மதர் மேரி கல்லறய்க்கல் DM - Quiz
1.
மறைப்பணி ஆர்வமிக்க பலரை
உருவாக்கிய கேரள மாநிலத்தின் பாலா அருகே உள்ள தாலுகா எது?
மீனச்சில்
2.
மதர் மேரி கல்லறய்க்கல் பிறந்து
வளர்ந்த ஊர் எது?
பிறவித்தானம்
3.
மதர் மேரியின் குடும்பப் பெயர்
என்ன?
கல்லறய்க்கல்
4.
கல்லறய்க்கல் குடும்பம் எந்த
ஆண்டு முதலான பழமை வாய்ந்த மரபை கொண்டுள்ளது?
கிபி
முதலாம் நூற்றாண்டு முதல்
5.
உயர்ந்த குலத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்கள்
வடக்கும் பறவூர்,
கோட்டைக்காவு, பாலயூர் போன்ற பகுதிகளிலிருந்து
தங்கள் குலத்தாரால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு அஞ்சி புலம்பெயர்ந்த தெற்கு கிராமங்கள்
எவை?
குறவிலங்ஙாடு, கடுத்துருத்தி, மீனச்சில்
6.
கல்லறய்க்கல் குடும்பத்தினர் தொடக்கக்
காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த பாலாவின் தாலூகா எது?
மீனச்சில்
7.
கல்லறய்க்கல் குடும்பத்தினரின் முன்னோரான
குடும்பத் தலைவரின் பெயர் என்ன?
ஆகஸ்தி
8.
தொடக்கக் காலத்தில் கல்லறய்க்கல்
குடும்பத்தினர் கிறிஸ்தவர்களாயினும் எத்தகைய மரபினை வெளிவேடங்களிலும் செயல்களிலும்
கொண்டிருந்தனர்?
பிராமண
பாரம்பரியம்
9.
கல்லறய்க்கல் ஆகஸ்தியின்
இரண்டாவது மகன் யார்?
மாத்தன்
10. மாத்தன் பரணங்ஙானம் பங்கு தச்சலாடியைச் சார்ந்த யாரை திருமணம் செய்தார்?
ஏலி
11. அமைதியான முகப்பொலிவு, இனிய பேச்சு, கடமையுணர்வு, விருந்தோம்பல்,
ஏழைகளுக்கு இரங்குதல் மற்றும் நம்பிக்கை பயிற்சியில் திகழ்ந்தவரான பெண்மணி யார்?
ஏலி.
12. திருவிதாங்கூரின் அரசில் "ஸ்ரீ மூலம் பறஜாசபா
மெம்பர்" ஆக மீனச்சில் தாலுகாவிலிருந்து இரு முறை
தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
திரு.
மாத்தன்
13. ஊர்மக்களின் கிராம நீதிமன்றமாக யாருடைய வீடு செயல்பட்டு வந்தது?
திரு.
மாத்தன்
14. திரு. மாத்தன் ஏலி தம்பதியினருக்கு எத்தனை குழந்தைச் செல்வங்கள் இருந்தன?
பத்து
15. திரு. மாத்தன் ஏலி தம்பதியினரின் பத்து குழந்தைச் செல்வங்களுள் எத்தனை பேரை
குழந்தைப் பருவத்திலேயே இழந்தனர்?
ஐந்து
(4 ஆண் மற்றும் 1 பெண்)
16. மாத்தன் ஏலி தம்பதியரின் பத்தாவது குழந்தையாக மதர் மேரி கல்லறய்க்கல் பிறந்த
நாள் எது?
1898 ஏப்ரல் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
17. மதர் மேரியின் குழந்தைப் பருவ செல்லப்பெயர் என்ன?
"குஞ்ஞுபெண்ணு"
18. மதர் மேரியின் குழந்தைப் பருவத்தில் வாழ்ந்திருந்த மூத்த சகோதரனும் சகோரிகளும்
எத்தனை?
1
அண்ணன், 3 அக்கா
19. குஞ்ஞு பெண்ணிற்கு பிறந்த பின்னர் எந்த நாளில் திருமுழுக்கு வழங்கப்பட்டது?
11 - ம் நாளில் (புதன்கிழமை)
20. குஞ்ஞு பெண்ணிற்கு எந்த ஆலயத்தில் வைத்து திருமுழுக்கு வழங்கப்பட்டது?
பிறவித்தானம்
21. குஞ்ஞு பெண்ணிற்கு திருமுழுக்கு வழங்கிய குரு யார்?
அருட்தந்தை
தேவசியா
22. குஞ்ஞு பெண்ணிற்கு திருமுழுக்கின் போது வழங்கப்பட்ட பெயர் என்ன?
ஏலி
23. குஞ்ஞு பெண்ணிற்கு திருமுழுக்கு வழங்கப்பட்ட மலையாள கலண்டரின் நாள் எது?
1073 மேடம் மாதம் 22
24. திருமுழுக்கின் போது குஞ்ஞு பெண்ணின் ஞானப்பெற்றோர் யாவர்?
தாத்தா
ஆகஸ்தி மற்றும் காஞ்ஞிரமலை திரேசியா
25. மதர் மேரி கல்லறய்க்கல் திருமுழுக்குப் பற்றிய தகவல்கள் எந்த ஆலய திருமுழுக்கு
பதிவேட்டில் உள்ளன?
பிறவித்தானம்
புனித அகஸ்டீன் ஆலயம்
26. 'குஞ்ஞு பெண்ணு' என்று அழைக்கப்பட்டவர் வளரும்
பருவத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
ஏலியாம்மா
27. மதர் மேரி கல்லறய்க்கலை ஏழாம் வயதில் பள்ளிக்கூடத்தில் சேர்த்தபோது
பதிவேட்டில் எந்த பெயர் எழுதப்பட்டது?
கெ.
எம். ஏலி
28. மதர் மேரி கல்லறய்க்கலின் மூத்த அக்கா யார்?
றோசம்மா
29. றோசம்மாவை திருமணம் செய்தவர் யார்?
(இளந்தோட்டம்
பங்கு) பூவேலில் வடக்கன்வீட்டில் தொம்மச்சன்
30. றோசம்மாவை – தொம்மச்சன் தம்பதியினருக்கு எத்தனை குழந்தைகள்?
எட்டு
31. மதர் மேரி கல்லறய்க்கலின் (ஏலியாம்மா) மூத்த அக்காவின் மகள்களான மேரிமக்கள்
கன்னியர் சபையின் 2 வது மற்றும் 12 வது உறுப்பினர்களான அருட்சகோதரிகள் யாவர்?
அருட்சகோதரி
ஆக்னஸ் டி.எம், அருட்சகோதரி லுதுவின் டி.எம்
32. மேரிமக்கள் சபைக்கு பல உதவிகள் செய்த மதர் மேரி கல்லறய்க்கலின் (ஏலியாம்மா) மூத்த
அக்காவின் மகன் யார்?
அருட்தந்தை
இஸிதோர் C.M.I.
33. மதர் மேரி கல்லறய்க்கலின் (ஏலியாம்மா) இரண்டாவது சகோதரி யார்?
அன்னம்மா
34. அன்னம்மாவை திருமணம் செய்த பிறவித்தானம் பங்கைச் சார்ந்தவர் யார்?
ஐப்பன்பறம்பில்
குந்நேல் சாக்கோச்சன்
35. அன்னம்மா - சாக்கோச்சன் தம்பதியினருக்கு எத்தனை குழந்தைகள்?
எட்டு
36. ஏலியாம்மாவின் மூன்றாவது அக்கா யார்?
மாம்மி
37. மாம்மி முத்தோலி கார்மல் சபையில் அருட்கன்னியராக ஏற்றுக் கொண்ட பெயர் என்ன?
அருட்சகோதரி
ஜோசபீனா C.M.C.
38. மதர் மேரி கல்லறய்க்கலின் ஒரே சகோதரர் யார்?
ஆகஸ்தி
(கொச்சு)
39. மதர் மேரி கல்லறய்க்கலின் சகோதரர் ஆகஸ்தி தனது மனைவி ப்றிஜித்தாவுடன் எங்கே வசித்து
வந்தார்?
குறுமண்ணில்
40. ஆகஸ்தி ப்றிஜித்தா தம்பதியரின் குழந்தைகள் எத்தனை?
இரண்டு
மகன்களும் இரண்டு மகள்களும்
41. செல்லப்பிள்ளையான ஏலியாம்மா தினம் தோறும் வீட்டில் உள்ள செபஅறையில் செய்த பணி
என்ன?
மலர்களால்
அழகுபடுத்துதல்
42. ஏலியாம்மா சிறு வயதில் தாயைக் காண அழுது அடம் பிடித்ததால் பணியாளர் எத்தனை
கிலோமீட்டர் நடத்து அவரை தாயிடம் ஒப்படைத்தார்?
சுமார்
5 கி.மீ.
43. ஏலியாம்மா சிறு வயதில் பள்ளிக்கூடம் செல்வதற்கு முன்னர் ஆசான் தனிமையாக அவருக்கு எங்கே வைத்து பாடம்
புகட்டினார்?
ஏலியம்மாவின்
வீட்டில்
44. அடிப்படைக் கல்வி கற்றபின் எந்த வயதில் அக்காவுடன் முத்தோலி கார்மல் மடத்தின் பெண்கள் விடுதியில்
தங்கி தொடக்கப்பள்ளியில் கல்வி கற்கத் துவங்கினார்?
ஏழு வயது
45. முத்தோலி மலையாள வழி பள்ளிக்கூடத்திலிருந்து விலகி ஏலியம்மா எந்த ஆங்கில வழி
பள்ளிக்கூடத்தில் கல்வி கற்றார்?
சங்கனாச்சேரி
புனித யோசேப்பு
46. எந்த வயது வரையிலும் ஏலியம்மா அருட்சகோதரிகளின் கண்காணிப்பு இல்லங்களில் தங்கி
கல்வி கற்றார்?
21 வயது வரை
47. பள்ளிப்படிப்பு முடிந்ததும் துறவு வாழ்வுக்காக ஏலியாம்மாவின் அக்கா எந்த
மடத்தில் சேர்ந்தார்?
முத்தோலி
கார்மல் மடத்தில்
48. ஏலியாம்மா பள்ளிப்படிப்பை முடித்து எங்கே நற்செய்தி அறிவிப்பாளராக பணியாற்ற
விரும்பினார்?
வடஇந்தியாவில்
49. அப்பாவின் அனுமதியோடு ஏலியம்மா இணைந்த சங்ஙனாசேரி மறைமாவட்ட ஆயர் மார் தோமஸ்
குரியாளசேரி ஒரு குருவானவராக இருந்தபோது நிறுவிய சபை எது?
ஆராதனை
துறவு சபை (SABS - Sisters of the Adoration of
the Blessed Sacrament)
50. ஏலியம்மா இளந்துறவியாகிட சங்ஙனாசேரி
மறைமாவட்டத்தைச் சேர்ந்த வாழப்பிள்ளி ஆராதனை மடத்தில் எப்போது இணைந்தார்?
1918-ல்
51. ஏலியாம்மாவை மேற்படிப்பிற்காக துறவுசபையின் பொறுப்பாளர்கள் எங்கே அனுப்பினர்? தி
ருவனந்தபுரம்
மகளிர் கல்லூரி (முன்னர்: மகாராஜாஸ் கல்லூரி)
52. திருவனந்தபுரத்தில் இளமையில் எந்த விடுதியில் தங்கி கல்லூரியில் பயின்றார்?
ஹோலி
ஏஞ்சல்ஸ் கான்வென்ட்
53. திருவனந்தபுரம் ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்டில் வாழ்ந்த போது எதனை படிப்பதில் ஆர்வம் காட்டினார்?
புனிதர்களின்
வரலாறு
54. ஏலியாம்மாவின் தாய் எந்த ஆண்டில் இறைவனடி சேர்ந்தார்?
1919-ல்
55. தாயின் பிரிவால் வேதனைப்பட்ட ஏலியம்மாவுக்கு ஆறுதல் வழங்கிய இறைவார்த்தை எது?
“ஆண்டவர்
அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!" (யோபு 1:21)
56. ஏலியாம்மாவின் சகோதரன் ஆகஸ்தி எப்போது இறையடி சேர்ந்தார்?
1919
57. காசநோய் பாதித்த்தால் 'இன்டர்மீடியட்'
இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதமுடியாமல் திருவனந்தபுரத்திலிருந்து வாழப்பிள்ளி
மடத்திற்கும் எப்போது அனுப்பப்பட்டார்?
1919 அக்டோபர் 22-ம் நாள்
58. வாழப்பிள்ளி மடத்திலிருந்து ஏலியாம்மாவை சிகிச்சைக்காக எங்கே அனுப்பினர்?
வீட்டிற்கு
59. இயற்கை மருத்துவத்தால் காச நோய் குணமான பின்னர் துறவற இல்லம் செல்லவோ, கல்வியைத் தொடரவோ ஏலியாம்மாவை அனுமதிக்காதவர்கள் யாவர்?
தந்தையும்,
மருத்துவர்களும்
60. காச நோய் குணமான பின்னர் ஏலியாம்மா செய்த ஆன்மீகப்பணிகள் எவை?
தினமும்
திருப்பலியில் பங்கேற்றல், நீண்ட நேரம் செபத்திற்காக செலவிடல், அறையில் தனிமையில் இறைவனோடு உறவு கொள்ளல்
61. ஏலியம்மாவின் தந்தை யாரை இரண்டாவதாக திருமணம் செய்தார்?
இடமற்றம்
கோக்காட்டு ஏலியை
62. ஏலியம்மாவின் தந்தைக்கும் இடமற்றம் கோக்காட்டு ஏலிக்கும் பிறந்த மகன் யார்?
ஒளசேப்பச்சன்
63. ஒளசேப்பச்சன் யாரை திருமணம் செய்து கொண்டார்?
விளக்குமாடம்
பங்கைச் சேர்ந்த கள்ளிவயலில் மேரிக்குட்டியை (மறியக்குட்டி)
64. ஒளசேப்பச்சன் – மேரிக்குட்டி தம்பதியினர் 5 மகன்களுடனும் 2
மகள்களுடனும் எங்கே வாழ்ந்து வந்தனர்?
பிறவித்தானம்
65. தந்தையின் அறிவுறுத்தலின்படி ஏலியாம்மா தனது சகோதரரின் விதவையான மனைவி மற்றும்
குழந்தைகளுக்குத் துணையாக குறுமண் சென்று வாழத்துவங்கியது எப்போது?
1922-ல்
66. "எல்லா நாளும் அதிகாலையிலேயே எழுந்து அதிக நேரம் செபத்தில் செலவிடுவார்.
திருப்பலிக்கு நேரமானதும், கையில் புதுபூக்களுடன்
ஆலயத்திற்கு புறப்படுவார். ஆலயத்தில் வைப்பதற்கு என்றே பூச்செடிகள் வளர்த்து
வந்தார். ஆலய பலிபீடத்தை பூக்களால் அழகுபடுத்தி திருப்பலிக்காக ஒழுங்குபடுத்துவார்.
குறுமண் பங்கு கோவிலில் திருப்பலி இல்லாவிட்டால் பல கிலோமீட்டர் தொலைவு நடந்து
ஏதாவது தேவாலயத்தில் சென்று திருப்பலியில் கலந்து கொள்வார். திருப்பலிக்குப்பின் நன்றி செலுத்த அதிகநேரம்
செலவிடுவார். பிறகு சிலுவைப்பாதை, செபமாலை, தனிப்பட்ட பிற செபங்கள் அனைத்தும் நிறைவேற்றியபின் வீடு திரும்புவார்.
வழியில் சந்திப்போரிடம் அன்பாய் பேசி வீடு சென்றடைந்ததும், ஒரு
டம்ளர் சூடான பால் கொடுப்பார்கள். அதைக் குடித்தபின் மேல்மாடியிலுள்ள தன்
அறைக்குச் சென்று செபிப்பதிலும் விவிலியம் மற்றும் ஆன்மீக நூற்கள் படிப்பதிலும்
அதிக நேரம் செலவிடுவார். வீட்டில் ஏதாவது தேவைகள் இருந்தால் தேவைக்கேற்ப உதவி
செய்யவும் தயங்கமாட்டார்" என ஏலியம்மாவைப் பற்றிக்
கூறியவர் யார்?
சகோதரரின்
மருமகள் சாச்சியம்மா
67. ஏலியம்மாவின் செப, தப வாழ்க்கைக்கு எவ்வாறு பயிற்சிகள்
பெற்றிருந்தார்?
அருட்சகோதரிகளின்
கண்காணிப்பு இல்லங்கள் மற்றும் கன்னியர் இல்லங்கள்
68. "நான் மருத்துவ மனையிலும், செபத்திலும் வாழ்க்கையை
மேற்கொண்டாலும் வீட்டாரின் தேவைக்கேற்ப அவர்களுக்கு உதவி செய்து வந்தேன். ஒருவாறு
நோயிலிருந்து விடுதலை பெற்ற நிலையில் மீண்டும் துறவற இல்லம் செல்ல இயலுமா என்ற
சந்தேகம் என்னை ஆட்கொண்ட நாட்கள்..." என்றவர் யார்?
மதர்
மேரி கல்லறய்க்கல்
69. நோயுற்ற பின்னர் ஏலியம்மா வீட்டில் துறவியைப் போன்று எத்தனை ஆண்டுகள் ஒரு
குருவானவரின் ஆன்மீக வழிநடத்துதலுக்கேற்ப வாழ்ந்து வந்தார்?
19 ஆண்டுகள்
70. குறுமண்ணில் பங்கின் பள்ளிக்கூடத்தில் எத்தனை ஆண்டுகள் ஏலியம்மா ஆசிரியையாக
இலவசமாக பணிபுரிந்தார்?
ஏழு
ஆண்டுகள்
71. தம் தந்தையைப் போல் அரசியல் வாழ்விலும் மக்கள் நலப்பணிகளிலும் ஆர்வம்
கொண்டிருந்த ஏலியம்மாவின் தம்பி யார்?
ஔசேப்பச்சன்.
72. மக்கள் பணிகளுக்காக ஒரு கன்னியர் இல்லம், ஆதரவற்றோர் பாலர்
பவனம், மற்றும் பள்ளிக்கூடம் இவற்றிற்கான நிலத்தை 1978-ல் நன்கொடையாக வழங்கிய மதர் மேரியின் தம்பி யார்?
ஔசேப்பச்சன்.
73. கோதமங்கலம் மறைமாவட்டத்தின் மக்கள் நலப்பணிகளின் மையமாக திகழ்கின்ற வனப்பகுதி
எது?
மறையூர்
- பள்ளநாடு
74. ஔசேப்பச்சன் எப்போது காலமானார்?
1989 ஆகஸ்டு 31-ம் நாள் தமது 69-ம்
வயதில்
75. 1653-ல் பிளவுபட்ட திருச்சபை அனைத்துலக திருச்சபையோடு மீண்டும் இணைந்த மலங்கரை சிறியன்
கத்தோலிக்க திருச்சபை உருவான நாள் எது?
1930 செப்டம்பர் 20
76. 1934 -
ல் பேராயர் மார் இவானியோசின் அழைப்புக்கேற்ப குமரி மாவட்டத்தில்
நற்செய்திப்பணிக்காக வந்த சங்ஙனாச்சேரி மறைமாவட்டம் பாலா, பிறவித்தானம்
சிற்றூரைச் சேர்ந்த இளங்குரு யார்?
அருட்தந்தை
ஜோசப் குழிஞ்ஞாலில்
77. ஓராண்டுப் பணிக்காக திருவனந்தபுரம் வந்த அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலிலை மார்
இவானியோஸ் மார்த்தாண்டத்திற்கு அனுப்பிய நாள் எது?
1934 ஜூன் 29
78. அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் மார்த்தாண்டத்தை வந்தடைந்த (1934) ஜூன் 29 நாள் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆயரோடு எவ்வாறு
தொடர்பு கொண்டுள்ளது?
ஆயரின்
பெயர் விழா (Feast)
79. அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் மார்த்தாண்டத்தை வந்தடைந்த (1934) ஜூன் 29 நாள்
யூஹானோன் மார் கிறிஸோஸ்டோம் ஆயரோடு எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது?
ஆயர்
அருட்பொழிவு தினம்
80. அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் வந்தடைந்த வெட்டுமணி தற்போது மார்த்தாண்டம்
மறைமாவட்டத்தோடு எவ்வாறு தொடர்பு கொண்டது?
மார்த்தாண்டம்
மறைமாவட்ட ஆயரகம் வெட்டுமணியில்
81. அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் முதன் முதலாக மார்த்தாண்டத்தில் திருப்பலி
ஒப்புக்கொடுத்த நாள் எது?
1934 ஜூன் 30
82. அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் ஓலைக்குடிசைகள் (shed) அமைத்து பணியாற்றிய மார்த்தாண்டத்தின் 14 அண்மை ஊர்கள் எவை?
மார்த்தாண்டம், கட்டச்சிவிளை (விமலபுரம்), செல்லங்கோணம், வெட்டுமணி, அம்சி, பாகோடு, குளப்புறம்,
குளத்தூர், களியக்காவிளை, அம்பிலிகோணம், மஞ்சாலுமூடு, அருவியோடு,
ஈந்திக்காலை, காஞ்சிரகோடு
83. அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் பணிக்காக பயன்படுத்திய வாடகை சைக்கிளின் மாத
வாடகை எவ்வளவு?
மூன்று
ரூபாய்
84. அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் எத்தனை நபர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியளித்து
உபதேசிமார்களாக நியமித்தார்?
16
85. சுமார் 2 ஆண்டுகளில் அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் எத்தனை நபர்களுக்கு திருமுழுக்கு வழங்கினார்?
3000
86. அருட்தந்தை குழிஞ்ஞாலில் மற்றும் புது மறைப்பணித்தள இறைமக்களுக்கும்
வாழ்த்துக்களைத் தெரிவித்த மார் இவானியோஸ் ஆண்டகை தனது சொந்த கையால் எழுதிய கடிதம்
எப்போது?
17-3-1936
ல்
87. அருட்தந்தை குழிஞ்ஞாலில் மற்றும் புது மறைப்பணித்தள இறைமக்களுக்கும்
வாழ்த்துக்களைத் தெரிவித்த மார் இவானியோஸ் ஆண்டகை தனது சொந்த கையால் எழுதிய கடிதம்
எங்குள்ளது?
மார்த்தாண்டம்
மேரிமக்களின் தாய் இல்லமான "ஸ்தாபக சன்னிதி"யில்
88. அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலிடம் "உங்களால் செய்ய
முடியுமென்றால் செய்யுங்கள். என்னிடம் பொருளுதவி எதுவும் கேட்கக்கூடாது"
என்று கூறி புதிய கன்னியர் துறவு சபை தொடங்குவதற்கான அனுமதி
வழங்கியவர் யார்?
பேராயர்
மார் இவானியோஸ்
89. 1934-முதல் மார்த்தாண்டம் மறைப்பணிகளுக்காக தனக்கு பொருளுதவி வழங்கி வருகின்ற அருட்தந்தை
ஜோசப் குழிஞ்ஞாலிலிலின் உறவினர் யார்?
கல்லறய்க்கல்
திரு. மாத்தன்
90. ஏலியாம்மாவை மேரிமக்கள் கன்னியர் சபையின் துணை நிறுவனராவதற்கு, கடவுள் எத்தனை ஆண்டுகளாக ஆயத்தப்படுத்தினார்?
நாற்பது
ஆண்டுகளாக
91. "அச்சன் ஒரு மடம் துடங்ஙியால் ஞான் வராம்" (நீங்களே
ஒரு கன்னியர் சபையைத் துவங்கினால் நான் வருவேன்) என ஏலியாம்மா யாரிடம் கூறினார்?
அருட்தந்தை
குழிஞ்ஞாலிலிடம்
92. "நீர் விரைந்துசென்று ஏழையர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்........ நீர் வழியோரங்களிலும்
நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை
வற்புறுத்திக்கூட்டிவாரும்" (லூக். 14: 21-23) என்ற திருவிவிலியப்பகுதி தனது எதிர்காலத்தை தெள்ளத்தெளிவாக
எடுத்துக்காட்டுவதென உணர்ந்த ஏலியாம்மா தனது ஆன்மீகக் குருவான யாரிடம் சென்று
ஆலோசனை கேட்டார்?
சங்ஙனாச்சேரி
ஆயர் மேதகு ஜெயிம்ஸ் காளாசேரி
93. முத்தோலி கார்மல் மடத்தில் பயிற்சிக் காலத்தில் பாம்பு கடித்து ஆபத்தான
நிலையில் சிகிச்சைக்காக வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஏலியாம்மாவின் அக்கா மகள் யார்?
மேரி
தோமஸ் வடக்கன்
94. 'என் காலத்தில் ஒரு மடத்திலும் போக அனுமதிக்கமாட்டேன்' என்று ஏலியாம்மாவின் தந்தை யாரிடம் கூறினார்?
மேரி
தோமஸ் வடக்கன்
95. ஏலியாம்மாவும் மேரியும் அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலிலின் மறைப்பணித்தளமான மார்த்தாண்டத்துக்கு மறைப்பணிக்காக வந்த நாள்
எது?
1937 ஜூன் 28-ஆம் நாள்
96. மார்த்தாண்டத்தின் வீடுகளில் அமைந்திருந்த சிறு கோவில் எவ்வாறு
அழைக்கப்பட்டது?
பேய்க்கோவில்
97. முதலில் ஏலியாம்மாவும் மேரியும் மார்த்தாண்டம் வடக்குத்தெருவில் ஜோசப்
குழிஞ்ஞாலில் அடிகளார் 17 ரூபாய் வாடகைக்கு ஒழுங்குபடுத்தியிருந்த எந்தக் கட்டிடத்தில், ஒரு
வாரம் தங்கியிருந்தனர்?
வின்ஸிலின்
98. குழிஞ்ஞாலில் அடிகளாரோடு இணைந்து ஏலியாம்மாவும் மேரியும் திருவனந்தபுரம் பட்டம்
பேராயரகம் சென்று யாரை சந்தித்தனர்?
மார்
இவானியோஸ்
99. "நீங்கள் எப்போது வரவேண்டும் என்பதை அருட்தந்தை வழியாக அறிவிக்கலாம்"
என்று யாரிடம் கூறப்பட்டது?
ஏலியாம்மா
மற்றும் மேரியிடம்
100.
ஏலியாம்மாவும் மேரியும்
மார்த்தாண்டத்திலிருந்து கடிதம் வருவதை எதிர்நோக்கி, எக்காலத்தில்
காத்திருந்து செபித்தனர்?
1938 பிப்ரவரி, மார்ச் மாதங்களில்
101.
ஏலியாம்மாவும் மேரியும் எப்போது
மார்த்தாண்டத்திலிருந்து கடிதத்தை பெற்றுக் கொண்டனர்? 1938 ஏப்ரல் மாதம்
102.
1938 ஏப்ரல் மாதம் அருட்தந்தையின் கடிதத்தில்
எழுதப்பட்டிருந்தது என்ன?
“எனது
வேலை நெருக்கடியினால் தான் பதிலனுப்ப காலதாமதம் ஏற்பட்டது என நீங்கள்
புரிந்துகொள்வீர்கள் என எண்ணுகிறேன்" 'கன்னியர்
இல்லம் தொடங்கும் நேரம் வந்துவிட்டது. மேதகு பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகை
மார்த்தாண்டம் வந்தார். தொடங்க வேண்டிய இடத்தில் நின்றுகொண்டு தமது குறிப்பேட்டில்
எழுதினார்: 'மேய் முதல் நாள் இங்கே கன்னியர் இல்லம்
தொடங்கவேண்டும்' என்று. இந்த மகிழ்ச்சியான நற்செய்தியை
உங்களுக்கு அறிவிக்க ஆணையிட்டுள்ளார். விரைவில் தயாராகுங்கள். மூன்று நான்கு
எனக்கு நாட்களுக்கு முன்னரே நீங்கள் வரவேண்டும். தேவையான ஆயத்தங்கள் செய்ய
வேண்டியுள்ளது".
103.
ஏலியாம்மாவும் மேரியும் மார்த்தாண்டம்
கன்னியர் மடத்தில் இணைய திருவனந்தபுரத்திற்கு பயணம் புறப்பட்ட நாள் எது?
1938 ஏப்ரல்
28-ம் நாள்
104.
ஏலியாம்மா மற்றும் மேரியுடன் மதியம்
1.30 மணிக்கு பாலாவிலிருந்து பேருந்தில் பயணம் புறப்பட்டவர்கள்
யாவர்?
ஏலியாம்மாவின்
அண்ணன் மகன் பாப்பச்சனும், அவர்களின் உறவினர் வட்டக்காவுங்கல்
பிரான்சீசும் (அருட்சகோதரி பிலோமினா. டி.எம்.-ன் தந்தை)
105.
ஏலியாம்மா மற்றும் மேரியுடன் ஏற்றுமானூர் வந்த
போது பேருந்திலிருந்து இறங்க வேண்டும் என்று ஏலியம்மா தெரிவித்ததன் காரணம் என்ன?
மேரியின்
பெயரில் வந்த செபமாலை பார்சல் பாலா அஞ்சலகத்தில் வந்ததை பெற்றுக் கொள்ள
106.
"நீங்கள் நல்ல காரியத்திற்காக
புறப்பட்டுச் செல்லும் போது திரும்பிச் செல்வது நல்லதல்லல. மார்த்தாண்டத்திலும்
அஞ்சலகம் உள்ளதே. பாலா அஞ்சலக அதிகாரிக்கு ஒரு அஞ்சலட்டை எழுதி அனுப்புங்கள்.
இதற்காக பாலாவுக்கு போக வேண்டாம். அங்கேயே பொருள் வந்து சேரும்" என்றவர்கள் யாவர்?
பயணிகள்
107.
ஏலியாம்மா மற்றும் மேரி ஆகியோர்
எப்போது சென்ட் மேரீஸ் கதீட்ரல் (சமாதான இராக்கினி ஆலயம்) வந்தடைந்தனர்?
1938,
ஏப்ரல் 29, அதிகாலை 1.30 மணிக்கு
108.
ஏலியாம்மா மற்றும் மேரி
ஆகியோருக்கு ஓட்டலில் தங்க ஏற்பாடுகள் செய்துகொடுத்தவர் யார்?
அருட்தந்தை
யோசுவா O.I.C,
109.
"மக்களே, நீங்கள்
உடனடியாக நாலாஞ்சிற பெதனி மடத்திற்குச் செல்லுங்கள். அங்கு பத்துநாட்கள் பஜனம்
(தியானம்) நடைபெறவுள்ளது. நானும்
குழிஞ்ஞாலில் அடிகளாரும் சேர்ந்து அங்கே வரலாம். பஜனம் முடிந்து
மார்த்தாண்டத்திற்கு போகலாம்" என்று ஏலியாம்மா மற்றும் மேரி
ஆகியோருக்கு கூறியவர் யார்?
பேராயர்
மார் இவானியோஸ்
110.
ஏலியாம்மாவையும் மற்றும் உடன்
வந்தவர்களையும் வரவேற்ற நாலாஞ்சிறை பெதனி மடத்தின் மதர் ஜனரல் யார்?
மதர்
சைனோ
111.
பேராயரும், குழிஞ்ஞாலில் அடிகளாரும் ஏலியாம்மா மற்றும் மேரியை சந்திக்க நாலாஞ்சிறை
பெதனி மடத்திற்குச் சென்ற போது பேராயர் கூறியது என்ன?
இருவருக்கும்
ஒவ்வொரு பொதுசெபமுறை புத்தகம் கொடுத்தார். "கௌமா
காணாமல் படிக்க வேண்டும். மீதி எல்லாம் படித்து புரிந்துகொண்டால் போதும்"
112.
ஏலியாம்மா மற்றும் மேரிக்கு நாலாஞ்சிறை
பெதனி மடத்தில் பத்து நாள் தியானத்தை வழிநடத்தியவர் யார்?
அருட்தந்தை
மாத்யூ புரய்க்கல்
113.
ஏலியாம்மாவும் மேரியும் தியானம்
செய்த போது அவர்களுடன் இணைந்து பங்கெடுத்தவர் யார்?
சோசாம்மா
114.
சோசாம்மாவின் பெற்றோர் யாவர்?
காட்டூர்
ஊரைச்சேர்ந்த பரேனத்து தறயில் (கொச்சு காலாயில்) திரு. வர்க்கீஸ், திருமதி ஏலியாம்மா தம்பதியரின் ஐந்தாவது மகள் தான் சோசாம்மா.
115.
"மகளே, மார்த்தாண்டத்தில்
ஒரு புதிய கன்னியர் சபை நிறுவப்பட உள்ளது. உன்னை அங்கே சேர்க்கவேண்டும் என்பது என்
விருப்பம்" எனப் பேராயர் யாரிடம் கூறினார்?
சோசாம்மாவிடம்
116.
1938 மே 8-ம் நாளில் ஏலியாம்மாவும்,
மேரியும், சோசாம்மாவும் மார்த்தாண்டம் நோக்கிப் பயணமான போது உடன்
பயணித்தவர்கள் யாவர்?
பெதனி
மதர் ஜெனரல் மதர் சைனோ, மதர் பாஸிம், அருட்சகோதரிகள்
பெஸ்மா, ஹைம்னூஸா, ஹனோனா
117.
மார்த்தாண்டம் வந்த
அருட்கன்னியர்களுக்கு கிடைத்த வரவேற்பு எப்படி அமைந்தது?
மார்த்தாண்டம்
வந்திறங்கினார்கள். அவர்களின் பெட்டி முதலிய சாமான்கள் எடுத்துச்செல்ல சிலர்
முதலில் வந்தனர். அவர்கள் சாதாரண கூலித் தொழிலாளர்கள் சாமான்களை மற்றும் என்று
எண்ணி பெட்டிகள் தூக்கியவர்களுடன் நடக்கலானார்கள். அப்போது செண்டை மேளக்குழுவினர்
நெருங்கி வந்தனர். நாதஸ்வர இசை முழங்கியது. அவர்களோடு மக்கள் கூட்டமும்
காணப்பட்டது.
118.
மார்த்தாண்டத்தை வந்தடைந்த போது
செண்டை மேளக்குழுவினரோடு செல்லாமல் "திருமண
ஊர்வலமாக இருக்கலாம். நாம் அவர்களோடு சேர்ந்து போகவேண்டாம். சிறிது நேரம் இங்கேயே
நிற்போம்" என்றவர் யார்?
ஏலியாம்மா
119.
ஏலியாம்மாவும், மேரியும், சோசாம்மாவும் சிற்றாலயத்திற்குள் நுழைந்த
பின்னர் பேராயர் மார் இவானியோஸ் ஒவ்வொருவரிடமும் எந்தக் கேள்வியைக் கேட்டு துறவற
அடையாளமான தலைச்சீரா வழங்கி பயிற்சியின் முதற்படிக்குத் தேர்ந்தெடுத்தார்?
"நீர் யார்? எதற்காக வந்தீர்"?
120.
மேரிமக்கள் கன்னியர் சபை
(டி.எம்.) எப்போது நிறுவப்பட்டது?
1938 மேய் 8-ம் நாள் மார்த்தாண்டத்தில்
121.
மேரிமக்களின் தாய் இல்லத்தின்
அடிக்கல் நாட்டும் திருச்சடங்கை நிறைவேற்றியவர் யார்?
பேராயர்
மார் இவானியோஸ்
122.
நிறுவனர் அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் நான்கு
ஆண்டுகளாக தங்கியிருந்த வாடகை வீட்டை யார் தங்குவதற்காக வழங்கினார்?
புதிய
பயிற்சிக் கன்னியர்கள்
123.
துறவற முதல் உறுப்பினர்கள்
மூவருக்கும் பயிற்சியளிக்கும் பொறுப்பை பேராயர் யாரிடம் வழங்கினார்?
அருட்தந்தை
ஜோசப் குழிஞ்ஞாலில் மற்றும் மதர் பாஸிம் S.I.C.
124.
மேரிமக்களின் தாய் இல்லத்தில் தொடக்கக் காலங்களில் தங்கி வாழ்ந்து பல உதவிகள்
செய்த பெதனி அருட்சகோதரிகள் யாவர்?
அருட்சகோதரிகள்:
ஸல்கா, ஹானோன, ஹைமனூஸ்
125.
"மேரிமக்கள் சபையின் மறைப்பணி ஆர்வம்
அருட்சகோதரிகளில் வளர துணையாகிட உங்களுக்குத் தோன்றுபவற்றை சட்டத் தொகுப்பில்
உட்படுத்தவும்" எனப் பேராயர் யாரிடம் மேரிமக்கள் சபையின்
சட்டத்தொகுப்பு தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைத்தார்?
அருட்தந்தை
ஜோசப் குழிஞ்ஞாலில்
126.
மேரிமக்கள் துறவு சபையின் சட்டத்தொகுப்பு
எந்த சபையின் ஆசிரம விதிகளுக்கு உட்பட்டு துவங்கப்பட்டது?
பிரான்சிஸ்கன்
127.
மேரிமக்கள் கன்னியர் சபையின்
சட்டத்தொகுப்பு எப்போது உருவாக்கப்பட்டது?
1939 மேய் மாதம்.
128.
திருத்தந்தை பதினொன்றாம்
பத்திநாதரிடமிருந்து மேரிமக்கள் துறவு சபை நிறுவுவதற்கான அங்கீகார ஆணை எப்போது
கிடைக்கப்பெற்றது?
1939 ஜூன் 4-ம் நாள் தூய மூவொரிறைவன் திருநாளில்
129.
பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகை மூன்று
பயிற்சிக் கன்னியரையும் Novitiate நிலைக்கு உயர்த்திய நாள் எது?
1939 ஜூன் 4
130.
வாடகை வீட்டிலிருந்து அனைவரும்
தாய் இல்லத்தில் தங்கத் துவங்கிய நாள் எது?
1939 ஜூன் 4
131.
மதர் பாஸிம் அவர்களை 'நோவிஸ்
மிஸ்ட்றஸ்' ஆக மார் இவானியோஸ் நியமித்த நாள் எது?
1939 ஜூன் 4
132.
"நீங்கள்
தூய அன்னையின் மக்கள். ஆதலால் இன்றுமுதல் உங்களை இறை அன்னைக்கு ஒப்புக்கொடுக்கும்
செபத்தை குழுவாக சொல்ல வேண்டும்" என்றவர் யார்?
மார் இவானியோஸ்
133.
1940 ஏப்ரலில்
நோவிசஸ் உள்ளிட்ட அனைத்து பயிற்சியாளர்களும் எத்தனை நாட்கள் விடுமுறைக்குச்
சென்றனர்?
ஆறு நாட்கள்
134.
மேரிமக்கள் துறவு சபையின் பயிற்சிக்
கன்னியர்கள் விடுமுறைக்குச் சென்ற போது பெதனி மடத்தின் அருட்சகோதரிகளும், சோசாம்மாவும் எங்கே தங்கியிருந்தனர்?
நாலாஞ்சிறை கன்னியர் மடத்தில்
135.
அருட்தந்தை குழிஞ்ஞாலிலுக்கு சொந்தமாக சிற்றாறு அணைப் பகுதியில்
அமைந்திருந்த 12 ஏக்கர்
பரப்பளவு கொண்ட நிலப்பகுதி எது?
ஈயோடு வயல்
136.
பயிற்சிக் கன்னியர்களின் செபக்கருத்துப்படி மேரிமக்கள் 120 ரூபாய்க்கு
வாங்கிய நிலப்பகுதி எது?
ஈயோடு வயல்
137.
சிற்றாறு அணை கட்டப்பட்ட போது அரசு கையகப்படுத்திய மேரிமக்கள் துறவு சபைக்கு
சொந்தமான நிலம் எது?
ஈயோடு வயல்
138.
மேரிமக்கள் துறவுசபை பிரான்சிஸ்கன் ஆசிரம விதிகளைப் பயன்படுத்தியதால்
எந்த சீருடை தேர்ந்தெடுக்கப்பட்டது?
ஊதா நிற அங்கியும் வெள்ளை இடைக்கட்டும். திருப்பலி மற்றும் சிறப்பு நாட்களிலும் அல்லாத
வேளையில் வெள்ளை நிற அங்கியும் பெல்ட்டும் (எஸாறா)
139.
மேரிமக்கள் துறவுசபையினரின் முதல் சீருடை எங்கே வைத்து தைக்கப்பட்டது?
மார்த்தாண்டத்தில்
140.
பேராயரின் கட்டளைப்படி 'நோவிசஸ்' – பயிற்சிக் கன்னியர்களுக்கு 10 நாட்கள் தியானத்தை வழிநடத்தியவர் யார்?
அருட்தந்தை சக்கரியாஸ் சங்ஙங்கரி
141.
அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் திருப்பலிக்கு வந்தவர்களிடம் 'அவர்களுக்காக வாழ்க்கையை
அர்ப்பணிக்கும் புதிய கன்னியர் சபை உருவாகும் தருணம் நெருங்கியுள்ளது' என எப்போது தெரிவித்தார்?
1940 மே மாதத்தின் இறுதி ஞாயிறன்று
142.
முதல் மூன்று பயிற்சிக்கன்னியர்களும் தங்கள் முதல் துறவு உறுதிமொழியை
எடுத்துக்கூறிய நாள் எது?
1940 ஜூன் 4.
143.
முதல் துறவு உறுதிமொழியை சமர்ப்பித்த நாளில் ஏலியாம்மா ஏற்றுக்கொண்ட பெயர்
என்ன?
நற்கருணையின் அருட்சகோதரி மேரி
144.
முதல் துறவு உறுதிமொழியை சமர்ப்பித்த நாளில் மேரி ஏற்றுக்கொண்ட பெயர் என்ன?
அருட்சகோதரி ஆக்னஸ்
145.
முதல் துறவு உறுதிமொழியை சமர்ப்பித்த நாளில் சோசம்மா ஏற்றுக்கொண்ட பெயர் என்ன?
அருட்சகோதரி தெரசா
146.
அருட்சகோதரி மேரியை மேரிமக்கள் துறவு சபையின் முதல் தலைவியாக மார் இவானியோஸ்
ஆண்டகை எப்போது நியமித்தார்?
1940 ஜூன் 8-ம்
நாள்
147.
அருட்சகோதரி மேரியிடம் சபையின் பொறுப்பை ஒப்படைத்த பெதனி அருட்சகோதரிகள்
யாவர்?
மதர் பாஸிம் மற்றும் அருட் சகோதரி ஸல்கா
148.
அருட் சகோதரி மேரி மேரிமக்கள் கன்னியர் சபையின் எத்தகைய பதவிகளைக்
கொண்டிருந்தார்?
'துணை நிறுவனர்' மற்றும்
'முதல் தலைவி'
149.
மேரிமக்கள் துறவு சபை தொடங்கப்பட்டதன் நோக்கம் என்னவென்று
அருட்கன்னியர்களுக்கு கற்பித்தவர் யார்?
அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில்
150.
பயிற்சிக் காலத்திலிருந்தே அருட்கன்னியர்கள் எந்தெந்த பகுதிகளில் வீடுகள்
சந்திக்கவும், மறைக்கல்வி
கற்பிக்கவும் செய்து வந்தனர்?
மார்த்தாண்டம், கட்டச்சிவிளை (விமலபுரம்)
151.
பயிற்சிக் கன்னியர்களின் உதவியோடு கிறிஸ்து அரசர் ஆலயத்தின் முதல் திருவிழா
எப்போது கொண்டாடப்பட்டது?
1938 அக்டோபர் இறுதி ஞாயிறு நாளில்
152.
1939 அக்டோபரில்
அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் அவர்களின் முழு முயற்சியால் கட்டி எழுப்பின
மடத்தின் சிற்றாலயத்தை அர்ச்சித்தவர் யார்? பேராயர் மார் இவானியோஸ்
153.
1939 அக்டோபரில்
அர்ச்சிக்கப்பட்ட சிற்றாலயத்தில் நிறுவப்பட்ட கிறிஸ்து அரசர் சுரூபத்தை
கொண்டுவந்தவர் (வழங்கியவர்) யார்? பேராயர் மார் இவானியோஸ்
154.
மடத்தின் சிற்றாலயம் எந்நாள் வரை மார்த்தாண்டம் கிறிஸ்துராஜா பங்குகோயிலாக
இருந்தது? 1963 மே 23
வரை
155.
மார்த்தாண்டத்தில் கிறிஸ்துமஸ் விழா எவ்வாண்டு கொண்டாடப்பட்டது? 1940
156.
1940 ல் கிறிஸ்மஸ் விழா எவ்வாறு நடைபெற்றது?
ஒரு திறந்த ஜீப்பில் இரண்டு குழந்தைகளை இறைத்
தூதர்களாக இருபக்கமும் நிற்கச் செய்தும், குழந்தை இயேசுவின்சுரூபம் நடுவில் படுக்க வைக்கப்பட்டு
அருட்தந்தையும் பாடல்பாடும் இரு இளைஞர்களும் இதன் பின் பகுதியில் நின்றனர். மக்கள்
திரளாக ஆலயத்தில் வந்து கூடினர். வாத்திய மேளமும் தயார் நிலையில் நின்றது. பவனி
ஆலயத்திலிருந்து புறப்பட்டு முதலில் குழித்துறை வரையிலும், திரும்ப
தொடுவெட்டியில் (மார்த்தாண்டம்) வந்தபின் கட்டச்சிவிளை (விமலபுரம்) வரையிலும்
மீண்டும் திரும்பிவந்து பாகோடு ஆற்றங்கரை வரையிலும் சென்றபின் கிறிஸ்து அரசர் ஆலயத்தில்
வந்தடைந்தது. தொடர்ந்து இயேசு பிறப்பின் திருச்சடங்கு, ஆடம்பரத்
திருப்பலி, சுரூபம் முத்துதல் இவை நடைபெற்றன.அதற்குப்பின்
சுரூபத்தை அழகாக அமைத்திருந்த குடிலில் அருட்தந்தை எடுத்துச் சென்று வைத்தார். இவை
அனைத்தும் மக்களுக்கெல்லாம் புத்துயிரும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்க போதுமானதாக
அமைந்திருந்தன.
157.
1941 ஜனவரி
31 - ல் இரண்டாவது குழுவை (batch) சார்ந்த
'நொவிஷியேற்று' ஆரம்பித்த போது பேராயர்
யாரை 'நோவிஸ் மிஸ்ட்றஸ்' ஆக
நியமித்தார்?
அருட்சகோதரி மேரி
158.
மேரிமக்கள் துறவு சபையின் முதன் முதலில் ஆசிரியர் பயிற்சி கற்ற அருட்சகோதரி யார்?
அருட்சகோதரி ஆக்னஸ்
159.
அருட்சகோதரி ஆக்னசை 1941 மே
மாதம் எந்த ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் சேர்த்தனர்?
திருவனந்தபுரம் செயின்ட் ரோக்ஸ்
160.
அருட்சகோதரி மேரி அவர்களோடு மடத்தின் அன்றாடப் பணிகளில் துணையாக நின்றவர்
யார்?
அருட்சகோதரி தெரசா
161.
இரண்டாவதாக மூவர் முதல் துறவு உறுதிமொழி சமர்ப்பித்து எப்போது துறவு ஆடைகளை பெற்றுக்கொண்டனர்?
1942 பிப்ரவரி 23-ம் நாள்
162.
1942 பிப்ரவரி
23-ம் நாள் திருச்சடங்கிற்கு முன் அருட்சகோதரி மேரிக்கு
கறுப்பு தலைச்சீராவை ஆசீர்வதித்து வழங்கியவர் யார்?
பேராயர் மார் இவானியோஸ்
163.
அருட்சகோதரி மேரியை "மதர்
மேரி" என்றழைத்து மேரிமக்கள் துறவு சபையின் முதல்
தலைவியாக நியமித்தவர் யார்?
பேராயர் மார் இவானியோஸ்
164.
1942 மே 26
– ல் மதர் மேரி மற்றும் ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்ற
அருட்சகோதரி ஆக்னசுடன் சேர்ந்து எந்த அருட்சகோதரிகளின் மடத்தில் சென்று இரண்டுநாள்
தங்கி, அவர்களின் பணிகள் பற்றி கண்டறிந்து கொண்டனர்?
சுணங்ஙம்வேலி
165.
1942 ஜூன் 18-ல் மூன்று பயிற்சிக் கன்னியர்களை எங்கே தையல் பயிற்சிக்காக அனுப்பினர்?
மணக்குடி
166.
1942 ல்
எத்தனை நோவிஸ்மார்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது?
12
167.
பொருளாதார நெருக்கடியின் போது பாதுகாக்கப்பட்டிருந்த எந்த தானியங்களை விற்று
தேவைகளைப் பூர்த்தி செய்தனர்?
நெல் மற்றும் மரவள்ளிக் கிழங்கு
168.
வீட்டில் ஆயிரம் ஏக்கர் குடும்ப சொத்து கொண்டிருந்த மதர் மேரி (பெரிய மதர்) "இன்று மதிய உணவிற்கு அரிசி
கிடையாது" என அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலியிடம்
கூறியதைக் கேட்ட பீடச்சிறுவன் யார்?
அருட்தந்தை Y. ஜோசப் பூந்தாழவிளையில்
169.
மடத்தில் வந்த பின் அருட்கன்னியர்கள் எவரும் தனி உரிமை கொள்ள முடியாது. எவரும்
'என்னுடையது' என்று கூறாமல் வேறு எச்சொல்லைக் கூறி வந்தனர்?
"நான் பயன்படுத்துவது"
170.
அருட்கன்னியர்கள் தம் சொந்த உழைப்பால் உருவாக்கிய பொருள்களை ஏலத்திற்காக
பங்குகோவிலில் அக்டோபர் மாதத்தின் மூன்றாம் ஞாயிறான மறைபரப்பு ஞாயிறன்று
சமர்ப்பிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியிருந்தவர் யார்?
மதர் மேரி
171.
தொடக்க காலத்தில்
துறவு வாழ்வின் முதல் உறுதிமொழி எடுத்துரைக்கப்பட்ட விதம் என்ன?
அருட்சகோதரி உறுதி மொழியை வாசித்து, கையொப்பமிட்டு, பேராயரும் இரு சாட்சிகளாக
மதர் மேரியும் இன்னொரு அருட்கன்னியரும் சிற்றாலயத்தில் வைத்தே கையொப்பமிடுவர்.
172.
1944-ல் முதல் துறவு உறுதி மொழி
செய்த பன்னிரு அருட்சகோதரிகளில் ஒருவரான அருட்சகோதரி பிரான்சிஸ் டி. எம். கார்மல்
துறவற சபையின் விடுதியில் கற்றவாறு இரவில்
பொழுதுபோக்கு (recreation) வேளையின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது என்ன?
மரியன்னையின் புகழ்பாடல்
173.
1944 செப்டம்பர் 25 – ல் ராவல்பிண்டிக்கு (இன்றைய பாகிஸ்தான்) செவிலியர் (Nursing) பயிற்சிக்காகச் சென்ற அருட்சகோதரிகள் யாவர்?
அருட்சகோதரிகள்: மார்க்ரட், க்ளெயர்,
பிரான்சிஸ், அலோசியஸ்
174.
"நாங்கள் செல்கிறோம் என்றதும்
வேதனையுற்ற வலிய மதரை ஆறுதல்படுத்த அருட்தந்தையாலும் இயலவில்லை. எனது
ஆயுட்காலத்தில் மதர் அழுததை ஒரு தடவை மட்டுமே பார்த்திருக்கிறேன். எங்களை
பிரிவதால் ஏற்பட்ட வேதனை... ஐயோ! மதரின் இத்துணை வேதனையை எவர்தான் உணர்ந்து கொள்வர்....
துணிச்சல் மிகு பெண்மணி கண்ணீர் வடிப்பதென்றால் அவரது இதயம் எத்துணை வேதனையுற்றிருக்கும்.......
அந்த தாயன்பின் மீது கட்டி எழுப்பியதே மேரி மக்கள் சமூகம் என நினைக்கும் போது
ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை" அருட்சகோதரிகளை
ராவல்பிண்டிக்கு வழியனுப்ப திருவனந்தபுரம் இரயில் நிலையத்திற்கு வந்த போது
நிகழ்ந்த காட்சியை தனது நாட்குறிப்பேட்டில் எடுத்துரைத்த மேரிமக்கள் துறவு சபையின்
15-வது உறுப்பினர் யார்?
அருட்சகோதரி அலோசியஸ்
175.
"என் சகோதரிகளை தனிமையாக
பயணம் செய்ய அனுமதிக்க மாட்டேன். அவ்வாறு பயணம் செய்தால் எந்த பாதுகாப்பும்
அவர்களுக்கு இருக்காது" எனப் பயணச்செலவை
பொருட்படுத்தாது அருட்சகோதரிகளோடு கரிசனை கொண்டிருந்தவர் யார்?
மதர் மேரி
176.
நற்செய்திப் பணி
நன்கொடைக்காக அருட்தந்தை குழிஞ்ஞாலில் அதிகமாக சந்தித்த இடங்கள் எவை?
தனது மறைமாவட்டம், தனது பங்கு, குட்டநாடன் பகுதி (ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம்)
177.
மேரிமக்கள்
கன்னியர் சபையின் முதல் கிளைமடம் எப்போது எங்கே நிறுவப்பட்டது?
1946 பிப்ரவரி 4-ம் நாள்
செல்லங்கோணத்தில்
178.
செல்லங்கோணத்தில்
மடம் தொடங்குவதற்குத் தேவையான பொருளுதவியும், ஆள்
உதவியும் செய்தவர்கள் யாவர்?
பேராயர் மார் இவானியோஸ் மற்றும், அருட்தந்தை
ஜாண் ஆறாஞ்சேரில்
179.
செல்லங்கோணம்
கன்னியர் மடத்தில் முதல் சுப்பீரியர் யார்?
அருட் சகோதரி மார்க்ரெட்
180.
செல்லங்கோணம்
கன்னியர் மடத்தில் முதல் உறுப்பினர்கள் யாவர்?
அருட் சகோதரி மார்க்ரெட், அருட் சகோதரிகள்: காதறைன், லுதுவின், பௌளின்
181.
செல்லங்கோணம்
கன்னியர் மடத்தின் முதல் ஆன்மீகக்குரு யார்?
அருட்தந்தை ஜாண் ஆறாஞ்சேரில்
182.
5,6,7 வகுப்புகளுடன் மலையாளம்
வழி நடுநிலைப்பள்ளிக்கூடம் செல்லங்கோணத்தில் மறைமாவட்டம் சார்பில் எப்போது
துவங்கப்பட்டது?
1942-ல்
183.
செல்லங்கோணம் நடுநிலைப்பள்ளிக்கூடத்தில்
கல்வி கற்பித்தவர்கள் யாவர்?
அருட்சகோதரிகள்: லுதுவின் மற்றும் பௌளின் (பவுலின்)
184.
செல்லங்கோணம்
கன்னியர் மடத்தின் தொடக்கக் காலத்தில் வறுமையினால்
உட்கொண்டவை என்ன?
வேக வைத்த பனங்காயின் சாறு, மற்றும் செம்பருத்திப்பூ
185.
1946 ஜூன் 18-ல் 23 நோவிஸ்மார்கள் முதல் துறவு உறுதி மொழி
சமர்ப்பித்து துறவு ஆடையை பெற்றுக் கொண்டபோது மேரிமக்களின் உறுப்பினர்கள் எத்தனை?
41
186.
" மதரின் செபமும், எடுத்துக்காட்டான வாழ்வும், வழிநடத்துதலுமே எங்களுக்கு எந்த வேலையும்
செய்வதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தது" என மூத்த அருட்சகோதரிகள் யாரைப் பற்றி சான்றளித்துள்ளனர்?
மதர் மேரி
187.
வெள்ளச்சிப்பாறை, காஞ்சியோடு, ஈயோடு ஆகிய இடங்களில்
பணிகளுக்குப் பின்னர் சுமார் 15 கி.மீ. நடந்தே வரும்
அருட்சகோதரிகளுக்கு வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்புக்காக மதர் மேரி செய்ததென்ன?
நற்கருணை நாதரின் முன் மண்டியிட்டு செபித்தல்
188.
மதர் மேரி, அருட்சகோதரி ஆக்னஸ் மற்றும் அருட்சகோதரி தெரேசா ஆகியோர் துறவு வாழ்வின் இறுதி உறுதி மொழியை எப்போது
சமர்ப்பித்துக் கொண்டனர்?
1946 செப்டம்பர் 18
189.
1947 முதல் 1949 வரையிலும்
துவங்கப்பட்ட கிளைமடங்கள் யாவை?
1947 மே 17-ல் அடூர், 1947 நவம்பர் 24-ல் கிராத்தூர், 1948 நவம்பர் 24-ல் வெண்ணியூர், 1949 ஜனவரி 10 -ல் பனச்சமூடு, 1949 ஆகஸ்ட் 12-ல்
அஞ்சல்
190.
பொதுக்குழு (Synaxis) கூட்டாமலே 1942 -ல் பேராயர் மார்
இவானியோஸ் நியமித்த நிர்வாகப் பொறுப்பாளர்கள் யாவர்?
மதர் மேரி - மதர் ஜெனரல், அருட்சகோதரி அலோசியஸ் – முதல் ஆலோசகர், அருட்சகோதரி
பெர்க்மான்ஸ் செயலர் (இரண்டாம் ஆலோசகர்), அருட்சகோதரி - றீத்தா பொருளர்
191.
அருட்சகோதரி சாலஸ் மடத்தின்
தலைவிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வருந்திய போது பேராயர் மார் இவானியோஸ் கூறியது
என்ன?
"மகளே உனக்கு துறவற ஆடையை வழங்கியது நான்தானே, நான் சொல்வதை ஏற்க முடியாதெனில் அந்த துறவற ஆடை அணிவதில் அர்த்தமில்லை"
192.
முதலாம் ஆலோசகராக
பேராயரால் நியமிக்கப்பட்ட அருட்சகோதரி அலோசியஸ் அப்பொறுப்பை ஏற்கும் அறிவு இல்லை எனக்
கூறிய போது, பேராயர் மார் இவானியோஸ்
கூறியது என்ன?
"மகளே, ஒரு சமூகத்தின்
செயல்பாடுகளை ஒரு தனி நபர் மட்டுமே தீர்மானித்தால் போதாது. பலர் ஒன்றிணைந்து
ஆலோசித்து செயல் படும் போது ஒரு செயலின் பல கோணங்களும் தெளிவாகும். அதனால்
மடத்தின் பொறுப்பை ஒரு நபர் மட்டும் நிர்வகித்தால் போதாது. மதருக்கு ஆலோசகர்கள்
தேவை. மட்டுமல்ல வரவு செலவு கணக்குகள் எழுத பொருளரும் தேவை"
193.
தொடக்கக் காலத்தில்
அருட்சகோதரிகளின் குடும்பத்திலிருந்து அவர்களின் உரிமைச் சொத்தாகவும், நன்கொடையாகவும் பெற்றுக் கொண்டவற்றை யாரிடம்
வழங்கியிருந்தனர்?
அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில்
194.
பொருளாதார
நெருக்கடி நேரத்தில் "நான் சம்பாதித்தவை,
சம்பாதிப்பவை அனைத்தும் மேரிமக்கள் துறவுசபைக்கு வழங்லாம்"
என்றவர் யார்?
அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில்
195.
அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில்
1950 மே 17- ல் தான்
சம்பாதித்த சொத்துக்களை எந்தெந்த ஏழு மடங்களுக்காக எழுதிக்கொடுத்தார்?
மார்த்தாண்டம், செல்லங்கோணம், அடூர், கிராத்தூர், வெண்ணியூர்,
பனச்சமூடு, அஞ்சல்
196.
இரண்டு அருள்
சகோதரிகளை மருத்துவக்கல்வி பயிற்சிக்காக பாட்னாவுக்கு எந்த ஆண்டு அனுப்பினர்?
1950-ல்
197.
1952-ல் மூடப்பட்டிருந்த
சித்ரோதயம் மலையாள உயர் நிலைப் பள்ளியை விலைக்கு வாங்கி மேரிமக்கள் சபையினரிடம் ஒப்படைத்தவர்
யார்?
பேராயர் மார் இவானியோஸ்
198.
சித்ரோதயம் பள்ளியை
எப்பெயரில் 1952ஜூன் 2-ல் மேரிமக்கள் துறவு சபையினர் பொறுப்பேற்று கற்பிக்கத் துவங்கினர்?
புனித ஜாண் கிறிஸோஸ்டோம் மகளிர் பள்ளிக்கூடம்
199.
அஞ்சல் புனித
யோசேப்பு மருத்துவமனை எப்போது திறந்து வைக்கப்பட்டது?
1953 மே 17-ல்
200.
1950 -ல் கார்மேல் சபை
குருவானவர்களின் (C.M.I) ஆன்மீக உதவிக்காக மார்த்தாண்டத்திலிருந்து
'நொவிஷியேட்' எவ்விடத்துக்கு
மாற்றப்பட்டது?
கிராத்தூர்
201.
நெல்லிமூட்டில் நொவிஷியேட் பயிற்சி எப்போது
துவங்கப்பட்டது. 1952 ஜனவரி 27-ல்
202.
1954 – முதல் 1960 வரை நொவிஷியேட்
எங்கே செயல்பட்டது?
கிராத்தூர்
203.
1960 முதல் நொவிஷியேட்
எங்கே செயல்பட்டு வந்தது?
போங்ஙும்மூடு
204.
மேரிமக்கள் (Daughters of Mary) துறவு சபையின் வளர்ச்சி பற்றி தனது சுற்று
மடலில் பேராயர் மார் இவானியோஸ் எப்போது எழுதினார்?
1952 செப்டம்பர் மாதம்
205.
1952-ல் மேரிமக்கள் (Daughters
of Mary) துறவு சபையின் வளர்ச்சி என்ன?
8 கிளை இல்லங்கள், 70 அருட்கன்னியர்கள்
206.
கிழக்குத்
திருஅவையினரின் (Oriental Congregation) சட்ட
ஒழுங்குகளை மேரிமக்கள் கடைபிடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தியவர் யார்?
பேராயர் மார் இவானியோஸ்
207.
1942-ல் பேராயர் மார் இவானியோஸ்
நியமித்த மதர் ஜெனரலும், ஆலோசகர்களும் எந்த ஆண்டு வரையிலும் செயல்பட்டனர்?
1952
208.
சமூகத்தின்
முதற்பொதுக்குழு கூட்டத்தின் போது (Synaxis) பேராயரின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் யார்?
அருட்தந்தை சாலஸ் C.M.I
209.
மேரிமக்களின் முதற்பொதுக்குழு
கூட்டம் (synaxis) எங்கே எப்போது நடைபெற்றது?
மார்த்தாண்டத்தில் 1952 அக்டோபர் 20
210.
மேரிமக்களின் முதற்பொதுக்குழு கூட்டத்தின்
பொறுப்பாளர்கள் யாவர்?
மதர் மேரி - மதர் ஜெனரல், அருட்சகோதரி அலோசியஸ் – முதல் ஆலோசகர், அருட்சகோதரி தெரசா - இரண்டாம் ஆலோசகர், அருட்சகோதரி
மார்க்ரட் – செயலர், அருட்சகோதரி ஆக்னஸ் பொருளர்
211.
மார்த்தாண்டம்
மடத்தின் அன்றாட செயல்பாடுகளைக் கவனிக்கும் அருட்சகோதரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
கொச்சு மதர் (சின்ன மதர்)
212.
மதர் மேரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
'வலிய மதர்,
'பெரிய மதர்'
213.
1946-ல் முதல் துறவு உறுதி மொழி செய்தவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
'24 கார்' (24 பேர்கள்)
214.
24 பேர்களின் இறுதி உறுதி மொழிக்கான திருச்சடங்குகளை உடல்நலக்குறைவால்
மார் இவானியோஸ் ஆண்டகை எங்கே வைத்து நிறைவேற்றினார்?
நாலாஞ்சிறை பெதனி
ஆசிரமத்தில்
215.
பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆயர் எப்போது துணை ஆயராக
திருநிலைப்படுத்தப்பட்டார்?
1953 ஜனவரி 29-ம்
நாள்
216.
மார் இவானியோஸ் ஆண்டகையின் மறைவு எப்போது?
1953 ஜூலை 15-ம் நாள்
217.
மற்று திருவழிபாட்டு முறையிலுள்ள பயிற்சிக்
கன்னியர்கள் மற்றும் அருட்கன்னியர்கள் மலங்கரை வழிபாட்டுமுறையை அனுமதிக்க ஒவ்வொருவரும்
திருத்தந்தைக்கு விண்ணப்பம் அனுப்ப கேட்டுக் கொண்டவர் யார்?
ஆயர் பெனடிக்ட் மார்
கிரிகோரியோஸ்
218.
திருவழிபாட்டு மாற்ற விண்ணப்பத்துக்கு எர்ணாகுளம்
பேராயர் மார் அகஸ்டின் கண்டத்தில் ஆண்டகையின் பதில் என்ன?
"றீத்து (திருவழிபாடு)
மாறத் தேவையில்லை. எந்த மறைமாவட்டத்தில் பணிபுரிகிறீர்களோ, அந்த
றீத்து கடைப்பிடித்தால் போதும்"
219.
மார் கிரிகோரியோஸ் பேராயரின் அனுமதியோடு எந்த
மறைமாவட்டத்திலும் மறைபரப்புப் பணி புரிய அனுமதி வேண்டி 'இன்டர்
நுண்சியோ' மேன்மை மிகு கர்தினால் றோபர்ட் நோக்ஸ் ஆண்டகை வழியாக
திருத்தந்தைக்கு கடிதம் அனுப்பியவர் யார்?
மதர் மேரி
220.
மேரிமக்கள் கன்னியர் சபை நிறுவுவதற்கான ஆணை மலங்கரை
பேராயருக்கு எப்போது வழங்கப்பட்டது?
1939 ஜூன் 4
221.
திருவழிபாட்டு மாற்றம் பற்றிய இன்டர் நுண்சியோவின்
செயலர் ஜோண் கோர்டனின் கடிதத்தின் உள்ளடக்கம் என்ன?
“மேரிமக்கள் கன்னியர் சபையை
நிறுவுவதற்கான ஆணை 1939 ஜூன் 4 மலங்கரை பேராயருக்கு வழங்கப்பட்டதால்
இத்துறவு சபையினர் மலங்கரை திருவழிபாட்டை கடைபிடித்தல் வேண்டும். மற்று
திருவழிபாட்டு மறைமாவட்டங்களில் கன்னியர் மடங்குகளை நிறுவுவதற்குத் தடை இல்லை.
மற்று திருவழிபாட்டு முறைகளிலிருந்து பெண்களை இச்சபையில் இணைப்பதற்கு அவர்கள் திருவழிபாடு
மாறவேண்டியத் தேவை இல்லை. அந்த திருவழிபாட்டை கடைபிடிப்பதற்கு
திருத்தந்தையிடமிருந்து அனுமதி பெற்றுக்கொண்டால் போதுமானது. ஒவ்வொரு நபருக்கும் அனுமதி
நேரடியாக காலாகாலங்களில் வழங்கப்படும். யாராவது துறவு சபையை விட்டு வெளியேற நேர்ந்தால்,
இந்த அனுமதியும் தள்ளுபடியாகும்......"
222.
1953
ஜூன் 1-ல் மார் கிரிகோரியோஸ் பேராயரின் கையால்
முதன் முதலாக துறவு வாழ்வின் சீருடையைப் பெற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்?
ஏழுபேர்கள் (5 பேர் சீறோ
மலபார், 2 பேர் மலங்கரை)
223.
மேரிமக்கள் துறவு சபையில் இணைவோர் பாதி நபர்கள் திருவனந்தபுரம்
உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டுமென 1955 மார்ச் 28-ம் நாள் வழிமுறை வகுத்தவர் யார்?
பேராயர் மார் கிரிகோரியோஸ்
224.
பேராயர் மார் கிரிகோரியோஸ் கூறியதன்படி அடூரில்
வைத்து இறை அழைத்தல் முகாம் நடத்தப்பட்ட பின்னரும் பங்கேற்றவர்கள் அவர்களின்
உறவினர்கள் மற்றும் சொந்த ஊரைச் சேர்ந்தவர் பணியாற்றிய எந்த துறவு சபையில்
இணைந்தனர்?
பெதனி மடத்தில்
225.
திருவழிபாடு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு காண உதவிய
மேரிமக்கள் சபையின் மேற்பார்வையாளர் மற்றும் அறிவுரையாளராக பேராயர் மார்
கிரிகோரியோசால் நியமிக்கப்பட்டவர் யார்?
அருட்தந்தை எல்ஸேவூஸ் O.C.D
226.
மார்த்தாண்டம் பங்குக்கோவிலுக்கு எப்போது அடிக்கல்
அரச்சிக்கப்பட்டது?
1955 அக்டோபர்
28
227.
Y.
ஜோசப் பூந்தாழவிளையில் அருட்தந்தையின் குருப்பட்ட திருச்சடங்கும்
முதல் திருப்பலியும் எப்போது நடைபெற்றது?
1956 டிசம்பர்
27,28
228.
மேரிமக்களின் நற்செய்திப்பணியின் பலனாக உருவான
மார்த்தாண்டத்தின் முதல் அருட்தந்தை யார்?
அருட்தந்தை Y. ஜோசப்
பூந்தாழவிளையில்
229.
அருட்தந்தை எல்ஸேவூஸ் O.C.D மேரிமக்கள் சபையின் மேற்பார்வையாளர்
மற்றும் அறிவுரையாளராக பேராயர் மார் கிரிகோரியோசால் எப்போது நியமிக்கப்பட்டார் ?
1957 ஜனவரி 15
230.
அருட்தந்தை எல்சேவூஸ் 1958 முதல் 1963 வரை கிராத்தூர், போங்ஙும்மூடு மடங்களில் எந்த
பொறுப்புடன் செயல்பட்டார்?
நோவிஸ் மாஸ்டர்
231.
1959
பிபரவரி 12,13,14,15 தேதிகளில் எந்தெந்த
விழாக்கள் கொண்டாடப்பட்டன?
அருட்தந்தை ஜோசப்
குழிஞ்ஞாலில் குருப்பட்ட வெள்ளிவிழாவும் லூர்து மாதா நூற்றாண்டு விழாவும்
232.
அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் குருப்பட்ட வெள்ளிவிழா
நினைவாக எழுப்பப்பட்டது என்ன?
லூர்து மாதா கெபி
233.
1959-ல், லூர்து மாதா கெபியில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்க
முன்னின்று செயல்பட்டவர் யார்?
மதர் மேரி
234.
லூர்து மாதா கெபியில் கிறிஸ்துமஸ் குடில் எப்போது வரை
திறக்கப்பட்டிருந்தது?
டிசம்பர் 25 முதல் ஜனவரி 6 தனஹா திருநாள் வரை
235.
தற்கொலை செய்யத் துணிந்த இளைஞன் ஒருவன் லூர்து மாதா
கெபியில் இருந்த குழந்தை இயேசுவின்
சுரூபத்தை கண்டு மனம் திருந்தி ஒப்புரவு அருட்சாதனம் பெற்றுக்கொண்ட நிகழ்வை
எடுத்துரைத்தவர் யார்?
அருட்தந்தை ஜோசப்
குழிஞ்ஞாலில்
236.
மேரிமக்கள் சபையின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் 1959 மே 3-ம் நாள் யார் தலைமையில் நடைபெற்றது?
பேராயர் மார் கிரிகோரியோஸ் மற்றும்
அருட்தந்தை எல்சேவூஸ் O.C.D
237.
மேரிமக்கள் துறவு சபையின் இரண்டாவது மதர் ஜெனரல்
யார்?
அருட்சகோதரி மார்கிரட்
238.
மேரிமக்கள் சபையின் இரண்டாவது பொதுக்குழுவில்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலோசகர்கள் யாவர்?
மதர் மேரி முதலாம்
ஆலோசகராகவும் அருட் சகோ. பிரான்சிஸ், அருட்சகோ. சாலஸ் ஆகியோர்
ஆலோசகராகவும் அருட் சகோ.பெனடிக்ட் பொருளராகவும்
239.
மதர் மார்கிரட் சபையின் பொறுப்பேற்ற போது
மேரிமக்களின் எண்ணிக்கை என்ன?
9 மடங்கள், 90 அருட்கன்னியர்கள்,
11 நோவிஸஸ், 10 போஸ்டுலன்ட்ஸ்
240.
மதர் மேரி நகைச்சுவைகளால் மற்றவர்களை மகிழவைத்த
நிகழ்ச்சிகள் எவை?
மாறுவேடம் அணிதல், மிமிக்றி (பிறருடைய
பேச்சு மற்றும் செய்கைகளை செய்து காட்டுதல்)
241.
மதர் மேரி வாழ்க்கை விதியாக கொண்டிருந்த இறைவார்த்தை
எது?
"அனைத்திற்கும்
மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது
இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்" (மத் 6:33)
242.
அமைதியும், சாந்தமும், திட
உள்ளமும், தாழ்ச்சியும், வல்லமையும்,
பரிவும், இரக்கமும், அன்பும்,
மகிழ்ச்சியும், வாழ்க்கைச்சான்றும்
அனைத்திற்கும் மேலாக இறைஅனுபவமும் கொண்ட ஒரு தியாகியாக வாழ்ந்தவர் யார்?
மதர் மேரி
243.
துறவற வாழ்வின் கடமைகள், சிறப்பு,
பொறுப்பு, புண்ணியம் சம்பாதிப்பதற்கான குறுகிய
வழிகள் ஆகிய அனைத்தின் அர்த்தத்தையும் அழகையும் நன்குணர்ந்து ஒவ்வொரு அருட்சகோதரியையும்
தனிப்பட்ட முறையில் அறிந்து தெளிவான அறிவும் விழிப்புணர்ச்சியும் தகுந்த நேரத்தில்
வழங்கியவர் யார்?
மதர் மேரி
244.
"கிறிஸ்துவின் மீட்புத் திட்டத்தில் பங்கு பெறுதல் என்ற சிறந்த பணிக்காக
அழைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய சமூகமே மேரிமக்கள் கன்னியர் சபை. 'நான் ஒரு மிஷனறி' என்ற விழிப்புணர்ச்சி
ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.” என்றவர் யார்?
மதர் மேரி
245.
எந்த துறையிலும் நம்மோடு தொடர்புகொள்வோரை இறைவன்பால்
கொண்டு சேர்ப்பதே நமது மறைபரப்புப் பணியின் நோக்கம்...... வாய்ப்பு இருக்கும்
போதெல்லாம் எந்த நபரிடமும் இறைவனைப் பற்றி கூறுவதற்கான பழக்கம் நமக்கு
இருக்கவேண்டும்" என்றவர் யார்?
மதர் மேரி
246.
“இன்று கத்தோலிக்கத் திருச்சபையில் மீட்புப்பணி தொடர
வேண்டியதும் நற்செய்தி அறிவிக்க வேண்டியதும் நாம் ஒவ்வொருவருமாகும். இதற்கு
முதன்முதலாக நாமே இன்னொரு கிறிஸ்துவாக மாற வேண்டும்.” என்றவர் யார்?
மதர் மேரி
247.
கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள தனிப்பட்ட அன்பே
மறைபரப்புப் பணியின் குணமேன்மையின் அளவுகோல். இறைவனோடு தனிமையில் உறவாடாமல் நாம்
வெற்றிவாகை சூட இயலாது. என்றவர் யார்?
மதர் மேரி
248.
சரியாக தியானம் செய்ய வேண்டுமென்றால் உள்ளத்திலும்
உடலளவிலும் மௌனம் கடைபிடிக்கவேண்டும். தேவையில்லாத பயணங்களையும் விழாக்கால
இரவுகளும் விவேகத்தோடு கட்டுப்படுத்த வேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
249.
நமது மறைபரப்புப் பணியின் செயல்முறை பிரான்சிஸ்கன்
உட்கருத்துப்படி (spirit)
ஆனதால் புனித பிரான்சிஸின் எளிய வாழ்க்கையும் ஏழ்மையும்
இறைபராமரிப்பில் நம்பிக்கையும் வறியோரிடமுள்ள பரிவன்பும் சபையின் உட்கருத்தின் (spirit)
பகுதியாக இருத்தல் வேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
250.
ஒருவருக்கொருவர் காட்டும் அன்பில் வளர்வதற்கும்
மெசியாவின் மறைஉடலை வளர்ப்பதற்குமாகவே இறைவன் நம்மை மிஷனறி சமூகத்திற்கு
அழைத்துள்ளார். என்றவர் யார்?
மதர் மேரி
251.
வீடு சந்திப்பு வழியாக உள்ள நற்செய்தி
அறிவிப்பேயாகும் மேரி மக்களின் முக்கியப் பணி. என்றவர் யார்?
மதர் மேரி
252.
மதர் மேரிக்கு அதிக தூண்டுதல் அளித்த விவிலிய வசனம்
எது?
"நீர்
நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்துசென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வை யற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்..... எனது வீடு நிரம்பும்
அளவுக்கு மக்களை வற்புறுத்தி கூட்டிவாரும் " லூக். (14:21-23).
253.
இறையன்னையைப்போல, சகோதரிகளும் ஒவ்வொரு தேவநற்கருணைப்
பேழையாக திகழவேண்டும் என்றவர் யார்?
மதர் மேரி
254.
வேலையாட்களோடு நீதியும் இரக்கமும் காட்ட வேண்டும்.
அவர்களுக்குரிய ஊதியம் அளிக்கவேண்டும். புறக்கணிக்கப்பட்டவர்களையும்
ஆதரவற்றவர்களையும் முதியோர்களையும் அன்போடு பாதுகாக்க வேண்டும். ஆதரவற்ற
குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைத்தல், நோயால் அவதிப்படுவோருக்கு மருத்துவ
உதவி கிடைக்க உதவுதல், அமைதியான வாழ்க்கைச் சூழல் இல்லாத
வர்களுக்கு நேர்வழி காட்டுதல், இவ்வாறு மனித வாழ்வின்
அனைத்து துறைகளிலும் நாம் கடந்து சென்று அவர்களுக்குத் தேவையான வகையில் ஆறுதலளிக்க
வேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
255.
நம்மோடு வசிக்கும் சமையல் மற்றும் பணிகளில் நமக்கு
உதவி செய்வோருக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுத்தல், பதினைந்து நாட்களுக்கு
ஒருமுறையாவது அரைமணி நேரமாவது வகுப்புகள் நடத்துதல், வருடத்திற்கு
ஒருமுறை சில நாட்கள் தியானம் நடத்துதல். திருமணத்திற்காக வீட்டிற்குச்
செல்வோருக்கு இல்லற வாழ்க்கை பற்றி வகுப்புகள் நடத்தி தயார்படுத்தவேண்டும். அவர்களுக்கு
ஏதாவது கைத்தொழில் கற்றுக்கொடுத்தல் வேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
256.
பாலர் விடுதியில் தங்கும் பிள்ளைகளை சொந்த
பிள்ளைகளாய் அவர்களின் குற்றங்குறைகள் மற்றும் தவறுகளைப் பாராமல் அன்போடு அரவணைக்க
வேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
257.
"ஏழைகள் நம்மிடம் வரட்டும் என காத்திருக்காமல் அவர்களைத் தேடி நாம்
செல்லவேண்டும். அவர்களோடு கொண்டுள்ள அன்பும் விருப்பமும் வெளிக்காட்டுவது, கிறிஸ்துவோடுள்ள உறுதியான உறவிலிருந்து ஆகும்.” என்றவர் யார்?
மதர் மேரி
258.
“இறைவார்த்தைகளை விதைத்து தியாகம் மற்றும் செபம்
என்னும் நீர் பாய்ச்சி,
அருளடையாளங்கள் என்னும் உரம் போட்டு அதை வளர்ச்சியடைய செய்யவேண்டிய
மிஷனறிமார்கள்” என்றவர் யார்?
மதர் மேரி
259.
“புனித பிரான்சிஸ் அசிசியாரைப் போல தியாகமும்
பரிகாரச் செயல்களும் ஏழ்மையும் கடைபிடித்து வாழ்க்கைச்சான்றால் மறைபரப்பாளர்களாக
மேரிமக்கள் திகழவேண்டும்.” என்றவர் யார்?
மதர் மேரி
260.
"
சூரியகோளத்தைச் சுற்றி பூமி சுழல்வது போல நற்கருணை நாதருடன் கொண்ட
உறுதியான உறவிலிருந்து உருவாகும் அன்பின் செபங்கள் நிரந்தரம் இதயத்திலிருந்து
மேலெழும்பவேண்டும்" என்றவர் யார்?
மதர் மேரி
261.
மதர் மேரி அருட்சகோதரிகளுக்கு அடிக்கடி எடுத்துக்
கூறியிருந்த இறைவார்த்தைகள் எவை?
"ஆண்டவர்
எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்" (தி.பா.34:8), "தாய் மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம்
என்னகத்தே அமைதியாயுள்ளது" (தி.பா.131:2), நான் அவளை நயமாகக் கவர்ந்திழுப்பேன்; பாலைநிலத்துக்கு
அவளைக் கூட்டிப்போவேன்; நெஞ்சுருக அவளுடன் பேசுவேன்"
(ஒசே.2:14)
262.
காலையில் மணி ஒலிக்கும்போது ஒவ்வொருவரும் கட்டிலில்
தீ பற்றி எரிந்த நிலையென்பது போல விரைவில் எழும்ப வேண்டும். இறைவன் என்னை
அழைக்கின்றார் என்ற எண்ணத்தோடு கட்டிலை விட்டு எழும்ப வேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
263.
அனைத்தும் இறைவனுக்கு ஒப்படைக்க வேண்டும்.
தூயஇறையன்னையின் மக்களாகிய நாம் குழந்தைகளின் மனநிலையோடு செபம் செய்யவேண்டும்.
ஒவ்வொரு நாளும் அந்த நாளில் செய்யும் செயல்கள் அனைத்தையும் செப உணர்வோடும், தூய
நோக்கத்தோடும் செய்யவேண்டும். நாம் செய்பவற்றை அடிக்கடி இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க
வேண்டும். எப்போதும் சிறு செபங்கள் சொல்லிக் கொண்டு நடக்க வேண்டும். இவ்வாறு
செய்தால் இறை பிரசன்னத்தில் வாழலாம். என்றவர் யார்?
மதர் மேரி
264.
திருப்பலியை விட சிறந்தது இவ்வுலகில் வேறொன்றும்
இல்லை. ஆகையால் சரியான முறையில் திருப்பலிக்காக தம்மையே தயாரிக்க வேண்டுமென்று
மெசியாவின் மணமகளுக்கு கட்டாயம் வேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
265.
நற்கருணை நாதரை எப்போதும் உள்ளத்தில் கண்டு, தனிப்பட்ட
முறையில் உறவு கொண்டுவாழ்ந்த, சகோதரிகள் அடிக்கடி நற்கருணை நாதரை சந்திக்க
வேண்டும் என்ற மதர் மேரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
“நற்கருணையின் மேரி”
266.
தியான நிலையில் செபம் செய்து, இறைவிருப்பம்
அறிந்து, அவரோடு அன்புறவு கொண்டு, அதன்
பிரதிபலிப்பாக தம்மைத்தாமே இறைமக்களுக்கு அர்ப்பணம் செய்யத் துடிக்கும் நல்ல
உள்ளமும் ஆர்வமும் சகோதரிகள் தங்களில் உருவாக்க வேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
267.
நாம் செய்யும் செபங்கள் திருச்சடங்குகள் அன்புச்
செயல்கள் போன்றவற்றால் மறு உருபெற்று, 'வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார்' என்ற வகையில் நமது
வாழ்க்கை அமைய வேண்டும். இவ்வாறு கிறிஸ்துவைப் போல் நாம் உருமாறி நம் வழியாக
பிறருக்கு கிறிஸ்துவை அளிக்கவேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
268.
செபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத துறவற வாழ்வு
கரையோரத்தில் போடப்பட்ட மீனுக்கு
ஒப்பானது. என்றவர் யார்?
மதர் மேரி
269.
நல்ல முறையில் தியானம் செய்ய வேண்டுமென்றால்
நன்முறையில் வாழவேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
270.
நமது ஒவ்வொரு நாள் செயல்களும் தேவ நற்கருணையை
மையமாகக் கொண்டு அமைய வேண்டும். அதற்காக காலையில் திருப்பலி முடிந்து மதியம்
வரையிலான நேரம் நன்றியாகவும் மதியம் முதல் அடுத்த நாள் காலை வரை நற்கருணை
உட்கொள்வதற்கான ஆயத்தமாகவும் செலவிட வேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
271.
செபம் செய்யும் போது நாம் இறைவனோடு பேசுகிறோம்.
ஆன்மீக நூல்களை வாசிக்கும்போது இறைவன் நம்மோடு பேசுகிறார். என்றவர் யார்?
மதர் மேரி
272.
ஆழ்ந்த கருத்துக்கள் உடைய நல்ல நூல்களை வாசிக்கவும்
நாள்தோறும் சிலுவைப்பாதை நடத்தவும் வேண்டும் என்றவர் யார்?
மதர் மேரி
273.
கருத்தாழம் மிக்க ஆங்கில நூல்களை மொழிபெயர்த்து
அருட்சகோதரிகளிடம் எடுத்துரைத்தவர் யார்?
மதர் மேரி
274.
நற்கருணைப்பேழைக்கு முன் அமைதியாக இருந்து பல மணி
நேரம் செபித்துவிட்டு வெளியே செல்வார். சிறிதுதூரம் சென்றபின் ஏதோ மறந்து விட்டது
என திரும்பவும் ஆலயத்தில் வந்து செபிப்பார். அவர் யார்?
மதர் மேரி
275.
தமது பணிகளுக்கிடையிலும் நடந்து செல்லும் போதும்
திடீரென நின்றவாறு கைகள் கூப்பி கண்களை மூடி செபம் செய்தல் ஒரு வழக்கமாயிருந்தது.
அவர் யார்?
மதர் மேரி
276.
அனைவரும் செபமாலை அணியவேண்டும்;. நாள்தோறும்
இணைந்து ஜெபமாலை ஒப்புக்கொடுக்கவேண்டும் என்ற கட்டாயம் கொண்டிருந்தவர் யார்?
மதர் மேரி
277.
பயணம் புறப்படும் முன் "அமலோற்பவ கன்னிகையே!
எங்களுக்கு நீர் துணையாயிரும்" என்று செபிக்கவும்,
வீடு சந்திக்க போகும் போதும் பயணத்தின் வேளைகளிலும் செபமாலை
சொல்லவும் அறிவுறுத்தியவர் யார்?
மதர் மேரி
278.
போதித்தார்கள். "இதோ நான் ஆண்டவரின் அடிமை"
என்ற மனநிலையோடு அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவும் துன்ப துயரங்களை
பொறுமையோடு சந்திக்கவும் சகோதரிகள் வலிமையுடையவராக வேண்டும். அவ்வாறு இறையன்னையின்
மேலுள்ள பக்தி நம்மை இயேசுவோடு இணைக்கிறது என்ற உண்மையினைப் புரிந்துகொண்டு
அதன்படி வாழ வேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
279.
மரியா, முதல் நற்செய்தி அறிவிப்பாளர் (missionary)
ஆவார். அதைப்போல் மறைபரப்புப் பணிகளில் மேரிமக்கள் நற்செய்தி
அறிவித்தலுக்கு முக்கிய இடமளிக்கவேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
280.
"வாழ்க்கை கரடுமுரடானது. இயேசுவின் மணமகளாகிய அருட்கன்னியர் அவளுடைய
மணமகனைப்போல சிலுவையில் அறையப்படவேண்டியவள். சட்ட ஒழுங்குகளும், அதிகாரிகளும் வழியாக மணமகனின் விருப்பம் புரிந்துகொண்டு மணமகள்
வாழவேண்டும்". என்றவர் யார்?
மதர் மேரி
281.
மதர் மேரி நடத்திய வகுப்புகளில் அருட்சகோதரியை எவ்வாறு
உருவகப்படுத்தினார்?
கிறிஸ்துவின் மணமகள்
282.
ஏனோ தானோ என்ற மனநிலை துறவியருக்கு தகுந்ததல்ல. எந்த
சூழ்நிலையில் வாழ நேர்ந்தாலும் மேரிமக்களின் வாழ்க்கை முறையில் மாறுதல்
ஏற்படக்கூடாது. சிறிய காரியங்களிலும் இறைவிருப்பம் கண்டு அதற்கு கீழ்ப்படிந்து
அருட்சகோதரிகள் வாழ வேண்டும் என்றவர் யார்?
மதர் மேரி
283.
மே 15 அறுவடை அன்னையின் திருவிழாவின் நவநாள் நாட்களில்
உபவசிக்கத் தவறிய அருட்சகோதரி இமாகுலேட் மதர் ஜெனரல் மதர் மேரியோடு மன்னிப்பு
கேட்டு என்ன பரிகாரம் செய்தார்?
"மதர்,
நாங்கள் இரண்டு நாட்கள் உபவசிக்கலாம்"
284.
இரவு சுயசோதனைக்குப் பிறகு காலை திருப்பலி முடியும்
வரை இறை ஒன்றிப்பின் நிமிடங்கள் என்பதால் அனைவரும் மவுனத்தில் ஆழ்ந்திருக்க
வேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
285.
நோயுற்றிருந்த போது மதர் மேரி செய்த முக்கிய உணவு
முறைகள் என்ன?
1. தனக்கு பரிமாறிய
உணவிலிருந்து ஒரு பகுதியை பக்கத்தில் உள்ள சகோதரிக்கு கொடுப்பார். 2. அனைவருக்கும்
பொதுவான உணவிலிருந்து இரண்டு கரண்டி எடுத்து உண்பார்கள். 3. ஓய்வெடுத்திருந்த மதர், தனக்கு
அறையில் உணவு பரிமாறினாலும் உணவுக்காக பொதுவில் மணி அடித்த பின்னரே அதை உண்பது
286.
அனைத்து காரியங்களிலும் பொறுப்பாளர்களிடம் அனுமதி
கேட்ட பிறகு தான் செய்யவேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
287.
திருச்சபைத் தலைவர்கள், முதியோர்கள், குருவான வர்கள் இவர்களோடு மதிப்பும், கீழ்ப்படிதலும்
இருத்தல் வேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
288.
உண்மையான பக்தி என்பது தலைமைப் பொறுப்புடையவர்களுக்கு
கீழ்ப்படிதலிலும்,
இறைவிருப்பம் நிறைவேற்றுவதிலும், சுய மனதைக்
கட்டுப்படுத்துவதிலும் தாழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்துவதிலும் அடங்கியுள்ளது.
என்றவர் யார்?
மதர் மேரி
289.
சரியான
கீழ்ப்படிதலுக்கு மதர் மேரி கூறும் ஐந்து இலக்கணங்கள் எவை?
1) முழு
கீழ்ப்படிதல் வேண்டும். 2) கால தாமதம் வேண்டாம். 3) மகிழ்வுடன் கீழ்ப்படிய வேண்டும். 4) நிலையானதாக
இருத்தல் வேண்டும். 5) நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும்.
290.
பயிற்சிக் கன்னியர் நெல்லுக்கு காவல் காக்குமாறு உதவி
கோரிய போது மறுப்பின்றி உதவியவர் யார்?
மதர் மேரி
291.
"துறவியருக்கு தேவையான முக்கிய பண்பே விருப்பு வெறுப்பின்மை (பற்றின்மை -Detachment).
உலக பொருள்களோடு கொண்டிருக்கும் அதிக விருப்பம் (Attachment)
அனைத்து பாவங்களுக்கும் அடிப்படையாக அமையும். ஒரு துறவி தமது உள்ளத்தில்
இறைவனுக்கு மட்டும் இடம் கொடுத்து சுதந்திரமாக வாழவேண்டும். என்றவர்
யார்?
மதர் மேரி
292.
ஒரு பறவையை சிறு
கயிற்றினால் கட்டினாலும் அதற்கு பறக்க இயலாது. அதைப்போல சின்னஞ்சிறு
பொருட்களைக்கூட மிதமிஞ்சி விரும்புவது புண்ணியத்தில் வளர தடையாகும்".
என்றவர் யார்?
மதர் மேரி
293.
உடல், உள்ளத் தூய்மையினை பாதுகாக்க அருள்
அடையாளங்களில்,குறிப்பாக திருப்பலியில் தகுந்த முறையில்
பங்குகொள்வதும், இடைவிடாமல் செபம் செய்வதும், மரியன்னை, சூசையப்பர் இவர்களோடும், திருப்பாடுகளோடும் பக்திபற்றுடன் இருப்பதும் தூய்மையைக் கட்டிகாத்து வளரச்
செய்ய உதவும். என்றவர் யார்?
மதர் மேரி
294.
கற்புநெறி வாழ்க்கை வழி நமது உடல் உள்ளத் திறமைகளை
முழுக்க முழுக்க இறைவனுக்கும் திருச்சபையின் வளர்ச்சிப் பணிகளுக்குமாக
அர்ப்பணிக்கின்றோம். என்றவர் யார்?
மதர் மேரி
295.
பிறரன்பு நமது இல்லங்களில் நிலைத்து நிற்கும்போது
மட்டுமே கற்பு முழுமையாக கட்டிக்காக்கப்படும். அதிகாரிகளும் அருட் சகோதரிகளும்
இதைப் புரிந்துகொண்டு கபடற்ற அன்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். என்றவர்
யார்?
மதர் மேரி
296.
இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணம் செய்த நபர் இயேசுவை
அல்லாமல் வேறு ஒருவரையும் சொந்தமாக்கு வதில்லை; எவருக்கும் சொந்தமாவதும் இல்லை;
ஆனால் அவர் அனைவருக்கும் சொந்தமாகின்றார். என்றவர் யார்?
மதர் மேரி
297.
கற்பை பாதுகாப்பதற்கு ஐம்புலன்களை அடக்கி வாழ்வது மிக
அவசியம். ஆனால் தற்போது அதை யாரும் பெரிதாகக் கருதுவதில்லை. அதற்கு ஏற்ற
முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை. என்றவர் யார்?
மதர் மேரி
298.
ஒன்றும் இல்லாத நமது நிலையைப் புரிந்து கொண்டு
இறைவனில் முற்றிலும் அடைக்கலம் வைப்பவரே ஏழையரின் உள்ளத்தோர். இறையன்பின்
முழுமையிலேயே வார்த்தைப்பாடு (துறவு உறுதிமொழி) நிறைவேற்றப்படுகின்றது. என்றவர்
யார்?
மதர் மேரி
299.
ஒவ்வொரு சகோதரியும் அயராது உழைப்பதில் மகிழவேண்டும். கைத்தொழில்கள், சமூகத்திலுள்ள
எளிய வேலைகள் செய்ய அனைவரும் உற்சாகம் காட்டவேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
300.
புனித பிரான்சிஸ் அசிசியாரைப் போல் நாமும் ஏழ்மையைக்
கடைபிடிப்பதில் ஆர்வம் காட்டவேண்டும். கிடைப்பதெல்லாம் சேமித்து வைக்காமல், "இது
எனக்கு தேவையா? இது இல்லாமல் எனக்கு வாழ இயலுமா?"
என்று நம்மோடு நாமே கேட்கவேண்டும். நமக்கு பயன்படுத்த
கொடுக்கப்பட்டுள்ள பொது பொருட்களைக் கவனமாக பயன்படுத்தவேண்டும்; பாதுகாக்க வேண்டும். பல விதமான பொருட்கள் இருந்தால் "நல்லவை மற்றவர்களுக்கு" என்ற மனநிலையோடு
செயல்பட வேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
301.
"ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டு ஒன்றுபட்டு வாழ்வதற்கு குழந்தைகளுக்கேற்ற
மனநிலை நமக்கு இருத்தல் வேண்டும். அனைவரையும், அவர்கள் எந்த
நிலைமையில் இருக்கிறார்களோ, அவ்வாறு ஏற்றுக்கொள்ளவேண்டும். 'இது என் குடும்பம்' என்ற மனநிலையோடு அனைவரும்
செயல்பட வேண்டும். 'நான் அன்பு செய்கின்ற இயேசு அனைவரிலும்
வசிக்கின்றார்' என்ற உணர்வோடு மற்றவர்களை மதித்து அன்போடு
அவர்கள் தேவைகளில் உதவ வேண்டும்". என்றவர் யார்?
மதர் மேரி
302.
"ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ளுதல் துறவற வாழ்க்கையின்
உறுதிப்பாட்டிற்கு இன்றியமையாதது. இது இல்லையெனில் சிதறடிக்கப்படும்; இருந்தால் ஒன்றிணைக்கப்படும்". என்றவர் யார்?
மதர் மேரி
303.
மதர் மேரி அடிக்கடி சகோதரிகளிடம் கூறிய செய்தி என்ன?
"துறவற
வாழ்க்கையில் காணப்படும் இதய ஒற்றுமை நம்மை விண்ணரசின் இறை தூதர்களுக்கு
நிகராக்குகிறது"
304.
"ஒருவர் மற்றவர்களை அன்பு செய்வதற்கும், அதில்
முதிர்ச்சி அடைவதற்கும் இயேசுவின் மறைஉடலை வளரச் செய்வதற்கும் இறைவன் நம்மை இந்த
மிஷனறி சபைக்கு அழைத்துள்ளார்". என்றவர் யார்?
மதர் மேரி
305.
மதர் மேரிக்கு வேதனை வருத்துவது எதுவாக இருந்தது?
அருட்சகோதரிகள், சக
அருட்சகோதரிகளை வருத்தப்பட வைப்பது”
306.
"மற்றவர்களுக்கு ஏதாவது வருத்தம் விளை வித்தால் அன்று இரவு தூங்கப்போகும்
முன்னரே அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று
கட்டாயமாக கூறியிருந்தவர் யார்?
மதர் மேரி
307.
'உனது சிலுவையை ஒருவருக்கும் தெரியாமல் ஏற்றுக்கொள். அதன் கொடிய வேதனை
உனக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கட்டும். உன் காதுகளுக்கு அது இனிய பாடலாக
அமையட்டும்." என்றவர் யார்?
மதர் மேரி
308.
தியாகமும் சகிப்புத்தன்மையும், வாழ்க்கையின்
பிரிக்க இயலாத இரு அம்சங்களாகும். இது இறைஅழைத்தலின் அம்சமாகும் என நினைத்து
அதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது உள்ளத்தின் ஆழத்தில், மகிழ்ச்சியடைய
வேண்டும். என்றவர் யார்?
மதர் மேரி
309.
துன்பதுயரங்கள் வேதனைகள் இவை நம்மை விரைவில்
இறைவன்பால் ஈர்க்கின்றன. இறையன்பெனும் நூலில் (தியாகம்) சகிப்பு, தொண்டு
செய்யும் ஆர்வம் ஆகிய பூக்களால் தொடுக்கப்பட்ட அழகிய ஓர் மலர்மாலையாக இருந்தது,
என்றவர் யார்?
மதர் மேரி
310.
மதர் மேரி தானாக செய்வதற்கு ஆர்வம் காட்டிய
வெளிப்படையான பரிகாரச்செயல்கள் யாவை?
1. சிலுவையை
கையிலேந்தி உணவறையில் முழங்காலில் நிற்றல், 2. கூப்பிய
கைகளுடன் உணவறை, சிற்றாலயம் ஆகியவற்றின் வாசலில்
முழந்தாட்படியிட்டு 'நான் ஒரு பாவி, எனக்காக
வேண்டிக்கொள்ளுங்கள்' என ஒவ்வொருவரிடமும் கேட்டு தரையில்
முத்தம் செய்தல். 3. உள்ளங்கை ஊன்றி முழந்தாளிட்டு
செபித்தல். 4.முழங்காலில் நின்று கால்பாதம் பின்னோக்கி
உயர்த்திப் பிடித்துக்கொண்டு செபித்தல். 5. கைகளை விரித்து
முழங்காலில் நின்று செபித்தல் 6. ஒரு நேரம் உபவசித்தல் 7.
முழங்காலில் நின்று உணவருந்துதல் 8. உணவு வேளையில் ஒவ்வொருவரிடம் சென்று முழங்காலில் நின்று உணவு வாங்கி
உண்ணுதல், 9. வெளிப்படையாக ஏதாவது தவறுகள் - (மௌனம் கலைதல்,
பாத்திரங்கள் விழுந்து உடைதல், மௌனநேரத்தில்
நடக்கவோ அல்லது சாமான்களை எடுத்தோ சத்தம் போடுதல்) செய்தால் சிற்றாலயத்தில் அதை
ஏற்று சொல்லி மன்னிப்பு கேட்டல். 10. காலநிலையால் ஏற்படும்
நோய் மற்றும் வாழ்க்கைப் பிரச்சனைகள் எவை பற்றியும் அதிருப்தி காட்டாமல் இருத்தல்.
311.
மதர் மேரி
இரகசியமாக செய்து வந்த இரத்தம் சொட்டும் பரிகாரச் செயல்கள் எவை?
முள்ளாலான அரைஞாண் கயிறு
அணிதல், கசையால் அடித்தல், ஆணிகள் அறைந்த சிலுவையைப்
பயன்படுத்துதல்
312.
மதர்
மேரி இரவு வேளைகளில் நீண்ட நேரம் எதற்காக
செலவிட்டார்கள்?
செபத்திலும், சிலுவைப்பாதை
சொல்லுவதிலும்
313.
தென்னகத் திருச்சபை மண்டலத்தில் ஒரே நேரம்
சுடர்விட்டு எரிந்த இரு ஒளிச்சுடர் கோள்கள் எனப்படுபவர் யாவர்?
அருட்தந்தை ஜோசப்
குழிஞ்ஞாலில் மற்றும் மதர் மேரி கல்லறய்க்கல்
314.
வீடு சந்தித்தல் வழியாக உள்ள நற்செய்தி அறிவிப்புக்கு
முதலிடம் கொடுத்துவந்தவர் யார்?
மதர் மேரி
315.
'நமது பெரிய மதர் உயிரைப்போல் அன்பு செய்துவந்த, செய்யவேண்டுமென
பிறருக்கு தூண்டுதலளித்த, தன்னால் இயன்றவரை செய்து வந்த ஒரு
பெரிய செயலே வீடு சந்தித்தல். வீடு சந்தித்தல் இல்லாமல் மேரிமக்கள் இல்லை. வீடு
சந்திப்பில் தான் அவர்களின் மறைபரப்புப்பணியின் உட்பொருள் அடங்கியுள்ளது. இதுபற்றி
ஆழமாக கற்றுக்கொடுத்தவர் மதர் மேரி ஆவார். இதற்காக அவர்களை எவ்வளவு போற்றினாலும்
அது மிகையாகாது"! என்றவர் யார்?
அருட்சகோதரி அலோசியஸ்
316.
சிதறிக்கிடந்த கல்வியறிவில்லாத ஏழைப் பெண்களை திரட்டி
சுத்தம், சுகாதாரம், குழந்தைகள் பராமரிப்பு, சிறுசேமிப்பு, இல்லறவாழ்க்கை, போன்றவை
பற்றி விழிப்புணர்வு அளித்து அவர்களை உத்தம தாய்மார்களாக்க முயற்சித்தவர் யார்?
மதர் மேரி
317.
'ஆர்வமுடைய நெகேமியாவின் கீழ் ஒரு கையில் உருவிய வாளும் மறு கையில் பணி
ஆயுதமுமாய் எருசலேம் மதில்களை கட்டிய வீரர்களைப் போல்' (நெகேமியா
4:17,18) என்ற இறைவார்த்தையைப் போல மர் மேரி வீடு சந்திக்க
செல்லும் போது கைகளில் ஏந்தியிருந்தவை என்ன?
ஒருகையில் இராந்தல் விளக்கு மறுகையில் வெற்றியின் ஆயுதமாகிய ஜெபமாலை
318.
மேரிமக்கள் தொடுவெட்டியை தீய சக்திகளிலிருந்து
விடுவித்து கிறிஸ்துராஜபுரமாக மாற்றினர் என்றவர் யார்?
அருட்தந்தை Y. ஜோசப்
பூந்தாழவிளையில்
319.
மேரிமக்களுக்கு எந்தெந்த நாட்கள் வீடு சந்திப்பு
நாட்களாக இருந்தன? புதன் மற்றும் சனி
320.
மிஷன் நாட்களான புதன் மற்றும் சனி நாட்களில்
மடத்திலேயே இருக்கும் அருட்கன்னியர்களிடம் மதர் மேரி கேட்பது என்ன?
“இன்று எந்த நாள்?”
321.
மடத்தின் முக்கிய வேலைகளுக்கு முன்னர் செய்வது என்ன?
சிற்றாலயத்தில் நற்கருணை
நாதரை சந்தித்து, பர. 1
அரு. 1 தி.துதி சொன்னபின், 'இயேசுவின் பரிசுத்த இருதயமே, உம்முடைய ராஜ்யம் வருக,
தூய மரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்'
என்றும் செபித்து விட்டு புறப்படுவர்.
322.
அருட்கன்னியர்கள் மடத்தின் நுழைவு வாயில் (gate) கடக்கும்
போது சொல்லுகின்ற செபம் எது?
"அமலோற்பவ
கன்னிகையே எங்களுக்கு நீர் துணையாயிரும்"
323.
மறைப்பணித்தளங்களிலுள்ள வீடுகளில் சென்று
சேரும்வரையிலும் எதனை சொல்லிக்கொண்டே போகவேண்டும்?
செபமாலை
324.
மார்த்தாண்டம் மடத்தில் மதர் மேரியின் மறைப்பணி
ஆர்வம் வெளிப்படும் நிகழ்வு எது?
பவன சங்கமம்
325.
மார்த்தாண்டம் ஆலயத்தின் ஆன்மநிலை பதிவேட்டைத்
தயாரித்தவர்கள் யாவர்?
மதர் மேரி, அருட்சகோதரி
லின்டா
326.
அருளடையாள வாழ்வில் தவறாத குடும்பங்களிலுள்ள
குழந்தைகளின் இறையழைத்தலில் கவனிக்கவும் பீடச்சிறுவர்களாக பயிற்சியளித்து
தனிக்கவனம் செலுத்தி அக்குடும்பங்களிலிருந்து 10 சிறுவர்களை தேர்வு செய்து
அவர்களுக்கு உதவியவர் யார்?
மதர் மேரி
327.
தமிழ் மொழியை மேரிமக்கள் துறவுசபையின் ஆரம்பகாலம்
முதல் சகோதரிகள் அனைவரும் கற்கவேண்டுமென்று கட்டாயமாக கூறவும் அதற்கான ஒழுங்குகள்
செய்யவும் செய்தவர் யார்?
மதர் மேரி
328.
மறைக்கல்வி மாணவர்களுக்காக எல்லா பணித்தளங்களிலும்
ஒவ்வொரு நூலகங்கள் அமைத்து நல்ல நூல்கள் வாங்க உதவியவர் யார்?
மதர் மேரி
329.
சேவாசங்கம், தந்தையர் சங்கம், தாய்மார் சங்கம், மாதா சங்கம் (sodality) ஆகியவற்றை உருவாக்கி, தலைமை ஏற்று வழிநடத்தியவர்
யார்?
மதர் மேரி
330.
1965
முதல் மறைக்கல்வி மாணவர்களுக்காக விடுமுறை விவிலிய வகுப்புகள்
நடத்தியவர் யார்?
மதர் மேரி
331.
மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு
ஒவ்வொரு மாதமும்,
ஒவ்வொரு பங்கில் வைத்து நடத்த உதவிய மார்த்தாண்டம் பங்கின் முதல்
உதவிப் பங்குத் தந்தை யார்?
அருட்தந்தை மாத்யூ
வாழப்பிள்ளேத் (குருசுமலை. மாத்யூஸ் றம்பான்)
332.
மார்த்தாண்டத்தில் மதர் மேரி மறைப்பணி புரிந்த 38 ஆண்டு
காலம் எது?
1938 முதல் 1976-ல் ஓய்வுக்கும் சிகிச்சைக்குமாக திருவனந்தபுரம் போங்ஙும்மூடு மடத்திற்கு
செல்லும் வரை
333.
பனச்சமூடு, குடையால், ஆற்றூர்,
உண்ணாமலைக்கடை, சூசைபுரம், பிலாங்காலை
ஆகிய இடங்களில் மறைபரப்புத்தளங்கள் தொடங்க தூண்டுதல் வழங்கியவர் யார்?
மதர் மேரி
334.
1938
- ல் நிறுவப்பட்ட மேரிமக்கள் சபையின் 1942 -ம்
ஆண்டின் மக்கள் நலத்திட்டங்கள் எவை?
கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள்,
Shoe Polish brush, Sand paper, Hat, இவை உருவாக்குதல்,
தேனீ வளர்த்தல், நெசவு, தையல்,
Embroidery, பாய் பின்னுதல், பிற
கைத்தொழில்கள், பீடி சுற்றுதல், ஊது
பத்தி தயாரித்தல், அச்சகம், பால்வெட்டும்
பயிற்சி, மாடு, ஆடு, கோழி, பன்றி பண்ணைகள், C.R.S - ன் உதவியோடு வீடு கட்டுதல்,கிணறு,கழிவறை அமைத்தல், குடிநீர் வசதி, நிலங்கள் சீரமைத்தல், பாலர் விடுதிகள், முதியோர் இல்லங்கள், குடும்ப நலத்திட்டங்கள்,
தொழுநோயாளிகள் மறுவாழ்வு மையங்கள், மனநிலை
பாதித்தவர்களுக்கான விடுதி, முதியோர் பராமரிப்பு பகல் வீடு'
335.
எப்போது மதர் மேரி ஆதரவற்ற ஒருசில பெண் குழந்தைகளை மடத்தில்
தங்க வைத்து பராமரித்து வளர்த்து வந்தார்?
1950-ல்
336.
1962
ஆகஸ்ட் 20-ம் நாள் 25 சிறுமிகளை
சேர்த்து மார்த்தாண்டம் விமலா பாலர் விடுதியை அர்ச்சித்தவர் யார்?
பேராயர் பெனடிக்ட் மார்
கிரிகோரியோஸ்
337.
மதர் மேரியின் விருப்பத்தால் எப்போது பிலாங்காலையில்
முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது?
1974-ல்
338.
மார்த்தாண்டம் தொடக்கப்பள்ளி மடத்தின் வளாகத்தில்
எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1946 டிசம்பர்
2-ம் நாள்
339.
கட்டச்சிவிளை (நட்டாலம்) தொடக்கப்பள்ளி எப்போது
துவங்கப்பட்டது?
1946
340.
செல்லங்கோணம் தொடக்கப்பள்ளியில் அருட்கன்னியர்கள்
எப்போது முதல் பணிபுரியத் துவங்கினர்?
1946
341.
கேரளாவில் அடூரில் அருட்கன்னியர்கள் எப்போது முதல்
பணிபுரியத் துவங்கினர்?
1947 மேய் 17-ல்
342.
கிராத்தூர் தொடக்கப்பள்ளி எப்போது எங்கே ஆரம்பமானது?
1947-ல்
கிராத்தூர் மடத்தின் வரவேற்பறையில் (Parlour) முதல் வகுப்பு
ஆரம்பிக்கப்பட்டது.
343.
'டினோமினேஷன் ஸ்கூல்' என்றால் என்ன?
திருவிதாங்கூர் 'திவான்'
திரு C. P. இராமசுவாமி ஐயரின் காலத்தில்
அனுமதிக்கப்பட்ட இப்பள்ளிகளில் கத்தோலிக்க மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும்.
பிற மதத்தினரை சேர்த்தால் குற்றமாக கருதப்பட்டு வழக்கு தொடரப்படும்.
344.
மார்த்தாண்டம் தொடக்கப் பள்ளியில் கோலப்பன் என்ற
இந்து பெயருடைய ஒரு சிறுவனை சேர்த்தனர். அவனது ஞானஸ்நான பெயர் அருளப்பன்
என்பதாகும். மார்த்தாண்டம் கிறிஸ்துராஜா பங்கின் உறுப்பினரான இச்சிறுவனை பள்ளியில்
சேர்த்ததாக பெரும் பிரச்சினை ஏற்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. வலிய மதர்
இப்பிரச்சனைக்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைத்தார்?
அம்மாணவனின் பெயரை அரசிதழில்
வெளியிட்டு
345.
நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் தொடங்கியதும்
அருட்சகோதரிகளுக்கு உயர்கல்வி வழங்க 14 அருட்சகோதரிகளை எங்கே அனுப்பி
வைத்தனர்?
குழித்துறை அரசு ஆசிரியர்
பயிற்சிப் பள்ளியிலும், பட்டம் செயின்ட் மேரீஸ் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும்
346.
1956-ல் தமிழ் கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது கோட்டார்
மறைமாவட்டத்திலிருந்து தமிழ் ஆசிரியைகளை அழைத்து வந்து எந்த தங்கும் விடுதியில்
தங்க வைத்தனர்?
கிராத்தூர் மடத்தில்.
347.
கோட்டார் மறைமாவட்டத்தைச் சார்ந்த தமிழ் ஆசிரியைகளாக
வந்து பின்னர் மடத்தில் சேர்ந்து
அருட்சகோதரிகள் ஆனவர்கள் யாவர்?
அருட்சகோதரிகள்: அமலா, பெல்லா,
கில்டா, றெக்சிலின், ஜெயா,
சுனிதா
348.
நாட்டில் மருத்துவ வசதி குறைவானதால் மேரிமக்கள்
கன்னியர் சபையின் தொடக்க நாள் முதல் வீடு சந்திக்கச் செல்லும் போது சிறிய
நோய்களுக்கு எந்த மருந்து வழங்கி வந்தனர்?
ஹெர்போமினறல்
349.
அருட் தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் அவர்களின் பெயர்
கொண்ட புனித யோசேப்பின் பெயரில் பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகையின் விருப்பப்படி
அஞ்சல் மருத்துவமனை எப்போது திறந்து வைக்கப்பட்டது?
1953 மே 17-ல்
350.
அஞ்சல் மருத்துவமனையின் வளர்ச்சிக்கு
துவக்கக்காலத்தில் அயராது பாடுபட்டு உழைத்தவர் யார்?
அருட்சகோதரி ஆக்னஸ்
351.
1962
ஜனவரி 27-ல் பனச்சமூட்டில் தூய சூசையப்பர்
மருத்துவமனையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தவர் யார்?
பேராயர் பெனடிக்ட் மார்
கிரிகோரியோஸ்
352.
மார்த்தாண்டம் மறைமாவட்டம் உதயமான நாள் எது?
1996 டிசம்பர்
16
353.
மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் முதல் ஆயராக மேதகு
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் பொறுப்பேற்றுக் கொண்ட நாள் எது?
1997 ஜனவரி 23
354.
மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக மேதகு
யூஹானோன் மார் கிறிஸோஸ்டோம் பொறுப்பேற்றுக் கொண்ட நாள் எது?
1998 ஜூலை 1
355.
ஆயர் வின்சென்ட் மார் பவுலோசின் தலைமையில்
மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் எண்ணிக்கை (2010) என்ன?
57 அருள்
தந்தையர்கள், 85 பங்குகள், 51 குரு
மாணவர்கள், 250 துறவியர்கள், 64000 இறைமக்கள்
356.
இரண்டாம்
வத்திக்கான் திருச்சங்கத்திற்குப் பின்னர் நடைபெற்ற எந்த பொதுக்கூட்டத்தில் (Synaxis) மதர் மேரி நோயுற்றிருந்த
பின்னரும் ஆர்வத்தோடு பங்கேற்றார்?
1968 -
ல் மார்த்தாண்டம் தாய் இல்லத்தில் வைத்து
357.
1974 டிசம்பர் 17 - ம் நாள் பனச்சமூடு மருத்துவமனையில் வைத்து மதர் மேரிக்கு நோயில் பூசுதல் அருள்
அடையாளம் வழங்கியவர் யார்?
அருட்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில்
358.
திருவனந்தபுரம்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக மதர் மேரியை
போங்ஙும்மூடு மடத்திற்கு எப்போது அழைத்துச் சென்றார்கள்?
1976 அக்டோபர் மாதம்
359.
மதர் மேரியின்
ஆன்மீகத் தந்தை யார்?
அருட்தந்தை எம்.ஜெ.தோமஸ் எஸ்.ஜெ.
360.
எவ்விடத்து
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அண்டை வீட்டார் போன்றோர் மதரிடம் பேசவும் ஆசீர் பெறவும் வருவது வழக்கமாக
இருந்தது?
போங்ஙும்மூடு
361.
மேரிமக்கள்
துறவுசபையில் முதன் முதலாக அச்சிடப்பட்ட சட்ட ஒழுங்குநூல் எப்போது
போங்ஙும்மூட்டில் வைத்து மதர் மேரி வெளியிட்டார்?
1978 செப்டம்பர் 12 - ம் நாள் மதர் மேரியின் நாமவிழா (தூய மரியாவின் புனிதப் பெயர்)
362.
மதர் மேரியை
எந்தெந்த மறைமாவட்ட ஆயர்கள் சந்தித்து, ஆசி வழங்கினர்?
திருவனந்தபுரம் பேராயர், திருவல்லா, பத்தேரி,
தலசேரி, ஜெய்ப்பூர், சாந்தா, பாட்னா மறைமாவட்ட ஆயர்கள்
363.
1980 ஏப்ரல் 27 - ல் போங்ஙும்மூடு மடத்தின் சிற்றாலயத்தில் வைத்து மதர் மேரிக்கு நோயில் பூசுதல்
வழங்கியவர் யார்?
பேராயர் மார் கிரிகோரியோஸ்
364.
பேராயர் மார்
கிரிகோரியோஸ் மதர் மேரிக்கு நோயில் பூசுதல் வழங்கிய போது உடனிருந்தவர்கள் யாவர்?
அருட்தந்தையரும் மேரிமக்களும், பெதனியின் மதர் பாஸிம், ஸிஸ்டர் ஹனோனா
365.
1980 - டிசம்பரில் போங்ஙும்மூடு மடத்தில் வந்து மதர் மேரியை சந்தித்து ஆசி வழங்கி
மலங்கரை சபையின் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கு பெற வந்த திருத்தந்தையின்
பிரதிநிதி யார்?
கர்தினால் றூபின் மற்றும் அவரது செயலர்கள்
366.
எப்போது
எலும்புத் தேய்வால் கால் முறிந்து விட்டது?
1982-ல்
367.
திருவனந்தபுரம்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாவதாக ஏப்ரல் 16 - ல் மதர் மேரிக்கு நோயில்
பூசுதல் வழங்கியவர் யார்?
மார் கிரிகோரியோஸ்
368.
மதர் மேரியை
அஞ்சல் மடத்தின் மருத்துவமனையில் அனுமதித்து பராமரிக்கத் துவங்கிய நாள் எது?
1983 ஜனவரி
369.
1983 செப்டம்பர் 12 மதரின் நாமவிழா நாளில் மதர் மேரியை எங்கே அழைத்துச் சென்றனர்?
குடப்பனக்குந்து ஜெனறலேட்
370.
குடப்பனக்குந்நு
மேரிமக்களின் தியான இல்லம் (தாபோர்) கட்டுவதற்கான இடம் சுட்டிக் காண்பித்து அங்கே
கட்டின செபவீடு எவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது?
மதர் மேரி கல்லறய்க்கல் மெம்மோறியல்
371.
மதர் மேரி
மரணப்படுக்கையில் பாடிய பாடல் எது?
"மரியாவே! என் இனிமையே! என் சரணமே! என் மரண நேரத்தில் துணையாக
வாருமே!"
372.
மதர் மேரி
இயேசுவை காட்சி கண்டது போன்ற இனிய அனுபவத்தில் மெல்லிய குரலில் உரையாடியது என்ன?
'எனது அன்பு........, எனது இதயம்......, எனது உயிர்......... எல்லாம் நான் உமக்கு அர்ப்பணிக்கிறேன்.
நான் பாவி. என்மீது இரக்கமாயிரும்..... நான் தகுதியற்றவள். விரைவாக எழுந்தருளி
வாரும்'.
373.
மதர் மேரி
அன்னை மரியாவை காட்சி கண்டது போன்ற இனிய அனுபவத்தில் மெல்லிய குரலில் உரையாடியது
என்ன?
'என்னிடம் தருவதற்கு எதுவுமில்லை.... என்னை முழுவதும்.......
எனது அன்பே....'
374.
மதர் மேரி
இயேசுவையும் அன்னை மரியாவையும் காட்சி கண்டது
போன்ற இனிய அனுபவத்தில் எவ்வளவு நேரம் நிலைத்திருந்தார்?
பத்து நிமிடங்கள்
375.
"இலங்கையில்
போர் நடக்கிறது அல்லவா? நன்றாக செபிக்க வேண்டும்". இதைக் கேட்ட இலங்கையைச் சார்ந்த
அருட்சகோதரிகள் பெரும் வியப்புற்றுக் கூறியது என்ன?
மதர் ஒரு புனிதை என்பதில் எனக்கு எத்தகைய சந்தேகமும் இல்லை.
376.
பெரும்
பணத்தட்டுபாடு ஏற்பட்ட போது, கட்டிலின் கீழே பணம் அடங்கிய பையை வைத்து விட்டு
மதரிடம்' பேச
முயற்சித்தபோது, மதர்
கூறியது என்ன?
இருந்த ரூபாயுடன் வந்திருக்கிறீர்கள் அல்லவா!
377.
“இன்று
சமுகத்தில் ஒரு அருட்சகோதரி மரண வாயிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்” என்று
மதர் மேரி கூறிய அன்றே உயிர்நீத்த அருட்சகோதரி யார்?
அருட்சகேதரி ஆஞ்சலா டி.எம்.
378.
மரணப்படுக்கையில்
மதர் மேரி கூறியது என்ன?
"எனிக்கு தம்புரான் மதி" (எனக்கு இறைவனே போதும்), "ஆண்டவரே, என் மக்களை, என் சகோதரிகளை மிகுதியாக ஆசீர்வதியும்". "என்
அன்பு இறைவா, என்னை
அழைத்துச் செல்ல நீர் எப்போது வருவீர்?"
379.
மார்
கிரிகோரியோஸ் ஆண்டகையிடமிருந்து தனது 87-ஆண்டு கால வாழ்க்கையில் நான்காவது முறையாக மதர் மேரி எப்போது
நோயில் பூசுதல் பெற்றுக்கொண்டார்?
1985ஜூலை19- ம் நாள்.
380.
தேவநற்கருணையை
அப்பமாக உட்கொள்ள இயலாததால் இரசமாக
கொடுத்த போது புன்னகைப்புடன் பேசியக் கூற்றுக்கள் எவை?
"அம்மா", "மாதாவு"
381.
மதர்
பெல்சிற்றா மதர் மேரியின் படுக்கை அருகேயிருந்த போது மதர் மேரி கூறியது என்ன?
"மதரே, எனக்கு செபம்..... இறக்கும் வரையில்...... நூறு சகோதரிகளை நிறுத்தி ......”
382.
1985 ஜீலை 30
காலை சுமார் 5.10 மணிக்கு காலையில் மதர்
மேரியின் உயிர் பிரிந்த போது உடனிருந்தவர்கள் யாவர்?
அருட்சகோதரிகள் பெனடிக்ட், மேரி
மாத்யூ, ட்றீஸா தோமஸ், ஜெயிம்ஸ் மேரி
383.
மதர் மேரியின்
உயிர் பிரிந்த உடனே வந்து செபித்த மடத்தின் அருகாமையில் தங்கியிருந்த அருட்தந்தை
யார்?
அருட்தந்தை பீட்டர் கொண்ஸால்வஸ்
384.
யார்
தலைமையில் மதர் மேரியின் பூதவுடலை ஆயத்தப்படுத்தி மதர் தங்கியிருந்த அறையிலேயே
படுக்க வைத்தனர்?
மதர் ஜெனரல் பெலிஸிற்றா, அருட்சகோதரி
இம்மாகுலேட்
385.
மதர் மேரியின்
உயிர் பிரிந்த அன்று மாலை நான்கு மணியளவில், போங்ஙும்மூட்டில் வைத்து யார் தலைமையில் கூட்டுத் திருப்பலி
ஒப்புக்கொடுக்கப்பட்டது?
திருவனந்தபுரம் பேராயர்
பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ்
386.
மதர் மேரியின்
உடல் அழகாக அலங்கரித்த வாகனத்தில் போங்ஙும்மூடு மடத்திலிருந்து விடைபெற்று, மார்த்தாண்டம் தாய் இல்லம் நோக்கி எப்போது புறப்பட்டது?
தூப மன்றாட்டிற்குப் பின்னர்
மாலை 5 மணிக்கு
387.
மார்த்தாண்டம்
மக்கள் மதர் மேரியின் உடலை வரவேற்று கொண்டு வர எங்கே காத்திருந்தனர்?
தமிழ்நாட்டு எல்லையான
களியக்காவிளையில்
388.
மலர்களால்
அலங்கரித்த வாகனத்தோடு தீபங்கள் கைகளில் ஏந்தி ஆயிரக்கணக்கான மக்கள் மதர் மேரியின்
உடலைக் கண்டு வரவேற்க எங்கே காத்திருந்தனர்?
மார்த்தாண்டம் கிறிஸ்தவ கல்லூரியின்
முன் பகுதியில்
389.
மார்த்தாண்டம்
கிறிஸ்துராஜா ஆலயத்தில் மதர் மேரியின் உடல் சென்றடைந்ததும், ஒலிபெருக்கியில் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்த சொல் என்ன?
"மார்த்தாண்டத்தின்
அம்மா இதோ, கடந்து வருகிறார்"
390.
மதர் மேரியின்
உடல் கிறிஸ்துராஜா ஆலயத்திற்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் யார் தலைமையில் திருப்பலி
நடைபெற்றது?
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்
391.
மதர் மேரியின்
உடல் இரவு முழுவதும் அடுத்த நாள் பகலிலும் பொது பார்வைக்காக எங்கே வைக்கப்பட்டிருந்தது?
சிற்றாலயத்தில்
392.
1985 ஜூலை 31
பிற்பகல் 3 மணிக்கு மதர் மேரியின் அடக்கத்திருச்சடங்குகள்
யாரால் தலைமையேற்று வழிநடத்தப்பட்டது?
திருவனந்தபுரம் பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகையின் தலைமையிலும், துணை ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் ஆண்டகையின் முன்னிலையிலும்
393.
மதர் மேரியின்
அடக்க வேளையில் இரங்கல் உரை நிகழ்த்தியவர் யார்?
திருவனந்தபுரம் பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ்
394.
மதர் மேரியின்
விண்ணக வாழ்வின் வெள்ளிவிழா நினைவு திருப்பலியின் போது மறையுரை வழங்கியவர் யார்? ஆயர்
வின்சென்ட் மார் பவுலோஸ்
395.
"என்
தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே வாருங்கள்" என்ற
இறைவாக்கின் படி மதர் மேரியைப் பற்றி கட்டுரை எழுதியவர் யார்?
R. தேவதாஸ் ஆசிரியர்
396.
இறைவனை
சுவைத்து அறிந்து இறை அன்னையிடம் பக்தி கொண்டு, ஆன்மீக சக்தியின் உறைவிடமான
செபத்திலும், தவத்திலும் சிறந்து
விளங்கிய பெரிய நீரூற்று தான் அன்பு மதர் மேரி கல்லறய்க்கல் என்றவர் யார்?
ஆக்னஸ் ஆசிரியை, மார்த்தாண்டம்
397.
மறைபரப்பு
ஆர்வத்தால் பற்றி எரிந்த மோண். ஜோசப் குழிஞ்ஞாலில் அவர்கள் இறை பராமரிப்பால் எப்போது
மேரிமக்கள் கன்னியர் துறவு சபையை நிறுவினார்?
1938-ல்
398.
மூன்று அருட்
கன்னியர்களால் ஆரம்பிக்கப்பட்ட மேரிமக்கள் கன்னியர் துறவுசபை 77 ஆண்டுகள் சென்ற போது வளர்ச்சி என்ன?
6 மாகாணங்கள்,
இந்தியாவில் 150 இல்லங்கள், வெளிநாடுகளில் 20 இல்லங்கள்
399.
மதர் மேரியின்
நினைவு தினம் எப்போது?
ஜூலை 30-ம் தேதி
400.
மேரிமக்கள்
சமூகம் முழுவதும் நிறுவனர் மற்றும் துணை நிறுவனர் இறந்த நாளான செவ்வாய்க்கிழமைகளை
எவ்வாறு கடைப்பிடிக்கின்றனர்?
செபநாளாக
401.
"தாபோர்"-
மேரிமக்களின் செப இல்லம் எங்குள்ளது? கு
டப்பனக்குந்நு
ஜெனரலேற்றில்
402.
மதர் மேரியின்
விண்ணக வாழ்வின் முதலாம் ஆண்டில் சிறுவர் இல்லம் எங்கே துவங்கப்பட்டது?
களியலில்
403.
"மதர் மேரி
கல்லறய்க்கல் நினைவு பாலர் பள்ளி" பாலா மறைமாவட்டத்தில்
எங்குள்ளது?
மேவட
404.
"மதர் மேரி
மெம்மோரியல் பிளாக்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள
கட்டிடம் எங்குள்ளது?
கேரள மாநிலம்
கொல்லம் மாவட்டம் அஞ்சல் என்ற இடத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில்
405.
கேரள மாநிலம்
போங்ஙும்மூட்டில் அமைந்துள்ள லூர்து மாதா கெபி யாருடைய நினைவாக அமைக்கப்பட்டுள்ளது?
மதர் மேரி
406.
கொட்டாரக்கரையில்
மதர் மேரியை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்காக பாலர்
விடுதி எது?
சினேகாலயம்
407.
மேரிமக்கள்
கன்னியர் சபையினரின் துவக்க கால கட்டிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மார்த்தாண்டத்தின்
நற்செய்தி அறிவிப்பு மையம்
408.
ஸ்தாபக
சன்னிதி எங்குள்ளது?
மார்த்தாண்டம்
409.
ஸ்தாபக சன்னதி
என்றால் என்ன?
மேரி மக்களின்
தாய் இல்லத்தில் மதர் தங்கிய அறையும் மற்றும் இரண்டு அறைகளும் இணைத்து ஜனறலேற்று
பவனத்தின் பொறுப்பில் ஒரு செப ஆலயமாக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.
410.
ஸ்தாபக
சன்னிதியில் என்னென்ன வைக்கப்பட்டுள்ளன?
சபை நிறுவனர்
மோண்சிஞ்ஞோர் ஜோசப் குழிஞ்ஞாலில் அவர்களும் மதர் மேரியும் பயன்படுத்தியிருந்த
பொருட்களும் திருப்பலிக்கு பயன்படுத்தி வந்த புனித பொருட்களும் அங்கே
வைக்கப்பட்டுள்ளன.
411.
1976-லிருந்து 1985
ஜூலை 30 வரை மதர் வாழ்ந்து இறுதியாக தமது
ஆன்மாவை இறைவனிடம் ஒப்படைத்த அறை மதரின் நினைவுக்காக சிறந்த முறையில் இன்றும்
பாதுகாக்கப்பட்டு வருகின்ற அறை எங்குள்ளது?
போங்ஙும்மூடு
412.
மதர்மேரியின்
நினைவாக வெளிடப்பட்ட நூல்கள் எவை?
1. வலிய மதர் ஸம்ஸாரிக்குந்நு, 2. வலிய மதரின்
பொன்மொழிகள், 3. ஆண்டு தோறும் வெளியிடப்படும் நினைவு
மலர்கள், 4. மலையாளம், தமிழ், ஆங்கிலம், பஞ்சாபி மொழிகளில் வெளியிட்டுள்ள
"மதர் மேரி கல்லறய்க்கல் டி.எம்." என்ற
வரலாற்று நூற்கள் 5.நூற்றாண்டு விழா மற்றும் விண்ணக வாழ்வின்
வெள்ளி விழா சிறப்பு மலர்கள்
Comments
Post a Comment