மலங்கரை கத்தோலிக்க மறைக்கல்வி பன்னிரண்டாம் வகுப்பு குறு வினா விடைகள்
மலங்கரை கத்தோலிக்க
மறைக்கல்வி
பன்னிரண்டாம் வகுப்பு
குறு வினா விடைகள்
உள்ளடக்கம்
|
பாடங்கள் |
பக்கம் |
|
பாடம் : 1 கிறிஸ்துவில் அடித்தளமிடும் இளமை |
|
|
பாடம்: 2 வளர் இளம் பருவத்து கலக்கங்களும் சவால்களும் |
|
|
பாடம் :3 பாலுணர்வு கடவுளின் ஓர் அருள்கொடை |
|
|
பாடம் :4 திருமணம் ஓர் இறையழைத்தல் |
|
|
பாடம் : 5 உயிர் கடவுளின் அருள்கொடை |
48 |
|
பாடம் : 6 இளையோர் இறைவனுக்காக அர்ப்பணித்தவர்கள் |
57 |
|
பாடம் : 7 பசும் புல்வெளியை நோக்கி |
70 |
|
பாடம் : 8 மலங்கரை சபை வரலாறும் பணிக்கடமையும் |
79 |
|
பாடம்: 9 மார் இவானியோசும் மலங்கரை சிறியன்
கத்தோலிக்கதிருச்சபையும் |
98 |
|
பாடம் :10 நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு |
112 |
பாடம் 1
கிறிஸ்துவில் அடித்தளமிடும் இளமை
1.
இளைஞர்களின் இதயத்திற்கு இணக்கமான ஆளுமை உடையவர்
யார்?
இயேசு கிறிஸ்து.
2.
வாழ்வில் புதுமையைத் தேடும் இளையோர்
முன்மாதிரியாக்கிக் கொண்டு அவரையே பின்பற்றி, அவராகவே மாறுவதற்கு
உலகத்தில் வெளிப்படுத்தப்பட்ட இறைமனித ஆளுமை யார்?
இயேசு கிறிஸ்து
3.
இறைத்தன்மை குறைவுபடாமல் மனிதத்தன்மையின் முழுமை
யாரிடம் சங்கமமானபோது அது இறைமனித உறவுக்கு புது அர்த்தத்தைக் கொடுத்தது?
இயேசுவில்
4.
இயேசுகிறிஸ்துவின் வாயிலாக உலகிற்கு கிடைத்த மனிதனைப்
பற்றிய கண்ணோட்டமும், அன்பின் வெளிப்பாடும் யாருக்கு சொந்தமானது?
மனித சமூகத்திற்கு
5.
வாழ்வின் அர்த்தத்தையும், குறிக்கோளையும் தேடுகின்ற
இளையோர் யாருடைய வாழ்க்கைமுறைகளை தனதாக்கிக் கொள்ள வேண்டும்?
இயேசுவின்
6.
இளைஞர்கள் உலகம் சார்ந்த வாழ்க்கைமுறையை விட்டு விலகி
நன்மை,
கருணை, அன்பு இவற்றை
குறிக்கோளாகக் கொண்டு யாருக்கு சான்றுபகர வேண்டும்?
கிறிஸ்துவுக்கு
7.
யாரை அடித்தளமாக கொள்ளும் இளமையே புதுமை படைக்க
வல்லது?
இயேசுகிறிஸ்து
8.
ஒரு நபரின் சிறுவர் பருவமும் வளர் இளம் பருவமும்
கடந்து வரும் வாழ்க்கை நிலைக்குப் பெயர் என்ன?
இளமை
9.
வாழ்க்கையின் எழிலார்ந்த எந்த கட்டத்தில் தான்
மனம்சார்ந்ததும், உடல் சார்ந்ததுமான மாற்றங்கள் ஒருவருக்கு ஏற்படுகின்றது?
இளமை
10.
வாழ்க்கை கண்ணோட்டத்தில் மிகுந்த தாக்கம் செலுத்தும்
கொள்கைகளையும் கருத்துகளையும் அடைந்து கொள்வதும் வளர்த்துவதும் எந்த வாழ்க்கைக்
கட்டத்தில் ஆகும்?
இளமை
11.
பிறரைச் சார்ந்திருக்கும் (Dependence) உணர்வைக் கைவிட்டு
சுதந்திர விருப்பாற்றல் ஒருவரிடம் உருவமைந்து வருவதும் எந்த வாழ்க்கைக் கட்டத்தில்
ஆகும்?
இளமைப்பருவம்
12.
புதிய கொள்கைகளையும், தத்துவசிந்தனைகளையும்
பேரார்வத்துடன் உள்வாங்கும் யார் எப்போதும் சமூகத்தில் மாற்றங்களுக்கான இயங்கு
சக்திகளாகின்றனர்?
இளைஞர்கள்
13.
வாழ்க்கைப் பற்றிய விழிப்புணர்வையும் வாழ்வின்
அர்த்தத்தையும் ஒருவர் தேடிக் கொள்வது எந்த வாழ்க்கைக் கட்டத்தில் ஆகும்?
இளமைப்பருவம்.
14.
சுயமாகத் தீர்மானம் எடுக்கவும், சமூகத்தில் உன்னத
நிலையை அடைவதற்கும் முயற்சிகள் மேற்கொள்வது எந்த வாழ்க்கைக் கட்டத்தில் ஆகும்?
இளமைப்பருவம்.
15.
சுயமாகத் தீர்மானித்துக் கொள்வதற்கான உரிமை (Self-Determination)
உண்மையான
சுதந்திரத்தின் வாயிற்படிதான் என நம்புகின்ற வாழ்க்கைக் கட்டம் எது?
இளமைப்பருவம்.
16.
காலத்தின் அறிகுறிகளை சரியான அர்த்தத்தில்
வெளிப்படுத்துகின்ற. எண்ணற்ற சாதனைகளுக்கான வாய்ப்புகள் நிறைந்த வாழ்க்கைக் கட்டம்
எது?
இளமைப்பருவம்.
17.
இளைஞர்களின் அளப்பரிய சாதனைகளுக்கான வாய்ப்புக்களை
குறிப்பிடும்போது, அவர்கள் எதிர்கொள்ளக் கூடிய எதனை குறைத்துக் கணக்கிட முடியாது?
சவால்களை
18.
சுயமாக வாழ்க்கைப் பாதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காகவும்
வாழ்க்கையில் வெற்றிகாண்பதற்காகவும் யார் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்?
இளைஞர்கள்
19.
எதனை வாழ்க்கையின் இன்றியமையா உரிமையாகக் கருதும்
போதும் அதனை தவறாக பயன்படுத்துகின்ற ஒரு தலைமுறையினர் வளர்ந்து வருகின்றனர்?
சுதந்திரம்
20.
எத்தகைய தீச்செயல்களையும் செய்வதற்கான அனுமதியாக
சுதந்திரத்தை தவறாக எண்ணும் போது அதன் வாயிலாக இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும்
ஏற்படுவது என்ன?
பேராபத்துகள்
21.
சுதந்திரம் என்ற பெயரில் வாழ்க்கையை
கட்டுப்பாடில்லாமல் அவிழ்த்து விடும் போது அது என்னவாகின்றது?
வீழ்ச்சியின் பாதைக்குச்
செல்லும்
22.
யார் சொல்லையும் மதிக்காமல், எதனையும் அங்கீகரிக்காமல்
சுய நலன்களுக்கும், நாட்டங்களுக்கும் பின்னால் போகும் இளைஞர்கள் எதனை அனுபவிப்பவர்கள்
அல்ல?
சுதந்திரத்தை
23.
சுயநலங்களின் பாதையில் பயணிப்பவர்கள். எதனை மனித
வாழ்க்கையின் அடையாளமாகக் கொள்கின்றனர்?
தன்னலம்
24.
கொள்கைப் பிடிப்புள்ள வாழ்வை கனவுகண்டு வாழ்வின்
பலதுறைகளை நோக்கிச் செல்லும் இளைஞர்கள், எதனை பகுத்தறியும்போது பதற்றமடைகின்றனர்?
கனவுகள் வெறும் மாயைகளே
25.
அனைத்தையும் தனதாக்கிக்கொள்வதற்காக வாழ்க்கையை
பயன்படுத்தும் போது இளையோர்கள் எதனை இழந்து விடுகின்றனர்?
அடிப்படை உண்மைகளையும், விழுமியங்களையும்
26.
எல்லாம் பெற்றுவிட்டோம் என எண்ணிக் கொள்ளும் போதும்
எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்னும் ஏமாற்றமும் யாரை
பாதிப்புக்குள்ளாக்கிவிடுகின்றது?
இளைஞர்களை
27.
மதுபானம், போதைப் பொருட்கள், பாலியல் வன்முறை போன்ற தீய
பழக்கங்கள், ஊழலும், குற்றச் செயல்களும், கருக்கலைப்பு. கருணைக்கொலை மற்றும் ஓரினச்
சேர்க்கை போன்ற மனித உயிருக்கும் மாண்பிற்கும். உயர்பண்பிற்கும் பொருந்தாத
செயல்களில் அதிகமாக ஈடுபடுகின்றவர்கள் யாவர்?
இளைஞர்கள்
28.
ஆடம்பரப் பொருட்களின் நுகர்வு கலாச்சாரம் எதனை
தொழில்மயமாக்கி மாற்றுகின்றது?
வாழ்க்கையை
29.
இளைஞர்களுக்கு யாருடைய ஆளுமை வசீகரமும், உள்தூண்டுதலும்
வழங்குவதாக உள்ளது?
இயேசுவின்
30.
இயேசுவை அறிந்து கொள்ளவும், அவரைப் பின்தொடரவும் யார்
விரும்பினால் இயேசு யார் எனவும் அவரது ஆளுமையின் மாட்சிமை பற்றியும் சரியாக
புரிந்து கொள்ளவேண்டியது அவசியமானது?
இளைஞர்கள்
31.
யாருடனான தனிப்பட்ட சந்திப்பு (Encounter) இளைஞர்கள் அவரை
நன்கு புரிந்து கொள்வதற்கு மிகவும் தேவையானது?
இயேசுவுடன்
32.
ஆன்மீகத்தின் ஆழ்நிலையில் மூழ்கி வாழும்
இறையியலாளர்களுக்கும் (Mystics), துறவிகளுக்கும் யார் அவர்களது இறைபக்தியின்
மையமாவார்?
இயேசுகிறிஸ்து
33.
கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படைக் கருத்துகளின்
வாயிலாக வெளிப்படும் கோட்பாடுகள் யாருடையவை?
இயேசுவின் கோட்பாடுகள் (Dogmas)
34.
இலக்கிய கலைஞரோ, தத்துவஞானியோ, சமூக
சீர்திருத்தவாதியோ சித்தரித்து காட்டுகின்ற இயேசுவின் வடிவங்களெல்லாம் எதனை
வரையறைகளுக்குட்பட்டு வெளிப்படுத்துகின்றன?
இயேசுவின் ஆளுமை
35.
விவிலியத்தில் இயேசு யார் என்ற வினாவுக்கு
திருத்தூதர் பேதுரு வழங்கும் விடை எது?
"நீர் மெசியா, வாழும் கடவுளின்
மகன்"
(மத்தேயு
16:13-16,
மாற்கு.
8:27-33.
லூக் 9:18-22).
36.
இயேசுவின் ஆளுமையைக் குறித்து விவிலியம் காட்டும்
அதிகாரப்பூர்வமான முதல் கிறிஸ்தியல் அறிக்கையை பிலிப்பு செசரியா என்னுமிடத்தில்
வைத்து வெளிப்படுத்தியவர் யார்?
பேதுரு
37.
இயேசுவின் நிகரற்ற ஆளுமைத் தன்மையை நோக்கி ஒளிவீசும்
இரண்டாவதுவசனம் எது?
"நீங்கள் சிலுவையில் அறைந்த
இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ராயேல் மக்களாகிய
நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்" (திப 2:36)
38.
உலக வரலாற்றினை மீட்பின் வரலாறாக மாற்றியது எது?
இயேசு கிறிஸ்துவின்
மனிதராதல் (Incarnation)
39.
மனிதராதல் வாயிலாக மனிதத்தன்மையின் நிறைவு யாரால்
உலகிற்கு வழங்கப்பட்டது?
இயேசுவில்
40.
இயேசு கடவுளாயிருந்தும் எந்த அங்கியை அணிந்து இறைமனித
உறவுக்குப் புதியதொரு பரிணாமத்தை அளித்தார்?
மனிதம்
41.
மனித வாழ்வுக்கு அர்த்தத்தையும் வளமையையும் யாரில்
கண்டடைய இயலும்?
இயேசு கிறிஸ்துவில்
42.
எந்த இயல்புகள் இயேசு கிறிஸ்துவில் ஒன்றிணைந்த போது
அது இறைமனித உறவாம் மறைஉண்மையின் வெளிப்பாடானது?
இறை மனித
43.
கிறிஸ்தவ படிப்பினைகளில் மிகச் சிறப்பானதாக
மதிக்கப்படும் மறையுண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் எந்த பாடம் மறைக்கல்விப்
பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது?
கிறிஸ்தியல் (Christology)
44.
எந்த நபரை அறிவதுதான் கிறிஸ்தியலின் ஆய்வுப்பொருள்?
இயேசு
45.
உலக வரலாற்றையே மாற்றி அமைத்த இறைமனித சங்கமம்
எனப்படுவது எது?
மீட்பின் நிகழ்வு
46.
கிறிஸ்தவத்தின் அடிப்படை எனக் கருதப்படும் "வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார்" என்ற விவிலியப்பகுதி
எங்குள்ளது?
யோவான். 1:14
47.
வரலாற்றுக்கு உட்பட்டவரான கடவுள் எனப்படுபவர் யார்?
இயேசு
48.
உலக வரலாற்றையே மீட்பு வரலாறாக மாற்றி அமைத்தவர்
யார்?
இயேசு
49.
இயேசுவின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்ட எது மீட்கும்
நிகழ்வாக நம்பப்படுகிறது?
தெய்வீக ஆற்றல்
50.
மீட்பியல் என்பதன் ஆங்கிலச்சொல் எது?
Soteriology
51.
மீட்பியல் என்னும் சொல்லாட்சி யார் வாயிலாக உலகிற்கு
வழங்கப்பட்ட மீட்பாற்றலை குறிக்கிறது?
இயேசு
52.
இயேசு வாயிலாக உலகிற்குக் கிடைக்கப் பெற்ற விடுதலையை
எந்த கிறிஸ்து நிகழ்வோடு தொடர்புபடுத்தி நாம் புரிந்து கொள்ள வேண்டும்?
பாஸ்கா மறைபொருள்
53.
இயேசு தன் உயிரைக் கொடுத்து மீட்பை பெற்றுத் தந்த
செயல்களை எவ்வாறு அழைக்கிறோம்?
மீட்புச் செயல்
54.
பாடுகளின் பலிபீடத்தில், மரணத்திற்கு தன்னை கையளித்து
உயிர்ப்பு வாயிலாகப் புதுவாழ்வை பெற்றுத்தந்தார் என்பது இயேசுவின் எத்திட்டத்தின் தனிச்சிறப்பு
ஆகும்?
மீட்புத்திட்டத்தின்
55.
உலகின் பாவத்தை போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டி
என்பவர் யார்?
இயேசு
56.
பாவத்தின் அடிமைத் தளையிலிருந்து மனிதனை மீட்டு
மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவை மீண்டும் ஏற்படுத்தியவர் யார்?
இயேசு
57.
யார் வாயிலாகக் கடவுள் மனிதனை மீட்டார்?
இயேசு
58.
யாரை கடவுளிடம்
சேர்ப்பதற்காகக் கடவுள் மனிதரானார்?
மனிதன்
59.
கடவுளின் மீட்புச்செயல் என்னும் தெய்வீக உண்மையை திருச்சபைத்
தந்தையர்கள் எந்த உண்மையாக விளக்கமளித்துள்ளனர்?
நம்பிக்கை உண்மை
60.
"இயேசு நமக்கு கடவுள் தன்மையைத் தந்தார்; நாம் இயேசுவுக்கு
மனிதத்தன்மையை அளித்தோம்". (He gave us divinity, We gave Him humanity) என்ற சிறியன்
திருச்சபைத் தந்தை யார்?
புனித எப்ரேம்
61.
"கடவுள் மனிதரானார்; ஆகையினால் மனிதன் கடவுளாய்
மாற வேண்டும்"
என
புனித அகுஸ்தீனார் தனது எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?
'மனிதராதல்' (De
Incarnation)
62.
கடவுள் மனிதரானது யாரை கடவுள்தன்மை உடையவராக்குவதற்கே
ஆகும்?
மனிதனை
63.
எத்தகைய மனிதன் கடவுள் அருளும் மீட்பினை வாழ்க்கையில்
அனுபவிக்கிறவன் ஆவான்?
கிறிஸ்துவில் வாழும் மனிதன்
64.
மீட்பாற்றல் மனிதவாழ்வில் அனுபவமாய் மாற்றப்பட்டால்
மட்டுமே எதனை நோக்கி மனிதன் அழைத்துச் செல்லப்படுவான்?
நிலைவாழ்வை
65.
யாருடைய நிகரற்ற ஆளுமையையும் மீட்பாற்றலையும்
இளைஞர்கள் உள்வாங்கும் போது தான் கிறிஸ்துவில் அடித்தளமிட்ட இளமையை அடைய இயலும்?
இயேசு கிறிஸ்துவின்
66.
யாரால் வெளிப்படுத்தப்பட்ட தெய்வீக ஆளுமையும், மீட்பாற்றலும்
இளைஞர்களை என்றைக்குமே மன எழுச்சியடையச் செய்திருக்கின்றது?
இயேசு கிறிஸ்துவில்
67.
யாரால் புதியதொரு மானிடப் பார்வை உலகிற்கு கிடைக்கப்
பெற்றுள்ளது?
இயேசுவில்
68.
அன்பின் நற்செய்தியையும், அறநெறியின் உண்மையான
அர்த்தத்தையும் உலகிற்குக் கற்பித்தவர் யார்?
இயேசு
69.
இளமையின் நிறைவு கடவுளைத் தேடிக் கண்டடைவதில் தான்
உள்ளது என உணர்த்தியவர் யார்?
இயேசு
70.
எப்போதும் எங்கேயும் இயேசுவின் உன்னிப்பான பார்வையின்
மையம் யார்?
மனிதன்
71.
கடவுளின் உருவிலும் சாயலிலும் (Image and
Likeness) படைக்கப்பட்ட
மனிதனை யாராக இயேசு அங்கீகரித்தார்?
மாண்புமிக்கவனாக
72.
கடவுளின் படைப்பு என்னும் நிலையில் மனிதரெல்லாம் யாருடைய
மக்களாவர்?
இறைவனின்
73.
பிரிவினைகளும், பெரியவர்-சிறியவர், ஆண்-பெண், நிற வேற்றுமைகளும்
மனிதனை யாராக மதிப்பதற்கு தடையல்ல என இயேசு கற்பித்தார்?
மனிதனாக
74.
சாதி, இன வேறுபாடுகளுக்கும், சமூக பொருளாதார அமைப்புகளின்
வேறுபாடுகளுக்கும் மேலாக யாருடைய மதிப்பை இயேசு உயர்த்திக்காட்டினார்?
மனிதனின்
75.
உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு இல்லாமல்
மனிதனின் மாண்பை அங்கீகரித்தவர் யார்?
இயேசு
76.
தாம் வாழ்ந்திருந்த சமூகத்தின் வரையறைகளையும் மனிதனை
அடிமைத்தளையில் பிணைத்துப் போட்டிருந்த வழக்கத்திலிருந்து வந்த (பழைய ஏற்பாட்டு) சட்டத் தொகுப்புகளையும் ஏற்க மறுத்துவிட்டவர் யார்?
இயேசு
77.
சட்டங்களை பின்பற்றுவதும், பரம்பரை மரபுகள் ஆகியவற்றின்
பெயரால் வழிபாட்டு விதிமுறைகளில் விடாப்பிடியாயிருந்தவர்களை "ஓய்வுநாள்
மனிதனுக்காகவே''
எனக்
கூறி விமர்சனம் செய்தவர் யார்?
இயேசு
78.
சமூகம் புறக்கணித்துவிட்ட வரிதண்டுபவர்களோடும்
பாவிகளோடும் சேர்ந்து தங்கவும் விருந்துண்ணவும் செய்து மேலாதிக்க மனநிலைக்கும், அதிகார
ஆணவத்திற்கும் பதிலாக சகோதரத்துவம். பணிவிடை ஆகிய மனிதத்தன்மைக்குரிய விழுமியங்களை
நிலைநாட்டியவர் யார்?
இயேசு
79.
அனைத்து மனிதர்களும் சம நிலையினரே எனக்கண்டு சமூக
அமைப்பின் அடையாளமாய் அவர்களையும் ஒரு மேசையிலிருந்து உணவைப் பகிர்ந்தளிக்கும்
சமபந்தி விருந்தினை (Table fellowship) தொடங்கி வைத்தவர் யார்?
இயேசு
80.
"ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது. ஏனெனில் அவர் எனக்கு
அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர்
விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும். ஒடுக்கப்பட்டோரை
விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும்
அவர் என்னை அனுப்பியுள்ளார்" (லூக் 4:18-19). இறையாட்சியைப் பற்றிய இந்த அறிவிப்பின்
சாராம்சம் என்பது என்ன?
இயேசுவின் மனித கண்ணோட்டம்
81.
யார் வாயிலாக இறையாட்சியைப் பற்றிய நற்செய்தி
உலகிற்கு அளிக்கப்பட்டது?
இயேசு
82.
இறையாட்சி என்பது யாருக்கு இடையேயான உறவை
உறுதிப்படுத்தும் நிலைமை ஆகும்?
மனிதருக்கும் கடவுளுக்கும்
83.
யார் வாயிலாக மனித குலம் கடவுளோடு நிலையானதோர் உறவில்
உள்புகுந்து விட்டது?
இயேசுவின்
84.
யாருடைய வருகையோடு இறையாட்சி தோன்றிவிட்டது?
இயேசு
85.
யாரால் துவங்கப்பட்ட இறையாட்சி அவரது பாடுகள் மரணம் -
உயிர்ப்பு ஆகியவற்றின் வாயிலாக முழுமையாக வெளிப்படுகின்றது?
இயேசு
86.
மனிதனைக் குறித்துள்ள இறைத்திட்டம் நிறைவு செய்யப்படுவது
எந்த மறைபொருள் வாயிலாகவே ஆகும்?
பாஸ்கா மறைபொருள்
87.
இயேசுவில் நம்பிக்கை வைத்து அவரது மானிடப் பார்வையை
தனதாக்கிக்கொண்டு புதுப்பிக்கப்பட்ட மானிட பார்வையின் படைப்பாளர்களும்
பறைசாற்றுபவர்களாக வாழ முயலவேண்டியவர்கள் யாவர்?
இளைஞர்கள்
88.
யாருடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்தை இளைஞர்கள் தங்கள்
வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்ட வேண்டும்?
இயேசுவின்
89.
இறையன்பையும் மனித நேயத்தையும் ஒரு நாணயத்தின் இரு
பக்கங்களாகக் கொண்டிருந்தவர் யார்?
இயேசு
90.
தம்மை அன்பு செய்வது போன்று பிறரையும்
அன்புகூர்வதற்கும் (மத்தேயு 5:43), பகைவர்களையும் பொறுமையினால்
நண்பர்களாக்கிக்கொள்வதற்கும் (மத்தேயு 5:44-45) தன்னலமற்ற அன்பிற்கு புதிய
அர்த்தத்தை அளித்து அறைகூவல் விடுத்தவர் யார்?
இயேசு
91.
முழு உள்ளத்தோடு கடவுளை அன்புசெய்யவும்
பிறரன்பிற்கும் முக்கியத்துவம் அளித்து அறைகூவல் விடுத்தவர் யார்?
இயேசு
92.
இறை அன்பு என்னும் வார்த்தையாகிய தெய்வீகத்தின்
நிறைவு யார்?
இயேசு
93.
தந்தை கடவுள் மனித குலத்தின் மீதான அன்பு எதன் வாயிலாக
வெளிப்பட்டது?
இயேசுவின் மனிதராதல்
94.
"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும்
அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனை அளிக்கும் அளவுக்குக் உலகின் மேல்
அன்பு கூர்ந்தவர் யார்?
கடவுள்
95.
இயேசுவில் உள்சேர்ந்திருக்கும் இறைச்சாயல் என்பது
என்ன?
அன்பு
96.
மன்னிப்பதற்கான மனம் அன்பின் விளைநிலமாகும் என கற்பித்தவர்
யார்?
இயேசு
97.
மனிதர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி அன்பில் அவர்களை
மீட்பது எது?
மன்னிப்பு
98.
கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் பலி அர்ப்பணத்தினால்
நற்பயன் ஏற்படுவது எதன் அடிப்படையில் அமைகின்றது?
மன்னிக்கும் அன்பின்
99.
"நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த
வரும்போது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல்
உண்டென அங்கே நினைவற்றால் அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை
வைத்துவிட்டு போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு
வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்" (மத்தேயு 5:23–24. எனக் கற்பித்தவர் யார்?
இயேசு
100.
எரிபலிகளையும் வேறுபலிகளையும் விட மேலானது எனப்படுவது
எது?
அன்பு செலுத்துவது
101.
கடவுளின் மனிதரோடுள்ள அன்பு முழுமையான அர்த்தத்தில்
வெளிப்பட்ட நிகழ்வு எது?
இயேசுவின் சிலுவை மரணம்
102.
மனிதனின் காயங்களை அன்பின் அடையாளமாகவே சுயமாக
ஏற்றுக் கொண்டர் யார்?
இயேசு
103.
சிலுவை எதன் அடையாளமாய் அமைகின்றது?
அன்பின்
104.
சிலுவைப் பலியின் நினைவு திருச்சபையில் எதன் வாயிலாக
நிறைவேற்றப்படுகின்றது?
திருப்பலி
105.
இயேசுவின் நிகரற்ற ஆளுமையால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள்
தாங்கள் நிலைவாழ்வைத் தேடுவதற்கான சிறந்த முன்மாதிரியாக யாரைக் காண்கின்றனர்?
இயேசுவை
106.
யாரில் கடவுளின் சாயலைக் காணும் இளைஞர்கள் அவரில்
தங்கள் வாழ்வின் சாயலைக் காண்கின்றனர்?
இயேசுவில்
107.
கடவுளின் சாயலில் பங்காளிகளே தாங்கள் எனவும் வாழ்க்கை
அர்த்தச் செறிவு உடையதே எனவும் இளைஞர்கள் உணர்ந்து கொள்வது யார் வாயிலாகவே ஆகும்?
இயேசு
108.
நிறைவான மனித வாழ்வை யாரில் கண்டுகொள்ள முடியும்?
இயேசுவில்
109.
தந்தைக்கடவுளை நோக்கிய பயணத்திற்கான பாதை எனப்படுபவர்
யார்?
இயேசு
110.
தந்தைக்கடவுளை நெருங்கி அணுகி அறிந்துகொள்ளவும்
அனுபவித்து சுவைக்கவும் தூய ஆவியின் அருள்வரத்தில் நிலைவாழ்வு அடையவும் இயேசு யாரை
அழைக்கின்றார்?
இளைஞர்களை
111.
வழியும் உண்மையும் வாழ்வும் நானே என்ற விவியப் பகுதி
எங்குள்ளது?
யோவா. 14:6
112.
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்து பயணம் செய்யும் இயேசுவை
நண்பனும் வழிகாட்டியுமாக யார் ஏற்றுக் கொள்ளவேண்டும்?
இளைஞர்கள்
113.
வாழ்வின்
நோக்கம் உருவமைவதற்கு இயேசுவின் கண்ணோட்டத்தையும் வாழ்வையும் முன்மாதிரியாக்கிக்
கொள்ள வேண்டியவர்கள் யார்?
இளைஞர்கள்
114.
இயேசுவைப் பின்பற்ற விரும்புகின்ற இளைஞர் ஒருவர் தனது
சந்தேகங்களுக்கு விடையளிக்க வல்லவரான போதகரை எவ்வாறு அழைத்தார்?
"நல்ல போதகரே"
115.
"நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய
வேண்டும்"
எனக்
கேட்ட வாழ்வின் நிறைவைத் தேடுகின்ற இளைஞர் யாருடைய பிரதிநிதியாவார்?
இளைஞர்களின்
116.
வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுகின்ற இளைஞர்கள் யாரில் தான்
அதனைக் கண்டடைய வேண்டும்?
இயேசுவில்
117.
இயேசுவில் மனித மாண்பின் நிறைவைக் காண்பதற்கு யாரால் இயல
வேண்டும்?
இளைஞர்களால்
118.
வாழ்க்கையின் சரியான இலக்கையும் அதை அடைவதற்குரிய
திறமையையும் பெறுவதற்காக இயேசுவில் அடைக்கலம் தேட வேண்டியவர்கள் யார்?
இளைஞர்கள்
119.
"அன்பார்ந்த வாலிப நண்பர்களே, இயேசுவுக்கு மட்டுமே உங்களைப்
பற்றிய திட்டம் எது என்பது தெரியும், உங்கள் இதயத்தின் ஆழங்களை நோக்கி அவர்
பேசுகின்ற வார்த்தைகளைக் கேட்பதற்கு ஆர்வம் காட்டுங்கள். அவரது இதயம் உங்கள்
இதயங்களோடு மென்குரலில் பேசுகின்றது." என்றவர் யார்?
திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்
120.
வாழ்க்கையின் அர்த்தத்தையும் நிலைவாழ்வுக்கான
வழியையும் இயேசுவில் கண்டடைகின்ற இளைஞர்களை யாரால் அடித்தளமிட்ட இளைஞர்கள்
என்கிறோம்?
கிறிஸ்துவில்
121.
எக்காலத்திற்கும் பொருத்தமானவர் யார்?
இயேசுகிறிஸ்து
122.
இயேசுவைப் போல மனித சமூகத்திலும் தனிமனித வாழ்விலும்
தாக்கம் செலுத்தியவர்கள் உலகவரலாற்றில் உருவாயினரா?
இல்லை.
123.
கொள்கைத் தெளிவாலும் வலுவான அறநெறிகளாலும் வரலாற்றில்
மிகவும் போற்றி வழிபடத்தகுந்த வல்லவர் யார்?
இயேசு கிறிஸ்து
124.
நீதி, அமைதி, அன்பு, இரக்கம் ஆகிய மனித இதயங்களைத்
தொட்டு உணர்த்துகின்ற விழுமியங்களின் உறைவிடம் எனப்படுபவர் யார்?
இயேசுகிறிஸ்து
125.
வரலாற்று நாயகனான இயேசு கிறிஸ்துவில், வாழ்க்கையின்
புதுமையை கண்டடைய யாருக்கு இயலும்?
இளைஞர்களுக்கு
126.
கடவுளைத் தந்தையாகக் கண்டு இயேசுவில் வாழ்க்கையைச்
சமர்ப்பித்து இயேசுவுக்கு சாட்சி பகிர்கின்றவர்களாக வேண்டியவர்கள் யாவர்?
இளைஞர்கள்
127.
வாழ்க்கையின் செயல்பாடுகள் அனைத்திலும் கிறிஸ்துவை
வாழ்வின் முக்கிய பங்காளியாக மாற்றிக்கொண்டு எதனை வாழ்வாக்க வேண்டும்?
நற்செய்தியை
128.
கடவுள் உலகிற்கு அறிவித்த நற்செய்தி என்பவர் யார்?
இயேசு
129.
இயேசுவின் வாழ்க்கைமுறையும், கோட்பாடுகளும் இளைஞர்களின்
வாழ்வில் சாட்சியாக மாறும் போதுதான், இளமை எவரில் அடித்தளமிடுவதாக அமையும்?
கிறிஸ்துவில்
பாடம் 2
வளர் இளம் பருவத்து கலக்கங்களும் சவால்களும்
1.
காணாமற்போன மகன்
உவமையை எடுத்துரைத்தவர் யார்?
இயேசு
2.
"என் தந்தையின் கூலியாட்களுக்குத் தேவைக்கு மிகுதியாக உணவு
இருக்க நான் இங்கு பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், 'அப்பா கடவுளுக்கும்
உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன். இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத்
தகுதியற்றவன், உம்முடைய
கூலியாட்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும்' என்று எண்ணிக்கொண்டவன் யார்?
காணாமற்போன மகன் உவமையில் இளைய மகன்
3.
“அப்பா!
கடவுளுக்கும், உமக்கும் எதிராக
நான் பாவம் செய்தேன். இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்” என்றவன்
யார்?
காணாமற்போன மகன் உவமையில் இளைய மகன்
4.
காணாமற்போன மகன்
உவமை எப்பகுதியில் காணப்படுகிறது?
லூக்கா 15:11-24
5.
காணாமற்போன மகன்
உவமையில் கூறப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கு நேரிடுகின்ற தேவைகளையும்
நெருக்கடிகளையும் பிரதிபலிக்கின்ற கதாப்பாத்திரம் யார்?
இளைய மகன்
6.
வளர் இளமை என்பதன்
ஆங்கிலச் சொல் என்ன?
Adolescence
7.
வளர் இளமை என்பதன்
இலத்தீன் மொழிச் சொற்கள் எவை?
ad, alescere
8.
Adolescence என்பதன் பொருள் என்ன?
to grow up
9.
வளர் இளமையின்
முக்கிய இயல்பு (கடமை) என்ன?
வளர்தல் (to grow up)
10. உடல் உறுப்புகளின் வளர்ச்சி மாற்றங்களுடன் தொடங்குகின்ற
பருவம் எது?
இளமைப்பருவம்
11. இளமைப் பருவத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காலம் எது?
பன்னிரண்டு முதல் பதினெட்டு வயது வரை
12. ஒரு நபரின் தனக்கே உரிய தன் உணர்வின் தேவைகளை (Need for ego Identity) எதிர்கொள்வதும், உள்ளுணர்வின் போராட்டங்களுக்கு விடையளிப்பதும் எந்த
பருவத்திலாகும்?
இளமைப்பருவம்
13. தனக்கே உரிய தன்னுணர்வை (Ego Identity) அடைவது எப்பருவத்தினரின் மிக
முக்கியமான பொறுப்புஆகும்?
வளர் இளம் பருவத்தின்
14. காணாமற்போன மகன் உவமையில் இளைய மகனின் தனித்துவத்தை (Identity) தேடும் ஆழ்மன
கூக்குரல் எது?
"சொத்தில் எனக்கு உரிய பங்கை தாரும்''
15. ஒரு இளைஞரின் அறையின் சுவரிலும் மேசையிலும் சினிமா
நட்சத்திரங்கள், பாடகர்கள், அழகான ஆண்கள், பெண்கள் ஆகியோரின்
படங்களைக் காண்பதன் வாயிலாக அவர் சொல்ல விரும்புவது என்ன?
தங்களுக்கே உரிய தனிப்பட்ட தனித்துவத்தை (Identity) இதுவரை ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை. அதனால்
அவர்கள் சமூகத்தில் புகழ்பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் தனித்துவத்தை
ஏற்றுக்கொள்ளவும் வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை மேற்குறிப்பிடும் மனிதர்கள்
ஏற்றுக்கொண்ட தனித்துவத்தின் பாதையில் வாழ்ந்து திருப்தியடையவும் செய்கிறார்கள்.
16. மனநிறைவு அடைவதற்காக தன்னுணர்வு தேடுகின்ற முக்கியமான
மூன்று செயல்கள் எவை?
விரும்புவதைச் செய்ய, விரும்புவதைப் பெற்றுக்கொள்ள, பிறரிடமிருந்து நல்லதை கேட்க
17. தாங்கள் யார்? தங்களுடைய சிறப்பு என்ன? என்பனவற்றை அறியாதவர்களும், அவர்களுடைய இடம்
எங்கே என்பதையும், அவர்கள் எவ்விடத்திற்குச் செல்கின்றனர் என்பதையும் அவர்கள் என்ன
செய்கின்றனர் என்பதையும் அறிந்திராத நிலையை எவ்வாறு அழைக்கிறோம்?
தான்மை உணர்வு நெருக்கடி (identity crisis)
18. தனித்துவ உணர்வை இழந்து விடும் இளைஞர்கள் கடமையில்
தவறியவர்களாய் தனிமைப்பட்டு அடிமைகளாகி விடும் பழக்கங்கள் என்ன?
போதைப்பொருட்கள், மதுப்பழக்கம். பாலின உறவுகள். பார்க்கத் தகாத படங்கள்
ஆகியவற்றிற்கும். மனநிலை சார்ந்த வேறு குறைபாடுகளுக்கும்.
19. “நான் புறப்பட்டு என் தந்தையிடம்
போய், அப்பா!
கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன். இனிமேல் நான் உம்முடைய மகன்
எனப்படத் தகுதியற்றவன். உம்முடைய கூலியாட்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும்
என்பேன்' (லூக் 15:18-20). என எண்ணியவன் யார்?
ஊதாரி மகன்
20. தூய ஆவியின் வாயிலாக வானகத் தந்தையுடன் ஆழமான ஓர் உறவு
இளைஞர்களுக்குத் தேவை எது நினைவூட்டுகின்றது?
தான்மை உணர்வின் தேடுதல்
21. மனிதர், தங்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்தை
விரிவுபடுத்திக்கொள்வதற்கும். நெருக்கடி நேரங்களில் நற்கருத்துக்களையும்
பாதுகாப்பையும் தேடிக்கொள்வதற்கும் தான் எதனை பெற்றுக்கொள்ள தாகமாய் இருக்கின்றனர்?
ஆன்மீக அனுபவம்
22. ஆன்மீக பார்வை என்பதனால் புரிந்து கொள்வது கடவுளோடுள்ள
உறவில் எது குறைவாக இருக்கிறது என்னும் அறிவையாகும்?
நமது தன்னுணர்வின் ஆளுமை (Ego personality)
23. இளைஞரிடமுள்ள நான்கு தன்னுணர்வு தளங்கள் யாவை?
இலட்சிய உணர்வு இழந்த இளையதலைமுறை, பின்பற்றப்படும் தான்மை : (Imitated Identity), விமர்சனத்தினூடே
தான்மை (Identity through opposition), ஆரோக்கியமான தான்மை (Healthy Identity)
24. இளைஞர்களுக்கு இலட்சிய உணர்வின்மை ஏற்படுத்தும் தாக்கங்கள்
எவை?
மதுபானம், போதைப்பொருட்கள், மனக்குழப்பங்கள், கல்வி கற்பதிலோ, கடமையாற்றுவதிலோ, வாழ்க்கையை அமைத்துக் கொள்வதிலோ ஆர்வம்
காட்டாமல் தான்தோன்றித்தனமாக வாழ்தல், கைப்பேசிக்கும், ஊடகங்களுக்கும், இணைய தளத்திற்கும், பாலுணர்வூட்டும் செயல்பாடுகளுக்கும் அடிமையாதல்
25. வளர்இளம் பருவத்தில் ஏற்படும் அடிப்படையான மாற்றங்கள் எவை?
i. உளவியல் மாற்றங்கள் (Psychological Changes), ii. உடல் சார்ந்த
மாற்றங்கள் (Physical Changes), iii. பாலுணர்வு
சார்பான மாற்றங்கள் (Sexual Changes), 4. ஆன்மீகமான மாற்றங்கள் (Spiritual Changes)
26. இளமைப்பருவத்தில் புலனறிவுக்கு அப்பாற்பட்டு
சிந்திப்பதற்கும், அறிவுக்கு ஏற்புடையதாய் வாதிடுவதற்கும் இயலும். தன் பெற்றோரைத் தொந்தரவு
செய்வதற்கு முயலலாம். அவரது வாதிட விரும்பும் இந்த இயல்பை ஒருபோதும் அவரது
தனிப்பட்ட தாக்குதலாகவோ, கீழ்ப்படியாமையாகவோ கருதக்கூடாது. ஏன்?
ஒரு இளைஞன் சுதந்திரமான பாதையைத்தேடி செல்வதற்குத் தேவைப்படுகின்ற ஒரு
செயல்பாடுதான் அது.
27. நம்பகத்தன்மை, நாட்டுப்பற்று தாய்நாட்டுக்காக உயிர்தியாகம் போன்ற
உணர்ச்சிப்பூர்வமான செயல்களும் வலுவடைந்துவரும் பருவம் எது?
இளமைப் பருவம்.
28. இளமைப் பருவத்தின் சிறப்பு உணர்ச்சி எனப்படுவது யாது?
ஊசலாட்டம் (mood swing)
29. உடல் சார்ந்த மாற்றங்கள் எப்பருவத்தில் ஏற்படும்?
வளர் இளம் பருவத்தில்
30. பாலுணர்வு மற்றும் பாலியல் இச்சைகளைக் குறித்து
மட்டுமல்லாமல் ஒரு நபரின் பாலியல் ஆர்வம் (Sexual Orientation) எதிர்
பாலினத்தவரிடமா அல்லது தன் பாலினத்தவரிடமா என்பதும் தீர்மானிக்கப்படுகின்ற பருவம்
எது?
இளமைப்பருவம்
31. ஆண்களுக்கு சுயமதிப்பு (Self-esteem) எப்போது ஏற்படுகின்றது?
செயல்கள் பல செய்ய ஆற்றல் பெற்றவரும் அவற்றிலெல்லாம் சிறப்பு அறிவும்
உடையவர் எனப் பிறர் கூறும் போது,
32. பெண்களுக்கு சுயமதிப்பு (Self-esteem) எப்போது ஏற்படுகின்றது?
தாங்கள் புகழ் படைத்தவரே என்பதிலும் தங்களைப் பிறர் விரும்புகின்றனர்
என்பதிலும்
33. கடவுளோடுள்ள உறவில் நமது தன்னுணர்வின் ஆளுமை (Ego Personality) எவ்வளவோ
சிறியதாய் உள்ளது என்னும் பகுத்தறிவு எம்முறையில் ஆகும்?
ஆன்மீகப் பார்வை
பாடம் 3
பாலுணர்வு கடவுளின் ஓர் அருள்கொடை
1.
பாலர் பருவ நிலையிலிருந்து வாலிப நிலையை நோக்கிப் பருவமாற்றமடைகின்ற
வாழ்க்கையின் காலகட்டம் எனப்படுவது எது?
வளர் இளம்பருவம்.
2.
உடல், மனம் சார்ந்ததும், அறிவு சார்ந்ததும், சமூகம் சார்ந்ததுமான
ஏராளமான மாற்றங்களுக்கு உள்ளாகிவிடுகின்ற வாழ்க்கையின் காலகட்டம் எனப்படுவது எது?
வளர் இளம்பருவம்
3.
பாலின தனித்தன்மை மாறுபாடுகள் மிகவும் அதிகமாக
நடைபெறுகின்ற வாழ்க்கையின் காலகட்டம் எனப்படுவது எது?
வளர் இளம்பருவம்
4.
எதிர்பாலினத்தவர் ஒருவரோடு நட்புறவு ஏற்படுத்திக்
கொண்டும் சுயமாகத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டும் அதற்கு நிகரான
மற்றவரது அன்பினை, நம்பிக்கை நன்னெறி விழுமியங்களின் ஒளியில் பெற்றுக் கொள்வது
எனப்படுவது எது?
பாலுணர்வு
5.
பாலுணர்வு உணரும் வாழ்வின் காலங்கள் எவை?
பாலர் பருவத்திலும், வளர் இளம்
பருவத்திலும்,
முழுவளர்ச்சியடைந்த
நிலையிலும்
6.
ஒருவரிடம் உயிரியல் தொடர்பான பாலின வளர்ச்சி
நடைபெறுமானால் மட்டுமே எதனைச் சார்ந்த பாலுணர்வில் தக்க முதிர்ச்சியைப்
பெறமுடியும்?
உடல் சார்ந்த
7.
பாலுணர்வு முதிர்ச்சியின் பல்வேறு நிலைகள் எவை?
1.
உடல் சார்ந்த பாலுணர்வு
2.
அறிவு சார்ந்த பாலுணர்வு
3.
மன உணர்ச்சி சார்ந்த பாலுணர்வு
4.
சமூகம்
சார்ந்த பாலுணர்வு
5.
அறநெறி
சார்ந்த பாலுணர்வு
6.
ஆன்மீகம் சார்ந்த பாலுவர்வு
8.
உடல் சார்ந்த பாலுணர்வின் மூன்று நிலைகள் எவை?
1.
உயிரணு சார்ந்த பாலுணர்வு
2.
நாளமில்லாச் சுரப்பிகளின் திரவம் சார்ந்த (Hormonsonal) பாலுணர்வு
3.
உயிரியல் சார்ந்த பாலுணர்வு
9.
உயிரணு சார்ந்த பாலுணர்வு என்றால் என்ன?
ஆண் விந்தும் பெண்
கருமுட்டையும் இணைந்து கருவறையில் முதல் உயிரணு உருவாகும் நேரத்திலேயே அதன்
பாலினம் நிச்சயிக்கப்பட்டுவிடும். XY ஆண் குழந்தையும் XX பெண் குழந்தையும் என
அமையும்.
10.
பாலுணர்வுக்கான சுரப்பிகள் (Hormons) மிகுந்த அளவு
பங்களிப்பது எதனில்?
உடல் தொடர்பான பாலின
வளர்ச்சியில்
11.
பாலின உறுப்புகளின் வளர்ச்சி எதன் செயல்பாடுகளைக்
கொண்டே நடைபெறுகின்றது?
சுரப்பிகளின்
12.
சுரப்பிகளின் (Hormon) செயல்திறனால் ஆணிடம்
உருவாவது என்ன?
விந்து
13.
சுரப்பிகளின் (Hormon) செயல்திறனால் பெண்ணிடம்
உருவாவது என்ன?
கருமுட்டை
14.
உடல் சார்ந்த பாலுணர்வில் உள்ளடங்கிய இரண்டு முக்கிய
பகுதிகள் எவை?
பாலுணர்ச்சியும் அதற்கான
பிரதிவினையும்
15.
பாலுணர்ச்சி உண்டாகும் போதெல்லாம் மனப்பூர்வமாக
பிரதிவினையை செயல்படுத்தும் முறையை
புரிந்து கொள்பவர்கள் யாவர்?
மனப் பக்குவமடைந்தவர்கள்
மதிப்பீடுகளின் பொருட்டு
16.
அறிவு சார்ந்த பாலுணர்வு எவ்வாறு உருவாகிறது?
ஒருவரின் வயதிற்கும்
வளர்ச்சிக்கும் ஏற்ப பாலுணர்வைக் குறித்து தெளிவான அறிவும். திடமான உள்ளுணர்வும், பெற்றுவிடுவதன்
வாயிலாக அறிவு சார்ந்த பாலுணர்வு பக்குவ நிலையை அடைகின்றது.
17.
ஒருவரது மனம் சார்ந்த பாலுணர்வு எத்தகைய வளர்ச்சியைக்
குறிக்கின்றது?
அவரது அக வளர்ச்சியை
18.
ஒருவருக்கு மற்றொருவரிடம் ஏற்படும் கவர்ச்சிக்குப்
பின்னணிகள் எவை?
ஒருவருக்கொருவரின்
பொருத்தமான தன்மையும், ஒருமித்த பண்பு நலன்களும்
19.
"நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம்
போன்றவர்கள்;
அத்தகைய
நண்பர்களைக் கண்டடைபவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள்" என்ற இறைவார்த்தைப்
பகுதி எங்குள்ளது?
சீராக் 6:14
20.
பாலுணர்ச்சியில் எது சரி! எது தவறு! என்பதை எதன் அடிப்படையில்
தீர்மானிக்க வேண்டும்?
நம்பிக்கை, இயற்கை,
தார்மீகச் சட்டம், புண்ணியங்கள், விழுமியங்கள்
21.
பாலுணர்வின் அறநெறி தொடர்பான கருத்துக்களில் நம்மை
வழிநடத்திச் செல்வது எது?
திருச்சபை
22.
கடவுளின் அருள் கொடையான முதிர்ச்சி பெற்ற பாலுணர்வை
நோக்கி வளர்ச்சியடைய எவ்வாறு இயலும்?
பாலியல்பின் ஆன்மீக நோக்கினை
உணர்ந்து கொண்டால்
23.
இஸ்ராயேல் மக்கள் பாலியல்பினை எவ்வாறு புரிந்து
கொண்டனர்?
மணவாழ்க்கையில் பாலுணர்வு
இன்பமூட்டுவதும், மகிழ்ச்சியைத் தருவதுமாகும். இனப்பெருக்கத்திற்காகக் கடவுள்
கொடையாக அளித்துள்ள பாலுணர்வைக் குறித்த கண்ணோட்டத்தில் புறவினத்தாருக்கும்.
இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே வேறுபாடு இருந்து வந்துள்ளது. தீயொழுக்கமான பல
செயல்களும் புறவினத்தாரிடையே இருந்து வந்தன. (லேவி 183, தொடக்க நூல்34:7, 2 சாமு.13:17),
24.
மனிதனின் பாலியல்பு எதனை தெளிவுபடுத்துகிறது?
கடவுளின் உருவையும்
சாயலையும்
25.
கடவுளின் சாயலில் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான்?
ஆணும் பெண்ணுமாக
26.
பாலுணர்வின் இயல்பு உள்ளடக்கிய பொருள் என்ன?
அன்பு, பகிர்வு
27.
அன்பில்லாத பாலுணர்வு என்பது மற்றவரை சுய விருப்பம்
நிறைவேற பயன்படுத்தும் எதுவாக மாற்றிவிடுகிறது?
ஒரு பொருளாக
28.
திருமணம் மற்றும் பாலுணர்வின் வேறுபடுத்த இயலாத கூறு என்பது
என்ன?
அன்பு பகிர்தல்
29.
திருமண உறவில் விந்துக்கும் கருமுட்டைக்கும்
இயல்பாகவே ஒன்றிணைவதற்கான திறன் உள்ளது. இல்லற உறவில் குழந்தைகளுக்குப் பிறப்பளிக்கும்
திறன் உள்ளது. என்பதன் அர்த்தம் என்ன?
பாலுணர்வு உயிரளிப்பதாகும்
30.
பாலியல்பின் உயிரளித்தல் என்னும் பொருளைக் குறிக்கின்ற
விவிலிய வாக்கு (தொ.நூல் 1:28) எது?
பலுகிப் பெருகுங்கள்
31.
வளர் இளம் பருவத்தில் தங்கள் உடல் வளர்ச்சியில்
காணப்படும் நிலைகளைக் குறித்து மிகுந்த கவலை கொண்டிருப்பது எதனில்?
உடல் உறுப்புகளைப் பிறரோடு
ஒப்பிட்டு பார்ப்பது, நண்பர்களுக்கு
ஒப்பான ஆடை அணிவது, எப்பொழுதும் கண்ணாடியில் பார்ப்பது, எதிர் பாலினத்தவரோடு
அலாதியான விருப்பமும், வேட்கையும் கொள்வது
32.
வளர்இளம் பருவத்தினர் சிலர் பாலியல்பு என்பதை உடல்
சார்பான ஒரு செயல் மட்டுமே என்று செய்யும் தவறான செயல்கள் எவை?
பாலுணர்வில் ஆதிக்கம்
நிலைநாட்டவும்,
பொருள்
சேர்க்கவும்,
நண்பர்களின்
வற்புறுத்தலுக்கு இசைந்தும் சிலர் பாலுறவில் ஈடுபடுகின்றனர். பெற்றோரின்
கட்டுப்பாட்டிலிருந்து விலகி சுதந்திரம் பெற்றுக்கொள்ள முயலுகின்றனர். பெற்றோர், முதியோர், இறைநம்பிக்கையாளர்
ஆகியோரை எல்லாம் கேள்வி கேட்கும் மனப்பாங்கும் இப்பருவத்தில் வெளிப்படுவதைக்
காணலாம். சமூகத்தில் தங்களது மதிப்பு என்ன என்பதை அறிந்து கொள்வதற்காகப் பலவிதமான
ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். புகைப்பிடித்தல், மது அருந்துதல், திருடுதல் போன்றவை
இதற்கு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே.
33.
பாலுணர்வை நல்வழிப்படுத்துவது எவ்வாறு?
இச்சையடக்கம், நல்ல நண்பர்கள்.
நல்லன வாசித்தல், நல்லன செய்தல், திருவிவிலியம் வாசித்தல், அருளடையாள வாழ்வு, நோன்பு மற்றும்
உபவாசம் முதலான ஆன்மீக செயல்பாடுகள்
34.
வளர்இளம் பருவத்தினர் சந்திக்கும் பாலியல்பு சிக்கல்கள் எவை?
பிறரைப் பாலியல்பான
அவசியங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். பிறரிடமிருந்து பாலியல்பான இன்பம்
அடைய முடியாவிட்டால் அவர்கள் அதனாலேயே அவர்களுடனான நட்பை முறித்து விடுகின்றனர்.
உறவுகளுக்கான ஆழம் குறைவாயிருப்பதற்கான சாத்தியக் கூறுகளும் இளம் பருவத்தினரிடம்
உள்ளது. இச்சூழ்நிலையில் தாங்கள் பிறரிடமிருந்து ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்னும்
அச்சத்தால் எப்பொழுதும் பிறரைத் திருப்திப் படுத்துவதற்காக இவர்கள் முயல்வர்.
மேலும் பொறாமை,
அச்சம், மனக்கலக்கம் போன்றவை
அவர்களது நட்புறவில் ஏற்படவும் கூடும்.
35.
பாலியல்பு சிக்கல்களைத் தவிர, வளர்இளம் பருவத்தினர் சந்திக்கும்
சூழல்கள் எவை?
சுதந்திரமாக செயல்படுவதற்கான
ஆவேசம்,
அன்பு
செய்வதற்கும் அன்பு செய்யப்படுவதற்குமான ஆர்வம், சரிநிகரான பருவத்தினரோடுள்ள
நட்புறவுக்கு முன்னுரிமை
36.
முழுமையான பாலின வளர்ச்சிக்கு மிகவும் தேவையான புண்ணியம்
எது?
தூய்மை
37.
பாலியல்பில் தூய்மை என்பது என்ன?
பாலுணர்வற்ற நிலை அல்ல. அது
ஒரு வாழ்வுநெறியும் ஒழுங்கு முறையுமாகும்.
38.
தூய்மை நெறி எத்தகைய ஒன்றிப்பை ஒருவரிடம் பாலுணர்வில்
ஏற்படுத்துகின்றது? உடல், மனம், ஆன்மீகம் தொடர்பான
39.
பாலியல்பில் தூய்மையில் வளர வேண்டிய நற்பண்புகள் எவை?
அன்பு, நம்பகத்தன்மை, இதயத்தூய்மை
40.
ஒருவர் உடல் தொடர்பான பாலுணர்வை நோக்கிச் செல்வது எதன்
அடிப்படையிலாகும்?
சிந்தனை, பாவனை, உணர்ச்சிகள், மனநிலை
41.
பாலியல்பில் கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் மறுக்கப்பட்ட
பாவச்செயல்கள் எவை?
சுய இன்பம் அனுபவித்தலும், ஓரினச்சேர்க்கையும்,
மணவாழ்க்கைக்கு வெளியே ஆண் பெண் பாலியல் உறவு
42.
கிறிஸ்தவ கண்ணோட்டத்தில், ஆண் பெண் பாலியல் உறவு எப்போது
அனுமதிக்கப்படுகிறது?
மணவாழ்க்கையில்
43.
உடலையும், பாலுணர்வையும் நாம் கண்ணியத்துடன் போற்றும்போது
நாம் யாரைப் புகழ்கிறோம்?
நம்மைப் படைத்த கடவுளின்
நன்மையை
44.
பாலுணர்வில் இளைஞர்களுக்கு அவசியமானது எது?
சுயக் கட்டுப்பாடு
45.
பாலுணர்வில் சுயக்கட்டுப்பாடு எப்படிப்பட்ட தீர்மானமாக
அமைய வேண்டும்?
சுதந்திரமானதும்
மனப்பூர்வமானதும்
46.
பாலுணர்வுக் கட்டுப்பாட்டின் அடிப்படையான அம்சங்கள் எவை?
அன்பும், மதிப்பும்
47.
பாலுணர்ச்சிகளை அடக்கி வைத்து விடக் கூடாது. அடக்கி
வைக்கப்பட்ட பாலுணர்வு நம்மை விட்டு ஒருபோதும் ஒதுங்கி விடாது. அனிச்சைச் செயலாக
அது வெளிப்பட்டு விடும். காலப்போக்கில் கடினமான பாலுணர்வு சிக்கல்களை
ஏற்படுத்திவிடவும் செய்கின்றது. அவை யாவை?
பாலுணர்வினை அடக்கி ஒடுக்கி
வைத்து விடுகின்ற நபர் ஏமாற்ற மடைந்தவரும், எல்லாம் அடக்கி வைப்பவரும், பதட்டமானவரும், கோபம் கொள்பவரும், தன்னுள்ளே
நட்புறவுகளில் அச்சம் கொள்பவரும் பிறரிடம் குற்றம் காண்பவருமாக மாறுவார்.
48.
வளர் இளம் பருவத்தில் பாலுணர்ச்சிகள் ஏற்படும்போது
நல்லொழுக்க நெறிகள் வாயிலாக பிற செயல்பாடுகளுக்கு அந்த உணர்ச்சிகளைத் திருப்பிவிடுவதற்கு
பெயர் என்ன?
உயர் பண்படைதல்
49.
பாலியல்பு எப்பொழுதும் உடலின் செயல்பாடு மட்டுமல்ல, அவற்றின் பரிமாணங்கள்
எவை?
மனம், அன்புறவு, சமூகம், ஆன்மீகம்
50.
பாலுணர்வினை மொத்தமாக உள்வாங்கிட அன்புறவில்
அடித்தளமிடுவதன் வகைகள்எவை?
1.
முதலாவதாக கடவுளோடு அன்புறவு வேண்டும் மன்றாட்டு ஆராதனை, பலி சமர்ப்பணம், தியாகச் செயல்கள்
ஆகியவை வழியாகக் கடவுளோடு அன்புறவு கொள்ள இயலும்.
2.
இரண்டாவதாக,
தாய்
தந்தையோடும். சகோதரர்களோடும் அன்புறவு வேண்டும்.
3.
மூன்றாவதாக தமது பாலினத்தவரோடு அன்புறவு வேண்டும். பல நல்ல நண்பர்களை
கொண்டிருப்பது நல்லதே.
4.
நான்காவதாக எதிர் பாலினத்தவரோடு அன்புறவு
வேண்டும்.
51.
பாலியல் பிரச்சினைகளை குணப்படுத்தும் நான்கு முக்கிய
முறைகள் எவை?
1.
நமது சிக்கல்களைக் கண்ணியத்தோடு அணுக வேண்டும். கடவுளோடு பயணம் செய்து நமது
சிக்கல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
2.
நமது பாலியல் சிக்கல் என்ன என்பதை உண்மைத்தன்மையோடு கவனிக்க வேண்டும்.
3.
நமது
சிக்கல்களைத் தெளிவோடு பகுத்தறிய வேண்டும்,
4.
எதிர்பார்ப்புடன் நமது சிக்கல்களைக் குறித்து ஆழமாக மறு சிந்தனை செய்தல் வேண்டும்.
52.
பாலுணர்வு இறைக்கொடையே என்னும் உணர்வினால் பாலியல்பில்
முழு வளர்ச்சி பெற எது தேவையானது?
ஆக்கபூர்வமான ஒரு மனநிலை
53.
யாருக்கு பாலுணர்வை இறைக் கொடையாக அனுபவிக்க முடியும்?
இறைநம்பிக்கையிலும், விழுமிய உணர்விலும்
வளரும் இளைஞர்களுக்கு
பாடம் 4
திருமணம் ஓர் இறைஅழைத்தல்
1.
கிறிஸ்தவ திருமணத்தின் வரலாறு சார்ந்த நிலைகளை
அறிந்து கொள்வதற்காக தொன்மையான எந்த மரபுகளை தேடிச் செல்ல வேண்டும்?
எபிரேய மரபுகளை
2.
தொடக்ககாலக் கிறிஸ்தவ சமூகம் குறிப்பாக யூதக் கிறிஸ்தவர்களாயிருந்ததால்
எந்த பண்பாடுகளை கடைபிடித்து வந்தனர்?
யூத பண்பாடுகளை
3.
யூத மரபில் திருமண உறவின் அடிப்படையையும், தூய்மையையும் எடுத்துக்
கூறும் விவிலியப் பகுதி எது?
தொடக்க நூலின் முதல் இரண்டு
அதிகாரங்கள்
4.
பழைய ஏற்பாட்டு மரபில் பாலின உறவும், திருமணமும் யார்
உருவாக்கிய உண்மைகள் ஆகும்?
கடவுள்
5.
எபிரேய மரபில் ஆண் பெண் உறவு பற்றிய அறிவுரைகளை எடுத்துக்
கூறும் விவிலியப் பகுதி எது?
தொடக்க நூலின் முதல் இரண்டு
அதிகாரங்கள்
6.
ஆணும் பெண்ணும் சேர்ந்த மனிதன் (Adam) எவற்றிலிருந்து வனையப்பட்டான்?
மண்ணிலிருந்து (Adamah)
7.
ஏனைய படைப்புகளிலிருந்து மாறுபட்டு மனிதன் தெய்வீக
உருவும் சாயலும் பெற்றதுடன் எதனையும் பெற்றுக் கொண்டான்?
உயிர் மூச்சும் (Breath of life)
8.
ஆணா? பெண்ணா? யார் பெரியவர்? யார் சிறியவர்? என்ற கேள்விக்கு
விடை என்ன?
ஒருவர் மற்றவரை நிறைவு
செய்கிறார்
9.
ஆண் - பெண் சங்கமத்தை எதன் முழுமையை நோக்கிய
ஒருவருக்கொருவரின் நிறைவுபடுத்தலாக காணவேண்டும்?
படைப்பின்
10.
மனிதன் பெண்ணைப்பார்த்து தொடக்கத்திலேயே அழைத்த பெயர்
என்ன?
இவளே என் எலும்பின்
எலும்பும் சதையின் சதையும்
11.
“இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும்” என்பதன்
அர்த்தம் என்ன?
மனிதன் பெண்ணை சரிநிகராகக்
காண்கிறான் என்பதற்கும் மேலாகத் தனக்கு வடிவமும் உருவமும் தருவது பெண் தான்
என்பதையும் உணர்த்துகின்றது. பெண், ஆணிலிருந்து வேறுபட்ட நிலைகளில் மாறுபட்டவள் அல்ல:
மாறாக ஆணுக்கு அர்த்தத்தையும் நிறைவையும் அளிப்பவளே.
12.
ஒருவருக்கொருவர் நிறைவு செய்பவர்களாகிய ஆணும்
பெண்ணும் இருவர் அல்லர். இருவரும் ஒரே உடலாய் இருப்பர் .என்ற விவிலியப்பகுதி
எங்குள்ளது?
தொடக்கநூல் 2:24
13.
இரண்டினை ஒன்றாக்குவதும் ஒன்றினை நிறைவாக்குவதுமான
அன்பின் தூய்மையான ஒன்றிப்பு எனப்படுவது எது?
ஆண் பெண் உறவு.
14.
இரண்டு வேறுபட்ட பாலினத்தவரும் கடவுளின் படைப்பு தான்
என்பதும் அவர்கள் ஒருவருக்கொருவர் ஒரே உடலாய் ஒன்றித்திருக்கும் இணைப்பின்
பாலுணர்ச்சி முற்றிலும் நன்மையும் தூய்மையுமானதே என்ற செய்தியை கூறும் விவிலிய
நூல் எது?
தொடக்கநூல்
15.
பாலுணர்ச்சி கடவுளின் கொடையும் மனிதனின் கடமையும்
ஆகும் என தெளிவு படுத்திக் கூறும் விவிலிய நூல் எது?
தொடக்கநூல்
16.
மனிதப் பெருக்கத்தை ஏற்படுத்தி மண்ணுலகை நிரப்பி, மண்ணுலகையும், அதில் உள்ள
அனைத்தையும் மனித ஆற்றலுக்கு உட்படுத்துவதற்கான இறையாசீரை தம்பதியினர்
பெற்றுக்கொண்டிருப்பதுடன் அவர்களுடைய கடமையையும் தெளிவுபடுத்துகின்ற
விவிலியப்பகுதி எங்குள்ளது?
தொடக்க நூல் 1:28
17.
திருமணம் தெய்வீகப் படைப்புச் செயலின் ஒரு பகுதியே எனவும்
இறைத்திட்டமாகிய படைப்புச்செயல் தடங்கல் ஏதுமின்றி தொடர வேண்டியது திருமணத்தின்
வாயிலாகவே எனவும் வலியுறுத்துகின்ற மரபு எது?
எபிரேய மரபு
18.
திருமணம் வாயிலாக ஆண்களும் பெண்களும் ஏற்றுக்கொள்ளும்
பொறுப்பு எத்தகையதாகும்?
தெய்வீகமும், நிலையானதும்
19.
குடும்ப வாழ்வின் வாயிலாக இறைத்திட்டத்தைக்
குறைவின்றி தொடர்ந்த குலமுதுவர்கள் யாவர்?
ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு
மோசே மற்றும் பழைய ஏற்பாட்டு குலமுதுவர்கள்
20.
எபிரேய மரபில் இறைத்திட்டமாம் திருமணம் என்பது என்ன?
உடன்படிக்கை
21.
எபிரேய மொழியில் உடன்படிக்கையை (Covenant) குறிக்கும் சொல்
எது?
பெரித்
22.
இரண்டு நபர்களுக்கிடையே ஏற்படும் ஒரு சிறந்த உறவை
குறிக்கின்ற உடன்படிக்கைக்குப் பெயர் என்ன?
பெரித்
23.
திருமணம் ஓர் உடன்படிக்கையே என்பதன் பொருள் என்ன?
இருவருக்கிடையேயான
பிரிக்கமுடியாத நிலையான, ஆழ்நிலை அன்புறவு
24.
திருமணம் என்னும் உடன்படிக்கையின் சாட்சி யார்?
மாற்றமில்லாதவரான கடவுள்
25.
மணமுறிவு கடவுளின் திட்டம் அல்ல. எனக்கூறும்
விவிலியப்பகுதி என்ன?
மலாக்கி 2:16
26.
மோசேயின் சட்டத்தின் படியான மணமுறிவு கடவுளின்
விருப்பத்தின் படியானது அல்ல என்பதையும் அது மனிதனின் கடின உள்ளத்தின் பொருட்டான
பிரதிபலிப்புதான் எனவும் இயேசு கற்பித்த விவிலியப்பகுதி என்ன?
மத்தேயு 19:8
27.
உடன்படிக்கையின் மையம் மணமகனும், மணமகளும் அளிக்கும்
மனசம்மதத்தில் அடங்கியுள்ளது. எனக்கூறும் விவிலியப் பகுதி என்ன?
தனது மகன் ஈசாக்கிற்கு பெண் கொள்வதற்கு
வேலையாளரிடம் கேட்டுக் கொண்ட ஆபிரகாம் அப்பெண்ணின் சம்மதத்தை மிக முக்கியமான
ஒன்றாக காண்கின்றார். (தொடக்க நூல் 24:8, 58)
28.
திருமண உடன்படிக்கையில் சட்டம் சார்ந்த முறைகளும்
இருந்து வந்ததென்பதை தெளிவாக்குகின்ற விவிலியப் பகுதி என்ன?
தோபியா - சாரா திருமண
ஒப்பந்தம் எழுதி முத்திரை வைப்பதன் வாயிலாக (தோபி.7:13).
29.
திருமணம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது ஊனியல்பான
விருப்பு வெறுப்புகளில் அல்ல. மாறாக எதனால் ஆகும்?
புனிதமான அன்பில்
30.
தோபியா தனது திருமண இரவில் ஆண்டவரோடு மன்றாடியது
என்ன?
''ஆண்டவரே நான் இவளை மனைவியாக
ஏற்றுக்கொள்வது இச்சையின் பொருட்டன்று நேர்மையான நோக்கத்தோடுதான். என் மீதும் இவள்
மீதும் இரக்கம் காட்டும். நாங்கள் இருவரும் முதுமை அடையும் வரை இணைபிரியாது
வாழச்செய்யும்"
(தோபி 87)
31.
கடவுள் உருவாக்கிய குடும்ப உறவு எதன் வெளிப்பாடு
ஆகும்?
இறையன்பின்
32.
குழந்தைப்பேறு இல்லாத மணஉறவு கடவுளின் சாபத்தின்
அடையாளமெனக் கருதுகின்ற பழைய ஏற்பாட்டு முதுவர்கள், மக்கள் பேறு இல்லாத
காரணத்தால் திருமண உறவை முறித்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல் கடவுளின்
இரக்கத்திற்காக இடைவிடாமல் மன்றாடிக் கொண்டே முதுமை அடையும் வரையில்
காத்திருக்கும் முதியவரான கணவன் மனைவியர் பழைய ஏற்பாட்டில் எதற்கு
எடுத்துக்காட்டாக உள்ளனர்?
திருமண உறவின் பிளவுபடா
தன்மை
33.
திருமண உடன்படிக்கை முறிவுபடாத நிரந்தர உறவே எனவும், கணவன் தன் தாய் தந்தையை
விட்டு விட்டுத் தன் மனைவியுடன் ஒன்றிக்கவும். இவர்கள் இருவரும் ஒரே உடலாய்
இருப்பர். என்ற நிரந்தர உறவின் அடையாளமான போதனை
விவிலியத்தில் எங்குள்ளது?
தொடக்க நூல் 2.24
34.
பழைய ஏற்பாட்டு மரபுகளோடு அடித்தளமிடப்பட்ட தெய்வீக
உடன்படிக்கையாம் திருமணத்தை புதிய ஏற்பாட்டில் இயேசு எவ்வாறு மேன்மைப்படுத்தினார்?
திருவருட்சாதனமாக
35.
“மணமக்களை இணைப்பது கடவுள் என்பதால் அவர்களைப்
பிரிக்க மனிதனுக்கு உரிமையில்லை” என இயேசு கற்பித்த விவிலியப்பகுதி எங்குள்ளது?
மத்தேயு19:3-9
36.
தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன்
எவனும் விபச்சாரம் செய்கிறான். என்ற விவிலியப்பகுதி எங்குள்ளது?
லூக் 16:18
37.
தூய மத்தேயுவின் நற்செய்தியில் பரத்தமையை, மணவிலக்கை
நியாயப்படுத்தும் காரணியாகக் குறிப்பிடும் இறைவார்த்தைப்பகுதி எங்குள்ளது?
மத்தேயு 19:9
38.
பழைய ஏற்பாட்டில் மனைவியிடம் காணக்கூடிய சிறு
பிழையும் கூட மணவிலக்கிற்கு வழிவகுத்துவிடலாம் என விளக்கிய இறையியலாளர் யார்?
ஹில்லேல் (Hillel)
39.
மனைவியின் பரத்தமை அல்லாத வேறு எந்த காரணமும்
மணவிலக்கினை நியாயப்படுத்தவில்லை எனக் கற்பித்த பழைய ஏற்பாட்டுக் கால இறையியல் பள்ளி எது?
ஷம்மாய் (Shammai)
40.
மணவிலக்கு பற்றி இயேசு கூறியது என்ன?
“படைப்பின் தொடக்கத்திலேயே
கடவுள் ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் அவர்கள் இருவரும் ஒரே உடலாய்
இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல. ஒரே உடல் எனவே கடவுள் இணைத்ததை மனிதர்
பிரிக்காதிருக்கட்டும்" (மத்தேயு 19:4-6).
41.
திருமண உறவை மணமகனாகிய கிறிஸ்துவுக்கும் மணமகளாகிய
திருச்சபைக்கும் உள்ள உறவாக எடுத்துக்காட்டியவர் யார்?
திருத்தூதர் பவுல்
42.
மணமகனாகிய கிறிஸ்துவும் மணமகளாகிய திருச்சபையும்.
எவ்வாறு ஒன்றிணைந்திருக்கிறார்களோ அவ்வாறே முறிவு படாத உறவு எனப்படுவது எது?
திருமண உறவு
43.
மணமக்கள் முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய திருமண
அன்பின் அடிப்படை எது?
இயேசு திருச்சபைக்கு
அளித்துள்ள அன்பு
44.
கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பது போல கணவர்
மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். என்றவர் யார்?
திருத்தூதர் பவுல்
45.
கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியது போல
மணமக்கள் ஒருவருக்கொருவர் அன்புசெலுத்த கடமைப்பட்டிருக்கின்றனர். என்றவர் யார்?
திருத்தூதர் பவுல்
46.
கிறிஸ்துவும் திருச்சபையும் ஒன்றாயிருப்பது போல
கணவனும் மனைவியும் ஒன்றாயிருக்க வேண்டும். என்றவர் யார்?
திருத்தூதர் பவுல்
47.
பழைய ஏற்பாட்டில் திருமண உறவானது படைத்தவரால்
நிறுவப்பட்ட உடன்படிக்கை எனில், புதிய ஏற்பாட்டில் இயேசு எவ்வாறு திருமணத்தை
மாண்புறச் செய்தார்?
இறையருள் வழங்கும் அருளடையாளம்
48.
திருமன அருளடையாளம் நிறைவு பெறுகின்ற மற்றும்
திருமணத்தை முறையானதாக மாற்றுகின்ற மூன்று காரணிகள் எவை?
1 மனப்பூர்வமாக எந்தவிதமான
கட்டாயமோ வற்புறுத்தலோ இன்றி மணமகனும் மணமகளும் கடவுளுக்கும் திருச்சபைக்கும்
முன்னிலையில் சுதந்திரமாக அளிக்கின்ற மணஒப்புதலும், திருமண தடைகளும் இல்லாத
நிலை.
2 திருமண அருளடையாளம்
ஆசீர்வதிக்கும் குருவானவரின் (ஆயரின்) பிரசன்னமும் ஆசீரும்
3 மணமக்களின் உடல் ஒன்றிப்பின்
வாயிலாக நிறைவு பெறுகின்ற மணஉறவு
49.
திருமணத்தின் முறிவுபடாததாய் உள்ள மூன்று காரணிகள்
எவை?
1 நிபந்தனையற்ற அன்பில்
ஒருவருக்கொருவர் ஆன்ம சமர்ப்பணம் செய்கின்ற அன்பு
2 கடவுளுக்குத் தமது படைப்பின்
மீதான நிபந்தனையற்ற நம்பகத்தன்மையின் மறு சாயல்.
3 சிலுவைச்சாவை ஏற்கும்
அளவுக்கு கிறிஸ்து திருச்சபைக்கு அளித்த சமர்ப்பணத்தின் அடையாளம்.
50.
திருமணத்தை அருளடையாளமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த திருச்சங்கம்
எது?
இரண்டாம் இலாத்தரன்
திருச்சங்கம் (1139)
51.
திருமணத்தை அருளடையாளமாக அறிவித்த இரண்டாம் இலாத்தரன்
திருச்சங்கத்தின் கருத்தை உறுதிப்படுத்தியது எது?
திரிதெந்து திருச்சங்கம் (1545-1563)
52.
மாறிவரும் கால கட்டத்தில் திருமண உறவின் தூய்மையை
பொருள்செறிவுடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்திய திருச்சங்கம்
எது?
இரண்டாம் வத்திக்கான்
திருச்சங்கம்
53.
குடும்ப உறவுகளில் பெருகி வரும் தன்னலமும்
காமவெறியும்,
குழந்தை
செல்வத்தை மறுக்கும் வகையில் உள்ள பழக்கங்களும் திருமண அன்பை நிலைகுலையச்
செய்கின்றது. என்ற கருத்தை தெளிவுபடுத்திய திருச்சங்கம் எது?
இரண்டாம் வத்திக்கான்
திருச்சங்கம்
54.
"திருமண அமைப்பும், திருமண அன்பும் தம் இயல்பிலே
பிள்ளைகளைப் பெற்று பயிற்றுவிப்பதற்கு என அமைந்துள்ளன. பிள்ளைகளே ஒருவிதத்தில்
அவற்றின் மணி மகுடமாகவும் அமைகின்றனர். மேலும் திருமண உடன்படிக்கையால் இனி இவர்கள்
இருவர் அல்ல,
ஒரே
உடல்"
(மத்தேயு
19.6)
என்னும்
சொற்களுக்கேற்ப ஆணும் பெண்ணும் ஆளோடு ஆள் நெருங்கி இணைகின்ற பிணைப்பாலும் தம்முடைய
செயல்களை ஒருங்கிணைப்பதாலும் ஒருவருக்கொருவர் உதவியும் பணி செய்கின்றனர். இவ்வாறு
தங்கள் ஒன்றிப்பு நிலையின் உட்பொருளை உணர்கின்றனர். நாளுக்கு நாள் அவ்வுணர்வை
நிறைவாகப் பெறுகின்றனர். இருமனிதர்கள் ஒருவருக்கொருவர் தங்களையே கொடையாக
அளித்தலாகிய இந்த நெருக்கமான ஒன்றிப்பிலும், குழந்தைகளின் நலனிலும்
மணமக்கள் ஒருவருக்கொருவர் முழுமையான விதத்தில் உண்மையுடையவர்களாக செயல்பட
வேண்டும். அவர்களது முறிவுபடவியலா ஒன்றிப்பு நிலையின் தேவை வலியுறுத்தப்பட
வேண்டும்"
என தெளிவுபடுத்திய
இரண்டாம் வத்திக்கான் திருச்சங்க கொள்கைத் திரட்டின் பகுதி எது?
இன்றைய உலகில் திருச்சபை 48.
55.
திருமண அன்பு இறை அன்பை நோக்கி அழைத்துச்
செல்கின்றது. கிறிஸ்துவின் மீட்கும் ஆற்றல் மனத்தூய்மைக்கு உதவுகின்ற செயல்களால்
நிறைந்துள்ளன. திருமண அன்பு நம்பகத்தன்மையால் முத்திரையிடப்பட்டு கிறிஸ்துவின்
அன்பால் புனிதப் படுத்தப்படுகிறது. இந்த அன்பு இன்பத்திலும் துன்பத்திலும் ஆன்ம
உடல்களின் நம்பகத்தன்மையால் உறுதிப்படுத்தப்படுகிறது. என தெளிவுபடுத்திய இரண்டாம்
வத்திக்கான் திருச்சங்க கொள்கைத் திரட்டின் பகுதி எது?
இன்றைய உலகில் திருச்சபை 49
56.
திருமணம் தெய்வீக உயிரான குழந்தைகளைப்
பிறப்பிப்பதற்கும், பேணிவளர்ப்பதற்கும் உள்ள கடமையை மணமக்களிடம் ஒப்படைக்கின்றது.
இக்கடமையை பொறுப்பேற்று செயல்படுத்தும் போது அவர்கள் படைத்தவராம் கடவுளின் அன்பில்
பங்குசேரவும் நாட்டின் மற்றும் திருச்சபையின் விருப்பங்களைப் பாதுகாக்கவும்
செய்கின்றனர். என தெளிவுபடுத்திய இரண்டாம் வத்திக்கான் திருச்சங்க கொள்கைத்
திரட்டின் பகுதி எது?
இன்றைய உலகில் திருச்சபை 50
57.
குழந்தைகளை பிறப்பிப்பது என்பது தம்பதிகளை கிறிஸ்தவ
நிறைவுக்கு அழைத்துச் செல்வதாகும். என்ற கருத்தை தெளிவுபடுத்திய திருச்சங்கம் எது?
இரண்டாம் வத்திக்கான்
திருச்சங்கம்
58.
உயிரை படைப்பவரும் தலைவரும் இறைவனே. உயிரைப்
பாதுகாக்கின்ற உன்னதமான பணியை இறைவன் யாரிடம் ஒப்படைத்துள்ளார்?
மனிதரிடம்
59.
குடும்ப வாழ்வில் தெய்வீகமான பணி எனப்படுவது எது?
உயிரை படைத்தலும், காத்தலும்
60.
கருக்கலைப்பு, குழந்தைக்கொலை குறிப்பாக
பெண்குழந்தைக் கொலை, தற்கொலை, கருணைக்கொலை போன்ற வாழ்க்கையை வெறுத்ததால் செய்கின்ற
எந்த பாவச்செயல்களும் இறைத்திட்டத்துக்கு எதிரான கொடும் பாவமாகும். எனத் தெளிவுபடுத்திய
இரண்டாம் வத்திக்கான் திருச்சங்க கொள்கைத் திரட்டின் பகுதி எது?
இன்றைய உலகில் திருச்சபை 51
61.
எத்தனை குழந்தைகள் வேண்டும் என்று பெற்றோர்
முடிவெடுப்பதில் பெற்றோரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது தவறு என திருச்சபை
கருதுகிறது. குழந்தைகளைக் குறித்து தீர்மானம் எடுப்பதில் பெற்றோரின் சுதந்திரத்தை
எவ்வகையிலாவது கட்டுப்படுத்த முயலும் செயல்கள் மனித மாண்புக்கும் நீதிக்கும்
எதிரானதாக திருச்சபை கருதுகிறது. எனக் குறிப்பிடும் கொள்கைத் திரட்டின் பகுதி எது?
குடும்பம் ஒரு கூட்டுறவு. 30
62.
கட்புலனாகாத இறையன்பை கட்புலனாக்கும் வெளிப்பாடு
என்பது எது?
திருமண அன்பு
63.
கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட மனிதனின்
தாம்பத்திய உறவு மூவொரு கடவுளின் கூட்டுறவில் உள்ள பங்கேற்பு வாயிலாகவே
நிறைவேற்றப்படுகிறது. மணமக்களின் இயல்பான அழைப்பு அன்பிற்கும் கூட்டுறவிற்கும்
உள்ள அழைப்பு ஆகும். எனக் குறிப்பிடும் கொள்கைத் திரட்டின் பகுதி எது?
குடும்பம் ஒரு கூட்டுறவு. 11
64.
புனித இரண்டாம் யோவான் பவுல் திருமணத்தின் பாலுணர்வு
பற்றிக்கூறுவது என்ன?
"தம்பதிகளுக்கு உகந்ததும்
அவர்களுக்கே உரித்தான செயல்கள் வழியாக ஆணும் பெண்ணும் தங்களை ஒருவருக்கொருவர்
அர்ப்பணம் செய்யும் பாலுணர்வு எவ்வகையிலும் உயிரியல் கூறு மட்டுமல்ல, மாறாக ஒரு மனிதனின்
உள்ளார்ந்த சாராம்சத்தை சார்ந்ததும் ஆகும்"
65.
மலங்கரை கத்தோலிக்க சபையின் ஆராதனை முறையின்படி
திருமணம் என்னும் அருளடையாளத் திருச்சடங்கின் இரண்டு பகுதிகள் எவை?
மோதிரம் வாழ்த்துதல்
திருச்சடங்கு மற்றும் மகுடம் வாழ்த்துதல் திருச்சடங்கு
66.
திருமணம் என்னும் அருள் அடையாளத்தில் திருமண ஒப்புதலை
மணமக்கள் யாருடைய முன்னிலையில் அறிக்கையிடுவர்?
இரு சாட்சிகள் மற்றும்
குருவானவர்
67.
மணமக்கள் தங்களது மணஒப்புதலை உடன்படிக்கையாக முத்திரையிடும்
சடங்குக்குப் பெயர் என்ன?
மோதிரம் அணிவித்தல்
68.
மணமக்களின் மணஒப்புதலால் மரணம் வரை எக்குறையுமின்றி
பாதுகாத்துக் கொள்வோம் என அவர்கள் திருச்சபைக்கும் சமூகத்தினருக்கும் முன்னிலையில்
எந்நிகழ்வு வழியாக தெளிவுபடுத்துகின்றனர்?
ஆசீர்வதிக்கப்பட்ட மோதிரத்தை
ஏற்றுக்கொள்வதனால்
69.
மலங்கரை ஆராதனை முறையின் படி மணமக்கள் திருமண மோதிரங்களை
யாரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர்?
குருவானவரிடமிருந்து
70.
திருமண உடன்படிக்கை மணமக்கள் தனிப்பட்ட முறையில்
செய்து கொள்ளும் ஓர் ஒப்பந்தம் மட்டுமல்ல. மாறாக, மெசியாவின் திருச்சபையுடன்
இணைந்து நடத்தும் எதுவாகும்?
உடன்படிக்கை
71.
திருச்சபையின் பிரதிநிதியான குருவானவர், எவ்வாறு மன்றாடி மணமக்களுக்கு
மோதிரம் அணிவிக்கின்றார்?
"புனித சீடர்களிடமிருந்து
பெறுவதுபோல்,
புனிதமான
குருவானவர்களிடமிருந்து நீ உன் மணஒப்பந்த மோதிரத்தைப் பெற்றுக் கொள்வாயாக"
72.
இயேசு கிறிஸ்து திருச்சபையுடன் செய்து கொண்ட திருமண
உடன்படிக்கை தமது இரத்தத்தின் வாயிலாக முத்திரையிடப்பட்டது போன்று திருச்சபை
ஆசீர்வதித்த எதனை மணமக்கள் பெற்றுக்கொண்டு தங்களது உடன்படிக்கைக்குத்
திருச்சபையுடன் இணைந்து முத்திரை இடுகின்றனர்?
மோதிரத்தை
73.
திருமண உறவு கடவுள் முன் செய்யும் உடன்படிக்கை என
உணர்ந்து கொள்வதற்கும் திருமணத்தின் முறிவுபடா தன்மையை உறுதிப் படுத்தவும்
செய்யும் நிகழ்வுக்குப் பெயர் என்ன?
மோதிரம் ஆசீர்வாத திருச்சடங்கு
74.
அன்பிலும், ஒன்றிப்பிலும் மரணம் வரை நம்பிக்கைக்குரிய
தம்பதிகளாக வாழ்வோம் என திருச்சபை மற்றும் சமூகத்தின் முன் அறிவித்த மணமக்களைக்
கடவுள் உருவாக்கிய குடும்பத்தின் அரசரும் அரசியுமாய் மகுடம் சூட்டுகின்ற சிறப்பான
சடங்குக்குப் பெயர் என்ன?
மகுடம் அணிவித்தல்
75.
கடவுள் அளிக்கின்ற உயிருக்கு பிறப்பளிப்பதற்கும், பாதுகாத்து
வளர்ப்பதற்குமான பொறுப்பினையும், அனைத்து படைப்புகளின் மீதுள்ள அதிகாரத்தையும்
அளிப்பதன் மேன்மையான அடையாளம் எனப்படும் சடங்குக்குப் பெயர் என்ன?
மகுடம் அணிவித்தல்
76.
திருமணம் அருளடையாளத்தின்போது வாசிக்கப்படும்
திருத்தூதர் பவுலின் திருமுகம் எது?
எபே 5:21-33
77.
திருமணம் அருளடையாளத்தின்போது வாசிக்கப்படும் நற்செய்திப்பகுதி
எது?
மத்தேயு 19:1-12
78.
திருமணத் திருவழிபாட்டில் இறைவார்த்தை
வழிபாட்டிற்குப் பின்னர் குருவானவர் மணமக்களை எந்த அடையாளத்தால் மகுடம்
சூட்டுகின்றார்?
சிலுவை
79.
நீதியின் மகுடமும் பகைவனின் வலிமையை வெல்லும்
தோல்வியடையாத படைக்கலனும் எனப்படுவது எது?
சிலுவை
80.
திருமணம் அருளடையாளத்தின்போது இந்தியக்
கலாச்சாரத்திலிருந்து பின்பற்றப்படும் வழக்கமான செயல்கள் எவை?
தாலி மற்றும் புடவை அணிவித்தல்
81.
திருமணம் அருளடையாளத்தின் இறுதியில் திருமணப் பதிவேட்டில் கையொப்பமிடுவதன் அர்த்தம்
என்ன?
தாங்கள் ஏற்றுக்கொண்ட குடும்ப
உறவின் கடமையை மரணம் வரை ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்வதன் அடையாளமாக
82.
திருமணம் படைத்தவராகிய கடவுளால் நிறுவப்பட்டதும், முறிவுபடாததும்
ஒருவருக்கொருவர் அளிக்கும் ஒப்புதலால் தம்பதிகளின் நன்மைக்கும், இனவிருத்திக்கும், குழந்தைகளை
வளர்ப்பதற்குமாக திட்டமிடப்பட்டதாகும். எனக்கூறும் கிழக்கத்திய திருச்சபைகளின் சபைகளின்
சட்ட எண் எது?
CCEO.776/1
83.
திருமுழுக்கு பெற்றவர்களுக்கிடையேயான திருமணம்
அருளடையாளமாகும். ஒன்றிப்பு நிலையும் முறிவுபடா தன்மையும் திருமணத்தின் சாராம்சம்
சார்ந்த சிறப்பியல்புகளாகும். எனக்கூறும் கிழக்கத்திய திருச்சபைகளின் சபைகளின்
சட்ட எண் எது?
CCEO.776/3
84.
மலங்கரை ஆராதனை மரபின்படி தாம்பத்திய உறவு
இயேசுகிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயான உறவைப் போன்றது என்பதனால்
குருவானவரின் கரங்களிலிருந்து திருமண உடன்படிக்கையின் மோதிரம் ஏற்றுக் கொண்டு
தம்பதிகள் இந்த நிலைப்பாட்டினை உறுதிப்படுத்துகின்றனர். எனக்கூறும் “மலங்கரை
கத்தோலிக்க சபையின் தனிச்சட்டத் தொகுப்பு” சட்ட எண் எது?
CPCSMCC.519
85.
திருமணத்திற்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தனை வயது நிரம்பியிருக்க
வேண்டும்?
21 வயதும், 18 வயதும்
86.
திருமணம் நடத்தக்கூடாத விலக்கப்பட்ட காலங்கள் எவை?
25 நோன்பு நாட்கள், 3 நோன்பு நாட்கள், 50 நோன்பு நாட்கள், இயேசு
கிறிஸ்து விண்னேற்றம் அடைந்த நாள் முதல் பெந்தகோஸ்து நாள் வரையிலான காத்திருப்பு
நாள்கள் (10
நாள்கள்)
87.
திருமணங்களைத் தகுந்த முறைகளில் தடை செய்வதற்கு பொறுப்புடையவர்கள்
யார்?
குருக்கள்
88.
திருமணத்திற்கு ஏதேனும் தடைகள் உண்டென்று அறிந்தால்
இறைமக்கள் அதனைத் திருமணத்திற்கு முன்னதாகவே யாரிடம் தெரிவிக்க வேண்டும்?
பங்குத் தந்தையையோ, மறைமாவட்ட ஆயரையோ
89.
திருமணம், இறைத் திட்டத்தில் மனிதன் ஏற்றுக்கொள்ளும்
மிகப்பெரும் பொறுப்பாகையால் அந்த நிலையை அடைவதற்கு மணமக்கள் தகுந்த முன்
தயாரிப்புகள் செய்யவேண்டும். எனக்கூறும் கிழக்கத்திய திருச்சபைகளின் சபைகளின் சட்ட
எண் எது?
CCEO. 783
90.
மறைபோதனை வாயிலாகவும், மூன்று நாட்கள் நடைபெறும்
திருமண ஆயத்தப் பயிற்சி வகுப்புகள் வாயிலாகவும் மணமக்களைத் திருமணத்திற்கு
ஆயத்தப்படுத்துவதற்காக மலங்கரை கத்தோலிக்க சபையின் தனிப்பட்ட சட்டம் எப்பகுதியில் அறிவுறுத்துகின்றது?
CPCSMCC, 520
91.
திருமண ஆயத்தப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பது
சட்டம் வலியுறுத்தும் கடமையும் ஆகும். எனக்கூறும் “மலங்கரை கத்தோலிக்க சபையின்
தனிச்சட்டத் தொகுப்பு” சட்ட எண் எது?
CPCSMCC, 521
92.
திருமணம் நடைபெறப்போவதை மும்முறை அறிவிப்பாகக்
கோவிலில் அறிவிக்க வேண்டியதும், மணமக்கள் பாவ சங்கீர்த்தனம் செய்து நற்கருணை
உட்கொண்டு திருமண அருளடையாளத்திற்காகத் தம்மையே ஆயத்தம் செய்ய வேண்டியதுமாகும்.
எனக்கூறும் “மலங்கரை கத்தோலிக்க சபையின் தனிச்சட்டத் தொகுப்பு” சட்ட எண் எது?
CPCSMCC, 522
93.
மும்முறை அறிவிப்புக்குப் பின்னர் பங்குத்தந்தையின்
அனுமதிக் கடிதம் திருமண திருச்சடங்கிற்கு தேவையானதாகும். எனக்கூறும் “மலங்கரை
கத்தோலிக்க சபையின் தனிச்சட்டத் தொகுப்பு” சட்ட எண் எது?
CPCSMCC, 537/538
94.
முறையான திருமணத்திற்கு ஒருவனை / ஒருத்தியைத்
தகுதியற்றவன் அல்லது தகுதியற்றவள் எனத் தீர்மானிக்கும் கூறுகளுக்குப் பெயர் என்ன?
திருச்சபைத் தடைகள்
95.
இருவகை திருமணத்தடைகள் எவை?
வெளிப்படையான ஆதாரத்தோடு
கூடிய திருமணத்தடைகள் பகிரங்க (Public) தடைகள் எனவும். அப்படியல்லாத தடைகள் இரகசிய (Occult) தடைகள்
96.
திருச்சபையின் சட்டங்களில் (CCEO 800) திருமணத்தடைகள் எவ்வாறு
வகுக்கப்பட்டுள்ளன?
தெய்வீக சட்டங்கள், மானிட சட்டங்கள்
ஆகியவற்றின் அடிப்படையில் திருமணத்தின் தூய்மையையும், ஒன்றிணைந்த தன்மையையும்
உறுதிப்படுத்தி
97.
சட்டம் சார்ந்த திருமணத்தடைகள் எவை?
1 திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் வயது
வரம்பில் குறைவு.
2 தனிப்பட்டதோ இணைந்துள்ளதோ ஆன பாலினப் புணர்ச்சிக்குத்
தகுந்த திறன் குறைவாயிருத்தல் (மலட்டுத்தன்மை தடையாகாது).
3. ஏற்கனவே நடந்த திருமண உறவு
4. திருமுழுக்கு பெறாத நபரோடுள்ள திருமண உறவு,
5. திருப்பட்டம் பெற்றுள்ளவர்.
6 துறவற சமூகத்தில் வெளிப்படையாக துறவறம்
ஏற்றுக்கொண்டவர்.
7. திருமண நோக்கத்தோடு கடத்திச்செல்பவர்.
8 வேறொருவரைத் திருமணம் செய்யும் நோக்கத்தில் திருமண
இணையின் மரணத்திற்குக் காரணமானவர்.
9 தாயின் மரபிலுள்ள இரத்த உறவினர்.
10. நெருங்கிய உறவினர்களோடு உள்ள திருமணம்.
11. திருமுழுக்கின் போதுள்ள ஞானத்தந்தைக்கும்
ஞானத்தாய்க்கும் குழந்தையோடும் அதன் பெற்றோரோடும் உள்ள ஆன்மீக உறவு
12. தத்து எடுப்பதில் ஏற்படுகின்ற நியமங்களுக்கு ஏற்ப
உள்ள உறவு
பாடம் 5
உயிர் - கடவுளின்
அருள்கொடை
1.
"நன்மைக்கும் தீமைக்கும் இடையே மரணத்திற்கும்
உயிர்வாழ்வுக்கும் இடையே, மரண கலாச்சாரத்திற்கும் உயிர் கலாச்சாரத்திற்கும்
இடையே வலுவான ஒரு போராட்டத்தை இன்றைய சமூகம் சந்திக்கிறது. நாம் இப்போராட்டத்தின்
மத்தியில் அகப்பட்டிருக்கிறோம். அதே வேளையில் நாம் அனைவரும் அதில் பங்கேற்கவும்
செய்கிறோம். ஆதலால் நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்ட உயிருக்காக போராடவேண்டிய பொறுப்பு
நமக்குள்ளது"
எப்பகுதியில்
உள்ளது?
நற்செய்திவாழ்வு, 28
2.
உயிர் என்பது யாருடைய கொடையாகும்?
கடவுளின்
3.
மனித உயிரின் பாதுகாப்பாளர் யார்?
கடவுள்
4.
பிரபஞ்சத்தில் தண்ணீரிலிருந்து உயிர் தோன்றியது
எனவும்,
ஆயிரக்கணக்கான
ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில் மனித உயிர் உண்டானது எனவும் விஞ்ஞானிகளுள் சிலர்
கூறுகின்றனர். உயிரின் தோற்றத்தைக் குறித்து அறிவியல் ஆய்வுகள் பல உண்டெனினும்
கடவுள் தான் இப்பிரபஞ்சம் முழுவதற்கும் உயிர் அளித்தவர் என
சந்தேகத்திற்கிடமின்றிக் (தொடக்க நூல் 2:1) கற்பிப்பது எது?
விவிலியம்
5.
1987-ல் வத்திக்கான் திருச்சங்கம் வெளியிட்ட எந்த
தொகுப்பில் உயிர் கடவுளின் கொடை எனவும் படைத்தவராகிய கடவுள் மனிதனிடம் பொறுப்புடன்
அதை கையாளுவதற்கு ஒப்படைத்திருக்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது?
"உயிரின் கொடை" என்னும் ஏட்டின்
முன்னுரையில்
6.
“கடவுள் தம்மையே பகிர்ந்து கொள்வதன் ஒரு பகுதியாக
படைப்பாகிய மனிதனுக்கு உயிரைக் கொடையாக அளித்தார்' (உயிரின் நற்செய்தி 34). என்ற புனித இரண்டாம்
யோவான் பவுல் திருத்தந்தையின் திருத்தூதுவ
மடல் எப்போது வெளியிடப்பட்டது?
1995-ல்
7.
"மனிதனின் உயிர் கடவுளிடமிருந்து வருகின்றது. அது
கடவுளின் கொடையும், சாயலும், மறு உருவமும் உயிர் மூச்சிலுள்ள பங்கேற்பு ஆகும்". என்பது எந்த
திருத்தூதுவ மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
உயிரின் நற்செய்தி 39
8.
உயிரை மனிதனுக்கு சொந்தமென உரிமை கொண்டாட முடியுமா?
முடியாது
9.
உயிரின் உரிமையாளரும் கொடையாளியுமானவர் யார்?
கடவுள்
10.
கடவுள் உயிரை ஒப்படைத்திருப்பதிலிருந்து உயிரை
பாதுகாப்பவர் யார்?
மனிதன்
11.
ஏன் உயிர் புனிதமானது?
உயிரின் உறைவிடம் கடவுள்
12.
மனிதனைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக்
காட்டும் சிறப்பியல்புகள் எவை?
தெய்வீக உருவும் சாயலும்
13.
கடவுள் உயிரின் ஆண்டவரும், உடைமையாளரும் ஆனதால்
மனிதனின் கட்டுப்பாட்டிலிருக்கும் உயிரை அவனுக்கு விருப்பமான முறையில் கையாள யாருக்கு
அதிகாரமில்லை?
மனிதனுக்கு
14.
பொறுப்புணர்வோடும் மாண்புடனும் கையாள்வதற்காகத் தான் எந்த
தாலந்தை ஒரு நிதியைப் போன்று கடவுள் மனிதனிடம் ஒப்படைத்திருக்கிறார்?
உயிர்
15.
உயிரின் ஆண்டவராகிய கடவுளிடம் கணக்கை ஒப்படைப்பதற்கு யாருக்கு
கடமையுள்ளது (உயிரின் நற்செய்தி 52)?
மனிதனுக்கு
16.
தெய்வீக சட்டங்கள், இயற்கை நியதிகள், அறநெறி
ஒழுங்குமுறைகள் ஆகியவற்றிற்கு எப்பொழுதும் கட்டுப்பட்டவன் யார்?
மனிதன்
17.
பிரபஞ்சத்தின் காவலாளியும் பாதுகாவலனும் யார்?
மனிதன்
18.
மனிதனின் உலக வாழ்வில் பிற நன்மைகளை அடையவும் வளப்படுத்தவும்
எந்த அடிப்படை நன்மை இருக்க வேண்டும்?
உயிர்
19.
நிலைவாழ்வென்னும் முழுமுதல் நன்மையுமாய்
ஒப்புமைப்படுத்தும் போது எது வெறும் அடிப்படை நன்மை மட்டுமே?
உலக வாழ்வு
20.
எதனை அடைய வேண்டுமானால் அடிப்படை நன்மையாகிய (Basic good) உடலில் உள்ள உயிரை
விட்டுவிடவும் தயங்கக்கூடாது?
நிலைவாழ்வான பேரின்பத்தை
21.
“நண்பனுக்காக உயிரை
கொடுப்பதை விட சிறந்த அன்பு இல்லை எனவும், தம் உயிரைக் காத்துக்கொள்ள
விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும்
தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்" என்னும் விவிலியப் பகுதி
எங்குள்ளது?
மாற்கு 8:35
22.
யார் கொடையாகத் தந்த, புனிதமான மனித உயிர்
மதிக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்படவேண்டும்; செழிக்கச் செய்ய வேண்டும்?
கடவுள்
23.
உயிருக்கு எதிரான செயல்கள் பற்றி வத்திக்கான் சங்கம்
கூறுவது என்ன?
"உயிருக்கு எதிராக செல்லும்
அனைத்து வகைகளையும் சார்ந்த கொலை, இனஒழிப்பு கருச்சிதைவு, தீராநோயின்போது
உயிர்மாய்த்தல்,
எண்ணித்துணியும்
தற்கொலை போன்றவையும் மனித முழுமையைக்கெடுக்கும் உறுப்புச்சிதைவு, உடல் அல்லது
உள்ளத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகள், உள்ளத்தை வன்முறையால் மாற்றமுயலுதல் போன்றவையும், மனித மாண்புக்கு
ஒவ்வாத மனித தன்மைக்கு எதிரான வாழ்க்கை நிலைகள், காரணமின்றி சிறைப் படுத்தல், நாடு கடத்தல்.
அடிமைநிலை,
பரத்தமை, பெண்களையும் இளைஞ
ரையும் குழந்தைகளையும் விற்றல் போன்றவையும் தன்னுரிமையும் பொறுப் புணர்வும்
நிறைந்த நபர் களாக தொழிலாளர் களை மதியாது, ஊதியத் திற்கான வெறும் கருவி
களாகவே அவர்களை நடத்தும் இழிந்த வேலை சூழ்நிலைகள் ஆகிய வையும் மிக வெட்கக் கேடானவையாகும்.
மேலும். இவை மனித நாகரிகத்தை கறைபடுத்துகின்றன. இத்தீமைகளால் துன்புறுவோரைவிட
இவற்றைச் செய்பவருக்கே இவை அதிக சீர்குலைவை ஏற்படுத்துகின்றன. படைப்பின் கடவுளது
மாட்சிக்கு இவை முற்றிலும் எதிரானவை ஆகும்". (இ. உதி 27).
24.
புதிய மனித உயிர் எப்போது தோன்றுகின்றது?
பெண்னின் கருவும் ஆணின் விந்துவும்
ஒன்றுக்கொன்று இணைந்து கொள்ளும் நிமிடம் முதல் தாயிடமிருந்தும், தந்தையிடமிருந்தும்
வேறுபட்டதும் மாறுபட்டதுமான தனக்கே உரிய மரபின் ஆற்றல் பெற்ற புதிய மனித உயிர்
தோன்றுகின்றது.
25.
“மனித உயிர் கருக்கொண்டதன் தொடக்க நொடி முதல் ஒரு
நபர் என்ற நிலையில் பேணி மதிக்கப்படவும், கையாளப்படவும் செய்ய வேண்டும். அதனால், அந்த நிமிடம் முதல்
ஒரு நபர் என்ற நிலையில் அதன் உரிமைகளை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். அவ்வுரிமைகளில்
மிகவும் முக்கியமானது மாசுமறுவற்ற ஒவ்வொரு மனிதனும் கொண்டுள்ள மாற்ற இயலா
வாழ்வுரிமை ஆகும்." என்ற திருஏட்டின் பகுதி எங்குள்ளது?
உயிரின் கொடை 1.1
26.
கருவுற்ற நிலையிலிருக்கும். மாசுமறுவற்ற மனித உயிரை
அதன் உருக்கொண்ட நொடி முதல் ஏதேனும் கட்டத்தில் இரசாயனப் பொருள்களாலோ வேறு
கருவிகளாலோ அல்லது வேறு ஏதேனும் முறைகளிலோ வேண்டுமென்றே அழித்து விடவும், கர்ப்பப்பையிலிருந்து
வெளியேற்றிவிடவோ முயல்வதன் பெயர் என்ன?
கருக்கலைப்பு/கருக்கொலை
27.
முழுமனத்தோடு கூடிய கருச்சிதைவு அறநெறி சார்ந்த
தீமையே எனத் திருச்சபை எப்போது முதலே உறுதிபட அறிவித்துள்ளது?
முதல் நூற்றாண்டு முதல்
28.
அறம் சார்ந்த சரியான நோக்கத்தை முன்கண்டு ஒரு செயலை
செய்யும்போது கருச்சிதைவுக்கான நிலைமை ஏற்படுவது தான் என்ன?
மறைமுகமான கருக்கொலை
29.
மறைமுகமான கருக்கொலைக்கு எடுத்துக்காட்டு?
கர்ப்பவதியின்
கர்ப்பப்பையில் புற்றுநோய் ஏற்பட்டு, உடனேயே கர்ப்பப் பையை அகற்றி விடாவிட்டால்
தாயும்,
வாழ்ந்திருக்க
வலுவில்லாத கருவாயிருக்கும் குழந்தையும் இறந்து போவது உறுதிப்படுமானால் தாயின்
உயிரைக் காப்பாற்றுவதற்காக இறுதி முயற்சியாகக் கருவறையை அகற்றிவிடலாம். இதனால்
குழந்தை இறந்து விடுகிறது. இங்கே குழந்தையின் உயிரானது தாயின் உயிரைவிட மாண்பும்
முக்கியத்துவமும் குறைந்ததால் அல்ல, மாறாக குழந்தையைக் காப்பாற்ற எந்த வழியும்
இல்லாததனாலே ஆகும்.
30.
மனித கொலை என்றால் என்ன?
ஒரு மனிதன் பூமியில்
பிறக்கின்ற நேரத்திலிருந்து இயல்பான மரணம் வருவதற்குமுன் வேண்டுமென்றே கொலை
செய்யப்படுவது திட்டமிட்ட மனித கொலை
31.
கொலை பற்றி ஐந்தாம் கட்டளை கற்பிப்பது என்ன?
"நேரடியானதும்
மனப்பூர்வமானதுமான கொலையை ஐந்தாம் கட்டளை இழிவானதும், கொடுமையானதுமான பாவமென
கருதித் தடை செய்கிறது. மேலும், பழிவாங்க விண்ணகத்தை நோக்கி முறையிடும் பாவத்தையே
கொலையாளியும் அதற்கு வேண்டுமென்றே ஒத்துழைப்பவர்களும் செய்கின்றனர்" (CCC.
2268).
32.
பணத்திற்காகவும், பழிக்குப்பழியாகவும், பட்டம்
பதவிகளுக்காகவும், தற்பெருமைக்காகவும், மற்றொருவரின் உயிரை அழித்து விடுகின்ற
கொடுஞ்செயலுக்குப் பெயர் என்ன?
கொலை
33.
சமூகத்தில் கொலைகள் யாரால் நடக்கின்றன?
மதுவுக்கும், மயக்க
மருந்துகளுக்கும் அடிமைகளாகி. காம கோபதாபங்களால் தூண்டப்பட்டவர்களால்.
34.
சொந்த உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் சுயமாகப்
பாதுகாத்துக்கொள்வதற்கும் அந்த நபருக்கு உரிமையுண்டா?
உண்டு
35.
கருணைக்கொலை என்பதன் கிரேக்க மொழிச் சொல் என்ன?
"எவுத்தானேசிய' (Euthanasia)
36.
"எவுத்தானேசிய' (Euthanasia) என்னும் சொல்லின் அடிப்படை
அர்த்தம் என்ன?
"தன்மானமுள்ள மரணம், அமைதியான, மதிப்பான மரணம்"
37.
கருணைக்கொலையை அறநெறியென ஏற்றுக்கொள்ளவே முடியாதது
ஏன்?
தற்கொலையோ, கொலையோ ஆவதால் அதனை
அறநெறியென ஏற்றுக்கொள்ளவே முடியாது
38.
கருணைக் கொலை உண்மையில் கருணையையும் இரக்கத்தையும்
வெளிப்படுத்தாமல் இருப்பது எப்படி?
கொடுமையாய் அவர்களை
மாய்த்துவிடுவதற்கான குறுக்கு வழி
39.
தற்கொலை பற்றி கத்தோலிக்க மறைக்கல்வி கூறுவது என்ன?
"தனது உயிரைப் பாதுகாப்பதற்கும்.
தொடர்வதற்கும் உள்ள மனிதனின் இயல்பான மனப்பாங்கிற்கு எதிரானதே தற்கொலை. நியாயமான
சுய அன்பிற்கு முற்றிலும் அது எதிரானதே அது போலவே, அது பிறரோடுள்ள அன்பினையும்
புண்படுத்துகின்றது. காரணம், நமக்குத் தொடர்ந்தும் கடமைகள் உள்ள குடும்பம் நாடு
பிற மனித சமூகங்கள் ஆகியவற் றோடுள்ள இறுக்கமான ஒன்றித்த உறவுகளை அது நியாயமாக
முறித்துவிடுகின்றது வாழும் கடவுளோடுள்ள அன்பிற்கு எதிரானதே தற்கொலை" (CCC.
2281)
40.
கடவுள் நமக்கு எதற்காக உயிரை வழங்கியுள்ளார்?
அதனை பேணிவளர்ப்பதற்கும், கடவுளின்
விருப்பத்திற்கிணங்க வாழ்ந்து விண்ணகம் எய்துவதற்கும்
41.
போதைப்பொருட்களின் பயன்பாட்டிற்கு அடிமையாகின்றவர்கள்
மறைமுகமாகவும்,
மெதுவாகவும்
எத்தீமையை செய்பவர்கள் எனக்கூறலாம்?
தற்கொலை
42.
புகைப்பிடித்தல் அது உபயோகிப்பவர்களுக்கு மட்டுமல்ல. பிறருக்கும்
தீங்கிழைக்குமா?
சுற்றியிருப்பவர்களின்
ஆரோக்கியத்தையும் கெடுத்து விடுகின்றது. அக்காரணத்தினால் புகைபிடிப்பது
சகோதரனுக்கு எதிரான தீமை ஆகிறது.
43.
போதைப்பொருள் பற்றி கத்தோலிக்க மறைக்கல்வி கற்பிப்பது
என்ன?
“சுயக்கட்டுப்பாடு என்னும்
நற்பண்பு எல்லாவிதமான மிதமிஞ்சிய உணவு, மதுபானம், புகைபிடித்தல், மருந்து ஆகியவற்றின்
தவறான பயன்பாட்டை துறந்து விடுவதற்கு நமக்கு உதவுகின்றது. மது அருந்துவதனாலோ, அளவு கடந்த
வேகத்தில் ஊர்திகளை ஓட்டுவதனாலோ தங்களுடையதோ. பிறருடையதோ பாதுகாப்பை ஆபத்துக்
குள்ளாக்குபவர் கொடும் குற்றத்திற்கு பொறுப்பாளிகளாவர்." (CCC. 2290)
44.
மயக்க மருந்துகளின் பயன்பாடு பற்றி கத்தோலிக்க
மறைக்கல்வி கற்பிப்பது என்ன?
"மயக்க மருந்துகளின் பயன்பாடு
மனிதனின் ஆரோக்கியத்திற்கும் உயிருக்கும் மிகப் பாதகமான அழிவை ஏற்படுத்துகின்றது.
மிகத் தேவையான சிகிச்சைகள் மட்டுமல்லாமல் இவற்றைப் பயன்படுத்துவது பெரும்
தவறாகும். மயக்க மருந்துகளின் மறைவான உற்பத்தியும், வியாபாரமும் பிறருக்கு இடறல்
தரும் செயல்களாகும். அவைத் தீமைக்கான நேரடி ஒத்துழைப்புமாகும். காரணம், முற்றிலும்
அறநெறிச்சட்டங்களுக்கு எதிரான தீமைகளை செய்வதற்கு அவை மக்களைத் தூண்டுகின்றன" (cCC.
2291)
45.
கழிவுப்பொருள்களை பொது இடங்களில் போடுவதால் ஏற்படும் சுகாதாரப்
பிரச்சினைகள் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தீரா வியாதிகள் உருவாகவும் தொற்றுநோய்கள்
பரவவும் எண்ணற்ற மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய
பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண்பது எப்படி?
சமூகம் சார்ந்த
விழிப்புணர்வின் வாயிலாக
46.
இயற்கையை அளவுக்கு மீறி சுரண்டும் போது யாருக்கு
எதிராக சவால்விடுகின்றோம்?
படைத்த கடவுளுக்கெதிராக
47.
சமூகத்தை உருச்சிதைக்கும் புற்றுநோய்கள் எனப்படுபவை
எவை?
வகுப்பு கலவரம், பயங்கரவாதச் செயல்கள், குண்டர்களின் சமூக விரோதச்
செயல்கள்,
வாடகைக்
கொலை
48.
போரைத் தவிர்த்து விடுவதே திருச்சபையின் உறுதியான
நிலைப்பாடு எனினும் சொந்த நாட்டை பகை நாடுகளின் அநீதியான தாக்குதலிலிருந்து
பாதுகாத்துக்கொள்ள நியாயமான தாக்குதல் நடத்த நாட்டுத்தலைவர்களுக்குக் கடமையுள்ளது.
எனக்குறிப்பிடும் வத்திக்கான் திருச்சங்க ஏட்டின் பகுதி எது?
இன்றைய உலகில் திருச்சபை 79
49.
உயிரின் உறைவிடமும், உரிமையாளரும்
கடவுளே. உயிரைப் பாதுகாப்பவர் யார்?
மனிதன்
50.
எது கருவாகும் நொடி முதல் இயல்பாக முடியும் வரை (மரணம்வரை)
பாதுகாக்கப்படவும் மதிக்கப்படவும் வேண்டும்?
மனித உயிர்
51.
உயிர் அடிப்படை நன்மையாகும். ஆனால் அது பேரானந்தம்
அல்ல.
52.
உயிர் கொண்டாடுவதற்கும் சுவைத்து அனுபவிப்பதற்கும், செழிப்பாக
வளர்ப்பதற்கும் உள்ளதே. எனில் உலக வாழ்வின் நோக்கம் என்ன?
விண்ணகம் சென்றடைவது
53.
உயிரைப் பாதுகாப்பது என்பதன் பொருள் என்ன?
உடல் நலத்தைப் பேணுவதற்கும், மனித தன்மைக்கேற்ற, தகுதிக்கேற்ற
மதிப்புடன் வாழ உரிமையுண்டு
54.
உயிருக்கெதிரான கொடுஞ்செயல்கள் எவை?
கொலை, கருக்கொலை, தற்கொலை, கருணைக்கொலை
55.
மரணக் கலாச்சாரத்திற்குப் பதில் எக்கலாச்சாரத்தை
வளர்க்க வேண்டும்?
வாழ்வின்
56.
மனிதனின் தேவைகள் அனைத்தும் இயற்கையில் உள்ளன. ஆனால்
பேராசையோடு தேவைக்கு அதிகமாகச் சுரண்ட வேண்டியவை எதனுள் இல்லை?
இயற்கையில்
பாடம் 6
இறைவனுக்காக அர்ப்பணித்தவர்களே இளையோர்
1.
குருத்துவம் என்னும் கருத்துரு எப்போது முதல் துவங்குகிறது?
மனித வரலாறு
2.
ரிக்வேதத்தின் எந்த பாடல் குருத்துவத்தைப் பற்றிக்
குறிப்பிடுகின்றது?
முதல் பாடல்
3.
ரிக்வேதத்தின் குருத்துவம் பற்றிக் குறிப்பிடும்
பாடல் எது?
"ஓம் அக்னி மீளே புரோகிதம்
யக்ஞசிய தேவம் இறுத்திஜம் ஹோதாரம் ரத்ன தாதவம்"
4.
"ஓம் அக்னி மீளே புரோகிதம் யக்ஞசிய தேவம் இறுத்திஜம்
ஹோதாரம் ரத்ன தாதவம்" என்பதன் அர்த்தம் என்ன?
பலியின் புரோகிதரும் செல்வம்
தருபவர்களில் முதல்வனுமாகிய அக்கினி தேவனை நான் போற்றுகிறேன்.
5.
புரோகிதன் என்னும் சொல்லின் பொருள் என்ன?
புரோ + கிதன் = திருமுன்
சமர்ப்பிக்கப்பட்டவன்
6.
புரோகிதர் அல்லது குரு எதற்காக
நியமிக்கப்பட்டுள்ளார்?
பலி சார்ந்த செயல்களை முன்னின்று
நடத்துவதற்கு ஏற்படுத்தப்பட்டவர்
7.
கடவுளின் பிரதிநிதியாக பேசவும் கடவுளின் முன்னிலையில் நின்று கொண்டு மக்களின்
பிரதிநிதியாகப் பலி அர்ப்பணம் செய்யவும், மன்றாட்டுகளைச் சமர்ப்பிக்கவும் செய்பவர்(எசே.
44:15)
யார்?
புரோகிதர் அல்லது குரு
8.
யாவே கடவுள் தனியாகத் தேர்ந்தெடுத்து "சொந்த மக்கள் என
அழைத்த இஸ்ரயேல் மக்களில் மீண்டும் நடத்தப்பட்ட ஒரு தனித் தேர்ந்தெடுப்பின் விளைவு
எனப்படும் குருக்களின் குலம் எது?
லேவி குலத்தவர்
9.
'குருத்துவத்திருப்பணி உங்களுக்கான அருள்கொடையாகும்" என்ற விவிலியப்பகுதி
எங்குள்ளது?
எண்ணிக்கை 17:8
10.
"லேவியர் குலத்திற்கு தம் சகோதரர்களுடன் பங்கு இல்லை; உரிமைச்சொத்தும்
இல்லை;
உங்கள்
கடவுளாகிய ஆண்டவர் அவர்களுக்குச் சொல்லியிருப்பதுபோல, ஆண்டவரே அவர்களது உரிமைச்
சொத்து"
இக்கருத்தினை
வலியுறுத்துகின்ற பழைய ஏற்பாட்டுப் பகுதிகள் எவை?
இ.ச. 10:9, இ.ச.18.1-2, எண். 18:7, 18:20, எசே 44:28.
11.
குருக்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளைக்
குறித்தும் கோவிலுக்குள்ளே குருக்கள் அனுசரிக்க வேண்டிய ஒழுங்குமுறைகளை குறித்தும்
எந்த விவிலிய நூல்கள் குறிப்பிடுகின்றன?
எண்ணிக்கை, இணைச்சட்ட நூல்கள்
12.
குருத்துவ ஒழுக்க நெறிகளின் வழிபாடுகளிலும், பலிகளிலும்
அகப்பட்டு வெறும் சட்டங்களை செய்பவர்கள் என்னும் நிலைக்குப் போகாதிருப்பதற்கான
முன்னெச்சரிக்கைகளை எந்த நூலில் காணலாம்?
திருவிவிலியத்தில்
13.
'குருக்கள் மக்கள் முன்னிலையில் நின்று அவர்களுக்கெனத்
திருப்பணி புரியலாம்" என்ற விவிலியப்பகுதி எங்குள்ளது?
எசே 44:11
14.
"லேவியக் குருக்கள் என் அருகில் வந்து திருப்பணி புரிய
வேண்டும்"
என்ற
விவிலியப்பகுதி எங்குள்ளது?
எசே 44:15
15.
"தூய்மையானவற்றையும் பொதுவானவற்றையும் பகுத்தறியவும்
தீட்டானதையும் தீட்டற்றதையும் பகுத்தறியவும் அவர்கள் (குருக்கள்) என் மக்களுக்குக்
கற்றுக்கொடுக்க வேண்டும்" என்ற விவிலியப்பகுதி எங்குள்ளது?
எசே. 44:23
16.
"வழக்குகளில் குருக்களே நடுவராய் இருந்து என் நீதித் தீர்ப்புக்கேற்பத்
தீர்ப்பளிக்க வேண்டும்" என்ற விவிலியப்பகுதி எங்குள்ளது?
எசே 44; 24
17.
ஒரு குருவின் உதடுகள் ஞானத்தை காக்க வேண்டும். அவனது
நாவினின்று திருச்சட்டத்தைக் கேட்க மக்கள் அவரை நாட வேண்டும். ஏனெனில் படைகளின்
ஆண்டவருடைய தூதன் அவன்' என்ற விவிலியப்பகுதி எங்குள்ளது?
மலா. 2:7
18.
பழைய ஏற்பாட்டில் குருக்களின் பணிகள் என்ன?
குரு இறைப்பணி ஆற்றுவதற்கும், கடவுளின்
பிரதிநிதியாக மக்கள் முன் நிற்பதற்கும், மக்களுக்கு இறை விருப்பத்தை விளக்கிக்
கொடுப்பதற்கும் கடவுளுக்கும் மக்களுக்குமிடையே இடை நிலையாளராகி நிற்பதற்கும், மக்களுக்காக
விண்ணப்பங்களையும் மன்றாட்டுக்களையும் ஒப்புக் கொடுப்பதற்கும், பாவங்களுக்காகப்
பலிகளையும்,
காணிக்கைகளையும்
ஒப்புக்கொடுப்பதற்கும் மக்களை வழிநடத்துவதற்கும் ஏற்படுத்தப்பட்டவர்
19.
பழைய ஏற்பாட்டில் கடவுள் குருத்துவ ஒழுக்கநெறிகளை யாருக்கெல்லாம்
வழங்கியிருந்தார்?
தலைவர்கள், இறைவாக்கினர்கள், அரசர்கள், குருக்கள்
20.
மலங்கரை ஆராதனை முறையில் 'முதல் குரு" என்னும் பதவியால்
அழைக்கப்படுபவர் யார்?
மோசே
21.
பழைய ஏற்பாட்டின் முக்கிய குருக்களாக கடவுளுக்கும், மனிதருக்கும்
முன்னர் நின்று வெவ்வேறு திருப்பணிகள் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டவர்கள் யாவர்?
மோசே, ஆரோன், சாமுவேல், தாவீது, எலியா, எலிசா மற்றும்
செக்கரியா இறைவாக்கினர் வரை
22.
இயேசு கிறிஸ்துவை திருவிவிலியமும், திருச்சபையின்
விசுவாசமும் எத்தகைய குருவாக கற்பிக்கின்றது?
மாபெரும் தலைமைக்குரு, என்றென்றுமுள்ள குரு, தலைசிறந்த குரு
23.
திருச்சபையில் இன்றைய அனைத்துக் குருக்களும்
என்றுமுள்ள குருவான இயேசுவின் குருத்துவத்திலேயே பங்கேற்கின்றனர். எப்படி?
என்றுமுள்ள தனது
குருத்துவத்தால் இயேசு குருத்துவ ஒழுங்குநெறியைப் புனிதப்படுத்தி அப்புனிதத்தில்
மீண்டும் நிறுவினார்.
24.
இயேசு என்னும் என்றுமுள்ள குருவின் குருத்துவத்திற்குரிய
சிறப்புகள் எவை?
1. ''முற்காலங்களில் ஏராளம்
குருக்கள் இருந்தனர். அவர்கள் சாவுக்கு ஆளானவர்களாய் இருந்ததால் தம் பணியில்
நிலைத்திருக்க முடியவில்லை. இயேசுவோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப்
பணியைப் பெற்றுள்ளார்" (எபி. 7.23-24).
2. இன்றும் அந்த
நிலைத்திருக்கும் குரு "விண்ணகத்தில் பெருமைமிகு கடவுளுடைய அரியணையின்
வலப்பக்கத்தில் வீற்றிருக்கும் தலைமைக் குருவாய்" (எபி. 81) நமக்காக
மன்றாடுகின்றார்.
3. இயேசுவுக்கு முன்னராயிருந்த
குருக்கள் மிருகங்களையோ பொருள்களையோ பலியாக அர்ப்பணம் செய்திருந்தனர். ஆனால் இயேசு
அர்ப்பணம் செய்த முழுநிறைவான பலி மிகவும் வேறுபட்டதாகும். “ஏனெனில் தம்மைத் தாமே
பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தார்" (எபி. 7.27), "தமது சொந்த
இரத்தத்தின் வாயிலாக (எபி.9:12) 'தம்மைத்தாமே கடவுளுக்காகப் பலியாகக் கொடுத்தார்" (எபி. 9:14),
4. கிறிஸ்துவில் பலிப்பொருளும், பலி அர்ப்பிப்பவரும்
ஒருவரேயாயிற்று.
5. குருத்துவம் அவ்வாறு
இயேசுவில் முற்றிலும் நிறைவேறிவிட்டது.
6. திருச்சபையை இத்தகைய
அடித்தளத்தில் கட்டி எழுப்புவதற்கே கிறிஸ்து விரும்பினார். "திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள்
ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு
அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்" (எபே 2:20).
25.
இன்றைய கிறிஸ்தவ குருத்துவத்தின் முதற்கனிகள் எனப்படுபவர்கள் யாவர்?
திருத்தூதர்கள்
26.
இயேசு திருத்தூதர்களை நேரடியாக அழைத்து, தேர்ந்தெடுத்து
தூய்மைப்படுத்தி அனுப்பப்பட்டவர்கள் என்ற விவிலியப்பகுதி எது?
"பின்பு இயேசு மலைமேல் ஏறி
தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.
தம்மோடு இருக்கவும், நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும், பேய்களை ஓட்ட அதிகாரம்
கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார். அவர்களுக்குத் திருத்தூதர் என்றும்
பெயரிட்டார்"
(மாற்.3:13-15),
27.
புதிய ஏற்பாட்டுக் குருத்துவத்தில் இயேசு
சீடர்களுக்கு எதற்கான அதிகாரத்தை வழங்கினார்?
நற்செய்தியைக் கற்பிக்கவும், மக்களைப்
புனிதப்படுத்தவும், திருச்சபையை வழிநடத்தவும் (மத்தேயு.10:1 ; மாற்.6:7; லூக். 9:1-2)
28.
புதிய ஏற்பாட்டு குருக்கள் எந்த குருத்துவ
ஒழுக்கநெறியின் ஆன்மீகத்தை தொடர்கின்றார்கள்?
பழைய ஏற்பாட்டு
29.
பழைய ஏற்பாட்டிலுள்ள குருத்துவ ஒழுக்கநெறியின்
ஆன்மீகத்தின் தொடர்ச்சியான இயேசுவின் போதனை என்ன?
"நீங்கள் பொன், வெள்ளி, செப்புக்காசு
எதையும் உங்கள் இடைக்கச்சையில் வைத்துக் கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்
கொண்டு போக வேண்டாம்" (மத்தேயு 10:9-10; மாற் 6:8-9, லூக் 9:3) "ஏனெனில் உங்கள்
செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் இதயமும் இருக்கும்" (மத்தேயு 6.21).
30.
யாருடைய குருத்துவம் பழைய ஏற்பாட்டுக்
குருத்துவத்திலிருந்து முன்னோக்கி சென்று காளைக்கன்று ஆட்டுக்குட்டி ஆகியவற்றின்
இரத்தம் தோய்ந்த பலியர்ப்பணத்திற்குப் பதிலாகத் தம்மையே கல்வாரிச் சிலுவையில்
பலியர்ப்பணம் செய்து அனைத்துப் பலிகளையும் நிறைவாக்கி, மனித குலத்திற்கு முழுமையான
மீட்பினை பெற்றுத் தந்தது?
இயேசுவின் குருத்துவம்
31.
"அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர்கள் ஆகும்படி
அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்" என்ற விவிலியப்பகுதி
எங்குள்ளது?
யோவா 17:18
32.
"அவசரப்பட்டு யார் மேலும் கைகளை வைத்துத்
திருப்பணியில் அமர்த்தாதே" எனத் திருத்தூதர் புனித பவுல் திமோத்தேயுவுக்கு
அறிவுறுத்திய விவிலியப்பகுதி எங்குள்ளது?
1திமொ. 5:22
33.
"ஒருவர் முதல்வராய் இருக்க விரும்பினால் அவர்
அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" (மாற்கு 9:35) யார் யாரிடம்
கூறியு?
இயேசு சீடர்களிடம்
34.
இயேசு எதனின் புதியதோர் புரிதலை தமது சீடர்களின்
குருத்துவச் சிந்தனையோடு சேர்த்து வைக்கவும் செய்கின்றார்? பணிவு, அன்பு, எளிமை
35.
திருச்சபையில் குருத்துவ வாழ்விற்கு இணையாக
அர்ப்பணத்தின் பிறவாழ்வு நிலை என்பது எது?
துறவறவாழ்வு
36.
சன்னியாசம் என்பதன் பொருள் என்ன?
சம்+நியாசம், அதாவது "முழுமையான தியாகம்"
37.
மரபு சார்ந்த சிந்தனையின் படி நான்கு வாழ்வு நிலைகள்
எவை?
பிரம்மசரியம், இல்லறம், வனவாசம், துறவறம்
38.
ஆன்மீகமான தேடுதலின் உன்னத நிலையின் வாயிலாகக் கடவுளை
அடைவதற்கு எல்லாவற்றையும் துறந்துவிட்டவர்கள் யாவர்?
துறவிகள்
39.
இயேசுவுக்காக மறைசாட்சி மரணம் அடைவதனை யார்
பெருமிதமாக எண்ணியிருந்தனர்?
தொடக்கக் கிறிஸ்தவர்கள்
40.
யார் மனம் மாறி கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டதுடன்
திருச்சபையின் வேதகலாபனைக் காலம் முடிவுக்கு வந்தது?
கிபி. 312-ல் கான்ஸ்டன்டைன்
பேரரசர்
41.
வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் உலகியல்
செல்வங்களையும்,
கண்கூசச்
செய்யும் இன்பவேட்கைகளையும் அவர்கள் வெறுத்து ஒதுக்கிய துறவு வாழ்வு எவ்வாறு
அழைக்கப்பட்டது?
“வெண்மை இரத்தசாட்சித்துவம்"
42.
திருச்சபையின் ஆன்மீக உறைவிடமாக மாறியவர்கள் யாவர்?
துறவிகள்
43.
திருச்சபையில் எப்போதெல்லாம் தளர்ச்சியும், செயல்பாடுகளில்
குறைகளும் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் சபையை இந்த வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்காகக்
கடவுள் தனிநபர் சிலரை அழைத்து பொறுப்பளித்து அவர்கள் எதனை நிறுவினர்?
துறவற சமூகங்கள்
44.
மலங்கரை சபை நீதிமன்ற வழக்குகளிலும் கட்சிப்
பிரிவினைகளிலும் அகப்பட்டு காலத்தை வீணாக்கிய போது சபையின் தெய்வீக ஒளி மங்கிவிட்ட
நிலையில் கடவுள் தேர்ந்தெடுத்தவர் யார்?
அருள்தந்தை P.T. கீவற்கீஸ் (பேராயர்
மார் இவானியோஸ்)
45.
பேராயர் மார் இவானியோஸ் துவங்கிய துறவு சபைகள் எவை?
ஆண்களுக்காக பெதனி துறவற
சமூகம் மற்றும் பெண்களுக்காக பெதனி கன்னியர் மடம்
46.
மறுஒன்றிப்பு இயக்கத்தின் தொடக்கக்கால வளர்ப்பிடமாக
மாற்றமடைந்த துறவு சபை எது?
பெதனி
47.
மோண்சிஞ்ஞோர் ஜோசப் குழிஞ்ஞாலில் அவர்கள்
பெண்களுக்காக நிறுவிய துறவு சபை எது?
"மேரிமக்கள் கன்னியர் சமூகம்"
48.
துறவுவாழ்வின் மூன்று விரதங்கள் எவை?
கீழ்ப்படிதல், கற்புநெறிவாழ்வு, ஏழ்மை
49.
இயேசுவின் உவமையில் புதையலைக் கண்டுபிடிக்க ஒருவர்
தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக் கொள்வது போன்ற நிலை
எதற்குரியது?
துறவு வாழ்வுக்கு
50.
சொந்த விருப்பத்தைத் துறந்து அந்த இடத்தில்
இறைவிருப்பத்தை நிலைநாட்டும் வாழ்க்கை நிலையான குணனுக்குப் பெயர் என்ன?
கீழ்ப்படிதல்
51.
"துறவிக்கு இயேசு மட்டுமே வாழ்க்கையின்
ஒழுங்குமுறையும், அதனைக் கடைப்பிடிக்கும் ஆற்றலுமாயிருக்க வேண்டும்" என்றவர் யார்?
பேராயர் மார் இவானியோஸ்
52.
துறவயின் கீழ்ப்படிதல் என்பது ஓர் அடிமைக்கு
தலைவனிடம் உள்ள அடிமை மனநிலை அல்ல இது. பின்னர் எது?
இயேசுவோடுள்ள அன்பு தான்
இதன் தூண்டுகோல்.
53.
ஒரு தனிமனிதனிடமோ, குடும்பத்தினரிடமோ சொந்த
அன்பு வாழ்க்கையை கட்டுப்படுத்தாமல் உலகம் முழுவதையும் இயேசுவில் அன்பு செலுத்தி
வாழும் முறைக்குப் பெயர் என்ன?
பிரம்மச்சரியம்
54.
"துறவிக்குக் கடவுள் மட்டுமே அன்பும், பேரானந்தமுமாயிருக்க
வேண்டும்'
என்றவர்
யார்?
பேராயர் மார் இவானியோஸ்
55.
இவ்வுலகின் அழிந்து போகும் செல்வத்தை சார்ந்து
வாழாமல் நிலையான விண்ணக செல்வத்தை அடையக்கூடிய துறவியின் வாழ்க்கை முறை எது?
ஏழ்மை வாழ்வு
56.
துறவிக்கு கடவுள் மட்டுமே சேமிப்பும்
செல்வமுமாயிருக்க வேண்டும். கடவுளே ஒப்பற்ற செல்வமாயிருக்கும் போது மற்றவைகளை
சேர்த்துக் கொள்ள வேண்டும் என விரும்புகின்றவர் பேராசைக்காரரே" என்றவர் யார்?
பேராயர் மார் இவானியோஸ்
57.
துறவு வாழ்வு என்பது உலகினின்று ஒளிந்து ஓடுவதோ, உணர்ச்சியற்ற நிலையோ
அல்ல. "இவ்வுலகிலுள்ள
ஒருவனின் அர்த்தச் செறிவான ஈடுபாடாகும்". என்றவர் யார்?
பேராயர் மார் இவானியோஸ்
58.
இந்தியாவில் துறவறம் ஏற்றுக்கொண்ட ஆதிசங்கரருக்கு
வயது என்ன?
பன்னிரண்டு
59.
துறவறத்தின் நீறுபூத்த நெருப்புப் பாதைகளில்
காலூன்றிய போது விவேகானந்தருக்கு வயது என்ன?
வயது இருபத்து நான்கு
60.
புனித பிரான்சிஸ் அசிசியின் தந்தை யார்?
அசிசியில் புகழ்பெற்ற பட்டு
வணிகரான பீட்டர் பெர்னார்டு
61.
"யாருக்கு ஊழியம் செய்வது சிறந்தது: எசமானனுக்கா, ஊழியருக்கா?' "எசமானருக்கே' என விடையளித்தவர்
யார்?
பிரான்சிஸ்
62.
"இனிமேல் கடவுள் மட்டுமே எனக்குத் தந்தை. அவரை "விண்ணகத் தந்தையே" என மனமார அழைக்கலாம்" எனக் கூறி துறவியாக
வாழத் துவங்கியவர் யார்?
புனித பிரான்சிஸ் அசிசி
63.
பிரான்சிஸ்கன் துறவற சமூகம் நிறுவியவர் யார்?
புனித பிரான்சிஸ் அசிசி
64.
தனது எளிமையின் காரணமாக குருத்துவம் ஏற்பதற்கு முன்வராமல்
6-ஆம் பட்டம் வரை
மட்டுமே பெற்றுக்கொண்டவர் யார்?
புனித பிரான்சிஸ் அசிசி
65.
இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துவின்
ஐந்து காயங்கள் யாருடைய உடலில் பதிந்திருந்தன?
புனித பிரான்சிஸ் அசிசி
66.
எளிமை, ஏழ்மை ஆகியவற்றினால் “இரண்டாம் கிறிஸ்து" என அழைக்கப்பட்டவர்
யார்?
புனித பிரான்சிஸ் அசிசி
67.
புனித பிரான்சிஸ் அசிசி எப்போது விண்ணகம் புகுந்தார்?
1226 அக்டோபர் 4-ஆம் நாள்
68.
ஸ்பெயின் நாட்டில் லயோலா என்னுமிடத்தில்
உயர்குடியினரான பெற்றோருக்குப் பிறந்த புனிதர் யார்?
இனிகோ என்னும் இக்னேஷியஸ்.
69.
ஐந்தாம் பெர்னிடன்ட் அரசரின் அரண்மனையிலிருந்து உயர்
பதவிக்கான படைத்தளபதிக்குரிய பயிற்சி பெற்றிருந்த புனிதர் யார்?
இனிகோ என்னும் இக்னேஷியஸ்
70.
போரின் போது காலில் துப்பாக்கியால் காயம் ஏற்பட்டு
மருத்துவமனையில் நீண்டநாள் சிகிச்சை பெற்ற போது கிறிஸ்துவின் மற்றும் புனிதர்களின்
வாழ்க்கையை சுற்றுக் கொள்வதற்கும் தியானம் செய்வதற்கும் வாய்ப்பு பெற்றிருந்த புனிதர்
யார்?
இனிகோ என்னும் இக்னேஷியஸ்
71.
"அவர்கள் புனிதரும் புனிதையும் ஆவதற்கு இயலுமானால் ஏன்
எனக்குப் புனிதனாவதற்கு இயலாதா?' என தமக்குள் எழுப்பிய வினா துறவறத்தின் தவ சமர்ப்பண
வாழ்க்கைக்கே வந்த புனிதர் யார்?
இனிகோ என்னும் இக்னேஷியஸ்
72.
புனித இக்னேஷியஸ் எந்தெந்த துறவற சபைகளில் வாழ்ந்து வந்தார்?
முதலில் ஆசீர்வாதப்பர் துறவற
சபை,
பின்னர்
டொமினிக்கன் துறவற சபை
73.
டொமினிக்கன் மடத்தில் வாழ்ந்தபோது, புனித இக்னேஷியஸ் எந்த
நூலைப்படைத்தார்?
'ஆன்மீகப் பயிற்சிகள்'
74.
பல திருத்தலங்களுக்கு செல்லவும், 11 ஆண்டுகள் பல்கலைக்கழகங்களில்
கற்பிக்கவும் செய்த புனிதர் யார்?
புனித இக்னேஷியஸ்
75.
புனித பிரான்சிஸ் சவேரியார் உட்பட 7 பேர் ஏழ்மை, பிரம்மச்சரியம், கீழ்படிதல் என்னும்
துறவற விரதங்களில் வாழ்வதற்கு எப்போது உறுதியெடுத்துக் கொண்டனர்?
1534-ல் 33-ஆம் வயதில்
76.
திருத்தந்தையின் விருப்பத்திற்கிணங்கத் தேவையான
இடங்களிலெல்லாம் நற்செய்திப் பணியாற்ற அவர்கள் தீர்மானித்த புனித இக்னேஷியஸ் துவங்கிய
புதிய துறவற சபைக்குத் திருத்தந்தை எப்போது அனுமதி அளித்தார்?
1538-ல்
77.
. 'உரோமன் கல்லூரி நிறுவியவர் யார்?
புனித இக்னேஷியஸ்
78.
புனித இக்னேஷியஸ் இறுதி நாட்களில் தனது துறவற சபை எத்தனை
பேரைக் கொண்டு விளங்கியது?
100 மடங்களையும் 1000 உறுப்பினர்களையும்.
79.
புனித இக்னேஷியஸ் எப்போது விண்ணகம் அடைந்தார்?
1556 ஜூன் 15-ல்
80.
“என் ஆண்டவரே எனது சுதந்திரம் முழுவதையும் நீரே
எடுத்துக் கொள்ளும்" என மன்றாடியிருந்த பனிதர் யார்?
புனித இக்னேஷியஸ்
81.
இந்தியாவின் முதல் புனிதையாகத் திருத்தந்தை அறிவித்தவர்
யார்?
புனித அல்போன்சா
82.
புனித அல்போன்சாவின் இயற்பெயர் என்ன?
அன்னக்குட்டி
83.
புனித அல்போன்சாவின் பெற்றோர் யாவர்?
யோசேப்பும். மறியமும்
84.
புனித அல்போன்சாவின் பிறப்பு எப்போது?
1910 ஆகஸ்டு 19
85.
பெற்றோருக்கு நான்காவது மகளான அன்னக்குட்டி எப்போது தனது
தாயாரை இழந்தார்?
மூன்று மாதக் குழந்தை
86.
நற்பண்புள்ள அன்னக்குட்டிக்கு 13ஆம் வயதில் புகழும்
நன்மதிப்புமுள்ள ஒரு குடும்பத்திலிருந்து திருமண ஆலோசனை தடைபட அவர் செய்தது என்ன?
அறுவடை முடிந்த பின்னர் கூட்டி
வைக்கப்பட்டிருந்த வைக்கோலின் நெருப்பு மீது இறங்கினார். நெருப்புக் கனலால்
உடம்பில் கொப்பளங்கள் உண்டாயிற்று. புண் ஆறுவதற்கு 90 நாட்களாயின. அவ்வாறு
குடும்பத்தாரின் திருமணத் தீர்மானத்தைத் தடுத்து விட்டார்.
87.
அன்னக்குட்டி எந்த கன்னியர் இல்லத்தில் சேர்ந்து
அல்போன்சா என்னும் பெயரை ஏற்றுக் கொண்டார்?
பரணங்ஙானம் க்ளாரா கன்னியர்
இல்லத்தில்
88.
“இயேசுவின் திருஇருதய காயத்தில் ஒவ்வொரு மலராக அவர்
ஒவ்வொரு துன்பத்தையும் கடவுளுக்குச் சமர்ப்பணம் செய்தார். "நான் கடவுளுக்கு ஓர்
எரிபலி அர்ப்பணம் செய்தேன். அது மிகவும் மெதுவாக எரிந்து கொண்டிருக்கிறது" என அவர் தனது
வேதனையைப் பற்றிக் கூறியவர் யார்?
புனித அல்போன்சா
89.
1946 ஜூலை 4-ஆம் தேதி கொடிய வேதனை அனுபவித்தபோதும் "இயேசு, மரி, சூசை" எனச் சொல்லியவாறே
அவர் தனது வாழ்க்கைப் பலியை நிறைவு செய்தவர் யார்?
புனித அல்போன்சா
90.
புனித அல்போன்சா எப்போது புனிதையாக அறிவிக்கப்பட்டார்?
2008-ல்
91.
பி.டி கீவர்கீஸ் அல்லது மார் இவானியோஸ் எங்கே
எப்போது பிறந்தார்?
கேரளா- மாவேலிக்கரையில்
சிறப்பு பெற்றதும். பழம்பெருமையானதுமான பணிக்கர் குடும்பத்தில் தோமாப்பணிக்கர் -
அன்னம்மா தம்பதிகளின் ஆறாவது மகனாக 1882 செப்டம்பர் 21-ல்.
92.
மிகச் சிறந்த அறிவாளியும், மனஉறுதியும், திருச்சபை மீது
பற்றுறுதியும் உடையவராயிருந்த கீவற்கீசை கோட்டயம் பழைய செமினாரியில் தங்கிப்
பள்ளிப்படிப்பிற்கு ஏற்பாடு செய்தவர் யார்?
யாக்கோபாயா சபையின் தலைவரான
மேதகு ஆயர் புலிக்கோட்டில் மார் திவன்னாசியோஸ் ஆண்டகை
93.
மார் இவானியோஸ் கற்ற கல்லூரிகள் எவை?
கோட்டயம் சி.எம்.எஸ்.
கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி -
இளங்கலை,
முதுகலை
பட்டங்கள்
94.
சுறியானி குருக்களில் முதன்முதலாக முதுகலை பட்டம்
பெற்றவர் யார்?
அருட்தந்தை பி.டி கீவற்கீஸ்
95.
மேன்மையான நம்பிக்கைகளுக்காக உலகியலான அனைத்தையுமே
இழந்துவிட்ட நம் பேராயர் யார்?
மார் இவானியோஸ்
96.
உயர்ந்த பணி, உன்னத பதவி குருவுக்கு இணையானவர்களின்
அன்பு நட்புகள்,
பெதனி
இயக்கத்திற்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் அனைத்தையுமே அவர் விட்டுவிட்டு
கடவுளிடம் மட்டும் அடைக்கலம் தேடிய நம் பேராயர் யார்?
மார் இவானியோஸ்
97.
மார் இவானியோஸ் எப்போது விண்ணகம் அடைந்தார்?
1953 ஜூலை 15-ல்
98.
மார் இவானியோஸ் ஆண்டகையின் திருவுடல் ஆறுதலின்
மையமாகவும்,
அற்புதங்களின்
அடையாளமாகவும் எங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளது?
பட்டம் பேராலயத்தில்
பாடம் 7
பசும்புல்வெளியை நோக்கி
1.
"பசும்புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு
எனை அழைத்துச் செல்வார்" (திருப்பாடல்கள். 23:2)
2.
பசும்புல்வெளியும், அமைதியான நீர்நிலையும் யாருடைய
அருள்கொடைகளாகும்?
கடவுளின்
3.
இயற்கையை அழிப்பதனால் ஏற்படும் தீங்குகள் எவை?
வெப்பநிலை அதிகமாதல், அசுத்தமடையும்
ஆறுகள்,
ஏரிகள், குடிநீர்த்
தட்டுப்பாடு, நச்சுமயமாகும் வேளாண் உற்பத்திப் பொருள்கள், மாசு நிறைந்த நகரங்கள், இன அழிவை
சந்திக்கும் உயிர் வகைகள், சுற்றுச்சூழல் மாசடைவதனால் பெருகிவரும் பற்பல நோய்கள்
4.
கத்தோலிக்க திருச்சபையும் இயற்கைச் சீரழிவினைக்
குறித்துத் தீவிரக் கவனம் செலுத்தி அடிக்கடி வெளியிடுவது என்ன?
கொள்கைத் திரட்டுகள்
5.
பிரபஞ்ச படைப்பாளரான கடவுளோடு தொடர்புபடுத்தி
இயற்கைச் சீரழிவை மதிப்பிடுவது யார்?
திருச்சபை
6.
திருச்சபை சார்பில் இயற்கை பாதுகாப்பு என்பது உயிரியல்
சார்ந்ததோ அரசியல் சார்ந்ததோ பொருளோ அல்ல, பின்னர் எது?
நீதிநெறியும் ஆன்மீகமும்
சார்ந்த கருத்து
7.
இயற்கையைக் குறித்த விவிலியத்தின் அடிப்படைக் கருத்து
என்ன?
"கடவுள் தாம் உருவாக்கிய
அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன" (தொடக்க நூல் 131). கடவுளின் ஞானமும்
ஆற்றலும் தான் படைப்பில் வெளிப்படுகின்றன (நீ.மொ. 822-23)
8.
தொடக்கநூலின் ஆரம்பத்தில் மனிதப்படைப்புக்குப் முன்
எது நிகழ்ந்துள்ளது?
பிரபஞ்சப் படைப்பு
9.
படைப்புச் செயலின் இறுதியில் கடவுள் தமது உருவிலும்
சாயலிலும் உண்டாக்கிய யாரை தமது பிரதிநிதியாக படைப்புச் செயலுக்கான பொறுப்பினை
ஒப்படைக்கின்றார்?
மனிதரை
10.
கடவுளின் உருவிலும், சாயலிலும்
படைக்கப்பட்டிருக்கும் மனிதரோடு கடவுள் ஆணையிட்டுக் கூறியது என்ன?
“பலுகிப்பெருகி மண்ணுலகை
நிரப்புங்கள்,
அதை
உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள், கடல் மீன்கள், வானத்துப்பறவைகள், நிலத்தில் ஊர்ந்து, உயிர்வாழ்வன
அனைத்தையும் ஆளுங்கள்" (தொடக்க நூல்1.28)
11.
இயற்கையோடுள்ள நமது அடிப்படையான உறவினை கூறும் வசனம் எது?
தொடக்க நூல் 1:28.
12.
இஸ்ரேல் மக்களின் நம்பகத்தன்மைக்குக் கடவுள் அளித்த
பிரதிபலன் (விப 19:5) எது?
நிலம்
13.
யாவே கடவுள் நிலத்தைப் பற்றிக் கட்டளையிட்டு கூறியது
என்ன?
"நிலத்தை அறுதியாய் விற்றுவிட
வேண்டாம். ஏனெனில் நிலம் என்னுடையது. நீங்களோ என்னைப் பொறுத்தவரையில் அன்னியரும்
இரவற்குடிகளுமே.” (லேவி 25:4-7, 23)
14.
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே இருக்க வேண்டிய
சுமுகமான உறவு மனிதன் எவ்வாறு பொறுப்புணர்வோடு கண்காணிப்புப் பணியை நிறைவேற்றும்
போது உதயமாகிறது?
கடவுளின் பிரதிநிதியாக
15.
மானிட -இயற்கை உறவின் அடிப்படை இயல்பு என்ன?
பூமிக்கு அப்பாற்பட்ட
பூமியின் கண்காணிப்பாளன் என்பதல்ல, மாறாக கடவுளின் சாயலில் மண்ணிலிருந்து
வனைந்தெடுக்கப்பட்டவன் என்பதுதான் மானிட இயற்கை உறவினை குறிப்பிட விவிலியம்
காட்டும் அடையாளம்,
16.
கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருப்பதனால் கடவுளின்
பராமரிப்போடும்,
இரக்கத்தோடும்
எதனோடு சேர்ந்து செயல்படுவதற்கு மானிடர் கடமைப்பட்டவர்களே?
இயற்கையோடு
17.
"செல்வம் கொழிக்கக்கூடியது என்னும் நிலையில்
சுற்றுப்புறச் சூழலை அணுகுவது வசிப்பிடம் என்னும் நிலையிலுள்ள சுற்றுச்சூழலை
ஆபத்துக்குள்ளாக்கி விடும்" என அறிவுறுத்தியுள்ளவர் யார்?
திருத்தந்தை இரண்டாம் யோவான்
பவுல்
18.
படைப்புச் செயலில் (தொடக்க நூல் 2:16-17). கடவுள் நிச்சயித்து
ஏற்படுத்திய வரையறைகளை மீறியபோது கடவுளுக்கும் மனிதனுக்கும் எதற்கும் இடையேயான
உறவில் விரிசல் ஏற்பட்டது (தொ.நூ 3:1-24)?
பிரபஞ்சத்திற்கும்
19.
கடவுளிடமிருந்து அகன்று போன படைப்பினை கடவுளிடமே
திருப்பிக்கொண்டு வருவதற்கு ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட
நேரத்தியிருந்தே விருப்பம் கொண்டவர் யார்?
கடவுள்
20.
கடவுள் இரண்டு தனிமனிதர்களோடு மட்டுமல்ல, அவர்களுடன் சேர்ந்த
படைப்போடும். அத்துடன் எல்லாத் தலைமுறையினரோடும் நிலைத்து நிற்பதுமான
உடன்படிக்கைகளாகும். என்பதற்கான எடுத்துக்காட்டுகள் எவை?
வெள்ளப்பெருக்கிலிருந்து
மீட்கப்பட்ட நோவாவோடும் பிற உயிரினங்களோடும் நிலைநாட்டப்பட்ட உடன்படிக்கை இதன் ஒரு
பகுதியாகும் (தொடக்க நூல் 9:10-13), தொடர்ந்து ஆபிரகாமுடன் செய்து கொண்ட
உடன்படிக்கை வாயிலாகக் கானான் நாட்டை இஸ்ரயேல் மக்களுக்கு வாக்குறுதி
அளிக்கின்றார் (தொடக்க நூல் 17:7-8.
21.
கடவுளும் மானிடரும், பிரபஞ்சமுமாய் நடத்தப்படும்
உடன்படிக்கையில் கடவுளைப் புகழ்வது எது?
பிரபஞ்சம்
22.
"வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப் படுத்துகின்றன, வான்வெளி அவர்தம்
கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது" என்ற விவிலியப்பகுதி
எங்குள்ளது?
திருப்பாடல்கள் 19.1.
23.
எந்த ஆண்டு நிலத்திற்கும் வீட்டு விலங்குகளுக்கும்
மானிடருக்கும் ஓய்வு ஆண்டாகக் (லேவி 25) கொண்டாடப்பட்டது?
ஏழாம் ஆண்டு
24.
சாபத்து (ஓய்வுநாள்) கொண்டாட்டம் எப்போது?
ஏழாம் நாள்
25.
இறை மானிட, பிரபஞ்ச உறவில் பாதுகாக்கப்பட வேண்டிய
சமன்பாடு எதன் மையப்புள்ளியாக திகழ்கின்றது?
இயேசுவின்
மீட்புத்திட்டத்தின்
26.
உலகை மீட்பதற்காக இறங்கி வந்த இயேசு தமது பிறப்பு
முதல் இறப்பு வரை எதனோடு இணைந்தே வாழ்கின்றார்?
இயற்கையோடு
27.
இயேசுவின் பிறப்புச் செய்தியை வெளிப்படுத்திய
விண்மீன்களும்,
இயேசுவைக்
காண்பதற்கு வந்த உயிரினங்களும், இயேசு பிறந்து தவழ்ந்த தீவனத்தொட்டியும் எதனை குறிப்பிடுகின்றன?
இயேசுவுக்கும் இயற்கைக்கும்
இடையேயான நெருங்கிய உறவை
28.
கருவுற்றிருந்த மரியாவையும் அழைத்துக் கொண்டு
யோசேப்பு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து மலைப்பகுதியான யூதா நாட்டின்
பெத்லகேமுக்கும், குழந்தை பிறந்த பின் எகிப்து நாட்டிற்கும் இடம் பெயர்ந்து செல்வதனை
எவ்வாறு அறிகிறோம்?
பல்வேறு இயற்கை அமைப்புகளைத்
தழுவிச் செல்லும் இயேசு
29.
இயேசுவின் மரணநேரத்தில் கதிரவன் ஒளி கொடுக்கவில்லை, பூமியில் இருள்
பரவியது. அனைத்து உயிரினங்களும் அழுதன. இவையெல்லாம் நிகழும் போது எதனுட் சேர்ந்து
நிற்கும் இயேசுவையே காண்கிறோம்?
பிரபஞ்சத்தோடு
30.
பாலைவனத்தில் தன்னந்தனிமையில் 40 பகலிரவுகள்
செபத்தில் மூழ்கி இறைப்பணியைத் தொடங்கிய இயேசு மலைமேலும், கடலோரத்திலும்
பெருங்கூட்டமான மக்களோடு ஆக்கப்பூர்வமாக உரையாடிய போதும் இறை உண்மைகளை
வெளிப்படுத்த எதனை அதிகமாகப் பயன்படுத்தினார்?
பிரபஞ்சப் பொருள்களை
31.
நமது கனவும் குறிக்கோளுமான இன்ப நிறைவான வாழ்வு எத்தகையது?
படைப்பின் தொடக்கத்தில்
இன்பவனத்தில் சுவைத்துணர்ந்த கடவுளுக்கும் மானிடருக்கும் பிரபஞ்சத்திற்கும்
இடையேயான இன்ப நிறைவான வாழ்வு
32.
நமது கனவும் குறிக்கோளுமான இறையாட்சி இவ்வுலகிலேயே
அனுபவிப்பதற்காக கடவுளோடும். இயற்கையோடும் இணைந்து வாழ்வதற்கான அறைகூவலை
விடுக்கின்ற நூல் எது?
திருவிவிலியம்
33.
இயற்கைக்கு மேலான சில காரணங்களால் மிகச்சிறப்பான
மதிப்புள்ளது. ஏன்?
படைக்கப்பட்ட பிரபஞ்சத்தில்
உள்ள இறைப் பிரசன்னம்
34.
அனைத்து அசையும் மற்றும் அசையா பொருள்களும் கடவுள்
என்னும் உன்னதரின் கொடைகளே என எந்நூல் சான்றளிக்கின்றது?
திருவிவிலியம்
35.
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை, எனக்குறிப்பிடும்
இறைவார்த்தைகள் எவை?
நிலவுலகும் அதில் வாழ்வனவும்
அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார் (திருப்பாடல்கள்.
24:1-2),
காட்டு
விலங்குகளெல்லாம் என் உடைமைகள், ஓராயிரம் குன்றுகளில் மேயும் கால்நடைகளும்
என்னுடையவை. குன்றத்துப் பறவை அனைத்தையும் நான் அறிவேன். சமவெளியில் நடமாடும்
யாவும் என்னுடையவை (திருப்பாடல்கள். 50:10-11). புனித பவுலின் வார்த்தைகளில் "எல்லாருக்கும்
கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே. அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும்
செயலாற்றுபவர்,
எல்லாருக்குள்ளும்
இருப்பவர்"
(எபே 46).
36.
பிரபஞ்சத்தைத் திருவிவிலியத்துக்கு இணையானதாக கருதும்
திருச்சபைத் தந்தையர் யார்?
புனித எப்ரேம்
37.
யாருடைய செபப்பாடல்களில் படைப்புப் பொருள்களில் உள்ள
இறைப்பிரசன்னத்தைப் பணிவோடும் ஆராதனைக்குரிய சிந்தனையோடும் சித்தரித்திருக்கும்
முறை உள்ளது?
புனித எப்ஃரேம்
38.
பிரபஞ்சத்தை உற்றுநோக்கி பிரபஞ்ச உண்மைகள் வாயிலாக
அவற்றிலுள்ள இறைப்பிரசன்னத்தை அறிந்து கொள்ளும்படி அவர் அறிவுறுத்துபவர் யார்?
புனித எப்ஃரேம்
39.
மானிடருக்கு பழகவோ
உபயோகிக்கவோ
இயலாத ஏராளமான உயிரினங்களைப் பற்றிக் விவிலியத்தில் எப்பகுதியில் கூறப்பட்டுள்ளது?
யோபு அதிகாரங்கள் 25, 38, 41
40.
தொடக்கநூலிலுள்ள கடவுளின் படைப்புகளைப் பற்றிய
விவரங்களின் படி அது கடவுள் திட்டத்தின் பகுதியே. தாவரங்களையும், மிருகங்களையும்
உணவாக்கிக் கொள்ள மனிதனுக்கு அனுமதியுண்டு. எனினும் விலங்குகளைத்
துன்புறுத்துவதற்கோ, தகாத முறையில் அவற்றை அடைத்து வைக்கவோ அனுமதியுண்டா?
இல்லை
41.
“குஞ்சுகள் அல்லது முட்டைகள் உள்ள பறவைக்கூட்டையும்
அந்த குஞ்சுகள் அல்லது முட்டைகள் மேல் தாய் உட்கார்ந்து கொண்டிருப்பதையும் கண்டால், குஞ்சுகளோடு தாயைப்
பிடிக்காதே தாயைப்போகவிடு குஞ்சுகளை உனக்கென எடுத்துக் கொள்" என்ற விவிலியப்பகுதி
எங்குள்ளது?
இணைச்சட்டம் 22:6-7
42.
ஒரு நகருக்கு எதிராகப் போர் தொடுத்து நீ அதை நெடுநாள்
முற்றுகையிட்டுக் கைப்பற்றினால், அதிலுள்ள மரங்களைக் கோடரியால் வெட்டிச் சாய்க்காதே.
என்ற விவிலியப்பகுதி எங்குள்ளது?
இணைச்சட்டம் 20:19
43.
“நாட்டில் குடியிருப்பவர்களோடு ஆண்டவருக்கு வழக்கு
ஒன்று உண்டு நாட்டில் உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; கடவுளை அறியும் அறிவும்
இல்லை. பொய்யாணை, பொய்யுரை, கொலை, களவு விபச்சாரம் ஆகியன பெருகிவிட்டன. எல்லா
கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிகின்றனர்; இரத்தப்பழிமேல் இரத்தபழி குவிகின்றது. ஆதலால்
நாடு புலம்புகின்றது. அதில் குடியிருப்பன எல்லாம் நலிந்து போகின்றன. காட்டு
விலங்குகளும்,
வானத்துப்புறவைகளும், கடல்வாழ் மீன்களும்
கூட அழிந்து போகின்றன' என்ற விவிலியப்பகுதி எங்குள்ளது?
ஒசேயா 4:1-3
44.
இயற்கை செல்வங்களால் வளர்ச்சித் திட்டங்களை குறித்து
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் கூறியது என்ன?
"இயற்கைச் செல்வங்களைப்
பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளாதார செயல்பாடும் இயற்கைப் பாதுகாப்புக்கு
ஆர்வமூட்டும் முறையில் அமைய வேண்டும். அதற்கு ஏற்படும் செலவுகள் உண்மையான செலவின்
பகுதியாக கணக்கிட வேண்டும்"
45.
விலக்கப்பட்ட கனி உண்டதன் வாயிலாக இன்பவனத்திலிருந்து
வெளியேற்றப்பட்ட யாருடைய இடத்திற்கு நவீன மனிதன் சென்றடைந்திருக்கிறான்?
ஆதிப்பெற்றோரின்
46.
ஆதாம் ஏவாளையும் ஏவாள் பாம்பையும் சுட்டிக்காட்டி பிறரை
குற்றப்படுத்திய போது யாருக்காக தண்டனை விதிக்கப்பட்டது?
அனைவருக்கும்
47.
இயற்கையை அழித்துவிடுவது பாவமா?
ஆம்
48.
வத்திக்கான் 2008-ல் வெளியிட்ட சமூகம் சார்ந்த
ஏழு மூல பாவங்களின் பட்டியலில் இயற்கை சார்ந்தது எது?
இயற்கையை மாசுபடுத்துவது
49.
இளைஞர் மறைக்கல்வி நூலில் இயற்கையையும்
உயிரினங்களையும் நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது பற்றி எந்த கட்டளையோடு
விளக்கம் கூறப்பட்டுள்ளது?
களவு செய்யாதே என்னும் ஏழாம்
கட்டளை
50.
பூமியின் மேல் ஆதிக்கம் செலுத்துங்கள் (தொடக்க நூல் 1:28) என்பதற்கு
இயற்கையைத் தன் விருப்பம் போல் கையாள்வதற்கு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட
உரிமையுள்ளது என அர்த்தம் கொள்ளலாமா?
இல்லை
51.
மனிதன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ளதால்
ஆடுகளின் ஆயனைப் போலவும். கண்காணிப்பவனைப் போலவும் கடவுளின் படைப்பாம்
பிரபஞ்சத்தைப் பேணவேண்டும். உயிரினங்களும் கடவுளின் உயிருள்ள படைப்புகளாகும்.
அவற்றிற்குத் தொல்லை கொடுப்பதும், தேவையின்றி அவற்றைக் கொன்றுவிடுவதும் பாவமாகும் என்று
குறிப்பிட்ட் திருத்தந்தை யார்?
திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்
52.
இயற்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவசியம் வேண்டிய
ஓர் இன்றியமையாத பண்பு இயற்கையை ஒட்டுமொத்தமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை
மையமாகக் கொண்டு திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் வெளியிட்ட சுற்றுமடலின் பெயர் என்ன?
உண்மையில் அன்பு
53.
மனித மாண்புக்கு மேலானதாக இயற்கையை
நிறுவிவிடக்கூடாது. ஏனெனில் எல்லா உயிரினங்களுக்கும் ஒரே மேன்மையல்ல உள்ளது.
என்றவர் யார்?
திருத்தந்தை இரண்டாம் யோவான்
பவுல்
54.
"உயிரினங்களோடுள்ள அன்பினை மனிதரோடுள்ள அன்பிற்கு மேல்
நிறுவிவிடக்கூடாது" என்றவர் யார்?
திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்
55.
இயற்கைப் பாதுகாப்பு திருச்சபை தனியாக செய்ய வேண்டிய
பணியல்ல. உலகளாவிய இந்தக் கடமையை எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டுமென்று எடுத்துரைத்தவர்
யார்?
திருத்தந்தை இரண்டாம் யோவான்
பவுல்
56.
மதசமூகங்களோடும், மக்களாட்சி அரசுகளோடும்.
சமூக நல அமைப்புகளோடும் சேர்ந்து இயற்கைப் பாதுகாப்புக்காக செயல்படும் மக்கள்
முன்னேற்ற இயக்கம் ஒன்றிற்கு தலைமையேற்க யார் முன்வர வேண்டும்?
திருச்சபை மக்கள்
பாடம் 8
மலங்கரை சபை வரலாறும் பணிக்கடமையும்
1.
உலக மீட்பராகிய இயேசு மெசியா யாருக்கு அனைத்து
அதிகாரமும் அளித்து உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுவதற்காக
அனுப்பினார்?
பன்னிரு திருத்தூதர்களுக்கு
2.
''நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கு எல்லாம் நற்செய்தியைப்
பறை சாற்றுங்கள்' என்ற விவிலியப் பகுதி காணப்படும் இடங்கள் எவை?
மாற்கு. 16:15, மத்தேயு 28:18-20
3.
தூயாவியைப் பெற்று வல்லமையடைந்த திருத்தூதர்கள் தி.ப.
1:
8 ன்
படி எங்கெல்லாம் கிறிஸ்துவுக்கு சாட்சிகளானார்கள்?
எருசலேமிலும் யூதேயாவிலும், சமாரியாவிலும், உலகின்
கடையெல்லைவரைக்கும்
4.
பாரதத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் கேரளாவிலும்
நற்செய்தியைப் பறைசாற்றிக் கிறிஸ்தவ சபைக்கு அடித்தளமிட்ட திருத்தூதர்யர்?
திருத்தூதர் தோமா
5.
பாரதத்தின் திருத்தூதரென அழைக்கப்படுபவர் யார்?
திருத்தூதர் தோமா
6.
தோமையாரிடமிருந்து கிறிஸ்தவமதத்தை தழுவிய இந்திய
கிறிஸ்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
மார் தோமா கிறிஸ்தவர்கள்
7.
மலங்கரை சிறியன் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு
யாருடைய நற்செய்திப் பறைசாற்றுதலிலிருந்து தொடங்குகின்றது?
புனித தோமையாரின்
8.
புனித தோமையார் நற்செய்தியைப் பறைசாற்றிய ஆசியாவின்
மேற்கு நாடுகள் எவை?
மெசபட்டோமியா. பாரசீகம்
9.
திருத்தூதர் தோமா எப்போது இந்தியா வந்தடைந்தார்?
கி.பி. 52-ல்
10.
திருத்தூதர் தோமா வந்திறங்கிய இன்றைய கேரள நிலப்பகுதி
எது?
கொடுங்ஙலூர் துறைமுகப்
பகுதியான மாலியங்கரை
11.
திருத்தூதர் தோமா மாலியங்கரையில் நிறுவிய கிறிஸ்தவ
சமூகம் மருவி எப்பெயரைப் பெற்றது?
மலங்கரை சபை
12.
எந்த சொல்லுக்கு மலைகள் உள்ள கரை எனவும் விளக்கம்
கூறப்படுகிறது?
மலங்கரை
13.
புனித தோமையாரின் காலம் முதல் கேரள திருஅவை எப்பெயரிலேயே அறியப்பட்டிருந்தது?
மலங்கரை சபை
14.
புனித தோமையார் கேரளாவில் வருவதற்கு இரண்டு முக்கிய
காரணங்கள் எவை?
1. வாணிகத்திற்காகக் கேரளாவில்
வந்திருந்த யூதர்கள் மூலமாக எளிதில் நற்செய்திப் பணியாற்றலாம் என்ற தோமையாரின்
நம்பிக்கை
2. மேற்கத்திய நாடுகளிலிருந்து
கப்பல் வழி குறைந்த கால அளவில் கேரளாவில் வந்து சேரக்கூடிய வாய்ப்பு
15.
புனித தோமையார் கேரளாவில் நிறுவிய 7 ஆலயங்கள் எவை?
1. கொடுங்ஙலூர், 2. பாலயூர், 3. பரவூர், 4 கோக்கமங்கலம், 5. கொல்லம், 6 நிரணம், 7. சாயல் (நிலைக்கல்
16.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருத்தூதர் தோமா நிறுவிய
ஆலயம் எங்குள்ளது?
திருவிதாங்கோடு
17.
திருவிதாங்கோடு ஆலயம் எந்த சிறப்புப் பெயரால்
அழைக்கப்படுகின்றது?
அரை ஆலயம்
18.
சென்னை மயிலாப்பூரிலுள்ள சின்னமலையில் புனித தோமையார்
இரத்தசாட்சியாக இறந்த நாள் எப்போது?
கிபி.72 ஜூலை மாதம் 3
19.
புனித தோமையாரின் உடல் பகுதிகள் மூன்றாம் நூற்றாண்டில் எங்கே எடுத்துச்
செல்லப்பட்டது?
எடேசாவிற்கும் அங்கிருந்து
வேறுபல இடங்களுக்கும்
20.
புனித தோமையாரின் நினைவுத் திருநாள் எப்போது கொண்டாடப்பட்டு
வருகிறது?
ஜூலை 3-ஆம் நாள்
21.
மலங்கரை திருச்சபையின் வரலாற்றுச் சான்றுகள் மிகக்
குறைவாகவே உள்ள பதினாறாம் நூற்றாண்டு வரையிலான தொடக்கக் காலத்தை எவ்வாறு அழைப்பர்?
இருண்ட காலம்
22.
எந்த நூற்றாண்டு முதல் பாரசீக சபையின் ஆயர்கள்
கேரளாவுக்கு வந்து மலங்கரை சபைக்கு ஆட்சித்தலைமையேற்றிருந்தனர்?
ஏழாம் நூற்றாண்டு முதல்
23.
16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய நற்செய்திப்
பணியாளர்கள் இங்கே வந்தபோது யாருடைய தலைமையில் கிழக்கத்திய சிறியன் ஆராதனை முறை
பின்பற்றப்பட்டிருந்ததைக் கண்டனர்?
பாரசீக ஆயர்களின் தலைமையில்
24.
மலங்கரை சபையை வழிநடத்திய கடைசி பாரசீக ஆயர்கள்
யாவர்?
1556-1559 ஆண்டுகளில் மார்
ஜோசப் ஆயரும் 1558-1597
ஆண்டுகளில்
மார் ஆபிரகாம் ஆயரும்.
25.
இந்தியாவுடன் நேரடி வாணிபம் நடத்துவதற்காக
போர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகாமா கேரளாவுக்கு முதலில் வந்த காலம் எது?
1498
26.
1542-ல் கோவா வந்த புனித பிரான்சிஸ் சவேரியார் எங்கெல்லாம்
நற்செய்தியைப் பறை சாற்றி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கிறிஸ்தவ மதத்தில் இணைத்துக்
கொண்டார்?
கேரளா, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட
கடற்கரையோரங்களில்.
27.
புனித சவேரியார் எப்போது இறந்தார்?
1552-ல்
28.
புனித சவேரியாரின் உடல் எங்கே பாதுகாக்கப்பட்டுள்ளது?
கோவாவில்
29.
16-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வணிகர்களையும்
மறைப்பணியாளர்களையும் அனுப்புவதற்கான உரிமை கொண்டிருந்தவர் யார்?
போர்ச்சுக்கீசிய அரசர்
30.
மலங்கரை சபையின் மீதுள்ள "பாதுகாப்பு ஆளுகை" என்னும் உரிமையை
போர்ச்சுகீஸ் அரசருக்கு வழங்கிய திருத்தந்தை யார்?
திருத்தந்தை ஐந்தாம்
நிக்கோலாஸ்
31.
மறைபணிக்கான நிலம் மற்றும் கடல் பகுதிகளின் மீதுள்ள
அரசரின் அதிகாரமான பாதுகாப்பு ஆளுகையின் இலத்தீன் மொழிச் சொல் என்ன?
"பத்ரவாதோ"
32.
போர்ச்சுகீசியர்கள் எந்த பாரசீக ஆயருடன் நல்ல
நட்புறவில் பழகியிருந்தனர்?
மார் யாக்கோபு (1504-1552)
33.
போர்ச்சுகீசியர்களால் நல்ல நட்புறவில் பழகாமல் நாடு கடத்தப்பட்ட பாரசீக
ஆயர்கள் யாவர்?
மார் ஜோசப் (1556-1569), மார் ஆபிரகாம் (1558-1597)
34.
போர்ச்சுகீசியர்களால் மலங்கரை ஆராதனை முறையை
மாற்றியமைப்பதற்காக தீர்மானித்த ஆயர் மன்றம் எது?
1585 -ல் நடைபெற்ற மூன்றாம் கோவன்
ஆயர் மன்றம்
35.
1597-ல் யாருடைய இறப்பிற்குப் பின்னர் மலங்கரை சபை
போர்ச்சுகீசிய மறைப்பணியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது?
ஆயர் மார் ஆபிரகாம்
36.
உதயம்பேரூர் பொதுச்சங்கம் எப்போது நடைபெற்றது?
1599
37.
மலங்கரை சபையை மேற்கத்திய சபையின் ஒரு பகுதியாக
மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளுக்குச் சட்டரீதியான ஒப்புதல் பெறுவதற்காக
மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்காக நடைபெற்ற பொதுச்சங்கம் எது?
1599-ல் உதயம்பேரூர் பொதுச்சங்கம்
38.
ஆயர் மார் ஆபிரகாம் 1597-ல் இறப்பதற்கு முன் பாரசீக
ஆயர் ஒருவருக்கு மலங்கரை சபையின் பொறுப்பை அளிக்க மேற்கொண்ட முயற்சிகளை தடுத்துவிட்டவர்கள்
யார்?
போர்ச்சுகீசியர்கள்
39.
ஆயர் மார் ஆபிரகாம் 1597-ல் இறப்பதற்கு முன் மலங்கரை
திருச்சபையின் பொறுப்பினை யாரிடம் வழங்கினார்?
கீவற்கீஸ் ஆர்ச்சு டீக்கன்
(அர்க்கதியாக்கோன்)
40.
மேற்கத்திய ஆயர் மெனேசிஸ் என்பவர் கோவாவிலிருந்து 1599 பெப்ருவரி 1-ஆம் நாள் கொச்சிக்கு
வந்த்தன் நோக்கங்கள் எவை?
1. மலங்கரை சபையிலுள்ள
குறைபாடுகளை நிவர்த்தி செய்வது,
2. கோயில்களைப் பாதுகாப்பது,
3. பொதுச்சங்கத்திற்கு ஏற்பாடு
செய்வது,
4. தப்பறைகள் உள்ளடங்கிய
மலங்கரை சபையின் நூல்களை அழித்துவிடுவது,
5. மலங்கரை சபையை லத்தீன்
சபையின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது.
6. சுறியானி மொழியை மாற்றி இலத்தீன் மொழியை ஆராதனை
மொழியாக நிறுவுவது
41.
ஆயர் மெனேசிஸ் திட்டமிட்டபடி போர்ச்சுகீசியப் படைகள், நாட்டு அரசர்கள் ஆகியோரின்
உதவியோடு உதயம்பேரூர் கோவிலில் பொதுச்சங்கத்தைக் கூட்டிய நாள் எப்போது?
1599 ஜூன் 20-ல்
42.
உதயம்பேரூர் பொதுச்சங்கத்தில் கலந்து கொண்டவர்கள்
எத்தனை பேர்?
153 குருக்களும், 600 விசுவாசிகளும்
43.
உதயம்பேரூர் பொதுச்சங்கம் எப்போது முடிவுற்றது?
1599 ஜூன் 26-ல்
44.
மலங்கரை கிறிஸ்தவர்களின் முதல் லத்தீன் ஆயராக 1699 டிசம்பர் 20-ல் நியமிக்கப்பட்ட
இயேசு சபை குருவானவர் யார்?
ஆயர் பிரான்சிஸ் றோஸ்
45.
அங்கமாலி உயர் மறைமாவட்டத்தைப் பத்ரவாதோ
மறைமாவட்டமாகத் தரக்குறைவு செய்து கோவா மறைபரப்பு மறைமாவட்டத்தின் இணையான மறைமாவட்டமாக
மாற்றம் செய்தவர் யார்?
ஆயர் பிரான்சிஸ் றோஸ்
46.
ஆர்ச்சு
டீக்கன் என்னும் பதவிக்குப் பதிலாக இலத்தீன் சபையைப் போன்று விகார் ஜெனரலை (குருகுல
முதல்வர்) நியமிக்கத்துவங்கியவர் யார்?
ஆயர் பிரான்சிஸ் றோஸ்
47.
கூனன் குரிசு சபதம் எப்போது நடைபெற்றது?
1653
48.
ஆயர் பிரான்சிஸ் ரோஸ் எக்காலத்தில் மலங்கரை சபையை
ஆட்சி செய்தார்?
1599 முதல் 1624 வரை
49.
இந்தியாவிலுள்ள கிறிஸ்தவ சபையை பின்வரும் நான்கு
மறைமாவட்டங்களாக பிரித்துச் சீரமைத்தவர் யார்?
ஆயர் பிரான்சிஸ் றோஸ்
50.
ஆயர் பிரான்சிஸ் றோஸ் உருவாக்கிய இந்திய
மறைமாவட்டங்கள் எவை?
1 கோவா, 2. கொச்சி 3 கொடுங்ஙல்லூர், 4. மயிலாப்பூர்
51.
மலங்கரை சபையை கொடுங்ஙல்லூர் மறைமாவட்டமாகத்
தரந்தாழ்த்தியவர் யார்?
ஆயர் பிரான்சிஸ் றோஸ்
52.
அங்கமாலி உயர் மறைமாவட்டத்தின் தலைமையிடத்தை 1608-ல்
கொடுங்ஙல்லூருக்கு மாற்றியவர் யார்?
ஆயர் பிரான்சிஸ் றோஸ்
53.
ஆயர் பிரான்சிஸ் றோஸ் காலத்தில் கொடுங்ஙல்லூர்
மறைமாவட்டத்தில் உட்படாத விசுவாசிகளை காலப்போக்கில் எந்த திருச்சபைக்கு மாற்றினர்?
இலத்தீன் திருச்சபை
54.
பிரான்சிஸ் றோசுக்குப் பின்னர மலங்கரை சபைக்குத் தலைமை
தாங்கியவர்கள் யாவர்?
1624 முதல் 1641 வரை இயேசு சபையை
சார்ந்தவர்களான ஆயர் பிரிட்டோ. 1641 முதல் ஆயர் பிரான்சிஸ் கார்சியா ஆகியோர்
55.
கூனன் குரிசு சபதம் அல்லது வளைந்த சிலுவை சபதம் எங்கே
எப்போது நடைபெற்றது?
1653 ஜனவரி 3-ம் நாள்
வெள்ளிக்கிழமை மட்டாஞ்சேரி கோவிலின் முன்பக்கம்
56.
வளைந்த சிலுவை சபதத்தில் கற்சிலுவையில் நான்கு
பக்கங்களிலும் கயிற்றால் கட்டி பிடித்துக்கொண்டு “தலைமுறையினர் உள்ள காலம் வரை
சாம்பாளூர் பாதிரிகளின் ஆட்சியின் கீழ் இருக்கமாட்டோம்” என உறுதிமொழி
எடுத்துக்கொண்டவர்கள் எத்தனை பேர்?
25,000 பேர்
57.
சாம்பாளூர் என்றால் என்ன?
அம்பழக்காடு
என்னுமிடத்திற்கு அருகாமையிலுள்ள இயேசு சபையினரின் கல்வி நிலையம் தான் 'சாம்பாளூர்"
58.
சாம்பாளூர் என்பதன் அர்த்ம் என்ன?
புனித பவுல்
59.
வளைந்த சிலுவை சபதத்திற்குப் பின்னர் பாரசீகத்திலிருந்து வந்த எந்த சிறியன் ஆயரை வரவேற்க
மட்டாஞ்சேரியில் ஒன்றுகூடினர்?
அகத்தெள்ளா
60.
போர்ச்சுகீசியர்கள் எந்த ஆயரை தடுத்து கோவாவிற்குத்
திருப்பி அனுப்பிவிட்டனர்?
அகத்தள்ளா ஆயர்
61.
ஆயர் அகத்தெள்ளாவை போர்ச்சுகீசியர்கள் கொலை செய்தனர்
என்னும் வதந்தி பரவியதால் ஆத்திரமும், கோபமும் அடைந்த மலங்கரை மக்கள் இடப்பள்ளி
கோவிலில் ஒன்றுகூடி எடுத்துக்கொண்ட தீர்மானம் என்ன?
போர்ச்சுகீசிய இயேசு சபை
ஆயர்களை ஏற்கமாட்டோம், தன்னாட்டவர்களான குருக்களை ஆயர்களாக நியமிக்க வேண்டும்
62.
பன்னிரு குருக்கள் சேர்ந்து ஒரு குருவானவரை ஆயராகத்
திருநிலைப்படுத்த ஆயர் அகத்தெள்ளா அனுமதி அளித்திருக்கிறார் என்ற தவறா செய்தியை வெளியிட்டவர்
யார்?
இட்டித்தொம்மன் கத்தனார்
63.
எப்போது ஆலங்ஙாடு என்னும் கோவிலில் வைத்து 12 குருக்கள் சேர்ந்து
ஆர்ச்சு டீக்கன் தோமா என்பவரின் தலையில் கைவிரித்து முதலாம் மார் தோமா என்ற
பெயரில் ஆயராக அருட்பொழிவு செய்தனர்?
1653 மேய் 22-ஆம் நாள்
64.
ஆர்ச்சு டீக்கன் தோமா முதலாம் மார் தோமா ஆன பின்னர் ஆலோசகர்களாக
நியமிக்கப்பட்ட நால்வர் யாவர்?
பள்ளிவீட்டில் சாண்டி
கத்தனார், கடலில் சாண்டி கத்தனார், கீவற்கீஸ் கத்தனார், இட்டித்தொம்மன் கத்தனார்
65.
கூனன்குரிசு சபதத்திற்குப்பின் மலங்கரை சபையின்
பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுத்துவதற்காக உரோமையிலிருந்து அனுப்பப்பட்ட இரண்டு
கர்மலீத்தா குருக்கள் யாவர்?
ஜோசப் செபஸ்தியானி, ஹியாசிந்த்
66.
எப்போது ஜோசப் செபஸ்தியானி ஆயராகி மலங்கரை சபையை
ஆட்சி செய்தார்?
1661-ல்
67.
முதலாம் மார் தோமாவின் ஆயர்ப் பதவியை முறைப்படுத்திட
யார் விரும்பாததால் சமரசப் பேச்சுவார்த்தை வெற்றியடையவில்லை?
ஆயர் செபஸ்தியானி
68.
ஆயர் செபஸ்தியானி இந்தியாவை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டது
ஏன்?
டச்சுகாரர்கள்
போர்ச்சுகீசியரைத் தோற்கடித்துக் கொடுங்ஙல்லூர். கொச்சி ஆகிய இடங்களைக்
கைப்பற்றினர்.
69.
1663-ல் ஆயர் செபஸ்தியானி முதலாம் மார் தோமாவை திருச்சபையிலிருந்து
வெளியேற்றி யாரை ஆயராகத் திருநிலைப்படுத்தினார்?
முதலாம் மார் தோமாவின் உறவினரான
பறம்பில் சாண்டி கத்தனாரைக் கடுத்துருத்தி என்னும் இடத்தில்
70.
எப்போது அந்தியோக்கியன் யாக்கோபாய ஆயர் மார்
கிரிகோரியோஸ் கேரளாவிற்கு வந்தார்?
1665-ல்
71.
ஆயர் பறம்பில் சாண்டியை ஏற்றுக்கொண்டு பழைய
கிழக்கத்திய சிறியன் ஆராதனை முறையை பின்பற்றவும் கத்தோலிக்கராகத் தொடரவும் செய்தவர்கள்
எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
பழைய கூற்றினர்
72.
பழைய கூற்றினர் பிற்காலத்தில் எவ்வாறு
அழைக்கப்பட்டனர்?
சீறோ-மலபார் கிறிஸ்தவர்கள்
73.
முதலாம் மார் தோமாவை அங்கீகரிக்கவும். ஆயர் மார்
கிரிகோரியோசை ஏற்றுக்கொள்ளவும் செய்தவர்கள் அந்தியோக்கியன் கிழக்கத்திய சுறியானி
ஆராதனை முறையைப் பின்பற்றியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
புத்தன் கூற்றினர் அல்லது
யாக்கோபாயர்கள்
74.
கூனன்குரிசு சபதத்திற்குப்பின் மலங்கரை சபை பிளவுற்ற முக்கிய
மூன்று பிரிவினர் யாவர்?
1. கொச்சி பத்ரவாதோ லத்தீன்
மறைமாவட்டத்திலும் பிற லத்தீன் மறைமாவட்டங்களிலுமாக 1610-ல் உட்படுத்தப்பட்ட சில
கோவில்கள்
2. 1661-ல் சிறியன்
கிறிஸ்தவர்களுக்காக உரோமை நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் கீழ் மலபாரில்
விகாரியேட் நிறுவவும், சாண்டி கத்தனார் ஆயராகவும் செய்த போது 64 கோயில்கள் முழுமையாகவும் 20 கோயில்களில் சில
குடும்பங்களும்,
3. மார் தோமாவின் தலைமையில்
கூனன்குரிசு சபதத்தில் உறுதியாக 26 கோவில்கள் முழுமையாகவும் 20 கோவில்களில் சில
குடும்பங்களும் எனப் பிரிந்து விட்டனர்.
75.
1653 முதல் 1766 வரை மலங்கரை சபையின் புதிய கூற்றினரை வழிநடத்திய
ஐந்து ஆயர்கள் யாவர்?
முதலாம் மார் தோமா, இரண்டாம்
மார் தோமா, மூன்றாம் மார் தோமா, நான்காம் மார் தோமா ஐந்தாம் மார் தோமா
76.
ஆறாம் மார் தோமா அந்தியோக்கியன் யாக்கோபாயா
சபையிலிருந்து சட்ட ரீதியான பட்டங்களை பெற்றுக்கொண்டு எப்பெயரை பெற்றுக்ண்டார்?
முதலாம் மார் திவன்னாசியோஸ்
77.
ஆயர் முதலாம் மார் திவன்னாசியோஸ் ஆட்சி புரிந்த காலம்
எது?
1761 முதல் 1808 வரை
78.
எப்போது முதல் கேரளாவில் ஆங்கிலேயர் ஆதிக்கம்
செலுத்தினர்?
1792 முதல்
79.
ஆங்கிலிக்கன் சபையோடுள்ள உறவினை முறித்துக்கொள்ள
தீர்மானிக்க பொதுச்சங்கம் கூட்டிய மலங்கரை சபையின் ஆயர் யார்?
சேப்பாட்டு மார்
திவன்னாசியோஸ்
80.
முதலில் சி.எம்.எஸ் சபையில் சேர்ந்த சிறியன்
கிறிஸ்தவர்கள் எத்தனை?
சுமார் 6000
81.
சி.எம்.எஸ். மறைப்பணியாளர்களுடன் உறவை
முறித்துக்கொண்டாலும் யாக்கோபாய சபையில் புராட்டஸ்டன்ட் கொள்கையுடையவர்களுக்கு தலைவராயிருந்தவர்
யார்?
பாலக்குந்நத்து ஆபிரகாம்
மல்பான்
82.
பாலக்குந்நத்து ஆபிரகாம் மல்பான் மறுமலர்ச்சிக்
கருத்துகளுக்குத் தலைமையேற்பதற்கு ஆயர் தேவை எனக் கருதி தனது சகோதரரின் மகனான
மாத்தன் திருத்தொண்டரை அந்தியோக்கிய மறைமுதுவரிடமிருந்து எந்த பெயரால் அருட்பொழிவு
பெற்று ஆயரானதன் அதிகாரச்சான்றுடன் 1843-ல் கேரளாவில் திரும்பி வரச் செய்தார்?
மாத்யூஸ் மார் அத்தனாசியோஸ்
83.
மலங்கரையின் ஆயராயிருந்த சேப்பாட்டு மார்
திவன்னாசியோசுக்கும் மாத்யூஸ் மார் அத்தனாசியோசுக்கும் இடையே அதிகாரப் போட்டியில் நீதிமன்ற
வழக்கில் வெற்றி பெற்று 1853-ல் ஆயராகப் பதவியேற்றவர் யார்?
மாத்யூஸ் மார் அத்தனாசியோஸ்
84.
சேப்பாட்டு மார் திவன்னாசியோசுக்குப் பின்னர்
அந்தியோக்கியன் பாத்திரியர்க்கீஸ் மார் பத்ரோஸ் என்பவரை கேரளாவிற்கு அழைத்து வந்து
1876-ல்
முளம்துருத்தியில் பொதுச்சங்கத்தைக் கூட்டியவர் யார்?
புலிக்கோட்டில் மார் திவன்னாசியோஸ்
85.
புலிக்கோட்டில் மார் திவன்னாசியோஸ் தலைமையில் மலங்கரை சபையை பிரித்த ஏழு மறைமாவட்டங்கள் எவை?
கொல்லம், தும்பமண், கோட்டயம், அங்கமாலி, கண்டநாடு, கொச்சி, நிரணம்
86.
புலிக்கோட்டில் மார் திவன்னாசியோஸ் மலங்கரை சபையின்
பேராயராகி முளந்துருத்தி பொதுச்சங்கம் முதல் மலங்கரை சபையின் புத்தன்கூற்று சமூகம்
அந்தியோக்கியன் யாக்கோபாய சபையின் அதிகாரத்தின் கீழ் வந்தது முதல் எவ்வாறு பெயர்
மாற்றம் பெற்றது?
யாக்கோபாயா சபை
87.
பதவி நீக்கப்பட்ட மாத்யூஸ் மார் அத்தனாசியோஸ் யாரை
ஆயராக அருட்பொழிவு செய்தார்?
ஆபிரகாம் மல்பானின் மகனுக்கு
தோமஸ் மார் அத்தனாசியோஸ் என்ற பெயரில்
88.
யாக்கோபாய சபையுடன் நீதிமன்ற வழக்கில் தோல்வியுற்ற
தோமஸ் மார் அத்தனாசியோஸ் பின்பு எங்கே வந்து தங்கினார்?
மாராமன்
89.
தோமஸ் மார் அத்தனாசியோஸ் தன்னைப்
பின்தொடர்ந்தவர்களைச் சேர்த்து எந்த புதிய திருச்சபையை நிறுவினார்?
மார் தோமா திருச்சபை
90.
புலிக்கோட்டில் மார் திவன்னாசியோஸ் யாரை தனது
வழிமரபினராக நியமித்தார்?
வட்டசேரில் மார் திவன்னாசியோஸ்
91.
வட்டசேரில் மார் திவன்னாசியோசுக்கும், பவுலோஸ் மார்
கூறிலோசுக்கும் அந்தியோக்கியாவில் வைத்து 1908-ல் ஆயர் பட்டம் வழங்கியவர்
யார்?
அப்துல்லா மறைமுதுவர்
92.
அந்தியோக்கியாவில் மறைமுதுவர் பதவியில் இருந்த இருவர்
யாவர்?
அப்துல்லா, மற்றும் சுல்தான்
அரசரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அப்தேத் மிசிகா
93.
மலங்கரை யாக்கோபாய சபையின் ஆன்மீகமும், சொத்து
சம்பந்தமானதுமான எல்லா அதிகாரமும் அந்தியோக்கியன் மறைமுதுவருக்கே உரியது என
எல்லாப் பங்குகளும் ஆயர்களும் ஒப்பந்தம் எழுதி கொடுக்க வேண்டுமென கட்டளையிட்டவர்
யார்?
அப்துல்லா மறைமுதுவர்
94.
1911-ல் அப்துல்லா மறைமுதுவர் தடை செயத மலங்கரை பேராயர்
யார்?
வட்டசேரில் மார் திவன்னாசியோஸ்
95.
மறைமுதுவர் அப்துல்லாவை எல்லா நிலைகளிலும் முழுமையாக
ஏற்றுக் கொண்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
பாவா கட்சியினர்
96.
மறைமுதுவர் அப்துல்லாவை ஆன்மீகக் தலைவராக மட்டும்
ஏற்றுக்கொண்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
ஆயர் கட்சியினர்
97.
எப்போது மலங்கரை யாக்கோபாயா சமூகம் இரண்டாகப்
பிளவுபட்டது?
1911 -ல்
98.
ஆயர் கட்சியில் ஆயர் வட்டசேரில் மார்
திவன்னாசியோசுக்கு உறுதுணையாயிருந்த மிகத்திறமையானவர் யார்?
அருள்தந்தை பி.டி கீவற்கீஸ்
(பேராயர் மார் இவானியோஸ்)
99.
அப்தேத் மிசிகா கேரளாவிற்கு எப்போது வந்தார்?
1912-ல்
100.
மலங்கரையில் காதோலிகேட் (உயர் பேராய திரு ஆட்சி
அமைப்பு) எங்கே வைத்து நிறுவப்பட்டது?
நிரணம் கோவிலில்
101.
மலங்கரையில் முதல் உயர் பேராயர் யார்?
ஆயர் முறிமற்றம் மார்
இவானியோஸ்
102.
உயர் பேராய திரு ஆட்சி அமைப்பு கொண்ட ஆயர் கட்சியினர்
எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
மலங்கரை ஆர்த்தடோக்ஸ் திருச்சபை
103.
அப்துல்லா மறைமுதுவரின் கீழ் செயல்பட்ட பாவா கட்சியினர்
எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
மலங்கரை யாக்கோபாயா திருச்சபை
104.
1912-ல் தொடங்கிய ஆர்த்தடோக்ஸ், யாக்கோபாய சபைகளுக்கான
நீதிமன்ற வழக்குகள் எத்தனை ஆண்டுகளாக நீடிக்கின்றன?
100 ஆண்டுகளுக்கும் மேலாக
105.
அந்தியோக்கியன் பாத்திரியார்க்கீஸின் ஆன்மீகமும்
பொருளாதாரம் சார்ந்த அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக்கொண்ட பாவா கட்சியினரின்
தலைவர் யார்?
ஆயர் பவுலோஸ் மார் கூறிலோஸ்
106.
அந்தியோக்கியன் பாத்திரியார்க்கீசுக்கு ஆன்மீக
அதிகாரம் மட்டுமே உள்ளது என்ற கொள்கை உடைய ஆயர் கட்சியினரின் தலைவர் யார்?
ஆயர் வட்டச்சேரில் மார்
திவன்னாசியோஸ்
107.
சிறியன் கிறிஸ்தவர்களின் நன்மைக்காக பிரிட்டீஷ்
கிழக்கிந்திய கம்பெனியில் வட்டிக்காக செலுத்திய பணம் எந்தப் பெயரால் அழைக்கப்பட்டது?
வட்டிப்பணம்
108.
புத்தன் கூற்றினர் இரண்டாகப் பிளவுபட்டபோது வட்டிபணம்
பற்றிய நீதிமன்ற வழக்கு எப்போது துவங்கியது?
1913-ல்
109.
அருட்தந்தை பி.டி கீவற்கீஸ் பெதனியின் மார் இவானியோஸ்
என்ற பெயரில் ஆயராக எப்போது திருநிலைப்படுத்தப்பட்டார்?
1925 மேய் 1
110.
வட்டிபணம் வழக்கின் தீர்ப்பு மார்
திவன்னாசியோசுக்கும் ஆயர் கட்சிக்கும் சாதகமாக அமைந்து வழக்கும் முடிவு பெற்றது
எப்போது?
1928-ல்
111.
புத்தன்கூர் சமூகத்தில் முதன் முதலாக மார் இவானியோஸ் எப்போது
ஆண்களுக்கென பெருநாட்டில் முண்டன் மலையில் துறவு சபையைத் துவங்கினார்?
1919-ல்
112.
புத்தன்கூர் சமூகத்தில் மார் இவானியோஸ் எப்போது பெண்களுக்கென
திருவல்லாவின் திருமூலபுரத்தில் துறவு சபையைத் துவங்கினார்?
1920-ல்
113.
அருள்தந்தை பி.டி கீவர்கீஸ் பெதனியின் ஆயராக
நியமிக்கப்பட்டது எப்போது?
1925-ல்
114.
மார் இவானியோஸ் எப்போது பெதனியின் பேராயரானார்?
1929-ல்
115.
1663-ல் நடைபெற்ற கூனன்குரிசு சபதத்திற்கும் பின் தாய்திருச்சபையான
கத்தோலிக்க சபையோடு மறுஒன்றிப்பு அடைவதற்கான வெவ்வேறு முயற்சிகளை மேற்கொண்ட புத்தன்கூர்
சமூகத்தின் முதல் ஆறு ஆயர்கள்யாவர்?
முதலாம் மார் தோமா முதல்
ஆறாம் மார் தோமா வரை
116.
வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ் 1923-ல்
மர்தீனியாவுக்குப் போகும் வழியில் எங்குள்ள சிறியன் கத்தோலிக்கப் பேராயரைச்
சந்தித்தார்?
பாக்தாதிலுள்ள
117.
வட்டச்சேரில் மார் திவன்னாசியோஸ் அந்தியோக்கியன்
சுறியானி கத்தோலிக்க மறைமுதுவரின் கடிதம் பெற்றுக்கொண்ட பின்னர் பசேலியோஸ் கீவற்கீஸ் காதோலிக்கோஸ், கீவற்கீஸ் மார்
கிரிகோரியோஸ். பெதனியின் மார் இவானியோஸ் ஆகியோரை பருமலையில் மன்றத்திற்கு வரவழைத்து
எதிர்கால நடவடிக்கைகளுக்கானப் யாரிடம் பொறுப்பினை வழங்கினார்?
மார் இவானியோஸ்
118.
மார் இவானியோஸ் எப்போது உரோமையின் அப்போஸ்தலிக்க
அலுவலகத்திற்கு அருள்தந்தை ரிபேரா வழியாக முதல் விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்?
1926-ல்
119.
மார் இவானியோஸ் கத்தோலிக்க சபையோடுள்ள ஒன்றிப்பிற்காக
எந்த இரண்டு வேண்டுதல்களைப் பரிசீலிக்கும் படி விண்ணப்பத்தில் கேட்டிருந்தார்?
1. பழமை வாய்ந்த தங்கள்
ஆராதனைமுறையும்,
மரபும்
பாதுகாக்கப்பட வேண்டும்.
2. ஆயர் மன்றத்திற்கும், அதன் ஆயர்களுக்கும்
மறுஒன்றிப்படையும் மலங்கரை மக்கள் மேல் அதிகாரம் செலுத்த அனுமதிக்க வேண்டும்.
120.
பருமலைப் பொதுச்சங்கம் முதல் மறுவொன்றிப்புக்கு
துணையாக நின்றவர்கள் பலர் மறுஒன்றிப்புச் சிந்தனையிலிருந்து விலகிவிடக் காரணம்
என்ன?
வட்டிப்பண வழக்கிற்கு 1928-ல் ஆயர் கட்சிக்கு
ஆதரவாகத் தீர்ப்பு வந்தது
121.
பெருநாடு பெதனி துறவு ஆசிரமத்திலிருந்து வெளியேறி மார்
இவானியோஸ்,
மார்
தியோபிலோஸ் மற்றும் 20 துறவிகள் எவ்விடத்திற்கு வந்து தஞ்சமடைந்தனர்?
வெண்ணிக்குளம்
122.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மலங்கரை சபையின்
மறுஒன்றிப்பு எப்போது நடைபெற்றது?
1930 செப்டம்பர் 20-ல்
123.
கொல்லம் லத்தீன் கத்தோலிக்க ஆயர் அலோசியஸ் பென்சிகர்
ஆண்டகையின் முன்னிலையில் சங்ஙனாசேரி ஆயர் மார் காளசேரி, கோட்டார் ஆயர் லாறன்ஸ்
பெரேரா ஆகியோர் உடனிருக்க மறு ஒன்றிப்பு அடைந்தவர்கள் யாவர்?
மார் இவானியோஸ், மார் தியோபிலோஸ்,
அருள்தந்தை ஜாண் O.1.C, திருத்தொண்டர் அலெக்சாண்டர், கிளிலேத்து சாக்கோ
124.
மார் இவானியோஸ் ஆண்டகை உரோமையில் திருத்தந்தை 11-ஆம் பத்திநாதரை எப்போது
சந்தித்தார்?
1932-ல்
125.
1932 ஜூன் 11-ஆம் நாள் மலங்கரை கத்தோலிக்கத் திரு ஆட்சி பீடம்
நிறுவப்பட்ட திருமடலுக்குப் பெயர் என்ன?
கிறிஸ்தோ பாஸ்தோரும்
பிரின்சிப்பி
126.
திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்தின் முதல் பேராயர்
யார்?
மார் இவானியோஸ் ஆண்டகை
127.
திருவல்லா மறைமாவட்டத்தின் முதல் ஆயர் யார்? மார்
தியோபிலோஸ் ஆண்டகை
128.
1653-ல் நடைபெற்ற கூனன் குரிசு சபதத்திற்குப்பின்
தன்னாட்டு ஆயரான பறம்பில் சாண்டியை ஏற்றுக்கொண்டவர்கள் புராதன கிழக்கத்திய சிறியன்
ஆராதனை முறையைப் பின்பற்றவும் கத்தோலிக்க சபையின் உறவொன்றிப்பில் தொடரவும் செய்த பழைய
கூற்றினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
சீறோ-மலபார் திருச்சபையினர்
129.
கத்தோலிக்க உறவொன்றிப்பில் நிலைத்து நின்ற பழைய
கூற்றினருக்காக நிறுவப்பட்ட மலபாரிலுள்ள அப்போஸ்தலிக் விகாரியேட் எப்போது இலத்தீன்
கத்தோலிக்கரின் வராப்புழை உயர் மறைமாவட்டமாக மாற்றப்பட்டது?
1659
130.
எப்போது கோட்டயம், திருச்சூர் விகாரியேற்றுகள்
நிறுவப்பட்டு சிறியன் கத்தோலிக்கர்கள் இலத்தீன் கத்தோலிக்கர்களிடமிருந்து
வேறுபடுத்தப்பட்டனர்?
1887-ல்
131.
சீறோ மலபார் திருச்சபையில் எப்போது திருச்சூர்
எர்ணாகுளம்,
சங்ஙனாசேரி
என்ற மூன்று மறைமாவட்டங்களின் ஆட்சிப் பறுப்பைத் தன்னாட்டவரான ஆயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது?
1896-ல்
132.
எப்போது க்னானாயர்களுக்காக கோட்டயம் விகாரியேட்
நிறுவப்பட்டது?
1911-ல்
133.
சீறோ மலபார் திருச்சபையில் மேற்கத்திய இலத்தீன் மறைப்பணியாளர்கள்
ஆட்சி புரிந்த காலம் எத்தனை?
300 ஆண்டு காலம்
134.
கேரளாவின் சீறோமலபார் திருச்சபையின் திருஆட்சி
அமைப்பு மீண்டும் எப்போது நிறுவப்பட்டது?
1923-ல்
135.
சீறோமலபார் திருச்சபையின் ஆயர்மாமன்ற அமைப்பும்
ஏற்படுத்தப்பட்டு சபைத்தலைவராக உயர்பேராயர் என்னும் பதவியோடு கூடிய பேராயர்
பொறுப்பை ஏற்கவும் செய்த்து எப்போது?
1993-ல்
136.
சீறோமலபார் திருச்சபைக்கு எத்தனை மறைமாவட்டங்கள்
உள்ளன?
30 மறைமாவட்டங்களும் சுமார் 35 லட்சம்
விசுவாசிகளும் இச்சபைக்கு உண்டு
137.
உரோமையிலுள்ள பேதுருவின் அப்போஸ்தலிக்க சபையின்
மறைத்தூதுப்பணியின் விளைவாக எ்போது வருகை தந்த நற்செய்திப் பணியாளர்கள் பாரதத்தில்
லத்தீன் கத்தோலிக்க சபையை தொடங்கினர்?
16-ஆம் நூற்றாண்டில்
138.
கோவா உயர் மறைமாவட்டத்தின் தலைமையில் கொச்சி
மறைமாவட்டம் எப்போது நிறுவப்பட்டது?
1557-ல்
139.
கொச்சி மறைமாவட்டத்துக்குப் பின்னர் உருவான இலத்தீன்
கத்தோலிக்க மறைமாவட்டங்கள் எவை?
கொல்லம், வராப்புழை
140.
கேரளாவில் இலத்தீன் கத்தோலிக்க மறைமாவட்டங்கள்
எத்தனை?
11 மறைமாவட்டங்களும் 10 லட்சம்
விசுவாசிகளும்
141.
இந்திய கத்தோலிக்க திருச்சபையில் எத்தனை ஆராதனை
முறைகள் அல்லது தனியாட்சி உரிமை கொண்ட சபைகள் உள்ளன?
மூன்று
142.
இந்திய கத்தோலிக்க திருச்சபையில் மூன்று ஆராதனை
முறைகள் அல்லது தனியாட்சி உரிமை கொண்ட சபைகள் எவை?
1. 16-ஆம் நூற்றாண்டிற்குப்
பின்னர் மறைப்பணியாளர்களின் நற்செய்திப் பணியால் உருவான இலத்தீன் ஆராதனை முறையின்
அடிப்படையிலான இலத்தீன் கத்தோலிக்க திருச்சபை
2. பாரத சபையின் தொடக்கம் முதல்
இங்கே கடைபிடித்து வந்த கிழக்கத்திய சிறியன் ஆராதனை முறையைப் பயன்படுத்தி வந்த
சீறோ மலபார் கத்தோலிக்கத் திருச்சபை
3. 1653 -ல் ஏற்பட்ட கூனன்
குரிசு சபதத்திற்குப் பின் அந்தியோக்கியன் யாக்கோபாய ஆயர்கள் இங்கே பரப்பிய
அந்தியோக்கியன் ஆராதனை முறையைப் பயன்படுத்துகின்ற மலங்கரை சிறியன் (சீறோ மலங்கரை)
கத்தோலிக்கத் திருச்சபை
143.
இந்திய கத்தோலிக்க திருச்சபையில் மூன்று ஆராதனை
முறைகள் அல்லது தனியாட்சி உரிமை கொண்ட சபைகளின் ஒற்றுமை என்ன?
திருத்தந்தையின்
அதிகாரத்தின் கீழ் கத்தோலிக்க விசுவாசத்தையும், ஒழுக்கநெறிகளையும்
ஏற்றுக்கொண்டு அனைத்துலக கத்தோலிக்கத் திருச்சபையின் உறவொன்றிப்பில் வாழ்ந்து
வருகின்றன.
144.
இந்திய கத்தோலிக்க திருச்சபையில் மூன்று ஆராதனை
முறைகள் அல்லது தனியாட்சி உரிமை கொண்ட சபைகளின் வேற்றுமை என்ன?
ஒவ்வொரு திருச்சபைக்கும்
அதனதன் ஆராதனை முறையும், ஆன்மீகமும், இறையியலும், சட்ட அமைப்பும், சபைத்தலைவர்களும் உள்ளனர்
145.
16-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் உள்ள மலங்கரை சபை
வரலாறும்,
பிரிவினைகளும், சண்டை சச்சரவுகளும்
நிரம்பியுள்ள காலகட்டமாயிருக்க காரணம் என்ன?
ஏற்கெனவே பயன்பாட்டிலிருந்த
சபையையும்,
சிறியன்
ஆராதனை முறையையும் புரிந்து கொள்ள இலத்தீன்
மறைப்பணியாளர்களுக்கு இயலவில்லை. லத்தீன் சபை மட்டுமே கத்தோலிக்க சபை என்னும் தப்பெண்ணமே
அவர்களை வழிநடத்தியது. கத்தோலிக்க சபையின் வெவ்வேறு தனியாட்சி உரிமை மற்றும் ஆராதனை
முறைகளைப்பற்றிய அறிவீனம்.
பாடம் 9
பேராயர் மார் இவானியோசும் மலங்கரை சிறியன் கத்தோலிக்க
திருச்சபையும்
1.
20-ஆம் நூற்றாண்டில் வரலாறு படைத்த ஆளுமைத்தன்மை கொண்ட
மலங்கரை சபையின் தலைமைக் குருவானவர் யார்?
பேராயர் மார் இவானியோஸ்
2.
பேராயர் மார் இவானியோஸ் எப்போது பிறந்தார்?
1882 செப்டம்பர் 21-ஆம் தேதி
3.
பேராயர் மார் இவானியோஸ் எங்கே பிறந்தார்?
மாவேலிக்கரையில் புதியகாவு
பங்கில்
4.
பேராயர் மார் இவானியோஸ் எந்த குடும்பத்தில்
பிறந்தார்?
புகழ்பெற்ற பணிக்கர்
குடும்பம்
5.
புராட்டஸ்டன்ட் விசுவாசத்தை மலங்கரையில் பரப்பும்
நோக்கில் மாவேலிக்கரை சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
1818
6.
எந்த ஆண்டு நடைபெற்ற ஆயர் மன்றம் வாயிலாக மலங்கரை
சபையின் வரலாற்றில் மாவேலிக்கரை இடம் பெற்ற பகுதியானது?
1836
7.
மார் இவானியோஸின் அப்பாவின் சகோதரர் குருவாக இருந்தவர்
யார்?
தரியது ஸ்கரியா
8.
மலங்கரையில் புராட்டஸ்டன்ட் சிந்தனைகளுக்கு எதிராக
மலங்கரையில் உறுதியான போராட்டம் நடத்திய ஆயர் யார்?
புலிக்கோட்டில் மார்
திவன்னாசியோஸ்
9.
பி.டி கீவற்கீஸ் பணிக்கர் எந்த ஆயரின் அன்புச் சீடராக
குருமாணவப் பயிற்சி பெற்றார்?
புலிக்கோட்டில் மார்
திவன்னாசியோஸ்
10.
திருத்தொண்டராயிருக்கும் போது பி.டி கீவற்கீஸ் எந்த கல்லூரியிலிருந்து
முதுகலை (எம்.ஏ.) பட்டம் பெற்றார்?
சென்னை கிறிஸ்தவக் கல்லூரி
11.
பி.டி கீவர்கீஸ் எப்போது குருவாகத்
திருநிலைப்படுத்தப்பட்டார்?
1908-ல்
12.
மலங்கரையில் எம்.ஏ. அச்சன் என்னும் சிறப்புப் பெயர்
பெற்றிருந்தவர் யார்?
பேராயர் மார் இவானியோஸ்
13.
1908-1913 காலத்தில் பிளவுபடாத (பாவா கட்சி-ஆயர் கட்சி
பிரிவினைக்குமுன்) மலங்கரை சபையில் பொதுநல செயல்பாடுகளில் முன்னிரையில்
தலைமையேற்றுப் பங்காற்றியவர் யார்?
எம்.ஏ. அச்சன்
14.
மலங்கரை சபைக்கு வருகை தந்த அப்துல்லா மற்றும்
அப்தேத் மெசியா ஆகியோரின் செயலாளராக பணியாற்றியவர் யார்?
அருட்தந்தை பிடிகீவர்கீஸ்
15.
அருட்தந்தை பிடிகீவர்கீஸ் 1913 -ல் கல்கத்தாவில்
எக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினர்?
செராம்பூர் கல்லூரியில்
16.
அருட்தந்தை பிடிகீவர்கீஸ் செராம்பூரில் பணியாற்றிய
காலம் எது?
1913 முதல் 1919 -வரை
17.
அருட்தந்தை பிடிகீவர்கீஸ் செராம்பூரில் பணியாற்றிய போது
எத்தகைய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார்?
நற்செய்திப்பணி, சபை ஒன்றிப்பு
18.
பாரத சபையின் நற்செய்திப் பணிகளுக்காக அருட்தந்தை
பிடிகீவர்கீஸ் எதனை துவங்கினார்?
கிறிஸ்தவ துறவற சமூகம்
19.
அருட்தந்தை பி.டி. கீவர்கீஸ் பெதனி ஆசிரமத்தை எங்கே
எப்போது துவங்கினார்?
1919 -ல் பெருநாட்டில் முண்டன் மலை
20.
அருட்தந்தை பி.டி. கீவர்கீஸ் பெதனி துறவு இல்லத்தை எங்கே
எப்போது துவங்கினார்?
1920 -ல் திருமூலபுரத்தில்
21.
பெதனி துறவு இல்லத்தை நிறுவியதன் மறுமலர்ச்சி
செயல்களினால் எந்த நாளில் மலங்கரை சபையைக் கத்தோலிக்க சபைக்கு அழைத்து வர அவரால்
முடிந்தது?
1930 செப்டம்பர் 20-ல்
22.
மார் இவானியோஸின் மலங்கரை கத்தோலிக்க மறுஒன்றிப்பு
இயக்கத்தின் குறிக்கோள்கள் என்ன?
சபையின் புது நற்செய்தி
அறிவித்தல்,
(Re-evangelisation) கிறிஸ்தவரல்லாதவர்களிடையே நற்செய்திப் பறைசாற்றுதல் (Evangelisation) கிறிஸ்தவ ஒன்றிப்பு
இயக்கம் (Ecumenism)
23.
20-ஆம் நூற்றாண்டில் பாரத திருச்சபை அனுபவித்தறிந்த
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மனிதராக திகழ்ந்தவர் யார்?
மார் இவானியோஸ் ஆண்டகை
24.
புராட்டஸ்டன்ட் மறுமலர்ச்சி எந்த நூற்றாண்டில்
ஏற்பட்டது?
16-ஆம் நூற்றாண்டில்
25.
கத்தோலிக்க சபைக்கும் புராட்டஸ்டன்ட் சமூகங்களுக்கும்
இடையே விசுவாச உண்மைகளைக் குறித்து இடைவிடாத வாக்குவாதங்களும், விவாதங்களும்
நடைபெற்று வந்த 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவின் கிறிஸ்தவச் சமூகங்கள் எத்தகைய
பணிகள் செய்யத் துவங்கினர்?
நற்செய்தி அறிவிப்புப் பணிகள்
26.
கத்தோலிக்க சபையின் நற்செய்திப் பணிகள் யாருடைய கட்டுப்பாட்டில்
இருந்தது?
விசுவாசப் பரப்புதல்
திருச்சங்கத்தின் (Propaganda Counci)
27.
புராட்டஸ்டன்ட் சபைகளின் பிரதிநிதிகளின் அனைத்துலக
நற்செய்திப்பணியாளர் மாநாடு எங்கே எப்போது கூட்டப்பட்டது?
1910-ல் ஸ்காட்லாந்தின் எடின்பரோ
நகரில்
28.
எடின்பரோ மாநாட்டின் ஆய்வுப்பொருள் என்ன?
"உலகின் இத்தலைமுறையினர்
மத்தியில் நற்செய்திப்பணி" (The evangelisation of the world in this
Generation)
29.
சபை ஒன்றிப்பு குறித்து எந்த மாநாட்டில் நடைபெற்ற
விவாதங்களும்,
தீர்மானங்களும், அருட்தந்தை பி.டி. கீவர்கீஸ்
க்கு புத்துணர்வு ஏற்படுத்தியது?
எடின்பரோ மாநாடு
30.
எடின்பரோ மாநாட்டைத் தொடர்ந்து வெவ்வேறு நாடுகளில்
நற்செய்தி அறிவிப்பு மாநாடுகள் நடத்துவதற்கு யாரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது?
திரு. ஜாண் ஆர். மார்ட்டின்
31.
எடின்பரோ மாநாட்டுத் தீர்மானத்தின்படி இந்தியாவிலுள்ள
கிறின்தவ நற்செய்திப் பணியாளர்களின் மாநாடு ஜாண் ஆர் மார்ட்டினுடைய தலைமையில் எப்போது
எங்கே நடைபெற்றது?
1912-ல் செராம்பூரில்
32.
புராட்டஸ்டன்ட் சபைகளைத் தவிர கிழக்கத்திய சபைகளும்
பங்கு பெற்ற முதல் சபை ஒன்றிப்பு மாநாடு எது?
செராம்பூர் மாநாடு
33.
செராம்பூர் மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியாவின் கிழக்குத்
திருச்சபைகள் யாவை?
மலங்கரை சபை மற்றும்
மார்தோமா சபையின் பிரதிநிதிகள்
34.
செராம்பூர் மாநாட்டில் கலந்துகொண்ட மலங்கரை சபையின்
தலைமையேற்று நடத்திய பிரதிநிதிகள் யாவர்?
வட்டச்சேரில் மார்
திவன்னாசியோஸ் ஆயரும் அருட்தந்தை PT. கீவற்கீஸ் அவர்களும்.
35.
செராம்பூர் மாநாட்டின் முக்கிய விவாதப் பொருள் என்ன?
நற்செய்திப்பணி மற்றும் சபை
ஒன்றிப்பு
36.
பல்வேறு நாடுகளில் நடத்துவதற்காகத்
தீர்மானிக்கப்பட்டிருந்த நற்செய்திப் பணிகளுக்கான மாநாடுகள் எதன் காரணமாக
நடைபெறவில்லை?
முதல் உலகப்போர்
37.
எடின்பரோ மாநாட்டின் தீர்மானத்தின்படி அனைத்துலக
நற்செய்திப் பணிகளுக்கான ஆலோசனைகுழு எப்போது அமைக்கப்பட்டது?
1921-ல்
38.
எடின்பரோ தீர்மானங்களின்படி ஆழமான ஆய்வுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள்
எவை?
World Council of Life and
Work, World Council of Faith and Order
39.
எடின்பரோ தீர்மானங்களின் உருவாக்கப்பட்ட அமைப்புகளின்
விளைவாக 1948-ல் உருவானது என்ன?
World Council of Churches
(WCC)
40.
World Council of Churches (WCC) உருவானபோது அதற்கு
இணையாக கத்தோலிக்க திருச்சபையில் வலுவடைந்து வந்த சிந்தனைகள் எவை?
திருச்சபை ஒன்றிப்பு
சிந்தனைகள்
41.
கத்தோலிக்க திருச்சபையில் சபை ஒன்றிப்பு பற்றிய சிந்தனைகள்
வழங்கிய சங்கம் எது?
இரண்டாம் வத்திக்கான்
சங்கத்தின் ஏடு
42.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை இடமும்
பாரதத்தின் திருச்சபை சார்ந்த மறுமலர்ச்சி சிந்தனைகளின் பிறப்பிடமும் எது?
கொல்கத்தா நகரம்
43.
இந்தியாவில் வெவ்வேறு பிரிந்த திருச்சபைகளின்
சிந்தனையாளர்களின் எண்ணங்கள் எங்கே வளர்ந்து வந்தன?
கொல்கத்தா இறையியல் ஆய்வு
மையம் (Calcutta
School of Theology)
44.
மார் இவானியோஸ் பணியாற்றியிருந்த இந்தியாவில் நவீன
கிறிஸ்தவ சிந்தனைகளின் விளைநிலமான நகர் எது?
கொல்கத்தா
45.
மலங்கரை சபைக்குப் புத்துயிரளிக்கவும் பாரத
நற்செய்திப் பணிக்காகவும் உறுதுணையாய் அமைந்த பெதனி துறவு சபைக்கு வழிகோலிய நற்செய்திப்
பணி,
சபை
ஒன்றிப்பு ஆகிய கருத்துகள் எந்த மாநாடுகளிலிருந்த கிடைத்தது?
எடின்பரோ. செராம்பூர்
மாநாடுகள்
46.
நற்செய்தி அறிவிக்க பிளவுபட்ட சபை தடையானதே என்பது
எந்த மாநாட்டின் சிந்தனை ஆகும்?
எடின்பரோ மாநாடு
47.
காதோலிக்கேட் நிறுவன அமைப்பின் பின்னணிச்
செயல்பாடுகள் வாயிலாக பாவா கட்சி - ஆயர் கட்சிப் பிரிவினை நாள்களில் சபையின்
முன்னணித் தலைவராயிருந்த அருள்தந்தை பி.டி கீவற்கீஸ் செறாம்பூருக்குச் சென்றதன்
பின்னணிக் கருத்து என்ன?
திருச்சபையில் நிலவிய பிரிவினைகளிலிருந்து ஒதுங்கி நிற்பதற்காகவே
48.
மலங்கரையில் பிரிவினை வழக்குகளுக்கு அப்பாற்பட்டு
பெதனி துறவற மடம் நிறுவிய ஆயர் இரு பிரிவுகளையும் தாண்டிச்சென்று உருவாக்கியவை
என்ன?
பெதனி கோவில்களும், நற்செய்தி
மையங்களும்
49.
பெதனியின் சுதந்திர நிலையைப் பாதுகாத்திட உதவும்
வகையில் எத்தகைய பதவிகளை உருவாக்கிட அவரால் முடிந்தது?
பேராயர் மற்றும் எப்பிஸ்கோப்பா
50.
1925-ல் இரண்டாம் காதோலிக்கா பாவாவைத்
திருநிலைப்படுத்தவும் அதற்கு அடுத்த நாளிலேயே தந்தை பி. டி கீவற்கீஸ் ஆயர்
பதவிக்கு உயர்த்தப்படவும் செய்த இருவருக்குமான பாராட்டு விழாவின் போது ஆயர் மார்
இவானியோஸ் ஆற்றிய சொற்பொழிவின் முக்கிய கருத்து என்ன?
சபை ஒன்றிப்புச் சிந்தனை
51.
பாவா கட்சியும் ஆயர் கட்சியும் ஒன்றிக்க வேண்டியதன்
அவசியத்தில் தொடங்கி, மறுமலர்ச்சி சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட மார்தோமா சபையோடும், புராட்டஸ்டன்ட்
சிந்தனைகளுக்குச் சென்று விட்ட சபைப் பிரிவினர்களோடும். 1653-ன் கூனன் குரிசு சபதத்தின்
வாயிலாகப் பிரிந்தவர்களோடும் ஒன்றிப்புக்கான செயல்பாட்டுக்காக அனைவருக்கும்
அறைகூவல் விடுத்தவர் யார்?
மார் இவானியோஸ்
52.
1925 முதல் மார் இவானியோஸ் பங்கேற்ற ஆயர் மன்றங்களில் எது முக்கிய
கருத்தாக இருந்தது?
சபைஒன்றிப்புச் சிந்தனை
53.
எடின்பரோ மாநாடு எழுப்பிவிட்ட சபைஒன்றிப்புச்
சிந்தனையின் நவீனப் பாங்கினைத் தனதாக்கிக் கொண்ட மேதகு ஆயர் கத்தோலிக்கத்
திருச்சபையோடுள்ள ஒற்றுமையை வெறும் மறுஒன்றிப்பு என்பதற்கும் மேலாக கருதியது என்ன?
இரண்டு தனி உரிமை கொண்ட
சபைகளுக்கிடையே இருசாராரும் விரும்பி ஏற்படுத்தும் சபைஒன்றிப்பு முயற்சி
54.
ஆராதனை முறையும், சுயாட்சி அதிகாரமும்
அனுமதிக்கப்பட்டு கத்தோலிக்க சபையில் ஒரு தனிஉரிமை கொண்ட சபையாக மலங்கரை சபையை
ஏற்றுக்கொள்ள வைப்பதற்கும் அதுவழியாக மலங்கரை சபையின் தனித்தன்மையைப் பாதுகாத்துக்
கொள்வதற்கும் யாரால் இயன்றது?
மார் இவானியோஸ்
55.
செராம்பூரில் தாற்காலிகமாகத் தொடங்கிய பெதனி துறவு
சபயை பெருநாட்டிலுள்ள முண்டன் மலையில் எப்போது முறையாக நிறுவினார்?
1919 ஆகஸ்டு 15-ஆம் தேதி
56.
வங்காளத்தின் பாரிஸோள் துறவு சபையினர் மடத்தில்
பயிற்சி பெற்ற பெதனி கன்னியர்களுக்காக திருமூலபுரத்தில் எப்போது கன்னியர் இல்லம்
நிறுவப்பட்டது?
1920-ல்
57.
1925-ல் பெதனியின் எப்பிஸ்கோப்பா ஆகவும். 1929-ல் பெதனியின்
பேராயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டவர் யார்?
மார் இவானியோஸ்
58.
மார் இவானியோஸின் அன்பு சீடர் அருட்தந்தை யாக்கோபு
அவர்கள் மார் தெயோபிலோஸ் என்ற பெயரில் பெதனியின் எப்பிஸ்கோப்பாவாக
திருநிலைப்படுத்தப்பட்டது எப்போது?
1929-ல்
59.
மார் இவானியோஸ் பேராயர் திருமூலபுரம் பெதனி மடத்தை
மையப்படுத்தி பெதனியின் பொதுவான பொறுப்புகளை ஏற்று நடத்திய போது மார் தெயோபிலோஸ்
ஆண்டகையின் பொறுப்பு எதுவாக அமைந்தது?
திருவல்லாவில் புதியதாகத்
தொடங்கிய பெதனி கோவிலை மையப்படுத்தி பெதனி கோவில்களின் பொறுப்புகளையும் கவனித்து
வந்தார்.
60.
ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் தலைமை பின்வாங்கிய போது மறுஒன்றிப்பு
முயற்சிகளுக்கு மார் இவானியோஸோடு இணைந்து நின்றவர்கள் யாவர்?
மார் தெயோபிலோஸ் பெதனி
மடங்களின் துறவியரும், கன்னியர்களும், பெதனி கோவில்களும்.
61.
“எல்லோரும் ஒன்றாவதற்காக" (Ut unnum sint) என்னும் சுற்றுமடலை
எழுதிய திருத்தந்தை யார்?
திருத்தந்தை இரண்டாம் யோவான்
பவுல்
62.
மார் இவானியோஸ் ஆண்டகை வழிகாட்டிய மறுஒன்றிப்புத்
திட்டத்திற்குக் காலதாமதம் ஏற்பட்டதனால் செத்திப்புழா கர்மலீத்தா சபையில் சென்று
கத்தோலிக்க சபையோடு ஒன்றிப்படைந்தவர் யார்?
அருட்தந்தை கீவற்கீஸ்
63.
புனித கொச்சு தெரேசாவின் வீட்டில் மலங்கரை சபையின்
மறுஒன்றிப்புக்காக செபம் தொடங்கப்பட்ட விவரத்தை அறிவித்தவர் யார்?
புனித குழந்தை தெரேசாவின்
சகோதரி ஆக்னஸ்
64.
மார் தெயோபிலோஸ் ஆண்டகையும் தனது ஐரோப்பா
நாடுகளுக்கான பயணத்தின் போது எவ்விடம் சென்று செப உதவி வேண்டினார்?
லிசியூ
65.
திருவல்லாவில் எதற்கா 'மௌன மடம்' ஒன்று நிறுவுவதற்கான
முயற்சிகளை மேதகு ஆயர்கள் மேற்கொண்டார்?
"மறுஒன்றிப்பு இயக்கத்திற்காக
மன்றாடுக"
66.
1898-ல் புராட்டஸ்டன்ட் சபையில் தந்தை பால் பிரான்சிசும், மதர் குரானாவும்
சேர்ந்து நிறுவிய துறவு சபை எது?
"மீட்பின் பிரான்சிஸ்கன்
சமூகம்"
(Franciscan Friars of the Atonement)
67.
சபைகளின் ஒன்றிப்புக்காக மன்றாடவும். செயல்படவும்
செய்வது என்னும் நோக்கத்துடன் 'சபை ஒன்றிப்பு செபவாரம்' எப்போது துவங்கப்பட்டது?
1908-ல்
68.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மறுஒன்றிப்பு
எப்போது நடைபெற்றது?
1930 செப்டம்பர் 20-ல்
69.
திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டு திருவனந்தபுரம்
உயர் மறைமாவட்டத்தையும் திருவல்லாவை மையமாகக்கொண்டு திருவல்லா மறைமாவட்டத்தையும்
கொண்ட மலங்கரை கத்தோலிக்க திருஆட்சி அமைப்பு (Hierarchy) உரோமையிலிருந்து எப்போது
அனுமதிக்கப்பட்டது?
1932 ஜூன் 11-ல்
70.
திருவனந்தபுரத்தின் முதல் பேராயராக நியமிக்கப்பட்டவர்
யார்?
மார் இவானியோஸ்
71.
நிருவல்லாவின் முதல் ஆயராக நியமிக்கப்பட்டவர் யார்?
மார் தியோபிலோஸ்
72.
மலங்கரை கத்தோலிக்க திருச்சபையோடு ஏராளமான
குருக்களும்,
விசுவாசிகளும்
கூட்டம் கூட்டமாக மறுஒன்றிப்படைந்த மற்று திருச்சபையினர் யாவர்?
யாக்கோபாயா, ஆர்த்தடாக்ஸ், மார்தோமா
73.
மறுஒன்றிப்பு முயற்சிகளுக்கு எதிராக மிகவும்
பிடிவாதத்துடன் இருந்த ஆர்த்தடாக்ஸ் சபையின் நிரணம் ஆயர் ஜோசப் மார் செவேரியோஸ் எப்போது
மார் இவானியோஸ் ஆண்டகையிடம் உறுதிமொழி எடுத்துக் கொண்டு மறுஒன்றிப்படைந்தார்?
1937-ல்
74.
ஆயர் ஜோசப் மார் செவேரியோஸ் மறுஒன்றிப்படைந்த பின்னர்
எதன் ஆயராகப் பதவியேற்றார்?
திருவல்லா மறைமாவட்டத்தின்
75.
1939-ல் மலங்கரை கத்தோலிக்க சபையோடு மறுஒன்றிப்படைந்த
க்னானாய யாக்கோபாய சபையின் தலைவர் யார்?
ஆயர் தோமஸ் மார் தியஸ்கோரஸ்
76.
மறுஒன்றிப்பின் சிற்பியாகிய மார் இவானியோஸ் ஆண்டகை எப்போது
இறைவனடி சேர்ந்தார்?
1953 ஜூலை 15-ஆம் நாள்
77.
மார் இவானியோஸ் ஆண்டகையின் உடல் எங்கே அடக்கம்
செய்யப்பட்டிருக்கிறது?
பட்டம் புனித மரியன்னை
பேராலயத்தில்
78.
மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் இரண்டாவது பேராயர் மேதகு
பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் பேராயராக எப்போது பதவியேற்றுக்கொண்டார்?
1955 ஜனவரி 27-ல்
79.
1977-ல் மறுஒன்றிப்படைந்து மலங்கரை கத்தோலிக்க சபையில்
சேர்ந்து கொண்ட தொழியூர் சுதந்திர சபையின் ஆயர் யார்?
பவுலோஸ் மார் பீலக்சினோஸ்
80.
மலபாரில் குடிபெயர்ந்து வாழ்ந்த மலங்கரை
கத்தோலிக்கர்களுக்காக திருவல்லா மறைமாவட்டத்தைப் பிரித்து 1978-ல் எந்த மறைமாவட்டம்
உருவாக்கப்பட்டது?
பத்தேரி மறைமாவட்டம்
81.
பத்தேரி மறைமாவட்டத்தின் முதல் ஆயர் யார்?
மேதகு சிறில் மார் பசேலியோஸ்
82.
1980-ல் மறுஒன்றிப்பின் பொன்விழா எங்கே வைத்து கொண்டாடப்பட்டது?
கோட்டயத்தில்
83.
1986-ல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இந்தியாவுக்கு
வருகை தந்த போது மலங்கரை சபையின் எந்த ஆலயத்தில் அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது?
திருவனந்தபுரம் பட்டம் புனித
மரியன்னை பேராலயம்
84.
மேதகு சக்கரியாஸ் மார் அத்தனாசியோஸ், ஐசக் மார் யூஹானோன்
ஆகிய ஆயர்களுக்குப் பின்னர் திருவல்லா மறைமாவட்டத்தின் தலைமையை வகித்தவர் யார்?
மேதகு கீவர்கீஸ் மார்
திமோத்தியோஸ்
85.
நான்கு பத்தாண்டுகள் வரை சபையை வழிநடத்திய பெனடிக்ட்
மார் கிரிகோரியோஸ் ஆண்டகை எந்நாளில் விண்ணகம் அடைந்தார்?
1994 அக்டோபர் 10-ஆம் நாள்
86.
மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாவது தலைவர்
யார்?
மேதகு சிறில் மார் பசேலியோஸ்
ஆண்டகை
87.
பத்தேரி மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயர் யார்?
மேதகு கீவர்கீஸ் மார்
திவன்னாசியோஸ்
88.
மறுஒன்றிப்பின் தொடக்கக் காலத்திலிருந்தே பேராயர்
மார் இவானியோஸ் ஆண்டகை நற்செய்திப் பணிகளைத் தலைமையேற்று நடத்தியிருந்த திருவிதாங்கூரின்
தெற்குப்பகுதிகள் யாவை?
திருவனந்தபுரம், மற்றும் கன்னியாகுமரி
மாவட்டங்களில்
89.
திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்திலிருந்து பிரிந்து
மார்த்தாண்டம் மறைமாவட்டம் உப்போது உருவாக்கப்பட்டது?
1996-ல்
90.
மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் முதல் ஆயர் யார்?
மேதகு லாறன்ஸ் மார் எப்ரேம்
91.
மலங்கரை கத்தோலிக்க சபைக்கே உரியதான ஒரு உயர்
குருத்துவக்கல்லூரி பட்டத்தில் எப்போது நிறுவப்பட்டது?
1983-ல்
92.
மலங்கரை கத்தோலிக்க சபையின் உயர் குருத்துவக்கல்லூரி எங்குள்ளது?
நாலாஞ்சிறை
93.
2001 ஆகஸ்டு 15-ல் அருட்தந்தை ஐசக் தோட்டுங்கல், ஐசக் மார் கிளீமிஸ்
என்னும் பெயரில் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கான எந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார்?
அப்போஸ்தலிக் விசிற்றேற்றர் (திருத்தூதுவ
சந்திப்பாளர்)
94.
திருவல்லா மறைமாவட்டம் பிரிக்கப்பட்டு மூவாற்றுப்புழை
மறைமாவட்டம் எப்போது உருவாக்கப்பட்டது?
2003-ல்
95.
மூவாற்றுப்புழை மறைமாவட்டத்தின் முதல் ஆயர் யார்?
ஆயர் தோமஸ் மார் கூறிலோஸ்
96.
மலங்கரை சுறியானி கத்தோலிக்க சபை ஆயர் மன்ற அமைப்பைக்
கொண்ட ஒரு உயர் பேராயச் சபையாக எப்போது உயர்த்தப்பட்டது?
2006-ல்
97.
மலங்கரை கத்தோலிக்க சபையின் தலைவரும் தந்தையுமான உயர்
பேராயர் - காதோலிக்கா பாவா ஆக பதவி உயர்வு பெற்ற திருவனந்தபுரம் பேராயர் யார்?
மேதகு சிறில் மார் பசேலியோஸ்
98.
2006-ல் திருவல்லா மறைமாவட்டம் உயர் மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டு
பேராயராகப் பதவி உயர்வு பெற்றவர் யார்?
மேதகு ஐசக் மார் கிளீமிஸ்
ஆண்டகை
99.
2007-ல் திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்தைப் பிரித்து
மாவேலிக்கரை மறைமாவட்டம் அமைக்கப்பட்டு மாவேலிக்கரையின் முதல் ஆயரானவர் யார்?
ஆயர் ஜோசுவா மார்
இக்னாத்தியோஸ்
100.
2007-ல் மோறான் மோர் சிறில் பசேலியோஸ் காதோலிக்கா பாவா
இறையடி சேர்ந்த போது மலங்கரை கத்தோலிக்க சபையின் இரண்டாவது உயர் பேராயர் யார்?
திருவல்லா பேராயர் ஐசக் மார்
கிளீமிஸ்,
பசேலியோஸ்
கிளீமிஸ் என்னும் பெயரில்
101.
மலங்கரை கத்தோலிக்க சபையின் அங்கீகரிக்கப்பட்ட
எல்லைப் பகுதிகளுக்கு வெளியேயுள்ள இந்தியாவின் இறைமக்களுக்கான இறைப்பணிக்காக
அருட்தந்தை சாக்கோ ஏறத்து O.1C என்பவர் ஜேக்கப் மார் பர்ணபாஸ் என்னும் பெயரில் எப்போது
ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்?
2007 பெப்ருவரி 1-ல்
102.
மூவாற்றுப்புழை மறைமாவட்ட ஆயர் தோமஸ் மார் கூறிலோஸ்
பேராயராக உயர்த்தப்பட்டு திருவல்லா உயர் மறைமாவட்டத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டது
எப்போது?
2007-ல்
103.
மார் இவானியோஸ் ஆண்டகை எப்போது இறைஊழியர் என்னும்
புனித பதவிக்கு உயர்த்தப்பட்டார்?
2007-ல்
104.
மூவாற்றுப்புழை மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக
ஆபிரகாம் மார் யூலியோஸ் எப்போது பொறுப்பேற்றுக் கொண்டார்?
2008-ல்
105.
திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்தைப் பிரித்து
பத்தனம்திட்டை மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது எப்போது?
2010-ல்
106.
மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயர் யார்?
யூஹானோன் மார் கிறிஸோஸ்டோம்
107.
பத்தனம்திட்டை மறைமாவட்டத்தின் முதல் ஆயர் யார்?
யூஹானோன் மார் கிறிஸோஸ்டோம்
108.
பத்தேரி மறைமாவட்டத்தைப் பிரித்து கன்னட மொழி
பேசுகின்ற சபை மக்களுக்காகப் புத்தூர் மறைமாவட்டம் எப்போது அமைக்கப்பட்டது?
2010-ல்
109.
புத்தூர் மறைமாவட்ட முதல் ஆயர் யார்?
ஆயர் கீவர்கீஸ் மார்
திவன்னாசியோஸ்
110.
அமெரிக்கா ஐரோப்பா ஆகிய பகுதிகளின் அப்போஸ்தலிக் விசிற்றேற்றர்
ஆக இருந்த ஜோசப் மார் தோமஸ் பத்தேரி மறைமாவட்டத்தின் ஆயராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்து
எப்போது?
2010-ல்
111.
மலங்கரை கத்தோலிக்க மக்களுக்காக அமெரிக்காவை தலைமையிடமாகக்
கொண்டு எக்சார்கேட் தொடங்கப்பட்டு புதிய ஆயராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் யார்?
தோமஸ் மார் எவுசேபியுஸ்
112.
மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயராக மேதகு வின்சென்ட் மார்
பவுலோஸ் ஆண்டகை நியமிக்கப்பட்டது எப்போது?
2010-ல்
113.
2011 செப்டம்பரில் நடைபெற்ற மறுஒன்றிப்பு ஆண்டுவிழாவோடு
இணைத்து பட்டத்தில் செயல்படத் தொடங்கிய திருச்சபை அலுவலகம் எது?
மலங்கரை கத்தோலிக்க சபைச்
செயலகம் (Catholicate
Centre)
114.
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் மலங்கரை
கத்தோலிக்க சபையைப் எவ்வாறு புகழ்ந்தார்?
மிக விரைவில் வளரும் திருச்சபை
பாடம் 10
நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு
(கொரிந்தியர் 9:16)
1.
நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு என்ற
விவிலியப்பகுதி எங்குள்ளது?
1கொரிந்தியர் 9:16
2.
'காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி
வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்ற இறைவார்த்தைப்பகுதி
எங்குள்ளது?
மாற்கு 1:15
3.
இறையாட்சியின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டு தமது
பணிவாழ்வைத் தொடங்கியவர் யார்?
இயேசு மெசியா
4.
நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று இயேசுவை
இடைவிடாமல் வழிநடத்திய உள்ளுணர்வு
எனப்படும் விவிலியப்பகுதி எது?
"நான் மற்ற ஊர்களிலும்
இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான்
அனுப்பப்பட்டிருக்கிறேன்" (லூக்கா 4:43)
5.
தந்தைக் கடவுளின் திருவிருப்பத்தை நிறைவேற்றுவது
என்பதை இயேசு தமது உணவாக கொண்டிருந்தார் என்ற விவிலியப்பகுதி எது?
"என்னை அனுப்பியவரின்
திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு" (யோவான் 4:34).
6.
இயேசு தமது நற்செய்திப் பணியை எதன் வாயிலாக நிறைவு செய்தார்?
துன்பப்பாடுகள், சிலுவை மரணம், உயிர்ப்பு
7.
தந்தைக் கடவுள் மகனாகிய இயேசுவிடம் ஒப்படைத்த
நற்செய்திப் பணியை உயிர்த்த இயேசு தமது சீடர்களிடம் ஒப்படைத்தார், என்பதைக்
குறிப்படும் விவிலியப்பகுதி எது?
"தந்தை என்னை அனுப்பியது போல
நானும் உங்களை அனுப்புகிறேன்' (யோவான் 20:21-23).
8.
உயிர்த்த இயேசு தமது சீடர்களிடம் ஒப்படைத்த
நற்செய்திப்பணி எது?
"நீங்கள் உலகெங்கும் சென்று
படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற்கு 16:15. மத்தேயு 2819).
9.
திருச்சபைக்குக் கிடைத்த அருளும், அழைப்பும், கடமையும் எனப்படுவது
எது?
நற்செய்தி அறிவிக்கும் பணி
10.
கிறிஸ்து
நிறுவிய திருச்சபையின் இயல்பான பணி எனப்படுவது எது?
நற்செய்தி அறிவிக்கும் பணி
11.
“கிறிஸ்தவ சபையின்
முக்கிய கடமையே நற்செய்தி அறிவித்தல்" என்றவர் யார்?
மார் இவானியோஸ்
12.
இ்தியாவில் புனித தோமையார் வாயிலாக நற்செய்தியின்
ஒளியைப்பெற்றுக்கொண்டது எப்போது?
முதல் நூற்றாண்டிலேயே
13.
'நற்செய்திப் பணி (மிஷன்) என்னும் சொல்லுக்கு பொருள்
என்ன?
"கடவுளால் அனுப்பப்படுதல்"
14.
அனுப்பப்படுதலில் (மிஷன்) என்பதனில் அடங்கியு்ள பணிக்கடமை
என்ன?
இயேசு என்னும் மீட்பின்
நற்செய்தி அல்லது இயேசுவில் உருவான இறையாட்சியின் நற்செய்தியை அறிவித்தல்
15.
நற்செய்தித் தூதுரைப்பதற்காகக் கடவுளால்
அனுப்பப்படும் பணிக்கு பெயர் என்ன?
'நற்செய்திப் பணி' (மிஷன்)
16.
நற்செய்தித் தூதுரைப்பதற்காகக் கடவுளால் அனுப்பப்படும்
நபரை எவ்வாறு அழைக்கிறோம்?
'நற்செய்திப் பணியாளர்' (மிஷனரி)
17.
அனுப்பப்படுவதற்கான நோக்கத்தைக் குறிப்பதற்கு
பயன்படுத்தும் சொல் என்ன?
'மிஷன்'
18.
உண்மையில் ஒரே ஒரு நற்செய்திப் பணி எனப்படுவது எது?
மூவொரு கடவுளின் மீட்புப்
பணி
19.
கிறிஸ்து நிறுவிய சபையின் இயல்பான பணி என்பது எது?
நற்செய்தி அறிவிப்பது
20.
மீட்பின் 'அருங்குறியாக' இருப்பதற்கு சபையை
மக்களுக்கிடையே கடவுள் அனுப்பினார். (திருச்சபையின் நற்செய்திப்பணி 1:2).
21.
எனை நிறைவடையச் செய்வதற்காக அவரது திருக்கரங்களின்
கருவிகளாக கடவுள் நமக்கு பிறப்பளித்து உலகிற்கு அனுப்பியிருக்கிறார்?
இறைத்திட்டத்தை
22.
நாம் பிறப்பதிலிருந்தே நற்செய்தி அறிவிப்பாளர்கள்
என்னும் நிலையை குறித்து தெளிவானதொரு கண்ணோட்டம் யாருக்குத் தேவை?
இறைமக்கள்
23.
பிரபஞ்சப் படைப்பில் தொடங்கி இயேசு கிறிஸ்துவின்
வாயிலாக நிறைவடைந்த மூவொரு கடவுளின் மீட்புப் பணி மனித வரலாற்றில்
நிறைவேற்றப்படுகின்ற செயல்முறைக்குப் பெயர் என்ன?
நற்செய்தி அறிவித்தல்
24.
திருத்தந்தை ஆறாம் பவுல் நற்செய்தி அறிவித்தல் பற்றி
எடுத்தியம்புவது என்ன?
"மனித வாழ்வின் அனைத்து
நிலைகளிலும் மீட்பின் நற்செய்தி சென்றடையும்படி செய்யவும் இறைவார்த்தையின்
கவர்ந்து ஈர்க்கும் தாக்கத்தால் மனிதகுலத்தின் உள்ளத்திலிருந்தே மாற்றத்தை
ஏற்படுத்தவும்,
புத்துயிரளிக்கவும்
செய்கின்ற செயல்திறன்தான் நற்செய்தி அறிவித்தல்" (Evangelii Nuntiandi
18. 19)
25.
மூவொரு கடவுளின் மீட்புத் திட்டம் என்பது எது?
மனிதனைத் தன்னுடனேயே
வாழவைத்து வாழ்வின் நிறைவுக்கு அழைத்துச் செல்லவும், மனிதன் வாயிலாகப் பிரபஞ்சம்
முழுவதையும் கடவுளின் அன்பு வளையத்திற்குள்ளாக்கி விடவும் செய்வது என்பதே.
26.
"மீட்பளித்தல் என்னும் - தெய்வீகப் பணியில் பங்கு
பெறுக"
என்ற
உன்னதமும் மேன்மையானதுமான கடமையை நிறைவேற்ற கடவுளின் மீட்புச் செயல்களை நினைவு கூர்ந்து
ஆராதித்து மாட்சிமைப்படுத்தி தீமை நிறைந்த உலகில் கடவுளின் மீட்பின் பிரசன்னமாய்
நிலைத்து நிற்கவும் இடைவிடாமல் முயலவேண்டியவர்கள் யாவர்?
திருச்சபை
27.
புனித இரண்டாம் யோவான் பவுல் திருத்தூதுப் பணியின்
எழுச்சிக்கான புதுயுகத்தை நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டுள்ள
சுற்றுமடல் எது?
Redemptoris Missio
28.
திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் புது
நற்செய்தி அறிவிப்புப் பணியின் இன்றியமையாத் தன்மையைக் குறித்து எடுத்துக்
கூறியுள்ள ஏடுகள் எவை?
“கடவுளின் வார்த்தை" (2010) என்னும் திருத்தூது
மடலிலும்,
2012-ல்
உரோமையில் நடைபெற்ற ஆயர் குழுவின் மைய சிந்தனையும், புது நற்செய்தி அறிவிப்புப்
பணி சார்ந்த (New
Evangelisation for the Transmission of the Christan Fath) வரைவு ஏட்டிலும்,
29.
2010 செப்டம்பர் 1-ல் யாருடைய முயற்சியால் புது
நற்செய்தி அறிவிப்புப்பணிக்கான செயலகம் (The Pontifical Council for
Promoting New Evangelisation) அமைக்கப்பட்டது?
திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்
30.
புது நற்செய்தி அறிவிப்புப்பணி என்றால் என்ன?
திருச்சபையின் நற்செய்தித்
தூதுரைக்கும் பணிக்கெதிரான இன்றைய சவால்களை வெல்லும் வகையில் இயேசு கிறிஸ்துவின்
மீட்புச் செய்தியை வேறுவிதமாகப் பறைசாற்றுவதற்குப் புதுமுறைகளைக் கண்டடைவதற்கான
துணிச்சலை விரும்பித் தேடுதல்
31.
திருச்சபையின் ஆற்றல் முழுவதையும் புது நற்செய்தி
அறிவிப்பிற்காகப் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றவர் யார்?
புனித இரண்டாம் யோவான் பவுல்
32.
புது நற்செய்தி அறிவிப்பு என்பது புதிய செய்தியை
அறிவிப்பதுவா?
இல்லை
33.
நற்செய்தி அறிவிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் நற்செய்தி
அறிவிப்பதன் பெயர் என்ன?
re-evangelisation
34.
புது நற்செய்தி அறிவிப்பு பற்றி 1910-ல் மார் இவானியோஸ்
கூறயது என்ன?
"கிறிஸ்தவ விசுவாசிகளின்
ஆன்மீக வாழ்வுக்கும், நற்செய்திப் பணிக்கும் இடையேயான உறவு மிகவும் உறுதியானதாகும்.
அவ்வாறே நற்செய்திப் பணியில் ஒரு சபைக்குள்ள விருப்பம் சபையின் பக்தியையும்
இறையன்பையும் சார்ந்திருக்கின்றன. இயேசுவின் மீதுள்ள அன்பு மரத்துப்போகவும், உலகில் பாவத்தின்
வலிமை பெருகி வருவதைக் குறித்து உளப்பூர்வமான வருத்தம் ஏற்படாமலிருக்கவும்
செய்கின்ற ஒரு காலம் கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் போது அது ஆன்மீக வீழ்ச்சியாகும்.
சபைக்கு பக்தி குறைந்து போகவும் சபையின் உறுப்பினர்களோடும். பிறரோடும்
கிறிஸ்துவின் வாயிலான மீட்பினை எடுத்துக் கூறுவதில் ஆர்வமில்லாமல் போகவும்
செய்யும் போது அந்த சபைக்கு வீழ்ச்சி ஏற்பட்டுவிடும். ஆன்மீக செயல்பாடுகளில்
ஆர்வமின்றி தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு சபையில் மிகுந்த பக்தியை
ஏற்படுத்திவிடவும் சபையின் மக்களுக்குத் தங்கள் கடமைகளை உணர்த்திக்கொடுக்கவும்
செய்ய வேண்டியது ஆன்மீகத் தலைவர்களின் பொறுப்பாகும். பிறவினத்தாரையும், சமூகங்களையும்
மெசியாவின் ஆட்சிக்கு உட்படுத்துவதற்காக முயலும்போது ஒரு சபைக்கு நாளுக்குநாள்
ஆன்மீக வளர்ச்சியும் சிறப்பும் பெருகிவருவதற்கான வழி ஏற்படும். இறைப்பற்றின்
வாயிலாக நற்செய்திப்பணியாற்றும் ஒரு சபை நற்செய்திப்பணி வாயிலாக மிகுந்த அளவு
பக்தியுடையாதாகவும் அமைகின்றது" (சுறியானி நற்செய்தியாளர். 1910 மே மாத இதழ், மலங்கரை கத்தோலிக்க
சபை பக்கம் 227).
35.
புது நற்செய்தி அறிவிப்புப் பணி என்னும் சொல்லுக்குப்
பதிலாக மார் இவானியோஸ் பயன்படுத்திய சொற்கள் எவை?
ஆன்மீக மறுமலர்ச்சி வாயிலாக
நற்செய்தி அறிவிப்புத் தளத்தில் உருவாக்க வேண்டிய புத்துணர்வு
36.
மறைதூதுரைக்கும் பணியைக் குறித்துள்ள கண்ணோட்டத்தை எவ்வாறு
அழைக்கிறோம்?
நற்செய்தி அறிவிப்புக்
கண்ணோட்டம்.
37.
"விடாமுயற்சியோடு ஆர்வமிக்க உள்ளத்தோடும்
ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்" (உரோமையர் 12:11) என்றவர் யார்?
திருத்தூதர் பவுல்
38.
இறைவார்த்தைகள் யாரைக் கொடுக்கின்றன (யோவான் 12:11)?
வாழ்வுதரும் ஆவியை
39.
மூவொரு கடவுளின் தூதுரைக்கும் பணியல்லாமல் மற்றொரு
பணியும் திருச்சபைக்கு இல்லை. என்பதன் விவிலிய ஆதாரம் என்ன?
“தந்தை என்னை அனுப்பியது போல
நானும் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்" (யோவான் 20:21-23)
40.
உலக மீட்புக்காக தம் ஒரே மகனையே உலகிற்கு அனுப்பிய யார்
தான் நற்செய்திப்பணிக்குரிய உண்மையான உறைவிடம் (யோவான் 3:16-17)?
தந்தையாகிய கடவுள்
41.
தூதுரைக்கும் பணியின் மையம் எனப்படுபவர் யார்?
இயேசு கிறிஸ்து
42.
பொது வாழ்வின் போது தமது வார்த்தைகள் வாயிலாகவும், செயல்கள்
வாயிலாகவும்,
உவமைகள்
வாயிலாகவும்,
அரும்
அடையாளங்கள் வாயிலாகவும் தமது நற்செய்திப் பணியை நிறைவுசெய்தவர் யார்?
இயேசு கிறிஸ்து
43.
இறைத்திட்டம் நிறைவடைவதற்காக தூதுரைக்கும் பணிக்கான
உண்மையான துணையாளரும் செயல்படும் ஆற்றலுமாயிருப்பவர் யார்?
தூய ஆவியார்
44.
யாரை வழங்கிக் கொண்டு இயேசு சீடர்களைத் தங்கள்
திருத்தூதுப்பணிக்காக அனுப்பினார் (யோவா. 20:22)?
தூய ஆவியை
45.
இயேசு கற்பித்ததும், பறைசாற்றியதும், ஒப்படைத்ததுமான
காரியங்களை நிறைவேற்றுவதற்காக யாரை வாக்குறுதி அளித்தார் (யோவா. 14:26)?
துணையாளரான தூய ஆவியை
46.
இயேசு கிறிஸ்து வாயிலாக நிறைவடைந்த மீட்புச்செயலானது
உலகில் இடைவிடாமல் தொடர்வதற்காக எது நிறுவப்பட்டது?
திருச்சபை
47.
கடவுள் தமது மகன் வாயிலாக நிறைவேற்றிய மீட்புச்
செயல்கள் இன்று சபையின் வாயிலாக எது வரையிலும் அதன் நிறைவை நோக்கி முன்னேறிக்
கொண்டிருக்கின்றன?
உலக முடிவுவரை
48.
"நற்செய்தித் தூதுரைக்கும் பணி சபைக்குக் கிடைக்கப்
பெற்ற அருளும்,
அழைப்புமாகும்.
அது சபையின் உறுதியான ஆளுமையை வெளிப்படுத்துகின்றது. திருச்சபை இயங்குவது
நற்செய்தி அறிவிக்கவே." (Evangelhi Nuntiandi 14,60) என்றவர் யார்?
திருத்தந்தை ஆறாம் பவுல்
49.
அனைவருக்கும் நற்செய்தி அறிவிப்பதற்குரிய விவிலிய
ஆதாரச்சோற்கள் எவை?
இயேசு உலகின் மீட்பராவார்
(யோவா. 4:42,
3:16-17). ஆட்டுக்குட்டியாம்
இவரே உலகின் பாவத்தைப்போக்குபவர் (யோவா. 1:29). உலகெங்கும் சென்று
படைப்பிற்கெல்லாம் இயேசுவில் உருவான இறையாட்சியின் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கே
உயிர்த்த இயேசு தமது சீடர்களுக்குக் கட்டளையிட்டார் (மாற்கு. 16:15).
50.
"தூய ஆவி உங்களிடம் வரும் போது நீங்கள் கடவுளது
வல்லமையைப் பெற்று எருசலேமிலும், யூதேயா, சமாரியா முழுவதிலும், உலகின் கடையெல்லை வரைக்கும்
எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்" விவிலியப் பகுதி எங்குள்ளது?
திருத்தூதர் பணிகள் 1: 8
51.
மலங்கரை கத்தோலிக்க சபை முக்கியத்துவம் வழங்கும் நற்செய்தி
அறிவிப்புப் பணி நிலைகள் எவை?
தாய்த்திருச்சபையின்
ஆன்மீகப் புத்துணர்வு, மறுஒன்றிப்பு, பிற மதத்தினரிடையே நற்செய்தி பறைசாற்றுதல்
52.
மலங்கரை சபையின் ஆன்மீகப் புத்துணர்வுக்கான மூன்று
வகை முயற்சிகள் எவை?
1. இறைவார்த்தையைக் கேட்டு
பொருள் புரிந்து, இடைவிடாமல் தியானித்துக் கடவுளையும் அவரது மீட்புச் செயல்களையும்
அறிந்து கொள்வது.
2. அறிந்து கொண்ட கடவுளையும்
அவரது மீட்புச் செயல்களையும் விசுவசித்து அறிக்கையிடவும், ஆராதனையின் வாயிலாகக்
கொண்டாடி அனுபவிப்பது.
3. அனுபவித்தறிந்த கடவுளை
பகிர்ந்து கொண்டு சான்று வாழ்க்கை நடத்துவது.
53.
மலங்கரை கத்தோலிக்க சபையின் ஆன்மீகப் மறுமலர்ச்சியை
உறுதிசெய்யும் வகையில் தேவையான செயல்பாடுகள் எவை?
1. குடும்ப அங்கத்தினர்கள்
ஒன்றுசேர்ந்து குடும்ப செபமும், செபமாலை செபமும் தடையின்றி தினமும் நடத்த வேண்டும்.
2. தனியாகவும், குடும்பமாகவும்
திருவசனத்தைப் படிப்பதற்கும். வாசித்துத் தியானிப்பதற்கும், கருத்துகளைப்
பகிர்ந்து கொள்வதற்கும் முயல வேண்டும்.
3. ஒவ்வொரு மனிதனுடையவும்
சான்றுவாழ்க்கைப் பிறருக்கு நற்செய்தியாக அமையவேண்டும்.
4. ஆராதனையிலும், அருளடையாள
வாழ்விலும் துல்லியமாகப் பங்கேற்பதற்கு உதவியாயிருக்கும்படி தொடர்பயிற்சி பெற
வேண்டும்.
5. திருப்பலியிலும், தூய பாவ
சங்கீர்த்தனத்திலும் நல்ல தயாரிப்போடு பங்கு பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
6. கடவுளோடு நேரடியான ஓர்
ஆன்ம உறவு வைத்துக் கொள்ளவும், சொந்த இதயத்தைத் தூய்மையாக பாதுகாத்து, அதனைக் கடவுள்
வாழ்கின்ற நற்கருணைப் பேழையாக மாற்றிக் கொள்ளவும். எல்லா செயல்களிலும் கடவுளோடு
நல்ல ஆலோசனைக்கு மன்றாடவும், கடவுளோடு எப்போதும் உறவாடுதல் நடத்தவும் வேண்டும்.
7. தொலைக்காட்சி, இணையதளம், கைப்பேசி முதலான
ஊடகங்களின் அளவுகடந்ததும், தேவையற்றதுமான உபயோகத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு
திருவசனக்கலாச்சாரத்தை பின்பற்றிட முயல வேண்டும்.
54.
கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கம் (Ecumenism) என்பது என்ன?
கடவுளின் மறை உடலாகிய சபை
ஒன்றே தான் எனினும் இன்று அது பிளவுபட்ட நிலையிலுள்ளது. சபைகளுக்கிடையேயான
ஒன்றிப்புக்குத் தடையாக உள்ளன. கத்தோலிக்க சபைக்கும், பிரிந்து நிற்கும் சகோதர
சபைகளுக்கு மிடையான ஒன்றிப்பையே கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சி
55.
கிறிஸ்தவ சபை ஒன்றிப்பு கிறிஸ்துவின் விருப்பம்
என்பதன் விவிலியப்பகுதி என்ன?
"அவர்கள் எல்லோரும் ஒன்றாய்
இருப்பார்களாக,
தந்தையே, நீர் என்னுள்ளும்
நான் உம்முள்ளும் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக இதனால் நீரே
என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும் படியாக வேண்டுகிறேன்" (யோவா. 17:21).
56.
மார் இவானியோஸ் ஆண்டகையின் மறுஒன்றிப்புப் பற்றிய
கருத்து என்ன?
“அருளடையாளங்களையும்
திருச்சபையையும் கைவிடுபவர்கள் உண்மையாகவே மெசியாவை ஒதுக்கி விடுவதாகும் என
உணர்ந்து கொள்ளவும் உண்மை விசுவாசத்தோடும், ஆழ்ந்த மனவருந்துதலோடும்
மெசியாவை ஏற்றுக்கொண்டு மறையுடலாகிய திருச்சபையில் இணைந்திருக்க வேண்டும். இவ்வாறு
செய்வதனால் நமக்குத் தனிப்பட்ட முறையிலும் நம்மால் சபை உறுப்பினர்களுக்கு
பொதுவாகவும் சபைக்கும் சமூகத்திற்கும் மட்டுமல்ல, பிற இனத்தாருக்கும் கூட
முன்னதை விட வளமை சேர்ப்பதுமாகும்" (மலங்கரை கத்தோலிக்க சபை பக்கம் 165-166)
57.
மறுஒன்றிப்பா, கிறிஸ்தவ ஒன்றிப்பா எது தேவை(Re-union or
Ecumensism)?
கிறிஸ்தவ ஒன்றிப்பு
செயல்களுக்கு மலங்கரை கத்தோலிக்க சபை எப்போதும் முன்னணியிலுள்ளது. எனினும்
ஒன்றிப்புச் செயல்கள் அதன் இறுதிக் குறிக்கோளான மறுஒன்றிப்புக்கு அழைத்துச் செல்ல
வேண்டும்.
58.
கிறிஸ்தவ ஒன்றிப்பு பற்றி இரண்டாம் வத்திக்கான்
சங்கம் கூறுவது என்ன?
"கிறிஸ்துவின் கத்தோலிக்கத்
திருச்சபை மீட்பு அடைய பொதுவான வழிவகைகளைக் கொண்டுள்ளது. அதன் வழியாக மட்டுமே
மீட்புக்கான வழிமுறைகளை எல்லா வழிவகைகளும் முழுமையை அடைய முடியும்" (கிறிஸ்தவ ஒன்றிப்பு 3)
59.
நமது சபை ஒன்றிப்புச் செயல்களும் மறுஒன்றிப்புப்
பணிகளும் பலன் தரும் வகையில் செயல்படுத்துவதற்காக மறைக்கல்வி மாணவர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய வழிமுறைகள் எவை?
1. சகோதர சபைகளின்
விசுவாசிகளோடு சரியான தொடர்பும் நட்புறவும் ஏற்படுத்திக்கொள்ள சிறுவயது முதலே
முயலவேண்டும்.
2. மறைக்கல்வி மாணவர்கள்
ஏனைய கிறிஸ்தவச் சபையினரின் வீடுகளையும் நோயாளிகளையும் சந்திக்கச் செல்வது
வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
3. மாணவர்களுக்கான நற்செய்தி
விழாக்கள்,
தியானங்கள்
ஆகியவை நடத்திட ஏற்பாடு செய்யவும் அவற்றில் பிற சபையினரை அழைக்கவும் வேண்டும்.
4. பிற சபையினரையும்
சேர்த்து கொண்டுள்ள அன்புறவுச் செயல்பாடுகளுக்கான மன்றங்களை அதிகமாக ஏற்பாடு செய்ய
வேண்டும்.
60.
நற்செய்திப்பறை சாற்றுதலுக்கு மிகச்சிறந்த
எடுத்துக்காட்டாகிய பிறவினத்தாரின் திருத்தூதர் யார்?
புனித பவுல்
61.
திருத்தூதர் பவுலடியாரைப் போன்று ஆர்வம் மிகுந்த ஒரு
நற்செய்தி அறிவிப்புப் பணியாளராயிருந்தார் மறுஒன்றிப்பின் நாயகன் யார்?
மார் இவானியோஸ் ஆண்டகை
62.
நற்செய்தி பறைசாற்ற வேண்டியதன் இன்றியமையாமை என்ன?
1. இயேசுவின் கட்டளையும்
கடவுளின் திருவிருப்பமும்,
2. அனுபவித்தவர்களுக்கு
பகிர்ந்து கொள்ளாமலிருக்க இயலாது,
3. திருச்சபை மற்றும்
இறைமக்களின் கடமை,
4. கடமையை
நிறைவேற்றாவிட்டால் நாம் தண்டனைக்குள்ளாவோம்
63.
'நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” என்ற
திருத்தூதர் பவுலின் இறைவார்த்தைப் பகுதி எங்குள்ளது?
1 கொரி. 9:16
64.
'பாரத பூமியின்
கிறிஸ்தவ விசுவாசமின்மைக்கும் ஆன்மீகமான அதன் ஞானமின்மைக்கும் ஒரு காலத்தில்
மலங்கரை சபை பதில் சொல்ல வேண்டியது வரும்' என்றவர் யார்?
மார் இவானியோஸ்
65.
யாரை அறிவது உலகின் அனைத்து மக்களின் உரிமை ஆகும்?
கிறிஸ்துவை
66.
நற்செய்திப் பறைசாற்றும் பணியை செயல்படுத்த வேண்டிய
பத்து வழிமுறைகள் எவை?
1. கிறிஸ்து அனுபவமும் பறை
சாற்றுதலும்
2. நற்செய்தி அறிவித்தல் தூய
ஆவியின் நிறைவில்
3. நற்செய்தி அறிவிப்பு சான்று
வாழ்வின் வாயிலாக
4. தனிமனித உறவுகளின் வாயிலாக
நற்செய்தி அறிவிப்பு
5. தனிமனித சுதந்திரத்தை
தடைசெய்யா நற்செய்தி அறிவிப்புப் பணி
6. இறைவாக்கினரின் துணிச்சலோடு
நற்செய்தி அறிவித்தல்
7. இயேசுவின் முன்மாதிரியுடன்
8. பிறமதங்களுக்கு
மதிப்பளித்துக் கொண்டு
9. எல்லாரும் பங்கேற்பானரே
10. சமூக சேவைப் பணிகள் வாயிலாக
67.
'கிறிஸ்தவச் சபையின் மிக முக்கியமான கடமை நற்செய்தியை
அறிவிக்கும் பணியாகும்' என்றவர் யார்?
மார் இவானியோஸ்
68.
'நான் யாரை அனுப்புவேன்' என்னும் கடவுளின் கேள்விக்கு
நான் வழங்க வேண்டிய மறுமொழி என்ன?
'ஆண்டவரே! இதோ நான். என்னை
அனுப்பும்'
.jpeg)
Comments
Post a Comment