மார்த்தாண்டத்தை உயர்த்தியவர் ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம்
மார்த்தாண்டத்தை உயர்த்தியவர் ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் 1998 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக மேதகு ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் அவர்கள் அறிவிக்கப்பட்ட போது மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி தென்பட்டது. ஏனென்றால் முதலாம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பட்டம் என்னுமிடத்தில் அமைந்திருந்த அருட்பணித்துவ பயிற்சியகத்தில் முதலாமாண்டு கற்கின்ற போது காலை நேரங்களில் தியானப் பயிற்சிகள் பல நிகழ்த்தி ஆன்மீக வளர்ச்சிக்கு வித்திட்ட மிகப்பெரிய மாமேதையாய் அவரை அறிந்திருந்தேன். என்னை குருவாக அருட்பொழிவு செய்தவரும் இவரே. நீண்ட ஏழு ஆண்டுகள் ஆயரின் செயலராகவும், மறைமாவட்ட பொருளராகவும் இணைந்து பணிபுரிய இறைவன் அளித்த பெரும் பேற்றை எண்ணி மகிழ்கிறேன். இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். நம் ஆயர் அவர்கள் கொண்டிருந்த நற்பண்புகள் ஏராளம். ஏராளம். ஏராளம். அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டுமே நான் இங்கு குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன். 1. இறை வேண்டுதலில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். மாலை உணவு முடிந்த பின்னர் நேராக...