பெந்தக்கோஸ்தேக்குப்பின் நான்காம் ஞாயிறு , துக்றோனோ (மார் தோமாவின் நினைவு நாள்) (இறை மக்களுக்கான திருப்பலி) ஜோசப் மார் தோமஸ் ஆண்டகையின் பெயர்விழா குடும்ப தினம்
பெந்தக்கோஸ்தேக்குப்பின் நான்காம் ஞாயிறு லூக் 10:1-16; இச 33:23-29; யோசு 6:14-18; திபா 15:1-5; எசா 65:8-12; திப 6:1-7; 1 கொரி 10:14-22; லூக் 10:17-20 துக்றோனோ (மார் தோமாவின் நினைவு நாள்) (இறை மக்களுக்கான திருப்பலி) யோவா 14:1-6; தொநூ 12:1-9; நீமொ 4:10-18; யோபு 23:1-7; எசா 52:1-15; 1 பேதுரு 2:15-17; 1 கொரி 4:15-21; யோவா 20:19-29 ஜோசப் மார் தோமஸ் ஆண்டகையின் பெயர்விழா குடும்ப தினம் 1 பேதுரு 2:15-17; 15 இவ்வாறு நீங்கள் நன்மையைச் செய்ய முன்வருவதன் மூலம், மதிகெட்ட அறிவிலிகளை வாயடைக்கச் செய்யவேண்டுமென்பதே கடவுளின் திருவுளம். 16 நீங்கள் விடுதலை பெற்றுள்ளீர்கள்; விடுதலை என்னும் போர்வையில் தீமை செய்யாதீர்கள்; கடவுளுக்கே அடிமைகளாய் இருங்கள். 17 எல்லாருக்கும் மதிப்புக் கொடுங்கள்; சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்துங்கள்; கடவுளுக்கு அஞ்சுங்கள்; அரசருக்கு மதிப்புக் கொடுங்கள். 1 கொரி 4:15-21; 15 கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம்; ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன். 16 ஆகையால் நீங்கள் என்னைப்போலாகுங்கள் என அறிவுரை ...