அந்தியோக்கியர்களால் பிளவுற்ற மலங்கரை திருச்சபை
அந்தியோக்கியர்களால் பிளவுற்ற மலங்கரை திருச்சபை இந்தியாவில் கேரளாவுக்கு எப்போதெல்லாம் மறைமுதுவர்கள் வருகை புரிந்தனரோ அப்போதெல்லாம் ஒரு புதிய திருச்சபை பிரிவு உருவானதாக மலங்கரை திருச்சபை வரலாறு எடுத்துக் கூறுகின்றது. 1665ல் வந்த மார் கிரிகோரியோஸ் மறைமுதுவர் 16 நூற்றாண்டுகளாக உரோமையில் திருத்தந்தையின் திருஆட்சியின் கீழே இருந்த கேரளா கிறிஸ்தவ மக்களிடையே பிரிவினைகளின் விதைகளை விதைக்கச் செய்து அவர்களை யாக்கோபியர்களாக மாற்றினார். 1751ல் அந்தியோக்கியாவிலிருந்து வந்த மார் கிரிகோரியோஸ் காட்டுமங்காட்டு ரம்பான் என்பவரை மார் கூரிலோஸ் என்ற பெயரில் ஆயராக அருள்பொழிவு செய்யவும் அதன் மூலம் “தொழியூர் அல்லது அஞ்ஞூர் திருச்சபை” என்ற ஒரு புதிய திருச்சபை சமூகம் உருவாகவும் காரணமானார். 1875 ல் மலங்கரையின் மார் அத்தனாசியோஸ் ஆயரை தடை செய்ததன் மூலம் மறுமலர்ச்சிக் குழுவினர் என்ற பெயரில் “மார் தோமா திருச்சபை” உருவானது. 1910 இல் இங்கு வந்த அப்துல்லா மறைமுதுவர் வட்டசேரில் ஆயரை தடை செய்யவும் அவ்வாறு ஆயர் குழுவினர் அல்லது “ஆர்த்தடோக்ஸ் திருச்சபை” என்ற பிரிவினை உருவாகவும் காரணமானார். 1932 ல் வந்த எலியாஸ் ...