுல் எத்தனை முறை தடியால் அடிபட்டார்?

மூன்று

38.   பவுல் எத்தனை முறை கல்லால் எறியப்பட்டார்?

ஒரு முறை

39.   பவுல் எத்தனை முறை கப்பல் சிதைவில் சிக்கினார்?

மூன்று முறை

40.   பவுல் எப்போது ஆழ்கடலில் அல்லலுற்றார்?

ஓர் இரவும் பகலும்

41.   பவுல் தனது துன்பங்களை எடுத்துரைத்த விவிலியப்பகுதி எங்குள்ளது?

2 கொரிந்தியர் 11: 23 - 28

42.   பவுல் தன் உடல் வேதனை பற்றிக் கூறியது என்ன?

ஒரு முள் குத்தி கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தது  

43.   பவுலுக்கு இடைவிடாத வலியைக் கொடுத்துக்கொண்டிருந்த முள் என்பது என்ன?  

அவருக்கிருந்த உடல் நோயாக இருக்கலாம்

44.   பவுல் பலமுறை சிறையில் வைத்துச் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் திருமுகங்கள் எழுதியதைக் குறிப்பிடும் விவிலியப்பகுதி எது?

"பவுலாகிய நான் இவ்வாழ்த்தை என் கைப்பட எழுதுகிறேன். சிறைப்பட்டிருக்கும் என்னை நினைத்துக் கொள்ளுங்கள்" (கொலோசையர் 4 :18).

45.   பவுல் துன்பங்கள் ஏற்றுக் கொள்வதை அருளாசியாகக் கருதியதைக் குறிப்பிடும் விவிலியப்பகுதி எது?  

"கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்வதற்கு மட்டும் அல்ல, அவருக்காகத் துன்பங்களை ஏற்பதற்கும் நீங்கள் அருள்பெற்றுள்ளீர்கள்" (பிலிப்பியர் 1:29)

46.   பவுல், தான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளமாகக் கூறுவது என்ன?  

"அவரது உடலில் உள்ள தழும்புகள் (கலாத்தியர் 6: 17)

47.   தனது வாழ்க்கையில் ஆதாயமாய்க் கண்டவற்றையெல்லாம் குப்பையாகவும் இழப்பாகவும் கருதுவதற்கு முயன்ற பவுல் கூறியது என்ன?

"கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத் தான் நான் இவ்வாறு கருதுகிறேன்" (பிலிப்பியர் 3: 9).

48.   பவுல் இயேசுவோடு கொண்டுள்ள அன்பின் உறவில் வலியுறுத்திக் கூறியது என்ன?

"கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப்பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப்பிரிக்க முடியும்? 'உம்பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம். வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம்' என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ? ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ. வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப்படைப்போ நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப்பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை" (உரோமையர் 8: 35-39).

49.   பவுல் தான் வாழ்வதும் இறப்பதும் கிறிஸ்துவுக்கே எனக் கூறிய இறைவார்த்தை எது?

"இன்றும் என்றும், வாழ்விலும் சாவிலும் முழுத்துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல். இதுவே என் எதிர் நோக்கு. ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே (பிலிப்பியர் 1:20-21)

50.   கிறிஸ்துவுக்காக நற்செய்தி அறிவிப்பது மிக்க மகிழ்ச்சிக்குரியதே. எனினும் இறந்து கிறிஸ்துவோடு இணைந்து ஒன்றாவதே மிகவும் மேன்மையானது என்ற பவுலின் இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

பிலிப்பியர் 1 : 23

51.   இயேசுவோடு ஒன்றிணைவதற்கு மரணம் வயிலாகவே அதற்குச் சாத்தியகூறு உள்ளது என உணர்ந்து கொண்ட போது மரணத்தை ஆதாயமாகவும் மரணத்திற்குப்பின் இயேசுவோடு ஒன்றாய் இணைந்துவிடுவது மேன்மையாகவும் கருதியவர் யார்?  

பவுல்

52.   “என்னைப் பொறுத்த வரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை... ஆண்டவர் இயேசு கிறிஸ்து எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம்என்ற பவுலின் இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

திருத்தூதர்பணிகள் 20 : 24

53.   "நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்" என்ற பவுலின் இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

கலாத்தியர் 20 : 19 -20

54.   இயேசுவோடுள்ள அன்பிற்காக  புனித பவுல் எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்து மறைத்தூதுப் பணியாற்றினார்?

சுமார் 15,000 கி.மீ

55.   புனித பவுல் தனது திருத்தூதுப் பயணத்தின் இறுதியில் எங்கே இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றினார்?

உரோமையில்

56.   புனித பவுல் எப்போது நீரோ பேரரசரால் தலை வெட்டப்பட்டு இறந்தார்?

கி.பி 67-ல்

57.   புனித பவுலின் உடல் எங்கே அடக்கம் செய்யப்பட்டது?

உரோமையில்

58.   "நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றிவாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்" என்ற பவுலின் இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

2திமொத்தேயு 4:7 – 8

59.   உயிர்த்தெழுந்த இயேசு சீடர்களை நோக்கி நற்செய்திப்பணியாற்றிட கூறிய இறைவார்த்தை என்ன?

"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு: 16 : 15)

60.   தனது பாலர் பருவத்திலும், இளம்பருவத்திலும் வாலிபப்பருவத்திலும் மிகவும் தீவிர ஆர்வம் கொண்ட யூத மத விசுவாசியான பவுல் யூத-'றபி ஆவதற்கும். சட்டம் படித்த பரிசேயன் ஆவதற்கும் தலைநகரான எருசலேமில் யாருடைய போதகத்தில் கல்வி கற்றார்?

கமாலியேல்

61.   பவுலின் யூத மத விசுவாசியாயிருக்கும் போது கிறிஸ்தவச் சபையைத் துன்புறுத்துவதற்கான தூண்டுதலை அளித்ததாக கூறிய இறைவார்த்தை எது?

"திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன்" (பிலிப்பியர்3 : 6)

62.   நற்செய்திப்பணிக்காகத் தனிப்பட்ட முறையில் வேறுபடுத்தப்பட்டவரே, ஒதுக்கப்பட்டவரே, புனிதப்படுத்தப்பட்டவரே தான் என்னும் நம்பிக்கையை ஆழ்மனத்தில் பதிந்திருந்தவர் யார்?

 புனித பவுல்

63.   உலகின் தலைமையிடம் எனக் கருதப்பட்டிருந்த உரோமையிலும், உரோமையின் எல்லையாகக் கருதப்பட்டிருந்த எந்த நாடு வரையிலும் பவுல் நற்செய்தியைப் பறைச்சாற்றிக்கொண்டே இயேசுவுக்குச் சாட்சியானார்?

ஸ்பெயின்

64.   "நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன" என்ற பவுலின் இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

உரோமையர் 10 : 14 - 15

65.   "என்னைப் பொறுத்த வரையில் என் உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை. இறையருளைகுறித்த நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம்என்ற இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

திருத்தூதர் பணிகள் 20: 24

66.   திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுகிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையினால் தான் ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும். என்ற பவுலின் இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

கலாத்தியர் 2 : 16

67.   எருசலேம் சங்கம் கூட்டப்பட்டபோது யார் கூறிய கருத்துகள் பேதுரு உள்ளிட்ட மற்று திருத்தூதர்களின் மனமாற்றத்திற்கு ஏதுவாயின (திருத்தூதர் பணிகள் 15 : 1 - 15)?

 புனித பவுல்

68.   தவற்றைக் கண்ட போது பேதுருவைக் கூட நேருக்கு நேர் எதிர்க்கும் பவுலை விவிலியத்தில் எங்கே காணலாம்?

கேபா (பேதுரு அந்தியோக்கியாவுக்கு வந்தபோது அவர் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன்" (கலாத்தியர் 2:11)

69.   "நீர் யூதனாயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிற இனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க, பிற இனத்தார் யூத முறையைக் கடைபிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்" (கலாத்தியர் 2 : 14) யார் யாரிடம் கூறியது?

பவுல் பேதுருவிடம்

70.   15 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டு நடத்தப்பட்ட மறைத்தூதுப் பணிகளுக்கிடையே பவுல் எதிர்கொள்ள வேண்டியிருந்த துன்பங்கள் யாவை?  

நற்செய்திக்காகத் தான் அனுபவித்துக் கொண்ட தியாகங்கள், சிறைவாழ்வு, கல்லெறியப்படுதல். இடர்கள், விபத்துகள், சாவுக்கு ஏதுவான சூழ்நிலைகள் பசி. பட்டினி, குளிரால் ஏற்பட்டவாட்டம்

71.   நற்செய்திப் பணியிலிருந்து எதுவுமே தன்னைத் தடை செய்வதற்கு இயலாது என்பதும் மரணமே நேர்ந்துவிட்டாலும் கலக்கமடையப் போவதில்லை என்ற பவுலின் உறுதியை அவரது திருமுகங்களில் எவ்வாறு தெளிவாகக் காணலாம்?

1. "கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப்பிரிக்கக்கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா?" (உரோமையர் 8:35).

2. "ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தால் எனக்கு அது ஆதாயமே" (பிலிப்பியர் 1 : 21).

3. “என்னைப் பொறுத்த வரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை. இறையருளைகுறித்த நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம்” (திருத்தூதுப் பணிகள் 20 : 24).

72.   தனது வாழ்க்கையில் எதுவுமே மறைப்பதற்கு இல்லை எனவும் அது திறந்த புத்தகமே எனவும் பவுல் கூறுகின்றார். இப்பகுதியின் விவிலிய அடிப்படை என்ன?

"கொரிந்தியரே. நாங்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுகிறோம். எங்கள் இதயத்தில் ஒளிவு மறைவு என்பதே இல்லை. எங்களைப் போலவே நீங்களும் உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்" (2கொரிந்தியர் 6: 11- 13).  

73.   தனது இதயத்தின் தூய்மையைக் குறித்து பவுல் எவ்வாறு குறிப்பிடுகிறார்?

"உங்கள் இதயத்தில் எங்களுக்கோர் இடம் வேண்டும். நாங்கள் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை; யாரையும் வஞ்சிக்கவில்லை. நீங்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிப்பதற்காக நான் இவ்வாறு கூறவில்லை" (2கொரிந்ததியர் 7 : 2-3)

74.   விசுவாசிகளோடுள்ள தனது நடத்தையின் மேன்மை எவ்வளவுக்கதிகமாயிருந்ததெனப் பவுல் தெசலோனிக்கரோடு எவ்வாறு கூறுகின்றார்?

"நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் முன்பாக நாங்கள் மிகவும் தூய்மையோடும். நேர்மையோடும். குற்றமின்றியும் ஒழுகினோம் என்பதற்கு நீங்களும் சாட்சி. கடவுளும் சாட்சி!" (1தெசலோனிக்கர் 2 : 10).

75.   பவுல் தனது வாழ்க்கையைக் குறித்து குறிப்பிடுகின்ற நேரங்களில் "எனது வாழ்க்கையைக் குறித்து எனக்கு அறியலாம்" என்றல்ல, மாறாக, நீங்கள் அறிவீர்கள். கடவுள் அறிவார் என்றே கூறுவது வழக்கம். இதனைக் குறிப்பிடும் விவிலியப்பகுதி எங்குள்ளது?

"நான் ஆசியாவுக்கு வந்து சேர்ந்த நாள் முதல் இந்நாள்வரை எவ்வாறு உங்களிடம் நடந்து கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். யூதர்களுடைய சூழ்ச்சிகளால் எனக்கு ஏற்பட்ட சோதனைகளின் போது மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணி புரிந்தேன்" (திருத்தூதர்பணிகள் 20 : 18 - 19)

76.   தமஸ்கு நிகழ்வுக்குப்பின் மனமாற்றமடைந்து திருமுழுக்கு பெற்ற பவுல் நற்செய்திப் பணியை நோக்கி வழிநடத்திய யாரிடம் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்?

பர்னபா

77.   பவுல் மிகவும் மதித்திருந்த உடன் உழைப்பாளர் யார்?

தீத்து

78.   பவுல் யாரிடம் நெருங்கிய அன்புறவு கொண்டிருந்தார்?

 திமொத்தேயு

79.   பவுலின் நண்பர்கள் யாவர்?

யூதா, சீலா, எரோதியா, மாற்கு, லூக்கா. அக்கீலா, பிரசில்லா

80.   பவுலின் நற்செய்திப் பணியில் பெண் ஊழியர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர் என்பதற்கான விவிலியச் சான்றுகள் யாவை?

பிலிப்பியர் 4:3,உரோமையர் 16: 16, திருத்தூதுப்பணிகள் 16: 11-15

81.   கல்விக்கூடம் குறித்த நீதிமொழிகள் எது?

"கல்விக்கூடம் இல்லாத நகரம் பாழடையட்டும். யாகங்களிலிருந்து (வேள்வி) வெளிப்படும். நறுமணத்தை விட கல்விகற்கும் பிள்ளைகளின் மூச்சுதான் கடவுளுக்கு மிக விருப்பமானது.”

82.   பவுல் புனித நகரமான எருசலேமின் உயர்கல்வி மையத்தில் கமாலியேலின் மாணவனாக எத்தனை ஆண்டுகள் படித்தார்?

ஏழாண்டுகள்

83.   பவுலைத் தொடக்கம் முதலே ஆயத்தப்படுத்தவும் தமது பணிக்கென நியமனம் செய்யவும் செய்தார். என்ற பவுலின் இறைவார்த்தை எது?

"ஆனால் தாயின் வயிற்றில் இருந்த போதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் கடவுள் என்னை அழைத்தார்" (கலாத்தியர் 1:15).

84.   கிறிஸ்துவின் திருச்சபைக்கு இறையியல் சார்ந்த ஓர் அடித்தளம் அளித்தவர் யார்?

புனித பவுல்

85.   எந்த மன்றத்தின் நடுவில் பவுல் ஆற்றிய சொற்பொழிவு அவரது அறிவாற்றலை வெளிப்படுத்துகின்றது?

அரயோப்பாகு

86.   பவுல் எந்நகர் வழியாகக் கடந்து செல்லும் போது அங்கு காணப்பட்ட சிலைகளையும், தொழுகைப் பொருள்களையும் உற்றுக் கவனித்துக் கொண்டே போனார்?

ஏதென்சு

87.   பவுலின் திருமுகங்களில் புரிந்து கொள்வதற்குக் கடினமானவை சில உண்டு என்ற திருத்தூதர் யார்?

பேதுரு (2பேதுரு 3:15-16)

88.   பிறஇனத்தவர்கள் கிறிஸ்தவர்களாகும் போது விருத்தசேதனம் தேவையில்லை என எருசலேம் சங்கம் தீர்மானம் எடுப்பதற்கு வழி வகுத்தது யாருடைய ஆழமான அறிவாற்றலும். தொலைநோக்குப் பார்வையும் ஆகும்?

திருத்தூதர் பவுலின்

89.   பவுல் மறைத்தூதுப் பணிக்கெனத் சென்றிருந்த சில நகரங்கள் எவை?  

அந்தியோக்கியா, எபேசு அபேனா. கொரிந்து. உரோமை முதலான பண்டைக் காலத்து மாபெரும் நகரங்கள்

90.   பூவுலகின் அப்போதைய தலைநகரான உரோமையில் நற்செய்தி சென்று சேர்ந்துவிடுமானால் உலகெங்கிலும் நற்செய்தி சென்றடைந்து விடும். என்னும் சிந்தனையால் தூண்டப்பட்ட கைதியாக உரோமையில் சென்று நற்செய்தியைப் பறைச்சாற்றிய திருத்தூதர் யார்?

பவுல்

91.   எருசலேமில் திருத்தூதர்களைக் கண்டபோது ஏழைகளுக்கு ஆதரவாயிருக்க வேண்டுமென அவர்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் அறிவுரை கூறியது என்ன?

"யூதர்களுக்கு அவர்களும் (திருத்தூதர்களும் யூதரல்லாதோர்க்கு நாங்களும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று ஒத்துக் கொண்டோம். ஏழைகளுக்கு உதவி செய்ய மறக்க வேண்டாம் என்று மட்டும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதைச் செய்வதில் தான் நான் முழுஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன் (கலாத்தியர் 2:9 - 10.

92.   நலிவுற்றோருக்கு உதவி செய்ய வேண்டுமென முழுஆர்வம் கொண்டிருந்த பவுல் கூறிய பகுதி எது?

“என்னுடைய தேவைகளுக்காவும் என்னோடிருந்தவர்களுடைய தேவைகளுக்ககாவும், இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்க வேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக் கொள்வதை விட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூருங்கள் என்றும் கூறினேன்" (திருத்தூதர் பணிகள் 20 34-35)

93.   வெவ்வேறு சபை சமூகங்களில் எவரேனும் வறுமையுற்றிருந்தால் மிகுதியாய் செல்வமிருப்போரிடமிருந்து நன்கொடை பெற்று அவர்களுக்கு உதவிசெய்வதற்காகப் பவுல் காட்டிய ஆர்வம் ஏழைகளோடு அவருக்கிருந்த அன்பினை வெளிப்படுத்திய விவிலியப் பகுதிகள் எவை?

1கொரிந்தியர் 16: 1 - 4. 2கொரிந்தியர் 8 1-15. பிலிப்பியர் 4 10 - 201.

94.   பாலர் பருவத்திலேயே யூத றபிக்கான தகுதி பெற்றவர். ஆனால் றபிகள் ஊழியத்திற்குப் பிரதிபலன் பெற்றிட அனுமதி இல்லை. வாழ்க்கையை நடத்திச் செல்ல வேறு தொழில் செய்து பணம் சேர்க்க துணிந்த திருத்தூதர் யார்?   

பவுல்

95.   பவுல் தனது தந்தையைப் போன்று எப்பணியைக் கற்றுக் கொள்ளவும் அந்தப்பணியின் மூலம் பணம் சம்பாதிக்கவும் செய்தார்?

கூடாரப்பணி

96.   பவுல் பிரதிபலன் வாங்காமல் நற்செய்திப் பணியாற்றினார் என்பதன் விவிலியப் பகுதி எது?

"ஊதியம் எதுவும் எதிர் பார்க்காமல் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தேன். நீங்கள் உயர்வு பெற நான் தாழ்வுற்றேன். இது தான் நான் செய்த பாவமா?" (2கொரிந்தியர் 11 : 7)

97.   "அன்பர்களே! நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைத்துப்பாருங்கள் உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி. எங்கள் பிழைப்புக்காக இராப்பகலாய் வேலை செய்து கொண்டே. கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம்" என பவுல் கூறிய இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

1தெசலோனிக்கா 2:9

98.   "உங்களிடையே இருந்த போது நாங்கள் சோம்பித்திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்" என பவுல் கூறிய இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

2தெசலோனிக்கர் 3 : 7-8

99.   அனுதின வாழ்வின் தேவைகளை நிறைவு செய்வதற்காக விசுவாசிகளிடமிருந்து எதுவுமே பெற்றுக் கொள்ளாமல் தனது கைகளால் உழைத்து வாழ்ந்தார் எனவும், தனது உழைப்பின் பலனிலிருந்தே நலிவுற்றோருக்கும் உதவி செய்ய முயன்றார் என பவுல் கூறிய இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?

திருத்தூதர்பணிகள் 20: 33 - 35

100.                             நற்செய்தி அறிவிப்புப் பணியிலிருந்து பிரதிபலன் பெற்றுக்கொள்ள பவுலுக்கு உரிமையிருந்தும் அந்த உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்ற உறுதியுடன் நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள எதனை மட்டும் கைம்மாறாய்ப் பெற்றுக் கொள்ளும் அவரது மனநிலை எல்லா நற்செய்திப் பணியாளர்க்கும் எடுத்துக்காட்டு ஆகும்?

மனநிறைவு

101.                             பவுலின் நற்செய்திப் பணிக்கான தலைமைப் பண்புகளின் சில சிறப்பியல்புகள் எவை?

முக்கியத்துவம் குறைந்த கருத்துகளில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடைய பவுல், (திருத்தூதர்பணிகள் 21: 17 - 26), தாயைப் போன்று தந்தையைப் போன்று உடன் பிறந்தவரைப் போன்று திருத்தி நல்வழிப்படுத்தும் தலைமைப் பண்பு (1கொரிந்தியர் 4:14) (1தெசலோனிக்கர் 2 : 12), சேர்ந்து செயல்படுவதற்குச் சிறப்பிடம் அளித்தவர் (கலாத்தியர் 2:1-6,1கொரிந்தியர் 12 : 12 - 13, எபேசியர் 4 : 11 - 13), நற்செய்திப் பணிக்காகத் தம்மை முழுமையாய்ச் சமர்ப்பித்தவர் பிலிப்பியர் 2 : 17).

102.                             நற்செய்திப்பணியின் அடித்தளம் என்பது என்ன?

உண்மை கிறிஸ்தவனாக வாழ்ந்து காட்டுவது

103.                             "எனது வாழ்க்கையே என்னுடைய செய்தி" என்றவர் யார்?

மகாத்மா காந்தி

104.                             உண்மையான நற்செய்திப் பணியாளராய் வளர்வதற்குப் எப்புனிதரின் பரிந்துரை மன்றாட்டை வேண்டுவோம்?

புனித பவுலின்

 

 

 

பாடம் :10

நான் ஒரு கத்தோலிக்கன்

 

1.        இன்று உலகிலுள்ள 120 கோடி கத்தோலிக்கரில் பெரும்பான்மையோரும் கத்தோலிக்கரான பெற்றோருக்குப் பிறந்து குழந்தையாயிருக்கும் போதே எதன் வாயிலாகக் கத்தோலிக்க சபையில் உறுப்பினரானவர்கள் ஆவர்?

திருமுழுக்கு

2.        கத்தோலிக்கராக மாறிய  புகழ்பெற்ற ஆங்கில இலக்கியக் கலைஞர் யார்?

ஜி.கெ. செஸ்டர்டன்

3.        கத்தோலிக்கராக மாறிய  அமெரிக்காவின் அமைச்சராயிருந்த ஜாண் ஹோஸ்டர் டல்லசின் மகன் யார்?

கார்டினல் ஆவரேடல்லஸ்

4.        ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்பாகப் பணியாற்றியப் பிறகு கத்தோலிக்கனாகவும் கார்டினலாகவும் மாறியவர் யார்?

ஜாண் ஹென்றி நியூமான்

5.        இங்கிலாந்து பிரதமராயிருந்து ஓய்வுபெற்றபின் கத்தோலிக்க விசுவாசத்தைப் பெற்றுக் கொண்டவர் யார்?

டோணி ப்ளெயர்

6.        கேரளாவில் ஆர்த்தடோக்ஸ் திருச்சபையின் மிகச்சிறந்தவராயிருந்து கத்தோலிக்க சபைக்கு வந்த ஆயர்கள் யாவர்?

மார் இவானியோஸ்,  மார் தெயோபிலோஸ், மார் சேவேரியோஸ்

7.        கத்தோலிக்கராக மாறிய  கினானானைய யாக்கோபாய சபையின் தலைவர் யார்?

மார் தியஸ்கோறஸ்

8.        கத்தோலிக்கராக மாறிய  தொழியூர் சுதந்திர சபையின் தலைவர் யார்?

மார் பீலக்சினோஸ்

9.        திருச்சபையை நிறுவியவர் யார்?  

இயேசு கிறிஸ்து

10.   திருச்சபையின் தலையாயிருக்கின்றவர் யார்?

இயேசு கிறிஸ்து

11.   கிறிஸ்துவின் மறைஉடலும் அவரது தொடர்ச்சியும் எனப்படுவது எது?  

திருச்சபை

12.   திருச்சபை எனப்படுவது எத்தனை?

ஒன்றே ஒன்று

13.   இயேசுகிறிஸ்து நிறுவியதும், திருத்தூதர்கள் பறைசாற்றியதும், அவர்களது வழித்தோன்றல்கள் வழிநடத்திச் செல்வதுமான ஒரே தூய கத்தோலிக்க அப்போஸ்தலிக்க சபை எது?

கத்தோலிக்கத் திருச்சபை

14.   தந்தைக்கடவுளின் மனித குலத்தோடுள்ள அன்பு மிகவும் தெளிவுடன் யாருடைய மனுவுருவாதலில் வெளிப்படுகிறது?

இயேசுவின்

15.   "தன் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்" என்ற விவிலியப் பகுதி எங்குள்ளது?

யோவான் 3 : 16

16.   தந்தைக் கடவுளின் மனிதனோடுள்ள அன்பு இயேசுவின் இறப்பிற்கும், உயிர்ப்பிற்கும் பிறகு எதன் வாயிலாக தொடர்கிறது?

திருச்சபை

17.   சிலுவையில் இறந்து உயிர்த்தெழுந்த இயேசு உலக முடிவுவரை மனிதனை அன்பு செய்வதும், மனிதனோடு இருப்பதும் யார் வாயிலாகவே?

திருச்சபை

18.   இயேசு என்னும் தனிநபரிடமிருந்து விலகி நின்று கொண்டு சபையைப் புரிந்து கொள்வதற்கும், அதனைப்பற்றி விளக்குவதற்கும் இயலுமா?

இல்லை

19.   திருச்சபையின் ஒளி எனப்படுபவர் யார்?

கிறிஸ்து

20.   திருச்சபைத் தந்தையர்கள் கூறுகின்ற ஓர் உவமையின்படி சூரியனிலிருந்து பிரதிபலிப்பதாக திருச்சபை யாருக்கு ஒப்பானது?

சந்திரனுக்கு

21.   இறையாட்சியைக் குறித்த இயேசுவின் போதனை எதன் பிரசன்னத்தைக் குறிப்பிடுகின்றது (மாற்கு 1 : 15)?

திருச்சபையின்

22.   திருச்சபைக்கு உறுதியான ஒரு அடித்தளமும், நிலைத்தன்மையும் தேவை என உணர்ந்த இயேசு பேதுருவின் தலைமையில் எத்தனை  திருத்தூதர்களை நியமித்தார்?

12

23.   உறங்கிக்கிடந்த ஆதாமின் விலாவிலிருந்து ஏவாள் உருவாக்கப்பட்டது போன்று சிலுவையில் அறையப்பட்டு இறந்த கிறிஸ்துவின் பிளக்கப்பட்ட இதயத்திலிருந்து தான் திருச்சபை பிறந்தது என்றவர் யார்?

புனித அம்புறோசியார்

24.   இவ்வுலகில் நமது கண்ணுக்குப் புலனாகும் அளவிலுள்ள இயேசு கிறிஸ்துவின் திருஉடல் என்பது எது?

திருச்சபை.

25.   இயேசுவின் இலட்சியக் கனவான இறையரசுக்கான வழியும் வழிகாட்டியும் என்பது எது?

திருச்சபை.

26.   இயேசு திருப்பொழிவு செய்யப்பட்டவர் அல்லது மெசியா என்னும் நிலையில் அவர் நிறைவு செய்த இறைவாக்குரைக்கும் பணியும். குருத்துவப்பணியும். ஆட்சிப்பணியுமான தூதுரைப்பணிகளை அதாவது கற்பித்தல். புனிதப்படுத்துதல், சாட்சியத்தின் வாயிலாக வழிநடத்துதல் ஆகிய திருப்பணிகளை உலகமுடிவு வரை செயல்படுத்தி நிறைவு செய்ய வேண்டிய கடமை யாருக்கு உள்ளது?

திருச்சபைக்கு

27.   'சபை' என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

அழைத்துச் சேர்க்கப்பட்டவர்களின் சமூகம்

28.   கடவுளால் அழைத்துச் சேர்க்கப்பட்ட திருமுழுக்கு என்னும் அருளடையாளம் வாயிலாகத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட ஒரு தலத் திருச்சபையையும் அனைத்துலக சமூகத்தையும் எந்த சொல் அர்த்தமாக்கிக்கொள்கின்றது?

திருச்சபை

29.   எந்த உருவகங்கள் வாயிலாகத் திருவிலியம் திருச்சபையை விளக்குகின்றது?

திருச்சபை இறைமக்களின் கூட்டம், இயேசுவின் மணமகள். இயேசுவின் மறைஉடல், ஆட்டுமந்தை, இறைவனின் விளைநிலம், இறைவனின் இல்லம் அல்லது ஆலயம், திருச்சபை ஒரு தாய், விண்ணக எருசலேம்

30.   திருச்சபையின் நான்கு அடையாளங்கள் எவை?

ஒரே, தூய, காதோலிக்க, அப்போஸ்தலிக்கத் திருச்சபை

31.   ஒரே, தூய, காதோலிக்க, அப்போஸ்தலிக்கத் திருச்சபை என்ற அடையாளங்கள் முழுமையாக அமைந்திருப்பது எந்த திருச்சபையில் ஆகும்?

கத்தோலிக்க திருச்சபை

32.   சபையின் ஒருமையை புரிந்து கொள்ளும் மூன்று வகைகள் எவை?

1. சபை அவளது பிறப்பிடம் காரணமாக ஏகமானதே. தந்தை மகன் தூய ஆவி ஆகிய மூவொரு கடவுளின் ஒன்றிப்பு தான் சபையின் பிறப்பிடமும் முன்மாதிரியுமாகும். தூய மூவொரு கடவுளின் விருப்பாற்றலிலிருந்து தான் சபை என்ற திட்டம் உருவமைப்பானது.

2. சபை அவளை நிறுவியவர் காரணமாக ஏகமானதே. தந்தைக் கடவுளின் ஒரே மகனும் வாக்கும் ஆகிய இயேசு மெசியாவால் சபை நிறுவப்பட்டது. இயேசு தமது சிலுவை மரணம் வாயிலாக எல்லா மனிதரையும் ஒன்றிணைக்கவும் கடவுளோடு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் செய்தார். ஆதலால் இயேசுவின் மறைஉடலாகிய சபையும் ஒன்றேதான்.

3. சபை அவளது ஆவியானவர் காரணமாக ஏகமானதே. தூய ஆவியின் கோவில்தான் திருச்சபை. விசுவாசிகளில் குடியிருந்து கொண்டும். சபை முழுவதிலும் நிறைந்து நின்று கொண்டும், விசுவாசிகளின் அன்புறவையும் ஒன்றிணைப்பையும் ஏற்படுத்துவதும் பராமரிப்பதும் தூயஆவியே அவ்வாறு தூய ஆவி ஒன்றிணைப்பின் பிறப்பிடமாகச் செயல்படுகிறார். அதனால் ஒன்றாக இருக்க வேண்டியது திருச்சபையின் அடிப்படையான ஒரு தேவையும் ஆகும்.

33.   "எவ்வளவு வியப்புக்குரிய ஒரு மறைபொருள், எல்லோருக்கும் தந்தையாய் ஒருவர். எல்லோருக்குமாக ஒரு வாக்கு. எங்கும் இருக்கும் தூய ஆவியும் ஒருவரே. கன்னியாகிய தாயும் ஒருவர் மட்டுமே; அவரைச் சபை என்றழைப்பதற்கு நான் விரும்புகின்றேன்" (P.G.S:300) என்றவர் யார்?

அலெச்சாண்டிரியாவின் புனித கிளமென்ட்

34.   புனித பவுல், திருச்சபையின் ஒருமை பற்றி கற்பிப்பது என்ன?

நீங்கள் கிறிஸ்துவின் உடல்: ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புக்கள் கொரிந்தியர் 12: 27) எனவும், “நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும் படி திருமுழுக்குப் பெற்றோம்(1 கொரிந்தியர் 12: 13) எனவும், "நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் ஒரே எதிர்நோக்கு இருப்பது போல உடலும் ஒன்றே தூய ஆவியும் ஒன்றே அவ்வாறே ஆண்டவர் ஒருவரே. நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே: திருமுழுக்கும் ஒன்றே (எபேசியர் 4 : 4 - 5) எனவும் கற்பிக்கின்றார். மேலும் அவர் எல்லாரும் கிறிஸ்துவில் ஒன்றே எனவும் கூறுகின்றார். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமை குடிமக்கள் என்றும் இல்லை. ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை: கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள் - (கலாத்தியர் 3: 28).

35.   கிறிஸ்துவைப் பின்பற்றுவோரின் அடையாளமான ஒன்றிப்புக்கான கிறிஸ்துவின் மன்றாட்டு என்ன?

“எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே. நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்” (யோவான்17:21)

36.   தொடக்க காலத்திலேயே வேறுபாடு கொண்ட வெவ்வேறு தலத் திருச்சபைகள் ஒருமையைப் பாதுகாத்து வந்த மூன்று கருத்துகள் எவை?

1. திருத்தூதர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரே நம்பிக்கையை அறிக்கையிடுதல்.

2. அருளடையாளங்களின் மீதுள்ள பொதுவான நம்பிக்கையும் விளக்க உரைகளும் கொண்டாட்டமும்.

3.  குருத்துவ அருளடையாளம் வாயிலான அப்போஸ்தலிக்க வழித்தோன்றல் அதாவது அப்போஸ்தலிக்க அதிகாரம்.

37.   சபைகளின் ஒன்றிப்பு என்பது என்ன?

சபைகளின் ஒன்றிப்பு என்பது அவற்றின் ஒழுங்கமைப்பிலுள்ள ஒற்றுமை அல்ல, சபைகளின் வேறுபாடுகளை அங்கீகரிக்கின்ற ஒன்றிப்பையே சபை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

38.   திருச்சபை ஒன்றே தான் என்பதற்கான வெளிப்படையான அடையாளம் என்ன?  

வெவ்வேறான மனிதர்கள் ஒரே விசுவாசத்திலும் ஒரே அருளடையாளத்திலும் வாழவும் ஒரே அப்பத்திலிருந்து உண்ணவும். ஒரே ஆயரின் அப்போஸ்தலிக்கத் தலைமையில் வளரவும் செய்வது

39.   திருச்சபை ஒன்றே தான் எனத் தெளிவாகிறது எப்படி?

அனைத்துலகத் திருச்சபையின் ஆயர்கள் பேதுருவின் வழித்தோன்றலான திருத்தந்தையுடன் ஒன்றித்திருப்பது

40.   அனைத்துலகத் திருச்சபை ஒன்றேதான் என்பதற்கான கண்கூடான அடையாளமும், ஒன்றிப்பின் மையமும், ஒன்றிப்பின் பாதுகாவலருமாயிருக்கிற பேதுருவின் வழித்தோன்றலானவர் யார்?  

திருத்தந்தை

41.   உலகில் எத்தனை  அப்போஸ்தலிக்கச் சபைகள் பேதுருவின் வழிவந்தவரான திருத்தந்தையின் தலைமையில் ஒன்றித்து ஒரு சபையாய் இருக்கின்றன?

23 (24)

42.   இன்று காணப்படும் கிறிஸ்தவச் சபைகளில் 'சபை ஒன்றேதான்' என்னும் சிறப்புத் தன்மை தெளிவாய் அமைந்திருப்பது எந்த திருச்சபையில் மட்டுமே ஆகும்?

கத்தோலிக்க திருச்சபையில்

43.   திருச்சபையின் ஒன்றிப்பு பற்றி ஓரிஜன் கூறுவது என்ன?

"எங்கே பாவங்கள் உள்ளனவோ அங்கே பிரிவினைகளும் பிளைவுகளும் தப்பறைகளும், விவாதங்களும் ஏற்படும். எங்கே அறச்செயல்கள் உள்ளனவோ அங்கே இணக்கமும் ஒன்றிப்பும் உண்டாகும். இந்த இணக்கம் ஒன்றிப்பு ஆகியவற்றிலிருந்து எல்லா இறைமக்களுடையதுமான ஒரே இதயமும் ஒரே ஆன்மாவும் உருவாகும்.”

44.   திருச்சபை ஒன்றிப்பு குறித்து இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் கூறுவது என்ன?

"ஏனெனில், கிறிஸ்துவின் கத்தோலிக்கத் திருச்சபை நிறைவாழ்வு அடைய பொதுவான வழி முறைகளைக் கொண்டுள்ளது. அதன் வழியாக மட்டுமே நிறைபேற்றின் எல்லா வழிவகைகளும் முழுமையை அடைய முடியும். கிறிஸ்துவின் ஒரே உடலை உலகில் உருவாக்கப் பேதுருவைத் தலைவராகக் கொண்ட திருத்தூதர்களின் ஒரே குழுவிடமே புதிய உடன்படிக்கையின் நலன்களையெல்லாம் ஆண்டவர் ஒப்படைத்தார் என நாம் நம்புகிறோம். எந்த வகையிலாவது இறைமக்கள் என்ற நிலையில் உள்ளவர்கள் எல்லாரும் கிறிஸ்துவின் இந்த உடலுடன் ஒன்றிப்பது தேவை (கிறிஸ்தவ ஒன்றிப்பு 3:5).

45.   திருச்சபையின் புனிதம் என்பது யாருடையது?

இயேசு கிறிஸ்துவின் புனிதமே

46.   ஆதிக்கிறிஸ்தவர்களை 'தூயவர்' (இறைமக்கள்) என்றே அழைத்திருந்த விவிலியப்பகுதி எது?

திருத்தூதர் பணிகள் 9:13, 1 கொரிந்தியர் 6 :1, 16:1, 1பேதுரு 2 : 9

47.   கிறிஸ்துவின் மறைஉடலாகிய திருச்சபை யார் வாயிலாக புனிதப்படுத்தப்படுகிறது?

கிறிஸ்து

48.   கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் மெசியாவின் புனிதத்தில் பங்கு சேருகின்ற புகுமுக அருளடையாளங்கள் எவை?

திருமுழுக்கு, உறுதிபூசுதல், தூய நற்கருணை

49.   இயேசுவின் பிரசன்னமும் மீட்புக்குத் தேவையான அவரது கொடைகளும் இவற்றின் நிறைவும் எத்திருச்சபையில் மட்டுமே உள்ளன?

கத்தோலிக்கத் திருச்சபை

50.   சபையின் மானிட இயல்பைச் சார்ந்த கூறுகள் தொடர்ந்து தூய்மைப்படுத்தப்படவேண்டியது என்ற உணர்வு யாருக்கு உள்ளது?

திருச்சபைக்கு

51.   'காதோலிக்கம்' என்ற சொல்லுக்கு உரிய அர்த்தங்கள் எவை?

முழுமையானது, நிறைவானது. அனைத்து உலகிலும் பரவியது

52.   திருச்சபை காதோலிக்கம் ஆவது எப்படி?

திருச்சபையில் கிறிஸ்து பிரசன்னமாயிருப்பதால்.

53.   "இயேசு கிறிஸ்து எங்கே இருக்கிறாரோ அங்கே கத்தோலிக்கத் திருச்சபை உள்ளது" (Apostolic Fathers II /2311) என்றவர் யார்?

அந்தியோக்கியாவின் புனித இக்னாத்தியோஸ்

54.   அனைத்துக்கும் மேலாகத் கிறிஸ்துவைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். என்ற இறைவார்த்தைப் பகுதி எங்குள்ளது?

எபே 1: 22-23

55.   கிறிஸ்து இவ்வுலகில் தமது உடலாக விளங்கிய திருச்சபைக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்றார். என்ற பவுலின் இறைவார்த்தைப் பகுதி எங்குள்ளது?

1 கொரிந்தியர் 12: 13

56.   மீட்புக்கான திருச்சபையின் மூன்று வழிகள் எவை?

குறையற்ற நிறைவான நம்பிக்கையை அறிக்கையிடுதல். அருளடையாள வாழ்க்கை, அப்போஸ்தலிக்க வழித்தோன்றலின் வாயிலாகத் அருட்பொழிவு பெற்றவர்களின் திருப்பணி

57.   திருச்சபை பெந்தக்கோஸ்து நாள் முதல் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரையிலும் காதோலிக்கமாயிருக்கிறது எனக் கற்பித்த நூல் எது?

கத்தோலிக்க சபையின் மறைக்கல்வி போதனை நூல் 830

58.   ஆயர் உள்ள இடத்தில் சபையும் உள்ளது எனவும் ஆயரின் தலைமையில் திருப்பலி சமர்ப்பிக்கும் தலத்திருச்சபை கத்தோலிக்க சபைதான் எனவும் கற்பித்தவர் யார்?

அந்தியோக்கியாவின் புனித இக்னாத்தியோஸ்

59.   உலகம் முழுவதும் பரவியிருக்கும் சபையைக் கத்தோலிக்கசபை என்பதனால் கத்தோலிக்க சபையை எந்த பொருளில் புரிந்துகொள்ளலாம்?

அனைத்துலகத் திருச்சபை (Universal Church)

60.   ஆதித்திருச்சபையில் தப்பறைகள் போதிப்பவரிடமிருந்து உண்மையான சபையை வேறுபடுத்தி அறிவதற்காக உண்மையான விசுவாசம் கற்பிக்கும் சபை என்னும் பொருளில்  எந்த சொல்லை பயன்படுத்தத் தொடங்கினர்?

'கத்தோலிக்கம்'

61.   உண்மையான விசுவாசம் கற்பிக்கும் சபை எது?

'கத்தோலிக்க திருச்சபை”

62.   "கிறிஸ்துவின் சபை கத்தோலிக்கத் திருச்சபை ஆகும்எனக் கற்பிக்கின்ற திருச்சங்கம் எது?

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம்

63.   காதோலிக்க பண்பை முழுமையாக உள்வாங்கும் சபையை எவ்வாறு  அழைக்கிறோம்?

கத்தோலிக்க திருச்சபை

64.   இயேசுகிறிஸ்து பிரசன்னமாயிருப்பதும், கிறிஸ்துவின் உடலை முழுமையாய் பெற்றுள்ளதும், நிறைவான உண்மை விசுவாசத்தை அறிக்கையிடுவதும். அருளடையாள வாழ்வுடையதும், குருத்துவம் என்னும் அருள்பொழிவு வாயிலாக அப்போஸ்தலிக்க வழிமரபு உடையதும், அன்புறவும், ஒன்றிப்பும் பாதுகாக்கப்படுவதும். உலகெங்கும் பரவியிருப்பதும், எல்லாவிதமான பண்பாடுகளையும் உள்வாங்கிக் கொள்வதுமான சபை தான் முழுமையானது என்ற அர்த்தத்தில் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

கத்தோலிக்கம்

65.   அப்போஸ்தலர்' என்னும் வார்த்தை எந்த கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து  தோன்றியது?

'அப்போஸ்தலஸ்'

66.   சுறியானி மொழியில் 'ஸ்லீஹா' என்ற சொல் யாரைக் குறிக்கிறது?

அப்போஸ்தலர்களை

67.   ஸ்லீஹா அல்லது அப்போஸ்தலர் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?

அனுப்பப்பட்டவர்

68.   ஏதாவது ஒரு திருத்தூதரோடு தொடர்புபடுத்தி நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு அமைக்கப்பட்ட சபை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அப்போஸ்தலிக்க திருச்சபை

69.   அப்போஸ்தலர்களாகிய அடித்தளத்தின் மீதுதான் சபை கட்டப்பட்டிருக்கிறது. இதனைக் குறித்து புனித பவுல் கூறுவது என்ன?

"திருத்தூதர்கள். இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டிடமாய் இருக்கிறீர்கள்" (எபேசியர் 2 : 20).

70.   திருத்தூதர்களின் வழித்தோன்றல்களான ஆயர்கள் எதன் தொடர்ச்சியும் அடையாளமும் ஆவார்கள்?

அப்போஸ்தலிக்கத்தின்

71.   திருத்தூதர்களின் தலைவரான பேதுருவும் மற்ற திருத்தூதர்களும் எவரில் ஒன்றித்து அப்போஸ்தலிக்கத்தின் முழுமையையும் நிறைவையும் தெளிவுபடுத்தினர்?

இயேசுகிறிஸ்துவில்

72.   திருத்தூதர்களின் வழித்தோன்றல்களான ஆயர்கள் அப்போஸ்தலத் தலைவரான பேதுருவின் வழித்தோன்றலான எவரில் ஒன்றித்திருந்தவாறே இயேசுவில் ஒன்றாகும் போதுதான் அப்போஸ்தலிக்கம் முழுமைபெறுகின்றது?

திருத்தந்தையோடு

73.   அன்புறவும் ஒன்றிப்பும் கத்தோலிக்க திருச்சபையில் மட்டுமே நிலைபெற்றிருப்பதால் அப்போஸ்தலிக்கத்தின் முழுமை எத்திருச்சபையில் மட்டுமே உள்ளது?

கத்தோலிக்க திருச்சபை

74.   தொடக்க காலம் முதல் கிறிஸ்துவின் திருச்சபை எப்பெயரால் அழைக்கப்பட்டிருந்தது?

கத்தோலிக்க திருச்சபை

75.   கிறிஸ்துவின் சீடர்கள் 'கிறிஸ்தவர்கள்' என அழைக்கப்பட்டது எங்கே?

அந்தியோக்கியாவில்

76.   கிறிஸ்துவின் திருச்சபையை முதன்முதலாகக் கத்தோலிக்க திருச்சபை என்றழைத்த அந்தியோக்கியாவின் ஆயர் யார்?

புனித இக்னாத்தியோஸ் (கி.பி.110)

77.   கி.பி 451-ல் நடைபெற்ற கால்செதோன் திருச்சங்கம் வரையிலும் உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவச்சபை எப்பெயரால் அறியப்பட்டிருந்தது?

கத்தோலிக்க திருச்சபை

78.   கி.பி. 451-ல் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து போனவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? 

யாக்கோபியர்கள் (பிற்காலத்தில் கிழக்கு ஆர்த்தடாக்ஸ்)

79.   கி.பி.1054-ல் கத்தோலிக்க திருச்சபையின் உறவைவிட்டுச் சென்றவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? 

கிழக்கு கிரேக்கசபைகளின் ஆர்த்தடாக்ஸ்

80.   கி.பி.16-ஆம் நூற்றாண்டில் சபையிலிருந்து பிரிந்து சென்றவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

 பிராட்டஸ்டன்ட்

81.   கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபை பிளவுபட்டதல்ல எனவும், கிறிஸ்து பல சபைகளை நிறுவவில்லை எனவும், அவர் இரத்தம் சிந்தியவாறு நிறுவிய திருச்சபை ஒன்றேதான் எனவும், அது வரலாற்றில் முறிக்கப்பட்டதால். இல்லாமல் போய்விடவில்லை எனவும் தெளிவுப்படுத்தியுள்ள திருச்சபைத் தந்தையர்கள் யாவர்?

புனித சிப்ரியான், புனித அகுஸ்தீனார். புனித கிரகோரி நசியான்சன்

82.   திருச்சபைக்கு வெளியே தூய்மைநிலை, உண்மை ஆகியவற்றின் கூறுகள் பல காணப்பட்ட போதிலும், இவை கிறிஸ்துவின் திருச்சபைக்கே உரித்தான கொடைகள் என்ற முறையிலே எது ஒற்றுமைக்குத் தூண்டுதலாயிருக்கின்றன" (திருச்சபை எண் 8:2)?

கத்தோலிக்க திருச்சபை

83.   விசுவாசம், அருளடையாளங்கள் ஆகியவற்றின் கருத்துக்களில் கத்தோலிக்க திருச்சபைக்குக் கிட்டதட்ட முழுமையான நல்லுறவு கொண்ட மற்று சபை சமூகங்கள் யாவை?

கிழக்கு ஆர்த்தடாக்ஸ் சபை, கிரேக்கநாட்டு ஆர்த்தடாக்ஸ் சபை

84.   மனிதனை மனிதனாகக் கருதவும் மதிக்கவும் செய்வதற்கு ஆர்வத்துடன் செயல்படுகின்ற திருச்சபை எது?

கத்தோலிக்க திருச்சபை

85.   கொலைசெய்தல், ஏதாவது முறையில் உயிருக்கு ஆபத்து விளைவித்தல், தற்கொலை, கருக்கலைப்பு. இன்று தாண்டவமாடிக்கொண்டிருக்கும் கொலைக் கலாச்சாரம் (Culture of Death) ஆகியவற்றிற்கெதிராகத் துணிவுடன் அறைகூவல் விடுக்கும் திருச்சபை எது?

கத்தோலிக்க திருச்சபை

86.   ஆயிரக்கணக்கான தமியான் அடியார்கள் எத்திருச்சபையில் தோன்றியிருக்கின்றனர்?

கத்தோலிக்க திருச்சபை

87.    வழியோரத்தில் காணப்பட்ட குற்றுயிரான ஒரு நபரின் காயங்களில் மருந்து வைத்து கட்டுவது யாருக்காக என ஒருவர் கேட்டபோது அன்னை தெரசா கூறியது என்ன?  

"பதினாயிரம் ரூபாய் தந்தாலும் நான் இதைச் செய்யமாட்டேன், கடவுளுக்காக மட்டுமே நான் இதைச் செய்கிறேன். சிலுவையில் தொங்கிய போது தாகத்தைத் தாங்கிக் கொண்ட இயேசுவின் முகம் நோயுற்றவரின், ஆதரவற்றிவரின் முகத்தில் தெளிவாய்த் தெரிவதனால் மட்டுமே நான் இதனைச் செய்கிறேன்"

88.   பாதிக்கப்பட்டோரின் குரலாகச் செயல்படுவது எது?

கத்தோலிக்க திருச்சபை

89.   பாலஸ்தீனர்களின் பிரச்சினையால் சொந்த நாட்டிலிருந்து அடித்து விரட்டப்பட்டவர்களுக்கு சொந்தமானதொரு தாய்நாட்டிற்கு உரிமையுள்ளது என்னும் இயல்பான நியமத்தை அவர்களுக்காக இன்றுவரை வாதாடி வருவது எத்திருச்சபை ஆகும்?

கத்தோலிக்க திருச்சபை

90.   எல்லாவிதமான சுரண்டலுக்கும் அடிப்படைக் காரணம் தனியார் சொத்து தான் எனவும், தனியார் சொத்து இல்லை எனில் மட்டுமே சுரண்டலையும் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்றவர் யார்?

காரல் மார்க்ஸ்

91.   தனியார் சொத்தினை முதல் பாவமாகக் கருத்தில் கொண்டவர் யார்?

 காரல் மார்க்ஸ்

92.   கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்கு எத்திருச்சபை மிகப்பெரும் பங்காற்றியுள்ளது?

கத்தோலிக்க திருச்சபை

93.   பொதுவுடமைக் கொள்கையின் மனிதனைக் குறித்த தவறான கண்ணோட்டத்தையும், அதன் கடவுள் மறுப்புக் கொள்கையையும் மனித உரிமைகளைத் தடை செய்யும் செயல்களையும், இரத்தம் சிந்தும் புரட்சியையும் தொடக்கத்திலிருந்தே எத்திருச்சபை எதிர்த்து வந்தது?

கத்தோலிக்க திருச்சபை

94.   கம்யூனிசம் என்னும் பெரும் விபத்திலிருந்து மனித குலத்தை ஓரளவுக்கேனும் காப்பாற்றியது எத்திருச்சபை ஆகும்?

கத்தோலிக்க திருச்சபை

95.   உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தை உலக முடிவுவரை தமது மறைஉடலாகிய திருச்சபையில் எதன் வாயிலாக அனுபவிக்கின்றனர்?

திருவிவிலியம், தூய நற்கருணை

96.   தூய நற்கருணையிலுள்ள இறை பிரசன்னம் போலவே திருவிவிலியத்திலும் கடவுளின் பிரசன்னம் உண்டு எனவும் அதனால் நம்பிக்கை கொள்வோருக்கு இறைவார்த்தையின் மேசையிலிருந்தும் அப்பத்தின் மேசையிலிருந்தும் ஊட்டம் அளிக்கவேண்டும் எனவும் கற்பிக்கின்ற திருச்சங்கம் எது?

இரண்டம் வத்திக்கான் திருச்சங்கம்

97.   16-ஆம் நூற்றாண்டில் பிராட்டஸ்டன்ட் சபைகள் பறைசாற்றிய மீட்புக்கு நம்பிக்கையும் விவிலியமும் மட்டுமே போதுமானது என்ற அறிக்கை எது?

“Sola Fede” “Sola Scriptura"

98.   ஆதித்திருச்சபைமுதல் எக்காலம் வரையிலும் எல்லாக் கிறிஸ்தவச் சமூகங்களும் திருவிவிலியத்திற்கும், தூயநற்கருணைக்கும் சமமான முக்கியத்துவம் அளித்திருந்தது?

16-ஆம் நூற்றாண்டு வரை

99.   திருவிவிலியம் மட்டும் போதும் எனவும் தூய நற்கருணை தேவையில்லை எனவும் கற்பிக்கும் திருச்சபைகள் எவை?

புராட்டஸ்டன்ட் திருச்சபைகள்

100.                             நற்கருணையை அடித்தளமாகக் கொண்ட ஒரு அருள் அடையாளமாவது எத்திருச்சபை ஆகும்?

கத்தோலிக்க திருச்சபை

101.                             எத்திருச்சபையின் உயிரும் ஆற்றலும் அனைத்தும் தூய நற்கருணையேயாகும். ஆகும்?

கத்தோலிக்க திருச்சபை

102.                             கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி இறந்த ஆயிரக்கணக்கான இரத்தசாட்சிகளின் இரத்தத்தால் உறுதிப்படுத்தப்பட்ட அடித்தளத்தின் மீது வளர்ந்து வந்த திருச்சபை எது?

கத்தோலிக்கத் திருச்சபை.

103.                             புராட்டஸ்டன்ட் புரட்சிக்குப்பின் தூய்மையான வாழ்க்கையினால் துறவு விரதத்தை ஏற்றுக்கொண்ட புனிதர்களுள் சிலரைக்கூறுக?

புனித பிரான்சிஸ் அசிசி. டொமினிக்கன் சபை நிறுவனரான புனித டொமினிக், இயேசுசபை நிறுவனரான புனித இக்னேஷியஸ் லயோலா. மறைத்தூதுப் பணியாளரின் பரிந்துரையாளராகிய புனித குழந்தை தெரசா, சிறைபிடிக்கப்பட்டு உடனிருந்தவருக்காக உயிரைச் சமர்ப்பித்த மாக்ஸ்மில்லியன் கோல்போ, தொழுநோயாளிகளுக்கிடையே பணிவிடை செய்து தொழுநோயால் இறந்த தமியான் அடிகளார். வாழ்ந்திருக்கும் போதே புனிதையென அங்கீகரிக்கப்பட்ட ஆதரவற்றவர்களின் தாயான அன்னை தெரேசா. இந்தியாவில் முதல் புனிதை புனித அல்போன்சா, அருளாளரான சாவற குறியாக்கோஸ் அருளாளரான தேவசகாயம் பிள்ளை, சபையின் ஒற்றுமைக்காகத் தியாகங்கள் அனுபவித்த மறுஒன்றிப்பின் இறைவாக்கினரான இறைஊழியர் மார் இவானியோஸ்

104.                             இரத்தசாட்சிகளையும் புனிதர்களையும் வணங்கவும், மேன்மைப்படுத்தவும், அவர்களது முன் மாதிரியைப் பின்பற்றி வாழவும், அவர்களது பரிந்துரையை வேண்டிக்கொள்ளவும் செய்கின்ற திருச்சபை எது?

கத்தோலிக்க திருச்சபை

105.                             கிறிஸ்து வாயிலாக வெளிப்படுத்தப்பட்ட விசுவாசத் தொகுப்புகளையும், கிறிஸ்துவின் நற்செய்தி வாயிலாக வெளிப்படுத்தப்பட்ட அறநெறி விழுமியங்களையும் உலக முடிவுவரை நம்பிக்கைக்குரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டிய கடமை எத்திருச்சபைக்கு உள்ளது?

கத்தோலிக்க திருச்சபைக்கு

106.                             ஒழுக்க நெறிகளைக் காத்துக்கொள்வதில் எந்த சமரசத்திற்கும் தயாராகாத கடுமையான நிலையை  கைக்கொண்டுள்ள  திருச்சபை எது?

கத்தோலிக்க திருச்சபை

107.                             கருக்கலைப்பு, கருணை கொலை. மனித உயிரோடுள்ள நெறிதவறிய பாலியல் உறவுகள், தனிநபர் உரிமை மறுப்பு.மனித உயிரோடுள்ள அவமதிப்பு. மணவிலக்கு, போர்கள் ஆகியன போன்ற பொதுவான தீமைகளுக்கு எதிராகக் கத்தோலிக்க திருச்சபை உறுதியான நடவடிக்கைகள் கையாண்டுவருவதன் மூலம் இச்சபை உலகின் நல்லொழுக்க நெறிகளின் காவலாளியாகவும் செயல்பட்டும் வருகின்ற திருச்சபை எது?

கத்தோலிக்க திருச்சபை

108.                             கிறிஸ்துவின் சபைக்கான முழுமைத் தன்மையுடையது எது?

கத்தோலிக்க திருச்சபை

109.                             மனித மாண்பினை ஏற்றுக்கொண்டு அதனைப் பாதுகாத்து வரும் திருச்சபை எது?

கத்தோலிக்க திருச்சபை

110.                             குரலெழுப்ப இயலாதவர்களின் குரலாகச் செயலாற்றி வரும் திருச்சபை எது?

கத்தோலிக்க திருச்சபை

111.                             உலகியலான நாத்திகக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடி வரும் திருச்சபை எது?

கத்தோலிக்க திருச்சபை

112.                             இறைவார்த்தையையும் தூய நற்கருணையையும் இறைமக்களுக்கு இதமாகவும், அதிகாரப்பொறுப்போடும் வழங்கி வரும் திருச்சபை எது?

கத்தோலிக்க திருச்சபை

113.                             இரத்த சாட்சிகள், புனிதர்கள் ஆகியோரின் பரிந்துரைகள் வேண்டும் திருச்சபை எது?

கத்தோலிக்க திருச்சபை

114.                             உலக நல்லொழுக்க நெறிகளின் காவலாளியான திருச்சபை எது?

கத்தோலிக்க திருச்சபை

 

 

 


Comments

Popular posts from this blog

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை