முதல் மறுஒன்றிப்பு ஆண்டு விழாவில் பேராயர் மார் இவானியோஸ் அவர்கள் வழங்கிய உரை. The Lamp (1931 December) என்னும் மாத இதழில் வெளியிடப்பட்டதன் மொழிபெயர்ப்பு
1931 செப்டம்பர் 28ஆம் தேதி திருவல்லா திருமூலபுரம் என்னும் இடத்தில் வைத்து நடந்த மறுஒன்றிப்பு ஆண்டு விழாவில் பேராயர் மார் இவானியோஸ் அவர்கள் வழங்கிய உரை. ( The Lamp ( 1931 December ) என்னும் மாத இதழில் வெளியிடப்பட்டதன் மொழிபெயர்ப்பு அன்புக்குரிய மேதகு பேராயர்களே, சகோதர ஆயர்களே, குருக்களே, துறவியர்களே, சகோதர சகோதரிகளே, எபேசு திருச்சங்கத்தின் 1500 ஆம் ஆண்டு விழாவும் மறுஒன்றிப்பின் முதல் ஆண்டு விழாவும் இணைந்து ஆடம்பரமாக கொண்டாடும் இவ்வேளையில் விசுவாச சமூகத்தோடு கத்தோலிக்க திருச்சபையின் முக்கியமான ஆயர்களோடும் குருக்களோடும் இணைந்து பங்கு கொள்ளும் இத்தருணம் மிகவும் உன்னதமான சந்தர்ப்பம் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை. எபேசு திருச்சங்கத்தில் உயர்த்தி காட்டப்பட்ட நம்பிக்கை அறிக்கையே எளியவனாகிய என்னை கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய வைத்தது. இவ்விரு நிகழ்வுகளும் இணைத்து கொண்டாடுவதன் நோக்கமும் இதுவே தான். எபேசு திருச்சங்கம் வெளியிட்ட நம்பிக்கை அறிக்கை கத்தோலிக்க திருச்சபையின் ஒரு மைல்கல்லாகவே இருந்தது எனக் கூறலாம். திருச்சபையில் புனித கன்னி மரியாவின் முக்கியமான நிலையை அங்கீ...