1930 க்கு முந்தைய மறுஒன்றிப்பு முயற்சிகள்

 

1930 க்கு முன்னர் புதிய கூற்றினரின்  ஒன்றிப்பு முயற்சிகள்ளும்

            ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறிய உவமைகளில் மிகவும் முக்கியமான உவமை காணாமல் போன மகன் திரும்பி வரும் ஊதாரி மகனின் உவமை ஆகும். சீக்கிரமாக தனது மனதில் உருவான எண்ணங்களால் இளைய மகன் தனது சொந்த வீட்டையும் உறவினர்களையும் விட்டுவிட்டு தொலைதூரத்திற்கு பயணம் புறப்பட்டான். தனது கையில் இருந்த தொகை அனைத்தும் முடிந்த பின்னர் உணவு உண்ண வழி இன்றி அவன் அலைகின்றான். அவனுக்கு அப்போது தான் அறிவு உருவாகின்றது. தனது சொந்த தந்தையின் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற முடிவு. இக்காலம் அனைத்தும் தனது மகனின் திரும்ப வருதலுக்காக வருத்தத்தோடு ஜெபிக்கவும் நம்பிக்கையோடு காத்திருக்கவும் செய்த அந்த தந்தை மகனின் வருகையைக் கண்டவுடன் மகிழ்ந்தார். அவ்வாறு அந்த குடும்பம் முழு அமைதியும் ஆனந்தமும் பெற்றுக்கொள்கின்றது.

கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு காரணங்களால் பிரிந்து போன ஒவ்வொருவரையும் திரும்பி வருமாறு அல்லது மறுஒன்றிப்புக்காக ஊதாரி மைந்தனைப் போன்று கத்தோலிக்க திருச்சபை என்றென்றும் காத்திருக்கிறது. அதற்காக திருச்சபையின் நிறுவனராகிய ஆண்டவர் ஜெபிக்கவும் எல்லா விதமான முயற்சிகளை நடத்தவும் நம்மை ஊக்குவிக்கவும்  செய்து கொண்டிருக்கிறார். அதன் பலனாக தனது சொந்த தாய் திருச்சபையில் தனி நபராகவும் கூட்டமாகவும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து இணைந்தனர். இப்போதும் ஒவ்வொரு நாளும் பல நபர்கள் கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஊதாரி மைந்தனைப் போல தந்தையின் இல்லத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களாக புதிய திருச்சபைகளை உருவாக்கியவர்களின் தோல்வியும் இழப்பும் நரகத்தின் வாயில்களை வலுவிழக்கச் செய்யாததும் பாறை மேல் அடித்தளம் அமையப்பெற்றதுமான சொந்த திருச்சபைக்கு திரும்பிச் செல்லவும் அவர்களுக்கு ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஊட்டியது.

போர்த்துக்கீசிய மறைப்பணியாளர்களின் தவறான செயல்களால் வளைந்த சிலுவை சபதம் நடத்தப்படவும் அவ்வாறு பிரிவுற்ற யாக்கோபாய திருச்சபையின் புதிய கூற்றினராகிய ஆயர்கள் கத்தோலிக்கத் திருச்சபையோடு ஒன்றிப்படைவதற்கு முயற்சிகள் பல மேற்கொண்டதாக வரலாறு தெளிவாக்குகின்றது. வளைந்த சிலுவை சபதம் செய்து கொண்ட 114 பேர்களில் 84 நபர்களும் சில வருடங்களுக்குள் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைந்தனர். நான்கு காரணங்களை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1.        உலகில் கிறிஸ்து நிறுவிய உண்மை திருச்சபை கத்தோலிக்க திருச்சபையே ஆகும். திருச்சபையின் உறுப்பினர்களாக வாழ வேண்டியது ஆன்ம மீட்புக்கு அத்தியாவசியமானதாகும்.

2.        புனித பேதுருவின் உண்மையான வழிமரபினர்கள் உரோமையின் திருத்தந்தையர்கள் ஆவர். கிறிஸ்துவை பின்பற்ற விரும்புவர்கள் அவரது பிரதிநிதியாகிய உரோமை திருத்தந்தையின் திருஆட்சியின் கீழ் வந்தாக வேண்டும்.

3.        எந்த ஒரு திருவழிபாட்டை கடைபிடிக்கும் ஆயராக இருந்தாலும் அவர் திருத்தந்தையின் நேரடியான ஆணையின்படி அல்லது திருத்தந்தையின் ஒன்றிப்பில் உள்ள மறைமுதுவரின் ஆணைப்படியே திருச்சபையை நிர்வாகம் செய்ய வேண்டும். அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பது மிக மிக தேவையானதாகும்.

4.        வளைந்த சிலுவை சபதம் நடத்தியதன் மிக முக்கியமான காரணம் போர்த்துக்கீசு மறைப்பணியாளர்களோடு உள்ள வெறுப்பாக இருந்தாலும், அதனால் கத்தோலிக்க திருச்சபையை கைவிட்டதும் திருதூதுவ அருள்பொ ழிவு இல்லாத ஆயரை ஏற்றுக் கொண்டதும் இறுதியில் பிரிவினை திருச்சபையோடு சேர்ந்ததும் மிகப்பெரிய பாவமாகும்.

இந்த கருத்துக்கள் தான் அனைவரையும் கத்தோலிக்க திருச்சபை அன்னையின் அருகில் செல்ல வழிநடத்தியது. எனினும் ஒரு குழுவினர் கட்டாய மனத்தோடு தாங்கள் வாழும் நிலையே நன்று எனக் கூறி அதை தெளிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டு கொண்டே இருந்தனர்.

கேரளாவின் கிறிஸ்தவ திருச்சபையில் உருவான இந்த பிரிவினை பற்றிய சூழலை அறிந்த உடன் உரோமையின் திருத்தந்தை கர்மலித்தா அருள் தந்தை ஜோசப் செபஸ்டியானி என்பவரை கேரளாவுக்கு அனுப்பினார். இயேசு சபை குருக்களால் தான் பிரிவினை உருவானது என எண்ணியவாறு மற்றொரு துறவு சபையில் உள்ள நிர்வாகிகளை அனுப்புவதற்காகவே கர்மலித்தா அருள் தந்தையை அனுப்பி அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார். அருட்தந்தை ஜோசப் செபஸ்தியானி அவர்களுடைய தீவிர முயற்சியால் தோமா தலைமை திருத்தொண்டர் அருள்பொழிவு பெறாத ஆயர் எனவும் அவர் திருத்தந்தையின் அதிகாரத்திற்கு உள்பட்டவர் அல்ல எனவும் அறிந்து கொண்ட 84 ஆலய இறைமக்கள் பேராயர் கார்சியா முன்னிலையில் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைந்தனர். ஏறக்குறைய 30 ஆலயங்கள் மட்டுமே தோமா தலைமை திருத்தொண்டரின் அதிகாரத்தின் கீழ் நிலை நின்றது.

1658 ஆம் ஆண்டு நடைபெற்ற வளைந்த சிலுவை சபதத்திற்கு பின்னர் புதிய கூற்றினர் குழுவிலிருந்து ஒரு பகுதியினர் யாக்கோபாயா திருச்சபையாக இருந்த 12 வருடங்களில் ஒன்றுக்கொன்று பல நிகழ்வுகள் நடந்தன. அவை: ஆலங்காட்டு என்னும் ஆலயத்தில் வைத்து மிகப் பெரிய கூட்டம் நடைபெற்றது, 12 குருக்கள் இணைந்து ஒரு ஆயரை அருள்பொழிவு செய்தனர், இத்தாலியிலிருந்து வந்த அருள்தந்தை ஜோசப் செபஸ்தியானி அவர்களுடைய வருகை, தோமா தலைமை திருத்தொண்டர் குழுவினரின் தோல்வி, கடவில் சாண்டிக் கத்தனார் என்பவரை ஆயராக அருள்பொழிவு போன்ற நிகழ்வுகள்.

இவ்வாறு 114 ஆலயங்களுள் 84 ஆலயத்தை சார்ந்தவர்கள் உண்மை திருச்சபையை அறிந்து கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைந்தனர். இவர்கள் மறுஒன்றிப்படைய காரணமான ஐந்து கருத்துக்கள் தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றன.

1.        ஆயர் அருள்பொழிவு போலியானது

வளைந்த சிலுவை சபதம் செய்தவர்களும் ஆலங்காட்டு பெருங்கூட்டத்தில் வைத்து நடந்த ஆயர் அருள்பொழிவிலும் கலந்து கொண்ட பலர் தோமா தலைமைத் திருத்தொண்டரின் அருள்பொழிவு நிலை பற்றி ஐயம் கொண்டனர். 12 குருக்கள் இணைந்து அவரது தலையில் கை வைத்தலின் மூலம் பெற்றுக்கொண்ட ஆயர் அருள்பொழிவு உண்மைக்கு புறம்பானது எனவும், தோமா தலைமைத் திருத்தொண்டர் “சிவப்பு நிற வேடம் அணிந்தவர்” மட்டுமே என்ற உண்மையை கடவில் சாண்டிக்கத்தனார் மற்றும் பள்ளிவீட்டில் சாண்டி கத்தனார் ஆகியோர் உணர்ந்து கொண்டனர். இவ்வாறு அகத்தள்ளா என்பவருடைய கடதமாக இட்டித்தொம்மன் கத்தனார் உருவாக்கிய கடிதம் தவறானதும் போலியானதும் என அவர்கள் விளம்பரப்படுத்தினர். அவ்வாறு வளைந்த சிலுவை சபதத்திற்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குள் 25 ஆலயத்தைச் சார்ந்தவர்கள் தோமா தலைமை திருத்தொண்டரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி கார்சியா பேராயரின் தலைமையின் கீழ் வந்து இணைந்து கொண்டனர்.

2.         ஜோசப் செபஸ்டியானி அவர்களுடைய செயல்கள்

மலங்கரையில் நடந்த கேவலமான நிகழ்வுகளை உரோமையில் அறிவித்த போது கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர் தனது பிரதிநிதியாக ஜோசப் செபஸ்டியானி என்ற இத்தாலியன் கர்மலீத்தா துறவு சபையைச் சார்ந்த அருள்தந்தையை மலங்கரைக்கு அனுப்பினார். அவர் பக்தி மிகுந்வரும் அறிவும் நிர்வாகத் திறமை கொண்டவராக இருந்ததாலும் திருத்தந்தையின் கையிலிருந்து கடிதங்களையும் அதிகார ஆவணங்களையும் அவர் தன்னுடன் கொண்டு வந்ததனால் அவரோடு இணைந்து செயல்படுவதற்கு கேரளாவை சார்ந்த பல குருக்கள் இருந்ததனால் உண்மை நிலையை அறிந்து தலைமைத் திருத்தொண்டரின் குழுவைச் சார்ந்த பல ஆலயங்கள் அவருடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகினர். ஜோசப் செபஸ்டியானி அவர்களால் பல இடங்களில் பெரும் கூட்டங்கள் நடத்தி உண்மை நிலையை மக்களிடம் பறைசாற்றிட முடிந்தது. இவற்றின் பலனாக பலர் பிரிவினையிலிருந்து விலகி கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்தனர்.

3.        சில விபத்துக்கள்

தலைமைத் திருத்தொண்டரின் குழுவைச் சார்ந்த சில முக்கியமானவர்கள் ஒரு சில விபத்துகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆலங்காட்டு ஊரைச் சார்ந்த தலைமைத் திருத்தொண்டரின் குழுவின் தலைவரான ஒருவர் தரையில் விழவும் மரணம் அடையவும் செய்தார். வராப்புழை ஊரைச் சார்ந்த முக்கியமான ஒரு நபரின் வீடு தீக்கிரையானது. தலைமைத் திருத்தொண்டரின் குழுவில் வலுவோடு செயல்பட்டுக் கொண்டிருந்த இரண்டு ஆலயங்கள் சாலக்குடி மற்றும் குறுப்பம்படி போன்றவை தரைமட்டமாயின. பரவூர் என்னும் இடத்தில் தலைமைத் திருத்தொண்டரின் குழுவைச் சார்ந்தவரின் கடைகளும் வீடுகளும் தீயால் அழிந்தன. தலைமைத் திருத்தொண்டருக்கு வலுவோடு உடன் இருந்த கண்ட நாடு பங்கின் கிறிஸ்தவர்களும் நாயன்மார்களும் இடையே உருவான உள்நாட்டு பிரச்சனைகள் வழியாக கிறிஸ்தவர்கள் பல இழப்புகளை சந்தித்தனர்.

உண்மையான அதிகாரிகளை வெறுத்து ஒதுக்கவும் ஆயர் வேடம் அணிந்தவரை ஏற்றுக் கொள்ளவும் செய்ததனால் இறைவன் அவர்களுக்கு தண்டனையாக இந்நிலையை வழங்கினார் என பலர் ஐயம் கொண்டு தலைமைத் திருத்தொண்டரின் குழுவிலிருந்து விலகினர். தலைமை திருத்தொண்டரின் வலங்கையாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு நஸ்ராணி பிரபு தனது மரண நேரத்தில் தனது பாவங்களை அறிக்கையிட்டு கார்சியா பேராயரின் கீழ் வந்து இணைந்து அருட்தந்தையிடமிருந்து நோயில் பூசுதலை பெற்றுக் கொள்ளவும் அனைவரும் பேராயர் கார்சியா அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறி மரணமடைந்தார். இந்த நிகழ்வும் புதிய குழுவினரை வலுவிழக்கச் செய்ய  காரணமாக அமைந்தது.

4.        அரசின் செல்வாக்கு

போர்த்துக்கீஸ் ஆளுநர் இந்த பிரிவினையை முடிவுக்குக் கொண்டுவர தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கொச்சி அரசரோடு கேட்டுக் கொண்டார். அதன்படி தனக்கு கீழே பணிபுரியும் அதிகாரிகள் தலைமைத் திருத்தொண்டரின் குழுவினரை கட்டுப்படுத்த முடிந்த அளவுக்கு முயற்சிகள் மேற்கொண்டனர். தலைமைத் திருத்தொண்டரும் இட்டுத்தொம்மன் கொத்தனாரும் கைது செய்யப்படவும், தலைமைத் திருத்தொண்டரின் குருத்துவ அடையாளங்களும், நூல்களும், கடிதங்களும் கைப்பற்றவும் அவரது கீழே உள்ள சில ஆலயங்களின் சொத்துக்களை கைப்பற்றி அரசு அதிகாரிகள் ஆளும் கட்சியினரை வலுவிழக்கச் செய்தனர். மேலும் கத்தோலிக்கர்களுக்கு பலவித உதவிகளை வழங்கவும் செய்தனர். தலைமைத் திருத்தொண்டரின் குழுவைச் சார்ந்தவர்கள் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

5.        சாண்டி ஆயரின் முயற்சிகள்

திருத்தந்தையின் ஆணைப்படி குறவிலங்காடு பள்ளி வீட்டில் சண்டிக்கத்தனார் என்பவரை அலெக்சாண்டர் என்ற பெயரால் ஜோசப் செபஸ்டியானி ஆயராக அருள்பொழிவு செய்தார். சொந்த இடத்தைச் சார்ந்தவரும் சுறியானிக்காரருமாகிய இந்த ஆயர் பிரிந்து நின்ற தனது சொந்த இனத்தவரான தலைமைத் திருத்தொண்டர் குழுவினரை கத்தோலிக்க திருச்சபைக்கு திருப்பி அழைத்து வர மீண்டும் மீண்டும் முயன்றார். அவ்வாறு மிகவும் சுருங்கிய காலத்தில் 29 ஆலயத்தினர் அவரது அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்து கொண்டனர்.

யாக்கோபாயா ஆயரான மார் கிரிகோரியோஸ் மலங்கரைக்கு வந்து தலைமைத் திருத்தொண்டர் குழுவினரை யாக்கோபாயா திருச்சபையோடு இணைத்தது வரையுள்ள 12 ஆண்டுகளில் (1655 முதல் 1667 வரை) வளைந்த சிலுவை சபதம் வழியாக பிரிந்திருந்த 114 ஆலயங்களுள் 84 ஆலயங்களும் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்தது. மீதமிருந்த 30 ஆலயங்கள் மட்டுமே யாக்கோபாயா திருச்சபையோடு உறவு கொண்டது.

முதலாம் மார் தோமா

கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளுக்கு கீழ்ப்படியாமல் வாழ்வது பெரும் பேற்றுக்கு எதிரானதும் தடையானதும் என்ற எண்ணம் முதலாம் மார் தோமா முதல் அவருடைய உடன் பயணித்தவர்களும் கொண்டு கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைவதற்கான முயற்சிகளை நடத்திக் கொண்டிருந்தனர். இடப்பள்ளி என்னுமிடத்தில் வைத்து நடைபெற்ற புதிய கூற்றினரின் பொதுக்கூட்டத்தில் தீர்மானித்ததன் படி கத்தோலிக்க மறுஒன்றிப்புக்கு தாங்கள் விரும்புவதாகவு அறிவித்தனர். ஆனால் இரண்டு கோரிக்கைகளை செபஸ்டியானி ஆயரிடம் முன்வைத்தனர். முதலாவதாக தோமா தலைமைத் திருத்தொண்டரை ஆயராக அபிஷேகம் செய்ய வேண்டும். இரண்டாவதாக, அவருக்கு மொத்த திருஆட்சி அதிகாரத்தை வழங்கவும் செய்ய வேண்டும்.

செபஸ்டியானி ஆயர் அவர்களது இரண்டு கோரிக்கைகளையும் மறுத்துவிட்டார். தலைமைத் திருத்தொண்டர் தானாகவே பெற்றுக் கொண்ட ஆயர் அருள் பொழிவை அவர் வெளிப்படையாகவே விட்டுவிடட்டும் என ஆயர் செபஸ்டியானி பதில் வழங்கினார். இரண்டாவது கோரிக்கைக்கு அவருடைய பதில் தலைமை திருத்தொண்டருக்கு ஆட்சி அதிகாரம் வழங்குவது உரோமை திருத்தந்தையின் அனுமதியோடு மட்டுமே நடக்க முடியும்.

இவ்வாறு அவர் மனப்பூர்வமாக இந்த பிரச்சனைக்கு முடிவு ஏற்படுத்தாமல் பின்வாங்கினார். அன்று இந்த கத்தோலிக்க ஒன்றிப்பு நடந்திருந்தால் முதலாம் மார்த்தோமாமா மார் கிரிகோரியோஸ் யாகோபாயா ஆயரை கேரளாவுக்கு வருகை தர அழைத்திருக்கமாட்டார்கள். கத்தோலிக்க திருச்சபையில் பிரிந்து நின்ற கூட்டத்தினர் அனைவரும் இணைந்து ஒரு குழுவாகவே செயல்பட்டிருப்பர்.

நான்காம் மாத்தோமா

கத்தோலிக்க ஆயர்களிடமிருந்து கைவைப்பு வழியாக அருள்பொழிவோ திருத்தந்தையிடமிருந்து ஆட்சி அதிகாரமோ கிடைப்பதில்லை என உணர்ந்து கொண்ட இரண்டாம் மார் தோமாவும் மூன்றாம் மார் தோமா ஆயர்களும் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. ஆனால் 1688 முதல் 1728 வரை மலங்கரையில் திருஆட்சி நடத்தியிருந்த நான்காம் மார் தோமா அதற்காக முடிந்த அளவுக்கு முயற்சிகள் மேற்கொண்டதாக வரலாற்று தெரிவுகள் உள்ளன. தனது கட்டுப்பாட்டில் உள்ள 29 ஆலயங்களும் 12 குருக்களும் கையொப்பமிட்டு ஒரு கோரிக்கையை 1704 டிசம்பர் நான்காம் தேதி திருத்தந்தைக்கு அனுப்பினார். அஞ்சலூஸ் பிரான்சிஸ் ஆயர் மற்றும் கர்மலித்தா அருள்தந்தை அகஸ்டின் மூலமாக இந்த கோரிக்கை உரோமையை சென்றடைந்தது. ஐந்து விடயங்கள் அதில் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்தன.

1.         புதிய கூற்றினர் கத்தோலிக்க திருச்சபையை விட்டு விடுவதற்கு உருவான காரணம் என்னவென்றால் போர்த்துகீஸ்காரர்களான இயேசு சபையினர் காரணமாக உருவான கட்டாயப்படுத்துதல்களே ஆகும்.

2.         கர்மலித்தா குருக்களை கேரளாவுக்கு அனுப்பிய திருத்தந்தைக்கு நன்றி அறிவிக்கப்பட்டது.

3.         சுறியானி திருவழிபாட்டு முறையில் மலங்கரை முழுவதும் வழிபடுவதற்கும் கடைபிடிப்பதற்கும் திருத்தந்தை அனுமதி நல்க வேண்டும்.

4.         வராப்புழை ஆயரான ஆஞ்சலூஸ் பிரான்சிஸ் அவர்களோடு இணைந்து மலங்கரையின் கத்தோலிக்கர்களை திருஆட்சி புரிவதற்கான அதிகார பத்திரத்தை அனுப்பித் தர வேண்டும்.

5.         திருப்பலியில் புளிப்பான அப்பவும் புளிப்பற்ற அப்பவும் பயன்படுத்துவதற்கான அனுமதி நல்க வேண்டும்.

(Paulinus “India Orientalis” Page: 107)

இத்தகைய கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்குகின்ற போது மலங்கரையின் பிரிவினை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக எழுதப்பட்டது. நான்காம் மார் தோமா அனுப்பிய இந்த கோரிக்கைகளுக்கு எதிராகவோ சார்பாகவோ எந்த ஒரு பதில் மொழியும் உரோமையிலிருந்து அனுப்பவில்லை. இதனால் கோபமுற்ற நான்காம் மார் தோமா யாக்கோபாயா திருச்சபையோடுள்ள உறவில் நிலைப்பதற்கான கவனத்தை பதித்திருந்தார்.

ஐந்தாம் மார் தோமா

 

1728 முதல் 1765 வரை கேரளாவின் யாக்கோபாய திருச்சபையை நிர்வகித்து வந்த ஐந்தாம் மார் தோமாவும் கத்தோலிக்க மறுஒன்றிப்பிற்கு தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சிகள் மேற்கொண்டார். அவரையும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள குருக்களையும் இறைமக்களையும் கத்தோலிக்க திருச்சபையோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை 1748ல் திருத்தந்தை அவர்களுக்கு அனுப்பினர். அதன் இறுதி பகுதி இவ்வாறாக அமைந்திருந்தது.

“திருப்பலி முறையில் விவரிக்கப்படும் திருத்தூதர்களின் தலைவரான பேதுருவின் பெயரால் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். அது என்னவென்றால் கிரேக்கர்களுக்கு அனுமதித்ததைப் போன்று புளிப்பான அப்பம் பயன்படுத்துவதற்கான சுதந்திரம் எங்களுக்குத் தர வேண்டும். எங்கள் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்கின்ற போது உடனடியாக உங்கள் திருஆட்சிக்குக் கீழ்ப்படிதல் உள்ளவராக மாறுவோம். கர்மலித்தா துறவு சபையினர் எங்களுக்கு உதவவும் போர்த்துக்கீசிய ஆயரை பணியிட மாற்றம் செய்யவும் அருள் கூர வேண்டும். எங்களுக்காக இதனை நிவர்த்தி செய்ய வேண்டுகிறேன்.

வாழும் இறைவனின் அருளும் துணையும் எங்களோடு இருக்கட்டும். ஆமீன்.

1848 ஆம் ஆண்டு

புனித மரியா ஆலயத்திலிருந்து

இந்தியாவின் தலைவன் ஐந்தாம் மார் தோமா

 

ஐந்தாம் மார் தோமாவின் கோரிக்கை மனு வராப்புழை விகாரி அப்போஸ்தலிக்காவின் பரிந்துரைப்படி கர்மலித்தா அருள்தந்தை போனிஃபாஸ் அவர்கள் வழியாக உரோமுக்கு கொடுத்தனுப்பப்பட்டது. புரபகந்தா திருச்சங்கத்தின் செயலர் இந்த கோரிக்கைக்கு பதில் வராப்புழை விகாரி அப்போஸ்தலிக்காவுக்கு அனுப்பினார். 1757 செப்டம்பர் மூன்றாம் தேதி உரோமாவில் உருவாக்கப்பட்ட தீர்மானம் இக்கடிதத்தில் தெளிவாக விளக்கப்பட்டது. ஐந்தாம் மார் தோமாவின் குறிக்கோளைப் பற்றிய சந்தேகமே இந்த தீர்மானத்தில் அதிகமாக காணப்படுகிறது.

“சரியான கைவைப்பு பெறாமல் ஐந்தாம் மார் தோமா திருப்பலி ஒப்புக் கொடுக்கவும் குருத்துவ அருள்பொழிவுகள் நடத்தவும் செய்துள்ளார். உரோமாபுரி நம்பவில்லை என அவர் கூறுகின்ற கருத்துக்கள் பொய்யானது. அவரும் அவரது துணையாளர்களும் மறுஒன்றிப்படைவர் என்ற நம்பிக்கை இல்லை. அவரது கோரிக்கைகள் நடிப்புகள் மட்டுமே. எனவே இதனைப்பற்றி ஆலோசிக்க வேண்டியதில்லை.” இவை போன்ற தீர்மானங்கள் தான் ப்ரொபோகாந்தா திருச் சங்கத்தின் தீர்மானமாக அமைந்திருந்தது. இத்தகைய கருத்து வேறுபாடுகளும் தப்பெண்ணங்களும் உரோமையின் அதிகாரிகளுக்கு உருவாகக் காரணம் என்னவென்றால் அன்று கேரளாவில் திருச்சபையை நிர்வகித்து வந்த இலத்தீன் ஆயர்கள் அனுப்பிய கடிதங்களே ஆகும் எனக் கருதப்படுகிறது.

ஐந்தாம் மார்த்தோமாவின் கோரிக்கையில் கத்தோலிக்க திருச்சபையில் இருந்து அவர் விலகிச் சென்றதனாலோ திருச்சபை சட்டங்களுக்கு எதிரான ஆயர் அருள் பொழிவு பெற்றதைக் குறித்தோ எந்தவிதமான மனஸ்தாபம் கொள்ளாமலும் போர்த்துகீசுகாரர்களை நாட்டில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உரோமாவின் அதிகாரிகள் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கு துணை நிற்கவில்லை.

அதுமட்டுமல்ல உதயம் பேரூர் மாமன்றத்தில் வைத்து திருப்பலியில் புளிப்பற்ற அப்பம் நாங்கள் பயன்படுத்தலாம் என கேரளாவின் அனைத்து கிறிஸ்தவர்களும் ஒப்பந்தம் செய்துள்ளதாக உரோமை புரிந்து கொண்டுள்ளது.  எனவே வராப்புழை ஆயர் ஐந்தாம் மார் தோமாவின் மனமாற்றத்தை குறிக்கோளாகக் கொண்டு கிறிஸ்தவ அன்போடு செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆனால் அவருக்கு ஏதேனும் அதிகாரம் வழங்குவதாகவோ, அவரை அருள்பொழிவு செய்வதாகவோ, அவர் அருள்பொழிவு செய்தவரை மீண்டும் அருள்பொழிவு செய்வதாகவோ நம்பிக்கையூட்டும் உறுதுமொழிகள் வழங்கவோ வேண்டாம் எனவும் வராப்புழை ஆயருக்கு பதில் அனுப்பப்பட்டது. (Annaleeta OCD 1938 P 32,33)

ரோமாவின் தீர்மானத்தை நம்பி எதிர்பார்த்திருந்த ஐந்தாம் மார் தோமா மேற்குறிப்பிட்ட தீர்மானங்கள் அடங்கிய கடிதத்தால் அனைத்து முயற்சிகளிலிருந்தும் திரும்பிச் செல்வதற்கு வழிவகுத்தது. அவ்வாறு அவரது மறுஒன்றிப்பு முயற்சியும் தோல்வி  அடைந்தது.

அதிகாரம் 17

ஆறாம் மார்த்தோமா நடத்திய ஐந்து மறுஒன்றிப்பு முயற்சிகள்

கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய கேரளாவில் யாக்கோபிய  ஆயர்கள் நடத்திய முயற்சிகளில் மிகவும் முக்கியமானவர் ஆறாம் மார் தோமா ஆவார். ஐந்தாம் மார் தோமா தனது மரண நேரத்தில் தனது உறவினரான ஆறாம் மார்தோமாவுக்கு கைவைப்பு வழியாக ஆயராக அருள்பொழிவு செய்தார். இவர் 1865 முதல் 188 வரை 43 ஆண்டுகள் முதலாம் மார் திவன்னாசியோஸ் என பெயர் மாற்றம் செய்து யாக்கோபிய திருச்சபையை திருஆட்சி செய்து வந்தார். வெளிநாட்டு ஆயர்களான மார் கிரிகோரியோஸ் மற்றும் மார் இவானியோஸ் என்பவர்களிடமிருந்து 1872ல் நிரணம் ஆலயத்தில் வைத்து உண்மையான ஆயர் அருள்பொழிவு பெற்றது வரை ஏழு ஆண்டுகள் சரியான அருள்பொழிவு பெறாத ஆயராக அவர் திருஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்.

கண்ட நாடு ஆலயத்தில் வைத்து இவரை சந்தித்த ஆங்கில நற்செய்தி பணியாளர் முனைவர் புக்கனான் இவ்வாறு அவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். “அவர் நான்முக ஆளுமைகளை கொண்டவரும் மதிப்புக்குரியவரும் இறை பக்தனும் திருச்சடங்குகளில் அதிக விருப்பமுடையவரும் ஆவார். நான் இதுவரைக் கண்ட அவரது அருள்பணியாளர்கள் அனைவரையும் ஒரு போல வழிநடத்தும் அறிவு அவர் பெற்றிருந்தார்.” (Christian researchers in Asia, page 127 )

கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்பு வழியாக தனது ஆளுகைக்கு உட்பட்ட இறை மக்களையும் ஐந்து முறை தொடர்ந்து மறுஒன்றிப்பு முயற்சிகளை செயல்படுத்த முயன்றார். பழைய கூற்றினரை ஆண்டு வந்த வெளிநாட்டு இலத்தீன் ஆயர்களின் வெறுப்புச் செயல்கள் வழியாக உரோமையிலிருந்து சரியான ஒத்துழைப்பும் அனுமதியும் கிடைக்காத போது தோல்வியால் மீண்டும் ஒதுங்கி விடாமல் மறுஒன்றிப்புக்கான முயற்சிகளை அவர் துவங்கினார்.

1.        ஆயர் அருள்பொழிவுக்கு முன்னரே உரோமாவுக்கு அனுப்பிய கோரிக்கை

1772ல் நிரணம் என்னும் இடத்தில் வைத்து ஆயராக அருள்பொழிவு செய்யப்படுவதற்கு முன்னரே ஆறாம் மார் தோமா கத்தோலிக்கத் திருச்சபையோடு மறுஒன்றிப்படைய விரும்புவதாகவும் அவரை கத்தோலிக்க திருச்சபையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வராப்புழை ஆயர் வழியாக உரோமாவுக்கு அனுப்பினார். இதனைப் பற்றி உரோமாவில் கர்தினால் திருச்சங்கம் ஆலோசனை நடத்தி வராப்புழை ஆயருக்கு 1771 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி அறிவுரை போல ஒரு பதில் கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில் மார் தோமாவுக்கு “ப்ரோட்டோ நோட்டரி” என்ற பதவியும் அவர் சார்ந்து இருந்த மக்கள் மேல் ஆன்மீக அதிகாரம் தவிர்த்து சொத்து அதிகாரங்களை மட்டும் கொடுத்து ஆறுதல் படுத்த நிச்சயித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. (The Travancore state manual volume 2 page 209)

ஆறாம் மார் தோமாவுக்கு உண்மையான அருள் பொழிவு இல்லை என அவர் அறிந்திருந்ததனால் மேற்குறிப்பிட்ட பதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. வெளிப்படையாக மக்கள் மத்தியில் உண்மையான அருள் பொழிவு பெறாத ஆயராக இருப்பது நல்லதன்று என அறிந்து “ப்ரோட்டோ நோட்டரி“என்ற பதவியை ஏற்றுக்கொள்ள அவர் சம்மதிக்கவில்லை. அவ்வாறு ஆன்மீக அதிகாரம் இல்லாத சொத்து அதிகாரம் தோல்வியைத் தழுவும் எனவும் அறிந்திருந்தார்.

இவ்வாறு அவர் செய்த முயற்சிகளில் பலவும் இதயபூர்வமாக அவர் விரும்பி இருந்தார் என தொடர்ந்து அவர் அனுப்பிய கோரிக்கைகள் தெளிவாகின்றன.

2. ஆயர் அருட்பொழிவுக்குப் பின்னர் நடத்தப்பட்ட மறுஒன்றிப்பு முயற்சி

1772 ஆம் ஆண்டு மலங்கரைக்கு வந்த மார் கிரிகோரியோஸ் மற்றும் மார் இவானியோஸ் ஆகிய இரண்டு யாக்கோபிய ஆயர்கள் நிரணம் ஆலயத்தில் வைத்து அருள்பொழிவு வழங்கிய பின்னர் ஆறாம் மார்த்தோமா கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைய உரோமாபுரிக்கு மீண்டும் கோரிக்கையை அனுப்பினார். உரோமாவிலிருந்து இவை பற்றி விசாரணை மேற்கொண்டு மார் தோமாவின் நம்பிக்கையை சந்தேகப்படும் முறையில் பதில் கடிதம் அனுப்பினர். “மார் தோமா வாய் பிளர்ந்த ஒட்டகத்திற்கு இணையானவரும் அவரது நோக்கத்தைப் பற்றி சந்தேகம் உள்ளது” என கொடுங்கல்லூர் ஆயருக்கு அவர்கள் கடிதம் எழுதினர்.

உரோமாவிலிருந்து வழங்கப்பட்ட பதவியும் சொத்து அதிகாரமும் வேண்டாம் என வைத்து ஆயர் அருள் பொழிவுக்காக யாக்கோபிய ஆயர்களின் உதவியை நாடிய எண்ணத்தால் அவருடைய நோக்கத்தின் நம்பகத்தன்மையை ஐயம் கொண்டதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. ஆயருக்கு இணையான அதிகாரம் இல்லாமல் கத்தோலிக்க திருச்சபையில் இணைவதை விட உண்மை அருள்பொழிவை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் எண்ணினார். ஆயர் அருள்பொழிவு பெற்றுக் கொண்ட பின்னர் கத்தோலிக்க மறுஒன்றிப்புக்காக  ரோமாபுரிக்கு மீண்டும் கடிதம் அனுப்பினார். இதற்கு வராப்புழ விகாரி அப்போஸ்தலிக்காவுக்கு உரோமாவிலிருந்து பதில் கிடைத்தது.

மார்த்தோமாவின் நிலையைப் பற்றி மீண்டும் ஆலோசிக்கவும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள இறைமக்கள் மீது ஆன்மீக அதிகாரம் தவிர சொத்து அதிகாரத்தை அவருக்கு வழங்கவும் அவரது வாழ்வாதாரத்திற்காக ஆண்டுதோறும் நூறு ஸ்கூதி நாணயம் (Scudi) அவருக்கு பரிசாக வழங்குவதாகவும் அதிகாரப்படுத்தியே இம்முறை பதில் அனுப்ப்பட்டது. மார் தோமாவைப் பற்றி உரோமாபுரியில் உள்ள தப்பெண்ணங்கள் மாறவில்லை என்பதுதான் பதில் கடிதத்திலிருந்து தெளிவாகின்றது. அன்று கேரள திருச்சபையை நிர்வகித்து வந்த வெளிநாட்டு மறைபணியாளர்களின் கருத்துக்களோடும் விருப்பத்தோடும் இணைந்து உரோமை இத்தகைய ஆணைகளை வெளியிட்டதாகவும் கருதப்படுகிறது. உரோமாவிலிருந்து அனுப்பப்பட்ட பதில்கள் மார் தோமாவை திருப்திப்படுத்தவோ கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படையவோ தூண்டுதலாக அமையவில்லை. வெளிநாட்டு மறைபணியாளர்கள் வழியாக முயற்சி செய்ததனால் தான் தோல்வியை தழுவியதாக மார்தோமா புரிந்து கொண்டார். எனவே நமது நாட்டைச் சார்ந்த நபரோடு ரோமாபுரிக்கு மறுஒன்றிப்பைப் பற்றி முயற்சி செய்திட கடிதப் போக்குவரத்து நடத்துவதாக நிச்சயித்தார்.

2.        கரியாற்றில் மல்பான் மூலமாக நடத்திய முயற்சி

ஆலக்காட்டு என்னும் ஊரைச் சார்ந்த உரோமாவின் புறப்பகாந்தா கல்லூரியில் மேற்படிப்பு கற்றுக் கொண்ட கரியாற்றில் ஜோசப் மல்பானுக்கு கத்தோலிக்க திருச்சபையோடு மறுவண்டிப்படைவதற்காக தான் விரும்புவதாகவும் அதைப் பற்றிய ஆலோசனை நடத்துவதற்கு தாங்கள் வரவேண்டும் என ஒரு கடிதத்தை ஆறாம் மார் தோமா அனுப்பினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கி கரியாற்றில் மல்பான் நிரணத்திற்கு வரவும் அவரை மார்தோமாவும் வரவேற்கவும் செய்தார். இருவரும் இணைந்து தங்களுடைய உரையாடல்களை நிகழ்த்தினர். கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைவதற்கான ஆர்வம் பல மடங்கு வளர்ந்ததாகவும் அதற்கான அனுமதியை உரோமை திருஆட்சிப் பீடத்திலிருந்து தான் நேரடியாக வாங்குவற்தாக ரோமாவுக்கு வருவதாகவும் எடுத்தியம்பினார். அதற்கேற்ப கரியாற்றில் மல்பான் பாறேமாக்கல் தோமாக்கத்தனார் அவர்களோடு இணைந்து 1778ல் உரோமாவை நோக்கி புறப்பட்டார். அவர் சென்றபோது அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்திய ஒரு கோரிக்கையும் உரோமாவுக்கு சமர்ப்பிப்பதற்காக எடுத்துச் சென்றார். அதனுடைய விபரங்கள் கீழே குறிப்பிடப்படுகின்றன.

“உலகில் உள்ள அனைத்து ஆலயங்களின் அன்னை எனப்படும் புனிதமான உரோமை ஆலயத்தின் தலைவனாக மெசியாவின் பிரதிநிதியாய் அமைந்துள்ள எங்களது மறைமுதுவரும் தந்தையுமான திருத்தந்தை ஆறாம் பயஸ் அவர்கள் அறிந்து கொள்ள எழுதுவதாவது:

பேராயர் மார் திவன்னாசியஸ் ஆகிய நான் முன்னர் கேரளாவின் மார் தோமா ஆயர் என்ற பெயரில் அறியப்பட்டிருந்தேன். புனிதமான உரோமை ஆலய நம்பிக்கைக்கு வெளியே கிழக்கு கல்தாய சுறியானி திருச்சபை மற்றும் யாக்கோபாயா திருச்சபையினரின் நம்பிக்கையில் நிலைத்திருந்தேன். முன்னர் நான் கைக்கொண்டிருந்த சிறிய மற்றும் பெரிய குருத்துவப் பட்டங்களும் ஆயர் அருள்பொழிவும் போலியானவை என அறிந்து கொண்ட நான் யாக்கோபாயா பேராயரின் அருளால் ஆயராக மீண்டும் அருள்பொழிவு பெற்றுக் கொண்டேன்.

இறைவனின் அருளால் புனித உரோமை ஆலயத்தின் ஒன்றிப்பில் வருவதற்காக விரும்பி கொடுங்கல்லூர் மற்றும் கொச்சி ஆயர்களின் முன்னிலையில் எனது விருப்பத்தை நான் வெளிப்படுத்தினேன். என்னோடு எனது ஆளுகைக்கு உட்பட்ட ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட இறைமக்களும் குருவானவர்களும் இணைந்து ஒன்றிப்படைவர் எனக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அந்தக் கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டு விட்டது. மட்டுமல்ல ஆயராக  அருள்பணி செய்து கொண்டிருக்கக் கூடிய நான் சாதாரணமான பொதுநிலையினராக மாறிவிட வேண்டும் எனவும் அவர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். தூய திருச்சபையோடு ஒன்றிப்படைவதற்கு திருஆட்சி பீடத்திலிருந்து புறப்பட்ட ஆயர்கள் இவ்வாறு கூறியதை எண்ணி நான் துயருற்றேன். குறிப்பாக மேற்குறிப்பிட்ட ஆயர்கள் மற்றும் குருவானவர்களால் கேரளாவின் இறை மக்களுக்கு மிகப்பெரிய தரக்குறைவு ஏற்படவும் செய்தது. ஏனென்றால் ஒரு ஆயர் கட்டவும் மற்ற ஆயர் அவிழ்க்கவும் செய்கின்றார். ஒரு ஆயர் அழிப்பதனை மற்றொரு ஆயர் கட்டுகின்றார். அவர்களது இத்தகைய நிலையை இறைவனே அறிந்துள்ளார்.

இத்தகைய நிலையை திருத்தந்தை அவர்களுக்கு நேரடியாக அறிவிக்க குரியாற்றில் யவ்சேப் மல்பான் மற்றும் பாறேமாக்கல் தோமாக் கத்தனார் ஆகியோரை உரோமைக்கு அனுப்புகிறோம். ஏழைகளான நாங்கள் யாசித்தும் பலரிடம் நன்கொடைகள் கேட்டும் செலவுக்காக வசூல் செய்து இவர்களை அனுப்புகிறோம்.

இவ்வாறு மார் திவன்னாசியோஸ் பேராயராகிய நான் உண்மையாகவே உங்களோடு வேண்டுவது என்னவென்றால் நாங்கள் அனுப்புகின்ற இந்த அருள்பணியாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவும் எங்களது குறைகளை நீக்கி எனது ஆட்சியின் கீழ் உள்ள மக்களை புனிதமான உரோமை திருச்சபையின் ஒன்றிப்பில் இணைக்கவும் வேண்டுகிறேன். சுறியாணி மொழி அறிந்த நான்கு ஆயர்களை இவர்களோடு அனுப்பவும் வேண்டுகிறேன். இறை மக்களின் மீட்புக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் ஒரு தலைவரை கட்டளையிட்டு அனுப்பவும் வேண்டுகிறேன். மேலும் நாங்கள் அனுபவித்த துயரம் நிகழ்வுகளை நாங்கள் அனுப்புகின்ற குருக்கள் உங்களை தெரிவிப்பார்கள்.

இந்த அருள் பணியாளர்கள் சமர்ப்பிக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ஆயரில்லா ஆடுகளாக இருக்கும் எங்களை வலுப்படுத்த எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மன்றாடுகிறேன். நன்மையை தேடி புறப்பட்ட எங்களுக்கு இறையருள் கிடைப்பதற்கு எங்களுடைய வேண்டுகோளை சமர்ப்பிக்கின்றோம்.

(1778 மீனம் பத்தாம் தேதி எழுதப்பட்டது)

மி. மெக்கன்சியின் Christianity in Travancore என்ற நூலிலும் மீ.தி.கே வேலுப்பிள்ளை தயாரித்த the Travancore state manual என்ற நூலின் இரண்டாவது பதிப்பிலும் இந்த கோரிக்கையின் முழு ஆங்கில மொழிபெயர்ப்பு எழுதப்பட்டுள்ளது.

பலவிதமான சவால்களை சந்தித்து சென்னையிலிருந்து கப்பல் வழியாக ஆப்பிரிக்க கண்ட நாடுகள் அனைத்தையும் சுற்றி பத்து மாதங்கள் பயணம் செய்து போர்த்துக்கல்லுக்கு அவர்கள் சென்றடைந்தனர். போர்த்துகல் பேரரசியின் கையில் கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர். மேலும் 1780 ஜனவரி மூன்றாம் தேதி அவர்கள் உரோமாபுரிக்கு சென்று ஆறாம் பயஸ் திருத்தந்தையை சந்தித்து தங்களுடைய குறிக்கோளை அறிவிக்கவும் கோரிக்கையை சமர்ப்பிக்கவும் செய்தனர்.

இந்த காரியத்தை பற்றி விசாரணை நடத்தவும் காலதாமதம் ஆகாமல் உடனடியாக தீர்மானத்தை அறிவித்துக் கொள்ளலாம் எனவும் திருத்தந்தை அவர்கள் பதில் வழங்கவும் செய்தார். அதன்படியாக ரோமாவிலிருந்து விசாரணை நடத்தப்பட்டது. மூன்று விடயங்களை பற்றி உரோமாவில் இருந்து விசாரணை நடத்தப்பட்டது.

1.        ஆறாம் மார் தோமாவுக்கு உண்மையாகவே அருள்பொழிவு கிடைத்ததா? அவரை ஆயராக அருள்பொழிவு செய்த மார் கிரிகோரியோஸ் உண்மையாகவே ஆயர் தானா?

2.         மார்த்தோமாவின் கோரிக்கை அவர் எழுதியது தானா?

3.        கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காரியங்கள் ஒவ்வொன்றும் மனப்பூர்வமானதா?  ஏதேனும் உள்நோக்க விருப்பம் கொண்டதா?

இந்த மூன்று விடயங்களைப் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோவா ஆயர் அவர்களுக்கு ரோமாவிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது. கோவா ஆயர் 1782ல் கொச்சி ஆயரை ஒப்படைத்தார். அவர் வழங்கிய அறிக்கையை கோவா ஆயர் போர்த்துக்கல்லுக்கு அனுப்பவும் செய்தார். மார்த்தோமாவுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகள் அதில் உள்ளடங்கி உள்ளன என்றாலும், திருச்சபை சட்ட அறிஞர்களின் பரிசோதனைகளுக்குப் பின்னர் மார்தோமாவை கத்தோலிக்க திருச்சபையில் ஆயருக்கு இணையான அதிகாரத்தை வழங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும் என தீர்மானித்தனர். போர்த்துகீசிய அரசு மார் தோமாவுக்கு சார்பாக அறிக்கையை அனுப்பியதனால் கத்தோலிக்க மறுஒன்றிப்புக்குத் தயாராக அனைத்து அதிகாரங்களையும் காரியாற்றில் ஆயர் அவர்களுக்கு உரோமை திருஆட்சிப் பீடம் வழங்கவும் செய்தது. 1885ல் போர்த்துக்கல்லிலிருந்து அவர் இந்தியாவுக்கு பயணமானார். 1786 மே ஒன்றாம் தேதி கோவாவை வந்தடைந்தார். ஆனால் அங்கு தங்கியிருந்தபோது 1786 செப்டம்பர் 9ஆம் தேதி அவர் இறைவனடி சேர்ந்தார். எனவே இம்முறையும் மறுஒன்றிப்பு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

4.        தச்சில் மாத்துத்தரகன் அவர்களது தூண்டுதலால் நடத்தப்பட்ட முயற்சி

கரியாற்றில் ஆயர் கோவாவில் வைத்து மரணமடையாமல் இருந்திருந்தால் அவர் மார் திவன்னாசியோஸ் அவர்களையும் இறைமக்ககளையும் கத்தோலிக்க திருச்சபைக்கு ஏற்றுக்கொண்டு மறுவொன்றிப்படையச் செய்திருப்பார். எனினும் முயற்சியை கைவிடாது மீண்டும் மார் திவன்னாசியோஸ் அடுத்த முயற்சியை மேற்கொண்டார். கத்தோலிக்க கேரளா கத்தோலிக்க திருச்சபையின் செல்வந்தரம் முக்கிய தலைவருமான தச்சில் மாத்துத்தரகன் வழியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 1796 செப்டம்பர் 19ஆம் தேதி கொல்லத்தில் வைத்து கொச்சி மறைமாவட்ட ஆயர் தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது ஆறாம் மார்தோமா பாறேமாக்கல் தோமாக்கத்தனார் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் பங்கெடுக்கவும் மார்த்தோமாவின் மறுஒன்றிப்பைப் பற்றிய ஆலோசனைகள் நடத்தவும் செய்தனர். 18 வருடங்களுக்கு முன்னர் 1778 ல் மார்தோமாவை ஆயராக ஏற்றுக்கொள்ள திருத்தந்தை சம்மதித்திருந்தார் எனவும் அதற்கு ஏற்ப மார்தோமாவை ஆயராகவே கத்தோலிக்க திருச்சபைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என சுறியானிக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.

மார்த்தோமாவை கத்தோலிக்க திருச்சபையில் ஏற்றுக்கொள்ளும் போது அவர் பழைய கூற்றினரின் ஆயராகி விடுவாரோ என்ற பயம் வழியாக இம்முறை கொச்சி ஆயர் மறுஒன்றிப்பின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். ஆட்சி அதிகாரம் இல்லாத ஒரு ஆயராக தொடர மார் தோமா சம்மதிக்காததனால் தான் இதன் காரணம். இவ்வாறு நான்காவது மறுஒன்றிப்பு முயற்சியும் தோல்வியைத் தழுவியது.

5.        வெற்றியும் தோல்வியும் அடைந்த இறுதி முயற்சி

புதிய கூற்றினரான சுறியானிக்காரர்களின் கத்தோலிக்க மறுஒன்றிப்பு எப்படியாவது உண்மை நிலைக்கு கொண்டு வர வேண்டும் என மீண்டும் 6 ஆம் மார் தோமா முயற்சிகள் மேற்கொண்டார். பழைய கூற்றினரின் தச்சில் மாத்துதரகன் முன் நின்று முயற்சிகள் மேற்கொள்ளத் தயாரானார்.

உதயம் பேரூர் திருச்சங்கத்தின் தீர்மானங்களை ஒப்புக் கொள்ளாததால் தான் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படைவதற்கு கொச்சி ஆயர் எதிர்க் கருத்தை காட்டுவதாக மார் தோமாவுக்கு ஐயம் ஏற்பட்டதனால் அன்றைய நியமங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக படியோலை ஒன்றில் எழுதி கையெழுத்திட்டு அனுப்பினார்.

“மார் திவன்னாசியோசும் அவருக்கு கட்டுப்பாட்டில் உள்ள இறைமக்களும் திருத்தந்தையின் ஒன்றிப்பில் உள்ள கல்தேய மறைமுதுவரால் நியமிக்கப்பட்ட ஆபிரகாம் ஆயரும், கொடுங்கல்லூர் நிர்வாகியும், அவருக்கு கீழ் உள்ள இறைமக்களும், மறைமுதுவரின் பிரதிநிதியான உறுமிஸ் அருள்தந்தையும் இணைந்து இறையருளாலும் புனித உரோமை திருச்சபையின் கட்டளையாலும் ஆலோசித்து தீர்மானிப்பதற்காக இந்த படி ஓலை எழுதப்படுகிறது.

நமது முன்னோர்கள் புனித திருத்தந்தையை கீழ்ப்படிந்து 1590 ஆண்டு வரையிலும் உரோமை திருச்சபையோடு ஒன்றிணைந்து கல்தாய சுறியானிக்காரர்களின் திருவழிபாட்டை தொடர்ந்து வருகின்றபோது சுறியானிக்காரர்களிடையே உரோமையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயர்கள் கேரளாவுக்கு வருகை புரிந்தனர். மலங்கரையில் ஆயர் இல்லாத சூழலில் கோவாவின் மார் அலேசோஸ் ஆயர் திருத்தந்தையின் ஆணையின் பொருட்டு மலங்கரைக்கு வந்து உதயம் பேரூர் மாமன்றத்தை கூட்டினார். 1652 வரை நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தோம். சுறியானிக்காரர்களுள் ஒரு ஆயர் கொச்சி அரண்மனையில் வாழ்ந்திருந்த ஒரு சில வெளிநாட்டவர்களை தங்கள் பகுதியில் கொண்டு மலங்கரைக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டித்து அனைத்து பங்கு இறைமக்களையும் மட்டாஞ்சேரி ஆலயத்திற்கு ஒன்று கூடச் செய்து உறுதிமொழியும் செய்தனர். பின்னர் ஆலங்காட்டு ஆலயத்தில் வைத்து தோமா தலைமை திருத்தொண்டரை ஆயராக அருள்பொழிவு செய்யவும் தொடர்ந்து பல்வேறு விவாதங்களுக்கு உட்பட்டு இரண்டு தலைமை இடங்களில் இரண்டு முறைகளிலாக இவை நடந்து கொண்டிருந்தது.

முன்னோர்கள் திருத்தந்தைக்கு கீழ் படிந்து உதயம் பேரூர் மாமன்றத்தில் தீர்மானித்ததன் படி திருப்பலி வேளைச் ஜெபங்கள் நோன்பு மற்றும் திருவழிபாட்டு முறைகளை இரண்டு கூற்றினரும் ஒன்றாக கீழ்ப்படிந்து நடப்பதாக சம்மதிக்கிறோம். திருத்தந்தையின் ஒன்றிப்பில் தற்போது யாக்கோபியர்களின் நம்பிக்கையும் திருவழிப்பாட்டும் முறையும் விட்டு ஒழிந்து உர்பானோஸ் என்னும் எட்டாவது திருத்தந்தையின் காலத்தில் கிழக்கு திருச்சபையினருக்கு கட்டளையிட்ட நம்பிக்கை உண்மைகளை கீழ்ப்படிந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டு திருத்தந்தையின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு சம்மதித்துக் கொள்கிறோம்.

1799 இடவம் 20, ஆலப்புழா, மார் ஸ்லீபா ஆலயத்தில் வைத்து தந்தை மகன் தூய ஆவியின் திருப்பெயரால் இரு கூற்றினரும் இணைந்த ஆலயத்தினர் உறுதிமொழியாக எழுதிய ஒப்பந்த பத்திரம்.

(மார் தோமா நஸ்றாணிகளின் உண்மை நம்பிக்கை பக்கம் 200)

இவ்வாறு ஆலப்புழை தத்தம் பள்ளி மார் மிக்காயேல் ஆலயத்தில் வைத்து 1799 ஜூன் 22ஆம் தேதி மார்த்தோமாவும் அவரது சார்பினரும் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்தனர். ஆறு மாதங்கள் அவர் அங்கு தங்கியிருந்து திருப்பலி ஒப்புக் கொடுத்து வந்தார். ஆனால் மார் தோமாவுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கலாம் என ஒப்புக்கொண்ட கொச்சி ஆயர் அதை செயல்படுத்தாதனால் வெறுப்படைந்த மார்தோமா ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதன் படி இழப்பீடு செலுத்தி வருத்தத்துடன் மீண்டும் புதிய கூற்றினரிடையே சென்றடைந்தார். அதன் பிறகு புத்தன்காவில் 1808 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். இவ்வாறு பலமுறை முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்த பின்னரும் ஏதோ துர்ப்பாக்கியத்தினால் அதுவும் தோல்வி அடைந்தது.

ஒரு சில சாட்சியங்கள்

ஆலப்புழா தத்தம்பள்ளியில் வைத்து ஆறாம் மார்தோமா கத்தோலிக்க ஒன்றிப்பு பெற்றுக் கொண்ட பின்னர் அதனைப் பற்றி “மலங்கரையின் புகழ் சீராக்கப்பட்ட சுறியானிக் கிறிஸ்தவர்களின் திருச்சபை வரலாறு” என்ற நூலில் யாக்கோபாய திருச்சபையின் ஒரு வரலாற்று ஆசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார்.

“புதிய கூற்றினரான சூரியானைக்காரர்களை உரோமையோடு இணைப்பதற்கு மாத்து தரகன் பல நாட்களாக முயற்சிகள் மேற்கொண்டார். அது நடக்காமல் போகவே அரசு அதிகாரிகளின் உதவியுடன் ஆயர் அவர்களுக்கு ஆணை அனுப்பி ஆலப்புழா தத்தம் பள்ளி என்னும் இடத்திற்கு வரவைத்து அங்கே தங்க வைத்தனர். அங்கே சுறியானிக்காரர்களின் பிரமாணிகளான சில குருக்களையும் பொது நிலையினரையும் பத்திராவை அகற்றி ஹம்மீரா வைத்து திருப்பலி ஒப்புக்கொடுக்க வைத்தனர்.  (பத்திரா என்பது புளிப்பு இல்லாத அப்பம். இலத்தீன் மற்றும் கல்தேய திருவழிபாட்டு திருப்பலிக்கு இவ்வகை அப்பம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஹம்மீரா என்பது புளிப்பு உள்ள அப்பம். அந்தியோக்கிய சுறியானிக்காரர்கள் புளிப்புள்ள அப்பத்தை பயன்படுத்தி வந்தனர்.)

புதன் கிழமைகளில் கடைபிடித்து வந்த நோன்பு நாட்களில் அவர்களை கட்டாயப்படுத்தி மாமிச உணவு உண்ண வைக்கவும் அன்று பூரண சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்துதல் காரணமாக பெரிய விருந்து ஏற்பாடு செய்து உணவு உண்ண வைத்தனர். ஆனால் மார் தோமா அவர்கள் மாத்து தரகனின் கட்டாயப்படுத்துதலின் காரணமாக உரோமாவுக்கு கீழ்ப்படிதல் ஆகலாம் என மனம் கொண்டிருந்தார். மக்கள் விருப்பம் இன்றி அவர் அவ்வாறு செய்திருக்கக்கூடாது.

தரகனின் கட்டாயப்படுத்துதல் என்னும் காரணத்தை முன்னிறுத்தி ஹம்மீரா மாற்றி பத்திராவை வைத்து திருப்பலி நிறைவேற்றுங்கள் என ஆலயத்தின் பலிபீடத்தில் நின்று கொண்டு துயரத்தோடு கூறிய போது, அன்று ஆலயத்தில் திருப்பலிக்கு பங்கெடுத்த சுறியானி கிறிஸ்தவர்களின் பிரமுகர்களான கோட்டயத்தின் தாடிக்காரன் எடவழிச்சல் குஞ்சறியான், கிழக்கேத்தத்து கொச்சு பொத்தன், வெட்டிக்குந்நன் வெங்கடத்த, ஆலக்கசந்திரயாசா கத்தனார் உட்பட ஒரு குழு நாங்கள் இதோ செல்கிறோம் எனக் கூறி ஆலயத்திலிருந்து வெளியேறி படகு வழியாக நிரணத்துக்கு சென்றடைந்தனர். அவ்வாறு அவர்கள் மற்றொரு ஆயரை அருள்பொழிவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தீர்மானித்தனர்.

(சுறியானி கிறிஸ்தவர்களின் திருச்சபை வரலாறு பக்கம் 143 முதல் 144 வரை)

மாத்து தரகனின் பொருளுதவி கிடைக்காத காலத்தில் பேராயர் ஆலப்புழையிலிருந்து நிரணத்திற்கு வரவும் தத்தம் பள்ளியில் வைத்து பத்திரா பயன்படுத்தி திருப்பலி ஒப்புக்கொடுத்ததை எண்ணி அனுதபித்து யாக்கோபாயா திருச்சபையில் மீண்டும் வந்தடைந்து ஆட்சி தொடர்ந்தார் என இட்டுப்பு ரைட்டர் பின்னர் குறிப்பிட்டுள்ளார். ஆயர் கத்தோலிக்க திருச்சபையை ஏற்றுக் கொண்டார் என்ற உண்மையை இட்டுப்பு ரைட்டர்  தெளிவாக வெளிப்படுத்தி இருக்கின்றார்.

எனினும் யாக்கோபாய திருச்சபையில் ஏறக்குறைய சில பிரமாணிகள் தத்தம் பள்ளியில் தங்களது பேராயரை இழந்த பின்னரே நிரணத்திற்கு திரும்பி வந்தோம் எனவும் பத்திராவை பயன்படுத்தி திருப்பலி ஒப்புக் கொடுத்தார் எனவும் சமுதாய பிரமாணிகள் நிரணம் என்னும் இடத்தில் ஒன்று கூடி பேராயரை தேர்ந்தெடுப்பதற்கு ஆலோசிக்கவும் செய்தனர் எனவும் இட்டுப்பு ரைட்டர் எழுதிருப்பது மார் திவன்னாசியோஸ் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்தார் என்ற உண்மையை வெளிப்படுத்துவதே ஆகும்.

யாக்கோபாய திருச்சபையின் இன்னொரு வரலாற்று ஆசிரியர் இடவழிக்கல்  “மார்த்தோமா திருத்தூதரின் இந்தியத் திருச்சபை” என்ற நூலில் மார் திவன்னாசியோஸ் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்த உண்மையை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இதற்குப் பின்னர் மாத்துதரகன் தனது எண்ணத்தை மெய்ப்படுத்த காயங்குளம் என்னும் இடத்தில் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். 15 நாட்களாக பல்வேறு விதமான விவாதங்கள் நடைபெற்றாலும் எந்த விதமான தீர்மானமும் உருவாகவில்லை. இணைப்பிற்கு சமாதானமான எந்த ஒரு வழியும் இல்லை என கண்டபோது தரகன் திருவிதாங்கூர் பேரரசரின் உதவிக்கு வேண்டுகோள் வைத்தார். இந்த சூழலில் பணியிலிருந்து பிரித்து விடப்பட்ட ஒரு திவானின் சொத்துக்களை அபகரித்ததாக அரசர் பேராயருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு அபராதம் விதித்தார்.

நிரணம் மற்றும் செங்ஙன்னூர் ஆலயங்களும் அவற்றின் சொத்துக்களும் பேராயரின் செங்கோல், சிலுவை, திருப்பலிக்கு பயன்படுத்தும் பாத்திரங்கள் போன்ற சொத்துக்களை பறிமுதல் செய்தனர். 5000 ரூபாய் வசூல் செய்தும் மேலும் 5000 ரூபாய் பேராயர் மூலமாகவும், மற்று தொகையை மொத்தமாக ஆலயங்களில் இருந்து நன்கொடைகளாகப் பெற்றும் அபராத்த்தொகையை கட்டி முடித்தனர்.

சுறியானி சமுதாயத்தினர் உரோமையை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தப் பத்திரத்தில் கையொப்பமிடுகின்ற போது முழு அபராதத்தொகையும் தள்ளுபடி செய்யலாம் என இத்தகைய சூழலில் தரகன் பேராயரை அறிவித்தார். ஆனால் முன்னோர்களின் நம்பிக்கையை விற்பதை விட சொத்துக்களை இழப்பதே நல்லது என அவர் தீர்மானித்திருந்தார்.

பலவிதமான தந்திர திட்டங்களும் பண இழப்பும் ஏற்பட்டதை உணர்ந்தபோது தரகன் பேராயர் மெனசிஸ் அவர்களுடைய வழியை பின்பற்றத் துவங்கினார். தரகன் ஆயுதங்கள் எழுதிய படை வீரர்களோடு வந்து பேராயரையும் சுறியானி பிரமாணிகள் பலரையும் கைது செய்து ஆழப்புழாவுக்கு கொண்டு சென்றனர். அங்கு பல நாட்கள் பட்டினி போட்ட பின்னர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். எட்டாம் அர்பன் திருத்தந்தை கிழக்கு திருச்சபையினருக்காக அறிவித்திருந்த நம்பிக்கை கோட்பாடுகளையும் திருத்தந்தையின் ஆட்சி அதிகாரத்தையும் உதயம்பேரூர் மாமன்றத்தில் தீர்மானிக்கப்பட்ட திருப்பலி வேளை ஜெபம் நோன்பு முதலிய கர்மங்களையும் பேராயர் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவ்வாறு 1799 இடவம் 30ஆம் தேதி தத்தம் பள்ளி ஆலயத்தில் வைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.

(மார்த்தோமா திருத்தூதரின் இந்திய திருச்சபை பக்கம் 188 முதல் 190 வரை)

மார் திவன்னாசியோஸ் அவர்களது கத்தோலிக்க ஒன்றிப்பு வரலாற்று நிகழ்வு என மி. பிலிப்போஸ் தனது நூலில் தெளிவாக எழுதியுள்ளார். மாத்து தரகன் அவரை கைது செய்ததாகவும் பட்டினி போட்டதாகவும் நம்பிக்கை உறுதிமொழி எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டு கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணையச் செய்தார் என்ற நிலை மார் திவன்னாசியோஸ் அவர்களது மறுஒன்றிப்பைப் பற்றி தப்பெண்ணம் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே அதன் உண்மை நிலையை தெளிவாக்குகின்ற மற்றொரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

1.        மார் திவன்னாசியோஸ் பேராயர் நான்கு முறை கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய முயற்சிகள் மேற்கொண்டதைப் பற்றி நாம் அறிந்துள்ளோம். அதற்காக அவர் பல கடிதப் போக்குவரத்துகளை நடத்தினார் என்றும் இறுதியாக திருத்தந்தைக்கு அவர் அனைத்து நிகழ்வுகளையும் தெளிவுப்படுத்தும் நிகழ்வுகளை விளக்கி கடிதம் அனுப்பியதாகவும் நாம் அறிந்துள்ளோம். இவ்வாறு செயல்பட்ட ஒரு நபரை கட்டாயப்படுத்தியோ கைது செய்தோ பட்டினிக்கு இடப்பட்டோ கத்தோலிக்க திருச்சபையோடு இணைக்க வேண்டிய நிலை மாத்து தரகனுக்கும் யாருக்குமே இல்லை என்ற உண்மை நிலையை நாம் அறிந்து கொள்ள முடியும்.

2.        புதிய கூற்றினரின் ஒரே ஆயரான மார் திவன்னாசியோஸ் யாக்கோபியர்களின் மையமான நிரணத்திலிருந்து கைது செய்து ஆலப்புழைக்கு கொண்டு சென்றனர். அவரை பட்டினி போட்டனர். இவ்வாறு கத்தோலிக்க திருச்சபையோடு இணைத்தனர் என மீ பிலிப்போஸ் தனது நூலில் எழுதியுள்ளார். தங்களது பேராயரை கைது செய்யவும் நிரணத்திற்கு கொண்டு செல்லவும் செய்கின்ற போது யாக்கோபாய மக்கள் மௌனமாக அதைக் காணவும் எதிர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தாமல் இருக்கவும் செய்தார்கள் என்பதனை நம்ப முடியுமா. அப்படி பட்டினி கிடத்தப்பட்டார் என்றால் அங்கிருந்து அவரை காப்பாற்றி தங்களுடைய ஆயரை தங்கள் இடத்திற்கு கொண்டு வருவதற்கு ஏன் இறைமக்கள் துணியவில்லை? எங்கிருந்தோ வந்த அகத்தள்ளா ஆயரை போர்த்துகீசியர்கள் கடலில் மூழ்கடித்து கொண்டதாக வதந்தி பரத்தியதையே நம்பி ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் “தலைமுறையை உள்ள நாள்வரையிலும் பரங்கிக்காரர்களுக்கு துணை நிற்க மாட்டோம்” என வளைந்த சிலுவை சபதம் செய்யவும் செய்த தலைமுறையினரை கொண்ட நசராணி மக்கள் தனது ஆயரை கத்தோலிக்க திருச்சபையோடு இணைப்பதற்கு கைது செய்து சித்திரவதை செய்ததும் பட்டினி கிடத்தும் செய்தனர் என கேட்டபோது மவுனமாக இருந்தனரோ? இத்தகைய கேள்விகளுக்கு விடை மி, பிலிப்போஸ் எழுதியவை உண்மையற்ற நிலை என்பதை அறிவிக்கின்றது.

3.        தங்களை ஆண்ட பேராயர்களுள் மிக முக்கியமானவர்கள் என யாக்கோபிய வரலாற்று ஆசிரியர்கள் பலர் வெளிப்படுத்திய மார் திவன்னாசியோஸ் அவர்கள் ஒரு சில காரியங்களுக்காக கைது செய்யப்பட்டதாகவோ பயந்தோ பட்டினியால் துயரப்பட்டோ யாக்கோபாயத் திருச்சபையை மறுத்துரைத்தார் என்பதை நம்ப முடியுமா? யாக்கோபாய திருச்சபை கிறிஸ்து நிறுவிய திருச்சபை என அவர் திட மனம் கொண்டிருந்தார் என்றால் கத்தோலிக்க திருச்சபை மூடநம்பிக்கைகளையும் தேவையற்ற சடங்குகளையும் கொண்டு நிறைந்ததா என்ற நம்பிக்கை அவருக்கு இருந்திருந்தால் தனது சொந்த மனசாட்சியை பலியாக்க அவர் ஒருபோதும் முயன்றிருக்க மாட்டார். ஆங்கில மறைபணியாளரான முனைவர் புக்கனான் குறிப்பிட்டதைப் போன்று, “அவர் நான்முக ஆளுமைகளை கொண்டவரும் மதிப்புக்குரியவரும் இறை பக்தனும் திருச்சடங்குகளில் அதிக விருப்பமுடையவரும் ஆவார். நான் இதுவரைக் கண்ட அவரது அருள்பணியாளர்கள் அனைவரையும் ஒரு போல வழிநடத்தும் அறிவு அவர் பெற்றிருந்தார்.” ஆறாம் பார்த்தோமா 43 ஆண்டுகள் பேராயராக மனசாட்சிக்கு எதிராக செயல்பட்டார் என நம்மால் கூற முடியுமா?

எப்படியாயினும் மார் திவன்னாசியோஸ் கத்தோலிக்க திருச்சபையோடு  ஒன்றிப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டார் என்ற நிலைதான் இதில் தெளிவாக குறிப்பிடப்படுகிறது.


அதிகாரம் 18

நான்கு ஆயர்களின் மறுஒன்றிப்பு முயற்சிகள்

ஆறாம் மார் தோமாவின் மரணத்திற்குப் பின்னர் யாக்கோபாய திருச்சபையின் தலைவரான நான்கு ஆயர்கள் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர். சேப்பாட்டு மார் திவன்னாசியோஸ், புலிக்கோட்டு மார் திவன்னாசியோஸ், கினானாய பங்கின் மார் சேவேரியோஸ், கண்ட நாடு மார் இவானியோஸ் போன்றவர்கள் நடத்திய மறுஒன்றிப்பு முயற்சிகள் வரலாற்றுத் தெளிவுகளாக காணக்கிடக்கின்றன. இம்முயற்சிக்கு இவர்களைத் தூண்டியது ஒரே உண்மை திருச்சபையை பற்றிய நம்பிக்கையும் தலைமை மறைமுதுவரான திருத்தந்தையை கீழ்ப்படிவதற்கு தாங்கள் தயார் என்ற தீர்மானமும், அந்தியோக்கிய யாக்கோபாய மறைமுதுவரின் தவறான செயல்பாடுகளோடுள்ள வெறுப்பும் யாக்கோபாய திருச்சபையின் இழிவான நிலையும் எண்ணமுமே என வரலாறு தெரிவிக்கின்றது. மேற்குறிப்பிட்ட பேராயர்கள் நடத்திய மறுஒன்றிப்பு முயற்சிகள் ஒவ்வொன்றாக குறிப்பிடப்படுகிறது.

சேப்பாட்டு மார் திவன்னாசியோஸ் ஆயரின் மறுஒன்றிப்பு முயற்சி

சேப்பாட்டு மார் திவன்னாசியோஸ் அவர்களது முன்னோர்களாக யாக்கோபாயா திருச்சபையை திரு ஆட்சி புரிந்த புன்னத்ரா மார் திவன்னாசியோஸ் மற்றும் புலிக்கோட்டில் மார் திவன்னாசியோஸ் ஆகியோர் குறைந்த காலம் மட்டுமே திரு ஆட்சி செய்ததனாலும் பிரிவினை மறைப்பணியாளர்களுடன் நல்லுறவு கொண்டிருந்ததாலும் கத்தோலிக்க மறுஒன்றிப்போடு எந்த விதமான முயற்சிக்கும் அவர்கள் தயாராகவில்லை. ஆனால் 1825 முதல் 1855 வரை உள்ள 30 ஆண்டுகள் யாக்கோபாயா திருச்சபையை நிர்வகித்து வந்த சேப்பாட்டு மார் திவன்னாசியோஸ் கத்தோலிக்க மறுஒன்றிப்பு நடைபெறுவதற்காக வராப்பழை பேராயரோடு கடிதப் போக்குவரத்து நடத்தியிருந்தார். இம்முயற்சிக்கு இரண்டு காரணிகள் அமைந்திருந்தன. 1. அந்தியோக்கிய யாக்கோபாய மறைமுதுவரின் தவறான செயல்களும் பொறுத்துக் கொள்ள முடியாத இழிசெயல்களால் ஏற்பட்ட வெறுப்புமே முதல் காரணம். 2. இரண்டாவதாக பிரிவினை திருச்சபையைச் சார்ந்த மறைப்பணியாளர்கள் பல முறைகளில் யாக்கோபிய திருச்சபை உறுப்பினர்களுக்கு இடையே மறுமலர்ச்சிக் கருத்துக்களை புகுத்தி எதிர் அலையை உருவாக்கி இருந்தனர்.

இவ்வாறு யாக்கோபாயா திருச்சபைக்கு உள்ளே ஊடுருவிய மறுமலர்ச்சி சிந்தனைகளின் பின் விளைவுகளால் சேப்பாட்டு மார் திவன்னாசியோஸ் அவர்கள் மிகப்பெரிய கேட்டிற்கு உட்படுத்தப்பட்டார். இவ்வாறு இரண்டு பகுதிகளிலும் ஏற்பட்ட துன்புறுத்தல்கள் மத்தியில் கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்து அமைதியோடு தானும் தனது இறைமக்களும் வாழ்ந்து கொள்ளலாம் என்ற எண்ணமே ஆகும். ஆனால் கடந்த அனைத்து மறுஒன்றிப்பு முயற்சிகளையும் பனனற்றதாக மாற்றிய நிலையில் சேப்பாட்டு மார் திவன்னாசியோஸ் அவர்களை ஒரு ஆயராக ஏற்றுக் கொள்ள முடியாது என வரப்புழை ஆயர் கூறியதை முன்னிட்டு அவரும் மறுஒன்றிப்பு முயற்சியிலிருந்து விலகினார்.

புலிக்கோட்டு மார் திவன்னாசியோஸ் ஆயரின் மறுஒன்றிப்பு முயற்சி

வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ் ஆயருக்குஅவர்களுக்கு முன்னர் 43 ஆண்டுகள் 1865 முதல் 1909 வரை யாக்கோபாய திருச்சபையை வழிநடத்தி வந்த புலிக்கோட்டு    மார் திவன்னாசியோஸ் அவர்கள் நடத்திய மறுஒன்றிப்பு முயற்சிகள் அவரது தொலைநோக்குப் பார்வையையும் அறிவுக் கூர்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

பழைய கூற்றினரும் புதிய கூற்றினரும் இடையே வெளிப்படையான ஐக்கியம் உருவான பின்னர் புதிய கூற்றினரை கத்தோலிக்க திருச்சபையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுவே அவரது குறிக்கோள். இதற்காக அவரோடு இணைந்து செயல்பட்ட குருக்களுள் முன்னவராக செயல்பட்டவர் குறவிலங்காட்டு நிதியிரிக்கல் மாணிக்கத்தனார் ஆவார். அவர் மார் திவன்னாசியோஸ் அவர்களோடு அன்பு உறவில் ஏற்படவும் அவரது உதவியோடு பழைய கூற்றினரான சுறியானிக்காரர்களின் ஒத்துழைப்போடும் இரு கூட்டத்தினரையும் ஒன்றித்து பல இயக்கங்களை உருவாக்கினர். அவற்றுள் ஒரு சிலவற்றை காண்போம்.

1.        நஸ்ராணி இன ஐக்கிய சங்கம்

மறுஒன்றிப்பின் முதல் சுவடாக நஸ்ராணி இன ஐக்கிய சங்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை உருவாக்கினர். பழைய கூற்றினரும் புதிய கூற்றினருமான சுறியானிக்காரர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இஃது துவங்கப்பட்டது. இச்சங்கத்தின் சட்ட வழிமுறைகள் ஒரு சில இங்கு இணைக்கப்படுகிறது.

மார்த்தோமா நஸ்ராணிகள் எனப் பெயர் பெற்றுள்ள கேரளாவின் சுறியானிக்காரர்கள் பழைய கூற்றினரெனவும் புதிய கூற்றினர் எனவும் இரண்டாகப்  பிரிந்து வலுவிழந்த குழுக்களாக உள்ளனர். மட்டுமல்ல, கல்வி, கலாச்சாரம், அரசு வேலை வாய்ப்புகள் முதலிய சமூக உயர் பதவிகளை குறைந்த எண்ணிக்கையில் கொண்டவர்களாகவே உள்ளனர். எனவே இந்த தாழ்நிலையை உயர்த்துவதற்கு நஸ்ராணி இன ஐக்கிய சங்கம் என்ற பெயரில் ஒரு இயக்கம் நிறுவப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக எண்ணவும் தங்கள் கருத்துக்களை அன்பர்களோடும் சொந்த இனப் பிரமாணிகளோடும் ஆலோசித்து அவர்களுடைய எண்ண அலைகளுக்கும் விவாதங்களுக்கும் உள்படுத்தி ஆலோசித்து அவர்களின் கருத்துரையைக் கேட்டு பின்வரும் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் முதல் சட்டம் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.

அந்தியோக்கிய சுறியானிக்காரர்கள் உரோமை சுறியானிக்காரர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். மார் தோமா நஸ்ராணி சமூகத்தின் பிரதிநிதியாகவும் இறை மக்களின் இனம் சார்ந்த சமூக தொடர்பு கொண்ட நிலைகளை வழிநடத்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள கேரளாவின் இன ஐக்கிய சங்கம் என்ற பெயரோடு சுறியானிக்காரர்களின் மத்தியில் ஒரு இயக்கம் ஏற்படுத்த வேண்டும்.

(நிதியிரிக்கல் மாணிக்கத்தனார் பக்கம் 200)

இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக சேர மறுமலர்ச்சி குழு அதாவது மார் தோமா திருச்சபையில் உட்பட்டவர்களும் சுறியானிக்காரர்களான சிஎம்எஸ் காரர்களும் முன் வரமாட்டார்கள் என தீர்மானித்திருந்ததனால் மார் திவன்னாசியோஸ் அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள யாகோபியர்களையும் பழைய சுறியானிக்காரர்களை மட்டுமே அதனுள் சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டது.

2.        தனி இடம்

இந்த அமைப்பின் அலுவலகம் திறப்பதற்கும் கூட்டங்கள் கூடுவதற்கும் நிறுவனங்களை நிறுவவும் ஒரு தனி இடம் தேவைப்படுகிறது. கிறிஸ்தவர்களின் முக்கிய மையமான கோட்டயம் நகரில் இதற்காக ஒரு தனி இடம் வாங்குவது சற்று கடினமாயினும் வாங்க முடிந்தது. ஆலப்புழா வணிகரான யூக்கா போர்ட் என்னும் துரைக்குச் சொந்தமான உட்லாண்ட் எஸ்டேட்டும் பங்களாவும் அவரது முக்தியாரான ஜேம்ஸ் தாரா என்ற அமெரிக்கன் கத்தோலிக்கரிடமிருந்து மார் திவன்னாசியோஸ் மற்றும் மாணிக்கத்தனாரும் 3541 ரூபாய்க்கு விலைக்கு எழுதி வாங்கினார்.

3.        ஒருங்கிணைந்த மகா கல்வி நிலையம்

இரு குழுவினரும் இணைந்து கோட்டயத்தில் ஒரு கல்லூரியை நிறுவவும் அத்துடன் இணைந்த பள்ளிக்கூடங்கள் மற்றும் பிறரன்புப் பணி நிறுவனங்கள் நிறுவவும் தீர்மானித்தனர். இதற்காக அதனுடைய சட்ட வழிமுறை நூலில் 8, 9, 10 பிரிவுகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

8: சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள கட்டிடங்களில் ஒரு முக்கிய கல்வி நிலையமும் உருவாக்க வேண்டியதும் அது அனைத்து இனத்தாருக்கும் மதத்தினருக்கும் கற்க சுதந்திரம் உள்ளதும் ஆகும்.

9: கல்வி நிலையத்தின் முதல்வரும் இரண்டு துணை ஆசிரியர்களும் எனில் பிரிந்த திருச்சபையினர் இறை நம்பிக்கையற்றவர் இறைவனை அறியாதோர் போன்ற மத குழுக்களைச் சாராத பிரித்தானியர்கள் அமைந்தால் நன்று. பொதுநிலையினரை விட அதிகாரத் தன்மையோடு கற்பிக்க குறைந்த ஊதியத்தில் நமது இனத்தில் உள்ள சகோதர சங்கங்களையோ அருள் சகோதரிகளையோ கிடைத்தால் அது சங்கத்திற்கு மிகுந்த பலன் உருவாகும் என்பதை அவருடைய நிர்வாகிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

10: இந்த கல்வி நிலையத்தில் மும்பை மற்றும் கல்கத்தாவின் புனித சேவியர் கல்லூரியிலும் மங்கலாபுரத்தின் புனித லூயிஸ் கல்லூரியிலும் திருச்சிராப்பள்ளியின் புனித ஜோசப் கல்லூரியிலும் கற்பிக்கும் முறைப்படி பல்கலைக்கழகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட வகுப்புகளை நடத்தவும் தேர்வுகள் நடத்தவும் செய்ய வேண்டும். கல்வியைப் பற்றிய முறைகளிலும் நம்பிக்கைக்கும் நன்னடத்தைக்கும் தலைமை ஆசிரியருக்கு முழுப் பொறுப்பு உள்ளதாகவும் இன்னொருவர் தலையிட முடியாது.

(நிதியிரிக்கல் மாணிக்கத்தனார் பக்கம் 201)

4.        வெளியீடுகள்

இன ஐக்கியத்தின் சார்பில் இரு குழுவினரும் இணைந்து வெளியீடு ஒன்றை வெளியிட தீர்மானித்துக் கொண்டனர். இதைப் பற்றி திரு வி சி ஜார்ஜ் பி ஏ எல் டி நிதியிரிக்கல் மாணிக்கத்தனரின் வாழ்க்கை வரலாறு என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய கூற்றினரும் பழைய கூற்றினரும் இணைந்து துவங்கிய நசராணி இன ஐக்கிய சங்கத்தின் உடைமையாக மாந்தானம் என்னும் இடத்திலிருந்து வெளியிடப்பட்ட நசராணி தீபிகா தான் பல்வேறு பரிவர்த்தனங்களுக்கு உட்பட்டு விகத நசராணி எனப் பெயர் பெற்று கோட்டயத்தின் தீபிகா எனவும் அழைக்கப்பட்டது. அதனுடைய முக்கிய பொறுப்பு மார்சிலினோஸ் ஆயரின் வழிகாட்டுதலின்படி நமது கதாநாயகன் ஏற்றுக்கொண்டார். மாணியச்சன் சமுதாய முன்னேற்றத்திற்காக வாங்கிய உட்லாண்ட் எஸ்டேட்டிலிருந்து உருவான மனோரமா நிறுத்தப்பட்ட பின்னர் தீபிகா கோட்டயத்தில் இருந்து வெளியீடு துவங்கியது. மனோரமாவின் மறு அவதாரமே தீபிகா என்பதும் ஆகும். (பக்கம் 206-207)

5.        பிறரன்புப் பணி நிறுவனங்கள்

நஸ்ராணி சமூகத்தின் பலவிதமான முன்னேற்றத்திற்காக பல பிறரன்புப் பணி நிறுவனங்கள் இன ஐக்கிய சங்கத்தின் கட்டுப்பாட்டில் நிறுவ வேண்டும் என அதனுடைய பொறுப்பாளர்கள் தீர்மானித்தனர். கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், தொழிற்சாலைகள், விவசாய சாலைகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் போன்றவற்றை நிறுவுவதற்கு 22 முதல் 28 வரை உள்ள பிரிவுகளில் சட்டதிட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் அவற்றை அவர்களால் நடத்த முடியாமல் போனது. புதிய கூற்றினர் மற்றும் பழைய கூற்றினர் பிரிவினைகளுக்கு இடையே ஒன்றிப்பு ஏற்படுத்துமாறு உருவாக்கப்பட்ட இந்த திட்டங்களை செயல்முறைப்படுத்தும் நிலைக்கு கொண்டு வர முடியவில்லை.

திருத்தூதுவ பிரதிநிதியோடு சந்திப்பு

மாணிக்கத்தனாரின் தூண்டுதலுக்கு ஏற்ப உதக மண்டலத்திற்குச் சென்று திருத்தூதுவ அதிகாரியாகிய மோன்சிஞ்சோர் அயோத்தி அவர்களை சந்திப்பதற்கு மார் திவன்னாசியோஸ் தீர்மானித்தார். இதற்காக மாணிக்கத்தனார் எழுதிய கடிதத்திற்கு 1888 ஜனவரி 14ஆம் தேதி உதகமண்டலத்திலிருந்து மோன்சிஞ்சோர் அயோத்தி அனுப்பிய பதில் கடிதத்தின் ஒரு பகுதி இவ்வாறாக அமைந்திருந்தது.

“கேரளாவுக்கு வருகை தரும் போது கட்டாயமாக மார் திவன்னாசியோஸ் அவர்களை சந்திக்க நான் விரும்புகிறேன். நீங்கள் குறிப்பிடுவதைப் போன்று அவர் என்னை சந்திக்க காத்திருக்கின்றார் அல்லவா. அந்த சந்திப்பு கட்டாயமாக எனக்கு மகிழ்வைத் தரும். தூய அன்னையாகிய திருச்சபையின் மடியில் யாக்கோபியர்கள் வருவதற்கு விரும்புகின்ற நிலை எவ்வளவு மகிழ்வை வெளிப்படுத்தும். இதற்கான அனைத்து அதிகாரங்களும் தூய ஆட்சிப் பீடத்திலிருந்து எனக்கும் உள்ளது என்பதை நீங்களும் அறிந்திருக்கின்றீர்கள் அல்லவா!”

மாணிக்கத்தனாரின் கடிதத்திற்கு மீண்டும் 1888 ஏப்ரல் நான்காம் தேதி அனுப்பிய ஒரு கடிதத்தில் திருத்தூதுவ அதிகாரி இவ்வாறு எழுதியுள்ளார்.

மார் திவன்னாசியோஸ் அவர்கள் உதகமண்டலத்தில் எனது இல்லத்தில் எப்போது வருவாரோ அப்போது நான் அவரை வரவேற்பதில் மகிழ்கிறேன். அவரோடு இணைந்து நீங்களும் உதக மண்டலத்திற்கு வருகை தரவும். இங்குள்ள வசதிகளுக்கு ஏற்ப அவர் இங்கு தங்கவும் முடியும். மார் திவன்னாசியோஸ் அவர்களுக்கு நல்லதொரு இடம் தங்குவதற்கு வழங்குவதற்காகவே நான் இவ்வாறு கூறுகிறேன்.”

மேற்குறிப்பிட்ட கடிதத்தில் மார் திவன்னாசியோஸ் மற்றும் மாணிக்கத்தனார் இணைந்து உதகமண்டலத்திற்கு சென்று திருத்தூதுவ அதிகாரியை சந்தித்தது பற்றி மாணிக்கத்தனர் வாழ்க்கை வரலாற்று நூலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“மார் திவன்னாசியோஸ் அவர்களை தனது சொந்த இல்லத்திற்கு வரவேற்பதும் அவரை நல்ல முறையில் உபசரித்து தங்க வைப்பதற்கான சகல வசதிகளை ஏற்படுத்துவதும் சாதாரணமான ஒரு நிலையே ஆகும். திருத்தூதுவ அதிகாரியை அறிவித்ததற்கு ஏற்ப அவர் அழைப்பை வழங்கியுள்ளார். அவரது அழைப்புக்கு ஏற்ப மார் திவன்னாசியோஸ் உதகமண்டலம் சென்றடைந்தார். இப்பயணத்தின் போது நமது வரலாற்று நாயகனும் ஆயர் அவர்களோடு உடன் துணையாக இருந்தார். திருத்துவது அதிகாரியின் வரவேற்பை பெற்றுக் கொண்டு ஒரு சில தினங்கள் அவர்கள் அங்கே தங்கினர். திருத்தந்தையின் பிரதிநிதியும் கேரளா நஸ்ராணி யாக்கோபாயா திருச்சபையின் தலைவரும் இணைந்த அன்பு சந்திப்பு அங்கே நடந்தது. மார் திவன்னாசியோஸ் அவர்களுக்கு ஆங்கிலப் புலமை இயலாமல் இருந்ததால் மாணிக்கத்தனார் இரு மொழி பேசுபவராக திருத்தூதுவ அதிகாரி கூறியவற்றை மொழிபெயர்த்து வழங்கினார். தூய ஆட்சி பீடத்தை அன்று அலங்கரித்த 13ஆம் லியோ திருத்தந்தை அவர்களிடம் நான் ஆதரவும் மதிப்பும் வழங்குகிறேன் அவர் வெளியிட்டிருந்தார். இதனை திருத்தூதுவ அதிகாரி அயோத்தி தெளிவாக புரிந்து கொண்டார். இதனை குறிப்பிட்ட அறிக்கையை வெகு வேகமாக திருத்தந்தை அவர்களுக்கு அனுப்புவேன் என வாக்குறுதி வழங்கியதை முன்னிட்டு உதகமண்டலத்திலிருந்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.”

(மாணிக்கத்தனார் பக்கம் 214)

தான் திருத்தூதுவ அதிகாரியோடு வாக்குறுதி வழங்கியதன் படி திருத்தந்தைக்கு செய்தியை மார் திவன்னாசியோஸ் அனுப்பவும் மாணிக்கத்தனாரின் ஆலோசனைகளின் படி மறுஒன்றிப்புக்கான முயற்சிகள் தொடர்ந்து நடத்தவும் செய்யப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் மார் திவன்னாசியோஸ் மற்றும் புதிய கூற்றினரின் மறுஒன்றிப்பு சாத்தியமாகாமல் போனது.

ஆனால் கண்டநாட்டிலிருந்து 1890 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி மாணிக்கத்தனார் அனுப்பிய கடிதத்தில் யாக்கோபியர்களின் மறுவொன்றிப்புக்கு சாத்தியமாகாத இரண்டு காரணிகளை அவர் குறிப்பிட்டுள்ளார். அவை பின்வருமாறு:

“யாக்கோபியர்களோடு நடத்தப்பட்ட பல உரையாடல்களிலிருந்து மறுஒன்றிப்புக்கு சவாலாக அமைந்திருந்த இரண்டு காரணிகளை நான் குறிப்பிடுகிறேன்.

முதலாவதாக உதயம் பேரூர் திருச்சங்கத்திற்குப் பின்னர் 50 ஆண்டுகளுக்கு தொடர்ந்து சொந்த இனத்திலும் சொந்த திருவழிபாட்டு முறையிலும் உள்ள ஆயர்களை ஏற்றுக் கொள்ள அனுப்பப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறாமல் கத்தோலிக்க திருச்சபைக்கு திரும்பிச் செல்லுதல். தங்கள் முன்னோர் செய்த தவற்றை எடுத்துச் சொல்வதற்கு இணையாதல். போன்றவற்றை கேவலமாக கருதினார்.

இரண்டாவதாக, கொச்சியில் வைத்து நடைபெற்ற வளைந்த சிலுவை சபதத்தில் தங்களது முன்னோர் ஒரு இலத்தீன் ஆயரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என சபதம் செய்தனர். தற்போது சுறியானிக்காரர்களாகிய நாங்கள் இலத்தீன் இலவீஞ்ஞு ஆயருக்கு கீழ்ப்படிவதா? தங்களது இந்த உறுதிமொழியை கடைப்பிடிக்காத போது மனசாட்சிக்கு எதிரான செயலாக்க் கருதினர். மட்டுமல்ல மற்று சமுதாயத்தில் மற்று திருவழிபாட்டில் உள்ள ஆயர்கள் மற்றும் குருக்கள் இறை மக்களை ஆளுதல் என்பது உலக வரலாற்றில் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.”

(மாணிக்கத்தனார் பக்கம் 308)

எதுவாயினும் புலிக்கோட்டு மார் திவன்னாசியோஸ் பேராயர் நடத்திய மறுஒன்றிப்பு முயற்சிகளும் ஏதோ காரணங்களால் பலனடையாமல் போனது.

 

கண்ட நாடு மார் இவானியோஸ் மேற்கொண்ட மறுஒன்றிப்பு முயற்சி

ஆர்த்தடோக்ஸ் திருச்சபையின் பேராயராக இருந்த கண்டநாட்டு யோவாக்கீம் மார் இவானியோஸ் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிடிப்புக்கு முயற்சிகள் மேற்கொள்ளவும் ஆனால் தோல்வி அடைந்ததும் இதயம் நொந்த மொழியில் விவரித்ததை அவர் தனது உறவினரும் யாகோபாய திருச்சபையின் முக்கிய மறையுரையாளருமான கண்ட நாட்டு காரோட்டு சைமன் டி கோர் எப்பிஸ்கோப்பா அவர்களிடம் தெரிவித்தார். இஃது “சத்திய சபா காகளம் விசேஷால்” இதழில் “ஏமாற்றப்பட்ட கொடுமை” என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிடப்பட்டது.

“அப்துல்லா மறைமுதுவரிடமிருந்து நான் திருத்தொண்டராக அருள்பொழிவு செய்யப்பட்டேன். அன்று எனது தந்தையின் சகோதரரான கண்ட நாட்டு யோவாக்கீம் மார் இவானியோஸ் ஆயரோடு நான் தங்கியிருந்தேன். அவர் மிகவும் புனிதமான மனிதனாக வாழ்ந்து வந்தார். கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கை உண்மைகளை பல நேரங்களிலும் எடுத்துரைப்பதைக் கேட்டிருக்கிறேன்.

சுறியானி மொழியில் புலமை பெற்றிருந்த ஆயர் யாக்கோபியர்கள் கைகூப்பி வணங்கும் “ஹூதாயா கானோன்” எனப்படும் திருச்சபை சட்ட நூலில் “றீஸ் பாத்றியர்க்கீஸ்” (தலைமை மறைமுதுவர்) பற்றிய பகுதியே அன்று முதன்மையான விவாதப் பொருளாக இருந்தது. ஆயர் அவர்கள் தனது சொந்த கையால் அப்பகுதியை மலையாள மொழியில் மொழிபெயர்ப்பு செய்து தனது கையொப்பமும் முத்திரையும் வைத்துள்ள ஒரு நூல் எனது கையில் உண்டு. உரோமை மறைமுதுவரின் “றீசோ உறாபோ” (தலைவனும் வழிகாட்டியும்) என்ற அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதன் தேவையைப் பற்றி ஆயர் அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.

இரண்டாவதாக யாக்கோபியரின் திருவழிபாட்டு முறைகளிலிருந்து திருத்தூதர் பேதுருவின் முதன்மை அதிகாரம் மற்றும் உரோமை திரு ஆட்சி அரியணை போன்ற கருத்துக்களைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்து வந்தார். ஆயரின் இத்தகைய கருத்துக்கள் பிரபலமானதை முன்னிட்டு 1098ல் அன்று கண்ட நாட்டு கத்தோலிக்க ஆலயத்தின் பங்குத்தந்தையான தோட்டுங்கல் அருட்தந்தை அவர்களோடு இணைந்து மறுஒன்றிப்புக்கான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

அன்றைய இந்தியாவின் திருத்தூதுவ அதிகாரியின் செயலராக பணியாற்றியவர் கண்டநாட்டைச் சார்ந்த எர்ணாகுளம் உயர்மறை மாவட்டத்தின் அருள் தந்தையுமான பைனுங்கல் ஜோசப் பி எச் டி ஆவார். அவர்களை அழைத்து எர்ணாகுளம் உயர்மறை மாவட்ட பேராயர் மார் அகஸ்டின் கண்டத்தில் அவர்களோடு ஆலோசனைகள் நடத்தவும் செய்தார். அவ்வாறு மறுஒன்றிப்பு முயற்சிகளுக்குத் தடையாக இருந்தவற்றை சீர் செய்தார். எர்ணாகுளம் ஆயரகத்திற்கு வந்து உறுதிமொழி எடுப்பதற்கான நாளும் நேரமும் நிச்சயித்தனர்.

நமது ஆயர் அவர்களோடு இச்சூழலில் பின்வாங்குவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு முயற்சிகள் மேற்கொண்டேன். அவரது கருத்துக்களுக்கு எதிராக பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன். அவரது உண்மை நிலைக்குள் என்னால் மீண்டும் எதிர் கருத்து கொண்டிருக்க முடியவில்லை. நேர்வழி அல்ல மறைமுகமாக அவருடைய முயற்சிக்கு தோல்வி உருவாக்க நான் முயற்சி மேற்கொண்டேன். அன்றைய திருத்தொண்டரான முக்காஞ்சேரில் பத்ரோஸ் ரம்பானை வரவழைத்து எனது கருத்துக்களை அவரோடு எடுத்துக் கூறினேன்.

எர்ணாகுளம் ஆயரகத்திலிருந்து அவரை அழைத்துச் செல்வதற்கான வாகனம் மறுநாள் அதிகாலையில் அங்கு வந்து சேரும் என நிச்சயிக்கப்பட்டிருந்தது. காரில் செல்வதாக இருந்தால் மக்களின் எதிர்ப்பலைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே அதற்கு முந்தைய நாளே படகு வழியாக எர்ணாகுளத்திற்கு செல்வது மிகவும் அமைதியான சூழலை ஏற்படுத்தும் என ஆயரிடம் எடுத்துக் கூறினேன். எனது கருத்துக்களை நம்பவும் சம்மதிக்கவும் செய்தார்.

உடனடியாக ஒரு படகு ஒன்றை நாங்கள் ஏற்பாடு செய்தோம். அன்று மாலை இரவு உணவுக்குப் பின்னர் அனைத்து தேவையான பொருட்களோடு நாங்கள் படகு பயணம் புறப்பட்டோம். பருமலை செமினேரி நோக்கி படகை செலுத்துவதற்கு படகோட்டியோடு ஆயர் அவர்கள் இரகசியமாக கூறியிருந்தார். வழக்கத்திற்கு மாறாக ஆயர் அவர்கள் பயணத்தின் போது நன்றாக தூங்கினார்.

அதிகாலை மூன்று மணி நேரத்தில் காலை மன்றாட்டுக்காக ஆயர் அவர்கள் என்னை தூக்கத்திலிருந்து விழித்தெழச் செய்தார். முகம் கழுவி ஆற்றங்கரையோரம் பார்த்தபோது இது “வைக்கம் அருகே உள்ள செம்மனாக்கிரி என்னும் இடம் அல்லவா! எர்ணாகுளம் செல்ல வேண்டிய நாம் ஏன் தெற்கு நோக்கி செல்கிறோம்? எனக் கேட்டேன்.

உடனடியாக மிகுந்த வலிமையோடும் கட்டாயப்படுத்தலோடும் எர்ணாகுளம் செல்வதற்கான தடைகள் பல எடுத்துக் கூறி பருமலை செமினேரி நோக்கி செல்கிறோம் எனக் கூறினார். ஆயர் அவர்கள் அழுகை கொண்டார். அழுத முகத்தோடு உங்களது விருப்பம் போல நடக்கட்டும் எனக் கூறி வருந்தினார். அன்று முதல் ஆயர் மனதளவிலும் உடலளவிலும் நோயாளியாக மாறினார். மூன்று ஆண்டுகள் பருமலை செமினரியில் அவர் தங்கி வாழ்ந்தார். இக்காலத்தில் தான் அன்றைய ஆயர் மாமன்றத்தின் தலைவராக இருந்து நிரணம் ஆலயத்தில் திருவனந்தபுரம் பேராயர் மார் இவானியோஸ் அவர்களுக்கு ஆயர் அருள்பொழிவு வழங்கினார். தனது பெயரையே மார் இவானியோஸ் என அவர் ஏற்றுக் கொண்டதில் அவருக்கு தனி விருப்பமும் கொண்டிருந்தார். அசாதாரணமான அன்பும் மதிப்பும் கொண்ட அரவணைப்பு நமது ஆயரின் மனதில் காணக்கிடந்தது. எருசலேம் பயணத்தின் போது அவர் பெற்றுக் கொண்ட பல புனித பொருள்களையும் பருமலை செமினரிக்கு ஒப்படைத்தார். ஆன்மீகத்தில் பெரும் பேற்றை பெற்றுக் கொண்டு திருச்சபை மறுஒன்றிப்புக்கு முக்கியமான நிலை வேண்டும் என நம்பியிருந்தார்.

அன்று ஆயர் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை நான் சொல்லாமல் இருந்திருந்தால் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைந்து இன்று நான் கேட்க வேண்டிய பல பழிச்சொற்களுக்கும் இடமில்லாமல் போயிருக்கும். அந்த புனிதமான ஆன்மாவின் மனதை தடுத்ததன் சிலுவைகளை இன்று நான் சுமக்கின்றேன். அன்று ஆயர் மறுஒன்றிப்படைந்திருந்தால் இன்று மிகப் பெரும் வலிமை பெற்றதாக மாறி இருந்திருக்கும்.

ஆயரின் தந்தையின் சகோதரன் இறந்த சைமன் மார் டயனோசியஸ் பேராயர் ஆவார். அவரும் மறுஒன்றிப்பிற்கு மிகவும் விரும்பிய நபராக செயல்பட்டிருந்தார் என அவருடைய குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார்.

யாக்கோபியா ஆயர்கள் பலர் மறுஒன்றிப்பு முயற்சிகளை விரும்பி செயல்படுத்த முனைந்துள்ளனர். இறைவனின் அருள் வரமின்றி அவற்றை செயல்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டன. இருப்பினும் யோவாக்கீம் மார் இவானியோஸ் ஆயரின் ஒன்றிப்பு முயற்சி யாக்கோபிய சகோதரர்களுக்கு மிக முக்கியமான சிந்தனையாக அமையும் என முடிக்கின்றேன்.”

(சத்திய சபா காகளம் விசேஷால்பிரதி பக்கம் 54 முதல் 56 வரை)

 

கினானாய பேராயரின் மறுஒன்றிப்பு முயற்சி

1909ல் கேரளாவுக்கு வருகை புரிந்த அப்துல்லா மறைமுதுவரிடமிருந்து அருள்பொழிவு பெற்ற கேரளாவில் கினானாயா சமுதாயத்திற்கு உட்பட்ட யாக்கோபிய பேராயர் தான் மார் சேவியரியோஸ் ஆவார். அவர் 1921 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி கோட்டயம் வலியபள்ளி என்னும் இடத்தில் வைத்து கோட்டயம் மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிய சூளப்பரம்பில் மார் அலெக்சாண்டர் ஆயரோடு இணைந்து மறுஒன்றிப்புக்கான ஆலோசனைகள் நடத்தினார். பின்னர் சூளப்பரம்பில் ஆயர் ராந்நி என்னுமிடத்திலுள்ள மறைப்பணித்தலத்தை சந்தித்தபோது கத்தோலிக்கர்களும் யாக்கோபியர்களும் இணைந்த அக்கூட்டத்தில் மறுஒன்றிப்பு ஆலோசனைகளைப் பற்றி இவ்வாறு கூறினார்.

“நாம் 345 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு புலம்பெயர்த்தவர்கள் ஆவோம். நாம் பல்வேறு பிரச்சனைகளால் இரண்டாக பிளவுற்று இருக்கிறோம். நான் பதவியேற்று ஏழு ஆண்டுகளாக தற்போது மார் சேவேரியோஸ் ஆயரை சந்திக்க நேர்ந்தது. நாங்கள் இரு சமுதாயத்தினரின் ஒன்றிப்பைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம்.

தற்போது நாங்கள் என்றும் நீங்கள் என்றும் நான் கூற வேண்டி உள்ளது. இனி வருகின்ற ஒரு காலத்தில் நாம் என மட்டுமே கூற வேண்டும். அதனுடைய சூழல் உருவாகும் என நம்புகிறேன். நானும் மார் சேவேரியோஸ் ஆயரும் இணைந்து ராந்நியின் யாக்கோபாயா ஆலயமான வலிய பள்ளி என்னும் இடத்தில் உங்களை ஆசீர்வதிக்க இறைவன் சூழல்களை ஏற்படுத்துவார் என நான் நம்புகிறேன்.”

1921 ஆகஸ்ட் 10ஆம் தேதி க்னானாய யாகோபியர்களுள் 13 அருள்தந்தையர்களும் சில திருத்தொண்டர்களும் பொதுநிலையினரும் சூளப்பறம்பில் ஆயரை சந்தித்து மறுஒன்றிப்பைப் பற்றிய உரையாடல் நிகழ்த்தினர். நம்பிக்கையோடு இந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டும் கத்தோலிக்க நம்பிக்கையாளர்கள் யாக்கோபியர் சகோதரர்களின் மறுஒன்றிப்புக்காக தனிப்பட்ட ஜெபங்கள் நடத்த வேண்டும் என அறிவுரை கூறியும் கோட்டயம் மறை மாவட்டத்தின் ஆலயங்களுக்கு 1921 நவம்பர் 27ஆம் தேதி அனுப்பிய வெளிப்படையான திருமடலில் யாக்கோபியர்கள் நடத்திய மறுஒன்றிப்பு முயற்சி ஆலோசனையைப் பற்றி சோளப்பரம்பில் ஆயர் இவ்வாறு கூறியுள்ளார்;

“இந்த இணைப்பைப் பற்றி அவர்களுடைய அருள் தந்தையர்களும் இறைமக்களும் மட்டுமல்ல அவர்களுடைய தலைமைக்குருவையும் எடுத்துக் கூறி நாங்கள் கூடுகைகளை நடத்தி, பல சந்திப்புகளின் வழியாக இத்தகைய எண்ண அலைகள் வேகம் கொண்டன. இதற்கு எதிர் கருத்துக்கள் எங்கும் காணப்படவில்லை. பல இடங்களிலும் பலரும் உண்மை நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளனர். ஒரு அருள் தந்தையும் திருத்தொண்டரும் உண்மை திருச்சபையில் ஏற்கனவே வந்தடைந்து விட்டனர்.

நாம எதிர்பார்த்ததைப் போன்று மார் சேவறியோஸ் பேராயரின் மறுஒன்றிப்பு ஆலோசனைகள் செயல் திட்டத்திற்கு வரவில்லை. ஆயர் சில காலங்கள் கூட வாழ்ந்திருந்தால் கத்தோலிக்க திருச்சபையில் மறுஒன்றிப்புக்கான செயல் திட்டம் நிறைவேறி இருக்கும்.


Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை