திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)
திருவழிபாட்டு க்விஸ்
(மறைக்கல்வி
பாடங்களிலிருந்து)
உள்ளடக்கம்
1.
5. 12. ஆலயத்தின் அமைப்பு
2.
5. 13 ஆலயத்தின் புனிதப் பொருட்கள்
3.
5. 14 திருவழிபாட்டில் அடையாளச் செயல்கள்
4.
6. 12. திருப்பலி
முன்னுரை
5.
13 திருப்பலியின் அமைப்பு
6.
14 திருப்பலிப் பாடல்கள்
7.
15 வீடாசீர்வாதம்
8.
6. 16 அடக்கத் திருச்சடங்கு
9.
6. 17 நோன்பும் உபவாசமும்
10.
7. 14 திருநாள்கள்
11.
7. 15 திருவழிபாட்டு ஆண்டு
12. 8. 9 திருமுழுக்கு
13.
8. 10 உறுதி பூசுதல்
14.
8. 11 நற்கருணை
15.
8. 12 ஒப்புரவு
16.
8. 13 நோயில்பூசுதல்
17.
8. 14 குருத்துவம்
18.
8. 15 திருமணம்
19.
9. 3 மலங்கரை கத்தோலிக்க
திருவழிபாடு
20.
10.5 திருப்பலியின் ஆயத்தத் திருச்சடங்கு
21.
10.6 திருப்பலியில் இறைவார்த்தை வழிபாடு
22.
10.7 திருப்பலி - பலி அர்ப்பணம்
23.
10.8 திருப்பலி – பலிவிருந்து
மறைக்கல்வியின் 5 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான நூல்களின்
திருவழிபாட்டுப்பகுதியின் பாடங்களிலிருந்து குறு வினா விடைகள் வடிவில் இஃது
தயாரிக்கப்பட்டுள்ளது.
5. 12. ஆலயத்தின் அமைப்பு
1.
மலங்கரை மரபில் ஆலயங்களை கிழக்கு தரிசனமாக அமைப்பது ஏன்? நீதியின் சூரியனாகிய ஆண்டவரின்
இரண்டாம் வருகையும் கிழக்கிலிருந்தே வரும்
2.
கிழக்கிலிருந்து சூரியன் உதிப்பதைப்போல நீதியின் சூரியனாகிய
ஆண்டவரின் இரண்டாம் வருகையும் கிழக்கிலிருந்தே என எதிர்பார்க்கின்றோம்.
3.
இறைமக்கள் சமூகம் ஆண்டவரின் இரண்டாம் வருகையை
எதிர்நோக்கி கிழக்கு நோக்கி நின்று செபிக்கின்றனர்.
4.
மலங்கரை தேவாலயத்தின் அமைப்பு சாலமோன் கட்டி முடித்த எருசலேம்
தேவாலயத்தை ஒத்திருக்கிறது.
5.
எருசலேம் ஆலயத்தில் லேவியர் எப்பகுதியில் நுழைய
அனுமதிக்கப்பட்டனர்? தூயகத்தில்
6.
எருசலேம் ஆலயத்தில் தலைமை குருக்கள் எப்பகுதியில் நுழைய
அனுமதிக்கப்பட்டனர்? அதித்தூயகத்துள் (திருத்தூயகம்)
7.
மலங்கரை ஆலயத்தின் நான்கு பகுதிகள் யாவை? கிழக்கு எல்லையில் அதிதூயகத்திற்கு
சமமாக மத்பஹா, அதற்கு கீழாக அழிக்ககம்
என்றழைக்கப்படுகின்ற கெஸ்த்றூமா, அதற்கு கீழாக இறைமக்கள் நிற்கின்ற ஹைக்கலா, மேற்கு எல்லையில் எருசலேம்
தேவாலயத்தின் வெளிப்பகுதிக்கு சமமான மோண்டளம்.
8.
மத்பஹாவின் மறுபெயர்கள் எவை? பலிபீடம், வேள்விக்கூடம், தூயகம்
9.
ஆலயத்தின் மிகப்புனிதமான இடம் எனப்படுவது எது? மத்பஹா.
10. 'மத்பஹா' என்ற சுறியானி வார்த்தைக்கு அர்த்தம்
என்ன? 'திருப்பலி ஒப்பு கொடுக்கும் பீடம்' என்றும் 'திருப்பலிபீடம் அமைந்துள்ள பகுதி'
11. இறைவனின் பிரசன்னமும் மகிமையும் இந்த
இடத்தில் சிறப்பாக காணப்படுவதால் மிகவும் பரிசுத்தமான இடம் என்று அழைக்கப்படுவது
எது? மத்பஹா
12. கெஸ்த்றூமாவிலிருந்து ஒன்பது படிகளால்
உயர்ந்த இடம் எது? மத்பஹா.
13. கெஸ்த்றூமாவிலிருந்து மத்பஹாவுக்கு குறைந்தது எத்தனை படிகளாவது இருக்க
வேண்டும்? மூன்று
14. கடவுளின் அரியணையாகிய த்றோணோஸ் (பலிபீடம்) அமைந்திருக்கும் இடத்திலிருந்து
ஒன்பது படிகள் கீழே காணப்படுவது யாருடைய ஒன்பது குழுக்களை குறிக்கின்றது? வானதூதர்களின்
15. மத்பஹாவுக்கு மு்ன்னால் உள்ள மூன்று
படிகள் யாரைக் குறிக்கின்றன? மூன்று மூன்று நிரைகள் வானதூதர்கள்
16. திருச்சபைத் தந்தையாகிய ஏதென்ஸ் நகர்
திவன்னாசியோஸ் மத்பஹாவை யார் எனக் குறிப்பிடுகின்றார்? 'இம்மானுவேல்'
17. இம்மானுவேல் என்ற வார்த்தையின் பொருள்
என்ன? 'கடவுள் நம்முடன் இருக்கிறார்'
18. திருச்சபை தந்தையர்கள் மத்பஹாவை எதன் முன்னடையாளமாக
சித்தரிக்கின்றனர்? பரலோகத்தின்
19. கெஸ்த்றூமாவை (அழிக்ககம்) எருசலேம்
தேவாலயத்தின் எப்பகுதியோடு இதனை ஒப்புமைப்படுத்தலாம்? தூய இடத்தோடு
20. 'கெஸ்த்றூமா' என்ற சுறியானி வார்த்தைக்குப் பொருள்
என்ன? தரையிலிருந்து உயர்ந்த இடம்
21. மத்பஹாவுக்கும் ஹைக்கலாவிற்கும்
இடையேயுள்ள உயர்ந்த இடம் எது? கெஸ்த்றூமா
22. அழிகளால் வேறுபடுத்தி இருப்பதால்
மலங்கரை திருச்சபையில் கெஸ்த்றூமாவை எவ்வாறு
அழைக்கிறோம்? அழிக்ககம்
23. மத்பஹாவில் நுழையாத குருக்களும்
திருத்தொண்டர்களும் இங்கே நிற்கின்ற பகுதி எது? கெஸ்த்றூமா
24. பாடகர் குழுவினர் நிற்கின்ற இடம் எது?
கெஸ்த்றூமா
25. மலங்கரை ஆலயங்களில் சிலுவையும்
திருவிவிலியமும் வைக்கப்பட்டிருக்கும் செப மேசை அமைந்துள்ள பகுதி எது? கெஸ்த்றூமா
26. ஆலயத்தின் மிகப்பெரிய இறைமக்கள்
நிற்கும் பகுதி எது? ஹைக்கலா
27. ஹைக்கலா என்ற சுறியானி வார்த்தைக்குப்
பொருள் என்ன? வழிபாட்டு இடம்
28. ஹைக்கலாவை எருசலேம் தேவாலயத்தின் எதனுடன்
ஒப்புமைப்படுத்தலாம்? உட்பகுதியுடன்
29. எங்கே பெண்கள் ஆண்களின் பின்னால்
நின்று கொண்டு திருவழிபாடுகளில் பங்கேற்றனர்? எருசலேம் தேவாலயத்தில்
30. ஹைக்கலாவின் வடக்குப் பகுதியில்
ஆண்களும் தெற்குப் பகுதியில் பெண்களும் நிற்கின்ற முறையை நடைமுறைப்படுத்தியவர்
யார்? பேராயர் மார் இவானியோஸ்
31. திருச்சபைத் தந்தையர்கள் ஹைக்கலாவை எதன்
அடையாளமாக சித்தரிக்கின்றனர்? பூமியின்
32. ஆலயத்துள் தொங்கும் விளக்கு எங்கே காணப்படுகிறது?
ஹைக்கலாவின் நடுப்பகுதியில்
33. ஹைக்கலாவில் நுழைவதற்கு முன்னால்
விசுவாசிகள் தலைவணங்கி சிலுவை வரைந்து என்ன கூறுகின்றனர்? 'எரிபலியுடன் உமது இல்லத்தினுள்
செல்வேன்: என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்' (திருப்பாடல்கள் 66:13).
34. விசுவாசிகள் ஹைக்கலாயில் நுழைந்து
வணங்கிய பின் மன்றாடுவது என்ன? 'நானோ உம் பேரருளால் உமது இல்லம் சென்றிடுவேன்: உம்
திருத்தூயகத்தை நோக்கி இறையச்சத்துடன் உம்மைப் பணிந்திடுவேன்' (திருப்பாடல்கள் 5:7).
35. எருசலேம் தேவாலயத்தின்
வெளிப்பகுதிக்கு சமமான பகுதி எது? மோண்டளம் (ஆறுதலின் இடம்)
36. ஆலயத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள
மோண்டளத்தில் தொடக்கத்திருச்சபையில் அமர்ந்திருந்தவர்கள் யாவர்? திருமுழுக்கு
பெறாதவர்கள், வேதத்தைக் கற்பவர்கள், அனுதாபிகள், தண்டனை பெற்றவர்கள் போன்றவர்களுக்கு
வேளை செபங்களிலும் திருப்பலியின் முதல் பகுதியான நற்செய்தி ஆராதனையிலும் பங்கு
கொள்வதற்கான இடமே இது.
37. ஆலயத்தைச் சுற்றி பவனியின் போது
விவிலியம் வாசிக்கப்படும் பகுதி எது? மோண்டளம்
38. மோண்டளம் முதல் மத்பஹா வரையுள்ள
படிநிலைகளின் பொருள் என்ன? பாவநிலையிலிருந்து - தூய்மை நிலைக்குள்ள வளர்ச்சி
39. திருவழிபாட்டுக் காலத்தின் இரண்டாம்
ஞாயிறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஹுதோஸ் ஈத்தோ
40. ஹுதோஸ் ஈத்தோ என்றால் என்ன? 'திருச்சபையின் புதிதாக்கம்'
41. ஹுதோஸ் ஈத்தோ நாளில் நற்செய்தி
வாசகத்திற்குப் பின் பாடுகின்ற பாடல் எது? தூய்மை மிகும் தூயகமுள் நுழைவோராம் குருமார்களை
அழைத்துரைப்பீர்! இங்ஙனமாய் நன்முறையில் கைகழுவி, அகத்தூய்மை அடைந்த பின்பே
திருத்தலத்தில் நுழைந்திடுவீர்! ஹா-உ-ஹா நெருப்பை அன்றோ சேவிக்கின்றீர்!
42. “என் இல்லம் மக்களினங்கள்
அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்” | (மாற்கு 11:17).
5. 13 ஆலயத்தின் புனிதப் பொருட்கள்
1.
ஆலயம் என்றால் என்ன? கடவுள் வாழும் இல்லம்
2.
ஆலயத்தில் நடத்தப்படும் திருவழிபாடு எதன் முன்சுவை
ஆகும்? பரலோக அனுபவத்தின்.
3.
ஆலயத்தின் அமைப்பும் அதில் பயன்படுத்துகின்ற
புனிதப்பொருட்களும் எதனை எடுத்துக்காட்டுகின்றன? இறைபிரசன்னத்தை
4.
'த்றோணோஸ்' என்ற சுறியானி வார்த்தைக்கு என்ன பொருள்? 'அரியணை'
5.
விண்ணகத் தந்தையின் சிறப்பான பிரசன்னம் த்றோணோசில்
காணப்படுவதால் அதை எவ்வாறு அழைக்கிறோம்? விண்ணக அரசர் வீற்றிருக்கும் அரியணை
6.
எருசலேம் தேவாலயத்தில் அமைந்திருந்த இரக்கத்தின்
இருக்கையைக் (எபி. 9:5) குறிக்கும்
ஆலயப் பகுதி எது? த்றோணோஸ்
7.
திருப்பலியின் வாயிலாக இயேசு மெசியாவின் சிலுவை
மரணத்தையும் கல்லறை அடக்கத்தையும் உயிர்த்தெழுதலையும் நினைவு கூர்வதனால் த்றோணோஸ் எதனைக்
குறிக்கின்றது? கோகுல்த்தா மலையையும் ஆண்டவரின் கல்லறையையும்
8.
வாழ்வின் அப்பமாகிய தூய நற்கருணை த்றோணோசின் மேல்
கொண்டாடப்படுவதால் அஃது எவ்வாறு அழைக்கப்படுகிறது? வாழ்வின் மேசை
9.
நமது ஆண்டவரை குறிக்கின்ற திருப்பலி நிறைவேற்றப்படும் த்றோணோஸ்
எவ்வாறு அழைக்கப்படுகிறது? பலி பீடம்
10. விரிகூட்டத்தின் பல்வேறு நிறங்கள்
எவற்றைக் குறிப்பிடுகின்றன? விரிகூட்டத்தின் நடுப்பகுதி வெள்ளையும் அதன் பின்னால்
பச்சையும் மிகவும் பின்னால் சிவப்பும் தான் இதன் நிறங்கள். வெள்ளை நிறம் தூய
கத்தோலிக்க திருச்சபையையும், பச்சை நிறம் பல வண்ணங்கள் நிறைந்த பூமியையும், சிவப்பு நிறம் உலகத்தையும்
குறிக்கின்றது.
11. த்றோணோஸை அலங்கரிப்பதற்கான பட்டுத்
துணி எது? சித்தோலை
12. கல்லறை அடக்க வேளையில் இயேசுவின்
திருவுடலைப் பொதிந்த மேல்தரமான பட்டுத் துணியைக் குறிப்பது எது? சித்தோலை
13. அரியணையிலிருக்கும் ஆண்டவரின்
மாட்சியைக் குறிப்பிடுவது எது? சித்தோலை
14. ஒரே கடவுள் மூன்று ஆட்களாக
அறியப்படுவதால் எந்த ஒரே துணியானது மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது? சித்தோலை
15. சித்தோலையின் மூன்று பகுதிகளிலுமுள்ள
ஒரே நிறம் தெளிவுபடுத்துவது என்ன? திரித்துவத்தின் மூன்று ஆட்களும் உள்ளியல்பில்
சரிநிகரானவர்கள்
16. மனித அவதாரம் எடுத்த கிறிஸ்துவிற்கு
மூவோரிறைவனில் என்றுமுள்ள உறவை குறிக்கின்ற துணி எது? சித்தோலை
17. மலங்கரை முறையில் சிலுவையில்
அறைப்பட்ட உருவமில்லாத சிலுவையை பயன்படுத்துவது ஏன்? கிழக்குத் திருச்சபைகளின் மரபில்
சிலுவை ஆண்டவரின் பாடுகளையும், மரணத்தையும் மட்டுமன்று உயிர்த்தெழுந்த இயேசுவையும்
குறிக்கின்றது. எனவே உருவமில்லாத சிலுவையை நாம் பயன்படுத்துகிறோம்.
18. தூபகலசம் எதைக் குறிக்கின்றது? இறைத்தாயை
19. தூபகலசத்தில் நெருப்பு யாரைக்
குறிப்பிடுகின்றது? தூய கன்னிமரியின் கருவில் வாழ்ந்த இறைவனை
20. தூபகலசத்தில் சங்கிலிகள் யாரைக் குறிக்கின்றன? முதலாவது
தந்தையாகிய கடவுளையும், இரண்டாவதும்
மூன்றாவதுமான சங்கிலிகள் மனித அவதாரம் செய்த இறைவனும் மனிதனுமான இறைமகனையும், நான்காவது சங்கிலி தூய ஆவியையும்
குறிக்கின்றன.
21. தூபகலசத்தில் சங்கிலிகளை ஒன்றிக்கின்ற
மேலுள்ள வளையம் யாரைக் குறிக்கின்றது? தூய திருத்துவத்தின் ஒன்றிப்பை
22. தூபகலசத்தில் சங்கிலிகளிலுள்ள 12 மணிகள் யாரைக் குறிக்கின்றன? 12 திருத்தூதர்களை
23. தூபகலசத்தில் 72 கண்ணிகள் யாரைக் குறிக்கின்றன? 72 சீடர்களை
24. தூப கலசத்தின் மேல்தட்டு எதனை
அடையாளப்படுத்துகின்றது? விண்ணகத்தை
25. தூப கலசத்தின் அடித்தட்டு எதனை
அடையாளப்படுத்துகின்றது? மண்ணகத்தை
26. தூப கலசத்தின் போடப்படும் கரி எதனை
அடையாளப்படுத்துகின்றது? பாவிகளான மனித குலத்தையும், தீ தூய ஆவியாகிய கடவுளையும்
27. தூப கலசத்திலிருந்து உயர்கின்ற தூபம்
மனிதர்களின் மன்றாட்டும் புண்ணியங்களும் யாருக்குக் காணிக்கையாக
அர்ப்பணிக்கப்படுவதை குறிக்கின்றது? இறைவனுக்கு
28. சிறு பலிபீடம் எனப்படுவது யாது? தபலீத்தா(சிறிய த்றோணோஸ்)
29. தபலீத்தாவில் என்ன எழுதப்படுகிறது? தபலீத்தாவின் ஒருபுறம் புனித
மூறோனால் அர்ச்சிக்கப்படுகிறது. மறுபக்கம் அர்ச்சித்த ஆயரின் பெயரும், அர்ச்சிக்கப்பட்ட நாளும் சிலுவை
வடிவில் சுறியானியில் எழுதப்பட்டிருக்கும். ஆயரின் அப்போஸ்தலிக்க அதிகாரத்தையே இது
குறிப்பிடுகிறது.
30. திருப்பலிக்கான கிண்ணமும், தட்டமும் (காசா, பீலாசா) வைக்கக்கூடிய ஒரு சிறிய பலகையின்
பெயர் என்ன? தபலீத்தா
31. அவசர வேளைகளில் அர்ச்சிக்கப்பட்ட
த்றோணோஸ் இல்லாமலிருந்தாலும் திருப்பலியை எதன் மேல் நிறைவேற்றலாம்? தபலீத்தா
32. தப்லீத்தா எதைக் குறிப்பிடுகிறது? மீட்பின்
சிலுவையை
33. மலங்கரை சபையில் தபலீத்தா எதனால் செய்யப்படுகிறது?
மரத்தினால்
34. காசாவையும் பீலாசாவையும் மூடுகின்ற
ஒரு வெள்ளைத் துணிக்குப் பெயர் என்ன? சோசப்பா
(மென்துகில்)
35. புனித மறைபொருட்களில்
மறைந்திருக்கின்ற இறைவனின் காண இயலாத தன்மையை குறிக்கும் துணி எது? சோசப்பா
(மென்துகில்)
36. இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்கும்
பாலைவனத்தில் வைத்து தண்ணீர் வழங்கிய நெருப்பு பாறையைக் குறிக்கும் துணி எது?
சோசப்பா (மென்துகில்)
37. ஆண்டவரின் கல்லறையில் வைக்கப்பட்டுள்ள
கல்லை நினைவூட்டுகின்ற துணி எது? சோசப்பா (மென்துகில்)
38. த்றோணோசின் நடுவிலுள்ள சிலுவை யாரைக் குறிப்பிடுகிறது?
இயேசுவை
39. த்றோணோசின் மறைபொருள் தன்மையையும்
புனிதத் தன்மையையும் நினைவூட்டுவது எது? திரை
40. எருசலேம் தேவாலயத்தின் தூயகத்தையும்
அதிதூயகத்தையும் பிரித்துக் காட்ட பயன்படுத்தப்பட்டது எது? திரை.
41. ஆலயத்தில் விண்ணகத்திற்கும்
மண்ணகத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை குறிப்பது எது? திரை
42. தலைமைக் குருவாகிய கிறிஸ்து மனித
குலத்திற்காக பலி செலுத்துவதைப் போன்று மத்பஹாயில் விசுவாசிகளுக்காக பலி
நிறைவேற்றுகின்றவர் யார்? குருக்கள்
43. திருப்பலிக்கான இரசத்தை வைக்கின்ற
பாத்திரத்தின் பெயர் என்ன? காசா (கிண்ணம்).
44. திருப்பலிக்கான அப்பத்தை வைக்கின்ற
பாத்திரத்தின் பெயர் என்ன? பீலாசா (தட்டம்).
45. உடன்படிக்கை பேழையில் மன்னா
வைக்கப்பட்டிருந்த பொற்சாடிக்கு சமமான திருப்பலிப்பாத்திரங்கள் எவை? காசாவும்
பீலாசாவும்.
46. காசாவும் பீலாசாவும் எதனைக் குறிக்கின்றன?
ஆண்டவரின் திருவுடல் வைக்கப்பட்டிருந்த கல்லறை
47. தேவ நற்கருணை பாதுகாக்கப்படும் பேழைக்குப்
பெயர் என்ன? சக்றாரி (நற்கருணைப் பேழை)
48. மலங்கரை வழிபாட்டில் எரியும் மெழுகுவர்த்திகள்
வெளிப்படுத்துவது என்ன?
இறைப்பிரசன்னத்தை. மெழுகுவர்த்தியிலிருந்து எழும் ஒளியானது பாவ இருளினின்று
விசுவாசிகள் ஒளியை நோக்கி திரும்ப வேண்டுமென்று கற்பிக்கிறது.
49. மத்பஹாயில் வைக்கப்பட்டுள்ள பதிமூன்று
மெழுகுவர்த்திகள் யாரைக் குறிக்கின்றன? பன்னிரண்டு மெழுகுவர்த்திகள் பன்னிரெண்டு
அப்போஸ்தலர்களையும் நடுவிலுள்ள முக்கிய மெழுகுவர்த்தி இறைபிரசன்னத்தை (இயேசுவை)
குறிக்கின்றது.
50. மலங்கரை வழிபாட்டில் நற்செய்தி
பீடத்தின் முக்கியத்துவம் என்ன? விசுவாசிகளுக்கு இரண்டு வகையான ஆன்மீக உணவு
தேவாலயத்திலிருந்து கிடைக்கிறது. நமது ஆண்டவரின் திருஉடலும், திருஇரத்தமும், இறைவனின் திருவார்த்தையும் ஆகும்.
முதலாவது த்றோணோசிலிருந்தும், இரண்டாவது நற்செய்தி பீடத்திலிருந்தும் கிடைக்கிறது.
51. கபலானா (திருப்பாத்திர மூடி) என்றால்
என்ன? காசாவையும் பீலாசாவையும்
மூடப்பயன்படும் சிவப்புத் துணியாலான மூடி
52. மலங்கரை வழிபாட்டில் மணி மற்றும்
மறுபஹாஸா பயன்படுத்துவதன் பொருள் என்ன? இறைபிரசன்னத்தின் நினைவும், வானதூதர்களின் புகழ்ச்சியின்
அடையாளமுமாகும்.
53. மறுபஹாஸா எதனைக் குறிக்கின்றது? த்றோணோசை
சுற்றி நிற்கும் வானதூதர்களை.
54. மறுபஹாஸாவின் விசிறி
போன்ற அமைப்பு
எதனைக் குறிக்கின்றது? வானதூதர்களின் சிறகுகளை
55. சிலுவையை சுறியானியில் எவ்வாறு அழைக்கிறோம்? ஸ்லீபோ
56. சிலுவையை மதிப்பதைப் பற்றியும், சிலுவை வரைவதைப்பற்றியும் சிலுவையின்
குக்கிலியோனில் (தூப மன்றாட்டு) பாடும் பாடல் எது? "வாழ்வீயும் நம் சிலுவையினை
அல்பகலென்றும் வணங்குகிறோம் நாங்கள் அரணும் சரணும் அது வென்றே நெற்றியதன் மேல் வரைகின்றோம் நாங்கள் கா-க்கும் சிலுவை அல்லும்
பகலும் பகைவனவன் சேனை-நின்று தினம்-எம்மை”.
5. 14 திருவழிபாட்டில் அடையாளச் செயல்கள்
1.
அடையாளம் என்றால் என்ன? சில உண்மைகளை புரியவைப்பதற்காக நாம்
பயன்படுத்துகின்ற சின்னங்களே அடையாளங்கள்.
2.
மலங்கரை திருவழிபாட்டு முறைப்படி கிழக்குத் திசை நோக்கி
மன்றாடுவது ஏன்? நம் ஆண்டவர் கிழக்கிலிருந்து மீண்டு வருவாரென்ற
எதிர்பார்ப்பு
3.
கிழக்குத் திசையில் ஆண்டவரின் இரண்டாம் வருகையை பற்றி
விவிலியத்தில் நற்செய்தியில் உள்ள பகுதி எது? மத்தேயு 24:27-30
4.
சிலுவை வரையும் போது நாம் எவற்றை நினைவு கூர்கின்றோம்? சிலுவை வரையும் போது நமது ஆண்டவரின்
பாடுகளை நினைவு கூரவும் அவற்றோடு ஒன்றிணையவும் செய்கிறோம்.
5.
தூப அர்ப்பணம் எப்போது நடத்துகின்றோம்? திருப்பலியிலும்
வேளை செபங்களிலும், அருளடையாளங்களிலும் திருச்சடங்குகளிலும்
6.
நமது மன்றாட்டுக்கள் விண்ணகத்திற்கு உயர்வதன் அடையாளமான
செயல் என்ன? தூப அர்ப்பணம்.
7.
நபர்களையும் உடைமைகளையும் இடங்களையும்
புனிதப்படுத்துவதனுடையவும் மதிப்பளிப்பதனுடையவும் அடையாளமாக நடத்துகின்ற
திருவழிபாட்டுச் செயல் என்ன? தூப அர்ப்பணம்.
8.
மலங்கரை திருவழிபாட்டில் மத்பஹாவில் திருப்பலியில் நாம்
நடத்துகின்ற பவனி எத்தனை முறை நடத்தப்படுகிறது? 1. பகிரங்கத் திருச்சடங்கு தொடங்கும்போது, 2. தூபகலசம் வாழ்த்தியபின், 3. தேவநற்கருணை பெறுவதற்கு முன், 4. தேவநற்கருணை உட்கொண்ட பின்.
9.
நமது ஆராதனை முறைகளில் நாம் நடத்துகின்ற பவனிகள்
அனைத்தும் எதன் அடையாளமாக நிலைகொள்கின்றன? புனித பயணத்தின்
10. திருச்சபை வாழ்வு எதனை நோக்கிய திருச்சபையின்
திருப்பயணம் ஆகும்? விண்ணக கானான் அல்லது விண்ணரசை நோக்கிய
11. அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும், பாவத்திலிருந்து நிலைவாழ்விற்கும்
இருளிலிருந்து ஒளிக்குமுள்ள இறைமக்களின் புனித பயணம் எனப்படுவது எது? திருச்சபை
வாழ்வு
12. மலங்கரை கத்தோலிக்க திருவழிபாடு எந்த
வழிபாட்டுமுறை குடும்பத்தை சார்ந்தது? அந்தியோக்கியன் திருவழிபாட்டுமுறை குடும்பம்
13. கிழக்குத் திசையில் மலங்கரை வழிபாட்டு
முக்கியச் செயல்கள் என்ன? மலங்கரை ஆலயங்களை கிழக்கு மேற்காக கட்டி எழுப்புகிறோம்.
கிழக்குத் திசை நோக்கி நின்று திருப்பலி நிறைவேற்றுகிறோம். இறந்தவர்களை கிழக்கு
முகமாக அடக்கம் செய்கிறோம்.
14. மலங்கரை திருவழிபாட்டில் எப்போது
சிலுவை வரைய வேண்டும்? திருத்துவபுகழ் கூறும்போதும், ஸ்லீபா என்ற வார்த்தையை சொல்லும்
போதும், சிலுவையை முத்தம் செய்யும் போதும் ஆசீர்வாதம் ஏற்கும்
போதும் நாம் சிலுவை வரைகிறோம்.
15. நாம் சிலுவை வரைய வேண்டிய முறை
பற்றிக் கூறுக? மூவொரிறைவனின் இரண்டாவது ஆளான மகனாகிய இறைவன் மனிதரை
மீட்பதற்காக விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கியதை காண்பிப்பதற்கு நெற்றியிலிருந்து
நெஞ்சிற்கும், பாவத்தால் இடது பக்கமாயிருந்த (இறைவனின் கோபத்திற்கு
ஆளாயிருந்த) நம்மை மீட்பர் இயேசு கிறிஸ்துவின் சிலுவை இறப்பால் வலது பக்க மக்களாக
(இறைவனின் மகிழ்ச்சிகுரியவர்கள்) காண்பிப்பதற்கு இடது தோளிலிருந்து வலது
தோளிற்கும் சிலுவை வரைய வேண்டும்.
16. மலங்கரை திருவழிபாட்டில் நின்று
கொண்டு மன்றாடுதலின் பொருள் என்ன? திருப்பலியிலும் நமது வேளை மன்றாட்டுகளிலும் நாம்
நின்று கொண்டே பங்கேற்கின்றோம். இது முற்றிலும் ஒரு அடையாளமாகும். கடவுள் நமது
தந்தையும் நாம் அவரது பிள்ளைகளும் ஆவோம். பிள்ளைகளுக்குள்ள சுதந்திரத்தையும் அதே
வேளையில் தந்தையோடு உள்ள பக்தியையும் காட்டுகிறது. மட்டுமன்றி நாம்
உயிர்த்தெழுதலின் மக்கள் என்பதையும் இது குறிக்கின்றது.
17. மலங்கரை திருவழிபாட்டில் பணிந்து
வணங்குதலின் பொருள் என்ன? இறைவன் கெத்சமெனித் தோட்டத்தில்
மூன்று முறை முழந்தாள் படியிட்டு மன்றாடியதை தியானித்தும் நம்மை முழுவதுமாக
அர்ப்பணித்தும் நெற்றி நிலத்தை தொடும் வண்ணம் நாம் பணிந்து வணங்குகிறோம்.
படைத்தவரின் முன்னிலையில் படைப்பின் முழு பணிவை இது குறிப்பிடுகிறது.
18. மலங்கரை திருவழிபாட்டில் தலை
வணங்குதலின் பொருள் என்ன? இறையாசீர் பெற்றுக்கொள்வதற்காக நாம் எளிய மனத்தோடு தலை
வணங்குகிறோம். தலை வணங்குதல் நமது எளிமையையும், பணிவையும் அடையாளப்படுத்துகிறது.
திருப்பலியில் பல வேளைகளில் நாம் தலை வணங்கி மன்றாடுகிறோம். கடவுள் அரசரின்
அரசரானதால் நமது சிறப்பு மன்றாட்டுகளின் வேளையில் நாம் இறைவனின் முன்னால்
நிற்பதனால், அவருக்கு ஆதரவை வெளிப்படுத்த நாம் தலை வணங்கி கும்பிடுகின்றோம்.
19. மலங்கரை திருவழிபாட்டில் கரம்
விரித்து நின்றபடி செபித்தலின் பொருள் என்ன?'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே' என்ற மன்றாட்டைச் சொல்லும் போது நாம்
கைகளை விரித்து மன்றாடுகிறோம். அதைப் போலவே திருப்பலியில் குருவானவர் பல
வேளைகளிலும் கை விரித்து மன்றாடுகின்றார். இது நம்மையும் உலகையும் இறைவன்
திருமுன்னிலையில் சமர்ப்பிப்பதனுடையவும், இறைவனிடமிருந்து ஆசீரும் அருளும்
பெற்றுக்கொள்வதனுடையவும் அடையாளமாகும். கைகளை நெஞ்சோடு சேர்த்து நிற்பதும் கைகளை
கூப்பி நிற்பதும் பயபக்தியின் அடையாளமாகும்.
20. ஆரோனுடையவும் சக்கரியாவினுடையவும்
தூபத்தை நினைவு கொண்டு திருப்பலியில் நாம் பாடும் பாடல் எது?“ஆரோன் செக்கரியா இவர்கள் தூபம்
ஏற்றதுபோல் சாவை வென்றோர் பினகாசின் வேண்டல் கேட்டது போல் அடியார் தூபமிதை நாதா
அன்புடன் ஏற்றருள்வீர் நீரும்”
6. 12. திருப்பலி முன்னுரை
1.
பழைய
ஏற்பாட்டில் காணப்படும் முக்கிய பலிகள் யாவை? ஆபேலின் பலி (தொ.நூல் 4:4) நோவாவின்
பலி (தெ.நூல். 8:20-23) ஆபிரகாமின் பலி (தெ.நூல். 22:1-13)
2.
யாருடைய
காலத்தில் பலி செலுத்துதல் இஸ்ரயேல் மக்களின் வாழ்வின் பகுதியாக மாறியது? மோசேயின்
3.
இஸ்ரயேலில்
நடத்தப்பட்ட பலிகள் எவை? எரிபலி, நல்லுறவு பலி, பாவக்கழுவாய் பலி
4.
பலிப்பொருட்கள்
எவை? பழுதற்ற காளையையோ, ஆட்டுக் குட்டியையோ, புறாவையோ
5.
பல்வேறு
பலிகளுடன் சேர்த்து நடைபெற்றுவந்த நிகழ்வுகள் எவை? பலிபீடத்தில் அப்பமும் திராட்சை
இரசமும் சமர்ப்பித்தலும்,
தூபம் அர்ப்பித்தலும்.
6.
பழைய
ஏற்பாட்டின் அனைத்து பலிகளும் யாருடைய பலியின் முன் அடையாளமாக அமைந்தன?
கிறிஸ்துவின் சிலுவைப்பலி
7.
கிறிஸ்தவ
திருச்சபை எங்கே துவங்கியது? எருசலேமில்
8.
கிறிஸ்தவ
திருச்சபை எந்த மதத்திலிருந்து சடங்குமுறைகளையும், வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக்கொண்டது? யூத மதத்திலிருந்து
9.
எந்த
மதத்தின் பின்னணியில் துவக்க கிறிஸ்தவ திருச்சபை வளர்ந்து வந்தது? யூத
10.
துவக்க
கிறிஸ்தவ வழிபாட்டில் மிகுதியாகக் காணப்பட்டவை எவை? பழைய ஏற்பாட்டு கால பலிகளும் திருவிழாக்களும்
11.
அனைத்து
சமய வழிபாடுகளிலும் (யூத சமய வழிபாட்டிலும்) முக்கிய இடம் பெறுவது எது? பலி செலுத்துதல்
12.
இஸ்ரயேல்
மக்களுள் பலி செலுத்தியிருந்தவர்கள் யாவர்? தனி நபர்களும் குடும்பத்தலைவர்களும்.
13.
தொடக்க
நூலில் காணப்படும் முக்கிய பலிகள் யாவை? ஆபேலின் பலி (தொ.நூல் 4:4) நோவாவின் பலி (தொ.நூல். 8:20-23) ஆபிரகாமின் பலி (தெ.நூல். 22:1-13)
14.
யாருடைய
காலத்தில் பலி செலுத்துதல் இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் ஒரு பகுதியாக மாறியது? மோசேயின்
15.
பலி
செலுத்தும் முறைகளும் சட்ட ஒழுங்குகளும் திருவிவிலியத்தில் எங்கே
விளக்கப்பட்டுள்ளன? லேவியர் ஆகமம் 1 முதல் 7
வரையுள்ள அதிகாரங்களில்
16.
பலியாக
ஒப்புக்கொடுக்கப்பட்ட பலிப் பொருட்கள் யாவை? பழுதற்ற காளை, ஆட்டுக் குட்டி, புறா
17.
பலி
ஒப்புக்கொடுக்கும் போது பலிப்பொருளை என்ன செய்தனர்? பலிபொருளைக் கொன்று அதன் இரத்தத்தை பலிபீடத்தில் தெளிக்கவும், தோலுரித்த மாமிசத்தை எரிக்கவும் செய்தனர்.
18.
இஸ்ரயேலில்
நடத்தப்பட்ட பலிகள் யாவை? எரிபலி, நல்லுறவு பலி, பாவக்கழுவாய் பலி
19.
பலிபீடத்தில்
பலி செலுத்தப்படும் போது நடைபெறுபவை என்ன? அப்பமும் திராட்சை இரசமும் சமர்ப்பித்தலும், தூபம் அர்ப்பித்தலும்
20.
பலி
செலுத்துதலின் நோக்கம் என்ன? ஆண்டவரிடம் மனிதனின் உறவை
ஏற்புடையதாக்கி அந்த உறவு மேலும் வலுப்படுத்துவதே பலி செலுத்துதலின் நோக்கமாக
இருந்தது.
21.
யூதர்கள்
எந்த மனநிலையோடு பலி செலுத்தினர்?
கடவுளின் மாட்சியை ஒப்புக்கொண்டு அவரோடு நெருங்கிய உறவில் வளர்ந்து, அவரிடமிருந்து பாவமன்னிப்பு பெற்றுக்கொள்ள
யூதர்கள் பலி செலுத்தினர்.
22.
ஆண்டவருக்கு
ஏற்புடைய உண்மையான பலி எது?
கிறிஸ்துவின்
கல்வாரி பலி
23.
கிறிஸ்துவின்
கல்வாரி பலி வழியாக மக்கள் பெற்றுக்கொண்டது என்ன? கிறிஸ்துவின் கல்வாரி பலி வழியாக கிறிஸ்து அனைவருக்கும் பாவக்
கழுவாயும் அதன் வழி மீட்பும் அளித்தார்.
24.
கிறிஸ்துவின்
சிலுவை பலியின் முன் அடையாளமாக அமைந்தவை என்ன? பழைய ஏற்பாட்டின்
அனைத்து பலிகள்
25.
பாஸ்கா
என்ற சொல்லின் பொருள் என்ன? 'கடந்து செல்லல்'
26.
பாஸ்கா
என்றால் என்ன? எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து
ஆண்டவர் இஸ்ரயேல் மக்களை விடுதலையாக்கியதன் நினைவே பாஸ்கா.
27.
இஸ்ரயேலர்
ஆட்டுக்குட்டியைக் கொன்று அதன் இரத்தத்தை எங்கே பூசினர்? வீடுகளின் இருகதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூசினர்.
28.
வீடுகளின்
இருகதவு நிலைகளிலும்,
மேல்
சட்டத்திலும் பூசப்பட்ட இரத்தத்தின் அடையாளத்தால் இஸ்ரயேலருக்கு என்ன நிகழவில்லை? அழிக்கும் தூதர்' இஸ்ரயேல் மக்களின் தலையீற்று மகன்களைச் சாகடிக்கவில்லை.
29.
பாஸ்கா
திருவிழாவின் போது எந்த நிகழ்ச்சியை மகிழ்வுடன் கொண்டாடினர்? கடவுள் எகிப்தின் தலையீற்று மகன்களைக் கொன்று, இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை அளித்த
நிகழ்ச்சியை அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
30.
நெருப்பில்
சுட்ட ஆட்டின் இறைச்சியை எவ்வாறு உண்டனர்? நெருப்பில் சுட்ட ஆட்டின் இறைச்சியை, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புப் கீரையோடும் உண்ணவும் திராட்சை
இரசம் பருகவும் திருப்பாடல்கள் பாடவும் செய்தனர்.
31.
யூதர்களின்
பாஸ்காத் திருநாளில் இயேசு யாருடன் பாஸ்கா கொண்டாடினார்? தனது பன்னிரண்டு திருத்தூதர்களுடன்
32.
இயேசு
அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு சீடர்களுக்குக் கொடுத்து, கூறியது என்ன? "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும்
எனது உடல், எனது நினைவாக வாங்கி உண்ணுங்கள்"
33.
இயேசு
கிண்ணத்தை எடுத்துக் கூறியது என்ன? "கடவுளுக்கு நன்றி செலுத்தி, இது பலருடைய பாவ மன்னிப்புக்காகச்
சிந்தப்படும் எனது உடன் படிக்கையின் இரத்தம், இதை வாங்கிப் பருகுங்கள்" என்றார்
(மத்தேயு 26:26 - 28)
34.
இயேசு
நற்கருணையை நிறுவிய பின்னர் கூறிய வார்த்தை என்ன? “இதை எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்"
35.
இயேசு
தம்மையே சிலுவையில் கையளித்ததன் அடையாளமாக செய்தது என்ன? அப்பத்தை எடுத்து, பிட்டு தனது உடலாகவும்
இரசத்தை எடுத்து தனது இரத்தமாகவும் வழங்கினார்.
36.
இயேசு
தமது உடலை மனித குலத்தின் மீட்புக்காக கையளித்ததன் அடையாளமாக செய்தது என்ன? அப்பத்தை பிட்டு வழங்கினார்
37.
இயேசு
இரத்தம் சிந்தியதன் அடையாளமாக செய்தது என்ன? இரசத்தை பகிர்ந்தளித்தார்.
38.
நற்கருணைப்பலியில்
திரு உடலும், திரு இரத்தமும் இயேசுவின் முழுமையான
தற்கையளிப்பைக் குறிக்கிறது.
39.
அனைத்து
பலிகளிலும் இன்றியமையாதது எனக் கருதப்படுவது யாது? இரத்தம் சிந்துதல்
40.
பலியின்
போது தனித்தனியாக வேறுபடுத்தப்படுபவை என்ன? மாமிசமும் இரத்தமும்
41.
இயேசுவின்
சிலுவை மரணம் என்னும் பலியின் போது எவ்வாறு வேறுபடுத்தப்பட்டார்? இயேசுவின் திரு உடலும் திரு இரத்தமும்
தனித்தனியாக
42.
இயேசு
இறுதி பாஸ்கா கொண்டாடிய போது குறிப்பிட்டது என்ன? இயேசுவின் சிலுவை
மரணத்தைப் பற்றி
43.
தேவ
நற்கருணை ஒரு பலி என்பதை இயேசு எவ்வாறு கற்பித்தார்? அப்பத்தைத் தமது
திருஉடலாகவும் திராட்சை இரசத்தைத் தமது திரு இரத்தமாகவும் கொடுத்தது வழியாக தேவ
நற்கருணை ஒரு பலி தான் என்று இயேசு கற்பித்தார்.
44.
இயேசு
தந்தைக் கடவுளுக்கு சமர்ப்பித்த நன்றி வெளிப்பாடுதான் நற்கருணை என்ற
திருப்பலி.
45.
திருப்பலியில்
இயேசு எந்தெந்த நிலையில் செயலாற்றுகிறார்? இயேசு தாமே பலிப் பொருளாகவும் பலியை நிறைவேற்றும்
குருவானவராகவும்
46.
இயேசு
மானிடர் மேல் கொண்ட அன்பின் மிகப்பெரிய வெளிப்பாடு என்பது என்ன? திருப்பலி
47.
“எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” (லூக். 22 : 19) என்ற இயேசுவின் கட்டளைக்கேற்ப குரு அப்பமும்
இரசமும் எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி தூய்மைப்படுத்தும் போது அவை எவ்வாறு
மாற்றமடைகின்றன? இயேசுவின் திரு உடலாகவும், திரு இரத்தமாகவும் மாற்றம் அடைகின்றன.
48.
திருப்பலியின்
போது இயேசுவின் திரு உடலும் திரு இரத்தமும் உண்பது வழியாக நமக்கு கிடைப்பது என்ன? நிலைவாழ்வு
49.
தேவ
நற்கருணை யாருக்காக எதற்காக நிறுவப்பட்டது? மனித இனம் முழுவதன் மீட்புக்காகவும் நிலை வாழ்விற்காகவும்
நிறுவப்பட்ட திருவருட்சாதனம் தான் தேவ நற்கருணை.
50.
திருச்சபையில்
பலி செலுத்துதல் இப்போதும் தொடர்ந்திட காரணம் என்ன? திருப்பலியை உலகம் முடிவு வரையும் தொடர்வதற்கான அதிகாரத்தை இயேசு
திருச்சபைக்கு அளித்துள்ளார். எனவே திருச்சபையில் பலி செலுத்துதல் இன்றும்
தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
51.
திருப்பலியில்
நாம் நினைவு கூரும் மீட்பின் நிகழ்வுகள் யாவை? அகிலத்தின் படைப்பு, ஆபிரகாமை
அழைத்தது முதல் தொடங்கப்பட்ட இஸ்ரயேலின் வரலாறு, இயேசுவின் பிறப்பு,
திருமுழுக்கு, திருப்பணி வாழ்க்கை, இறுதி இரவுணவு,
சிலுவை இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம்,
இரண்டாம் வருகை ஆகிய
மீட்பின் நிகழ்வுகள் அனைத்தும் திருப்பலியில் நாம் நினைவு கூரவும் கொண்டாடவும்
செய்கிறோம்.
52.
கிறிஸ்தவ
வாழ்வின் மையமாகவும்,
மகுடமாகவும் அமைவது திருப்பலியேயாகும்.
53.
அகிலத்தின்
படைப்பு முதல் இயேசுவின் இரண்டாம் வருகை வரையிலான மீட்பின் இரகசியங்களின் மீள்
நிகழ்வாக்கம் எனப்படுவது யாது?
திருப்பலி
54.
அருள்
அடையாளங்களின் அருள் அடையாளம் என திருச்சபை எதனைக் கருதுகிறது? திருப்பலியை
55.
அனைத்து
திருவருட்சாதனங்களுக்கும் வழியாக அமைவது எது? திருப்பலி
56.
திருப்பலி
திருச்சபையின் பலியாவது ஏன்?
திருப்பலி என்னும் தெய்வீகப் பலியில் பங்கு
சேர்ந்து நாம் கிறிஸ்துவுடன் நம்மையே பலியாக்குகிறோம். ஆகவே திருப்பலி
திருச்சபையின் பலியேயாகும்.
57.
ஒவ்வொரு
திருப்பலியிலும் நாம் நினைவு கூர்வது என்ன? கடவுள் இயேசு வழியாக நமக்குச் செய்த வியப்புக்குரிய செயல்களை.
58.
திருப்பலி
ஒரு சமூக பலியாவது எப்படி? ஒரே அப்பத்தை உண்ணவும், ஒரே கிண்ணத்திலிருந்து பருகவும் செய்கின்ற
நாம் இயேசுவில் ஓருடலாகின்றோம். நற்கருணையின் அனுபவம் என்பது ஒன்றிப்பு மற்றும் சமூக உறவு இவற்றின் அனுபவமே
ஆகும். இவ்வாறு ஒரு சமூகத்தை அன்பிலும் ஒற்றுமையிலும் ஒன்றிணைக்கும் தெய்வீக
விருந்து தான் திருப்பலி.
59.
திருப்பலியின்
போது நாம் செய்ய வேண்டியது என்ன?
திருப்பலியில் பக்தியோடு பங்கு பெற்று ஆண்டவரிடம் நமது அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்த வேண்டும்.
60.
“கடவுளுக்கு நன்றிப் பலி
செலுத்துங்கள். உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்” (திருப்பாடல்கள் 50:14)
6. 13
திருப்பலியின் அமைப்பு
1.
தூயகத்தினுள்
சென்ற குருவானவர் அப்பமும் இரசமும் த்றோணோசில் ஆயத்தம் செய்து வைக்கின்ற
திருச்சடங்குக்குப் பெயர் என்ன? ஆயத்தத் திருச்சடங்கு
2.
ஆயத்த
திருச்சடங்கை சுறியானியில் எவ்வாறு அழைக்கிறோம்? தூயோபோ
3.
ஆயத்தத்
திருச்சடங்கின் இரண்டு முறைகள் எவை? மெல்கிசதேக்கின் முறை, ஆரோனின் முறை
4.
மெல்கிசதேக்
யாருடைய குருத்துவத்தின் முன்னடையாளம் ஆவார்? இயேசுவின்
5.
பழைய
ஏற்பாட்டில் உள்ள முதன்மைக் குருவான ஆரோன் யாருடைய முன்னொரு அடையாளம் ஆவார்? இயேசுவின்
6.
சமாதானம்
ஏன் வழங்கப்படுகின்றது?
பலி செலுத்துவதற்கு
முன் கடவுளோடும், சகோதரர்களோடும் நல்லுறவு
கொண்டிருங்கள் என்ற முதன்மையான கட்டளைக்கேற்ப (மத். 5 : 23, 6 : 12) சமாதானம் வழங்கப்படுகிறது.
7.
அனாபொறா
என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் யாது? அனாபொறா என்ற கிரேக்க வார்த்தைக்கு 'பலி செலுத்துதல்'
8.
மலங்கரைக்
கத்தோலிக்கத் திருச்சபையின் வழிபாட்டு முறை திருப்பலியில் எத்தனை பகுதிகள் உள்ளன?
அட்டவணைப்படுத்துக?
|
9.
ஆயத்தத்
திருச்சடங்கு |
||
|
10.
1.1.மெல்கிசதேக்கின் முறை |
11.
1.2.
ஆரோனின் முறை
|
|
|
12.
2.
பகிரங்கத் திருச்சடங்கு |
||
|
13.
2.1.
ஆரம்பத்திருச்சடங்கு |
14.
2.2.
நற்கருணை மன்றாட்டு |
|
|
15.
2.1.1.
இறைவார்த்தை வழிபாடு 16.
2.1.2.
பாவபரிகார மன்றாட்டுகள் 17.
2.1.3.
தூபகலசம் ஆசீர்வதித்தல்
|
18.
2.2.1
சமாதான மன்றாட்டு 19.
2.2.2.
வானதூதர்களின் புகழ்ச்சி 20.
2.2.3.
நற்கருணை நிறுவுதல் 21.
2.2.4.
நினைவு கூறுதல் 22.
2.2.5.
தூய ஆவியாரை அழைத்தல் 23.
2.2.6.
பரிந்துரை மன்றாட்டுக்கள் 24.
2.2.7.
அப்பம் பிட்குதல் திருச்சடங்கு 25.
2.2.8.
இயேசு கற்றுதந்த ஜெபம் 26.
2.2.9.
திருவுடல் திருஇரத்த கொண்டாட்டம் 27.
2.2.10.
தேவ நற்கருணை பெற்றுக் கொள்ளுதலும், நன்றியறிதலும் 28.
2.2.11.
இறுதி ஆசீர்வாதம் |
|
29.
பகிரங்கத்
திருச்சடங்கின் இரண்டு பகுதிகள் யாவை? 1.ஆரம்பத்திருச்சடங்கு 2. நற்கருணை மன்றாட்டு
30.
ஆரம்பத்
திருச்சடங்கிற்கு மறு பெயர் என்ன? திருமுழுக்கு வேண்டுவோருக்கான திருச்சடங்கு
31.
நற்கருணை
மன்றாட்டிற்கு இன்னொரு பெயர்?
விசுவாசிகளின் திருச்சடங்கு
32.
விசுவாசிகளின்
திருச்சடங்கிற்கு சுறியானி பெயர் என்ன? அனாபொறா
33.
திருப்பலியில்
நாம் நினைவு கூரும் மீட்புச் செயல்கள் யாவை? அகிலத்தின் படைப்பு முதல் இயேசுவின் இரண்டாவது வருகை வரையிலான
கடவுளின் அனைத்து மீட்புச் செயல்களையும் திருப்பலியில் நாம் நினைவு கூர்கின்றோம்.
34.
காலை
செபத்தின் ஆரம்பத்தில் தூயகத்தில் மெழுகுவர்த்தி எரியச் செய்து திரைவிலக்குதல்
எதைக் குறிக்கின்றது? இறைவெளிப்பாட்டின் தொடக்கமான
அகிலத்தின் படைப்பை
35.
காலைசெபம்
முடிந்த பின்னர் திரை மூடுவது எதைக் குறிக்கின்றது? மனிதப்படைப்பையும்,
மனிதனின் முதல்
பாவத்தையும் குறிக்கின்றது. கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரிவை இது
சுட்டிக்காட்டுகின்றது.
36.
ஆயத்த
திருச்சடங்கின் போது பழைய ஏற்பாட்டிலிருந்து எத்தனை வாசகங்கள் வாசிக்கப்படுகின்றன? மூன்று
37.
தூயகத்தினுள்
சென்ற குருவானவர் அப்பமும் இரசமும் த்றோணோசில் ஆயத்தம் செய்து வைக்கின்ற
திருச்சடங்கிற்கு என்ன பெயர்? ஆயத்தத் திருச்சடங்கு
38.
திருப்பலியில்
ஆயத்தத் திருச்சடங்கின் முறைகள் யாவை? மெல்கிசதேக்கின் முறை, ஆரோனின்
முறை
39.
மெல்கிசதேக்கின்
முறை என்ன? அப்பமும், இரசமும் த்றோணோசில் ஆயத்தம் செய்யும் திருச்சடங்கு
40.
மெல்கிசதேக்கின்
முறை எதைக் குறிக்கின்றது?
உன்னத கடவுளின்
குருவாயிருந்த மெல்கிசதேக் அப்பமும் இரசமும் கொண்டு வந்து ஆபிரகாமை
எதிர்கொண்டழைத்ததையே குறிக்கின்றது. (தொ.நூ. 14: 18).
41.
இயேசுவின்
குருத்துவத்திற்கு முன்னடையாளம் யார் மெல்கிசதேக்
42.
பழைய
ஏற்பாட்டில் உள்ள முதன்மைக் குருவான இயேசுவின் முன்னொரு அடையாளம் யார்? ஆரோன்
43.
ஆரோன்
திருப்பலியில் எவ்வாறு நினைவு கூரப்படுகிறார்? ஆரோனின் குருத்துவ திருப்பணியையும் தூப மன்றாட்டையும் நினைவில்
கொண்டு திருப்பலியின் போது குருவானவர் திருவுடைகள் அணியவும் பலிப்பொருள்களின் மீது
தூபம் காட்டவும் செய்கின்றார். ஆரோன் முதல் இயேசு வரையிலான வரலாற்று நிகழ்ச்சிகள்
இங்கு நினைவுபடுத்தப்படுகிறது.
44.
திருப்பலியில்
பகிரங்கத் திருச்சடங்கின் போது குருவானவர் பலிபீடத்தை சுற்றி தூப அர்ப்பணம்
நடத்துவது எதைக் குறிக்கிறது?
இயேசுவின், பிறப்பு மற்றும் திருமுழுக்கு நிகழ்ச்சிகளைக்
முழக்கமிட்டுக் கொண்டு குருவானவர் தூப அர்ப்பணம் நடத்தி பலிபீடத்தை வலம்
வருகிறார். இடையர்களும்,
ஞானிகளும் பெத்லகேமில்
வைத்து குழந்தை இயேசுவை ஆராதித்ததை உணர்த்துவதற்காகவே இவ்வாறு தூபக்கலசம்
வீசப்படுகிறது.
45.
திருப்பலியில் 'இறைவா நீர் தூயவராகின்றீர்' என்ற முப்புகழ் வழியாக நாம் புகழ்வது என்ன? இயேசுவின் இறைத்தன்மையையும், சிலுவை மரணத்தையும் புகழ்கிறோம்.
46.
திருப்பலியில்
இறைவார்த்தை வழிபாட்டின்போது நினைவு கூரப்படுவது என்ன? இயேசு கிறிஸ்துவின் பகிரங்க வாழ்வும், அவருடைய போதனைகளும்
47.
திருப்பலியின்போது
புதிய ஏற்பாட்டிலிருந்து எத்தனை வாசகங்கள் வாசிக்கப்படுகின்றன? மூன்று
48.
திருப்பலியில்
பாவபரிகார மன்றாட்டுகளைப்பற்றி கூறுக? தூப அர்ப்பணத்துக்குப் பின்னர் குருவானவர் பாவபரிகாரத்துக்காக
மன்றாடுகிறார். திருப்பலியின் முக்கியப் பகுதிக்கு நுழைவதற்கு முன்னர்
இறைவனிடமிருந்து கடன்களுக்கு பரிகாரமும், பாவங்களுக்கு
மன்னிப்பும் பெறுவதற்காகவே இம்மன்றாட்டுகள் நடத்தப்படுகின்றன.
49.
திருப்பலியில்
தூபகலசம் ஆசீர்வதிக்கும்போது தூய மூவொரு இறைவனை புகழ்வது எவ்வாறு? தூய மூவொரு இறைவனை புகழ்ந்து கொண்டு தூபகலசம்
ஆசீர்வதிக்கப்படுகிறது. திருச்சபையின் மன்றாட்டுக்கள் நறுமண தூபத்தைப் போன்று, தந்தை மகன் தூய ஆவியாகிய கடவுளுக்கு
ஏற்புடையது என்பதை குறிப்பதற்காகவே தூபக்கலசம் மூவொரு கடவுளின் பெயரால்
ஆசீர்வதிக்கப்படுகிறது.
50.
திருப்பலியில்
விசுவாசப் பிரமாணம் அறிக்கையிடும்போது நிகழ்பவை என்ன? திருச்சபையின் விசுவாசம் அதிகாரப்பூர்வமாக அறிக்கையிடுகின்ற
நேரமே இது. இவ்வேளையில் குருவானவர் கைகழுவி சமாதானம் வேண்டி பலிபீடத்தின் முன்
முழந்தாழ்படியிட்டு மன்றாடுகின்றார்.
51.
திருப்பலியில்
குருவானவர் கைகழுவுவதன் பொருள் என்ன?
குருவானவர் கைகழுவி சமாதானம் வேண்டி பலிபீடத்தின் முன் முழந்தாழ்படியிட்டு
மன்றாடுகின்றார். கை கழுவுதல் ஆன்மீக தயாரிப்பின் பகுதியாகும். இயேசு தம் இறுதி
இராவுணவின் போது சீடர்களின் காலடிகளைக் கழுவினார் என்பதையும் இது குறிக்கின்றது.
52.
திருப்பலியில்
சமாதான மன்றாட்டுக்குப் பின்னர் மென்துகில் உயர்த்தி கொண்டாடப்படுவதன் பொருள் என்ன? விண்ணகம் திறக்கப்பட்டதும், விண்ணக மறைபொருள்கள் தேவ நற்கருணையின் வாயிலாக
பூமியில் வெளிப்பட்டதும் மென்துகில் உயர்த்துவதின் வாயிலாக குறிப்பிடப்படுகிறது.
தொடர்ந்து குருவானவர் மக்களை ஆசீர்வதித்து திறக்கப்பட்ட விண்ணகத்தில் அவர்களுடைய
கவனத்தை ஈர்க்கின்றார்.
53.
திருப்பலியில்
வானதூதர்களின் புகழ்ச்சி பற்றி குறிப்பு வரைக? விண்ணகம் திறக்கப்பட்டிருக்கின்ற இவ்வேளையில் விண்ணவர்களும்
மண்ணவர்களும், வானதூதர்களும் மனிதர்களும் ஒன்று
சேர்ந்து கடவுளைப் புகழ்கின்றனர். 'தமது மகிமையால் விண்ணும் மண்ணும்...' என்ற செபத்தை மக்கள் சொல்கின்றனர். ஏசாயா 6:3 ஐ அடிப்படையாகக் கொண்டதே இம் மன்றாட்டு.
54.
திருப்பலியில்
நினைவு கூறுதல் பற்றி குறிப்பு வரைக? இறுதி இராவுணவின் வேளையில் “இதை
என் நினைவாக செய்யுங்கள்”
என்று இயேசு அருளிச்
செய்தார். இதற்கேற்ப இயேசுவின் இறப்பு, கல்லறை
அடக்கம், உயிர்தெழுதல், இரண்டாம் வருகை ஆகியவற்றை நாம் இங்கு நினைவு கூர்கின்றோம்.
55.
திருப்பலியில்
தூய ஆவியாரை அழைத்து மன்றாடும் போது நிகழ்பவை என்ன? தூய ஆவியே அனைத்தையும் முழுமையாக்குபவர். எனவே அப்பத்தையும்
இரசத்தையும் இயேசுவின் திருவுடலாகவும், திருஇரத்தமாகவும்
மாற்றி முழுமை ஆக்குவதற்காகவே தூய ஆவியாரை அழைத்து மன்றாடுகின்றோம்.
56.
திருப்பலியில்
பரிந்துரை மன்றாட்டுக்கள் என்பதன் சுறியானி பெயர் என்ன? 'துப்தேன்'
57.
திருப்பலியில்
பரிந்துரை மன்றாட்டுக்கள் மொத்தம் எத்தனை? பீடச்சிறுவர் சொல்கின்றதான ஆறு மன்றாட்டுகளும், குருவானவர் மென்குரலிலும், உரத்த குரலிலும் சொல்கின்ற பன்னிரண்டு
மன்றாட்டுக்களுமாக மொத்தம் பதினெட்டு மன்றாட்டுக்கள் இந்த பரிந்துரை
மன்றாட்டில் அடங்கியிருக்கின்றன.
58.
திருப்பலியில்
பீடச்சிறுவர்களின் பரிந்துரை
மன்றாட்டுக்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன? பீடச்சிறுவர்கள் சொல்கின்ற முதல் மூன்று மன்றாட்டுக்கள் வாழ்ந்து
கொண்டிருப்பவர்களுக்காகவும்,
ஏனைய மூன்று
மன்றாட்டுக்கள் இறந்து போனவர்களுக்காகவும் சொல்லப்படுகின்றன.
59.
திருப்பலியில்
அப்பம் பிட்குதல் திருச்சடங்கிற்குப் பின்னர் திரை விலக்குதலின் பொருள் என்ன? இயேசுவின் உயிர்ப்பு
60.
திருப்பலியில்
இயேசு கற்பித்த 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே' நாம் எவ்வாறு மன்றாடுகிறோம்? இயேசுவின் மரணம், உயிர்ப்பு இவற்றின் வழியாக கடவுளின் மக்களாக்கப்பட்ட நாம்
ஆன்மத்திடமுடன் கடவுளை 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே' என்று அழைத்து மன்றாடும் நேரமே இது.
61.
திருப்பலியில்
திருவுடல் திருஇரத்த கொண்டாட்டங்களின் பொருள் என்ன? குருவானவர் திருப்பாத்திரங்களை கரங்களில் ஏந்தி திருவுடல் திரு
இரத்தங்களை கொண்டாடுவதன் வாயிலாக மூவொரு இறைவனின் பிரசன்னத்தை நாம் நினைவு
கூருகின்றோம். குருவானவர் திருவுடலையும் திரு இரத்தத்தையும் கைகளில் ஏந்திக்
கொண்டாடும் போது தலைமைக்குருவான இயேசு தந்தையின் முன்னிலையில் தம்மைத்தாமே பலியாக
ஒப்புக் கொடுத்ததை நாம் காண்கின்றோம். தொடர்ந்து தூய இறையன்னையையும், புனிதர்களையும் எல்லா இறந்துபோனவர்களையும்
நினைவு கூர்ந்து அவர்களுடைய பரிந்துரையை வேண்டவும், மன்றாடவும் செய்கின்றோம். இவ்வேளையில் திரை இடப்படுகிறது.
திரையிட்டபின் திருவுடல் திருஇரத்தத்தை ஏந்தி பவனிக்கு ஆயத்தமாகின்றனர்.
திரையிடுவது இயேசுவின் விண்ணேற்றத்தையும், திரைவிலக்கப்படுதல்
இயேசுவின் இரண்டாம் வருகையையும் குறிக்கின்றது.
62.
திருப்பலியில்
இயேசுவின் மாட்சி நிறைந்த இரண்டாம் வருகையைக் குறிப்பிடும் நிகழ்வுகளைக்
குறிப்பிடுக? திருவுடல் திருஇரத்த
கொண்டாட்டங்களின் இறுதியில் திரைவிலக்கப்படுதல் இயேசுவின் இரண்டாம்
வருகையையும் குறிக்கின்றது. குருவானவர் ஆடம்பரமாக திருவுடலையும் திரு
இரத்தத்தையும் ஏந்தி மேற்குத் திசையில் வருவதும் இயேசுவின் மாட்சி நிறைந்த
இரண்டாம் வருகையைக் குறிக்கின்றது.
63.
திருப்பலியில்
தேவ நற்கருணை பெற்றுக் கொள்ளும் போது நாம் பெறும் அனுபவம் என்ன? நாம் நற்கருணையை பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு
முறையும் இயேசுவோடு இணைந்து அனுபவிக்க இருக்கின்ற நிலையான விருந்தின் முன் சுவையை
அனுபவிக்கிறோம்.
64.
திருப்பலியில்
நற்கருணை உட்கொண்ட பின்னர் நாம் ஏன் நன்றி கூறுகிறோம்? திருவுடலையும்,
திரு இரத்தத்தையும்
உட்கொள்ள அருள் செய்த இறைமகனுக்கும்,
தந்தைக்கடவுளுக்கும்
இவ்வேளையில் நாம் நன்றி கூறுகின்றோம்.
65.
திருப்பலியில்
இறுதி ஆசீர்வாதம் பற்றிக் குறிப்பிடுக? தேவ நற்கருணை என்ற பயண உணவு வழங்கி கொண்டு தூயமூவொரு இறைவனின்
அருளுக்கு குருவானவர் மக்களைச் சமர்ப்பிக்கின்றார். தூய மூவொரு இறைவனின் பெயரால்
மக்களை ஆசீர்வதித்து அனுப்புகின்றார்.
66.
திருப்பலி
எவ்வாறு நம் வாழ்க்கையில் முக்கியத்துவம்
பெறுகிறது? அருள் அடையாளங்களின் அருள் அடையாளமான
தேவ நற்கருணை கிறிஸ்தவ வாழ்வின் மையமாகும். இயேசுவின் திருவுடலையும்
திருஇரத்தத்தையும் உட்கொள்வதன் வழியாக நாம் தூயமூவொரு இறைவனுடன் அருளுறவு
கொள்கின்றோம். அதனால் தகுந்த தயாரிப்போடும், பயபக்தியோடும்
திருப்பலியில் பங்குபெறுவோம்.
67.
திருப்பலிக்கு
முன் செய்ய வேண்டியதைப் பற்றி திருவிவிலியம் என்ன கூறுகிறது? நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில்
செலுத்த வரும் பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ
மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே
பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப்போய் முதலில் அவரிடம்
நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச்
செலுத்துங்கள். (மத் 5:23, 24)
6. 14
திருப்பலிப் பாடல்கள்
1.
ஆபேலின்
செம்மறியும், நோவாவின் எரிபலியும் ............... என்ற
பாடலின் விவிலிய அடிப்படை என்ன? தொ.நூ. 4:
4, 8: 20, 9 : 13
2.
பாவம்
அகல பாவிகளே வருவீர் ................. என்ற பாடலின் விவிலிய அடிப்படை என்ன? மத்தேயு. 7:7 - 9)
3.
ஆண்டவரே
உம் உடலும் உதிரமதும் ................. என்ற பாடலின் விவிலிய அடிப்படை என்ன? யோவான். 6:35 - 58
4.
“மண்ணுலகெல்லாம்...” ................. என்ற பாடலின் விவிலிய
அடிப்படை என்ன? மாற்.
16 : 15 - 20, தி. தூ. ப. 2:1- 41
5.
“பவுலடியாரின் சொல்லமுதம்” ................. என்ற பாடலின் விவிலிய
அடிப்படை என்ன? கலாத்தியர்
1: 8
6.
இசை
எவ்வாறு மனிதனை இறைவனோடு இணைக்கிறது?
இசை மனிதர்களின் மனதை மகிழ்ச்சி கொள்ளச்செய்கின்றது. மனிதர்களின் மனதை இறைச்
சன்னிதியில் கொண்டு சேர்க்கவும்,
இறை அருளை மனிதனில்
கொண்டு வரவும் இசையால் முடியும்.
7.
பாடுபவன் “இரண்டு தடவை ஜெபிக்கிறான்” என்றவர் யார்? புனித அகுஸ்தினார்
8.
மலங்கரை
கத்தோலிக்க வழிபாட்டு முறையில் இசையின் முக்கியத்துவம் என்ன? மலங்கரை கத்தோலிக்க வழிபாட்டு முறைப்படி
இசைக்கு அதிகமான முக்கியத்துவம் உண்டு. நமது ஆராதனை இசைமயமானது.
9.
இறைவா, மண்ணோர் போற்றிடுவர் ................. என்ற
பாடலின் விவிலிய அடிப்படை என்ன? பிலி. 2:
10 - 11
10.
“உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை
இடம்பெறட்டும். உளமார இசைபாடி ஆண்டவரைப் போற்றுங்கள்” (எபேசியர் 5:19)
6. 15
வீடாசீர்வாதம்
1.
வீடாசீர்வாதத்தின்
போது வாசிக்கும் நற்செய்திப் பகுதி யாது ? புனித லூக்கா எழுதிய நற்செய்தி 19-ம் அதிகாரம் 1
முதல் 10
2.
பழைய
ஏற்பாட்டிலுள்ள எந்த மரபை வீடாசீர்வாதத்தில் தொடர்கிறோம்? பாஸ்காவின் வேளையில் ஆட்டுக்குட்டியின்
இரத்தம் வாசற்படியில் பூசியதால் இஸ்ரயேல் குடும்பங்கள் பாதுகாக்கப்பட்டது (விய 12 : 23 - 26)
3.
'அருள் அடையாளம் என்ற வார்த்தை எந்த
சுறியானி வார்த்தையிலிருந்து உருவானது? ''காதேஷ்'
4.
''காதேஷ்' என்ற
வார்த்தையின் பொருள் என்ன?
புனிதப்படுத்துதல்
5.
கண்ணுக்குப்
புலப்படாத இறை அருளை குறிக்கின்ற காணக்கூடிய அடையாளங்களே அருள்
அடையாளங்கள்.
6.
திருச்சபையில்
எத்தனை அருளடையாளங்கள் உள்ளன? ஏழு
7.
திருச்சபையில்
உள்ள அர்ச்சிப்புத் திருச்சடங்குகளுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?
தேவாலயம் அர்ச்சித்தல்,
வீடு அர்ச்சித்தல்
8.
தேவாலயம்
அர்ச்சித்தலின் வாயிலாக என்ன செய்யப்படுகிறது? தேவாலயம் அர்ச்சித்தலின் வாயிலாக அந்த ஆலயம் இறை ஆராதனைக்காக
அர்ப்பணிக்கப்பட்டு, புனிதப்படுத்தப்படுகின்றது.
9.
வீடாசீர்வாதம்
வாயிலாக குருவானவர் செய்வது என்ன?
வீடாசீர்வாதம் வாயிலாக குருவானவர் ஒரு இல்லத்தைப் புனிதப்படுத்தவும், அந்த இல்லத்தில் இறையருளும், சமாதானமும் என்றென்றும் நிலைத்திருக்கவும்
மன்றாடுகிறார்.
10.
வீடாசீர்வாத
திருச்சடங்கின் போது குருவானவர் அணியும் திருவுடைகள் யாவை? மேலாடை, ஹைமீனியா
11.
வீடாசீர்வாத
திருச்சடங்கில் பாடப்படும் குக்கிலியோனின் (என்னான்மாவினை உம்மிலுயர்த்துகிறேன் நாதா) விவிலிய
அடிப்படை என்ன? பொருள் என்ன?
திருப்பாடல் 25 : 1 – 5
12.
வீடாசீர்வாத
திருச்சடங்கில் உள்ள புறுமியோன், செதறா
மன்றாட்டிற்குப் பின்னர் பாடப்படும் பாடல் எது? “அன்புடையோரே உம் வாசல் .."
13.
வீடாசீர்வாத
திருச்சடங்கில் ஆசீர்வதித்த தண்ணீரை பயன்படுத்தி வாசல்களில் சிலுவை அடையாளம்
வரைந்து ஒவ்வொரு இல்லமும் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறது? தூய மூவொரு இறைவனின் பெயரால்
14.
வீடாசீர்வாத
திருச்சடங்கிற்கு பின்னர் பாடப்படும் குக்கிலியோன்கள் யாவை? இறை அன்னை, மற்றும் அனைத்து புனிதர்களின் குக்கிலியோன்கள்
15.
வீடாசீர்வாத
திருச்சடங்கில் பாடப்படும் மார் எஃப்ரேமின் பாடல் எது? "ஆண்டவரே - இரக்கம் - வையும் அன்னை தூயோர் வேண்டுதலால் அன்புடனே
இல்லம் இதையும் – இங்-குறைவோ-ரையும் வாழ்த்திடுமே”
16.
வீடு
அர்ச்சித்தலின் வாயிலாக எவ்வாறு அது கடவுளின் ஆலயமாக மாறுகின்றது? “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" (லூக்கா 19 : 9)
6. 16
அடக்கத் திருச்சடங்கு
1.
இறந்தவர்களை
அடக்கம் செய்ததாக பழைய ஏற்பாடு கூறும் சில நிகழ்ச்சிகளைக் கூறுக? ஆபிரகாமும், சாராளும் ஒரே குகையில் அடக்கம் செய்யப்பட்டதாக தொடக்க நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.
முற்பிதாவான யோசேப்பின் எலும்புகளுக்கு இஸ்ரேல் மக்கள் மதிப்பு அளித்து தங்களுடன்
எகிப்திலிருந்து கானான் நாட்டுக்கு கொண்டு போனார்கள். (2 அரசர்கள் 23
: 17 - 18). தாவீது
அரசர் இறந்தபோது அவருடைய நகரிலேயே அவரது உடலை அடக்கம் செய்தார்கள். (1அரசர்கள் 2 : 10).
2.
தலை
மேற்குத் திசையில் வைத்து உடலை அடக்கம் செய்வது ஏன்? நீதியின் சூரியனான இயேசுவைக் காணும்படியாக இறந்தவரின் தலை மேற்குத்
திசையில் வரும்படியாக கிழக்கு - மேற்காக வைக்கப்படுகிறது. எரியச் செய்த
மெழுகுவர்த்திகளும், புனித சிலுவையும் உடலின் மேற்குத்
திசையில் வைத்தே செபங்கள் நடத்தப்படுகின்றன.
3.
எந்தன்
உடலை உண்டு என் இரத்தத்தைப் பருகிடுவோர் என்ற பாடலின் விவிலிய அடிப்படை என்ன? யோவான் 6:51
4.
இயேசு
இறந்து அடக்கம் செய்யப்பட்டதைக் கூறுக? உலக மீட்பரான இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் தனது உயிரைத்
துறந்தார். இயேசுவின் சீடர்களுள் ஒருவரான அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பும், யூதத் தலைவர்களுள் ஒருவரான நிக்கதேம்
என்பவரும் சேர்ந்து உரோமன் ஆளுநரான பிலாத்துவின் அனுமதியுடன் இயேசுவின் உடலை
சிலுவையிலிருந்து இறக்கி யூதர்களின் முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால்
சுற்றிக்கட்டினார்கள். பின்னர் பாறையில் குடைந்திருந்த ஒரு புதிய கல்லறையில்
இயேசுவை அடக்கம் செய்தார்கள். (யோவா 19 : 38 - 42)
5.
முற்பிதாவான
ஆபிரகாமுடன் ஒரே குகையில் அடக்கம் செய்யப்பட்டவர் யார்? சாரா
6.
இலாசரை
குகையில் அடக்கம் செய்த நிகழ்வை
திருவிவிலியத்தில் எங்கே காண்கிறோம்? யோவான் 11ஆம் அதிகாரத்தில்
7.
இறப்பு
பற்றிய பொதுக் கருத்து என்ன? இறப்பு படைக்கப்பட்ட அனைத்து
உயிரினங்களுக்கும் பொதுவானதாகும். ஆனால் இறப்பு அனைத்திற்கும் முடிவு அல்ல.
இறப்பிற்குப் பின்னும் வாழ்வு உண்டு என்னும் சிந்தனை மனித இனத்திற்கு பழக்கமான
ஒன்றாகும்.
8.
'இயேசுகிறிஸ்து இறந்து
உயிர்த்தெழுந்தார்'
என்ற நம்பிக்கை
எவ்வாறு நமக்கு உயிர்ப்பின் நம்பிக்கை தருகின்றது? 'இயேசுகிறிஸ்து
இறந்து உயிர்த்தெழுந்தார்'
என்பதே நம்முடைய
விசுவாசத்தின் அடித்தளம். புனித பேதுரு இவ்வாறு கூறுகிறார் : "கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார்” (திருத்தூதர் பணிகள் 3 : 15). இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டதனால்
கிறிஸ்துவில் இறந்தவரும் உயிர்ப்பிக்கப்படுவார் என்று புனித பவுலடியார் நமக்குச்
சொல்லுகிறார். (1கொரிந்தியர் 15: 12 - 34).
9.
அடக்கத்
திருச்சடங்குகளின் குறிக்கோள் என்ன?
அடக்கத் திருச்சடங்குகள் இறந்த மனிதரோடுள்ள ஆதரவும், மதிப்பும் வெளிக்காட்டுவதோடு உயிர்த்தெழுதலின் எதிர்பார்ப்பையும்
தருகிறது.
10.
இறந்தவர்களை
மிகுந்த பக்தியோடு அடக்கம் செய்கின்ற கிறிஸ்தவ மரபின் பொருள் என்ன? இறப்பிற்குப் பின்னர் கடவுளை நேருக்குநேர்
சந்தித்தலே விண்ணக பேறு என்பதன் பொருள். இறப்பின் வாயிலாக இவ்வுலக வாழ்விற்கு
முற்றுப்புள்ளி வைக்கும் போது கிறிஸ்துவிலுள்ள புதிய வாழ்வு ஆரம்பமாகின்றது.
அதனால் தான் இறந்தவர்களை மிகுந்த பக்தியோடு அடக்கம் செய்கின்ற ஒரு மரபு
தொன்றுதொட்டே கிறிஸ்தவ திருச்சபையில் இருந்து வருகிறது.
11.
மலங்கரைத்
திருச்சபையின் அடக்கச்சடங்கு முறை பொருள் செறிந்ததும், இறையியல் சிந்தனைகள் நிறைந்ததும் ஆகும்.
12.
மலங்கரை
கத்தோலிக்க அடக்கச்சடங்கு முறைகள் யாவை? ஆடவர் இறுதிச்சடங்கு
முறை, மகளிர் இறுதிச்சடங்கு முறை, குழந்தைகள் இறுதிச்சடங்கு முறை
13.
மிகவும்
எளிமையான இறுதிச்சடங்குமுறை யாது? குழந்தைகள் இறுதிச்சடங்கு முறை
14.
மலங்கரை
கத்தோலிக்க இறுதிச்சடங்குமுறையின் திருச்சடங்குகள் எத்தனை? இறந்துபோன விசுவாசிகளின் உடலை அடக்கம்
செய்வதற்கு நான்கு திருச்சடங்குகள் உள்ளன. முதல் மூன்று திருச்சடங்குகள் வீட்டில்
வைத்தும், இறுதிச்சடங்கு தேவாலயத்தில் வைத்தும்
நடைபெறும்.
15.
எரியும்
மெழுகுவர்த்திகளும்,
திருச்சிலுவையும்
உடலின் எந்த திசையில் வைக்கப்படுகின்றன? மேற்கு
16.
தேவாலயத்தில்
திருச்சடங்குகளுக்கு இடையில் வரும் முக்கிய நிகழ்வுகள் என்ன? திருவிவிலியத்திலிருந்து வாசகங்கள்
17.
உடலை
அடக்கம் செய்யும் போது எண்ணெய் வார்க்கும் முறை எப்படி? உடலை அடக்கம் செய்யும் வேளையில்
தந்தையுடையவும், மகனுடையவும், தூய ஆவியுடையவும் திருப்பெயரால் சிலுவை வடிவில் இறந்தவரின்
முகத்திலும், நெஞ்சிலும், கால் முட்டுகளிலும் எண்ணெய் ஊற்றப்படுகிறது.
18.
குருவானவர்
உடலின்மேல் சிலுவை வடிவில் மண் போடும்போது செபிப்பது என்ன? ''நீ மண்ணாகின்றாய்,
மண்ணுக்கே திரும்புவாய்; மீண்டும் நீ புதுப்பிக்கப்படவும் செய்வாய்”
19.
உடல்
அடக்கம் செய்யப்பட்ட பின்னர் நடத்தப்படும் மன்றாட்டுக்குப் பெயர் என்ன? இறந்தவர்களுக்கான தூப மன்றாட்டு
20.
மலங்கரை
திருவழிபாட்டுமுறையில் இறந்தவர்களின் நினைவு பற்றி குறிப்பு வரைக? இறந்தவர்களை நினைவுகூர்ந்து தூப மன்றாட்டு
நடத்தும்போது “மக்கள்மேல் தந்தை இரங்குவதைபோல்...” என்ற குக்கிலியோன் பாடப்படுகிறது.
21.
மலங்கரை
திருவழிபாட்டுமுறையின் இறுதிச் சடங்குமுறை செபங்கள் தரும் நம்பிக்கை என்ன? இந்த உலகத்தில் வாழும்போதே நிலை வாழ்விற்காக
ஆயத்தமாக வேண்டும் என்றும்,
இறப்பிற்கு பின் ஒரு
வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையை இந்த மன்றாட்டுகள் வழங்குகின்றன
22.
அடக்கத்
திருச்சடங்குகள் நமக்கு தரும் பாடம் என்ன? அடக்கச்சடங்குகளும், இறந்தவர்களுக்கான
மன்றாட்டுகளும் நமக்கு ஒரு உண்மையை நினைவூட்டுகிறது. இறப்பிற்கு பின் உள்ள
வாழ்வின் ஆயத்தமே இவ்வுலக வாழ்வு. இவ்வுலகத்திலுள்ள நம்முடைய செயல்களின்
அடிப்படையிலே தீர்ப்பின் நாளில் ஆண்டவர் நமக்கு தீர்ப்பு அளிப்பார். எனவே நாம்
நற்செயல்கள் செய்து வாழ முயல்வோம்.
23.
இறந்தவர்களுக்காக
எப்போது மன்றாடலாம்?
இறந்தவர்களை நினைவு
கூரவும் அவர்களுக்கு வேண்டி மன்றாடவும் செய்ய வேண்டியது நமது கடமையாகும். அனுதின
மன்றாட்டுகளிலும், திருப்பலிகளிலும் நம்முடைய இறந்து
போனவர்களை நினைவுகூர்ந்து மன்றாடுவோம்.
24.
“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை
கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” (யோவான்
11:25)
6. 17
நோன்பும் உபவாசமும்
1.
நோன்பு
என்ற வார்த்தையின் பொருள் என்ன?
விரதம் இருத்தல், காத்திருத்தல், உபவசித்தல்,
2.
நோன்பை
நாம் எவ்வாறு புரிந்துகொள்ளலாம்?
சிறிதளவு உணவு உண்டு விரதம் எடுத்தல், உணவு
கட்டுப்பாடான வாழ்க்கை
3.
உபவாசித்தல்
என்பதன் பொருள் என்ன? கடவுளோடு வாழுதல், கடவுளுடன் இருத்தல்
4.
அனைத்து
மதத்தினரும் எவ்வாறு நோன்பையும், உபவாசத்தையும்
புரிந்து கொள்கின்றனர்? விசுவாசிகளுக்கு ஆன்மீகபலம்
கிடைப்பதற்கான வழியாகவே நோன்பையும்,
உபவாசத்தையும் எல்லா
மதத்தினரும் காண்கின்றார்கள். குறைவான உணவை உண்டு இறை சிந்தனையோடு கட்டுப்பாடான
வாழ்க்கை முறையே நோன்பும்,
உபவாசமும் ஆகும்.
5.
இந்திய
பண்பாட்டில் நோன்பின் முக்கியத்துவம் என்ன? நமது இந்திய பண்பாட்டில் நாம் காண்கின்ற விரதங்களும், தவங்களும் ஒருவருடைய ஆன்மீக வளர்ச்சிக்கு
அடிப்படையான செயல்களாகும். நோன்பின் வழியாகவும், உபவாசத்தின் வழியாகவும் ஒருவர் ஆன்மீக பலம் படைத்தவராகின்றார்.
6.
எவ்வாறு
நோன்பும் உபவாசமும் கிறிஸ்தவ வாழ்வின் முக்கிய
பகுதிகளாக உள்ளன? கிறிஸ்தவ வாழ்வின் ஒரு முக்கியமான
பகுதியே நோன்பும் உபவாசமும் ஆகும். விண்ணக வாழ்வை குறிக்கோளாகக் கொண்டிருக்கின்ற
ஒரு புனித பயணமே கிறிஸ்தவ வாழ்வு. இந்தப் பயணத்தில் தீயசக்திகளை எதிர்ப்பதற்கு
ஆன்மீகசக்தி தேவைப்படுகிறது. விண்ணை நோக்கிய பயணத்திற்கு சக்தி கிடைப்பது நோன்பின்
வழியாகவும், உபவாசத்தின் வழியாகவும் ஆகும்.
திருச்சபை மக்களின் ஆன்மீகமான புனித பயணத்தில் சக்தி பகர்கின்ற ஊற்றே நோன்பும்
உபவாசமும் ஆகும்.
7.
திருச்சபையில்
நோன்பும் உபவாசமும் கொண்டுள்ள பங்கு என்ன? நோன்பு காலத்தை திருச்சபை மக்களின் உண்மையான மனதிரும்புதலின்
காலமாக திருச்சபை கருதுகின்றது. பண்டைக்காலம் முதலே திருச்சபையில் நோன்பும்
உபவாசமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உயிர்ப்பு முதல் பெந்தேகோஸ்தே வரையிலான
நாட்களிலும், சனி, ஞாயிறு நாட்களிலும்,
திருவிழா நாட்களிலும்
உபவாசம் இல்லை. மற்ற நாட்களிலெல்லாம் உபவாசம் இருப்பதை திருச்சபை
ஊக்குவிக்கின்றது.
8.
மலங்கரைத்
திருச்சபையில் கடைபிடிக்க வேண்டிய கட்டாயமற்ற நோன்புகள் யாவை? மலங்கரைத் திருச்சபையில் கட்டாயமற்ற
நோன்புகள் ஆன்மீக வளர்ச்சிக்காக விசுவாசிகள் கடைபிடித்து வருகிறார்கள்.
|
நோன்பின் பெயர் |
கடைபிடிக்கப்படும் நாட்கள் |
|
பதிமூன்று நோன்பு |
ஜூன் 16
முதல் 29 வரை |
|
பதினைந்து நோன்பு |
ஆகஸ்டு 1
முதல் 15 வரை |
|
எட்டு நோன்பு |
செப்டம்பர் 1
முதல் 8 வரை |
9.
பதிமூன்று
நோன்பின் மறு பெயர் என்ன? ஸ்லீஹா நோன்பு
10.
பதிமூன்று
நோன்பின் முக்கியத்துவம் என்ன? புனித
பேதுரு மற்றும் புனித பவுலடியாரின் திருநாளையொட்டிய பதிமூன்று நாட்கள்
திருச்சபையில் கடைபிடிக்கின்ற நோன்பே ஸ்லீஹா நோன்பு.
11.
பதிமூன்று
நோன்பின் குறிக்கோள் என்ன?
திருத்தூதர்களைப்
போன்று திருச்சபை மக்களின் மறைபரப்புப்பணியார்வத்தை வளர்த்துதல் என்பதே இந்த
நோன்பின் குறிக்கோள்.
12.
பதினைந்து
நோன்பின் மறு பெயர் என்ன? சூனோயோ நோன்பு
13.
பதினைந்து
நோன்பின் முக்கியத்துவம் என்ன? தூய
இறை அன்னையின் விண்ணேற்புத் திருநாளின் ஆயத்தமாக பதினைந்து நாள் கடைபிடிக்கின்ற
நோன்பே இது. இறைஅன்னையை போன்று அனைத்து திருச்சபை மக்களும் விண்ணுலக வாழ்வை
அடைவதற்காக இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகின்றது.
14.
எட்டு
நோன்பின் முக்கியத்துவம் என்ன? இறை
அன்னையின் பிறப்புத் திருநாளையொட்டிய தனிப்பட்ட தேவைகளை சமர்ப்பித்து தூய
அன்னையின் பரிந்துரை வேண்டி எட்டு நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
15.
உபவாசம்
இருக்க வேண்டிய நாட்கள் யாவை? 1. பெரிய நோன்பின் நாற்பதாம் வெள்ளி நீங்கலாக
ஏனைய அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் 2. பெரியநோன்பு ஆரம்பிக்கின்ற சுபுக்கோனோ
திங்கட்கிழமையும், 3. மூன்று நோன்பின் செவ்வாய்க்
கிழமையும் 4. நோன்பு நாட்களில் ஒரு நேரமும் உபவசிக்க வேண்டும் என்பது சாதாரண முறை.
5. தேவ நற்கருணை உண்பதற்கு முன் ஒரு மணி நேரமாவது உபவசிக்க வேண்டும்
16.
உபவாசத்திலிருந்து
விடுப்பு பெறுவர்கள் யாவர்?
குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள்,
கடின உழைப்பாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு உபவாசத்திலிருந்து
விலக்களிக்கப்பட்டிருக்கிறது.
17.
மாமிசம்
உண்ணக்கூடாத ஒறுத்தல் கடைபிடிக்க வேண்டிய நாட்கள் யாவை? எல்லா வெள்ளிக்கிழமைகளிலும், இருபத்தைந்து
நோன்பு, மூன்று நோன்பு, பெரிய நோன்பு போன்ற காலங்களிலும் மாமிசம் உண்ணக்கூடாது
18.
மாமிசம்
உண்ண அனுமதிக்கப்பட்டுள்ள வெள்ளிக்கிழமைகள் யாவை? 1. மூன்று நோன்புக்கும் ஐம்பது நோன்பு துவக்கத்திற்கும் இடையில் வரும்
பதினெட்டு நாட்களிலும் உள்ள வெள்ளிக்கிழமைகளிலும், 2. உயிர்ப்பு முதல்
பெந்தெகோஸ்தே வரையிலான ஐம்பது நாட்களில் வரும் வெள்ளிக்கிழமைகளிலும் மாமிச உணவு வகைகள் உண்ணலாம்.
19.
மீன், மற்றும் முட்டை உண்ணக்கூடாத ஒறுத்தல்
கடைபிடிக்க வேண்டிய நாட்கள் யாவை? 1. மூன்று நோன்பு நாட்களிலும், 2. பெரிய நோன்பின் முதல் திங்கட்கிழமையிலும், 3. பெரிய நோன்பின் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும், 4. நாற்பதாம் வெள்ளி முதல் உயிர்ப்பு வரையிலான
அனைத்து நாட்களிலும் மீன்,
மற்றும் முட்டை
போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
20.
புனித
வெள்ளியன்று தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் யாவை? மாமிசம், மீன், முட்டை, பால், பாலிலிருந்து பெறுகின்ற பொருட்களும் உண்ணக்கூடாது.
21.
நோன்பு
முடிகின்ற நாளில் கடைபிடிக்க வேண்டாதது என்ன? ஒறுத்தல் கடைபிடிக்க வேண்டாம்
22.
நோன்பின்
முக்கியமான பகுதிகள் யாவை? உபவாசித்தல், செபித்தல்,
தர்மம் செய்தல் என்பவை
நோன்பின் முக்கியமான பகுதிகளாகும்.
23.
மலங்கரைத்
திருச்சபையின் “நாற்பது நோன்பை நோற்றிடு என்ற பாடல்
யாது?
“நாற்பது
நோன்பை நோற்றிடு நீ வறியார்க்கமுது படைத்திடு* நீ ஈசாய் மகனைப்* போல் நீயும்
மன்றாடிடு தினமேழு முறை
24.
நோன்பில்
ஆர்வம் கொண்டு கிறிஸ்துவோடு ஒன்றாவதற்கு நற்செய்தி வாசகத்திற்குப்பின் பாடப்படும்
பாடலின் பொருள் என்ன?“பெரியோ ராயுதமாம் நோன்பில் ஆர்வம் கொள்வோமே
25.
“மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும்
வாழ்வர் என மறைநூலில் எழுதியுள்ளதே” (மத்தேயு
4 : 4)
26.
மலங்கரைத்
திருச்சபையின் முக்கியமான நோன்புகள் யாவை? ஐம்பது நோன்பு அல்லது பெரியநோன்பு, இருபத்தி ஐந்து நோன்பு, மூன்று
நோன்பு
7. 14
திருநாள்கள்
1.
திருநாள்களும், கொண்டாட்டங்களும் யாருடைய வரலாற்றைப் போன்றே
பழமை வாய்ந்தவை? மனித வரலாற்றை
2.
பழங்கால
கலாச்சாரங்களில் கொண்டாட்டங்கள் எதனை தழுவியதாகவே இருந்தன? மதம்
3.
யூத
குலத்தின் திருநாள்களுக்கு மையமாக அமைந்தவை என்ன? பழைய ஏற்பாட்டில் கடவுளின் மீட்புச் செயல்கள்
4.
கிறிஸ்தவத்
திருநாட்களுக்கு அடிப்படையாக அமைந்தவை என்ன?
இயேசுவின் மீட்புப் பணிகள்
5.
இயேசுவின்
பிறப்பு முதல் தூய ஆவியின் வருகை வரையுள்ள முக்கிய நிகழ்வுகளை அடிப்படையாகக்
கொண்டு திருச்சபை எத்தனை திருநாள்களைத் கொண்டாடி வருகின்றது? ஏழு
6.
மாறானாய
(கடன்) திருநாட்கள் எத்தனை? ஏழு
7.
மாறானாய
(கடன்) திருநாட்கள் யாவை? கிறிஸ்துமஸ், தனஹா, இயேசு கோவிலில் அர்ப்பணிக்கப்படுதல், உயிர்ப்பு, விண்ணேற்றம்,
பெந்தெகோஸ்து, இயேசு தோற்றம் மாறுதல்.
8.
மாறானாய
திருநாட்கள் என்பதன் பொருள் என்ன? ஆண்டவரின் திருநாட்கள்
9.
ஆண்டவரின்
திருநாட்களைத் தவிர திருச்சபையில் கொண்டாடப்படும் மற்று திருநாட்கள் யாவை? தூய இறையன்னையின் திருநாள்களும், திருத்தூதர்களின் திருநாள்களும், மறைசாட்சிகள் மற்றும் புனிதர்களின்
திருநாள்களும்
10.
இறைமகனாகிய
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூருகின்ற திருநாளுக்கு என்ன பெயர்? கிறிஸ்துமஸ்.
11.
இயேசு
பெத்லகேமில் பிறந்த போது உரோமைப் பேரரசர் யார்? அகஸ்து சீசர்
12.
இயேசு
பெத்லகேமில் பிறந்த போது யூதேய நாட்டின் அரசர் யார்? ஏரோது
13.
ஆண்டவரின்
பிறப்புத் திருநாளுக்கு மலங்கரை
கத்தோலிக்கத் திருச்சபையில் பயன்படுத்தும் சுறியானிச் சொல் என்ன? 'யல்தா'
14.
கிறிஸ்துமஸ்
மகிழ்ச்சியின்,
அமைதியின், எதிர்நோக்கின் திருநாளாகும்.
15.
முதல்
பெற்றோர்கள் எதன் விளைவாக இறையருளை இழந்தனர்? பாவம் செய்ததன்
16.
முதல்
பெற்றோர்களின் பாவத்தால் மக்கள் அனுபவிப்பவை யாவை? துன்பமும் அமைதியின்மையும்
17.
மனித
குலத்தை மீட்பதற்காகத் தந்தையாகிய கடவுள் தமது ஒரே மகனாகிய யாரை மனிதனாக
இவ்வுலகிற்கு அனுப்பினார்? இயேசு
18.
இயேசுவின்
பிறப்பாலா வானதூதர்கள் மகிழ்ச்சியோடு பாடியது என்ன? : “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி
உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!!” (லூக்கா 2
: 14)
19.
கடவுள்
மனித குலத்தை மீட்பதற்காக உருவாக்கிய மீட்புத் திட்டத்தின் வெளிப்படையான தொடக்கம்
என்பது எது? கிறிஸ்துவின் மனிதாவதாரம்.
20.
கிறிஸ்துமஸ்
தின சிறப்புத் திருச்சடங்குகள் யாவை? கிறிஸ்துமஸ் நாளன்று இரவு நடைபெறும்
இரவு மன்றாட்டு, பவனி, மறைநூல் வாசகங்கள்,
தீவலத் திருச்சடங்கு
மற்றும் திருப்பலி
21.
கிறிஸ்துமஸ்
தின திருச்சடங்குகளின் போது எவை நினைவு கூரப்படுகின்றன? இயேசுவின் மனிதாவதார நிகழ்ச்சிகள்.
22.
தீவலத்
திருச்சடங்கில் எரிந்து பிரகாசிக்கின்ற நெருப்பு யாருக்கு அடையாளம்? இயேசு
23.
தீவலத்
திருச்சடங்கில் இடையர்கள் இயேசுவை ஆராதித்ததையும், ஞானிகள் வந்து பொன்,
தூபம், வெள்ளைப்போளம் ஆகியவை அர்ப்பணித்ததையும்
நினைவு கூர்ந்து இறைமக்கள் செய்வது என்ன?
எரிகின்ற நெருப்பில் குந்திரிக்கம் புகைக்கின்றனர்.
24.
தனஹாத்
திருநாள் எந்நாளில் கொண்டாடப்படுகிறது? ஜனவரி
ஆறாம் நாள்
25.
தனஹா
என்ற சுறியானி வார்த்தைக்கு பொருள் என்ன? 'உதயம்'
26.
தனஹாத்
திருநாளுக்கு கிரேக்க மொழிச் சொல் என்ன?
எப்பிஃபனி'
27.
எப்பிஃபனி
என்ற சொல்லின் பொருள் என்ன? இறைவனின் வெளிப்படுத்துதல்
28.
மலங்கரை
கத்தோலிக்கத் திருச்சபையில் தனஹா என்பது எதைக் குறிக்கின்றது? யோர்தான் நதியில் இயேசு பெற்ற திருமுழுக்கை
29.
யோவானிடமிருந்து
இயேசு திருமுழுக்கு பெற்றபோது யார் தம்மை வெளிப்படுத்தினார்? மூவொரு இறைவன்
30.
இயேசு
திருமுழுக்கு பெற்றபோது மூவொரு இறைவன் தம்மை வெளிப்படுத்திய விதங்கள் யாவை? தந்தை தமது குரலாலும் மகன் தன்னுடைய
பிரசன்னத்தாலும், தூய ஆவியார் புறாவின் வடிவிலும்
தங்களை உலகுக்கு வெளிப்படுத்தினர்.
31.
இயேசு
திருமுழுக்குப் பெற்றுக் கொண்டதன் வாயிலாக யாரை எல்லாக் காலங்களுக்காகவும்
தூய்மைப்படுத்தினார்? மனித குலம் முழுவதையும்
32.
இயேசுவின்
திருமுழுக்கு எதைக் குறிக்கின்றது? தண்ணீரால் அடையும் மீட்பு அனுபவம்
33.
பழைய
ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் செங்கடல் கடந்து தண்ணீர் வழியாக மீட்படைந்து
வாக்களிக்கப்பட்ட நாட்டை அடைந்தது போல புதிய ஏற்பாட்டில் மக்கள் அனுபவித்தது என்ன? இயேசுவின் திருமுழுக்கின் போது தண்ணீர்
வாயிலாக மீட்பின் அனுபவம்
34.
இயேசுவின்
திருமுழுக்கு எதற்கு அடையாளமாக அமைந்தன?
அவருடைய இறப்பு, உயிர்ப்பு
35.
'நான் ஒரு திருமுழுக்குப் பெறவேண்டி
இருக்கிறது. அதுவரையிலும் நான் மனவேதனையடைகிறேன்? யார் கூறியது இயேசு
36.
தனஹா
திருநாளில் முக்கிய திருச்சடங்கு எது?
தண்ணீரை ஆசீர்வதித்தல்.
37.
தனஹா
திருநாளில் ஆசீர்வதித்த தண்ணீரைப் பெறும் இறைமக்கள் எதன் அனுபவத்தைப் பெற்றுக்
கொள்கின்றனர்? திருமுழுக்கின்
38.
இயேசுவை
கோயிலில் அர்ப்பணித்தல் திருநாளின் சுறியானிப் பெயர் என்ன? மாயல்த்தோ
39.
இயேசுவைப்
பெற்றோர்கள் எந்நாளில் கோயிலில் அர்ப்பணித்தனர்? நாற்பதாம் நாள்
40.
‘மாயல்த்தோ
என்பதன் பொருள் என்ன? நுழைதல், நிகழ்த்துதல்
41.
யூதர்களின்
சட்டப்படி ஆண்குழந்தையை எந்நாளில்
கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிப்பது வழக்கம்? நாற்பதாம் நாளில்
42.
யூதர்களின்
சட்டப்படி பெண்குழந்தையை எந்நாளில்
கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிப்பது வழக்கம்? எண்பதாவது நாளில்
43.
இயேசுவை
கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்த நாளை எத்திருச்சடங்காக கருதுகின்றனர்? மரியன்னையின் தூய்மைப்படுத்துதல்
திருச்சடங்கு
44.
இயேசுவின்
ஆலய நுழைவுத் திருநாளை மலங்கரை திருச்சபை
எப்போது கொண்டாடுகின்றது? பிப்ரவரி இரண்டாம் நாளில்
45. இயேசுவை கோயிலில் அர்ப்பணித்ததை
எவ்விதங்களில் புரிந்து கொள்ளலாம்?
1. மோசேயின் சட்டத்தைக் கடைப்பிடித்து தந்தையோடுள்ள அர்ப்பணிப்பு,
கீழ்ப்படிதல் 2. தூய்மைப்படுத்துதலின் பலி நிறைவேற்றியதன் மூலம்
இயேசு மனித குலம் முழுவதையும் தூய்மைப்படுத்தினார். 3. இயேசுவே பலி செலுத்துபவரும்,
பலிப் பொருளும் என்ற உண்மையை இதன்மூலம்
முன்னறிவிக்கிறார். 4. இயேசு மனித குல மீட்பர்'
என்னும் உண்மையையும் வெளிப்படுத்தப்பட்டது.
46.
இயேசு
உயிர்த்தெழுந்த உயிர்ப்புத் திருநாளாகத் தொடக்க கால கிறிஸ்தவர்கள் எந்நாளில்
கொண்டாடி வந்தனர்? ஞாயிற்றுக்கிழமை
47.
ஆண்டவரின்
நாள் என்றும், இயேசு உயிர்த்த நாள் என்றும் எந்நாள்
அறியப்படுகிறது? ஞாயிற்றுக்கிழமை
48.
உயிர்ப்புத்
திருநாளுக்கு ஆங்கிலச் சொல் என்ன? ஈஸ்டர்
49.
உயிர்ப்புத்
திருநாளுக்கு சுறியானிச் சொல் என்ன? கெம்தா
50.
கிழக்குத்
திவழிபாட்டு முறைகளின் மையமாக விளங்கும் திருநாள் எது? உயிர்ப்புத் திருநாள்.
51.
“கிறிஸ்து உயிருடன்
எழுப்பப்படவில்லையென்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்.'' யார் கூறியது? புனித பவுல்
52.
'திருநாட்களின் திருநாள்' எனப்படும் திருநாள் எது? உயிர்ப்புத் திருநாள்
53.
பாவம், தீமை, மரணம்
இவற்றின் மேலுள்ள வெற்றி எனப்படுவது எது?
உயிர்ப்பு
54.
அமைதி, ஒற்றுமை, ஒப்புரவு இவற்றின் திருநாள் எனப்படுவது எது? உயிர்ப்புத் திருநாள்
55.
ஒவ்வொரு
கிறிஸ்தவனின் உயிர்ப்பின் அடித்தளம் எனப்படுவது எது? இயேசுவின் உயிர்ப்பு
56.
உயிர்ப்பின்
சிறப்புத் திருச்சடங்குகள் எவை?
உயிர்ப்பின் இரவு மன்றாட்டு, உயிர்ப்பை அறிவித்தல், அமைதியின் திருச்சடங்கு, பவனி, மறைநூல் வாசகம், சிலுவைக் கொண்டாட்டம், சிலுவையை
முத்தம் செய்தல், திருப்பலி
57.
புனித
வெள்ளியன்று கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட திருச்சிலுவையை எத்துணியால்
அலங்கரித்து இயேசுவின் உயிர்ப்பு முழக்கமிட்டு அறிவிக்கப்படுகிறது? வெற்றியின் அடையாளமான சிவப்பு நிறத்துணியை
58.
உயிர்ப்புத்
திருநாளின் திருச்சடங்குகளின் மையக்கருத்து என்ன? அமைதி
59.
ஆதிபெற்றோரின்
கீழ்ப்படியாமையால் மனித குலம் இழந்த அமைதியும், மகிழ்ச்சியும் எப்போது திரும்பக் கிடைத்தன? இயேசுவின் உயிர்ப்பால்
60.
உயிர்த்த
இயேசு சீடர்களுக்குக் காட்சியளித்தபோதெல்லாம் முதலில் எவ்வாழ்த்தினைக் கூறினார்? அமைதி
61.
உயிர்த்தெழுந்த
இயேசு நாற்பதாம் நாள் மகிமையோடு தந்தைக் கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கச்
சென்ற நிகழ்ச்சிக்கு என்ன பெயர்? இயேசுவின் விண்ணேற்றம்
62.
விண்ணேற்றத்
திருநாளிந் மூன்று உண்மைகள் யாவை?
(1) திருத்தூதர்களிடமிருந்து
இயேசு பிரியாவிடை பெற்றார். (2)
வரலாற்றைக் கடந்து
சென்றார். (3) இயேசு தந்தைக் கடவுளின்
வலப்பக்கத்தில் என்றென்றைக்குமாக வீற்றிருக்கிறார்.
63.
ஆதாம்
தனது பாவத்தால் மூடிய விண்ணக வாசலை இயேசு எதனால் திறந்து வைத்தார்? விண்ணேற்றத்தால்
64.
விண்ணேற்றத்
திருநாளின் முக்கிய சிந்தனைகள் யாவை? இயேசுவின் விண்ணேற்றம், இயேசுவின்
இரண்டாம் வருகை
65.
சிவப்பு
நிறத் துணியால் அலங்கரிக்கப்பட்ட சிலுவை உயிர்ப்புத் திருநாள் முதல் விண்ணேற்றத்
திருநாள் வரை நாற்பது நாள்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கும்? மத்பஹாவில்
66.
சிவப்பு
நிறத் துணியால் அலங்கரிக்கப்பட்ட சிலுவை மத்பஹாவில் உயிர்ப்புத் திருநாள் முதல்
விண்ணேற்றத் திருநாள் வரை வைக்கப்பட்டிருப்பது எதனைக் குறிக்கின்றது? உயிர்ப்புக்குப் பின் விண்ணேற்றம் வரை
இப்பூவுலகில் இருந்த இயேசுவின் பிரசன்னம்
67.
பெந்தக்கோஸ்து
என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் என்ன?
ஐம்பதாவது நாள்
68.
யூதர்களின்
பாஸ்கா திருநாளுக்குப் பின் வருகின்ற ஐம்பதாவது நாளை யூதர்கள் எத்திருநாளாகக்
கொண்டாடினர்? அறுவடையின் விழாவாகவும், சீனாய் மலையில் மோசேக்குக் கட்டளை வழங்கியதன்
திருநாளாகவும்
69.
யாருடைய
செயல்கள் பெந்தக்கோஸ்து நாளில் வெளிப்பட்ட ன? தூய ஆவியார்
70.
பெந்தக்கோஸ்து
என்பது தூயஆவியாரின் திருநாளாகும்.
71.
பெந்தக்கோஸ்து
திருநாளில் நடைபெறும் மூன்று சிறப்புத் திருச்சடங்குகள் யாருடைய பெயர்களாலானவை? தந்தை, மகன்
மற்றும் தூய ஆவி
72.
பெந்தக்கோஸ்து
திருநாளின் முக்கியத் திருச்சடங்கு எது?
தண்ணீரைத் தெளித்தல்
73.
இயேசு
தோற்றம் மாறுதல் திருநாளின் அடித்தளம் எனப்படுவது எது? இயேசு தோற்றம் மாறுதல்
74.
இயேசு
மலையுச்சியில் வைத்து தமது மகிமையை வெளிப்படுத்திய போது உடனிருந்தவர்கள் யாவர்? பேதுரு, யாக்கோபு,
யோவான்
75.
இயேசுவின்
தோற்றம் மாறுதல் திருநாள் திருச்சபையில் எக்காலம் முதல் கொண்டாடப்படுகிறது? ஐந்தாம் நூற்றாண்டு முதல்
76.
மலங்கரைத்
திருச்சபை இயேசுவின் தோற்றம் மாறுதல் திருநாளை எந்நாளில் கொண்டாடுகின்றது? ஆகஸ்ட் ஆறாம் நாளன்று
77.
இயேசுவின்
தோற்றம் மாறுதல் எவற்றை வெளிப்படுத்துகின்றன? அவரது மகிமையையும் இறைத்தன்மையையும்
78.
அன்றாட
வாழ்க்கையில் உருவாகும் சிலுவையை ஏற்றுக் கொண்டு மகிமையின் எதிர்நோக்கில் வாழ
நமக்கு உதவி புரிகின்ற திருநாள் எது? இயேசுவின் தோற்றம் மாறுதல் திருநாள்
79.
இறையன்னைக்கு
தூதறிவித்தத் திருநாளைத் திருச்சபை எப்போது கொண்டாடி வருகின்றது? மார்ச் 25 ம் நாள்
80.
இறை
அன்னையின் பிறந்த நாளை திருச்சபை எப்போது கொண்டாடி வருகின்றது? செப்டம்பர் 8-ம் நாள்,
81.
இறையன்னை
விண்ணகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட திருநாளை திருச்சபை எப்போது கொண்டாடி
வருகின்றது? ஆகஸ்டு 15-ம் நாள்
82.
திருச்சபையில்
கொண்டாடப்படும் மரியன்னையின் மற்று திருநாள்கள் எவை? விதைகளின் பொருட்டு மரியன்னை, அமல உற்பவம்,
கதிர்களை முன்னிட்டு
மரியன்னை
83.
இயேசுவின்
மீட்பு நிகழ்வுகளோடு ஒன்றிணைந்து வாழ்வதற்கு எந்த திருநாள்கள் நமக்குத்
துணைபுரிகின்றன? மாறானாய திருநாள்கள்
84.
“தலைமுறைகள் - வழியாய் – பிறப்புத்
திருநாள் அகமகிழ்வோடு கொண்டாடுகின்றோம். இப்பெருநாள் தினமோ அருள்நிறைவாகும் தலைமகன்
இன்று மகனாய் பிறந்தார்."
85.
"நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம். புகழ்ப்பாக்களால்
அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்." (திருப்பாடல்கள். 95 : 2)
7. 15
திருவழிபாட்டு ஆண்டு
1.
இயேசுவின்
பிறப்பு முதல் பெந்தக்கோஸ்து வரையிலான முக்கிய நிகழ்வுகளை திருச்சபையில் நாம்
எவ்வாறு நினைவு கூருகின்றோம்?
திருநாட்களாக
2.
இயேசுவின்
மீட்பு நிகழ்வுகள் அனைத்தையும் ஓராண்டு காலம் சிறப்பாக நினைவு கூர்வதை எவ்வாறு
அழைக்கின்றோம்? திருவழிபாட்டு
ஆண்டு
3.
திருவழிபாட்டு
ஓராண்டு நிகழ்வுகளை எவ்வாறு கூறுகின்றோம்? ஆண்டுச் சுழற்சி (Yearly Cycle)
4.
இயேசுவின்
மீட்பு நிகழ்வுகளை ஒருவாரக் காலத்திற்குள் நினைவு கூருவதை எவ்வாறு அழைக்கிறோம்? வாரச் சுழற்சி (Weekly Cycle)
5.
இயேசுவின்
மீட்பு நிகழ்வுகளை ஒவ்வொரு நாளும் நினைவு கூருவதை எவ்வாறு அழைக்கிறோம்? அனுதின சுழற்சி (Daily Cycle
6.
திருவழிபாட்டில்
ஒரு நாளினை யாமங்களாகப் பிரித்ததன் நோக்கம் என்ன? இடைவிடாது செபிக்கவும், எப்போதும் இறைவனோடு ஒன்றிணைந்து வாழவும்
7.
திருவழிபாட்டில்
ஒரு நாளினை எத்தனை யாமங்களாகப் பிரித்து மன்றாட்டுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன? ஏழு
8.
கிழக்குத்
திருச்சபைகளில் முழுமையான எண்ணாக சிறப்பிடம் கொண்ட எண் எது?
ஏழு
9.
ஏழு
யாமங்கள் யாவை? மாலை, துயிலுக்கு முன், இரவு, காலை, மூன்றாம் மணி,
ஆறாம் மணி, ஒன்பதாம் மணி
10.
காலை
மன்றாட்டில் யாரை நினைவுகூருகின்றோம்? ஒளியைத் தந்த இறைவனை
11.
மூன்றாம்
மணி மன்றாட்டில் எந்நிகழ்வை நினைவுகூருகின்றோம்? இயேசு பிலாத்துவிடமிருந்து தண்டனைப்
பெற்றது
12.
ஆறாம்
மணி மன்றாட்டில் எந்நிகழ்வை நினைவுகூருகின்றோம்? இயேசுவின் சிலுவை இறப்பு
13.
ஒன்பதாம்
மணியில் எந்நிகழ்வை நினைவுகூருகின்றோம்? இயேசுவின் சிலுவை இறப்பால் நிகழ்ந்த இயற்கை
மாற்றங்கள்
14.
மாலை
மன்றாட்டின் நோக்கம் என்ன?
வேலையிலிருந்து ஓய்ந்திருப்பது
15.
துயிலுக்கு
முன் மன்றாட்டிலும் இரவு மன்றாட்டிலும் நாம் உணர வேண்டியது என்ன? இறையருளால் துயில் கொள்ளல்
16.
திருவழிபாட்டில்
வாரத்தின் ஏழு நாள்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் எது? ஞாயிறு
17.
திருவழிபாட்டில்
ஞாயிறு நாளில் எதனை நினைவுகூருகின்றோம்? ஆண்டவரின் உயிர்ப்பு நாள்
18.
திருவழிபாட்டில்
திங்கள் மற்றும் செவ்வாய் போன்ற நாட்கள் எத்தகைய நாட்களாக அமைகின்றன? அனுதாபத்தின்
19.
திருவழிபாட்டில்
புதன்கிழமை யாரை நினைவுகூருகின்றோம்?
இறை அன்னை மரியா
20.
திருவழிபாட்டில்
வியாழக்கிழமையில் யாரை நினைவுகூருகின்றோம்? திருத்தூதர்கள்,
இறைவாக்கினர்கள், மறைசாட்சிகள்
21.
திருவழிபாட்டில்
வெள்ளிக்கிழமையில் எதனை நினைவுகூருகின்றோம்? இயேசுவின் சிலுவை மரணம்
22.
திருவழிபாட்டில்
சனிக்கிழமையில் எவற்றை நினைவுகூருகின்றோம்? இறந்தோர், இயேசுவின் இரண்டாம் வருகை, எதிர்நோக்கியிருக்கும் மறுவாழ்வு
23.
வாரத்தின்
ஏழு நாட்களுக்கும் உள்ள தனித்தனி மன்றாட்டுக்களைக் கொண்ட மன்றாட்டு மாலைக்கு என்ன
பெயர்? பாசுரமாலை
24.
பாசுரமாலையின்
சுறியானிச் சொல் என்ன?
ஸ்ஹீம்மோ
25.
ஸ்ஹீமோ
என்ற சொல்லின் பொருள் என்ன?
சாதாரணமான
26.
இயேசுவின்
பிறப்பு முதல் இரண்டாம் வருகை வரையிலான மீட்பு நிகழ்வுகளை ஒரு ஆண்டுவட்டத்தில்
திருச்சபை நினைவு கூர எத்தனை காலங்களாக பிரித்துள்ளனர்? (1) மங்களவாழ்த்துக் காலம் (2) யல்தா
(கிறிஸ்துமஸ்) - தனஹா காலம் (3)
தவக்காலம் (4) உயிர்ப்புக்காலம் (கியம்தா) (5) பெந்தகோஸ்துக் காலம் (6) தோற்றம் மாறுதல் காலம் (7) திருச்சிலுவைக்
காலம்.
27.
ஏழு
காலங்களின் ஞாயிற்றுக் கிழமைகளிலும்,
திருநாட்களிலும்
பயன்படுத்த வேண்டிய சிறப்பு மன்றாட்டுக்களை எவ்வாறு அழைப்பர்? பெங்கீஸோ மன்றாட்டு
28.
திருவழிபாட்டு
ஆண்டின் முதல் காலம் எது?
மங்கள வாழ்த்துக் காலம்
29.
மலங்கரைத்
திருச்சபையில் திருவழிபாட்டு ஆண்டின் தொடக்க ஞாயிறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? கூதோஸ்
ஈத்தோ
30.
கூதோஸ்
ஈத்தோ என்பதன் பொருள் என்ன?
திருச்சபையை புனிதப்படுத்துதல்
31.
கூதோஸ்
ஈத்தோ ஞாயிறு அக்டோபர் மாதத்தில் எப்போது கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் மாதக் கடைசி இரண்டு நாட்களில் ஒன்று ஞாயிற்றுக் கிழமையாயின்
32.
கூதோஸ்
ஈத்தோ ஞாயிறு நவம்பர் மாதத்தில் எப்போது கொண்டாடப்படுகிறது?
நவம்பரில் உள்ள முதல் ஞாயிற்றுக் கிழமை
33.
கூதோஸ்
ஈத்தோ ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த ஞாயிறு எது? ஹுதோஸ் ஈத்தோ
34.
ஹுதோஸ்
ஈத்தோ என்பதன் பொருள் என்ன?
'திருச்சபையைப்
புதுப்பித்தல்'
35.
எத்தனை
ஞாயிற்றுக்கிழமைகளில் இயேசுவின் பிறப்பைக் குறித்த முன்னறிவிப்புகள்
நினைவுகூரப்படுகின்றன?
ஐந்து வாரங்கள்
36.
இயேசுவின்
பிறப்புக்காக இறைமக்களை ஆயத்தம் செய்கின்ற காலம் எது? மங்கள வார்த்தைதக்காலம்
37.
மங்கள
வார்த்தைதக்காலத்தில் வருகின்ற நோன்பு எது? இருபத்தி ஐந்து நோன்பு
38.
யல்தா
(கிறிஸ்துமஸ்) - தனஹா காலத்தின் ஞாயிற்றுக்கிழமைகள் யாவை? கிறிஸ்துமஸ்க்கு முந்தைய ஞாயிற்றுக்
கிழமையிலிருந்து பெரிய தவக்காலம் ஆரம்பிக்கின்ற ஞாயிற்றுக் கிழமை வரையிலான ஏழு
வாரங்கள்
39.
யல்தா
(கிறிஸ்துமஸ்) - தனஹா காலத்தின் முக்கிய திருநாட்கள் எவை? இயேசுவின் பிறப்புத் திருநாள், இயேசுவின் திருமுழுக்குத் திருநாள்
40.
தவக்காலம்
என்றால் என்ன? இயேசுவின்
உயிர்ப்புத் திருநாளை முன்னிட்டுவரும் ஆயத்த நாட்களே தவக்காலம்.
41.
திருவழிபாட்டு
ஆண்டில் மிகவும் ஆசீர்வாதமான காலம் எனப்படுவது எது? தவக்காலம்
42.
திருச்சபை
நினைவு கூரப்படுபவை என்ன?
இயேசுவின் நாற்பது நாள் நோன்பும்,
பணிவாழ்வும், பாடுகளும், மரணமும்
43.
தவக்கால
நாட்கள் யாவை? நோன்பின் முதல்
ஞாயிற்றுக் கிழமையிலிருந்து உயிர்ப்பு திருநாள் வரையிலான ஐம்பது நாட்களே.
44.
தவக்காலத்தில்
எத்தனை வாரங்கள் உள்ளன?
உயிர்ப்புக்கு முந்தைய ஏழு வாரங்கள்
45.
தவக்காலத்தில்
இயேசுவின் இறை ஆற்றலை வெளிப்படுத்துகின்ற அற்புதங்களை எத்தனை வாரங்களில் நினைவு
கூருகின்றோம்? நோன்பின் முதல்
ஆறு வாரங்களில்
46.
தவக்காலத்தில்
பாதி நோன்பு எப்போது கொண்டாடப்படுகின்றது? நோன்பு தொடங்கிய பின் வருகின்ற நான்காவது புதன் கிழமை
47.
தவக்காலத்தில்
பாதி நோன்பு நாளில் தேவாலயத்தின் நடுப்பகுதியில் நிறுவப்படுவது என்ன? 'கொல்கொதா'.
48.
தவக்காலத்தின்
நாற்பதாம் நாளினை எவ்வாறு அழைப்பர்?
நாற்பதாம் வெள்ளிக்கிழமை
49.
நாற்பதாம்
வெள்ளிக்கிழமைக்கு அடுத்த சனிக்கிழமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இலாசரை உயிர்ப்பித்த சனிக்கிழமை
50.
தவக்காலத்தின்
ஏழாவது ஞாயிற்றுக் கிழமை எது?
குருத்தோலை ஞாயிறு
51.
திருப்பாடுகளின்
வாரம் என்பது எது?
குருத்தோலை ஞாயிறு முதல் உயிர்ப்புத் திருநாள் வரையிலான நாட்கள்
52.
திருப்பாடுகளின்
வாரத்தின் மறுபெயர்கள் எவை?
புனித வாரம், பெரிய வாரம்
53.
திருப்பாடுகளின்
வாரத்தில் வருகின்ற வியாழக்கிழமைக்கு பெயர் என்ன? பாஸ்கா வியாழன் அல்லது மறைஉண்மைகளின்
வியாழன்
54.
இயேசு
தேவ நற்கருணை நிறுவியதை எந்நாளில் நினைவு கூருகின்றோம்? பாஸ்கா வியாழன்
55.
புனித
வெள்ளியன்று நினைவு கூரப்படுவது என்ன? இயேசுவின் சிலுவை மரணம்
56.
புனித
சனியன்று நினைவு கூரப்படுவது என்ன?
இயேசு இறந்தவர்களிடையே பாதாளத்தில் நற்செய்தி அறிவித்ததை
57.
உயிர்ப்புக்காலம்
எப்போது? உயிர்ப்பு
ஞாயிறு முதல் பெந்தக்கோஸ்து வரையிலான ஏழு வாரங்கள்
58.
இயேசுவின்
மீட்பு நிகழ்வுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் எது? இயேசுவின் உயிர்ப்பு நாள்
59.
திருச்சபையில்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பெரிய திருநாள் எது? இயேசுவின் உயிர்ப்புத் திருநாள்
60.
உயிர்ப்புக்
காலத்தில் நினைவுகூரப்படுபவை எவை?
உயிர்ப்பின் மகிமை, உயிர்த்த இயேசு சீடர்களுக்குக் காட்சி அளித்தல்
61.
உயிர்ப்பு
நாளில் கல்லறையிலிருந்து சிலுவையை உயிர்ப்பித்து எந்நிறத் துணியால் அலங்கரித்து
மத்பஹாவில் வைக்கப்படுகிறது?
சிவப்புநிறம்
62.
உயிர்ப்புக்குப்
பின் விண்ணேற்றத் திருநாள் வரை சிவப்பு நிறத் துணியால் அலங்கரித்து மத்பஹாவில்
வைக்கப்படுவது எதைக் குறிக்கின்றது?
உயிர்த்தெழுந்த இயேசுவின் பிரசன்னம் நாற்பது நாளிலும் சீடர்களிடம் நிலைத்திருந்தது
63.
திருவழிபாட்டு
மன்றாட்டுக்களில் எப்போது முழந்தாள்படியிட்டுக் கும்பிடுதல் ஆகாது? உயிர்ப்புக்குப் பின் விண்ணேற்றத்
திருநாள் வரை நாற்பது நாட்களில்
64.
உயிர்ப்புக்குப்
பின் விண்ணேற்றத் திருநாள் வரை நாற்பது நாட்களில் நின்றவாறு மன்றாட வேண்டுமென்றும்
என்பதன் பொருள் என்ன?
உயிர்ப்பின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த
65.
உயிர்ப்புக்குப்
பின்னர் 40 முதல் 50 வரையிலான 10
நாட்கள் எவ்வாறு
அழைக்கப்படுகின்றன?
தூய ஆவியாரின் வருகைக்கான காத்திருப்பு நாட்கள்
66.
பெந்தக்கோஸ்துக்
காலத்தின் மறுபெயர் என்ன?
திருத்தூதர்களின் காலம்
67.
பெந்தக்கோஸ்துக்
காலம் எப்போது பெந்தக்கோஸ்து திருநாள் முதல் இயேசு தோற்றம் மாறுதல் திருநாள் வரை
68.
இயேசுவின்
தோற்றம் மாறுதல் திருநாள் எப்போது கொண்டாடப்படுகிறது? ஆகஸ்ட் 6
69.
பெந்தக்கோஸ்துக்
காலத்தில் கொண்டாடப்படுபவை என்ன?
தூய ஆவியாரின் வருகை, திருத்தூதர்களின் நற்செய்தி
அறிவித்தல் திருத்தூதர்களின் நோன்பு,
பேதுரு - பவுல்
திருத்தூதர்களின் திருநாள் மற்றும் புனித தோமையாரின் திருநாள்
70.
தோற்றம்
மாறுதல் காலம் எப்போது?
இயேசுவின் தோற்றம்
மாறுதல் திருநாள் முதல் செப்டம்பர் 14
வரை
71.
மறுவுருவாதல்
காலத்தில் நினைவு கூரப்படுபவை எவை?
இயேசுவின் இறைத்தன்மையையும்,
மகிமையையும்
72.
மறுவுருவாதல்
காலத்தின் படிப்பினை என்ன?
பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் வேறுபடுத்தக் கூடியவை
அல்ல, சிலுவையும் மகிமையும் ஒன்றாயிருக்கிறது, இறந்தவர்களும் வாழ்பவர்களும்
கிறிஸ்துவில் ஒன்றிணைவார்கள்
73.
மறுவுருவாதல்
காலத்தில் கொண்டாடப்படும் இறையன்னையின் திருநாட்கள் யாவை? இறை அன்னையின் பிறப்புத் திருநாள், விண்ணேற்புத் திருநாள்
74.
திருச்சிலுவையின்
புகழ்ச்சி திருநாள் எப்போது?
செப்டம்பர் 14
75.
திருச்சிலுவைக்
காலம் எப்போது?
திருச்சிலுவையின் புகழ்ச்சி திருநாள் முதல் கூதோஸ் ஈத்தோ ஞாயிறுக்கு முந்தைய ஏழு
வாரங்கள்
76.
திருவழிபாட்டு
ஆண்டின் கடைசிக் காலம் எது?
திருச்சிலுவைக் காலம்
77.
ஹெலேனா
அரசி நமது ஆண்டவரின் சிலுவையைக் கண்டடைந்து எருசலேமில் ஒரு தேவாலயத்தில் நிறுவியதை
நினைவுகூரும் திருநாள் எது?
திருச்சிலுவையின் புகழ்ச்சித் திருநாள்.
78.
திருச்சிலுவைக்
காலத்துக்குரிய சிந்தனைகள் எவை?
சிலுவை அடையாளத்தோடு வருகை தரும் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகை, உலக முடிவு, இறந்தவர்களின் மறு வாழ்வு, பொதுத்தீர்வை, விண்ணக எருசலேமின் வெளிப்பாடு
79.
திருவழிபாட்டு
ஆண்டு கூதோஸ் ஈத்தோ ஞாயிறன்று திருப்பலியில் நற்செய்தி வாசகத்துக்குப் பிறகு
இசைக்கின்ற பாடல் எது?
“முள்செடி மே-ல்
இறைபரனார் ...........
80.
“முள்செடி மே-ல் இறைபரனார் மோசே-யை
அழைத்தாரே, அவரிடமாய் உரைத்தாரே, கூடாரம் அதற்குள்ளும், கூடாரம் அதன்மேலும்,
அதிகாரம் அடைந்திடுவாய். ஹாலே-லூயா உ ஹாலே-லூயா குருத்துவம் நீ புரிந்திடுவாய்."
81.
"ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள்
எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்,
ஆண்டவரின் அழகை நான் காண
வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக்
கண்டறிய வேண்டும்.” (திருப்பாடல்கள். 27:4)
8. 9 திருமுழுக்கு
1.
ஆதிபெற்றோர்கள் பாவம் செய்ததன் வழியாக இறை
வாழ்வை இழந்தனர்.
2.
மக்களை மீட்பதற்காக தம் ஒரே மகனை கடவுள்
இவ்வுலகிற்கு அனுப்பினார் (யோவான் 3:16).
3.
எந்த இறைநிகழ்வுகளின் வழியாக மனித குலத்திற்கு இறைவாழ்வு
திரும்பக் கிடைத்தது? இறைமகனான இயேசுவின் மனிதராதல், பகிரங்க
வாழ்வு, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம், பெந்தகோஸ்து
போன்ற நிகழ்வுகளின் வழியாக மனித குலத்திற்கு இழந்த இறைவாழ்வு திரும்பக் கிடைத்தது.
4.
இயேசுவின் பகிரங்க வாழ்வின் போது அவரில்
நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் அவர் இறைவாழ்வை அளித்தார்.
5.
இயேசுவின் உயிர்ப்புக்குப்பின்னர் இறைவாழ்வை
தொடர்ந்து அளிப்பதற்காக எதனை நிறுவினார்?
திருச்சபையை
6.
மீட்புச் செயல்கள் இன்றும் யார் வழியாக
திருச்சபையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன? தூய ஆவியின்
7.
திருச்சபையில் அருளடையாளங்களின் தேவை என்ன? இயேசுவின் கட்டளைப்படி இறைவாழ்வு அதாவது
அருள்வரம் திருச்சபையில் பகிர்ந்தளிப்பது அருளடையாளங்களின் வழியாகவே ஆகும்.
8.
அருளடையாளம் என்பதன் சுறியானி வார்த்தை என்ன?
கூதாசை
9.
கூதாசை என்பதன் பொருள் என்ன? 'புனிதப்படுத்துதல்
10. எதன்
வழியாக திருச்சபையில் இயேசுவின் மீட்புச் செயலில் இன்று நாம் பங்கேற்கிறோம்?
அருளடையாளங்களின்
11. இயேசுவின்
பிரசன்னத்திற்கும் அருளடையாளங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
அருளடையாளங்களின் வழியாக இயேசு மனித வாழ்வில் பிரசன்னமாகி இறைவாழ்வை
பகிர்ந்தளிக்கின்றார். இவ்வாறு இயேசு மக்களில் பிரசன்னமாகி இறைவாழ்வை
பகிர்ந்தளிக்கும் இறைச்செயல்களே அருளடையாளங்கள்.
12. திருச்சபையில்
ஏழு அருள் அடையாளங்கள் யாவை? திருமுழுக்கு, உறுதி
பூசுதல், நற்கருணை, ஒப்புரவு, நோயில்பூசுதல், குருத்துவம், திருமணம்.
13. “ஒருவர்
தண்ணீராலும், தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு
உட்பட இயலாது என இயேசு எந்த யூதத்தலைவரிடம் கூறினார்? நிக்கதேம்
14. இயேசு
நிக்கதேமுக்கு கூறிய மீண்டும் பிறந்தால் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
திருமுழுக்கின் வழியாக வரும் இரண்டாம் பிறப்பை பற்றியே இயேசு கூறினார்
15. திருமுழுக்கின்
வழியாக உள்ள இரண்டாம் பிறப்பு என்ன? திருமுழுக்கின் வழியாக நாம்
தண்ணீராலும் தூய ஆவியாலும் மீண்டும் பிறந்து எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு
இறைவாழ்வில் பங்குபெறவும் செய்கின்றோம்.
16. இயேசு
தமது பகிரங்க வாழ்வை ஆரம்பிக்கும் முன் யோர்தான் நதியில் வைத்து
யோவானிடமிருந்து திருமுழுக்கைப் பெற்றார்.
17. இறைவாழ்வைப்
பெற்றுக்கொள்ள அனைவரும் திருமுழுக்குப் பெறவேண்டும் என்று இயேசு
கற்பித்தார்.
18. “நீங்கள்
போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் தந்தை மகன் தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக்
கொடுங்கள்” (மத்தேயு 28:19)
19. இயேசுவின்
கட்டளைகளுக்கேற்ப திருத்தூதர்கள் நற்செய்தி அறிவிக்கவும், நம்பிக்கை
கொண்டவர்களுக்கு திருமுழுக்குக் கொடுக்கவும் செய்தனர் (திப : 2:38-41;
8:12-13).
20. கிறிஸ்துவால்
நிறுவப்பட்டதும் திருத்தூதர்களால் திருச்சபையில் ஆரம்பிக்கப்பட்டதுமான
அருளடையாளமே திருமுழுக்கு.
21. கிறிஸ்தவ
வாழ்வின் அடிப்படை அருளடையாளம் எது? திருமுழுக்கு
22. ஆன்மீக
வாழ்வின் ஆரம்பமாகவும் பிற அருளடையாளங்களுக்கு வாயிலாகவும் அமைவது எது?
திருமுழுக்கு
23. மலங்கரை
கத்தோலிக்க திருமுழுக்கின் போது வழங்கப்படும் மற்று அருளடையாளங்கள் யாவை?
உறுதிபூசுதலும், நற்கருணையும்
24. தொடக்கத்
திருச்சபையில் கிறிஸ்தவ புகுநிலையினர் என்பவர்கள் யாவர்?
தொடக்கத் திருச்சபையில் திருத்தூதர்களின் நற்செய்தி அறிவித்தலின் வழியாக ஏராளம்
பிற இனத்தார்கள் திருச்சபையின் உறுப்பினராயினர். இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு
மேலாக பயிற்சி அளித்தனர். இவர்கள் கிறிஸ்தவ புகுநிலையினர் (Catechumens)
என்கிறோம். இவ்வாறு விசுவாசம் பயின்றவர்களுக்கு மட்டுமே திருமுழுக்கு
கொடுத்து வந்தனர்.
25. கிறிஸ்தவ
புகுநிலையினர் என்பதன் மறுபெயர் என்ன? Catechumens
26. தொடக்கத்
திருச்சபையில் குழந்தைத் திருமுழுக்கு பற்றி கூறுக?
விசுவாசிகளின் பிள்ளைகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே திருமுழுக்குக் கொடுக்கும்
முறை தொடக்கத் திருச்சபையில் திருத்தூதர்களின் காலத்திலும் இருந்தது. பிற
மதங்களிலிருந்து விசுவாசம் பயின்று கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் மிகச்சிலரே.
கிறிஸ்தவர்களின் குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே திருமுழுக்கு அளிக்கும்
திருத்தூதர்களின் வழக்கு இன்றும் திருச்சபையில் பின்பற்றப்பட்டு வருகிறது.
27. மலங்கரைத்
திருச்சபையில் திருமுழுக்கின் இரண்டு பகுதிகள் யாவை? (1) ஆயத்தத்
திருச்சடங்கு (2) திருநீராட்டு (திருமுழுக்கு).
28. திருமுழுக்கு
பெறுவோரின் முகத்தில் மூன்றுமுறை ஊதும் நிகழ்வு எப்போது?
ஆரம்ப செபம், புறுமியோன், செதறா, எத்றோ, நற்செய்தி
வாசகம் போன்றவற்றிற்குப் பின்னர் குருவானவர் திருமுழுக்குப் பெறுபவருக்கு நேராக
திரும்பி அவருடைய முகத்தில் மூன்றுமுறை ஊதுகிறார்.
29. திருமுழுக்கு
பெறுவோரின் முகத்தில் மூன்றுமுறை ஊதும்போது குருவானவர் செபிப்பது என்ன? இறைவனாகிய ஆண்டவரே, உமது
ஒரே மகன் திருத்தூதர்கள் மீது ஊதிய இறைமூச்சை இவனுளுக்கும் அளித்தருளும். உமது தூய
ஆவியைப் பெறும் பொருட்டு இவனை(ளை) ஆயத்தப் படுத்துவதுடன் சிலை வழிபாட்டின் எல்லா
துச்சங்களும் இவனை(ளை) விட்டு நீங்கிப்போகுமாறும் செய்தருளும்.
30. ஆண்டவர்
ஆதாமின் நாசிகளில் தம் உயிர்மூச்சை ஊதியதன் பொருள் என்ன?
ஆண்டவர் ஆதாமின் நாசிகளில் தம் உயிர்மூச்சை ஊதி உயிர் உள்ளவனாக்கினார். அவ்வாறு
ஆதிபெற்றோர்கள் இறைவாழ்வை பெற்றவர்களாயினர். ஆனால் அவர்கள் பாவம் செய்தபோது
இறைவாழ்வை அதாவது தூய ஆவியை இழந்தனர். “என்
ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதில்லை. அவன் வெறும் சதை தானே” (தொடக்கநூல்.
6:3) என்று கூறி ஆண்டவர் மனிதனை எண்ணிக் கவலை கொண்டார்.
31. மனிதன்
இழந்த தூய ஆவியை எவ்வாறு பெற்றுக்கொண்டான்? மனிதனின்
நிலைகுலைந்த வாழ்வைக் கண்டு இழந்த தூய ஆவியை அவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு
கடவுள் தம் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். மனிதன் தான் இழந்த ஆவியை இயேசுவின்
மீட்புச் செயல்களின் வழியாக பெந்தக்கோஸ்து திருநாளின் போது திரும்பப்
பெற்றுக்கொண்டான். “மனிதனில் என் ஆவி இனிமேல்
குடிகொள்ளாது என்னும் விதியை பெந்தகோஸ்து நாளில் கடவுள் ஆவியை அனுப்பி மாற்றி
எழுதினார்” (பெந்கோஸ்து மூன்றாம் திருச்சடங்கு).
32. குருவானவர்
திருமுழுக்குப் பெறுவோரின் முகத்தில் மூன்றுமுறை ஊதுவதன் பொருள் என்ன?
ஆதாமின் பெந்தகோஸ்தின் போது இயேசு வாக்களித்த தூய ஆவியை ஒவ்வொருவரும் பெற்றுக்
கொள்வது திருமுழுக்கு என்னும் அருளடையாளத்தின் வழியாகவே ஆகும். இன்பவனத்தில்
வைத்து கடவுள் ஆதிமனிதரில் உயிர்மூச்சை ஊதியது போலவும், மாளிகையில்
வைத்து சீடர்களின் மேல் இயேசு உயிர்மூச்சை ஊதியது போலவும் (யோவான் 20:22-23).
திருமுழுக்கின் போது இயேசுவின் பிரதிநிதியான குருவானவர் திருமுழுக்குப்
பெற்றுக்கொள்பவர் மீது ஊதுகிறார். இவ்வாறு தூய ஆவியைப் பெற்றுக்கொண்டு குழந்தை
மறுபிறப்பிற்காக தயார்படுத்தப்படுகின்றது.
33. திருமுழுக்கின்போது
குருவானவர் குழந்தைக்கு பெயர் சூட்டுவது எவ்வாறு? குருவானவர் எண்ணெய் பூசாமல் திருமுழுக்குப்
பெற்றுக்கொள்பவரின் நெற்றியில் மூன்று முறை சிலுவை அடையாளம் வரைந்து தந்தை, மகன், தூய
ஆவியின் பெயரால் குழந்தைக்கு பெயர் சூட்டுகின்றார். மூவொரு இறைவனின் பெயரால்
சிலுவை அடையாளத்தில் முத்திரை இட்டு பெயர் சூட்டி குழந்தையை கடவுளுக்காக
வேறுபடுத்துகின்றார்.
34. ஞானப்பெற்றோர்
சாத்தானை புறக்கணித்து அறிக்கையிடுவது எவ்வாறு?
அலகையை புறக்கணிப்பதற்கான மன்றாட்டை குருவானவர் சொன்னவுடன் குழந்தையை மேற்கு
திசையைப் பார்த்து நிற்கச் செய்து ஞானப்பெற்றோர் மூன்று முறை சாத்தானை
புறக்கணித்து அறிக்கையிடுகின்றனர். ஞானப்பெற்றோர் தனது இடது கையால் குழந்தையின்
இடது கையைப் பிடித்துக் கொண்டு குழந்தைக்காக மன்றாட்டை ஏற்றுச் சொல்கின்றனர்.
இம்மன்றாட்டின் வழியாக குழந்தையை தீய ஆவியின் பிடியிலிருந்து விடுவித்து
அக்குழந்தையின் புத்தியையும், மனதையும்
தூய்மைப்படுத்துகின்றனர்.
35. ஆன்மா
இல்லாத சடலம் சாத்தானின் உறைவிடம் குறிப்பு வரைக?
தூய ஆவியின் பிரசன்னமில்லையெனில் அது ஒரு சடலமாகும். ஆன்மா இல்லாத சடலம்
சாத்தானின் உறைவிடம் ஆகும். அதனாலேயே திருமுழுக்குப் பெறும் குழந்தையிடமிருந்து
சாத்தானை புறக்கணிக்கவும், தூய ஆவியைப் பெற்றுக்கொள்ள
ஆயத்தம் செய்யவும் செய்கின்றோம். இயேசு கூறியதாவது : “மனிதரால்
பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்” (யோவான்
3:6).
36. ஞானப்பெற்றோர்
கிறிஸ்துவை அறிக்கையிடுவது எவ்வாறு? குழந்தையை கிழக்குத்திசையைப்
பார்த்து நிற்கச் செய்து ஞானப்பெற்றோர் கிறிஸ்துவை மூன்றுமுறை
அறிக்கையிடுகின்றனர். ஞானப்பெற்றோர் தமது வலது கையால் குழந்தையின் வலது கையைப்
பிடித்துக் கொண்டு கிறிஸ்துவை அறிக்கையிடுகின்றனர்.
37. சைத்து
எண்ணெயால் அருட்பொழிவு செய்வது எவ்வாறு? குருவானவர்
சைத்து அதாவது ஒலிவ எண்ணெயினால் திருமுழுக்குப் பெற்றுக் கொள்பவரின் நெற்றியில்
மூன்றுமுறை சிலுவை அடையாளத்தால் முத்திரையிடுகிறார்.
38. சைத்து
எண்ணெயால் அருட்பொழிவு செய்வதால் என்ன மாற்றம் ஏற்படுகிறது?
சைத்து எண்ணெயால் அருட்பொழிவு செய்வதன் மூலம் திருமுழுக்கு பெற்றுக்கொள்பவர்
தூய்மையாக்கப்படவும், ஒரு புதுப்பிறப்பாக
மாற்றப்படவும் செய்கிறார். இதன் வழியாக ஒருவர் கிறிஸ்துவின் மகனாக/மகளாக
மாற்றப்படுகிறார்.
39. சைத்து
எண்ணெயால் அருட்பொழிவு செய்வதை எதனோடு ஒப்புமைப் படுத்தலாம்?
இயேசு யோர்தானில் அருட்பொழிவு செய்யப்பட்டதை சைத்து எண்ணெயால் அருட்பொழிவு
செய்வதுடன் ஒப்புமைப்படுத்தலாம்.
40. சைத்து
எண்ணெயால் அருட்பொழிவு செய்வதன் பொருள் என்ன?
உண்மை ஒலிவமரமான இயேசுவில் நாம் ஒட்டப்படுவதற்காகவே ஒலிவ எண்ணெயால் அருட்பொழிவு
செய்யப்படுகிறோம்.
41. திருமுழுக்கில்
வெந்நீரின் பொருள் என்ன? வெந்நீர் திருமுழுக்குத்
தண்ணீரின் எரிகின்ற இறை வல்லமையைக் குறிக்கின்றது. இயேசுவின் திருமுழுக்கின் போது
இறை வல்லமையால் யோர்தானில் இருந்த நீர் சூடாக மாறியது என்று கருதப்படுகிறது.
42. திருமுழுக்குத்
தொட்டியில் தூய ஆவியின் பிரசன்னத்தைக் காட்ட எந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது?
தூய மூறோன்
43. திருமுழுக்குத்
தண்ணீரின் மறுபெயர்கள் யாவை? ஆன்மீக உதரம், அழியாமையின்
உலை
44. திருமுழுக்கின்
மகிமையின் ஆடை எனப்படுவது யாது? திருமுழுக்கின் வழியாக ஒருவர்
அழியா ஆடை அதாவது மகிமையின் ஆடையை உடுத்திக் கொள்கிறார். இன்பவனத்தில் ஆதாம் இழந்த
மகிமையின் ஆடை இறைவாழ்வாகும். அதாவது தூய ஆவியாகும் திருமுழுக்கின் போது
கிடைக்கின்ற புது ஆடை இறைவாழ்வைக் குறிக்கின்றது.
45. தண்ணீர்
மறைநூலில் எவ்வாறு பொருள் கொள்கின்றது? தண்ணீர்
மறைநூலில் இறப்பினுடையவும், விடுதலையினுடையவும்
அடையாளமாகும். நோவாவின் காலத்தில் தீயவர்களை அழித்ததும், நோவாவை
மீட்டதும் நீரின் வழியாகவே ஆகும் (தொடக்கநூல் 68). செங்கடலின்
நீரின் வழியாகவே பார்வோனின் அழிவும், இஸ்ரயேலரின் மீட்பும்
நடைபெற்றது. யோசுவாவும் இஸ்ரயேல் மக்களும் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டை
அடைந்தது யோர்தான் ஆற்றின் நீர் வழியாகவே ஆகும். இயேசு தமது யோர்தான்
திருமுழுக்கின் வழியாகவே புதிய இஸ்ரயேலை இறையரசுக்கு அழைத்தார். சாத்தானின்
தோல்வியும், ஒருவரின் விண்ணுலக நுழைவும் நிகழ வேண்டுமாயின்
அவன் திருமுழுக்குத் தண்ணீரின் வழியாக கடந்து செல்ல வேண்டும்.
46. திருமுழுக்குத்
தொட்டியில் குழந்தையை அமரச்செய்வது எவ்வாறு? தண்ணீரை
ஆசீர்வதித்த பின்னர் குழந்தையை திருமுழுக்குத் தொட்டியில் கிழக்குத் திசையைப்
பார்த்து அமரச் செய்கிறார்.
47. திருமுழுக்குத்
தொட்டியில் குழந்தைக்கு திருமுழுக்கு அளிப்பது எவ்வாறு?
குருவானவர் மேற்குத் திசையில் திரும்பி நின்று வலது கையை குழந்தையின் தலையில்
வைத்து இடதுகையால் திருமுழுக்குத் தண்ணீரை எடுத்து குழந்தையின் தலையில்
ஊற்றுகிறார்.
48. குழந்தைக்கு
திருமுழுக்கு அளிக்கும் போது குருவானவர் கூறுவது என்ன? “வாழ்வையும்
பாவ மன்னிப்பையும் எதிர்நோக்கி (+) தந்தையுடையவும் (+) மகனுடையவும் (+) வாழ்வின்
தூய ஆவியுடையவும் திருப்பெயராலே (பெயர்) நிலைவாழ்விற்காக ஞானஸ்நானம்
பெற்றுக்கொள்கின்றான்(ள்)” என்று கூறிக்கொண்டு குருவானவர்
திருமுழுக்கு அளிக்கிறார்.
49. திருமுழுக்கின்
வழியாக ஒருவர் இயேசுவின் பாஸ்கா மறைபொருளில் பங்கு கொள்கின்றார்.
50. திருமுழுக்கு
புனித பவுல் கூறுவது என்ன? திருமுழுக்கின் வழியாக, இயேசுவின்
இறப்பிலும், கல்லறை அடக்கத்திலும் நாம்
ஒன்றித்திருக்கின்றதனால் அவருடைய உயிர்த்தெழுதலின் போதும் நாம் அவரோடு
ஒன்றித்திருப்போம் என்று புனித பவுல் கூறுகின்றார் (உரோமையர் 6:1-11).
“ஒருவர் தண்ணீராலும், ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு
உட்பட இயலாது என்று மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவான்
3:5)
51. குழந்தையை
விசுவாசத்தில் வளர்க்க கடமைப்பட்டவர்கள் யார்? ஞானப்பெற்றோர்
52. திருமுழுக்குத்
தொட்டியில் வெந்நீரும், குளிர்ந்த நீரும் ஊற்றப்படும்
முறை என்ன?
குருவானவர் வெந்நீரும், குளிர்ந்த நீரும் இரு
கரங்களிலும் சிலுவை வடிவில் பிடித்துக்கொண்டு திருமுழுக்குத் தொட்டியில்
ஊற்றுகிறார்.
53. திருமுழுக்குத்
தொட்டியில் மென்துகிலின் பயன் என்ன? திருமுழுக்குத் தொட்டி சிலுவை அடையாளமுள்ள
மென்துகிலால் மூடப்பட்டு பின்னர் அதனை உயர்த்தி கொண்டாடப்படுகிறது.
54. திருமுழுக்கில்
மகிமையின் ஆடையை உடுத்திக்கொள்வது ஏன்? திருமுழுக்கின் வழியாக ஒருவர் அழியா ஆடை அதாவது
மகிமையின் ஆடையை உடுத்திக்கொள்கிறார். இன்பவனத்தில் ஆதாம் இழந்த மகிமையின் ஆடை இறை
வாழ்வாகும். அதாவது தூய ஆவியாகும். திருமுழுக்கின் போது கிடைக்கின்ற புது ஆடை
இறைவாழ்வைக் குறிக்கின்றது.
55. திருமுழுக்குத்
தண்ணீரில் முழ்குவது இறப்பின் அடையாளமாகவும் தண்ணீரிலிருந்து வெளியே வருவது
உயிர்ப்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
56. திருமுழுக்கின்
வழியாக ஒருவர் பழைய மனிதனை எடுத்து மாற்றி புதுமனிதனை உடுத்திக்கொள்கிறார்.
57. எதன்
வழியாக ஒருவர் ஆன்மாவின் புதுப்படைப்பாக மீண்டும் பிறக்கின்றார். திருமுழுக்கின்
58. தூய
ஆவியின் வழியாக இயேசுவோடும் அவருடைய மறைஉடலாகிய திருச்சபையோடும், தந்தைக்கடவுளோடும்
ஒருவர் நட்புறவு கொள்கின்ற முதல் அருளடையாளமே திருமுழுக்கு.
59. இயேசு
தமது யோர்தான் திருமுழுக்கின் வழியாகவே புதிய இஸ்ரயேலை இறையரசுக்கு
அழைத்தார்.
60. சாத்தானின்
தோல்வியும், ஒருவரின் விண்ணுலக நுழைவும் நிகழ வேண்டுமாயின்
அவன் திருமுழுக்குத் தண்ணீரின் வழியாக கடந்து செல்ல வேண்டும்.
61. திருமுழுக்குத்
தண்ணீர் ஆசீர்வதிக்கும் போது இயேசு யோர்தானில் திருமுழுக்குப் பெற்றதையும் யோவான்
இயேசுவின் திருமுழுக்குத் தண்ணீரை ஆயத்தம் செய்வதையும் நினைவு கூரும் பாடல் எது?
“கேண்மின்! அனைத்தார்களுமே-ஹா,
தண்ணீரைச் சேர்த்தார் யோவான் திருமுழுக்கது நல்-க, ........................
8. 10
உறுதி பூசுதல்
1.
திருமுழுக்கின்
வழியாக கடவுளின் மக்களாக மாறிய ஒவ்வொருவருக்கும் தூய ஆவியை
வழங்கி உறுதிப்படுத்தவும் நிறைவாக்கவும் செய்வது
உறுதிபூசுதல் ஆகும்.
2.
உறுதிபூசுதல்
வழியாக ஒருவன் எவ்வாறாக மாற்றப்படுகிறான்? தூய
ஆவியின் ஆட்கொள்ளுதலால் உறுதிபூசுதல் என்ற அருளடையாளம் ஒருவனை உண்மை
கிறிஸ்தவராகவும், விசுவாசத்தில் நிலைத்திருப்பவராகவும், கிறிஸ்துவின் போர்வீரராகவும் மாற்றுகிறது.
3.
மூறோன்
என்ற கிரேக்க வார்த்தைக்கு பொருள் என்ன? 'நறுமணத் தைலம்'.
4.
உறுதிபூசுதலில்
பயன்படுத்தப்படும் எண்ணெய் யாது? மூறோன்
5.
மூறோன்
உருவாக்கப் பயன்படும் எண்ணெய் யாது? ஒலிவ எண்ணெய்
6.
பழைய
ஏற்பாட்டில் யாரை எண்ணெயினால் அருட்பொழிவு செய்தனர்? அரசர்களையும்,
இறைவாக்கினர்களையும். குருக்களையும்
7.
அருட்பொழிவு
செய்வதன் வழியாக இஸ்ரயேல் மக்கள் என்ன விசுவசித்திருந்தனர்? அருட்பொழிவு செய்யப்படுவதன் வழியாக அரசர்களுக்கும்
இறைவாக்கினர்களுக்கும் குருக்களுக்கும் கடவுளின் ஆவி மிகுதியாக கிடைத்தது என்று
இஸ்ரயேலர்கள் விசுவசித்திருந்தனர்.
8.
தாவீது
அருட்பொழிவு செய்யப்பட்டதைக் கூறுக? தாவீதை அவருடைய சகோதரர்களின்
முன்னில் வைத்து சாமுவேல் கொம்பிலிருந்த எண்ணெயால் அவரை அருட்பொழிவு செய்தார்.
அன்றுமுதல் கடவுளின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது (1சாமு 16:13).
9.
இறைவாக்கினர்கள்
அருட்பொழிவு செய்யப்பட்டதைக் கூறுக? இறைவாக்கினர்களும் அருட்பொழிவு
செய்யப்படுவதன் வழியாக ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள். ஏசாயா இறைவாக்கினர் இவ்வாறு
கூறுகின்றார். “ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது.
ஏனெனில் அவர் எனக்கு அருட்பொழிவு செய்துள்ளார்” (ஏசாயா 61:1).
10.
ஆரோன்
அருட்பொழிவு செய்யப்பட்டதைக் கூறுக? ஆரோனையும் அவர் புதல்வர்களையும்
குருத்துவப்பணி புரிவதற்கு அருட்பொழிவு செய்யும் பொருட்டு ஆண்டவர் மோசேயிடம்
ஒப்படைத்தார் (விடுதலைப்பயணம் 28:41-43).
11.
அருட்பொழிவு செய்யப்பட்டவர்கள் தூய்மையும், கடவுளின் ஆவியும் பெற்றுக்கொள்வார்கள் என்று பழைய ஏற்பாடு
கற்பிக்கிறது.
12.
ஆதித்திருச்சபையில்
தூய ஆவியை பெற்றுக்கொள்வது பற்றிக் கூறுக?
திருமுழுக்குப் பெற்றுக்கொள்வது மட்டுமன்று தூய ஆவியையும் பெற்றுக்கொள்ளும்
பழக்கம் ஆதித்திருச்சபையில் இருந்து வந்தது. திருத்தூதர்கள் திருமுழுக்கு அளித்த
பின்னர் தனிப்பட்ட செயல் வழியாக தூய ஆவியை விசுவாசிகளுக்கு அளித்து வந்ததாக
மறைநூல் சான்று பகர்கின்றது (திருத்தூதர் பணிகள் நூல்கள் 8:14-17).
13.
இயேசு
தூய ஆவியால் அருட்பொழிவு செய்யப்பட்டவர் என்பது யோர்தானில் வைத்து
வெளிப்பட்டது.
14.
இயேசுவுக்கு
பொன்னும், தூபமும், வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொண்டு வந்த்தன் அடையாளம் என்ன? இயேசு அருட்பொழிவு செய்யப்பட்டவராதலால் அவர்
அரசரும், இறைவாக்கினரும், குருவுமாயிருக்கிறார். இதன் அடையாளமாகவே இயேசுவுக்கு பொன்னும், தூபமும், வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொண்டு வந்தனர்.
15.
தூய
ஆவியின் அருட்பொழிவு தன்னிடம் உண்டு என்பதை இயேசு நசரேத்து தொழுகைக்கூடத்தில்
வைத்து வெளிப்படுத்தினார் (லூக்கா 4:18).
16.
திருமுழுக்குத்
தண்ணீரின் வழியாக நாம் கிறிஸ்துவின் இறப்பிலும், உயிர்ப்பிலும் ஒன்றித்திருக்கிறோம்.
17.
அப்ப
இரசங்களின் வழியாக இயேசுவின் திரு உடலிலும் திரு இரத்தத்திலும் நாம்
ஒன்றித்திருக்கிறோம்.
18.
மூறோனால்
அருட்பொழிவு செய்யப்படுவதன் வழியாக கிறிஸ்துவின் அருட்பொழிவில் நாம்
ஒன்றித்திருக்கிறோம்.
19.
உறுதி
பூசுதலால் விசுவாசிகளனைவரும் எந்தெந்த பதவிகளுக்கு தகுதியுடையவர்களாகின்றனர்? அரசர், இறைவாக்கினர், குருவானவர்
20.
உறுதிபூசுதல்
திருச்சடங்கு எப்போது எங்கே நடத்தப்படுகிறது? திருமுழுக்கு முடிந்தவுடன் குருவானவரும் திருமுழுக்கு
பெற்றுக்கொள்பவரும் மற்றனைவருமாக செப மேசையின் முன்னால் வந்து உறுதிபூசுதல்
திருச்சடங்கை ஆரம்பிக்கின்றனர்.
21.
உறுதிபூசுதல்
திருச்சடங்கின் ஆரம்ப செபம் பற்றிக் கூறுக?
திருமுழுக்கின் வழியாக குழந்தைக்கு கிடைத்த விசுவாசத்தைக் குறித்தும் உறுதிபூசுதல்
வழியாகப் பெற்றுக்கொள்ளப்போகும் சிறப்பு ஆசீரைக் குறித்தும் ஆரம்ப செபத்தில்
விவரிக்கப்படுகிறது.
22.
கிறிஸ்தவ
விசுவாசி அடையாளமும் முத்திரையும் எவ்வாறு பெற்றுக்கொள்கிறார்?
திருமுழுக்கின் வழியாக கிறிஸ்தவ விசுவாசம் பெற்றுக்கொண்டு விசுவாசிகளின்
கூட்டத்தில் உறுப்பினராகும் ஒருவருக்கு அடையாளமும் முத்திரையும் வழங்கப்படுவது
உறுதிபூசுதலின் வழியாகவே ஆகும்.
23.
அழிந்துபோகாத
முத்திரையை பதிக்கும் அருளடையாளங்கள் யாவை?
திருமுழுக்கு, உறுதி பூசுதல், குருத்துவம் என்னும் அருளடையாளங்கள் ஒருபோதும் அழிந்துபோகாத
முத்திரையை ஆன்மாவில் பதியச் செய்கின்றன.
24.
ஒருமுறை
மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டிய அருளடையாளங்கள் யாவை? திருமுழுக்கு,
உறுதி பூசுதல், குருத்துவம்
25.
உறுதிபூசுதல்
தூய ஆவியின் முத்திரை ஆகும்.
26.
திருமுழுக்கின் வழியாக ஒரு விதையின் அளவாகக் கிடைத்த
தூய ஆவியின் கொடை உறுதிபூசுதலின் வழியாக முழு வளர்ச்சியடைகிறது.
27.
உறுதிபூசுதலின்
வழியாக பெற்றுக்கொள்ளும் தூய ஆவியின் கொடைகள் யாவை? உறுதிபூசுதலின் வழியாக தூய ஆவியின் கொடைகளான ஞானம், புத்தி, அறிவு, விமரிசை, திடம், பக்தி, தெய்வ பயம் என்பவற்றை ஒருவர் பெற்றுக்கொள்கிறார்.
28.
ஒருவரை
உத்தம கிறிஸ்தவனாகவும், கிறிஸ்துவின் போர்வீரனாகவும்
மாற்றுகின்ற அருளடையாளமே உறுதி பூசுதல்.
29.
மூறோன்
எண்ணெயால் முத்திரையிடுதல் பற்றிக் கூறுக? ஆரம்ப செபத்துக்குப் பின்னர் குருவானவர்
குழந்தையின் நெற்றியில் மூறோன் எண்ணெயால் மூன்றுமுறை சிலுவை அடையாளத்தில்
முத்திரையிடுகிறார். மெய்யான விசுவாசத்தின் முத்திரையும், அடையாளமும்,
தூய ஆவியினுடைய
நல்வரங்களின் நிறைவும் மெசியாவின் பரிமளமுமாகிய இப்பரிசுத்த மூறோனால் (+)
தந்தையுடையவும் (+) மகனுடையவும் (+) உயிருள்ள தூய
ஆவியுடையவும் திருப்பெயராலே நிலைவாழ்வுக்கு (பெயர்) முத்திரையிடப்படுகிறார்.
30.
குழந்தையின்
தலை முதல் பாதம் வரை மூறோன் பூசுவதன் பொருள் என்ன? அருட்பொழிவு மன்றாட்டுக்குப்பின்னர் குழந்தையின் உடல்
உறுப்புக்களில் தலை முதல் பாதம் வரை மூறோன் பூசுகிறார். ஆரோனை மாசற்றவராக மாற்ற
எண்ணெய் பூசியது போன்று குருவானவர் திருமுழுக்குப் பெற்றுக்கொண்ட இந்த
குழந்தையையும் எண்ணெயால் பூசி தூய ஆவியின் ஆசீர்வாதம் வழங்கி
தூய்மைப்படுத்துகிறார்.
31.
குழந்தைக்கு
மகுடம் அணிவிக்கப்படுதல் பற்றிக் கூறுக?
மூறோன் அருட்பொழிவுக்குப்பின் குழந்தைக்கு மகுடம் அணிவிக்கப்படுகிறது. மலங்கரை
வழிபாட்டு முறைப்படி மகுடத்திற்கு பதிலாக திருவுடையின் கையுறையோ ஹைம்னியாயோ
குழந்தையின் தலையில் வைக்கப்படுகிறது. கிறிஸ்தவ மரபுப்படி மகுடமணிவித்தல்
முக்கியத்துவம் வாய்ந்ததும் பொருள் மிகுந்ததும் ஆகும்.
32.
மகுடம்
பற்றிய பழைய ஏற்பாட்டு விளக்கம் என்ன?
மகுடம் அரசரின் அடையாளமாகவும்,
வெற்றியின் சின்னமாகவும்
விளங்கியதை பழைய ஏற்பாட்டில் காண்கின்றோம் (ஏசாயா 28:5, எரேமியா 13:18,
திருப்பாடல்கள் 21:3).
33.
மகுடம்
பற்றிய புதிய ஏற்பாட்டு விளக்கம் என்ன? புதிய
ஏற்பாட்டில் மகுடம் விண்ணக மகிமையாகவும், விண்ணக
ஒளியாகவும், நிலைவாழ்வின் அடையாளமாகவும்
விளங்குகின்றது.
34.
உறுதிபூசுதலின்போது
குழந்தைக்கு திரு இரத்தம் வழங்குவது பற்றிக்கூறுக? கிண்ணத்திலிருந்து ஒரு துள்ளி திரு இரத்தம் குழந்தையின் நாவில்
வைக்கப்படுகின்றது. 'இன்பவனத்தில் ஆதாம் சுவைக்காத கனி இதோ
உன் நாவில் மகிழ்ச்சியோடு வைக்கப்படுகிறது' என்று
கூறிக்கொண்டு குருவானவர் குழந்தைக்கு நற்கருணை வழங்குகிறார்.
35.
உறுதிபூசுதலில்
தைலம் பூசும்போது பாடப்படும் பாடல் எது?
“சொன்னாரிறைவன் பூசுமினாரோனைப்)/ புனிதமடைவான் பாவன தைலத்தால்/
பூசுகிறோமே
ஸ்நானம் ஏற்றோரிந்நல்/ சிறுமேழமிதை சீரெழு தைலத்தால்./
ஸ்நானம்
ஏற்றோர்- ஆட்டின் - குட்டியை/
அழகாய்ப் பூசும் தைலம்
இதுவன்றோ!
'றூஹா' - மறைவாய்த் தம் லாஞ்சனையருளி / தெய்வீகமாய் வாழ்ந்திவர் மீதருள்புரிவார்”.
36.
“கடவுளே எங்களை உங்களோடு
சேர்த்துள்ளார். இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர்
உறுதிப்படுத்துகிறார்.
அவரே
நமக்கு அருட்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும்
அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையை
பதித்தார்”. (2 கொரிந்தியர் 1:21-22)
8. 11
நற்கருணை
1.
அருளடையாளங்களுள்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் அருளடையாளங்களின் மகுடமாகவும் திகழ்வது எது? நற்கருணை.
2.
இயேசு
எப்போது நற்கருணையை நிறுவினார்? இயேசு பன்னிரு திருத்தூதர்களுடன்
சேர்ந்து பாஸ்கா கொண்டாடினார். இந்த பாஸ்கா விருந்தில் வைத்து இயேசு நற்கருணையை
நிறுவினார்.
3.
“இதைப் பெற்று உண்ணுங்கள். இது எனது
உடல்” என இயேசு யாரிடம் கூறினார்? திருத்தூதர்களிடம்
4.
“ஏனெனில் இது எனது உடன்படிக்கையின்
இரத்தம்; பலருடைய பாவமன்னிப்புக்காகச்
சிந்தப்படும் இரத்தம்” என இயேசு யாரிடம் கூறினார்? திருத்தூதர்களிடம்
5.
எந்த
மதப் பின்னணியில் இயேசு புதிய பாஸ்காக் கொண்டாடினார்? யூத பாஸ்காவின்
6.
யூத
பாஸ்காவின் இரண்டு அடிப்படையான கூறுகள் யாவை? பாஸ்கா ஆட்டுக்குட்டியின் பலியும், பாஸ்கா உணவும்,
7.
புதிய
பாஸ்காவில் எவ்வாறு இயேசு உண்மையான பாஸ்கா ஆட்டுக்குட்டி ஆனார்? கல்வாரிமலையில் பலியாகப்போகிற தமது உடலை
அப்பம் பிட்டு அளித்தலின் வழியாகவும், தான்
சிந்த வேண்டிய இரத்தத்தை இரசத்தின் வடிவாகவும், இயேசு குறிப்பிடுகின்றார். புதிய பாஸ்காவில் இயேசு தமது திரு உடலும், திரு இரத்தமும் கொண்டு விருந்து ஏற்பாடு
செய்ததன் வழியாக பலி ஒப்புக்கொடுக்கப்படுகின்றதான உண்மையான பாஸ்கா ஆட்டுக்குட்டியே
தான் என்பதை முன்னறிவிக்கின்றார்.
8.
உலகின்
பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறி என்று இயேசுவைக் குறித்துக் கூறியவர் யார்?
திருமுழுக்கு யோவான்
9.
கல்வாரி
சிலுவைப்பலியை இயேசு எவ்வாறு பாஸ்கா பின்னணியில் முன்னறிவித்தார்? இரத்தம் சிந்துகின்ற பலியும், விருந்தும் பாஸ்காவின் அடிப்படையான
கூறுகளானதைப் போன்று புதிய பாஸ்காவிலும் இரத்தம் சிந்தலும், விருந்தும் ஒன்றுபடுகிறது.
10.
பழைய
ஏற்பாட்டில் உள்ள பலிகளுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை? ஆபேலின் பலி, நோவாவின் பலி, ஆபிரகாமின் பலி
11.
மோசேயின்
காலத்துக்குப்பின் யூதமதத்தில் நடைமுறைக்கு வந்த பலிகள் யாவை? நெருப்புப்பலி, சமாதானபலி, பாவபரிகாரபலி, நற்கனிகளையும், ஆடுமாடுகளையும் பலி ஒப்புக்கொடுக்க பயன்படுத்தி வந்தனர்.
ஆடுமாடுகளின் இரத்தம் சிந்தி ஒப்புக்கொடுக்கின்றதான பலியே முக்கியத்துவம்
வாய்ந்தது.
12.
யூதமதத்தில்
இரத்தம் சிந்துதலின் பொருள் என்ன? இரத்தம் சிந்துதல் யூதமதத்தில்
பலியின் முக்கிய பகுதியாகும். இரத்தம் சிந்துதலின் வழியாக தங்களது உயிரையே
ஒப்புக்கொடுப்பதாக யூதர் எண்ணினர்.
“இரத்தம் சிந்துதலின்றி
பாவமன்னிப்பு இல்லை ” (எபிரேயர் 9:22).
13.
பலியை
எவ்வாறு யூதர்கள் புரிந்து கொண்டிருந்தனர்? கடவுளின் அதிகாரத்தையும், மகிமையையும் அங்கீகரிப்பதற்கும், கடவுளோடு நட்புறவு ஏற்படுத்துவதற்கான வழியாகவும், பாவமன்னிப்புச் செயலாகவும் பலியை யூதர்கள்
கண்டிருந்தனர்.
14.
யூதர்களின்
பலியும் உழைப்பும் எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டது? தானியமும்,
ஊனும் மக்களின் உணவு
வகைகளாகும். இவற்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே மக்கள் வாழ்க்கையில் அதிகம்
உழைக்கின்றனர். உணவு வகைகளை கடவுளுக்கு அளிப்பதன் வழியாக தங்கள் வாழ்க்கையையே
அளிப்பதாக யூதர் எண்ணியிருந்தனர்.
15.
யூதர்கள்
மிருக பலியில் எவ்வாறு விசுவசித்திருந்தனர்?
பலிபீடம் கடவுளின் பிரசன்னம் உள்ள இடமாக யூதர்கள் கருதினர். ஒரு விலங்கின்
இரத்தத்தில் உயிர் இருக்கிறது என்றும் பலிபீடத்தில் அதன் இரத்தம் சிந்தும்போது பலி
ஒப்புக்கொடுக்கின்ற நபருடைய உயிரையே கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கின்றனர் என்றும்
யூதர்கள் விசுவசித்திருந்தனர்.
16.
பழைய
ஏற்பாட்டு பலிகளில் இரத்தம் சிந்துதல் இயேசுவின் கல்வாரி பலியின்
அடையாளமாகும்.
17.
இயேசுவின் பலியில் இரத்தம் சிந்துதல் மனித இனம்
முழுவதற்கும் என்றென்றைக்கும் பாவமன்னிப்பும், மீட்பும் வாக்களிக்கின்றது (எபிரேயர் 9:11-13).
18.
இயேசுவின்
பாஸ்காவின் நினைவு கூர்தல் பற்றிக் கூறுக?
யூதபாஸ்காவின் பின்னணியில் நற்கருணையை நிறுவிய பின்னர் இயேசு “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அவ்வாறாக தான் நிறுவிய பாஸ்காவின் நினைவு கூர்தல் நடத்த
இயேசு திருத்தூதர்களுக்குக் கட்டளையிட்டார்.
19.
தொடக்கத்
திருச்சபையில் அப்பம் பிட்குதல் திருச்சடங்கு எங்கே நடத்தப்பட்டது? இயேசுவின் விருப்பப்படி ஆதித்திருச்சபையில்
நற்கருணை அர்ப்பணம் அப்பம் பிட்குதல் திருச்சடங்கின் வழியாக தொடர்ந்தது. முதலில்
வீடுகளிலேயே அப்பம் பிட்குதல் திருச்சடங்கு நடத்தப்பட்டது. பின்னர் அது
தேவாலயத்துக்கு மாற்றப்பட்டது.
20.
சுறியானி
திருச்சபையில் அப்பம் பிட்குதல் திருச்சடங்கிற்கு என்ன பெயர்? 'தூய குர்பான'
21.
'குர்பான' என்ற சொல்லுக்கு பொருள் என்ன? காணிக்கை செலுத்துதல், பலி
செலுத்துதல், வழிபாடு
22.
எம்மாவு
சென்ற சீடர்கள் எப்போது இயேசுவைக் கண்டுகொண்டார்கள்? அப்பத்தை பிட்டு உண்டபோது (லூக்கா 24:23-35).
23.
முதல்
கிறிஸ்தவர்கள் எவ்வாறு கிறிஸ்துவின் பிரசன்னத்தை உணர்ந்தனர்? கிறிஸ்துவின் முழுப்பிரசன்னத்தை முதல் கிறிஸ்தவர்கள்
கண்டுகொண்டது நற்கருணை உட்கொள்ள ஒன்று கூடியபோதே ஆகும் (திருத்தூதர் பணிகள்
நூல்கள் 2:42-46).
24.
முதல்
கிறிஸ்தவர்கள் எவ்வாறு கிறிஸ்து அவர்களிடையே வாழ்கிறார் என சான்று பகர்ந்தனர்? தேவநற்கருணையில் ஆண்டவரின் பிரசன்னமும், திருவுடலையும், திரு இரத்தத்தையும் உட்கொள்வதன் வழியாக அவர்களுக்கு கிடைத்த
கிறிஸ்து அனுபவமும் இயேசு அவர்களிடையே வாழ்கிறார் என்பதன் சான்றாகும்.
25.
பல்வேறு
வழிபாட்டு முறைகள் எப்போது முதல் வளரத்தொடங்கின? நான்காம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு இடங்களில், பல்வேறு வழிபாட்டு முறைகள் வளர்ந்து வரலாயின.
கத்தோலிக்கத் திருச்சபையில் இன்று 22
மாறுபட்ட வழிபாட்டு
முறைகள் உண்டு.
26.
மலங்கரை
கத்தோலிக்கத் திருச்சபை பயன்படுத்தும் திருவழிபாட்டு முறை எது? அந்தியோக்கியன் வழிபாட்டு முறை
27.
அந்தியோக்கியன்
திருப்பலி முறை எந்த திருத்தூதரின் பெயரால் அறியப்படுகிறது? நமது ஆண்டவரின் சகோதரரும், திருத்தூதரும்
எருசலேமின் முதல் தலைமை குருவுமான புனித யாக்கோவின் பெயரிலேயே அந்தியோக்கியன்
திருப்பலி முறை அறியப்படுகிறது.
28.
திருச்சபை
நற்கருணைப்பலி வழியாக எதனை நினைவுகூர்கின்றது? இயேசுவின் பாஸ்கா கொண்டாட்டத்தினுடையவும் சிலுவை
மரணத்தினுடையவும் நினைவுகூர்தல் மட்டுமன்று திருப்பலி. “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்ற இயேசுவின் கட்டளையின் வழியாக இயேசு கிறிஸ்துவின் முழுமையான
மீட்பின் வரலாறு முழுவதையும் நற்கருணைப்பலி வழியாக திருச்சபை நினைவுகூர்கின்றது.
29.
மலங்கரைத்
திருப்பலியில் இரண்டு பகுதிகள் யாவை? ஆயத்தத் திருச்சடங்கு, பகிரங்கத் திருச்சடங்கு
30.
மலங்கரைத்
திருப்பலியின் ஆயத்தத்திருச்சடங்கில் நினைவுகூரப்படுபவை யாவை? உலகப்படைப்பு,
மனிதபடைப்பு, மனிதனின் பாவம், ஆபிரகாமின் அழைப்பு,
இயேசு கிறிஸ்து வரையிலான
இஸ்ரயேலரின் வரலாறு போன்ற பழைய ஏற்பாட்டுப் பகுதிகள் ஆயத்தத்திருச்சடங்கில்
நினைவுகூரப்படுகின்றன.
31.
மலங்கரைத்
திருப்பலியின் பகிரங்கத் திருச்சடங்கில் நினைவுகூரப்படுபவை யாவை? இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, திருமுழுக்கு, பகிரங்க வாழ்வு,
பாஸ்கா கொண்டாட்டம், பாடுகள், சிலுவை மரணம்,
உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியின் வருகை,
இயேசுவின் இரண்டாம்
வருகை போன்றவற்றை பகிரங்கத் திருச்சடங்கில் திருச்சபை நினைவு கூர்கின்றது.
32.
மீட்பு
வரலாற்றை திருப்பலி வழியாக நினைவுகூரும் பாடல் எது?
“ஆண்டவரே உம் பிறப்பும் திருமுழுக்கும்
பாடுகளும்
சிலுவை
இறப்பும் உயிர்ப்பும் விண்ணேற்பும் யாவையும்
மறைமுன்னோர்களையும்
நாங்கள்
வேள்வியில்
நினைக்கின்றோம் நாதா” (திருப்பலி முறை)
33.
நற்கருணைப்
பெற்றுக்கொள்வதன் வழியாகவே இயேசுவோடுள்ள உறவு முழுமையடைகிறது.
34.
விண்ணக
அனுபவம் தரும் அந்தியோக்கியன் வழிபாட்டு முறை பற்றிக்கூறுக? யூத பின்னணியில் உருவான
அந்தியோக்கியன் வழிபாட்டு முறை ஏராளம் பழைய ஏற்பாட்டு அடையாளங்களை கொண்டுள்ளது.
இறையனுபவத்தை ஆழப்படுத்துகின்றத் திருச்சடங்குகள் திருப்பலியில் நிறைந்துள்ளன.
விண்ணகத்தை பூமியில் இறக்கிக் கொண்டு வருவது போன்ற பெரிய இறைபிரசன்னம்
திருப்பலியின் போது இறைமக்களுக்கு அனுபவமாகின்றது. விண்ணகத்தை குறிக்கின்றதான
தூயகமும், பலவண்ணங்களும், பலவகையான அடையாளங்களும் இறைபிரசன்னத்தை வெளிப்படுத்துகிறது.
திருப்பலியில் உள்ள பாடல்களும்,
மன்றாட்டுக்களுமெல்லாம்
இசை வடிவிலானதாகும். அவ்வாறாக திருப்பலியால் ஒரு விண்ணக அனுபவம் பூமியில்
உருவாகிறது.
35.
அந்தியோக்கிய
வழிபாட்டு முறையில் அதிகமாக காணப்படும் மறைபொருள் கருத்து என்ன? எல்லாம் வல்லவரும், மகிமை நிறைந்தவருமான கடவுள் ஒரு மறைபொருளென்றும், மனிதனுக்கு படைப்பாளரான கடவுளை
அறிந்துகொள்ளவும், உட்கொள்ளவும் மனிதர்களுக்கு
திறமையில்லை என்பதையும் குறிக்கின்ற அடையாளமே வழிபாட்டு முறையில் அதிகமாகவும்
உள்ளன.
36.
நற்கருணையில்
இறைபிரசன்னம் என்பதை நாம் எவ்வாறு உணரமுடிகிறது? ஆதித்திருச்சபையில் அப்பம் பிட்கும் போது கடவுளின் பிரசன்னத்தை
இறைமக்கள் அனுபவித்திருந்தனர். இன்று நற்கருணையின் வழியாக எல்லாம் வல்லவரான கடவுள்
நம்மிடையே பிரசன்னமாயிருக்கிறார். நமது கண்களால் கண்டுணர முடியாத இறைபிரசன்னம்
அப்ப இரசங்களின் வடிவத்தில் உணவாகவும், பானமாகவும்
நற்கருணைப்பலியின் போது நம் உள்ளங்களில் எழுந்தருளி வருகின்றது. ஆண்டவர் நம்முடனே
என்னும் அனுபவம் நற்கருணைப் பலியால் இறைமக்களுக்குக் கிடைக்கின்றது.
37.
இயேசு
நிறுவிய நற்கருணை பழைய ஏற்பாட்டு அடையாளங்களின் நிறைவாகும், குறிப்பு வரைக? 1. ஆபேல் தம் பலியால் நற்கருணையைக்
குறிப்பிடுகின்றார். 2. தலைமைக்குருவான மெல்கிசதேக் அப்பரசங்களை காணிக்கையாக
ஒப்புக்கொடுத்தது நற்கருணையின் அடையாளமாகும். 3. முட்செடியில் கொம்பு மாட்டிக்
கொண்டு நின்ற ஆட்டுக்குட்டியை பலிசெலுத்தியதன் வழியாக ஆபிரகாமின் வாளிலிருந்து
ஈசாக்கு உயிர் தப்பினார். இந்த பலி நற்கருணை பலியைக் குறிக்கின்றது. 4. மோசே
முட்புதரில் கண்ட இறைபிரசன்னம் நற்கருணையில் உள்ள இறை பிரசன்னத்தைக்
குறிக்கின்றது. 5. அழிக்கும் தூதனின் கைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள
இஸ்ரயேல் மக்கள் பாஸ்கா ஆட்டினை அடித்தது நற்கருணையின் முன்னடையாளமாகும். 6.
முதலாம் மாதம் 14-ஆம் நாள் நீங்கள் ஆட்டினை அடித்து
பாஸ்கா கொண்டாட வேண்டும் என்று யோசுவா கூறியது நற்கருணையைக் குறிக்கின்றது. 7.
சாமுவேல் இறைவாக்கினர் பால்குடி மாறாத ஆட்டுக்குட்டியைக் கொன்று நற்கருணையின்
மறையுண்மையை வெளிப்படுத்தினார். 8. அதிதூயகத்தில் வைத்து ஏசாயாவுக்கு வானதூதர்
அளித்த நெருப்புத்தழல் நற்கருணையின் அடையாளமாகும். 9. இன்பவனத்தில் ஆதாம்
சுவைக்காத கனி நற்கருணையைக் குறிக்கிறது. 10. பாலைவனத்தில் இஸ்ரயேலர் உண்ட மன்னா
நற்கருணையை குறிக்கிறது. 11. எசேக்கியேல் இறைவாக்கினர் தேரில் கண்ட மனுவுரு
நற்கருணையில் பிரசன்னமாயிருக்கும் கிறிஸ்துவைக் குறிக்கின்றது.
38.
“நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து
பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்” (1கொரி. 11:26).
39.
திருப்பலியில்
கலந்துகொண்டு நற்கருணைப் பெற்றுக்கொள்ள வேணிடியதன் விவிலியக் கோட்பாடு என்ன? “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தை குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய
மாட்டீர்கள்” (யோவான் 6:53). அதனால் திருப்பலியில் கலந்துகொள்பவர்கள்
நற்கருணைப் பெற்றுக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றனர்.
40.
நற்கருணை
மற்றும் பாவமன்னிப்பு அருளடையாளங்களின் ஒப்புமை என்ன? நம்மில் ஏதேனும் பாவம் இருக்கிறது என்னும் உணர்வு ஏற்பட்டால்
ஒப்புரவு அருளடையாளம் பெற்றுக்கொண்ட பின்னரே நற்கருணை உட்கொள்ள வேண்டும். மற்றச்
சூழல்களில் நற்கருணை பலியில் வரும் பாவமன்னிப்பு செபம் வழியாக பாவ மன்னிப்பை
பெற்றுக்கொண்டு நற்கருணையை உட்கொள்ளலாம்.
41.
திருப்பலியில்
நற்கருணை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது எதைப் போன்றது? விருந்துக்குச் சென்று விருந்து உண்ணாமல் செல்வது போன்றதே
நற்கருணை பலியாகின்ற விருந்தில் பங்குகொண்டு நற்கருணை பெற்றுக்கொள்ளாமல் செல்வது.
ஆதலால் தக்க காரணமின்றி நற்கருணை பெற்றுக்கொள்ளாமல் விலகி நிற்பது கிறிஸ்துவோடும்
அவருடைய உடலுதிரங்களோடும் நாம் கொள்கின்ற ஆதரவின்மையே ஆகும்.
42.
திருப்பலி
ஆரம்பத்தில் இயேசுக் கிறிஸ்துவின் கல்வாரி பலியைத் திருச்சபை நினைவு கூர்கின்ற
பாடல் எது?
“உலகின் பாவம் யாவையும் தீர்த்திடவே
ஆண்டவரே தாமே பலியாய் மாறிய மெசியாவே நின் பலிபோல் எங்களைத் தருகின்றோம் நாங்கள்
பலியிதை ஏற்றருளும் நாதா”
43.
“உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். மானிடமகனுடைய
சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு
அடையமாட்டீர்கள்” (யோவான் 6:53)
8. 12
ஒப்புரவு
1.
திருமுழுக்கு, உறுதி பூசுதல், நற்கருணை என்னும் புகுமுக அருளடையாளங்களின் வழியாக ஒருவருக்கு இறைவாழ்வு
கிடைக்கின்றது.
2.
மனிதன்
இறைவாழ்வை இழந்து விடும் வாய்ப்பு எப்படி ஏற்படுகிறது? வலுவற்றதும்,
உடைந்து போகக்கூடியதுமான
மண்பாண்டங்களிலேயே மனிதன் இந்த இறைவாழ்வை பாதுகாக்கின்றான். மனிதனின் பாவம் வழியாக
இந்த இறைவாழ்வுக்கு தோய்வு ஏற்படவோ,
அதனை இழந்து விடவோ
வாய்ப்புண்டு.
3.
இயேசு
கிறிஸ்து பாவிகளுக்கு பாவமன்னிப்பு அளிக்க முடிந்தது ஏன்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உடலினுடையவும், ஆன்மாவினுடையவும் மருத்துவராதலால் தமது பகிரங்க வாழ்வின் போது
ஏராளம் பாவிகளுக்கு பாவ மன்னிப்பு அளித்தார்.
4.
இயேசுவின்
பாவமன்னித்தல் திருப்பணி எவ்வாறு திருச்சபையில் தொடர்கின்றது? இயேசுவின் இந்த பாவமன்னித்தல் திருப்பணி தூய ஆவியின் வழியாக
திருச்சபையில் தொடர்கின்றது.
5.
உடலுக்கும்
ஆன்மாவுக்கும் நலமளிக்கும் அருளடையாளங்கள் யாவை? மனிதன் இழந்த இறைவாழ்வை
திரும்ப அளிப்பதும் உடலுக்கும் ஆன்மாவுக்கும் நலமளிப்பதுமான இரண்டு அருளடையாளங்களே
ஒப்புரவும், நோயில்பூசுதலும் ஆகும்.
6.
பாவம்
என்றால் என்ன? கடவுள்
மனிதனுக்கு அளித்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தீமையைத் தேர்ந்தெடுப்பதே
பாவமாகும்.
7.
பாவம்
பற்றிய மதங்களின் அடிப்படை சிந்தனை என்ன? மனித
இயல்பின் ஒரு பகுதியே பாவம். மக்களனைவரும் பாவிகள் என்பதும், பாவி தனது தவற்றை உணர்ந்து மனம் வருந்தும் போது கடவுள் அவனுக்கு
பாவமன்னிப்பு அளிப்பார் என்பதும் எல்லா மதங்களின் அடிப்படையான சிந்தனை ஆகும்.
8.
இந்து,
முஸ்லீம் சமூகத்தினர் எவ்வாறு பாவமன்னிப்பு வேண்டினர்? இந்து மதப்படி கங்கை நதியில் நீராடுவதும், நோன்பிருந்து சபரிமலைக்கு செல்வதும், முஸ்லீம் சமூகத்தில் கடினமான நோன்பு நோற்பதும் இறைபரிவுக்கும், பாவமன்னிப்புக்குமேயாகும்.
9.
யூத
மக்கள் பாவ மன்னிப்புக்காக என்ன செய்தனர்? பழைய
ஏற்பாட்டில் யூத மக்கள் பாவ மன்னிப்புக்காக பலி ஒப்புக்கொடுத்தனர்.
10.
பாவமன்னிப்புக்காக
திருமுழுக்கு யோவான் எவ்வாறு செயல்பட்டார்? புதிய
ஏற்பாட்டில் பாவமன்னிப்புக்காக பாவங்களை அறிக்கையிட்டு மனம் வருந்தி
திருமுழுக்குப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று திருமுழுக்கு யோவான் மக்களுக்கு
அழைப்பு விடுத்தார். அதற்கேற்ப ஏராளமானோர் யோர்தான் நதியில் திருமுழுக்குப்
பெற்றுக்கொண்டனர்.
11.
பரிசேயரான
சீமோனின் வீட்டில் இயேசு பாவிப்பெண்ணுக்கு பாவமன்னிப்பு வழங்கியது எப்படி? பரிசேயரான சீமோனின் வீட்டில் இயேசு உண்பதற்கு
அமர்ந்தபோது அந்நகரில் உள்ள பாவியான ஒரு பெண் இயேசுவின் அருகில் வந்தார். அவள் தன்
கண்ணீரால் இயேசுவின் காலடிகளை நனைத்து தன் கூந்தலால் துடைத்து அவருடைய காலடிகளில்
நறுமணத்தைலம் பூசினார். இயேசு அப்பெண்ணைப் பார்த்து “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார் (லூக்கா 2:1-12).
12.
இயேசு
எவ்வாறு விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை மன்னித்தார்? விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் அவளுடைய பாவங்களை
மன்னித்துக்கொண்டு இயேசு “இனிமேல் பாவம் செய்யாதே” என்றார்.
13.
இயேசு
எவ்வாறு சக்கேயுவை மன்னித்தார்? இயேசுவை தமது வீட்டில் வரவேற்ற
சக்கேயு தனது பாவங்களைக் குறித்து மனம் வருந்தி அதற்கு பரிகாரம் செய்வதாகக்
கூறியபோது இயேசு அவனை பாவத்திலிருந்து மீட்பின் அனுபவத்திற்கு அழைத்துச் சென்றார்
(லூக்கா 19:1-10).
14.
இயேசு
எவ்வாறு சிலுவையில் தொங்கிய கள்வனுக்கு இரக்கம் காட்டினார்? சிலுவையில் தொங்கியபடி மனம் வருந்திய கள்வனுக்கு இயேசு இரக்கம்
காட்டி இன்பவனத்தின் அனுபவத்தை அளித்தார்.
15.
இயேசு
பாவமன்னிப்புக்காக பயன்படுத்திய உவமைகளுக்கு எடுத்துக்காட்டு கூறுக?
காணாமல் போன மகன்,
காணாமல் போன ஆடு போன்ற
உவமைகளின் வழியாக பாவமன்னிப்பின் அடிப்படையான சிந்தனைகளை இயேசு கற்பித்தார்.
16.
இயேசு
பாவமன்னிப்பின் அதிகாரத்தைத் யாருக்கு வழங்கினார்? இயேசு பாவமன்னிப்பின் அதிகாரத்தைத்
திருத்தூதர்களுக்கு அளித்தார்;
அதாவது திருச்சபைக்கு
அளித்தார்.
17.
இயேசு
பேதுருவிடம் பாவமன்னிப்பு பற்றிக் கூறிய வார்த்தைகள் யாவை? இயேசு பேதுருவிடம்,
“உன் பெயர் பேதுரு இந்த
பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல்
வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடை
செய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும்
அனுமதிக்கப்படும்” என்றார் (மத்தேயு 16:18-19).
18.
“மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும்
தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும்
அனுமதிக்கப்படும்” (மத்தேயு 18:18).
19.
உயிர்த்த
இயேசு திருத்தூதர்களுக்கு வழங்கிய பாவமன்னிப்பு அதிகாரம் என்ன? உயிர்த்தெழுந்த பின்னர் இயேசு சீடர்களின்
மேல் ஊதி தூய ஆவியை வழங்கிக் கொண்டு
“எவருடைய பாவங்களை
நீங்கள் மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை
மன்னியாதிருப்பீர்களோ அவை மன்னிக்கப்படா” என்றார்
யோவான் 20:23).
20.
உயிர்த்த
இயேசு வழங்கிய பாவமன்னிப்பு அதிகாரம் எவ்வாறு இன்றும் செயல்படுகிறது?
இயேசு திருத்தூதர்களுக்கு அளித்த பாவமன்னிப்பின் அதிகாரமானது
திருத்தூதர்களின் வழிவந்தவர்களான ஆயர்கள் வழியாகவும், குருக்கள் வழியாகவும் தொடர்கிறது. இயேசுவின் மீட்புப்பணிகளைத்
தொடர்ந்து செயல்படுத்த இயேசு தூய ஆவியால் திருச்சபையை நிறுவினார். அதனால்
இயேசுவின் பாவமன்னிப்பின் அதிகாரம் திருச்சபைக்கே அளிக்கப்பட்டிருக்கிறது.
திருச்சபை வழியாக அந்த அதிகாரம் ஆயர்களுக்கும் அவர்கள் வழியாக குருக்களுக்கும்
அளிக்கப்பட்டிருக்கிறது.
21.
குருவானவர்
யாருடைய பிரதிநிதியாக உள்ளார்? குருவானவர் ஒரே நேரத்தில்
திருச்சபையின் அதாவது இறைமக்களின் பிரதிநிதியும் இயேசுவின் பிரதிநிதியும் ஆவார்.
22.
ஒருவர்
குருவானவரிடம் பாவங்களை அறிக்கையிடும்போது நிகழும் பிரதிநிதித்துவம் என்ன? ஒருவர் குருவானவரிடம் பாவங்களை
அறிக்கையிடும்போது அவர் இயேசுவின் பிரதிநிதி என்னும் நிலையில் இயேசுவோடும், திருச்சபையின் பிரதிநிதி என்னும் நிலையில்
திருச்சபை சமூகத்தோடும் அவர் பாவங்களை அறிக்கையிடுகிறார்.
23.
திருச்சபையோடும்
இயேசுவோடும் இணைந்த பாவமன்னிப்பு எப்படி?
குருவானவர் பாவமன்னிப்பு அளிக்கும் போது இயேசுவே பாவமன்னிப்பு அளிக்கிறார்.
அதுபோன்று திருச்சபை சமூகம் பாவியானவரை மன்னித்து அவரை திருச்சபை சமூகத்தோடு
ஒன்றிணைக்கிறது. இவ்வாறு திருச்சபையாகும் உடலோடு தொடர்பு படுத்திய பாவ அறிக்கையும், பாவ மன்னிப்பும் நடைபெறுகிறது.
24.
எவ்வாறு
திருச்சபையில் உள்ள ஒருவரின் பாவம் திருச்சபை முழுவதற்கும் கேடுவிளைவிக்கிறது? திருச்சபையாகும் உடலில் உள்ள ஒருவரின் பாவம்
அவருக்கு மட்டுமன்று திருச்சபை முழுவதற்கும் கேடுவிளைவிக்கிறது. பாவத்தில்
விழுகின்ற ஒருவர் அவருக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை. மாறாக திருச்சபை உடல்
முழுவதற்கும் கேடு விளைவிக்கவும் வலி ஏற்படுத்தவும் செய்கிறார்.
25.
பாவம்
செய்தவர் மனம் வருந்தி பாவ மன்னிப்பு பெறவேண்டியதன் அவசியம் என்ன? பாவம் செய்த ஒருவர் மனம் வருந்தி பாவத்தை
அறிக்கையிட்டு திருச்சபையின் கூட்டமைப்பில் ஒன்றிணைய வேண்டும். மனந்திரும்புகின்ற
ஒரு பாவியைக் குறித்து திருச்சபை முழுவதும், விண்ணக
தூதர்களும் மகிழ்ச்சியடைகின்றனர்.
26.
யூத
மரபுப்படி பாவம் ஒரு நோயாகக் கருதப்பட்டது.
27.
பாவம்
செய்த மக்களை ஒரு நோயாளியை போன்று பாவித்து இரக்கத்தோடும் கருணையோடும் கடவுள்
கனிவு கொள்கின்றார்.
28.
இயேசு
பாவிகளின் நல்ல மருத்துவர் என்பதை விளக்குக?
ஒருவர் தன்னுடைய தவற்றின் வழியாக நோயாளியானாலும் அவரைத் தண்டிக்காது அவருக்கு
மருத்துவம் பார்க்கிறார். தவறுக்கு தண்டனையன்று, மாறாக மருத்துவமும்,
நலனுமே முதன்மையான
சிந்தனை. திருச்சபை தம் மக்களின் பாவங்களை நோயின் ஆரம்பமாகக் கருதி அவர்களுக்கு
மருத்துவம் பார்க்க விரும்புகிறது. அது நோயாளியைத் தண்டிப்பதற்கு அன்று மாறாக நலன்
அளிக்கவும், மீட்பளிக்கவுமேயாகும். இதற்காகவே
இயேசு நல்ல மருத்துவராக வந்தார்.
29.
கிறிஸ்து
நீதிபதியா மருத்துவரா? உலகத்திற்கு தீர்ப்பளிக்கின்ற
நீதிபதி என்பதைவிட மக்களை உடல் நோயிலிருந்தும் ஆன்மீக நோயிலிருந்தும்
விடுதலையளித்து நிலை வாழ்விற்கு வழிநடத்துகின்ற மிகப்பெரிய மருத்துவரே கிறிஸ்து.
30.
திருச்சபை
பாவத்தை எவ்வாறு புரிந்துகொள்கிறது? அன்பின் மீறுதலே பாவம், திருச்சபை பாவத்தை இறையன்போடும் பிறரன்போடும்
தொடர்புபடுத்தியே புரிந்துகொள்கிறது.
31.
பாவம்
செய்தேன் என்னும் திட உணர்வு பற்றிக்கூறுக?
ஒருவர் தீமை அல்லது பாவம் செய்தார் என்னும் திட உணர்வு அவருக்கு இருப்பின் அது
அவருக்கு கவலையையும், வருத்தத்தையும் உருவாக்கும். அவ்வாறாக
இறையன்பிற்கு எதிராகவும்,
சகோதர அன்பிற்கு
எதிராகவும் பாவம் செய்தேன் என்னும் திட உணர்விலிருந்து உருவாகின்ற கவலையும்
வருத்தமுமே உண்மையான மனம் வருந்துதல்.
32.
இயேசுவின்
காலடிகளை கழுவிய பாவியான பெண் மனம் வருந்தியது பற்றிக் கூறுக? பாவியான ஒரு பெண் இயேசுவின் காலடிகளை தன் கண்ணீரால் கழுவியதும்
தன் கூந்தலால் துடைத்ததும்,
பின்னர் அவருடைய
காலடிகளில் நறுமணத்தைலம் பூசியதும் அவருடைய பாவத்தைப் பற்றிய ஆழமான உணர்விலிருந்து
உருவான கவலைகளுடையவும் வருத்தத்தினுடையவும் அடையாளங்களாகும்.
33.
ஒப்புரவை
மனம் வருந்துதலின் அருளடையாளம் என்பது ஏன்? பாவ
உணர்வும், அதிலிருந்து உருவாகின்ற மனவருத்தமும்
ஒப்புரவின் அடிப்படையான பகுதிகளானதால் ஒப்புரவை மனம் வருந்துதலின் அருளடையாளம்
என்று அழைக்கிறோம்.
34.
“மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” (மத்தேயு 4:17)
35.
மனமாற்றத்தின்
அருளடையாளம் என்பது யாது? ஒப்புரவு
36.
காணாமல்
போன மகன் பாவ அறிக்கை செய்தது எப்படி?
காணாமல் போன மகன் தனது தவற்றை உணர்ந்து மனமாற்றமடைந்து தந்தையிடம் திரும்பி
வந்தார். அவன் தந்தையிடம் தன் பாவங்களை அறிக்கையிட்டான். “அப்பா கடவுளுக்கும் உமக்கும் எதிராக பாவம் செய்தேன். இனிமேல் நான்
உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன். உம்முடைய கூலியாட்களுள் ஒருவனாக என்னை
வைத்துக்கொள்ளும்” (லூக்கா 15:18-19). பாவங்களை அறிக்கையிட்ட மகனை தந்தை
கட்டித்தழுவி முத்தமிட்டு வரவேற்றார்.
37.
பாவத்தை
அறிக்கையிடுவது பற்றி விவிலியம் கூறுவது என்ன? பாவத்தை அறிக்கையிடுவது பாவமன்னிப்பு பெறுதலுக்கான அடிப்படையான
செயலாக திருச்சபை கருதுகின்றது (திருப்பாடல்கள் 32:3-5). யாக்கோபு தனது திருமுகத்தில் இவ்வாறு
கூறுகிறார் : “ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை
செய்துகொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது
குணமடைவீர்கள்” (யாக்கோபு 5:16).
38.
பாவ
சங்கீர்த்தனம் என்பதன் பொருள் என்ன? ஒப்புரவிற்கு பாவ சங்கீர்த்தனம் என்ற
பெயரும் உண்டு. பாவசங்கீர்த்தனம் என்ற வார்த்தையின் பொருள் அறிக்கையிடுதல்' என்பதாகும்.
39.
ஒப்புரவை
அறிக்கையிடுதலின் அருளடையாளம் என்பது ஏன்?
ஒருவர் தனது தவறுகளைப் பற்றிய உணர்வையும் மனவருத்தத்தையும் மனம் திரும்புதலுக்கான
விருப்பத்தையும் அதிகாரபூர்வமாக அறிக்கையிடுதலில் வெளிப்படுத்துகிறார்.
அறிக்கையிடுதல் ஒப்புரவின் அடிப்படைக் கூறாக இருப்பதால் ஒப்புரவை அறிக்கையிடுதலின்
அருளடையாளம் என்கிறோம்.
40.
பாவத்தை
அறிக்கையிடும்போது ஒருவருக்கு கிடைக்கின்ற இறையருளே ஒப்புரவும், பாவமன்னிப்பும்.
41.
பாவத்தை
அறிக்கையிட்டு ஒப்புரவு அடைவதன் விவிலியக்கோட்பாடு என்ன? “நீங்கள் உங்கள் காணிக்கையை பலிபீடத்தில் செலுத்த வரும்போது உங்கள்
சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ
மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால் அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள்
காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” (மத்தேயு 5:23-24).
42.
ஒப்புரவை
பாவமன்னிப்பின் அருளடையாளம் என்பது ஏன்? பாவ
உணர்வு, மனவருத்தம், மனமாற்றம் இவற்றின் வழியாக ஒருவர் பாவங்களை அறிக்கையிடும்போது
அவருக்குக் கிடைக்கின்ற இறையருளே பாவமன்னிப்பு. பாவியான பெண் ஆண்டவரின்
முன்னிலையில் கண்ணீரால் அவருடைய காலடிகளை கழுகி அவள் தன் பாவ நிலையை
அறிக்கையிட்டாள். அப்போது இயேசு
“உன்னுடைய பாவங்கள்
அனைத்தும் மன்னிக்கப்பட்டிருக்கின்றன" என்று
கூறி அவளுக்கு பாவ மன்னிப்பு அளித்தார். அவ்வாறு அவள் மகிழ்ச்சியோடும், சமாதானத்தோடும் திரும்பிச் சென்றாள். ஒருவர்
ஒப்புரவு அருளடையாளத்தில் கடவுளுடையவும், திருச்சபையினுடையவும்
பிரதிநிதியான குருவானவரோடு பாவங்களை அறிக்கையிடும்போது அவர் பாவமன்னிப்பு பெற்று
மகிழ்ச்சியும் சமாதானமும் அனுபவிக்கிறார். எனவே ஒப்புரவை பாவமன்னிப்பின்
அருளடையாளம் என்கிறோம்.
43.
ஒப்புரவு
பற்றி மலங்கரைத் திருச்சபை கற்பிப்பது என்ன?
கத்தோலிக்க மரபுபடி ஒருவர் கனமான பாவம் செய்தால் குருவானவரிடம் பாவங்களை
அறிக்கையிட்டு பாவமன்னிப்பு பெற்றுக்கொண்ட பின்னரே நற்கருணை உட்கொள்ள வேண்டும்.
அதனால் எப்போது ஒப்புரவு நடத்த வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் முடிவெடுக்க
வேண்டும். கனமான பாவம் எதுவும் செய்யாமலிருந்தால் மட்டும் ஆன்ம சோதனை நடத்தி மனம்
வருந்தி திருப்பலியின் இடையே பாவமன்னிப்பு பெற்றுக்கொண்டு நற்கருணை உட்கொள்ளலாம்.
கத்தோலிக்கத் திருச்சபையின் பொதுவான சட்டத்தின்படி ஆண்டிற்கொரு முறையேனும்
ஒப்புரவு நடத்தி நற்கருணை பெற்றுக்கொள்ள வேண்டும். மட்டுமன்று எல்லா நோன்பு
காலங்களிலும் முடிந்த அளவு ஒப்புரவு நடத்தி நற்கருணை பெற்றுக்கொள்ள வேண்டும்
என்றும் திருச்சபை நினைவூட்டுகின்றது. அடிக்கடி ஒப்புரவு நடத்துவதன் வழியாக
திருச்சபை மக்கள் ஆன்மீக வாழ்வில் வளர்ந்து வர வேண்டும் என்பதே திருச்சபையின் ஆசை.
அது போன்று பிறந்தநாள், திருமண நாள் போன்ற தனிநபர்
திருநாட்களிலும் ஒப்புரவு நடத்தி நற்கருணை பெற்றுக்கொள்வது ஆசீர் மிகுந்ததாகும்.
44.
ஒப்புரவு
அருளடையாளத்திற்கும் உடல் உள்ள நோய்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
பாவம் செய்த ஒருவர் எப்போதும் குற்ற உணர்வோடு வாழ்கிறார். குற்றவுணர்வும், சமாதானமின்மையும் பலவேளைகளிலும் உடல் நோய்
உருவாக காரணமாய் அமைகிறது. ஆனால் ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாக ஒருவர்
கடவுளுடைய கருணையும், அன்பும் பெற்றுக்கொள்வதன் வழியாக
ஆன்மீக அளவிலும், மன அளவிலும் விடுதலை அடைகிறார்.
உளவியல் சம்மந்தமான ஆற்றுப்படுத்தல் மனதின் பிரச்சினைகளிலிருந்து விடுபட துணை
செய்தாலும் ஆன்ம விடுதலையோ,
பாவ மன்னிப்போ, இறையருளோ அளிக்க துணைபுரியாது. ஒப்புரவு
அருளடையாளத்தின் வழியாக மட்டுமே ஒருவருக்கு இறையருள் அளிக்கின்ற பாவமன்னிப்பும், ஆன்மீக விடுதலையும், சமாதானமும் பெற்றுக்கொள்ள முடியும்.
45.
பாவங்களுக்குப்
பரிகாரமாக அர்ப்பணிக்க கண்ணீர் துளிகள் மட்டுமே உள்ளன என்று கூறி
பாவமன்னிப்புக்காக வேண்டுகின்ற பாடல் எது?
“என் பாவத்தில் நான் சாகும்
அவலம்
நிகழாது இறைவா நீர் - காத்தருளிடுவீர்
கண்ணீரேற்றருள்வீர்
மறியோ
மாடிடபம் எதுமோ
வெண்புறாவின்
சிறு குஞ்சதுமோ
பொருத்தனையாய்
நான் - செலுத்துகிறேனில்லை
சீயோன்
மனையகமாய் வந்தோள்
கணிகை
சிந்திய கண்ணீர்போல்
என்
கண்ணீரும் - கனிவுடனேற்றருளும்
திருமகனின்
பேரன்பாலும் - மாதாவின் வேண்டுதலாலும்
ஹாலேலூயா
பாவம் பொறுத்தருள்வீர்”.
(அருளடையாளம்)
46.
“என் குற்றத்தை நான் அறிக்கையிடுகிறேன்.
என் பாவத்தின் பொருட்டு நான் அஞ்சுகிறேன்”. (திருப்பாடல்கள்
38:18)
8. 13
நோயில்பூசுதல்
1.
நோயில்பூசுதலின்
புதிய ஏற்பாடு பின்னணிகளை விவரி?
இயேசுநாதர் பாலஸ்தீனா
முழுவதும் சென்று நற்செய்தி பறைசாற்றவும் ஏராளம் நோயாளிகளை குணப்படுத்தவும்
செய்தார் என்று மறைநூல் சான்று பகர்கின்றது. நோயாளிகளுக்கு குணமளிக்கும் செயல்
விண்ணரசின் அடையாளமாகவே ஆண்டவர் கற்பித்தார். இறையரசு பற்றிய நற்செய்தியும்
நோய்களிலிருந்துள்ள விடுதலையும் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன. இயேசு தம்
சீடர்களுக்குத் தீய ஆவிகளை ஓட்ட அதிகாரம் கொடுத்தார் (மத்தேயு 10:1). அதன் வழியாக சீடர்கள் தீய ஆவிகளை ஓட்டவும், நலம் குன்றியவர்களைக் எண்ணெய் பூசி
குணமாக்கவும் செய்தனர் (மத்தேயு 10:8).
அதுபோன்று 72 சீடர்களை அனுப்பியபோதும் இயேசு அவர்களிடம்
நீங்கள் ஏதேனும் நகருக்குச் சென்றால் அங்கிருக்கும் நோயாளிகளுக்கு நலமளித்து
இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்று அறிவியுங்கள் என்றார்.
2.
திருத்தூதரான
புனித யாக்கோபு நோயில்பூசுதலைக் குறித்தும் அதன் வழியாகக் கிடைக்கின்ற கொடைகளைக்
குறித்தும் கூறுவது என்ன? “உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால்
திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது
எண்ணெய்பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது
நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால்
மன்னிப்பு பெறுவார்” (யாக்கோபு 5:14-15). பாவத்திற்கும் நோய்க்கும் இடையேயான தொடர்பு
புதிய ஏற்பாடு முழுவதும் காணமுடிகிறது. பாவத்தின் பலனாகவே நோய் வருவதால்
கிறிஸ்துவின் பெய ரால் நடத்துகின்ற நோயில்பூசுதல் வழியாக ஒருவருக்கு
நோன்பிலிருந்து விடுதலையும்,
பாவமன்னிப்பும்
கிடைக்கின்றது. இயேசு முடக்குவாதமுற்றவரின் பாவத்தை மன்னித்து அவருக்கு
நோயிலிருந்து விடுதலையளித்ததாக நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம் (மாற்கு 2:1-5).
3.
நோயில்பூசுதல்
அடையாளத்தில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆசீர்வதிக்கப்பட்ட ஒலிவெண்ணெய் பற்றி
திருச்சபைத் தந்தையான தெர்த்துல்லியன் (கி.பி. 160-220) கூறுவது என்ன? “புனிதத் தைலத்தால் நோயுற்றவர் பூசப்படும்போது அவருடைய ஆன்மா
தூய்மைப்படுத்தப்படுகிறது”.
4.
பாவமன்னிப்பு
அதாவது பாவத்திலிருந்து விடுதலை,
இறப்பின் மேல் வெற்றி, நிலைவாழ்வின் வாயில், தூய ஆவியின் வருகை என்பனவற்றின் அடையாளமாக நோயில்பூசுதல்
திகழ்கிறது எனக் குறிப்பிட்டுள்ள விவிலியப் பகுதி என்ன? யாக்கோபு 5:20
5.
கந்தலோ
திருச்சடங்கு என்றால் என்ன?
குருக்களுடையவும், ஆயர்களுடையவும் நோயில்பூசுதல்
திருச்சடங்கிற்கு “கந்தலோ திருச்சடங்கு” என்று பெயர்.
1.
நோயில்பூசுதல்
என்றால் என்ன? நோயாளி ஒருவருக்கு இறையருளை அளித்து
அவரை நோயிலிருந்தும் பாவத்திலிருந்தும் விடுவிக்கின்ற அருளடையாளமே
நோயில்பூசுதல். இறப்பதற்கு முன்னால்
ஒருவருக்கு இவ்வருளடையாளம் அளிக்கப்படுகிறது.
2.
'நோயில்பூசுதல்' எவ்வாறு திருச்சபை முழுவதும் நடத்துகின்ற திருச்சடங்கு
எனப்படுகிறது? 'நோயில்பூசுதல்' என்னும் பெயருக்கேற்ப இது நோயாளிக்கு மட்டுமே அளிக்கின்ற ஒரு
அருளடையாளமாகும். இது திருச்சபையின் ஒரு உறுப்பினரின் நலனுக்காக திருச்சபை
முழுவதும் நடத்துகின்ற ஒரு திருச்சடங்காகும். நோயாளிகளுக்கு திருச்சபையின் பெயரால்
புனிதத் தைலம் பூசி அருட்பொழிவு செய்யும் அடையாளமே இது.
3.
திருத்தூதர்
யாக்கோபு நோயில்பூசுதலைக் குறித்து கூறுவது என்ன? “உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை
அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய்பூசி இறைவனிடம்
வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார்.
ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்பு பெறுவார்” (யாக்கோபு 5:14-15).
4.
நோயில்பூசுதல்
அடையாளத்தில் பயன்படுத்தப்படும் எண்ணெய் எது? ஆசீர்வதிக்கப்பட்ட ஒலிவ எண்ணெய்
5.
தெர்த்துல்லியன்
நோயில்பூசுதலைக் குறித்து கூறுவது என்ன? “புனிதத்
தைலத்தால் நோயுற்றவர் பூசப்படும்போது அவருடைய ஆன்மா தூய்மைப்படுத்தப்படுகிறது”.
6.
மலங்கரைத்
திருச்சபையில் எப்போது நோயில்பூசுதல் வழங்கப்படுகிறது? திருச்சபை உறுப்பினருள் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறக்கும்
தருவாயில் இருந்தால், அவர் சுய நினைவை இழக்கும் முன்னரே
அவருக்கு நோயில்பூசுதல் நடத்தி நற்கருணை கொடுக்கும் வழக்கம் மலங்கரைத்
திருச்சபையில் இருந்து வருகிறது.
7.
மலங்கரைத்
திருச்சபையில் எங்கே நோயில்பூசுதல் மன்றாட்டுகள் நடத்தப்படுகிறது? மலங்கரை வழிபாட்டு முறைப்படி நோயில்பூசுதல்
நோயாளி படுத்திருக்கும் அறையிலோ அல்லது அதற்கடுத்த அறையிலோ நடத்தப்படுகிறது.
8.
மலங்கரைத்
திருச்சபையில் நோயில்பூசுதல் மன்றாட்டுகள் யாவை? இரக்க மன்றாட்டு,
பாவ மன்னிப்பு, விண்ணரசின் மகிழ்ச்சி போன்றவையே நோயில்பூசுதல்
மன்றாட்டுக்களில் காணப்படுகிறது.
9.
மலங்கரைத்
திருச்சபையில் நோயில்பூசுதல் திருச்சடங்களை குருவானவர் எவ்வாறு ஆரம்பிக்கிறார்? துன்புறுபவர்களை இரக்கமுடன் கண்ணோக்கவும், நோயாளிகளைக் குணப்படுத்தவும், மனத்துயரால் வாடுவோர்க்கு ஆறுதலளிக்கவும், தூய திரித்துவத்துடன் மன்றாடியவாறே குருவானவர்
நோயில்பூசுதல் திருச்சடங்களை ஆரம்பிக்கிறார்.
10.
மலங்கரைத்
திருச்சபையில் நோயில்பூசுதல் திருச்சடங்கு நடத்தப்படும் முறையை விளக்குக? துவக்க மன்றாட்டு, திருப்பாடல்கள்,
ஆயத்த மன்றாட்டு, பரிந்துரை மன்றாட்டு, தூப மன்றாட்டு போன்ற மன்றாட்டுக்களுக்குப் பின்னர் மறைநூல்
வாசிக்கப்படுகிறது. பின்னர் மார் யாக்கோபின் மன்றாட்டு சொல்லப்படுகிறது. இது
நோயாளியின் நலனுக்காக சமூகம் முழுவதும் ஒன்றாகச் சேர்ந்து மன்றாடுகின்ற
மன்றாட்டாகும். அவ்வேளையில் குருவானவர் நோயாளியின் தலையில் கைவைத்துக் கொண்டு
மன்றாட்டு சொல்கிறார். தொடர்ந்து நோயாளி பாவசங்கீர்த்தன செபம் சொல்லி
பாவசங்கீர்த்தனம் நடத்துகிறார். பாவசங்கீர்த்தன செபம் சொல்ல நோயாளிக்கு
இயலவில்லையெனில் மற்றொருவர் செபம் சொல்லிக்கொடுக்கவும் நோயாளி தன் பாவங்களை எண்ணி
மனவருத்தத்தோடு பாவமன்னிப்புக்காக மன்றாடுகிறார். பாவசங்கீர்த்தனத்திற்குப் பின்
தைலம்பூசுதல் திருச்சடங்கு நடத்தப்படுகிறது. நோயில்பூசுதல் திருச்சடங்கிற்குப்
பின்னர் இறையன்னை, புனிதர்கள் ஆகியோரின் புகழ்மாலையும், இறுதி ஆசீர்வாதமும் அளிப்பதுடன் திருச்சடங்கு
முடிவடைகிறது.
11.
மலங்கரைத்
திருச்சபையில் நோயில்பூசுதல் திருச்சடங்கில் மார் யாக்கோபின் மன்றாட்டின்
உள்ளடக்கம் என்ன? மார் யாக்கோபின் மன்றாட்டு
நோயாளியின் நலனுக்காக சமூகம் முழுவதும் ஒன்றாகச் சேர்ந்து மன்றாடுகின்ற
மன்றாட்டாகும். சீமோன் பேதுருவின் மாமியாரை இயேசு குணப்படுத்தியவுடன் அவர் எழுந்து
இயேசுவுக்கு பணிவிடை செய்தார். அதுபோன்று இந்த நோயாளியையும் குணப்படுத்தி உமக்கு பணிவிடை
செய்ய துணைபுரிய வேண்டுமென்று அனைவரும் சேர்ந்து இரக்கம் நிறைந்த ஆண்டவரிடம்
மன்றாடுகின்றனர்.
12.
மலங்கரைத்
திருச்சபையில் நோயில்பூசுதல் திருச்சடங்கில் பாவசங்கீர்த்தனம் நடத்தப்படும் முறை
பற்றிக் கூறுக? நோயில்பூசுதல் திருச்சடங்கில் நோயாளி
பாவசங்கீர்த்தன செபம் சொல்லி பாவசங்கீர்த்தனம் நடத்துகிறார். பாவசங்கீர்த்தன செபம்
சொல்ல நோயாளிக்கு இயலவில்லையெனில் மற்றொருவர் செபம் சொல்லிக்கொடுக்கவும் நோயாளி
தன் பாவங்களை எண்ணி மனவருத்தத்தோடு பாவமன்னிப்புக்காக மன்றாடுகிறார்.
13.
மலங்கரைத்
திருச்சபையில் நோயில்பூசுதல் திருச்சடங்கில் பாவமன்னிப்புக்கான இரு மன்றாட்டுக்கள்
யாவை? பாவமன்னிப்புக்காக இரண்டு
மன்றாட்டுக்கள் திருச்சபையில் சேர்க்கப்பட்டுள்ளன. முதல் மன்றாட்டில் உடல்
உள்ளங்களின் வழியாக அவர் செய்த பாவங்களை எண்ணி மனவருத்தமுற்று பாவமன்னிப்பு
வேண்டுகிறார். இரண்டாவது மன்றாட்டில் ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் இவை வழியாகவும், அகப்புலன்களாகிய உணர்ச்சி, சிந்தனை, அறிந்துகொள்ளும் தன்மை, ஞானம், பகுத்தறிவு இவை வழியாகவும் இவர் செய்த
பாவங்களை எண்ணி மனவருத்தமுற்று பாவமன்னிப்பு வேண்டுகிறார்.
14.
மலங்கரைத்
திருச்சபையில் நோயில்பூசுதலில் தைலம்பூசுதல் திருச்சடங்கு பற்றிக் கூறுக? நோயில்பூசுதலில் பாவசங்கீர்த்தனத்திற்குப்
பின் தைலம்பூசுதல் திருச்சடங்கு நடத்தப்படுகிறது. குருவானவர் பெருவிரலில் தைலம்
தொட்டு பின்வரும் மன்றாட்டைக் கூறிக்கொண்டு நோயாளியின் நெற்றியில் மூன்றுமுறை
சிலுவை வரைகிறார். நோயாளியின் நெற்றியில் சிலுவை வரையும்போது, “தந்தையுடையவும் (+) மகனுடையவும் (+) தூய ஆவியுடையவும்
திருப்பெயரால் நீ தூய்மையடைந்து புனிதப்படுவாயாக. மனதோடும், மனதில்லாமலும்,
அறிந்தும் அறியாமலும் நீ
செய்த பாவங்களும் உன் கடன்களும் மன்னிக்கப்படுவனவாக. எல்லா தீயசிந்தனைகளும், அலகைக்கேற்ற செயல்களும் உன்னிடமிருந்து
மாய்க்கப்படுவதாக” என மன்றாடுகிறார். நெற்றியில் தைலம்
பூசிய பின்னர் பிற உறுப்புக்களில் தைலம் பூசப்படுகிறது.
15.
'கந்தலோ' என்னும் சுறியானி வார்த்தைக்கு என்ன பொருள்? 'திரிகள்'
16.
ஒப்புரவு
அருளடையாளம் எவ்வாறு முழுமையடைகிறது? திருமுழுக்கு, உறுதிபூசுதலில் முழுமையடைவது போன்று ஒப்புரவு, நோயில்பூசுதலில் முழுமையடைகிறது. இறப்பின்
பயத்தை அகற்றி இயேசுகிறிஸ்து இன்று அருளடையாளத்தின் வழியாக நோயாளிக்கு ஆறுதலளித்து
திடப்படுத்துகிறார்.
17.
நோயில்பூசுதலின்
வழியாக நோயாளிகளுக்கு பாவமன்னிப்பும், நோயிலிருந்து
விடுதலையும் கிடைக்குமென்று திருச்சபை பாடும் பாடல் எது?
"விலைதருவேன் தருவேன் தைலம் தாரும்
என்றே
வணிகனிடம் கேட்கும் விலைமாதாகும்
பேதையின்
குரலினிதே தாரும் தரமுயர்
நல்
தைலம் யானது வென்கண்ணீருடனே
இறைமகனின்-னல்பூங்குழல்
சார்த்திடுவேன்
நன்னறு
தைலமதா லெந்தன் குற்றம் குறைகள் போக்கிடுவா
ரென்றவரிடமாய்
சரண்புகுகின்றேனே
தைலமுடன்
வந்தோள் பாவை தன்
விசுவாசம்
கண்டபரன் ஹாலேலூயா
பொறுத்தருள்
செய்தாரே”.
18.
“ஒருவருக்கொருவர் பாவங்களை
அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு
பயன்விளைவிக்கும்”. (யாக். 5:16)
8. 14
குருத்துவம்
1.
ஆண்டவருக்கு
பலி ஒப்புக்கொடுத்து இறை வழிபாடு நடத்திய ஆதாமின் புதல்வர்கள் யாவர்? காயினும், ஆபேலும்
2.
பலிபீடங்களை
அமைத்து பலி ஒப்புக்கொடுத்தனர் நமது குல முதல்வர்கள் யாவர்? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு
3.
இஸ்ரயேலரிடையே
மூன்று குருத்துவ நிலைகள் யாவை? தலைமைக்குரு, குரு, லேவியர்
4.
எண்ணெய்
பூசி அருட்பொழிவு செய்து திருநிலைப்படுத்தப்பட்டவர்கள் யாவர்? தலைமைக் குருக்களும், குருக்களும் (லேவியர் 8, விடுதலைப்பயணம் 29).
5.
குருக்கள்
எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்? மக்களுக்காக கடவுளுக்கு பலி
ஒப்புக்கொடுக்கவும் அவர்களுக்குக் கடவுளிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுத்தரவும்
குருக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
6.
குரு
என்னும் வார்த்தைக்கு பொருள் என்ன? குரு என்னும் வார்த்தைக்கு 'பலி கொடுப்பவர்' என்னும் பொருள் உண்டு.
7.
குருக்களை
நாம் எவ்வாறு அறிந்து கொள்கின்றோம்? மதம் சார்ந்த திருச்சடங்குகளுக்கு
தலைமை ஏற்பவர், முன்னால் நின்று செயல்படுத்துபவர் என
குருக்களை நாம் அறிந்து கொள்கின்றோம்.
8.
பழைய
ஏற்பாட்டில் எப்போது குருத்துவம் நிறுவப்பட்டது? மோசேயின் காலத்தில் இஸ்ரயேலரிடையே இறைவனின் கட்டளைப்படி
குருத்துவம் வெளிப்படையாக நிறுவப்பட்டது. இறை ஆராதனை (வழிபாடு)க்காக தனிச்சடங்கள்
இயற்றப்பட்டன.
9.
இஸ்ரயேலரிடையே
குருத்துவத்தின் நிலைகள் யாவை? இஸ்ரயேலரிடையே குருத்துவத்திற்கு
மூன்று நிலைகள் இருந்தன. அவை முறையே தலைமைக்குரு, குரு, லேவியர் என்பனவாகும்.
10.
மோசே
யாரை முதன் முதலாக குருக்களாக அருட்பொழிவு
செய்தார்? மோசேயின்
சகோதரனான ஆரோனையும், அவருடைய புதல்வர்களையும் கடவுள்
குருத்துவ பணிபுரிய அழைத்தார். இறைக்கட்டளைப்படி மோசே அவர்களை குருக்களாக
அருட்பொழிவு செய்தார் எண்ணிக்கை 18:1-7).
11.
குருக்களுக்கு
துணைபுரிய யாரை நியமித்தார்கள்? குருக்களுக்கு துணைபுரிய
லேவியர்களையும் நியமித்தார். ஆனால் அவர்கள் அருட்பொழிவு செய்யப்படவில்லை.
12.
ஏன்
இயேசுவில் நிறைவான குருத்துவம் நிலைகொள்கிறது? இயேசு யூதமக்கள் எதிர்பார்த்திருந்த மெசியா அதாவது அருட்பொழிவு
செய்யப்பட்டவராதலால் அவர் நிலையான குருவும், இறைவாக்கினரும், அரசரும் ஆவார். இயேசுகிறிஸ்து தந்தைக்
கடவுளுக்கும் மனித இனத்துக்கும் இடையேயான ஒரே இணைப்பாளராதலாலும் அவர்
மெசியாவானதாலும் அவர் மட்டும் உண்மை குருவானவர். உண்மைக் குருத்துவம் இயேசுவின்
குருத்துவமே. எனவே இயேசுவில் மட்டுமே ஒப்பற்றதும் நிறைவானதுமான குருத்துவம் நிலைகொள்கிறது.
13.
இயேசு
புதிய ஏற்பாட்டுக் குருத்துவம் நிறுவியது பற்றிக்கூறுக? ஒரே இணைப்பாளர் என்னும் நிலையில் மனித இனத்தின்
பாவபரிகாரத்துக்காக இயேசு கல்வாரி மலையில் என்றென்றைக்குமாக தம்மைத்தாமே
பலியாக்கிக் கொண்டார். அவ்வாறாக இயேசுகிறிஸ்து பலி ஒப்புக்கொடுக்கும் குருவானவரும்
பலிப்பொருளுமாக மாறினார். இயேசு தம்மைத்தாமே பலியாக்கிக்கொண்டு தாம் குருவானவர்
என்பதை தெளிவுபடுத்தவும் புதிய ஏற்பாட்டுக் குருத்துவத்துக்கு அடித்தளமிடவும்
செய்தார்.
14.
இயேசு
ஏன் தமது குருத்துவ பதவியை திருத்தூதர்களுக்கு அளித்தார்? மனித மீட்புக்காக இயேசு ஒப்புக்கொடுத்த பலியை உலக முடிவுவரை
தொடர்ந்து ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். அதற்காக பன்னிரு
திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்துத் தமது குருத்துவ பதவியை அவர்களுக்கு அளித்து
குருத்துவம் என்னும் அருளடையாளத்தை நிறுவினார் (யோவான் 20:21-23, மாற்கு 16:15-16, லூக்கா 29:19, மத்தேயு 28:19-20).
15.
பன்னிரு
திருத்தூதர்களின் வழிவந்தவர்களே குருக்கள் குறிப்பு வரைக? பன்னிரு திருத்தூதர்கள் இயேசுவால் திருச்சபையில் சிறந்த
குருக்களாக மாறினர். அவர்கள் தங்கள் வழிவந்தவர்களாக ஆயர்களையும், (episcopo) குருக்களையும் (மூப்பர்கள்) அருட்பொழிவு
செய்தனர் (1பேதுரு 5:1, 1தீமோத்தேயு 4:14).
இவ்வாறாக அருட்பொழிவு
செய்யப்பட்ட குருக்களே இயேசு கல்வாரியில் ஒப்புக்கொடுத்த பலியை இன்றும்
ஒப்புக்கொடுத்து வருகின்றனர்.
16.
"நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரசகுருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்கள்” (1பேதுரு 2:9)
17.
பணிக்குருத்துவத்தின்
அவசியம் என்ன? அனைவருக்கும் குருத்துவம்
இருப்பினும் திருச்சபையில் அருளடையாளங்கள் நிறைவேற்றவும், இறைமக்களை தூய்மைப்படுத்தவும், கற்பிக்கவும்,
வழிநடத்தவும்
இறைமக்களிலிருந்து சிலர் ஆயரால் குருவாக அருட்பொழிவு செய்யப்படுகிறார்கள். அவ்வாறு
அவர்கள் பணிக்குருத்துவத்தில் பங்கு கொள்கின்றனர்.
18.
குருத்துவத்தில்
படிநிலைகள் எத்தனை அவை யாவை? அந்தியோக்கிய திருச்சபை மரபின்படி
குருத்துவத்தில் ஏழு படிநிலைகள் உள்ளன. அவையே உறுதிமொழி எடுப்பவர், பாடல் பாடுபவர், வாசகம் வாசிப்பவர்,
வாசல் காவல்காரர், திருத்தொண்டர், குருவானவர்,
ஆயர் போன்றவைகளாகும்.
19.
குருத்துவ
நிலையில் அடங்கியுள்ள நிலைகள் யாவை? திருத்தொண்டர், குருவானவர்,
ஆயர் என்னும் மூன்று
நிலைகள் மட்டுமே குருத்துவ நிலையில் அடங்கியுள்ளன. அவர்களின் அருட்பொழிவு
அருளடையாளமாகக் கருதப்படுகிறது.
20.
திருத்தொண்டர்
ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? Deacon
21.
திருத்தொண்டர்களின்
பணிகள் யாவை? நற்செய்தி போதிக்கவும், திருமுழுக்கு அளிக்கவும், திருத்தொண்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது
(திருத்தூதர் பணிகள் நூல்கள் 6:10,
8:5, 2:18,1 திமொத்தேயு 3:8-13).
22.
குருக்கள்,
என்பதன் கிரேக்க, சுறியானி சொற்கள் யாவை?
குருக்களை கிரேக்க மொழியில் Presbyteros
என்றும் ஆங்கிலத்தில் Elder என்றும் சுறியானியில் 'கசீசோ' என்றும் அழைப்பர்.
23.
ஆயர்களின்
அடிப்படைக் கடமைகள் யாவை? புனிதப்படுத்துதல், கற்பித்தல், வழிநடத்துதல் என்னும் திருத்தூதர்களின் மூன்றுவிதமான கடமைகளே
ஆயர்களின் அடிப்படைக் கடமைகளாகும்.
24.
ஆயர்களின்
தலைமைப் பதவிகள் யாவை? பேராயர், காதோலிக்க பாவா,
பிதாப்பிதா, திருத்தந்தை போன்றவை ஆயர்களுக்கிடையேயான
தலைமையிடங்களாகும். ஆயர்களுக்கு மேலாக சில அதிகாரங்கள் உடையவரே பேராயர். ஒரு
உள்நாட்டு திருச்சபை சமூகத்தின் தலைவரே காதோலிக்கா பாவா மற்றும் பிதாப்பிதா.
பேதுருவின் வழிவந்தவர் என்னும் உலகத்திருச்சபையின் தலைவரும், ஆயர்மன்றத்தின் தலைவரும் திருத்தந்தை ஆவார்.
25.
மலங்கரை
கத்தோலிக்க வழிபாட்டு குருத்துவ அருட்பொழிவு திருச்சடங்கு எவ்வாறு நடைபெறுகிறது?
திருப்பலியின் இடையே குருத்துவ அருட்பொழிவு
திருச்சடங்கு ஆரம்பமாகின்றது. தூயகத்தின் நுழைவாயிலில் முழந்தாளில் நிற்கும்
குருத்துவப்பட்டம் பெற்றுக்கொள்ளும் நபருக்கு குருத்துவப் பணிக்குத் தேவையான
தகுதிகளைக் குறித்து ஆயர் நினைவூட்டுகிறார். குருத்துவ நிலைப்பாட்டிற்கு நிற்பவர்
விசுவாசம் அறிக்கையிட்டு கீழ்ப்படிதல் வாக்களித்து சிலுவை அடையாளத்தால்
முத்திரையிடுகிறார். அதற்குப்பின் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு இயேசுவை
பின்பற்றுவதன் அடையாளமாக ஆயர் அருட்பொழிவு செய்யப்படுபவரின் தலையிலிருந்து சிலுவை
அடையாளத்தில் முடியை வெட்டுகிறார்.
“தூயத் திருச்சபையில்
குருத்துவ பணிபுரிய தூய ஆவியார் உம்மை அழைக்கிறார்” என்று கூறி ஆயர் அருட்பொழிவு செய்யப்படுபவரை தூயகத்தினுள்
அழைத்துச் செல்கிறார்.
நற்செய்தி வாசகத்திற்கிடையே “அவர் அவர்கள் மேல் ஊதி” என்று வாசிக்கும் போது ஆயர் அருட்பொழிவு செய்யப்படுபவரின்
முகத்தில் மூன்றுமுறை சிலுவை அடையாளத்தில் ஊதுகிறார். இது கிறிஸ்து சீடர்களின்
மேல் ஊதி தூய ஆவியை அவர்களுக்கு அளித்தது போன்று கிறிஸ்துவின் பிரதிநிதியான
ஆயரிடமிருந்து குருத்துவ அருட்பொழிவு செய்யப்படுபவர் தூய ஆவியைப்
பெற்றுக்கொள்கிறார் என்பதன் அடையாளமாகும். தொடர்ந்து சொல்லப்படுகின்றதான
மன்றாட்டுக்கள் தூய ஆவியின் வருகையை மையமாகக் கொண்டவையாகும்.
தூய ஆவியார் தனிப்பட்ட முறையில் அருட்பொழிவு
செய்யப்படுபவரின் மேல் வந்து அவரை குருவாக அருட்பொழிவு செய்யும் நிகழ்ச்சியின்
போது ஆயர் அருட்பொழிவு செய்யப்படுபவரை தன் திருவுடையால் மறைத்துக் கொள்கிறார்.
தொடர்ந்து தூய மறையுண்மைகளின் மேல் கைவைத்து அவற்றிலிருந்து இறைவல்லமையைப் பெற்று
அருட்பொழிவு செய்யப்படுபவரின் தலையில் வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து ஆயர் புதுக்குருவின் தலையில்
கைவைத்து குறிப்பிட்டுள்ள மன்றாட்டுக்களைக் கூறிக்கொண்டு நெற்றியில் மூன்றுமுறை
சிலுவை வரைந்து முத்திரையிடுகிறார். குருத்துவ அருட்பொழிவு முடிந்த பின்னர் ஆயரும், புதுக்குருவும் இணைந்து திருப்பலியை நிறைவு
செய்கின்றனர்.
26.
குருத்துவத்தின்
முதன்மை பற்றிய பாடல் யாது?
"குருகுலமே விழித்தெழுமின் நீங்கள்
உங்கள்
பதவியதோ மேன்மை
ஆண்டவராம்
மெசியா சொன்னது போல்
நீங்கள்
தடையின் தடைந்ததாமே!
வாழ்வை
யுலகின் தாழ்கோல்கள்
ஏந்துவதும்
நீங்கள் தானே
“நல்ல ஆயன் நானே.
ஆண்டவர்
விருப்பம் செய்-வீ-ரேல்
மகிழ்வின்
மணவறையை நீங்கள்
பெறுமாப்
பேற்றை பெறுவீர்கள் (குருப்பட்டத் திருச்சடங்கு)
27.
நல்ல
ஆயன் தன் ஆடுகளுக்காக தம் உயிரைக் கொடுப்பார்”. (யோவா 10:11)
8. 15
திருமணம்
1.
திருமணத்தைக்
குறித்த புனித பவுலடியாரின் பார்வை எவ்வாறு அமைந்திருந்தது? திருமணத்தை கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் உள்ள உறவின்
அடிப்படையிலேயே புனித பவுலடியார் விளக்குகின்றார் (எபேசியர் 5:1-24). கிறிஸ்துவை மணமகனாகவும் திருச்சபையை
மணமகளாகவும் என்றும் புனித பவுலடியார் கூறுகிறார். தன் உயிரை அளித்து அன்பு செய்த
மணமகனான கிறிஸ்துவுடன் திருச்சபை அன்பில் ஒன்றிணைந்திருக்கிறது. கிறிஸ்துவுக்கும்
திருச்சபைக்கும் இடையேயான இந்த தூய அன்புறவே கணவன் மனைவி உறவுக்கு முன்மாதிரியாக
உள்ளது. சிலுவைப்பலியான கிறிஸ்துவின் தன்னலமற்றதும், தியாகமனப்பான்மை உடையதுமான அன்பே திருமணத்தின் குறிக்கோள் என்று
புனித பவுலடியார் கற்பிக்கின்றார் (1கொரிந்தியர் 6:12-20, 7:3-7).
2.
ஆதியில்
கடவுள் தம் உருவிலும் தம் சாயலிலும் மனிதரைப் படைத்தார் (தொடக்கநூல்
1:26).
3.
கடவுளால்
முதல் குடும்பம் எவ்வாறு உருவாக்கப்பட்டது?
மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று அவனுக்கு தகுந்த துணையை உருவாக்குவேன் (தொடக்க
நூல் 2:18) என்று கூறி கடவுள் ஒரு பெண்ணைப்
படைத்தார். அவர்கள் இருவரையும் இணைத்து ஒரு குடும்பமாக ஏதேன் தோட்டத்தில்
குடியமர்த்தினார். இதுவே முதல் திருமணமும், முதல்
குடும்பமும் ஆகும்.
4.
திருமணம்
என்னும் அருளடையாளம் என்றால் என்ன? வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும்
ஒருவருக்கொருவர் திருமணத்தின் வழியாக இணைந்து வாழ விரும்பும் போது கடவுள் காண
முடியாத அருளை வழங்கி அவர்களை ஒன்றிணைக்கின்றதான அருளடையாளமே திருமணம்.
5.
திருவிவிலியத்தில்
தொடக்க இறுதி திருமண நிகழ்வுகள் யாவை?
படைப்புகளின் தொடக்கத்தில் ஆதி பெற்றோர்களின் திருமணம் முதல் திருவிவிலியம்
ஆரம்பமாகின்றது. திருவெளிப்பாடு நூலில் ஆட்டுக்குட்டியின் திருமணவிருந்துடன்
திருவிவிலியம் முடிவடைகின்றது. (திரு வெளிப்பாடு 19:7-9)
6.
பழைய
ஏற்பாட்டில் இறைவன் ஆசீர்வதித்த குலமுதுவர்களின் இல்லற வாழ்க்கை யாவை? ஆதாம்-ஏவாள், ஆபிரகாம்-சாரா,
ஈசாக்கு - ரெபேக்கா, யாக்கோபு ராகேல் முதலான குல முதுவர்களின்
இல்லற வாழ்க்கையை கடவுள் ஆசீர்வதித்திருந்ததாக பழைய ஏற்பாடு கூறுகின்றது.
7.
பழைய
ஏற்பாட்டில் கணவன் மனைவி உறவு எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்பட்டது? பழைய ஏற்பாட்டில் யாவே-க்கும்
இஸ்ரயேலருக்கும் இடையேயான உறவை கணவன் மனைவி உறவுடன் ஒப்புமைப்படுத்தியிருந்தனர்.
யாவே மணமகனும் இஸ்ரயேலர் மணமகளும் என்னும் அடையாளம் பழைய ஏற்பாட்டில்
காணப்படுகிறது. யாவே கடவுளும், இஸ்ரயேல் மக்களும் சீனாய் மலையில் நடத்திய உடன்படிக்கையே
திருமணமாகின்ற கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான உறவினுடையவும் நிலையான
உடன்படிக்கையினுடையவும் முன்மாதிரியுமாகும்.
8.
இயேசு
எவ்வாறு திருமணத்தின் நிலைத்தன்மையைக் குறித்துக் கற்பித்தார்? படைப்பின் வரலாற்றில் திருமணம் நன்மை
வாய்ந்ததும் கடவுளின் மீட்புத்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்திருந்தது.
இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டு விட்டு தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.
இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல. ஒரே உடல் எனவே கடவுள்
இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் (மத்தேயு 19:4-6) என்று கூறிக்கொண்டு இயேசு திருமணத்தின்
நிலைத்தன்மையைக் குறித்துக் கற்பித்தார்.
9.
இயேசு
ஆசீர்வதித்த முதல் திருமணம் யாது? இயேசுவின் முதல் அற்புதம் ஒரு திருமண
வீட்டிலேயே நடந்தது. கானாவூர் திருமண வீட்டில் இயேசுவின் பிரசன்னத்துக்கு
திருச்சபை மிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. அதனால் திருமணம் கிறிஸ்துவின்
பிரசன்னத்தின் அடையாளமாகும் என்று திருச்சபை கற்பிக்கின்றது (யோவான் 2:1-12).
10.
திருமணம்
கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஓர் அருளடையாளம் விளக்குக? திருமணம் காணமுடியாத இறையருளை வழங்கி ஒரு ஆணையும் பெண்ணையும்
புனிதப்படுத்துகிறது. படைப்பின் தொடக்கத்தில் கடவுள் ஏற்படுத்தின திருமண உறவு
இயேசுவின் மீட்புச் செயல்களின் வழியாக ஒரு அருளடையாளமாக மாறியது. திருமணம் என்னும்
அருளடையாளத்தின் வழியாக இவர்கள் இறையருளைப் பெற்றுக்கொண்டு இயேசுவின்
மீட்புத்திட்டத்துடன் ஒன்றிணைந்து வாழ தகுதியுடையவர்களாக மாற்றப்படுகிறார்கள்.
11.
திருமணம்
ஒரு இறையழைத்தல் விளக்குக? சட்டத்தின்படி திருமணமாகின்ற ஒவ்வொரு
ஆணையும் பெண்ணையும் கடவுள் தனது அன்பிலும் படைப்புச் செயலிலும் பங்குபெற அழைப்பு
விடுக்கிறார். ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்பு செய்வதும், திருமணத்தின் வழியாக ஒன்றிணைவதும்
மனிதப்பார்வையில் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகத் தோன்றினாலும் கடவுளே அவர்கள்
இருவரையும் அழைத்து வேறுபடுத்தி ஒன்றிணைக்கிறார். இது கடவுள் திட்டமிட்டிருந்த
இறைத்திட்டத்தின் வெளிப்பாடாகும். அதனால் திருமணம் கடவுளின் கொடையும், அழைப்பும், இறைத்திட்டமும் ஆகும். ஆதாம்-ஏவாள் முதலான தம்பதிகளின் வரலாற்றைப்
படிக்கும்போது அங்கெல்லாம் கடவுளின் செயல்பாடுகள் நிகழ்ந்ததைக் காணமுடிகிறது. எனவே
குருத்துவமும், துறவறமும் போன்று திருமணமும் ஒரு
இறையழைத்தல் ஆகும்.
12.
திருமணமும்
திருச்சபையும் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன? ஒவ்வொரு கிறிஸ்தவனின் ஆளுமையும், வாழ்வு நிலையும் திருச்சபையில் வேரூன்றி உள்ளது. அதனால் திருமணம்
என்பது ஒரு தனிப்பட்ட உடன்படிக்கையன்று. மாறாக திருச்சபையிலும், திருச்சபையின் வழியாகவுமே ஆணும் பெண்ணும்
திருமணமாகின்றனர். வான்நின்றொரு மாண்மகுடம் இறங்குவதுமிறைவன் கையால்
குருமணமகனாமிவரை/ மணமகளாமிவரை அணிவிக்கும் மகுடம் மகிதம் சீரெழு குருக்கள் வழியாய்
தம்பதிகட்காய் தரவே........... (திருச்சடங்கு) என்ற பாடல்களின் வழியாக திருச்சபை
மணமகனையும், மணமகளையும் திருமணத் திருச்சடங்கின்
வழியாக ஒன்றிணைக்கிறது. குருவானவர் இயேசுவின் பிரதிநிதியாக நின்று மணமக்கள்
நடத்துகின்றதான உடன்படிக்கைக்கு முத்திரைப்பதிக்கின்றார். திருச்சபையே அவர்களுக்கு
உடன்படிக்கையின் அடையாளமாக மோதிரத்தை அளிக்கிறது. அதனாலேயே திருச்சபையினுடையவும்
இயேசுவினுடையவும் பிரதிநிதியான குரு மோதிரத்தை அளிக்கிறார்.
13.
திருமணம்
வழியாக நன்மக்கட்செல்வம் பெற ஆசியுரை என்ன?
மலங்கரைத் திருமண திருச்சடங்கில் வாழ்வினுடையவும், விசுவாசத் தினுடையவும் பகிர்தலை திருச்சபை பின்வருமாறு நினைவு
கூர்கின்றது. ஆபிரகாம் ஈசாக்கிலும்,
ஈசாக்கு யாக்கோபிலும், யாக்கோபு யோசேப்பிலும், மகிழ்வடைந்தவாறே நீங்களும் மகிழ்வெய்துமாறு நன்மக்கட்செல்வங்களை
ஆண்டவர் உங்களுக்கு அளிப்பாராக. நீங்கள் பலுகிப் பெருகி இப்பூமியை நிரப்புங்கள்
எனக்கூறி நோவாவுக்கும் அவரது சந்ததியார்க்கும் இறைவன் அளித்த ஆசிமொழி உங்களுக்கும்
உண்டாவதாக.
14.
திருமணம்
வழியாக நம்பிக்கை அடுத்த தலைமுறைக்கு கைமாறுவது எப்படி? திருமணம் வழியாக
ஏற்படுத்தப்படுகின்ற குடும்பம் சமூகத்தின் ஒரு பகுதியாகும். நம்பிக்கையின்
அடிப்படை உண்மைகளை தலைமுறைக்கு கைமாறுவது திருமணம் வழியாக உருவாக்குகின்ற
குடும்பத்தின் வழியாகவேயாகும். நம்பிக்கை அடுத்த தலைமுறைக்கு கைமாறுவது பற்றி
திருமணத்திருச்சடங்கு கூறுவது என்ன?
15.
திருமணத்
திருச்சடங்கின்போது திருச்சபை பின்வருமாறு நினைவு கூர்கின்றது. 1. உம்மீது கொண்ட உண்மையான விசுவாசத்தினால்
இவர்கள் உறுதிபெறவும், இவர்களின் வழிமரபினர் அதனை உரிமைச் சொத்தாக
பெற்றுக்கொள்ளவும் நீர் இவர்களுக்கு உதவியாய் இருந்தருளும். 2. மதிப்பீடுகளை மையமாக கொண்ட வாழ்வு குடும்பத்தில் தான்
ஆரம்பமாகிறது. தங்களின் அன்புறவின் பலனான மக்களை இறைபயத்திலும், உலக அறிவிலும் வளர்க்க வேண்டியது பெற்றோரின்
கடமையாகும். குட்டித் திருச்சபையாகும் குடும்பத்தின் வழியாக விசுவாசம் மற்றும்
அறநெறிவாழ்வின் படிப்பினைகள் அடுத்த தலைமுறைக்கு கைமாறுதல் செய்யப்படுகிறது.
16.
மலங்கரைத்
திருச்சபையில் திருமண விருப்பம் கேட்டல் பற்றிக் கூறுக? மலங்கரைக் கத்தோலிக்கத் திருச்சபையில் திருமண விருப்பம் கேட்டல்
முதலே திருமணத்திருச்சடங்கு ஆரம்பமாகின்றது. மணமக்கள் திருமணம் செய்துகொள்ள வருவது
சுதந்திரமான முடிவோடும்,
விருப்பத்தோடும் என்பதை
சாட்சிகள் முன்பாக உள்ள திருமண விருப்ப அறிக்கை உறுதிப்படுத்துகின்றது.
17.
மலங்கரைத்
திருச்சபையில் திருமணத் திருச்சடங்குகளின் பகுதிகள் யாவை? திருமணத்திருச்சடங்குக்கு இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதி
மோதிரம் அர்ச்சித்தல் திருச்சடங்கு,
இரண்டாவது பகுதி மகுடம்
அர்ச்சித்தல் திருச்சடங்கு ஆகும்.
18.
மகுடம்
அர்ச்சித்தல் திருச்சடங்கில் மகுடத்துக்குப் பதிலாக என்ன பயன்படுத்தப்படுகிறது?
மகுடத்துக்குப் பதிலாக சிலுவை உள்ள பொன்மாலையை மலங்கரை கத்தோலிக்கத்
திருச்சபையில் பயன்படுத்துகின்றனர்.
19.
மகுடம்
அர்ச்சித்தலின் பொருள் என்ன? பகைவனுக்கு எதிராக உள்ள வல்லமை
பொருந்திய படைக்கருவியே இந்த மகுடம். இந்த மகுடம் உடலை அழகுபடுத்துவதை விட அதிகமாக
ஆன்மாவை அழகு படுத்துகிறது. இயேசுவின் முள்முடியுடன் ஒப்புமைப்படுத்தப்படும் இந்த
மகுடம் திருமண வாழ்வில் ஏற்றுக்கொள்ள வேண்டிய தியாகத்தினுடையவும், பொறுமையினுடையவும், தற்கையளிப்பினுடையவும் அடையாளமாகும்.
20.
தாலி
கட்டுதல் பற்றிக் குறிப்பு வரைக? இந்திய பண்பாட்டிலிருந்து கிறிஸ்தவ
சமூகம் பெற்றுக்கொண்ட ஒன்றே தாலி கட்டுதல். தாலி ஒன்றிப்பின் அடையாளமும், மணமக்களை ஒன்றிணைக்கும் கருவியுமாகும்.
சிலுவையை நூலில் அல்லது தங்கச் சங்கிலியில் இணைக்கப்பட்ட தாலி மணமகன் மணமகளின்
கழுத்தில் அணிவதன் வழியாக திருமணம் சிலுவையால் முழுமையாக முத்திரை இடப்படுகிறது.
21.
திருமணத்
திருச்சடங்கின் மகுடத்தை ஆசீர்வதிக்க வேண்டும் பாடல் யாது? “வான் நின்றொரு மாண் மகுடம், இறங்குதுமிறைவன் கையால், குரு
மணமகனாமிவரை/ மணமகளாமிவரை, அணிவிக்கும் மகுடம் மகிதம், சீரெழு குருக்கள் வழியாய்
தம்பதிகள்காய் தரவே...”.
(திருச்சடங்கு முறை)
22.
“நான் உங்களிடம் அன்பு
கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவருக்கொருவர் மற்றவரிடம் அன்பு
கொண்டிருக்கவேண்டும் என்பதே என் கட்டளை.
23.
தம்
நண்பர்களுக்குக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும்
இல்லை” (யோவான் 15:12-13)
9. 3 மலங்கரை
கத்தோலிக்கத் திருச்சபையின் திருவழிபாடு
1.
கத்தோலிக்கத் திருச்சபையில் எத்தனை தனித்திருச்சபைகள்
உள்ளன? 24
2.
உரோமை மையமாகக் கொண்டு வளர்ந்த திருவழிபாட்டு
மரபு எது? இலத்தீன் திருவழிபாட்டு மரபு
3.
கான்ஸ்தாந்திநோபிளை மையமாகக் கொண்டு வளர்ந்த திருவழிபாட்டு
மரபு எது? கிரேக்க திருவழிபாட்டு மரபு
4.
செலூஷ்யா ஸ்டேஸிபோன் (மெசபொத்தாமியா), பார்சீகம்
அந்தியோக்கியா போன்ற இடங்களை மையமாகக் கொண்டு வளர்ந்த திருவழிபாட்டு மரபு எது?
சுறியானி திருவழிபாட்டு மரபு
5.
உரோமைப் பேரரசில் வளர்ந்த திருவழிபாட்டு
மரபுகள் எவை? இலத்தீன், கிரேக்க
திருவழிபாட்டு மரபுகள்
6.
பாரசீக பேரரசில் வளர்ந்து வந்த திருவழிபாட்டு
மரபு எது? சுறியானி மரபு
7.
முதல் மூன்று திருவழிபாட்டு மரபுகள் நாளடைவில்
எத்தனை திருவழிபாட்டு மரபுகளாக திருச்சபையில் வளர்ந்தன?
ஆறு
8.
உரோமைப் பேரரசு எவ்வாறு இரண்டாகப்
பிரிக்கப்பட்டிருந்தது? கிழக்குநாடுகள் என்றும்
மேற்குநாடுகள்
9.
மேற்கத்திய உரோமைப் பேரரசில் வளர்ந்த
திருவழிபாட்டு மரபு எது? இலத்தீன் திருவழிபாடு
10. கிழக்கத்திய
உரோமைப் பேரரசில் வளர்ந்த திருவழிபாட்டு மரபுகள் எவை?
அந்தியோக்கியன், அலக்சான்ட்ரியன், அர்மேனியன், பைசன்டெயின்
11. நாளடைவில்
பாரசீக பேரரசில் வளர்ந்த திருவழிபாட்டு மரபு எது?
கல்தேயா சுறியானி திருவழிபாட்டு முறை
12. இன்றைய
திருச்சபையின் 24 திருவழிபாட்டு முறைகளும் அடங்கும் ஆறு திருவழிபாட்டு மரபுகள் எவை?
இலத்தீன், அந்தியோக்கியன், அலக்சான்ட்ரியன், அர்மேனியன், பைசன்டெயின்,
கல்தேயா
13. இந்தியக்
கத்தோலிக்கத் திருச்சபையினரின் மூன்று திருவழிபாட்டு மரபுகள் யாவை?
இலத்தீன் திருவழிபாடு, கல்தேயா சுறியானி திருவழிபாடு, அந்தியோக்கியன்
சுறியானி திருவழிபாடு
14. அந்தியோக்கியன்
திருவழிபாட்டு மரபை பயன்படுத்தும் இந்திய கத்தோலிக்க திருச்சபை எது?
மலங்கரைக் கத்தோலிக்கத் திருச்சபை
15. அந்தியோக்கியன்
திருவழிபாட்டு மரபு எங்கே தோன்றியது? எருசலேம்
16. கி.பி.
70-ஆம் நூற்றாண்டில் எருசலேம் தகர்க்கப்பட்ட போது
திருச்சபையின் மையமாக வளர்ந்து வந்த இடம் எது?
அந்தியோக்கியா
17. அந்தியோக்கியன்
திருவழிபாட்டு மரபை பயன்படுத்தும் திருச்சபைகள் யாவை?
அந்தியோக்கியாவின் சிறியன் ஆர்த்தடோக்ஸ் திருச்சபை. சிறியன் கத்தோலிக்கத்
திருச்சபை, மலங்கரை யாக்கோபாயத் திருச்சபை, மலங்கரை
ஆர்த்தடோக்ஸ் திருச்சபை, மலங்கரை மார்த்தோமா திருச்சபை, மலங்கரைக்
கத்தோலிக்கத் திருச்சபை
18. 1653
ல் 'புத்தன்கூர்' பிரிவினரின்
அந்தியோக்கிய யாக்கோபாய திருச்சபையுடன் தொடர்பின் விளைவாக இந்தியாவில் புகுந்த
திருவழிபாட்டு மரபு எது? அந்தியோக்கியன் திருவழிபாட்டு
மரபு
19. அந்தியோக்கியன்
திருவழிபாட்டு மரபுக்கு மறுபெயர் என்ன? மேற்கத்திய
சுறியானி திருவழிபாட்டு முறை
20. பழைய
சிரியாவின் தலைநகராக விளங்கிய இடம் எது?
அந்தியோக்கியா
21. யாக்கோபின்
மன்றாட்டு என்னும் எருசலேமிலுள்ள சிறப்புமிக்க திருப்பலி தக்ஸாவை
பயன்படுத்தியவர்கள் யாவர்? அந்தியோக்கியன் கிறிஸ்தவ
சமூகத்தினர்
22. அந்தியோக்கியன்
திருவழிபாட்டு முறை கிரேக்க மொழியில் உருவானது எப்போது?
மூன்றாம் நூற்றாண்டு முதல்
23. கிரேக்க
மொழியிலிருந்து பின்னர் எம்மொழியில் அந்தியோக்கியன் திருவழிபாட்டு முறை வளர்ந்து
வந்தது?
சுறியானி மொழியில்
24. எருசலேமில்
தோன்றிய அந்தியோக்கியன் திருவழிபாட்டு முறை யாருடைய பின்னணியில் தோன்றியவை?
யூதக் கிறிஸ்தவர்கள்
25. யூதர்களின்
சடங்கு முறைகளும் அடையாளங்களும் எந்த திருவழிபாட்டு முறையில் காணப்படுகின்றன?
அந்தியோக்கியன் திருவழிபாட்டு முறை
26. அந்தியோக்கியன்
திருவழிபாட்டு முறையில் பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை புதிய ஏற்பாட்டுடன்
தொடர்புபடுத்துகின்றதான செபங்களும், பாடல்களும் கொண்டது ஏன்?
பழைய ஏற்பாட்டு பலிகள் மற்றும் காணிக்கைகளின் முழுமை புதிய ஏற்பாட்டில்
இயேசுகிறிஸ்துவின் வழியாக நிறைவடைந்தது.
27. அந்தியோக்கியன்
திருவழிபாட்டு முறையில் பயன்படுத்தப்படும் அடையாளங்களும் நிகழ்ச்சிகளும் எவற்றை
அடிப்படையாகக் கொண்டதாகும்? விவிலியத்தை
28. அந்தியோக்கியன்
முறையில் திருப்பலியை புனித மறைபொருள் (Holy
Mystery) என்று கூறுவர்.
29. திருப்பலியை
புனித மறைபொருள் (Holy Mystery) என்பது ஏன்?
மனித அறிவால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாதது
30. திருப்பலியின்
மறைபொருள் தன்மையைக் காட்டும் செயல்கள் எவை? மென்குரல்
செபங்கள், தூயகம் திரையால் மறைக்கப்படுதல், திரையின்
உள்ளே நடைபெறும் திருச்சடங்குகள், திருப்பலியில் இறைவனின் திருஉடலையும், திருஇரத்தத்தையும்
விசுவாசிகளை நேரடியாகக் காண்பிக்காமல் எப்போதும் மூடிவைத்திருப்பது
31. சாதாரணமாக
வார்த்தைகளால் முழுவதுமாக எடுத்துக்கூற முடியாததான இறைசெயல்களை மக்கள்
புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைக்க பயன்படுத்தும் கருவிகளுக்கு பெயர் என்ன?
அடையாளங்கள்.
32. இயேசுவின்
உயிர்ப்புக்கு பின் கொல்கொதாவில் உள்ள சிலுவை 40 நாட்களுக்கு
சிவப்புத்துணியால் மூடுவதன் அர்த்தம் என்ன?
உயிர்த்தெழுந்த இயேசுவின் பிரசன்னம்
33. திருச்சபையின்
விசுவாச உண்மைகளை எம்மன்றாட்டுகளின் வாயிலாக விசுவாசிகளுக்கு
எடுத்துரைக்கப்படுகிறது? ப்றுமியோன் செதறா மன்றாட்டுகள்
34. அந்தியோக்கியன்
திருவழிபாட்டு முறையிலுள்ள பாடல்களை அதிகமாக எழுதியவர்கள் யாவர்?
மார் எப்ஃரேம், மார் யாக்கோபு, மார்
பாலாய்
35. சுறியானி
பாடல்கள் எத்தனை மெட்டுகளில் பாடும்படி இசை அமைக்கப்பட்டுள்ளது?
எட்டு
36. அந்தியோக்கியன்
ஆரானை முறையில் தூப அர்ப்பணத்தின் மூன்று அர்த்தங்கள் எவை?
தூப அர்ப்பணம் வழியாக ஆராதனை சமூகம் முழுவதும் தூய்மையாக்கப்படுகிறது.
விசுவாசிகளின் உள்ளிருந்து இறைவனின் திருமுன்னில் செல்கின்ற மன்றாட்டுக்களை தூபம்
குறிப்பிடுகிறது. ஒரு நபரையோ, பொருளையோ
ஏற்றுக்கொள்வதனுடையவும், மதிப்பளிப்பதனுடையவும்
அடையாளமாக தூப அர்ப்பணத்தை புரிந்து கொள்ளலாம்.
37. திருப்பலியில்
ஒருவருடத்தில் ஆராதனைமுறை ஆண்டுவட்டம் வழியாக திருச்சபை நினைவு கூர்வது என்ன?
இயேசுவின் மீட்பு நிகழ்வுகள்
38. அந்தியோக்கியன்
திருவழிபாட்டு முறையின் இறைப்புகழ்ச்சியின் தனித்தன்மை என்ன?
மூவொரு கடவுளின் புகழ்
39. அடிப்படை
செபமான கௌமா மன்றாட்டில் தூய இறையன்னை குறித்த மன்றாட்டு எது? "அருள்
நிறைந்த மரியே” என்னும் செபம்.
40. திருப்பலியின்
பகிரங்கத் திருச்சடங்கின் தொடக்கத்தில் மரியாவை நினைவு கூரும் சொற்கள் எவை?
உம்மை ஈன்றெடுத்த மரியாவும் ...........
41. அந்தியோக்கியன்
திருவழிபாட்டு முறையில் உள்ள எசாயா இறைவாக்கினரின் திருக்காட்சியின் அடிப்படையிலான
வியப்பும் பயமும் மதிப்பும் குறிப்பிடப்படும் விவிலியப் பகுதி எது?
எசாயா 6:1-13
42. “ஆண்டவரே
உம்மை ஆராதிப்போரின் வேண்டுதல்களை வெகுவாஞ்சையுடன் கேட்டு, உம்
திருச்சபை உமக்குச் செலுத்தும் பலிகளையும், காணிக்கைகளையும்
கனிவோடு ஏற்றுக்கொண்டருளும்.
43. நாங்கள்
உம்மையும் உமது ஒரே மகனையும், தூய ஆவியையும் இப்பொழுதும்
எப்பொழுதும் என்றென்றும் போற்றிப் புகழ்கின்றோம்.” (திருப்பலி
தக்ஸா)
44. “வேற்றிடங்களில்
வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோவில்முற்றங்களில் தங்கும் ஒரு நாளே
மேலானது” (திருப்பாடல்கள் 84:10).
10.5 திருப்பலியின் ஆயத்தத் திருச்சடங்கு
1.
கத்தோலிக்க
திருச்சபையில் எத்தனை தனித்திருச்சபைகள்
உள்ளன? 24
2.
மலங்கரை
திருச்சபை பயன்படுத்தி வருகிற ஆராதனை முறைக்குப் பெயர் என்ன? அந்தியோக்கியன் சுறியானி ஆராதனை முறை
3.
திருப்பலி
முறையை முதல் நூற்றாண்டிலேயே தொகுத்திருந்த எருசலேம் சபையின் முதல் தலைவரும் திருத்தூதருமானவர்
யார்? மார் யாக்கோபு
4.
மார்
யாக்கோபின் தக்ஸா எங்கே உருவெடுத்தது?
எருசலேமில்
5.
மார்
யாக்கோபின் ஆராதனை முறையைப் பிற்காலத்தில் எந்த திருச்சபை ஏற்றுக்கொண்டது? அந்தியோக்கியன்
6.
மார்
யாக்கோபின் நற்கருணை மன்றாட்டை அடிப்படையாகக் கொண்டு எத்தனை நற்கருணை
மன்றாட்டுக்கள் அந்தியோக்கியன் சுறியானி மரபில் தோன்றின? எழுபதிற்கும் மேற்பட்ட
7.
மலங்கரை
கத்தோலிக்க திருச்சபை பயன்படுத்துகின்ற ஆராதனை முறை எது? அந்தியோக்கியன் சுறியானி
ஆராதனை முறை
8.
திருப்பலி
எதனுடன் நெருங்கிய தொடர்பு உடையதாகும்?
கடவுளின் மீட்பு வரலாற்றுடன்.
9.
திருப்பலி
என்பது எதன் கொண்டாட்டம் ஆகும்? மீட்பு வரலாற்றின்
10.
கிறிஸ்துவின்
மீட்பு நிகழ்வுகளை நினைவு கூர்ந்து திருப்பலியின் துவக்கத்தில் பாடும் பாடல் எது?
“ஆண்டவரே உம் பிறப்பும் திருமுழுக்கும்
பாடுகளும்
சிலுவை
இறப்பும், உயிர்ப்பும் விண்ணேற்றமும் யாவையுமே
மறை
முன்னோர்களையும் நாங்கள்
வேள்வியில்
நினைக்கின்றோம் நாதா"
11.
மலங்கரை
ஆராதனை முறை திருப்பலி முறையை எத்தனை பகுதிகளாகப் பிரிக்கலாம்? நான்கு. அவை ஆயத்தத் திருச்சடங்கு,
இறைவார்த்தை வழிபாடு, பலி அர்ப்பணம், பலிவிருந்து
12.
மலங்கரைத்
திருப்பலி முறையின் ஆயத்தத் திருச்சடங்கு சுறியானியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 'தூயோபோ'
13.
ஆயத்தத்
திருச்சடங்கில் அடங்கிய பகுதிகள் யாவை?
திருப்பலியின் தொடக்கம் முதல் பகிரங்கத் திருச்சடங்கு தொடக்கம் வரை
14.
வேளை
மன்றாட்டுத் தொடங்குவதற்கு முன் பீடச்சிறுவர் எந்த மெழுகுவர்த்தியை எரியச் செய்கின்றனர்? பலிபீடத்தின் மையப்பகுதியில்
வைக்கப்பட்டிருக்கும் சிலுவையின் முன்னிருக்கும் மெழுகுவர்த்தியை
15.
பலிபீடத்தின்
மையப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சிலுவையின் முன்னிருக்கும் மெழுகுவர்த்தியை
எரியச் செய்கின்ற போது என்ன
நினைவுகூரப்படுகிறது?
“ஒளி தோன்றுக” (தொடக்கநூல் 1:3) எனக்கூறி கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தல்.
16.
தூயகம்
(மத்பஹா) எதற்கு அடையாளம்? விண்ணுலகம்
17.
இறைமக்கள்
நிற்கும் பகுதி (ஹைக்கலா) எதற்கு அடையாளம்?
மண்ணுலகம்
18.
ஆலயத்தில்
விண்ணுலகிற்கும், மண்ணுலகிற்கும் இடையேயான உறவைக் குறிக்கும்
அடையாளம் எது? திரை.
19.
திருச்சடங்குகளின்
போது குருவானவர் அணிவதற்காக திருச்சபையால் நிச்சயிக்கப்பட்ட ஆடை எது? கறுப்புநிற அங்கி
20. ஆயத்த திருச்சடங்கின் இரு முக்கிய
முறைகள் யாவை? மெல்கிசதேக்கின் முறை மற்றும் ஆரோனின்
முறை
21. மெல்கிசதேக்கின் முறை எனப்படுவது எது? அப்பத்தையும், இரசத்தையும் பலிபீடத்தின் மேல்
ஆயத்தம் செய்து வைக்கும் திருச்சடங்கு
22. ஆபிரகாமை அப்பமும் திராட்சை இரசமும்
கொண்டு வந்து வாழ்த்திய சாலேம் அரசரும், உன்னத கடவுளின் அர்ச்சகருமானவர் யார்? மெல்கிசதேக்கு,
23. மெல்கிசதேக்கின் முறைப்படி இயேசு
என்றென்றும் தலைமைக்குரு என எபிரேயர் திருமுகத்தில் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது? எபி. 6:20
24. எருசலேமின் பழைய பெயர் என்ன? சாலேம்
25. மெல்கிசதேக்கு' என்பதன் முதலாவது பொருள் என்ன? நீதியின் அரசர்'
26. மெல்கிசதேக்கு' என்பதன் இரண்டாவது பொருள் என்ன? 'அமைதியின் அரசர்'
27. மெல்கிசதேக்கின் முறைமை
குருத்துவத்தின் நிறைவை யாராக பொருள்படுத்துகிறது? இயேசுவே
28.
திருக்கிண்ணத்தில்
(காசா) திராட்சை இரசத்துடன் கலப்பது என்ன? தண்ணீர்
29.
திராட்சை
இரசத்துடன் தண்ணீரைக் கலப்பது எதைக் குறிக்கின்றது? இயேசுகிறிஸ்துவில் இறைத்தன்மையும், மனிதத்தன்மையும் சரிநிகராக கலந்திருப்பது.
30.
திருப்பலியில்
அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் குருவானவர்
தயார்செய்கின்ற போது அணிந்திருக்கும் ஆடையின் பெயர் என்ன? மேலங்கி
31.
பழைய
ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் குருக்கள்
திருவுடைகளை அணிந்து கொண்டது எதற்கடையாளம்?
கடவுளின் மாட்சிமைக்கும்,
குருத்துவப் பணி
நிறைவேற்றுவதற்காகவும் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய்மையின் அடையாளமாகவே
32.
பழைய
ஏற்பாட்டில் கிறிஸ்துவின் சாயலாக விளங்கிய அர்ச்சகரானவர் யார்? ஆரோன்
33.
ஆரோனின்
முறையில் குருவானவர் திருத்தட்டத்தையும், திருக்கிண்ணத்தையும்
சிலுவை வடிவில் பிடித்துக் கொண்டவாறு நினைவு கூர்பவை என்ன? கடவுளின் மீட்பு
நிகழ்வுகளை நினைவு கூரவும்,
ஆதாம், ஏவாள் முதல் இன்று வரையிலான முக்கிய நபர்களை
நினைவு கூரவும், இறந்து போனவர்கள் அனைவரையும் நினைவு
கூரவும், திருப்பலியை யாருக்காக
ஒப்புக்கொடுக்கிறாரோ அவர்களுக்காக மன்றாடவும் செய்கின்றார்.
34.
மென்துகிலால்
திருத்தட்டத்தையும், திருக்கிண்ணத்தையும் மூடுகின்ற போது
முருவானவரின் செபம் என்ன?
"மாண்பு மிக்கவரின்
சுடரொளியால் வான மண்டலம் நிறைந்துள்ளது. அவரது மகிமை படைப்பு அனைத்திலும் சூழ்ந்து
விளங்குகின்றது”
35.
மென்துகில்
எதைக் குறிக்கின்றது? விண்ணகத்தை மறைத்திருக்கும்
ஆகாயவிதானம்
36.
மென்துகிலின்
மீது தூபம் காட்டப்படுவது யாருடைய தூப அர்ப்பணத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது? ஆரோனின்
37.
ஆரோன்
தூயகத்தின் தூய இடத்தில் காட்டிய தூப அர்ப்பணம் எதற்கு முன்னடையாளமாகும்? இயேசு கிறிஸ்துவின் கல்வாரி பலியின்
38.
திரைக்கு
உள்ளே நடைபெறும் மறைவான திருச்சடங்கின் போது நினைவு கூரப்படுபவை என்ன? ஆதிப்பெற்றோர் முதல் ஆபிரகாம் வரை, ஆபிரகாம் முதல் ஆரோன் வரை, ஆரோன் முதல் இயேசு கிறிஸ்து வரையிலான மீட்பு
வரலாறு
39.
“ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா
நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைமாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.
40.
இதோ!
ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை
நிறைவேற்றுவேன்”
10.6 திருப்பலியில்
இறைவார்த்தை வழிபாடு
1.
திருப்பலியின்
இரண்டாம் பகுதி எது ? இறைவார்த்தை வழிபாடு
2.
இறைவார்த்தை
வழிபாடு எனப்படுவது யாது?
பகிரங்கத் திருச்சடங்கு முதல் விசுவாசப்பிரமாணம் வரையிலான பகுதிகள்
3.
திருப்பலியின்
துவக்கத்தில் திரை அகற்றப்படுவதன் மனிதர்களின் பாவங்களோடு தொடர்புடைய அர்த்தம்
என்ன? திரை
அகற்றப்பட்டு தூயகத்தின் வாசல் திறப்பதனால் மனித பாவம் மூலம் அடைக்கப்பட்ட
விண்ணகம் திறக்கப்பட்டு,
கட்புலனாகாத கடவுள்
ஆராதனையில் கூடியிருக்கும் மக்களுக்குக் காட்சியளிக்கிறார்
4.
திருப்பலியின்
துவக்கத்தில் திரை அகற்றப்படுவதன் ஆதிபாவத்தோடு தொடர்புடைய அர்த்தம் என்ன? ஆதிபாவம் காரணமாக இழந்து போன இறை -
மனித உறவையும், விண்ணுலகுக்கும், பூவுலகுக்கும் இடையேயான உறவையும் மீண்டும் புதுப்பிப்பதை
5.
திருப்பலியின்
துவக்கத்தில் திரை அகற்றப்படுவதன் புதிய ஏற்பாட்டுடன் தொடர்புடைய அர்த்தம் என்ன? பழைய ஏற்பாடு முடிந்து புதிய ஏற்பாடு
தொடங்குவது
6.
திருப்பலியின்
பகிரங்கத் திருச்சடங்கில் நினைவு கூரப்படுவது என்ன? இயேசுவின் பிறப்பு
7.
திருப்பலியின்
பகிரங்கத் திருச்சடங்கில் பலிபீடத்தைச் சுற்றி வலம் வருவதில் மெழுகுவர்த்தியுடன்
முன்னே செல்லும் முக்கியப் பீடச்சிறுவன் யாரைக் குறிக்கிறார்? திருமுழுக்கு யோவானை
8.
திருப்பலியின்
பகிரங்கத் திருச்சடங்கில் தூயகம் எதைக் குறிப்பிடுகிறது? பெத்லகேம் மாட்டுத் தொழுவம்
9.
திருப்பலியின்
பகிரங்கத் திருச்சடங்கில் பலிபீடம் எதைக் குறிப்பிடுகிறது? தூய மரியாவின் மடியாக
10.
திருப்பலியின்
பகிரங்கத் திருச்சடங்கில் அப்பமும் திராட்சை இரசமும் எதைக் குறிப்பிடுகிறது? குழந்தை இயேசுவை
11.
திருப்பலியின்
பகிரங்கத் திருச்சடங்கில் அப்பமும் திராட்சை இரசமும் மூடியிருக்கும் மென்துகில்
எதைக் குறிப்பிடுகிறது?
குழந்தை இயேசுவைச் சுற்றியிருக்கும் துணி
12.
திருப்பலியின்
பகிரங்கத் திருச்சடங்கின் இனிமையான பாடல்கள் எதைக் குறிப்பிடுகிறது? வானதூதர்கள் கீர்த்தனை பாடியதைக்
13.
திருப்பலியின்
பகிரங்கத் திருச்சடங்கில் குருவானவர் பலிபீடத்தில் தூபம் காட்டி முத்தம் செய்வது
எதைக் குறிப்பிடுகிறது?
இடையர்களும், ஞானிகளும் வந்து இயேசுவை
வணங்கியதையும், காணிக்கை சமர்ப்பித்ததையும்
14.
பகிரங்கத்
திருச்சடங்கு எந்தெந்த புனிதர்களின் பரிந்துரையை நாடி ஆரம்பமாகிறது? தூய மரியா மற்றும் திருமுழுக்கு
யோவான்
15.
"இறைவா நீர் தூயவராகின்றீர்...” என்று மும்முறை துதிக்கும் தூய கீர்த்தனை யாரை
மையப்படுத்தியது?
இயேசு கிறிஸ்துவை
16.
“தூயவர், தூயவர்,
தூயவர்" என்ற இறைவாக்கினர் எசாயாவின்
திருக்காட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட என்னும் வானதூதர்களின் புகழ்ப்பாடல்
காணப்படும் பகுதி யாது?
எசாயா 6 : 3
17.
“தூயவர், தூயவர்,
தூயவர்" என்ற தூய கீர்த்தனைக்கு பதிலுரை என்ன? "எங்களுக்காக சிலுவையில் அறையுண்டவரே எங்கள்
மேல் இரங்கியருளும்”
18.
“எங்களுக்காக சிலுவையில் அறையுண்டவரே
எங்கள் மேல் இரங்கியருளும்”
என்பதைப் பற்றிய மரபு
கூறும் சான்று என்ன?
இயேசு கிறிஸ்துவின் கல்லறையடக்கத்தின் போது விண்ணகத் தூதர்களின் பேரணி சொல்லிய
இந்தத் துதிப்பாடலைக் கேட்டு நின்ற அரிமத்தியா யோசேப்பும், நிக்கதேமுவும்,
உடன்நின்றவர்களும், “எங்களுக்காக சிலுவையில் அறையுண்டவரே எங்கள்
மேல் இரங்கியருளும்” என மன்றாடினர் என்பது மரபு.
19.
திருப்பலியின்
போது வாசிக்கப்படுகின்ற பழைய ஏற்பாட்டு வாசகங்கள் எத்தனை? நான்கு
20.
திருப்பலியின்
போது வாசிக்கப்படுகின்ற புதிய ஏற்பாட்டு வாசகங்கள் எத்தனை? மூன்று
21.
திருப்பலியின்
போது பழைய ஏற்பாட்டு பகுதிகள் எப்போது வாசிக்கப்படுகின்றன? காலை மன்றாட்டிற்குப் பின் ஆயத்தத்
திருச்சடங்கு வேளையில்
22.
திருப்பலியின்
போது பழைய ஏற்பாட்டு வாசகங்கள் சேர்க்கப்பட்டுள்ளதன் அடிப்படைக் கருத்து என்ன? பழைய ஏற்பாட்டில்
உரைக்கப்பட்டிருக்கும் இறைவாக்குகளின் இயல்பு புதிய எற்பாட்டின் ஒளியில் அதிகமாக
தெளிவடையும்
23.
பழைய
ஏற்பாட்டு வர்சகங்கள் வாசிப்பதன் நோக்கம் என்ன? மீட்பராகிய மெசியாவை வரவேற்பதற்காக
பழைய ஏற்பாட்டுக் காலத்து மக்களை ஆயத்தப்படுத்தியது போன்று இயேசு கிறிஸ்துவை
இதயத்தில் வரவேற்பதற்காக திருப்பலியின் போது இறைமக்களை சிறப்பாக ஆயத்தம் செய்வது
24.
பழைய
ஏற்பாட்டு வாசகங்கள் எப்பகுதியில் நின்று வாசிக்கப்படுகின்றன?
ஹைக்கலாவில்
25.
திருமுகங்கள்
வாசகங்கள் எப்பகுதியில் நின்று வாசிக்கப்படுகின்றன?
மத்பஹாவின் ஒருபடி கீழே நின்றவாறு
26.
நற்செய்தி
வாசகம் எப்பகுதியில் நின்று வாசிக்கப்படுகின்றன?
மத்பஹாவில்
27.
முதல்
வாசகத்திர்காக பயன்படுத்தப்படும் திருவிவிலியப் பகுதிகள் யாவை? திருத்தூதர் பணிகள், திருத்தூதர்களின் பொதுத்திருமுகங்கள், திருவெளிப்பாடு
28.
முதல்
வாசகத்திற்கு முன் பாடப்படும் பாடல் எது? “மண்ணுலகெல்லாம்..."
29.
“மண்ணுலகெல்லாம்..." என்னும் பாடலின் விவிலிய அடிப்படை என்ன? மாற்கு 16 : 15
30.
இரண்டாம்
வாசகத்திற்கு முன் பாடப்படும் பாடல் எது? “பவுலடியாரின்
சொல்லமுதம் ...."
31.
“பவுலடியாரின் சொல்லமுதம் ...." என்ற பாடலின் விவிலிய அடிப்படை என்ன?
கலாத்தியர் 1: 8
32.
நற்செய்தி
வாசகத்திற்கு முன் பாடப்பாடும் ‘ஹூலோலோ' என்பதன் மூலச் சொல் எது? ஹாலேலூயா
33.
திருப்பலியினிடையே
நற்செய்தி வாசிப்பது பற்றிய வத்திக்கான் சங்கத்தின் போதனை என்ன? இயேசு கிறிஸ்துவே பேசுகின்றார்
34.
மலங்கரை
ஆராதனை முறையின் படி இறைமக்களினுடையவும், கடவுளினுடையவும்
இடைநிலையாளராகவே செயல்படுபவர் யார்?
பலி அர்ப்பணம் செய்கின்ற குருவானவர்
35.
குரு
இறைமக்கள் நிற்கின்ற திசையில் கிழக்கு திசையைப் பார்த்து நிற்கும் போது யாராக
அங்கு நிற்கிறார்?
மக்களின் பிரதிநிதியாக
36.
திருப்பலியிடையே
குரு மக்களுக்கு நேராக எந்த இரண்டு தேவைகளுக்காக திரும்புகிறார் வழக்கம்? கடவுளுக்கு மக்களோடு ஏதேனும்
சொல்வதற்கும், மக்களுக்கு ஏதேனும் கொடுப்பதற்கும்
37.
நற்செய்தி
வாசகம், மறையுரை, சமாதானம்,
ஆசீர், நற்கருணை ஆகியவற்றிற்கும் குருவானவர்
மக்களுக்கு நேராக திரும்பும் போது யாராக செயல்படுகிறார்? கடவுளின் பிரதிநிதியாக
38.
பாவபரிகாரம்
மன்றாட்டுகளின் வரிசை முறை என்ன?
“ப்றுமியோன் (முன்னுரை)
ஹுசோயோ, செதறா, பாவமன்னிப்புக்கான மன்றாட்டு
39.
செதறா
மன்றாட்டின் இறுதியில் உள்ள பொதுவான பாவமன்னிப்பு மன்றாட்டு எது? “இறைவனிடமிருந்து கடன்களுக்குப் பரிகாரமும், பாவங்களுக்கு மன்னிப்பும் ஈருலகங்களிலும்
என்றென்றும் நாம் பெற்றுக் கொள்வோமாக”.
40.
தூபகலசம்
ஆசீர்வதித்தல் வாயிலாக எதனை அறிக்கையிடுகிறோம்? மூவொரிறைவனின் புனிதத்தையும், அவரோடுள்ள நமது நம்பிக்கையையும்.
41.
தூபகலசம்
ஆசீர்வதித்தல் வாயிலாக எதனை நினைவு கூருகிறோம்? இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கு
42.
“என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்”
43.
தூபக்கலசம்
எதற்கடையாளம்?
திருச்சபையினுடையவும், உலகினுடையவும்
44.
தூபகலசம்
வாழ்த்துகின்ற திருச்சடங்கின் பொருள் என்ன? திருச்சபையாகிய இறைமக்கள் சமூகத்தை வாழ்த்துகின்ற திருச்சடங்கு
45.
திருப்பலியில்
பாவமன்னிப்பு பெற்றுக் கொண்டதற்கு நன்றியறிதலாக மூவொரு கடவுளை போற்றிப் புகழ்ந்து
கொண்டும், ஆராதனை செலுத்திக் கொண்டும்
குருவானவர் நடத்துகின்ற திருச்சடங்கு எது? தூபகலச வாழ்த்துதல்
46.
தூபகலசத்தின்
நெருப்பு யாரைக் குறிப்பிடுகிறது?
இறை அன்னையில் வாழ்ந்திருந்த நெருப்பாகிய இறை மகன் இயேசு
47.
தூபகலசத்தின்
சங்கிலியிலுள்ள 72 கண்ணிகள் யாரைக் குறிப்பிடுகின்றன? 72 சீடர்களை
48.
தூபகலசத்தின்
சங்கிலியிலுள்ள 12 மணிகள் யாரைக் குறிப்பிடுகின்றன? 12 திருத்தூதர்களை
49.
தூபகலசம்
வாழ்த்தும் போது முதல் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு சொல்வது என்ன? "தூயவரான தந்தை தூயவரே"
50.
தூபகலசம்
வாழ்த்தும் போது இரண்டாவது மற்றும் மூன்றாவது சங்கிலிகளை பிடித்துக்கொண்டு சொல்வது
என்ன? “தூயவராகிய மகன் தூயவரே”
51.
தூபகலசம்
வாழ்த்தும் போது நான்காவது சங்கிலியைப் பிடித்துக்கொண்டு சொல்வது என்ன? "தூயவராகிய ஆவியார் தூயவரே"
52.
தூபகலசத்தின்
முதல் சங்கிலி யாரைக் குறிப்பிடுகிறது? தந்தைக் கடவுள்
53.
தூபகலசத்தின்
இரண்டாம், மூன்றாம் சங்கிலிகள் எதனைக்
குறிப்பிடுகின்றன?
இயேசுவின் இறைத்தன்மை மனிதத் தன்மை
54.
தூபகலசத்தின்
4ஆம் சங்கிலி யாரைக் குறிப்பிடுகிறது? தூய ஆவி
55.
தூப
கலசம் வாழ்த்திய பின்னர் பீடச்சிறுவன் ஆலயம் முழுவதிலும் தூபம் காட்டுவது எதைக்
குறிக்கின்றது? கடவுளுக்கு
அனைவரோடும் உள்ள ஆதரவையும்,
கடவுளின் கருணையையும்.
56.
தூப
கலசம் வாழ்த்திய பின்னர் பீடச்சிறுவன் ஆலயம் முழுவதிலும் தூபம் காட்டுவதன்
அர்த்தம் என்ன? இறைசமூகம்
முழுவதும் தூபத்தால் தூய்மைப்படுத்தப்பட்டு திருப்பலியின் முக்கிய பகுதிக்கு
அழைத்துச் செல்லப்படுகிறது.
57.
தூப
கலசம் வாழ்த்திய பின்னர் பீடச்சிறுவன் ஆலயம் முழுவதிலும் தூபம் காட்டுவது ஆதித்திருச்சபையில்
உள்ள நிகழ்வுகளின் தொடர்பு என்ன? திருமுழுக்குப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு
வெளியே செல்வதற்கான அடையாளமாகவும்
58.
ஆதித்திருச்சபையில்
திருமுழுக்குப் பெற்றுக் கொள்ளாதவர்கள் திருப்பலியின் எப்பகுதி வரையிலும்
அனுமதிக்கப்பட்டிருந்தனர்?
இறைவார்த்தை வழிபாடு வரை
59.
நம்பிக்கை
அறிக்கையில் அடங்கியிருப்பவை என்ன?
கிறிஸ்தவ விசுவாசத்தின் மறைஉண்மைகள்
60.
திருப்பலியில்
எந்த நம்பிக்கை அறிக்கை பயன்படுத்தப்படுகிறது? நிசேயா நம்பிக்கை அறிக்கை
61.
ஆன்மீக
ஆயத்தத்தைக் குறிக்கும் வகையில் நம்பிக்கை அறிக்கையின் போது குருவானவர் செய்யும்
செயல் என்ன? கைகளைக்
கழுவுதல்
62.
'ஸ்தௌமென்காலோஸ்' என்பதன் பொருள் என்ன? நாம் அனைவரும் கவனமாக நிற்போமாக
63.
குறியேலாயிசோன்' என்பதன் பொருள் என்ன? “ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்"
64.
“ஆனால் அவர் மீது நம்பிக்கை
கொண்டிருந்தாலன்றி அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர் மீது எவ்வாறு
நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள்
எவ்வாறு கேள்வியுறுவார்கள்?
65.
அனுப்பப்படாமல்
அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? இதைப்
பற்றியே, நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை
அழகாய் இருக்கின்றன என்று மறைநூலில் எழுதியுள்ளது" (உரோமையர் 10; 14-16)
10.7 திருப்பலி
- பலி அர்ப்பணம்
1.
'அனாஃபொறா' எனப்படும் பகுதி எது?
திருப்பலியில் சமாதான மன்றாட்டு முதல் விடைபெறுதல் வரையிலான பகுதி
2.
'அனாஃபொறா' என்னும் கிரேக்கச் சொல்லுக்கு என்ன பொருள்? 'பலி அர்ப்பணம்'
3.
குர்பானோ
என்னும் சுறியானி சொல்லுக்கும் என்ன பொருள்? 'பலி
அர்ப்பணம்'
4.
அனாஃபொறா
பகுதியில் மெல்லிய மற்றும் உரத்த குரலில் உள்ள மன்றாட்டுகள் எத்தனை? 66
5.
அனாஃபொறா
பகுதியில் மாற்றத்திற்கு உட்படாத மன்றாட்டுகள்
எத்தனை?
33
6.
அனாஃபொறா
பகுதியில் மாற்றத்திற்கு உட்படாத மன்றாட்டுகள்
எதனை குறிக்கின்றன? இயேசுகிறிஸ்துவின் இறைத்தன்மை
7.
அனாஃபொறா
பகுதியில் மாற்றத்திற்கு உட்படும் மன்றாட்டுகள்
எத்தனை?
33
8.
அனாஃபொறா
பகுதியில் மாற்றத்திற்கு உட்படும் மன்றாட்டுகள்
எதனை குறிக்கின்றன?
இயேசுகிறிஸ்துவின் மனிதத்தன்மை
9.
33
மன்றாட்டுக்கள் இயேசுவின் வாழ்வோடு எவ்வாறு தொடர்புடையவை? இயேசுகிறிஸ்துவின் 33 ஆண்டு
கால பூவுலக வாழ்வு
10.
அனாஃபொறாவில்
சமாதான மன்றாட்டு முதல் பரிந்துரை மன்றாட்டு வரை உள்ள பகுதிக்கு என்ன பெயர்? பலி அர்ப்பணம்
11.
பலிபீடத்தின்
முன் பகுதியிலிருக்கும் படிக்கட்டுக்கு என்ன? பெயர் தர்கா
12.
சமாதான
மன்றாட்டில் குருவானவர் தர்கா படியேறுதல் எதனை நினைவு படுத்துகிறது? இயேசு நற்செய்தியாளர் மாற்குவின் இல்லமான
சீயோன் மாளிகையில் பாஸ்கா கொண்டாடச் சென்றதை.
13.
தர்க்கா
படியேறுதல் எதை உணர்த்துகிறது? அனைத்திலிருந்தும் தாம்
உயர்த்தப்பட்டிருப்பதாகவும்,
விண்ணகத்தைப் பற்றி
மட்டுமே தமது சிந்தனை என்பதையும்
14.
நமது
ஆண்டவரின் அரியணையாகிய பலிபீடத்திலிருந்து குருவானவர் யார் வாயிலாக சமாதானம்
இறைமக்களுக்கு வழங்குகிறார்? பீடச்சிறுவர்
15.
சமாதானம்
அளித்தலின் நோக்கம் என்ன? உள் அமைதியையும் ஒப்புரவையும்
ஒவ்வொரு மனிதருக்கும் வழங்குகிறது.
16.
சமாதான
மன்றாட்டுக்குப்பின் தலைவணங்கி நிற்கும் இறைமக்களுக்கு கடவுளின் அருளாசீர்
பெற்றுத்தரும் மன்றாட்டை எவ்வாறு அழைப்பர்?
இறைமக்கள் மேலுள்ள மன்றாட்டு அல்லது கைவைத்துள்ள மன்றாட்டு
17.
தலை
வணங்கி நிற்பதன் அடையாளம் என்ன? தெய்வீக ஆராதனையினுடையவும், முழுமையான ஒப்புக்கொடுத்தலினுடையவும்
18.
தூய
மறைபொருட்கள் உள்ளடங்கியிருக்கும் திருக்கிண்ணத்தையும் திருத்தட்டையம்
மூடிவைத்திருக்கும் பட்டுத் துணியின் பெயர் என்ன? மென்துகில்.
19.
மென்துகில்
என்பதன் அர்த்தங்கள் யாவை? போர்வை. மூடி
20.
யல்தா
காலத்தின் மென்துகில் எந்த அடையாளத்தைக் கொண்டது? விண்மீன்
21.
தனகா
மற்றும் பெந்தக்கோஸ்து காலத்தின் மென்துகில் எந்த அடையாளத்தைக் கொண்டது? புறா
22.
திருச்சிலுவைக்
காலத்தின் மென்துகில் எந்த அடையாளத்தைக் கொண்டது? திருச்சிலுவை
23.
மென்துகிலை
உயர்த்திக் கொண்டாடுவது எதைக் குறிப்பிடுகிறது? விண்ணகம் திறக்கப்படுவதையும், விண்ணக மறைஉண்மைகள் திருப்பலியின் வாயிலாக மண்ணுலகில்
வெளிப்படுவதையும்.
24.
மென்துகில்
மேலும், கீழுமாக அசைக்கப்படுவதன் பொருள் என்ன? நாம் விண்ணக எருசலேமுக்கு ஏறிச்செல்லவும், விண்ணவர் நம்மிடையே இறங்கி வரவும்
செய்கின்றனர்.
25.
மென்துகில்
யாக்கோபுடன் தொடர்புபடுத்தி எதனுடன்
ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது? பெத்தேலில் கண்ட ஏணியுடன்
26.
மென்துகில்
இஸ்ரயேல் மக்களுக்குத் தண்ணீரைக் கொடுத்த பாறையுடன் எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது? பாறையிலிருந்து அளவில்லாமல் தண்ணர்
பெருக்கெடுத்து ஒடியது போன்று கிறிஸ்துவாகிய ஆன்மீகப் பாறையிலிருந்து இறை அருளாகிய
வாழ்வின் நீர் திருச்சபைக்குள் அளவில்லாமல் ஒழுகிவருகின்றது.
27.
மென்துகிலுக்கும்
இயேசுவின் கல்லறைக்கும் உள்ள தொடர்பு என்ன?
கல்லறையை மூடி வைக்கப்பட்டிருந்த பாறை
28.
மென்துகிலின்
அசைவு இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வுடன் எவ்வாறு ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளது?
இயேசு உயிர்த்தபோது ஏற்பட்ட நிலநடுக்கம்
29.
மென்துகில்
அகற்றும்போது வழிபடுகின்ற சமூகம் தரிசிப்பது உயிர்த்தெழுந்த
இயேசுவையேயாகும்.
30.
திருப்லியில் குருவானவர் இறைமக்களுக்கு வழங்கும் முதல்
அப்போஸ்தலிக்க ஆசீர் எது?
"தந்தையாகிய
கடவுளின் அன்பும் + ஒரேமகனின் அருளும் + தூய ஆவியின் நட்புறவும் ஆட்கொள்ளுதலும் +
என் சகோதரர்களே உங்களனைவரோடும் இருப்பதாக.''
31.
திருப்லியில் குருவானவர் இறைமக்களுக்கு வழங்கும் முதல்
அப்போஸ்தலிக்க ஆசீரின் விவிலிய அடிப்படை என்ன? 2 கொரிந்தியர் 13:14.
32.
மூவொரு
கடவுளின் பெயரிலுள்ள அப்போஸ்தலிக்க ஆசீர்வாதம் எதைச் சுட்டிக்காட்டுகிறது? பலி அர்ப்பணம் மூவொரு கடவுளை மையமாகக்
கொண்டது
33.
“இவ்வேளையில் நமது அறிவும், எண்ணங்களும், இதயங்களும்,
தந்தையாகிய கடவளின்
வலப்பக்கத்தில் மெசியா அரசர் வீற்றிருக்கும் உயருன்னதங்களில் இருப்பதாக”
34.
"பயபக்தியுடன் ஆண்டவரை நாம்
போற்றிப்புகழ்வோமாக"
35.
பலி
அர்ப்பணத்தின் மற்றொரு அடிப்படைப் பகுதி எது? புகழ்ச்சி அர்ப்பணம்
36.
கடவுளுக்கு
எப்படிப்பட்ட அர்ப்பணம் செய்வது தகுதியும், நீதியும்
ஆனதே? புகழ்ச்சி அர்ப்பணம்
37.
திருப்பலியில்
வானதூதர்களின் புகழ்ச்சிப்பாடலின் போது யார் புகழ்ப்பாக்கள் பாடுகின்றனர்? மண்ணுலகத் திருச்சபையும், விண்ணகத்தின் வெற்றித்திருச்சபையும்
38.
"தமது மகிமையால் விண்ணும் மண்ணும்
............................. என்னும் புகழ்ப்பாவின் விவிலிய அடிப்படைகள் யாவை? எசா. 6:3, தி.வெ.
4:8, மத்தேயு 21:9, லூக். 19:38,
திருப்பாடல் 118:26
39.
எசாயா
இறைவாக்கினருக்கு விண்ணக அரியணையில் காட்சி அளித்தவர் யார்? என சுறியானி திருச்சபைத் தந்தையர்கள் குறிப்பிடுகின்றனர் மகனாகிய
கடவுள்
40.
திருப்பலியில்
வானதூதர்களின் புகழ்ச்சிப்பாடலின் போது தூயவர் என மும்முறை மறைமுகமாக
போற்றப்படுபவர் யார்? தூய மூவோரிறைவன்
41.
திருப்பலியில்
வானதூதர்களின் புகழ்ச்சிப்பாடலின் போது குருவானவர் அப்பத்தின் மேலும் திராட்சை
இரசத்தின் மேலும் கைகளை அசைப்பது எதைக் குறிக்கின்றது? தூய ஆவியார் புறாவின் வடிவில் தூய
மறைபொருள்களின் மேல் வந்து குடிகொள்வது
42.
திருப்பலியில்
வானதூதர்களின் புகழ்ச்சிப்பாடலின் போது குருவானவரின் மென்குரல் மன்றாட்டின்
உள்ளடக்கம் என்ன? தூய மூவோரிறைவனின் ஒவ்வொரு நபரையும்
தனித்தனியாக போற்றிப் புகழ்ந்து,
மீட்புச் செயல்களை
நினைவுகூர்தல்
43.
நற்கருணை
நிறுவு கூற்றுகளின் வழியாக வரலாற்றில் கிறிஸ்துவின் மீட்புச் செயல்களை
நினைவுகூர்ந்து அவரது பிரதிநிதியாக மீள்நிகழ்வாக்கம் செய்பவர் யார்? குருவானவர்
44.
நற்கருணை
நிறுவுக் கூற்றுகளின் போது "அப்பம் எடுத்து" என்பது எதைக் குறிக்கின்றது? கன்னியிடமிருந்து இயேசு உடலெடுத்ததை
45.
நற்கருணை
நிறுவுக் கூற்றுகளின் போது“தந்தையாகிய கடவுளே உம்மைக்காட்டி
போற்றுதல் செய்தார்” என்பது எதைக் குறிக்கின்றது? தந்தைக் கடவுளின் அனுமதியை வேண்டுவது
46.
நற்கருணை
நிறுவுக் கூற்றுகளின் போது "ஆசீர்வதித்து தூய்மைப்படுத்தி" என்பது எதைக் குறிக்கின்றது? தமது உடலை உலக மக்களுக்காக
புனிதப்படுத்தினார் என்பதையும்,
47.
நற்கருணை
நிறுவுக் கூற்றுகளின் போது 'பிட்டு' என்பது எதைக் குறிக்கின்றது? தமது பாடுகளையும்,
சிலுவை மரணத்தையும், தமது உடல் உலகிற்காக நொறுக்கப்பட்டது
48.
நற்கருணை
நிறுவுக் கூற்றுகளின் போது“திருத்தூதர்களுக்கு வழங்கி" என்பது எதைக் குறிக்கின்றது? இறைமக்களுக்கு கையளித்ததையும்
நினைவுப்படுத்துகிறது.
49.
நற்கருணை
நிறுவுக் கூற்றுகளின் போது“எடுத்து, ஆசீர்வதித்து,
பிட்டு, கொடுத்தார்” என்னும் சொல்வழக்குகள் எதைக் தெளிவுப்படுத்துகிறது? ஒரு திருச்சடங்கு
50.
நற்கருணை
நிறுவுக் கூற்றுகளின் போது 'உங்களுக்காக' என்பது எதைக் குறிக்கின்றது? இயேசு தமது இரத்தத்தை மனுக்குலம் முழுமைக்காகவும் சிந்தினார்
51.
நற்கருணை
நிறுவுக் கூற்றுகளின் போது “பலருக்காகவும்” என்பது எதைக் குறிக்கின்றது? உலக முடிவு வரையிலான எண்ணற்ற மக்கள் இதிலிருந்து பயன் அடைவார்கள்
52.
நற்கருணை
நிறுவுக் கூற்றுகளின் போது 'சிந்தப்பட்டு' என்பது எதைக் குறிக்கின்றது? இயேசுவின் கல்வாரி இரத்தம் சிந்துதலையும் சிலுவை மரணத்தையும்
53.
இறுதி
இரவுணவுக்குப்பின் இயேசு சீடர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது என்ன? “இதை
என் நினைவாகச் செய்யுங்கள்”.
54.
இதை
என் நினைவாகச் செய்யுங்கள். என்னும் அறைகூவலின் பொருள் என்ன? இயேசுவின் மீட்புச்
செயல்களின் முழுமையான நினைவு கொண்டாட்டம்
55.
Anamnesis என்றால் என்ன? இயேசுவின் மீட்பு நிகழ்வுகளை திருப்பலியில் நினைவுகூரல்
56.
'இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்ற
மன்றாட்டைச் சொல்லும்போது குருவானவர் செய்வது என்ன? இடப்பக்கத்திலிருந்து கரண்டியை எடுத்து தட்டத்திலும், கிண்ணத்திலும், தபலீத்தாவிலும்,
நெற்றியிலும் தொட்டு, பின்னர் வலப்பக்கமாக உயர்த்திக் காட்டுகிறார்
57.
திருவுடலும், திரு இரத்தமும், தனித்தனியாக வைத்திருக்கும் தட்டத்திலும், கிண்ணத்திலும் கரண்டியினால் தொடுவதன் பொருள் என்ன? இயேசுவின் மரணம்
58.
தபலீத்தாவில்
கரண்டியினால் தொடுவதன் பொருள் என்ன? இயேசுவின் கல்லறை அடக்கம்
59.
கரண்டியினால்
நெற்றியில் தொடுவதன் பொருள் என்ன? இயேசுவின் உயிர்த்தெழுதல்
60.
திருப்பலியில்
கரண்டியை இடப்புறமிருந்து வலப்புறத்திற்கு உயர்த்தி திடீரென தாழ்த்துவதன் பொருள்
என்ன? இயேசுவின் இரண்டாம் வருகை
61.
திருப்பலியில்
கரண்டி எதைக் குறிக்கின்றது? இயேசு
62.
திருப்பலியில்
கரண்டி வைக்கப்பட்டிருக்கும் மெத்தை அல்லது திண்டு (cushion) எதைக் குறிக்கின்றது? இயேசுவின் அரியணை
63.
குருவானவர்
கரண்டியும் மெத்தையும் வலப்பக்கத்தில் வைப்பது எதைக் குறிக்கின்றது? இறுதித் தீர்ப்பின்போது கிறிஸ்து தந்தைக்
கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருப்பது
64.
கிழக்குத்
திருச்சபைகளில் அருளடையாளங்கள் யாருடைய வருகையால் நிறைவடைகின்றது? தூய ஆவியார் வருகை
65.
தூய
மறைபொருள்களின்மேல் குருவானவர் கைகளைக் கொண்டாட்டத்துடன் அசைப்பது எதைக்
குறிக்கின்றது? தூய ஆவியார் மகிமையுடன் இறங்கி வரல்
66.
தூய
மறைபொருள்களின்மேல் குருவானவர் கைகளைக் கொண்டாட்டத்துடன் அசைப்பது தூய ஆவியின்
எந்த அடையாளம் போன்றது? புறா பறந்து வருவது
67.
திருப்பலியில்
தூய ஆவியை அழைக்கும் மன்றாட்டு என்றால் என்ன? அப்பமும்,
திராட்சை இரசமும்
இயேசுவின் திரு உடலும், திரு இரத்தமுமாக நிறைவு பெறுவதற்கு
வேண்டி தூய ஆவியோடு மன்றாட்டு
68.
திருப்பலியில்
தூய ஆவியை அழைக்கும் மன்றாட்டின் போது சிறப்பாக நடைபெறுவது என்ன? தூய ஆவியின் குடிகொள்ளுதலால் அப்பமும், திராட்சை இரசமும் இயேசுவின் திருஉடலும் இரு
இரத்தமுமாக மாற்றமடைகின்றன
69.
பலிப்பொருட்களின்
மீதுள்ள தூய ஆவியின் குடிகொள்ளுதல்,
கடவுள் பலியை ஏற்றுக்
கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளமாக குறிப்பிடும் விவிலிய குறிப்புகள் யாவை? 2 குறிப்பேடு 7:1, 1 அரசர்கள் 18:38
70.
பரிந்துரை
மன்றாட்டினை சுறியானி மொழியில் எவ்வாறு அழைப்பர்? 'துப்தேன்'.
71.
துப்தேன்
என்றால் அதன் பொருள் என்ன?
“அப்படியானால் மீண்டும்”
72.
திருப்பலியில்
தூய ஆவியின் வருகைக்கான மன்றாட்டுகளின் தொடர்ச்சியானதாக உள்ளவை என்ன? பரிந்துரை மன்றாட்டுக்கள்
73.
தூய
ஆவியார் பலிப் பொருட்களில் மட்டுமன்றி இறைமக்களின் தேவைகளிலும் இறங்கி வந்து
செயல்பட வேண்டும் என மன்றாடும் பரிந்துரை மன்றாட்டுக்களை எந்த அர்த்த்தில்
புரிந்து கொள்ள வேண்டும்?
மீண்டும்
74.
பரிந்துரை
மன்றாட்டில் மொத்தம் எத்தனை மன்றாட்டுக்கள் உள்ளன? 18
75.
பரிந்துரை
மன்றாட்டில் பீடச் சிறுவர்களின் உரத்த குரல் மன்றாட்டுக்கள் எத்தனை? 6
76.
பரிந்துரை
மன்றாட்டில் குருவானவர் மென் குரலிலும், உரத்த
குரலிலும் சொல்லுகின்ற மன்றாட்டுக்கள் எத்தனை? 12
77.
பரிந்துரை
மன்றாட்டுகளில் முதல் மூன்று மன்றாட்டுக்கள் யாருக்குரியவை? வாழ்வோருக்கு
78.
பரிந்துரை
மன்றாட்டுகளில் கடைசி மூன்று மன்றாட்டுக்கள் யாருக்குரியவை? இறந்தவர்களுக்கு
79.
திருப்பலியில்
பலி அர்ப்பணம் பகுதி எதனுடன் நிறைவடைகிறது?
இயேசுகிறிஸ்துவின் அருளாசீருடன்
80.
"கடவுளே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை; உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்" (திருப்பாடல்கள் 56 : 12).
10.8
திருப்பலி – பலிவிருந்து
1.
திருப்பலியில்
பலிவிருந்து எனப்படும் பகுதி எது? அப்பம் பிட்குதல் திருச்சடங்கு முதல்
இறுதி ஆசீர் வழங்குவது வரையிலான பகுதி
2.
நற்கருணை
மன்றாட்டின் (அனாஃபொறா) இரண்டாம் பகுதி எது?
பலிவிருந்து
3.
திரு
உடலையும், திரு இரத்தத்தையும் ஒன்றோடொன்று
கலந்து வைக்கின்ற மிக முக்கியமான திருச்சடங்கிற்குப் பெயர் என்ன? அப்பம் பிட்குதல் திருச்சடங்கு
4.
அப்பம்
பிட்குதல் திருச்சடங்கின் போது பாடப்படும் பாடல்கள் யாவை? “அன்புடையோரே உம் வாசல்", "கண்டார்
எசாயா செரபுகளை” “நீதிபரன் தந்தாய் பாரும்”
5.
அப்பம்
பிட்குதல் திருச்சடங்கின் போது குருவானவர் திருஉடலைக் கையிலெடுத்து, உயர்த்தி, இரண்டாக முறிப்பதன் பொருள் என்ன? வார்த்தையாகிய கடவுள் உடலில் பாடுகளை அனுபவித்து, உடல்
அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டார்
6.
அப்பம்
பிட்குதல் திருச்சடங்கைக் குறிக்கும் விவிலியப்பகுதி எது? இதோ கடவுளின்
ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின்
பாவத்தைப் போக்குபவர்!
(யோவான் 1:29)
7.
உடைக்கப்பட்ட
அப்பத்தின் ஒரு பகுதி திரு இரத்தத்தில் தோய்த்து அப்பத்தின் உடைக்கப்பட்ட
பகுதியில் நனைப்பது எதைக் குறிப்பிடுகிறது?
நொறுக்கப்பட்ட இயேசுவின் உடல் இரத்தத்தால் நனைந்தது எனவும், அவர் இரத்தம் சிந்தி இறந்தார் எனவும்
8.
மூன்று
முறை திருஇரத்தத்தைத் திருஉடலில் தோய்த்து ஒன்று சேர்ப்பது எதைக் குறிக்கின்றது? இயேசுவின் உயிர்த்தெழுதல்
9.
உடலின்
உயிர் குருதியில் இணைந்துள்ளது என்ற விவிலியப்பகுதி எங்குள்ளது லேவியர் 17:11
10.
உயிர்த்தெழுந்த
இயேசுவின் உடல் எத்தகையது? மாட்சிமை பெற்ற உடலாகும்.
11.
அப்பம்
பிட்குதல் திருச்சடங்கில் நினைவுகூரும் மீட்பின் மறைஉண்மைகள் யாவை? இயேசுவின் பாடுகள், சிலுவைமரணம்,
உயிர்த்தெழுதல்
12.
அப்பம்
பிட்குதல் திருச்சடங்கில் மறைபொருள் தன்மையைக் குறிப்பிடுவதற்காக செய்யப்படுவது
என்ன? தூயகம் திரையால் மறைக்கப்படுகிறது.
13.
கிறிஸ்துவின்
சிலுவை மரண நேரத்தில் ஆறாம் மணி முதல் ஒன்பதாம் மணி வரை பூமியில் எங்குமே இருள்
பரவியதைக் குறிப்பிட திருப்பலியில் அப்பம் பிட்குதல் திருச்சடங்கின் போது
செய்யப்படுவது என்ன? தூயகம் திரையால் மறைக்கப்படுவது
14.
அப்பம்
பிட்குதல் திருச்சடங்கின் இறுதியில் திரை அகற்றப்படுவது எதைக் குறிக்கின்றது? சிலுவை மரண வேளையில் எருசலேம் திருக்கோவிலின்
திரை மேல்மட்டத்திலிருந்து அடிவரை நடுவே கிழிந்தது
15.
அப்பம்
பிட்குதல் திருச்சடங்கின் இறுதியில் திரை அகற்றுவது எதை சுட்டிக்காட்டுகிறது? பாவத்தால் இழந்துபோன இன்பவனத்தையும், விண்ணகத் தந்தையின் உறைவிடத்தையும், இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்ப்பு
வழியாக மனித இனம் மீண்டும் பெற்றுக்கொள்வதை
16.
அப்பம்
பிட்குதல் திருச்சடங்கின் இறுதியில் திரை அகற்றுதலுக்கும் உயிர்ப்புக்கும் உள்ள
தொடர்பு என்ன? இயேசுவின் சிலுவை மரணமும், உயிர்ப்பும் நினைவுகூரப்பட்டு திரை அகற்றுவது
விண்ணகம் திறப்பதையும், உயிர்த்தெழுந்த இயேசு தமது
திருத்தூதர்களுக்குக் காட்சி அளித்ததையும்
17.
ஆண்டவரின்
பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றின் வழியாக இறைமக்களாய் மாறியிருக்கும் நாம்
ஆன்ம திடனுடன் திருப்பலியில் எச்செபத்தை சொல்லுகிறோம்? “பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே”
18.
பரலோகத்திலிருக்கிற
எங்கள் பிதாவே” என்ற செபத்தை எருசலேமின் புனித
கூறிலோஸ் எவ்வாறு வருணிக்கிறார்?
”கிறிஸ்தவத்
திருச்சபையின் குடும்ப செபம்”
19.
திருமுழுக்கு
பெற்ற கிறிஸ்தவர்களின் மாபெரும் உரிமையான செபம் எது? “பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே”
20.
எதன்
மூலம் நாம் கடவுளை தந்தையே என அழைக்க உரிமை பெறுகிறோம்? திருமுழுக்கு
21.
தலை
வணங்கி நிற்பதன் பொருள் என்ன?
கீழ்ப்படிதல்
22.
தூய
நற்கருணையைப் பெற்றுக்கொள்ள நாம் தகுதியுடையவரல்லர் என்பதை எச்செயலால்
காட்டுகிறோம்? தலைகுனிந்து நிற்கிறோம்
23.
தூய
நற்கருணையை சோதித்தறிந்த பின்னரே உண்ண வேண்டும் என்ற விவிலிய அடிப்படை எது? 1கொரிந்தியர் 11:28
24.
அப்பம்
பிட்குதல் திருச்சடங்கிற்குப் பின்னர் குருவானவரின் பல சமாதான ஆசீர்வாதங்கள் எதை
நினைவூட்டுகிறது? இயேசு உயிர்த்தெழுந்த பின் பலமுறை
சீடர்களுக்குக் காட்சியளித்து சமாதான ஆசீர் வழங்கியது.
25.
திருப்பலியில்
குருவானவரின் மூன்றாவது பேராசீர் எதைக் குறிப்பிடுகின்றது? விண்ணேற்றம் அடைந்தபோத இயேசு சீடர்களை ஒலிவமலைக்கு அழைத்துச்
சென்று தமது திருக்கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தது.
26.
"தூயவை தூய்மையும், புனிதமும் உடையவர்களுக்கு வழங்கப்படுகின்றது” எனக் கூறிக்கொண்டு தூய மறைபொருள்களை
விண்ணகத்திற்கு நேராக உயர்த்திக் கொண்டாடுகின்ற திருச்சடங்கு எதைக் குறிக்கின்றது? இயேசுவின் விண்ணேற்றம்
27.
விண்ணேற்ற
நேரத்தில் இரண்டு வானதூதர்கள் இரு பக்கங்களிலுமாக தோன்றி காட்சி தந்ததை
குறிப்பிடும் விவிலியப் பகுதி எது? திருத்தூதர்பணிகள் 1:10
28.
தூய
நற்கருணையிலுள்ள இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் வழியாக தந்தையும், மகனும், தூய
ஆவியும் குடிகொள்கின்றனர் என்பதன் விவிலிய அடிப்படை எது?. யோவான் 14:23
29.
குக்கிலியோன்
என்னும் சொல்லின் பொருள் என்ன?
'வட்டம்'
30.
குக்கிலியோன்
என்னும் சொல்லை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? வட்டத்தைப் போன்று ஒரு முறை முழுமையாக செபம் சொல்லப்படுகிறது
31.
மொத்தம்
எத்தனை பெரிய குக்கிலியோன்கள் உள்ளன?. ஐந்து
32.
நின்றாள்
மாண்புடன் அரசமகள் .... என்ற குக்கிலியோனின் விவிலிய அடிப்படை எது? திருப்பாடல்கள் 45 : 9-11
33.
நீதிமான்
பனைபோல் செழித்திடுவார் ... என்ற குக்கிலியோனின் விவிலிய அடிப்படை எது? திருப்பாடல்கள் 92:12-14
34.
அணிவார்
நீதியைக் குருவானவர்கள் ..... என்ற குக்கிலியோனின் விவிலிய அடிப்படை எது? திருப்பாடல்கள் 132 : 9-12
35.
மக்கள்
மேல் தந்தை இரங்குவதைப்போல்..... என்ற குக்கிலியோனின் விவிலிய அடிப்படை எது? திருப்பாடல்கள் 103 : 13-15
36.
உம்மால்
பகைவனை வீழ்த்திடுவோம் நாங்கள்... என்ற குக்கிலியோனின் விவிலிய அடிப்படை எது? திருப்பாடல்கள் 45 :5-7
37.
இறந்தவர்களோடு
வாழ்வோரின் மன்றாட்டுக்களும் நறுமணத் தூபத்துடன் திருப்பலியில் கடவுளின்
திருமுன்னிலை செல்லும் என்பதனை
அடையாளப்படுத்தும் செயல் எது?
தூப அர்ப்பணம்
38.
குக்கிலியோன்
நிறைவடையும் போது திரையிடப்படுவதன் அர்த்தம் என்ன? ஆண்டவரின் விண்ணேற்றம் முதல் அவர்
கட்புலனாகாமல் இருப்பதையும்,
அவரது இரண்டாம்
வருகைக்காக காத்திருப்பதையும்
39.
மலங்கரை
திருப்பலியின் எத்தகைய ஆசீர் வழங்கும் முறை சிறப்பம்சமாக காணப்படுகிறது? தூய நற்கருணையால் ஆசீர் வழங்கும்
முறை
40.
தூய
நற்கருணையால் ஆசீர் வழங்குவது எதைக் குறிப்பிடுகிறது? விண்ணகம் திறக்கப்பட்டதையும், இயேசு கிறிஸ்துவின் மாட்சிமையுடனான இரண்டாம்
வருகையையும்
41.
குருவானவர்
கொண்டாட்டத்துடன் தூய நற்கருணையால் ஆசீர் வழங்க மேற்குத்திசை நோக்கி வரும் போது
ஆலய மணிகள் முழங்கச் செய்வது எதனை நினைவு கூருகின்றது?
இயேசுவின் இரண்டாம் வருகையின்போது எக்காள முழக்கம்
42.
தூய
நற்கருணையால் ஆசீர் வழங்கும் போது இரு பக்கங்களிலும் எரிகின்ற மெழுகுவர்த்திகளுடன்
நிற்கும் பீடச்சிறுவர்கள் எதனை சுட்டிக்காட்டுகிறது? ஆண்டவரின் இரண்டாம் வருகையின் போது
உடன் வருகின்ற விண்ணகத்தூதர்களை
43.
தூய
நற்கருணையால் ஆசீர் வழங்கும் போது பீடச்சிறுவர்களின் வெள்ளை நிற ஆடை எதைக்
குறிப்பிடுகிறது?
புனிதர்களின் மகிமையின் ஆடையாக
44.
குருவானவர்
கைகளில் திருத்தட்டமும்,
திருக்கிண்ணமும்
ஏந்தியவராய் இறை மக்களை நற்கருணை பெற்றுக்கொள்ள அழைப்பது எதைக் குறிப்பிடுகின்றது? ஆண்டவரின் மாபெரும் விருந்திற்காக
அவர் தமது இரண்டாம் வருகையின் மூலம் மனித இனத்தை அழைத்தல்
45.
ஒவ்வொரு
முறை நற்கருணை அனுபவித்தலும் எதற்கு முன்சுவை? இரண்டாம் வருகையின் போது இறை
இயேசுவோடு அனுபவிக்கும் நிரந்தரமான விருந்து
46.
காணாமற்போன
மகனுக்காக தந்தை ஆயத்தப்படுத்திய விருந்தாக கருதப்படுவது எது? நற்கருணை
47.
விண்ணக
மணமகன், மணமகளாகிய திருச்சபைக்காக சொந்த
உடலாலும் இரத்தத்தாலும் ஆயத்தம் செய்த திருமண விருந்து எது? தூய நற்கருணை
48.
யாருடைய
பாவங்கள் மன்னிக்கப்பட செராபீன்களுள் ஒருவர் பலிபீடத்திலிருந்து நெருப்புப் பொறி
ஒன்றைக் குறட்டால் அவரது வாயைத் தொட்டார்? எசாயா இறைவாக்கினர்
49.
இயேசுவின்
திருஉடலும், திரு இரத்தமுமான நெருப்புத்தழல்
பாவமன்னிப்புக்கும் நிலைவாழ்வுக்குமாக விசுவாசிகளுக்கு வழங்கப்படுகின்றது.
50.
நற்கருணை
வழங்கிய பின்னர் குருவானவர் இறைமக்களுக்கு நேராகத் திரும்பி திருத்தட்டமும், திருக்கிண்ணம் ஏந்தியிருக்கும் கைகளை
இடப்பக்கமாகவும், வலப்பக்கமாகவும் பிடித்துக் கொள்வதன்
அடையாளம் என்ன? இறுதித்
தீர்ப்பைக் குறிப்பிடும் வகையில் தீமை செய்தவர்களை இடப்பக்கமாகவும், நன்மை செய்தவர்களை வலப்பக்கமாகவும்
51.
நற்கருணை
வழங்கிய பின்னர் நடத்தப்படும் தூய நற்கருணை ஆசீரைத் தொடர்ந்து குருவானவர் தூய
மறைபொருள்களுடன் பலிபீடத்திற்குத் திரும்பிச் செல்வது எதைக் குற்ப்பிடுகிறது? இறுதித் தீர்ப்புக்குப்பின்
வலப்பக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தன்னுடன் தந்தையின் உறைவிடத்திற்கு இயேசு
அழைத்துச் செல்வதன் அறிகுறி
52.
திருஉடல்
திருஇரத்தத்தை அனுபவிக்கும் வாய்ப்பைத் தந்த இரக்கத்திற்காக குருவானவர் நன்றி
செலுத்தும் மன்றாட்டுகளுள் முதல் மன்றாட்டு எது? மீட்பின் திட்டங்களை வகுத்துத் தந்த
தந்தைக் கடவுளுக்கான நன்றி அர்ப்பணம்.
53.
திருஉடல்
திருஇரத்தத்தை அனுபவிக்கும் வாய்ப்பைத் தந்த இரக்கத்திற்காக குருவானவர் நன்றி
செலுத்தும் மன்றாட்டுகளுள் இரண்டாவது மன்றாட்டு எது? மீட்பின் நிகழ்வுகளை செயல்படுத்திய
மகனாகிய கடவுளுக்காக நன்றி வெளிப்படுத்துதல்
54.
திருப்பலியில்
இறுதி ஆசீர்வாதத்திற்கு முன்னதாக பாடுகின்ற பாடலுக்குப் பெயர் என்ன? ஹூத்தோமா
55.
ஹூத்தோமா
என்ற சுறியானிச் சொல்லின் பொருள் என்ன? முத்திரை வைத்தல்,
உறுதிப்படுத்துதல்
56.
திருப்பலியில்
முத்திரையிடல் திருச்சடங்கின் வழியாக நாம் அறிக்கையிடுவது என்ன? அன்றாட வாழ்க்கையில் நாம் இறைஉறவில்
வாழ்ந்து கொள்வோம் என்று நாம் கடவுளுடன் உடன்படிக்கை செய்து கொள்கின்றோம்.
57.
திருப்பலியில்
இறுதி ஆசீர்வாதத்திற்குப் பின்னர் திரையிடுவது எதனை சுட்டிக்காட்டுகிறது? இவ்வுலகவாழ்வு முடிவுற்றது எனவும், புதிய உலகம் தொடங்கிவிட்டது எனவும்
58.
திருப்பலி
நிறைவுற்ற பின்னர் குருவானவர் எவ்வாறு பலிபீடத்தை புகழ்ந்து விடைபெறுகிறார்? “ஆண்டவரின் பரிசுத்த பலிபீடமே சமாதானத்தோடு
வாழ்க” “தூய்மையானதும் பாவபரிகாரம்
அளிப்பதுமான பலிபீடமே சமாதானத்தோடு வாழ்க” “உயிரின்
மேசையாகிய பரிசுத்த பலிபீடமே சமாதானத்துடன் வாழ்க”
59.
திருப்பலியின்
இறுதியாக இறைமக்கள் எவ்வாறு விடைபெற்றுச் செல்கின்றனர்? குருவானவரின் திருக்கரங்களையோ
திருச்சிலுவையையோ முத்தம் செய்து
60.
“விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு
தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்” (யோவான் 6:51).

Comments
Post a Comment