மறையுரை 23.3.2025 - மத் 15: 21-28 (கானானிய பெண்ணின் மகளை குணப்படுத்தல்)
மறையுரை 23.3.2025 - மத் 15: 21-28 (கானானிய பெண்ணின் மகளை குணப்படுத்தல்) தந்தை மகன் தூய ஆவிக்கு புகழ் உண்டாகுக ஆமீன். தவக்காலத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று ஆண்டவர் கானானிய பெண்ணின் மகளை குணப்படுத்திய நிகழ்வை சிந்தனைக்காக திருஅவை நமக்கு தந்திருக்கின்றது. திருத்தூதர் மத்தேயு 15 ஆம் அதிகாரம் 21 முதல் 28 வரை உள்ள இறைவார்த்தைகளை கேட்போம். 21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர் , சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். 22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து , " ஐயா , தாவிதீன் மகனே , எனக்கு இரங்கும் ; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார். 23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி , " நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே , இவரை அனுப்பிவிடும்" என வேண்டினர். 24 அவரோ மறுமொழியாக , " இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார். 25 ஆனால் அ...