ஆயிரம் ஆயிரம் அதிசயங்கள் Lyrics
ஆயிரம் ஆயிரம் அதிசயங்கள்
அனுதினம் ஆற்றிடும் தூயவரே
காவலாய் உம் துணை நாடி வந்தோம்
அடியவர் எமை தினம் ஆதரிப்பீர்
ஆயிரம் ஆயிரம் அதிசயங்கள்
அனுதினம் ஆற்றிடும் தூயவரே
பதுவையாம் நகரில் பிறந்தவரே
பரமனின் அன்பில் உயர்ந்தவரே
புதுமைகள் புரியும் புண்ணியரே
போற்றினோம் எங்கள் காவலரே – ஆயிரம்
கேட்பதை கேட்க யாம் மறந்தாலும்
கொடுப்பதை கொடுக்க நீர் மறப்பதில்லை
கேட்பதை மறப்பது இல்லை என்போர்
கேட்குமுன் வழங்கும் வள்ளல் அன்றோ– ஆயிரம்
இயேசுவை உன் திருக்கரங்களிலே
ஏந்திய பெருமை பெற்றவரே
இயேசுவின் அருளை எங்களுக்காய்
எந்நாளும் வேண்டும் அந்தோனியாரே – ஆயிரம்
Comments
Post a Comment