கடமற்றத்து கத்தனார்
கடமற்றத்து கத்தனார்
கடமற்றத்து கர்த்தனார் என்ற சின்னத்திரைத் தொடர் மலையாள மொழியில்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதன் வழி இக்குருவானவரைப் பற்றிய வரலாற்று ஆய்வு முயற்சிகள்
உருவாகத் துவங்கின. இவர் ஒன்பதாம் நூற்றாண்டில் கேரளாவின் வாழ்ந்தவராக
கருதப்படுகிறது. இவர் வாழ்ந்து வந்த கடமற்றம் என்னும் ஊர் கொச்சி மதுரை தேசிய
நெடுஞ்சாலையில் மூவாற்றுப்புழைக்கு அருகே
அமைந்துள்ளது. இந்த ஆலயம் புனித ஜார்ஜியார் ஆர்த்தடோக்ஸ் தேவாலயம் என
அழைக்கப்படுகிறது. இவரது பெற்றோர் உலகன்னான் மற்றும் ஏலியாம்மா ஆவர். இவரது
இயற்பெயர் பவுலோஸ் என்பதாகும்.
இன்றைய ஈராக் நாட்டின் நினிவே என்னும் இடத்திலிருந்து மார் ஆபோ என்னும் ஆயர் ஒருவர் மறைப்பணி புரிவதற்காக கொல்லம்
வந்தடைந்த அவர் திருத்தூதர் தோமா நிறுவிய ஆலயத்தில் பராமரிப்புப் பணிகளைச்
செய்தார். மக்களின் ஆன்மீக ஆர்வத்தை கண்டவாறு தொடர்ந்து பல இடங்களில் மறைப்பணிகளை
செய்யத் துவங்கினார். பின்னர் அவர் கடமற்றம் என்னும் ஊரை வந்தடைந்தார். கடமற்றத்தை
அடைந்த மார் ஆபோ பயணக் களைப்பினால் அங்கே அமைந்திருந்த
வீட்டுக்குச் சென்று உணவு உண்டா எனக் கேட்டார். அக்குடும்பத்தில் வாழ்ந்து வந்த
விதவைப் பெண் ஒருத்தி தனது ஒரே மகனோடு வாழ்ந்து வந்த சூழலில் தனது ஏழ்மையால் “உணவருந்த
எதுவுமே இல்லை” என வருத்தமுடன் கூறினார். ஏதேனும் இருக்கிறதா என மீண்டும் தேடச்
சொன்ன போது கடைசியாக இருந்த மிகவும் சிறிய அளவு அரிசியை சமைக்கத் துவங்கினார்.
அற்புதமாக அந்தப் பாத்திரம் முழுவதுமாக பொங்கி வழியும் விதத்தில் உணவு
தயாரிக்கப்பட்டது. அப்பெண்மணியும் மகனும் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டனர். அவ்வூர்த்தலைவரின்
மகளின் நோயைக் குணப்படுத்தியதனால் அவருக்கு ஆலயம் அமைக்குமாறு நிலத்தை தானமாக
வழங்கினார். அந்த இடத்தில் தான் இன்றைய கடமற்றம் ஆர்த்தடோக்ஸ் ஆலயம் உருவானது. கிறிஸ்தவரான
அவ்விதவையின் மகனே கடமற்றத்து கத்தனார்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததாலும் பெற்றோருக்கு ஒரே மகனாக இருந்ததனால் அனாதையானார்.
மார் ஆபோ அவரை ஆலயத்திலேயே வளரச்
செய்தார். சுறியானி மொழி போன்ற கல்வியை கற்பித்தார். குருத்துவ பயிற்சியகப்
பாடங்கள் அனைத்தையும் தானாகவே அவர் கற்றுக் கொண்டார். ஐந்து வருடங்களுக்குள் ஒரு குருவானவர்
அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் வெகுவேகமாக கற்றுத் தெளிவடைந்தார். அவ்வாறு மார்
ஆபோ அவரை திருத்தொண்டராக அருள் பொழிவு செய்தார்.
அவ்வாலயத்தின் பங்குத்தந்தை தனக்கு சொந்தமாக ஏராளமான மாடுகளை வளர்த்து
வந்தார். ஒரு நாள் மேய்ச்சலுக்காக சென்ற மாடுகளுள் ஒன்று காணாமல் போகவே அதனைத்
தேடி திருத்தொண்டர் அவர்கள் கடமற்றம் பகுதி முழுவதும் தேடவும், கிடைக்காத்தால்
ஊருக்கு அப்பால் வனப்பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடி இனத்தவரைச் சார்ந்த மந்திரவாதிகளின்
குழுவில் அகப்பட்டார். அவ்வினத்தினரின் மூப்பனுக்கு ஆண் குழந்தைகள் இல்லாத காரணத்தால்
திருத்தொண்டார் மீது இரக்கம் கொண்டு தனிப்பாசம் கொண்டார். அவரது திறமைகளைக்
கண்டவாறு மூப்பன் இவ்வாறு கூறினார், “நீ என்னோடு இங்கு தங்கி வாழ்ந்து வந்தால்
எங்கள் இனத்தின் அனைத்து மரியாதைகளையும் பெற்றுக் கொள்வாய். நான் அனைத்து மந்திர
தந்திர வித்தைகளையும் உனக்கு கற்பிப்பேன்.” திருத்தொண்டர் திரும்பி வர இயலாத
சூழலில் அங்கேயே வனவாசிகளோடு வாழத் துவங்கினார். மூப்பன் ஒரு சில தேர்வுமுறைகளை நடத்தவும்
பின்னர் மந்திர தந்திரங்களை கொஞ்சம் கொஞ்சமாக கற்பிக்கவும் துவங்கினார். 'ஸ்தம்பனம்', 'கோப்யம்நிகுதம்', 'திரஸ்கரணி', 'கூடுவிட்டு
கூடுசேரல்', 'இந்திரநடதம்', 'தேவமாருதா', 'சுவர்ணஸ்த்வா', 'யமஸ்யலோகத்', 'அக்நேஷோதினி', 'துருவம்
த்ருவேணா',
'அலக்தஜீவ', 'அலக்தஜீவ' 'அயந்தேயோனி', 'சபத்வஹா', மற்றும் 'முஞ்சவித்வா' போன்ற வித்தைகளை அவர் மூப்பனிடமிருந்து கற்றுக் கொண்டார். பன்னிரு ஆண்டுகளுக்குப்
பின்னர் மூப்பனின் மகளை இவருக்கு திருமணம் செய்து வைக்க முற்பட்டபோது வனவாசிகளின்
குழுவிலிருந்து வெளியேறி தனது ஊரை வந்தடைந்தார் எனக் கூறப்படுகிறது.
மார் ஆபோ பவுலோஸ் திருத்தொண்டரை குருவானவராக அருள்பொழிவு செய்தார். தான்
கற்றறிந்த மந்திர தந்திரங்களை பயன்படுத்தி அவ்வூரில் பாதிக்கப்பட்டிருந்த பல
நபர்களை நோயிலிருந்து விடுதலை பெறச் செய்தார். எனவே அப்பகுதி மக்கள் அனைவரும் அவரை
கடமற்றத்து கத்தனார் என அழைக்கத் துவங்கினர்.
ஆயர் மார் ஆபோ கடமற்றத்திலிருந்து தேவலக்கரை நோக்கி புறப்பட்டபோது கடமற்றத்து
கத்தனாரிடம் தனது கையில் அணிந்திருந்த மோதிரத்தை ஒப்படைத்துக் கொண்டு இவ்வாறு கூறினார்,
“எப்போது இந்த மோதிரம் உனது கைகளிலிருந்து கீழே விழுகிறதோ அன்று நான் இறந்து
விடுவேன் என நீ கருத வேண்டும்.” ஒருநாள் கத்தனார் திருப்பலி ஒப்புக்கொடுக்கின்ற
போது அவரது கைகளிலிருந்து மோதிரம் கீழே விழுகிறது. ஆயரின் மரணச் செய்தியை உணர்ந்த அவர்
உடனடியாக தேவலக்கரை நோக்கிச் செல்கிறார். இவர் சென்றடைவதற்கு முன்னால் அவரது
அடக்கத் திருச்சடங்குகள் அனைத்தும் நிறைவுற்றன. அவரது கல்லறையில் மண்டியிட்டு வேண்டிய
போது மார் ஆபோவின் வலது கை கல்லறையிலிருந்து மேல் நோக்கி உயர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடமற்றத்து கத்தனார் அந்த கையை எடுத்து வந்து கடமற்றம் ஆலயத்தில் அடக்கம் செய்தார்
எனவும் நம்பப்படுகிறது.
அவர் தனது நற்பணிகளை சமூகத்துக்காக செய்த பின்னர் ஒரு குகை வழியாக மறைந்து போனார் என நம்பப்படுகிறது. அந்தக் குகை என கருதப்படும் கிணற்றுப் பகுதியில் இன்றும் பல நம்பிக்கையிலான மக்கள் வந்து பல்வேறு விதமான சடங்குகளை நடத்தி வழிபட்டு வருகின்றனர்.
அவரது நினைவிடம் கடமற்றம் ஆலயத்தில் உள்ளது.


.webp)
%20(1).webp)
Comments
Post a Comment