நித்திய ஸ்துதிக்குரிய 10 முறை பாட
நற்கருணை முன் ஆராதனைப்பாடல்
நித்திய ஸ்துதிக்குரிய
பரிசுத்த நற்கருணைக்கே
பக்தியாய் ஆராதனை
எத்திசையும் புரிவோம்
1
உமது உடனிருப்பை
அப்பத்துக்குள்ளே கொண்டு
எப்போதும் காப்பவரே
உம் பாதம் பணிகின்றோம்
2
உறவுக்கு எடுத்துக்காட்டாய்
என்னுள்ளே வாழ்பவரே
அன்பென்னும் அமுதமே
உன் பாதம் பணிகின்றோம்
3
இன்பத்தால் மகிழ்விப்பாய்
துன்பத்தில் தேற்றிடுவாய்
என்றென்றும் அரவணைப்பாய்
உம் பாதம் பணிகின்றோம்
4
உள்ளத்தில் வந்திடுவாய்
எண்ணத்தில் வந்திடுவாய்
மொத்தமாய் தந்திடுவேன்
உம் பாதம் பணிகின்றோம்
5
அப்பத்தின் வடிவத்தில்
பேழையில் வீற்றிருக்கும்
தலைவா தலைவணங்கி
உம் பாதம் பணிகின்றோம்
6
கருணையின் வடிவான
நற்கருணை நாதரே
கருணைக்கண் காட்டிடுவாய்
உம் பாதம் பணிகின்றோம்
7
அன்பென்னும் பாத்திரமே
அன்பில்லா எங்களுக்கு
அன்பினை தந்திடவே
உம் பாதம் பணிகின்றோம்
8
பாவத்தால் வெட்கிப்போன
உம்மாந்தர் உம் திருமுன்
உள்ளத்தால் அழுகின்றோம்
உம் பாதம் பணிகின்றோம்
9
விண்ணகத்தலைவரே
மண்ணக மண்ணோர்களை
அருள் அருளி மீட்டிடுவாய்
உம் பாதம் பணிகின்றோம்
10
நற்கருணை நாதரே
பாவிகள் எங்களையே
உம்மருளால் காத்தருள
உம் பாதம் பணிகின்றோம்
Comments
Post a Comment