மறக்க மறுக்கும் மாமனிதன் மார் கிரிகோரியோஸ்
மறக்க மறுக்கும் மாமனிதன் மார் கிரிகோரியோஸ்
மலங்கரை கத்தோலிக்க திருச்சபை மற்றும் திருவனந்தபுரம்
உயர் மறைமாவட்டத்தின் இரண்டாவது பேராயரான பெனடிக்ட்
மார் கிரிகோரியோஸ் இறந்து விண்வாழ்வில் 25 ஆண்டுகளை தாண்டினாலும் மனித மனங்களில் நினைவில் வாழும் வாழ்கின்ற ஒரு
பேராயராக நம்மால் அவரை இன்றும் உணர முடிகிறது. அன்று தனது தொலைநோக்குப் பார்வையோடு
உரைத்த மறையுரைகள் இன்றும் போற்றப்படுபவையாக உள்ளன. மத இன வேறுபாடு இன்றி அனைத்து
மக்களோடும் திருச்சபையின் மேன்மையை வாழ்ந்து சாட்சியமாக எடுத்துக்காட்டி வந்தார்.
பெனடிக்ட் என்ற சொல்லுக்கு “ஆசீர்வதிக்கப்பட்டவன்”
மற்றும் “இறைவனின் அருளை பெற்றுக் கொண்டவன்” என்ற அர்த்தங்கள உள்ளன. மார் என்ற சுறியானிச்
சொல்லானது மதிப்புக்குரியவர், புனிதர் மற்றும் இறைத்தன்மை கொண்டவர் என்ற
அர்த்தங்களை குறிக்கக்கூடிய சொல்லாகும். கிரிகோரியோஸ் என்ற சொல்லின் அர்த்தம் “விழிப்பாய் இருங்கள்” என்பதாகும்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது சீடர்களோடு கூறிய மற்றும் அவர்கள் செய்வதற்கு பணித்த
சொல்தான் இச்சொல்.
பேராயர் அவர்கள், திருச்சபையின்
அன்புக்குரியவராகவும் திருச்சபையில் ஒளி வீசிக்
கொண்டிருந்த தங்க விண்மீனாகவும் கண்களில் ஒளியும் இதழ்களில் புஞ்சிரியும்,
முகத்தில் விண்மயமான பேரொளியும் கொண்டு அனைவரும் விரும்புகின்ற ஒரு தலைமைக்குரு என
அவரை பல்வேறு விதமாக புகழ்த்திக் கூற முடியும்.
1.
இளமைப்பருவம்
கேரளாவில் பத்தனம்திட்டை மாவட்டத்தில்
கல்லுப்பாற எனும் இடத்தில் பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் அல்லது
தங்கலத்தில் ஆயர் பெப்ருவரி மாதம் முதலாம் தேதி 1916 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது
பெற்றோர் திரு. இடிக்குளா மற்றும் திருமதி அன்னம்மா ஆவார். இவர்களது இரண்டாவது
மகனாக வர்கீஸ் தங்கலத்தில் பிறந்தார். குஞ்ஞுகுட்டி என்ற செல்லப் பெயரால் அவர்
அழைக்கப்பட்டார். வர்கீஸ் தங்கலத்தில் என்ற பெயரினால் அவர் திருமுழுக்கு பெற்றுக்
கொண்டார். அவரது ஆறாவது வயதில் அடிமையாக பருமலை ஆலயத்தில் சமர்ப்பித்தனர்.
திருத்தூதர் தோமாவால் திருமுழுக்கு பெற்றுக்
கொண்ட நான்கு பழம்பெரும் பிராமண குடும்பங்களுள் ஒன்றான கலியங்கள் முண்டு பாலத்திங்கல்
குடும்பத்தின் ஒரு பிரிவினரே தங்களத்தில் குடும்பத்தினர் ஆவர்.
நான்காவது வயதில் அவரது மாமா பாப்பி சார்
என்பவர் மலையாள மொழியை கற்பிக்கத் துவங்கினார். ஐந்தாவது வயதில் புதுச்சேரியில்
உள்ள துவக்க கல்விக் கூடத்தில் சேர்ந்தார். 1932 ல் இரவிப்பேரூர் சென்ட் ஜோன்ஸ்
கல்விக்கூடத்தில் மேல்நிலைப் படிப்பை முடித்துக் கொண்டார்.
இந்தச் சூழலில் தான் மார் இவானியோஸ் ஆண்டகை அவர்கள்
ஆர்த்தடோஸ் திருச்சபையின் மறுமலர்ச்சிக்காக ஏராளமான பெதனி பள்ளிக்கூடங்களை
நிறுவினார். அவற்றுள் ஒன்று தங்கலத்தில் குடும்பத்தினரோடு நெருங்கிய தொடர்பு
கொண்டிருந்தது.
பள்ளிக்கல்வியை தேர்ச்சி பெற்ற பின்னர்
கோட்டயத்தில் காப்பீட்டு நிறுவனம் அதில் வேலை பெற்றுக் கொண்டார். பாலர் பருவம்
முதலில் வர்கீஸ் பெதனி ஆசிரமத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இருந்தார். இதன்
விளைவாக, துறவறத்தில் நாட்டம் கொண்டிருந்த வர்கீஸ், பதனி துறவிகளுடன் நல்ல உறவைப்
பேண முடிந்தது. மிக விரைவில் மலங்கரா தேவாலயத்தின் ஒரு பகுதி கத்தோலிக்க
திருச்சபையுடன் ஒன்றிணைவது மார் இவானியோஸ் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.
ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் உறுப்பினரான வர்கீஸ் மற்றும் பெதனி ஆசிரமத்தின்
உறுப்பினர்களுடனான அவரது உறவு குடும்ப உறுப்பினர்களை கோபப்படுத்தியது. ஆனால், அவர்களுக்குத்
தெரியாமல் அவர் ஏற்கனவே பதனி ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டார்.
1933 ஒரு குருவானவராக வேண்டும் என்ற பேரார்வத்தில்
தனது பணியினை ராஜினாமா செய்து பெதனி ஆசிரமத்திற்குள் நுழைந்தார். நவம்பர் 21, 1933
இல், சகோதரர் வர்கீஸ் நோவிஷியட்டில் நுழைந்தார். 1935 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி
பெனிடிக்ட் என்ற பெயரில் பேராயர் மார் இவானியோஸ் முன்னிலையில் பெதனி துறவு
சமூகத்தில் முதல் உறுதிமொழி நடத்தி சன்னியாச வாழ்வை ஆரம்பித்தார். பின்னர், அவரது
விருப்பத்திற்கு குடும்பத்தினர் சம்மதித்தனர். புனித அலோசியஸ் மைனர் செமினரியில்
சுறியானி மொழியை கற்ற பிறகு, அவர் இறையியல் படிப்புக்காக கண்டி (இலங்கை)
பாப்பல் செமினரிக்கு அனுப்பப்பட்டார். ஆகஸ்ட் 24, 1941 இல், அவர்
தனது நித்திய வார்த்தைப்பாட்டை நிறைவேற்றினார். காண்டி ஆயர் பெர்னான்ட் ரெய்ஞ்சோ ஆகஸ்ட்
24, 1944 இல் அருட்தந்தையாக அருட்பொழிவு செய்தார். மேலும் அவர் தனது முதல் திருப்பலியை
கான்டி செமினரி சிற்றாலயத்தில் ஒப்புக்கொடுத்தார்.
பேராயர் மார் இவானியோஸ் அவரை 1945 ல் புனித
அலோசியஸ் மைனர் செமினரியில் சுறியானி கற்பிக்க நியமித்தார். பெதனி துறவு
சமூகத்தின் குருமாணவர்களின் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டார். பாளையம் மலங்கரை
கத்தோலிக்க ஆலயத்தின் இணை அருள்தந்தையாகவும் நியமிக்கப்பட்டார். மிதிவண்டி ஒன்றில்
பொறுப்புணர்வோடு இப்பணிகளை செவ்வனே அவர் செய்து வந்தார்.
1946 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி செயின்ட்
ஜோசப் கல்லூரியில் இணைந்து பொருளாதாரத்தில் பட்டம் பெற்று 1949 ஆம் ஆண்டு சென்னை
பல்கலைக்கழகத்தில் முதல் ரேங்க் பெற்றார். தொடர்ந்து மார் இவானியோஸ் கல்லூரியின்
முதல் முதல்வராக நியமிக்கப்பட்டார். கல்லூரியில் திறமையான ஆசிரியர்களை நியமனம்
செய்து கல்லூரியை அனைவரும் போற்றப்படக்கூடிய விதத்திற்கு முன்னிலைக்கு கொண்டு
வந்தார். கல்லூரியோடு இணைத்து துவங்கப்பட்ட விடுதியில் குருகுல கல்வி முறையை
அறிமுகம் செய்து குடும்பச் சூழலை உருவாக்கி அருள்தந்தை பெனடிக் அவர்கள் வெற்றி
கண்டார். இரண்டு ஆண்டுகள் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். அமெரிக்காவில்
முனைவர் பட்டம் பெற்றுக்கொண்ட அருள்தந்தை அவர்களை தொடர்ந்து முதல்வராக பணியமர்த்திவிட்டு
இணை முதல்வராக கல்லூரியில் தனது பணியை தொடர்ந்தார்.
பெதனி ஆசிரம குரு மாணவர்களுக்கு ஆன்மீக
குருவாகவும் செயல்பட்டு வந்தார். நெடுமங்காடு பகுதிகளில் உள்ள பல மறைப்பணி
தளங்களுக்கு சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செல்லவும் வீடுகளை சந்திக்கவும்
அவர்களுக்கு நம்பிக்கைப் பயிற்சி வழங்கவும் ஆர்வம் காட்டியிருந்தார். அம்மக்களுடைய
சமூக வாழ்வு மற்றும் வாழ்க்கைத்தரம் வளர்ச்சி அடைய பல்வேறு விதமான திட்டங்களை
தீட்டினார்.
அவர் 1952 இல் ஆயராக
தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி, ஆயரக
தேவாலயத்தில் ரம்பனாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். திருவனந்தபுரம்
பேராயத்தின் துணை ஆயராக 1953 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி பேராயர் மார் இவானியோஸ் அவர்களது
கைகளால் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டு பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் என்ற பெயரை
ஏற்றுக்கொண்டார். மார் இவானியோஸ் அவர்களது மரணத்திற்கு பின்னர் 1955 ஆம்
ஆண்டில் மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் இரண்டாவது பேராயராக திருத்தந்தை
பதினொன்றாம் பயஸ் அவர்களால் நியமிக்கப்பட்டார். அவர் 14 மே 1959 இல்
வத்திக்கானிலிருந்து பாலியம் பெற்றார்.
2. ஆயராக பணிகள்
திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்திற்கு
பல்வேறு விதமான பணிச் சுமைகளும் சவால்களும் நிறைந்திருந்தன. கத்தோலிக்க
திருச்சபையோடு ஒன்றிப்படைந்த யாக்கோபாயா மற்றும் ஆர்த்தடாக்ஸ் குருக்களையும்
அவர்களது குடும்பங்களையும் பாதுகாத்தல், புதிய மறைப்பணித்தளங்களை துவங்குதல், துவங்கப்பட்ட
மறைப்பணித்தளங்களில் ஆலயங்களை நிறுவுதல் மற்றும் அவற்றை பங்குப் பணித்தளமாக
உயர்த்துதல், குருவானவர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்துதல் என பல பணிகள் அடிப்படைத்
தேவையானதாகவே திருச்சபையில் செய்ய வேண்டியிருந்தது. கல்வித்
துறையிலும் மற்று துறைகளிலும் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
கல்வித் துறையிலும் மற்று துறைகளிலும்
பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. கல்வித் துறையிலும் மற்று
துறைகளிலும் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. கல்வித்
துறையிலும் மற்று துறைகளிலும் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
கத்தோலிக்கர் அல்லாத திருச்சபைகளிலிருந்து ஒன்றிப்படைந்த
மலங்கரை மக்களை கத்தோலிக்க நம்பிக்கையில் நிலைப்படுத்துவதற்காக பல்வேறு விதமான
நம்பிக்கை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இளையோருக்கும் முதியவர்களுக்கும்
பல்வேறு விதமான பணித்தளங்கள் ஒதுக்கப்பட்டன. மற்று குருத்துவப் பயிற்சியகங்களிலிருந்து
பயிற்சி முடித்து நியமிக்கப்பட்ட புதிய பங்குத் தந்தையர்களுக்கு மலங்கரை
கத்தோலிக்க திருஅவையின் மரபு பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
மலங்கரை கத்தோலிக்க திரு அவைக்கென்றே ஒரு
உயர் குருத்துவப் பயிற்சியம் உருவாக வேண்டும் என பேராயர் அவர்கள் மேற்கொண்ட
முயற்சிகளை யாராலும் மறக்க முடியாது. மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில்
என்றும் நினைவு கூரக்கூடிய ஒன்றாகவே நிலை நிற்கின்றது.
இந்தியாவில் முழுவதும் மறைப்பணிகளை செய்ய
வேண்டும் என கனவு கண்ட வணக்கத்திற்குரிய மார் இவாயோஸ் அவர்களின் வழியைத் தொடர்ந்து
பேராயர் கிரிகோரியோஸ் அவர்களும் மற்று கிறிஸ்தவ நம்பிக்கையிலிருந்து கத்தோலிக்க
நம்பிக்கைக்கு வந்த ஒவ்வொருவரையும் அன்போடு ஏற்றுக் கொள்ளவும் அவர்களை
ஊக்கப்படுத்தவும் செய்தார்.
திருவனந்தபுரத்திற்கு தென்பகுதியான குமரி
மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மறைப்பணி செய்வதற்காக பேராயர் அவர்களே எடுத்த
முயற்சி பின்னர் மார்த்தாண்டம் மறைமாவட்டம் உருவாவதற்கு காரணமானது. பேராயர்
அவர்களால் முதன் முதலில் குருத்துவப் பட்டம் பெற்றுக் கொண்ட அருள் தந்தை லாரன்ஸ்
தோட்டம் நாளடைவில் மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் முதல் ஆயராக பதவியேற்றார்.
மலங்கரை கத்தோலிக்க திருச்சபையை உயர் பேராயத்
திருஅவையாக தரம் உயர்த்தப்படுவதற்கு முன்னரே ஒரு தனித்திருச்சபைக்கு
அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நிர்வாக முறைகளையும் செயல்படுத்திட நமது பேராயர்
முனைந்து செயல்பட்டார்.
1932 ல் மலங்கரை கத்தோலிக்க திருஅவைக்கு
நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது. மலங்கரை கத்தோலிக்க திருஅவையின் நிர்வாக எல்லை
மலப்புறம் மற்றும் திருச்சூர் பகுதி வழியாக பாய்ந்து செல்லும் பாரதப் புழைக்கு
தென்பகுதி வரை மட்டுமே ஒதுங்கி இருந்தது. இந்த எல்லைப் பகுதியை கேரள மாநிலம் முழுமையாகவும்
கர்நாடக மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்திட
அனுமதி பெற்றுக்கொள்ள பேராயர் மார் கிரிகோரியோஸ் அவர்களால் முடிந்தது. இதுதான் மலங்கரை
கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சியின் முக்கியமான நிலையாக அமைந்தது.
ஜெபத்திலும் நீண்ட
தியானத்திலும் பெற்றுக்கொண்ட இறையருளினால் கத்தோலிக்கத் திருச்சபையோடு ஒன்றிணைமாறு தீர்மானித்த
மலபார் தனி சுறியானித் திருச்சபையின் (தொழியூர்) தலைவரான ஆயர் பவுலோஸ் மார் ஃபீலக்சினோஸ்
அவர்களை 1977 மலங்கரை
கத்தோலிக்க திருச்சபைக்கு அன்போடு வரவேற்றதும் திருச்சபை வரலாற்றில்
அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் முக்கியமான நிகழ்வாகும்.
திருச்சபையின் திருப்பணிகளை
விரிவுபடுத்தவும் மறுஒன்றிப்பு செயல்பாடுகளை கேரளாவின் மலபார் பகுதியில்
வலுப்படுத்தவும் 1978 ஆம் ஆண்டு திருவல்லா மறைமாவட்டத்திலிருந்து பெத்தேரி
மறைமாவட்டம் உருவாக்கவும் அதன் முதல் ஆயராக ஆயர் சிறில் மார் பசேலியோஸ் அவர்களை
நியமிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு திருத்தூதரகத்திலிருந்து ஆணையைப்
பெற்றுக்கொள்ள அவரால் முடிந்தது.
ஆயர் செக்கரியாஸ்
மார் அத்தனாசியோஸ், உயர் பேராயர் சிறில் மார்
பசேலியோஸ், ஆயர் ஐசக் மார் யூஹானோன், ஆயர் கீவர் கீஸ் மார் திமோத்தியோஸ் மற்றும் ஆயர்
இலாரன்ஸ் மார் எஃப்ரேம் ஆகிய ஆயர்களுக்கு ஆயர்களாக வத்திக்கானிலிருந்து பணி
நியமனம் பெறச்செய்து அருட்பொழிவு வழங்குவதற்கு நம் பேராயரால் இயன்றது.
1984 ஆம் ஆண்டு வட
அமெரிக்காவில் மலங்கரை மக்களுக்காக திருச்சபை கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதற்கான
இயக்குனரையும் நியமித்து துவங்கப்பட்ட நிலையில் இன்று ஒரு மறைமாவட்டமாக வளர்ந்து
வந்தது என்பதில் நாம் மகிழ்வடைகிறோம்.
இந்தியாவின் பல நகரங்களிலும் மலங்கரை
மக்களுக்கு கூட்டமைப்புகளை உருவாக்கி ஆலயங்களும் திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கான
வசதிகளையும் வழங்கி அருட்தந்தையர்களின் பணிகளை நியமித்து செயல்படுத்த
துவக்கமிட்டது நம் பேராயர் அவர்கள் ஆவார்.
மலங்கரை கத்தோலிக்க மறுஒன்றிப்பின் பொன்விழா
1980 ஆம் ஆண்டு கோட்டயத்தில் வைத்து ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது. நம் பேராயர்
அவர்கள் இக் கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கினார். ஏழைகளின் தாயான அன்னை தெரசா, கிழக்குத்
திருஅவைகளின் தலைவரான கர்தினால் லாடிஸ்லாவ் ரூபின், மெல்க்கைட் கத்தோலிக்க
மறைமுதுவரான ஐந்தாம் மேக்சிமோஸ் ஹக்கீம் மற்றும் இந்தியாவின் திருத்தூதுவ
அதிகாரியான நுன்ஸியோ பேராயர் லூசியானோ ஸ்டோரேரோ ஆகியோரை இக்கூட்டத்திற்கு
தனிப்பட்ட முறையில் வரவழைத்து மலங்கரைகத்தோலிக்கதிருச்சபைக்கு புகழ் மேம்படச்
செய்தார்.
மலங்கரை கத்தோலிக்க திருஅவையின் தலைவராக
இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் நிரந்தர உறுப்பினராக நம் பேராயர் அவர்கள்
நியமிக்கப்பட்டிருந்தார். 1961 முதல் 1965 வரை நடைபெற்ற அனைத்து கூட்டத்
தொடர்களிலும் நம் பேராயர் அவர்கள் கலந்து கொண்டார். பலவிதமான விடயங்களை பற்றி
விவாதங்களை பற்றியும் தனது கருத்துக்களை பகிர்ந்து அளித்தார். 1985 முதல் ரோமாவின்
ஆயர் மாமன்றத்தின் நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
கேரளா கத்தோலிக்க ஆயர் பேரவை மற்றும் இந்திய
கத்தோலிக்க ஆயர் பேரவையில் தலைமை பதவி வகித்துக் கொண்டு திருச்சபையின்
வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற காரியங்களை செயல்படுத்திட முயன்று வெற்றி கண்டார்.
கேரளா கத்தோலிக்க திருச்சபையின் சமூக நிறுவனத்தின் முதல் பொறுப்பாளராக நம் ஆயர்
அவர்கள் செயல்பட்டிருந்தார்.
3.திருச்சபைகளின் மதங்களின்
ஒன்றிப்பு
திருச்சபைகளின் ஒன்றிப்புக்காக நம் பேராயர்
அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். செயல்படுத்த முனைந்த திட்டங்களும்
செயல்களும் ஏராளம். அவை என்றும் நினைவில் நிற்கின்றன. திருச்சபைகளும் ஒன்றிப்பு வாரத்திற்கு
அதிகமான முக்கியத்துவம் அவர் வழங்கி இருந்தார். பல ஆயர்களோடு இணைந்து கொண்டாடிய
நிகழ்வுகள் ஒவ்வொன்றும் வரலாற்று நிகழ்வுகளாகவே உள்ளன.
நிலய்க்கல் ஆலயத்தில் பல்வேறு விதமான தப்பெண்ணங்கள்
இருந்தாலும் ஒன்றிப்பின் மனப்பான்மையோடு அதனை செயல்படுத்த நம் பேராயர் அவர்களால்
முடிந்தது. நிலய்க்கல் ஒன்றிப்பு மையம் என்பது நம் பேராயர் அவர்களின் நீண்ட கால கனவின்
செயல்பாடு ஆகும்.
திருவனந்தபுரத்தில் அனைத்து
கிறிஸ்தவர்களையும் ஒன்றிணைத்து யுனைடெட் கிறிஸ்டியன் மூவ்மெண்ட் துவங்குவதற்கு
தலைமை தாங்கினார். அனைத்து திருச்சபை சமூகங்களையும் ஒன்றிணைத்து ஐக்கிய
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுகளை ஒன்றிப்போடு செயல்படுத்தியது இன்றும் வெற்றிநடை
போட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்ற
துக்க வெள்ளி தினத்தன்றைய சிலுவைப் பாதையில் அனைவரும் ஒன்றிணைந்து நடத்துவது
மிகவும் பாராட்டுக்குரிய ஒன்றாக உள்ளது. இந்த நிகழ்வுக்கு துவக்கமிட்டவர் நம்
பேராயர் அவர்கள் ஆவார். மரணம் வரையிலும் இந்நிகழ்வுக்கு தனி முக்கியத்துவம்
கொடுத்து மறையுரைகளையும் ஆசீர்களையும் வழங்கி வந்தார்
மலங்கரை கத்தோலிக்க திருச்சபையில் தனது
பணிகளின் மூலம் பொதுவாக மனித சமுதாயத்தின் சேவைக்காக தனது வாழ்க்கையை
அர்ப்பணித்தார். அவர் இந்தியாவின் சமூக மற்றும் மத கட்டமைப்பில் தனது அழியாத
அடையாளங்களை விட்டுச் சென்றார். சமூக பேரழிவுகள் மற்றும் மத அமைதியின்மை காலங்களில்
அவர் சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீண்டும் நிலைநாட்ட முயன்றார். அவர்
மத நல்லிணக்கத்திற்காக அரும்பாடுபட்டவர்.
பல்வேறு விதமான இனக்கலவரங்களும்
மதக்கலவரங்களும் ஏற்பட்ட போது நம் பேராயரின் உதவியோடு சமாதான நிலையை தூண்டுவதற்கு அரசும்
முன் வந்தது. விழிஞ்ஞம், பூவார் மற்றும் சாலை எனும் இடங்களில் நடைபெற்ற
கலவரங்களின் போது ஒரு சமாதான தூதனாக இவர் தனது உடன் இருப்பை சாட்சியப்படுத்தினார்.
“அனைத்து மனிதர்களையும் ஒளிர வைக்கும் உண்மையின்
கதிர்கள் அனைத்து மதங்களிலும் பிரதிபலிக்கின்றன” என்ற இரண்டாம் வத்திக்கான்
திருச்சங்கங்களின் கோட்பாடுகளை தனது உள்ளத்தில் வைத்துக் கொண்டே பிற மதங்களோடு
சகோதர ஒன்றிப்பில் இயேசுவின் அன்பை அவர் வாழ்ந்து காட்டி வந்தார்.
4. திருத்தந்தையர்களின்
சந்திப்பு
புனித பேதுருவின் வழிமரபினரான திருத்தந்தை
முதன்முறையாக இந்தியாவை சந்தித்தபோது மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக
நம் பேராயர் அவர்கள் மும்பையில் வைத்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்வுக்கு சிறப்பான
பங்கேற்பை வகித்தார். 1964 டிசம்பர் மாதத்தில் ஆறாம் பவுல் திருத்தந்தை அவர்கள்
நற்கருணை மாநாட்டில் கலந்து கொள்ள மும்பைக்கு வந்திருந்தார். இந்த சூழலில் நமது
திருச்சபையின் ஒரு சில அருள்தந்தையர்கள் திருத்தந்தையிடமிருந்து குருத்துவ
அருட்பொழிவையும் பெற்றுக் கொண்டனர்.
1986-ல் திருத்தந்தை
இரண்டாம் ஜான் பவுல் அவர்கள் கேரளா வந்தபோது நம் பேராயர் அவர்கள் அந்நிகழ்விற்கு
மிக முக்கியமான தலைமை வகித்தார். பட்டம் புனித மரியன்னை பேராலயத்தில் வைத்து நம்
திருச்சபையின் தலைவரை நம் பேராயர் அவர்கள் ஆடம்பரமான வரவேற்பு வழங்கினார்.
வரலாற்றில் முதல்முறையாக புனித பேதுருவின் வழிமரபினரான திருத்தந்தை மலங்கரை
கத்தோலிக்க திருச்சபையை சந்தித்தபோது நம் பேராயர் அவர்கள் தான் அவரை வரவேற்கும்
பெரும்பேறு கிடைத்தது.
5. மக்களின் முன்னேற்றம்
ஏழைகளின் மேம்பாட்டிற்காக அவர் தொடங்கிய
பல்வேறு திட்டங்கள் ஏராளமாகப் பலன் அளித்தன, அவை பெரிதும் பலராலும் பாராட்டப்பட்டன.
மலங்கரை கத்தோலிக்க திருச்சபை அவரது ஆட்சியின் போது வலிமையுடனும், உயிர்ச்சக்தியுடனும்
வளர்ந்தது.
நாட்டு மக்களின் வளர்ச்சி அவரது கனவாக
இருந்தது. கிராமப்புறங்களில் வளர்ச்சி ஏற்படுத்துவதன் வழி சாதாரண மக்களின்
பொருளாதார நிலை மேம்படுத்துவது அவரது முக்கிய திட்டமாக இருந்தது. அதற்காக பல்வேறு
விதமான செயல் திட்டங்களை அவர் வடிவமைத்திருந்தார். இதை முன்னிறுத்திக் கொண்டுதான் Malankara
social service society என்ற சமூக நல மையத்தை துவங்கினார்.
இந்நிறுவனம் வழியாக கடந்த 60 ஆண்டுகளாக செய்யப்படும் சமூகப் பணிகள் எண்ணிலடங்காதவை.
இயற்கை அன்பரான அவர் மரங்களை அன்பு
செய்தார். மரங்களை நட்டு வளர்த்துதல் என்பதனை ஒரு புண்ணியச் செயலாகக் கருதினார்.
மரங்களின் அன்பர்கள் என்ற இயக்கத்தை உருவாக்கி அதனை மிகப்பெரிய மையமாக வளரச்
செய்தார். இவ்வாறு இயற்கை வழியாக மனிதனின் வளர்ச்சிக்கு அவர் ஊக்கம் காட்டினார்.
வெளிநாடுகளிலிருந்து விருந்தினர்களாக ஆயரகத்திற்கு வருபவர்களை தனது விவசாய நிலப்
பகுதியை காட்டி நாட்டு மக்களின் வளர்ச்சியின் பங்கு எவ்வாறு உள்ளது என்பதனை
தெரிவித்து வந்தார்.
இவரது நிர்வாக காலத்தில் பல்வேறு பங்கு
மறைப்பணித்தளங்கள் உருவாக்கப்பட்டன. திருவனந்தபுரம்
நாளாஞ்சிறையில் மார் தியோபிலஸ் ட்ரைனிங்
கல்லூரி ஒன்று இவரது காலத்தில் நிறுவப்பட்டது. சென்னையில் மார் கிரிகோரியோஸ் கலைக்
கல்லூரி ஒன்றும் நிறுவப்பட்டது. அஞ்சல் சென்ட் ஜோன்ஸ் கல்லூரியும் இவரால்
நிறுவப்பட்டது.
6.
நோய்களின்
தாக்கம்
78 ஆண்டுகாலம்
நோயற்ற வாழ்க்கை வாழ்ந்த நம் பேராயர் தனது வாழ்வில் பணிகளை செய்வதற்கே தனது தனிக்
கவனத்தை செலுத்தவும் தனது நேரத்தை செலவிடவும் செய்திருந்தார். 1980 ல் குடலிறக்கம்
காரணமாக அறுவை சிகிச்சை செய்த நிலை அல்லாமல் வேறு எந்த விதமான மிகப்பெரிய நோயும்
அவரது உடலை தொற்றிக் கொள்ளவில்லை.
1994 ஜூன் மாதம்
மூன்றாவது வாரத்தில் இருந்து கண்களில் நீர் வழிதல் நுரையீரலில் சுவாசக் கோளாறு
காய்ச்சல் போன்ற நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சேர்ந்தன. நோயின் கொடூரம் கூடிக்
கொண்டிருந்த போதும் ஜூலை இரண்டாம் தேதி சென்னையில் கல்லூரி ஒன்றின் திறப்பு
விழாவிற்கு அவர் சென்றிருந்தார். பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஐந்தாம் தேதி திருவனந்தபுரம்
வந்தடைந்த அவர் தனது உடல் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கக் கூடிய நிலைக்கு
தள்ளப்பட்டார்.
முதுகு வேதனை
காரணமாக தீவிர சிகிச்சை மேற்கொண்ட போது தினந்தோறும் நான்கு முறை இன்ஃபிரா ரேட்
லேம்ப் பயன்படுத்தி சிகிச்சை செய்யப்பட்டு வந்தது.
ஆயர் அவர்களுடைய
எலும்பு வலுவிழந்தது. ஒரு பல் வலியால் எந்த அளவுக்கு நாம் பாதிப்படைந்து
கஷ்டப்படுகிறோமோ அதைப் போன்று ஆயரின் ஒவ்வொரு எலும்பும் வலுவிழந்து கொடூரமான வலியால்
துடித்துக் கொண்டிருக்கிறது. எலும்பு புற்றுநோயால் பாதித்த ஒருவர் தனது அனுபவத்தை இவ்வாறு
கூறியுள்ளார். “ஏழு வார்ப்புக்கள் ஒன்றாக எரிய வைத்து அதன் மேல் படுக்க வைக்கப்பட்டதைப்
போன்ற வேதனையும் எரிச்சலும்” இதுவே இந்த நோயின் கடித் தன்மையை சுட்டிக்காட்டுகின்றது.
இவ்வாறு தன்னைக்
காண வந்திருந்த உறவினர்களோடும் அன்பர்களோடும் எனக்காக நீங்கள் ஜெபிக்க வேண்டும் என
ஜெப வாக்குறுதியை கேட்டுக் கொண்டிருந்தார்.
ஜூலை 15 ஆம் தேதி
மார் இவானியோஸ் நினைவுத்திருநாளன்று திருப்பலி ஒப்புக்கொடுக்க தலைமை கோவிலுக்கு
செல்வதற்கு இயலாமல் போனது. பொதுக் கூட்ட வேளையில் மட்டும் வந்து ஒரு சிறிய
செய்தியை அவர் வழங்கினார். தொடர்ந்து மார் இவானியோஸ் அவர்களுடைய கல்லறையில் தனியாக
நடந்து சென்று தூபம் வீசி மன்றாட்டுகளை நடத்தினார்.
ஜூலை 17 முதல் மாலை
நேரங்களில் பேராயர் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பலர் அவரோடு இணைந்து
திருப்பலி ஒப்புக்கொடுக்க உதவி புரியத் துவங்கினர்.
செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி டாக்டர் பி எம் தாமஸ் அவர்களுடைய தலைமையில் மருத்துவக் கல்லூரியில் வைத்து நடைபெற்ற தீவிர சிகிச்சையின் காரணமாக பேராயர் அவர்களின் உடல்நிலை சற்று முன்னேறிய நிலையிலும் மரணத்தின் வாயிலில் அவர் இருப்பதாகவே மருத்துவக் குழுவினர் அறிவித்தனர்.
செப்டம்பர் மாதம்
28ஆம் தேதி மருத்துவமனையில் படுக்கையில் இருந்த போது இரண்டு முறை இறைக்காட்சி
கண்டதாக கூறினார். மேற்கூரையை சூண்டியவாறு பின்வருமாறு கூறினார். “வெண்ணாடை அணிந்த
சில குழந்தைகள் ஆடம்பர பவனி ஒன்றை நடத்துவதை நீங்கள் காண்கிறீர்களா.” அருகில்
இருந்த அருள் சகோதரி பார்பரா இவ்வாறு கூறினார். ஆயர் அவர்களே நீங்கள் விண்ணகத்தில்
இறைதூதர்களை காண்கிறீர்களே. அன்று முதல் பேராயர் அவர்கள் நல்ல மரணத்திற்கு
ஆயத்தமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
அறுவை சிகிச்சையின்
தையல் பிரிப்பதற்கு முன்னரே மருத்துவமனையில் இருந்து ஆயரகத்திற்கு அனுப்பலாம்
என்று மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். அக்டோபர் நான்காம் தேதி பிரான்சிஸ் அசிசியாரின்
திருவிழாவை ஆடம்பரமான திருப்பலியோடு ஆயிரகத்திலேயே நிறைவேற்றலாமே என்ற
மகிழ்ச்சியான எண்ணத்தில் அவர் மகிழ்ந்திருந்தார். இவ்வாறாக அக்டோபர் நான்காம் தேதி
மருத்துவமனையில் இருந்து ஆயிரகத்திற்கு செல்கின்ற தருணத்தில் அவருக்கு பணிவிடை
புரிந்த அனைத்து மருத்துவர்களும் செவிலியர் குழுவினரும் ஆயர் அவர்களிடமிருந்து
முழங்கால் படியிட்டு ஆசீர்களைப் பெற்றுக் கொண்டனர்.
ஆயரகத்திற்கு வந்த
பின்னர் மீண்டும் உடல்நிலை மோசமாக ஆரம்பித்தது. நுரையீரலில் நீர் கட்டு அதிகமாக
இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்து அதனை வெளியேற்றுவதற்காக சிகிச்சைகளை
மேற்கொண்டனர். சுவாசிப்பதற்கும் சிரமம் ஏற்பட்டது.
7. இறுதி அறிவுரைகள்
ஆறாம் தேதி அன்று
மருத்துவக் குழுவினர் மீண்டும் தீவிர சிகிச்சை செய்த பின்னரும் உடல்நிலை சற்று
மோசமாகி வரவே அக்டோபர் ஏழாம் தேதி ஆயர் அவர்களை மருத்துவக் கல்லூரிக்கு சென்று
சேர்க்குமாறு அறிவுறுத்தனர். இவ்வாறு மீண்டும் மருத்துவக் கல்லூரிக்குச்
செல்வதற்கு முன்னால் அங்கிருந்த குருக்கள் சிலருக்கு ஒரு சில வழிமுறைகளும்
உபதேசங்களும் அறிவுரைகளும் வழங்கினார்.
அருள் சகோதரி மக்ரீனா
அவர்களோடு ஒரு சில அறிவுரைகளை வழங்கினார். பணிபுரிகின்ற இடங்களில் ஏழைகளின்
மத்தியில் மனப்பூர்வமாக செயல்பட வேண்டும். ஏழைகளுக்காக தினமும் 2 மணி நேரமாவது
செலவிட வேண்டும். வீடு சந்திப்பு நடத்த வேண்டும். பேராயர் மார் இவானியோஸ்
அவர்களின் ஆழ்ந்த சிந்தனைகளை உட்கொள்ள வேண்டும். பேராயர் மார் இவானியோஸ் அவர்கள்
செயல்பட்டதைப் போன்று நாமும் செயல்பட முன்வர வேண்டும். அதிகமாக ஜெபிக்க வேண்டும்.
ஜெபத்திற்கு பின்னர் மட்டுமே செயல்களை செய்தல் வேண்டும். ஜெபத்திற்காக எப்போதும் தனியாக
நேரம் ஒதுக்க வேண்டும்.
லீஜியனை
வலுப்படுத்த வேண்டும். ஜெபக்கூட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும். அன்னையர் கூட்டத்தை
வழிமுறைப்படுத்த வேண்டும். அன்னை மரியாவோடு உள்ள தனி பக்திகளுக்கு கவனம் செலுத்த
வேண்டும். கடமான்குளம் என்னும் இடத்தில் உருவாகின்ற கன்னியர் மடம் வழியாக ஏராளமான
நன்மைகள் உருவாக வேண்டும்.
ஐரோப்பிய
நாடுகளுக்கு செல்வதன் நோக்கம் பணம் சம்பாதித்தலும் நிறுவனங்களின் உயர்வுமாக
மட்டும் அமைதல் கூடாது. பணம் எதற்காக வாழ்வதற்காக மட்டும் பணம் போதுமானது. சுயமாக
தொழிலை கண்ட்டைய ஏழைகளுக்கு உதவ வேண்டும்.
இறைவனுடைய
பராமரிப்பில் மகிழ்வோடு இருக்க வேண்டும். அனைத்துமே இறைவனின் கைகளில் பத்திரமாக
உள்ளது. நோயற்ற அருள்கன்னியர்களை ஆர்வத்தோடு பணிவிடை செய்ய வேண்டும். வேளை
ஜெபங்களை உரத்த குரலில் பக்தியோடு ஜெபித்தல் வேண்டும்.
அக்டோபர் ஏழாம்
தேதி ஆயரகத்திலிருந்து மருத்துவமனைக்குச் செல்கின்ற போது ஒரு பாடல் பாடி செல்வோம்
எனக் கூறியவாறு “என்னோடுள்ள நின் சர்வ நன்மகட்காய் .................” என்ற பாடலை
அனைவரும் இணைந்து பாடினர். அருட்கன்னியர்களோடு வெள்ளைத் துணிகளை பத்திரமாக
எடுத்துக் கொள்ளுங்கள். நான் என் தந்தையின் இல்லத்திற்கு புறப்படத் தயாராகிறேன் என
மகிழ்வோடு கூறி மருத்துவமனைக்கு புறப்பட்டார்.
மருத்துவமனையில் ஆயர்களான
கி வர்கீஸ் மார் திமோத்தியோஸ், ஆயர் லாரன்ஸ் மார் எஃப்ரேம், ஆயர் பவுலோஸ் மார்
பீலக்ஸீனோஸ் மற்றும் மோன்சிஞ்ஞோர் தாமஸ் கும்புக்காட்டு ஆகியோர் அவரோடு உடன்
இருந்தனர். வேளை ஜெபங்களையும் மற்ற தனி பக்தி முயற்சிகளையும் ஆர்வத்தோடு
செல்வதற்கு அவர் தனிக் கவனம் செலுத்தி வந்தார்.
அக்டோபர் மாதம்
எட்டாம் தேதி ஒன்றே முக்கால் மணிக்கு ஆயர் அவர்களுடைய சுவாசிக்கும் நிலைக்கு சற்று
பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக மீண்டும் அவரால்
தனியாக சுவாசிக்க முடிந்தது. இருப்பினும் உடல் நிலையில் பெரிய முன்னேற்றம்
காணப்படவில்லை. எந்த நேரத்திலும் இறப்பு ஏற்படலாம் என்ற சூழலில் ஆறு மணி வரை
நீண்டது.
மருத்துவரான ஏலிக்குட்டி
அவர்களுடைய மற்றும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் நுரையீரல் பகுதியில்
இருந்த நீர்க் கட்டுக்களை அகற்றுவதற்கு முயன்றனர். ஆயர் அவர்களும் அதற்கு
ஒத்துழைப்பு வழங்கினார். ஆக்சிஜன் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. உடல்நிலை மோசமாகி
கொண்டிருந்த சூழலில் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செய்தித்தாளில்
விவரங்களை அறிந்த இறைமக்கள் ஆயரைக் காண்பதற்காக மருத்துவமனையை சுற்றி நின்றனர்.
ஒன்பதாம் தேதி
காலையில் ஆயர் அவர்களது முகம் ஒளி வீசியவாறு அமைந்திருந்தது. ஆயர் லாரன்ஸ் மார்
எஃப்ரேம் அவர்கள் திருப்பலி ஒப்புக்கொடுக்கவும் பேராயர் அவர்கள் நற்கருணையை
பெற்றுக் கொள்ளவும் செய்தார். ஆயர் அவர்களோடு தொடர்ந்து பலவிதமான விடயங்களைப்
பற்றி அவர் பேசினார். இயலாத சூழலிலும் நல்ல மனப்பூர்வமான அறிவோடு பல காரியங்களை
அவரிடம் எடுத்துக் கூறினார்.
மரணத்தை சந்திக்க
வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற எண்ணம் அவருக்கு அதிகமாக இருந்தது. சென்னையில்
பணிபுரிந்து கொண்டிருந்த இன்றைய ஆயர் ஜோஸ்வாமார் இக்னாத்தியோஸ் அவர்கள் பேராயர்
அவர்களின் கைகளில் பற்றியவாறு தடவிக் கொண்டிருந்தார். அருட்கன்னியர்களும் உடன்
இருந்தனர் ஆயிரம் அவர்களுடைய உறவினர்களான திரு. மத்தாயிக்குட்டி, குரியாக்கோஸ்,
ஆன்றணி பவ்வத்து, பாப்சன் பிஏ ஜேக்கப் ஆகியோர் உடன் இருந்தனர். வெளியே காத்து
நின்றவர்கள் கண்ணாடி வழியாக ஆயரின் நிலையை கண்டவாறு நின்றனர்.
அப்போது கீழ்க்குறிப்பிட்ட
காரியங்களை ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் ஆண்டகை அவர்களோடு பேராயர் அவர்கள்
அறிவுரையாக கூறினார்.
1.
தந்தையோடும்
தாயோடும் உள்ள நன்றிக்கடனை ஒருபோதும் மறக்கக்கூடாது.
2.
எனக்கு
சொந்தமான சொத்துக்கள் பிராவிடண்ட் பண்ட் ஆகியவை உயர்மறை மாவட்டத்திற்கு உரியது
ஆகும். இவற்றையே அவரது குடும்பத்தினர் கேட்டனரா என ஆயிரம் அவர்கள் கேட்க. நாங்கள்
எதற்குமே இங்கு வரமாட்டோம் என்று குடும்பத்தினர் அப்போது பதில் கூறிய போது பேராயர்
அவர்கள் மகிழ்வோடு காணப்பட்டார்.
3.
நான் ஒப்புக்
கொடுத்த திருப்பலிகள் அனைத்தும் உயர்மறை மாவட்டத்திற்காகவே ஆகும்.
4.
அனைவரும்
ஒத்துழைத்து திருவழிபாட்டை சிறப்புறச் செய்ய வேண்டும்
5.
அனைத்து
ஆயர்களோடும் அருள் தந்தையர்களோடும் மன்னிப்பு வேண்டுகின்றேன் நானும் அவர்களை
மன்னிக்கின்றேன்.
6.
திறமையுள்ள
இளம் குருவானவர்களை கற்க வைக்க வேண்டும். வாரி வாணியோ சானகி அவர்களைப் போன்று
அத்தகைய கருத்து நிலையில் நானும் உள்ளேன். திருச்சபைக்கு பணிவிடை புரிய வேண்டும்
என்ற எண்ணத்தோடு மட்டுமே இளம் குருவானவர்களை மேற்படிப்புக்கு அனுப்ப வேண்டும்.
அத்தகைய ஒரு சிலையற்றோடு கடினமாக பேச வேண்டி வந்தது. அவர்களோடும் நான் மன்னிப்பு
வேண்டுகிறேன். தற்போது மேற்படிப்புக்காக சென்றவர்கள் அதிக ஈடுபாட்டோடு கற்குமாறு
ஆவன செய்ய வேண்டும்.
7.
குருத்துவ
பயிற்சியக மாணவர்கள் அன்பிலும் இரக்கத்திலும் வளர வேண்டும். அவர்களை
கற்பிப்பவர்கள் முன்மாதிரி உள்ளவர்களாக இருக்க வேண்டும். திறமை கொண்டவர்களுக்கு
சிறப்பான ஊக்கம் வழங்க வேண்டும்.
8.
ஏழைகளோடு
இரக்கம் காட்ட வேண்டும். ஏழைகளுக்கு அன்பு காட்ட வேண்டும் அவர்களுக்கு உதவ
வேண்டும் மாஞ்சிய மரத்தின் லாபத்தை ஏழைகளுக்காக பயன்படுத்த வேண்டும்.
9.
ஏழைகளுக்கு
மக்களுக்கு நன்மை செய்வதற்கு வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு அரசியல்வாதிகளால்
மட்டுமே பணிகளை செய்ய முடியும் அதற்காகவே நானும் அரசியல் பிரமுகர்களோடு நல்ல உறவு
கொண்டிருந்தேன் தொடர்பு வைத்திருந்தேன். அவர்களும் மக்களுக்கு பணிவிடை புரிய
ஒத்துழைப்பு வழங்கினார். நானும் அதனால் மகிழ்வடைகிறேன்.
அருட்சகோதரி மக்றீனா
அவர்கள் துறவு சபைகளான பெதனி கன்னியர்கள் மற்றும் மேரி மக்கள் அருள்
கனியர்களுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். “நான் மன்னிக்கின்றேன். நீங்களும்
என்னை மன்னியுங்கள். நான் உங்களோடு கேட்டுக் கொண்ட அனைத்தையும் நீங்கள் நிறைவேற்ற
வேண்டும்” என பதிலுரை வழங்கினார். மோன்சிஞ்ஞோர் கும்பக்காட்டு அருள் தந்தை அவர்கள்
ஆயர் அவர்களோடு மன்னிப்பு கூறவும் ஆயர் அவர்களும் அவர் கூறிய காரியங்களுக்கு
மன்னிப்பு வேண்டினார். அந்த அறையில் இருந்த திரு பாப்சன் பி ஏ ஜேக்கப் முன்
வந்தார். ஆயிரம் அவர்கள் அவர்களிடம் சிதறி இருக்கின்ற மக்களின் ஒன்றிணைப்பைப்
பற்றியும், நிலக்கல் இயக்கம், ஆயர்கள் ஒருமித்த உரோமை நோக்கிய திருப்பயணம், திருச்சபைகளின்
ஒன்றிப்பின் தேவை மற்றும் அவற்றிற்காக நாம் மேற்கொள்ள வேண்டிய தியாகங்கள்
போன்றவற்றைப் பற்றி ஆயர் அவர்களுடன் எடுத்துரைத்தார். ஆயர் கிளீமீஸ் மற்றும் காதோலிக்கோஸ்
ஆ்டகையர்களை விசாரித்ததாக கூற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சற்று தண்ணீர்
அருந்திய பின்னர் சிலுவை ஒன்றை கேட்டு வாங்கி முத்தம் செய்தார். தனது இரு
கரங்களையும் நெஞ்சில் வைத்து ம௳னமாக ஜெபித்தார்.
ஆயர் லாரன்ஸ் மார்
எஃப்ரேம் அவர்கள் அவர்களோடு மன்னிப்பு வேண்டினார்.
“மன்னித்து இருக்கின்றேன்.
என்னையும் மன்னியுங்கள்” என வேண்டினார். உயர் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து குருக்கள்
சார்பாகவும் ஆயர் அவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை
காலையில் அவருக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்குகின்ற அருட்தந்தை ஜான் மயிலக்கரையை
அழைத்து ஒப்புரவு அருட்சாதனம் பெற்றுக் கொண்டார். “இன்றும் நாளையும் அருள் தந்தை
அவர்கள் என்னோடு பக்கத்தில் அமர்ந்திருக்க வேண்டும். திருப்பாடல்களை எனக்காக
சொல்லித்தர வேண்டும். என்னால் இணைந்து ஜெபிக்க முடியவில்லை என்றாலும் நான் அதனை
கேட்டு மனதிற்குள் ஜெபித்துக் கொள்ளலாம்.” என கேட்டுக் கொண்டார்.
ஒப்புரவு அருள்
சாதனத்திற்கு பின்னர் மருத்துவர் ராமச்சந்திரன் அவர்கள் அங்கு வந்தார். அவரோடு
நான் அடுத்த அத்தியாயத்திற்குள் நுழைந்திருக்கின்றேன்.
விண்ணகத்திற்குச் சென்றாலும்
ஏராளமான காரியங்களை என்னால் செய்ய முடியுமே! என்ற வார்த்தைகள் மரணத்தோடு தான்
தயார் நிலையில் இருக்கக்கூடியவற்றை விளக்கிக் காட்டுகிறது.
புனித பெர்க்மான்ஸ்
அவர்களோடு விளையாடிக் கொண்டிருக்கின்ற போது தாங்கள் இறக்கப் போகின்றீர்கள் என
அறிந்தால் நான் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பேன் எனக் கூறிய நிகழ்வு தான்
பேராயர் அவர்களுடைய வாழ்க்கையிலும் நடந்தேறி இருக்கின்றது.
ஞாயிற்றுக்கிழமை
மதிய வேளையில் நோயின் கடினம் தீவிரமானது. செயற்கை முறையில் சுவாசிக்க வேண்டிய
சூழல் ஏற்பட்டது. அப்போதுதான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த ஆயர் சிறில் மார்
பெசலியோஸ் அவர்கள் வெளிநாட்டிலிருந்து ஆயர் அவர்களை சந்திக்கின்றார். பேராயர்
அவர்கள் அவரை அறிந்து கொண்டார். இருவரும் கணகளில் கண்ணீர் தடுதும்ப அன்பை
பரிமாறிக் கொண்டனர். நேரம் செல்லச் செல்ல சுயமாகவே சுவாசிக்கும் திறன் கடினமாக
இருந்தது. ஒவ்வொரு முறையும் காற்றை உள்ளிழுத்து வெளியேற்றுகின்ற போதும் இயேசுவே,
இயேசுவே என்ற சொல்லையும் சேர்த்து அவர் செபித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு
முறையும் அவர் இவ்வாறு செபித்த போது ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரம் அவர்கள், I trust in you, I love you என்ற சொற்களையும்
அவரோடு சேர்ந்து செபித்துக் கொண்டிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை
மாலை கேரனாவின் முதலமைச்சர் பேராயர் அவர்களை மருத்துவமனையில் சந்தித்தார். கேரளாவின்
அன்றைய கவர்னர் திரு ராஜைய்யா அவர்களும் சந்தித்தார். அவர்கள் பேராயர் அவர்களை சந்தித்தபோது
அவர்களை சரியாக அறிந்து கொண்டார். தொடர்ந்து கேரளாவின் பல அமைச்சர்களும் அரசியல்
பிரமுகர்களும் நேராக அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். ஆசியும் பெற்றனர்.
10 10 1994 திங்கள்
வரலாற்றில் எழுதப்பட்ட அந்த நாளில் ஒரு மகான் பிறந்த தினம். ஒரு புனிதன் பிறந்த
புண்ணியமான நாள். அன்று தான் நம் பேராயரின் விண்ணக பிறப்பு தினம் மண்ணக இறப்பு
தினம்.
அருட்கன்னியர்களும்
ஆயர்களும் குருக்களும் இறப்பின் வேளையில் என்னோடு உடன் இருக்க வேண்டும் என்ற
வேண்டுதலுக்கு ஏற்ப அனைவரும் அவரோடு கூட இருந்தனர். பற்பகல் மூன்று மணி வரை
கடினமான வேதனைகளோடு நேரம் நீங்கிக் கொண்டிருந்தது.
“இயேசு மரி
சூசையப்பரே எனது ஆன்மாவுக்காக வேண்டிக்கொள்ளும், என்ற ஜெபத்தை இலாறன்ஸ் மார
எஃப்ரேம் ஆயர் அவர்களும் கிரிகோரியோஸ் ஆயரின் சகோதரரும் அவரது செவிக்கருகே
சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அவ்வாறிருக்க
மூன்று முறை சற்று கடினமாக சுவாசத்தை இழுத்து வெளியேற்றினார். சரியாக மாலை 3 55
மணி. இம்மகான் விண்ணகத்திற்கு பயணம் மேற்கொள்வதற்காக மரணத்தை சந்தித்துக்
கொண்டார். இறைவனின் கைகளில் தனது உயிரை பலியாக சமர்ப்பித்தார். 41 ஆண்டு கால ஆயர்த் திருப்பணிக்குப்
பின்னர் 1994 ஆம்
ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
வாழ்வு அழகானது!
மரணமோ மிகவும் அழகானது! இவ்வாறு பேராயர் அவர்களின் வாழ்வைப் பற்றியும் மரண நிலையைப்
பற்றியும் கூற முடியும். மரண நேரத்திலும் துயரங்கள் அனுபவித்த போதும் தலைமைக்
குருவின் மேன்மையையும் உயர்வையும் பொறுப்புணர்வையும் எடுத்துக்காட்டியவர். ஒரு
சன்னியாசியின் தியாகமும் எளிமையும் வெளிப்படுத்திய ஒரு மகானாகிய யோகியே அவர்.
பேராயர் அவர்களின்
மரணச் செய்தியை அறிந்த கேரளாவின் முதலமைச்சர் மற்றும் கவர்னர் ஆகியோர் அஞ்சலி செலுத்துமாறு ஓடோடி வந்தனர். உடலடக்க
நாளன்று திருவனந்தபுரம் மாவட்டம் முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மருத்துவக்
கல்லூரியில் வைத்து பூதவுடல் தனிப்பட்ட அலங்காரங்களோடு தயார் செய்து கண்ணாடிக்கூண்டினுள்
சிம்மாசனத்தில் அமரச் செய்து ஆம்புலன்ஸில் கொண்டு வந்தனர். ஆயரகச் சிற்றாலயத்தில்
மக்கள் சந்திப்பிற்காக வைக்கப்பட்டது.
மரணச்செய்தி அறிந்த
ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தபோது மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு
ஏராளமான காவலர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தனர்.
பன்னிரண்டாம் தேதி
காலையில் அடக்கத்திருச்சடங்குகள் துவங்கும் நேரம் வரையிலும் பல்வேறு திருச்சபைகள்
மற்றும் மதக்குழுவினர் செபங்களும் அஞ்சலிகளும் சமர்ப்பித்து வந்தனர். மலங்கரை முறைப்படியான
அனைத்துத் திருச்சடங்குகளும் பல முறைகளில் தூப மன்றாட்டுக்களும்
சமர்ப்பிக்கப்பட்டன.
பன்னிரண்டாம் தேதி
காலை 7:30 மணிக்கு திருப்பலியும் இறுதி திருச்சடங்குகளும் ஆரம்பித்தன. பாளையம்
புனித மரியன்னை மலங்கரை கத்தோலிக்க ஆலயத்திலிருந்து தனிப்பட்ட முறையில் தயாராக்கிய
தேர் ஒன்றில் பேராயரின் பூதவுடல் அமர்த்தப்பட்டு நகர் காணல் பவனி நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் இறுதியாக ஒன்று கூடி ஜெப உணர்வோடும் மௌன உணர்வோடும் அஞ்சலிகள்
சமர்ப்பித்து வந்தனர். அனைத்து
திருச்சடங்குகளுக்குப் பின்னர் கேரளா காவலர்களின் காட் ஆப் ஓனர் என்ற மரியாதையும்
பூதவுடலுக்கு வழங்கப்பட்டது.
ஒளி மலர்ந்து
வீசும் காலமாக அமைந்தது. சமூக அரசியல் கலாச்சார வேளாண் விவசாய கலை துறைகளில்
இருந்து ஒரு போல ஒளி வீசிட இறைவன் அனுப்பிய பேரொளி தான் அவர். சாந்தமான சன்னியாசி.
எளிமையை உள்ளடக்கி ஜெபங்களாலும் தியானங்களாலும் ஒளி வீசிக்கொண்டிருந்த ஒரு முகம்.
பேராயரின் உடல் அவரது குரு பேராயர் மார்
இவானியோஸின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
5.
கனவுத்திட்டங்கள்
நம் பேராயர்
அவர்கள் திருவனந்தபுரத்தின் ஆன்மீக தலைவராக பொறுப்பேற்ற போது “அன்பே ஒளி” என்னும்
வாக்கியத்தை தனது கொள்கையாக ஏற்றுக்கொண்டார். அப்பெரிய ஆளுமையின் வாழ்வில் இதனை
அவர் வாழ்ந்து காட்டினார்.
மனிதனை அன்பு
செய்து அவரது துயரங்களுக்கு ஆறுதல் கொடுக்க வேண்டும். எங்கெல்லாம் மனிதம்
தரமற்றதாக மாற்றப்படுகிறதோ காயப்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் நம் பேராயர் அவர்கள்
தனது உடனிருப்பால் ஆறுதல் வழங்கி வந்தார்.
ஏழைகளுக்கு உணவு,
வீடில்லாதவருக்கு சிறு வீடுகள், சொந்தமாக சிறு தொழில் செய்து வாழ்க்கை
முன்னேற்றத்திற்கு உதவுகின்ற பல்வேறு விதமான திட்டங்கள். இவை அவரது தொலைநோக்குப்
பார்வைக்கு எடுத்துக்காட்டுக்களாகும்.
மார் இவானியோஸ்
கல்லூரி ஜூபிலி கொண்டாட்ட நேரத்தில் மாணவர்களிடமிருந்து நன்கொடை வசூல் செய்து ஏழை
ஒருவருக்கு வீடு ஒன்றை கட்டிக் கொடுக்க உதவிய நன்மனத்தை நினைவு கூறுகின்றோம். இதுவே
அவரது வாழ்க்கையின் குறிக்கோளாக அமைந்திருந்தது.
நாலாஞ்சிறை கல்லூரியின்
சுற்று வட்டாரப் பகுதியில் வாழ்கின்ற விவசாயிகளுக்கு இலவசமான வேளாண்மை அறிவு
வழங்குவதற்கு தனிக் கவனமும் ஆர்வமும் செலுத்தி வந்தார்.
அனைவருக்கும்
மேற்படிப்பு வழங்க வேண்டும். அது சமூகத்தின் மிகப்பெரிய செல்வமாக கருதுவதற்கு
முக்கிய திட்டங்களை தீட்டி வந்தார். நாலாஞ்சிறை மலைப்பகுதியில் சர்வோதய வித்யாலயா
என்ற பெயரில் பள்ளிக்கூடம் என்று துவங்கிய போது அந்தப் பெயர் வழியாக ஜாதி மத இன
வேறுபாடு இன்றி அனைவருக்கும் அவரவருக்குத் தேவையான கல்வி அறிவு வழங்குவதை தனது
தொலைநோக்கப் பார்வையாக கொண்டிருந்தார். இவ்வாறு எவராலும் ஈடு கொடுக்க முடியாத
இத்தகைய இறை ஒளி சூழப்பட்டவர் தான் அவர்.
தனது சந்நியாசமும்
குருத்துவமும் எவ்வாறு ஏழைகளுக்கு நன்மை உளவாக்கும் விதத்தில் மாற்ற முடியும் என
எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருந்தார். “வளர்ச்சிகளின் சன்னியாசி” என அவர்
அழைக்கப்பட்டார். பல கேரள மாநில திட்டங்கள் ஆயர் அவர்களுடைய ஆலோசனைக்கு உட்பட்டதாக
அமைந்தது. செலவு குறைந்த வீடு என்ற திட்டத்தை வாஸ்து அறிஞரான லாரி பேக்கரோடு
இணைந்து நிறுவப்பட்ட திட்டம் தான் நாளடைவில் ஒரு லட்சம் வீடு என்ற திட்டத்திற்கு
வழி வகுத்தது.
வேளாண் துறையில்
பேராயர் அவர்கள் துவங்கி வைத்த இயற்கை உர மேலாண்மை இன்றைய சமூகத்தில் போற்றப்பட்டு
எடுத்துக்காட்டுகின்ற ஒரு திட்டமாக பரிணமித்திருக்கின்றது. உலகில் எங்கும்
விரிந்து நிற்கும் நன்மை என்னும் ஒரு ஒளி. இந்த ஒளி இந்தியாவின் பலப்பகுதிகளிலும் ஒளிவீசிக்கொண்டிருக்கின்றது.
குறவன் கோணம்
என்னும் இடத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் செஷ்யர் ஹோம்
துவங்குவதற்கு தலைமை வகித்தார். இவ்வாறு பலவிதமான பிறரன்பு பணிகளை செய்வதற்கான
நிறுவனங்கள் அவரால் உருவாக்கப்பட்டன.
எளிமையின் மறு
உருவான பேராயர் அவர்கள் எளிமையான உடைகளை அணிந்து வந்தார். தனது கழுத்தில் எளிமையான
ஒரு சிலுவை மட்டுமே அணிந்து வந்தார். தான் கற்ற இளமை காலத்தில் மரத்தாலான சிலுவை
ஒன்றை கழுத்தில் அணிந்திருந்தார். அப்படி ஆயரான பிறகு அவர் “உடன் பிஷப்” என்ற
பெயராலும் அழைக்கப்பட்டார்.
“Mary had a little lamb ....
“ என்ற நர்சரி வகுப்பில் கற்ற பாடல் மழலை மொழிகளால் பாடப்படுகின்ற போது பேராயர்
அவர்களையே நினைவு கூரத் தூண்டும். ஏனென்றால் அப்பாடலை எழுதிய Sara J Hale அவர்கள் இதனை வெளியிட்ட ஆண்டுவிழா கொண்டாட்டத்தன்று
தான் இப்பேராயர் அவர்கள் பிறந்திருக்கின்றார்.
மலையாள மனோரமா என்ற
நாளிதழின் சார்பாக வழங்குகின்ற வேளாண் துறைக்கான “கற்சக ஸ்ரீ” என்ற விருது பேராயர்
அவர்கள் வாழ்ந்திருந்தால் நிச்சயமாக அவரே பெற்றிருப்பார்.
அவர் பிறந்த கல்லுப்பாறை
என்ற ஊர்ப் பகுதியானது விவசாயிகளின் பூமியாக இருந்தது. அந்த விவசாயிகளின் மனதை
கொண்ட அவர் திருவனந்தபுரத்தில் தங்கி வாழ்ந்த போது ஆயரகத்தை மிகப்பெரிய விவசாய
நிலமாக உருமாற்றம் செய்தார். ஆயரக வளாகத்தில் ஆர்கிட், அந்தூரியம், கொக்கோ, கரையாம்பு,
சுபாபுள், மாஞ்சியம் போன்ற மரம் மற்றும் செடிவகைகளையும் காளான், காடை கோழிகள் முயல் என பல விதமான
மிருகங்களை வளர்க்கும் முறைகளை அவர் இவ்வுலக மக்களுக்கு காண்பித்துக் கொடுத்தார்.
ஒவ்வொரு முறையும்
வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கின்ற போதும் புதிய வேளாண்துறை சம்பந்தமான விவசாய உத்திகளையோ
அல்லது வேளாண் சார்ந்த பாடங்களையும் இறைமக்களுக்கு கற்பிக்கக் கூடிய தயாரிப்போடு
வந்திருந்தார்.
சேம்பு எனப்படும்
கிழங்கு வகைகளை வளர்த்தெடுத்த விவசாயிகளின் மத்தியில் இத்தகைய நிலத்தில்
ஆந்தூரியம் மற்றும் ஆர்க்கிட் எனப்படும் உயர்ரக மலர்களையும் மலர வைக்கலாம் எனவும்
தென்னந்தோப்புகளில் அவற்றை ஊடு பயிர்களாக நட முடியும் எனவும் அவர் மெய்ப்பித்து
வந்தார்.
கேரள மாநிலத்தில்
விவசாய வேளாண் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் மறுமலர்ச்சியையும் கொண்டு
வந்த பேராயர் இவரே ஆவார்.
அமெரிக்க
நாட்டிற்கு பயணம் மேற்கொள்கின்ற போது வாஷிங்டன் எனும் இடத்தில் அமைந்துள்ள நேஷனல்
அகாடமி ஆப் சயின்ஸ் என்ற நிறுவனத்திற்கு செல்வது வழக்கமாக இருந்தது. ஒரு முறை
அங்கு சென்று வந்த பேராயர் அவர்கள் 1982ல் மாஞ்சியம் என்னும் ஒரு வகை மரம் அவருடைய
கண்களில் பட்டது. 10 வருடத்தில் அபாரமான வளர்ச்சி அடைந்த மாஞ்சியம் மரம் ஒன்று
பட்டம் ஆயரக வளாகத்தில் 55 இன்ச் அகலத்தில் 70 அடி உயரத்தில் 1994 ஆம் ஆண்டுகளில்
நின்றது.
அவ்வாறு இந்தியன்
கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச் அலுவலகத்தில் அடிக்கடி அவர் சென்று வந்தார்.
கேரளாவிலும் நெல்லைப் பற்றிய ஆராய்ச்சி மையத்திலும் அடிக்கடி சென்று அறிவு
சம்பாதித்துக் கொண்டிருந்தார்.
6.
குடியரசுத்
துணைத் தலைவரின் உரை
பிப்ரவரி 15, 2016 அன்று புதுதில்லியில் வைத்து பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் அவர்களது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்தியாவின்
மாண்புமிகு துணை குடியரசுத் தலைவர் திரு. எம். ஹமீது அன்சாரி அவர்கள் தொடக்க உரை:
பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ்
அவர்கள் ஒரு அறிவார்ந்த ஆன்மீகத்
தலைவராகவும், மதச்சார்பின்மை
மற்றும் இந்திய கலாச்சாரத்தின் சிறந்த செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார். ஜாதி, மத வேறுபாடின்றி அனைவராலும்
நேசிக்கப்பட்ட மற்றும் மதிக்கப்பட்ட நபராக அவர் இருந்தார். தனது திறமைகளை
சுறுசுறுப்புடன் கேரள மாநிலத்தின் அனைத்து வளர்ச்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்திக்
கொண்டார்.
வாழ்க்கைச் சூழலை
மேம்படுத்தவும், மனித
வாழ்க்கை மேம்படவும் சிறப்பு முக்கியத்துவம் அளித்து ஆன்மீகத்திற்கு புதிய பரிணாமத்தைக்
கொடுத்தார். கல்வி, விவசாயம், கிராமப்புற மேம்பாடு மற்றும் ஏழைகளுக்கான வீட்டு வசதி ஆகிய
துறைகளில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
அவர் ஒரு
சொற்பொழிவாளர், மொழியியலாளர்
மற்றும் சமூக சேவகர். ஏழைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து திட்டங்கள், குழந்தைகளுக்கான சிறப்பு
பராமரிப்பு, சிறார்
வழிகாட்டுதல், மகப்பேறு
பராமரிப்பு, பொறுப்பான
பெரியவர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு, சுகாதாரம் மற்றும் ஊனமுற்றோரின் மறுவாழ்வு
ஆகியவற்றில் அவரது பங்களிப்புகள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை
மேம்பாட்டிற்கு ஊக்கமூட்டின. அவர் இயற்கை சிகிச்சை மற்றும் யோகா சிகிச்சையின்
தீவிர ஆதரவாளராகவும் இருந்தார்.
பெனடிக்ட் மார்
கிரிகோரியோஸ் அவர்களால் தொடங்கப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பலனைப் பெற்ற
ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சிறந்த கல்வியாளரின் தொலைநோக்குப் பார்வைக்கு சாட்சியாக
உள்ளனர். அவர் மார் இவானியோஸ் கல்லூரியின் முதல் முதல்வராகவும் நான்கு
தசாப்தங்களாக அதன் புரவலராகவும் இருந்தார்.
பேராயர் மார்
கிரிகோரியோஸ் இயற்கையின் தீவிர காதலர். சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கவும், இயற்கை சூழலைப் பாதுகாக்கவும் அவர்
பரிந்துரைத்தார். அவர் தூய்மை மற்றும் பொது சுகாதாரத்தில் உறுதியான பயிற்சியாளராக
இருந்தார்.
பேராயர்
கிரிகோரியோஸ் மதங்களுக்கிடையேயான உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பவராக
இருந்தார். வகுப்புவாத பதற்றங்களைத் தீர்ப்பதில் நிர்வாகத்தின் சார்பாக தலையிட
அவர் எப்போதும் தயாராக இருந்தார். இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஸ்ரீ கே.ஆர்.
நாராயண், பேராயர்
மார் கிரிகோரியோஸ் அவர்கள் "ஆன்மீக மரபுடன் இணைந்துள்ள இந்திய
மதச்சார்பின்மைக்கு சிறந்த பிரதிநிதியாகவும் அடையாளமாகவும் விளங்கினார்"
என்று குறிப்பிடுவதற்கு மேற்குறிப்பிட்ட அவரது குணங்கள் வழிவகுத்தன.
பேராயர் மார்
கிரிகோரியோஸ் அவர்களின் வாழ்க்கை நம் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
சமுதாய முன்னேற்றத்திற்காகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை நிலையை
மேம்படுத்தவும் அவரது தன்னலமற்ற அர்ப்பணிப்பு, சுற்றுச்சூழல்
சமநிலைக்கான அவரது தனிக்கவனம் செலுத்துதல் மற்றும் நிலையான இந்தியாவை
உருவாக்குவதற்கான அச்சாக கல்வியை
எடுத்துரைத்தல் ஆகியவை அவரது சிறப்பு மிக்க போற்றுதற்குரிய நல் மாதிரிகளே ஆகும். அவரது
ஆன்மா நம்மை வழிநடத்திச் செல்ல பிரார்த்திக்கிறேன்.
நன்றி.
7.
மத்திய
சிறுபான்மை துறை அமைச்சரின் உரை
பிப்ரவரி 15, 2016 அன்று புதுதில்லியில் வைத்து பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் அவர்களது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாண்புமிகு
மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் டாக்டர் நஜ்மா ஹெப்துல்லாவின் முக்கிய உரை.
திருவனந்தபுரம்
பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் அவர்களின் பிறந்த நூற்றாண்டு விழாவை உங்களோடு
இணைந்து கொண்டாடுகின்ற ஒரு வாய்ப்பை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகின்றேன்.
இந்தியாவின்
கிறிஸ்தவம் உருவாக்கிய புகழ்பெற்ற மாமனிதர்களில் ஒருவர் தான் நம் பேராயர்
பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் அவர்கள். அவர் பல துறைகளில் சீரிய திறமை கொண்டவராக
திகழ்ந்தார். அவர் ஒரு இறைவனின் தூதர் ஆவார். உதவிகள் தேவைப்படுவோருக்கு தனது கிறிஸ்தவ அர்ப்பணிப்பை
வெளிப்படுத்துகின்ற இரக்கம் நிறைந்த ஆளுமையைக் கொண்டவர். அவரது நற்பணிகள் ஜாதி,
நம்பிக்கை, கலாச்சாரம், இடம் மற்றும் மதங்களை கடந்து செயல்படுத்தப்பட்டன.
அனைவரும்
எவ்விடத்திலும் மகிழ்வுடன் சுதந்திரத்துடனும் இருப்பார்களாக என்ற லோகா சமஸ்தா
சுகினோ பவந்து கோட்பாட்டில் இந்தியர்களை ஒருங்கிணைக்க அவர் பல்வேறு முயற்சிகளை
மேற்கொண்டார். நமது இந்திய அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்திய
மதச்சார்பின்மைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அவர் வாழ்ந்து வந்தார்.
அவர் ஒரு உண்மையான
ஆன்மீக தலைவராயினும் வாழ்வின் அனைத்து தலங்களிலும் அவர் செல்வாக்கு செலுத்தினார். “சினேகம்
மம தீபம்” அதாவது “அன்பே எனது ஒளி” என்பதனை அவர் பொன்மொழியாக கொண்டு வாழ்ந்து
காட்டினார். அவரது விருது வாக்கியம் கிறிஸ்தவத்தின் அடிப்படையைக் கொண்டுள்ளது.
தனது அயராத உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு சேவை மூலமாக பல்கலைக்கழகத்திலும்
கத்தோலிக்க திருச்சபையிலும் திருவனந்தபுரம் பேராயராக சீரும் சிறப்புடன்
பணியாற்றினார்.
அவரது புன்சிரி
பொழியும் முகமும் எளிய வாழ்வும் அன்பான மனமும் ஆயிரக்கணக்கானவர்களை கவர்ந்தது. மலங்கரை
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தாலும் ஆன்மீகத்தில் ஆழமான உள் பார்வை
கொண்டிருந்தவர். சமூக சேவைகளும் வளர்ச்சி பணிகளும் மதங்களுக்கிடையான உரையாடலும்
அரசியலில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள்
பாராட்டுக்குரியது.
அவர் கனவு
கண்டிருந்த கல்வி முறையை உண்மையிலேயே மதச்சார்பற்றது. அனைத்து மதங்களும் அனைத்து
இனத்தாலும் அவற்றிலிருந்து பயன்பட முடியும். பல நேரங்களிலும் அவரது சரியான
நேரத்தில் மேற்கொண்ட தலையீடு காரணமாக பல்வேறு விதமான கடுமையான மற்றும் பதட்டமான
சூழ்நிலைகளும் சாதாரண நிலைக்கு மீட்டெடுப்பதற்கு பல மதப் பிரச்சினைகளுக்கும் முடிவுக்கு
வந்தது.
அவர் ஒரு
சுற்றுச்சூழலின் இயற்கை ஆர்வலராக காணப்பட்டார். விவசாயம், கால்நடை பராமரிப்பு
மற்றும் சுற்றுச்சூழலை பராமரிப்பதன் வழி இயற்கையை பாதுகாக்க அவர் பல முயற்சிகளை
மேற்கொண்டார். சுற்றுச்சூழலில் தூய்மையை கடைப்பிடிப்பதற்காக மரங்களை நட்டு
வளர்த்தி அதிலிருந்து அன்பை உணர்ந்து மனத்தூய்மை உடையவர்களாக மாற அவர்
பரிந்துரைத்தார். அவர் சுற்றுச்சூழலின் மீது கொண்டிருந்த ஆர்வம் நமது அரசின் “ஸ்வச்
பாரத் மிஷன்” என்ற திட்டத்துடன் இணைந்ததாக காணப்படுகிறது.
ஆயிரக்கணக்கான
மருத்துவமனைகள், சுகாதார
மையங்கள், ஏழைகள்
மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பணிகள் மூலம், இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், 'மானவசேவா உண்மையான மாதவசேவா' என்ற பழமொழியை மெய்ப்பித்து
வருகின்றனர்.
பேராயர் கிரிகோரியோஸ் ஒரு உண்மையான கிறிஸ்தவரும்
உண்மையான தேசியவாதியும் ஆவார். இன்று அவரது பிறப்பின் நூற்றாண்டை கொண்டாடுகின்ற
போது நமது புனிதர்களும் மதத் தலைவர்களும் வாழ்வின் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும்
பறைசாற்றினர் என்பதை நாம் உணர்ந்து கொண்டாக வேண்டும். தனது வாழ்நாளில் மக்கள்
சேவைக்கு முதலிடம் கொடுத்த பேராயர் அவர்கள் உண்மையான முன்மாதிரியாக வாழ்ந்து
காட்டினார். நமது சமூகத்திற்கு அவரைப் போன்ற மக்கள் இன்னும் தேவைப்படுகிறார்கள்.
நாம் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைய
வேண்டும் மற்றும் நமது தேசிய இலக்குகளை அடைய வேண்டும் என்றால், நாம்
அனைவரும் ஒன்றாக மார் கிரிகோரியோஸ் போன்ற ஆன்மீகத் தலைவர்களின் வாழ்க்கையிலிருந்து
படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். உலகளாவிய மனித விழுமியங்களை எப்போதும்
மதிக்க வேண்டும். நமது தேசத்தின் சேவையில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து
முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவிக்கிறேன். நன்றி.
12. பிறப்பு
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு செயல் திட்டங்கள்
I.
நூறு
மையங்களில் ஆயிரம் அவர்களை நினைவு கூற நினைவு ஆய்வரங்கங்கள் நடத்துதல்.
II.
பிரப்பன்கோடு
மலங்கரை மெடிக்கல் வில்லேஜில் மார் கிரிகோரியோஸ் பிறப்பு நூற்றாண்டு நினைவு
புற்றுநோய் பராமரிப்பு இல்லம் உருவாக்குதல்
III.
பங்குகளும்
நிறுவனங்களும் மையமாகக் கொண்டு பசுமை திட்டம்
IV.
கிராம
வளர்ச்சி திட்டம்.
V.
பிறப்பு
நூற்றாண்டு விழாவின் நினைவு விருதுகள்
VI.
அனைத்து
மத கூட்டங்கள்
VII.
ஒவ்வொரு
மறை வட்டத்திலும் மருத்துவமனைகளில் ஓராண்டு மதிய உணவு வழங்குதல்.
VIII.
திருச்சபைகளின்
ஒன்றிப்பு கூட்டங்கள்
IX.
போதைப்
பொருள்களுக்கு எதிரான செயல் திட்டங்கள்
X.
துறவியர்
மற்றும் குருக்களுக்கான கூடுகைகள்
XI.
பிறப்பு
நூற்றாண்டு விழா நினைவு நூல்
XII.
மார் கிரகோரியோஸ்
உதவித்தொகை
XIII.
ஜாதி
மத வேறுபாடு இன்றி 100 பெண்களுக்கு திருமண உதவித்தொகை.
ஆயர் அவர்களின் பிறந்த நாளான
பிப்ரவரி மாதம் முதலாம் ஞாயிறன்று அனைத்து ஆலயங்களிலும் ஆசிரமங்களிலும் பேராயர்
மாதிரி கோரியோஸ் அவர்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்தல்
இவ்வாறு பிறருக்காக
வாழ்ந்த அவரது வாழ்வு அவரது மறைவுக்கு பின்னரும் நினைவுகளாக என்றும் வாழ்ந்து
வருகின்றனர்.
https://kcbc.co.in/KCBC/Bishops/214

Comments
Post a Comment