விவிலியத்தில் 25


விவிலியத்தில் 25

*      25-ாம் ஆண்டில் நம்பிக்கையோடு செபித்த ஆபிரகாமுக்கு மகன் ஈசாக் பிறப்பான் என அறிவிக்கப்பட்டது.

*      புனித அன்னா கத்ரின் கருத்தின் படி இயேசு விண்ணேற்றமடைந்த 25-ாம் ஆண்டில் லூக்கா நற்செய்தி எழுதப்பட்டது.

*      25-ம் வயதில் திருத்தூதர் யோவான் அப்போஸ்தலராக்கப்பட்டார்.

*  25-ம் வயதில் யூதாசு இஸ்காரியோத்து இயேசுவின் சீடராக்கப்பட்டார்.

*      25 வருடங்களுக்கு ஒரு முறை பொன் வாயில் திருத்தந்தையால் திறக்கப்படுகிறது.

*      ஒவ்வொரு 25 வருடமும் புனித ஆண்டாக திருச்சபை அறிவித்து வருகிறது.

*      சூரியன் ஒரு முறை தானாக சுழல ஏறக்குறைய 25 நாட்கள் ஆகின்றன.

*      25 என்ற எண் விவிலியத்தில் 31 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.

* 25 முறை 600, 12000 என்ற எண்கள் விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

*      25 முறை உண்மை என்ற சொல் புனித யோவான் நற்செய்தியில் இயேசுவால் குறிப்பிடப்பட்டுள்ளது.

*     25 முறை நற்செய்தி நூல்களில் தூய ஆவியார் குறிப்பிடப்படுகிறார்.

* பர்ணபாவின் நற்செய்தி இயேசுவின் 25 அற்புதங்களை குறிப்பிடுகிறது.

*   25 என்ற எண் விவிலியத்தில் அருளின் அருள் என்பதைக் குறிப்பிடுகிறது.

*      25-ஆம் வயதில் லேவிலர்கள் பலி ஒப்புக் கொடுக்கத் தொடங்கினர்.

*      25 ஆண்டுகள் யூதாவின் நல்லரசர்  ஏசோபாத் ஆட்சி புரிந்தார்.

*      சிறிய நூல்களான பிலமோன், யூதா நூல்களுள் 25 வாக்கியங்கள் உள்ளன.

தொகுத்தவர் மரிய ஜாண்

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை