மலங்கரையின் மாமனிதன் தமிழாக்கம் : அருட்தந்தை மரிய ஜாண் நடைக்காவு
தயாரிப்பு : அருட்சகோதரி பெஞ்சமின் SIC
தமிழாக்கம் : அருட்தந்தை மரிய ஜாண் நடைக்காவு
|
1.
பிறப்பு |

பேரயர் மார் இவானியோஸ் ஆண்டகை
அவர்கள் கேரளா மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தின் மாவேலிக்கரை என்னும் ஊரில் பழமை
வாய்ந்த பணிக்கர் குடும்பத்தில் 1882 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாளில் பிறந்தார். அவரது குடும்பமும் வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்தது. இவ்வாறு மாவேலிக்கரை பகுதியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
|
“ஒருவன் இறைவனின் மறைப்பணிகளுக்காக
செல்லும்போது, அவனது குடும்பத்தை இறைவன்
கவனித்துக்கொள்வார்” (மார் இவானியோஸ்) |
|
2.
பெற்றோர் |

பேராயரின் பெற்றோர் திரு. தோமா பணிக்கர் மற்றும் திருமதி. அன்னம்மா
ஆகியோர் ஆவர். பெற்றோர் தம் மகனை கீவர்கிஸ் எனப் பெயரிட்டு அழைத்தனர். இறை
நம்பிக்கையிலும், மரிய பக்தியிலும் வளர்ந்து வந்த கீவர்கீஸ்,
ஒரு குருவானவராக
பணியாற்றிட ஆர்வம் கொண்டிருந்தார்.
|
“என் இதயத்தை நான் எவருக்கும்
வழங்கமாட்டேன். ஆனால் என் இதயத்தை உன் இதயத்தில் மறைத்து வைப்பேன். (மார் இவானியோஸ்) |
|
3.
பி. டி. கீவர்கீஸ்
செம்மாசன் |

பி. டி. கீவர்கீஸ் 1899, ஜனவரி
18 இல் செம்மாசன் எனப்படும் திருத்தொண்டராக அருட்பொழிவு
செய்யப்பட்டார். நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான செம்மாசன் எம்.ஏ. முதுகலைப்
பட்டம் பெற்றார். 20 மணி நேர உழைப்பும், 4 மணி நேரம் மட்டுமே ஓய்வு என வாழ்ந்து வந்தார்.
அருளடையாளங்களைப் பற்றி ஆழமாகப் போதித்த அவர்,
“அருளடையாளங்களின்
செம்மாசன்” என அழைக்கப்பட்டார். எம். டி. செமினரியில் அர்ப்பணிப்புடன் சிறப்பாக
பணியாற்றினார்.
|
“இயேசுவுக்காக வாழும்
நம் வாழ்வில் துயரங்களும் தியாகங்களும் மிகுந்திருக்கும்” (மார்
இவானியோஸ்) |
4.
எம்.ஏ. அச்சன் (எம்.ஏ. அருட்தந்தை)

1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி,
பருமலை
செமினரியில் வைத்து ஆயர் வட்டசேரில் மார் திவான்னாசியோஸ் அவர்களால் குருவாக
அருட்பொழிவு செய்யப்பட்டார். கேரளாவில் சுறியானி அருட்தந்தையர்களுள் முதன் முதலாக எம்.ஏ. முதுகலைப்
பட்டம் வென்றதால் எம்.ஏ. அச்சன் (எம்.ஏ. அருட்தந்தை) என அழைக்கப்பட்டார்.
|
“என்னைக் குறித்த கடவுளின் திருவிருப்பம்
பற்றியும் எத்தகைய அருளை இயேசு எனக்கு வழங்க விரும்புகிறார் என்பதைப் பற்றியும் இயேசுவே எனக்கு தெரிவிப்பார்.” (மார் இவானியோஸ்) |
5.
செராம்பூர் கல்லூரி ஊழியர்கள்

எம்.ஏ. அச்சனின் அறிவையும் திறமையையும்
உணர்ந்த முனைவர் ஹோவெல்ஸ் அவரை கல்கத்தாவின் செராம்பூர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிட
அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்ற திருச்சபை அன்பராகிய எம்.ஏ. அச்சன் மலங்கரை
திருச்சபையின் எதிர்கால பணிகளுக்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார். பல இளைஞர்,
இளம்பெண்களை செராம்பூர்
கல்லூரியில் மேற்படிப்புக்காக அழைத்தார். தனது வருமானத்தை அவர்களின் கல்விக்காக
பயன்படுத்தினார்.
|
"அனைத்து
நற்குணங்களுக்கும் அடிப்படை பணிவு ஆகும்” (மார் இவானியோஸ்) |
6.
முண்டன் மலையில் துறவுசபை

திருச்சபையில் தினமும் நடைபெற்ற சண்டைகள், வழக்குகள் மற்றும் தடை ஆணைகள் அவரை
சிந்திக்க வைத்தது. இறைமக்கள் இரண்டாக பிளவுபட்டுள்ளனர். மலங்கரை திருச்சபையின்
ஆன்மீகப் புதுப்பித்தலுக்காக செபம் மற்றும் தியாகம் போன்றவற்றை செயல்படுத்தும் துறவு
சமூகம் தேவை என்பதை உணர்ந்தார். பெருநாடு என்னுமிடத்தில் முண்டன் மலையில் துறவு
சபையை நிறுவினார்.
|
“மௌனமும் தனிமையும் துறவு
வாழ்வுக்கு அத்தியாவசியமானவை” (மார் இவானியோஸ்) |
7.
பெதனி ஆசிரமம்

இறைவனின் முன்னிலையில் ஆழ்ந்த
பிரார்த்தனையிலிருந்து பெறப்பட்ட “பெதனி” என்ற பெயரை அவர் நிறுவிய துறவு சபைக்கு
வழங்கினார். 1920 ஆம் ஆண்டு பெந்தெகொஸ்து திருநாளன்று, பெருநாடு முண்டன் மலையில் தொடங்கப்பட்ட ஆசிரம சிற்றாலயத்தில்
வைத்து முதல் உறுதிமொழியை சமர்ப்பித்து துறவு பூண்டார்.
|
"உலகிற்காய் இறப்பவனே துறவியார்.
உலகத்தின் மரியாதை மற்றும் மக்கள் சம்மதம் துறவியாருக்கு தேவை இல்லை.” (மார் இவானியோஸ்) |
8.
பெதனி ஆயர்

1925, மே 1 அன்று நிரணம் ஆலயத்தில் வைத்து
அருட்தந்தை கீவர்கீஸ் மார் இவானியோஸ் என்ற பெயரால் ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
பெதனியின் ஆயராக அவர் பல பிரச்சனைகள், தடைகள்
மற்றும் முரண்பாடுகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவரது அசைக்க முடியாத இறைநம்பிக்கையே
அவரை பலப்படுத்தியது.
|
“பழங்கால சித்தர்களே நவீன
உலகின் ஆன்மீக தாகம் தணிக்கும் நேர்மையை வாழ்ந்து காட்டியவர்கள்” (மார் இவானியோஸ்) |
9.
எப்பிஃபனி அருட்சகோதரிகள்

பெண்களுக்கான துறவு சபை என்பது அவரது கனவாக
இருந்தது. பழமையான கிறிஸ்தவ குடும்பத்தைச்
சேர்ந்த சில பெண்கள் பாரிசோல் என்னுமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கல்வி
கற்பிக்கப்பட்டனர். அருட்சகோதரி ஹெலன், அருட்சகோதரி எடித் மற்றும் அருட்சகோதரி
ரூத்து ஆகியோர் அவர்களுக்கு துறவு பயிற்சி வழங்கினர்.
|
“சமூகத்தின் ஆன்மீக வளர்ச்சிக்கும்
அதன் கல்விச் செழுமைக்கும் கன்னியர் இல்லங்கள் மிகவும் அவசியம் ஆகும்.” (மார் இவானியோஸ்) |
10.
உண்மையைத் தேடும் தந்தை

உண்மையைத் தேடுபவராக இருந்த மாமனிதன்,
கத்தோலிக்க
திருச்சபை என்ற மாபெரும் உண்மையைக் கண்டடைய எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக
இருந்தார். துறவு வாழ்வில் தனது பொறுப்பில் இருந்த செல்வங்களையும் 400 ஏக்கர்
நிலத்தையும் விட்டுவிட்டு வெறுங்கையுடன் முண்டன் மலையிலிருந்து வெளியேறினார்.
இறைவனை மட்டுமே சார்ந்திருந்தார்.
|
"மேலே வானத்தையும்
கீழே பூமியையும் மட்டுமே கண்டவாறு தான் நான் கத்தோலிக்க திருச்சபைக்குள்
நுழைந்தேன்.” (மார் இவானியோஸ்) |
11. திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்

மலங்கரை திருச்சபையின் திருவழிபாடு மற்றும் பாரம்பரிய
சடங்குமுறைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு கத்தோலிக்க திருச்சபையுடன் ஒன்றிணைவதற்காக
அவர் உரோமுக்கு விரிவாக பல கடிதங்களை எழுதினார். திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் மூலம் அவரது விருப்பத்தை இறைவன் நிறைவேற்றினார்.
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் மகிழ்ச்சியுடன்
இவ்வாறு கூறினார்; "வரவேற்பு, மாபெரும் வரவேற்பு.”
|
"திருத்தந்தையுடன்
புனிதமான ஒன்றிப்பில் நுழைந்திட பேறுபெற்றமைக்கு மனதார இறைவனைப் புகழ்கிறேன்.” (மார் இவானியோஸ்) |
12. கொல்லம் ஆயர்

நவீன கிறிஸ்தவ வரலாற்றில் மிகவும் முக்கியமான
நாளான 1930 செப்டம்பர் 20 அன்று, கொல்லம் ஆயர் அலோசியஸ் பென்சிகர் முன்னிலையில் நம் ஆயர் நம்பிக்கை
உறுதிமொழி செய்தார். மறுஒன்றிப்பு எனப்படும் வரலாற்று நிகழ்வு நடந்தது. மண்ணும் விண்ணும்
ஒன்றாய் மகிழ்வடைந்தன.
|
“என் வாழ்நாளில் என்னை
ஆச்சரியப்படுத்த தவறாத நாள் 1930 செப்டம்பர் 20 ஆகும்.” (மார் இவானியோஸ்) |
13.
கொல்லம் ஆயரக சிற்றாலயத்தில் எழுதப்பட்ட வரலாறு

இந்த வரலாற்று நிகழ்வு கொல்லம் ஆயரக
சிற்றாலயத்தின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தேவாலயத்தில் வைத்து தான்
அந்தியோக்கியன் திருவழிபாட்டு முறையில் தனது முதல் நன்றித் திருப்பலியை நிறைவேற்றினார்.”
|
"என் வாழ்வின் கனவு
நனவாகிவிட்டது." (மார் இவானியோஸ்) |
14. மறு ஒன்றிப்படைந்த ஐவர்

1. ஆயர் மார் இவானியோஸ், 2. ஆயர்
மார் தியோபிலோஸ், 3. அருட்தந்தை ஜான் OIC, 4. அலெக்சாண்டர் செம்மாசன் மற்றும் 5. திரு. கிளிலேத்து சாக்கோ ஆகியோர் மலங்கரை
கத்தோலிக்க திருச்சபையின் முதல் உறுப்பினர்கள் ஆவர்.
|
"தனது அன்பின்
பெருங்கடலில் குதித்திட எல்லாம் வல்ல இறைவன் என்னை அழைக்கிறார்" (மார் இவானியோஸ்) |
14.
பெற்றோரின் ஆசிர் பெறல்

நம் ஆயர் ஒன்றிணைந்த உடனடியாக,
மாவேலிக்கரைக்குச்
சென்று தனது பெற்றோரை கத்தோலிக்க ஒன்றிப்பில் இணையச் செய்தார். பின்னர் அவர் தனது
பெற்றோரிடம் மண்டியிட்டு அவர்களின் ஆசீர்களை ஏற்றுக்கொண்டார். மார் இவானியோஸ் எந்த
அளவுக்கு உயர்ந்தவராக இருந்தாரோ அந்த அளவுக்கு எளியவராய் இருந்தார்.
|
“நீங்கள் கத்தோலிக்கராக
மாறியதில் பெருமை கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் தூய்மையும் உங்கள்
முன்மாதிரியும் அகத்தோலிக்கர்களுக்கு வழிகாட்டியாய் இருக்கட்டும். (மார் இவானியோஸ்) |
15.
பாலியம் பெற்றுக் கொள்ள உரோமையில்

திருத்தந்தைக்கு நன்றி செலுத்தவும் பாலியம்
பெற்றுக் கொள்ளவும் உரோமைக்குச் சென்றார். உரோமில் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
|
"திருச்சபை தனது
குழந்தைகளை எவ்வளவு அன்புடன் நேசிக்கிறது மற்றும் மதிக்கிறது என்பதற்கு சான்றாக உரோமில்
நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளைக் கருதுகிறேன். (மார் இவானியோஸ்) |
16.
பெதனி பெண் துறவு சபை

1925 ஆம் ஆண்டு பேராயர் மார் இவானியோஸ் முதல் மூன்று பயிற்சிக்கன்னியர்களான மதர் சைனோ,
மதர் ஹுபா
மற்றும் மதர் தனஹா ஆகியோரின் முதல் உறுதிமொழி திருச்சடங்குகளுக்கு தலைமை தாங்கினார்.
பெண் துறவு சபையை நிறுவி வழிநடத்துவதற்காக பல திட்டங்களை வகுத்திருந்தார்.
|
"பெண்களுக்கு ஆன்மீக காரியங்களை
கற்பிக்கவும், குணப்படுத்தும்
சேவை போன்ற நலவாழ்வுப் பணிகளில் ஈடுபடவும், அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே கடவுளின் பெயரை
மகிமைப்படுத்தவும் தங்களை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்த பெண்களால் மட்டுமே
முடியும். (மார் இவானியோஸ்) |
17.
மேரிமக்கள் துறவு சபை

மேரிமக்கள் துறவு சபை மறைப்பணி செயல்களுக்காகவும்
குடும்பங்களின் மறுமலர்ச்சிக்காகவும் மோன்சிஞ்ஞோர் ஜோசப் குழிஞ்ஞாலில் அவர்களால்
உருவாக்கப்பட்டது. பேராயர் மார் இவானியோஸ் அவர்களின் கண்காணிப்பில் செழிப்புடன் வளர்ந்து
வந்தது.
|
"தங்கள் செபவாழ்வாலும்
நற்செயல்களாலும் உம்மை மகிமைப்படுத்தவும், உலகில் உமது தூய்மையையும் அன்பையும் வெளிப்படுத்தும் தூய்மையான
ஆன்மாக்களைக் கொண்ட பெண்களை இறைவா
தந்தருள்வீராக” (மார் இவானியோஸ்) |
18. மறுஒன்றிப்படைந்த ஆயர்கள்

பேராயர் மார் இவானியோஸ்,
மார் தியோபிலோஸ்,
மார் சேவேரியோஸ்
மற்றும் மார் தியோஸ்கோரஸ் ஆகிய ஆயர்களின் தியாகம் மற்றும் பிரார்த்தனையின் விளைவாக,
திருச்சபையில்
ஆசீர்கள் பெறப்பட்டன. இன்றும் அவை நிகழ்கின்றன. அவரது சீடரான மார் சேவேரியோஸ் அவர்களது
மறுஒன்றிப்பு மார் இவானியோஸ் ஆண்டகையை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது.
|
“எனது அன்புக்குரிய யாக்கோபாயா
சகோதரர்கள் அனைவரும் ஒரே திருச்சபை ஒன்றிப்பில் வந்தடையும் வரை எனது மகிழ்ச்சி முழுமை அடைவதில்லை. (மார் இவானியோஸ்) |
19. இங்கிலாந்தில் நம் பேராயர்

இங்கிலாந்தில்,
ஐந்தாம் ஜார்ஜ்
மன்னர் பேராயர் மார் இவானியோசுக்கு மதிப்பு வழங்கும் பொருட்டு பெரிய விருந்து ஏற்படுத்தினார்.
மறுஒன்றிப்பிற்குப் பின்னர் அவர் உலக அளவில் புகழப்படும் நபராக கடவுளால்
வளர்க்கப்பட்டார். இது மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் எதிர்கால வளர்ச்சியை
சுட்டிக்காட்டுகின்றது.
|
"வாழ்நாள் முழுவதும்
நான் முழுமனதோடும் ஆர்வத்தோடும் உண்மையை ஆராயவும் இறையருளால் ஒளிமயமான உண்மையை அறிந்து கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணையும்
பெரும்பேற்றை இறைவன் எனக்கு வழங்கினார்.” (மார் இவானியோஸ்) |
20. அமெரிக்காவில் நம் பேராயர்

பேராயர் மார் இவானியோஸ் மற்றும் அமெரிக்காவின்
இரு மோன்சிஞ்ஞோர்மார்களும் சந்திந்த நிகழ்வு ஒரே கத்தோலிக்க திருஅவையுடன் இணைந்ததை
சாட்சியப்படுத்துகிறது. குறுகிய காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் மலங்கரை
கத்தோலிக்க திருச்சபையையும் அதன் தலைவரையும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டன.
|
“பல நூற்றாண்டுகளாகப் பிளவுற்றிருந்த
தன் பிள்ளைகள் திரும்பி வரும்போது, எவ்வளவு அன்புடன் திருச்சபைத் தாய் தன் மடியில் உட்கார வைக்கிறாள். (மார் இவானியோஸ்) |
21. மறுஒன்றிப்பு வளர்ச்சியின் பாதையில்

1940 இல் மார் இவானியோஸ் மற்றும் அருட்தந்தை
பிலிப்போஸ் இரம்பான் ஆகியோருடன் அன்றைய அருட்தந்தையர்கள் பலர் மறுஒன்றிப்படைந்தனர். உணவையும்,
தூக்கத்தையும்
தியாகம் செய்து, சுகமான மற்றும் வசதியான வாழ்க்கையையும் துறந்து,
திருச்சபையின்
வளர்ச்சிக்காக இம்மாமனிதர் பாடுபட்டார்.
|
“குருவானவர்களின் உயர்வே
சமூகத்தின் எழுச்சி. அவர்களது அறிவு சமூகத்தின் மூலதனம் ஆகும்.” (மார் இவானியோஸ்) |
22. குழந்தைகளைப் போல இருங்கள்

பேராயர் மார் இவானியோஸின் வாழ்க்கை
பெரும்பாலும் தீவிரமான சூழல்களுடன் அமைந்திருந்த போது ஒரு சிறு குழந்தையால் அவரை
சிரிக்க வைக்க முடிந்தது. அந்தக் கம்பீரமான முகத்தைப் பார்த்தும் குழந்தை
பயப்படவில்லை. தந்தையின் அரவணைப்பில் நிம்மதியோடு அமர்ந்திருந்தது. மலங்கரை
கத்தோலிக்க திருச்சபையை அவர் ஒரு குழந்தையைப் போல அரவணைத்து,
நேசித்து வளர்த்து
வந்தார்.
|
"நன்மைகள் நல்லவைகளிலிருந்துதான்
உருவாகின்றன. புண்ணியச் செயல்களை விட புண்ணிய வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். (மார் இவானியோஸ்) |
23. உபதேசிமார்கள்

மறைப்பணிகளின் செழுமைக்காகவும்,
குருவானவர்களுக்கு
உதவிடவும் சிறந்த உபதேசிமார்களை பயிற்சிகள் வழங்கி உருவாக்கியிருந்தார். பேராயர் மார் இவானியோஸ்,
மோன்சிஞ்ஞோர் சி.கே மற்றம், அருட்தந்தை பர்சலீபா OIC அருட்தந்தை சக்கரியாஸ் மற்றும் அருட்தந்தை கோஷி OIC
ஆகியோருடன் 1933-34
ஆம் ஆண்டிற்கான உபதேசிமார்கள் இணைந்த புகைப்படம். பொதுநிலையினரான உபதேசிமார்களின் சேவைகள் திருச்சபைக்கு
பெரிதும் உதவியாக அமைந்திருந்தது.
|
"கடவுளே, திருச்சபையின் நற்செய்திப் பணிக்காக தங்கள் வாழ்க்கையை
அர்ப்பணித்தவர்களை நியமித்து அவர்களை செயல்பட வைக்கும் அனைத்து இயக்கங்களையும் ஆசீர்வதித்தருளும்." (மார் இவானியோஸ்) |
24. இந்தியாவின் நியூமேன்

ஆங்கிலிக்கன் திருச்சபையில் குருவானவராக
இருந்த போது கார்டினல் நியூமேன் தனது தாய்த் திருச்சபையான கத்தோலிக்க திருச்சபையோடு
1845 இல் ஒன்றிணைந்தார். அவர் மீண்டும் இணைவதை ஒரு மாபெரும் நிகழ்வாக அன்றைய
ஊடகங்கள் பதிவு செய்தன. அவ்வாறே, ஜி.கே. செஸ்டர்டன் மார் இவானியோஸ் பேராயரை "இந்தியாவின்
நியூமேன்" என்று அழைத்தார்.
|
“உலகம் முழுவதையும் மனமாற்றமடையச்
செய்ய மிகப் பெரிய தடையாக இருப்பது கிறிஸ்தவ உலகின் பிளவுகளும் பிரிவினைகளும் தான்
என்பதில் ஐயமில்லை. (மார் இவானியோஸ்) |
25. வெளிநாட்டில் வரவேற்பு

அகில உலக கத்தோலிக்க திருச்சபையில் பல
இடங்களிலும் மிகப்பெரிய ஆடம்பர வரவேற்பு பேராயர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 1932
ல் அயர்லாந்து நாட்டில் வைத்து நடைபெற்ற நற்கருணை மாநாட்டில் அவர் கலந்து
கொண்டார். “இந்தியாவின் ஒரு அரசரைப் போன்று அவர் காணப்பட்டார்” என ஜி.கே.
செஸ்டர்டன் அடையாளப்படுத்தி இருக்கின்றார்.
|
ஆண்டவரே ஓய்வு விரும்பாமல்
உனது மகிமைக்காக பணியாற்ற என்னை பயிற்றுவித்தருளும். (மார் இவானியோஸ்) |
26. சி. பி. ராமஸ்வாமி ஐயர் அவர்கள் வத்திக்கானில்

அன்றைய திருவிதாங்கூரின் திவான் சி. பி இராமசாமி
ஐயர் அவர்கள் அனைவராலும் பயத்துடன் மதிக்கப்படக்கூடிய வலிமை வாய்ந்த அரசியல்வாதியாக இருந்தார். அவரோடு நட்புறவு கொள்ளும்
அளவுக்கு ஆளுமை, ஞானம் மற்றும் புத்திசாலித்தனம் நம் பேராயரிடம் இருந்தது.
|
“நமது ஆட்சியாளர்கள்
நல்லெண்ணத்துடன் மக்களை வழிநடத்தவும் பாதுகாக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம்
தினமும் பிரார்த்தனை செய்கிறோம்.” (மார் இவானியோஸ்) |
27. சீரோ மலபார் திருச்சபையினரின் வரவேற்பு

கேரளாவின் சீறோ மலபார் திருச்சபை பேராயர்
மார் இவானியோஸ் மற்றும் மார் தியோபிலோஸ்
ஆகியோருக்கு பிரமாண்டமான வரவேற்பு வழங்கியது. மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின்
வளர்ச்சியின் துவக்க நிலையில் சிரோ மலபார் திருச்சபை மாபெரும் உதவிகளை வழங்கியது.
|
“அழகான மலர் மாலையில் பல
வண்ண மலர்கள் அழகூட்டுவது போல, கத்தோலிக்க திருச்சபை எனப்படும் பூந்தோட்டத்தில் பலவிதமான அழகிய மலர்கள்
உள்ளன.” (மார் இவானியோஸ்) |
28. தாழ்த்தப்பட்ட இன மக்களோடு

ஜாதி பாகுபாடு தாண்டவம் ஆடிய சூழல் கேரளாவில்
நிலவி வந்தது. கீழ் ஜாதியினர் என முத்திரை குத்தப்பட்ட நபர்களையும் சகோதர உறவில்
அன்பு செய்யவும் அவர்களை திருச்சபையில் ஏற்றுக் கொள்ளவும் செய்திருந்தார்.
|
“மனித குலம் முழுவதும்
புனிதமான கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிணைவதைக் காண நம் அன்புத் தலைவரின் இதயம்
ஒவ்வொரு நிமிடமும் எரிந்து கொண்டிருக்கிறது.” (மார் இவானியோஸ்) |
29. கன்வென்ஷன் கூட்டங்கள்

உண்மை திருச்சபையைப் பற்றி கற்பிக்க பல
இடங்களில் வைத்து கன்வென்ஷன் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவர்களுக்கு உணவும்
வழங்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருந்தது.
திருவனந்தபுரம் மற்றும் திருவல்லா என இரண்டு மறைமாவட்டங்கள் உருவாகி திருச்சபை
பரந்து விரிந்து வளர்ந்து கொண்டே இருந்தது.
|
“மறைபரப்பு பணிகளில் சொந்த
நாட்டைச் சார்ந்தவர்களுக்கு பொறுப்புணர்வு கூடுதல் உள்ளது என உறுதிப்படுத்துவதே
எங்களது நோக்கம்.” (மார் இவானியோஸ்) |
30. முதல் இந்திய கத்தோலிக்க ஆயர்ப் பேரவை

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CBCI)
பெங்களூருவில் கூடிய
போது முதல் முறையாக நம் பேராயரும் கலந்து கொண்டார்.
|
“பலவகையான ஆடைகளால்
அலங்கரிக்கப்பட்ட அரசியின் அழகு போல, திருச்சபையும் பலவிதமான திருவழிபாட்டு ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டு அழகுடன் ஜொலிக்கிறது.” (மார் இவானியோஸ்) |
31. மதம் மற்றும் அரசியல் தலைவர்கள்

மறு ஒன்றிப்பு இயக்கம் வெகுவேகமாக வளர்ந்து
வந்த காலத்தில் பேராயர் மார் இவானியோஸ், திருவல்லா ஆயர் மார் சவேரியோஸ்,
சேப்பாட்டு மார்
பிலிப்போஸ் இரம்பான் மற்றும் குருவானவர்கள் அரசியல் தலைவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம்.
அரசியல் தலைவர்களுடன் நம் பேராயர் நல்லுறவு கொண்டிருந்தார்.
|
பழமையான கிறிஸ்தவ
திருச்சபையின் அப்போஸ்தலிக்க கத்தோலிக்க அடிப்படை தத்துவங்களுக்கு சிறிதளவும்
மாற்றம் ஏற்படுத்தாமல் கிறிஸ்தவத்தை இந்தியாவின் தாயகத் திருச்சபையாக வளர்க்க
முடியும் (மார் இவானியோஸ்) |
32. கும்பழா ஆலயத்தில் மாபெரும் வரவேற்பு

பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகை அவர்களின்
பின்னால் கத்தோலிக்க திருச்சபையின் ஒன்றிப்பில் பல அருட்தந்தையர்களும் வந்து
இணைந்தனர். 1. அருட்தந்தை அலெக்சாண்டர் வலிய வீட்டில் (கொட்டாரக்கர அச்சன்), 2. அருட்தந்தை
பீலிப்போஸ் மேடயில் (கும்பழா அச்சன்), 3. அருட்தந்தை ஏ. ஜி அப்ராஹாம் (மயிலப்புற
அச்சன்) மற்றும் 4. அருட்தந்தை கீவர்கீஸ் சருவிலத்து (பந்தளத்து அச்சன்)
|
“சமீப காலத்தில் மறுஒன்றிப்பு
பேரியக்கம் பல மடங்கு வலுவடைந்து வளர்ந்தது.” (மார் இவானியோஸ்) |
33. ஆயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் அவர்களது ஆயர்
அருட்பொழிவு

தனது வழிமரபினராக ஆயர் ஒருவரை அருட்பொழிவு
செய்ய வேண்டும் என நம் பேராயர் விரும்பியிருந்தார். பல்வேறு விதமான உடல் நோய்களும்
சோர்வுகளும் இருந்தாலும் நீண்ட நேர திருச்சடங்குகளில் கலந்து கொண்டு அருட்பொழிவு
நிகழ்வுகளை சிறப்பித்தார்.
|
“இறையருளால் என் வாழ்வின்
பெரும்பாலான ஆசைகள் நிறைவேறிவிட்டன. எல்லாவற்றின் அடிப்படையும் இறைவனின் அருளே
ஆகும். துவக்குபவரும் இறைவனே, வழிநடத்துபவரும் அவரே.” (மார் இவானியோஸ்) |
34. பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் பதவி ஏற்பு

பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ்
அவர்களின் பதவி ஏற்பு வேளையில் பேராயர் மார் இவானியோஸ் அவர்கள் ஒப்புக்கொடுத்த
திருப்பலி நன்றியின் திருப்பலியாக அமைந்திருந்தது. புதிய ஆயர் அவர்களுக்கு
இறையருள் வேண்டிய அன்பின் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. நோயின்
தீவிரத்தால் வலுவிழந்த ஆயரின் தியாகத்தின் திருப்பலியாக அமைந்தது. நன்றி கூறிட
வார்த்தைகள் போதாது என்பது போன்ற திருப்பலியாக அமைந்திருந்தது.
|
“திருச்சபையின் ஒன்றிப்பிற்காக
என்னை பலியாக ஒப்புக் கொடுக்க, இறைவனின் அருள் இக்காலத்தில் என்னை வலுப்படுத்திக்
கொண்டே இருந்தது.” (மார் இவானியோஸ்) |
33. புதிய மேய்ப்பன்

பேராயர் மார் இவானியோஸ் மற்றும் ஆயர் மார் சேவேரியோஸ்
ஆகியோர் பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் அவர்களது பதவியேற்பு விழாவின் போது கலந்து
கொண்டபோது எடுத்த புகைப்படம். மலங்கரை திருச்சபையின் வளர்ச்சியின் நிலையை இஃது
சுட்டிக்காட்டுகிறது.
|
"ஆன்மீக விஷயங்களில் மயக்க
நிலையில் உள்ள திருச்சபையில பக்தியை அதிகரிக்கவும், திருச்சபை உறுப்பினர்களுக்கு அவர்களது பொறுப்புணர்வை புரிய வைப்பதும் ஆன்மீகத்
தலைவர்களின் கடமையாகும்." (மார் இவானியோஸ்) |
34. உடல் நலம் பாதித்த மகான்

ஓராண்டு காலமாக பேராயர் நோயுற்று
படுக்கையில் இருந்தார். ஒவ்வொரு நாளும் பல நபர்கள் அவரை சந்தித்துக் கொண்டே
இருந்தனர். அவரது படுக்கையின் அருகிலேயே அவரிடமிருந்து ஆசீர்வாதங்களை
பெற்றுக்கொள்ள பலர் வந்த வண்ணம் இருந்தனர்.
|
நான் இப்போது
இறந்தாலும் எனக்கு இறைவனின் முன்னிலையில் ஆறுதலின்மையும் சமாதானமின்மையும் உண்டாவதில்லை.
எனது இன்றைய
நிலையை நோக்கும் போது இது எனக்கு தேவையானது ஆகும். (மார்
இவானியோஸ்) |
35. இந்தியாவின் திருத்தூதுவ அதிகாரியின் சந்திப்பு

மலங்கரையின் சூரியன் மறைந்திட நேரமாகிவிட்டது
என்ற செய்தி பல இடங்களிலும் பரவியது. இந்தியாவின் திருத்தூதவ பிரதிநிதியாக இருந்த
ஆயர் நம் பேராயரை சந்திப்பதற்காக வந்திருந்தார்.
|
இந்தப் போர்
முடிவடைந்துவிட்டது. இறப்பது வரையிலும் வலுவிழந்த எனது தலையை உனது மடியில்
சாய்ந்திருக்க என்னை அனுமதிப்பீராக. (மார் இவானியோஸ்) |
36. இறைவனின் முன்னிலையில்

1953, ஜூலை 15,
அன்று இரவு 11
மணியளவில், பிரார்த்தனைகள் நிறைந்த சூழலில் அவரது ஆன்மா இறைவனின்
முன்னிலையில் புறப்பட்டது. பேராயர் மார் கிரிகோரியோஸ் மற்றும் ஆயர் மார்
சேவேரியோஸ் மற்றும் பல குருக்கள், துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அவரது மரண
வேளையில் உடனிருந்தனர். ஜூலை 15 மறக்க முடியாத ஒரு புனித நாள். இன்றும் ஆசீர்வாதம்
வழங்கும் புனித நாளாக உள்ளது.
|
"என் பலவீனங்களிலும்
கடவுள் மகிமைப்படுத்தப்படுவார்.” (மார் இவானியோஸ்) |
37. பட்டம் தலைமைக்கோயிலில்

ஒரு மனிதப் பிறவியால் கடவுளின் மகிமைக்காக செய்யக்கூடிய அனைத்தையும்
செய்த பேராயர் மார் இவானியோஸ் கடந்து வந்த ஒவ்வொரு பாதையும் ஆசீர்வதிக்கப்பட்டது. நித்திய
பேரின்பத்தில் வாழும் தலைவா, எப்போதும் எங்கள் இதயங்களில் நிறைந்திருப்பீர்.”
|
"நான் விண்ணகத்தை அடைந்ததும், எனது கத்தோலிக்கரல்லாத சகோதரர்களின் மறுஒன்றிப்புக்காக
இறைவனிடம் மன்றாடுவேன்.” (மார் இவானியோஸ்) |
38. இறுதி யாத்திரை

ஜூலை மாதம் 17ஆம் தேதி பேராயரின் கல்லறை
அடக்கத் திருச்சடங்குகள் நடத்தப்பட்டன. கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் இதுவரையிலும்
இவ்வாறு நடந்திராத விதத்திலான நகர் காணல் திருச்சடங்கு நடைபெற்றது. தனிப்பட்ட
முறையில் உருவாக்கப்பட்ட தேரில் தனது பதவி ஆடைகளை அணிந்து அலங்கரிக்கப்பட்ட
பேராயரின் பூதவுடல் அமைய பாளையம் பேராலயத்திலிருந்து பட்டம் பேராலயத்தை நோக்கிய
அழுகையின் நீண்ட பயணம் துவங்கியது. “அன்பின் ஆயரே சமாதானத்தோடு செல்லுங்கள்” என்ற அழுகைக்குரல்
மக்களிடையே உயர்ந்தது. நகரமும் நகரத்தவர்களும் மௌனமாக நடந்த கண்ணீரின் பயணம்.
|
“இறைவனின் அருள் ஒருபோதும்
குறைந்து விடுவது அல்ல.” (மார் இவானியோஸ்) |
39. பிரியாவிடை பயணத்தின் மற்றொரு காட்சி

திருச்சபையின் அதிகாரிகளும்
அரசியல் அதிகாரிகளும் கத்தோலிக்கர்களும் கத்தோலிக்கரல்லாதவர்களும் கிறிஸ்தவர்களும்
கிறிஸ்தவரல்லாதவர்களுமான ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கடைசி யாத்திரையில் கலந்து
கொண்டு சாட்சியப்படுத்தினார்.
|
“வெற்றியும் முழுவதையும்
இறைவனுக்கே வழங்க வேண்டும்.” (மார் இவானியோஸ்) |
34. கல்லறை

பேராயரின் உடல் பட்டம் பேராலயத்தில் உள்ள பலிபீடத்தின்
கீழ்ப்பகுதியில் சிறப்பாக தயாரிக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. ஆன்ம திருப்தியும்,
சாந்தியும்,
சமாதானமும்
கிடைக்கும் கல்லறைக்கு இன்று பலர் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
|
“கிறிஸ்தவ தேவாலயங்களின்
ஒற்றுமைக்காகவும், அமைதிக்காகவும்
பிரார்த்தனை செய்யுங்கள்.” (மார் இவானியோஸ்) |
"ஆன்மீகக் கொள்கைகளை அறிவால் விவாதிப்பதை விட, ஆன்மீக உண்மையை இதயத்தால் சுவைத்து அதன்
இனிமையை உணர்வதுவே சிறந்தது." (மார் இவானியோஸ்)
"அருள் நிறைந்த கன்னி மரியாவே, எனது மனமாற்றத்தை நீர் விரும்புகிறீரன்றோ! எனக்காக
வேண்டிக்கொள்ளுங்கள்.” (மார் இவானியோஸ்)
“எனது ஆன்மாவின் மீட்புக்காகவும் உமது மகனின் திருப்பெயர் மகிமைக்காகவும்
எனது வாழ்வை சீர்ப்படுத்த இறை அன்னையே எனக்காக பரிந்துரை வேண்டுவீராக.” (மார்
இவானியோஸ்)
പുനരൈക്യ
വാർഷികത്തോടനുബന്ധിച്ച് നമ്മുടെ എല്ലാമെല്ലാമായ ധന്യൻ മോർ ഈവാനിയോസ് തിരുമേനി
വിശ്വാസത്തിലേക്ക് എത്തിച്ചേരുന്ന അക്രൈസ്തവ സഹോദരങ്ങൾക്ക് വിശുദ്ധ മാമ്മോദീസ
നൽകുന്ന ഒരു അപൂർവ്വ ചിത്രം ❣️
മലങ്കര സഭയുടെ ചരിത്രത്തിൽ ഫ്രാൻസിസ്ക്കൻ മിഷണറി
ബ്രദേഴ്സിൻ്റെ മിഷൻ പ്രവർത്തനം ചരിത്രത്താളുകളിൽ എഴുതിച്ചേർക്കേണ്ടതാണ്.
തിരുവനന്തപുരം മേജർ അതിഭദ്രാസനത്തിൻ്റെ തെക്കൻ മേഖലകളിലെ അനേകം പള്ളികൾ അവർ
പണിതുയർത്തി സഭയ്ക്ക് നൽകി. ആയിരക്കണക്കിനു ആളുകളെ വി. മാമോദീസ നൽകി. ആത്മീയ
ദാഹാർത്ഥികൾക്ക് വചനവും വിശക്കുന്നവന് ഭക്ഷണവും നൽകി. ഈ സമൂഹത്തിൻ്റെ ആദ്യകാല (1936) പ്രവർത്തനമേഖല
കാരക്കാട് (പത്തനംതിട്ട ഭദ്രാസനം) ആയിരുന്നു. അവിടെയുള്ള ഒരു അക്രൈസ്തവ കുടുംബത്തെ
ഈ സമൂഹം സഭയിലേക്കാനയിക്കുന്ന ചിത്രമാണ് കാണിച്ചിരിക്കുന്നത്. പമ്പുരേത്ത്
കശ്ശീശ്ശോമാരുൾപ്പെടെയുള്ള വലിയ സമൂഹത്തിന് രൂപം കൊടുത്ത ഇടവകയാണ് കാരക്കാട് ഇടവക.
പുനരൈക്യ പ്രസ്ഥാനത്തിന് വലിയ മിഷൻ സംഭാവനകൾ നൽകിയ ഫ്രാൻസിസ്ക്കൻ മിഷണറി
ബ്രദേഴ്സിന് അഭിവാദ്യങ്ങൾ.
പുനരൈക്യം
നീണാൾ വാഴട്ടെ - മഹാ പുനരയ്ക്യം വിജയിക്കട്ടെ...!!


Comments
Post a Comment