2022 மார்ச் 3 வியாழன் யோபு 8:1-22; உரோ 3:1-8; மத் 6:16-18
உரோ 3:1-8;
1 அப்படியானால், மற்றவர்களை விட யூதர்கள் பெற்றுள்ள சிறப்பு என்ன? விருத்தசேதனத்தால் அவர்களுக்குப் பயன் என்ன?
2 எல்லா வகையிலும் அவர்கள் பெரும்பயன் பெற்றுள்ளார்கள். முதலாவது, கடவுளின் வாக்குகள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
3 ஆனால், அவர்களுள் சிலர் அவ்வாக்குகளை நம்பவில்லையே! அதனாலென்ன? அவர்கள் நம்பாதலால், கடவுள் நம்பத்தகாதவர் ஆகிவிடுவாரா?
4 ஒருபோதுமில்லை. மனிதர் எல்லாரும் பொய்யர்; கடவுளோ உண்மை உள்ளவர் என்பது தெளிவாகும். ஏனெனில். "உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது; உம் தண்டனைத் தீர்ப்புகளில் வெற்றி விளங்குகிறது" என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!
5 நீதியற்ற நம் நடத்தையின் மூலம் கடவுளின் நீதி வெளிப்படுமாயின் நாம் என்ன சொல்வோம்? கடவுள் சினந்தெழுந்து தண்டித்தால், அவர் நீதியற்றவர் என்போமா?-இதை நான் மனிதர் பேசும் முறையில் சொல்லுகிறேன்-
6 ஒருபோதும் இல்லை. கடவுள் நீதியற்றவர் என்றால் எப்படி அவர் உலகிற்குத் தீர்ப்பளிக்க முடியும்?
7 என் பொய்ம்மையின் மூலம் கடவுளின் வாய்மை வெளிப்படுவதோடு அவரது மாட்சியும் பெருகுமானால், இன்னும் நான் பாவி எனத் தீர்ப்பளிக்கப்படுவது ஏன்?
8 அப்படியானால், "நன்மை விளையும்படி தீமையைச் செய்வோம்" என்று சொல்லலாமா! நாங்கள் இவ்வாறு கூறுவதாகச் சிலர் எங்கள் மீது வீண்பழி சுமத்துகின்றனர். இவர்கள் தகுந்த தண்டனை பெறுவார்கள்.
மத் 6:16-18
16 மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
17 நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்.
18 அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.
Comments
Post a Comment