Posts

Showing posts from August, 2018

விவிலியத்தில் 25

Image
விவிலியத்தில் 25       25- ாம் ஆண்டில் நம்பிக்கையோடு செபித்த ஆபிரகாமுக்கு மகன் ஈசாக் பிறப்பான் என அறிவிக்கப்பட்டது.       புனித அன்னா கத்ரின் கருத்தின் படி இயேசு விண்ணேற்றமடைந்த 25- ாம் ஆண்டில் லூக்கா நற்செய்தி எழுதப்பட்டது.       25- ம் வயதில் திருத்தூதர் யோவான் அப்போஸ்தலராக்கப்பட்டார்.   25- ம் வயதில் யூதாசு இஸ்காரியோத்து இயேசுவின் சீடராக்கப்பட்டார்.       25 வருடங்களுக்கு ஒரு முறை பொன் வாயில் திருத்தந்தையால் திறக்கப்படுகிறது.       ஒவ்வொரு 25 வருடமும் புனித ஆண்டாக திருச்சபை அறிவித்து வருகிறது.       சூரியன் ஒரு முறை தானாக சுழல ஏறக்குறைய 25 நாட்கள் ஆகின்றன.       25 என்ற எண் விவிலியத்தில் 31 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.   25 முறை 600, 12000 என்ற எண்கள் விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.       25 முறை உண்மை என்ற சொல் புனித யோவான் நற்செய...

ஜெர்மனியில் கிறிஸ்தவம்

ஜெர்மனியில் கிறிஸ்தவம் ஜெர்மனி ஒரு கிறிஸ்தவ நாடு ஆகும். ஏறக்குறைய அறுபது சதவீதம் மக்கள் கிறிஸ்தவர்களாகவே உள்ளனர். மதச்சுதந்திர நாடு எனப்படுவதால் மற்று மதத்தினரும் இறைவிசுவாசம் இல்லாதவர்களும் இங்கே அதிகமாக வாழ்கின்றனர். இலங்கை நாட்டிலிருந்து அகதிகளாக வந்த மக்கள் பலர் இந்து மத விசுவாசத்தையும் கடைபிடித்து வருகின்றனர். இந்நாட்டின் கலாச்சாரத்திலும் ,   விழாக்களிலும் பழக்கவழக்கங்களிலும் கிறிஸ்தவம் அடிப்படைக் காரணியாகவே உள்ளது. ஒவ்வொரு ஊருக்கும் மத்தியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று மக்களின் கூட்டமைப்புக்கு அடையாளமாக அமைந்திருக்கும். கத்தோலிக்கத் திருச்சபையினர் 28 சதவீதம் மக்களாவர். பிரிவினை சபையினரும் ஏறக்குறைய இந்த எண்ணிக்கையில் உள்ளனர். கத்தோலிக்கத் திருச்சபையில் 27 மறைமாவட்டங்கள் உள்ளன. இவற்றுள் 10191 பங்குகள் அடங்கும்.   மொத்த கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 2017-ஆம் ஆண்டு கணக்கின்படி 23311321 ஆகும்.   65 ஆயர்களும் 11444 மறை மாவட்ட குருக்களும் , 2116 துறவறக் குருக்களும் 3308 திருத்தொண்டர்களும் இந்நாட்டு கத்தோலிக்க திருச்சபையை வலுப்படுத்தி வருகின்றனர். கோவில் வரி அரசுக்கு நே...

ஜெர்மனி நாட்டில் மலங்கரை கத்தோலிக்க மக்கள்

ஜெர்மனி நாட்டில் மலங்கரை மக்கள் பத்து மறை மாவட்டங்களால் பாரெங்கும் பரந்து விரிந்து நிற்கும் மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை மக்கள் விசுவாச வாழ்விலும் , ஆன்மீக வாழ்விலும் சிறந்து விளங்குகின்றனர் என்பது பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய முறையில் எல்வாறு மலங்கரை கத்தோலிக்க மக்கள் நம் நாட்டு கலாச்சாரத்தை விட்டு வெளிநாட்டு மக்களிடையே அந்நிய கலாச்சாரத்திற்கு மத்தியில் நம் விசுவாச ஆராதனை வாழ்வை வாழ்ந்து காட்டுகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவ்வாறு பிற மொழி கலாச்சாரம் கொண்ட ஜெர்மனி நாட்டில் நமது மலங்கரை கத்தோலிக்க மக்கள் எவ்வாறு விசுவாச வாழ்வை வாழ்ந்து காட்டுகிறார்கள் என்பதையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் சற்று உங்கள் முன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.          1960-ஆம் ஆண்டில் உலக நற்கருணை தினம் ஜெர்மனி நாட்டில் வைத்து கொண்டாடப்பட்ட போது குரு மாணவர்களை பயிற்சி பெற அனுப்பவும் , பல ஜெர்மானிய ஆயர்களோடு உறவு மேம்படவும் நமது மலங்கரை கத்தோலிக்க ஆயர்களுக்கு   வாய்ப்புகள் பெற்றுக்கொண்டனர். இவ்வாறு திருவனந்தபுரம் ...