போதை நோய் விழிப்புணர்வு பேரணிக்குப் பயன்படும் முழக்கச் சொற்கள்
போதை நோய்
விழிப்புணர்வு பேரணிக்குப் பயன்படும் முழக்கச் சொற்கள்
போதை வேண்டாம்
விட்டு விடு விட்டு விடு
போதைப் பொருளை விட்டு விடு
ஓடி விடு ஓடி விடு
போதையை விட்டு ஓடிவிடு
மறந்து விடு மறந்து விடு
போதைப் பொருளை மறந்து விடு
களைந்து விடு களைந்து
விடு
போதைப் பொருளை களைந்து விடு
விரட்டி விடு விரட்டி விடு
போதை நோயை விரட்டி விடு
போதையினால் வென்றவர்கள்
யாருமில்லை யாருமில்லை
போதையினால் உயர்ந்தவர்கள்
யாருமில்லை யாருமில்லை
போதையினால் சிறந்தவர்கள்
யாருமில்லை யாருமில்லை
போதையினால் சாதித்தோர்
யாருமில்லை யாருமில்லை
போதையினால் சான்றோர்கள்
யாருமில்லை யாருமில்லை
போதையினால் வலுப்பெறுவோர்
யாருமில்லை யாருமில்லை
போதையினால் ஆயுள் பெறுவோர்
யாருமில்லை யாருமில்லை
போதையினை துவங்கிடுவோர்
இஞ்சிஞ்சாய் சாவார்கள்
"ஒரே
ஒரு தடவை தான்”
என்றவர்கள் மடிவார்கள்
“இன்று
ஒருநாள் மட்டும் தான்”
என்றவர்கள் மடிவார்கள்
“கொஞசம் தான்
பாதிக்காது”
என்றவர்கள் மடிவார்கள்
“உயர்தரமே
பாதிக்காது”
என்றவர்கள் மடிவார்கள்
“விலையுயர்ந்தால்
பாதிக்காது.
என்றவர்கள் மடிவார்கள்
“லேசான
பானம் எடுக்கிறேன்”
என்றவர்கள் மடிவார்கள்
“மருந்துக்குத்தானே
எடுக்கிறேன்”
என்றவர்கள் மடிவார்கள்
போதை நோய் உடையவர்கள்
மூளை நோய் உடையவர்கள்
போதை நோய் உடையவர்கள்
குடும்ப நோய் உடையவர்கள்
போதை நோய் உடையவர்கள்
சமூக நோய் உடையவர்கள்
போதை நோய் உடையவர்கள்
பரவும் நோய் உடையவர்கள்
போதை நோய் உடையவர்கள்
வெறுக்கும் நோய்
உடையவர்கள்
போதை நோய் உடையவர்கள்
இழக்கும் நோய் உடையவர்கள்
போதை நோய் உடையவர்கள்
சாகும் நோய் உடையவர்கள்
போதை நோய் உடையவர்கள்
அழுகுரல் நோய் உடையவர்கள்
போதையினைக் கொண்டிடுவோர்
சகநோயாளியாக்கிடுவர்
போதையினைக் கொண்டதனால்
மனைவியும் சகநோயாளி
போதையினைக் கொண்டதனால்
பிள்ளகளும் சகநோயாளி
போதையினைக் கொண்டதனால்
அப்பாவும் சகநோயாளி
போதையினைக் கொண்டதனால்
அம்மாவும் சகநோயாளி
போதையினைக் கொண்டதனால்
நண்பர்களும் சகநோயாளி
போதையினைக் கொண்டதனால்
உற்றாரும் சகநோயாளி
போதையினைக் கொண்டதனால்
உடன் வாழ்வோரும்
சகநோயாளி
போதையினைக் கொண்டதனால்
பராமரிப்போரும்
சகநோயாளி
போதையினைக் கொண்டதனால்
சமூகமே சகநோயாளி
போதையினைக் கொண்டவர்கள்
நொடி நொடியாய் இழந்திடுவர்
மதுவினையேக் குடித்தவர்கள்
வாழ்வினையே குடித்து விடும்
புகை புகையாய் இன்புறுவோர்
மிகை வாழ்வை இழந்திடுவர்
கஞ்சாவினால் மகிழ்ந்திடுவோர்
தன்னைத்தான் கொல்பவர்கள்
நறுமணமாய் மணத்திடுவோர்
சிறுகணமே செத்துடுவர்
Comments
Post a Comment