I . ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் பற்றிய வினா விடைகள் (அதிகாரங்கள் 1-10 வரை) தயாரிப்பு Fr.மரிய ஜாண்

 

1. கருவிலே திருவானார்

1. தென் திருவிதாங்கூரில் காஞ்சிரங்குளத்தில் சாணி என்ற பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய விவசாயியும் பிரிவினைச் சபை உறுப்பினராகவும் இருந்த ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேமின் மூதாதையர் குடும்பத்து உறுப்பினர் யார்? மோசை

2.   ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேமின் மூதாதையர் குடும்பத்து உறுப்பினரான மோசையின்  வாத்தியார் என மக்கள் அழைத்த மூத்த மகன் யார்? இயேசுவடியான்

3.   அறப்பணியாம் ஆசிரியப்பணி செய்து வந்த இயேசுவடியான் ஈடுபாடு கொண்டிருந்த துறைகள் எவை? மருத்துவம் (வைத்தியர்), விவசாயம்

4.   இயேசுவடியானுக்கு பிள்ளைகள் எத்தனை? இரண்டு ஆண் மற்றும் நான்கு பெண்

5.   இயேசுவடியானின் ஐந்தாவது இளைய மகனின் பெயர் என்ன? திரு. ஜஸ்டஸ்

6.   திரு. ஜஸ்டஸ் குழந்தை பருவத்திலேயே கற்றுக்கொண்ட கல்வி எது? வைத்தியக் கல்வி

7.   ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே முறையான கல்வி கற்றிருந்த திரு. ஜஸ்டஸ் எக்கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்? வைத்தியக் கல்வி

8.   இளமைப்பருவத்தை அடைந்த திரு. ஜஸ்டஸ் காவல் துறையில் சேர விரும்பிய போது அவரது தாத்தா கூறியது என்ன? 'பிணம் காக்கும் வேலை' உனக்கு வேண்டாம்

9.   திரு. ஜஸ்டஸ் அமரவிளையில் புல்லமூலக் குடும்பத்தில் உள்ள யாரை மணந்தார்? விக்டோரியா

10.  பெற்றோரை இளமைப் பருவத்திலேயே இழந்த விக்டோரியா மலையாளத்தை பயிற்று மொழியாகக் கொண்டு எந்த வகுப்பு வரை பயின்றவர்? ஏழாம் வகுப்பு

11.  திரு. ஜஸ்டஸ் திருமதி. விக்டோரியா தம்பதியருக்கு காஞ்சிரங்குளத்தில் சாணி குடும்ப வீட்டில் பிறந்த மகன் பெயர் என்ன? இலாறன்ஸ்

12.  ஆயர்  இலாறன்ஸ் மார் எஃப்ரேமின் இயற்பெயர் என்ன? இலாறன்ஸ்

13.  ஆயர்  இலாறன்ஸ் மார் எஃப்ரேமின் பிறந்த நாள் என்ன? 15.05.1928

14.  இலாறன்ஸ்க்கு திருமுழுக்கு வழங்கிய சாணி C.S.I. போதகர் யார்? திரு. தேவதாஸ்

15.  இலாறன்ஸ் சிறுவயதில் குச்சம்காயை நூலில் கட்டி எதனை செய்து தூபம் வீசி விளையாடி வந்தார்?  தூப கலசம்

16. இலைதழைகளை அரிந்து சேர்த்து, வேகவைத்து கசாயம் தயாரித்து விளையாடிய இலாறன்ஸின் தம்பி யார்? சாம்

17.  ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து கல்வி கற்ற முதல் நாள் பள்ளிக்கூடம் விட்டு வீடு வந்து சேர்ந்த இலாறன்ஸ் பாடப்புத்தகத்தை எப்படி விளையாடியதாக கூறினார்? படகு செய்து

18.  இலாறன்ஸ் தனது தந்தையால் ஒரே ஒரு முறை எதற்காக தண்டிக்கப்பட்டார்? பிள்ளைகள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டதை பார்த்துக் கொண்டு நின்றதற்காக

19. திரு ஜஸ்டஸ் தனது ஒன்பதாவது வயதில் யாருடைய தூண்டுதலால் ''மலங்கரை கத்தோலிக்க சபையில் இணைந்தார்? இளைய சகோதரி அமிநாத்தின்

20.  திரு. ஜஸ்டஸ் மலங்கரை கத்தோலிக்க திருச்சபையில் இணந்த பின்னர் செய்த மறைபணி என்ன? மறைக் கல்வி பயிற்றுவித்தல்

21.  நல்ல லாபம் கிடைத்தபோதும், திரு. ஜஸ்டஸ் முழுநேர மறைபரப்புப் பணிக்காக எதனை கைவிட்டார்? தேனீர் கடை

22.  திரு. ஜஸ்டஸ் இலாறன்சையும், தம்பி சாமையும் பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகை அவர்களிடம் அழைத்துச் சென்ற போது  பேராயர் கூறியது என்ன? ஒரு மகனை எனக்கு கொடுத்து விட்டுச் செல்லுங்கள்

23.  பெற்றோரின் அனுமதியுடன் இலாறன்ஸ் பட்டத்தில் எப்போது கல்வி கற்க துவங்கினார்? 1938 ஜூன் மாதம்

24.  பட்டத்தில் ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் எந்த வகுப்பு முதல் கல்வி கற்க துவங்கினார்? மூன்றாம் வகுப்பு

25.  ஆயர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் இலாறன்ஸ் வீட்டு நினைவை மறந்திட  எதனை கூட்டில் அடைத்து விளையாடியிருந்தார்? அணில்

26.  பேராயர் மார் இவானியோஸ் தாத்தாவிற்கு உடல் நலக்குறைவு எனக்கூறி இலாறன்சை பார்த்து வரும்படி அனுப்பிய போது யாருடைய இறப்பு  செய்தியை அறிந்து வருந்தினார்? தம்பி சாம்

27.  திரு. ஜஸ்டஸ் தம் ஒரே மகன் இலாறன்சை திரும்பி வீட்டிற்கு வர அழைத்த போது அவருக்கு வயது என்ன? பதினொன்று.

28.  இலாறன்ஸ் எதனை தன் தந்தையிடம் எடுத்துரைத்து வீட்டிற்குப் போக மறுத்தார்? மேலுலக வாழ்வின் முடிவில்லா தன்மையை

29.  குழந்தை பருவத்திலேயே தெய்வீக உண்மைகளில் நிலைத்தவனாக வளர்ந்த இலாறன்ஸ்க்கு பொருந்தும் பழமொழி என்ன? விளையும் பயிர் முளையிலேயே தெரியும்''

30.  S.S.L.C. படித்து முடித்தபோது பேராயர் மார் இவானியோஸ் இலாறன்ஸிடம் என்ன கூறி வீட்டுக்கு அனுப்ப முயற்சித்தார்? ''உன் பெற்றோருக்கு வேறு யாரும் இல்லை ஆகையால் நீ வீட்டிற்கு போ என்றார்''.

31.  பேராயர் மார் இவானியோஸ் இலாறன்ஸை வீட்டுக்கு அனுப்ப முயற்சித்த போது எத்துறவற மடத்தில் சேர்ந்து ஒரு சகோதரனாக பணியாற்ற விரும்புகிறேன்'' என்ற விருப்பத்தை பேராயரிடம் தெரிவித்தான்? பிரான்சிஸ்கன் துறவற மடத்தில்

32.  பெற்றோருக்கு ஒரே மகனாக இருந்த இலாறன்ஸ் எப்போது பட்டம், புனித அலோசியஸ் இளங்குருமடத்தில் சேர்ந்தார்? 1944-ம் ஆண்டு ஜூன் மாதம்

33.  தனிமையில் வாழ்ந்த இலாறன்ஸின் பெற்றோருக்கு இருபது ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்த ஆண் மகன் யார்? ஜோசப்

34.  சகோதரர் இலாறன்ஸ் இளங்குருமடப்படிப்பை முடித்து எந்த குருத்துவக் கல்லூரியில் சேர்ந்து குருத்துவப் பயிற்சியைத் தொடர்ந்தார்? மங்களூர் புனித சூசையப்பர் குருத்துவக் கல்லூரி

35.  மங்கலாபுரம் குரு மடத்தில் சகோதரர் கொண்டிருந்த நற்குணங்கள் எவை? கலகலப்பாக பேசி அனைவரையும் மகிழ்விப்பவர், நல்ல அறிவாளி, சிறந்த பாடகர், வகுப்பில் முதல் மாணவன்

36.  சகோதரர் இலாறன்ஸ் விளக்க ஆய்வேடு (Dissertation) எழுதி சிறந்த கேள்விக்கான விருதை எங்கே வைத்து பெற்றுக் கொண்டார்? மங்கலாபுரம் குரு மடத்தில்

37.  சகோ. இலாறன்ஸின் ஆசிரியப் பற்று பற்றிய அனுபவத்தை கூறியவர் யார்? திரு. தரகன்

38.  திரு. தரகன் சார், மாணவன் இலாறன்சைப் பற்றி கூறியது என்ன? “நல்ல பக்குவமான பண்பு மற்றும் நல்ல அறிவுடையவராக இருந்தார்''

39.  மங்களூர் குருமடத்தில் பயின்ற காலத்தில் சகோ. இலாறன்சுடன் ஒரு தொழுநோய் மையத்தை சந்திக்கச் சென்ற அவரது நண்பர் யார்? தோமஸ் எருமேலி

40.  தந்தை இலாறன்ஸ் பிரப்பன்கோடு தொழுநோய் மருத்துவமனை இயக்குநராக இருந்த போது தொழுநோயுற்று மருத்துவம் பெற்று குணமடைந்து வீடு திரும்பிய அவரது பழைய நண்பர் யார்? தோமஸ்

41.  மங்கலாபுரம் குருமடத்தில் சகோ. இலாறன்ஸ் பயின்ற போது அம்மக்கள் பேசும் எந்த மொழியைப் பயின்றார்? கொங்கினி

42.  வேளாவேளைக்கு மருந்தும், உணவும் கொடுத்து ஒரு தாயினும் மேலாக கவனித்து வேண்டியன செய்ததாக தந்தை இலாறன்ஸோடுள்ள அனுபவத்தைக் கூறியவர் யார்? தந்தை சாமுவேல் தைக்கூட்டத்தில்

43.  பிரப்பன்கோட்டில் ஒரு மழலையர் பள்ளியை அதிகாரபூர்வமாக திறக்கச் செய்து அப்பள்ளிக்கூட பதிவேட்டில் கையொப்பமிட வைத்து இளம் குருவை பெருமைப்படுத்தி ஊக்குவித்த மூத்த குருவாகிய தந்தை இலாறன்ஸோடுள்ள அனுபவத்தைக் கூறியவர் யார்? தந்தை சாமுவேல் தைக்கூட்டத்தில்

44.  குருத்துவப் படிப்பை முடித்த சகோ. இலாறன்ஸ் குருப்பட்டம் பெற்ற ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்பு நாள் எது? 14.5.1953

45.  திருத்தொண்டர் இலாறன்ஸுக்கு குருப்பட்டம் வழங்கியவர் யார்? பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகை

46.  புதுக்குரு இலாறன்ஸ் எங்கே வைத்து முதல் திருப்பலியை நிறைவேற்றினார்? பட்டம் புனித அலோசியஸ் இளங்குருமடத்தில்


                2.தலைக் கிறிஸ்மஸ்

1.      தந்தை இலாறன்ஸ் குருப்பட்டம் பெற்றவுடன் யாருடைய செயலராக நியமிக்கப்பட்டார்? பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகையின்

2.      பேராயர் மார் இவானியோஸ் நோய்வாய்ப்பட்டிருந்த காலம் எது? 1953ம் ஆண்டு

3.      பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகை பதலியேற்ற முதல் காலத்தில் முடங்கிக் கிடந்த பேராயர் அலுவலக வேலைகளை துரிதப்படுத்தியவர் யார்? தந்தை இலாறன்ஸ்

4.       கல்லூரிப் படிப்பிற்காக குமரி மாவட்டம் மற்றும் தொலை இடங்களிலிருந்து வரும் ஏழை மாணவர்களுக்கு பேராயரை சந்திக்கவும்  தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் பேராயர் அலுவலகத்தில் செய்தவர் யார்? தந்தை இலாறன்ஸ்

5.      மாலை 6 மணிக்குப்பின் ஒரு லேடீஸ் சைக்கிளில் பேராயர் இல்லப் பணிகளை முடித்துவிட்டு மார் இவானியோஸ் கல்லூரிக்குச் சென்று வெளியூரிலிருந்து வரும் சாதாரண மாணவர்களுக்கு தங்கும் இடமும் உணவும் வழங்க பரிந்து பேசி உதவி செய்தவர் யார்? தந்தை இலாறன்ஸ்

6.      தந்தை இலாறன்ஸ் பேராயரின் செயலராக நியமிக்கப்பட்டதில் எதிர்க் கருத்து கொண்டிருந்தவர்கள் யாவர்? மூத்த குருக்கள்

7.      பேராயரின் செயலராக தந்தை இலாறன்ஸ் இப்பொறுப்புக்கு, தான் உகந்தவர் என்பதை எவ்வாறு நிரூபித்துக் காட்டினார்? பல மொழிப் புலமை, அழகான கையெழுத்து, சிறு பணிகளையும் செம்மையாக செய்யும் நல்ல மனம், பேராயரின் கருத்துக்களோடு இணைந்து செயல்பட்டது

8.      திருவனந்தபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை வேளைகளில் சைக்கிள் மிதித்து யாருடைய கடின உழைப்பின் பயனாக தோன்றி மிஷன்கள் உருவாயின? தந்தை இலாறன்ஸ்

9.      குருப்பட்டம் பெற்றபின் தந்தை இலாறன்ஸ் தனது முதல் கிறிஸ்துமஸை எந்தெந்த மிஷன் தளங்களில் கொண்டாடினார்? போத்தன்கோடு, கழக்கூட்டம்

10.   தந்தை இலாறன்சுக்கு உதவியாக மிஷன் தளங்களில் சென்றிருந்த போராயரின் தனி உதவியாளர் யார்? திரு. M.J. தோமஸ்

11.   கழக்கூட்டம் ஆலய இளைஞர்களின் நிலை பற்றி  வருத்தத்துடன் தந்தை இலாறன்சிடம் எடுத்தியம்பியவர் யார்? திரு. M.J. தோமஸ்

12.   தந்தை இலாறன்ஸ் குருப்பட்டம் பெற்று ஒன்றரை ஆண்டு ஆனவுடன் எதன் அதிபராக நியமிக்கப்பட்டார்? பட்டம் இளங்குருமடம்

13.   மலங்கரை முறைக்கு அப்பாற்பட்டு இலத்தீன் முறையிலிருந்து எடுக்கப்பட்ட பொருத்தமற்ற சடங்கு முறைகளை மாற்ற வேண்டும் என்று உரோமிலிருந்து கட்டளை வந்ததைத் தொடர்ந்து இதனை எந்த மறைமாவட்ட ஆயர் உறுதியாக ஆதரித்தார்? திருவல்லா ஆயர்

14.   இலத்தீன் பக்தி முயற்சிகளை, ஏற்றுக்கொண்டதில் நடுநிலையாளராக உறுதியாக நின்ற பேராயர் கிரிகோரியோஸ்க்கு உறுதுணையாயிருந்தவர் யார்? தந்தை இலாறன்ஸ்

15.   ''எங்கள் அதிபராயிருந்த தந்தை இலாறன்ஸ் ஓய்வு நாட்களிலும், மாலை வேளைகளிலும், மறைபரப்பு தளங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து தம் அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொள்வார். இதைக்கேட்டுக் கேட்டு நாங்களும் மிஷன் பணிகளில் ஆர்வம் உடையவரானோம்'' என்றவர் யார்? தந்தை மாத்யூ கடகம்பள்ளில்

16.   தந்தை இலாறன்ஸ் இளம் குருமட அதிபராயிருந்த காலத்தில் குருமாணவர்களுக்கென உருவாக்கிய முக்கிய பொறுப்பு என்ன? இணைத்தலைவர்

17.   தந்தை இலாறன்ஸ் இளம் குருமட அதிபராயிருந்த காலத்தில் இணைத்தலைவர் யார்? சகோதரர் ஜோஷ்வா பீடிகையில்

18.   தந்தை இலாறன்ஸ் குருமடத்திலிருந்து பணிகளுக்காக வெளியே செல்லும் போது தன் அறையின் சாவியை யாரிடம் ஒப்படைத்து செல்வது வழக்கம்? இணைத்தலைவர் சகோதரர் ஜோஸ்வாவிடம்

19.   திருட்டுத் தனமாக தனது அறையில் நுழைந்த சகோதரர் பற்றி தந்தை இலாறன்ஸ் கூறியது என்ன? '' பரவாயில்லை. சகோதரரின் டென்சன் எனக்கு நன்கு புரிகிறது.

20.   உபதேசியாராக வேடமிட்டு பிரசங்கத்தின் இறுதியில் "அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்'' என்று கூறியவர் யார்? சகோதரர் ஜோஷ்வா

21.   சகோதரர் ஜோஷ்வாவின் பலகுரல் நிகழ்ச்சிக்கும் அவரது 'புளூ' காய்ச்சலுக்கும் தந்தை இலாறன்சின் பதில் என்ன? 'உபதேசியார் சொன்னது போல தான் நடந்திருக்கிறது. கடுவாயை ஏறி கிடுவா பிடித்து விட்டதே!''

22.   இரவில் இருமல் ஏற்படுபவர்களுக்கு தந்தை இலாறன்சின் காலத்தில் குரு மாணவர்களுக்கு எந்த சிறப்பு உணவு வழங்கப்பட்டது? 'சூப்பு'

23.   ஆசிரியர் பணி செய்து கொண்டிருந்த ஒருவர் அதை விட்டு விட்டு குருமடத்தில் சேர்ந்தவரை தந்தை இலாறன்ஸ் எவ்வாறு அழைத்தார்? ''சார்''

24.   குருமாணவரான சாரை மறைந்திருந்து கத்தியைக் காட்டி அச்சுறுத்தி நகைச்சுவை  காட்டியவர் யார்? சகோதரர் ஜோஷ்வா

25.   இரசத்திற்குப் பதில் தேங்காய் எண்ணெய் வைத்து சகோதரர்களை ஏமாற்றி தந்தை லாரன்ஸ் சிரித்த நகழ்வை அரங்கேற்றியவர் யார்? சகோதரர் வாழப்பிள்ளேத்து

26.   யாரையோ குருமடத்திலிருந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப் போகிறார் என்று சகோதரர்கள் எவ்வாறு புரிந்து கொள்வர்? நீண்ட நேரம் ஆலயத்தில் செபித்துக் கொண்டிருந்தால். 


3.இளங்குருமட அதிபர்

1.   தந்தை லாரன்ஸ் குருமடத்தில் பயிற்றுவித்த மொழி எது? இலத்தீன்

2.   இளங்குருமடத்தில் உல்லாச வேளையில் தந்தை லாரன்ஸ் எம்மொழியில் பேச உதவியாயிருப்பார்? இலத்தீன் மொழி

3.   இளங்குருமடத்தில் கேள்விகள் கேட்பதற்கு நேர்முகத் தேர்வில் கேள்விகள் கேட்க அதிபரோடு உடனிருப்பலர் யார்? பேராயர் மார் கிரிகோரியோஸ் ஆண்டகை

4.   கால் முறிந்த மூன்று மாதங்கள் சகோ. P.G. தோமஸ் பணிக்கருக்கு வகுப்பறையின் அருகிலுள்ள அறையில் தங்கி படிக்க உதவிய அதிபர் யார்? தந்தை இலாறன்ஸ்

5.   இளங்குருமட வாழ்வில் சகோ. P.G. தோமஸ் பணிக்கரை அதிபரின் அனுமதியின்றி விருந்தினரை சந்தித்ததால் 15 நிமிடங்கள் முழந்தாட்பணிந்து செபம் செய்யுங்கள்'' என்றவர் யார் தந்தை இலாறன்ஸ்

6.   திருவனந்தபுரம் நகரத்தின் வியாபார மையமான சாலை என்ற இடத்தில் மாடன் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வந்த கிறிஸ்தவர் யார்? தேவசியா

7.   தேவசியா கட்டிய கிறிஸ்தவ ஆலயத்தின் உபதேசியாரான சிறுவன் யார்? சார்லி (அப்பு)

8.   உடல் நலக்குறைவால் T.B. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சார்லி (அப்பு)க்கு பாவசங்கீர்த்தனம், நோயில் பூசுதல் முதலிய அருளடையாளங்களை வழங்கியவர்கள் யாவர்? தந்தை லாரன்சும், தந்தை மத்தாயியும்

9.   சாலை ஆலயத்தில் தந்தை லாரன்ஸ் முதலில் எத்தனை பேருக்கு திருமுழுக்கு வழங்கினார்? 360

10.  சாலையில் இறச்சி வெட்டும் கத்தியால் தேவசியாவை முஸ்லிம்கள் கொல்ல முயன்ற போது அவரை காப்பாற்றியவர் யார்? தந்தை லாரன்ஸ்

11.  தந்தை சாலை ஆலயத்தில் தனிப்பீடத்தில் நிறுவிய சொரூபம் எது? பாத்திமா மாதா

12.  மூன்றாந்தர குருக்களை உருவாக்க விரும்பாமல் எல்லாத்துறைகளிலும் குருமாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் யார் தந்தை லாரன்ஸ்

13.  அறிவுரைகளை அவ்வப்போது குருமாணவருக்கு புரியும் வண்ணம் மீண்தும் எடுத்துக் கூறிக்கொண்டே இருந்தவர் யார்? தந்தை லாரன்ஸ்.

14.  திருச்சபை பணிகள் வெற்றி பெற வேண்டுமென்றால், திருச்சபையின் செயல்கள் சிறப்பாக அமைய வேண்டுமென்றால் திருச்சபைத் தலைமையுடன் முழுமையான கீழ்ப்படிதல் தேவை. நிபந்தனைகள் வைத்து கீழ்ப்படிந்து பயனில்லை. என்றவர் யார்? தந்தை லாரன்ஸ்

15.  அவர் போதித்த ஓழுங்கும் கீழ்ப்படிதலும் தம் வாழ்வில் முழுமையாக வாழ்ந்து காட்டியிருந்தார் என்பதை எவருமே மறுக்கமாட்டார்கள்.

16.  முக்கம்பாலையில் பரந்த தோட்டத்தில் பெரிய தீ பந்தம் கொளுத்தி உயர்த்தி பிடித்து வழிதவறிய சகோதரரை திரும்பி வரச் செய்தவர் யார்? தந்தை லாரன்ஸ்

17.  தனது தலையணையை சகோ. டோமினிக் அவர்களுக்கு வழங்கியவர் யார்? தந்தை லாரன்ஸ்

18.  ஒரு சகோதரன் உணவு நன்றாக சாப்பிடவில்லை என்றால் அருகிலிருக்கும் சகோதரன் அதனை அதிபரிடம் சொல்ல வேண்டும் என்ற வழிமுறையை கட்டாயமாக்கியவர் யார்? தந்தை லாரன்ஸ்

19.  குருமட மாணவர்களுக்கு புதிய மொழியை கற்றுக் கொடுக்கும் போது தந்தை லாரன்ஸ் கொண்டிருந்த தாரக மந்திரம் எது? வாசி, எழுது, பேசு (Read, Write and Speak)

20.  இளங்குருமடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு நாள் அதிபராக இருந்த சகோதரன் ஜோஸ் கடகம்பள்ளியை இறையழைத்தலில் உறுதிப்படுத்தியவர் யார்? தந்தை லாரன்ஸ்

21.  1954 -ஆம் ஆண்டு காலரா தடுப்பூசி போட்ட சகோதரர்களின் கடுமையான குளிரின் போது 32 குருமாணவர்களை தம் சொந்த பிள்ளைகள் எனக் கருதி உடனிருந்து கவனித்தவர் யார்? தந்தை லாரன்ஸ்

22.  1954 தூய ஞானப்பிரகாசியார் குருமடத் திருநாளன்று கூழ் (கஞ்சி) வழங்கப்பட்டதால் பேராயரிடமிருந்து ரூபாய் வாங்கி ஏத்தன் பழம், பிஸ்கட் முதலியவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வதை பார்த்து ஆனந்தம் அடைந்தவர் யார்? தந்தை லாரன்ஸ்

23.  12 மணி நேரம் நற்கருணை ஆராதனை நடத்தும் பழக்கத்தை குருமடத்தில் ஏற்படுத்தியவர் யார்? தந்தை லாரன்ஸ்

24.  கருங்குயில் என அழைத்து கிண்டல் செய்தவரிடம் நிறத்தின் அடிப்படையில் ஏளனம் செய்யும்போது படைத்த இறைவனையே ஏளனம் செய்கிறோம். நிறத்தின் அடிப்படையில் எவரையும் ஏளனம் செய்யக்கூடாது'. என்றவர் யார்? தந்தை லாரன்ஸ்

25.  ஒரு குருமட அதிபர் என்ற முறையில் இறையழைத்தலைப் பற்றிய தீர்மானங்கள் எடுக்குமுன் நீண்ட நேரம் இரவில் நற்கருணைநாதர் முன் செபிப்பதை வழக்கமாக கொண்டவர் யார்? தந்தை லாரன்ஸ்

26.  பேராயர் இல்லத்தில் தாமாகவே Negative development ற்காக Dark Room மும் பிற ஏற்பாடுகளும் செய்திருந்தவர் யார்? தந்தை லாரன்ஸ்

27.  "1955 ஆம் ஆண்டு தந்தை லாரன்ஸ் இங்கு குருமட அதிபராக இருந்தபோது ஐந்து வகுப்புகள் நடத்திவிட்டு மறைபரப்பு தளங்களுக்கு செல்வது வழக்கம். சில நாட்கள் நற்செய்தி பணி முடிந்து மிகவும் தாமதித்து உணவின்றி படுத்து தூங்குவார். என்றவர் யார்? தந்தை சாமுவேல் மண்ணில்

28.  பாளையம் பேராலயத்தின் முன் கத்தோலிக்கர்களுக்கு எதிராக போதித்த பெந்திக்கோஸ்தே சபை மூதாட்டியை கத்தோலிக்க திருச்சபைக்கு கொண்டு வந்தவர் யார்? தந்தை லாரன்ஸ்

29.  மலங்கரை கத்தோலிக்க திருப்பலியின் பாடல்களுக்கு முதன் முதலில் Music notations கொடுத்தவர் யார்? தந்தை லாரன்ஸ்

30.  1972 முதல் 1980 வரை பக்தி பாடல்கள் அடங்கிய Long Play Records உயர் மறைமாவட்டத்திலிருந்து வெளியிட ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கியவர் யார்? தந்தை லாரன்ஸ்

31.  புதிதாக கட்டியெழுப்பப்பட்ட பட்டம் பேராலயத்தின் அர்ச்சிப்பு விழா 1965 பெப்ரவரி திங்கள் 22-ஆம் நாள் அன்று திருச்சடங்குகளுக்கும் திருப்பலிக்கும் பாடல் குழுவை தயாரித்து தலைமை வகித்தவர் யார்? தந்தை லாரன்ஸ்

32.  ''நாம் எங்கு சென்றாலும் அவர்களிடையே, அவர்களில் ஒருவராக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அங்கு மாற்று சிந்தனைகளுக்கொன்றும் இடமில்லை'' என்று அருட்சகோதரர்களுக்கு அறிவுறுத்தியவர் யார்? தந்தை லாரன்ஸ்

33.  ''ஒரு தாய் தன் பிள்ளைகளை படுக்க வைத்து, தூங்கச் செய்து கொண்டு நான் இதோ வருகிறேன் என்று கூறிச் செல்வது போல நம் தந்தை உரோமுக்குப் போகிறார். போய்த் திரும்பி வரும்போது இன்னும் அதிகமான அனுபவங்கள் நமக்கு பரிசாக வழங்குவார். எல்லாம் நன்மைக்கே. அதனால் அவரை வாழ்த்துகிறேன்'' என்றவர்கள் யார்? கரமனை மறைபரப்பு தள இறைமக்கள்

34.  தந்தை லாரன்ஸ் இறையழைத்தலைப் பெற்ற சகோதர சகோதரிகளை எப்போதும் எவ்வாறு அழைக்க கட்டாயப்படுத்தினார்? 'ஃபாதர்' 'பிரதர்' 'சிஸ்டர்'

4. தொழு நோயாளிகளின் தந்தை

1.   திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்தில் பிரப்பன்கோட்டில் தொழுநோய் மருத்துவமனை எப்போது? 1963

2.   ஆதரவற்ற அனாதை தொழுநோயாளிகளுக்கு ஆறுதல் அளிக்க விரும்பிய பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகையின் மனநிலையை நன்கு புரிந்து செயல்படுத்துவதற்காக பேராயரால் நியமிக்கப்பட்டவர் யார்? தந்தை இலாரன்ஸ்.

3.   பிரப்பன் கோடு மருத்துவமனையின் தொடக்க கால வரலாற்றில் யாருடைய கொள்கைப்பிடிப்பும், இரக்கமும், அன்பும் நன்கு புலப்படும்? தந்தை இலாரன்ஸின்

4.   தந்தை பெனடிக்ட் ஆயராவதற்கு முன், கல்லூரி முதல்வராகவும், விடுதி வார்டனாகவும் இருந்த போது எக்கோயிலுக்கு ஞாயிறுதோறும் சைக்கிளில் பிரப்பன்கோடு வழியாகச் செல்வார்? வெஞ்ஞாறமூட்டிற்கு சமீபமுள்ள வள்ளித்திருப்பன்காடு

5.   மாணிக்கக்குன்றின் காட்சியைக் கண்டு ஒரு நிறுவனம் நமக்கு இங்கு இருக்காதா என்று ஆசைப்பட்டவர் யார்? பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ்

6.   பிரப்பன்கோட்டிலும், அதை சுற்றியுள்ள ஊர்களாகிய குப்பம் வெஞ்ஞாரமூடு, செம்பூர், தேம்பாமூடு, கழக்கூட்டம் போன்ற இடங்களிலெல்லாம் எந்த நோயால பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளம் இருந்தனர்? தொழுநோயால்

7.   முற்கால C.S.I. தொழுநோய் மருத்துவ மையங்களை நடத்தி வந்தவர்கள் யாவர்? நாகர்கோயிலைச் சார்ந்த டாக்டர் கிறிஸ்துதாஸ், இங்கிலாந்தைச் சார்ந்த ஒரு பெண் டாக்டர்

8.   தந்தை பெனடிக்ட் எப்போது பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் என்ற பெயரில் ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டார்? 1953ல்

9.   C.S.I. சபையினர் தம் பணியை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் தொழுநோய் மருத்துவ மையங்களை பேராயர் யாரிடம் ஒப்படைத்தார்? தந்தை இலாரன்ஸ்

10.  பிரப்பன் கோட்டிலுள்ள மருத்துவமனை கட்டிடம் கட்ட அறிவுரை வழங்கிய மருத்துவக் கல்லூரி பேராசிரியர் யார்? டாக்டர் சத்தியதாஸ்

11.  தொடக்க காலத்தில் பிரப்பன்கோட்டிலுள்ள தொழுநோய் பராமரிப்பு பயிற்சிக்காக அழைத்து வரப்பட்ட மூன்று பிரெஞ்சு நாட்டு சகோதரிகள் எந்த துறவு சபையைச் சார்ந்தவர்கள்? லிற்றில் சிஸ்டேள்ஸ் ஆப் சாள்ஸ் டிபெர்க்கோ சபை

12.  1963-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் நாள் லூர்து அன்னையின் விழா நாளிலே திருப்பலியை நிறைவேற்றி பிரப்பன்கோட்டில் தம் பணிகளை ஆரம்பித்து வைத்தவர் யார்? பேராயர் மார் கிரிகோரியோஸ் ஆண்டகை

13.  பேராயரின் கட்டளைப்படி 14.    பிரப்பன்கோடு மருத்துவமனையின் தொடக்க காலங்களில் உதவிய பெதனி துறவற சபையைச் சார்ந்த சகோதரிகள் யாவர்? சிஸ்டர் சோபியா, சிஸ்டர். றீத்தா, சிஸ்டர் மார்க்கிரட்

14.  பிரப்பன்கோடு மருத்துவமனையின் முதல் பொறுப்பை ஏற்ற மாவேலிக்கரை கயிறு தொழிற்சாலையின் தலைவர் திரு. செபஸ்தியானின் மனைவி யார்? டாக்டர் அகிலா

15.  பிரப்பன்கோடு மருத்துவமனையின் தொடக்க காலங்களில் நோயாளிகளுக்கும், பொது மக்களுக்கும் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு வழங்கிய மெடிக்கல் கல்லூரியிலுள்ள பெயர் பெற்ற மருத்துவர்கள் யாவர்? டாக்டர் சத்தியதாஸ், டாக்டர் ஓமன மாத்யூ (S.A.T. ஆய்வாளர்கள்), டாக்டர் ஜோசப், டாக்டர் வர்க்கீஸ் சாக்கோ, டாக்டர் றோஸ் வர்க்கீஸ்

16.  ''பிரப்பன்கோடு மருத்துவமனையில் தொழுநோயாளிகளுக்கு மட்டுமல்ல எல்லா நோயாளிகளுக்கும் மருந்து அளிப்போம். அத்துடன் தொழுநோயாளிகட்கும் சிகிச்சை அளிப்போம். நாங்கள் வெளிநாடுகளிலிருந்து தொழுநோயாளிகளைக் கொண்டுவந்து சிகிச்சை அளிக்கவில்லை. மாறாக நம் நாட்டிலுள்ள தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதே எங்கள் இலட்சியம். அவ்வாறு நம் நாட்டிலிருந்து தொழு நோயை முற்றிலும் ஒழிக்க முடியும்.'' என உரைத்தவர் யார்? பேராயர் மார் கிரிகோரியோஸ் ஆண்டகை

17.  பிரப்பன்கோடு மருத்துவமனையை "தொழுநோய் மருத்துவமனை என்று மக்கள் முதலில் அறியவில்லை. திறப்புவிழாவின்போது தான் அறிந்தனர். தொழுநோய் மருத்துவமனை என்று அறிந்ததும் மக்கள் எதிர்த்தனர். மக்கள் பள்ளி மாணவர்களை தூண்டிவிட்டனர். மாணவர்கள் வந்து மரச்சீனிகளை எல்லாம் பிடுங்கி எறிந்தனர். மரம், செடி, கொடிகளின் கனிகளை வெளியே விற்க தடை செய்தனர். கல்லெறிந்தனர். இச்சமயங்களில் தந்தை இலாரன்ஸ் பொறுமையுடன் கேட்டு நிற்பது வழக்கம். பல வேளைகளில் இரு கைகளாலும் தாடியைத் தடவிக்கொண்டு சிந்தனையில் மூழ்கியிருப்பார். குறைந்த அளவு நல்ல வார்த்தைகளை பதிலாகக் கூறுவார்..... என்றவர் யார்? பிரப்பன் கோடு இமாம் முகமது

18.  பிரப்பன்கோடு மருத்துவமனையின் தொடக்க காலங்களில் பணி புரிந்த ஜெர்மன் நாட்டைச் சார்ந்த ஒரு பெண் டாக்டர் யார்? டாக்டர் கப்பர்

19.  நாணல் செடிகளால் நிறைந்து நின்ற மாணிக்கக் குன்றை செடி கொடிகளால் நிறைத்தவர் யார்? தந்தை இலாரன்ஸ்

20.  'ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க நான் உன்னை அனுப்புகிறேன்'' என்று ஏசாயாவுக்கு அருளப்பட்ட இறைவாக்குகளை தன் வாழ்க்கையின் இலட்சியமாக கொண்டிருந்தவர் யார்? தந்தை இலாரன்ஸ்.

21.  ''புறவினத்தாரிடையே மறைபரப்புப் பணி செய்வது என்பது யாருடைய வாழ்க்கை இலட்சியமாக இருந்தது? மார் இவானியோஸ் ஆண்டகையின்.

22.  ஆண்டவர் நம்மிடம் செய்யச் சொல்வதை நாம் செய்தால் எஞ்சியதை அவர் கவனித்துக் கொள்வார்'' என்றவர் யார்? தந்தை இலாரன்ஸ்

23.  பிரப்பன்கோடு மருத்துவமனைக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கி பின்னர் தொழுநோய் மருத்துவமனையின் ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்கிய பஞ்சாயத்து தலைவர் யார்? கனகன் சார்.

24.  விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற பேரயம் நாட்டு கேசவபிள்ளைக்கு பிரப்பன்கோடு கூட்டி வந்து சிகிட்சை அளித்து குணப்படுத்தியலர் யார்? தந்தை இலாரன்ஸ்

25.  நிலமேல் அருகிலுள்ள குரியோடு மருத்துவமனையிலிருந்து வேடர்களை தனது வண்டியில் பிரப்பன்கோடு கொண்டுவந்து குளிப்பாட்டி, ஆடை அணிவித்து உணவு வழங்கி சிகிட்சை அளித்து தங்கவைத்தவர் யார்? தந்தை இலாரன்ஸ்

26.  வெம்பாயத்தில் 1965ல் கிளினிக்கில்  ஜெர்மன் மருத்துவருக்கு மொழிபெயர்க்க உதவ தந்தை இலாரன்ஸ் நியமித்த பிஏ பட்டதாரியான  நோயாளி யார்? ''கோபிநாதன்''

27.  கோபிநாதனின் பிள்ளை நர்சரியில் படிக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறியவர் யார்? தந்தை இலாரன்ஸ்

28.  அவருடைய பண்பையும், பிறரை அவர் அழைத்துச் செல்லும் பாங்கையும் ஆச்சரியத்துடனும், பாராட்டுடனும் சொல்லக்கூடிய பலரில் நானும் ஒருவன் என்றவர் யார்? டாக்டர் சிதம்பரம்பிள்ளை

29.  எந்த இடத்தில் வைத்து வல்லுநர்கள் சுமார் 4 மணி நேரம் தொடர்ச்சியாக சோதித்து, இயன்றவரை மக்களை மறுவாழ்வு அடையச்செய்ய தந்தை இலாரன்ஸ் ஏற்பாடுகள் செய்தார்? அம்பிலிகோணம்

30.  பலரது கவனத்தையும் ஈர்த்த ஆயர் மார் எஃப்ரேம் வழிநடத்திய மிகச் சிறப்பான திட்டம் எது? ஹெல்த் பார் ஒண் மில்லியன்

31.  கேரள சுகாதாரப் பணி இயக்குநர், பணியாளர்களின் ஒரு கூட்டத்தைக் கூட்டி ஆயர் இலாரன்ஸ் அவர்களின் உரை கேட்ட பலர் எவ்வாறு வியந்தனர்? இவர் ஒரு மருத்துவர்

32.  புதுக்கடைப் பகுதியில் ஏராளமான மக்கள் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை கண்டு உடனே இரவில் பெரும் அளவில் இரத்தப் பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்தவர் யார்? தந்தை எஃப்ரேம்

33.  ஸ்பிரிட் தடவுவது, இரத்தம் கசிந்து கொண்டிருந்த காயங்களையும், புண்களையும் சுத்தமாக்குதல் போன்ற சாதாரண வேலைகளையும் செய்தவர் யார்? தந்தை எஃப்ரேம்

34.  எதிர்பாராமல் வந்த சில பிரச்சனைகளால் அவர் அனுபவிக்க வேண்டி வந்த துன்பங்களைப் பார்க்கும் போது வாழ்வின் மிகப்பெரிய பிரச்சனைகளையும், துன்பங்களையும் தாங்குவதற்காகவே பிறந்தவர் இவர் என்று தோன்றும். என யாரைப்ப்இ ஊறப்பட்டது? தந்தை எஃப்ரேம்

35.  தந்தை இலாரன்ஸ் எந்த மருத்துவமனை இயக்குநராக இருந்தபோது ஆரோக்கியத் திட்டங்களைப் பற்றி வகுப்புகள் நடத்த பெதனி மடம் நாலாஞ்சிறைக்கு வருவார்? பிரப்பன்கோடு

36.  தாய்-சேய் நலன்பற்றிய வகுப்புகள் நடத்த பெதனி மடத்திற்கு தந்தை இலாரன்ஸ் எத்தகைய உடை அணிந்து வருவார்? சாதாரண கதர் துணியும், சாதாரண செருப்பும்

37.  1959ம் ஆண்டு பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸின் பெயர் கொண்ட புனிதரின் விழாவின்போது பட்டம் பேராலயத்தில் புதுநன்மை பெற்றுக் கொள்ள எந்த ஆலய மக்களை அழைத்து வந்தார்? குண்டுகாடு

38.  வார நாட்களில் மிஷன் தளங்களில் திருப்பலி நிறைவேற்றும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? தந்தை இலாரன்ஸ்

39.  'ஒரு நபரானாலும் இப்போது மிஷன் ஆரம்பிப்போம். பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அதனால் மிஷன் ஆரம்பிக்க வசதியான கட்டிடம் தேவை இல்லை. சிறு குடிசையோ, திறந்த வெளியோ ஆனாலும் போதுமானது' யார் யாரிடம் கூறியது? தந்தை இலாரன்ஸ் சிஸ்டர் செலின் D.M.டம்

40.  'உலகில் எந்த ஒரு ஆயரின் குடும்பமும் இவ்வாறு ஏழையாக இருக்கமாட்டார்கள் என்று அருட் சகோதரி கூறிய போது ஆயரின் பதி்ல் என்ன? சிரித்து விட்டு எல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வார்

41.  மதர் மேரி ஆயரைப் பார்த்து 'ஆரோக்கியம் இல்லாத ஆயர்' என்று கூறியபோது ஆயரின் பதில் என்ன? ஆரோக்கியம் ஆண்டவர் கொடுப்பார்'

42.  வாழ்வின் இறுதி வரை உடல் நலக்குறைவு என்ற காரணத்தால் எந்த இறைபணியும் செய்யாமல் இருந்ததில்லை என்ற உண்மைக்கு சொந்தக்காரர் யார்? இலாரன்ஸ் மார் எஃப்ரேம்

43.  1967 ஜுலை மாதம் 30-ஆம் நாள் அன்று குருமடத்தின் முன்னாள் அதிபர் தந்தை இலாரன்ஸ் தோட்டமும் மாவேலிக்கரை ஆயர் மார் இக்னாத்தியோசும் அறிமுகமானது எப்போது? குருமட புகைப்பட இருட்டறையிலிருந்து வெளியேறிய போது

44.  ''இந்த சாதாரண வீட்டிலிருந்தா? இவ்வளவு அசாதாரண ஆளுமைக்கு சொந்தமான தந்தை இலாரன்ஸ் குருவாயிருக்கிறார்'' என்று வியந்தவர் யார்? பேராயர் மார் கிரிகோரியோஸ் ஆண்டகை

45.  குருமடத்தில் பயிலும்போது ''ஃபாதர் டாமியன்' நாடகத்தில் நடித்த சகோதரர் கோசி வர்கீசைப் பார்த்து தந்தை இலாரன்ஸ் என்ன கூறி வாழ்த்தினார்? "இவ்வாறு வாழுகின்ற ஒரு குருவாக மாற வேண்டும்''

46.  நோயாளிகளை சிற்றாலயத்தின் உள்ளே அமரச்செய்து சகோதரிகளை  வெளியே நிற்கச் சொன்னவர் யார்? தந்தை இலாரன்ஸ்

47.  தந்தை இலாரன்சால் கிளிமானூரில் ஓடையில் கிடந்த வயதானவராக மீட்கப்பட்டவர் யார்? கோவிந்தபிள்ளை.

48.  M.C.H. திட்டம் மூலம் பிரப்பன் கோட்டில் பால் பொடியும், எண்ணெயும் வாங்கிச் செல்லும் தாய்மார்களுக்கு பயிற்சி வழங்கி நாளடைவில் அதனை HOM என்ற அமைப்பாக உருவாக்கியவர் யார்? தந்தை இலாரன்ஸ்

49.  1980ல் நடைபெற்ற தாய்மார்களின் ஒரு கருத்தரங்கிற்கு எத்தனை சோன்களிலிருந்து மகளிர் பங்கு பெற்றனர்? 10

50.  ''இந்த பிள்ளை M.C.H-லும், HOM -லும் ஏராளம் செயல்பட்டிருக்கிறார்'' என தந்தை இலாரன்ஸ் யாரைப் புகழ்ந்தார்? பூமணி

51.  ''ஒரு தாய் ஆப்பம் சுட்டு அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் தயாரித்தவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை'' என்று யாரைப் பற்றிக் கூறினார்? தன்னைப்பற்றியே

52.  1970 -ஆம் ஆண்டு எந்த இடத்தில் குடிசைக் கோயில் கட்டுவதற்கு மக்களுடன் சேர்ந்து தந்தை இலாரன்ஸ் கமுகு மரம் வெட்டி சரிப்படுத்தி வேலைகள் செய்தார்? கொப்பம்

53.  1973ல் கொப்பம் குடிசைக் கோயிலை மாற்றி ஆலயமாக கட்ட தீர்மானிக்கப்பட்ட போது தந்தை இலாரன்ஸ் எந்த அச்சு எந்திரத்தை வாங்கி பயிற்சி அளித்தார்? Hallow Bricks அச்சு எந்திரத்தை

54.  நடராஜன் என்பவர் சமூக சேவை செய்ய வேண்டுமெனில் அரசியலிலும் வளர வேண்டும், பொருளாதார பாதுகாப்பும் வேண்டும். அப்போது தான் அதிக நன்மை செய்ய முடியும்'. என அறிவுரை வழங்கியவர் யார்? தந்தை இலாரன்ஸ்

55.  பிரப்பன்கோடு மருத்துவமனை பற்றிய புகாரை  தந்தை இலாரன்ஸ் எவ்வாறு சீர் செய்தார்? உணவுக்குரிய தொகை அதிகாரிகள் வழங்கவில்லை

56.  தந்தை இலாரன்ஸ் கலந்துரையாடல்களும், கருத்து பரிமாற்றங்களும் நடத்தி வந்த மெடிக்கல் மிஷன் சகோதரிகளைச் சார்ந்த சகோதரி யார்? சகோதரி கரோல் கஸ் (டெல்கி மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை நிர்வாகத்துறை தலைவர்)

57.  தந்தை இலாரன்ஸ் கலந்துரையாடல்களும், கருத்து பரிமாற்றங்களும் நடத்தி வந்த ஒரு தலை சிறந்த வழக்கறிஞர் யார்? சிஸ்டர் ஆன் கம்மின்ஸ்

58.  தந்தை இலாரன்ஸ் கலந்துரையாடல்களும், கருத்து பரிமாற்றங்களும் நடத்தி வந்த S.J. துறவு சமூக தந்தை யார்? தந்தை டோங் S.J.

59.  பிரப்பன்கோட்டில் பணியாற்றிய பின்னர் தந்தை இலாரன்ஸ் எங்கே இடம் மாற்றலாகி சென்றார்? கிராத்தூர்

60.  பிரப்பன்கோட்டில் பிரியாவிடைக்காக வந்திருந்த அருட்சகோதரிகள் யாவர்? சிஸ்டர் நிர்லீனா, சிஸ்டர் சேவனா

5. HOM - திட்டம்

1.      ஆயர் லாரன்ஸ் தன் பணி வாழ்வில் மிக அதிகமாக நேரத்தை செலவிட்ட ஒரே துறை எது? ஆரோக்கியத்துறை.

2.      சாதாரண மக்களின் உடல் நலம் உயர்ந்தாலன்றி அவர்கள் வாழ்வு வளம் பெறாது என அவர் நம்பி செயல்பட்டவர் யார்? ஆயர் லாரன்ஸ் மார் எஃப்ரேம்

3.      "Health for one Million'' என்ற திட்டத்தின் தமிழாக்கம் என்ன? பத்து இலட்சம் மக்களுக்கு சுகாதாரம்

4.      மக்களின் ஆரோக்கிய நிலைக்கு நிறுவன அமைப்பு முறையை மாற்றி சமூக மைய மாற்றுவழி நடைமுறையில் ஆக்கும் எண்ணத்துடன் பாதர் டோங் S.J. அவர்களால் தொடங்கப்பட்டது என்ன? வாலன்டறி (தன்னார்வ) ஹெல்த் அசோசியேசன் ஆப் இந்தியா (VHAI).

5.      தந்தை லாரன்ஸ் நெருங்கிய ஈடுபாடு கொண்டிருந்த முக்கிய தொண்டு நிறுவனங்கள் எவை? வாலண்டறி (தன்னார்வ) ஹெல்த் அசோசியேசன் ஆப் இந்தியா (VHAI), காதலிக் ஹோஸ்ப்பிட்டல் அசோசியேசன் ஆப் இந்தியா (CHAI), தமிழ்நாடு வாலன்ட்றி ஹெல்த் அசோசியேசன் (TNVHA)

6.      14 ஆண்டுகள் பிரப்பன்கோடு மருத்துவமனை இயக்குநராக இருந்தபோது எதைப்பற்றிய எண்ணம் பின்னணியாக இயங்கிக் கொண்டிருந்தது? HOM

7.      உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) 1978ம் ஆண்டு ஆல்மா ஆட்டா என்னும் இடத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட  அறைகூவல் என்ன? ஹெல்த் பார் ஆள் பை டூதவுஸன்ட் (Health for all by 2000 A.D.)

8.      தந்தை லாரன்ஸ் தான் வாழும் பகுதி மக்களை உட்படுத்தி உருவாக்கிய திட்டம் என்ன? ஒரு மில்லியன் (10 இலட்சம்) மக்களுக்கு சுகாதாரம்

9.      1960 - 70-ஆம் ஆண்டுகளில் 'காத்தலிக் மருத்துவமனை அசோசியேசன் ஆப் இந்தியாவின் முக்கிய சிந்தனைப் பொருள் என்ன? ''ஹெல்த் பார் தி மில்லியன்ஸ்''

10.   Hom திட்டத்தின் அடிப்படை எந்த முப்பெரும் கொள்கைகளில் அடங்கியுள்ளது? பெண்கள் சக்தி, சுயசேவை, கூட்டான செயல்

11.   ஒரு ஆணுக்கு கல்வி புகட்டினால் ஒரு நபருக்கு கல்வி புகட்டுவது. ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டினால் ஒரு குடும்பத்திற்கு கல்வி புகட்டுவது.

12.   HOM திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட இடங்கள் எவை? திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்ட ஆகிய கேரளா மாவட்டங்களிலும், தமிழகத்தில் குமரி மாவட்டத்திலும்

13.   HOM திட்டத்தின் முதல் அடிப்படை கொள்கை என்ன?

1. முழு ஆரோக்கியமான நிலையில், ஆரோக்கியம் நோய் குணமாக்குதலை விட முக்கியமானது.

14.   HOM திட்டத்தின் இரண்டாம் அடிப்படை கொள்கை என்ன?

2. மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மட்டுமே ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.

15.   HOM திட்டத்தின் மூன்றாம் அடிப்படை கொள்கை என்ன?

3. வளர்ச்சி என்பது சுயமாக வளர்வது. எனவே சமூக வளர்ச்சி என்பது சமூகம் தன்னுள்ளிருந்தே வளர்வது. சுயமாக உதவுவதற்கும் சுயமாக பராமரிப்பதற்கும் உரிய திட்டங்களே முக்கியமானவை.

16.   HOM திட்டத்தின் நான்காம் அடிப்படை கொள்கை என்ன?

4. மக்களை ஒன்றுகூட்டுவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும், தல தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கும் எந்த அளவுக்கு உதவுகிறதோ அந்த அளவுக்கே வெளியே இருந்து வரும் உதவி பயன் தர முடியும். உதவி புரிவோரின் பங்கு, மக்களுக்காக பணிபுரிவதை விட மக்களுடன் பணிபுரிவதாகும்.

17.   HOM திட்டத்தின் ஐந்தாம் அடிப்படை கொள்கை என்ன?

5. சமூகத்தில் வெறும் பங்கு பெறுதலை விட சமூக தீர்மானமே அதிக பொருள் கொண்டது.

18.   HOM திட்டத்தின் ஆறாம் அடிப்படை கொள்கை என்ன?

6. நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது அந்தந்த இடங்களிலுள்ள வசதிகளை அதாவது ஆட்கள், நிதி, அரசு கொடுக்கும் வசதிகள், சமூக அமைப்புகள் போன்றவற்றை சாதி, மத அரசியல் சார்பு இன்றி இயன்றவரை பயன்படுத்த வேண்டும்.

19.   HOM திட்டத்தின் ஏழாம் அடிப்படை கொள்கை என்ன?

7. நலத்திட்டங்களை அமுல்படுத்தும் போது பொருத்தமான தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் கொள்கையை பின்பற்ற வேண்டும்.

20.   HOM திட்டத்தின் எட்டாம் அடிப்படை கொள்கை என்ன?

8. ஆரோக்கியம் பற்றிய அறிவு மக்களுக்கு புகட்டும் போது முறை சார்ந்த மற்றும் முறை சாராத வழிகளை பின்பற்ற வேண்டும்.

21.   HOM திட்டத்தில் பணிபுரிய குறைந்த பட்சம் தேவையான தகுதி என்ன?  ஒருவர் கற்றுக் கொடுப்பதை புரிந்து கொள்ளக்கூடிய அறிவும் அதை பிறருக்கு விளக்கி கொடுக்கும் திறமையும்

22.   HOM திட்டம் மாதம் ஒருமுறை 2 மணி நேரம் எவ்வாறு செலவிடுகிறது? ஒரு மணி நேரம் கற்றுக் கொள்வதற்கும் ஒரு மணி நேரம் கற்றுக் கொடுப்பதற்குமாக

23.   அருகிலுள்ள 10 குடும்பங்களின் ஒரு குழுவை எவ்வாறு அழைக்கிறோம்? 'ஹோம் குழு'

24.   'ஹோம் குழு'வின் தலைவி யார்? குடும்பத் தாய்மார்களில் ஒருவர்

25.   'ஹோம் குழு'வின் தலைவி எவ்வாறு அழைக்கப்படுகிறார்? தாய்த் தலைவி

26.   20 தாய் தலைவியரின் குழுவின் பெயர் என்ன? 'ஹோம் யூனிட்'

27.   'ஹோம் யூனிட்' தலைவி எவ்வாறு அழைக்கப்படுகிறார்? ஹோம்-வாலண்டியர்'

28.   ஹோம் வாலண்டியர் அடங்கிய குழுவுக்குப் பெயர் என்ன? 'ஹோம் சென்டர்'

29.   'ஹோம் சென்டர்' ன் தலைமைக்குப் பெயர் என்ன? 'புரமோட்டர்'

30.    20 ‘புரமோட்டர்கள்' அடங்கிய குழுவுக்குப் பெயர் என்ன? 'ஹோம்-சோண்'

31.   'ஹோம்-சோண்' தலைமைக்குப் பெயர் என்ன? 'ஆர்கனைசர்'

32.   10 ஆர்கனைசர்கள் தலைமைக்குப் பெயர் என்ன? ஒருங்கிணைப்பாளர்

33.   HOM-ன் கருத்துப்படி ஆரோக்கியம் என்பது எதனை உள்ளடக்கியது? உடல் நலத்துடன், ஆரோக்கியமான மனதும், தூய்மையான ஆன்மாவும், மாசற்ற சுற்றுச் சூழலும்

34.   மனிதனின் ஒட்டு மொத்த நல்வாழ்விற்கு தேவையான அனைத்திலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆர்வம் காட்டும் திட்டம் எது?  ஹோம்

35.   தந்தை லாரன்ஸ் அவர்கள் ஆரம்பித்த மக்கள் நல்வாழ்விற்கு தேவையான எல்லா அறிவையும் நிரந்தரமாகக் கொடுக்கும் அசாதாரண அமைப்பு எது? 'ஹோம் திட்டம்

36.   HOM அமைப்பையும் அதன் செயல்முறையையும் எதற்கு ஒப்பிடலாம்? ஒரு மரத்திற்கு (HOM Tree)

37.   ஹோம் திட்டத்தின்படி நேரடியாக பயன் அடைவோர் யாவர்? தாய்மார்களும், குழந்தைகளும்

38. HOM-ன் பத்து அம்ச திட்டங்கள் எவை?

1. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணித்தல்

2. பானிய சிகிச்சை (ORT)

3. தாய்ப் பால் ஊட்டுதல்

4. தடுப்பூசி இடுதல்

5. சத்துணவு கொடுத்தல்

6. தலைமைத்துவத்திற்கான மகளிர் கல்வி

7. குடும்பக் கட்டுப்பாடு (இயற்கை முறை)

8. ஊனமுற்றோருக்கு மறுவாழ்வு

9. இயற்கைச் சூழல் பராமரிப்பு

10. பொருளாதார வளர்ச்சி

38.   ஹோம் தன்னிலே ஒரு நலத்திட்டம் (Project) அல்ல. ஆனால் எது? நலத்திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பு

39.   ஹோம் 1982-ம் ஆண்டு செயல்படுத்திய திட்டம் எது? சமூக மைய ஊனமுற்ற குழந்தைகள் நலத்திட்டம்

40.   ஹோம் 1985-ம் ஆண்டு செயல்படுத்திய திட்டம் எது? வருமான உருவாக்கத் திட்டம்

41.   ஹோம் 1990-ம் ஆண்டு செயல்படுத்திய திட்டம் எது? இயற்கை பராமரிப்புத் திட்டம்

42.   ஹோம் 1992-ம் ஆண்டு செயல்படுத்திய திட்டம் எது? குமரி மாவட்டத்தில் இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட புயல், வெள்ளம் இவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருமளவில் துரித உதவிப்பணிகளும், வீடுகள் அமைப்பதற்குரிய சிறு உதவிகளும் செய்யப்பட்டன.

43.   1985-ல் எந்த இதழில் ஹோம் திட்டத்தின் சிறப்பு பற்றிய கட்டுரை வெளிவந்தது? "Future"

44.   1990-ல் எந்த இதழில் ஹோம் திட்டத்தின் சிறப்பு பற்றிய கட்டுரை வெளிவந்தது? டிசம்பர் மாத "Health Action" என்ற இதழில்

45.   வாலண்டறி ஹெல்த் அசோசியேசன் ஆப் இந்தியாவின் மாத இதழ் எது? 'அனுபவ'

46.   1991-ம் ஆண்டில் எந்த மாத இதழ் மொத்தமாக Hom பற்றிய சிறப்பு கதிராக வெளியிட்டது? 'அனுபவ'

47.   ஜனீவாயிலிருந்து வெளியிடப்படும் உலக கிறிஸ்தவ ஆரோக்கிய அமைப்பின் எந்த இதழ் HOM பற்றிய தகவல்களை தாங்கி வந்துள்ளது? 'காண்டாக்ட் 1988- எண் 101

48.   நீண்ட நேரம் தொடர்ச்சியாக பணி செய்வது தந்தை லாரன்சுக்கு கை வந்த கலை.

49.   ஆயர் இலாறன்சின் மனித உடல் நலம் பற்றிய தெளிவான சிந்தனையின் ஆழமான புனித பவுல் கூறும் இறையியல் அடிப்படை என்ன? 'முதலில் மனித உயிர் கொண்ட உடல், பின்னர் அன்றோ தேவ ஆவிக்குரிய உயிர்' (1 கொரி. 15 : 46 - 47)

50.   என்ற வார்த்தைகளை அடிக்கடி எடுத்துக் கூறி வந்தார். ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது அச்சமூகத்தின் மக்களின் ஆரோக்கிய வாழ்வு என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

51.   ஆரோக்கியத்தின் அஸ்திவார காலம் எது? 5 வயது வரை

52.   "எனக்கு என்ன குறை? நான் 8-ம் வகுப்பு முதல் குருமடத்திலே பயின்றவன். உணவுக்கு எந்த பஞ்சமும் இல்லை. இருப்பினும் ஏன் நான் இப்படி இருக்கிறேன். காரணம் முதல் 5 வயதில் தேவைக்கு ஏற்றபடி போதிய சத்துணவு கிடைக்காததே என்றவர் யார்?  ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்

53.   'பிறக்கும் பிள்ளைகளுக்கு எடை சுமார் 3 கிலோ கிராமாக இருக்க வேண்டும். அப்போது தான் அது மனிதக் குழந்தையாக இருக்க முடியும். இதுவே இறைவனின் திருவுளம்'' என்று அடிக்கடி போதித்து வந்தவர் யார்? ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்

54.   திருமுழுக்குப் பெற கொண்டு வரும் குழந்தைகளின் எடை எடுத்து அதன் சரியான எடையுடன் வர வேண்டும் என அன்பு கட்டளையட்டவர யார்? ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்


6. நலிவுற்ற மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்

1.      "நான் செய்தது நான் நம்புகின்ற இயேசுவை முன்னிட்டுத்தான். கண்களால் காண்கின்ற இந்த சகோதரருக்கு பணிவிடை செய்யும் போது கண்களால் காண முடியாத இயேசுவுக்கே நான் பணி புரிகிறேன். என தந்தை இலாறன்ஸ் யாரிடம் கூறினார்? வாமனபுரத்து திரு. A.இராஜேந்திரன்

2.       நாங்கள் நேரடியாகக் கண்ட கிறிஸ்து தான் தந்தை இலாறன்சும் சகோதரர் கிறிஸ்பினும்'' என்றவர்கள் யாவர்? வாமனபுரத்து திரு. A.இராஜேந்திரன்

3.      தந்தை இலாறன்ஸ் பிரப்பன்கோடு மருத்துவமனையில் பணியாற்றிவரவே கிளிமானூர் பகுதியில் மறைபரப்பு பணிக்கு உதவியவர்கள் யாவர்? பிரான்சிஸ்கன் சகோதரர்கள்

4.      கிளிமானூர், பாப்பால, அடயமண், வைய்யாற்றின்கர, தர்ப்பக்காடு, தட்டத்துமலை, காரேற்று, பிலாவோடு, ஆரன்தானம், கீழாயிக்கோணம், குருந்நேப்பன்காவு, ஊரகம், மஞ்ஞப்பாற போன்ற இடங்களில் பிரான்சிஸ்கன் சகோதரர்களின் முழுமூச்சுடன் கூடிய உழைப்பால் சிறு சிறு கிறிஸ்தவ சமூகங்கள் உருவெடுக்க தலைமை வழங்கி வந்தவர் யார்? தந்தை இலாறன்ஸ்

5.      ''நோயாளிகளின் ஆயர்'' 'ஏழைகளின் ஆயர்' என்று அழைக்கப்பட்டவர் யார்? ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்

6.      தன்னை சந்திக்க வருவோரிடம் ''பக்ஷணம் கழிச்சோ?'' (உணவு உணடீர்களா) என்று கேட்பவர் யார்? தந்தை இலாறன்ஸ்

7.      விமர்சனங்களுக்கு மத்தியில் "இது கண்டு நீங்கள் தளரக் கூடாது'' என தந்தை ஜேக்கப் கிழக்குங்கர யாரை தைரியப்படுத்தினார்? தந்தை இலாறன்ஸ்

8.      பிறந்து மூன்று நாட்கள் மட்டும் ஆன குழந்தை அனாதை இல்லத்தில் வளர்வதை விட குடும்பச் சூழலில் வளர்வதல்லவா நல்லது. என அறிவுரை வழங்கியவர் யார்? தந்தை இலாறன்ஸ

9.      "சிறு வயதிலிருந்தே இறைபணியில் தந்தை இலாறன்ஸ் மகிழ்ச்சி அடைந்தார். இறைபணிக்கு முதலிடம் கொடுத்தார் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்'' என்றவர் யார்? தந்தை இலாறன்சின் தகப்பனார்

10.   ''அப்பாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உண்டல்லவா?'' தந்தை இலாறன்ஸ் யாரைக் குறித்து கூறினார்? மதர் இம்மாகுலேட், சிஸ்டர் எலிசபெத்

11.   21 ஆண்டுகளாக HOM திட்டத்தில் பணிபுரிந்த திருமதி ராதா ராஜன் அவர்களுக்கு தந்தை இலாறன்ஸ் வழங்கிய அறிவுரைப் பழமொழி என்ன? ''காய்க்கின்ற மரத்தில் தான் கல்லெறி விழும் "

12.   1997 ல் ஜனவரி 2- ம் சனிக்கிழமை வாலண்டியர் கூட்டத்தில் இறுதியாக ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் கூடுறவு பற்றிய அறிவுரை என்ன? "HOM செயல்கள் வெறும் சமூக சேவை அல்ல. அது ஒரு வளர்ச்சி. குறிப்பாக பெண்களின் வளர்ச்சி. அது தனி நபர்களில் உள்ளடங்கியுள்ளது. நெருக்கடிகளை சேர்ந்து சந்திக்க வேண்டும். அப்போது தான் உண்மையான வளர்ச்சி ஏற்படும். சாதாரண மக்களை தங்கள் கால்களில் ஊன்றி நிற்க இயன்றவர்களாக மாற்ற வேண்டும்''.

13.   தாய்மார்களுக்கு அறிவு புகட்ட ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் பயன்படுத்திய கலை வடிவம் என்ன? நாட்டுக் கலைகள்

14.   1963ல் விபத்தில் சந்தித்த போத்தன்கோட்டைச் சார்ந்த எந்நபருக்கு பெட்ரோலுக்காக வைத்திருந்த ரூ. 2/-ஐ கொடுத்து உதவினார்? தாஸ்

15.   பேராசிரியர் சாக்கோ முதலாளியின் மகளுக்கு பிளஸ் 1ல் சர்வோதயா பள்ளிக்கூடத்தில் அட்மிஷனுக்காக மதிப்பெண்கள் குறைவாக இருந்தும் உதவியவர் யார்? ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்

16.   "இரவென்றும் பகலென்றும் பாராமல் கடினமாக உழைக்கின்றவர் தான் தந்தை இலாறன்ஸ். பிரதர் குருவாகும் போதும் இவ்வாறு இருக்க வேண்டும்" யார் யாரிடம் கூறியது? பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் சகோதரர் ஜோண் அரீக்கலிடம்

17.   தந்தை இலாறன்ஸ் பிரப்பன்கோடு பணியாற்றிய காலத்தில் புறக்கணிக்கப்பட்ட ஏழை மக்களின் வளர்ச்சிக்காக அவர் ஆரம்பித்த முயற்சிக்குப் பெயர் என்ன? 5 வயது முதல் 11 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான திறந்த வெளி விடுதி (Open boarding)

18.    இந்த பிள்ளைகள், ஓட்டிக் கொண்டிருக்கும் பேருந்தில் கல்லெறிந்தும், வீடுகளை உடைத்தும், கலவரங்கள் ஏற்படுத்தியும் சமூக விரோதிகளாகவும், கொள்ளைக் காரர்களாகவும், கொலைகாரர்களாகவும் காண விருப்பமா? இல்லை, சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக இவர்களை வளர்த்தி எடுப்பதா நல்லது"? இச்சிறுவர்கள் பிரப்பன்கோட்டிலிருந்து தந்தை இலாறன்சிற்கு பிரியாவிடை கொடுத்தபோது, எவ்வாறு வாழ்த்தினர்? விரலுக்கு தங்க மோதிரம் அணிவதற்கும் அவர் கரங்களை முத்தம் செய்வதற்கும் இறைவன் அருள் புரியட்டும்

19.   கிராத்தூர் பங்கிற்கு இடமாற்றலாகி பங்கு தந்தையாக செல்லும் வழியில் தமது இல்லத்திற்கு சென்று யார் முன் முழந்தாள் பணிந்து பாதங்களை முத்தம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்? வயதான தன் தாயின்

20.   ''ஒரு குழுவாக பணி செய்வதுதான் எனக்கு மிக்க மகிழ்ச்சியாயிருந்தது" என்றவர் யார்? ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்

21.   19 அடி உயரமும், 2 அடி அகலமும், 1 அடி கனமும் கொண்ட சிலுவையை நிறுவி ஆயரின் ஆசி பெற்றவர் யார்? பனச்சமூட்டில் பிரசங்கியார் என்று அழைக்கப்படும் திரு. ஜாண்

22.   'நான் நோயில் பூசுதல் வழங்குவோர் சாதாரணமாக இறக்கமாட்டார்கள்'' என்றவர் யார்? ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்

23.   1978ல் வடவாதூரில் சாலை ஓரத்தில் விழுந்து வாயிலிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்த 40 வயதுள்ள ஒரு மனிதருக்கு உதவியவர் யார்? தந்தை இலாறன்ஸ்

24.   1979-ல் சுங்கான்கடையில் சைக்கிள் மோதி காயத்துடன் கிடந்த பிச்சைக்காரனை அங்கியில் இரத்தம் பட்டிருந்தும் அரசு மருத்துவமனையில் சேர்க்க உதவியவர் யார்? தந்தை இலாறன்ஸ்



7. கிராத்தூர் பங்கு தந்தை

1.   தந்தை இலாறன்ஸ் அடிகளார் கிராத்தூர் பங்குத் தந்தையாக பணியாற்றிய காலம் எது? 1977 முதல் 1980 வரை

2.   1977 முதல் 1980 வரை காலத்தில் தந்தை இலாறன்சிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பொறுப்புகள் எவை? கிராத்தூர், மஞ்சத்தோப்பு பங்குகளின் பங்குத் தந்தை, புனித தோமையார் மருத்துவமனை இயக்குநர், தமிழக மலங்கரை கல்விக் கூடங்களின் தாளாளர்

3.   பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், கடன் தொல்லைகளால் அவதிப்படுபவர்களுக்கு தந்தை இலாறன்ஸ் எதன் வழியாக கடன் வழங்கினார்? கிராத்தூர் வெல்ஃபயர் சொசைட்டி

4.   பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் கூட்டத்திற்கு வருபவர்களின் சேமிப்பைக் கண்டு எந்த வங்கி  கிராத்தூர் மக்களுக்கு கடன் வழங்க முன் வந்தது? இந்தியன் வங்கி களியக்காவிளை

5.   வேலையில்லாத இளைஞர்களுக்காக அரசு உதவியுடன் கிராத்தூரில் தந்தை இலாறன்ஸ் துவங்கிய நிறுவனம் என்ன? நூற்பாலை

6.   பிரப்பன்கோடு தொழுநோய் மருத்துவமனையின் கீழ் தந்தை இலாறன்ஸ் ஒரு தொழுநோய் யூனிட்டு செயல்படச் செய்தார்? அம்பிலிகோணத்தில்

7.   கிடாரக்குழியை மையமாகக் கொண்டு புதிதாக ஒரு பங்கு ஆரம்பிக்க துவக்கமிட்டவர்? தந்தை இலாறன்ஸ்

8.   தந்தை இலாறன்ஸ் கிராத்தூர் பங்கு தந்தையாக பணியாற்றிய காலத்தில் அவருக்கு உதவி பங்குத் தந்தையராக பணியாற்றியவர்கள் யாவர்? அருட்தந்தை கோசிவர்கீஸ், அருட்தந்தை சக்கரியா நெடியகாலாயில்

9.   1977-ஆம் ஆண்டு 250 பேர் கொண்ட குழுவால் பட்டம் பேராயர் இல்லத்தை அரசியல் கட்சியின் தாக்குதலிலிருந்து காத்தவர் யார்? தந்தை இலாறன்ஸ்

10. தந்தை இலாறன்சுக்கு உதவியாக அருட் தந்தை கோசி வற்கீஸ் நியமிக்கப்பட்ட போது கூறிய வார்த்தைகள் என்ன? எல்லாம் பார்த்து அதன்படி செயல்பட வேண்டும். சரியான நேரத்தில் உணவு உண்ண வேண்டும். எனக்காக காத்திருக்கக் கூடாது. சுதந்திரமாக செயல்படவேண்டும்

11. கிராத்தூர் மருத்துவமனையில் வார இறுதியில் தன்னுடன் பணிபுரியும் அனைவரையும் கூட்டி எந்த பெயரில் ஒருங்கிணைத்து 6 + 1

12. 6 + 1 என்ற குழுவுக்கு தந்தை இலாறன்ஸ் எத்தகைய தலைப்புகளில் வகுப்புகள் நடத்தினார்? நிர்வாக நுணுக்கங்கள், ஆள் - ஆள் உறவுகள், குழு நல அணுகுமுறை

13. மருத்துவமனையில் நோயாளிகள் குறைவு என்று சொல்லும் போது தந்தை இலாறன்ஸ் கூறிய பதில் என்ன? 'Our village is a healthy one'

14. மாதாவின் மீது கொண்ட பக்தியை தந்தை இலாறன்ஸ் எவ்வாறு வெளிக்காட்டினார்? தினந்தோறும் செபமாலை செபிப்பது

15. தந்தை கோசி வற்கீஸ் விமலபுரம், சூசைபுரம் ஆகிய பங்குகளையும் கவனித்து நேசமணி கல்லூரியில் பயின்று B.A. பட்டம் முதல் வகுப்பில் வென்ற போது தந்தை இலாறன்ஸ் கூறிய வாழ்த்துரை என்ன? ''கோயில்களும் கவனித்து, ஆட்களின் தேவைகளும் நிவர்த்தி செய்து நாம் இறை பணியாற்றும் போது எல்லாவற்றையும் இறைவன் நடத்தித் தருவார்''

16. ''எனது இரத்தம் பாடி மலங்கரை மக்களின் இரத்தமாகும்'' என நன்றியோடு கூறியவர் யார்? ஆயர் இலாறன்ஸ்

17. ஆரோக்கிய நிலையை உயர்த்த தந்தை இலாறன்ஸ் கிராத்தூரில் துவங்கிய மாற்றுவழி என்ன? 'மினி ஹெல்த் சென்டர்' (சிறு சுகாதார நிலையம்)

18. 'மினி ஹெல்த் சென்டர்' (சிறு சுகாதார நிலையம்) ல் செயல்படுவோர் யாவர்? 1 பாதி நேர மருத்துவரும், ஒரு ஆண், ஒரு பெண் அடங்கிய இரு முழுநேர ஆரோக்கிய பணியாளரும், மூன்று பகுதி நேர முதலுதவி பணிப் பெண்களும்

19. ஒரு 'மினி ஹெல்த் சென்டர்' எத்தனை பேருக்காக செயல்பட வேண்டும்? 1000 குடும்பங்களைக் கொண்ட 5000 மக்களுக்கு

20. 'மினி ஹெல்த் சென்டர்' க்கு நிதியுதவி எவ்வாறு வழங்கப்பட்டது? 1:1:1 என்ற விகிதத்தில் மத்திய அரசும், மாநில அரசும், தொண்டு நிறுவனமும்

21. 'மினி ஹெல்த் சென்டர்' யார் ஆட்சி செய்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது? மத்தியில் ஜனதா அரசு

22. 'மினி ஹெல்த் சென்டர்' கிராத்தூரில் நடத்துமாறு பரிந்துரைத்த தமிழ்நாடு பொது மருத்துவ பணித் துறை உதவி இயக்குநர் யார்? டாக்டர். கபீர்

23. 1978-ஆம் ஆண்டு கிராத்தூர் செயின்ட் தாமஸ் மருத்துவமனையை மையமாகக் கொண்டு குமரி மாவட்டத்தில் எத்தனை மினி ஹெல்த் சென்டர்கள் ஆரம்பிக்கப்பட்டன? பத்து

24. தந்தை இலாறன்சின் பொறுப்பில் குமரி மாவட்டத்தில்  எத்தனை மினி ஹெல்த் சென்டர்கள் செயல்பட்டன? 27

25. 1983ம் ஆண்டு அரசுமானியம் நிறுத்தப்பட்டும் தந்தை இலாறன்ஸ் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டுவரை அதே முறையில் 27 மையங்களையும் யாருடைய நிதியுதவியுடன் நடத்தி வந்தார்? திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டம்

26. 17-5-1986 அன்று கிறிஸ்துவிளாகம் ஆலயத்தில் வைத்து நடத்தப்பட்ட 'உலக ஊனமுற்றோர்' தினவிழாவில் கலந்து கொண்ட அன்றைய மாவட்ட ஆட்சியாளர் யார்? உயர் திரு முனிர் ஹோதா புசீகி

27. 'மினி ஹெல்த் சென்டர்' சுகாதார மையங்கள் பின்னர் எதுவாக மலர்ந்தது? ''அடிப்படை சுகாதாரப்பணி'.

28. நற்செய்தி 'பணி என்பது மனிதனின் சாதனை அல்ல. கடவுளின் கொடை என்றவர் யார்? ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்

29. குமரி மாவட்டத்தின் நட்டாலம் என்ற ஊரில் ஒரு நாயர் குடும்பத்து நீலகண்ட பிள்ளை எப்போது பிறந்தார்? 1712-ஆம் ஆண்டு

30. யாருடைய படைத்தளபதியாக நீலகண்ட பிள்ளை பணியாற்றிய போது டிலனாய்துரையின் அறிவுரையில் தெளிவடைந்து 17-5-1945ல் கிதிருமுழுக்குப் பெற்று தேவசகாயம் என்று பெயர் பெற்றார்? மார்த்தாண்டவர்மா மகாராஜா

31. தேவசகாயம் பிள்ளையை கொல்வதற்காக ஆரல்வாய்மொழி குன்றிற்கு கொண்டு செல்லும் வழியில் கொடுமைப்படுத்தப்பட்ட இடங்களில் முக்கியமான நாகர்கோவிலை அடுத்துள்ள பார்வதிபுரத்துடன் இணைந்த பகுதி எது? பெருவிளை

32. பெருவிளையில் தேவசகாயம் பிள்ளையை எந்த மரத்தில் சங்கிலியால் கட்டிப் போட்டனர்? வேப்ப மரத்தில்

33. தேவசகாயம் பிள்ளையை கட்டி வைத்த பெருவிளையில் முதலில் நிறுவப்பட்டது என்ன? சிலுவை

34. பெருவிளையில் தேவசகாயம் பிள்ளையை கட்டி வைத்த இடம் யார் பெயரில் இருந்தது? ஜனார்த்தனன் பிள்ளை என்ற ஆராச்சார்

35. பெருவிளையில் தேவசகாயம் பிள்ளையை கட்டி வைத்த இடத்தின் புனிதத்தை பாதுகாக்க ஆயர் இலாறன்ஸ் யாருடைய பரிந்துரை வேண்டி செபிக்கிறார்? மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை

36. பெருவிளையில் தேவசகாயம் பிள்ளையை கட்டி வைத்த இடத்தை  வாங்க ஆயர் இலாறன்சுக்கு உதவியவர்கள் யாவர்? செபத்தியான் பிள்ளை, சங்கர பிள்ளை, கணேச பிள்ளை, திரு. செல்வராஜ், மற்றும் திரு. இராஜமணி

37. 1987-ம் ஆண்டு பெருவிளையில் தேவசகாயம் பிள்ளையை கட்டி வைத்த இடத்தை திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்திற்காக யாரிடமிருந்து விலைக்கு வாங்கினார்? ஜனார்த்தனன் பிள்ளை

38. பெருவிளையில் தேவசகாயம் பிள்ளையை கட்டி வைத்த இடத்தை  வாங்கிய பின்னர் அங்கு குடியிருந்த ஒரு ஆராச்சாரின் குடும்பம் தீவிரவாத இந்துக்களின் உதவியுடன் செய்தது என்ன?  சிலுவையை உடைத்தெறிந்து வேப்பு மரத்தை பட்டுப் போகச் செய்தனர்

39. 1991ல் பெருவிளையில் ஓலைக் குடிசையில் தங்க வைக்கப்பட்டலர் யார்? திரு. புன்னூஸ்

40. 1989-ஆம் ஆண்டே விலைக்கு வாங்கப்பட்ட பெருவிளையில் புனித இடம் எப்போது முழுமையாக நம் கட்டுப்பாட்டில் வந்தது? 1996

41. தந்தை இலாறன்ஸ் கிராத்தூர் பங்குத் தந்தையாக பணியாற்றிய காலம் கிராத்தூர் மடத்தில் தங்கி மருத்துவமனையிலும் தந்தை இலாறன்சின் பணிகளிலும் உதவிய அருட்சகோதரி யார்? அருட்சகோதரி பொனிபாசி டி.எம்.

42. ''உங்கள் வாழ்க்கையில் அதிகமாக உள்ளத்தை கவர்ந்த நபர்கள் எவரேனும் உண்டா?'' என்று கேட்ட போது நம் ஆயர் இலாறன்ஸ் என்ன பதில் கூறுவார்? பேராயர் மார் இவானியோஸ், இரண்டு பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ்

43. ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேமின் சிறு வயதில் கையைப் பிடித்து ஆங்கில எழுத்தை வலப்புறமாக சற்று சாய்த்து எழுதவேண்டும் என்று நேரடியாக பயிற்சி கொடுத்தவர் யார்? பேராயர் மார் இவானியோஸ்

44. மார் இவானியோஸ் பாதயாத்திரை செல்லும் இந்த புனித பழக்கத்தை குமரியில் 1979ம் ஆண்டு துவங்கியர் யார்? தந்தை இலாறன்ஸ்

45. மார் இவானியோஸ் பாதயாத்திரை 1979ம் ஆண்டு குமரியில் துவங்கப்பட்ட போது குமரியில் நிலவியிருந்த பிரச்சனை எது? 'மண்டைக்காடு கலவரம்'

46. மார் இவானியோஸ் பாதயாத்திரை துவங்கப்பட்ட போது எத்தனை பேர் குமரி முனையிலிருந்து திருப்பயணத்தை ஆரம்பித்தனர்? 5 இளைஞர்கள்

47. மார் இவானியோஸ் பாதயாத்திரை துவங்கப்பட்ட போது எங்கே வைத்துசில இந்து மதத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்? குமாரகோவில்

48. மார் இவானியோஸ் பாதயாத்திரை துவங்கப்பட்ட போது ஒலிப்பெருக்கி வழியாக அறிவிப்புகளை வெளியாக்கியவர் யார்?  தந்தை இலாறன்ஸ்

 

8. நாகர்கோயிலில் மறைபரப்புப் பணி

1.   நாகர்கோவில் பகுதியில் குடியேறி வாழ்ந்து கொண்டிருந்த மலங்கரை மக்களுக்கு இறையன்பின் உணர்வை ஊட்டி வளர்க்க தேடிப் புறப்பட்டவர் யார்? தந்தை இலாறன்ஸ்.

2.   மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை குமரி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட 1934 -ஆம் ஆண்டிலேயே இச்சபையில் சேர்ந்து மிகுந்த ஈடுபாடு காட்டி வந்த மரியாகிரி பங்கைச் சார்ந்த எது? ''நாடான் சார்'' குடும்பம்.

3.   கடவுள் பக்தியிலும், மறைபரப்புப் பணியிலும் மிகுந்த ஆர்வம் காட்டிய மரியாகிரி பங்கைச் சார்ந்த நாடான் சாரின் மூத்த மகன் யார்? திரு. கிறிஸ்டல் ஜாண்

4.   திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்தால் வாங்கப்பட்டு இன்று வழிபாட்டு மையமாக விளங்கும் 1960-ஆம் ஆண்டில் திரு. கிறிஸ்டல் ஜாண் குடியிருந்த இடம் எங்குள்ளது? பூதப்பாண்டி

5.   1975-ஆம் ஆண்டு நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த திரு. கிறிஸ்டல் ஜாண் ஆசிரியரை மறைப்பணிக்காக சந்தித்தவர் யார்? தந்தை இலாறன்ஸ்

6.   1977 - நவம்பர் மாதம் 10-ல் எதிர்பாராத முறையில் தந்தை இலாறன்ஸ் யாரை திரு. கிறிஸ்டல் ஜாண் வீட்டிற்கு அழைத்து வந்தார்? திருவனந்தபுரம் பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகை

7.   திரு. கிறிஸ்டல் ஜாண் ஆசிரியர் வீட்டில் பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகையும் தந்தை இலாறன்சும் இணைந்து முதல் திருப்பலி நிறைவேற்றிய நாள் எது? 1977 - நவம்பர் மாதம் 10-ல்

8.   தந்தை இலாறன்சுக்கு உதவியாக துவக்க காலங்களில் நாகர்கோவிலில் திருப்பலி ஒப்புக்கொடுக்க வந்த மூத்த குரு யார்? தந்தை சேவியர் ஞாயப்பள்ளி

9.   திரு. கிறிஸ்டல் ஜாண் ஆசிரியர் வீட்டில் திருப்பலியில் வழக்கமாக பங்கெடுத்த யாக்கோபாய திருச்சபையினர் எத்தனை? ஐந்து குடும்பத்தார்

10. திரு. கிறிஸ்டல் ஜாண் ஆசிரியர் வீட்டில் திருப்பலிக்கு வசதி குறைவானதாலும் மக்கள் எண்ணிக்கை கூடியதாலும் எவ்விடத்திற்கு வழிபாடுகள் மாற்றப்பட்டது? வடசேரியில் சாலியர் சமுதாயத்தை சார்ந்த இந்து சகோதரர் வீட்டின் மாடியில் வாடகை அறை

11. கிராத்தூரிலிருந்து நாகர்கோவிலில் குடியேறி வாழ்ந்துவந்த மலங்கரை சபை மக்கள் எங்கு உறுப்பினராகச் சேர்ந்து திருப்பலியிலும் பங்கு செயல்பாடுகளிலும் பொறுப்புடன் ஈடுபட்டு வந்தனர்? கோட்டார் மறைமாவட்டத்தைச் சார்ந்த வெட்டூர்ணிமடம் கிறிஸது ராஜா ஆலயம்

12. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறி வாழ்ந்து வந்த திரு. செறியான் நாடார் வாழ்ந்து வந்த பகுதி எது? தற்போது கிறிஸ்துவிளாகம் என்றும் அன்று கிறிஸ்டோபுரம் என்றும் வாத்தியார்விளை என்றும் அழைக்கப்பட்டிருந்த பகுதி

13. தாங்கள் வாழும் பகுதியில் திரு. சத்தியநேசன் என்ற பிரசங்கியாரின் ஜெபக் கூடம் ஒன்றை கிறிஸ்தவர் யாரிடமாவது ஒப்படைக்க விரும்புவதாக தந்தை இலாறன்சிடம் தகவல் வழங்கியவர் யார்? திரு. செறியான் நாடார் மகன் திரு. தாமஸ்

14. 5 ஆண்டுகளில், மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்ட மலங்கரை வழிபாட்டு மையங்களில் தொடர்ச்சியாக பணிபுரிந்தவர் யார்? தந்தை சேவியர் ஞாயப்பள்ளி

15. மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் வடக்கையும் தெற்கையும் ஒன்றிணைக்கும் ஒரு இணைப்பு கண்ணியாக விளங்கிய நிகழ்ச்சி எது? மார் இவானியோஸ் பாதயாத்திரை

16. 1979ல் செட்டிக்குளம், கிருஷ்ணன் கோயில், வாத்தியார்விளை, சரல்விளை, தட்டான் விளை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை ஒன்றுதிரட்டி வடசேரியில் நடந்த திருப்பலிக்கு கூட்டி வந்த கன்னியாகுமரியில் தங்கியிருந்த பெதனி சகோதரிகள் யாவர்? சகோதரி மெல்க்கா, சகோதரி சுகுணா, சகோதரி தகியா

17. மருந்துவாழ் மலையில் எப்ப்போது முதல் அருள் சகோதரிகள் ஜெபங்கள் நடத்திவந்தனர்? 1979 -ஆம் ஆண்டு

18. மருந்துவாழ் மலைக்கு அருகே மந்தாரம்புதூரில்  எப்போது சிறு குடிசை அமைக்கப்பட்டது 1980ல்

19. எந்த ஆண்டு முதல் பிரான்சிஸ்கன் சகோதரர்கள் மந்தாரம்புதூரில் தங்கி பணி புரிந்து வந்தனர். 1990 முதல்

20. மருந்துவாழ் மலையில் அதிக நேரம் செலவிட ஆயருக்கு பெரிய உதவியாக இருந்து வந்தவர் யார்? முத்தையன்

21. ''நாம் ஒரு பசுவை வாங்கினோம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு தேவையான ஆகாரம் சரியான நேரத்தில் கொடுத்தால்தான் அடுத்த நாள் பால் கிடைக்கும். அதுபோல்தான் திருச்சபையும். எனவே திருச்சபையின் வளர்ச்சிக்குத் தேவையான காரியங்களை செய்ய வேண்டிய காலத்தில், செய்ய வேண்டிய முறையில் செய்ய வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து பலன் எதிர்பார்க்க முடியும். என்றவர் யார்? ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்

22. 1977 ஆகஸ்டு மாதத்தில் மதர் சைபார், அருட் சகோதரி சுபீத்தா மற்றும் அருட்சகோதரிகளான றீகா, சுகுணா ஆகியோரைக் கூட்டிக்கொண்டு வந்து தந்தை இலாறன்ஸ் கன்னியாகுமரி மலங்கரை பவனில் திருப்பலி நிறைவேற்றிய நாளின் சிறப்பு என்ன? தந்தை இலாறன்ஸின் குருத்துவ வெள்ளிவிழா ஆண்டு

23. தந்தை இலாறன்சின் ஒரு நீண்ட கால ஆசையாக கன்னியாகுமரியில் எப்போது SIC மடம் முறைப்படி ஆரம்பிக்கப்பட்டது? 1977 செப்டம்பர் 2-ஆம் நாள்

24. நாகர்கோவிலில் SIC மடம் எப்போது துவங்கப்பட்டது? 1980 ஏப்ரல் மாதம்.

25. ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் திருநாளை எவ்வாஇல் மருந்துவாழ்மலை பகுதியில் வைத்து கொண்டாடினர்? 1988ல்

26. தந்தை இலாறன்ஸ் 1980 -ஆம் ஆண்டு ஒருநாள் அதிகாலையில் 7.30 மணிக்கு எப்பகுதியில் அமைந்திருந்த எல்லா வீடுகளில் நலன் விசாரித்து உரையாடி வந்தார்? செட்டிகுளம் ஓடைக்கரையில்

27. செட்டிகுளத்தில் ஒரு குருசடி இருப்பதாகவும்  ஒரு மிஷன் உருவாக்கலாம் என்றும் தந்தை இலாறன்ஸை கூட்டிச் செல்லுமாறு கூறியிருந்தவர் யார்? சின்னம்மாள் பாட்டி

28. செட்டிகுளம் குருசடியில் தினம் தோறும் மாலையில் அங்கு ஒன்றுகூடி செபமாலையும், நவநாள் செபங்களும் நடத்தப்பட உதவியாக இருந்தவர் யார்? திரு. முருகன்

29. செட்டிகுளம் குருசடியின் அர்ச்சிப்பு நிகழ்ச்சி தந்தை ஜி. வர்க்கீஸ் அவர்களின் காலத்தில் நடத்தியவர் யார்? பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகை

30. தேனிக்குளம் பகுதியில் ஆலயம் அமைக்க வேண்டுமென்று முயற்சி எடுத்தவர் யார்? திரு. மனுவேலின் மகன் திரு. வர்க்கீஸ்

31. 1980 - ல் தேனிக்குளம் சென்று குளக்கரையில் ஒரு ஓலை குடிசை அமைத்து தந்தை இலாறன்சை திருப்பலி நிறைவேற்ற அழைத்தவர்கள் யார்? திரு. வர்கீசும் குடும்பமும்

32. தேனிகுளத்தில் முதல் திருப்பலிக்கு ஆயருடன் உதவியாக சென்றவர்கள் யாவர்? திரு. கோசி அலெக்ஸ்சாண்டர், அவரது மனைவி திருமதி. மோளி அலெக்ஸாண்டர்

33. பெதனி சகோதரிகளின் பொறுப்பில் நாகர்கோவில் பகுதியில் எத்தனை  சிறு சுகாதார மையங்கள் செயல்பட்டுவந்தன? 15

 

9. ஆயர் அபிஷேகம்

1.   மலங்கரை கத்தோலிக்க மறு ஒன்றிப்பு இயக்கத்தின் பொன்விழா எப்போது கோட்டயம் நகரில் நடைபெற்றது? 1980 டிசம்பர் மாதம் 27 -ஆம் நாள்

2.   மலங்கரை கத்தோலிக்க மறு ஒன்றிப்பு இயக்கத்தின் பொன்விழாவின் சிறப்பு விருந்தினர்கள் யாவர்? அந்தியோக்கியன் மறை முதுவர் அதி உன்னத கர்தினால் சக்கா, அன்னை தெரசா

3.   மலங்கரை கத்தோலிக்க மறு ஒன்றிப்பு இயக்கத்தின் பொன்விழா நாளில் எத்தனை  திருத்தொண்டர்கள் குருக்களாக அபிஷேகம் செய்யப்பட்டனர்? 27

4.   மலங்கரை கத்தோலிக்க மறு ஒன்றிப்பு இயக்கத்தின் பொன்விழா நாளில் குருப்பட்ட திருச்சடங்குகளுக்கு தலைமை வகித்தவர் யாவர்? பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ், ஆயர் ஐசக் மார் யூகானோன், ஆயர் சிறில் மார் பஸேலியோஸ்

5.   மலங்கரை கத்தோலிக்க மறு ஒன்றிப்பு இயக்கத்தின் பொன்விழா நாளில் பிற்பகல் ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டவர் யார்? ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம்

6.   ஆயருக்குரிய செங்கோல் வழங்கி, சிலுவையை கையில் பிடித்து அரியணையில் அமரச் செய்து, குருக்கள் தூக்க, மக்கள் ஆர்ப்பரித்து கூறிய  வாழ்த்து என்ன? 'ஆக்சியூஸ்' (ஒக்சியோஸ்)

7.   'ஆக்சியூஸ்' (ஒக்சியோஸ்) என்ற சொல்லின் பொருள் என்ன? 'இவர் இப்பொறுப்பிற்கு தகுதி வாய்ந்தவர்'

8.   மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபையின் நாலாவது ஆயராக, திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டவர் யார்? ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம்

9.   ஆயர் அபிஷேக சடங்கின்போது ஆயர்கள் புதுப்பெயரை ஏற்றுக் கொள்வது ஏன்? இறைவன் மக்களிடமிருந்து தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அத்தலைவர்கள் தமது பணியை ஆற்ற அழைக்கப்படுகின்றார்கள். அதற்காக அவர்களை இறைவன் அபிஷேகம் செய்கிறார். இவ்வாறு தாம் அழைத்து தேர்ந்தெடுப்பவர்கள் முற்றிலும் தமக்குச் சொந்தமானவர்கள் என்பதற்கடையாளமாக அவர்களை புதுப் பெயரால் அழைக்கின்றார்.

10. பெயர் மாற்றப்பட்ட விவிலிய நபர்கள் யாவர்? ஆபிராம் - ஆபிரகாமாக, சீமோன் - பேதுருவாக, சவுல் பவுலாக

11. 'மார்' என்ற சொல்லின் பொருள் என்ன? 'தூய'

12. ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டபின் ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் அவர்களுக்கு எங்கே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது? மார்த்தாண்டம்

13. வரவேற்பு மேடை அருகிலேயே அமர்ந்திருந்து ஆயரை வாழ்த்திய அவரது பெற்றோர் யார்? அன்பு தாய் திருமதி. விக்டோரியா ஜஸ்டஸும்

14. "இந்த ஏழை மக்களைப் பொறுத்தவரையில் ஒரு ஆயர் என்று சொன்னால் என்ன என்று தெரியாது. நான் பழைய தந்தை இலாறன்ஸ் ஆகவே அவர்கள் அறிவர். எனவே அவ்வாறு அவர்கள் தெரிந்து கொண்டால் போதும்'' என யாரைக் குறித்து ஆயர் கூறினார்?  ஊரகம் மிஷன்

15. திருத்தந்தை க்சிஸ்ட்டஸ் காலத்தில் திருச்சபையில் திருத்தொண்டராக இருந்த ஆயரி்ன் பெயர்கொண்ட புனிதர் யார்? மறைசாட்சி இலாறன்ஸ்

16. "இந்த மக்கள்தான் திருச்சபையின் சொத்து" என்று பேரரசரிடம் கூறியவர் யார்? மறைசாட்சி இலாறன்ஸ்

17. ''எங்கு மக்கள் இருக்கின்றார்களோ அங்குதான் திருச்சபையும் இருக்கிறதுஎன்று அடிக்கடி கூறுபவர் யார்? ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம்

18. "இறைவன் நடத்துவார். யாரையும் பார்த்து அல்ல நான் இறைப்பணிக்காக இறங்கியது. இது இறைவனின் திட்டமென்றால் ஒரு மகனைக் கூட கொடுத்த இறைவன் அறியாமலா ஏதாவது நிகழ்வது?'' என்று தனது குடும்ப சூழலைக் குறித்து பதிலளித்தவர் யார்? ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம்

19. "கடவுள் ஒருவரே பெரியவர். அவர் கரங்களில் எல்லாம் பத்திரமாக உள்ளது'' என்று அடிக்கடி கூறுபவர் யார்? ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம்

20. உலக கண்ணோட்டத்தில் உயர் பதவிக்கு ஆசைப்படாதவர், பெரியவராக காட்டிக் கொள்ளாதவர். அவ்வகையில் சிந்திக்கவோ ஆசைப்படவோ செய்யாத ஒரு எளிய இறைபணியாளர் எனப்படுபவர் யார்? ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம்

21. மதர் இம்மாகுலேட் ''தாழ்ச்சியின் கோபுரம் அவர்'' என்று யரைக் குறித்து கூறினார்? ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம்

22. 1982-ஆம் ஆண்டு கணவரை இழந்த திருமதி. லீலாம்மா தோமஸ் தனது ஆறாத்துயரத்தில் ஆயர் இலாறன்ஸ் எவ்வாறு அவர்களைத் தேற்றியதை எவ்வாறு கூறுகிறார்? அன்பு நிதியாகிய ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம்

23. ஆயர் இலாறன்ஸ் அவர்களை திருவனந்தபுரம் மறை மாநில குருகுல முதல்வராக நியமித்த போது முந்தைய குருகுல முதல்வர் மோண்சிஞ்ஞோர் குருவிளை அவர்களுக்கு நன்றி கூறியவர் யார்? ஆயர் பீலக்சினோஸ்

24. முதியவரான சிமியோனைப் போன்று மதிப்பிற்குரிய தந்தை குருவிளையும் மௌனமாக இவ்வாறு கூறுவார்:'' ''என்னை அமைதியுடன் போக விடுங்கள். ஏனெனில் என் கண்கள் இறைவனின் இரக்கத்தை கண்டு கொண்டன''. யார் யாரைக் குறித்து கூறியது? ஆயர் பீலக்சினோஸ் ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேமைக் குறித்து

25. "உங்களிடத்தில் தாராளம் திறமைகள் உண்டு. அதை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.'' ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் யாருக்கு அறிவுரை வழங்கினார்? திரு. அண்ணாத்துரை

26. 23-வது வயதில் வேலை தேடி அலைந்த ஒரு பக்தியான C.S.I. சபை உறுப்பினர் தாமாக மனமுவந்து மலங்கரை கத்தோலிக்க சபையில் சேர்ந்து டிரைவராக, டெக்னிசியனாக, ஆண் பணியாளராக, ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவர். மலங்ரை கத்தோலிக்கத் திருச்சபையில் பங்கு செயலர், மார்த்தாண்டம் மறை வட்ட மறைக்கல்வி செயலர், ஆற்றூர் மண்டல கோள்பிங் குடும்ப சிறப்பு பிரதிநிதி, பாஸ்டரல் கவுன்சில் உறுப்பினர் போன்ற முக்கிய பொறுப்புகளையும் பெறக் காரணமானவர் யார்? ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம்

27. 17-5-93 அன்று ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேமுக்கு எங்கே இருதய அறுவை சிகிச்சை நடந்தது? சென்னை வட பழனி விஜயா மருத்துவமனை

28. இருதய அறுவை சிகிச்சைக்கு முன் ''அச்சா! வருஷந்தோறும் ஞான் நடத்துந்ந துக்க வெள்ளி பிரார்த்தன ஈ வர்ஷம் மருந்துவாழ் மலையில் நடத்தணும். அச்சன் உடனே அவிடெ போய் பிரார்த்தன நடத்தியிட்டு இவிடெ வந்நால் மதி'' என்று ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் யாரிடம் கூறினார்? அருட்தந்தை மரிய அற்புதம்

29. கணிப்பொறி விஞ்ஞானியான டாக்டர் ஜெயகர் ஜோசப் ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் அறிவுரை வழங்கியதாக கூறிய வார்த்தைகள் எவை? ''மெய்யாக முடியுமானவைகளை மட்டுமே கனவு காண்பது நல்லது.'' (Dreaming is good only if it is reality).

30. ''குருத்துவ மாணவர்களுக்கு சரியான உச்சரிப்புப் பயிற்சி கொடுப்பதில் ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் கவனமாயிருந்தார் எனக் கூறியவர் யார்? ஆயர் வின்சென்ட்

31. மார்த்தாண்டம் பகுதியில் மக்களுக்கு சுமார் 50 ஆண்டு காலம் மோன்சிஞ்ஞோர் ஜோசப் குழிஞ்ஞாலில் எப்போது இறையடி சேர்ந்தார்கள்? 23-8-1983

32. "ஒரு சென்று பூமி அல்ல பெரிது. மனித உறவுகள்தான் பெரிது'' என ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் நிலைக்கல் பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க யாருக்கு உதவினார்? தந்தை நடமலை

 

10. பரந்த மறைபரப்புக் கண்ணோட்டம்

1.   1983-ம் ஆண்டு புதிதாக நியமனம் பெற்ற கிறிஸ்துவிளாகம் பங்கிற்கு அருட்தந்தை மரிய அற்புதம் அவர்களை அறிமுகம் செய்தவர் யார்? ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம்

2.   ''ஒரு புதிய இளம் தந்தையைப் பெற்றிருக்கிறீர்கள். தந்தையை உங்கள் சொந்த குடும்ப நபராகக் கருதி பாதுகாத்து, அன்பு செய்து வளரச் செய்ய வேண்டும்'' என்றவர் யார்? ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம்

3.   1980 முதல் 1989 ஆம் ஆண்டு வரை ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் அவர்களின் பணிகள் எவ்விடத்தை மையமாக கொண்டு அமைந்தது? நாகர்கோவில் கிறிஸ்துவிளாகம்

4.   'கடவுளை அறிவிப்பதற்கு பணம் அல்ல, அன்புதான் தேவை'' என்று அடிக்கடி கூறி வந்தவர் யார்? ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம்

5.   ''அன்பும் ஆர்வமும் உள்ள இடத்தில் தேவையான பணம் தானே வரும்'' என்றவர் யார்? ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம்

6.      1981 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டுக்குட்பட்ட காலங்களில் ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேமால் ஆரம்பிக்கப்பட்ட மலங்கரை கத்தோலிக்க ஆலயங்கள் எவை? செட்டிக்குளம், தேனிக் குளம், மந்தாரம்புதூர், குமாரபுரம்

7.   ஆலயத்தில் போதிய வசதி இல்லையே, ஆலயம் அழகாக இல்லையே, பெரிதாக இல்லையே என்பதை ஒரு குறையாகக் கருதும் மக்களுக்கு ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் எடுத்தியம்பினார்?  இயேசுவின் பிறந்த சூழலை

8.      ''ஏழையாய்ப் பிறந்து, ஏழையாய் வாழ்ந்த இயேசுவை, ஏழைகளுக்கு இயன்ற முறையில் வழிபாட்டு இடம் அமைத்து வழிபட்டால் போதும்'' என்று கூறுபவர் யார்? ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம்

9.   குமரி மாவட்ட காலநிலைக்கு ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் பரிந்துரைத்த கட்டிட அமைப்பு என்ன? சாதாரண ஓலை ஷெட்டுகள்

10. 1982-ஆம் ஆண்டு மண்டைக்காடு கலவரத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் எத்தனை கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்? நான்கு

11. மண்டைக்காடு கலவரத்தின் போது தீர்வு காண அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பு எது? வேணுகோபால் கமிஷன்

12. வேணுகோபால் கமிஷன் முடிவு என்ன? அரசு அனுமதியின்றி வழிபாட்டு இடங்கள் அமைக்கக்கூடாது

13. கிறிஸ்துவிளாகம் ஆலயத்திலிருந்து சுமார் 15 மீட்டர் தொலைவில் கணபதி சிலை ஒன்று அமைக்கப்பட்டது எப்போது? 1990 ஆம் ஆண்டு

14. இந்து சகோதரர் சிலரின் உயர்மட்ட சுவாதீனத்தினால் அரசு எத்தனை ஆண்டுகளாக வழிபாட்டு இடமாக பயன்படுத்தப்பட்டிருந்த கிறிஸ்துவிளாகம் ஆலயத்தில் வழிபாடு நடத்த தடை பிறப்பித்தனர்? சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல்

15. கிறிஸ்துவிளாகம் ஆலயத்தில் அன்று பங்கு தந்தையாக இருந்த தந்தை செலஸ்டீன் அடிகளாரை எப்போது காவல் துறையினர் திருப்பலியின்போது வந்து தாக்க முயற்சித்தனர்? 13-5-1990

16. கிறிஸ்துவிளாகம் ஆலயத்தில் எவ்வாண்டிலிருந்து இறைமக்கள் ஞானஸ்நானம் பெற்றிருந்தனர்? 1978 ஆம் ஆண்டு

17. எப்போது ஆயர் லாரன்ஸ் கிறிஸ்துவிளாகம் ஓடைப் பகுதி ஆலயத்தில் காவலரால் தாக்கப்பட்டார்? 30-5-1990

18. ஆயரின் கையில் இரத்தம் வழிந்தது எப்படி? காவலர் அவரை வெளியே தள்ள பனைமரக்கம்பின் கூர்மையான முள் அவரது கைப்பக்கத்தில் குத்தி கிழிந்தன. இரத்தம் கசிந்தது.

19. ''எவரையும் தண்டிப்பது என் நோக்கமல்ல. இது எங்கள் ஆலயம், சொந்த ஆலயம். இங்கு நாங்கள் வழிபடுவது எங்கள் அடிப்படை உரிமை. இதற்குரிய தடையை நீக்க வேண்டும். இதுவே எனக்குப் போதும்'' என்றவர் யார்? ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம்

20. கன்னியாகுமரி ''சாந்தோம்" பல் சமய உரையாடல் அரங்கில் வைத்து ''நான் ஒரு சமூக சேவையாளன். உண்மைதான். ஆனால் அதைவிட அதிகமாக நான் ஒரு கத்தோலிக்க குருவானவர். ஒரு சமூக சேவையாளர் என்பதைவிட மிகமிக அதிகமாக ஒரு கத்தோலிக்க குரு என்பதில்தான் நான் பெருமைப்படுகிறேன். அந்த பட்டத்தாலே அழைக்கப்படுவதையே நான் அதிகம் விரும்புகிறேன்'' என்று திருத்திக் கூறியவர் யார்? ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம்

21. பூனாவில் இருந்த மலங்கரை கத்தோலிக்கர்களில் திரு. தோமஸ்குட்டி பனச்சிக்கல் உருவாக்கிய அமைப்பு என்ன? 'கேரள கத்தோலிக்க சங்கம்'

22. 1982 ஆம் ஆண்டு பூனா மலங்கரை மக்களுக்கு பேராயர் அனுமதியுடன் சாகாயமாதா கோயிலில் யார் தலைமையில் திருப்பலி நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது? ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம்

23. "Health and Development என்ற துறையில் அதி உன்னத நபராக உயர்ந்துவர வேண்டிய ஒருவரை கட்டிப்போட்டுவிட்டனர். இருப்பினும் வெற்றி பெற எல்லா வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் சுகாதாரத் துறையில் VHAI-யினர் யாரைப் பற்றிக்கூறினர்? ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம்

24. 1980-ம் ஆண்டு மே மாதம் அருட் சகோதரி நிர்லீனா நாகர்கோவில் வந்து ஒரு மாதத்திற்குள் எத்தனை தொழுநோயாளர்களை கண்டுபிடித்தனர்? 82

25. "சகோதரி செய்தால் போதும். வேறு எவரும் இதற்கிடையில் வரமாட்டார்கள். இது நான் விரும்புவது. சகோதரியால்தான் நல்ல படியாக செய்ய முடியும்''. என அருட் சகோதரி நிர்லீனாவிடம் கூறியவர் யார்? ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம்




Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை