மதர் மேரி கல்லறய்க்கல் DM மொழிந்தவை - 99
ம தர் மேரி கல்லறய்க்கல் DM மொழிந்தவை 1. கிறிஸ்துவின் மீட்புத் திட்டத்தில் பங்கு பெறும் பணிக்காக அழைக்கப்பட்டிருக்கும் சிறு சமூகமே மேரிமக்கள் துறவு சபை. 2. வாய்ப்புள்ள போதெல்லாம் எந்த நபரிடமும் இறைவனைப் பற்றிக் கூறும் பழக்கம் நமக்கு வேண்டும் . 3. கத்தோலிக்கத் திருச்சபையில் மீட்புப்பணியைத் தொடர நாமே இன்னொரு கிறிஸ்துவாக மாற வேண்டும். 4. ' நான் ஒரு மிஷனறி ' என்ற விழிப்புணர்வோடு நம்முடன் தொடர்புகொள்வோரை இறைவன்பால் இணைப்பதே மறைப் பணியின் நோக்கம் 5. கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள தனிப்பட்ட அன்பே நம் மறைப்பணியை அளவிடும் அளவுகோல். 6. இறைவனோடு தனிமையில் உறவாடாமல் நாம் ஒருபோதும் வெற்றிவாகை சூடுதல் இயலாது. 7. தியானம் செய்ய வேண்டுமெனின் உடலாலும் உள்ளத்தாலும் மௌனம் கடைபி...