மலங்கரையின் சொல்லகராதி (நூற்பித்தவர் - அருட்தந்தை மரிய ஜாண் நடைக்காவு)

 

மலங்கரையின் சொல்லகராதி

1.        ஃபீரோ (Pheero) = ஆர்த்தடோக்ஸ் குருக்கள் அணியும் மண்டைத் தொப்பி




2.        ஃபைனோ (phayno) =  காப்பா

3.        அக்கல்தாமா (Akkaldhāmā) = இரத்த நிலம்

4.        அடிம வய்க்கல் (adima vaykkal) =  ஒருவரை கடவுளுக்கு காணிக்கையாக்குதல்

5.        அத்தனாசியோஸ்  (Aththaṉāsiyōs) = இறப்பில்லாதவன் 

6.        அப் இப்ஸோ சாங்டோ தோமா  (Ab ipso sankto Thoma) = 2005 பெப்ருவரி 10 ல் உயர் பேராயத்திருச்சபையாக தரமுயர்த்தப்பட்ட திருத்தந்தையின் ஆணை

7.        அப்போஸ்தலிக் சிஞ்ஞத்தூரா (Apostholic Signathura) =  திரு அவையின் உச்ச நீதிமன்றம்

8.        அம்சவடி (amsavadi) =  ஆயரின் அதிகாரச் செங்கோல்

9.        அர்க்கதியாக்கோன் (Arkadhiyakkon) = ஆர்ச்சு டீக்கன், தலைமைத் திருத்தொண்டர்

10.   அழிக்ககம் (Azhikkakam) = தூயகத்திற்கும் ஹைக்கலாவுக்கும் இடையிலுள்ள பாடகர் குழுவினர் நிற்கும் பகுதி

11.   அனம்னேசிஸ் (Aamṉēcis) =  நற்கருணை நிறுவனக் கட்டளை நினைவு, நினைவுக் கூற்று

12.   அனாஃபொறா (Aṉāḥphoṟā) = நற்கருணை மன்றாட்டு

13.   அனின் மொற்யோ (ai moiyō)  ஆண்டவரே எனக்கு பதிலளித்தருளும்.

14.   அனின் மொற்யோ ஹுஸ் எஸ்றாஹாம் அலைன்  (ai moiyō hus esṟāhām alai) =  ஆண்டவரே எனக்கு பதிலளித்து தயை கூர்ந்து எங்கள் மேல் இரக்கமாயிரும்.

15.   அனைத்து தமிழ் மற்றும் மலையாள  மொழிகளில் உள்ள மலங்கரை கத்தோலிக்கத் திருவழிபாட்டு நூல்கள்.

16.   ஆதாரம் (ādhāram) =  நில ஆவணம்

17.   ஆத் எக்ஸ்பெரிமென்றும் (ad experimenthum) =  ஆய்வின் படியாக

18.   ஆத் கௌஸம்  (ad causam) =  காரணத்திற்காக

19.   ஆத்ம ஸ்திதி (athma sthithi) =  ஆன்மீக நிலை

20.   ஆத்ய ஃபலம் (ādhya phalam) =  முதற்பலன்

21.   ஆத்ய குர்பானா  (ādhya kurbana) = முதல் நற்கருணை திருவிருந்து பெற்றுக்கொள்ளும் தினம்

22.   ஆபூன் (Ābūṉ) = எங்கள் தந்தை

23.   ஆபூன் த் பஸ்மாயோ(āpūṉ th bamāyō)  = பரலோகத்திருக்கிற எங்கள் பிதாவே

24.   ஆபோ (Ābō) = தந்தை

25.   ஆமென் (Āme) = அப்படியே ஆகட்டும்

26.   ஆர்ச்சு டீக்கன் (ārchdeacon) = தலைமைத் திருத்தொண்டர். முற்காலத்தில் தோமா கிறிஸ்தவர்களிடையே இருந்த குருக்களின் பதவி

27.   ஆர்ச்சு பிஷப் = பேராயர்

28.   ஆர்டர் ஆஃப் இமிட்டேஷன் ஆஃப் க்றைஸ்ட் (Order of Imitation of Christ) = கிறிஸ்துவை பின்பற்றுவோரின் சபை, மலங்கரை திருச்சபையில் உருவான ஆண்களுக்கான துறவற சமூகம்

29.   ஆர்த்தடோக்ஸ் = கத்தோலிக்க ஒன்றிப்பில் இல்லாத கிழக்குத் திருச்சபையினர்

30.   ஆலோஹோ (Ālōhō) = ஆண்டவர்

31.   ஆலோஹோன் பாறெக் (ālōhōṉ bāṟek)  =   ஆண்டவர் உன்னை ஆசீர்வதிக்கட்டும்

32.   ஆல்ப் (Ālb) = திருவழிபாட்டின் போது மெல்லிய மேலாடை, வெள்ளை நிற வலை அங்கி

33.   ஆனிதே (Āṉidhe)  = இறந்த விசுவாசிகளின் நினைவு

34.   ஆஹாய் (Āhāayi) = சகோதரரே

35.   இடவக கம்மிற்றி (idavaka committee) =  பங்கு செயற்குழு

36.   இடவக பெருநாள் (idavaka perunnal) =  ஆலயத் திருநாள்

37.   இடவக பொதுயோகம் (idaavaka pothhuyogam) =  பங்கின் பொதுக்குழு

38.   இம்பிரிமாத்தூர் (Imprimathur) =திருவழிபாட்டு புத்தகங்கள் வெளியிட ஆயரின் அனுமதி விளிச்சு சொல்லு (Vilichu chollu) = திருமணத்திற்கு முன் ஆலயத்தில் மும்முறை அறிவிப்பு

39.   இம்மானுவேல் (Im'māṉuvēl) = கடவுள் நம்மோடு

40.   இவானியோஸ்  (Ivāṉiyōs) = இறையருள் உள்ளவன்

41.   ஈசோப்பு (Īsōppu) =  தண்ணீர் தெளிக்க பயன்படுத்தும் இலைக் கொத்து

42.   ஈறே மாலாக்கா (Īṟē mālākkā) = விழிப்புடன் செயல்படும் வானதூதர்

43.   ஈறையர் (Īṟaiyar) = விழித்திருக்கும் வானதூதர்

44.   ஈஸ்டேர்ண் சர்ச்சஸ் (Eastern Churches) = கிழக்குத் திருச்சபைகள்

45.   உபதேசி (Upathesi) = ஆலயத் திருநிகழ்வுகளில் பங்குத்தந்தைக்கு உதவுபவர். ஆலயத்தின் உள்துறை கவனிப்பாளர். 

46.   ஊறாறா (Ūṟāṟā) = திருவழிபாட்டின் போது குருவானவர் அணியும் முன்புறம் நீண்ட தோள்துகில்

47.   ஊனீஸோ (Ūṉīsō) = ஒன்றைக் குறித்து ஏக்கமுற்றுப் பாடும் ஏங்கல்விருத்தம்

48.   எஃப்ரேம்  (Ephrēm) = தூய ஆவியின் வீணை

49.   எக்காறா (Ekkāṟā) =  பாடல்களின் மெட்டு அமைப்பு

50.   எக்போ (Ekbō) =  பாடல்களின் சீர்வரிசை

51.   எத்றோ (Ethhṟō) = தூப சமர்ப்பணம் செய்யும் போதான பிரார்த்தனை, தூப மன்றாட்டு

52.   எப்பாத்தா (Eppāththā) = திறக்கப்படு

53.   எப்பிக்கிளேசிஸ் (Eppikkiḷēcis) =  தூய ஆவியை அழைத்து மன்றாட்டு

54.   எப்பிப்ஃபானியோஸ்  (Eppipphāṉiyōs) = ஒளிரச் செய்பவன்

55.   எப்பிஸ்கோப்பா (Eppiskōppā) = ஆயர்

56.   எவுசேபியுஸ்  (Evucēpiyus) = இறை பக்தியுள்ளவன்

57.   எழுத்து மாற்றம் (ezhuthhu māttam) = நிச்சயதார்த்தம்

58.   எனியோனோ (Eiyōṉō) = இறைவனின் கொடைகளை எண்ணிப் பாடும் தியானப் பாடல்

59.   எஸ்ஃபூஹோ (espūhō) =  திருப்பாத்திரங்களை தூய்மைப்படுத்த பயண்படும் வெள்ளைத்துணி

60.   எஸ்கீமோ (eskimo) = மஸ்னப்ஸா, ஆயர்கள் அணியும் பதிமூன்று சிலுவை அடையாளமுள்ள துணியாலான தலைச்சீரா

61.   ஏமோ (Ēmō) = அம்மா

62.   ஏவன்கேலியோன் (ēvagēliyōṉ) = நற்செய்தி நூல்

63.   ஏனோ அப்தோ ம்ஹீலோ உஹாத்தோயோ ஏனே வீமார் (Ēṉō apdhō mhīlō uhāttōyō ēṉē vīmār) பலவீனனும் பாவியுமாகிய இவ்வடியேன் அறிக்கையிடுகின்றேன்.

64.   ஐக்கன் (aikka) =  நிழற்படங்கள்

65.   ஒஸ்ஸர்வாத்தோர் றொமானோ (L'Osservatore Romano) = வத்திக்கானின் தொடர்பு இதழ்

66.   ஓறியன்றல் சர்ச்சஸ் (Oriental Churches) = கிழக்குத் திருச்சபைகள்

67.   கத்தீட்ரல் (Cathedral) = பேராலயம்

68.   கந்தீலோ (Kandiēlo) = ஐந்து திரிகள் என்பது பொருள். குருக்களுக்கு வழங்கப்படும் நோயில் பூசுதல்

69.   கப்லானா (kablāṉā) = திருப்பாத்திர மூடி

70.   கம்யூனியன் பிளேட் (Kamyūṉiya piḷēṭ) =  நற்கருணை வழங்கும் போது கீழே விழாதிருக்க பயன்படுத்தும் பாத்திரம்.

71.   கர்போ ஞாயிறு (Karbōāyiu) = தொழுநோயாளரை குணமாக்கிய நிகழ்வை நினைவுபடுத்தும் ஞாயிறு

72.   காசா (kāsā) = இரசக்கிண்ணம்

73.   காசீசோ (Kasīsō) = குருவானவர்

74.   காதீஸ் (Kāthīes) = பரிசுத்தன்

75.   காதீஸ் ஆத் ஆலோஹோ (kāthīṣ āth ālōhō)  = இறைவா நீர் தூயவரே

76.   காதீஸ் ஆத் த்லோமோ யூஸோ(kāthīṣ āth dhlōmō yūsō)  = சாவிலர் நீர் தூயவரே

77.   காதீஸ் ஆத் ஹயல்ஸோனோ (kāthīṣ āth hayalsōṉō) = வல்லவர் நீர் தூயவரே

78.   காதீஸ் ஆபோ காதீஸோ (kāthīṣ āpō kāthīṣō) = தூயவரான தந்தை தூயவரே

79.   காதீஸ் ப்றோ காதீஸோ (kāthīṣ bṟō kāthīṣō) = தூயவரான மகன் தூயவரே

80.   காதீஸ் றூஹோ ஹாயோ காதீஸோ (kāthīṣ ṟūhō hāyō kāthīṣō)  = வாழ்வருளும் தூய ஆவியார் தூயவரே

81.   காதோலிக்கா பாவா (Kāthōlikkā bāvā) = உயர் பேராயர் (பேருயர் பேராயர்)

82.   காதோலிக்கோஸ் (Kāthōlikkōs) = உயர் பேராயர் என்ற பதவிக்கு கிழக்கு மரபுத் திருச்சபையினர் பயன்படுத்தும் சொல்

83.   காத்திருப்புக் காலம் (kāththiruppukālam) =  பெந்தக்கோஸ்து திருநாளிற்கு பின்வரும் பத்து நாட்கள்

84.   காப்பா (Kāppā) = திருவழிபாட்டின் போது பயன்படுத்தும் குருக்களின் பெரிய மேலாடை

85.   கிரிகோரியோஸ்  (Girigōriyōs) = விழிப்பாயிருப்பவன்

86.   கிறிஸோஸ்டம் (Kisōsam) = தங்க நாவுடையவர்

87.   கிறிஸ்தோ பாஸ்ற்றோரும் ப்றின்சிப்பி (Christho Pasthorum Principi) = 1932 ஜூன் 11 ல் மலங்கரை கத்தோலிக்க ஆட்சி அமைப்பு உருவாக்க திருத்தூதுவ ஆவணம்

88.   கினானொய்த்தோ ஞாயிறு (Kiṉāṉoyththōāyiu)  = கானானியப் பெண்ணின் மகளை குணமாக்கிய நிகழ்வை நினைவுபடுத்தும் ஞாயிறு

89.   குக்கிலியோன் (Kukkiliyōṉ) = திருப்பாடல்களாலான எண்வகை பண்களில் பாடப்படும் பாடல்கள்

90.   குடும்ப காரணவன்மார் (kudumba kāranavanmār) = குடும்பத் தலைவர்

91.   குதிஸ் குதிஸ் (Kuthis kuthis) = பலிபீடத்தை அலங்கரிக்கும் கூடாரம்

92.   குத்தீனோ (Kuththhīṉō = மெல்லிய மேலாடை, வெள்ளை நிற வலை அங்கி

93.   குரிசடி (kurisadi) =  Shrine. குருசடி

94.   குரு (guru) =  ஆசிரியர்

95.   குர்போனோ (Kurpōṉō) = காணிக்கை செலுத்துதல், பலி செலுத்துதல்

96.   குர்போனோ (Qurbono) =  திவ்ய நற்கருணை அருளடையாளம்

97.   குறியேலாயிசோன் (kuiyēlāyisōṉ)   = ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்.

98.   குஸ்தோதி (kusthōthi) =  நற்கருணை பாதுகாக்கப்படும் மூடியுள்ள மூடியுள்ள கிண்ணம்

99.   கூக்கோயோ (Kūkkōyō) = குயவன் பாடலுக்கு இணையான பாடல் வடிவம்

100.                             கூதோஷ் ஈத்தோ ஞாயிறு (Kūthōṣ Īeththhōāyiu)  = திருச்சபையை புனிதப்படுத்துதல் ஞாயிறு

101.                             கூபௌனோ (kubauno) = பதிமூன்று சிலுவைகளால் அலங்கரிக்கப்பட்டவாறு ரம்பான்மார்கள் அல்லது துறவியர் பயன்படுத்தும் தலைச்சீரா

102.                             கூலோஸோ (Kūlōsō)  = இறையன்னையின் புகழ்ச்சித் திருநாள்

103.                             கூறிலோஸ்  (Kūṟilōs) = ஆண்டவர் அருள்கூர்ந்தவன்

104.                             கூனன் குரிசு (koonan kurisu) = வளைந்த சிலுவை

105.                             கெடாவிளக்கு (kedā vilaku) =  அணையா விளக்கு

106.                             கெத்தானா (keththāṉā) =  திருப்பீடத்தில் விரிக்கப்படும் பெரிய வெள்ளைத் துணி

107.                             கெஸ்த்றூமா (Kesthṟūmā) = தூயகத்திற்கும் ஹைக்கலாவுக்கும் இடையிலுள்ள பாடகர் குழுவினர் நிற்கும் பகுதி

108.                             கைக்காரன் (kaikkāran) =  பொருளர்

109.                             கைமுத்து (kai-muthu) =  திருப்பலிக்குப் பின்னர் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் ஆசீர்

110.                             கொத்தினே ஞாயிறு (Koththiṉēāyiu)  = தண்ணீரை திராட்சை இரசமாக்கிய நிகழ்வை நினைவுபடுத்தும் ஞாயிறு

111.                             கொஹனைத்தா (Kohaaīththā) =  குருக்களுக்கான இறுதிச்சடங்குமுறை

112.                             கொஹனோ (Kohaṉō) = குருவானவர்

113.                             கொஹனோ ஞாயிறு (Kohaṉō āyiu)  = இறந்த குருக்களுக்கான நினைவு ஞாயிறு

114.                             கோகுல்த்தா (Gōgulththā) = மண்டையோடு எனப்படும் இடம், தவக்காலத்தில் திருச்சிலுவை நிறுவப்படும் பீடம்

115.                             கோமூறோ (Kōmūṟō) = திருப்பீடத்தில் பயன்படும் திருக்கரண்டியின் மெத்தை

116.                             கோர் எப்பிஸ்கோப்பா (Kōr - eppiskōppā) = கிராமத்து ஆயர், நற்பணிகளுக்காக குருக்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம். ஆயர்ப்பட்டத்திற்கு இணையானதல்ல.

117.                             கோலோ (Kōlō) = நின்றுகொண்டு செய்யும் பிரார்த்தனை அல்லது பாடல்

118.                             கோறூசூசோ (Kōṟūcūcō) =  புறுமியோனுக்கு முன் நாம் அனைவரும் மன்றாடி என்னும் செபம்

119.                             கோறூயோ (Kōṟūyō) = வாசகர்

120.                             கௌமோ (Qawmo) = தொடக்க மன்றாட்டு

121.                             க்பிப்தோ ஞாயிறு (Kpipthōāyiu)  = கூன் விழுந்த பெண்ணை குணமாக்கிய நிகழ்வை நினைவுபடுத்தும் ஞாயிறு

122.                             க்யம்தோ (Kyamthō)  = இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புத் திருநாள்

123.                             சக்றாரி (Sakṟāri) = நற்கருணை பேழை

124.                             சங்கீஞ்ஞு Sakīñjñju) =  திருப்பாத்திரங்களை தூய்மைப்படுத்தும் வெள்ளைத்துணி

125.                             சமியோ ஞாயிறு  (Samiyōāyiu)  =  பார்வையற்றவருக்கு பார்வை வழங்கிய நிகழ்வை நினைவுபடுத்தும் ஞாயிறு

126.                             சன்னியாஸ (sanāyāsā) = துறவறம்

127.                             சன்னியாஸ பிரதிஷ்ட (sanāyāsā prathishtha) =  துறவு சமர்ப்பணம்

128.                             சஹதா (Sahathā) = இரத்த சாட்சி

129.                             சாக்ரிஸ்றி (Sākrisi) =  ஆயத்த அறை, தயாரிப்பு அறை

130.                             சாபத்து (Sābaththu)  = ஒய்வு நாள்

131.                             சாப்பல் (Chapel) = சிற்றாலயம்

132.                             சினகோஹ் (Siakōh) = தொழுகைக் கூடம்

133.                             சிஸ்டேர்ஸ் ஆஃப் த இமிட்டேஷன் ஆஃப் க்றைஸ்ட் (Sisters of the Imitation of Christ)= கிறிஸ்துவை பின்பற்றும் சகோதரிகள் சபை, மலங்கரை திருச்சபையில் உருவான பெண்களுக்கான துறவற சமூகம்

134.                             சீலமுடி (Sheelamudi) = திருவழிபாட்டில் ஆயர்கள் தலையின் பின்புறம் விரிந்து நீண்டவாறு அணியும் துகில். (மஸ்னப்தோ எனவும் ஒரு சாரார் பொருள்கொள்வர்)  

135.                             சுபஹோ லாபோ லபறோ வல றூஹோ காதீஸோ (Subahō lāpō lapaṟō vala ṟūhō kāthīṣō) = தந்தை மகன் தூய ஆவிக்குப் புகழ்.

136.                             சுபஹோ -லோ-க் போறூ-யோ...(subahō -lō-k bōṟū-yō...) = படைத்தவரே- புகழுமக்கா-மே

137.                             சுபஹோ லோக் மோறான் (Supahō lōk mōṟāṉ) = ஆண்டவருக்கு மகிமை

138.                             சுபஹோ வீக்கோறோ உஸெகுத்தோ உறாபூஸ்யோயூஸோ நெஸ்த்வேது னாசேக் லாபோ லப்றோ வல் றூஹோ கா-தீசோ (Subahō vīkkōṟō usekuththō uṟāpūsyōyūsō nesthvēthu ṉācēk lāpō lapṟō val ṟūhō kā-thīcō) = தந்தை மகன் தூய ஆவிக்கு புகழ்ச்சியும் மகிமையும் ஆராதனையும் செலுத்த நாங்கள் தகுதி பெறுவோமாக.

139.                             சுபுக்கோனோ (Subukkōṉō)  = தவக்காலத்தின் தொடக்க நாளில் மனம் வருந்துதல் திருச்சடங்கு

140.                             சுஸ்ரூஷகர் (Surūṣhakar) = தூயகப்பணியாளர்

141.                             சூகீஸோ (Sūkīsō) = ஈரடிகளாலான கண்ணிவகைப் பாடல்கள்.

142.                             சூத்தோறோ  (Sūththōṟō) = துயிலுக்கு முன் மன்றாட்டு

143.                             சூபோறோ  (Sūbōṟō)  = மங்கள வார்த்தை திருநாள், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்புத் திருநாள்

144.                             சூமோறோ (Sūmōṟō) = திருமுகங்கள் வாசிப்பதற்குமுன் பாடப்படும் திருப்பாடல் வடிவம்

145.                             சூலோக்கோ (Sūlōkkō)  = இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்றத் திருநாள்

146.                             சூனோயோ  (Sūṉōyō)  = இறை அன்னையின் விண்ணேற்புத் திருநாள்

147.                             சூனோறோ (Sūṉōṟō) = இடைக்கச்சை

148.                             செதறா (Sethaṟā) = இறையியல் கருத்துக்கள் அடங்கிய  நீண்ட நெடிய பிரார்த்தனை வடிவம் (வரிசையான)

149.                             செம்மாசன் (Sem'māsa) = திருத்தொண்டர்

150.                             சேத் ஸோஈன் (Sēth sō'īṉ) = நண்பகல் மன்றாட்டு 

151.                             சேவேறியோஸ்  (Sēvēṟiyōs) = சீராகச் செய்பவன்

152.                             சைத்து (saithh) = ஆசீர்வதிக்கப்பட்ட ஒலிவ எண்ணெய்

153.                             சைத்து (Saiththu) = திருப்பொழிவு எண்ணெய்

154.                             சைனோ (Saiṉō) = சாந்தி

155.                             சோசப்பா (Sōsappā) = புனிதப்பொருட்கள் மேல் மூடப் பயன்படும் மென்துகில்

156.                             சௌமோ றாபோ (Saumo Rabo) =  பெரிய தவக்காலம்

157.                             டாட்டேழ்ஸ் ஆஃப் மேரி (Daughters of Mary) = மரியாவின் புதல்வியர் சபை, மேரிமக்கள் கன்னியர் சபை, மலங்கரை திருச்சபையில் உருவான பெண்களுக்கான துறவற சமூகம்

158.                             டியாக்கோனியா (diakonia) = திருச்சபையின் சேவைகள் அல்லது பணிகள்

159.                             தக்குஷெப்தோ (Thakkuepthō) = இறப்பின் கசந்தநிலையை நளினமாகச் சொல்லும் ஆசந்திவிருத்தம்.

160.                             தக்ஸா (thaksā) =  திருப்பலிக்கு குருவானவர் பயன்படுத்தும் நூல்

161.                             தப்லீத்தா  (Thablīththā) = சிறிய பலிபீடம் எனப்படும் அர்ச்சிக்கப்பட்ட மரப்பலகை அல்லது கல்

162.                             தயறா (dhayara) =  துறவற ஆசிரமம்

163.                             தயறாயாகார் (Dhayaṟāyākaar) = துறவியர்

164.                             தர்கா (Thargā) = பலிபீடத்திற்கு முன்னாலுள்ள திருப்படி

165.                             தர்வோதோ (tharvōthō) = திருப்பீடத்தில் பயன்படும் சிறு கரண்டி

166.                             தனஹோ (Dhaahō)  = இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்குத் திருநாள்

167.                             தஸ்பெஸ்தா (thaspesthā) = விரிக்கூட்டம்

168.                             திமோத்தியோஸ் (Thimōththiyōs) = இறைவனை ஆராதிப்பவன்

169.                             தியோபிலோஸ்  (Thiyōphilōs) = இறையன்பன்

170.                             திவன்னாசியோஸ்  (Thivaṉṉāciyōs) = கதிரவன்

171.                             துக்றோனோ  (Dhukṟōṉō = நினைவுத் திருநாள் (தூய தோமையாரின் நினைவுத் திருநாள்)

172.                             துணை நின்றவை

173.                             துப்தேன் (Thhupdhēṉ) = பரிந்துரை மன்றாட்டுகள்

174.                             தூக்காஸா (Thūkkāsā) = மலங்கரை கத்தோலிக்க திருவழிபாட்டு செய்முறைகளின் தொகுப்பு

175.                             தூயோபோ (Thūyōpō) = மறைவான இரகசியத் திருச்சடங்கு

176.                             தெய்வதாஸன் (daivadāsan) = இறையூழியர்

177.                             தெரட்டு (Theratttu) = வருடக்கணக்கு, ஆண்டுக் கணக்கு

178.                             தெஸுபுகத்தோ லீக்கோறோ (Thesu-pukaththō līkkōṟō) =  உள்ளியல்பில் சரிநிகராயிருக்கின்ற

179.                             தெஸ்த் லெப்த்து ஹலோப்பாயின் எஸ்றாஹாம் அலைன் (thesth lepththu halōppāyi esṟāhām alai) = எங்களுக்காக சிலுவையில் அறையுண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்.

180.                             தேசக்குறி (desakuri) = திருமணம் நடத்த பங்குத்தந்தை பெற்றுக்கொள்ளும் தடையில்லாச் சான்றிதழ்

181.                             தேஜஸ்கரணம் (Thejaskaranam) = இயேசு கிறிஸ்துவின் உருமாறுதல் திருநாள், இயேசு கிறிஸ்து மகிமையடைதல்

182.                             த்சோ ஸோஈன் (dhsō sō'īṉ) = பிற்பகல் மன்றாட்டு 

183.                             த்மோ (Dhmō) = இரத்தம்

184.                             த்ரிசாகியோன் (Thrisākiyōṉ) =  தம திரித்துவ கீர்த்தனை

185.                             த்லோத் ஸோஈன் (dhlōth sō'īṉ) = முற்பகல் மன்றாட்டு 

186.                             த்றோணோஸ் (Thṟōṇōs) = பலிபீடம், அரியணை

187.                             நஸ் ஏக் உனீமார் (Nas ēk uṉīmār) நாம் உரத்த குரலில் சொல்வோமாக.

188.                             நாள்வழி (nālvazhi ) =  நாளேடு

189.                             நிபியர் (Nibiyar) = இறைவாக்கினர்

190.                             நினுவே நோம்பு (ninuveh nombu) = மூன்று நோன்பு

191.                             நுண்சியோ (Nuncio) = வத்திக்கானின் தூதரக அதிகாரி

192.                             நோம்பு (nombu) = தவக்காலம் அல்லது நோன்பு

193.                             பசிலிக்கா (Basilika) = பெருங்கோவில்

194.                             பசேலியோஸ் (Basēliyōs) = அரசன்

195.                             பதயாத்ர (pada-yāthhra) = நடந்து செல்லும் திருப்பயணம்

196.                             பதீத்தோ, சென்தோ (Patheethhō, Sethhō) = கைகளில் அணியும் திருவுடைகள்

197.                             பத்ரசீன் (Pathracīṉ) = ஆயர்கள் அணியும் முன்னும் பின்னும் நீண்ட தோள்துகில் (ஊறாறா)

198.                             பத்றைஹூன் மென ஓலம் ஒல்மீன் ஆமீன் (pathaihūṉ mea ōlam olmīṉ āmīṉ)  = என்றென்றும் ஈருலகங்களிலும் ஆமீன்.

199.                             பவுலோஸ் (Pavulōs) = சின்னவன், தாழ்மையானவன்

200.                             பழைய கூற்றுகார் (pazhaya kūttukār) = மலங்கரை திருச்சபை வரலாற்றில் உருவான பழைய மரபை பின்பற்றி வரும் ஒரு பிரிவினர்

201.                             பஜன இரிக்கல் (bhajana irikkal) = விழித்திருந்து சிறப்பு பிராத்தனைகள் நடத்துதல்

202.                             பஹ்றோ (Pahṟō) = உடல்

203.                             பாத்ரவாதோ (padroado) =  போர்த்துகீசியர்கள் புது மறைபணித்தளங்களுக்கு பொறுப்பு என உரோமையிலிருந்து பெற்றுக்கொண்ட அதிகார ஆவணம்

204.                             பாத்ரியார்க்கோஸ் (Pāthriyārkkōs) = மறைமுதுவர், பிதாப்பிதா

205.                             பாரிஷ் (Parish) = பங்கு, ஆலயம்

206.                             பார் ஈத்தோ காஸீறோ (bar ithho kāsīro) =  திருச்சபையின் திறமையான மகன், ஊக்கமுள்ள மகன்

207.                             பார் ஈத்தோ ப்றீறோ (bar ithho briro) =  திருச்சபையின் உயர் மகன்

208.                             பார் ஈத்தோ ஸாஸீறோ (bar ithho sāsīro) =  திருச்சபையின் நல்ல மகன்

209.                             பார்ஸ் ஈத்தோ காசீர்த்தோ (bars ithho kāsirthho) = திருச்சபையின் திறமையான மகள், ஊக்கமுள்ள மகள்

210.                             பார்ஸ் ஈத்தோ ப்றீர்த்தோ (bars ithho brirthho) =  திருச்சபையின் உயர் மகள்

211.                             பார்ஸ் ஈத்தோ ஸாரீர்த்தோ (bars ithho sārīrthho) = திருச்சபையின் நல்ல மகள்

212.                             பாறக்கலீத்தா (Pāṟakkalīththā) = தூய ஆவியார்

213.                             பாறெக் (Bāṟek) =  ஆசீர்வதித்தல்

214.                             பாறெக் ஊ காதெஸ் (bāṟek ū kāthes)  =  ஆசீர்வதித்து தூய்மைப்படுத்தி

215.                             பாறெக்மோர் (Bāṟekmōr)   = ஆண்டவரே அனுமதி தந்தருள்க.

216.                             பிக்ஸ் (piks) =  நற்கருணையை கொண்டு செல்லும் சின்ன பேழை

217.                             பித்றுவேதி (pithru vēdhi) =  தந்தையர் சங்கம்

218.                             பின்கோ (pikō) = பலிபீடத்தில் அப்பம் வைத்திருக்கும் சிறிய தட்டு

219.                             பிஷப் = ஆயர்

220.                             பீமா (Bīmā) = தூயகத்திற்கும் ஹைக்கலாவுக்கும் இடையிலுள்ள பாடகர் குழுவினர் நிற்கும் பகுதி

221.                             பீலக்ஸினோஸ் (Pīlaksiṉōs) = புறஇனத்தாரின் நண்பன்

222.                             பீலாசா (pīlāsā) = பலிபீடத்தில் அப்பம் வைத்திருக்கும் சிறிய தட்டு

223.                             புதிய கூற்றுகார் (puthhiya kūttukār) = மலங்கரை திருச்சபை வரலாற்றில் உருவான புதிய மரபை பின்பற்றி வரும் ஒரு பிரிவினர்

224.                             புர்க்குஸா (Purkkusā) =  இறைமக்கள் கொண்டு வரும் காணிக்கை அப்பம்

225.                             புறுமியோன் (Puumiyōṉ) = அந்தந்த நாட்களுக்குரிய முன்னுரை அல்லது சுருக்க செபம்

226.                             பெங்கீஸா (pekīsā) =  திருநாட்களின் வேளைச் செபங்கள் அடங்கிய புத்தகம்

227.                             பெசகா (Pesakā) = கடந்து செல்லுதல்

228.                             பெத்லகேம் Bethlakēm = அப்பத்தின் வீடு, இறை இல்லம்

229.                             பெந்தகோஸ்தே (Penthakōsthē)  = ஐம்பதாம் நாள், தூய ஆவியாரின் வருகை திருநாள்

230.                             பெஸ்காஸோ (peskāsō) = மூறோன் எண்ணெய் மற்றும் புனிதப்பொருட்கள் பாதுகாக்கப்படும் பேழை

231.                             பெஸ்குதிசா (Beskuthiṣā) = பலிபீடம் அமைந்திருக்கும் கூடாரப்பகுதி

232.                             பெஸ்கோமோ (Beskōmō) = பதிலுரை மன்றாட்டுக்கள்

233.                             பேரேடு (peredu) =  பேரேடு, பேர்வழி இனக்கணக்கு

234.                             போலிகார்ப்ஸ்  (Pōlikārps) = அதிக விளைச்சல் செய்பவன்

235.                             போவூஸோ (Bōvūsō) = பரிந்துரை வேண்டும் மன்றாட்டு

236.                             போனன்ஸ் (ponens) = நீதிபதி

237.                             ப்ரீமுஸ் இன்டெர் பாரேஸ் (primus inter pares) =  சமமானவர்களுள் முதல்வர்

238.                             ப்றோ (Bṟō) = மகன்

239.                             மக்காரியோஸ் (Makkāriyōs) = ஆசீர்வதிக்கப்பட்டவன்

240.                             மதுறோஸோ (Mathuṟōsō) = மதிசெய்விருத்தம்; பிறிதொருவரிடம் அறிவுரை பகரும் விதத்தில் பாடப்படும் பாடல்.

241.                             மத்பஹா (Madhbahā) = திருத்தூயகம்

242.                             மத்யஸ்த ப்றார்த்தன (madhyasthha prārthhana) =  பரிந்துரை மன்றாட்டுகள்

243.                             மர்ஈத்தோ (mar - īitho) = மறைமாவட்டம்

244.                             மர்த்தோ (Marthho) = புனிதை

245.                             மர்பஹாசா (marbahāsā) =  சின்ன மணிகள் பொருத்தப்பட்ட வட்ட உலோகத்தை நீண்ட கம்பால்  இணைக்கப்பட்டுள்ள ஒலிக்கருவி

246.                             மலங்கர நஸ்றாணிகள் (Malankara Nasrānikal) = திருத்தூதர் தோமா வழிவந்த கிறிஸ்தவ சமூகம்

247.                             மலங்கரா சபாரத்னம் (Malankara sabhā-rathnam) = மலங்கரை திருச்சபையின் அணிகலன்கள்

248.                             மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபையின் தனிச்சட்டங்கள் (2012)

249.                             மலையாள மொழியிலுள்ள சுறியானி திருப்பலி நூல்.

250.                             மல்பான் (Malpāṉ) = ஆசிரியர், திருச்சபை அறிவில் புலமை பெற்றவர்

251.                             மஸ்கன்சப்னா (maskasabṉā) = நற்கருணைப் பேழை

252.                             மஸ்மூறோ (Masmūṟō) = திருப்பாடல்

253.                             மஸ்னப்தோ (masnaphthho) = திருவழிபாட்டில் கோர் எப்பிஸ்கோப்பாமார்கள் காப்பாவின் மேற்பகுதியில் அணியும் பின்புறம் விரிந்து நீண்டவாறு தோளில் அணியும் துகில்.

254.                             மஸ்னப்ஸா (Masapsā) =  ஆயர்கள் அணியும் பதிமூன்று சிலுவை அடையாளமுள்ள துணியாலான தலைச்சீரா

255.                             மாத்று வேதி (Māthru vēdhi) =  அன்னையர் சங்கம்

256.                             மாயல்த்தோ (Māyalththō)  = இயேசு கிறிஸ்துவின் ஆலய நுழைவு திருநாள்

257.                             மார் (Maar) = புனிதர்

258.                             மார்த்தோமா யோகம் (m’arthhoma yogam) = பழங்கால இந்திய திரு அவை அதிகாரிகளின் சங்கம்

259.                             மாலாக்கா (Mālākkā) = வானதூதர்/ இறைதூதர்

260.                             மாறானாயா பெருநாள்கள் (mārānāya perunālkal) =  நம் ஆண்டவரின் திருநாட்கள்

261.                             மானீஸோ (Māṉīsō) = புகழ்பாக்கள்

262.                             முடித்தொப்பி (mudithhoppi) = மலங்கரை ஆயர்களின் அடையாளமாக தலையில் வைத்திருக்கும் கறுப்பு நிறத் தொப்பி

263.                             முற்தோ (Muthō) =  நற்கருணையான அப்பம், உயிருள்ள அப்பம்

264.                             மூறோனீத்தோ (Mooroneetho) = ஆயரின் அதிகாரச் செங்கோல்

265.                             மூறோன் (mūṟōṉ) = அருளடையாளங்களில் பயன்படுத்தும் நறுமணத் தைலம்

266.                             மெத்றான் = ஆயர்

267.                             மென ஓலம் வாதா மெல ஓலம் ஒல்மீன் ஆமீன் (mea ōlam vāthā mela ōlam olmīṉ āmīṉ) = ஆதி முதல் என்றென்றும் இப்பொழுதும் எப்பொழுதும் ஆமீன்.

268.                             மென் ஆலோஹோ (me ālōhō)   =  இறைவனிடமிருந்து

269.                             மேஜர் ஆர்ச்சு பிஷப் (Major Archbishop) = உயர் பேராயர்

270.                             மொறியோ (Moiyō) =  ஆண்டவர்

271.                             மொற்யோ றாஹேம் மேலைன் ஊ ஆ தாரைன் (moiyō ṟāhēm mēlai ū'ātharai)  = ஆண்டவரே எங்கள் மேல் இரங்கி உதவி புரியும்.

272.                             மோண்டளம் (Mōṇdaam) = ஆலயத்தின் முன் மண்டபம், ஆறுதலின் இடம்

273.                             மோறன் காபெல் தெசுமெசுத்தான் வஸ்லா-வோ-சா-ன் எஸ்றாஹாம்- அலைன் (mōṟa kāpel thesumesuththāṉ vaslā-vō-sā- esṟāhām-mēlāṉ) = ஆண்டவர் தேவா வேண்டுதலும் தொண்டுகளும் எல்லாம் ஏற்றருள்வீ-ரே

274.                             மோறான் (Mōṟāṉ) = எங்கள் ஆண்டவர்

275.                             மோறான் அனினுறாஹேம் அலையன் (Mōṟāṉ aiu-ṟāhēm alaiya) = ஆண்டவரே எங்களுக்கு பதிலளித்து எங்களை ஆசீர்வதித்தருளும்.

276.                             மோறான் எஸ்றாஹேம் அலைன் (mōṟāṉ esṟāhēm alai) = எங்கள் ஆண்டவரே எங்களை ஆசீர்வதித்தருளும்.

277.                             மோறான் மார் (mõrān mār) = மரபு வழியாக திருச்சபைத் தலைவரை மதிப்புடன் அழைக்கும் சொல்

278.                             மோறான் ஹுஸ்றாஹேம் அலைன் (mōṟāṉ husṟāhēm alai) = எங்கள் ஆண்டவரே எங்கள் மீது இரங்கி எங்களை ஆசீர்வதித்தருளும்.

279.                             மோ-றா-ன்-எஸ்றா -ஹாமே-லா-ன் (mō-ṟā--esṟā -hāmē-lā-) = ஆண்டவர் தேவா இரங்குக நீ-ரே

280.                             மோறோனோயோ (Mōṟōṉōyō) = இறை சார்ந்த

281.                             மௌதியோனூஸோ Mauthi-yōṉūsō =  பாவ பரிகார மன்றாட்டுகள்

282.                             ம்சம்சோனீசோ (msamsōṉīsō) =  திருப்பீடத்தில் பயன்படும் தண்ணீர்க் கிண்ணம்

283.                             ம்சம்ஸோனோ (Msamsōṉō) = திருத்தொண்டர்

284.                             ம்சறியோ ஞாயிறு (Maiyōāyiu)  = முடக்குவாதமுற்றவரை நலமாக்கிய நிகழ்வை நினைவுபடுத்தும் ஞாயிறு

285.                             ம்சீஹோ (Msīhō) = அருட்பொழிவு செய்யப்பட்டவர்

286.                             ம்த்தாலே  (Mththālē) = இயேசு கிறிஸ்துவின் உருமாறுதல் திருநாள்

287.                             ம்னோர்த்தோ (mṉōrththō) = தவக்காலத்தில் திருச்சிலுவை நிறுவப்படும் பீடம் (கோகுல்த்தா)

288.                             ம்ஸம்றோனோ (Msamṟōṉō) =  பாடகர்

289.                             ம்ஸோனே (MSone) = செருப்பு

290.                             யல்தா (Yaldhā)  = இயேசு கிறிஸ்துவின் பிறப்புத் திருநாள்

291.                             யாக்கோபாயா = கத்தோலிக்க ஒன்றிப்பில் இல்லாத கிழக்குத் திருச்சபையினர்

292.                             யுவஜன பிறஸ்தானம் (Yuvajana Prasthaanam)) =  இளைஞர் இயக்கம்

293.                             ரம்பான் (Rambāṉ) = துறவு மற்றும் உயர்ந்த ஆன்மீக வாழ்வு வாழும் குருக்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம். ஆயர்ப்பட்டத்திற்கு இணையானதல்ல.

294.                             ரீயூனியன் (Reunion) = மறு ஒன்றிப்பு

295.                             லிபெல்லூஸ் (libellus) =  புகார் மசோதா

296.                             லிலியோ (Liliyō) = இரவு மன்றாட்டு 

297.                             லிற்றுார்ஜியா (Liṟṟuārjiyā) = பொதுவான செயல்

298.                             லுத்தினியா (Luththhiiyā) = பதிலுரைப்பாடல்கள்

299.                             லோஹா (Lōhā) =  குருக்களின் சீருடையான நீண்ட அங்கி

300.                             ல் மொற்யோ நெஸ்காசாஃப் (l-moiyō neskāsāḥph)  = ஆண்டவரிடம் மன்றாடுவோமாக

301.                             ல் மொற்யோ ஸெஹ்த்தோ (l-moiyō sokaththō)  =  ஆண்டவருக்கு ஆராதனை உரித்தாகுக

302.                             ல்கல்ஸோ (L,kalsō) =  மணமகள்

303.                             ல்கஸ்னோ (L,kasṉō) =  மணமகன்

304.                             வாதே தல்மீனோ (Vāthē Dhalmīṉō)  = புனித வார தொடக்கத்தில் நடத்தப்படும் உயிர்த்துறைச் சேரல் என்னும் பொருள் கொண்ட திருச்சடங்கு

305.                             றம்ஸோ  (amsō) = மாலை செபம்

306.                             றீத்துஸ் (Ṟīththus) = திருவழிபாட்டு முறை

307.                             றீஸ் பாத்ரியார்க்கோஸ் (Ṟīs pāthriyārkkōs) =  தலைமை மறைமுதுவர், தலைமை பிதாப்பிதா, திருத்தந்தை

308.                             றூஸ்மோ (Ṟūsmō) = ஆசீர்வதிக்கப்படல்

309.                             றூஹோ (Ṟūhō) = தூய ஆவியார்

310.                             ஸப்றோ (Sapṟō) = காலை மன்றாட்டு 

311.                             ஸ்தெளமென்காலஸ் (stheame-kālas)  = நாம் நன்றாக தயாராக நிற்போம்

312.                             ஸ்லீபா (slībā) = திருச்சிலுவை

313.                             ஸ்லீபோ (Slīebō)  = திருச்சிலுவைத் திருநாள்

314.                             ஸ்லீஹோ (Slīhō) = அனுப்பப்பட்டவன்

315.                             ஸ்லோமோ (Slōmō) = சமாதானம்

316.                             ஸ்றத்தா பெருநாள் (Srāddha perunnal) =  ஆயர்களின் நினைவு நாள்

317.                             ஸ்றோப்பேர் (Sṟōppēr) = ஆறு சிறகுகள் கொண்ட வானதூதர்

318.                             ஸ்ஷீமோ நமஸ்காரம் (sh,hīmo namaskāram) =  பாசுர மன்றாட்டு மாலை, வேளைச் செப நூல்

319.                             ஹம்மனீக்கோ (Ham'maṉīkkō) = குருவானவர் அணியும் நீண்ட தோள்துகில் (ஊறாறா)

320.                             ஹம்மீறா (ham'mīṟā) = புளிப்பு மாவில் தயாரிக்கப்பட்ட அப்பம்

321.                             ஹவ்ப்த்யாக்னோ (Havp-thh-yākṉō) = வாயிற்காப்பாளர்

322.                             ஹாலேலூயா (Hālēlūyā) = ஆண்டவருக்குப் புகழ்

323.                             ஹுதோஸ் ஈத்தோ ஞாயிறு (Hūthōs īththōāyiu)  = திருச்சபையை புதுப்பித்தல் ஞாயிறு

324.                             ஹூஃபோயோ (hūḥbōyō) =  திருப்பாத்திர மூடி

325.                             ஹூத்தோமோ (Hūththōmō) = இறுதி மன்றாட்டு அல்லது பாடல்

326.                             ஹூலோலோ (Hūlōlō) = நற்செய்தி வாசகத்திற்கு முன்னால் பாடப்படும் திருப்பாடல் வடிவம்

327.                             ஹூஸோயோ (Hūsōyō) =  பாவக்கழுவாய் மன்றாட்டு

328.                             ஹேவோறெ (hevōṟe) = வெள்ளை நிறம்

329.                             ஹேவோறெ வாரம் (Hevōṟe vāram) = உயிர்ப்புத் திருநாளைத் தொடர்ந்து வரும் வாரம்

330.                             ஹைக்கலா (Haikkalā) = இறைமக்கள் நிற்கும் பகுதி

331.                             ஹோசோ வப் கூல்ஸ்பான் ல்ஒல்மீன் (hōsō vab kūlā supa la'olmīṉ) = இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும்

332.                             ஹௌ -தஸ-றோ-ப்பே- ம் கதுஸின்லே ... (hau -thasa-ṟō-ppē- mukathusilē...) = செரபுகளா-லே-தூயவரெனப்படுவோரே

333.                             ஹௌக்குபோ (haukkupō) = திருப்பீடத்தில் பயன்படும் நட்சத்திர வடிவம்

334.                             ஹௌதக்க-றூ-பே.... ம் பறுக்கின் லே... (hauthakka-ṟū-pē.... Mu paukki lē...) = கெருபுகளாலே - வாழ்த்துதல் பெறுவோரே

335.                             ஹௌது அப்ப-றோ-னே ம் ஸொகதின் லே..(hauthu appa-ṟō-ṉēmu-sokathi lē..) = மண்மயராலே-வழிபடப்படுவோ-ரே

336.                             ஹௌது ஏ-லோ-யே- ம் றமர்மின் லே...(Hauthu ē-lō-yē-muamarmi lē...) = மேலவராலே மாட்சிமை அடைவோரே

337.                             ஹௌது மா-லா-க்கே – ம் ஸம்ஸின் லே (Vāṉavarālē - paiviai peuvōrē (hauthu mā-lā-kkē - musamsi lē) = வானவராலே - பணிவிடை பெறுவோரே

338.                             ஹௌது மெஸ்-ஓ-யே- ம் கல்ஸின் லே... (hauthu mes-ō-yē-mukalsi lē...)  = நடுவினராலே-போற்றுதல் பெறுவோரே

339.                             ஹௌது றூ-ஹோ-னே- ம் ஹதறின் லே... (hauthu ṟū-hō-ṉē-muhathai lē...) = ஆன்மிகராலே-ஏத்துதல் உறுவோரே.

340.                             ஹௌது னூ-றோ-னே ம் ஹல்லின்லே...(Hauthuṉū-ṟō-ṉē-muhallilē...) = எரிமயராலே-ஹாலல் பெறுவோரே

341.                             ஹௌதுதஹ-த்தோ-யே- ம் ஸயஹின் லே...  (hauthuthaha-ththō-yē-musayahi lē...) = கீழவராலே-விமரிசை மிகுவோரே

 

 

 

 

 

 

 

தொகுப்பு : அருட்தந்தை மரிய ஜாண் நடைக்காவு

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை