ஈஸ்டர் முட்டையா!

 

ஈஸ்டர் முட்டையா!



1.        ஈஸ்டர் தினத்தன்று திருப்பலிக்குப் பின்னர் ஈஸ்டர் முட்டை வழங்கப்படுகிறது.

2.        முட்டையினுள் உயிரின் அடையாளமான கரு அடங்கி இருப்பது உயிரின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன் உயிர்ப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது

3.        ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியோடு பழமொழிகளும் நல்வார்த்தைகளும் எழுதப்படுகின்றன.  

4.        பல நிறங்களில் வண்ணம் தீட்டப்பட்டு ஈஸ்டர் முட்டை தயாரிக்கப்படுகின்றன.

5.        ஆப்பிரிக்க நாடுகளில் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நெருப்புக் கோழியின் முட்டையின் ஓடுகளில் அலங்காரம் செய்யும் வழக்கம் இருந்து வந்தது.

6.        அலங்கரிக்கப்பட்ட நெருப்புக் கோழியின் முட்டை அரச நிலையையும் குறிக்கிறது.

7.        மெசப்பட்டோமிய கலாச்சாரத்தில் நெருப்புக் கோழியின் முட்டைகள் தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தால் அலங்கரித்து கல்லறைகளில் நிறுவுகின்றனர்.

8.        மேசபட்டோமியாவின் (இன்றைய ஈராக்கை சுற்றிய பகுதி) கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் தான் ஈஸ்டர் முட்டை மரபை துவங்கி வைத்தனர்.

9.        மெசபட்டோமியாவின் கிறிஸ்தவர்கள் முட்டைகளுக்கு வண்ணம் தீட்டும் முறையை துவங்கினர்.

10.   ஆண்டவர் இயேசுவின் சிலுவை மரணம் வழியாக வெளியான இரத்தத்தை குறிக்கும் சிவப்பு நிற முட்டைகள் தயாரிக்கப்பட்டன.

11.   வசந்த காலத்தில் ஈஸ்டர் முட்டைகளை அலங்கரித்து வழங்குகின்ற மரபு ஈஸ்டர் தினத்தன்று கொடுப்பதாக மாறியது.

12.   பின்னர் ஆசிய நாடுகளில் கிழக்கு திருச்சபையின் ஆர்த்தடோக்ஸ் ஆலயங்களிலும் இந்த மரபு கடைபிடிக்கப்பட்டது.

13.   பிரம்மாண்டமான ஈஸ்டர் முட்டைகள் பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டு வீதிகளில் தெருக்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

14.   ஈஸ்டர் முட்டையைப் பற்றி ஒவ்வொரு நாட்டிலும் பலவிதமான கதைகள் உள்ளன

15.   ஈஸ்டர் பன்னி எனப்படும் முயல்கள் ஈஸ்டர் முட்டை கொண்டு வருவதாக கதைகள் உள்ளன.

16.   ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் அரிசி மற்றும் இனிப்பு வகைகளால் முட்டை வடிவம் தயாரிக்கப்பட்டு வந்தது.

17.   ஈஸ்டர் தினத்தன்று முட்டைகளை தோட்டங்களில் மறைத்து வைத்து கண்டுபிடிக்கும் விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன.  

18.   கோழி அல்லது வாத்து போன்றவற்றின் முட்டைகளில் வண்ணம் பூசி வாழ்த்து செய்திகள் எழுதுவதே மரபு ரீதியாகவே கடைபிடிக்கப்பட்டு வந்தது.

19.   தற்போது பிளாஸ்டிக் போன்ற மற்றும் பொருள்களில் முட்டை வடிவம் தயாரிக்கப்பட்டு இனிப்பு பொருட்கள் நிறைக்கப்பட்டு வருகிறது.

20.   ஐரோப்பாவில் ஈஸ்டர் காலங்களில் சந்தைகளில் ஈஸ்டர் முட்டை பல வண்ணங்களில் பல விதங்களில் பரிசு பொருளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

21.   ஈஸ்டர் முட்டையில் ஆலயத்திற்கு செல்வதற்கான க்யூ ஆர் கோடு பதித்து பரிசாக வழங்கப்பட்டது.

 

https://youtu.be/5Ur2DKK9TPQ?si=JfMoA_aHuoS5l5gJ

https://www.youtube.com/watch?v=DiwzYdQjEsg

https://en.wikipedia.org/wiki/Easter_egg

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை