தவக்காலம் 50 நாட்களா? 40 நாட்களா?
தவக்காலம் 50
நாட்களா? 40
நாட்களா?
மலங்கரை கத்தோலிக்க திருஅவையினரின் மரபுப்படி குறிப்பாக கிழக்குத் திருஅவைகளில்
சுபுக்கோனோ திங்கள் முதல் தவக்காலம் அல்லது பெரிய நோன்பு காலம் துவங்குகிறது.
மேற்குத் திருச்சபையினரின் இலத்தீன் கத்தோலிக்க திருவழிபாட்டு மரபின்படி
புதன்கிழமை அதாவது சாம்பல் புதனன்று தவக்காலம் துவங்குகின்றது. சாம்பல் புதனன்று
குருத்தோலை ஞாயிறன்று ஆசீர்வதிக்கப்பட்ட உலர்ந்த ஓலைகளை எரிக்கச் செய்து அதன்
சாம்பலை நோன்பு இருப்பவர்களின் நெற்றியில் சிலுவை அடையாளத்தால் வரையக்கூடிய நிகழ்வு
மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சாம்பல் புதன் முதல் துக்க சனி வரையிலான 40 நாட்களை தவக்காலமாக அனுசரிக்கின்றனர். தவக்காலத்திற்கு
இடையே வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளை தவக்கால ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது சிறு உயிர்ப்புத்
திருநாளாக அனுசரிக்கின்றார்கள். அதாவது உயிர்ப்பு தினத்தைப் போன்று முக்கிய தினமாக
இருப்பதனால் அன்று அவர்கள் நோன்பு அனுசரிப்பதில்லை. அவ்வாறு சாம்பல் புதன் முதல்
துக்க சனி வரையிலான 40 நாட்களை அவர்கள் தவக்காலமாக அனுசரிக்கின்றார்கள்.
மலங்கரை கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்குத் திருஅவையினர் சுறியானி மரபின்படி
சாம்பல் புதனுக்கு முந்தைய திங்கள் கிழமையன்று சுபக்கோனோ என்ற திருச்சடங்குகளுடன்
தவக்காலம் ஆரம்பமாகின்றது. திங்கள் முதல் நாற்பதாம் வெள்ளி வரையிலும் 40 நாட்கள் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்நாட்களுக்கு
இடைப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளும் தவக்கால நாட்களாகவே அனுசரிக்கப்படுகின்றன. நாற்பதாம்
வெள்ளியை தொடர்ந்து வருகின்ற மீதமுள்ள நாட்கள் ஆண்டவரின் திருப்பாடுகளை நினைவு
கூர்ந்து ஜெபிக்கக் கூடிய முக்கிய தியான தினங்களாக அனுசரிக்கப்படுகின்றன. நாற்பதாம்
வெள்ளிக்கு அடுத்த நாள் 41-வது நாள் இலாசரின் சனிக்கிழமை முதல்
துக்க சனி வரையிலும் தீவிர தவக்கால தினங்களாக அனுசரிக்கப்படுகிறது.
அப்படியாயின், சுபுக்கோனோ முதல் நாற்பதாம் வெள்ளி வரை - 40 நாட்கள் + இலாசரின் சனிக்கிழமை முதல் துக்க
சனி வரை 8 நாட்கள் = மொத்தமாக 48 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. பேத்தர்த்தா ஞாயிறு அல்லது கொத்தினே
ஞாயிறு மற்றும் உயிர்ப்புத்திருநாளையும் இணைத்து தவக்காலத்தின் 50 தினங்கள் கணக்கிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment