மார் இவானியோஸ் Quiz

 

1.         மார் இவானியோஸ் ஆண்டகையின் பிறப்பு?

28 செப்டம்பர் 1882

2.         மார் இவானியோஸின் பெற்றோர் பெயர் என்ன?

பணிக்கர் வீட்டில் தோமா பணிக்கர், அன்னம்மா

3.         மார் இவானியோஸின் திருமுழுக்குப் பெயர் என்ன?

கீவற்கீஸ்

4.         மார் இவானியோஸ் படித்த மேனிலை பள்ளிக்கூடம் எது?

எம். டி. செமினாரி ஹைஸ்கூல் கோட்டயம்

5.         மார் இவானியோஸுக்கு திருத்தொண்டர்ப் பட்டம் கொடுத்த ஆயர் யார்?

புலிக்கோட்டில் மார் திவன்னாசியோஸ்

6.         மார் இவானியோஸ் எந்த கல்லூரியிலிருந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்?

சென்னை கிறிஸ்தவக் கல்லூரி

7.         முதுகலை படிப்பின் போது மார் இவானியோஸ் தயாரித்த ஆய்வுக்கட்டுரை எது?

சிறியன் கிறிஸ்தவர்கள் நெஸ்தோரியன்களா?"

8.         மார் இவானியோஸ் ஆண்டகைக்கு குருப்பட்டம் கொடுத்தவர் யார்?

ஆயர் வட்டசேரில் மார் திவன்னாசியோஸ்

9.         மார் இவானியோஸ் எந்த ஆண்டில் குருப்பட்டம் பெற்றார்?

15 செப்டம்பர் 1908

10.     தந்தை கீவர்கீஸ் மார் இவானியோஸ் ஆயராக திருநிலைப்பட்டது எப்போது?

1 மேய் 1925

11.     OIC துறவற சமூகம் எப்போது நிறுவப்பட்டது?

15 ஆகஸ்ட் 1919

12.     மார் இவானியோஸால் நிறுவப்பட்ட மலங்கரை கத்தோலிக்கத் திருஅவையில் உள்ள துறவற சமூகங்கள் எவை?

OIC - Order of Imitation of Christ

SIC - Sisters Imitatiing Christ

13.     முதல் துறவற ஆசிரமம் நிறுவப்பட்ட இடம் எது?

பெருநாட்டில் முண்டன் மலை

14.     மார் இவானியோஸ் ஆண்டகையை பேராசிரியராக பணிபுரிய செராம்பூர் கல்லூரிக்கு அழைத்த முதல்வர் யார்?

Dr.ஹெவல்ஸ்

15.     மார் இவானியோஸ் செராம்பூர் கல்லூரியில் பணியாற்றிய காலம் எது?

1913 முதல் 1919 வரை

16.     பெண் துறவற சமூகம் தொடங்க மார் இவானியோஸ் ஆண்டகைக்கு உதவிய வெளிநாட்டுத் துறவி யார்?

மதர் ஈடித்

17.     பெருநாடு முண்டன் மலையில் பெதனி ஆசிரமம் துவங்க இடம் நல்கியவர் யார்?

 இலஞ்சிக்கல் ஜெ. ஜோண்

18.     பெதனி ஆசிரம சட்டங்களுக்கு துணைபுரிந்த மூல விதிகள் எவை?

புனித பஸேலியோஸின் துறவற ஆசிரம விதிகள்

19.     P.T. கீவர்கீஸ் துறவியார் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

ஆபோ கீவர்கீஸ்

20.     மார் இவானியோஸின் சிந்தனைக்கு உதவிய இரு இந்திய நாட்டு ஆசிரமங்கள் எவை?

1. காந்தியின் சபர்மதி ஆசிரமம்

2. தாகூரின் சாந்தி நிகேதன்

21.     இவானியோஸ் என்ற பெயர் எப்புனிதரின் பெயரிலிருந்து மருவியது?

புனித யோவான்

22.     கத்தோலிக்கத் திருஅவையோடு மறுஒன்றிப்படைய தொடர்பு கொள்ள மார் இவானியோஸை நியமித்த ஆயர்மன்றம் எது?

பருமலை ஆயர்மன்றம்

23.     இந்தியாவின் ஆர்த்தடோக்ஸ் சபையின் உயரதிகாரிகள் மார் இவானியோஸிடம் மறுஒன்றிப்புக்கான பணிகள் மேற்கொள்ள எப்போது ஒப்படைத்தனர்?

 1926

24.     மறுஒன்றிப்புக்கான ஆவணங்கள் அனுப்ப மார் இவானியோஸுக்கு உறுதுணையாக செயல்பட்டவர்?

அருட்தந்தை ஜாண் ரிபேரா

25.     மறுஒன்றிப்படைய உறுதுணையாயிருந்த திருத்தந்தையின் இந்தியப் பிரதிநிதி யார்?

மார் எட்வர்டு மூனி

26.     மறுஒன்றிப்படைய அனுமதியளித்த திருத்தந்தை யார்? திருத்தந்தை 11ஆம் பயஸ்

27.     முதல் மறுஒன்றிப்பாளர்கள் யார் முன்பாக கத்தோலிக்க விசுவாசத்தை எடுத்தியம்பினர்?

ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகர் (கொல்லம் ஆயர்)

28.     மறுஒன்றிப்படைந்த முதல் ஐந்து நபர்கள் யாவர்?

1 ஆயர் மார் இவானியோஸ்

2 ஆயர் மார் தியோபிலஸ்

3. அருட்தந்தை ஜாண் OIC

4. திருத்தொண்டர் அலெக்சாண்டர்

5. சாக்கோ கிளிலேத்து

29.     மறுஒன்றிப்படைந்த ஐந்து பேர்களில் பொதுநிலையினரின் பிரதிநிதி யார்?

சாக்கோ கிளிலேத்து

30.     மறுஒன்றிப்பு நிகழ்வு எங்கே வைத்து நடைபெற்றது?

கொல்லம் ஆயர் இல்ல சிற்றாலயம்

31.     மலங்கரை கத்தோலிக்கத் திருஅவை உருவான நாள் எது?

20 செப்டம்பர் 1930

32.     திருத்தந்தையிடமிருந்து மார் இவானியோஸ் பெற்றுக்கொண்ட முதல் அதிகார ஆணை எது?

மாஞ்ஞும் நோபிஸ் (Magnum Nobis)

33.     மறுஒன்றிப்படைந்தோரை வரவேற்று திருத்தந்தை அனுப்பிய தந்திச் செய்தி என்ன?

நல்வரவு, மிகப்பெரும் நல்வரவு“ (Welcome, Big Welcome)

34.     தற்கால கிறிஸ்தவ வரலாற்றில் மிகவும் கவனிக்கப்பட்ட நிகழ்வே மறுஒன்றிப்பு என வருணித்த அமெரிக்க மாத இதழ் எது?

ஷைன் (Shine)

35.     மறுஒன்றிப்புக்குப் பின் மார் இவானியோஸ் ஆண்டகை எங்கே முதலாவதாக திருப்பலி ஒப்புக்கொடுத்தார்?

கொல்லம் ஆயர் இல்ல சிற்றாலயம்

36.     மறு ஒன்றிப்பின் தொடக்க காலத்தில் இறையூழியர் மார் இவானியோஸ் ஆண்டகையின் முன் மறுஒன்றிப்படைந்த ரம்பான்கள் யாவர்?

சேப்பாட்டு பிலிப்போஸ் ரம்பான் மற்றும் புலிக்கோட்டு ஜோசப் ரம்பான்

37.     Daily News என்ற செய்தித்தாளில் மார் இவானியோஸ் அவர்களின் படத்தின் கீழ் காணப்பட்ட அடிக்குறிப்பு என்ன?

The Most Photographed person of the year

38.     மார் இவானியோஸ் 1932 - ல் பங்கெடுத்த நற்கருணை மாநாடு எங்கே வைத்து நடைபெற்றது?

அயர்லாந்தில் உள்ள டப்ளின்

39.     மார் இவானியோஸைப் பற்றி ஜி. கெ. செஸ்டர்டன் லண்டனில் வெளியான எந்த செய்தித்தாளில் எழுதினார்?

யூனிவேர்ஸ் (Universe)

40.     மார் இவானியோஸ் ஆண்டகை திருத்தந்தை 11 -ஆம் பயஸ் அவர்களை சந்தித்தபோது கூறிய வார்த்தை என்ன?

நீவிர் எமது நன்மகன் (You are my Good son)

41.     மார் இவானியோஸ் ஆண்டகையின் சுய வரலாற்று நூல் எது?

குன்றத்து விளக்கு (கிரிதீபம்)

42.     மார் இவானியோஸ் ஆண்டகையைக் குறித்து ஆங்கிலத்தில் "மார் இவானியோஸ்" என்ற நூல் எழுதிய அயர்லாந்து நாட்டவர் யார்?

மிஸ்.கிப்பன்ஸ் (Miss. Gibbons)

43.     "இருள் மத்தியில் எங்களுக்கு ஆறுதல் தர வந்த பொன்னொளி" என மார் இவானியோஸை வருணித்த கவிஞர் யார்?

வள்ளத்தோள்

44.     பேராயர் பதவியின் அடையாளமாகிய பாலியத்தை யாரிடமிருந்து மார் இவானியோஸ் ஆண்டகை பெற்றுக்கொண்டார்?

திருத்தந்தை பதினொன்றாம்  பயஸ்

45.     மலங்கரை கத்தோலிக்கத் திருஅவையின் முதல் பேராயர் யார்?

இறையூழியர் மார் இவானியோஸ்

46.     மார் இவானியோஸிற்கு "சட்ட முனைவர்' (Doctor of Law) என்ற பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது?

சான் பிராஸ்சிஸ்கோ பல்கலைக்கழகம்

47.     மார் இவானியோஸ் ஆண்டகையால் தோற்றுவிக்கப்பட்ட கல்லூரி எது?

மார் இவானியோஸ் கல்லூரி, திருவனந்தபுரம்

48.     மார் இவானியோஸ் ஆண்டகையின் மரண வேளையில் அவரை சந்தித்த திருத்தந்தையின் பிரதிநிதி யார்?

மோண். மார்ட்டின் லூக்கோஸ்

49.     மார் இவானியோஸ் ஆண்டகை ஆயர்ப்பட்டம் வழங்கிய துணை ஆயர் யார்?

பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ்

50.     மார் கிரிகோரியோஸ் துணை ஆயர்ப்பட்டம் பெற்றுக்கொண்ட  நாள் எது?

29 ஜனவரி 1953

51.     பேராயர் இறையூழியர் மார் இவானியோஸ் ஆண்டகை இறந்த வருடம் எது?

15 ஜூலை 1953

52.     முதலில் மறுஒன்றிப்படைந்த ஆயர்கள் எத்தனை பேர்?

இரண்டு

53.     நிரணம் ஆயர் ஜோசப் மார் சேவேரியோஸ் ஆண்டகையின் மறுஒன்றிப்பு எப்போது நடைபெற்றது?

29 நவம்பர் 1937

54.     க்னானாய சபையின் ஆயர் தோமஸ் மார் தியஸ்கோரஸ் ஆண்டகையின் மறுஒன்றிப்பு எப்போது நடைபெற்றது?

12 நவம்பர் 1938

55.     இறையூழியர் மார் இவானியோஸ் ஆண்டகையின் கல்லறை எங்குள்ளது?

தூய மரியன்னை பேராலயம், பட்டம்,  திருவனந்தபுரம்

56.     "பெதனியின் கண்ணாடி" எனப்படும் இறையூழியர் மார் இவானியோஸ் எழுதிய நூல் எது?

கிரிதீபம்

57.     மார் இவானியோஸ் ஆண்டகை இறையூழியராக எப்போது உயர்த்தப்பட்டார்?  

14 ஜூலை 2007

58.     இறையூழியர் மார் இவானியோஸ் 21 ஜூன் 1934 -ல் தொடங்கிய இளங்குருத்துவக்கல்லூரி எது?

தூய அலோசியஸ் குருமடம், திருவனந்தபுரம்

59.     இறையூழியர் மார் இவானியோஸ் ஆண்டகையின் நினைவு நாள் எது?

ஜூலை 15

60.     மறு ஒன்றிப்பு தினம் எது?  

20 செப்டம்பர் 1930

61.     மறுஒன்றிப்பின் சிற்பி யார்?

இறையூழியர் மார் இவானியோஸ்

62.     மலங்கரை கத்தோலிக்க திருஆட்சிப்பீடம் அமைத்த திருத்தந்தை யார்?

திருத்தந்தை 11-ஆம் பயஸ்

63.     எத்திருமடல் வழியாக மலங்கரை கத்தோலிக்க திருஆட்சிப்பீடம் இந்தியாவில் உருவெடுத்தது?

"கிறிஸ்தோ பாஸ்தோரும் பிறின்சிப்பி" (Christo pastorum Principi)

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை