திரு. சாக்கோ கிளீலேத்து (நினைவு தினம் செப்டம்பர் 17)
மலங்கரை கத்தோலிக்க
திருஅவையை கட்டி எழுப்ப வணக்கத்துக்குரிய பேராயர் மார் இவானியோஸ் அவர்களோடு
இணைந்து பணியாற்றிய பொதுநிலையினருள் முதன்மையானவர் தான் திரு சாக்கோ கிளீலேத்து
அவர்கள். இறைவனையே தனது முன்னவராகக் கண்டு தனது குடும்பத்தாரை விட இறைவனையும்
திருச்சபையையும் அன்பு செய்த ஆளுமை கொண்டவர். பெதனி சாக்கோச்சன் எனவும் மானேஜர்
சாக்கோச்சன் எனவும் செல்லப் பெயர்களால் இவர் அழைக்கப்பட்டிருந்தார்.
பேராயர் மார் இவானியோஸ் அவர்களோடு முதன்முதலில் மறு ஒன்றிப்படைந்த
ஐவருள் ஒருவர் இவர் ஆவார். திருச்சபை வரலாற்றில் புதிய தலைமுறையினரால் அறியாதவரும்
பழைய தலைமுறையினரின் அணையா விளக்காய் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த ஆளுமை
கொண்டவர்.
கிளீலேத்து கீவர்கீஸ் மற்றும் பேராயர் மார்
இவானியோசின் தந்தையின் சகோதர்ரான சாக்கோ பணிக்கரின் மூத்த மகளாகிய ஆண்டம்மா
இவர்களது மூன்று பிள்ளைகளுள் இரண்டாவது மகனாக 1888 அக்டோபர் 29 ஆம் நாளில்
கீவர்கீஸ் சாக்கோ (கிளீலேத்து சாக்கோ) பிறந்தார்.
தனது சிறு பாலர் பருவத்திலேயே தனது தகப்பனாரை
இழந்தார். அவரது தாய் ஆண்டம்மா தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தந்தையின்
இல்லமான பணிக்கர் வீட்டிற்கு சென்றார். இறை அருளை அடைக்கலமாக வேண்டுதல் செய்தவாறு அரும்பாடுபட்டு தனது பிள்ளைகளை
போற்றி வளர்த்தார்.
தனது பத்தாவது வயதிலேயே சாக்கோ மாவேலிக்கரையில் முள்ளிக்குளங்கரை என்னும் கிராமத்தை் சார்ந்த குற்றியில்
குடும்பத்தின் அன்னம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து சாக்கோவின் வாழ்வில் இறைவனுடைய தனிப்பட்ட
கண்காணிப்பில் ஒரு புதிய செயல் தளத்திற்கு பயணம் ஆகிட இறைவன் அவரை வழிநடத்தினார். புனித
பவுல் இறைவனால் தனிப்பட்ட முறையில் வழிநடத்தப்பட்டதை போன்று தனது 12 வது வயதில் கோட்டயம் செமினேரியில் உதவியாளராக சாக்கோ 6 ஆண்டு காலம் அங்கு பணியாற்றினார்.
1908ல் எம்டி செமினரி ஹை ஸ்கூலின் முதல்வராக பொறுப்பேற்ற மார்
இவானியோஸ் அவர்கள் கல்வி கூடத்தின் வளர்ச்சிக்காக தன்னோடு உடன் பயணிக்க திரு சாக்கோ
அவர்களை தேர்ந்தெடுத்தார். பள்ளிக்கூடத்தின் மேனேஜராக சாக்கோ நியமிக்கப்பட்டார். தொடர்ந்து
1908 முதல் 1918 வரை 10 ஆண்டுகள் இப்பள்ளிக்கூடத்தின் வளர்ச்சிக்காக திரு சாக்கோ அவர்கள் அயராது
பாடுபட்டு உழைத்து அதனுடைய குறிக்கோளை அடைந்தார்.

Comments
Post a Comment