மலங்கரையின் மாமனிதன் தமிழாக்கம் : அருட்தந்தை மரிய ஜாண் நடைக்காவு
மலங்கரையின் மாமனிதன் தயாரிப்பு : அருட்சகோதரி பெஞ்சமின் SIC தமிழாக்கம் : அருட்தந்தை மரிய ஜாண் நடைக்காவு 1. பிறப்பு பேரயர் மார் இவானியோஸ் ஆண்டகை அவர்கள் கேரளா மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தின் மாவேலிக்கரை என்னும் ஊரில் பழமை வாய்ந்த பணிக்கர் குடும்பத்தில் 1882 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாளில் பிறந்தார். அவரது குடும்பமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு மாவேலிக்கரை பகுதியும் ஆசீர்வதிக்கப்பட்டது. “ ஒருவன் இறைவனின் மறைப்பணிகளுக்காக செல்லும்போது , அவனது குடும்பத்தை இறைவன் கவனித்துக்கொள்வார்” ( மார் இவானியோஸ்) 2. பெற்றோர் ...