2022 மார்ச் 5 சனி செக் 7:8-14; உரோ 12:9-21; மத் 7:21-29
2022 மார்ச் 5 சனி செக் 7:8-14; உரோ 12:9-21; மத் 7:21-29 மார் எஃப்ரேம் , மார் தியடோர் ஆகியோரின் சிறப்பு நினைவு மோறான் மார் பசேலியோஸ் கிளீமீஸ் காதோலிக்கோஸ் ஆண்டகை பதவியேற்ற நாள் ( 2007) உரோ 12:9-21; 9 உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். 10 உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். 11 விடா முயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். 12 எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள். 13 வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள். 14 உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம். 15 மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள். 16 நீங்கள் ஒருமனத்தவராய் இருங்கள்; உயர்வுமனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள். நீங்கள் உங்களையே அறிவாளிகளெனக் கருதிப் பெருமிதம் கொள்...