3.4.2022 சமியோ ஞாயிறு (பார்வையற்றவருக்குப் பார்வை வழங்குதல்) தவக்காலத்தின் ஆறாம் ஞாயிறு மாற் 10:46-52; இச 25:13-19; யோபு 42:1-9; 1 அர 3:4-15; எரே 51:10-19; 1 பேதுரு 4:12-19; உரோ 14:10-23; யோவா 9:1-41
சமியோ ஞாயிறு (பார்வையற்றவருக்குப் பார்வை வழங்குதல்) தவக்காலத்தின் ஆறாம் ஞாயிறு மாற் 10:46-52; இச 25:13-19; யோபு 42:1-9; 1 அர 3:4-15; எரே 51:10-19; 1 பேதுரு 4:12-19; உரோ 14:10-23; யோவா 9:1-41 (அடுத்து வரும் வெள்ளிக் கிழமை நாற்பதாம் வெள்ளியாகும். அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஓசானா திருநாள், குருத்தோலை மற்றும் பூக்கள் கொண்டுவர இறைமக்களை நினைவூட்டவும்) உரோ 14:10-23 10 அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் குற்றம் காண்கிறீர்கள்? ஏன் அவர்களை இழிவாகக் கருதுகிறீர்கள்? நாம் அனைவருமே கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா? 11 ஏனெனில், "ஆண்டவர் சொல்கிறார்; நான் என் மேல் ஆணையிட்டுள்ளேன்; முழங்கால் அனைத்தும் எனக்கு முன் மண்டியிடும். நாவு அனைத்தும் என்னைப் போற்றும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! 12 ஆகவே, நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர். 13 ஆகையால், இனி ஒருவர் மற்றவரிடம் குற்றம் காணாதிருப்போம். மேலும் சகோதரர் சகோதரிகளுக்குத் தடைக்கல்லாகவோ இடையூறாகவோ இருப்பதில்லை எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். 14 தன்னிலேயே எப்பொருளும்...