முதல் மறுஒன்றிப்பு ஆண்டு விழாவில் பேராயர் மார் இவானியோஸ் அவர்கள் வழங்கிய உரை. The Lamp (1931 December) என்னும் மாத இதழில் வெளியிடப்பட்டதன் மொழிபெயர்ப்பு
1931 செப்டம்பர் 28ஆம் தேதி திருவல்லா திருமூலபுரம் என்னும்
இடத்தில் வைத்து நடந்த மறுஒன்றிப்பு ஆண்டு விழாவில் பேராயர் மார் இவானியோஸ்
அவர்கள் வழங்கிய உரை.
(The Lamp (1931 December) என்னும் மாத இதழில் வெளியிடப்பட்டதன் மொழிபெயர்ப்பு
அன்புக்குரிய மேதகு பேராயர்களே, சகோதர ஆயர்களே, குருக்களே,
துறவியர்களே, சகோதர சகோதரிகளே,
எபேசு திருச்சங்கத்தின் 1500 ஆம் ஆண்டு விழாவும் மறுஒன்றிப்பின் முதல் ஆண்டு விழாவும் இணைந்து ஆடம்பரமாக
கொண்டாடும் இவ்வேளையில் விசுவாச சமூகத்தோடு கத்தோலிக்க திருச்சபையின் முக்கியமான ஆயர்களோடும்
குருக்களோடும் இணைந்து பங்கு கொள்ளும் இத்தருணம் மிகவும் உன்னதமான சந்தர்ப்பம்
என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
எபேசு திருச்சங்கத்தில் உயர்த்தி காட்டப்பட்ட நம்பிக்கை
அறிக்கையே எளியவனாகிய என்னை கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய வைத்தது.
இவ்விரு நிகழ்வுகளும் இணைத்து கொண்டாடுவதன் நோக்கமும் இதுவே தான். எபேசு
திருச்சங்கம் வெளியிட்ட நம்பிக்கை அறிக்கை கத்தோலிக்க திருச்சபையின் ஒரு
மைல்கல்லாகவே இருந்தது எனக் கூறலாம். திருச்சபையில் புனித கன்னி மரியாவின்
முக்கியமான நிலையை அங்கீகரிக்கவும், அகில உலக திருச்சபையில் தலைமை
மறைமுதுவரான திருத்தந்தையின் முதன்மை
அதிகாரத்தை அங்கீகரிக்கவும் எடுத்துக் கூறவும், கத்தோலிக்க அப்போஸ்தலிக்க ஒரே தூய
கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கையை உயர்த்திக் காட்டவும் அது துணை புரிந்தது.
பேதுருவின் வழிமரபினரான திருத்தந்தை கிறிஸ்துவின் இவ்வுலகப்
பணியாளர் என்றும் அவரே உண்மை அதிகாரம் கொண்டவர் என்றும் அவரே அகில உலக
திருச்சபையின் தலைவர் அவரே என்ற உண்மையை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்ட நிகழ்வு தான்
இது.
புனித இறை அன்னையின் அமலோற்பவத்தை குறித்த நம்பிக்கையை
நம்பவும் எடுத்துக் கூறவும் செய்கின்ற யாவருக்கும் கத்தோலிக்க ஒன்றிப்பில் இணைந்து
இருந்தாலே மீட்பும் விண்ணகப் பேரினபமும் நிச்சயமாக கிடைக்கும்.
இந்நிகழ்வுக்கு தலைமை வகிக்கும் மேதகு பேராயர் அவர்கள் நான்
பெற்றுக் கொண்ட இறை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் அவற்றை பகிர்ந்து கொள்ள
நானும் விரும்புகிறேன். அத்துடன் நான் பெற்றுக் கொண்ட ஆன்மீக செல்வங்களைப்
பற்றியும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இறைவன் எனக்காக தந்த நல்ல காரியங்களை உங்களோடு கூற
விழைகிறேன். இது நன்றி கூறலின் நாளாகும். கடந்த 9 நாட்களாக நாம் ஆன்மீக
தயாரிப்பில் நிலைத்திருந்தோம். பலவிதமான பக்தி முயற்சிகள் மற்றும் ஜெபங்கள் வழியாக
இறைவனின் மிகப்பெரிய அருளுக்காக நன்றி கூறி வந்தோம். மீண்டும் நாம்
வியப்புக்குரியதாக இறைவன் நம்மை ஒப்படைத்த இப்பொறுப்புணர்வை நிறைவேற்றி முழுமை அடையச்
செய்வதற்காக மன்றாடுவோம்.
பிரிந்து நிற்கின்ற நமது சகோதரர்களை நமது கூட்டமைப்பில் அழைத்து
வர நாம் தயாராவோம். இந்த கொண்டாட்ட நிகழ்வுகள் வராப்புழை பேராயர் மற்றும்
எர்ணாகுளம் பேராயர் மற்றும் சகோதர ஆயர்களின் உடனிருப்பில் முடிவடையவிருக்கின்றது.
தூய ஆவியின் தூண்டுதலால் மட்டுமே நான் கத்தோலிக்க
திருஅவைக்குள் நுழைந்தேன். இறைவனின் திருஅவையாகிய புனித கத்தோலிக்க திருச்சபை மீட்பின்
பேழை ஆகும். இறையரசு கிறிஸ்து வழியாக இந்த பூமியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இறைவன் மனிதராக அவதரித்தது அனைவரையும் ஒன்றிணைப்பதற்காகவே
ஆகும். கத்தோலிக்கம் அப்போஸ்தலிக்கம் ஒரே தூய்மையானதே கத்தோலிக்க திருச்சபை. இந்த
உண்மையின் அடித்தளமாகும். இது குற்றமற்றதாகும். இது வரலாற்று மரபு கொண்டதாகும்.
இந்த விசுவாச சமூகத்தின் பூமியில் காணப்படும் மையம்
இறைவனால் நியமிக்கப்பட்ட திருத்தந்தையின் அதிகாரமாகும். திருத்தூதர் பேதுரு
என்னும் பாறையின் மேல் நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும்.
அன்புக்குரிய ஆயர்களே
இப்பேருண்மையை அறிந்து கொள்ள 25 ஆண்டுகள் எனக்கு தேவைப்பட்டன. நான் ஒரு யாக்கோபாயா திருச்சபையின் உறுப்பினராக
இருந்தேன். இத்திருச்சபையின் மரபுகளையும் நம்பிக்கைகளையும் ஆர்வத்தோடு கடைபிடித்து
வாழ்ந்து வந்தேன். ஆனால் கிறிஸ்தவ திருச்சபையைப் பற்றிய படிப்பினை யாக்கோபாயா
திருச்சபையின் உண்மை நிலையை பற்றி ஐயம் ஏற்பட வைத்தது. திருத்தூதுவ மரபும் அருளடையாள
வாழ்வும் அத்திருச்சபையில் நிலைத்திருந்தது. ஆயினும் உண்மை திருச்சபையின் நான்கு
பரிணாம நிலைகளை என்னால் கண்டடைய அதனில் முடியவில்லை. தூய கத்தோலிக்க திருச்சபையில்
மட்டுமே இந்த நான்கு பரிணாமங்களும் நிலைத்திருக்கின்றன. அதனை யாக்கோபாயா
திருச்சபையில் கண்டடைவதற்கு நான் என்னால் முடிந்த அளவுக்கு முயற்சிகள்
மேற்கொண்டேன்.
அதற்காக பலவிதமான கிழக்கு திருச்சபை மரபுகளை கற்கவும்
இறையியலாளர்களின் சிந்தனைகளை உட்கொண்டு அதற்காக முயன்று கொண்டிருந்தேன். ஆனால்
நான் தேடிய முழுமையை எங்குமே என்னால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
இறுதியாக தூய ஆவியார் திருத்தந்தையால் வழிநடத்துகின்ற
புனிதமான கத்தோலிக்க திருச்சபையில் அவற்றை கண்டடைய அவரது அருள் எனக்கு துணை
புரிந்தது. இது பாறை என்பது மட்டுமல்ல கிறிஸ்துவால் நியமிக்கப்பட்ட உண்மை
திருச்சபை என்றும் நான் கண்டடைந்தேன்.
புனித மத்தேயு எழுதிய நற்செய்தி 16 ஆம் அதிகாரம் 18 ஆம் வசனத்தில் இவ்வாறு
கூறப்பட்டு இருக்கின்றது. “எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன்
பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள்
அதன்மேல் வெற்றி கொள்ளா.”
திருச்சபையின் நான்கு தன்மைகளும் புனிதமான கத்தோலிக்க
திருச்சபையில் மட்டுமே நிலைத்திருக்கிறது என்ற உண்மையை நான் அடைந்து கொண்டேன்.
இருப்பினும் எனது திருச்சபை வாழ்விலும் ஒழுக்கத்தை
கடைபிடித்து வளர என்னால் முடிந்த அளவு முயன்று கொண்டிருந்தேன். எனது இளம் வயது
முதலே ஆன்மீக ஒழுக்கத்தை நான் கடைபிடித்து வாழ்ந்து வந்திருந்தேன். யாகூபாய
திருச்சபையில் துறவு நிறுவனங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் நான் அதற்காக
சிந்தித்து அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வந்தேன்.
புனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள் என்னை பலவாறு கவர்ந்தன. புனித
பசேலியோசின் துறவு வாழ்வு எனது கிழக்கு மரபு சார்ந்த துறவறச் சிந்தனைகளை வலுப்படுத்தின.
மேற்கு மற்றும் கிழக்கு துறவு வாழ்வு வாழ்ந்த திருமறைத் தந்தையர்களின் வாழ்க்கைப்
பாடங்களை நான் தொடர்ந்து கற்றுக் கொண்டிருந்தேன். புனித பிரான்சிஸ் அசிசி மற்றும்
புனித இக்னேசியஸ் லயோலா ஆகியோரின் வாழ்க்கை முறைகளும் துறவு வாழ்வும் எனது துறவு
வாழ்வில் அதிகமான உள்பார்வையை கிடைக்கத் தூண்டியது.
புனித பெனடிக்டின் பெயர் பெற்ற மூன்று துறவு முறைகளுக்கு
அப்பால் முழுமை என்னும் நான்காவது முறை என்னை அதிகமாக கவர்ந்தது. புனித பிரான்சிஸ்
டி சாலஸ் துறவு வாழ்வை பற்றிய அதிகமான பாடங்களை நமக்கு பகிர்ந்து அளித்தார்.
கத்தோலிக்க திருச்சபையின் புனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி
அதிகமாக அறியவும் அவற்றை உட்கொள்ளவும் நான் மேற்கொண்ட முயற்சிகள் இந்த
புனிதர்களின் கூட்டமைப்பில் இணைந்திட எனக்கு ஊக்கமளித்தது. உண்மை திருச்சபையை
பற்றிய தேடல்கள் அதிகமாக இருந்த போது நான் அந்த பேரானந்தத்திற்கு சென்றடைய தூண்டியது.
இதுவே எனது திருச்சபை மாற்றத்தின் வரலாறு.
நான் இப்புதிய பாதையை தேர்ந்தெடுத்த முடிவை உரோமையின் அரியணைக்கு
தெரிவித்தேன். காணாமல் போன மகன் திரும்பி வந்ததைப் போன்று திருத்தந்தை எனது
வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு கத்தோலிக்க திருச்சபையோடு என்னை ஒன்றிணையச் செய்தார். எனது
வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அரியணை நமது திருவழிபாட்டு மரபின் தன்மைகளை காத்துக்
கொள்ளவும் நமது அதிகாரங்களை அங்கீகரிக்கவும் அனுமதி வழங்கினார்.
நான் மறுஒன்றிப்படைவதற்கான கோரிக்கையை உரோமாபுரியில்
சமர்ப்பித்த போது East
India apostolic delegate ஆன மேதகு ஆயர் மியூணி அவர்கள் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தந்தார். உரோமாபுரியில்
மேதகு ஆயர் அவர்கள் மேற்கொண்ட தியாகப்பூர்வமான செயல்களை நன்றியோடு நினைவு கூர்கின்றேன்.
“வருக, மிகப்பெரும் நல்வரவு” என்ற வார்த்தைகளை திருத்தந்தையிடமிருந்து பெற்றுத்
தருவதற்கான மேதகு ஆயர் அவர்களுடைய நன்மனதை அன்போடு நினைவு கூர்கின்றேன். மீட்பரின்
இதயத்துடிப்பை தூய கத்தோலிக்க திருச்சபையில் எங்களால் கேட்க முடிகிறது. மீட்பரின் நிலையான
அன்பை என்னால் காண முடிந்தது. திருத்தந்தையின் அன்பான அரவணைப்பு இயேசு
கிறிஸ்துவின் திரு இதயத்தோடு உள்ள அரவணைப்பாக நாங்கள் அனுபவித்தோம். இதற்கெல்லாம்
காரணமான மேதகு ஆயர் மியூணி அவர்கள் வழியாக இறைவனின் மேன்மையை நாங்கள் அறிந்து
கொண்டோம்.
எனது வாழ்வில் மறக்க முடியாத தினமே 1930 செப்டம்பர்
20. ஏனென்றால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க
நாளில்தான், இவ்வுலகில் கிறிஸ்துவின் Vicar எனப்படும் புனித திருத்தந்தைக்கு அடிபணியும் பேறு எனக்குக் கிடைத்தது.
எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த ஒரு விரிசல் இன்று நசீராக்கப்பட்டது.
எனக்கு மட்டுமல்ல. மறுஒன்றிப்படைந்த அனைவருக்கும் இது பொருந்தும்.
இரக்கமுள்ள இறைவன் வலுவற்ற என்னையும் மார் தியோபிலோஸ் ஆண்டகையையும்
வலுப்படுத்தியதன் பலனாக, கடந்த ஆண்டு கத்தோலிக்கரல்லாத
பல சகோதரர்களை கத்தோலிக்க திருச்சபைக்கு கொண்டு வர முடிந்தது.
கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு ஒரு கொடூரமான பாவம் என்பதில்
ஐயமில்லை. இஃது நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலில் பல காயங்களை ஏற்படுத்தியது.
அந்தக் காயங்களைக் குணப்படுத்த கடவுள் நமக்குக் கொடுத்த வாய்ப்பை ஒரு பொன்னான
வாய்ப்பாக கருதுகிறோம்.
ஒருமுறை கூட அனைவரோடும் நன்றி கூறிட நான் இவ்வாய்ப்பை
பயன்படுத்துகின்றேன். சிறோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்களோடும்
குருக்களோடும் துறவியவர்களோடும் என்றும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
கடந்த ஓராண்டில் பல அருட்தந்தையர்களும் விசுவாசிகளும்
மறுஒன்றிப்படைந்தனர். இன்னும் பலர் உண்மைத் திருச்சபையோடு ஒன்றிணைய தங்கள்
விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
இநனால் பல்வேறு விதமான இன்னல்களும் துயரங்களும் நாங்கள்
சந்தித்து வருகிறோம். எதிரி ஒருவர் என்னை விபத்துக்குள்ளாக்க எனது ஓட்டுநரிடம் 500
ரூபாய் உறுதியளித்த விவரத்தை நான் அறிந்து கொண்டேன். இதனைப்பற்றி எனது செயலரிடம்
நான் இவ்வாறு கூறினேன், “எனது உயிருக்கு 500 ரூபாய் விலை மதிப்பு உள்ளது.” மறு
ஒன்றிப்படைந்த விசுவாசிகளும் பலவிதமான இன்னல்களை சந்தித்துள்ளனர். ஆனால் இத்தகைய சவால்கள் அனைத்தும் நமது
திருச்சபைக்கு பேருதவியாக மாறின. மறுஒன்றிப்படைந்த ஒவ்வொரு கத்தோலிக்கரும் ஆண்
பெண் என வேறுபாடின்றி மறைப்பணியாளர்களாக உருமாற்றம் அடைகின்றார்கள்.
தொடக்கத் திருச்சபையில் திருத்தூதர்கள் சந்தித்த சித்திரவதைகளை
சிறிய அளவில் நாங்களும் அனுபவிக்கின்றோம். பணப்பற்றாக்குறை போன்ற பல விதமான
இடறல்கள் இறைவனிடமிருந்து அருள்வரங்கள் பெற்றுக் கொள்ள காரணமாயின என்பதை மகிழ்வோடு
தெரிவிக்கின்றேன்.
இவ்வேளையில் ஒரு வருட காலமாக இறைவன் அருளிய அனைத்து அருள்
வரங்களுக்காக இறைவனை மகிமைப்படுத்துமாறு மேதகு ஆயர்கள் உள்பட உங்கள் அனைவரையும்
நான் கேட்டுக்கொள்கிறேன். மட்டுமல்ல பலவீனனாகிய எனக்காகவும் சகோதரராகிய மார்
தியோபிலஸ் ஆயர் அவர்களுக்காகவும் மறுஒன்றிப்படைந்த அனைத்து விசுவாசிகள் இன்னும்
மறுஒன்றிப்படைய வேண்டிய அனைத்து கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்காகவும் நம் நாட்டில்
வாழும் கிறிஸ்தவர் அல்லாதவர்களுக்காகவும் தொடர்ந்து மன்றாட வேண்டும் என்று
வேண்டுகிறேன்.
உங்களுடைய ஜெப உதவியை வேண்டுகிறேன்.
அனைவருக்கும் வணக்கம்
Comments
Post a Comment