15.7.2024 அன்று வணக்கத்துக்குரிய பேராயர் மார் இவானியோஸ் அவர்களது நினைவுத் திருநாளன்று உயர் பேராயர் இரஃபேல் தட்டில் அவர்கள் நிகழ்த்திய மறையுரை
15.7.2024 அன்று வணக்கத்துக்குரிய பேராயர் மார் இவானியோஸ் அவர்களது நினைவுத் திருநாளன்று உயர் பேராயர் இரஃபேல் தட்டில் அவர்கள் நிகழ்த்திய மறையுரை
மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபையின்
வணக்கத்திற்குரிய பேராயர் மார் இவானியோஸ் அவர்களின் நினைவை கொண்டாடுகின்ற போது மிகவும்
உணர்வு பொங்கிய சூழலில்தான் நான் இந்த பலிபீடத்தில் இவ்விடத்தில் உங்களோடு நின்று
கொண்டிருக்கின்றேன். பேராயர் மார் இவானியோஸ் அவர்களின் புண்ணியமான காலடிகளை தொட்டு
கும்பிட்டு நான் நினைவு அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றேன்.
மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் இக்கூடுகையில்
நான் பங்கேற்கும் போது நான் ஒரு போதும் இதைக் குறித்து தெரியாதவனாகவோ அன்னியனாகவோ
இருப்பதாக உணரவில்லை. ஒரே திருத்தூதரிடமிருந்து நம்பிக்கையை பெற்றுக் கொண்ட
குடும்பம் இரு வழித்தடங்களில் பயணித்து, பின்னர் வணக்கத்திற்குரிய பேராயர் மார் இவானியோஸ்
அவர்களின் தனிப்பட்ட வீரத்தோடும் திருச்சபையின் கத்தோலிக்க திருச்சபையின் ஒன்றிப்பில்
இணைந்து செயல்பட வேண்டும் என்ற தணியாத விருப்போடும் அவர் கத்தோலிக்க திருச்சபைக்கு
அனுப்பப்பட்டு ஒன்றிப்படைந்தார் என்ற வார்த்தையை பயன்படுத்த விரும்புகின்றேன். மறுஒன்றிப்பு
அல்ல ஒன்றிப்படைந்தார் என்ற வார்த்தையயே சரியானது.
அன்று நமது மூதாதையர்களான ஆயர்கள் நம்பிக்கையின்
பேருண்மைகளை பற்றிய விவாதங்களுக்காக மேற்கு நாட்டவர்களான மிஷினரிமார்களோடு போரிடவில்லை.
திருவழிபாட்டு முறைகளில் எங்களது மரபை தொடலாகாது அதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம்
என்ற கட்டாயப்படுத்துதலின் மூலமாகவே ஆகும். நீங்கள் அதற்கு துணையாக
நிற்காதவர்களும் வீரத்தோடு துணிந்து நின்றவர்களுமாக நான் உணர்கின்றேன். உங்களுடைய
திருவழிபாட்டு முறைகளில் கலந்து கொள்கின்ற போது “கிழக்குத் திருச்சபையின்
திருவழிபாடுகள் எவ்வளவோ அழகானது” என்பதை அனைவரையும் நினைவுபடுத்துவது போன்று
எனக்கு தோன்றுகிறது. இத்தகைய ஆயர்களின் வீரமும் துணிவும் இன்றைய காலகட்டத்திலும்
கத்தோலிக்க திருச்சபையின் கூட்டமைப்பில் மகிழ்வோடும் பெருமையோடும்
கொண்டாடுகின்றீர்கள் என்பதில் எங்களுடைய விருப்பமும் வாழ்த்துக்களும் தெரிவிக்கின்றேன்.
மார் இவானியோஸ் அவர்கள் 1930
செப்டம்பர் 20 அன்று பெருநாட்டிலிருந்து வெளியேறும் போது ஐந்து நபர்கள் அவர்களுக்கு உற்றத்
துணையாக நின்றார்கள். இஃது ஒரு அடையாளப்படுத்துகின்ற எண்ணிக்கையாக அமைந்திருந்தது.
இன்று நீங்கள் 5 இலட்சம் கத்தோலிக்க நம்பிக்கையாளர்களை உடையவர்களாக இருக்கின்றீர்கள். பத்துக்கும்
மேற்பட்ட மறைமாவட்டங்களும் ஆயர்களும் உள்ளனர். 760 க்கும் மேற்பட்ட குருக்களும்,
250 க்கும் மேற்பட்ட துறவு சபைக் குருக்களும் ஏறக்குறைய 2000-க்கும்
மேற்பட்ட எஸ் ஐ சி மற்றும் டி.எம்போன்ற துறவு சபைகளின் அரு்கன்னியர்களும், ஒரு
இறையியல் கல்லூரியும், 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளும், 50-க்கும் மேற்பட்ட மேனிலைப்
பள்ளிக்கூடங்களும் கொண்டு உள்ளீர்கள். 86 உயர் நிலை பள்ளிக்கூடங்களும், 120க்கும்
மேற்பட்ட துவக்க பள்ளிக்கூடங்களும் உங்களுக்கு உண்டு. உங்களுடைய இன்றைய வளர்ச்சியை
பேராயர் மார் இவானியோஸ் அவர்களுக்கு இறைவன் அளித்த அருட்கொடைகளின் தொடர்ச்சியாக
நம்புகின்றேன். நீங்கள் கத்தோலிக்க ஒண்டிப்பில் வந்ததனால் எந்த விதமான குறையும்
ஏற்படாமல் அகில உலக திருஅவையில் பரிபூரண உறுப்பினராக கூட்டுப் பொறுப்பு கொண்ட ஒரு
திருத்தூதுவ திருச்சபையாக நிலை கொள்ள முடிகிறது எவ்வளவோ பேறு பெற்றதாகும்.
பேராயர் மார் இவானியோஸ் அவர்களை பற்றி எண்ணுகின்ற
போது ஒரு ஆயர் என்னோடு பகிர்ந்து கொண்டவை பற்றி நான் மறக்காமல் மீண்டும் நினைவு கூர
விரும்புகிறேன். பிரிந்திருந்த அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து கத்தோலிக்கத் திருஅவையின்
ஒன்றிப்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பமும் இலட்சியமுமாக இருந்தது.
அதற்கான பணிப் பொறுப்பை அன்றைய ஆயர்ப் பேரவை மிகப்பெரிய பேரறிஞரான விவேகம் மிகுந்த
ஆயர் மார் இவானியோஸ் ஒப்படைத்தது.
பலவிதமான இடறல்களுக்கு மத்தியில் மறுஒன்றிப்பு
என்னும் கடலை கடந்து வந்தடைந்தார். அவர் ஒரே கட்டாய எண்ணத்தை மட்டுமே கொண்டிருந்தார்.
எங்களது திருவழிபாட்டைச் சார்ந்த நிலையில் முழு சுதந்திரமும் எங்களுக்கு வேண்டும்.
ஒரு தனியான கிழக்குத் திருச்சபை என்ற முறையில் அதற்கான முழு பொறுப்புகளையும்
எங்களுக்கு நல்க வேண்டும் என்று அவர் வேண்டி இருந்தார்.
நான் மிகவும் மகிழ்கிறேன். இந்தியா
முழுவதும் கொண்ட ஆட்சி அமைப்பு முறையை முதலில் மலங்கரை கத்தோலிக்க திருச்சபைக்குத்
தான் கிடைத்தது. சிறியன் மலபார் கத்தோலிக்கத் திருச்சபைக்கு அல்ல. எண்ணிக்கையில்
குறைவாக இருந்ததனால் பரிசோதனை என்ற நிலையில் உரோமாபுரி மலங்கரை கத்தோலிக்க
திருச்சபைக்கு இதனை வழங்கியது. யாருக்கேனும் எதிர்ப்பு உண்டெனில் அவர்கள்
முன்னோக்கி வரட்டும் என்று இந்த பரிசோதனை நிலையை ரோமாபுரி முன்னிறுத்தியது. பிரச்சனைகள்
எதுவுமே இல்லை எனக் கண்டவாறு ரோமாபுரி 2017 அக்டோபர் ஒன்பதாம் நாளில் இந்தியாவின்
அனைத்து ஆயர்களுக்கும் எழுதப்பட்ட கடிதத்தில் வெளிப்படையாக இவ்வாறு அறிவித்தது.
“Here by all the territories in India, not yet included
in other 30 Dioceses through the eparchy of Shamshabad, ascribed
to the pastoral jurisdiction of the syro Malabar Church” இவ்வாறு நான்
எங்களையே தாழ்வாக நினைத்துக் கூறுவதாக இல்லை. எங்களுக்காக வழியை தயாரித்துத் தந்த
திருமுழுக்கு யோவான் தான் நீங்கள். உங்களால் தான் எங்களுக்கும் இந்தியா முழுவதும்
உள்ள ஆட்சி அமைப்பு முறை பெற்றுக் கொள்ள முடிந்தது.
நேற்றைய தினம் மாலை மன்றாட்டுக்குப் பின்னர்
விளக்குகளேந்தி நீங்கள் பாடினீர்கள். “வாழ்க! வாழ்க!வாழ்க மார் இவானியோஸ்!” இப்பாடலைப்
பாடியவாறு நீங்கள் உங்களுடைய விளக்குகளை உயர்த்தி ஒளியை விண் நோக்கி வீசியபோது நான்
எனது மனதில் வணக்கத்திற்குரிய பேராயர் மார் இவானியோஸ் அவர்களை காண்பதாக
கொண்டிருந்தேன். அவர் இவ்வாறு வீசப்பட்ட ஒளி விளக்குகளுக்கு மத்தியில்
இறைவனிடமிருந்து அருளை பெற்றுக் கொண்டிருந்தார்.
விண்ணுலகின் நட்சத்திரங்களைப் போலவும்
பூமியின் மணலைப் போன்றும் நான் உனக்கு சந்ததியை நல்குவேன். இன்று மலங்கரை
கத்தோலிக்கத் திருச்சபை யாரை விடவும் சிறியதாக இல்லை. சுயமாக மற்றுத்
திருச்சபைகளைப் போன்றே காலூன்றி நிற்பதற்கு வலிமை கொண்ட நிலையான வலிமையான கிழக்கு
திருச்சபையின் உறுப்பினர்களே நீங்கள்.
பழைய ஏற்பாட்டில் மோசேவைப் போன்று கடல்
கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு இறைமக்களை வந்தடையச் செய்த நவீன கால மார் தோமா
கிறிஸ்தவர்களின் மோசேக்கு இணையானவர் தான் பேராயர் மார் இவானியோஸ். வணக்கத்திற்குரிய
பேராயர் அவர்களின் நினைவை நீங்கள் கொண்டாடும் போது நான் எப்போதும் போல இப்போதும் உங்களோடு
கூறுவேன். உங்களுடைய பொறுப்பு இறைவாக்கினர் யோசுவாவின் பணிப்பொறுப்பைத் தொடர்ந்து
செயல்படுத்தலாம். கடலை கடக்கச் செய்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு மக்களைச் சேர்த்த
பணிகளை நிவர்த்தி செய்த பேராயர் மார் இவாணியோஸ் அவர்கள் உங்களோடு கூறுகிறார். யோசுவா
செய்த்து போன்று இறை மக்களை நீங்கள் கூடுதலாக வலுப்படுத்தவும். இறைமக்களை கூடுதலாக
வலிமைப்படுத்தவும். இறைமக்களை கூடுதலாக ஆழ்நிலைக்கு வழிநடத்தவும் வேண்டும்.
கர்தினால் ஹென்றி நியூமான் என்பவரை பற்றிப்
கூறுவதைப் போன்று நானும் கூற விரும்புகிறேன். கேரளா திருச்சபையின் மலங்கரை
கத்தோலிக்க திருச்சபை வழியாக உலகளாவிய திருச்சபைக்கு வழங்கிய கர்தினால் நியூமான்
தான் வணக்கத்திற்குரிய மேன்மை மிகு மார் இவானியோஸ்.
நீங்கள் செய்ய வேண்டிய மூன்று பணிக்கடமைகளைக்
குறித்து நினைவுபடுத்திக் கொண்டு நான் எனது வார்த்தைகளை நிறைவு செய்ய
விரும்புகிறேன்.
முதலாவதாக, எவ்வித தடைகளும் இல்லாமல் கிழக்குத்
திருஅவை மரபின் அழகை உங்களுடைய திருவழிபாட்டு முறையில் நீங்கள் கடைப்பிடிக்க
வேண்டும்.
கத்தோலிக்கத் திருஅவையின் ஒன்றிப்பில் இணையும் போது கிழக்குத்
திருஅவைகளின் முறைகளை இழக்க வேண்டும் என வரலாற்றுப் பக்கங்களில் உள்ளதைப் போன்ற பயம்
தேவையில்லை என நீங்கள் நூறு ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னரே அதனை மெய்ப்பித்த பாடப்
புத்தகமாகும். கிழக்கு திருவழிபாட்டில் எக்குறைவும் இல்லை. மேற்கு திருவழிபாட்டைப்
போன்றே கூடுதலாக அழகானவை என இவ்வுலகோடு தெரிவிக்க வேண்டிய பொறுப்புணர்வு
மிகப்பெரியது என நான் உங்களை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
இரண்டாவதாக, பேராயர் மார் இவானியோஸ் இன்று இப்போது
வாழ்வதாக இருந்திருந்தால் இன்னும் பல திருச்சபைகளை அகில உலக கத்தோலிக்க
திருச்சபையின் ஒன்றிப்பிற்கு கொண்டு வர முயன்றிருப்பார். கூட்டுப் பொறுப்புணர்வோடு
அனைத்து திருச்சபைகளையும் ஒன்றிப்பில் ஒன்றிணைக்க முயலவேண்டும்.
நான் திருச்சூரில் இருந்து வருவதால்
உங்களோடு கூற விரும்புகிறேன். சுந்திர சுறியானி சபையின் ஆயர் பவுலோஸ் மார் பீலக்சீனோஸ்
ஆண்டகை முதலாவதாக கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைந்த போது அவரை பணிவன்போடு
ஏற்றுக்கொள்ள மலங்கரை கத்தோலிக்க திருச்சபை காண்பித்த அன்பும் ஆதரவும் ஒரு
அடையாளமாக இருந்தது. எதையும் இழக்க வேண்டியதில்லை. ஆயர் என்னோடு கூறினார், “நான்
இதனை பல ஆண்டுகளாக விரும்பி இருந்தேன். கத்தோலிக்க ஒன்றிப்பில் வந்து இணைந்தால்
எங்களுடைய சுதந்திர உணர்வை இழக்க நேரிடுமோ என ஐயம் கொண்டேன். எனவே தான் நாங்கள்
வராமல் இருந்தோம். அவர் இங்கு ஒன்றிணைந்த பின்னர் என்னோடு கூறினார். எதுவுமே
நாங்கள் இழக்கவில்லை. எங்களது மேன்மையை இன்னும் அதிகமாக அறியத் துவங்கினோம். எனவே
மலங்கரை திருச்சபையின் பொறுப்புணர்வு என்பது இந்த ஒன்றிப்பை கூடுதலான இணைப்பு
பெற்றதாக மாற்ற பாடுபட வேண்டும். அது விவாதங்கள், உரையாடல்கள், அரவணைப்பு மற்றும்
கரம் கோர்த்தல் மூலமாகவும் நிறைவேறலாம். திருத்தூதர் தோமாவின் மக்களாகிய நாம் ஒரே
குடும்பமாக மாறும் வரை மலங்கரை சபைக்கு தூங்குவதற்கு நேரம் இல்லை என்பதை பகுத்துணர்ந்து
வாழ உங்களை நினைவு படுத்த விரும்புகிறேன். அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ
அவற்றையெல்லாம் செய்ய வேண்டும். எவ்வளவு தூரம் பயணங்கள் மேற்கொள்ள முடியுமோ அதுவும்
நிறைவேறிட உங்களுக்கு இயலுட்டும்.
மூன்றாவதாக, நான் உங்களை புகழ்த்திக்
கூறுகின்ற ஒரு நிலை உண்டு. கிழக்குத் திருஅவைகள் நற்செய்தி அறிவிப்பு மறைப்பணிகளை செயல்படுத்திய
திருச்சபைகள் அல்ல, என்னும் தப்பெண்ணம் கொண்டவர்களை வரலாற்றில் திருத்தி எழுத மலங்கரை
கத்தோலிக்கத் திருச்சபை முன்னோக்கி வந்திருக்கின்றது. மிகுந்த ஆர்வத்தோடு மறைப்பணித்தளங்களில்
மலங்கரை திருச்சபை செயல்படுவதை நான் நேரடியாக கண்டுள்ளேன். ராஜஸ்தான் மற்றும்
ஒரிசா போன்ற இடங்களில் சென்றபோது மலங்கரை திருச்சபையின் மக்கள் மிகவும் ஆர்வத்தோடு
அவர்களது திருவழிபாட்டு முறையை அன்புடன் பாதுகாத்துக் கொண்டு மற்றவர்களையும்
இணைத்து பணிகளை செய்து வருகின்றனர். ஒரிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு
சென்றபோது உங்களுடைய சமூகத்தில் இணைக்கப்பட்ட மலையாளத்தவர்கள் அல்லாத சகோதரர்கள்
பழங்குடியினர் மக்களாக அல்லது இன பாகுபாடு கொண்டவர்களாக உள்ளவர்கள் என்னோடு
கூறினார்கள், “We really
feel at home with Malankara Liturgy and Malankara Church” “உண்மையாகவே,
நாங்கள் மலங்கரை திருச்சபையிலும் திருவழிபாட்டிலும்
ஒரே குடும்ப உணர்வை கொண்டுள்ளோம்”. கத்தோலிக்க திருச்சபையின் கூட்டமைப்பில் பணி
புரிவதற்கான வழி இன்னும் நிறைவடையவில்லை. இன்னும் பல தூரங்கள் பயணம் செய்ய வேண்டி
உள்ளது. எதையுமே இழக்காமல் கத்தோலிக்க ஒன்றிப்பில் இணைந்து விட முடியும் என்று
மற்றவர்களுக்கு மெய்ப்பித்தைப் போன்று மற்றவர்களையும் இணைத்துக் கொண்டு வழிநடக்க உங்களால்
முடியட்டும் என வாழ்த்துகிறேன்.
நான் உங்களுடைய மறைப்பணிகளை பற்றி உங்களோடு
புகழ விரும்புகின்றேன். மலங்கரை கத்தோலிக்க திருச்சபை மறைப்பணித் தளங்களில்
மிகுந்த ஆர்வத்தோடு செயல்பட்டு வருகிறது. அவற்றை நேரடியாக கண்டதனாலும்
அனுபவித்தாலும் நான் உறுதியாக கூறுகிறேன்.
நாம் எண்ணுவதைப் போன்று அல்ல. நமது திருவழிபாட்டு முறையோடு நம்பிக்கை கூட்டமைப்பிற்கு புதிதாக வருகின்றவர்களுக்கு
பல நேரங்களிலும் அகன்று நிற்பது போன்ற உணர்வு ஏற்படும். அது சற்றுக் கடினமானது, குழப்பம் நிறைந்தது மற்றும் நீளமானது போன்ற எண்ணங்கள்
நமது மனதில் இருக்கிறது என்றால், அது அப்படி இல்லை என்று மலன்கரை கத்தோலிக்க
திருச்சபை நிரூபித்துக் காட்டி இருக்கிறது. இத்தகைய ஒரு நிலைக்கு மலங்கரை கத்தோலிக்க
திருச்சபை பெரும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
மறைப்பணித்தளங்களில் கிழக்குத் திருஅவைகளால்
பணிகளை செய்ய முடிகிறது என்றால் ஒரு சில கத்தோலிக்க திருச்சபைகளால் ஆகும். அவை: 1.
உக்ரைன் கத்தோலிக்க திருச்சபை, 2. மல்கைட்
கத்தோலிக்க திருச்சபை, 3. மலபார் கத்தோலிக்க திருச்சபை, 4. மலங்கரை கத்தோலிக்க
திருச்சபை. எனவே மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட நமக்கு இயலட்டும். நான் எனது
வார்த்தைகளை நிறைவு செய்கிறேன்.
முலாவதாக, வாழ்க்கைகளால் சாட்சியமாகின்ற ஒரு
மரபு. நமது மூதாதையர்கள் நம்மை கற்பித்தது மறைக்கல்வி வகுப்புகளில் அல்ல; நமது
மூதாதையர்கள் நமது வீடுகளில் அவர்களது வாழ்க்கையால் இவற்றை
உரைத்திருக்கின்றார்கள். அத்தகைய குடும்பங்களின் மேன்மையும் நம்பிக்கை
பரிமாற்றவும் நமக்கு பெரிதும் உதவி புரிந்தது. நாம் அதனை தொடர வேண்டும்.
இரண்டாவதாக, மறுஒன்றிப்பு இயக்கம் நிறைவடையவே
இல்லை. மார் இவானியோஸ் ஆண்டகையின் நினைவுத் திருநாளை ஒவ்வொரு ஆண்டும்
கொண்டாடுகின்ற போது அவர் துவங்கி வைத்த பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்ற நினைவுப்படுத்தலாகும்.
நம்முடைய மனசாட்சிக்கு ஒரு பாரம் இருக்க வேண்டும். எத்தகைய முறையில் பிறரை ஒன்றிணையச்
செய்ய முடியும் மற்றும் ஒன்றிணைத்து வழிநடத்த முடியும் என்பதை பற்றி சிந்திக்க
நாம் தூண்டப்பட வேண்டும்.
கடைசியாக உங்களை நினைவுப் படுத்த
விரும்புகிறேன் மலங்கரை கத்தோலிக்க திருச்சபையும் மலபார் கத்தோலிக்க திருச்சபையும்
கிழக்கு திருஅவைகளின் மறைப்பரப்பு பணிகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழட்டும்.
நாமிருவரும் இப்பணிகளை செய்வதற்கான திறமை
உண்டு. செய்வதற்கான சூழல்கள் உள்ளன. அதற்கான வாயப்புக்களும் உள்ளன. அதிகப்படியான மறைப்
பணிகளுக்கு நாம் தூண்டப்பட்டு புறப்பட வேண்டும்.
திருத்தூதர் தோமா அவர்கள் கூறியது
மிகப்பெரிய உண்மையாகும். “நாமும் அவரோடு சென்று அவரோடு இறப்போம்.” மரணம் வரையிலும்
ஆண்டவருக்காக வாழ்வதற்கு நமக்கு இயலட்டும். தோமா கேட்ட கேள்விக்குப் பதிலாக
ஆண்டவர் இவ்வாறு கூறினார், “நானே வழி, நானே உண்மை, நானே வாழ்வு.” திருத்தூதர் தோமாவின் நம்பிக்கை அறிக்கையை மார்க்கம்
என அழைக்கிறோம். இத்தகைய
மார்க்கத்திற்கு பிறரையும் கொண்டு வர நம்மால் இயலட்டும்.
இப்படிப்பட்ட பல்வேறு வாய்ப்புகளை
நினைவுபடுத்துகின்ற நினைவுத் திருநாளாக இது மாறுவதற்கு இறைவன் அருள் புரிய
வேண்டுகிறேன். நமது திருச்சபையின் மிகப்பெரிய சக்தி எனப்படுவது புனித கன்னி
மரியாளாவார். மலங்கரை கத்தோலிக்க திருச்சபையாக இருந்தாலும் மலபார் கத்தோலிக்க
திருச்சபையாக இருந்தாலும் கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகளின் திருவழிபாட்டு
நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைவது அன்னை மரியாவின் பரிந்துரை வேண்டிய மன்றாட்டுக்களால்
ஆகும். மரியன்னையோடு பரிந்துரை வேண்டுதல் இன்றி எந்த வேளைச் செபங்களும்
நிறைவடைவதில்லை.
அன்னை மரியாவின் பரிந்துரை வேண்டுதல்கள்
உங்களோடும் உங்களுடைய திருச்சபையோடும் உங்களுடைய முயற்சிகளோடும் எப்போது
இருக்கட்டும் என ஜெபிக்கிறேன். இத்தருணத்தில் என்னை நினைவு கூர்ந்து அழைக்கவும்
செய்த உங்களுடைய நல் மனதிற்கு நன்றி கூறுகிறேன். மலபார் கத்தோலிக்க திருச்சபைக்காக
ஜெபிக்கவும் வேண்டுகிறேன்.
தந்தை மகன் தூய ஆவிக்கு புகழ். ஆமென்.

Comments
Post a Comment