புனித வெள்ளியின் ஏழு செபப்பகுதிகள் எதைக் குறிக்கின்றன?

 புனித வெள்ளி திருச்சடங்குகள் எதைக் குறிக்கின்றன? 

 ஏழு செபப்பகுதிகளின் அர்த்தங்கள் :


1. காலை மன்றாட்டு  - இயேசு கைது செய்யப்பட்டு தலைமைக்குருவான காய்பாவிடம்  அழைத்துச் செல்லப்பட்டார். (பாடல்களும் செதறாவும் விளக்குகின்றன)

(பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். மத்தேயு  27: 1)



2. மூன்றாம் மணி மன்றாட்டு  - இயேசு பிலாத்துவின் முன்னிலையில் விசாரணை செய்யப்படுகின்றார். (செதறா மன்றாட்டு) 

(அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர். மத்தேயு  27: 2)


3. 1 ஆம் திருச்சடங்கு  - இயேசு சிலுவையோடு கொல்கொத்தா மலை நோக்கி அழைத்துச் செல்லப்படுகின்றார். (சிலுவைப்பாதை - சீயோன் அரணில் நின்றேசு பாடல் - ஊறாறா மாற்றப்படுகிறது) 

(அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். மத்தேயு  27: 28)


4. ஆறாம் மணி மன்றாட்டு - இயேசு  சிலுவையில் அறையப்படுகின்றார். (கோகுல்த்தாவின் சிலுவையில் ஊறாறா மற்றும் மர்வஹாஸா இல்லை)  

(அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர். மத்தேயு  27: 31)


5. ஒன்பதாம் மணி மன்றாட்டு - இயேசுவின் இறப்பு  (மெழுகுவர்த்திகள் அணைக்கப்படுகின்றன) 

திருடர்களின் உரையாடல் பாடல் குறிப்பிடத்தக்கது - புனித வார செப முறை பக்கம் - 361

(அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள். நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மத்தேயு  27: 44, 45)


6. 2 ஆம் திருச்சடங்கு  - மரியாவின் மடியில் கிடத்தப்பட்ட  இயேசுவின் உடலுக்கு பிரியாவிடை செலுத்துதல் (சிலுவை முத்தம்)

(விவிலிய அடிப்படை இல்லை என்றாலும் மருகள் நம்புகின்றன. பியாத்தா என்ற கலைவடிவம் சிறந்த எடுத்துக்காட்டு)




7. 3 ஆம் திருச்சடங்கு - அரிமத்தியாவின் யோசேப்பும் நிக்கோதேமும்  இயேசுவின் உடலை அடக்கம் செய்தல் (திரையிட்ட பின்னர் மறைவான அடக்கத் திருச்சடங்கு 

(யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். மத்தேயு  27: 59, 60)





Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை