“பேத்தர்த்தா”
“பேத்தர்த்தா”
“பேத்தர்த்தா” என்பது சுறியானிக் கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவங்குவதற்கு
முந்தைய நாளில் பல்வேறு விதமான அறுசுவை உணவுகளைத் தயாரித்து விருந்துண்டு
மகிழ்ந்திருக்கும் நிகழ்வு ஆகும்.
1. கடந்து செல்லுதல் அல்லது முடிவுறுதல் என அர்த்தம் கொண்ட “ஃபித்தர்”
(ftar) மற்றும் உணவருந்தும் மேசை என
அர்த்தம் கொண்ட “ஃபோத்தூறோ” (fothooro) என்ற
சுறியானிச் சொற்களிலிருந்து தான் பேத்தர்த்தா என்ற சொல் உருவாகியுள்ளது.
2. இச்சொல் முடிந்தது என அர்த்தம் கொண்ட “பேத்ருதா” என்ற சுறியானி
மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகவும் குறிப்பிடப்படுகிறது.
3. பேத்றுதா என்ற சொல்லுக்கு திரும்பிப் பார்த்தல் என்ற
அர்த்தமும் உண்டு. நமது வாழ்வு நிலைகளை திரும்பிப் பார்த்து சுய பரிசோதனைக்கு
உட்படுத்தவும் இறைவனோடு இணைவதற்குரிய ஒரு வாய்ப்பாக பயன்படுத்தக்கூடிய
நாட்களாகவும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
தவக்காலத்தில் நாம் தவிர்க்க வேண்டிய இறைச்சி மற்றும் மீன் போன்ற உணவுப்
பொருட்களை தயாராக்கிய பின்னர் அவற்றை உருவாக்கிய மண் சட்டிகளை உடைத்தெறியும் நிகழ்வும்
நடத்தப்பட்டு வந்தது. நாம் விரும்புகின்ற உணவுப்பொருட்களை ஒறுக்கின்ற அடையாளமாக
இந்நிகழ்வு செய்யப்பட்டு வந்தது.
தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக நிறைவேற்றுவதற்கு நுழைவு வாயிலாக “பேத்தர்த்தா”வைக்
கொண்டாடினார்கள்.
சுறியானிக் கிறிஸ்தவர்கள் தவக்காலங்களில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில்
ஒருமுறை மட்டுமே உணவு உட்கொண்டு தவம் இருந்ததாக கூறப்படுகிறது.
அகில உலக கத்தோலிக்க திருச்சபையில் சாம்பல் புதனன்று தவக்காலம் துவங்குவதாக
இருந்தாலும் மலங்கரை கத்தோலிக்க திருச்சபை மற்றும் சீறோ மலபார் கத்தோலிக்க
திருச்சபை போன்ற கிழக்குத் திருஅவைகளில் சாம்பல் புதனுக்கு முந்தைய
ஞாயிற்றுக்கிழமை முதல் தவக்காலம் ஆரம்பமாகிறது.
Comments
Post a Comment