கடமற்றத்து கத்தனார்
கடமற்றத்து கத்தனார் கடமற்றத்து கர்த்தனார் என்ற சின்னத்திரைத் தொடர் மலையாள மொழியில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதன் வழி இக்குருவானவரைப் பற்றிய வரலாற்று ஆய்வு முயற்சிகள் உருவாகத் துவங்கின. இவர் ஒன்பதாம் நூற்றாண்டில் கேரளாவின் வாழ்ந்தவராக கருதப்படுகிறது. இவர் வாழ்ந்து வந்த கடமற்றம் என்னும் ஊர் கொச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மூவாற்றுப்புழைக்கு அருகே அமைந்துள்ளது. இந்த ஆலயம் புனித ஜார்ஜியார் ஆர்த்தடோக்ஸ் தேவாலயம் என அழைக்கப்படுகிறது. இவரது பெற்றோர் உலகன்னான் மற்றும் ஏலியாம்மா ஆவர். இவரது இயற்பெயர் பவுலோஸ் என்பதாகும். இன்றைய ஈராக் நாட்டின் நினிவே என்னும் இடத்திலிருந்து மார் ஆபோ என்னும் ஆயர் ஒருவர் மறைப்பணி புரிவதற்காக கொல்லம் வந்தடைந்த அவர் திருத்தூதர் தோமா நிறுவிய ஆலயத்தில் பராமரிப்புப் பணிகளைச் செய்தார். மக்களின் ஆன்மீக ஆர்வத்தை கண்டவாறு தொடர்ந்து பல இடங்களில் மறைப்பணிகளை செய்யத் துவங்கினார். பின்னர் அவர் கடமற்றம் என்னும் ஊரை வந்தடைந்தார். கடமற்றத்தை அடைந்த மார் ஆபோ பயணக் களைப்பினால் அங்கே அமைந்திருந்த வீட்டுக்குச் சென்று உணவு உண்டா எனக் கேட்டார். அக்க...